14.03.2026
பணமதிப்பழிப்பு, கொரோனா ஊரடங்கு, சிலிண்டர் தட்டுப்பாடு!
தொடரும் மோடி அரசின் படுகொலைகள்..
இன்று (மார்ச் 14) உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வரிசையில் நின்ற 75 வயது முதியவர் முக்தார் அன்சாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதேபோல், நேற்று (மார்ச் 13) பஞ்சாப்பின் பர்னாலா மாவட்டத்தில் சிலிண்டர் வாங்குவதற்கு வரிசையில் நின்ற 66 வயது பூஷன் குமார் மிட்டல் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் அடாவடித்தனமான போரால் இந்தியாவில் கடுமையான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், பாசிச மோடி அரசு தட்டுப்பாட்டைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், தட்டுப்பாடே இல்லையென பொய்யுரைத்து வருகிறது. மறுபுறம், சிலிண்டர் விலையை உயர்த்துவது; சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான காலத்தை அதிகரிப்பது என சாமானிய மக்களை நெருக்கடிக்குள் தள்ளி படுகொலை செய்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











