பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
நவம்பர் – 28, 2019 – பிரெடெரிக் எங்கெல்ஸின் இருநூறாவது பிறந்த தினம். கார்ல் மார்க்சின் இணையபிரியா நண்பராக மட்டுமல்ல, கம்யூனிசத் தத்துவத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலமைந்த அறிவியலாக, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராயுதமாக, மார்க்சுடன் இணைந்து வளர்த்தெடுத்தவர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.
ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.
கம்யூனிஸ்ட் லீக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கம்யூனிஸ்டுகளின் பொது வேலைத்திட்டமாக மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதி முன்வைத்ததுதான், காலத்தால் அழியாத கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. தொழிலாளி வர்க்கத்தின் பைபிளைப் படைத்தபோது எங்கெல்ஸின் வயது 28.
எங்கெல்ஸ்க்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதின் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்பதுயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக்கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன்தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்சுதான் முதன்முதலாகச் சொன்னவர் என்கிறார், லெனின்.
படிக்க:
♦ மூலதனம் நூலின் 150 வது ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100 வது ஆண்டு !!
♦ மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
எங்கெல்ஸ் தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்து 24 வயதிலேயே செறிவான கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது மட்டுமல்ல; அறிவியலுக்கு புறம்பான வகையிலும், கற்பனையான செயல்திட்டங்களோடும், கருத்துமுதல்வாத – இயக்க மறுப்பியல் சிந்தனைகளோடு முன்வைக்கப்பட்ட சித்தாந்தப் போக்குகளை சமரசமின்றி எதிர்த்துப் போராடியிருக்கிறார்; சளைக்காமல் எழுதியிருக்கிறார்.
புனித குடும்பம் அல்லது விமர்சன பகுப்பாய்வின் மீதான விமர்சனம், ஜெர்மானிய சித்தாந்தம், டூரிங்குக்கு மறுப்பு போன்ற நூல்கள் இத்தத்துவார்த்த போராட்டத்தின் சாட்சியமாக விளங்குகின்றன. இவை தவிர, மானுடவியலையும் அறிவியலையும் நிலைநாட்டுகிற, மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவரது படைப்புகள் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் வழிகாட்டும் வரலாற்றுப் பொக்கிஷங்கள்.
மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் மூலதனத்தின் முதல் தொகுதி மட்டுமே வெளியாகியிருந்த சூழலில், எஞ்சிய இரு தொகுதிகளையும் பெரும் இடர்ப்பாடுகளைக் கடந்து வெளியிட்டவர் எங்கெல்ஸ். இதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், மார்க்ஸ் போன்ற மாமனிதரின் ஒவ்வொரு பொன்னான வார்த்தையும் மிகவும் முக்கியமானது. “இவ்வாறு கடினமாக உழைப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே கருதுகிறேன். ஏனென்றால், என் நீண்ட நாள் நண்பன் மீண்டும் என்னருகில் இருப்பதாகவே உணருகிறேன்” என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார், எங்கெல்ஸ்.
எங்கெல்ஸை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்? விடையளிக்கிறார், லெனின். தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள். ஆகவேதான், எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
– ஆசிரியர் குழு.
மமின்னூல் :
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |