Monday, July 27, 2026
விவசாயத்தையும் விவசாயிகளையும் தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடி அரசு. தற்போது மானிய விலையில் உரம் வாங்கினால் சாதியை குறிப்பிடவேண்டும் என்று ஒரு நடைமுறையை கொண்டுவந்து விவசாயிகளை கடும்கோவத்திற்கு ஆழ்த்தியுள்ளது. https://www.youtube.com/watch?v=e7qvN_R5HDg காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கடந்த 142 நாட்களில் மட்டுமே ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 47 பேர். இந்த 47 பேரின் சாவுக்கு ரவி மட்டுமே பொறுப்பு. தமிழ்நாட்டுக்கு சவால் விடும் வகையில் இணை ஆட்சி நடத்திக் கொண்டு எவன் செத்தால் நமக்கென்ன என்று தமிழ்நாட்டையும் தமிழையும் தமிழர்களையும் ஒழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பாசிச உளவாளி ரவியை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. https://www.youtube.com/watch?v=EPh_Qb9D9vc காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர் நடக்க வாய்ப்பிருக்கிறது. அந்த போரை நடத்தப்போவது பஞ்சம் பிழைக்க வந்த வட இந்திய தொழிலாளர்கள் அல்ல; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அம்பானி – அதானி பாசிஸ்டுகள்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1 சிறுதொழிலை அழிக்கவரும் மதுரை ஸ்மார்ட் சிட்டி பற்றி மக்கள் கூறும் கருத்துக்கள் https://www.youtube.com/watch?v=HfuPu1siwsU காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஈரானில் மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக, ஹிஜாபை எதிர்த்து போராடினார்கள் என்பதற்காக பள்ளி மாணவிகள் பழிவாங்கப்படுகிறார்கள். 650-ம் மேற்பட்ட மாணவிகளுக்கு விசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோம் மற்றும் போருஜெர்ட் நார்களில் உள்ள பள்ளிகளில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. ரசாயன வாயுவால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, உமிழ் நீர் அதிகமாக சுரப்பது, குடல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாசா அமினி-இன் மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற ஹிஜாப்...
இது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண். சித்தர்கள், வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த மண். பெரியார் தன்மான படை வளர்த்த மண். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என உலகுக்கு உரைத்த மண். கீழடியும் ஆதிச்சநல்லூரும் நமது மரபு. பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருதுசகோதரர்கள், சின்னமலை, சுந்தரலிங்கனார், அழகுமுத்துக்கோன், வ.உ.சி., சிங்காரவேலர்… உறுதிமிக்கது நமது விடுதலைப் போராட்ட உணர்வு. தனித்தியங்கும் தமிழ்நாட்டின் இம்மரபுகள்தான், ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக் கொடுங்கனவு. தொழிலாளர் வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய போராட்ட தினமான மே தினத்தில் உறுதியேற்போம்! https://www.youtube.com/watch?v=GYDLC3P-tdM&t=5s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இன்றைய தேதியில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 77.69 டாலர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 112.40 டாலர். 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் சமையல் எரிவாயு உருளையின் விலை 965.00 ரூபாய். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 35 டாலர் குறைந்திருக்கிறது. ஆனாலும் சமையல் எரிவாயு உருளை விலை கடந்த ஓராண்டில் அதிகரித்து இருக்கிறது. https://www.youtube.com/watch?v=cpPAfO6TOJ4&t=2s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பகாசுரன் என்ற படம் பெண்களை இழிவு படுத்தி சமூகத்தில் அவர்கள் மீதான அனைத்து குற்றங்களுக்கு காரணம் அவர்களே என்று சித்தரிக்கிறது. பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளாக நடந்த அனைத்து போராட்டங்களையும் சுக்கு நூறாக உடைக்க முயற்சிக்கிறது. பெண்களை கல்வி, வேலை என வெளியே செல்லவிடாமல் வீட்டிலேயே அடிமைகளாக பூட்டிவைக்க வேண்டும் என்கிறது பார்ப்பனிய ஆணாதிக்க விஷம் நிறைந்த இத்திரைப்படம். இந்த திரைப்படத்தை பற்றிய விமர்சனங்களை இகாணொலியில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்... https://www.youtube.com/watch?v=wjlRHDD3ch0 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆர்.எஸ்.எஸ்-இன் உளவாளியும் ஆளுநர் என்ற பெயரில் உலவி கொண்டிருக்கும் ரவி ஒரு பாசிச கருத்தை பேசியிருக்கிறார். இந்த வெறுப்பு கருத்துக்கு பதில் அளிப்பதற்கு முன்னால் சிலவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன்பாக ‘தமிழகம்’ என்று கூறியது, சட்டமன்றத்தில் திமிர்தனமாக நடந்து கொண்டது, தமிழகத்தில் தான் சனாதனம் செழித்து ஓங்கி வளர்ந்தது என்பன போன்ற கருத்துக்களை கூறி அதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து செருப்படிக்கு ஒப்பான பதில்களை ஆர்எஸ்எஸ் உளவாளி ரவி பெற்றுக்கொண்டார். ஜனநாயக சக்திகளும் மாணவர்களும் போராடியதால் பதுங்கிக் கொண்டார். தற்போது,...
விழுப்புரத்தில் இருக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். ஜூபின் பேபி உள்ளிட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். ஏடிஎம் கொள்ளையர்களை ஹரியானா வரை சென்று இரண்டு நாட்களில் கைது செய்து வரும் காவல்துறைக்கு 15 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடப்பதை பற்றி தெரியாதா? இதற்கு பொறுப்பான கலெக்டர் தாசில்தார் விஏஓ உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் பதில் சொல்லியாக வேண்டும். வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே...
பிப்ரவரி 21 என்பது உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ-ஆல் அறிவிக்கப்பட்ட நாள். பாகிஸ்தானும் வங்கதேச மக்களும் ஒன்றாக இருந்தபோது உருது மொழி ஆதிக்கம் பாகிஸ்தானால் திணிக்கப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக போராடிய வங்கதேச மக்களை பாகிஸ்தான் அரசு சுட்டுக் கொள்கிறது. அதைப் போற்றும் விதமாகத்தான் உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் எழுச்சி தான் இந்தியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது. மேலும்.. https://www.youtube.com/watch?v=wH4mUrIfvck காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பிப்ரவரி 21 இன்றைக்கு ஒரு மகத்தான நாள். வரலாற்றில் ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Manifesto) மார்சிய ஆசான்களால் வெளியிடப்பட்டது. தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏனைய உழைக்கும் மக்களுக்கும் விடுதலைக்கான ஒரு கலங்கரை விளக்கம்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. மேலும் https://www.youtube.com/watch?v=2SMv5VaGF-Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர். https://www.youtube.com/watch?v=lniEZL_SWZY&t=6s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்! தேர்தல் ஆணையமே, நாம் தமிழர் கட்சியை தடை செய்! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சாட்டை துரைமுருகனும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும். அந்த நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைதேர்தலுக்காக திட்டமிட்டு சாதிய வன்முறையை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த கட்சியும் தடைசெய்யப்படவேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகிறது. அருந்ததியர் சாதி மக்கள் மீது சீமானும் சாட்டை துரைமுருகனும் பாய்ந்திருக்கிறார்கள். தமிழர்களை பிரித்து பிரித்து வேட்டையாடுகிற ஓநாய்களாகவே இவர்கள் இருவரும் செயல்படுகிறார்கள். மேலும்.. https://www.youtube.com/watch?v=Yy9ARdr96U0 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்களை யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை போலீசு தொடர்ச்சியாக சித்திரவதை செய்கிறது. https://www.youtube.com/watch?v=fU2c6vg5ZVM&t=9s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அண்மை பதிவுகள்