திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !
திருப்பூர் கிருத்திகாவின் மரணம் , அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் பாஸ்கர் - பாரி சாலன் வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் அபாயத்தை முன்னறிவிக்கின்றது.
இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming...
மத்தியில் ஆளும் மோடி அரசு பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு புதியதாகக் கொண்டுவரவிருக்கின்ற உயர்கல்வி ஆணையக் குழுவின் பின்னணி குறித்தும், அதனால் உயர்கல்வியில் ஏற்படப் போகும் பாதிப்புகளும் குறித்த கருத்தரங்கம்.
கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !
மாணவர்களின் கல்விபெறும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து, வருகிற ஜூலை 25 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.
உற்பத்தியாளனா ? வியாபாரியா ? யாருடைய உழைப்பு அதிகம் ?
ஜி.டி.பி., வளர்ச்சி போன்ற மினுக்கும் வார்த்தைகளைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கின்றன என்பதை நம் கண் முன் விவரிக்கிறது இத்தொகுப்பு
வருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக
செய்யாதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை - பின்னணியில் யார் ? எடப்பாடிக்கும் செய்யாதுரைக்கும் என்ன சம்மந்தம் ? ஊழல்களை ஒழித்துவிடுமா இச்சோதனைகள் ? அலசுகிறது இக்கட்டுரை
பெய்ஜிங்கில் வெளியேற்றப்படும் ஏழைகள் ! இதுதான் சீனாவின் வளர்ச்சி !
” வளர்ச்சி, முன்னேற்றம் ” போன்ற சந்தைப் பொருளாதார சட்டகதில் புழங்கும் சொற்கள் மக்களுக்கு எதிரானது என்பதற்கு சேலம் மட்டுமின்றி சீனமும் இரத்த சாட்சியாக நம்முன் இருப்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்!
காக்டெய்ல் புகழ் பெர்முடா உலக தனிநபர் உற்பத்தி திறனில் முதல் நாடாம் !
57 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களைக் கொண்ட டொமினிகன் குடியரசின் தனிநபர் ஜிடிபி, கடலோர பார்களில் காக்டெய்ல் உற்பத்தியை மட்டுமே கொண்டிருக்கும் பெர்முடாவின் தனிநபர் ஜிடிபியில் வெறும் 8% தான். ஏனிந்த முரண்?
லைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி !
தெற்காசியாவின் ஒரு தேர்ந்த கார்ப்பரேட் மோசடி நிறுவனமாக மாறிவரும் லைக்கா குழுமம் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் ஊழல் மோசடிகளையும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட இந்திய, இலங்கை, ஐரோப்பிய அரசியல்வாதிகளையும், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களையும் தரவுகளோடு அம்பலப்படுத்துகிறது இத்தொகுப்பு.
ரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் !
ஒற்றை எஸ்.எம்.எஸ், பல்லாயிரம் கோடி வரிச்சலுகை, தாராளமான நிலம் என கோலாகலமாக தொடங்கப்பட்ட நானோ ஆலை, மூடுவிழாவிற்காக காத்திருக்கிறது. இதில் உண்மையான நட்டம் யாருக்கு?
உற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் ! உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் !
உடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கிறது.
உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !
உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.
அவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை !
காஃபிக் கொட்டையை உற்பத்தி செய்யாத ஏகாதிபத்திய நாடுகள் உலகளவில் காஃபி உற்பத்தியில் இலாபம் பார்ப்பதோடு தத்தமது நாடுகளின் ஜி.டி.பியில் இந்தக் கொள்ளையை சேர்க்கிறார்கள். எப்படி?
ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா...
எந்தத் தொழிற்சாலையும் இல்லாத ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில், மலிவு விலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வைத்து எப்படி இலாபம் சம்பாதிக்கின்றன என்பதை விளக்குகிறது இப்பகுதி.
சென்னை பட்டினப்பாக்கம் : கரையிலும் வாழ முடியல கடலிலும் பிழைக்க வழி்யில்ல ! படக்கட்டுரை
நடிகர் கமலகாசன் திடீர்னு வந்து “இங்க கரயில கல்லு போடலாமா”ன்னு நடுத்தெருவுல நிக்கிற எங்ககிட்ட கேக்குறாரு. அதை எங்க தலையில போட்டா ரொம்ப நல்லாயிருக்கும். தூண்டில்ல மீனு புடிக்க அதுக்கு இரை வக்கிற மாதிரி எங்கள இரையாக்கி அவனுங்க பதவிய புடிக்க பாக்குறானுங்க.
லைக்காவின் மோசடி பணத்தில் கொழிக்கும் கமல் – ரஜினி – காலாக்கள் !
லைக்கா நிறுவனம் ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் அகதிகளை சுரண்டி மோசடி செய்த பணத்தில்தான் இங்கு தமிழ் படங்களை தயாரித்து வெளியிடுகிறது. லைக்காவின் மோசடி பணத்தில் பயன் பெறுபவர்கள் தான் கமல்- ரஜினி – ஷங்கர் - ஜெயமோகன் போன்றோர்.

























