மருந்துகள் விலை உயர்வு : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு !
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அல்லல்படும் இந்த வேலையில் மருந்துகளின் விலை உயர்வும் உழைக்கும் மக்களை வாட்டிவதைக்கும்.
‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !
வெங்கையா தற்போது மீண்டும் ஓர் நவீன குலக்கல்வியை கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அதாவது ’காவிக் கொள்கை’யை மனமுவந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறார்.
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி கும்பல் !
பகவத்கீதையில் பொதிந்துள்ள ’ஒழுக்க நெறிகளை’ பள்ளி மாணவர்களுக்கு போதிப்பது சம்பந்தமான முடிவு என்பது ஏற்கனவே மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய கல்விக்கொள்கையின்படி உள்ளது.
சமூக மற்றும் இணைய ஊடகங்களை முடக்கி வரும் மோடி அரசு !
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2014-க்கும் 2021-க்கும் இடையில் இணையப் பக்கங்கள், இணைய தளங்கள் சமூக ஊடகங்களில் உள்ள பக்கங்கள் உட்பட 25,368 URL-களைத் தடை செய்துள்ளது.
வடஇந்தியாவில் 4 மாதத்தில் 89 வெறுப்புக் குற்றங்கள் !
ஹரித்வார் இனப்படுகொலை உச்சிமாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை ‘கர் வாப்சி’ செய்ய அழைப்பு விடுத்திருந்தார்.
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஷாவின் தடுப்புக்காவலை நீட்டிக்கவும், அவர் வேலை செய்வதைத் தடுக்கவும் அதிகாரிகள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். இது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
சொத்துக்கள் சேதத் தடுப்பு சட்டம் : போராட்டங்களை ஒடுக்கவல்ல பாசிச ஆயுதம் !
காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்தோ, கார்ப்பரேட் சுரண்டலை தடுக்கவோ போராடினால், ஏன் போராடுவோம் என்று பேசினால், எழுதினால், ‘கலவரக்காரராய்’, ’கலவரத்தை தூண்டியவராய்’ சட்டப்பூர்வமாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அரசால் முடக்கப்படும்.
‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாத பாதிரியார் மீது இந்து மதவெறியர்கள் தாக்குதல்!
போதகர் ஃபதேபூர் பகுதியின் சாலையோரமாக கட்டிவைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி டெட் பாதிரியாரின் தலை, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக இந்துமதவெறியர்கள் தாக்கியதில் அவரின் மூக்கு, வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.
இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !
“ஆர்.எஸ்.எஸ்.ன் ஆரம்பகால சிந்தனையாளர்கள் இந்தியா நாஜிக்களின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று வெளிப்படையான பரிந்துரைகளை வழங்கினர். நியூரம்பர்க் சட்டங்களைப் போல் சி.ஏ.ஏ. பயமுறுத்துகிறது”
ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!
“தண்ணீர் கேட்டால் ஜூஸ் கொடுப்போம்; பால் கேட்டால் மோர் கொடுப்போம்; ஆனால், இந்தியா முழுவதும் ஹிஜாப் வேண்டுமென்றால், உங்கள் அனைவரையும் (முஸ்லீம்கள்) சிவாஜியின் வாளால் வெட்டுவோம்” என்று பூஜா கூறினார்.
கிரிப்டோ கரன்சி : அரசுக்கு இணையான பொருளாதாரம் !
தனியார் சிட் ஃபண்ட் நிறுவனம் ஏமாற்றினால் குறைந்தது வழக்காவது போடலாம். இதில் அதற்குக் கூட வழியில்லை. காரணம் இது ஒரு நிறுவனமல்ல. தனி நபர்களுக்கு மத்தியில் நடக்கும் சட்டத்துக்கு உட்படாத பணப் பரிவர்த்தனை.
கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள்!
தமது வாழ்க்கைத் தேவைகளை ஈடு செய்ய அரசு தரும் அடிமாட்டுக் கூலி போதாததால் கவுரவ விரிவுரையாளர் பணியை முடித்துவிட்டு swiggy, Zomato, பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பகுதி நேர பணியாற்றுகின்றனர்.
ரூ.22,842 கோடி வங்கி மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்ட்!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
அசான் ஓதினால் அதற்கெதிராக ஒலிபெருக்கியின் மூலம் இரைச்சலை ஏற்படுத்துவோம் என்றும், நாடுமுழுவதும் இதனை அரங்கேற்றும் படியும் அறைகூவல் விடுக்கிறது காவி குண்டர் படை.
உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
யோகி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் மீது தாக்குதல்; 78 பேர் மீது வழக்குப் பதிவு, கைது என மொத்தம் 138 வழக்குகள் பதிவாகியுள்ளது. கணக்கில் வராத சம்பவங்கள் ஏராளம்.

























