Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 486

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !

0

வேதாரண்யம் அரசு மருத்துவமனையைக் கண்டித்தும், செயல்படாத டெட்பாடி அரசை எதிர்த்தும் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணிக்கு (03.02.18) ஆர்ப்பாட்டம் நடத்து திட்டமிட்டோம். அனைத்து வேலைகளும் முடித்த நேரத்தில் 02.02.2018 அன்று மாலையில் வழக்கம்போல் கா(ஏ)வல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வது என 140 க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர். எதிர்பாராத விதமாகவே பொதுமக்கள் அணி திரண்டு வந்திருந்தது உற்சாகம் அளித்தது. மக்கள் அதிகார கொடிகளுடனும், பிளக்ஸ் உடனும் பேரணியாக செல்ல திடீர் முடிவு செய்து பேரணியை வேதாரண்யம் மேலவீதி பெரியார் சிலை அருகிலிருந்து தொடங்கினோம். காவல் துறைக்கே வியப்பூட்டும் வகையில் பொதுமக்கள் அணி திரண்டு இருந்தனர்.

அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், இப்பகுதியின் தலைமை மருத்துவமனையில் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்தும், இறந்தவர்களை கொண்டு செல்ல அமரர் ஊர்தி கூட இல்லாமல் சமீபத்தில் 9 கிலோமீட்டர் உடலை கைப்பாடையில் தூக்கி சென்ற அவலத்தை நீக்கி உடனடியாக ஆம்புலன்ஸ் (அமரர் ஊர்தி) ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், உரிய மருந்து மாத்திரைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியில் வாங்க சொல்லி எழுதி கொடுப்பதும் என்ன கேவலம், இது அரசு மருத்துவமனையா இல்லை தனியார்  கிளினிக்கா என பல்வேறு முழக்கங்களுடன் பேரணி நடத்தப்பட்டது.

வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்ததும் காவல் துறை அதிகாரிகள் பேரணிக்கு தலைமை வகித்த தோழர் தனியரசை வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்பட்டனர். மக்களும் தோழர்களும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு மெகாபோனை பிடுங்கி வைத்துக் கொண்டது காவல்துறை. இதை பல பயணிகளும் அருகிலுள்ள பொது மக்களும் கவனித்தனர். தோழர் கிருஷ்ணமூர்த்தி காவல்துறையை எதிர்த்து ” எதுக்கு எங்கள மறைக்கிற? நாங்க பொதுவான விஷயத்துக்கு போராடுகிறோம். உங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்” என கேள்வி கேட்டதும் போலீஸ் கண்டுகொள்ளாமல் நின்றது.

95 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தோழர் கிருஷ்ணமூர்த்தியை காவல் துறையினர் அதிகப்படியாய் பேசியபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது போலீஸ் பின் வாங்கியது.

கைது செய்து புஷ்பவனம் பெரியகுத்தகை பேரிடர் பாதுகாப்பு மையக்கட்டிடத்தில் தங்க வைத்தனர். 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் 70-க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர். தோழர் காளியப்பன் பொது மக்களிடம் மருத்துவமனை மற்றும் டெட்பாடி அரசின் கையாலாகாததனத்தையும், விமர்சித்து இந்த செத்த அரசை சுமக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கான உரிமைகளை பெற நாம்தான் போராட வேண்டும் என பேசினார்.

தோழர் வெங்கடேசன் மற்றும் வேதாரண்யம் வட்டார அமைப்பாளர், தோழர் தனியரசும் மக்களிடம் போராட்டத்தின்  அவசியம் அதன் நோக்கம் அமைப்பாக இருந்தால் மட்டுமே உரிமையை பெற முடியும். மக்களின் வாழ்வை செழுமையாக்க வேண்டிய அரசு பஸ் கட்டணத்தை அவர்கள் தலையில் சுமத்தி உள்ளது. இதுவா மக்களுக்கான அரசு என பேசினார்.

போலீஸ் பறித்து வைத்திருந்த மெகாபோனை திருப்பி ஒப்படைத்தால் மட்டுமே நாங்கள் பெயர் (ம) முகவரிகளை தருவோம் இல்லையேல் நாங்கள் பெயர் முகவரி கொடுக்க மாட்டோம் என தோழர்கள் காவல் துறைக்கு தெரிவிக்கவும் வேறு வழியின்றி  நம்மிடம் மெகாபோனை ஒப்படைத்தனர். அதிகாரம் மக்கள் கையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் என்னவெல்லாம் நாம் செய்ய முடியும் என மக்களுக்கு வெளிப்படுத்தியது இந்நிகழ்வு. மாலை 6 மணிக்கு தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம் பகுதி

 

தன்னுரிமை காக்க தமிழகமே திரண்டெழு ! பிப். 27 சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

2

தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு ! – ஆர்ப்பாட்டம்

  • பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழைப் பயிற்று மொழியாக்கு !
  • அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு !
  • அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு !

நாள் : பிப் 27, 2018, காலை 11 மணி
இடம் : வள்ளுவர்கோட்டம், சென்னை.

*****

அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே!

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை பறித்து, தமிழகத்தை கார்ப்பரேட்டுகள், பனியா – சேட்டுகள் சுரண்டும் வகையில் வஞ்சகமான தீர்ப்பை, உச்சநீதிமன்றத்தின் மூலம் திணித்திருக்கிறது மோடி அரசு.

காவிரியில் மட்டுமல்ல, தமிழக மருத்துவக் கல்லூரி களை ஆக்கிரமிக்க நீட் தேர்வு; விவசாயத்தை அழிக்க, இயற்கை வளங்களை சூறை யாட – மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் குழாய் பதிப்பு, சாகர்மாலா உள்ளிட்ட நாசா காரத்திட்டங்கள்; தமிழ்மொழி – பண்பாட்டை அழிக்க இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு. ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு பாரம்பரியம் கொண்ட தமிழகத்தை பணிய வைக்க மோடி அரசு தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் மொழியை அழிக்க சமஸ்கிருதவாரக் கொண்டாட்டத்திற்கு ஆணையிட்ட மோடி, இப்போது சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழி பழமையானது என்று கபட நாடகமாடுகிறார். பல தேசிய இனங்களின், மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிப்பதும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநாட்டும் இந்தி – இந்து – இந்தியா எனும் ஒற்றை கலாச்சார நாட்டை கட்டியமைப்பதும்தான் ஆர். எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் உண்மையான நோக்கம். அதைத்தான் மோடி அரசின் வழியாக செய்து வருகிறது.

தமிழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலய பள்ளிகளில் இந்தி – சமஸ்கிருதம் கட்டாயம்; இந்தியை திணிக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர திட்டம்; அரசு அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவர முயற்சி, தமிழர்களின் தொன்மை வரலாற்றை நிரூபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சிப் பணியை ஊத்தி மூடுவது. கீழமை நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்கத் தடை.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காமல் தமிழை நீச பாசை என இழிவுபடுத்துகிறான் சங்கராச்சாரி. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயரைக்கூட சகித்துக் கொள்ளாமல் மாற்றிவிட்டது ஆர்.எஸ்.எஸ் – பார்ப்பனக் கும்பல்,

காவிரியில் தமிழகத்திற்கு நியாயமாக வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை குறைத்து தீர்ப்பெழுதுகிறது உச்சநீதிமன்றம்.

கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க, ஆட்சியதிகாரத்தை தக்க வைத் துக்கொள்ள பல்லிளித்துக் கொண்டு தமிழகத்தின் உரிமையை பி.ஜே.பி யிடம் அடகு வைத்துவிட்டது இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் கிரிமினல் குற்றக் கும்பல்.

கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் அம்மாநில மொழியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கி சட்டமியற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்திலோ, தாய்மொழித் தமிழை அழிக்க வரும் சமஸ்கிருதத்திற்கும் – இந்திக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது எடுபிடி எடப்பாடி அரசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாடு முழுவதும் வேலையின்மை வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல் அச்சுறுத்துகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடி பேர் வேலையின்றி தெருவில் நிற்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று வாய்ச் சவடால் அடித்த மோடியோ இன்று பக்கோடா விற்கச் சொல்கிறார். ஒருபக்கம் சொந்த மாநிலத்தில் பிழைப்புக்கு வழியில்லாத வடமாநில இளைஞர்கள் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை குவிந்து வருகிறார்கள்.

மறுபக்கம், வி.ஏ.ஓ, டி.என்.பி.எஸ்.சி போன்ற தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் அகில இந்திய கோட்டா என்ற பெயரில் இந்தி பேசுபவர்கள் திட்டமிட்டே நுழைக்கப்படுகிறார்கள். இதைத்தான் அனைத்து மாநிலங்களிலும் செய்கிறார்கள். இப்படி, தேசிய இனங்களின் உரிமையை – மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து அனைத்தையும் மையப்படுத்துவது கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்காகவே என்றாலும், இதன்மூலம் தனது பார்ப்பன மேலாதிக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறது ஆரிய – பார்ப்பன கும்பல்.

இதை நாம் ஏன் சகித்துக் கொண்டு வாழ வேண்டும்?

இந்தியா என்பது தனி ஒரு தேசம் அல்ல, இந்து என்பது ஒரு மதமும் அல்ல. ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களால் இந்த மக்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் பலவந்தமாக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா என்ற நாடு. அவன் வைத்த பெயர்தான் இந்து மதம்.

அதற்கு முன்பு பல தேசிய இனங்கள், கலாச்சாரப் பிரிவுகள், பல்வேறு சமயப்பிரிவுகள், பல்வேறு பழங்குடி மக்கள் என பன்முகத்தன்மை கொண்ட தனித்தனி பிரிவுகளாகத்தான் இந்த பிராந்தியம் இருந்தது. ஏகாதிபத்தியங்கள் டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் (சேட்டுகளின்) ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் இந்தி – இந்து – இந்தியா எனும் பூணூலால் கட்டப்பட்டிருப்பதுதான் இன்றைய இந்தியா.

இது தேசிய இனங்களின் சிறைக்கூடம்; ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய வல்லரசுகள் – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக்காக இந்த நாட்டை மறுகாலனியாக்குபவர்கள்தான் ‘தேசபக்த ஆர். எஸ்.எஸ் – பிஜேபி கும்பல்.

இந்த சேட்டுகள் – ஆரிய பார்ப்பனர்களின் கொடுங்கோன்மை ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த தேசிய இனத்தின் மொழியே ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற அலுவல் மொழியாக நிலைநாட்டப்பட வேண்டும். விரும்புகின்ற தேசிய இனங்கள் சமத்துவ அடிப்படையில் சேர்ந்து உருவாக்கப்பட வேண்டும் நாடு – இதுதான் சரி!

இந்த அடிப்படையில், நம்மை அடிமைத்தளையில் பிணைத்திருக்கும் இந்தி – இந்து – இந்தியா எனும் பூணூல் அறுத்தெறியப்பட வேண்டும். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை தமிழகம் பெற வேண்டும்; இது ஒன்றுதான் ஒரே தீர்வு; நிரந்தரத் தீர்வு; பிற தீர்வுகள் எல்லாம் சமரசமும், சந்தர்ப்பவாதமும் ஆகும்.

அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய போதே ஆரிய – பார்ப்பன நச்சுப் பாம்பை நசுக்கி எறிந்திருக்க வேண்டும். தவறினோம், அடிவாங்கி தப்பித்த ஆரிய நச்சுப்பாம்பு பழிவாங்கும் வெறியோடு மீண்டும் படமெடுத்து ஆடுகிறது. இது நீண்ட காலம் நடந்து வரும் வரலாற்று ரீதியான போர். இம்முறையும் தவறினால் தமிழ்நாடு ஆரிய – பார்ப்பன கும்பலின் அடிமை நாடாக மாறிவிடும். எச்சரிக்கிறோம்.

எழுந்து வா! மாணவர், இளைஞர் பட்டாளமே! தன்னுரிமை பெற்ற தமிழகத்தை உயிரைக்கொடுத்தும் அடைவோம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

தொடர்புக்கு :
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை-95, தொலைபேசி : 94451 12675
மின்னஞ்சல்: rsyfchennai@gmail.com, முகநூல் பக்கம் : rsyf

 

திருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் !

1

திருச்சி : லஞ்சம் – வழிபறி -ரவுடித்தனம் போலீசின் ராஜ்யத்திற்கெதிராக தட்டிக்கேட்ட பெண்கள் – இளைஞர்கள்!

டந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் காவல்துறை, வாகன சோதனை நடத்தி, ஸ்பாட்ஃபைன் போடுவது நடந்து வருகிறது. திருச்சியில் “ஜல்லிக்கட்டு எதிர்ப்பு புகழ்” கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், இது நடக்கிறது.

உத்தரவிட்ட மூன்றே நாளில் 36,000 வழக்குகள். 36 லட்சம் வசூல் சாதனை. வருடப்பிறப்பு, பொங்கல் நாளிலும் வசூல்வேட்டை. புத்தாண்டு தினத்தன்று, விடிய, விடிய இரு சக்கர வாகன ஓட்டிகளை மறித்து, வாழ்த்து சொல்லி, இனிப்பு வழங்கிய காவல்துறை, விடிந்ததும் வழக்கம் போல ஹெல்மெட் வழக்குகளை போட்டு வசூல் வேட்டையைத் தொடர்ந்துள்ளது.

கொடுத்த இனிப்புகளுக்கும் சேர்த்தே வசூல் செய்திருப்பார்கள் போல. “காவலர்களுக்கு சம்பளமே இந்த வசூல் மூலம்தான்” என்கிறார் ஒரு காவல் ஆய்வாளர். “8 மணி நேரத்தில் 4 மணி நேரம் இந்த வேலை தான்” என ஒரு SI-யே புலம்பும் அளவுக்கு வசூல் வேட்டை தொடர்கிறது.

ஏற்கனவே பஸ் கட்டண உயர்வு, கேஸ், பெட்ரோல் விலை உயர்வு என பல்வேறு சோதனைகளில் சிக்கி வாழ வழியற்று விழி பிதுங்கும் மக்களை ‘வாகன சோதனை’ என்ற பேரில் வழிப்பறி செய்கிறது போலீசு. திருச்சி மாநகர் எல்லைக்குள் 14 காவல் நிலையங்கள். ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் 4, 5 இடங்களில் வசூல். ஒரு இடத்தில் 100 கேஸ் கட்டாயம். எனவே ஒரு நாள் வசூல் திருச்சி மாநகரில் மட்டும் 7 லட்சம். மாத வசூல் 2 கோடியே 10 லட்சம். புறநகர் காவல் நிலையங்கள் தனி. தமிழ்நாடு முழுவதும் கணக்கு போட்டுப் பாருங்கள். இந்த வசூல் வேட்டை வழிப்பறிக் கொள்ளைதான் என்பது தெளிவாகப் புரியும்.

இளைஞர்களை தாக்கிய எஸ்.ஐ. கோபால்

திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் ஒரு செக்போஸ்ட் உள்ளது. சுற்று வட்டார விவசாயிகள் காந்தி மார்க்கெட்டுக்கும், இளைஞர்கள் கூலி வேலைகளுக்கும் இந்த செக்போஸ்ட்-ஐ கடந்து செல்லும் போதெல்லாம், அவர்களிடம் வசூல்வேட்டை நடத்தியுள்ளது போலீசு.

கடந்த 11.02.2018 இரவு செக்போஸ்ட்டில் பணியில் இருந்த எஸ்.ஐ. கோபால் உய்யகொண்டான் பகுதியைச் சேர்ந்த 2 பட்டதாரி மாணவர்கள், அனைத்து ஆவணங்களைக் காட்டியும், 500 ரூபாய் வாங்கிக் கொண்டு, 100 ரூபாய்க்கு ரசீது கொடுத்துள்ளார். இதைக் கேட்டதற்காக, கன்னத்தில் அறைந்தும், 10 காவலர்களுடன் சேர்ந்து லத்தியால் அடித்தும், உதைத்தும், நடு ரோட்டில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அடி தாங்காத 2 இளைஞர்களும் அருகாமை தெருவிற்கு ஓடியுள்ளனர். விரட்டி சென்று அடித்து, இழுத்து வந்து செக்போஸ்ட்டில் வைத்து மீண்டும் அடித்து, உதைத்துள்ளனர்.

இதனைக் கேள்விப்பட்டு வந்த அந்த இளைஞர்களின் பெற்றோர்கள், சுற்று வட்டார பகுதி மக்கள் காவலர்களின் தாக்குதலை கண்டித்தனர். மீண்டும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பொதுமக்கள் இளைஞர்கள் சாலை மறியல் செய்தனர். ஏற்கனவே பலமுறை இந்த செக்போஸ்ட்போலீசால் பாதிக்கப்பட்ட ஆத்திரத்தில் இருந்த சோழிங்கநல்லூர், செங்கற் சோலை மற்றும் மேலத்தெரு, கோப்பு, சோமரசம் பேட்டையை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் இச்செய்தியறிந்து வாகனங்களில் 300 -க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். “தங்களின் உழைத்த பணத்தை இந்த காவல்துறைக்கு லஞ்சமாக ஏன் கொடுக்க வேண்டும், என கேள்வி எழுப்பினர். காவல்துறையினருக்கெதிராக இரவு8.30 மணி துவங்கி நள்ளிரவு 12 மணிவரை மாபெரும் மறியல் போராட்டமாக நீடித்தது.

  • லஞ்சம் – வழிபறி- தாக்குதல் என குற்றச்செயல்களில் ஈடுபட்ட எஸ்.ஐ.கோபாலை பணி நீக்கம் செய்!
  • இரண்டு மாணவர்களையும் விடுதலை செய்!
  • அவர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்!
  • பாலுவாங்ககூட போகமுடியல இந்த செக்போஸ்ட் டை அப்புறப்படுத்து! ….என கோரினர்.


தன் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதையறிந்த ஏசி பெரியய்யா பெட்டிசன் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என நைசியமாக பேசி முன்னின்ற சில இளைஞர்களிடம் கையெழுத்து கடிதம் பெற்ற மறுகணமே கலைந்துசெல்லு! ஓடு என திமிருடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள், இளைஞர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தடியடியால் 10 -ஆம் வகுப்பு மாணவியின் கால் ரணமாகி பள்ளி செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பல பெண்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். ஆத்திம் தீராத காவல்துறை அருகாமை கிராம இளைஞர்களை தேடிப்பிடித்து இரண்டு வேன்களில் கடத்திச் சென்று வழி நெடுக “எங்களை எதிர்க்க இவ்வளவு துணிச்சல் எப்படிடா வந்தது?” என கேட்டு கேட்டு வண்டியில் அடித்துள்ளனர்.

கடும் தாக்குதலுக்கு உள்ளான நிரோசன்

இறுதியாக உறையூர் காவல் நிலையத்தில் அவர்களை சட்டவிரோதமாக இரவு முழுவதும் அடைத்துவைத்ததுடன் கேமராக்களை அனைத்து விட்டு சீருடையில் இல்லாத காவலர்களும் இணைந்து, இரண்டு இரண்டு பேராக இழுத்துச்சென்று கொடுரமாகதாக்கியதில் 10 -க்கு மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தேவேந்திரன் வயது(34) என்பவரது கால் மூட்டு நொறுக்கப்பட்டுள்ளது. பூட்ஸ் காலால் எட்டி உதைத்து மிதிக்கப்பட்டதில் கல்லூரி. மாணவர் நீரேஷ் கண், காது, பாதிக்கப்பட்ட வேதனையுடனேயே கல்லூரி தேர்வை எழுதியுள்ளார். பொது மக்கள், பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலை, தனது செல்போனில் படம் பிடித்த இளைஞரை மிக கடுமையாக இடுப்பு மீது ஏறி மிதித்துள்ளனர்.

மறுநாள் காலை இரக்கமற்ற காக்கி மிருகங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமே “மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன்” எந்த பிரச்சனைக்கும் என எழுதி வாங்கி கொண்டு விரட்டியடித்துள்ளனர். (சிகிச்சைக்கு சென்றால் தாங்கள் சிக்கி விட நேரிடும் என்பதால்.) இச்செய்தியறிந்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

எஸ்.ஐ. கோபால் ஏற்கனவே இது போன்று பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இளைஞனை ஹெல்மெட் கொண்டு தாக்கியிருக்கிறார். தன்னை ஐயா எனக் கூப்பிடாமல் சார் என்று கூப்பிட்ட குற்றத்திற்காக சமீபத்தில் திருச்சியில் ஒரு இசுலாமியரைக் கடுமையாக தாக்கியிருக்கிறார். கோபாலின் இந்தக் குற்றங்கள் அனைத்திலும் அவரது மேலதிகாரிகள், மனித உரிமை ஆணையம், அரசு அதிகாரிகள் என அனைவரும் கோபாலுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

கால் உடைந்த நிலையில் “இது போலீசு கேசு சேர்க்கமுடியாது என மருத்துவ சிகிச்சையின்றி விரட்டப்பட்டு, வேதனைப்பட்ட இளைஞர் தேவேந்திரனுக்கு வழக்கறிஞர்கள் முன்னிலையில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உடைந்த காலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏற்கனவே போலீசு மீது கொதிப்புடன் இருந்த நூற்றுக்கும் அதிகமான பெண்கள், இளைஞர்கள் மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலக வாசலிலேயே முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் மக்கள் அதிகாரம் தோழர்கள்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்களில் சிலர் “போலீசுக்கு மக்களின் உயிர் மேல் என்னடா இவ்வளவு அக்கறை? ஆக்சிடண்ட்ல செத்தத விட நீ அடிச்சுக் கொன்ன ஆளுங்க தான் அதிகம். வரண்டபயலுக மாதிரி சந்துக்கு சந்து மறஞ்சு நின்னு ஏன் பிடிக்கிற? டீ வாங்கக் கூட போக முடியல. அன்றாடம் இவனுங்களுக்கு அழுக வேண்டியதாயிருக்கு, போலீசு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதயும் இப்ப இல்ல, இனி எங்க ஏரியாக்குள்ள போலிசே வரக்கூடாது” என்று பேசினர்.

போலீசால் கால் உடைக்கப்பட்ட தேவேந்திரன்

கால் முறிக்கப்பட்ட இளைஞரின் தாய் “என் மவன் என்ன தப்பு செஞ்சான். கள்ளக்கடத்தல் பண்ணானா?, இல்ல உன் பொண்டாட்டி புள்ளங்கள கையப்புடிச்சி இழுத்தானா? எதுக்கு இப்புடி மிருகத்தனமா அடிச்சிருக்க?” என்று பேசினார்.

இறுதியாக ‘SI கோபால் உள்ளிட்ட போலீசாரை பணிநீக்கம் செய்ய வேண்டும்! உய்யகொண்டான் திருமலை செக்போஸ்ட்டை அகற்ற வேண்டும்: நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டும்!

திருச்சி முழுவதும் ‘வாகன சோதனை’ என்ற பேரில் போலீசு நடத்தும் வழிப்பறிக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்! என கோரிய மனுவை, திருச்சி மாவட்ட ஆட்சியரின் (பொ) உதவியாளர் வெளியே வந்து மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதியிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.’

அரசும், ஆளும்வர்க்கமும் மக்களை வதைக்க-அதிகாரம் செலுத்த கட்டியமைத்த போலீசின் ராஜ்யத்திற்கெதிராக கெஞ்சுவது, புலம்புவதால் பயனில்லை, மக்கள் அதிகார கமிட்டிகளைகட்டுவதே மக்களுக்கு பாதுகாப்பு! என்பதை உணர்த்தியுள்ளது இந்த மக்கள் போராட்டம்!

( படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

 

மோஷி மோஷி மேட்டுக்குடி உணவகத்தின் இலாபவெறிக்கு 3 தொழிலாளிகள் பலி !

0

முதலாளித்துவ  பயங்கரவாதத்திற்கு மூன்று தொழிலாளர்கள் பலி !

மோஷி மோஷி  ரெஸ்டாரான்ட்

திருபெரும்புதுரில் இருந்து ஒரகடம் செல்லும்  தேசிய  நெடுஞ்சாலையில்  போந்துர் கிராமம் அருகே  உள்ளது ” மோஷி மோஷி “ என்ற ரெஸ்டாரான்ட். இந்த பகுதியில் பல பன்னாட்டு நிறுவனங்களில்  பணி புரியும் உயர் அதிகாரிகள்,  HR – கள் மற்றும் கொரிய சீன  ஜப்பான்  நாட்டை  சேர்ந்தவர்கள்  வேலை நிமித்தமாக வந்தால், தங்குவதற்கும்  தின்பதற்குமான  இடமாக  இந்த ஒட்டல் செயல்படுகின்றது.

ஒட்டல் அமைந்துள்ள இடத்தை  யாராவது பார்த்தால் இங்கு என்ன வியாபாரம் ஆகும் எனத் தோன்றும். ஏனெனில் ஆள் ஆரவமற்ற தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பொட்டல் காடான விளைநிலங்கள்,  கண்ணுக்கு எட்டிய துரத்தில் சில அடக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.  உழைப்பை சுரண்டும் கும்பல் கூடி கும்மாளம் அடிப்பதும் இது போன்ற  ஒட்டலில்தான்.  இப்படிப்பட்ட ஒட்டல் முதலாளியின்  இலாப வெறி  மூன்று தொழிலாளர்களின் உயிரை பறித்திருக்கின்றது.

மேற்படி  ஒட்டலில்  கழிவு நீர் தொட்டியை  கடந்த புதன் (14.02.180)  அன்று  சுத்தப்படுத்துவதற்கான  வேலையை துவங்கியுள்ளனர். 28 வயதான மாரி மற்றும் 36 வயதான முருகேசன்  இருவரும் தொட்டிற்குள்ளே இருக்கும் படிகள் வழியாக உள்ளே  இறங்கும்போது இருவரும்  அடுத்தடுத்து  மயக்கம் அடைந்து  தொட்டிற்குள்ளேயே விழுகின்றனர். இதனை பார்க்கும்  ரவி  (எலக்ட்ரிசியனாக பணி புரிபவர்) என்பவர்  தொழிலாளர்களை  காப்பாற்ற போய் அவரும்  பலியாகின்றார்.  இதன் பிறகே  தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூன்று பேரையும் மீட்டு திருபெரும்புதுர் அரசு மருத்துவமனையில் சேர்க்கும் போது அவர்கள்  இறந்து விட்டனர்.

இதன் பிறகு  RDO, DSP, சிலம்பரசன்,  திருபெரும்புதுர் தொகுதி  MLA  ஆகியோர்  பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடத்திய  கட்ட பஞ்சாயத்தில்  இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்து லட்சம் பேரம் பேசப்பட்டு பெயரளவிற்கு வழக்கு பதியப்பட்டு வேலையை முடித்துக் கொண்டுள்ளனர்.

இது போன்ற  கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவது என்றால், அதற்குறிய சாதனங்களை கொண்டும், சுத்தப்படுத்துவதற்கு முன்பாக குறிப்பிட்ட தொட்டிற்குள் இருக்கும் விஷ வாயுவின்  வீரியத்தை குறைக்கும் கெமிக்கல் மருந்துகளை தொட்டிற்குள்ளே போட்டு பிறகு பாதுகாப்பு கவசங்களை அணிந்த பிறகே  கழிவு நீர் தொட்டிற்குள் இறங்க வேண்டும். இதில் எந்த பாதுகாப்பு விதிமுறையையும் பின்பற்றப்படவில்லை. எனவே இது படுகொலைதான்.

தலைகவசம் உயிர் காக்கும் என்ற பெயரில் வண்டியின் பின்னால் அமர்ந்து போகின்றவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவதாக  சொல்லிக் கொண்டு, அதை கண்டு கொள்ளாமலும் அல்லது கலக்சனுக்காக போலீசு நடந்து கொள்வதைப் போலத்தான்  அரசின் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும், முதலாளியின் இலாப வெறியும் தொழிலாளர்களின் உயிரை பறித்திருக்கின்றது.

இறந்து போன முருகேசன் என்ற தொழிலாளியின் மூன்று  வயது  பெண்  குழந்தை அப்பா இறந்து போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தது, மாலை நேரம் ஆக ஆக குழந்தை அப்பாவை கேட்டபோது முருகேசனின் மனைவி  கதறி அழுதது, இறந்த மற்ற தொழிலாளர்களின்  உடன் பிறந்தோரும்  உறவினர்களும் கதறி கண்ணீர் மல்க  அழுது கொண்டிருந்தது  நெஞ்சை உலுக்குவதாக  இருந்தது.

இறந்த தொழிலாளர்களின் உறவினர்களிடத்தில்  பேசுகையில்  எங்கும் நிலையான வேலை இல்லை கிடைக்கிற வேலைக்கு போன போதுதான் இந்த நிலைமை என்றார். காண்டிராக்ட் வேலை என்ற பெயரில் கொத்தடிமையான வாழ்க்கை முறை பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாதது என்பது எங்கும் நிறைந்திருக்கின்றது. இந்த நிச்சயமற்ற வாழ்க்கையில் மரணமும் நிழலாக பின் தொடர்கின்றது. தொழிலாளி வர்க்கம் எதிர் கொண்டிருக்கின்ற வாழ்நிலைமை இதுதான். இதைத்தான் வளர்ச்சி என்கிறார் மோடி ! அ.தி.மு.க கும்பலோ அமைதி, வளம், வளர்ச்சி என்கிறது.

சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சிக்கு பின்னால் முதலாளிகளின் இலாப வெறிதான் அரசின் கொள்கையாக இருக்கின்றது. இதுவே நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உரிமை – உயிர் பறிப்பிற்கும் அடிப்படையாக இருக்கின்றது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் காலத்தில் கலகம் வெடிக்கும். தற்போது இருக்கின்ற அரசு கட்டமைப்பு தகர்க்கப்படும், மக்களை – தொழிலாளர்களை கொல்லும் சுரண்டலும் ஒழிக்கப்படும். சமூக மாற்றத்திற்கு தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்பதுதான் இது போன்ற படுகொலைகள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும் !

தகவல்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்,
தொடர்புக்கு: 8807532859

 

உயர்கல்வித் துறை சீரழிவிற்கு யார் காரணம் ? மதுரையில் ஆர்ப்பாட்டம்

0

உயர்கல்வித் துறையின் லட்சணம் இவ்வாறு இருப்பதற்கு யார் காரணம்?

”கொள்ளை வேந்தர் கணபதியின் சொத்துக்களை பறிமுதல் செய்!
கூட்டுக் களவானிகளான அதிகாரிகள்-அமைச்சர்களையும் சிறையிலடை!
கிரிமினல் மாஃபியாக்களிடமிருந்து கல்வித்துறையை மீட்டு
பெற்றோர்கள்- பேராசிரியர்கள்- மாணவர்களே நடத்துவோம்! “

என்கிற முழக்கத்தை முன்வைத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 13.02.2018 அன்று மதுரை தெற்குவாசலில் உள்ள பள்ளிவாசல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு-வைச் சேர்ந்த தோழர் இரவி தலைமை ஏற்று நடத்தினார்.

அவர் தனது தலைமையுரையில், பேராசிரியர் நியமனத்தில் ரூ.30 லட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை இலஞ்சம் பெற்றதன் அடிப்படையில் பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சிக்கும் கணபதிக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகத்தான் இந்த ஊழல் முறைகேடு வெளியே வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இதுதான் நிலைமை. கடந்தாண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடு வெளிவந்தது. கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் மேலான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை முறைகேடாக நியமித்து ரூபாய் பத்தாயிரம் கோடிக்கும் மேல் சுருட்டியவர் இராமசாமி செட்டியார்.

நியாயப்படி அரசு, செட்டியாரையும் இலஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர்களையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மாறாக மற்ற கல்லூரிகளில் நடக்கவிருந்த பேராசிரியர் நியமனங்களை நிறுத்தி வைத்து இந்த ஊழல் ஆசிரியர்களை பணியில் சேர்த்தனர். இப்படி கேடுகெட்ட ஆசிரியர்களைப் பணியில் சேர்த்தால் இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

இதற்கு எதிராக நேர்மையான பேராசிரியர்கள், பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் ஆற்றிய கண்டன உரையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டு உழைக்கக் கூடிய மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது அரசு.  அதற்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது.

தற்போது புதியதாக மதுரை மீனாட்சிக்கு ஆபத்து எனப் புதிய பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்கள் இந்துத்துவவாதிகள். மீனாட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இந்த இந்துத்துவ பாசிஸ்டுகளாலதான் ஆபத்து.

மற்ற நகரங்கள விட மதுரையில்தான் பேருந்து கட்டணம் அதிகம். ஏழு கிலோ மீட்டர் போவதற்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கு.

இந்த சூழ்நிலையில்தான் துணைவேந்தர் பிரச்சினை. மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. பல்வேறு சுமைகளுக்கு இடையிலதான் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த சூழலில் கல்வித்தரம் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? கணபதி போன்ற ஆட்களை நாம் விட்டு வைக்கலாமா? மாணவர்களிடம் சுயநலமும் காரியவாதமும் மேலோங்கி இருப்பதற்கு காரணமே இவர்கள்தான்.

ஒரு அம்மாவிடம் செயினைப் பறித்து தரதரவென்று இழுத்துச்செல்லும் இளைஞனின் மனநிலை எப்படி குரூரமாக மாறியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாலே நமக்கு உள்ளம் கூசுகிறது. இது போன்ற சம்பவங்கள் இனி தொடர்ச்சியாக நடக்கும் அபாயம் உள்ளது. செயினைப் பறித்த இளைஞனைப் பிடித்தால் பொதுமக்கள் என்ன செய்வார்களோ அதே போலத்தான் இந்த இலஞ்ச ஊழல் பேர்வழிகளை நடுத்தெருவில் கட்டிவைத்து தோலுறிக்க வேண்டும் என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர். இரா.முரளி அவர்கள் தனது கண்டன உரையில், கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பீடித்துக் கொண்டிருந்த ஒரு நோய் தற்போது முற்றிலுமாக பரவியிருக்கிறது. படிக்க நினைக்கும் அனைவரும் பணம் கொடுக்காமல் படிக்க முடியாது என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

படித்து ஆசிரியராக வேண்டுமென்றால் அதன் விலைப்பட்டியல் ஏற்கனவே போடப்பட்டிருக்கும். நான் மதுரை கல்லூரியில் ஐந்தாண்டுகள் முதல்வராக இருந்தவன். எங்கே போனாலும் வெட்கப்படாமல் இதைக் கூறுவேன். ஒரு சீட்டு வேணும்னா என் ரூமில் வந்து நிக்கனும். அங்கு அதிகாரத்தின் உச்சக் கட்டத்தில் உட்கார்ந்திருப்போம். அப்போது சொல்லுவார்கள் பத்தாயிரம் இருபதாயிரம் கொடுக்கிறேன் பி.காம் சீட் கொடு என்று.

இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டமிட்ட ஊழல் என்றால் அது உயர்கல்வித் துறையில் தமிழகத்தில் நடந்த ஊழல்தான். காசு கொடுக்கலைனா வேலை எப்படிக் கிடைக்கும் என்று மக்களையே பேச வச்சுட்டாங்க. சொத்தை வித்து நாற்பது ஐம்பது இலட்சம் கொடுத்துவிட்டுத்தான் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். இதை யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

நான் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் அப்போதிருந்த கல்வி அமைச்சர் எல்லாக் கல்லூரி முதல்வர்களையும் கூப்பிட்டு ‘ஒரு பேராசிரியருக்கு ஏழு இலட்ச ரூபாய் கொடுத்திருங்க மீதி எவ்வளவுனாலும் நீங்க வித்துருங்க” என்று கூறினார். நான் கோபமாகி ”உங்களுக்கு வெட்கமில்லையா?”னு கேட்டேன் ”இதுக்குப் போயி எதுக்கய்யா வெட்கப்படனும்?. இது கட்சி வளர்ச்சி நிதி. நானா எடுத்திட்டுப் போகப் போறேன். எனக்கு அரை சதவீதம் தான் கிடைக்கும்” என்று கூறினார்.

கடந்த இரண்டாண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்நிலை. கமலும் ரஜினியும் சிஸ்டம் சரியில்லைனு சொல்லுறாங்க. உண்மையிலே சிஸ்டம்னா என்ன? அது எப்படி சரியில்லாமப் போச்சுனு தெரியுமான்னு தெரியல. அமெரிக்கன் கல்லூரி, மதுரைக் கல்லூரி, மன்னர் கல்லூரி, சரசுவதி நாராயணன் கல்லூரி என அனைத்துக் கல்லூரியிலும் பேராசிரியர் பதவிக்கு இலஞ்சம் வாங்கப்படுகிறது. இதை அவர்களால் மறுக்க முடியுமா? இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் என்ன செய்ய முடியும்? இவர்களை மக்கள் விரட்டி விரட்டி அடிக்கிற வரைக்கும் போராட்டம் பண்ண வேண்டியிருக்கு.

இன்று ஆளுநர் புரோகித் தமிழகத்தையே சுத்தி வந்து “ஸ்வச் பாரத்”- திற்கு வேலை செய்கிறார். ஆனால் அவர் அதிகாரத்தின் கீழ் இருக்கும் துணைவேந்தர் ஊழலை கவனிக்க மறுக்கிறார். அவர்தான் பல்கலை வேந்தர். தூத்துக்குடியில் குழந்தைகள் உட்பட விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்கிறார்கள். எத்தனை பேரைத்தான் இவர்களால் கைது செய்ய முடியும்?

எத்தனை கோடி ரூபாய் உயர்கல்வித் துறையில் அதிமுக அரசு ஊழல் செய்து குவித்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதே நேரத்தில் சில பத்துபேர் நடத்தும் இந்தப் போராட்டத்தை பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் போராட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

அடுத்து பேசிய மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் முன்னாள் தலைவர் பேராசிரியர். அ. சீனிவாசன் அவர்கள் தனது கண்டன உரையில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முப்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவன். அந்தப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனின் ஊழலை எதிர்த்துக் கேட்டதற்காக ஒரு பேராசிரியரை அடித்து அவரது கையை முறித்தார்கள். ஊழலை எதிர்த்தால் கை முறிக்கப்படும் என்கிறார்கள் ஊழல்வாதிகள்.

இதுவரை துணைவேந்தர் பதவிகள் சாதிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் வலுவான பணக்காரர்கள்தான் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது கணபதி மாட்டிக் கொண்டார். அவரை நியமித்தவர்கள் யார்? அவரை இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்தொர்கள் யார்?. தற்போது நிர்வாகக் குழுவில் இருக்கும் மூன்று பேரில் ஒருவர் தானே அவரைப் பரிந்துரைத்திருப்பார். பணம் கொடுத்துத்தான் பதவியில் சேர்ந்தேன் அதனால்தான் பணம் வாங்கினேன் என்கிறார் கணபதி. அப்படியானால் நேர்மையானவர்கள் இப்பதவிக்கு வர முடியாது என்பதே உண்மை.

இதனால் பாதிப்பு யாருக்கு என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம். ஒன்றுமே தெரியாத ஒரு மாணவன் கல்வி கற்க வந்தால் அவனுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் இலஞ்சம் கொடுத்து பதவியில் சேர்ந்த ஆசிரியரின் தரம் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும். மாணவர்களுக்கு பாடம் நடத்த இவர்களுக்கு அருகதை இருக்கிறதா?

நம்முடைய வரிப் பணத்தில் தான் பல்கலைக் கழகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நமது சந்ததியினருக்கு தரமான கல்வி தரும் தகுதி இவர்களுக்கு இல்லை. மக்களாகிய நாம் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தால் நம்முடைய எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாழாகிவிடும் என்பதில் எள் முனை அளவுகூட சந்தேகம் இல்லை என்று பேசினார்

அடுத்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் பேசினார். கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மட்டும் தான் ஏதோ லஞ்சம், ஊழல் செய்து பிடிபட்டுவிட்டார் என்று இல்லை. தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களும் கணபதியைப் போன்றவர்கள் தான்.

கோடிகோடியாக லஞ்சம் கொடுத்துப் பதவிக்கு வந்தார்கள். இப்போது கொடுத்ததை வசூல் செய்கிறார்கள். அவர்களுக்கு உயர்கல்வியைப் பற்றியோ தரத்தைப் பற்றியோ நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. போட்ட பணத்தை பல மடங்கு லாபத்துடன் எப்படி சம்பாதிப்பது என்பதுதான் அவர்களது ஒரே நோக்கம்.

இந்த நிலை எதனால் வந்தது? பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பல்கலை வேந்தராகிய ஆளுநரிடமும் உயர்கல்வித்துறை அமைச்சகத்திடமும் இருக்கிறது. இவர்கள்தான் லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதி இல்லாத நபர்களை நியமிக்கின்றனர். தகுதி இல்லாதவர்கள் மட்டும் இல்லை. அவர்கள் கிரிமினல் பேர்வழிகளாகவும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே அமைச்சர்களும் அதிகாரிகளும் அப்படிப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே இனம் இனத்தோடு சேர்கிறது. மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி.பி. செல்லத்துரை துணைவேந்தர் பொறுப்புக்கு உரிய தகுதி இல்லாதவர். எப்படி நியமிக்கப்பட்டார்? எப்படி பதவியில் நீடிக்கிறார்? அவரது நியமனத்தை எதிர்த்து நான் உயர்நீதி மன்றத்திலே வழக்குப் போட்டுள்ளேன். ஆனால் அவர் பதவியில் இருப்பது மட்டுமல்லாமல் பல லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவரைப் போன்ற கிரிமினல்களை உயர் பதவிகளில் நியமிக்கிறார்.வழக்கு நீதிமன்றத்திலே தூங்கிக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இதேபோல முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ள தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கரனை எதிர்த்துப் போராட்டம் நடக்கிறது. கணபதி மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்தது எதனால்? ஆளுநர் புரோகித்துக்கு மற்ற பல்கலைக் கழகங்களின் நிலைமை தெரியாதா? வாங்கிய கொள்ளையில் உரிய பங்கு போய்ச் சேரவில்லை என்பது தான் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது.

மேலும் சசிகலாவிடம் லஞ்சம் கொடுத்து பதவியைப் பெற்றவர்களை மட்டும் குறிவைத்து நடவடிக்கை பாய்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆளுநர் புரோகித் சாட்டையைச் சுழற்றுகிறார் என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பங்கு போகாததுதான்.

அதற்கு மேல் அது ஒரு கண்துடைப்பு நாடகமே. தமிழ் நாட்டின் அனைத்துக் கனிம வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு பங்கு போய்க்கொண்டிருந்த நிலையில் கிரானைட் பி.ஆர்.பி.மீது தனிப்பட்ட காரணங்களால் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததுபோலத்தான் இதுவும். பஸ் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சிதான் இது.

கணபதி மீது நடவடிக்கை எடுத்துள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அவரிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கவர்னரும் ஏன் மவுனம் காக்கிறார்?

உயர்கல்வித்துறையின் இந்த சீரழிவிற்குக் காரணம் எது? கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, வியாபாரம் ஆனதுதான். தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் நோக்கம். பல்லாயிரம் கோடி புரளும் இந்தத் துறையில் பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்துள்ளனர். காசு உள்ளவனுக்கு மட்டும் தான் கல்வி என்பது இன்று பா.ஜ.க. ஆட்சியில் எழுதப்பட்ட விதியாகிவிட்டது.

இந்த நிலையை யார் மாற்றுவார்கள்? மக்கள்தான் இந்த நிலையை மாற்ற வேண்டும். தகுதியற்ற இந்தக் கொள்ளையர்களை விரட்டிவிட்டு மக்கள் அனைத்துக் கல்வி நிலையங்களையும் கைப்பற்றி தாங்களே நடத்த வேண்டும்.

பு.மா.இ.மு. தோழர் சேகரன் நன்றி சொல்ல ஆர்ப்பாட்டம் முடிந்தது.

தகவல்:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
மதுரை.

 

காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் !

0

 

பத்திரிக்கைச் செய்தி

18-2-2018

காவிரி நீர் பங்கீட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்தின் உரிமையை மறுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி இருக்கிறது. கர்நாடக தேர்தல் அரசியல் ஆதாயம், டெல்டாவில் மீத்தேன், ஓ.என்.ஜி.சி எரிவாயு திட்டம், ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் பா.ஜ.க அரசின் அரசியல் முடிவாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இரு மாநிலங்களை சேர்ந்த துறை சார் வல்லுநர்கள் மூலம் களத்தில் ஆய்வு செய்து பல ஆண்டுகள் விசாரித்து வழங்கப்பட்ட, காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை இருமாநிலங்களுக்கிடையில் முறையாக அமுல்படுத்துவதில் பொறுப்போடு கவனம் செலுத்தாமல் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீரை உரிய பருவத்தில் தருவதில்லை. தரவேண்டிய அளவையும் தராமல் பாக்கி வைத்துள்ளது. தமிழக விவசாயிகள் பயிர் கருகி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலையில் போராடும் போதெல்லாம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் தூண்டப்படுகிறது. இதில் பா.ஜ.க சங்பரிவார் அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்நாடக அரசு எந்த உத்தரவையும் அமுல்படுத்தாமல் அடாவடி செய்வதை உச்சநீதிமன்றம் கண்டு கொண்டதே இல்லை.

அது போல் மத்திய அரசும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் ஆறு ஆண்டுகள் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது. இவ்வாறு மத்திய அரசு கர்நாடகாவிற்கு சாதகமாக தேர்தல் அரசியல் ஆதாயம் கருதி செயல்பட்டு வருகிறது.
காவிரி டெல்டாவை எதிர்காலத்தில் பாலைவனமாக மாற்றி, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டமும் இந்த தீர்ப்பின் பின் உள்ள டெல்லியின் சூழ்ச்சியாகும்.

தமிழகத்தில் நிலத்தடி நீர் இருக்கிறது என ஒருதலைப்பட்சமாக காரணம் காட்டி 192 டி.எம்.சி. அளவிலிருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்து அதை கர்நாடகாவிற்கு உயர்த்தி வழங்கியது, தமிழகத்தை திட்டமிட்டு டெல்லி வஞ்சிக்கும் செயலாகும்.

காவிரி உரிமைக்காக தமிழகம் தழுவிய அளவில் 17-2-18 அன்று மக்கள் அதிகாரத் தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் போராடியவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன் பொய் வழக்கு பதிவு செய்து மத்திய சிறையலடைத்துள்ளார். இதன்மூலம் மோடிக்கு தனது விசுவாசத்தை எடப்பாடி அரசு காட்டியுள்ளது.

அதுபோல் திருவாரூர் கடமங்குடியில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் மக்கள் அதிகார தோழர்கள் ஏழு பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழகத்தில் எடப்பாடி அரசு பா.ஜ.க.வின் கிளை அமைப்பாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. பிரசுரம் கொடுத்தால் போஸ்டர் ஒட்டினால்கூட போலீசு வழக்கு போடுகிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது. மத்திய மாநில அரசுகள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பரவலாக தமிழகத்தில் அமுல்படுத்தி வருகின்றன. இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கண்டித்து அனைவரும் போராட வேண்டும்.

  • தமிழகத்தின் உரிமையை பறிக்கும் டெல்லிக்கு ஆதரவாக செயல்படும் முதல்வர் எடப்பாடி உடனே பதவி விலக வேண்டும்.
  • டெல்லிக்கு எதிரான போராட்டத்தில் தமிழக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
  • திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடி சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் ஏழுபேரை விடுதலை செய்யவும்
  • காவிரி நீர் உரிமைக்காக போராடி மதுரை சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் இருபது பேரை விடுதலை செய்யவும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்..

இப்படிக்கு
காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்

 

காவிரி : மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் ! ஆர்ப்பாட்டங்கள்

1

பத்திரிகை  செய்தி

16.02.2018

காவிரி நீர்மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம்

காவிரி நீர்ப்பங்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தீர்ப்பு வழக்கம்போல தமிழகத்தை வஞ்சிப்பதாகவே வந்துள்ளது. 27 ஆண்டுகால நெடிய,சலிப்பும் களைப்பும் ஊட்டக்கூடிய இழுத்தடிப்புக்குப்பிறகும் தமிழகத்தின் நலனையும், நியாயத்தையும் புறக்கணித்துவிட்டு மோடி அரசின் விருப்பத்தை தீர்ப்பாக அறிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

நீண்ட விசாரணை, ஏராளமான புள்ளிவிவரங்கள், வல்லுனர் கருத்துகள் யாவற்றையும் ஆய்ந்து 2007 -ல் வழங்கப்பட்ட 192 டிஎம்சி நீர்  பதினோறாண்டுகளுக்குப்பிறகு 177.25 டிஎம்சி என குறைக்கப்பட்டிருக்கிறது. மருமகளால் இல்லை என விரட்டப்பட்ட பிச்சைக்காரரை மாமியார் அழைத்து அவள் என்ன சொல்வது, நான் சொல்கிறேன் ‘இல்லை போ’ என விரட்டியது போல் உச்சநீதிமன்றம் தமிழகத்தை விரட்டியிருக்கிறது.

கர்நாடகத்தின் தேவையை, பெங்களூர் நகரின் குடிநீர்த்தேவையை அங்கீகரித்து அவர்களுக்கு பரிவு காட்டிய உச்சநீதிமன்றம் தமிழக மக்கள் அத்தகைய பரிவுக்கு தகுதியற்றவர்கள் எனக்கருதுகிறது போலும். தமிழ்நாட்டில் நிலவும் கடும் குடிநீர்ப்பற்றாக்குறை, தொடர்ந்து குறைந்துவரும் பருவமழை இவற்றை சற்றும் கவனத்தில் கொள்ளாது நிலத்தடி நீர் பொங்கி வழிவதைப்போல் எண்ணி தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் இருப்பதால் 14.75 டிஎம்சி நீரைப் பறிப்பதாகத் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக்கூறியிருப்பதையும் காவிரி எந்த மாநிலத்திற்கும் தனி உரிமை அல்ல எனக்கூறியிருப்பதையும் கண்டு சிலர் ஆறுதல் அடையக்கூடும். காவிரி நீர் தொடர்பான எந்த உத்தரவையும் கர்நாடக அரசு கடுகளவும் மதித்ததில்லை. மத்திய அரசுகளோ தமிழகத்தின் நியாயத்தை சற்றும் கண்டுகொண்டததில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் உச்சநீதிமன்றம் போட்ட எல்லா உத்தரவுகளையும் காலில் போட்டு மிதித்ததை உச்சநீதிமன்றத்தால் கைகட்டி வேடிக்கைதானே பார்க்க முடிந்தது. மோடி அரசும், ஆர்எஸ்எஸ் பார்ப்பன இந்துமதவெறிக்கும்பலும் அனைத்து அரசு நிறுவனங்களையும் தமிழக மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும், ஒடுக்கவதற்குமே பயன்படுத்தும் நேரத்தில் உச்சநீதிமன்றமும் அதேவேலையைச் செய்திருக்கிறது.

தமிழகத்தை குறிப்பாக காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி நிலக்கரி,பெட்ரோல், எரிவாயு இவற்றைக் கொள்ளையடிக்கத்துடிக்கும் மோடியின் எஜமானர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கைகோர்த்து  நிற்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு சுப்ரமணியசாமி காவிரி நீர் கிடைக்காது எனத் தீர்ப்பெழுதினார். இப்போது உச்சநீதிமன்றம் அதை வழிமொழிந்திருக்கிறது.

வஞ்சகத்தில் வீழ்வதா இல்லை எதிர்த்து நின்று வீழ்த்துவதா என்பதை தமிழக மக்கள் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

தங்கள்
காளியப்பன்
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்

*****

காவிரித் தீர்ப்பில் வஞ்சகம் ! மீண்டும் தமிழகத்தின் மீதான டெல்லி தாக்குதல் !

தமிழக அரசே, சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களே உடனே ராஜினாமா செய்யுங்கள் ! தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை !

நாள் : பிப்ரவரி 17,
நேரம் : காலை 11.30 மணி

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருதை – கடலூர் மண்டலம்.

*****

காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிப்பு!
காவிரி நீரில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி யாக குறைத்தும், கர்நாடகத்திற்கு 284.75 டி.எம்.சி யாக அதிகரித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அயோக்கியத்தனமானது ! தன்னுரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டெழு!” என்ற ழுழக்கங்களை முன்வைத்து இன்று 16.2.2018 மாலை 3.00 மணியளவில், மத்திய அரசு நிறுவனமான நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு  பு.மா.இ.மு தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களையும், பு.மா.இ.மு தோழர்களையும் உடனே கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலிசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. 9445112675

*****

காவிரி : பொது அறிவு வினாடி வினா 10

ந்த வினாடி வினாவில் காவிரி குறித்த கேள்விகள். முயன்று பாருங்கள்!

  1. காவிரி ஆற்றின் நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் எவை?
  2. காவிரி நீர் பிணக்கில் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே எந்த ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது?
  3. மைசூர் அரசு கண்ணாம்பாடியில் கட்டிய அணையை மேற்கண்ட ஒப்பந்தத்தின் படி 11 டிஎம்சி கொள்ளளவில் கட்டமால் 41.5 டி.எம்.சி கொள்ளளவிற்கு கட்டியது. அந்த அணை இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  4. மைசூர் அரசிற்கும், சென்னை மாகாண அரசிற்கும் இடையே இரண்டாவது ஒப்பந்தம் எந்த ஆண்டில் போடப்பட்டது?
  5. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 1956-ஆம் ஆண்டில் ஒரு பிரிவு (262) இயற்றப்பட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது? அதன் விளக்கம் என்ன?
  6. காவரி நதிநீர் சிக்கலை தீர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட “காவிரி நடுவர் மன்றம்” எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
  7. 1991-இல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவு என்ன? இந்த தீர்ப்பை ஒட்டித்தால் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான பெரும் கலவரம் நடந்தது.
  8. 2007-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பு (ஆயிர்த்திற்கும் அதிகமான பக்கங்கள்) தமிழகம் – கர்நாடகாவிற்கு ஒதுக்கிய நீரின் அளவு என்ன?
  9. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசின் அரசாணையாக (கெசட்டில்) எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
  10. தமிழ்நாட்டில் பாயும் காவிரி நதி கீழ்க்கண்ட மாவட்டங்களில் எதில் ஓடவில்லை?

 

காதலர் தினத்துக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !

3

பிப்ரவரி 14 வந்தாலே காவி வானரங்களின் கத்தல் அதிகமாகி விடுகிறது! தொலைக்காட்சிகளும் ஒருபக்கம் காதலர் தின சிறப்பு நிகழ்வுகளை காட்டிக் கொண்டே மறு பக்கம், அர்ஜுன் சம்பதையும், ‘பல அவதாரம்’ ராம சுப்புரமணியன் ஆகியவர்களைக் கொண்டு காது அலறும் வண்ணம் விவாதங்களை நடத்துகிறது.

நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைத்தல், பல இடங்களில் கையில் தாலியுடன் வில்லன்களாக வலம்வருதல், பொது இடங்களில் இருக்கும் காதலர்களை மிரட்டுதல், அடித்தல், விரட்டுதல், படம் எடுத்தல் என எல்லா அநாகரீகங்களையும், அத்துமீறல்களையும் செயகின்றனர், இந்துமதவெறி கூட்டத்தினர்.

காதலர் தின எதிர்ப்பு: நாய்களுக்கு திருமணம் செய்த சக்தி சேனா!

காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்!
பிரியா வாரியரின் வைரல் வீடியோவை பதிலாக சொன்ன ஜிக்னேஷ்

காதலர் தினத்தை எதிர்த்து இந்து மஹா சபை, ஸ்ரீராம் சேனா, பாரத் சேனா, சக்தி சேனா, பஜ்ரங்க தல் உள்ளிட்டவை இளம் ஜோடிகளைக் கண்டால் அவர்களை இப்போதே தாலி கட்டுங்கள் என்று கூறி அட்டூழியம் செய்து வருகின்றனர்.

காதலர் தின எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் சில இடங்களில் பொது சொத்துகளுக்கும் அவர்கள் சேதம் ஏற்படுத்தி வருகின்றனர். ஏன் எதிர்க்கிறார்கள்? காதலர் தினம் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆர்எஸ்எஸ், பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லி வருகிறது.

இதற்காகவே கலாச்சார பாதுகாவலர்களான தாங்கள் ஒவ்வோர் ஆண்டும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் எம்எல்ஏவும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை ஒட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான “மணிக்யா மலரயா பூவி” பாடல் வைரலாகியுள்ளதே காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்க்கான பதிலடி என்றும் அவர் கூறியுள்ளார். வெறுக்கக்கூடாது ஒருவரை வெறுப்பதை விட அவரை அதிகமாக நேசிக்க வேண்டும் என்பதை இந்தியர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றும் ஜிக்னேஷ் தெரிவித்துள்ளார். இதோடு பிரியா பிரகாஷ் வாரியரின் வீடியோவையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் இணைத்துள்ளார்.

*****

மண் குதிரைக்கு திருமணம் செய்து வைக்கும் போராட்டம்! – தினமணி பத்திரிக்கை செய்தி

காதலர் தின எதிர்ப்பு: நாய்க்குத் திருமணம்!

உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழ்நாட்டிலும் காதலர்கள் பலரும் இந்த நாளை சிறப்பித்து வரும் நேரத்தில், குமரி மாவட்டத்தில் காதலை எதிர்த்து இந்து மகாசபா கட்சியினர் காதலர் தினத்தன்று நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் கடற்கரை சாலை சந்திப்பில் இன்று 2 நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை இந்து மகாசபா கட்சியினர் நடத்தினர். அவர்கள் 2 நாய்களை நாற்காலியில் அமர வைத்து அவற்றிற்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து இந்து மகாசபா தலைவர் சுரேஷ் கூறும் போது, காதலர் தினம் கலாச்சார சீரழிவின் அடையாளம். இது போன்ற தினங்களை கொண்டாடுவதால் டெல்லியில் மாணவி கற்பழிப்பு, காரைக்காலில் மாணவி மீது ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்கத்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

ஒரு அறிவார்ந்த சமூகம் என்பது ஜாதி, மத, இனம், ஏன் தேச எல்லை கடந்த ஒற்றுமையயும், உறவு மேம்பாட்டையும் விரும்பும். மனிதர்கள் ஒன்றுபடுதலை விரும்பாதவர்கள், அதாவது ஜாதியாக, மதமாக, குலமாக பிரிந்து பிரிந்து வேற்றுமை பாராட்ட விரும்புகிறவர்கள் காதலையும், அதன் வினை ஊக்கியான காதலர்தினத்தையும் எதிர்க்கிறார்கள்.

மனிதநேயம் படைத்தவர்கள் காதலையும், காதலர்தினத்தையும் வரவேற்கலாம்!

நன்றி : வெப்துனியா

காதலர் தின எதிர்ப்பு: மொய் விருந்துடன் நடந்தேறிய நாய்- கழுதை திருமணம்!

இந்து முன்னணி போன்ற மத அமைப்புகள்  காதலர் தினம் கலாச்சார சீரழிவு என்றும், இது இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாட்டிற்கு உகந்ததல்ல என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் இன்று காலை 11 மணியளவில் நாய் – கழுதைக்குத்  திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நாய் மற்றும் கழுதை அழைத்துவரப்பட்டன. இந்து முன்னணி மாநில நிர்வாகக்  குழு உறுப்பினர் தாமு வெங்கடேஷ்வரன், கோவை கோட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர், நாய்  – கழுதைக்கு  திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் உணவு மற்றும்  குளிர்பானம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மொய் எழுதப்பட்டது. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிந்ததும்  திருமணத்தை நடத்தி வைத்த மற்றும் கலந்து கொண்ட 63 இந்து முன்னணியினரைக்  கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல கோவை கவுண்டம்பாளையம் பேருந்து  நிலையத்தில் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாகக்  கொண்டாடப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்றி : விகடன்

மகாராஷ்டிராவில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு!

https://twitter.com/ANI/status/963634809514885123/photo/1

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் என்ற பகுதியில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள், தெருவில் நாங்கள் எந்த ஒரு தம்பதியையும் கண்டால் அவர்களை வன்மையாக கண்டிப்போம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி : ஜீ நியூஸ் தமிழ்

காதலர் தினத்துக்கு மாணவர்கள் வளாகத்துக்குள் வரக்கூடாது: லக்னோ பல்கலை உத்தரவால் சர்ச்சை!

லக்னோ பல்கலைக் கழகம் அளித்துள்ள சுற்றறிக்கை

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லக்னோ பல்கலைக்கழகம், காதலர் தினத்தன்று மாணவ, மாணவிகள் வரக்கூடாது, கல்லூரி வளாகத்துக்குள் சுற்றித்திரியக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 10-ம் தேதி பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி வினோத் சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பிப்ரவரி 14-ம் தேதிவரும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், வரும் 14-ம் தேதி மஹா சிவராத்திரி பண்டிகை வருவதால், அன்றைய தினம் பல்கலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படும்.

அன்றைய தினம் மாணவர்கள் யாரும் எந்தவிதமான கலாச்சார நிகழ்ச்சிகள், சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யக்கூடாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்குள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 14-ம் தேதி எந்தவிதமான வகுப்புகளும், செய்முறைத் தேர்வுகளும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்காது. ஆதலால், மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வரக்கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெற்றோர்களும் பல்லைகழகத்துக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டாம். இந்த உத்தரவை மீறி பல்கலைகழகத்துக்குள் சுற்றித் திரியும் மாணவ, மாணவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழகத்தின் இந்த உத்தரவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்கலையின் உத்தரவை மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். “ பல்கலைக்கு விடுமுறைவிடப்பட்ட நிலையில், மாணவர்களை பல்கலைக்கு உள்ளே நுழையக்கூடாது எனக் கூறுவது சரியில்லை. பல்கலைக்கு செல்லாமல் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அற்பத்தனமான சிந்தனை ” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காதலர் தினத்துக்கு லக்னோ பல்கலைக்கழகம் எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில், மாணவர்கள் யாரும் காதலர் தினத்தன்று பூக்கள், பரிசுகள், ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது இது மாணவிகளின் நலனுக்காக செய்யும் நடவடிக்கை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தி இந்து

ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்… காதலர் தினத்துக்கு எதிர்ப்பு!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்திற்கு இந்துமுன்னணிஅமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபடுவதுடன் இந்நாளில் பொது இடங்களில் சந்தித்து காதலர் தினக்கொண்டாட்டத்தில் ஈடுபடும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி காதல் ஜோடிகள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடி வேரியில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நாய் மற்றும் ஆட்டுக்கு திருமணம் செய்து வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், ஆட்டிற்கும், நாய்க்கும் மாலைகள் அணிவித்து திருமணத்தை இந்து முறைப்படி நடத்தினர். முன்னதாக நாய்க்கும் ஆட்டுக்கும் அலங்காரம் செய்து கொடிவேரி அணைப் பகுதியிலிருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

காதலர் தினக்கொண்டாட்டம் என்பது வெளிநாட்டுக் கலாச்சாரம் மட்டுமல்ல நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அதனால் தான் காதலர் தினக்கொண்டாட்டத்திற்கு ஆண்டு தோறும் எதிர்ப்பு  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

______________________

இப்படி  இந்தியாவெஙகும் பார்ப்பனிய இந்துமதவெறி அமைப்புக்கள் காதலர் தினத்தன்று காட்டுமிராண்டித்தனமாக வேலைகளை செய்தனர். இவர்கள் காதலர் தினத்தை எதிர்ப்பதற்கு சீரழிவுதான் காரணமென்று குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இவர்கள் கருதும் அந்தச் சீரழிவு ஆதிக்க சாதி, மதவாத சிந்தனைகளுக்கு காதல் இடையூறாக இருக்கிறது என்பதே. சாதி மறுப்பு – தீண்டாமை மறுப்பு திருமணங்கள் சமூகத்தில் நடப்பதை பொறுக்க முடியாத இந்த சாதி-மதவெறியர்கள் தடியின் துணைகொண்டு காதலை முறிக்க நினைக்கிறார்கள். அதே தடியை இளைய தலைமுறை கையெலெடுக்கும் போது இந்துமதவெறி இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்படும்.


காதலர் தினத்திற்கு எதிராக அட்டூழியம் செய்யும் சங்கப்பரிவார கும்பலை விரட்ட வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது நக்கலைட்ஸ் நண்பர்களின் இந்த வீடியோ…

*****

 

மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !

1

மொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !

ருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

(மார்க்சிய – லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)

முதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற்றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார்.

அப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார்.

இதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.

அதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.

மொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் “மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்” அமைக்கப் பட்டது.

இது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.

மார்க்சிய – லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.

-கலையரசன்

நன்றி : கலையகம்

 

ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக போராடியவர்களை விடுதலை செய் ! மாணவர், வழக்கறிஞர் போராட்டம் !

0

திருவாரூரில் 14.02.2018 அன்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராடி கைதாகியுள்ள மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட 6 பேர்களையும் விடுதலை செய்ய கோரி 15.02.2018 அன்று குடந்தை அரசு கலைக்கல்லூரியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
குடந்தை.

*****

ஓ.என்.ஜி.சி. -க்கு எதிராக போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக்கோரி குடந்தை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை செய் !
டெல்டா மாவட்டத்தை பாதுகாக்காபட்ட வேளாண் மண்டலமாக அறிவி !
ONGC -யே வெளியேறு ! என ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தகவல்
மக்கள் அதிகாரம்
குடந்தை, தொடர்புக்கு : 97892 61624.

 

நடிப்பில் ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?

11

டிப்பில் ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?

  • வினவு தளம் சார்பாக தயாரிக்கப்படும் குறும்படங்கள், நகலடி (ஸ்பூஃப்) மற்றும் பாடல் வீடியோக்களில் நடிப்பதற்கு தயாரா?
  • சமூக அக்கறையுடன் நடத்தப்படும் வினவு தளத்தின் வீடியோக்களில் ஊதியமின்றி தன்னார்வத்தோடு நடிக்க விரும்புகிறீர்களா?

உங்களைத்தான் தேடுகிறோம்!

மிமிக்ரி – நடிப்பு – நடனம் துறைகளில் திறமையும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் தோள் கொடுங்கள்!
இதுவரை நடிப்பு அனுபவமில்லாமல் இருப்பினும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நடிப்பதற்கு விருப்பமும், அர்ப்பணிப்புமே தேவை.
தொழில்முறை அனுபவம் உள்ள நண்பர்களும் தன்னார்வத்தோடு நமது படைப்புகளில் பங்கேற்கலாம்.

தெரிவு செய்யப்படும் (புதியவர்கள்) நண்பர்களுக்கு, நடிப்பு பயிற்சி பட்டறை நடத்துவதில் அனுபவம் உள்ள எமது தோழர் பயிற்சி கொடுப்பார். நடிப்பில் அனுபவம் உள்ளவர்கள் நேரடியாக பொருத்தமான பாத்திரங்களில் நடிக்கலாம்.
வாருங்கள்,தோள் கொடுங்கள்.

தற்போது சென்னையில் உள்ள நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். எதிர்காலத்தில் பிற மாவட்டங்களுக்கும் வருகிறோம்.
கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
97100 82506

நன்றி

எழுத்தாளரும் வாசகரும் சந்திப்பதே இல்லை !

எழுத்தாளரும் வாசகரும் !

ழுத்தாளரும் வாசகரும் வெவ்வேறு ரயில்களில் பயணிக்கிறார்கள். வெவ்வேறு திசைகளில். அவர்கள் அநேகமாக சந்திப்பதேயில்லை.

அஞ்செலாவின் சாம்பல் (Angela’s Ashes) நாவல் சிலகாலத்துக்கு முன் வெளிவந்து பரவலாகப் பேசப்பட்டது. இதை எழுதியவர் ஃபிராங் மக்கோர்ட் என்ற அமெரிக்கர். 66 வயதில் அவர் எழுதிய முதல் நாவல். இதற்கு புலிட்ஸர் பரிசு கிடைத்து அவர் உலகப் பிரபலமானார். நகைச்சுவையாக எழுதுவார், ஆனால் சிடுசிடுக்காரர். அவரை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு பத்திரிகைக்காரர் மக்கோர்ட்டை பேட்டி கண்டார்.

‘உங்களுடைய Angela’s Ashes புத்தகத்தை உயர்நிலை பள்ளிக்கூடத்தில் பாடப்புத்தகமாக வைத்திருக்கிறார்கள். தெரியுமா?”

‘நல்லது. தயவுசெய்து அவர்களிடம் சொல்லுங்கள் அதில் பரீட்சை வைக்கவேண்டாம் என்று. அது ஒரு சித்திரவதை ஆயுதம் அல்ல; மகிழ்ச்சியூட்டும் புத்தகம்.’

‘உங்கள் புத்தகத்தை மேலோட்டமாகப் படிக்கக்கூடாது. நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அடி ஆழத்தில் கண்டுபிடிக்கவேண்டும்.’

“அப்படியா? அதைக் கண்டுபிடித்ததும் எனக்கும் சொல்லுங்கள்.”

எழுத்தாளர் எழுதாத ஒன்றைக் கண்டுபிடிப்பதே வாசகருக்கும், பத்திரிகைக்காரருக்கும் வேலை. இதை மக்கோர்ட் பல தடவைகள் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

ஜேம்ஸ் ஜோய்ஸ் என்ற எழுத்தாளர் ‘இரண்டு பகட்டுக்காரர்கள்’ என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். கோர்லி தன் காதலியை அழைத்துக்கொண்டு உல்லாசமாக பொழுதுபோக்கப் போகிறான். அவனுடைய நண்பன் காத்திருக்கிறான். இவர்களுடைய தொழில் பணக்கார வீடுகளில் வேலை செய்யும் பெண்களைக் காதலித்து அவர்களை எசமானிகளிடம் திருடச்சொல்லி வரும் அந்தப் பணத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான். கோர்லி தன் காதலியுடன் சென்ற பின்னர் நன்பன் தனிமையை போக்க ஓர் உணவகத்துக்குள் நுழைகிறான். மலிவாகக் கிடைக்கும் பச்சைப் பட்டாணியை சாப்பிட்டு இஞ்சிச் சோடா குடிக்கிறான்.

இந்தக் கதையை விமர்சித்து வாசகர் ஒருவர் இப்படி எழுதுகிறார். ‘பட்டாணி பச்சை நிறத்தில் இருக்கிறது. இஞ்சிச் சோடாவின் நிறம் செம்மஞ்சள். இவை அயர்லாந்து கொடியின் வர்ணங்கள். அயர்லாந்தையும் அதன் வறுமையையும் கோடிகாட்டுவதற்குத்தான் இந்தச் சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது.’

நம்ப முடிகிறதா?

நான் யோசித்துப் பார்த்தேன். இலங்கையில் நடப்பதாக இப்படி ஒரு கதையை எழுதியிருக்கலாம். ‘இன்று மங்களா உணவகத்துக்குப் போனேன். நல்ல பசி. மதிய உனவு நேரம். வாழை இலையில் மஞ்சள் சோறு பரிமாறினார்கள். அதற்குமேல் குழம்பு ஊற்றினார்கள். சாப்பிட்டு முடித்த பின்னர் orange barley குடித்தேன்.’ உணவில் பச்சை, மஞ்சள், சிவப்பு, செம்மஞ்சள் எல்லாமே வந்துவிட்டன. தேசியக்கொடியின் வர்ணங்கள். அப்படியாயின் இலங்கையின் வறுமையை கோடிகாட்டுவதற்கா அந்தச் சம்பவம் எழுதப்பட்டது.

ரஸ்ய எழுத்தாளர் கோகொல் எழுதிய ஒரு கதை. மூக்கு (Nose) என்று பெயர். ஒருவருடைய மூக்கு காணாமல் போய்விடுகிறது. அவர் அதை தேடித் திரிகிறார். மூக்கும் வீதிகளிலே அலைகிறது. போலீசிலே முறைப்பாடு செய்கிறார். மூக்கை ஒருவராலும் கைதுசெய்ய முடியவில்லை. ஒருநாள் அதுவாகவே வந்து முகத்தில் ஒட்டிக்கொள்கிறது. இந்தக் கதை ஒருவருக்குமே புரியவில்லை. ஒரு வாசகர் மட்டும் அருமையான விளக்கம் கொடுத்தார். ரஸ்ய மொழியில் மூக்கு என்பதை மாற்றிப்போட்டால் கனவு என்று வரும். ஆகவே இது கனவுதான் என்று தீர்மானமாகச் சொன்னார். எழுத்தாளர் என்ன எழுதினாலும் வாசகர் தன்பாட்டுக்கு ஒரு விளக்கம் கொடுத்தபடியே இருப்பார்.

‘அகதியே!
நில், நில்,
உள்ளே நுழையாதே.
உனக்கு அனுமதி இல்லை.
சுபிட்சமான வாழ்க்கை காத்திருக்கிறது.
ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்
யட்சன் கேட்டான்.

‘உலகத்தில் நீ வெறுப்பது என்ன?’

‘உடம்பில் உள்ளே ஓடும் ரத்தம் வெளியே ஓடுவதை.’

சரியான பதில்… உள்ளே வா.

கவிதையை படித்துவிட்டு ஒருவர் சொன்னார். ‘கனடா இமிகிரேசனை இந்தக் கவிஞர் அப்படியே கண்முன்னே கொண்டு வந்துவிட்டார்.’. இந்தக் கவிதைக்கும், கனடாவுக்கும் என்ன சம்பந்தம்?

சரி, விசயத்துக்கு வருவோம். சமீபத்தில் நான் ‘சின்ன ஏ, பெரிய ஏ’ என்று ஒரு சிறுகதை எழுதினேன். நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து ‘பார்த்தேன்’ என்று சொன்னார்கள். படித்தேன் என்று ஒருவரும் சொல்வதில்லை. நான் என்ன படமா வரைந்து பத்திரிகையில் வெளியிட்டேன்?. ஒன்றிரண்டு பேர் கதையை பாராட்டவும் செய்தார்கள். ஆனால் ஒருவராவது அந்தக் கதை எழுத என்ன காரணமாக அமைந்தது என்பதை சிந்தித்தாக தெரியவில்லை. அதுதான் மனதுக்கு வருத்தம்.

நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒருவரைச் சந்தித்தேன். அவர் தன் இளவயது சம்பவத்தை சொன்னார். அவருடைய தாய் கிறிஸ்தவர். தந்தை முஸ்லிம். இவர் சிறுவயதாயிருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். இவரை வளர்க்க தாயார் மிகவும் கஷ்டப்பட்டார். செல்வந்தர் வீடுகளுக்குப் போய் முழங்காலில் இருந்து அவர்கள் தரையை துடைத்தார். அந்தக் காட்சியை நினைக்கும்போது எல்லாம் அவர் அழுவார். அவர் சொன்னார், ‘என்னுடைய அப்பா முஸ்லிம், இன்னும் மூன்று பெண்களை அவர் மணம் செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்திருந்தால் எனக்கு நாலு அம்மாமார் இருந்திருப்பார்கள். என் அம்மா தனியாக இத்தனை சிரமப்பட்டிருக்கத் தேவை இல்லை.’

எனக்கு அதிர்ச்சி. சிறுகதைக்கு இந்தச் சம்பவம்தான் அடிப்படை ஆனால் ஒருவருமே இதைக் கவனிக்கவில்லை. எழுத்தாளரும் வாசகரும் சந்திப்பது அபூர்வம். என்னைக் கேட்டால், அவர்கள் சந்திப்பதே இல்லை என்றுதான் சொல்வேன்.

நன்றி :அ.முத்துலிங்கம்
முத்துலிங்கத்தின் இணைய தளம்

 

கருத்துரிமை, ஊழல், சுரண்டல், நிறவெறி – தோழர் கலையரசனின் உலகச் செய்திகள் !

0

னியார் நிறுவனங்கள் லஞ்ச, ஊழலில் ஈடுபடுவதில்லை என்று நம்பும் அப்பாவிகளின் கவனத்திற்கு:

இஸ்ரேலிய கோடீஸ்வரர் Dan Gertler நடத்தும் Fleurette Group என்ற நிறுவனம், ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் வைரக் கல் ஏற்றுமதி செய்து வருகின்றது. அந்தத் துறையில் ஏகபோக உரிமை பெறுவதற்காக, அந்நாட்டு சர்வாதிகாரி கபிலாவுக்கு 20 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளது. ஆனால், வைரக் கல் ஏற்றுமதியால் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் வருடாந்த இலாபம்
600 மில்லியன் டாலர்கள்!

நெதர்லாந்து நிதி அமைச்சில் பணியாற்றிய முன்னாள் அரச ஊழியரான Rob Drieduite யும் இந்த லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இவர் முன்பு அரச வரித் திணைக்கள அதிகாரியாக பணிபுரிந்த இவர், அப்போது பெரிய நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை மேற்பார்வை செய்து வந்தார்.

Image may contain: 5 people, people smiling, people standing, suit and text

***

பிரித்தானியாவின் ஆதி ம‌னித‌ர்க‌ள் க‌றுப்ப‌ர்க‌ளே! சூரிய‌ ஒளியில் இருந்து விட்ட‌மின் D த‌யாரிப்ப‌த‌ற்காக‌ பிற்கால‌த்தில் அவ‌ர்க‌ள‌து தோலின் நிற‌ம் வெள்ளையாக‌ மாறியிருக்க‌லாம். ஆதி ம‌னித‌ர்க‌ள் ம‌த்திய‌ கிழ‌க்கில் இருந்து ஐரோப்பா ஊடாக‌ பிரித்தானியாவை வ‌ந்த‌டைந்திருக்க‌லாம்.

https://inews.co.uk/news/science/scientists-discover-that-the-first-modern-briton-had-dark-skin/

***

இது தான் பிரித்தானிய முதலாளித்துவம்!
ஆண், பெண் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாகுபாடு!!
Tesco equal pay claim could cost supermarket up to £4bn

பிரித்தானியாவின் பெரிய சூப்பர் மார்க்கட் நிறுவனங்களில் ஒன்றான டெஸ்கோ (Tesco) தனது ஊழியர்களுக்கு சமமான சம்பளம் வழங்குவதில்லை. இப்போதும் ஆண் – பெண் பாகுபாடு காட்டப் படுகின்றது. அங்கு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், சக ஆண் தொழிலாளர்களை விட மணித்தியாலத்திற்கு £3 பவுன்கள் குறைவாக சம்பாதிக்கின்றனர்.

களஞ்சிய அறையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் சம்பளப் பாகுபாடு காரணமாக வழக்குத் தொடுத்தனர். Leigh Day எனும் சட்ட நிறுவனம், சுமார் இருநூறு தொழிலாளர்களின் பெயரில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால், டெஸ்கோ நிறுவனம் நான்கு பில்லியன் பவுன்கள் நஷ்டஈடு கட்ட வேண்டியிருக்கும். அதாவது, அங்கு வேலை செய்யும் 200.000 பெண் தொழிலாளர்களின் குறைக்கப் பட்ட சம்பளத் தொகையை செலுத்த வேண்டும்.

பிரித்தானியாவில் தற்போது ஆண் – பெண் சம்பளப் பாகுபாடு தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளன. இதே மாதிரியான இன்னொரு வழக்கு Asda என்ற இன்னொரு சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மீது தொடுக்கப் பட்டுள்ளது. 2014 ம் ஆண்டு, பேர்மிங்ஹாம் நகர சபை நிர்வாகம் பத்தாயிரம் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு பில்லியன் நஷ்ட ஈடு செலுத்த வேண்டி இருந்தது. அங்கு சுகாதரத் துறையிலும், துப்பரவுப் பணியாளர்களாகவும் வேலை செய்து வந்த பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப் பட்டு வந்தது.

ஆண் – பெண் சம்பளப் பாகுபாடு பல மேற்கைரோப்பிய நாடுகளில் இருந்து வருகின்றது. இதை நியாயப் படுத்துவோர், “வெவ்வேறு தொழில்களுக்கு வித்தியாசமான சம்பளம் நிர்ணயிக்கப் படுவதாக” காரணம் கூறுகின்றனர். அதாவது, “ஆண்கள் செய்யும் வேலை”, “பெண்கள் செய்யும் வேலை” என்று தொழில்களை வகைப் படுத்துகின்றனர்.

இங்கே குறிப்பிடப் பட்டுள்ள டெஸ்கோ விடயத்தை எடுத்தால், களஞ்சிய அறையில் பெரும்பாலும் ஆண் தொழிலாளர்களே உள்ளனர். அதே போன்று, கடைகளில் பெண் தொழிலாளர்களை போடுகின்றனர். “பாரமான வேலையை” ஆண்களும், “இலகுவான வேலையை” பெண்களும் செய்வதாக நியாயம் கற்பிக்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு:
https://www.theguardian.com/business/2018/feb/07/tesco-equal-pay-claim-could-cost-supermarket-up-to-4bn

Image may contain: outdoor

***

கறுப்பர்களே பிரித்தானியாவின் பூர்வ குடிகள்! வெள்ளையர்களே வெளியேறுங்கள்!!
(பிரிட்டிஷ்- ஆங்கிலேய நிறவெறியர்களுக்கு பதிலடி)

Image may contain: 1 person, text

***

மேற்கு ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் இருப்பதாக சொன்னவங்க யாரு?

நெதர்லாந்து மன்னரை அல்லது அரச குடும்பத்தை அவமதித்தால், அதிக பட்சம் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம்! அரச குடும்பத்தினரை “F**K” என்று திட்டுவதோ, அல்லது நிர்வாணமாக கார்ட்டூன் வரைவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

அரச குடும்பத்தை அவமானப் படுத்திய குற்றம் சிறிதாக இருந்தால் சில நூறு யூரோக்களும், பெரிதாக இருந்தால் இருபதாயிரம் யூரோவும் தண்டமாகக் கட்ட வேண்டி இருக்கும். இன்று கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிக பட்சத் தண்டனையான ஐந்தாண்டு சிறைத் தண்டனையை இரத்து செய்வது குறித்து விவாதிக்கிறார்கள்.

(தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பத்துமணி செய்தியான Netwerk இல் சொல்லப் பட்ட தகவல்.)

***

குர்திஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி
Kurdistan Communist Party

Image may contain: 25 people, people smiling

***

சோஷ‌லிச‌ப் புர‌ட்சிக்கு முந்திய‌ சீனாவில், குறிப்பாக‌ முப்ப‌துக‌ளில், கிராம‌ங்க‌ளில் உள்ள‌ ம‌தில் சுவ‌ர்க‌ளில் க‌ம்யூனிஸ்டுக‌ள் இர‌விர‌வாக‌ கோஷ‌ங்க‌ளை எழுதி விட்டுச் செல்வார்க‌ள். அவ‌ற்றில் ஒன்று “சோவிய‌த் வாழ்க‌!”

பெரும்பாலான‌ கிராமிய‌ ம‌க்க‌ளுக்கு சோவிய‌த் என்றால் என்ன‌வென்று தெரியாது. கிராம‌ங்க‌ளை ஆட்டிப் ப‌டைத்த‌ உள்ளூர் யுத்த‌ பிர‌புவுக்கும் குழ‌ப்ப‌மாக‌ இருந்த‌து.

என்ன‌ இருந்தாலும் இந்த‌ சோவிய‌த்தை சும்மா விட‌க் கூடாது என்று நினைத்த‌ யுத்த‌ பிர‌பு, ஒரு துண்டுப்பிர‌சுர‌ம் அடித்து கிராம‌ மதில்க‌ளில் ஒட்டுவித்தார். அதில் பின்வ‌ருமாறு எழுதி இருந்த‌து:
“திருவாள‌ர் சோவிய‌த்தை உயிரோடோ அல்ல‌து பிண‌மாக‌வோ பிடித்துத் த‌ருப‌வ‌ருக்கு த‌குந்த‌ ச‌ன்மான‌ம் வ‌ழ‌ங்கப் ப‌டும்!”

(Source: The Long March, Sun Shuyun)

***

ஜெகோவாவின் சாட்சியங்கள் மதப் பிரிவில் நடக்கும் பாலியல் துஸ்பிரயோகங்கள் வெளியே வராத வண்ணம் மூடி மறைக்கப் படுகின்றன. அவர்களுக்கென தனியான நீதிமன்றங்கள் இயங்குகின்றன. தேவாலய உறுப்பினர்கள் செய்யும் குற்றங்கள் அங்கு தான் விசாரிக்கப் பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

ஜெகோவாவின் சாட்சியங்கள் சபைகளில் உறுப்பினராக இருப்பவர்கள், தமக்கு எந்தக் குற்றம் இழைக்கப் பட்டாலும் வெளியே சென்று போலீசில் முறைப்பாடு செய்யக் கூடாது என்ற சட்டம் உள்ளது. அதனால், பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக இதுவரை எந்த முறைப்பாடும் வரவில்லை. தேவாலயங்களும் இது தொடர்பான கோப்புகளை பொலிசுக்கு காட்டாமல் மறைத்து வைக்கின்றன.

(நெதர்லாந்தில் மேற்குறிப்பிட்ட கிறிஸ்தவ சபைக்குள் நடக்கும் பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றி RTL4 தொலைக்காட்சி வழங்கிய தகவல்.)

***

“அர‌சுத் த‌லைவ‌ரை f**k என்று சொல்லித் திட்டும் சுத‌ந்திர‌ம் வேண்டும்!” – க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் தொட‌ர்பான‌ மேற்குல‌கின் இர‌ட்டை வேட‌ம்.

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் வ‌ட‌ கொரிய‌ அதிப‌ரின் ப‌ட‌த்தை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌ குற்ற‌த்திற்காக‌ ஒரு அமெரிக்க‌ருக்கு சிறைத் த‌ண்ட‌னை விதிக்க‌ப் ப‌ட்ட‌து. மேற்குல‌கில் உட‌னே அது க‌ருத்துச் சுத‌ந்திர‌ ம‌றுப்பாக‌ பிர‌ச்சார‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

ப‌த்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், ல‌ண்ட‌னில் ந‌ட‌ந்த‌ ஒரு ஆர்ப்பாட்ட‌த்தில் “கால‌னிய‌ இன‌ப்ப‌டுகொலையாளி” முன்னாள் பிர‌த‌ம‌ர் ச‌ர்ச்சிலின் சிலைக்கு சிவ‌ப்பு பெயின்ட் பூசினார்க‌ள். அதே மாதிரி புர‌செல்ஸ் ந‌க‌ர‌த்தில் ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தில், இன்னொரு “கால‌னிய‌ இன‌ப்ப‌டுகொலையாளி” முன்னாள் பெல்ஜிய‌ ம‌ன்ன‌ர் லெயோபால்ட் சிலைக்கு சிவ‌ப்பு பெயின்ட் பூசினார்க‌ள்.

பிரித்தானியாவிலும், பெல்ஜிய‌த்திலும் இன்ன‌மும் இன‌ப்ப‌டுகொலையாளிக‌ள் தேசிய‌ நாய‌க‌ர்க‌ளாக‌ போற்ற‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். அதை விம‌ர்சிப்ப‌து கூட‌ குற்ற‌மாகும். அப்போதெல்லாம் “அர‌சுத் த‌லைவ‌ர்க‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌ குற்ற‌வாளிக‌ளை த‌ண்டிக்க‌ வேண்டும்” என்று பாராளும‌ன்ற‌த்திலும், ஊட‌க‌ங்க‌ளிலும் பேச‌ப் ப‌ட்ட‌து. யாரும் அதை க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் தானே என்று நியாய‌ப் ப‌டுத்த‌வில்லை. க‌டுமையான‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று வாதிட்டார்க‌ள்.

நெத‌ர்லாந்தில் ஒரு த‌ட‌வை ம‌ன்ன‌ரை “f**k” என்று சொன்ன‌வ‌ரை பிடித்து சிறையில் அடைத்த‌ன‌ர். இப்போதும் அந் நாட்டு ச‌ட்ட‌ப் ப‌டி அர‌ச‌ குடும்ப‌த்தை அவமான‌ப் ப‌டுத்தினால் அதிக‌ ப‌ட்ச‌ம் 5 ஆண்டுக‌ள் சிறைத் த‌ண்ட‌னை விதிக்க‌லாம். இதுவே சாதார‌ண‌ ம‌னித‌ர் என்றால் 3 மாத‌ங்க‌ள், அர‌ச‌ அதிகாரி என்றால் 5 மாத‌ங்க‌ள், அவ‌ம‌திப்புக் குற்ற‌த்திற்காக‌ சிறைத் த‌ண்ட‌னை விதிக்க‌லாம்.

முன்னாள் சோஷ‌லிச‌ நாடுக‌ளில் “அர‌சுத் த‌லைவ‌ரை f**k என்று சொல்லித் திட்ட‌ முடியாது. கைது செய்து சிறையில் போட்டு விடுவார்க‌ள். அத‌னால் அங்கு க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் கிடையாது” என்று பிர‌ச்சார‌ம் செய்த‌ன‌ர். அங்கிருந்த‌ ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ அறிவுஜீவிக‌ளும் அது ம‌ட்டுமே த‌ம‌து பிர‌ச்சினை என்றார்க‌ள்.

அந் நாடுக‌ளில் முத‌லாளித்துவ‌ ஜ‌ன‌நாய‌க‌ம் வ‌ந்த‌தும் அவ‌ர்க‌ள் சொல்லி ம‌கிழ்ந்த‌ “சுத‌ந்திர‌மும்” இது தான். அதாவ‌து, “இப்போது எம‌து அர‌சுத் த‌லைவ‌ரை f**k என்று திட்டினாலும் ஒன்றும் ந‌ட‌க்காது….” இதே மாதிரி, “கியூபாவிலும், வ‌ட‌ கொரியாவிலும் அர‌சுத் த‌லைவ‌ரை f**k என்று சொல்லித் திட்டும் சுத‌ந்திர‌ம் இன்னும் இல்லையே!” என்று மேற்க‌த்திய‌ ஊட‌க‌ங்க‌ளில் புல‌ம்புகிறார்க‌ள்.

ப‌ல‌ மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் ம‌ன்ன‌ர் குடும்ப‌ங்க‌ளை நிர‌ந்த‌ர‌மான‌ அர‌சுத் த‌லைவ‌ர்க‌ளாக‌ வைத்திருக்கிறார்க‌ள். அத‌னால் தான் பிர‌த‌ம‌ரை கேலி செய்து நிர்வாண‌க் கோல‌த்துட‌ன் கார்ட்டூன் போட்டாலும் ம‌ன்ன‌ரை அப்ப‌டி வ‌ரைய‌ முடியாது. பிடித்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்க‌ள்.

இத‌ற்குத் தான் தமிழில் ஒரு ப‌ழ‌மொழி சொல்வார்க‌ள். “மாமியார் உடைத்தால் ம‌ண் குட‌ம், ம‌ரும‌க‌ள் உடைத்தால் பொன் குட‌ம்.” ந‌வீன‌ கால‌த்தில் இப்ப‌டியும் சொல்வார்க‌ள் “த‌ன‌க்கு வ‌ந்தால் இர‌த்த‌ம் ம‌ற்ற‌வ‌னுக்கு வ‌ந்தால் த‌க்காளி ச‌ட்னி.”

***

இஸ்ரேலில் எத்தியோப்பியாவில் இருந்து வந்து குடியேறிய கறுப்பின யூதர்கள், குழந்தை பெறுவதை தடுக்கும் நோக்கில் கட்டாய கருத்தடை ஊசி போடப் பட்டுள்ளது. சுகாதார அமைச்சு அதை இப்போது ஒத்துக் கொள்கிறது.

யூதர் என்பது இனம் அல்ல. அது ஒரு மதத்தை பின்பற்றுவோரைக் குறிக்கும். இஸ்ரேலில் ஒரே யூத மதத்தை சேர்ந்தவர்களுக்குள்ளே கூட இனப் பாகுபாடு காட்டப் படுகின்றது. இதிலே அதிகமாக பாதிக்கப் படுபவர்கள், கறுப்புத் தோல் நிறம் கொண்ட எத்தியோப்பிய யூதர்கள் தான்.
http://www.independent.co.uk/news/world/middle-east/israel-gave-birth-control-to-ethiopian-jews-without-their-consent-8468800.html

Image may contain: 1 person

***

Image may contain: text

இது தான் முதாலாளித்துவ ஜனநாயகத்தின் யதார்த்தம். வலதுசாரிக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடும் வாக்காளர்கள் குடிசைகளில் வாழும் பொழுது, அந்த மக்களால் தெரிவு செய்யப் பட்ட வலதுசாரிகள் மாளிகைகளில் வாழ்கிறார்கள்.

இங்கு “வலதுசாரிகள்” என்பது, தமிழ்த் தேசியவாதக் கட்சிகள், திராவிடக் கட்சிகள், சிங்களப் பேரினவாதக் கட்சிகள், இந்துத்துவா கட்சிகள் எல்லாவற்றையும் குறிக்கும். இவர்கள் எல்லாம் வலதுசாரிகள் தான். இது உங்களுக்கு புரியாவிட்டால், உங்களுக்கு எதுவுமே புரியாது.

***

Image may contain: text

ஒரே பார்வையில் முதலாளித்துவத்தின் மூலதன சுரண்டல்

***

“மெக்காவிலும் பெண்க‌ளுக்கு பாலிய‌ல் துன்புறுத்த‌ல்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌.” – பாதிக்க‌ப்பட்ட‌ பாகிஸ்தானிய ஹ‌ஜ் யாத்ரீக‌ர் Sabica Khan

***

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தில் பணியாற்ற மறுத்து சிறைக்கு செல்லும் இளம் கம்யூனிஸ்ட் தோழர்.
Comrade Saar from the Young Communist League of Israel is going to jail for refusing to serve in the occupation army.
Saar just entered the Israeli military base to be jailed for army-refusal. The Young Communist League escorted him to the base with the YCLI drum-orchestra, sang revolutionary Palestinian communist songs and chanted slogans.

Image may contain: 7 people, sky and outdoor

***

உல‌கிற்கு மிக‌ப் பெரிய‌ அச்சுறுத்த‌ல் அமெரிக்காவா அல்ல‌து வ‌ட‌ கொரியாவா?

வ‌ட‌ கொரியா அணு குண்டு போட‌வில்லை. எந்த‌ நாட்டின் மீதும் ப‌டையெடுத்து கொள்ளைய‌டிக்க‌வில்லை. ச‌திப்புர‌ட்சிக‌ளை ந‌ட‌த்த‌வில்லை. ட்ரோன் குண்டு போட‌வில்லை. உல‌க‌ம் முழுவ‌தும் மில்லிய‌ன் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளைக் கொல்ல‌வில்லை. ச‌ர்வ‌தேச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ஆத‌ரிக்க‌வில்லை. அமெரிக்காவால் உல‌கிற்கு மிக‌ப் பெரிய‌ அச்சுறுத்த‌ல் என்று எப்போது சொல்லி இருக்கிறீர்க‌ள்?

Image may contain: 1 person, text

***

புட்டினின் ர‌ஷ்ய‌ விஸ்த‌ரிப்பு ப‌ற்றி பொய் சொல்லி மாட்டிக் கொண்ட‌ நெத‌ர்லாந்து வெளிவிவ‌கார‌ அமைச்ச‌ர் ஹ‌ல்பெ சைஸ்திரா உண்மையை ஒத்துக் கொண்டார். 2006ம் ஆண்டு பொதுக் கூட்ட‌ம் ஒன்றில் உரையாற்றிய‌ சைல்ஸ்திரா, “புட்டின் அக‌ண்ட‌ ர‌ஷ்யாவை உருவாக்கும் திட்ட‌ம் ப‌ற்றி பேசிய‌தை” தான் நேரில் கேட்ட‌தாக‌ கூறினார். ஆனால், புட்டின‌து பேச்சைக் கேட்ட‌தாக‌ சொன்ன‌ கூட்ட‌த்திற்கு ட‌ச்சு அமைச்ச‌ர் சென்றிருக்க‌வில்லை என்று இப்போது தெரிய‌ வ‌ந்துள்ள‌து. இது தெரிய‌ வ‌ந்த‌தும் தான் பொய் சொன்ன‌தாக‌ அமைச்ச‌ர் ஒத்துக் கொண்டார். மேற்குல‌க‌ நாடுக‌ளில் ர‌ஷ்யாவை காட்டிப் ப‌ய‌முறுத்தி ப‌னிப்போர் கால‌ சூழ்நிலை உருவாக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அமைச்ச‌ரும் ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌யன்‌ப‌டுத்தி புளுகுக் க‌தைக‌ளை அவிழ்த்து விட்டுள்ளார்.

நன்றி – தோழர் கலையரசன்

 

அச்சப் பத்து – தெருவில் அருளியது !

5

அச்சப் பத்து
(தெருவில் அருளியது)

புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்
பொய்யில்வாழ் ஆர்.எஸ்.எஸ். அஞ்சேன்
மற்றும் ஓர் நஞ்சை அஞ்சேன்
மறைகுரு மூர்த்தி அஞ்சேன்
குடத்தில்வாழ் தேளும் அஞ்சேன்
கொலைவெறி வாளை அஞ்சேன்
மடத்தில் வாழ் உருவைக் கண்டால்
அம்ம நாம்! அஞ்சு மாறே!

விரட்டிடும் நாயும் அஞ்சேன்,
வெருட்டிடும் பேயும் அஞ்சேன்
கத்தியின்  கூர்மை அஞ்சேன்.
பக்தியின் போர்வை அஞ்சேன்
வன்சுடு காடும் அஞ்சேன்
வரும் நரி ஊளை அஞ்சேன்
சின்னவாள் தியானக் கோலம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

டெங்கெலாம் வரினும் அஞ்சேன்
தினம் ஒரு வைரஸ் அஞ்சேன்.
பொங்கிடும் மதுவும் அஞ்சேன்
புழுநெளி உடலை அஞ்சேன்
முத்திய நோயும் அஞ்சேன்
முகமெலாம் வடுக்கள் அஞ்சேன்
‘நித்தியின்’ சிரிப்புக் கோலம்
அம்ம நாம்! அஞ்சு மாறே!

பஸ் டிக்கெட் பார்த்தும் அஞ்சேன்
ரயில்டிக்கெட் பார்த்தும் அஞ்சேன்
ஜி.எஸ்.டி. வரியும் அஞ்சேன்
பி.எச்.டி. ரேட்டும் அஞ்சேன்
எம்பிரான் பித்தை அஞ்சேன்
ஈசன் கை ஓடும் அஞ்சேன்
தம்பிரான் சொத்தைப் பார்த்தால்
அம்ம நாம்!   அஞ்சு மாறே!

பொழுதுக்கும் சீரியல் அஞ்சேன்
புழுத்திடும் டி.வி. அஞ்சேன்.
எச்சுராஜா வாயை அஞ்சேன்
எஸ்.வி. சேகர்  மெய்யை  அஞ்சேன்
நெக்குரு அடிமை அஞ்சேன்
நீடிக்கும் வறுமை அஞ்சேன்
‘சத்குரு’ ஞானக் கோலம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

வரையிலா வாட்ஸ் அப் அஞ்சேன்
வன்மனக் காட்சி அஞ்சேன்
வட்டியின் கொடுமை அஞ்சேன்
வருத்திடும் சாதி அஞ்சேன்
புத்தியில் உரைக்கா தஞ்சேன்
பக்தியின் கொழிப்பைப் பார்த்தால்
அம்ம நாம்!   அஞ்சு மாறே!

காய்கனி விலையை அஞ்சேன்
கட்டணக் கழிப்பறை அஞ்சேன்
பிழிந்திடும் வேலை அஞ்சேன்
பிசிறிடும் கூலி  அஞ்சேன்
தெருக்களின் வெறுமை அஞ்சேன்
தேய்ந்திடும் உழைப்பை அஞ்சேன்
குருக்களின் தட்டைப் பார்த்தால்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

ரஜினியின் பித்துவம் அஞ்சேன்
கமலின் தத்துவம் அஞ்சேன்
போலீசின் தடியடி அஞ்சேன்
பொறுக்கியின் அடிதடி அஞ்சேன்
நாயர் கடை சோடா அஞ்சேன்
நந்துலால் பீடா அஞ்சேன்
ஜீயரின் சோடா கோலம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

வாள் உலாம் எரியும் அஞ்சேன்
வந்திட்ட பட்ஜெட் அஞ்சேன்
தகையிலா விலையை அஞ்சேன்
தறியிலா ஆட்சி அஞ்சேன்
வாடிய பயிரை அஞ்சேன்
வளர்ச்சியின் பக்கோடா அஞ்ச‍ேன்
மோடியின் அறிவு வேகம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

நிலையிலா வேலை அஞ்சேன்
நெறியிலா சம்பளம் அஞ்சேன்
உயிரிலா ஆற்றை அஞ்சேன்
பயிரிலா நிலத்தை அஞ்சேன்
செடியிலா ஊறை அஞ்சேன்
சிதறிய உறவை அஞ்சேன்
மோடியின் வளர்ச்சிப் பாதை
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

– துரை. சண்முகம்