“அக்னிபாத்’’ ராணுவத்தில் தனியார்மயத்தின் அடுத்தக்கட்ட நகர்வு !
இந்துராஷ்டிரம் அமைக்க அடுத்த கட்ட நகர்வாகவும் தனியார்மய கொள்கையின் தீவிர வடிவமாகவும் இருக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தை அக்னி கொண்டு எரிக்காமல் வேறு எப்படி தடுக்க முடியும்.
ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது – அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து ஒரிசாவில் நடைபெற்ற கோர விபத்தானது நடக்கவிருந்ததுதான் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் மீது ஒட்டுண்ணியாக வளரும் ஜியோ – அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அறிக்கை
ஜியோவிற்கு விளம்பரம் செய்த கார்ப்பரேட்டுகளின் காவலனான மோடி, மக்களுக்குரிய பொதுத்துறையின் சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அம்பானியை அனுமதித்ததில் வியப்பேதுமில்லை.
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
மரணப்படுக்கையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்றால் சவக்குழிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிணத்துக்கு உயிர் கொடுக்கும் தனியார்மய ஆவிஎழுப்புதலை மோடி அரசு செய்து வருகிறது.
ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!
அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
10-வது நாளில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?
இந்தியாவில் கொரோனா, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துவரும் வேளையில் முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.
வாங்கும் சக்தியற்றவர்களாக 100 கோடி இந்திய மக்கள்
பணக்காரர்கள் மட்டுமே மேலும் பணக்காரர்கள் ஆவதாகவும், அவர்களிடம் மட்டுமே மேலும் மேலும் செல்வம் குவிந்துகொண்டே போகிறது எனவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போதிய வருவாய் இல்லாமல் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் ப்ளூம் வென்ச்சர்ஸ் குறிப்பிட்டுச் சொல்கிறது.
சென்னை மாநகராட்சி : தனியார் மயத்தை எதிர்த்து துப்புரவு தொழிலாளிகள் போராட்டம்
சுற்றுப்பயணத்தில் இருக்கிறாராம், முதல்வர். ஆகட்டும், ''பார்க்கலாம்'' என்கிறார் பன்னீர்செல்வம். அரசாங்கம் ஒரு முடிவு எடுத்து விட்டது. அதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என்கிறார் ஆணையர். நாங்கள் வேறு என்னதான் செய்ய முடியும்?
DHFL மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் தனியார்மயம் | சு. விஜயபாஸ்கர்
ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை.
மின்கட்டண உயர்வை எதிர்த்து சிறு, குறு தொழில்முனைவோர் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தை ஆதரிப்போம்!
இந்த மின்கட்டண உயர்வுக்கு முன்பு ஒரு தொழில் நிறுவனம் தோராயமாக 1720 யூனிட் பயன்படுத்தினால் செலுத்தி வந்த கட்டணம் ரூ. 16,148. மின் கட்டண உயர்வுக்கு பின், அதே அளவு பயன்பாட்டுக்கு தற்போது ரூ. 24,234 கட்ட வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் தொழிலை நடத்த முடியாத அவலநிலைக்கு தொழில்முனைவோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை: மோடி அரசின் பிடி இறுகுகிறது
தமிழ்நாடு ஆசிரியர்களையும் மாணவர்களையும் மோடி அரசுக்கு தாரைவார்ப்பதை ஒத்த இந்நடவடிக்கையின் மூலம் தி.மு.க. அரசு வலியுறுத்திவரும் மாநில உரிமை, கூட்டாட்சி போன்றவற்றையெல்லாம் அதுவே காலில் போட்டு மிதித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான்.
கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !
விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர்.