ஜனவரி 8,9 அகில இந்திய வேலை நிறுத்தத்தின் அவசியம் என்ன ? | காணொளி

இனியும் பொறுப்பது அவமானம் ! போராடுவதே தன்மானம்! மோடி அரசின் தேச விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு தொழிலாளியின் கடமை !

“தொழிலாளர் உரிமைகளை மீட்க பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த 2019 ஜனவரி 8 – 9 வேலைநிறுத்தத்தை முன்னெடுப்போம்!” எனும் முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது.

அதனை ஒட்டி வருகின்ற 08.01.2019 தேதியன்று துடியலூர் பேருந்து நிறுத்தம் முன்பு காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல்

இடம் : துடியலூர் பேருந்து நிருத்தம் முன்பாக.
நாள் : 08.01.2018 (செவ்வாய்)
நேரம் : 10.00 மணி முதல் 12.00 மணிவரை

தலைமை :
  • தோழர் M.கோபிநாத், பு.ஜ.தொ.மு தலைவர் SRI-கிளை கோவை,
கண்டண உரை :
  • தோழர் திலீப், பு.ஜ.தொ.மு செயலாளர் கோவை
  • தோழர் M.தேவராஜ், பு.ஜ.தொ.மு துணைத்தலைவர் SRI-கிளை.
  • தோழர் C.சரவணக்குமார், பு.ஜ.தொ.மு. இணைச் செயலாளர் SRI-கிளை
நன்றியுரை :
  • V.அருள்குமார், பு.ஜ.தொ.மு பொருளாளர் SRI-கிளை கோவை.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு : 90924 60750.

*****

“தொழிலாளர் உரிமைகளை மீட்க பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த 2019 ஜனவரி 8 – 9 வேலைநிறுத்தத்தை முன்னெடுப்போம்!”

ன்பார்ந்த தொழிலாளர்களே!

இனிமேல் இந்தியாவில் அரசியல் கட்சிகள் என்று எதுவும் கிடையாது. வேண்டுமானால் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டால் என்ன நடக்கும்?

இனி தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் எதுவும் கிடையாது. தொழிலாளர்கள் விரும்பினால் BMS சங்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று ஒரு சட்டம் வந்தால்?

இது இப்போது நகைப்புக்குறியதாக இருக்கலாம். ஆனால் இதை நடைமுறைப்படுத்த மோடி தலைமையிலான அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற சட்டங்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவது, அவர்களின் உரிமைகளை மறுப்பது, ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்களை முதலாளிகளின் நிரந்தர அடிமைகளாக மாற்றுவதற்காக மோடி ஒரு வாட்ச்மேனைப் போல நாள்தோறும் ‘உழைத்து’ வருகிறார்.

ஜனவரி 8,9 வேலைநிறுத்தத்தையொட்டி தோழர் முகுந்தன் பேட்டி

காலனியாக்க காலத்தில் கிடைத்த உரிமைகள் கூட சுதந்திரம் கிடைத்து விட்டதாக சொல்லப்படுகிற இக்காலத்தில் உண்மையில் நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா? இல்லை என்றே சொல்ல வேண்டும். காகிதத்தில் இருக்கின்ற பெயரலவிலான சட்டங்களை மதிப்பதற்கு கூட எந்த முதலாளியும் தயாராக இல்லை. அதையும் கூட செல்லாகாசாக்குவதற்கு போராடி பெற்ற சட்டங்கள் நான்கு விதிமுறை தொகுப்பாக மாற்ற எத்தனிக்கிறது, மோடி அரசு. இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தொழிலாளர்களாகிய நமது கடமை.

லாபத்தில் இயங்கும் பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பது, முதலாளிகளுக்கு கடன் கொடுத்து வாராக்கடன் என கணக்கு காட்டி தள்ளுபடி செய்வது, வரிச்சலுகை அளிப்பது, நீரவ் மோடி, மல்லையா வகை பணத் திமிங்கலங்களை உருவாக்கி வளர்ப்பது போன்றவை தான் அரசின் வேலையாக இருக்கிறது.

மறுபுறம் உழைப்பை தவிர வேறு எதையும் தனது சொந்தமாக கொண்டிராத தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை அற்ப கூலிக்கு வாங்கி ஒட்டச் சுரண்டுவது. சுரண்டப்படும் தொழிலாளர்கள் ஒன்று திரளாமல் பார்த்துக் கொள்ளவது. திரட்டப்பட்டு போராடும் தொழிலாளர்களை போலீசு, ரானுவம் கொண்டு ஒடுக்குவது, என முதலாளிகளின் அடியாள் படையாக செயல்படுகிறது அரசு.

ஜனவரி 8,9 வேலைநிறுத்தத்தையொட்டி தோழர் விஜயகுமார் பேட்டி

இந்த சுரண்டலை நாம் புரிந்து கொண்டு வர்க்கமாக திரண்டு விடக்கூடாது என்பதற்காக ராமனும் – ஐய்யப்பனும் படாத பாடு படுகிறார்கள். சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளைக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்துவது, சாதிய படிநிலை போன்று ஒப்பந்த தொழிலாளி, பயிற்சியாளர், தொழில் பழகுநர், NEEM, FTE என பல பெயர்களில் தொழிலாளி வர்க்கத்தை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறது ஆளும் வர்க்கம்.

நமது உரிமைகளை பறித்து, நம்மை நவீன கொத்தடிமைகளாக முதலாளிகளுக்கு சப்ளை செய்யும் வேலையை தான் அரசு செய்கிறது.

இனியும் பொறுப்பது அவமானம் ! போராடுவதே தன்மானம்! மோடி அரசின் தேச விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க வருகின்ற ஜனவரி 08, 09 தேதிகளில் நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது ஒவ்வொரு தொழிலாளியின் கடமை !


தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94444 42374.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க