டுத்த மாதம் (ஏப்ரல்) 1-ம் தேதி முதல் மருந்துகளின் விலை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்தியாவில் சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளை வெளிநாடு மற்றும் உள்நாட்டு தனியார் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் பெரும்பாலும் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகின்றன. அடக்க விலையைவிட அதிகமாக இலாபம் ஈட்டும் வகையில்தான் இந்நிறுவனங்கள் மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்துவருகின்றன.
தேசிய அளவில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத என இரு வகைகளாகப் பிரித்து மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்து வருகிறது ஒன்றிய அரசு. பொது மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மருந்துகள் பட்டியலிடப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளை ஒன்றிய, மாநில அரசுகள் கொள்முதல் செய்து அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கின்றன.
படிக்க :
கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு
உயர்ந்து வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை : எரிபொருள் விலை உயர்வு அபாயம் !
கொரோனா பேரிடரால் மருந்துகளை தயாரிக்கும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மருந்துகளின் விலையை உயர்ந்த வேண்டும் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தன. இதையடுத்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அளித்துள்ள மொத்த விலை குறியீடு தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உயர்த்தியுள்ளது.
இதனடிப்படையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் வலி நிவாரணிகள், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் உயரும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. தேசிய அளவில் அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பாராசிட்டாமல் போன்ற மருந்துகள், அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், இரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், ஃபெனோபார்பிடோன், ஃபெனியிடோயின் சோடியம், சிப்ரோஃப்ளோக்சின் ஹைட்ரோகுளோரைடு மெட்ரானிடசோல், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்பட 886 மருந்துகளின் விலை கடுமையாக உயர்கிறது.
பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையும் 10 சதவீதம் உயர்கிறது. மேலும், கொரோனா தொற்று மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 திட்டமிடப்பட்ட மருத்துவ சாதனங்களின் விலையை உயர்த்தவும் 1,817 புதிய மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்யவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2020 ஆண்டு வரை மருந்துகளை விலையேற்றம் செய்யும்போது பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலை, பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையைவிட குறைவாகத் தான் விலையேற்றம் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலை, பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையைவிட அதிகமான விலை உயர்வை ஒன்றிய மோடி அரசு அறிவித்துள்ளது.
படிக்க :
பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
அத்தியாவசியமான அதாவது பட்டியலிடப்பட்ட மருந்துகளின் விலை உயர்வில் மருந்து நிறுவனங்கள் கேட்ட விலையைவிட அதிகமான விலையை மோடி அரசு வழங்கியுள்ளது. இதிலிருந்து கார்ப்பரேட்டுகளின் நலனை காப்பதில் கார்ப்பரேட்டுகளைவிட இந்த காவி கும்பல் அதிக அக்கறை காட்டுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
கொரோனாவால் வேலையில்லாமலும், வேலைக்கேற்ற ஊதியம் இல்லாமலும் மக்கள் சொல்லொன்னா துயரை அனுபவித்து வருகின்றனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. சமையல் எண்ணெய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அல்லல்படும் இந்த வேலையில் தற்போது மருந்துகளின் விலை உயர்வும் உழைக்கும் மக்களை வாட்டிவதைக்கும். இந்திய மக்களின் துயரை இந்த காவி – கார்ப்பரேட் பாசிஸ்ட்டுகள் உணரவா போகிறார்கள்?

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க