நிகோபாரை அழிக்க படையெடுக்கும் காவி-கார்ப்பரேட் வெட்டுக்கிளிகள்!
இத்திட்டத்திற்காக 8 இலட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன.
நிக்கோபார் தீவுகளில் வெட்டப்படும் மரங்களுக்கு ஹரியானாவிலும் மத்திய பிரதேசத்திலும் மரம் நடப் போகிறார்களாம்!
பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா 2021: பல்லுயிரிகள் மீதான பாசிசத்தாக்குதல்!
உயிரிவளங்கள் பயன்பாடு என்ற பெயரில் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள் என்ற எந்த பாகுபாடின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தங்களானது இந்திய உயிரிவளங்களின் மீதான இறையாண்மையை பன்னாட்டு - உள்நாட்டு ஏகபோகங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும்.
ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்
முதலாளித்துவத்தை மீட்பதற்கான இத்தகைய நடவடிக்கைகள், அழுகி நாறி வரும் முதலாளித்துவத்தின் முடை நாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. இதுதான் இந்த ஏகாதிபத்திய சொர்க்கபுரியின் அவலம்; ஏகாதிபத்திய மனிதாபிமானத்தின் கோர முகம். முதலாளித்துவம்தான் மனித நாகரீகத்தின் உச்சம் என்று கூச்சமின்றி மார்தட்டிக் கொள்ளும் முதலாளித்துவ அறிவு ஜீவிகளோ இதைப் பற்றி பேசுவதும் இல்லை, பேச விரும்புவதும் இல்லை.
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அவலநிலை!
எனவே ஏழை எளிய மக்களை கல்வியை விட்டு துரத்தியடிக்கும் ஆளும் வர்க்கங்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால், தனி தனியாக போராடி கொண்டிருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
பயிர்கள் விளைந்தாலும் அழிந்தாலும் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு!
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையாலும் கடுமையான பனிப்பொழிவாலும் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காப்பீட்டு நிறுவனத்திடம் ஒருமாதமாக காப்பீடுநீதி வழங்கக்கோரி அலைந்து கொண்டு இருந்துள்ளார்.
ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு: கார்ப்பரேட் கொள்ளைக்கான ஏற்பாடு!
தத்தம் நாடுகளின் உள்ள உழைக்கும் மக்களை சுரண்டுவது இயற்கை வளங்களை சூறையாடுவதையே ஜி 20 நாடுகளின் மாநாட்டின் நோக்கமாக கொண்டுருப்பதால் இதற்கெதிராக போராடுவோம்.
தாராவி மறுசீரமைப்பு திட்டம்: அதானிக்கு டெண்டர் – உழைக்கும் மக்களை நகரைவிட்டு விரட்ட எத்தனிக்கும்...
குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணியை அரசே செய்து நிறைவேற்றாமல் அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான திட்டமாக இதை மாற்றி உள்ளது.
நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய...
லாபத்தில் பங்கு என்பது முதலாளித்துவம் கண்டுபிடித்த அயோக்கியத்தனம். அதை வாங்கித் தருகிறோம் என அரசு சொல்வது அதனினும் மாபெரும் அயோக்கியத்தனம்.
தெலுங்கானா: நிஜாம் கல்லூரியில் விடுதி வசதி வேண்டி மாணவர்கள் போராட்டம் !
எங்களிடம் பணம் இருந்திருந்தால் நாங்கள் ஏன் அரசு கல்லூரிக்கு வரப்போகிறோம். நாங்கள் முதலாம் ஆண்டு சேரும் போது விடுதி வசதி செய்து தருகிறேன் என்றார்கள். தற்போது நாங்கள் இறுதியாண்டு பயில்கிறோம். இதுவரை எங்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திதரப்படவில்லை
உத்தரப் பிரதேசம்: மீண்டுமொரு தில்லி போராட்டம் – மோடியை எச்சரிக்கும் விவசாயிகள்!
இந்தமுறை தில்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் வீரியமான விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று மோடி அரசை எச்சரித்தார் எஸ்.கே.எம் தலைவர் ஹன்னன் மொல்லா!
கேள்விக் குறியாகும் டேன் டீ தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை!
வரலாறு நெடுகிலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக, மலையகத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இடம் பெயர்த்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர்
முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முதலாளித்துவ உலகில் இருந்து வராது. மாறாக பிரச்சினைகளை திசை திருப்பும் அல்லது “வலது சாரித் தீவிரவாதம்” போன்று வேறு பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் அடுப்புக்குள் குதிப்பதற்கு ஒப்பானது அது.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியும் திவால் சட்டம் 2016!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது.
பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!
வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
‘திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை’ என்கிறார் மோடி | உண்மை நிலை...
2019 ஆம் ஆண்டிலேயே பிரதமர் மோடி இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக சவடால் அடித்தார். ஆனால், அதை மறுக்கும் விதமாக மத்திய அரசின் தரவுகளே அமைந்துள்ளன.
























