டந்த டிசம்பர் 2018 இறுதியில் நான்கு நாட்களில் வாசகர் இணையக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் விருதுகளுக்கு பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்யுமாறு வாசகர்களை கோரினோம்.

 1. பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது ?
 2. பாஜக கொள்கை பரப்பும் நம்பர் 1 தமிழ் நாளிதழ் எது ?
 3. மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார்?
 4. தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?

வினவு தளம் மட்டுமல்ல, டிவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நேற்று மாலை வரையில் இந்தத் தளங்களில் பதிவான வாக்குகளில் அடிப்படையில் தற்போது இந்த விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

***

முதலில், பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சிக்கான தேடல்…

இந்த விருதுக்கான பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள்..

 • புதிய தலைமுறை
 • நியூஸ் 18 தமிழ்நாடு
 • தந்தி டிவி
 • நியூஸ் 7 தமிழ்
 • பாலிமர் நியூஸ்
 • நியூஸ் ஜே

முதல் இடம் : தந்தி டிவி (60% வாசகர்களின் தெரிவு)
விருது: “காவி லென்சுல உட்றாண்டா உடான்சு”

சிறப்புப் பரிசுகள் :

 • அதானி, ரிலையன்ஸ், பதஞ்சலி விளம்பரங்கள் ஆண்டு முழுவதும் தரப்படும்.
 • ”மோடியின் எம்மாம் பெரிய பொய்” – எக்ஸ்குளூசிவ் நேர்காணல் – 6 மாதத்திற்கு ஒருமுறை..

இரண்டாம் இடம்: புதிய தலைமுறை (16% வாசகர்களின் தெரிவு)
விருது:  “விடுறான்டா உடான்ஸு காவி லென்சுல”

சிறப்புப் பரிசுகள் :

 • அதானி, ரிலையன்ஸ், பதஞ்சலி விளம்பரங்கள் ஆறு மாதம் தரப்படும்
 • அடேங்கப்பா அமித்ஷாவின் பில்டப் – எக்ஸ்குளூசிவ் நேர்காணல் ஒன்று


மூன்றாம் இடம்: நியூஸ் 7 தமிழ் (14% வாசகர்களின் தெரிவு)
விருது: “உடான்ஸு விடுறாண்டா லென்சு காவியில”

சிறப்புப் பரிசுகள்:

 • அதானி, ரிலையன்ஸ், பதஞ்சலி விளம்பரங்கள் மூன்று மாதம் தரப்படும்
 • ரிவால்வர் ரீட்டா நிர்மலா சீதாராமனின் – எக்ஸ்குளூசிவ் நேர்காணல் மாதம் ஒன்று நிச்சயம்.

ஆறுதல் பரிசு: பாலிமர் நியூஸ் (4% வாசகர்களின் தெரிவு)
விருது: “லென்சு காவியில வுடுறாண்டா உடான்ஸு”

சிறப்புப் பரிசுகள் :

 • தி நகர், பனகல் பார்க் கடை விளம்பரங்கள் தினசரி தரப்படும் (விளம்பரம் தர மறுத்தால் ரெய்டுக்கு ஏற்பாடு செய்யப்படும்)
 • அண்ணாச்சி பொன்னாரு, அக்கா தமிழிசை பிரஸ் மீட் அன்றாடம் கிடைக்கும்

இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1817 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் தந்தி டிவிக்கு 1092 வாக்குகள் கிடைத்துள்ளன. அடுத்ததாக புதிய தலைமுறைக்கு 288 வாக்குகளும், நியூஸ் 7-க்கு 243 வாக்குகளும் கிடைத்துள்ளன. பாலிமர் நியூஸ் 79 வாக்குகளும்,  நியூஸ் 18 – தமிழ்நாடு 56 வாக்குகளும், இதர தொலைக்காட்சிகள் அனைத்தும் சேர்ந்து 59 வாக்குகளும் பெற்றுள்ளன.

***

பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 தமிழ் நாளிதழுக்கான பந்தயத்தில் பங்கேற்போர்:

 • தினத்தந்தி
 • தினமலர்
 • இந்து தமிழ் திசை
 • தினமணி

முதல் இடம்: தினமலர் (66% வாசகர்களின் தெரிவு)
விருது: ”கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா”

தினமலருக்கான சிறப்புப் பரிசுகள் :

 • மோடியுடன் மீடியா டீமாக உலகம் சுற்றலாம்.
 • அமித்ஷாவின் வீட்டுத் திருமணம் முதல் அக்கா தமிழிசையின் பிரஸ் மீட் வரை முதல் பக்க விளம்பரங்கள் 365 நாட்களும் தரப்படும்

இரண்டாம் இடம்: தினத்தந்தி (17% வாசகர்களின் தெரிவு)
விருது: “கூவுறாண்டா கொடுத்த காசுக்கு மேல”

சிறப்புப் பரிசுகள் :

 • அமித்ஷாவின் மீடியா டீமாக இந்தியா சுற்றலாம்.
 • அதானி டென்டர் முதல் பிஆர்பி குவாரி டென்டர் வரை ஆறு மாதம் அரை பக்க விளம்பரம் தரப்படும்

மூன்றாம் இடம்: தினமணி (11% வாசகர்களின் தெரிவு)
விருது: “மேல கூவுறாண்டா கொடுத்த காசுக்கு”

சிறப்புப் பரிசுகள் :

 • பொன்னாருடன் மீடியா டீமாக தமிழகம் சுற்றலாம்.
 • கமலாலயத்தில் நடக்கும் கூட்ட விளம்பரங்கள் மூன்று மாதம் கால் பக்கத்திற்கு தரப்படும்.

ஆறுதல் பரிசு: இந்து தமிழ் திசை (6% வாசகர்களின் தெரிவு)
விருது: “காசுக்கு கூவுறாண்டா”

சிறப்புப் பரிசு :

 • மாதம் 5 விமான பயணம், 50 ரயில் பயணங்கள், 100 கார் பயணங்கள் இலவசம்

இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1054 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 699 வாக்குகள் பெற்று தினமலர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்ததாக் 178 வாக்குகள் பெற்று தினத்தந்தி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 120 வாக்குகள் பெற்று தினமணி மூன்றாம் இடத்தையும், 57 வாக்குகள் பெற்று இந்து தமிழ் திசை ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளது.

***

அடுத்ததாக, மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்கான பந்தயத்தில் பங்கேற்பவர்கள் :

 • ரஜினிகாந்த்
 • கமல்ஹாசன்
 • விஷால்
 • சூர்யா

முதல் இடம்: ரஜினிகாந்த் (77% வாசகர்களின் தெரிவு)
விருது: “மோடி பக்தன்டா பிஜேபி பித்தன்டா”.

சிறப்புப் பரிசுகள் :

 • ரெய்டு ஃபீரி – வருமான வரி ரெய்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்
 • கலைத்துறை விருதான தாதா சாகேப் வாழ்நாள் விருது வழங்கப்படும்.

இரண்டாம் இடம் : கமல்ஹாசன் (16% வாசகர்களின் தெரிவு)
விருது: “பிஜேபி பித்தன்டா மோடி பக்தண்டா”

சிறப்புப் பரிசுகள் :

 • ரெய்டு ஃபீரி – கண்டிசன்ஸ் அப்ளை
 • கலைத்துறைக்கான ராஜ்ஜிய சபா எம்.பி பதவி அளிக்கப்படும்

மூன்றாம் இடம்: சூர்யா (4%) ” |
விருது: ”பக்தன்டா மோடிக்கு, பித்தன்டா பிஜேபிக்கு

சிறப்புப் பரிசுகள் :

 • ரெய்டு வருவோம் – ஆனா நடவடிக்கை எடுக்க மாட்டோம்
 • ஸ்வச்ச பாரத்தின் தென்னிந்திய அம்பாசிடர் பதவி உண்டு

ஆறுதல் பரிசு: நடிகர் விஷால் (3% வாசகர்களின் தெரிவு)
விருது: “பித்தன்டா பிஜேபிக்கு, பக்தன்டா மோடிக்கு”

விஷாலுக்கான சிறப்புப் பரிசுகள்:

 • ரெய்டு வந்தாலும் வருவோம் – நீ நடந்துக்குறத பொறுத்து
 • சென்சார் போர்டு உறுப்பினர் பதவி வழங்கப்படும்

இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1219 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 938 வாக்குகள் பெற்று ரஜினிகாந்த் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அடுத்ததாக 197 வாக்குகள் பெற்று கமல்ஹாசன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். 47 வாக்குகள் பெற்று சூர்யா மூன்றாம் இடத்தையும், 30 வாக்குகள் பெற்று விஷால் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளனர். 7 வாக்காளர்கள் பிற நடிகர்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

***

இறுதியாக, தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமிக்கான தேடலில் போட்டியாளராக பங்கேற்பவர்கள் :

 • ரங்கராஜ் பாண்டே
 • சமஸ்
 • வைத்தியநாதன்
 • மாலன்
 • ஜெயமோகன்

முதல் இடம்: ரங்கராஜ் பாண்டே (65%வாசகர்களின் தெரிவு)
விருது: ”இன்னாடா இவ்ளோ சவுண்டு உட்றான்”

சிறப்புப் பரிசுகள் :

 • தனி சானல் வைக்க அனைத்து உதவிகளும் இனாமாக செய்யப்படும்
 • மோடி அமித்ஷா தமிழகம் வரும்போது பேசும் உரைக்கு திரைக்கதை – வசனம் தயாரிக்கும் வாய்ப்பு

இரண்டாம் இடம்: மாலன் (13% வாசகர்களின் தெரிவு)
விருது: “உட்றான் சவுண்டு இவ்ளோ இன்னாடா”

மாலனுக்கான சிறப்புப் பரிசுகள் :

 • பணிபுரியும் சானல் – நிறுவனத்தில் சிஇஓ பதவி வாங்கித் தரப்படும்.
 • பொன்னார் – தமிழிசை பேசும் உரைகளுக்கு பொழிப்புரை அளிக்கும் வாய்ப்பு தரப்படும்.

மூன்றாம் இடம்: பத்திரிகையாளர் சமஸ் (8%வாசகர்களின் தெரிவு)
விருது: ”இவ்ளோ சவுண்டு வுட்றான் இன்னாடா”

சமஸுக்கான சிறப்புப் பரிசுகள் :

 • தலைமை செய்தி ஆசிரியர் பதவி வாங்கித் தரப்படும்.
 • மோடி மீடியாவின் தமிழக ட்ரோல்களுக்கு பயிற்சி அளிக்கும் கான்ட்ராக்டு அளிக்கப்படும்.

ஆறுதல் பரிசு: வைத்தியநாதன் (7%),  ஜெயமோகன் (7%)
விருது: “இவ்ளோ உட்றான் சவுண்டு இன்னாடா”

இவர்கள் இருவருக்குமான சிறப்புப் பரிசுகள்:

 • மீடியாவில் விரும்பிய வேலை விரும்பிய நிறுவனத்தில் விரும்பிய சம்பளத்தில் வாங்கித் தரப்படும்
 • எச்ச ராஜா, எஸ்.வி.சேகர் அடங்கிய பார்ப்பன கிச்சன் கேபினட்டின் மீடியா இன்சார்ஜாக வாய்ப்பு தரப்படும்.

இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1457 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 949 வாக்குகள் பெற்று ரங்கராஜ் பாண்டே முதலிடத்தைப் பெற்றுள்ளார். அடுத்ததாக 194 வாக்குகள் பெற்று மாலன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். 110 வாக்குகள் பெற்று சமஸ் மூன்றாம் இடத்தையும், 107 வாக்குகள் பெற்று வைத்தியநாதன் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளார். 97 வாக்குகள் பெற்றாலும் சதவித அடிப்படையில் கிட்டத்தட்ட வைத்தியநாதனை எட்டிப் பிடித்ததால், ஜெயமோகனுக்கும் ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

***

வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி !
உங்களது நல்ல நோக்கம் நிறைவேற எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்

11 மறுமொழிகள்

 1. அருமையான மேற்கண்ட பரிசுப் பொதிகளோடு
  அடியேனின் கீழ்க்கண்ட பாராட்டுப் பட்டத்தையும் சேர்த்தளிக்குமாறு
  அடியேன் தண்டனிட்டு சமர்ப்பிக்கிறேன்.

  தந்தி டிவி க்கு காவி வதந்தி

  தினமலத்திற்கு காவி கப்ஸா

  ரஜினிக்கு காவி கல்லாப்பெட்டி

  பாண்டேயுக்கு சவுண்டு சங்கி.

  • இந்த சர்வேதான் பெரிய கப்ஸா. இந்தக்காலத்தில் புதிய தலைமுறை மற்றும் நியூஸ்7 போன்ற அதிமேதாவி டிவிக்கள் பிஜேபியை ஆதரித்து பேசியிருக்கிறார்கள்? நான் இந்த டிவிக்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்துவருபவன். நான் எந்த ஒரு ஆதரவு நிலையும் இந்த டிவிக்கள் எடுத்ததாக நான் பார்த்ததில்லை.

 2. ரங்கராஜ் பாண்டேயவை விட வலதுசாரி சித்தாந்தத்தில் பழம் பல தின்று கொட்டையையும் மென்று துப்பியவர் திருவாளர் மாலன்தான்.மாலனுக்கு முதல் பரிசு கிடைக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.பாண்டே கூவுவதில் சவூண்டுபார்ட்டியாக இருந்தாலும் மாலன் போல “நயிச்சிமாக” டீசண்டாக எழுத பேசமுடியாது!!!

   • பி.ஜே.பி காலம் சாமியார்களுக்குப் பொற்காலம் என்று ஒரு சிறப்புக் கட்டுரை எழுதுங்களேன்.

 3. “காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” ங்குற மாதிரி இவனுங்க RSS Saga மாதிரிதான் எல்லா இடமும்னு நெனச்சுகிறானுங்க . . . .

  • சுட்டிகாட்டியமைக்கு நன்றி! திருத்தம் செய்து வடிவமைப்பு மாற்றப்பட்டிருக்கிறது.

 4. இந்த சர்வேதான் பெரிய கப்ஸா. இந்தக்காலத்தில் புதிய தலைமுறை மற்றும் நியூஸ்7 போன்ற அதிமேதாவி டிவிக்கள் பிஜேபியை ஆதரித்து பேசியிருக்கிறார்கள்? நான் இந்த டிவிக்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்துவருபவன். நான் எந்த ஒரு ஆதரவு நிலையும் இந்த டிவிக்கள் எடுத்ததாக நான் பார்த்ததில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க