சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசனின் கொட்டடி படுகொலையைக் கண்டித்து கடந்த 72 நாட்களாக உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகாஷ் டெலிசனின் கொட்டடிப் படுகொலை வழக்கை, இது சாதிய வன்கொடுமையுடன் நடந்த படுகொலைதான் என்று ஏற்றுக்கொண்டு (302) கொலை வழக்காகப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு 60 நாட்கள் விசாரணைக் காலமும் முடிவடைந்துள்ளது. இருப்பினும், இதுவரை முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளி போலீசுகாரர்கள் ஒருவரின் பெயர் கூட சேர்க்கப்படவில்லை; குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றவாளி போலீசுகாரர்களை, கொலையாளிகளை கைது செய்யாமல் போராடக் கூடிய மக்களை சி.பி.சி.ஐ.டி. ஏமாற்றி வருகிறது.
இதனையடுத்து, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக் கோரியும், முதல் தகவல் அறிக்கையில் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் உட்பட 16 போலீசுதுறை கொலையாளிகளின் பெயரைச் சேர்க்கக் கோரியும், அவர்களைக் கைது செய்யக் கோரியும் மதுரையில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து, கடந்த மே 15, 2026 அன்று காலை 10:30 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் நூற்றுக்கணக்கான மக்களும் ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டனர்.

மக்கள் தமிழகம் கட்சி, மக்கள் அதிகாரக் கழகம், தமிழ்த் தேச குடியரசு இயக்கம், ஆதித்தமிழர் விடுதலை கட்சி, ம.க.இ.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆகாஷ் டெலிசன் படுகொலை நீதிக்கான போராட்டக் குழு, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா சிந்தனை), தமிழர் முற்போக்குக் கழகம், அ.தி.ம.மு.க., ஐந்திணை மக்கள் கட்சி, தமிழர் எழுச்சி கழகம், தாய்நாடு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்த் தேச மார்க்சியக் கழகம், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் மற்றும் ஜனநாயக முன்னணி, தலித் விடுதலை இயக்கம், அபுதாஹீர், எஸ்.டி பி.ஐ., மனிதநேய ஜனநாயக கட்சி, ஐக்கிய விவசாயிகள் சங்கம் (SKM), மக்கள் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ் தமிழர் இயக்கம், மகளிர் ஆயம், மக்கள் அதிகாரம், மக்கள் பாதை பேரியக்கம், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு பெண்கள் சங்கம், பெண்கள் எழுச்சி இயக்கம் ஆகிய புரட்சிகர – ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள், தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை – இலக்கியக் கழகம்,
மதுரை மாவட்டம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











