மக்கள் எதிர்ப்பை மீறி கல்லாங்காடு சிப்காட்டிற்கு சாலை அமைக்கும் திட்டம்

மக்களின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையால், இப்பகுதி  மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இம்மக்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாற்றப்படுவர்.

ன்பார்ந்த தமிழ்நாடு மக்களே! ஜனநாயக சக்திகளே!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, வாஞ்சிநகரம் ஊராட்சிக்குட்பட்ட கல்லாங்காடு பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை தி.மு.க. அரசு வெளியிட்டிருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக கல்லாங்காடு சுற்றுவட்டார பகுதி மக்கள் போராடிவந்த நிலையில், சிப்காட் திட்டத்திற்கு முதல் கட்டமாக சாலை அமைக்கும் பணியை சிப்காட் நிர்வாகமும் தி.மு.க. அரசும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வளர்த்துவந்த பனை, தென்னை, மா மரங்களை பிடுங்கி எறிந்துவிட்டு சாலை அமைக்கும் பணியை செய்து வருகிறது.

மக்களின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையால், இப்பகுதி  மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இம்மக்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாற்றப்படுவர்.

தமிழ்நாடு அரசே!  மதுரை மாவட்ட நிர்வாகமே!

  • மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து!
  • கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை கைவிடு!

தமிழ்நாடு மக்களே! ஜனநாயக சக்திகளே!

  • “கல்லங்காடு பகுதியில் சிப்காட் திட்டம் வேண்டாம்!” என முழங்கும் மக்களின் கருத்துக்கு எதிராக இத்திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது தி.மு.க. அரசு.
  • இத்திட்டத்திற்கு எதிராக இப்பகுதி மக்களை அணிதிரட்டி ஜல்லிக்கட்டு போராட்டம், மீத்தேன் – ஸ்டெர்லைட் – டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு போராட்டங்களைப் போன்ற முன்மாதிரியான போராட்டங்களை நடத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுவோம்!

தகவல்:
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க