Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 647

கொடூரமாக கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ – நீதி கேட்டு போராட்டம்

6

வியாசர் பாடி – (யானைக்கவுனி) வால்டாக்ஸ் ரோடு, உட்வார்பு பகுதியில் வசிக்கும் திருமதி சாந்தா என்பவரின் வளர்ப்பு மகள் ஜெயஸ்ரீ கடந்த 24.11.2014 முதல் காணாமல் போனார்.

ஜெயஸ்ரீ 21 வயதான கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள்.  ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.

jeyashree-sliderஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடிஅலைந்து விசாரித்த பின்னரும் அவர் பற்றி தகவல் தெரியாத நிலையில் 27.11.2014 அன்று ஏழுகிணறு காவல் நிலையத்தில், செல்வி ஜெயஸ்ரீ காணாமல் போனது பற்றி புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது பணியில் இருந்த ஏழுகிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் மேற்படி புகாரை பெற்றுக்கொள்ளாமல், அவரை கண்டுபிடித்து தருவதாக சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார். மேலும், ஜெயஸ்ரீயை அப்பகுதியில் உள்ள பிரான்சிஸ், சங்கர் மற்றும் முரளி ஆகியோர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்த பிறகும் அது பற்றி பின்னர் விசாரிப்பதாக தெரிவித்துவிட்டார்.

காதல் என்ற வலையில் வீழ்த்தி அந்த பெண்ணை சென்னையை விட்டு வெளியூருக்கு அழைத்துபோயிருக்கிறான் ஒருவன்.  அங்கே பல வெறிபிடித்த மிருகங்கள் பல நாட்கள் அந்த இளம்பெண்ணை சிதைத்திருக்கிறார்கள்.

2.12.2014 அன்று ஜெயஸ்ரீ கள்ளக்குறிச்சியில் இருப்பதாக அங்கிருந்து அண்ணாமலை என்பவர் தகவல் தெரிவித்தார். இதுபற்றியும் ஏழுகிணறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மோகன்தாஸிடம் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அப்போதும் இதுபற்றி தீர விசாரணை செய்யாமல் கள்ளக்குறிச்சிக்குச் சென்று ஜெயஸ்ரீயை அழைத்து வர இரண்டு காவலர்களை மட்டும் அனுப்பி வைத்தார். கள்ளக்குறிச்சியில் செல்வி ஜெயஸ்ரீ உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மிக மோசமான நிலையில் நடக்ககூட இயலாத நிலையில் இருந்தார். அவருக்கு ‘அடைக்கலம் வழங்கி’ வைத்திருந்ததாக தெரிவித்த அண்ணாமலையிடம் ஜெயஸ்ரீ எப்படி அவர் வீட்டிற்கு வந்தார் என்பது பற்றியோ, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக அவரது வீட்டில் ஜெயஸ்ரீ இருப்பது பற்றிய விபரம் பற்றி தகவல் கொடுக்காமல் இருந்தது பற்றியோ காவல்துறை எவ்வித விசாரணையும் செய்யவில்லை.

ஜெயஸ்ரீயை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க முயன்ற போது, காவல்துறை உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் அவ்வாறு அரசுமருத்துவமனையில் ஜெயஸ்ரீயை சிகிச்சைக்குச் சேர்த்தால் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விபரம் ஊடகங்களுக்கு தெரிந்து அவரது பெயர் கெட்டுப்போய்விடும் என்றும், தொலைக்காட்சியில் போட்டு அவரை அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்றும் கூறி வீட்டிலேயே சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாக குடும்பத்தை மிரட்டி நிர்ப்பந்தம் செய்து ஜெயஸ்ரீயை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்வதை தடுத்து நிறுத்தி விட்டார். இந்நிலையில் கடந்த 04.12.2014 அன்று ஜெயஸ்ரீயின் உடல்நிலை மோசமாக ஆனதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் செய்தி அறிந்து, மருத்துவமனைக்குச் சென்ற பொழுது, ஜெயஸ்ரீயின் உடல் மார்ச்சுவரியில் இருந்தது.  காதுகளில் காயம், இரு கைகளிலும் இறுக்கமாய் கட்டப்பட்டிருந்த கயிறால் தடமாய் பதிந்திருந்தன.  உடல் முழுவதுமே அங்காங்கே காயங்கள். பாலியல் வெறிபிடித்த மிருகங்கள் அந்த பெண்ணை மோசமாக குதறியிருந்தார்கள்.  அந்தப் பெண்ணின் அக்கா “பிறப்புறுப்பையே சிதைந்திருந்தார்கள்” என  அழுதுகொண்டே சொன்னார்.

jayashree_dinakaranஜெயஸ்ரீயின் சாவுக்கு நீதிகேட்டும், அதற்கு காரணமானவர்களைத் தண்டிக்கக் கோரியும் பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு தோழர்களும், மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞரும் பகுதிவாழ் பொது மக்களும் மறியல் போராட்டம் செய்த பிறகே 04.12.2014 அன்று ஏழுகிணறு காவல் நிலையத்தில் பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கின் முதல் தகவல் அறிக்கையிலும் திருமதி சாந்தா 04.12.2014 அன்றுதான் புகார் கொடுத்தார் என்று தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயஸ்ரீ கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பற்றி  எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், கடந்த 27.11.2014 அன்று இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது பற்றியோ, 02.02.2014 அன்று கள்ளக்குறிச்சிக்கு ஜெயஸ்ரீயை மீட்டு வர காவலர் சென்ற விபரம் பற்றியோ எவ்வித விசாரணையுமின்றி கண்துடைப்பான முறையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்றுவரைக்கும் கூட முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றவாளிகளில் சங்கர், முரளி ஆகியோர் கைது செய்யப்படவில்லை.

தற்போது இந்தப்பிரச்சினையில் மேற்கொண்டு எதுவும் செய்யக் கூடாதென்றும், ஜெயஸ்ரீயின் சாவுக்கு காரணமான சமூக விரோதிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் வகையிலும், காவல்துறையினரே மறைமுகமாக செயல்பட்டு நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். தங்களின் கண்முன்பாகவே தமது மகள் கொடூரமான முறையில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட பின்னரும் அதற்கு நியாயம் கேட்கும் வகையில் எதுவும் பேசக்கூடாதென்று காவல்துறையினர் சொல்வதும், குற்றவாளிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கினை முடித்துவைக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் சட்டவிரோதமானதும், மனித உரிமை மீறலுமானதாகும்.

  1. கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஜெயஸ்ரீயின் வழக்கினை விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டுமென்றும்
  1. ஜெயஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென்றும்
  1. இவ்வழக்கினை முறையாக விசாரணை செய்யாமல் மேற்படி சமூக விரோதிகளை காப்பற்றும் வகையில் செயல்பட்ட ஏழுகிணறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்
  1. ஜெயஸ்ரீயின் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க ஆவன செய்ய வேண்டுமென்றும்

நான்கு கோரிக்கைக்களை முன்வைத்து, பெண்கள் விடுதலை முன்னணி போராடி வருகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தரப்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வாதாடாமல், ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார் என வழக்கை ஊத்தி மூட முயன்றார்கள்.  மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்  ஜெயஸ்ரீ  கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார் என்றும், குற்றவாளிகளை தப்புவிக்க அரசு தரப்பு முயல்கிறது என்றும் வாதிட்டு, கைது செய்யப்பட்டுள்ள பிரான்சிஸ்க்கு ஜாமீன் கொடுக்க இருந்ததை போராடி நிறுத்தி வைத்துள்ளனர்.

ஒரு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, மயக்க நிலையில் குடும்பத்தினருக்கு கிடைத்து, மயக்கம் திரும்பாலே இறந்தும் போய்விட்டார். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், காப்பாற்றியிருக்கலாம். ஆனால், துவக்கத்திலிருந்தே காவல்துறை மெத்தனமாகவும், அலட்சியமாகவும் நடந்துகொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தவறுதலாக வழிகாட்டியும் இருக்கிறது. இந்த வன்புணர்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாக்கிற எல்லா வேலைகளையும் கவனமாக செய்து வருகிறது!

நாம் வைத்த குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், காவல்துறை துணை ஆணையர் பதவியில் உள்ள ஒரு அதிகாரியை, இவ்வழக்கு விசாரணையை கண்காணிக்க நியமனம் செய்யும்படி காவல்துறைத் தலைவருக்கு இடைக்கால உத்தரவிட்டுள்ளது. வழக்கினை இரணடு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

ஜெயஸ்ரீயின் வழக்கினை எப்படியாவது ஊத்தி மூடிவிடலாம் என்ற சமூகவிரோதிகளின் சதியினை முதற்கட்டமாக சட்டரீதியாக முறியடித்துள்ள பெண்கள் விடுதலை முன்னணி, ஜெயஸ்ரீயின் சாவுக்கு நீதிகேட்டு போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு தீர்வாக சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என குரல்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஜெயஸ்ரீ வழக்கை காவல்துறை பதிவு செய்வதற்கே நீண்ட நெடிய போராட்டம் செய்யவேண்டியிருந்தது! இதுதான் சமூக எதார்த்தம்.

சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளை பாதுகாக்குகிற வேலைகளை செய்யும் பொழுது சட்டங்களை கடுமையாக்கி என்ன செய்ய?

எத்தனையோ ஓட்டுக்கட்சிகள் இருந்தாலும், யாரும் இந்த பிரச்சனையை கையில் எடுக்கவில்லை. இறந்த ஜெயஸ்ரீ ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கேட்பதற்கு நாதியில்லை என்ற உண்மை தான் முகத்தில் அறைகிறது.

புகைப்படத்தில் இருக்கும் ஜெயஸ்ரீயின் மலர்ந்த புன்னகையும், மார்ச்சுவரியில் ரணமாக இருந்த சலனமற்ற உடலும் “மீண்டும் ஒரு ஜெயஸ்ரீயை உருவாக்க விட்டு விடாதீர்கள் அக்கா” என அவளின் குரல் மீண்டும் மீண்டும்  நினைவலைகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!

தெருவில் இறங்கி போராடாமல் எதுவும் இங்கு சாத்தியமில்லை! பெண்கள் விடுதலை முன்னணி இறந்த ஜெயஸ்ரீயின் சாவுக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடுகிறது! எங்களுடன் கைகோர்த்து இணைந்து போராட வாருங்கள்!

Jayashree

தகவல்:

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை கிளை.
41, பிள்ளையார் கோயில் தெரு,
மதுரவாயல், சென்னை – 95.
பேச : 98416 58457

மேலும் படிக்க

2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!

11

ருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.

சேகர் குப்தா
2ஜி ஊழலை ஊடகங்களை ஊதிப் பெருக்கி விட்டதாக ஒப்புக் கொண்டுள்ள இந்தியா டுடே குழுமத்தின் துணைத்தலைவர் சேகர் குப்தா : காலங்கடந்த ஞானோதயத்தின் காரணமென்னவோ?

காங்கிரசு தலைமையில் நடந்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கே.ஜி. எண்ணெய் வயல் முறைகேடு, ஏர்-இந்தியா ஊழல், டெல்லி விமான நிலைய ஊழல், 2ஜி முறைகேடு, நிலக்கரி வயல் முறைகேடு உள்ளிட்டுப் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருந்தபோதும், பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் 2ஜி அலைக்கற்றை முறைகேடை மட்டுமே உள்நோக்கத்தோடு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டன. அலைக்கற்றை ஊழலை தி.மு.க.வைத் தாக்கித் தனிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆயுதமாகக் கண்ட அக்கும்பல், இதனை மற்ற ஊழல்களைவிடப் பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கியது. அதனாலேயே, சி.ஏ.ஜி. அறிக்கையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு குறித்து மூன்றுவிதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டிருந்தாலும், 1.76 இலட்சம் கோடி ரூபாயை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது.

மன்மோகன் சிங்கின் பரிசுத்த பிம்பத்தை உடைப்பதற்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைக் கையில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க., இந்த ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மைய ஊழல் கண்காணிப்பு கமிஷனரிடம் புகார் கொடுத்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரி, தொடர்ந்து 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கியது.

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அத்வானி, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து இரத யாத்திரை நடத்தினார். அத்தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. சார்பாக அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்களின்பொழுது கருப்புப் பணத்தை மீட்கும் கதாநாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார்.  ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாகவும் அவரும் பா.ஜ.க.வும் அடித்த பஞ்ச் டயலாக்குகள், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைக்கூட கூச வைத்தன.

பா.ஜ.க. மற்றும் மோடியின் இந்த ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண மீட்பு சவடால்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கும் சுயநல உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, வேறு எதையும் சாதிக்காது எனப் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தினாலும், மோடிக்காக கார்ப்பரேட் ஊடகங்கள் முனைந்து நடத்திய மிருகத்தனமான பிரச்சாரத்தின் மூலம் இவையெல்லாம் அமுக்கப்பட்டன.

எனினும், கார்ப்பரேட் ஊடகங்களால் மோடிக்குப் பூசப்பட்ட அரிதாரமெல்லாம் ஆறே மாதங்களில் கலைந்துபோனது. கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசே கேலிபேசும் அளவிற்கு மோடி கும்பல் படுகேவலமான பல்டி அடித்திருக்கிறது.  நிலக்கரிச் சுரங்க விவகாரமோ விநோதமான முடிவை எட்டிவிட்டது.  வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் உள்ளிட்டு 214 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த மறுநிமிடமே, அச்சுரங்கங்களை உடனடியாக மறுஏலம் நடத்தித் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கு ஏதுவாகப் புதிய சட்டமொன்றையே இயற்றிவிட்டது, மோடி அரசு. பா.ஜ.க. மட்டுமல்ல, 2ஜி, சுரங்க வயல் ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கிழிகிழியென கிழித்துவந்த ஊடகங்களும் தட்டைத் திருப்பிப் போட்டு தட்டத் தொடங்கிவிட்டன.

"கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசு மீது வீணாகச் சந்தேகப்பட்டு, அதற்கு அநீதி இழைத்து விட்டோம்" எனக் கூறி பா.ஜ.க.வின் பல்டியை நியாயப்படுத்துகிறார், துக்ளக் சோ
“கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசு மீது வீணாகச் சந்தேகப்பட்டு, அதற்கு அநீதி இழைத்து விட்டோம்” எனக் கூறி பா.ஜ.க.வின் பல்டியை நியாயப்படுத்துகிறார், துக்ளக் சோ

அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தயாரித்து வழங்கியதில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு இணையான பங்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் உண்டு. அந்த நாடகத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை அளித்த ஊடகங்களுள் ஒன்றான இந்தியா டுடே குழுமம், காங்கிரசு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்வக்கோளாறு காரணமாக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டதாக இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாகச் செயல்பட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவருமான சேகர் குப்தா இந்த ஊழல்களை தற்பொழுது இப்படி மதிப்பீடு செய்கிறார்:

“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி. ரூ.57,000 கோடி முதல் ரூ.1.76 இலட்சம் கோடி வரை பல்வேறு எண்ணிக்கையை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகக் குறிப்பிட்டபோது, எல்லோரும் அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தனர். மீடியா இதிலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கிவிட்டது.” (இந்தியாடுடே, நவ.12)

ஆ.ராசா பதவி விலகிய பிறகு நடந்த அலைக்கற்றை ஏலங்களின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானமே, மீடியாக்கள் அலைக்கற்றை ஊழல் குறித்து உருவாக்கி வைத்திருந்த 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற அனுமான பூதத்தை அடித்து நொறுக்கிவிட்டது.  ஆனாலும், ஊடகங்கள் தங்களது குட்டு உடைந்து போனதை கமுக்கமாக மூடிமறைத்ததோடு, 2ஜி ஒதுக்கீடில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, இப்பொழுது யோக்கியவானைப் போல, “2007-ல் ரூ.1.76 இலட்சம் கோடி என்பது ஜிடிபியில் 4.4 சதவீதம்.  சிறிய அளவு ஸ்பெக்ட்ரம்மின் மதிப்பு இந்த அளவுக்கு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என எழுதுகின்றன.

இந்தியா டுடேயின் இந்த திடீர் ஞானோதயம் 2ஜி-யோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிலக்கரியும் நல்ல உதாரணம். “2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர விசயங்களில் நடந்தது போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஐ.மு.கூ. அரசில் ஊழல் இருந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஒதுக்கீடும் முறைகேடானதா? மீண்டும் கொஞ்சம் பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்வதால் என்ன தப்பு என்பது போல சி.ஏ.ஜி. சொன்ன சில இலட்சம் கோடி தொகை கற்பனையானதா? தே.ஜ.கூ., குறிப்பாக பா.ஜ.க. அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, நிலக்கரி வயல் ஒதுக்கீடு வழக்கில் 1993 முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என பிலாக்கணம் பாடுகிறார், சேகர் குப்தா.(இந்தியா டுடே, நவ.12)

2ஜி ஊழல்
பூஜ்யங்களின் எண்ணிக்கையைக் காட்டியே 2ஜி ஊழலைப் பரபரப்பூட்டும் செய்தியாக்கின ஊடகங்கள்.

ஊழல் விவகாரம் போலவே கருப்புப் பண விவகாரமும் மிகைப்படுத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ள சேகர் குப்தா, “கருப்புப் பணம் தொடர்பான எண்ணிக்கையை நடைமுறை சாத்தியம் எனும் சோதனைக்கு (யாரும்) உட்படுத்தவில்லை. இது ஜிடிபியைவிட பல மடங்கு அதிகமானது என்றும், சுவிஸ் வங்கியில் இவை முடங்கிக் கிடக்கிறது என்றும் பாபா ராம்தேவ் மட்டுமே கூறமுடியும். இதைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக்குவதற்கு முன்பாக, ஆட்சிக்கு வரும் வாப்பு உண்மையில் இருக்கிறது என்றும், இது உருவாக்கிய பூதத்தை சமாளித்தாக வேண்டிய நிலை ஏற்படும் என்றும்நினைவில் கொள்ள யாரேனும் பா.ஜ.க.விற்கு அறிவுறுத்தியிருக்கலாம். உங்கள் சொந்த கற்பனையில் சிக்கித் தவிப்பதைவிட தர்மசங்கடமானது வேறில்லை” என அடக்கி எழுதுகிறார்.

கருப்புப் பண விவகாரத்தில் சேகர் குப்தாவைவிட துக்ளக் சோவின் மழுப்பல்கள், மோடியின் ‘தர்மசங்கடத்தை’ நமக்கு இன்னும் தெளிவாக விளங்க வைக்கின்றன.

“கருப்புப் பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் வைத்திருப்போரின் பட்டியலை மத்திய காங்கிரஸ் அரசு பெற்றும்கூட, அதை வெளியிடாமல் இருந்ததற்குச் சில காரணங்களை அந்த அரசு கூறியது. அவை பொய்கள் என்று தீர்மானித்து, அந்த அடிப்படையில் அப்போது மத்திய அரசை விமர்சனம் செய்தவர்களில் நாமும் அடங்குகிறோம்.

2ஜி ஊழல்
2ஜி ஒதுக்கீட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங்கை ஆ.ராசா ஏமாற்றி விட்டதைப் போல அவதூறு செய்து ஊடகங்கள் வெளியிட்ட கேலிச்சித்திரப் படத்தின் ஒரு வகை மாதிரி.

இப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது.  காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”

(துக்ளக், 12.11.2014)

“காங்கிரசு சரியாக விளக்கவில்லையாம், விவரங்கள் சரியாக வெளியாகவில்லையாம்” – ராமஸ்வாமி அய்யர் எப்படியெல்லாம் நாக்கூசாமல் பொய் சொல்கிறார் பாருங்கள். கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி கிடக்கட்டும். இதில் மக்களுக்குச் சாத்தப்பட்ட பட்டை நாமத்தைப் பற்றியல்லவா யோக்கியவான் சோ ராமஸ்வாமி பேசியிருக்க வேண்டும்; மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, கருப்புப் பண விவகாரத்தில் இரட்டை வரி விதிப்பு போன்ற நடைமுறை ‘சிக்கல்கள் ’ இருப்பது இப்பொழுதுதான் தெரியவந்தது போல நடிக்கிறார்கள்.

முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான், 2ஜி விவகாரம் குறித்து பேட்டிகள் அளித்து, அதனை பா.ஜ.க.விற்கும் ஊடகங்களுக்கும் பெருந்தீனியாகக் கொடுத்தார்.  இதற்குக் கைமாறாக பா.ஜ.க.வும் ஊடகங்களும் விநோத் ராயை ஊழலை ஒழிக்க வந்த ஹீரோவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. அப்படிபட்ட ஊடக வெளிச்சத்தில் மிதந்த விநோத் ராய், “தணிக்கை துறை பல முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்ட நோக்கத்தோடு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்துகின்றன” என சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் போல இப்பொழுது 2ஜி குறித்து கருத்துத் தெரிவிக்கிறார். (என்.டி.டிவி பேட்டி)

நிதியமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிட்ட அருண் ஜேட்லி, “கணக்கு தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்கு முயற்சிக்கக் கூடாது” என இப்பொழுது எச்சரிக்கிறார்.  (துக்ளக், 19.11.2014)

இந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது.  இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014)

“அரசியலில் ஓரளவு மிகைப்படுத்தலை, அதிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவை அடையும்போதுதான் சிக்கல் வருகிறது” எனத் தந்திரமாக எழுதி, ஊடகங்களையும் பா.ஜ.க.வையும் விடுவிக்க முயலுகிறார், சேகர் குப்தா. (இந்தியா டுடே, நவ.12)

முன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும்!  இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது.  ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை.  கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப் போவதில்லை என்பதால்தான் சோவும், சேகர் குப்தாவும் அவை குறித்து புதிய பொழிப்புரையை எழுதுகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவந்த மாவீரனைப் போலக் காட்டப்பட்ட மோடியும், அவரது பரிவாரங்களும் அடிப்படையிலேயே நாணயமற்றவர்கள்; இரட்டை நாக்குப் பேர்வழிகள் என்பதுதான் இந்தப் பொழிப்புரையிலிருந்து ஓட்டுப்போட்ட பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.

– திப்பு
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !

எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!

மிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்ச் சமுதாயத்தை சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக, சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.

எம்.ஜி.ஆர் பாசிஸ்ட்
கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் படம்.

இன்று ஜெயலலிதாவை விமரிசிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உட்பட பலரும் எம்.ஜி.ஆரை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், ஊழலற்ற உத்தமராகவும், மக்களுக்காகப் பாடுபட்டு உயிர்துறந்த மாமனிதராகவும் காட்டுவதுடன், அவர் காட்டிய வழியில் செல்லத் தவறியதுதான் ஜெயலலிதாவின் குற்றம் என்பதாகவும் சித்தரிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். அவர் 1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற புதிய திரைப்படம் சென்னையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று பத்தாண்டுகளாக கருணாநிதி கட்சியின் பத்திரிகைகள் எழுதி வந்தன. இதற்குப் பொருத்தமாக கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் சினிமா படம் ஒன்றையும் தவறாது வெளியிட்டு வந்தன.

எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, பச்சோந்தித்தனமாக நிறத்தை மாற்றிக் கொண்டு நாற்பதாண்டு இனிய நண்பரை இழந்த துக்கத்தில் மூழ்கிவிட்டார், கருணாநிதி. கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும், இத்தகைய கேடுகெட்ட ‘ராஜதந்திரங்களை’ நியாயப்படுத்திக் கொள்வதற்காக, இவற்றையெல்லாம் உயர்ந்த அரசியல் பண்பாடு என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.

எம்.ஜி.ஆர் கவர்ச்சி அரசியல்
இறந்தும் உயிர்வாழ்பவர் : எம்.ஜி.ஆர் உருவாக்கிய கவர்ச்சிவாத பொறுக்கி அரசியல்தான் இன்றும் தமிழகத்தில் கோலோச்சுகிறது.

திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தியே அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து இந்த எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழின அடையாளங்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் சவக்குழி தோண்டியவர் எம்.ஜி.ஆர். இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதைப்போலத்தான், எம்.ஜி.ஆரின் வள்ளல்தன அறிவிப்புகள் பலவும் இருந்தன. விவசாயியாகவும், தொழிலாளியாகவும், மீனவ நண்பனாகவும் நடித்து விட்டு, அதே மக்களை தேவாரம்-மோகன்தாசு தலைமையிலான போலீசு மிருகங்களை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர். அவரை மனிதநேயர், வள்ளல் என்பது நிகழ்கால வரலாற்றையே திரித்துப் புரட்டுவதாகும். இந்த உண்மையை மறைத்து, தெரிந்தே பார்ப்பன ஊடகங்களும் பிழைப்புவாத ஊடகங்களும் சினிமாக்காரர்களும் புளுகித் திரிகின்றனர்.

சந்தேகப்பிராணியான ஜெயலலிதா தனது உடன் பிறவாத சகோதரி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உட்பட விசுவாசிகள் மீதும் அமைச்சர்கள் மீதும் உளவுப்படை போலீசை விட்டு வேவு பார்ப்பதும், சொந்த புத்தி இல்லாமல் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் கோள் மூட்டும் போதெல்லாம் பதவிகளைப் பறித்து அவர்களைப் பந்தாடுவதும், கஞ்சா வழக்குகள் பேடுவதும் எம்.எல்.ஏ., எம்பி.க்களைக்கூட தோட்டத்துக்கு இழுத்து வந்து அடிப்பதும் கூட எம்.ஜி ஆரிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம்தான். காரியத்தைச் சாதித்துக்கொள்ள அரசியல் பிரமுகர்களுக்குப் பலவகை விருந்து வைப்பதுகூட எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் கலைதான். ஏன், ஜெயலலிதாவையே உளவு பார்த்து, மிரட்டி, ஒதுக்கி வைத்தார், அவரை விஞ்சிய சந்தேகப் பிராணியான, எம்.ஜி.ஆர்.

இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக்கட்சிக்கும், அதன் லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை. இந்த உண்மை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. இதனை அனுபவித்த முந்தைய தலைமுறையினரோ மறந்து விடுகின்றனர். இதுதான் அன்றாடப் பரபரப்புச் செய்திகளில் மூழ்கடிக்கப்படும் நமது மக்களின் மிகப்பெரிய பலவீனம். இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், அரசியல் அறிவும் ஜனநாயக உணர்வுமற்ற ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைப் பராமரித்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆட்சியைப் புரிந்து கொள்வதற்கு, அவருடைய ‘அரசியல் உடன்கட்டை’ எம்.ஜி.ஆரின் ஆட்சியைப் புரிந்து கொள்வது அவசியம். 1987-ல் எம்.ஜி.ஆர். இறந்ததை ஒட்டி, “புதிய ஜனநாயகம்” ஏட்டில் வெளியிடப்பட்ட “ஒரு பாசிஸ்டின் மரணம்” என்ற சிறப்புக் கட்டுரையை இங்கே சுருக்கித் தருகிறோம்.

புர்ரட்சித் தலைவர்!

வெங்கட்ராமன் - எம்.ஜி.ஆர்
ஆர்.வி – எம்.ஜி.ஆர் அணைப்பு : திராவிட இயக்க அரசியலை ஒழிக்க பார்ப்பனப் பிணைப்பு!

காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக் கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’!

அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தைப் பத்து ஆண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார். எம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப் படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. அவற்றை எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினா கடற்கரையில் புதைத்துவிட முடியாது. மெரினா – அங்குதானே எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; அங்குதானே மீனவர் குப்பங்களைச் சூறையாடின. அவை நினைவுக்கு வருகின்றன. அவை தமிழகத்தின் இருள் நிறைந்த பத்தாண்டு வரலாறு ஏற்படுத்திய வடுக்கள்!

கருணாநிதி ஆட்சியின் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளைச் சொல்லி தூய்மையான “அண்ணா”வின் ஆட்சிக் காணப் போவதாகச் சொன்னார், எம்.ஜி.ஆர். ஆனால், அவரது ஆட்சியில் தழைத்தோங்கிய இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடு, மோசடி, தில்லுமுல்லு, எத்து வேலை, பித்தலாட்டம் அனைத்திற்கும் மூலகர்த்தாவாக எம்.ஜி.ஆரே விளங்கினார். தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர் பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்தார்.

படிக்க :
♦ ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!
♦ பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்

இடி அமீனையும் விஞ்சிவிடும் ஆடம்பர, வக்கிர வாழ்வும், விருந்தும், அரசு விழாக்களும் நடத்தினார். சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது “சின்ன வீடு” சினிமா பார்த்து மகிழ்ந்தார். 12 கோடிக்கு ஆடம்பரமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். கருணாநிதி நடத்தினார் என்பதற்காகவே அடுத்த உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணித்து, பங்கேற்பவர்களையும் தடுத்தார்.

ஒரு வள்ளலும் ஓராயிரம் ஒட்டுண்ணிகளும்!

பாசிசக் கோமாளி
பாசிசக் கோமாளியின் அடுத்த வாரிசு

“மாண்புமிகு புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி, டாக்டர் எம்.ஜி.ஆர்.” என்று தற்புகழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார். அரசு கட்டிடங்களின் எல்லா கல்வெட்டுகளிலும் தன் பெயரே இருக்க வேண்டும் என்று வெறியோடு உத்திரவிட்டார். முகத்துதிபாடும் கூட்டத்துக்கு பொன்னும் பொருளும் கொடுத்து வள்ளலென்றும், நோபெல் பரிசுக்குரிய மேதை என்றும் புகழ வைத்தார்.

இதயம் பேசுகிறது மணியன், மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., சண்முகவேல், சோலை, வலம்புரிஜான் ஆகிய அவரது முகத்துதிபாடும் பத்திரிக்கை எடுபிடிகள்; போலி கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், ரங்கச்சாரி, வி.பி.ராமன் ஆகிய அரசியல் ஆலோசகர்கள்; மோகன்தாஸ் தலைமையில் ஒரு உளவுப்படை, தேவாரம் தலைமையில் ஒரு அதிரடிப்படை – இடி அமீனைச் சுற்றி ஒரு அல்லக்கைக் கூட்டம் அமைந்ததைப் போல இவர்கள் எம்.ஜி.ஆரைச் சுற்றியிருந்தனர்.

தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை எம்.ஜி.ஆர். தானமாகக் கொடுத்தார். சென்னை மிருகக்காட்சி சாலை இருந்த இடத்தை பழனி பெரியசாமிக்கும், சென்னை வளசரவாக்கத்தின் புறம்போக்கை நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கும், போரூர் புறம்போக்கை சாராய உடையாருக்கும், மருவத்தூர் ஏரிப்புறம்போக்கை பங்காருவுக்கும் எழுதிக் கொடுத்தார்.
முனு ஆதி, லியாகத் அலிகான், மா.பொ.சி., அங்கமுத்து, உக்கம் சந்து, பழக்கடை பாண்டியன், கோடம்பாக்கம் குமார், சுலோச்சனா சம்பத், கல்யாணி ராமசாமி, அனகாபுத்தூர் ராமலிங்கம், பால குருவ ரெட்டியார் இப்படி ஒரு பெரிய ஒட்டுண்ணிக் கூட்டத்தை வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்களாக்கி அரசாங்கப் பணத்தைச் சுருட்டிக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, கோவை முதலாளி வரதராஜுலு போன்ற அரசியல் வாடையே இல்லாதவர்களுக்கும் பதவிகளைத் தானம் செய்தார்.

பாசிசக் கோமாளி!

தனது அரசியல் எதிரிகளை ஒழிக்கும்பொருட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, சட்டமன்ற பதவி பறிப்பு, வெடி குண்டு வழக்கு, இந்திராவுக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது தாக்குதல், தனது அமைச்சர் மீதே கொலை வழக்கு என்று பல வக்கிரமான வழிகளை மேற்கொண்டார்.

04-mgr-1மோகன்தாஸ் – தேவாரம் படையை ஏவிப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்தார். பத்திரிக்கைகள் மீது குண்டர்களை ஏவித் தாக்கினார்; சபாநாயகர் பாண்டியனை ஏவி அரசியல் எதிரிகளை சிறையிலிட்டார்; நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார். சிறை – சித்திரவதை – படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தார். தனது அரசுக்கு விரோதமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளையும் தனது அரசை விமர்சிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் உளவு பார்க்கச் செய்தார். நாடு கடத்தும் சட்டம் என்றொரு வக்கிரமான சட்டத்தைக் கொண்டு வந்தார்.

பெரியாரின் வாரிசு, பகுத்தறிவு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டே குறி கேட்டுத்தான் எந்தச் செயலையும் செய்தார். கோஷ்டி பூசலால் ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி வந்த போதெல்லாம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது மனைவிமார்களில் சிலரையே அந்நிய உளவாளிகள் என்று அறிவித்துக்கொன்றான் இடி அமின். எம்.ஜி.ஆரோ ஒரு பாசிசக் கோமாளிக்கே உரிய முறையில் பத்திரிக்கைகளில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் கொடுத்தார்.

“அரசு நிர்வாகத்தில் சம்பந்தமில்லாத யாருடைய தலையீட்டையும், குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாக இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்தும். அமைச்சர்களே ஆனாலும் சரி, தலைமைச் செயலாளர் அல்லது உயர் அதிகாரிகள் சம்பந்தபட்ட ஏனைய யாராக இருந்தாலும் சரி என்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.”

எம்.ஜி.ஆர். ஆட்சியின் ஒவ்வொரு அசைவிலும் அதன் அருவருக்கத்தக்க இழிவான அம்சம் முழுவதுமாக வெளிப்பட்டு அம்பலமான பின்னும், நோயுற்று நடைபிணமான பின்னும், அவர் மத்திய அரசுக்குத் தேவையான எடுபிடி என்பதால் ஆட்சியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின் பாசிச, சேடிச, கோமாளித்தனங்களை அவருடைய “தோழமை”க் கட்சிகள், பத்திரிக்கைகளே நியாயப்படுத்த முடியாமற் தவித்த சம்பவங்கள் ஏராளமாக உண்டு. மறைமுகமாக அவரை ஆதரித்த துக்ளக், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி, இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகளும், போலி கம்யூனிஸ்டுகளும் கூட அவற்றைக் “கிண்டலடித்த – கண்டித்த” சம்பவங்களும் ஏராளமாக உண்டு.

அட்டைக் கத்தி வீரனின் அழுகை!

சக்களத்திச் சண்டை
சக்களத்திச் சண்டை : ஆட்சி எம்.ஜி.ஆரின் பூர்வீக சொத்தா?

பாசிச எம்.ஜி.ஆர் மூன்று தவணைகளாக பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்தார். முதல் மூன்றாண்டுகள் போலீசையும் அடக்குமுறைச் சட்டங்களையும் ஏவி ஏழை – எளியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர் – அரசு ஊழியர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரையும் அடக்கி ஒடுக்கிவிட்டார். கடைசியாக, சங்கம் வைக்கும் உரிமைக்காகப் போராடிய போலீசார் மீதே மத்தியப்படையை ஏவி ஒடுக்கினார். சந்தர்ப்பவாதமும் அரசியல் பித்தலாட்டமும் அம்பலப்பட்டு போகவே 1980 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டபோது எம்.ஜி.ஆர். நிலைகுலைந்து போனார்.

அதைத்தொடந்து, (சினிமாவில் வீரதீரமாகச் சண்டையிட்ட எம்.ஜி.ஆர்.) இரண்டு கண்களிலும் “கிளிசரினை” ஊற்றிக் கொண்டு தமிழக மக்களிடம் குடம் குடமாக கண்ணீர் வடித்தார். விவசாய சங்கத் தலைவரிடமும், போலீசு சங்கத் தலைவரிடமும் மண்டியிட்டார். மன்னிப்பு கேட்காத குறையாக சரணடைந்தார். ஏராளமாகப் பொய்யான வாக்குறுதிகளை வீசி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

மீண்டும் பதவி நாற்காலியில் அமர்ந்தவுடன் அத்தனையும் காற்றில் பறந்தது. அதிகார மமதை தலைக்கேற, மீண்டும் அந்த பாசிச வேதாளம் தமிழக மக்கள் மீது பாய்ந்தது. அரசியல் எதிரிகளையும், பத்திரிக்கைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. இதிலே வெற்றி பெற்ற பிறகு தமிழகத்தைத் தனது கட்சியின் ஊழல் “பேரரசாக” மாற்றுவதில் முழு மூச்சாக இறங்கினார். தனது பினாமிகளையும், சாராய சிற்றரசர்களையும், தனது புகழ்பாடும் விசுவாச ஒட்டுண்ணிக் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

படிக்க :
♦ ஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை !
♦ வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை !

தனது அரசியல் – அதிகார அட்டூழியங்களுக்கும், பகற்கொள்ளைக்கும் வசதியாக இந்திராவின் இளைய பங்காளியாகவும் பாசிச பாதந்தாங்கியாகவும் மாறினார். இலஞ்ச ஊழலும், பாசிச அடக்குமுறையும் நிறுவனமயமானது – ஆட்சியின் ஒழுங்குவிதியானது. அதன் பிறகு அவரது ஆட்சியின் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க யாரும் துணியவில்லை. நோயுற்று நடைபிணமான நிலையில், அதைக் காட்டியே அனுதாப அலையை எழுப்பி, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், எம்.ஜி.ஆரின் எடுபிடிகள் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதற்கான உரிமை பெற்றவர்களாகிவிட்டனர். சட்டமன்றத்துக்குள் சர்வாதிகாரி பாண்டியனும், வெளியே மோகன்தாஸ் – தேவரம் கும்பலும் காட்டுமிராண்டித்தனமாக ஆட்சி நடத்தினர். சாதி, மதவெறியர்களும், சாராய- மாஃபியா – கடத்தல் தலைவர்களும் கட்டுப்பாடற்ற கொள்ளையில் இறங்கினர்.

பத்தாண்டு ஆட்சியின் கருப்பு சிவப்பு புள்ளிகள் மீது வெளிச்சம் போட்டுக் காட்டினாலே போதும். அவரது பாசிச, சேடிச கோமாளித்தனங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

  • எம்.ஜி.ஆர் - இந்து மதவெறி
    பகுத்தறிவுக்குச் சவக்குழி, இந்து மதவெறிக்குப் பிள்ளையார் சுழி

    எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, முந்தைய அவசரநிலை ஆட்சியின் போது பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும், வேறு சில கோரிக்கைகளுக்காகவும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் அவர்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தின் மீது போலீசும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பாய்ந்து தாக்கினர். மதுரை கலெக்டரே இரும்புத் தொப்பியும் கைத்தடியும் ஏந்தி மாணவர்களை அடித்து நொறுக்கினார். தப்பி ஓடிய மாணவர்களின் விடுதிகளுக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரத்தக் காயங்கள்; 850 பேர் கைதாகி பொய்வழக்குகள்அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம், மாநிலக் கல்லூரி, நெல்லை இந்திய மருத்துவக் கல்லூரி, தியாகராய கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீசாராலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் தாக்கப்பட்டனர். பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலம் போனபோது ஊழியர்களாலும், போலீசாராலும் தாக்கப்பட்டனர்.சிறுபான்மையினரின் கல்லூரிகள் என்கிற பெயரில் நிர்வாகம் தம்மை ஒடுக்குவதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்களும் புதுக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அக்கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்துப் போராடினர். எம்.ஜி.ஆர் அரசு, கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு மாணவ- மாணவிகளைத் தாக்கவும், ஆசிரியர்களைப் பழிவாங்கவும் துணை போனது. எல்லாவற்றுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான எம்.சி.ராஜா விடுதியின் ஊழல்களை எதிர்த்தும், கல் – மண் கலந்த உணவு, அடிப்படை வசதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் அவர்கள் பலதடவை முறையிட்டனர். கடைசியாக, அமைதியாக ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கியது போலீசு. தப்பி ஓடி விடுதிக்குள் புகுந்த மாணவர்களை எம்.ஜ.ஆர். ரசிகர்கள் இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின், சோடா பாட்டில்கள் சகிதமாகப் புகுந்து தாக்கினர். விடுதியைச் சூறையாடினர்.

தொழிலாளிகள் மீது எம்.ஜி.ஆர். குண்டர் படையின் தாக்குதல்!

  • 1974-க்குப் பிறகு ஊதிய உயர்வே கண்டிராத பஞ்சாலைத் தொழிலாளர்கள் 77-78-ல் வேலை நிறுத்தத் தாக்கீது கொடுத்தபோது எம்.ஜி.ஆர். அரசு கண்டுகொள்ளவேயில்லை. வேலைநிறுத்தம் தொடங்கிய இரண்டாம் நாளே போராட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடுவதாக எம்.ஜி.ஆர். அரசு முடிவு செய்தது. இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலீசை ஏவித் தடியடிப் பிரயோகம் நடத்தியது; நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர் மீது பொய் வழக்குகள் போட்டது. பின்னர், தொழிலாளர்களுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் விலக்கிக் கொள்ளப் போவதாகத் திடீரென்று ‘சுதந்திர’ தினத்தன்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு செய்தார். ஆனால், போலீசார் எந்த வழக்கையும் விலக்கிக் கொள்ளவில்லை.தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று யார் போராடினாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்று மிரட்டினார் எம்.ஜி.ஆர். ஆனால், இந்திரா கைது செய்யப்பட்டதையொட்டி காங்கிரசு குண்டர்கள் வெடிகுண்டு வீசியும், பஸ்களைத் தாக்கியும் பலரைப் படுகொலை செய்தும் வெறியாட்டம் போட்டுக் கைதானவர்களை விடுதலை செய்தார். 1972-ல் தனிக்கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க. வினர் நடத்திய காலித்தனங்களுக்காக அவர்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட்ட எம்.ஜி.ஆர்., பஞ்சாலைத் தொழிலாளருக்கு எதிராகப் போடப்பட்ட பொய் வழக்குகளை விலக்கிக் கொள்ளவில்லை.

04-mgr-2

  • 1978 அக்டோபரில் பஸ் தொழிலாளர் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்தது. பஸ் தொழிலாளர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காணாது தன்னிச்சையாகக் குறைந்தபட்ச போனஸ் தருவதையே எம்.ஜி.ஆர். அரசு வழக்கமாகக் கொண்டிருப்பதை எதிர்த்து இரண்டே நாட்கள்தான் வேலைநிறுத்தம் செய்தனர். அதற்குள் ‘மினிமிசா’வையும் அவசர சட்டத்தையும் எம்.ஜி.ஆர். அரசு ஏவியது. 5000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கருங்காலிகளையும், போலீசையும், எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் வைத்து பஸ்கள் ஓட்டப்பட்டன. பஸ்களை நிறுத்துபவர்களைக் கண்டதும் சுட எம்.ஜி.ஆர். உத்திரவு போட்டார். வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல, அதை ஆதரிப்பவர்களையும், நிதி அளிப்பவர்களையும் கூட சிறையிலடைக்கும் சட்டம் கொண்டு வந்தார். “பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்கிற பெயரில் – எம்.ஜி.ஆரின் குண்டர்படை – அடையாள அட்டைகளும், வெள்ளைச் சட்டைகளும் அணிந்த தொண்டர்கள் என்கிற பெயரில் – பஸ் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளாக எம்.ஜி.ஆர் அரசு ஒருதலைப்பட்சமாக அறிவித்துத் தரும் குறைந்தபட்ச போனசுதான் கொடுக்கப்பட்டது.
  • பஸ் தொழிலாளர் போட்டத்தின் போது தீவிரமாக நடந்து கொண்டிருந்தன டி.வி.எஸ் – டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் போராட்டங்கள். ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் மீது நிர்வாகம் திணித்திருந்த கருங்காலி காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத் தலைமையைத் தூக்கியெறிந்து போலி கம்யூனிஸ்டு வி.பி. சிந்தன் தலைமையை சென்னை – பாடி டி.வி.எஸ். தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். மதுரையிலிருந்து குண்டர்படையை இறக்குமதி செய்து ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களைத் தாக்கியது நிர்வாகம்.தொழிலாளருக்குப் பாதுகாப்பு என்கிற பெயரில், பாடி – வில்லிவாக்கம் – அம்பத்தூர் தொழில் வட்டாரமெங்கும் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டன. டி.வி.எஸ். ஆலைக்குள் நிர்வாகத்தின் குண்டர் படை திரட்டப்பட்டது. நான்கு மாதக் கதவடைப்புக்குப் பிறகு, 350 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்த பிறகு நிர்வாகத்திடம் மன்னிப்புக் கோரும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர். நிர்வாகத்தின் குண்டர் படையும், போலீசும் தொழிலாளர்களை மிரட்டி அரசு பஸ்களில் கடத்திப் போய் டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தியை நடத்தினர்.டி.வி.எஸ். ஆலைக்கு வெளியே போடப்பட்ட தொழிலாளர் பந்தல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போராடும் தொழிலாளர்களை குண்டர்கள் தாக்கி அரிவாளால் வெட்டினார்கள். போலீசார் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். டி.வி.எஸ். பாணியைத் தொடர்வது என்று மற்ற முதலாளிகள் தீர்மானிக்கவே, அம்பத்தூர் டி.ஐ. சைக்கிள்ஸ் ஆலையில் தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், கதவடைப்பும் தொடங்கியது. சென்னை நகரத் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்தனர்.04-mgr-3மதுரை மாநகரத் தேர்தலுக்குப் பிறகு டி.வி.எஸ்., டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் பிரச்சிைனையைத் தீர்க்காமல் அவர்களை ஒடுக்குவதில் இறங்கியது எம்.ஜி.ஆர். அரசு. 1978 அக்டோபர் 16-ல் மாநில மற்றும் மத்திய போலீசை ஏவி தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி அமைதியாக மறியல் செய்த தொழிலாளர்கள் மீது பாய்ந்தது. ஆத்திரமுற்று வேலை நிறுத்தத்தில் இறங்கி வெளியேற முயன்ற “டன்லப்” தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. “டன்லப்” தொழிற்சங்க அலுவலகத்திலிருந்த குசேலர், கோபு, சுப்பு ஆகிய தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து கிரிமினல் வழக்குகள் போட்டது.போராட்டத்தை உடைக்கும் எம்.ஜி.ஆர்.- டி.வி.எஸ். முதலாளியின் அராஜக வேலைகளுக்கு எதிராக போலி கம்யூனிஸ்டு சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் அரிபட் மற்றும் இருவர் உயர் நீதிமன்றத்தருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஐந்தாம் நாள் “வலது” கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்கள் கோபு, சுந்தரம் தலைமையில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க கோட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர் குடும்பத்தினர். எம்.ஜி.ஆர். அரசின் உத்தரவுப்படி, அவர்களை வழிமறித்து கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தியது மத்திய ரிசர்வ் போலீஸ்படை. பெண்களும், குழந்தைகளும், போலி கம்யூனிஸ்டுத் தலைவர்களும் படுகாயமுற்றனர். அதேசமயம், உயர்நீதிமன்றத்தருகே உண்ணாவிரதமிருந்தவர்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்படை தாக்கியது. 45 நிமிடம் வெறியாட்டம் போட்டு, போலீஸ் நிலையத்துக்கு அருகாமையில் இருந்த உண்ணாவிரதப் பந்தலைக் கொளுத்தியது; தொழிலாளர்களும் தலைவர்களும் சிதறி ஓடினர்.எம்.ஜி.ஆர். அரசின் இந்தக் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து 1978 அக்.23-ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு நடத்துவதாக காங்கிரசு மற்றும் ஜனதா தவிர அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தன. கடையடைப்பை முறியடிப்பதாக எம்.ஜி.ஆர் யுத்தப் பிரகடனம் செய்தார். 10 நாட்களுக்குக் கல்லூரிகள் மூடப்பட்டு வேறு மாநில மற்றும் மத்திய போலீசுப் படைகள் குவிக்கப்பட்டன. போராட்டக்காரர்களில் 10,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
    எம்.ஜி.ஆர் அடிமைகள்
    சுயமரியாதை இல்லாத தோட்டத்து அடிமைகள்!

    எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவியாபாரிகள், கைத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் கடை அடைப்பை முறியடிக்கும்படி பிரச்சாரம் செய்யும் விளம்பரத்தைப் பத்திரிகைகள், வானொலி மூலம் எம்.ஜி.ஆர். நடத்தினார். மன்னார்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கு 22 பேர் காயமடைந்தனர். பல நகரங்களிலும் அ.தி.மு.க. குண்டர்படை வெறியாட்டம் போட்டது. ஆனாலும், மாநிலந்தழுவிய கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.

  • இனி “டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ்” பாணியிலே தொழிலாளர்களை ஒடுக்குவது என்று முதலாளிகளும் எம்.ஜி.ஆர். அரசும் தீர்மானித்தனர். ஆளும் கட்சித் தலைமையிலான “அல்ட்ரா மரைன்” ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் கூட பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. அதேகதிதான் போராடிய கோவை லட்சுமி மிஷின் டூல்ஸ், மேட்டூர் மில்ஸ், மின் வாரியத் தொழிலாளர்களுக்கும் நேர்ந்தது. அதன் பிறகு குறிப்படத் தகுந்த அளவு உறுதியாக நடந்தது திருச்சி “சிம்கோ மீட்டர்ஸ்” ஆலைத் தொழிலாளர் போராட்டம்தான். இங்கும் கருங்காலி ஐ.என்.டி.யு.சி.யின் தலைமையும், துரோக ஒப்பந்தமும் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து சி.ஐ.டி.யு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர்.டி.வி.எஸ். – டி.ஐ. சைக்கிள்ஸ் போராட்டங்களை முறியடித்த மமதை, அமெரிக்காவில் தனக்கு “ராஜ உபசாரம்” செய்த “சிம்கோ மீட்டர்ஸ்” முதலாளியிடம் விசுவாசம் காரணமாக போலீசையும், அ.தி.மு.க. வெண் சட்டைப் படையையும் “சிம்கோ” தொழிலாளர் மீது ஏவினார். தொழிலாளர்கள் மீது மட்டுமின்றி, சங்கத்தலைவர் உமாநாத் வீடும் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டது. திருச்சி நகர மக்கள் பலர் தொழிலாளர் பக்கம் நின்று ஒத்துழைத்தனர்.
    14 விவசாயிகள் சுட்டுக்கொலை!
  • மீனவர் துப்பாக்கிச் சூடு
    பிணந்தின்னிகள் : மெரினா மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

    தொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பாசிச பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது. கடையடைப்பை முறியடிக்கும் வெறியுடன் போலீசைக் குவித்து, பஸ்களை ஓட்ட முயன்றது, எம்.ஜி.ஆர். அரசு. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு 14 விவசாயிகள் பலியாயினர். நெல்லை – சங்கரன் கோவில் அருகே ஒரு துணை போலீஸ் அதிகாரி விவசாயப் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதால், ஆத்திரமுற்று விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் பிறகு எம்.ஜி.ஆரின் போலீசு, விவசாயிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந்தது. சென்னை – திருவள்ளூர் அருகே வள்ளியூர் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்து கிழவிகள், சிறுமிகள் உட்பட பெண்களை வெளியே இழுத்துப் போட்டு மிருகத்தனமாகத் தாக்கியது. பெண்களை லாரிகளில் ஏற்றி, உணவு, தண்ணீரின்றி கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் நிறுத்தித் துன்புறுத்தி சென்னை மத்திய சிறையில் அடைத்தது. தாக்குண்ட பெண்களைத் தனது பெண் அமைச்சருடன் போய் பார்த்து ஆறுதல் சொல்லி ஏய்க்க முயன்றார், எம்.ஜி.ஆர். போலீசு அவர்களைக் கற்பழிக்காது நல்ல முறையில் நடந்து கொண்டதற்குப் பாராட்டினார். பெண்களை முன்னிறுத்தும் கோழைகள் என்று அவதூறு பேசி, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது கொலைக்குற்ற வழக்குப் போட்டார். இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்குவதாக மிரட்டினார்.

அரசு ஊழியர்களைத் தாக்கிய அ.தி.மு.க. குண்டர்கள்!

  • தனது பாசிச ஒடுக்குமுறைகள் மூலம் இரத்த ருசி பார்த்த எம்.ஜி.ஆர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும் பாய்ந்தார். ஊதிய உயர்வு, ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் பிறகோரிக்கைகளுக்காக 1978 மார்ச்சில் மாநில அரசு ஊழியர்கள் போராடியபோது தனது கட்சி தலைமையில் போட்டிக் கருங்காலி சங்கத்தை தொடங்கினார். 30 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது. “விவசாயப் பெண்களுக்கு மானத்தைக் காத்துக் கொள்ள துணி கூட இல்லை, உங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமா? பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று எச்சரித்தார். பொதுமக்கள் என்கிற போர்வையில் அ.தி.மு.க. குண்டர்களை ஏவி அரசு ஊழியர்களைத் தாக்க முயன்றார். ஆயுதங்களுடன் வந்த குண்டர்களைப் பிடித்துக் கொடுத்த போதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.வேலை நிறுத்தத்தை எதிர்க்கும்படி அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு கோரிக்கை விட்டார், எம்.ஜி.ஆர். கைதுகள், வேலைநீக்கங்கள், தற்காலிக ஊழியர்கள் வேலைநீக்கம் – என பழிவாங்குவதில் ஈடுபட்டார். வேலைநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை எடுக்கப் போவதாகவும் அறிவிப்புகள் கொடுத்தார். அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டு உருவாகி உறுதிப்பட்டவுடன் சற்றுப் பின் வாங்கிக் கொண்டு, சில்லரைச் சலுகைகளை அறிவித்தார். போராட்டத்துக்குத் தலைமையேற்ற சிவ.இளங்கோ தலைமையிலான கும்பலை விலைக்கு வாங்கினார்.
  • எம்.ஜி.ஆர் : அமைச்சர்கள் பதவி பறிப்பு
    அமைச்சர்கள் பதவி பறிப்பு : இதற்கும் ஜெ.யின் முன்னோடி எம்.ஜி.ஆரே!

    பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக யாரைப் பயன்படுத்தினாரோ, அந்தப் போலீசாருக்கு எதிராகவே எம்.ஜி.ஆரின் தாக்குதல் திரும்பியது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் உருவானதைத் தொடர்ந்து தமிழகப் போலீசாரும் நைனார்தாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அதைத் தடை செய்துவிட்டு தானே தனது கருங்காலிகளைக் கொண்ட மூன்று சங்கங்களை அமைத்தார். அதன் கீழ்வர மறுத்த போலீசார் போராட்டத்தில் குதித்தனர். மத்திய ரிசர்வ் படையை வைத்து போராடிய போலீசாரை வேட்டையாடினார் எம்.ஜி.ஆர். போலீஸ் குடியிருப்புகளில் புகுந்து பெண்கள், குழந்தைகளைத் தாக்கினார். சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர். அவர்களை வேலைநீக்கம் செய்தார் எம்.ஜி.ஆர்., சங்கம் வைக்கும் முயற்சியை முறியடித்தார்.போலீசுக்கும், விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது, ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் ஏராளமான தேர்தல் வாக்குறுதி வழங்கினார், எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு நிலமும், கல்லுடைப்போர், மூட்டை சுமப்போருக்கெல்லாம் மாதச் சம்பளமும், வீட்டுக்கொருவருக்கு வேலை, இல்லையானால் 100 ரூபாய் ஈட்டுத் தொகை, ரேசனில் போடும் 5 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ இலவசம், ஏழைகள் – முதியோருக்கு ஓய்வூதியம், வேலையில்லா பட்டதாரிகள், ஆசிரியருக்கு நிவாரண நிதி, தாலிக்குத் தங்கம், வேலையில்லாத நாட்களில் கூலி விவசாயிகளுக்கு ஒரு ரூபாயும் ஒருகிலோ அரிசியும் என்று எவ்வளவோ வாக்குறுதிகள் – அவ்வளவும் காற்றில் பறக்க விடப்பட்டன.

  • பெரியாரின் பகுத்தறிவு – சமூக சீர்திருத்த இயக்கங்களைத் தொடர்ந்து சற்று வரம்புக்குள் இருந்த சாதி, மதவெறியர்கள், எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு புதிய நம்பிக்கை – வேகத்துடன் சாதி-மதக் கலவரங்களில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில் தொடர்ந்து ஒருவார காலத்துக்கு விழுப்புரம் நகரில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்டையாடப்பட்டனர். 12 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குடிசைகள் கொளுத்தப்பட்டன. மண்டைக்காடு, புளியங்குடி, மீனாட்சிபுரம், பேர்ணாம்பட்டு, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் சாதி-மதக் கலவரங்கள் என்கிற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களும் தாக்கப்பட்டனர். இந்து முன்னணியின் பெயரில், எம்.ஜி.ஆர். கட்சியினரின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.பண்ணையார்களும், அ.தி.மு.க. காரர்களும், முதலாளிகளும், போலீசாரும் பல கொலைகள் புரிந்தனர். தஞ்சை விவசாய சங்கத் தலைவர் வெங்கடாச்சலம், பண்ணையார்களால் கொல்லப்பட்டார். நாகை எம்.பி. முருகையன் அ.தி.மு.க. காரனால் கொல்லப்பட்டார். மதுராந்தகம் அ.தி.மு.க. அலுவலகத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டார். கோயில் நகை கொள்ளைகளில் அ.தி.மு.க.வினர் சம்பந்தப்படிருந்தனர்.திருச்செந்தூர் கோவிலில் நகை சரிபார்க்கும் அதிகாரி கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கு எம்.ஜி.ஆர் அரசு முயலவேயில்லை; காரணம் தெரிந்ததே!
  • மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதறத் தொடங்கவிட்டது, எம்.ஜி.ஆர் அரசு. போலீஸ் “லாக்-அப்” சித்திரவதை கொலையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகப் போலீசு, சென்னை – வியாசர்பாடியில் சந்தேகத்தின் பேரில் இழுத்துப்போன ஒரு இளைஞரை அடித்துக் கொன்றது. நியாயம் கேட்கத் திரண்ட பகுதி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரைக் கொன்றது.

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! நக்சல்பாரிகள் நரவேட்டை!

  • உலக வங்கி உத்தரவின் கீழ் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக முடிவு செய்து பெரும் போலீஸ் படையுடன் போய் இரவோடு இரவாக மீனவர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்காக, ஆத்திரத்தைத் தூண்டி துப்பாக்கி சூடு நடத்தி, பலரைக் கொன்றது; மீனவர் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடியது.பஸ் வசதி கோரிப் போராடிய மக்களைக்கூட விட்டு வைக்கவில்லை. பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மூவரைக் கொன்றது. பெரும் போலீஸ் படை கிராமத்துக்குள் புகுந்து கண்மண் தெரியாமல் தாக்கியது. மிரண்டு போன மக்கள் தப்பி ஓடி, காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
  • 04-mgr-4சாதாரண மக்கள் மீது இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாசிச எம்.ஜி.ஆர். கம்யூனிச புரட்சியாளர்களை விட்டு வைப்பாரா? வட ஆற்காடு, தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கம்யூனிச புரட்சியாளர்கள் 21 பேரை மோகன்தாஸ் – தேவாரம் போலீஸ் கும்பலை ஏவி படுகொலை செய்துவிட்டு, “நக்சலைட்டுகளுடன் போலீசு மோதல்” என்று கதை கட்டினார். நக்சலைட்டுகளைப் பூண்டோடு ஒழிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். சபதமேற்றார். போலீசின் படுகொலைகளை விசாரிக்கப்போன மக்கள் உரிமை அமைப்பினரையும், பத்திரிக்கையாளரையும் கூட போலீசு தாக்கியது. மாநிலம் முழுவதும் பலர் மீது தேச விரோதப் பொய் வழக்குப் போட்டது.வரம்பில்லாத இலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் மூழ்கிக் கிடந்த எம்.ஜி.ஆர். அவற்றை அம்பலப்படுத்திக் குற்றஞ்சாட்டுவோரையே பழிவாங்கும் சட்டம் கொண்டு வந்தார். அதன்படி குற்றஞ்சாட்டுவோர்தான் அவற்றை நிரூபிக்க வேண்டும்; தவறினால், அவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்று மிரட்டினார். கடும் எதிர்ப்பிற்குப் பிறகு, அதை விலக்கிக்கொண்டார்.அரசை விமர்சிக்கும் “அப்பாவி” பத்திரிக்கைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆபாசத் தடைச் சட்டம், பத்திரிக்கைத் தடைச் சட்டம் என்கிற பெயரில் சுவரொட்டி, கருத்துப் படம், பாடுவது, பேசுவது, எழுதுவது கூட கிரிமினல் குற்றம் என்கிற கொடிய அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார். குதிரைகளை விரட்டுவது, பட்டம் விடுவது, வாகனங்கள் ஓசை எழுப்புவது, வாகனங்களை சாலைகளில் நிறுத்துவது, பரீட்சைகளில் காப்பி அடிப்பது ஆகியவைகூட கிரிமினல் குற்றங்கள் என்று சட்டம் கொண்டு வந்தது – ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் அரசின் சாதனைகள்!
  • அ.தி.மு.க. ஆரம்பித்ததிலிருந்து தாய்மார்களுக்காக முதலை கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர், சாராயம், லஞ்ச ஊழலின் பரம எதிரி போல நடித்தார். ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டத்தைக் கடுமையாக்கினார். இது கள்ளச் சாராய பெரும் புள்ளிகளுக்கும், போலீசாருக்கும் கொள்ளையடிப்பதற்கு மிகவும் வசதியாகிப் போனது. கள்ளச் சாராயத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு பணம் கட்டி உரிமை பெற்றவர்களுக்கு மட்டும் சாராயம் குடிக்க அனுமதி என்றார். அப்புறம், படிப்படியாக கள்ளு – சாராயக் கடைகளை முழுவதுமாகத் திறந்து விட்டார். சாராயத் தொழிற்சாலை வைக்கும் உரிமை வழங்கியதில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி அம்பலப்பட்டு போனார்.மதம் ஏழை – எளிய மக்களை ஏய்க்கும் போதையாக இருப்பதைப் போலவே, சினிமா ஒரு கவர்ச்சிப் போதையைத் தருவதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அதைக் கொண்டு கிராமப்புற விவசாயிகளையும், நகர்ப்புற உதிரிப் பாட்டாளிகளையும் ஏய்த்தார். போலி கம்யூனிஸ்டுகளின் கூட்டு, பிற பகுதி உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற உதவியது. சத்துணவு உட்பட ஏழைகள் மீதான அவரது கரிசனையும் தான தருமங்களும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலர்களுக்கே உரித்தான அடிமைகளின் பாலான பரிவுதான்.அவசரநிலை பாசிச ஆட்சியை ஆதரித்த எம்.ஜி.ஆர். அதன் கொடுமைகளை விசாரித்த ஷா, அனந்த நாராயணன் மற்றும் இஸ்மாயில் கமிசன் அறிக்கைககளைக் குப்பைத் தொட்டியில் வீசினார். சென்னை மத்திய சிறை சித்திரவதைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட பொன்.பரமகுரு, வித்யாசாகர் உள்ளிட்ட போலீசு குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வளித்தார். ஜனதா ஆட்சியானாலும், அது கொண்டு வந்த தொழிலாளர் விரோத தொழிலுறவு மசோதா போன்றவற்றை ஆதரித்தார். தாய்க்குலத்தைப் பற்றி நீலிக்கண்ணீர் வடித்து வந்த எம்.ஜி.ஆர். ராஜீவ் கொண்டுவந்த பிற்போக்குத்தனமான முஸ்லீம் மண முறிவு (ஷாரியத்) சட்டத்தை ஆதரித்தார்.

“ஐயா, தருமவானே, நீங்களாகப் பார்த்து ஏதாவது தான தர்மம் கொடுங்கள்” என்று கையேந்தி நிற்பவர்களுக்கு பரோபகாரியாகவும், “இது எங்கள் உரிமை” என்று போராடுபவர்களுக்குப் பரம எதிரியான பாசிஸ்டாகவும் விளங்கியவரே எம்.ஜி.ஆர்.!

– ஆர்.கே.
(புதிய ஜனநாயகம், 1-5, ஜனவரி 1988)
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

டிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

1

டிசம்பர் 25 – கீழ்வெண்மணி நினைவு தினத்தில் சூளுரைப்போம்!

வெண்மணி தியாகிகள் தினம்

சாதி தீண்டாமையை சுட்டுப் பொசுக்குவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம் !

  • விடிந்த பின்னர் தான் ஏர் கட்ட வேண்டும் !
  • சூரிய உதயத்திற்கு பின்னர் தான் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் !
  • கரை ஏறித்தான் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும்!
  • வேலைக்கேற்ற கூலி வேண்டும் !
  • அனைவரும் விவசாய சங்கத்தில் சேரவேண்டும் !

ராமையாவின் குடிசைவற்றைப் படித்தால், இவை எல்லாம் ஒரு 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பண்ணையடிமைக்கால கூலி-ஏழை விவசாயிகள் எழுப்பிய கோரிக்கை முழக்கங்களாகத் தான் இருக்குமென்றே கருதத்தோன்றும். 1970-ம் ஆண்டு வரையிலும் இப்படி கோரிக்கை வைக்கின்ற அவல நிலையில்தான் தஞ்சை மாவட்ட விவசாயிகள் இருந்தனர்.

இப்படி கொத்தடிமைகளைப் போல வாழ்ந்த சூழலில் தான் ரத்தத்தை உறைய வைக்கின்ற அந்த கொடூரம் நடந்தது.

1968-ம் வருடம், டிசம்பர் 25! தமிழக வரலாற்றில் கருப்பு நாள் !

கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட (தலித்) சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.

20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது.

இதைச் செய்த கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது , சென்னை உயர் (அ)நீதிமன்றம். ‘காரோட்டுகின்ற கைகள் கொலைசெய்யாது; பணக்காரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்’ என வியாக்கியானம் சொன்னது, நீதிமன்றம்.

நோக்கியா
நோக்கியா செல்போன் கம்பெனி மூடப்பட்ட போது வேலை பறிக்கப்பட்ட 45,000 தொழிலாளர்களில் யார் எந்த சாதி என்பது தெரியாது.

பொசுக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் செய்த ‘குற்றம்’ என்ன?

  • தலித்துகளாக் பிறந்தது முதல் குற்றம்.
  • கூலி உயர்வு கேட்டும், பண்ணைக் கொடுமைகளுக்கெதிராகவும் போராடத் துணிந்தது இரண்டாவது குற்றம்.
  • சாதி பேதங்களைக் கடந்து வர்க்கக் கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த செங்கொடி இயக்கத்தில் பிணைத்துக் கொண்டது எல்லாவற்றையும் விட பெருங்குற்றம். செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டதால் சுயமரியாதையும், உரிமை உணர்வும் பெற்றார்கள். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்தார்கள்.

வெண்மணியிலிருந்து இந்தப் படுகொலைகள் துவங்கவில்லை. வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டு வருவதை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் பெருமை பேசுகின்ற தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் சாதி-தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது.

“என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.

எத்தனை இழிவுகள்! எத்தனைக் கொடுமைகள் !

அருந்ததி ராய்
அருந்ததி ராய் : தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;

புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் இந்திய இழிவு என்ற கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.

தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;

ஒவ்வொரு நாளும், நான்கு தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள்;

ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறாரக்ள், 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.

2012-இல் மட்டும் அதாவது தில்லியில் 23 அகவை நிரம்பிய பெண் கூட்டமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டில் மட்டும், 1574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். (தலித்துகளுக்கு எதிரான கற்பழிப்புகளில் அல்லது ஏனைய குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பது பட்டறிவு), 651 தலித்துகள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கணக்கில் அடங்குபவை கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் மட்டுமே.  உடையவிழ்த்து அம்மண ஊர்வலம் நடத்துதல், மலந்தின்னச் செய்தல், நில அபகரிப்பு, சமூக ஒதுக்கல், குடிநீர் கிடைக்கவிடாது தடுத்தல் ஆகிய்வை அடங்குவதில்லை.

மசாபி தலித் சீக்கியர் ஒருவர் தன் மகளைக் கூட்டாக கற்பழித்தோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் துணிந்ததற்காக 2005ல் அவரது இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்ப்ட்ட செய்தி இந்த புள்ளிவிவரங்களில் அடங்கவில்லை என்கிறார் பஞ்சாபை சேர்ந்த பந்த் சிங்.

கவுரவக் கொலைகள் என்கிற கொடூரங்கள் !

காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் சினிமாவில் கூட செல்லுபடியாகாத வசனங்களாகி விட்டன. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டும் போதாது. காதல் அரும்புவதற்கு முன்பாகவே இருவரும் ஒரே சாதியா என்பதை தெரிந்து கொண்டு தான் காதலிக்க துவங்கவேண்டும். இல்லை என்றால் தருமபுரி திவ்யா-இளவரசனுக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும். நாடெங்கும் அரங்கேற்றப்படுகின்ற கவுரவக் கொலைகளே இதற்கு சாட்சி.

‘ஜீன்ஸ்-கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு எங்கள் வீட்டுப் பெண்களை மயக்குகின்றனர்’ என்று தலித் இளைஞர்களை சாடுவதுடன், அழகான உடையைக் கண்டு மயங்குவதாக தன் சாதிப் பெண்களையே கொச்சைப்படுத்தி வருகிறார், ராமதாசு.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி : ‘கோடிக்கணக்கில் பணம் பறிப்பதற்காகவே தலித் இளைஞர்கள் தங்கள் வன்னிய சாதி பெண்களை காதலிக்கின்றனர்’

அப்பனை மிஞ்சிவிட்டார், அன்புமணி. ‘கோடிக்கணக்கில் பணம் பறிப்பதற்காகவே தலித் இளைஞர்கள் தங்கள் வன்னிய சாதி பெண்களை காதலிக்கின்றனர்’ என்ற பொய்மூட்டையை அவிழ்த்துவிடுகிறார். உண்மையில் திவ்யா குடும்பத்தைவிட இளவரசன் குடும்பம் ஒப்பீட்டளவில் வசதியானதுதான். ஒருவேளை அன்புமணி தன்னைப் போன்ற கோடீஸ்வர ‘பாட்டாளி சொந்தங்களை’ நினைத்து கவலைப்படுகிறாரோ?

கொலைகளுக்கு கவுரவக் கொலைகள் என்று பெயர் சூட்டி அவற்றை ‘புனிதப்படுத்தியவை’ நீதிமன்றங்கள். வேறு சாதி இளைஞனைக் காதலித்ததற்காகவும், திருமணம் செய்து கொண்டதற்காகவும் பல்லாயிரம் இளம்பெண்கள் தங்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகள் கடந்த 5 ஆண்டுகளில் தீவிரம் அடைந்துள்ளன. நவீனம் வளர வளர சாதி-தீண்டாமையும் நவீனத்தை அடைந்திருக்கிறது.

பட்டினியையும் தாண்டி நிற்கிறது, சாதிவெறி!

சாதித் திமிர் உழைக்கும் மக்களை எவ்வாறு பிளவுபடுத்தி வைத்திருக்கிறது என்பதற்கு டிசம்பர் முதல் வாரத்தில் மைசூர் அருகில் நடந்த சம்பவம் நல்ல உதாரணமாக இருக்கிறது. மைசூருக்கு அருகில் உள்ள குப்பேகலா என்கிற கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று உள்ளது.

இதில் படிக்கும் 138 ‘உயர்’ சாதி மாணவர்கள் வறுமை காரணமாக பள்ளியிலேயே அரசாங்கம் போடுகின்ற மதிய உணவை சாப்பிட்டு வந்தனர். சமீபத்தில் மதிய உணவு சமைப்பதற்கு ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த ஊழியர் தலித் என்பதால், அவர் சமைத்த உணவை சாப்பிடாமல் புறக்கணித்தன்ர், ‘உயர்’ சாதி மாணவர்கள்.

இதே போன்று பல சம்பவங்கள் சாதி எதிர்ப்பு போராட்டங்களைக் கண்ட தமிழகத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வயிற்றுப் பசியைவிட சாதித்திமிர் முக்கியமாகி இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இவற்றை தூண்டியும், வளர்த்தும் வருவது யார்?

யாருக்கு வேண்டும் சாதிவெறி?

கருப்பையா மூப்பனார்
கருப்பையா மூப்பனார் தான் இந்த கமிட்டிக்கு பொறுப்பேற்று கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கொலையாளிகள் விடுதலை பெறுவதற்கு பாடுபட்டார்.

ஆலை முதலாளிகளாக, தனியார் பள்ளி-கல்வி அதிபர்களாக, திரையரங்கு-திருமண மண்டபம், பேருந்துமுதலாளிகளாக, கனிம வளக்கொள்ளையர்களாக, ஃபைனான்சு தொழில் ஈட்டிகளாக உலாவரும் தொழிலதிபர்கள், பெரும் பண்ணையார்கள், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் ஆகியோர் தான். தன்னுடைய சாதி மக்களைக் கூட்டம் சேர்த்துக் கொண்டு ஓட்டுப் பொறுக்கவும், கொள்ளையடிக்கவும் கேந்திரமான பதவி நாற்காலிகளைக் கைப்பற்றவும், சுருட்டியதை பாதுகாத்துக் கொள்ளவும், தமது தொழிலுக்கு லைசென்ஸ் பெறவும், கல்லூரிகள் துவங்கவும் சாதி வெறியைத் தூண்டி விட்டு ஆதாயம் அடைகின்றனர்.

வெண்மணிப் படுகொலையை முன்னின்று நடத்திய கோபாலகிருஷ்ணனை விடுவிக்கின்ற வழக்கை தஞ்சை மாவட்டத்தில் இருந்த பண்னையார்கள் தான் நடத்தினர். இதற்காக அவர்கள் ஒரு கமிட்டியை அமைத்தாரகள். தஞ்சையின் மிகப்பெரிய பண்ணையாரும், பின்னாளில் த.மா.கா என்கிற கட்சியை நடத்தியவருமான கருப்பையா மூப்பனார் தான் இந்த கமிட்டிக்கு பொறுப்பேற்று கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கொலையாளிகள் விடுதலை பெறுவதற்கு பாடுபட்டார்.

வெண்மணி மக்களின் வழக்கை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தன் வசம் எடுத்துக்கொண்டது. இந்தக் கட்சி தான் பின்னாளில் மூப்பனாருடன் அரசியல் கூட்டணி வைத்துக்கொண்டது. தலித் மக்களின் விடிவெள்ளி எனவும், சேரிப்புயல் எனவும் அடைமொழிகளை அடுக்கிக் கொள்கின்ற திருமாவளவன் மூப்பனாருடன் கைகோர்த்துக் கொண்டு ஓட்டு பொறுக்கியதையும் நாம் கண்டிருக்கிறோம்.

பாட்டாளிச் சொந்தமே, உறவே, ரத்தமே – எனத் தேனொழுக நைச்சியம் பேசும் சாதியத் தலைவர்களில்

  • பைனான்சு தொழில் நடத்துபவன் தன் சாதிக்காரன் என்பதற்காக ஒரு பைசா வட்டியைக்கூட குறைக்கமாட்டான்.
  • தொழிற்சாலை முதலாளி தன் சாதிக்காரன் என்பதற்காக தொழிற்சங்க உரிமையையும், சம்பளத்தையும், சலுகைகளையும் வாரி வழங்க மாட்டான்.
  • பேருந்து முதலாளி தன் சாதிக்காரன் என்பதற்காக கட்டணச் சலுகை செய்யமாட்டான்.
  • தனியார் கல்லூரி கொள்ளையன் தன் சாதிக்காரன் என்பதற்காக நன்கொடையைக் கூட தள்ளுபடி செய்யமாட்டான்.
  • பண்ணையார் – முதலாளி – பணக்காரன் நிலையிலுள்ள எவனும் தன் சொந்த சாதியிலுள்ள கூலி ஏழைக் குடும்பங்களில் சமபந்தம் செய்து கொள்ள மாட்டான்; சமமாகக் கூட நடத்தமாட்டான்.

– இவை தான் உண்மை எனில் சாதியின் தேவை தான் என்ன?

சாதியை பொசுக்கு! வர்க்க உணர்வை உயர்த்து!

மீத்தேன் வாயு
பொன் விளையும் தஞ்சை பூமிக்கடியில் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சுவதால் சோற்றுக்குக் கூட பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கையேந்த வேன்டிய நிலை ஏற்படும்.

சாதியம் உழைக்கும் மக்கள்து ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கைகளோ நம்முடைய உயிர் வாழும் உரிமையைக்கூட பறித்து வருகின்றன.

  • நோக்கியா செல்போன் கம்பெனி மூடப்பட்ட போது வேலை பறிக்கப்பட்ட 45,000 தொழிலாளர்களில் யார் எந்த சாதி என்பது தெரியாது.
  • பொன் விளையும் தஞ்சை பூமிக்கடியில் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சுவதால் சோற்றுக்குக் கூட பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கையேந்த வேன்டிய நிலை ஏற்படும்போது எந்த சாதிக்கு பிரச்சனை என்பதை பிரித்து பார்க்க முடியாது.

விலைவாசி உயர்வும், வேலைபறிப்பும், வறுமையும், தற்கொலையும் சாதி பார்த்து வருவதில்லை.

தினந்தோறும் பிரச்சனையில் சிக்கி அல்லல்படுகின்ற நிலையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்து வருகின்ற உதவாக்கரை சாதிச் சனியனை தூக்கி எறிய வேண்டாமா? விடியலைக் காண உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வோடு அனைவரும் போராட்டக் களத்தில் ஒன்றிணைய வேண்டாமா?

யாரால் இந்த இழிவை ஒழிக்க முடியும்?

புரட்சிகரமான சமூக மாற்றத்தை லட்சியமாகக் கொண்ட புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே வர்க்கப் போராட்டத்தையும், சாதி ஆதிக்கத்திற்கெதிரான சாதி ஒழிப்புப் போராட்டங்களையும் ஒன்றிணைக்க முடியும். ரயில் தண்டவாளத்தின் இருபக்கத் தடயங்களைப் போல வர்க்க போராட்டத்தையும், சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் இணைத்துச் செய்ய வேண்டிய பாரிய கடமை உழைக்கும் மக்கள் முன்னே காத்துக் கிடக்கிறது.

நாட்டை மறுகாலனியாக்கிட தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்கிற பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்கி வருகின்ற ஆளும் வர்க்கம், பாசிச அடக்குமுறைகளை ஏவிவிட்டும் லாபவெறி பிடித்தலையும் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு தரகுமுதலாளிகள், பண்ணையார்கள், அவர்களின் கைத்தடிகளான ஓட்டுக்கட்சிகள் பாசிச அடக்குமுறைகளை ஏவிவிட்டு மறுகாலனியாக்க சேவை செய்கின்ற பார்ப்பன இந்துவெறி பாசிஸ்டுகள் – ஆதிக்க சாதி வெறியர்கள், இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் போலீஸ்-இராணுவம்-நீதிபதிகள்-ஐ.ஏ.ஸ் – ஐ.பி.எஸ்- இவர்கள் எல்லோரும் தான் நமது எதிரிகள்.

இந்த பாரிய கடமைகளை நிறைவேற்றி, நமக்கான விடியலைப் படைக்க சாதி-மத பேதங்களைத் தூக்கி எறிவோம்! பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்! புதிய மாற்றத்துக்கான களம் காணுவோம்! சாதி இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம். இதுவே டிசம்பர் 25 கீழ்வெண்மணித் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.

– எழில்மாறன்
______________________________
புதிய தொழிலாளி, டிசம்பர் 2014
(படங்கள் இணையத்திலிருந்து)
______________________________

venmani-poster
உழைக்கும் வர்க்கமே!

  • கூலி உயர்வுக்காக அன்று போராடிய உரிமைக் குரல்களைத் தீயிலிட்டு எரித்தது நிலப்பிரபுத்துவ-சாதி ஆதிக்க வெறியாட்டம்
  • ஏகாதிபத்திய சுரண்டலுக்காக குறைந்த பட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கூடத் தீயிலிட்டு எரிக்கிறது மோடி அரசின் முதலாளித்துவ பயங்கரவாதம்!
  • சாதிவெறியும், மதவெறியும் அரசாள்கிறது!
    வெண்மணித் தீயின் கனலை விசிறியெழச் செய்வோம்!
    ஏகாதிபத்திய – நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்குத் தீ வைப்போம்! வாரீர்!!

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்

கனிம வளக் கொள்ளையில் கவிழும் நீதிமன்றங்கள்!

2
கிரானைட்-ஊழல்

செவ்வாய்க் கிழமை (22-12-2014) அன்று அரசு கணக்கின்படி ரூ 16,000 கோடி கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி நிறுவனம் மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு வழங்கப்பட்டதல்ல; வாங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த 2012-ல் சகாயம் அளித்த அறிக்கையின்படி 90 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பி.ஆர்.பி. உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கிரானைட்-ஊழல்
கோப்புப் படம்

84 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து, குவாரிகளை இயக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றம் சென்ற பி.ஆர்.பி. நிறுவனத்தின் மனுக்கள் கடந்த 13.12.2013-ல் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

அதன்பின் கடந்த ஆகஸ்ட், 2014-ல் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சகாயத்தை நீதிமன்ற ஆணையராக நியமித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சூழலில்தான் குவாரிகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிரானைட் கொள்ளை நீதிமன்ற உத்தரவுகள் – பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அனுமதித்த நீதித்துறைக்கு சில கேள்விகள்!

1. உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியான வழக்கின் கோரிக்கையை,வேறு வார்த்தைகளில் கேட்டால் அனுமதிக்க முடியுமா?

2. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கிரானைட் பிரச்சனையை கையாளுகையில் மதுரையில் ஒரு நீதிபதி உத்தரவு பிறப்பிக்க முடியுமா?

3. 2012-ல் போடப்பட்ட விசாரணை அதிகாரியின் உத்தரவை டிசம்பர், 2014-ல் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

4. இன்றோடு (23.12.2014) நீதிமன்றம் முடிய உள்ள சூழலில், அட்மிசன் வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் நிலையில் பி.ஆர்.பி வழக்கை அவசரமாக விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன?

5. அரசு வழக்கறிஞர், “இவ்வழக்கில் A.G ஆஜராக உள்ளார், அரசு செயலர் அனைத்து மாவட்டங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார், ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் கையில் வந்து விட்டது. சரிபார்த்து தாக்கல் செய்கிறேன்” எனச் சொல்லி மன்றாடி ஒரு வாய்தா கேட்டபோதும் நீதிபதி மறுத்ததேன்?

6. “INTERIM PRAYER-ம், MAIN PRAYER-ம் ஒன்றுதான் அடுத்த வாரம் போடுங்கள்” என்ற அரசு வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்கப்படாதது ஏன்?

7. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் IMPLEAD PETITION அனுமதிக்கப்படாதது ஏன்?

8. பி.ஆர்.பி மனுவில் மதுரை தவிர வேறு எந்த மாவட்டங்களில் குவாரி நடத்தப்படுகிறது, எங்கு குவாரி நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே குறிப்பிடப்படாத நிலையில், பெயர் குறிப்பிடாத இடங்களில் குவாரி நடத்த அனுமதித்தால் அது நீதிமன்றமா? கடந்த 2 மாதங்களாக மற்ற வழக்கறிஞர்களிடம் பல கேள்விகளை தேவையின்றி எழுப்பியது வேற வாயா?

9. அரசை, தொழிற்துறை செயலரை, கனிம வளத்துறை இயக்குநரை, மாவட்ட ஆட்சியரை, எஸ்.பி.யை எதிர்மனுதாரராகச் சேர்க்காமல் ஒரே ஒரு டி.எஸ்.பி.யை மட்டும் சேர்த்த மனுவில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?

10. நேற்று சென்னையில் தலைமை நீதிபதி அமர்வு, சகாயம் விசாரணைக்கு 2 மாதம் நீட்டிப்பு வழங்க, மதுரையில் குவாரி இயக்க உத்தரவு பிறப்பித்தால்-மக்கள் காறித் துப்ப மாட்டார்களா?

11. நேற்று அரசு அலுவலகங்களில் குற்றவாளி ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரிய வழக்கில் ஆஜராக மதுரை வந்த ஓ.பன்னீர் செல்வம் அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி கிரானைட் வழக்கிற்கு வராத மர்மம் என்ன?

12. பி.ஆர்.பி.க்கு முந்தைய வழக்கில் மனுதாரரான துணை தாசில்தார் அடுத்தவர் ஏ.டி.எம்.-ல் 10,000 ரூபாய் எடுத்ததற்காக நோட்டீஸ் இன்றி பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் திருடனுக்கு உத்தரவு வழங்க முடியாது என்று சாமியாடிய ராஜா, ரூ 10,000 கோடி திருடியவனுக்கு உத்தரவு வழங்கியதேன்?

இன்னமும் இந்த ஊர், உலகம் கோர்ட்டை எப்பிடித்தேன் நம்புதோ!
————————————————————————-
கிரானைட் கொள்ளைக்கெதிராக தொடர்ந்து போராடி வரும்…..
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை

தொடர்புக்கு.
ம.லயனல் அந்தோணிராஜ்,
மாவட்ட செயலர்,
9443471003

தஞ்சையில் கோம்பை அன்வரின் “யாதும்” திரையிடல்

1

கோம்பை S. அன்வரின்

yaadhum-2

kombai-anwarபெரிதும் தவறாக எழுதப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டு, உண்மைகளை மூடி மறைத்து வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யப்படும் முஸ்லீம் வரலாற்றை ஆய்வு செய்யும் அன்வர் குறிப்பாகத் தென்னிந்திய முஸ்லீம் வரலாற்றை ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையிலிருந்து வெளி வந்த அசைட் (ASIDE) என்ற ஆங்கிலப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞராகவும், சுதந்திரப் பத்திரிகையாளராகவும் (FREE LANCER) தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கியவர், கோம்பை அன்வர். தற்போது வரலாற்றைப் பதிவு செய்வதை தனது முக்கியப் பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

கி.பி 1600 முதல் 2000 வரையிலான சென்னை நகரின் வரலாற்றைத் தொகுக்கும் திட்டமான “MADRAS GAZETTEER” திட்டத்தில் ஒரு பங்கேற்பாளர்.

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் இந்திய அரசின் தொல்லியல் துறைக்காக எடுக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் பற்றிய குறும்படங்களை எடுத்தவர்.
திராவிடக் கருத்தியலோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜனநாயகவாதி.

கோம்பை S. அன்வரின்…
yaadhumஆவணப்படம் திரையிடல்

தமிழக முஸ்லீம்களின் வேர்களையும், அடையாளத்தையும் தக்க சான்றுகளுடன் பதிவு செய்து, தமிழகத்தில் இஸ்லாம் குறித்தும், தமிழக இஸ்லாமியர்கள் குறித்தும் ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறிக் கும்பல் பரப்பிவரும் மோசடிக் கருத்துகளை அம்பலப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம்.

அறிமுகக் கூட்டம்

27.12.2014 சனிக்கிழமை மாலை சரியாக 6.15
யூனியன் கிளப் மாடி,
பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சை

அறிமுக உரை
தோழர். காளியப்பன்
மாநில இணைப் பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

சிறப்புரை
கோம்பை S. அன்வர்,  சென்னை
பத்திரிகையாளர், வரலாற்றாய்வாளர், ஆவணப்பட இயக்குநர்

அனைவரும் வருக!

ரூ 350/- விலையுள்ள இந்த ஆவணப்பட சி.டி ரூ 200-க்கு அரங்கில் கிடைக்கும்.

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை
தொடர்புக்கு : 94431 88285, 94431 57641

சென்னை டாஸ்மாக் முற்றுகை – பிரச்சாரப் படங்கள்

5

குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கடை வீதிகளில் 24/12/2014 நடைபெற இருக்கும் நாகல்கேணி டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் விடுதலை முன்னணி நடத்தும் முற்றுகை போராட்டத்திற்கு அணிதிரட்ட பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்றது!

டாஸ்மாக் முற்றுகை பிரச்சாரம்
பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம்

ஒரு தோழர் ஜெயலலிதாவை போல உடை அணிந்தும், ஜெ. முகமூடி அணிந்தும், மூன்று சாராய பாட்டில்களை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டும் பிரச்சாரம் செய்ததில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஜெ முகமூடி அணிந்து பிரச்சாரம்
ஜெ முகமூடி அணிந்து பிரச்சாரம்

ஒரு பூக்காரம்மாவிடம்  முதலில் பிரசுரம் கொடுத்ததும், ஏதோ தருகிறார்கள் என வாங்கி வைத்துக்கொண்டார். அவரிடம் இப்போராட்டம் குறித்து விளக்கியதும், ”டாஸ்மாக்கால சீரழிஞ்சுகிட்டு இருக்கிற குடும்பம்மா எங்க குடும்பம். எனக்கு இரண்டு பசங்கம்மா! இரண்டு பேருமே குடிக்கிறாங்க! பாக்கு போடுறாங்க! இரண்டாவது பையனுக்கு இப்பத்தான் குழந்தை பிறந்து, மூன்று மாதங்களாகிறது.  தினமும் குடிச்சு குடிச்சு, புத்தி குழம்பி போச்சு! பக்கத்திலே இருக்கிற கேசவர்த்தினி ஆஸ்பத்திரில சேர்த்து பார்த்தோம். இப்பத்தான் கொஞ்சம் தேறிவர்றான். இந்த போராட்டத்துக்கு நான் கண்டிப்பா வர்றேன்மா!” என்றார்.

பெ.வி.மு பிரச்சாரம்
“இந்த போராட்டத்துக்கு நான் கண்டிப்பா வர்றேன்மா!”

மருந்து கடைக்காரர் ஒருவர் ”உடல் பஞ்சு மாதிரி! ரெம்ப சென்சிடிவ்வானது. குடிப்பதினால் உடல்ல இருக்கிற எல்லா உறுப்புகளுமே மிகவும் டேமேஜாயிரும்! கல்லீரல் ரெம்ப பாதிப்படையும். அதனால், ஏகப்பட்ட தொந்தரவு வரும்! படிக்கிற பசங்ககூட குடிக்கிறாங்க!   உங்க போராட்டம் சரியான போராட்டம். நான் நிச்சயமா கலந்துக்கிறேன்!” என்றார்.

பெ.வி.மு டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரம்
“படிக்கிற பசங்ககூட குடிக்கிறாங்க! உங்க போராட்டம் சரியான போராட்டம். “

இப்படி பொது மக்கள் இந்த போராட்டத்தின் தேவையை அவர்களே உணர்ந்து நிதி அளித்து, கலந்து கொள்கிறோம் என ஆதரவும் தெரிவித்தனர். ஜெயலலிதா வேடம் அணிந்து பிரச்சாரம் செய்த பொழுது மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

pevimu-tasmac-siege-campaign-2

 

pvm tasmak (5)

pvm tasmak (4)

pvm tasmak (2)

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?

8

கம்யூனிச அகிலத்தின் 150-ஆவது ஆண்டு நிறைவு : மூலதனத்தின் சர்வதேசியத்திற்கு முறிவு மருந்து பாட்டாளி வர்க்க சர்வதேசியமே!

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!” – மார்க்சும் எங்கெல்சும் 1848-ல் பிரகடனப்படுத்திய இந்த முழக்கத்தை அன்று ஒருசில குரல்கள்தான் எதிரொலித்தன. ஆனால் 1864 செப்டம்பர் 28-ம் நாளன்று பெருவாரியான மேற்கு ஐரோப்பிய நாடுகளது பாட்டாளிகள்  கைகோர்த்து நின்று இந்த முழக்கத்தை எதிரொலித்தார்கள். ஆம்! அன்றுதான் முதல் கம்யூனிச அகிலம் என்றறியப்படும் அனைத்துலகத் தொழிலாளர் சங்கம் நிறுவப்பட்டது. இம்முதலாவது அகிலம் தொடங்கி இன்று 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஐரோப்பாவில் முதலாளிகளது கொடிய சுரண்டலும் அடக்குமுறையும் நிலவிய காலம் அது. தொழிலாளர்களின் போராட்டங்களை உள்ளூர் கருங்காலிகளைக் கொண்டு ஒடுக்கிய முதலாளிகள், பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வருவோரைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொண்டு தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைக்கவும் செய்தனர். இதற்கெதிராக பிரான்சு மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் தங்களது இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து வர்க்க அடிப்படையில் ஒற்றுமையைக் கட்டிக் கொண்டு போராடினர். இதன் தொடர்ச்சியாக, அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்க ஐரோப்பிய நாடுகளது தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளுக்கும், முற்போக்கு – சோசலிச சிந்தனையாளர்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.

அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்கவிழா கூட்டம்.
1864 செப்டம்பர் 28-ம் நாளன்று, இலண்டன் – செயின்ட் மார்ட்டின் அரங்கத்தில் நடந்த அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்கவிழா கூட்டம்.

உலக நிகழ்வுகளையும் பாட்டாளி வர்க்கப் போராட்டங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வந்த கார்ல் மார்க்ஸ், பிரிட்டனிலுள்ள முற்போக்காளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அதனாலேயே அவர் இலண்டன் – செயிண்ட் மார்ட்டின் அரங்கத்தில் நடந்த அனைத்துலகத் தொழிலாளர் சங்கத் தொடக்கக் கூட்டத்துக்கு ஜெர்மன் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். அக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு, எல்லோரையும் விட கூடுதலான தகுதியுடையவராக கார்ல் மார்க்சைத் தெரிவு செய்து, அகிலத்தின் அடிப்படையான திட்டத்தையும், அதன் கொள்கை மற்றும் அமைப்பு விதிகளையும் வகுத்துக் கொடுக்குமாறு பணித்தது.

முதல் அகிலத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகள், சார்ட்டிஸ்டுகள், இத்தாலிய தேசியவாதிகளான மாஜினிகள், குட்டி முதலாளிய புருதோனியவாதிகள், அராஜகவாத பக்கூனியவாதிகள், பிளாங்கியவாதிகள் – என பல்வேறு தரப்பினரும் இருந்தபோதிலும், மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஐக்கியப்பட்டு நின்றனர். “தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே முதற்கடமை” என்று போதித்த கார்ல் மார்க்ஸ், அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் குறித்தும், அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை விடுதலை செய்ய வேண்டிய கடமை குறித்தும் உணர்த்தினார். முதலாவது அகிலத்தை உருவாக்கிக் கட்டியமைப்பதிலும், ஏறத்தாழ 80 லட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த அதனை போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்க அமைப்பாக வளர்த்தெடுப்பதிலும் மார்க்ஸ் மிக முக்கிய பங்காற்றினார்.

முதல் கம்யூனிச அகிலம்
முதல் கம்யூனிச அகிலம் என்றறியப்படும் அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சியை அறிவிக்கும் துண்டுப் பிரசுரம்.

வேலை நிறுத்த உரிமை, எட்டுமணி நேர வேலை, பிற தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தருதல் என்பதோடு அகிலம் தன்னை வரம்பிட்டுக் கொள்ளவில்லை.

  • பாரிஸ் நகர பித்தளைத் தொழிலாளர்களின் போராட்டம், ஜெனிவா கட்டிடத் தொழிலாளர் போராட்டம், பெல்ஜிய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் போராட்டம் ஆகியவற்றை ஆதரித்துப் போராடியதோடு, ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்களை உடைக்க முயற்சிக்கும் முதலாளிகளுக்கு எதிராக லண்டன் மற்றும் எடின்பர்க் நகரங்களில் தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடியதிலும் அகிலம் முக்கிய பங்கு வகித்தது.
  • உழைக்கும் வர்க்கப் பெண்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் குரலெழுப்பியது.
  • அயர்லாந்து விடுதலைப் போராளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டபோது, அரசியல் கைதிகளைத் தூக்கிலிடுவதை எதிர்த்து அவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடியது.
  • போலந்தின் விடுதலையையும், இத்தாலியின் ஐக்கியத்தையும் ஆதரித்ததோடு, அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க லிங்கன் தலைமையில் நடந்த போருக்கு ஆதரவாக தொழிலாளர்களைத் திரட்டி வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தியது.

தொழிலாளர்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற மார்க்சின் கருத்து 1871-ல் பாரிஸ் கம்யூனில் முதன்முதலாக செயல்வடிவம் பெற்றது.

உலகில் முதன்முதலாக தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சியில், பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகக் கண்டறியப்பட்ட அரசியல் வடிவமே கம்யூன் என்று அகிலத்தின் கூட்டமொன்றில் மார்க்ஸ் உரையாற்றினார். அந்த உரையின் விரிவாக்கம்தான் பின்னர் “பிரான்சில் உள்நாட்டுப் போர்” எனும் நூலாக வெளிவந்தது. ஏற்கெனவே உள்ள அரசு எந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவே முடியாது என்ற மிக முக்கியமான உண்மையை பாரிஸ் கம்யூன் எடுத்துக் காட்டியுள்ளதாக மார்க்ஸ் உணர்த்தினார்.

1872 -ல் ஹேக் நகரில் நடந்த மாநாட்டின்போது, அராஜகவாதிகளுக்கும் மார்க்சியவாதிகளுக்குமிடையிலான சித்தாந்தப் போராட்டத்தில் முதலாவது அகிலம் பிளவுபட்டது. இருப்பினும்,

“மார்க்சின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக முதலாவது அகிலம் அமைந்துள்ளது … இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்றாலும், எல்லா நாடுகளது பாட்டாளிகளிடம் அது உருவாக்கிய உயிர்த்துடிப்புள்ள ஐக்கியமானது இன்றும் நீடித்து நிலவி வருகிறது என்பதோடு, முன்னெப்போதையும் விட வலிமையாக இருக்கிறது. ஒரே படையாக, ஒரே கொடியின் கீழ் திரண்டு நிற்கிறது…”

என்று மார்க்சின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உணர்ச்சி பொங்க உரையாற்றிய எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

முதலாவது அகிலம் பிளவுபட்டு செயலிழந்த பின்னர்,  1889-ல் பாரிஸ் நகரில் எங்கெல்சும், சோசலிசத் தலைவர்களான ஆகஸ்ட் பெல், வில்லியம் லீப்னெக்ட் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற 18 நாடுகளின் சோசலிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் நடத்திய கூட்டமே இரண்டாவது அகிலத்தின் தொடக்கமாக அமைந்தது.

  • மே முதல்நாளை அனைத்துலகத் தொழிலாளர் தினமாக அறிவித்தது,
  • மார்ச் 8-ம் நாளை அனைத்துலகப் பெண்கள் தினமாக அறிவித்தது,
  • 8 மணி நேர வேலை நேரத்திற்கான கோரிக்கை முதலானவற்றுடன்

அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கப் பணியை, தோழர் எங்கெல்சை கௌரவத் தலைவராகக் கொண்டிருந்த இரண்டாவது அகிலம் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது.

எங்கெல்சின் மறைவுக்குப் பின்னர் 1914-ல் முதல் உலகப் போர் தொடங்கியபோது, “தந்தையர் நாட்டைக் காப்போம்” என்று தத்தமது நாடுகளது அரசுகளின் தேசியவெறி, ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகளை ஆதரித்து சந்தர்ப்பவாத சகதியில் இரண்டாவது அகிலம் மூழ்கியபோது, ஏகாதிபத்தியப் போர்களுக்குத் தொழிலாளி வர்க்கத்தைப் பலியிடுவதை எதிர்த்து பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தோழர் லெனின் உயர்த்திப் பிடித்தார். முதலாளித்துவ தேசியவாதமா, பாட்டாளி வர்க்க சர்வதேசியமா என்று இந்த அகிலம் பிளவுபட்டதால், 1916-ல் இரண்டாம் அகிலம் கலைக்கப்பட்டது. காவுஸ்த்கி, பெர்ன்ஸ்டைன் முதலான சந்தர்ப்பவாதிகளுக்கும் குறுகிய தேசியவெறியர்களுக்கும் எதிராகப் போராடிய லெனின், உலகை மறுபங்கீடு செய்வதற்கான  ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு விடுதலைக்கான யுத்தமாக மாற்ற வேண்டுமென உணர்த்தினார். ஏகாதிபத்திய யுத்தத்தில், தமது தந்தையர் நாட்டை ஆதரிக்காத எவரும் தேசத் துரோகிகள் என்று பிரச்சாரம் நடந்து வந்த நிலையில், அதற்கெதிராக எதிர்நீச்சல் போட்டு பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமையை உணர்த்தி லெனின் முன்வைத்த பாதையின் வெற்றியை ரஷ்ய சோசலிசப் புரட்சி பறைசாற்றியது.

கம்யூனிச அகிலம்
1919-லிருந்து 1943 வரை கம்யூனிச அகிலத்தின் சார்பில் பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்ட “கம்யூனிச அகிலம்” எனும் அரசியல் கோட்பாட்டு இதழ்.

பின்னர், 1919-ம் ஆண்டில் தோழர் லெனின் தலைமையில் மூன்றாவது கம்யூனிச அகிலம் மாஸ்கோவில் நிறுவப்பட்டது.

  • அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான போர்த்தந்திரத்தை வகுத்துக் கொடுத்து, ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்கும் காலனி, அரைக்காலனி மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களது விடுதலைக்கும் வழிகாட்டியது.
  • லெனின் மறைவுக்குப் பின்னர் தோழர் ஸ்டாலின் தலைமையில் இயங்கிய மூன்றாவது அகிலம், பல்வேறு நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சிகளைத் தொடங்கவும் வளரவும் உதவியதோடு, ஐரோப்பாவில் இட்லரின் பாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக நாடுகளின் சுதந்திரத்தையும் மக்களின் விடுதலையையும் இலட்சியமாகக் கொண்டு செயல்படவும், பாசிசத்துக்கு எதிராக ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் போராடவும் அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு வழிகாட்டியது.
  • அனைத்துலக பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுத் திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் தனிச்சிறப்பான நிலைமைகளையும், அந்நாட்டின் அரசியல்-சமூக வளர்ச்சியின் நிலைமையையும் வர்க்க முரண்பாடுகளையும் கணக்கில் கொண்டு வழிகாட்டுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும், சோவியத் ரஷ்யா மீதான பாசிச இட்லரின் ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து போர்ச்சூழல் காரணமாக வழிகாட்டுவதிலும் முடிவெடுப்பதிலும் உள்ள இடர்ப்பாடுகள் காரணமாகவும், அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுவழியை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப இதனைச் செயல்படுத்த வேண்டுமென்ற வழிகாட்டுதலுடன் 1943 மே 15-ம் நாளன்று இந்த அகிலம் கலைக்கப்பட்டது.

அகிலம் கலைக்கப்பட்ட போதிலும், கம்யூனிச ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளித்துவப் பாதையாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், முதலாளித்துவ தேசியவெறிக்கும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களுக்கும் எதிரான அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய உணர்வும் ஒற்றுமையும் இன்றும் நீடித்து வருகின்றன. கம்யூனிஸ்டுகள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்கிற முதலாளித்துவ அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் இன்னமும் தொடர்கின்றன. ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய அவதூறுகளை மறுதலித்து, கம்யூனிஸ்டுகளுக்கு தேசிய எல்லைகள் தடையாக இருப்பதில்லை என்பதை உணர்த்தி, “மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” என்ற முழக்கத்துடன் அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் சர்வதேச உணர்வுடன் ஓரணியில் திரண்டு நின்றார்கள்.

இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கக் கொள்கைகளின் விளைவாக, மூலதனம், உற்பத்தி, சந்தை, உழைப்புப் பிரிவினை ஆகியன உலகமயமாகி வருவதன் விளைவாக, வெவ்வேறு தேசிய இனங்கள் – நாடுகளின் உழைக்கும் மக்கள் பிழைப்புக்காகத்தான் என்றாலும், பெருமளவில் இடம்பெயர்வதும் உழைப்புச் சந்தையில் ஒன்றுகுவிக்கப்படுவதும் நடக்கிறது. இது பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமையைத் துரிதப்படுத்துகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும் எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம்தான் ஒரே தீர்வாக முடியும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியலாகவும், பாட்டாளி வர்க்க ஐக்கியம்தான் அதற்கான அமைப்பாகவும் இருக்க முடியும்.

இன்று, உலக வர்த்தகக் கழகம், ஜி-7, ஜி-20, சார்க், ஏசியான் என்று பலதரப்பட்ட சர்வதேசக் கூட்டணிகளைக் கொண்டுள்ள ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கும் மறுகாலனியாதிக்கத்துக்கும் எதிராக அனைத்துலகத் தொழிலாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான வாப்புகள் மேலும் விரிவடைந்துள்ளன. ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க சுரண்டல்-ஒடுக்குமுறைக்கான ஆயுதமாக இந்தியா போன்ற துணை வல்லரசுகளும் பிராந்திய வளையங்களும் பயன்படுத்தப்படும் சூழலில், ஒரே பொருளாதார, தொழில் – வர்த்தக வளையத்தில் உள்ள எந்த நாட்டிலும் தேசிய இன விடுதலையோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ வெற்றிபெறவும் நிலைத்து நிற்கவும், மற்ற பிற நாடுகளது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கங்களின் ஆதரவும் ஒருங்கிணைப்பும் இன்று தேவையாக உள்ளது.

ஏகாதிபத்திய மூலதனத்துக்கும், குறிப்பாக பன்னாட்டுத் தொழிற்கழகங்களுக்கும் எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும், தேசிய இன, மொழி, பிராந்திய அடையாளங்களையும் கடந்த பாட்டாளி வர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது.

“உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!”

– குமார்.
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

கொம்பன் பட பாம்படம் பாட்டிகளின் சினிமா கசப்புகள்

27

காலையில் சென்னையில் பேருந்தில் ஏறும்பொழுதே நடத்துனரிடம் “எப்பொழுது மதுரை போய் சேரும்?” கேட்டேன். 8 மணிக்குள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தேன்.  “இரவு 7.30 மணிக்கு போய்விடும்” என்றார். 8 மணிக்குள் சென்றாலே போதும் என நினைத்துக்கொண்டேன்.

கொம்பன்
“பருத்திவீரன்ல நடிச்ச கார்த்தியோட புதுப்படம்”

பேருந்து கிளம்பும் நேரத்தில் வயதான பாட்டிகள் சுமார் 20 பேர் பேருந்தில் திமு திமு என ஏறினார்கள்.  அவர்களின் சலசலப்பான பேச்சு பேருந்து முழுவதும் பரவியது.  பகல் நேரத்தில் எல்லா இருக்கைகளும் நிரம்பியதில் நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் அத்தனை ஆனந்தம்.

எல்லா பாட்டிகளிடமும் ஒரு ஒற்றுமையை கவனிக்க முடிந்தது. எல்லோரும் காதுவளர்த்து தண்டட்டி போட்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்ததில், “பருத்திவீரன்ல நடிச்ச கார்த்தியோட புதுப்படத்துல நடிச்சு, ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்ததாக” சொன்னார்.

“சென்னையை சுத்திப்பார்த்தீங்களா?” என்றதற்கு,

“நாங்க வந்து ஒரு வாரமாச்சு! வந்ததற்கும், போவதற்கும்  இரண்டு நாள் ஆயிருச்சு! நாலுநாள் தான் படமெடுத்தாங்க! ஒரு நாள் கடற்கரைக்கு கூட்டிப்போனாங்க!” என்றார்.

எம்.ஜி.ஆர் சமாதியை எப்படியாவது சுற்றி காண்பித்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் விட்டாலும் சினிமாக்காரர்கள் மீண்டும் மீண்டும் அவரை நினைவுபடுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.

மதிய நேரம். ஒரு பைபாஸில் இருந்த மோட்டலில் வண்டி நின்றது. போய் சாப்பிட்டதில் எல்லா மோட்டல்களை போலவே சாப்பாடு ரெம்ப சுமாராக இருந்தது.

கொம்பன்
சினிமா கம்பெனிகாரங்க சாப்பாட்டுக்கு கொடுத்ததே 50 ரூபாய் தான்!

எல்லா பாட்டிகளும் உள்ளே நுழைந்தவர்கள் சிறிது நேரத்திலேயே சாப்பிடாமலேயே எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டார்கள்.  என்னவென்று விசாரித்தால், “கொஞ்சூண்டு சோறு வைக்கிறாங்க! அதுக்குப் போய் 70 ரூபாய் சொல்றாங்க! அநியாயம். சினிமா கம்பெனிகாரங்க சாப்பாட்டுக்கு கொடுத்ததே  50 ரூபாய் தான்!” என்று அங்கலாய்த்து சொன்னார்.

வண்டி கிளம்பிய அரைமணி நேரத்தில் பாட்டிகளிடம் சலசலப்பு.

“எப்பா காலையிலேயே நாங்க சரியா சாப்பிடலை! வேறொரு சாப்பாட்டுக் கடையப் பாத்து நிப்பாட்டுப்பா! பசி உயிர் போகுது. யாராவது மயக்கமாயிட்டா ரெம்ப தொல்லையாயிரும்!” என செல்லமாய் மிரட்டினார்கள்.

‘அய்யய்யோ இன்னொரு அரைமணி நேரமா!’ என்று மற்ற பயணிகள் எல்லாம் பதட்டமானார்கள்.

அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய இரண்டு பாட்டிகளிடம் “இங்க எல்லா இடத்திலும் 70 ரூபாய் தான் சாப்பாடு” என ஓட்டுநர் சொல்லிப்பார்த்தார். மயக்கம் போட்டு விட்டால், மருத்துவமனைக்கு யார் அலைவது என யோசித்து, கெஞ்சியும் பார்த்தார்.

அந்த பாட்டிகளோ அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.  ஓட்டுநருக்கு தர்மசங்கடமாகிவிட்டது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  புதிதாக திறந்திருந்த ஒரு மோட்டலில் நிறுத்தி, அதன் முதலாளியிடம் தன் நிலைமையைச் சொல்லி, (கெஞ்சி) 70 ரூபாய் சாப்பாட்டை 50 ரூபாய்க்கு பேசி முடித்தார்.

எல்லா பாட்டிகளும் இறங்கி போய் சாப்பிட்டார்கள். ”இவங்க தர்ற இத்துணூண்டு சாப்பாடு எவ்வளவு நேரத்துக்குப்பா தாங்கும்! 50 ரூபாயாம். அநியாயம!, கொள்ளையடிக்கிறாங்கப்பா” என்று புலம்பிக்கொண்டே வண்டியில் திரும்ப ஏறினார்கள்.

கொம்பன்
“நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க! கடசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க!”

ஓட்டுனருக்கு காதில் புகை வந்தது!

“சாப்பிட்டதற்கு பின்னாடி உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? காரசாரமாய் பேசிக்கிட்டு இருந்தீங்க!” எனக் கேட்டேன்.

“அது ஒண்ணுமில்லப்பா! நாங்க ஊர விட்டு கிளம்பி ஒருவாரம் ஆச்சு! நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க! கடசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க! எங்களை கூட்டிட்டு வந்த எங்க ஆளுங்க ஏதும் கூடுதலா வாங்கி நமக்கு கொடுக்காம விட்டுட்டாங்களோன்னு சண்டைபோட்டோம். அங்கேயே சொல்லியிருந்தா கம்பெனிகாரங்ககிட்ட கேட்டிருப்போம்! ஏமாத்திட்டாங்கப்பா!” என்றார் வருத்தத்துடன்!

அடப்பாவிகளா!  மதுரையிலிருந்து வயதானவர்கள் 20 பேரை அழைத்து வந்து, ஒருவாரம் ஆகியிருக்கிறது. எவ்வளவு அலைச்சல். ரூ 1000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

கார்த்தி நடிக்கும் கொம்பன் படம் ஒன்றும் பட்ஜெட் படமில்லை. சிங்கம், சிறுத்தை, மெட்ராஸ் என பல வெற்றிப்படங்களில் காசு பார்த்த ஸ்டுடியோ ஞானவேல்ராஜா தான் தயாரிக்கிறார். இப்போதைக்கு கார்த்திக்கு சம்பளம் 6 கோடிக்கு மேல் என்கிறார்கள். இதில் தெலுங்கு டப்பிங்குக்கு சில கோடிகள் தனி! 6 மாதத்தில் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள்.  குறைந்தபட்சம் 6 கோடி சம்பளம் என வைத்துக்கொண்டால் கூட ஒரு நாள் கார்த்தியோட சம்பளம் 3.5 லட்சம்.

சமீபத்தில் ஒரு திரைவிழாவில் நடிகர் சந்தானத்தின் ஒருநாள் சம்பளம் ரூ 15 லட்சம் என ஆர்யா வெளிப்படையாக தெரிவித்தார். நம்ம வயதான பாட்டிகளுக்கு ஒரு நாள் ஊதியம் 250 ரூ.  மதிய சாப்பாட்டுக்கு ரூ 50 மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

கொம்பன்
70 ரூபாய் சாப்பாட்டிற்கே வயிறு எரிந்த பாட்டிகளுக்கு தெரியாது, கார்த்தி மாதிரி நடிகர்கள் எத்தனை கோடிகள் கல்லா கட்டுகிறார்கள் என்று!

70 ரூபாய் சாப்பாட்டிற்கே வயிறு எரிந்த பாட்டிகளுக்கு தெரியாது, கார்த்தி மாதிரி நடிகர்கள் எத்தனை கோடிகள் கல்லா கட்டுகிறார்கள் என்று!

ஒருவழியாக பேருந்து 8 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. தாமதமான நேரத்தையெல்லாம் ஓட்டுநர் கொஞ்சம் விரைவாக ஓட்டி, ஈடுசெய்திருந்தார்.

பேருந்திலிருந்து பாட்டிகள் எல்லோரும் தளர்வாக இறங்கினார்கள். மெல்ல மெல்ல அந்த இருட்டில் மறைந்துபோனார்கள். மாறியிருக்கும் ஏற்றத்தாழ்வான உலகம் அவர்களுக்கு தெரியாது.

அதனாலென்ன? எல்லா புள்ளிவிவரங்களையும் விரல்நுனியில் வைத்துக்கொண்டு நாம் மட்டும் என்ன செய்துவிட்டோம்?

– குருத்து

காவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை

1

மக்கள் கலை இலக்கியக் கழகம் – தமிழ்நாடு (People’s Art and Literary Association)
விவசாயிகள் விடுதலை முன்னணி – தமிழ்நாடு (Peasants Liberation Front)

காளியப்பன் – மாநில இணைப் பொதுச்செயலாளர், ம.க.இ.க
மாரிமுத்து – மாவட்ட அமைப்பாளர், வி.வி.மு

1, அண்ணா நகர், சிவாஜி நகர் வழி, தஞ்சாவூர் – 1
செல் : 9443188285

பத்திரிகை செய்தி

மிழக அரசு தொடுத்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் இரு அணைகளைக் கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காவிட்டாலும், அணை கட்டப்படும் என கர்நாடக அமைச்சர்கள் அறிவிக்கின்றனர். அணை கட்ட சட்டவிரோதமாக உலகளாவிய ஒப்பந்தம் கோரும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பின்படி மாதா மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை விட மறுக்கிறது. தற்போது திட்டமிடப்படும் அணை தமிழகத்திற்கு நீர் வரும் அளவை கணக்கிடும் இடமான பிலிகுண்டுலுவிற்கு சற்று தொலைவில்தான் கட்டப்பட இருக்கிறது. இவ்வணை கட்டப்பட்டால், டெல்டா விவசாயம் அழிவை நோக்கித் தள்ளப்படும். டெல்டா மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும்.

தஞ்சை ரயில் மறியல்
மேக்கே தாட்டு அணையை எதிர்த்து ம.க.இ.க, வி.வி.மு தஞ்சையில் நடத்திய ரயில் மறியல் (கோப்புப் படம்)

ஆனால், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்குத்தான் அணை கட்டப் போவதாக சூழ்ச்சியான முறையில் வாதிடுகிறது, கர்நாடக அரசு. மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் எடுப்பதை யாரும் நிராகரிக்க முடியாது. நிராகரிக்கவும் கூடாது. ஆனால், கர்நாடக அரசின் நோக்கம் அதுவல்ல.

அணை கட்டும் திட்ட விவரங்கள் மின்சாரம் தயாரிப்பதற்கான அணை என்பதையே நிரூபிக்கின்றன. இந்தியாவிலேயே குடிநீரை வீணாக்கும் இரண்டாவது நகரமான பெங்களூருவில் 52 சதவீத குடிநீர் வீணாக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் பெங்களூருவில் இருந்த ஏரிகள் பாதியாகச் சுருங்கி உல்லாச, ஆடம்பர விடுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடிநீர் வணிகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், ஆடம்பர நீர் விளையாட்டு பூங்காக்கள் ஆகியோர் கொள்ளை லாபம் ஈட்டவே இந்த அணை நீர் பயன்படும். கடும் குடிநீர் வரியால் அவதிப்படும் பெங்களூரு மக்கள் மீது மேலும் சுமையேற்றப்படும். இது மட்டுமின்றி சுற்றுச்சூழல் கேடு, மனித விலங்கு மோதல், அதனால் ஏற்படும் இழப்பு இவற்றை சாதாரண மக்களே சுமக்க வேண்டி வரும். எனவே, இந்த அணைத்திட்டம் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி கர்நாடக மக்களுக்கு எதிரானது.

அரசில், அதிகாரப் போட்டியில் மோதிக் கொள்ளும் மத்திய பா.ஜ.க அரசும், மாநில காங்கிரஸ் அரசும் தமிழக நலனுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுவதில் ஒரே அணியில் கைகோர்த்து நிற்கின்றனர். அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் மத்திய அரசையே சாரும். எனவே மோடி அரசு உடனே தலையிட்டு கர்நாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

மேலும்,

  • டெல்டா மாவட்டத்திற்கு அபாயமாக விளங்கும் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • காவிரி மேலாண்மை வாரியத்தை காலம் தாழ்த்தாமல் உடனே அமைக்க வேண்டும்.
  • மரபணு மாற்றுப் பயிர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கள சோதனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
  • புதிய பயிர்க் காப்பாட்டுத் திட்டத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவதோடு, பிரிமீயத் தொகையை மத்திய மாநில அரசுகளே செலுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 20 முதல் டெல்டா கிராமங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும். ஜனவரி 3-ம் தேதி தஞ்சை மத்திய உற்பத்தி மற்றும் இறக்குமதி வரி ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஜனநாயகவாதிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

மாரிமுத்து,
தஞ்சை மாவட்ட அமைப்பாளர்,
விவசாயிகள் விடுதலை முன்னணி
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்

பச்சையப்பன் கல்லூரி காக்க பேராசிரியர் – மாணவர் போராட்டம்

0

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து!
பேராசிரியர்கள், மாணவர்கள் ஒன்று கலந்து நடத்திய பேரணி

  • பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து!
  • திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், கடலூர் சி.என்.கே கல்லூரி பேராசிரியருமான சாந்தி அவர்களை பணியிடம் மாற்றியதை ரத்து செய்!
  • பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகளின் ஊழலை விசாரணைக்குட்படுத்தி உடனடியாக பதவி நீக்கம் செய்!

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட 6 கல்லூரிகளின் பேராசிரியர்கள் கடந்த ஒருமாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. அதோடு மட்டுமல்லாமல், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகளோடு தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனும் சேர்ந்து போராடுகின்ற பேராசிரியர்களை மிரட்டுவது, போராட்டத்தை நசுக்க எத்தனிப்பது என செயல்பட்டு வருகின்றனர்.

பச்சையப்பா கல்லூரி போராட்டம்
மாணவர்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியது பு.மா.இ.மு.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமைப்பாக செயல்பட்டுவரும் எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பேராசியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை திரட்டுவதற்கு பச்சையப்பன் அறக்கட்டளையின் ஊழலை அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியது. அடுத்து மாணவர்களை அணிதிரட்டிச் சென்று பச்சையப்பன் கல்லூரி வாயிலில் நடந்த பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது. அத்துடன் பேராசியர்கள் – மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

அதோடு, பேராசிரியர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றில் கடந்த 16 -ம் தேதி மாணவர்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி பச்சையப்பன் கல்லூரிக் கிளை செயலர் செல்வா தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தையும் நடத்தியது பு.மா.இ.மு.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
ஒழியட்டும் பச்சையப்பன் அறக்கட்டளையின் ஊழல்! ஓங்கட்டும் பேராசிரியர்,மாணவர் ஒற்றுமை!

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழ்க பேராசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 20-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இருந்து மாலை 4 மணி அளவில் புறப்பட்ட பேரணியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் த. கணேசன் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற பேரணியில் பு.மா.இமு வைச் சார்ந்த மாணவர்கள் தொடர்ந்து எழுப்பிய கம்பீரமான முழக்கம் போராடுகின்ற பேராசியர்களுக்கு புது உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
பு.மா.இமு வைச் சார்ந்த மாணவர்கள் தொடர்ந்து எழுப்பிய கம்பீரமான முழக்கம் போராடுகின்ற பேராசியர்களுக்கு புது உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

பேரணியின் இறுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன்,

“ஊழல்மயமாகிப் போன பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும், முடியாவிட்டால் மாணவர்கள் – பேராசிரியர்கள் ஏற்று நடத்த வழிவிட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியை கொடுத்து உன்னதமான சேவை செய்த இந்த அறக்கட்டளையை இன்று அதன் ஊழல் நிர்வாகிகள் அழிக்கத் துடிக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் – பேராசிரியர்கள் – பெற்றோர்கள் ஒன்றுபட்டு போராடினால் இதை தடுத்து நிறுத்த முடியும். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்த பேராசியர்களோடு பு.மா.இ.மு என்றும் துணை நிற்கும்”

என்று போராடும் பேராசியர்களுக்கு நம்பிக்கையூட்டி உரையாற்றினார்.

பச்சையப்பன் அறக்கட்டளையைச் சார்ந்த பேராசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதராவாக பு.மா.இ.மு வெளியிட்ட பிரசுரம்

ஒழியட்டும் பச்சையப்பன் அறக்கட்டளையின் ஊழல்!
ஓங்கட்டும் பேராசிரியர்,மாணவர் ஒற்றுமை!

ஊழல்மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து அல்லது
மாணவர்கள் – பேராசிரியர்களை நடத்தவிடு!

அன்பார்ந்த மாணவர்களே, உழைக்கும் மக்களே,

லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கண்ணை திறந்து வைத்த பெருமைக்குரியதுதான் பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட கல்லூரிகள் என்பது மிகையல்ல, நாம் அனைவரும் கண்கூடாக அறிந்த உண்மை. அப்படிப்பட்ட பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை இன்று அந்த நிர்வாகிகளால், உயர்கல்வித்துறை அமைச்சரால், ஊழல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு நூற்றுக்கணக்கான பேராசியர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும், ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்துவது நம் அனைவரின் கடமை.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
மாணவர்களை அணிதிரட்டிச் சென்று பச்சையப்பன் கல்லூரி வாயிலில் நடந்த பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பு.மா.இ.மு.

ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது, பச்சையப்பன் அறக்கட்டளைக்கு. 1800-களில் தொடங்குகிறது இதன் கல்விப் பணி. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிலையம் என்ற பெருமை இதன் பச்சையப்பன் கல்லூரிக்கு உண்டு. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களே கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், 1842-ம் ஆண்டு இந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி. 1947-க்குப் பின் அனைத்து மத, இன மாணவர்களும் படிக்கும் கல்விக்கூடமாக செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளிகளும், கல்லூரிகளும் பல தலைவர்களையும், கல்வியாளர்களையும், கணித மேதைகளையும், அரசின் உயர் அதிகாரிகளையும் உருவாக்கி இந்நாட்டிற்கு கொடுத்தவை. அதுமட்டுமல்ல, 1965 களில் அன்றைக்கு மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசு தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்றபோது சுமரியாதையோடும், தாய்மொழிப்பற்றோடும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், பேராசியர்களும்தான் என்பதை வரலாறு இன்றைக்கும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
இந்தியைத் திணிக்க முயன்றபோது சுமரியாதையோடும், தாய்மொழிப்பற்றோடும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், பேராசியர்களும்.

இத்தகைய பாரம்பரியத்திற்கு சொந்தமான பச்சையப்பன் அறக்கட்டளை சமீப ஆண்டுகளாக தி.மு.க – அ.தி.மு.க ஆகிய ஓட்டுக்கட்சியினரின் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கல்வியாளர்களைக் கொண்டு கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டிய இந்த அறக்கட்டளையின் சொத்து இன்று ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. பல புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கிய பள்ளி, கல்லூரிகள் இன்று பாழடைந்த பங்களாக்களை போல் உள்ளன. இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளோ கல்விப் பணியை செய்வதற்கு பதில் பிற அனைத்து சட்ட விரோத வேலைகளையும் செய்கிறார்கள்.

ஆம். பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு – லஞ்சம்; கல்விக்கூடத்தை பராமரித்து இயக்குவதற்கு பதில் தனிப்பட்ட நலனுக்காக சொத்துக்களை விற்கிறார்கள்; கல்வியின் தரத்தை உயர்த்தி சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு பதில் தனியாரைப்போல் அதிக கட்டணத்திற்கான வகுப்புகள் ( self finanance ) உருவாக்கியும், கல்லூரி மைதானத்தை தனியாருக்கு வாடகைக்கு விட்டும் அறக்கட்டளை நிர்வாகிகள் தங்கள் சொத்துக் கணக்கைத்தான் உயர்த்துகிறார்கள்.

“அறக்கட்டளையின் வரவு – செலவு கணக்கை நிறுவனர் பிறந்தநாள் அன்று கல்லூரி வாயிலில் வைத்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதே நாளில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்” என்ற அறக்கட்டளையின் விதியை இதன் நிர்வாகிகள் மயி…..க்கு சமமாகக் கூட மதிப்பதில்லை என்று வேதனைப்படுகிறார்கள் பேராசிரியர்கள்.

பச்சையப்பன் அறக்கட்டளையை கல்வியாளர்கள் நிர்வகித்தால்தானே கல்வி வளர்ச்சிக்காகவும், பேராசிரியர்கள், மாணவர்கள் நலனுக்காகவும் சிந்தித்து செயல்பட முடியும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் நிர்வகித்தால் வேறு எப்படி இருக்கும்? மாஃபியா கும்பலிடம் மாட்டிக் கொண்டிருகின்ற பச்சையப்பன் அறக்கட்டளையை மீட்காமல் கல்விப் பணியை, பேராசியர்கள் – மாணவர்கள் நலனை உத்திரவாதம் செய்ய முடியாது, என்பதற்கு இன்று நடக்கும் சம்பவங்களே உதாரணங்களாக உள்ளன.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
பச்சையப்பன் அறக்கட்டளையை கல்வியாளர்கள் நிர்வகித்தால்தானே கல்வி வளர்ச்சிக்காகவும், பேராசிரியர்கள், மாணவர்கள் நலனுக்காகவும் சிந்தித்து செயல்பட முடியும்.

இந்த அறக்கட்டளையில் நடக்கும் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள், ஆசிரியர்கள் – மாணவர்களை பழிவாங்கும் போக்குகள் ஆகியவற்றை அவ்வப்போது கண்டிக்கும் பேராசிரியர் பெருந்தகைகளை தொடந்து பழிவாங்கி வருகிறது நிர்வாகம். குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சரின் துணையோடு பேராசிரியர் சங்க பொறுப்பாளர்களுக்கு மெமோ கொடுத்தும், இடம் மாற்றம் செய்தும் பழிவாங்குகிறார்கள், தற்போதைய தலைவராக உள்ள ஜெயச்சந்திரன் என்பவரும், செயலாளராக உள்ள இராஜகோபாலன் என்பவரும் இந்த வகையில்தான் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கடலூர் சி.கே.என் கல்லூரி பேராசிரியருமான சாந்தி என்பவரை பணியிட மாற்றம் செய்து பழிவாங்கியுள்ளனர். இதைக் கண்டித்து போராடும் கல்லூரி முதல்வரையும், பேராசிரியைகளையும் இழிவாகவும் நடத்துகிறார்கள்.

ஆக, தற்போதைய அறக்கட்டளை நிர்வாகிகளின் நோக்கமெல்லாம் யார் எக்கேடுகெட்டாலும் தங்களுக்கு கவலை இல்லை. பச்சையப்பன் அறக்கட்டளை சொத்துக்களை சூறையாட வேண்டும் என்பதுதான். இதற்குத் தடையாக இருப்பதால் பேராசிரியர்களையும், சங்க பொறுப்பாளர்களையும் பழிவாங்குகிறார்கள். இந்த அநீதியை தடுத்து நிறுத்த வேண்டிய உயர்கல்வித்துறை அமைச்சரோ கூட்டுக்கொள்ளையராக உள்ளார். உண்மை அறிந்த பேராசிரியர்கள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள்.

மாணவர்களே, பெற்றோர்களான உழைக்கும் மக்களே நாம் என்ன செய்யப்போகிறோம். நிச்சயம் வேடிக்கைப் பார்க்க முடியாது. நம்மை விலங்கினத்திடமிருந்து பிரித்து மனிதனாக்கும் கல்வி எனும் உன்னதமான சேவையாற்றி வரும் பச்சையப்பன் அறக்கட்டளையை இந்தக் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதற்கு

  • பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுமென தொடர்ந்து போராடி வரும் பேராசிரியர் பெருந்தகைகளோடு களத்தில் துணை நிற்போம்.
  • பேராசிரியர் – மாணவர் – பெற்றோர் ஒற்றுமையை கட்டியமைப்போம்.
  • இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்பதற்கேற்ப வெற்றிபெறுவோம்!

ஊழல்மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்தக் கோரும் பேராசியர்களின் போராட்டம் வெல்லட்டும்!

pachiappa-protest-poster

தகவல்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
சென்னை.

டைம்பாஸ் வண்ணத்திரை சினிக்கூத்து எரிப்பு – வீடியோ

0

தகவல் & வீடியோ படப்பிடிப்பு :

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

அது என்னா சார் எச்சி பாரத்து ?

6

முந்தைய நாள் பெய்த மழையால் அரும்பாக்கம் சகதிக் காடாகியிருந்தது. எலும்பும் தோலுமாய்த் தெரிந்த சிவலை நிற கோமாதா நடு சாலையில் வாலை உயர்த்தியவாறே நின்றாள். மெல்ல நடுமுதுகை கீழ் அழுத்தி வாலை விடைத்தவாறே மேலுயர்த்தி… “சொத்” என்று கருப்பு நிறத்தில் போட்டாள் சாணியை. மனிதச் சரக்கை விட நாற்றம்; நேற்று தின்ற லிங்கா போஸ்டராக இருக்க வேண்டும்.

அரும்பாக்கம்
“இன்னாத்த கீய்ச்சாங்க.. தோ ரோடு எப்டி இருக்குன்னு பாத்தீங்கள்லே?”

“யேய்.. பாடு சனியனே.. மூதேவி.. ______.. நாளிக்கு வாடி உன்னை பிரியாணி போடறேன்…….” கருஞ்சாணி சகதிக் கூழில் விழுந்து மொத்தமாக தனது கால்சட்டையில் தெறித்த ஆத்திரத்தில் கோமாதாவின் தாயை ஒருவர் சந்தேகித்துக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக ஹெச். ராஜா அந்த இடத்தில் இல்லை.

வினவு தளத்தின் செய்தியாளர் குழுவாக அரும்பாக்கத்தில் இருந்தோம். மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி மக்களின் கருத்தை அறிந்து வருவதும், சமீப காலமாக மோடி முன்னெடுத்து வரும் ஹிந்துத்துவ செயல்திட்டங்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதும் திட்டம். பல வீடுகளில் குடும்பத்தினர், பொது இடங்களில் குழுமியிருந்த மக்கள், அனைத்து பிரிவினர் என்று பார்த்தோம். அதில் சில உரையாடல்கள்……….

முதலில் பேருந்துக்காக காத்து நின்ற சுகுமார் என்பரை அணுகினோம் –

“மத்திய அரசு கேஸ் மானியத்தை வங்கிக் கணக்கில் போடுவோம்னு சொல்லுதே அது பற்றி…?”

”எனுக்கு அப்பயே தெரியும் சார், இவன் பிராடுன்னு.. ஆனா எல்லாரும் சொன்னாங்களேன்னு தாமரைக்கி ஓட்டு போட்டேன். அது இன்னா சார் மானியம்னா பிச்சையா சார்? வர்தா வர்லையான்னு தேவ்டு காக்னுமா? மன்சன் வேற வேலைக்கு போவத் தாவலை?”

“அது மட்டும் இல்லைங்க, வெளி நாட்ல லட்சக்கணக்கான கோடி ரூபா கருப்பு பணம் பதுக்கி வச்சிருக்காங்கன்னும், நான் ஆட்சிக்கு வந்தா அதை மீட்டு வந்து தலைக்கு இவ்ளோன்னு பிரிச்சி எல்லாரோட வங்கி கணக்குலேயும் போடுவேன்னு சொன்னாங்களே. வங்கி கணக்கு இருந்தா அதுக்கும் பிரயோஜனப் படும் இல்லையா?”

“பணமா போடுவான்? நல்ல கொழச்சி நாமத்த வேணா போடுவான் சார்”

“சுவச்ச பாரத் மாதிரி வித்யாசமான திட்டங்கள்…” இடைமறித்தார்.

”அது இன்னா சார் எச்சி பாரத்து?”

அரும்பாக்கம்
”எனுக்கு அப்பயே தெரியும் சார், இவன் பிராடுன்னு.. ஆனா எல்லாரும் சொன்னாங்களேன்னு தாமரைக்கி ஓட்டு போட்டேன்.”

”எச்சி இல்லை, சுவச்ச – அதாவது தூய்மை இந்தியா. சினிமா ஸ்டாருங்க கூட கைல விளக்குமாத்தோட நின்னு போட்டோ எடுத்து…. நீங்க பேப்பர்ல பார்க்கலை? கோடிக்கணக்குல செலவு செஞ்சி விளம்பரம் கூட செய்யறாங்களே சார்”

”இன்னாத்த கீய்ச்சாங்க.. தோ ரோடு எப்டி இருக்குன்னு பாத்தீங்கள்லே? எவனுமே சரியில்ல சார். நான் எம்.ஜி.ஆர் ரசிகன். இத்தினி வருசமா ரெட்டெலைக்குப் போட்டவன் இந்த தபா மாத்தி தாமரைக்கி போட்டேன். இனிமே ஓட்டே போடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் சார்”

”சரி சார் இப்ப பா.ஜ.க கட்சி அமைச்சர்கள் கூட்டங்கள்லே என்ன சொல்றாங்கன்னா.. இந்தியாவோட அத்தனை பிரச்சினைகளுக்கும் முசுலீம்கள் தான் காரணம், ராமனை தேசிய நாகனா ஏத்துக்காதவங்க விபச்சார விடுதில பிறந்தவங்க, பகவத் கீதை தான் தேசிய நூல், தாஜ்மகால் ஒரு சிவன் கோயில் அதனால அதை இடிச்சிட்டு திரும்ப கோயில் கட்டுவோம் – இப்படில்லாம் பேசறாங்க. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

”கீய்ச்சாங்க. அந்தக் காலத்துலயே சாஜகான் கோடி கோடியா செலவு பண்ணி தாஜ் மகாலை கட்டிருக்கான் சார். இப்ப அதுமாதிரி ஒன்ன யார்னால கட்ட முடியும்? அதெல்லாம் சும்மா சார். அதாவது…. சில பேரு கடவுள் இருக்குன்றான். சில பேரு இல்லேன்றான்.. நான் இன்னா சொல்றேன், ஏதோ ஒரு சக்தி இருக்கு. அவ்ளோ தான். முசுலீம்னா இன்னா சார்? அவுனுக்கு அல்லா சாமி, எனுக்கு முருகன் சாமி. அவ்ளோ தான் சார். நான் கூட பாருங்க கிருஷ்ணனை வித்து தான் பொழக்கிறேன். சாமியா சார் முக்கியம்? மன்சன் தான் சார் முக்கியம். இவுனுங்கோ இப்டி பேசும் போது எல்லாரும் கேட்னு சொம்மாவா இருந்தானுங்க? செருப்பாலயே போட்ருக்க வோணாம்? அயிஞ்சி போய்டுவான்க சார்”

வெள்ளி இழையில் ராதா கிருஷ்ணன் படம் பதித்து கண்ணாடியால் மூடப்பட்ட நினைவுப் பரிசு ஒன்றைக் காட்டினார். சுமார் தனியார் நகைக்கடை ஒன்றில் இருந்து இது போன்ற நினைவுப்பரிசுகளை வாங்கி அலைந்து திரிந்து விற்பவர். பேச்சினூடாக அவர் செல்ல வேண்டிய பேருந்து வரவும் அவசரமாக கிளம்பினார். நாங்கள் அருகே இருந்த மாநகராட்சிக் கழிவறையை நெருங்கினோம்; அதன் சுற்றுப்புறத்தை பெருக்கிக் கொண்டிருந்தார் ஒருவர்.

துப்புரவுத் தொழிலாளி
”எவன் வந்தான்.. நானே தான் பெருக்கினு இருக்கேன்”

”என்னண்ணே தூய்மை இந்தியா திட்டத்தில் இருந்து யாரும் இந்தப் பக்கம் கழிவறை சுத்தம் செய்ய வந்தாங்களா?”

”எவன் வந்தான்.. நானே தான் பெருக்கினு இருக்கேன்”

”ஆமாண்ணே.. இந்த மோடி கட்சிக்காரங்க முசுலீம்கள் இந்தியாவுக்கு வந்ததுனால தான் தீண்டாமையே வந்திச்சின்னு சொல்றாங்களே.. இங்க வர்ற பாய்ங்க உங்களோட எப்படிப் பழகுறாங்க?”

”நீங்க வேற சார், நம்ம ஆளுங்க கக்கூசுக்கு போயிட்டு என்னிய திரும்பிக் கூட பார்க்காம அப்டியே போயிடுவாங்க. இலவசம் தானே… எவன் சுத்தம் செஞ்சிருந்தா என்னான்னு நினைச்சிருப்பாங்க. அது அவங்க தப்பில்லே. நானும் கைநீட்டி கேட்க மாட்டேன், தந்தா சரின்னு வாங்கிக்குவேன். ஆனா, பாய்ங்க மட்டும் வந்தாங்கன்னா தவறாம ரெண்டு ரூபா கொடுத்துட்டு தான் போவாங்க.”

அவர் பெயர் ஈஸ்வரன். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர். இரண்டு கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. நாற்பது வயதிருக்கலாம். இன்னமும் திருமணமாகவில்லை. இலவசக் கழிவறை என்பதால் பராமரிப்பு இல்லாமல் நாறிக் கொண்டிருந்த இந்தக் கழிவறையை கடந்தாண்டிலிருந்து இவரே பொறுப்புடன் பராமரித்து வருகிறார். ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைக்கு இடையே ஆறுக்கு நான்கடியாக ஒரு சின்ன இடுக்கு உள்ளது. அதில் சாக்கை விரித்து அங்கேயே படுக்கை. கழிவறையை மிகத் தூய்மையாக பராமரித்து வருகிறார்.

அரசு பற்றி அரும்பாக்கம்கழிவறையைப் பயன்படுத்த கட்டணமில்லை என்றாலும், ஈஸ்வரனின் நிலையைப் பார்த்து பரிதாபத்தோடு சிலர் மட்டும் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் கொடுத்துச் செல்கிறார்கள். அதில் அநேகர் “பாய்மாருங்க” என்றார். சராசரியாக ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வரை சில்லறை சேர்கிறது. இதில் மிச்சம் பிடித்து மாதம் ஆயிரம் ரூபாயை வீட்டுக்கு அனுப்புகிறார். பெரியளவில் அரசியல் தெரியவில்லை.

நாங்கள் ஈசுவரனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளி தனது டிரை சைக்கிளுடன் வந்து சேர்ந்தார். வயதானவர். நீல நிற சட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். முகத்தில் நக்கீரன் பத்திரிகைத் தாளை விட கொஞ்சம் தடித்த முகவுறை அணிந்திருந்தார். காலில் பிய்ந்து போன பிளாஸ்டிக் செருப்பு.

“என்னா பேட்டி எடுக்க வந்தீங்களா?”

” ஆமாண்ணே, மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற திட்டங்கள் பற்றி நேரடி ரிப்போர்ட் எடுக்க வந்தோம். இப்ப மோடி அரசு கோடிக்கணக்குல செலவு பண்ணி தூய்மை இந்தியான்னு ஒரு திட்டம் கொண்டாந்தாங்க இல்லையா, அதைப் பத்தி தான் ஈஸ்வரண்ணன் கிட்டே கேட்டுகிட்டு இருந்தோம்”

மாநகராட்சி துப்புரவு பணியாளர்
“ஒயுங்கா எங்களுக்கு சம்பளத்த குடுத்தா நாங்களே செய்வோமே? தோ கைல மாட்ற ஒறைல ஒன்னு கியிஞ்சி போயி ரெண்டு மாசமாகுது. இருக்கற இந்த ஒன்னை வச்சித் தான் கலீஜை வாரிக் கொட்டினு இருக்கோம்.”

“ஆமாமா.. கமலகாசன் போட்டோ கூட வந்திச்சி.. அதுக்கு கோடிக்கணக்குலயா செலவு பண்றாங்க?”

“ஆமாங்க”

”இன்னாத்துக்கு அத்தினி செலவு செய்யனும்? ஒயுங்கா எங்களுக்கு சம்பளத்த குடுத்தா நாங்களே செய்வோமே? தோ கைல மாட்ற ஒறைல ஒன்னு கியிஞ்சி போயி ரெண்டு மாசமாகுது. இருக்கற இந்த ஒன்னை வச்சித் தான் கலீஜை வாரிக் கொட்டினு இருக்கோம். இதெல்லாம் எங்களுக்கு செஞ்சி தந்தா நாங்களே பாத்துக்குவோமில்லே. பத்திரிகைல எழுது சார்.. எதுனா நடக்குதா பாக்கலாம்”

வீரய்யாவுடன் பேசி விட்டு அருகில் இருந்த தெருவில் நுழைந்தோம். நிறைய சிறுகடைகளும் மக்கள் நடமாட்டமும் மிகுந்த அந்தப் பகுதியின் சாலை ஏராளமான பொத்தல்களோடு மழை நீரும் சகதியுமாய்க் காட்சி தந்தது. செருப்புக் கடை ஒன்றின் முன் நின்று கொண்டிருந்த இசுலாமிய பெரியவரை அணுகினோம். அவர் ஷாகுல் ஹமீது. அறுபது வயது. பதினேழு ஆண்டுகள் சவுதியில் வேலை பார்த்து விட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பியிருக்கிறார். இந்துத்துவ அரசியல் குறித்து பேச்சை ஆரம்பித்தோம்.

அரும்பாக்கம் பாய்
“எங்க தம்பி இந்து முசுலீம் பிரச்சினை இருந்தது? எல்லாம் அண்ணன் தம்பியாத்தேன் பழகிக்கிட்டிருந்தோம்.”

”அந்தக் காலத்துல எங்க தம்பி இந்து முசுலீம் பிரச்சினை இருந்தது? எல்லாம் அண்ணன் தம்பியாத்தேன் பழகிக்கிட்டிருந்தோம். எல்லாம் அரசியல் தம்பி. ஓட்டு வாங்கி ஜெயிக்க செய்யிற சூழ்ச்சி. இப்ப செயிச்சி என்னா செய்யிறாரு? நம்ம காசுல உலகமெல்லாம் சுத்திக்கிருக்காரு… அதானே?”

”அவர் இந்துத்துவா மட்டும் பேசலையே… கருப்புப் பணத்தை கொண்டாந்துருவோம்னு கூட சொன்னாரில்லையா?”

”எங்க கொண்டாந்தாய்ங்க? சும்மா சவுண்டு மட்டும் தான் விட்டாய்ங்க? இப்ப அவுக ஆட்சி தானே? அதிகாரம் அவுக கையில தானே இருக்கு.. எல்லம் பொட்டி தான் தம்பி. அவுகளுக்கு ரெண்டு பொட்டி வந்து சேர்ந்திருக்கும்.. அதான் இப்ப பேச்சு மூச்சையே காணல. சரிதானே தம்பி நான் சொல்றது?”

செருப்புக் கடை வியாபாரம் போதாமல் பக்கத்திலேயே ஒரு சின்ன மேசையைப் போட்டு அதன் மேல் கறிகாய்கள் கூறு கட்டி வைத்திருந்தார். பொட்டலம் பத்து ரூபாய். இடையிடையே கடந்து செல்லும் பெண்களில் சிலர் அந்தப் பொட்டலங்களைப் புரட்டிப் பார்த்துச் சென்றனர்.

“யாவாரம் முன்னெ மாதிரி இல்ல பாத்துக்கிடுங்க. இந்த மாதிரி எதுனா செய்தா தான் ஓட்ட முடியுது. நான் சவுதில சம்பாதிச்ச காசெல்லாம் பிள்ளைங்க கல்யாணத்துல போட்டு முடிச்சிட்டேன். இன்ஷா அல்லாஹ் அவங்க எந்த குறையும் இல்லாம இருக்காங்க. ஏதே வயசான காலத்துல நாம சாப்பிடக் கொள்ள சம்பாதிச்சா போதுமின்னு தான் பார்க்கிறேன்” எங்கோ பாங்கு ஒலிக்கும் சப்தம் கேட்க, அந்த திசை நோக்கித் திரும்பியவர்  நம்மிடம் திரும்பினார்.

”பாய்.. மோடி வந்த பின்னால வர்ற திட்டமெல்லாம் வித்தியாசமா இருக்குன்னு சொல்றாங்களே. இப்ப பாருங்க கேஸ் மானியத்தை பேங்க் அக்கவுண்ட்ல போடப் போறோமின்னு சொல்றாங்க…”

”என்னத்த வித்தியாசம்.. காலைல வீட்ல சம்சாரம் கூட வஞ்சிகிட்டு கெடந்தா. ஒரு மாசம் தருவான் ரெண்டு மாசம் தருவான்.. அதுக்கு மேல வருமின்னு என்னா கேரண்டி தம்பி? நமக்குத் தெரிஞ்ச ஆளு இந்தியன் பேங்குல மேனேஜரா இருக்காரு. அவரு என்னா சொல்றாருன்னா.. கவுருமெண்டு நாலு மாசம் காசு தருவான் அப்புறம் லேட்டா தருவான்.. அப்புறம் நிப்பாட்டுவான். மக்கள் எங்களைத் தானே வந்து மொய்க்கப் போறாய்ங்கன்றாரு.. காசு வரல்லேன்னு எவனாவது கல்லை விட்டு கண்ணாடிய ஒடைச்சிட்டா என்னா செய்யறதுன்னு பொலம்புறாரு… இதெல்லாம் தேவையில்லாத வேலை தம்பி. எதுக்கு இப்படி சுத்தி வளைக்கனும், எப்பயும் மாதிரி 450 ரூபாவுக்கே சிலிண்டரை கொடுத்துட்டுப் போக வேண்டியது தானே? முட்டாத்தனமான அய்டியாவா இருக்கே தம்பி. சரிதானே?”

பாயிடம் பேசிக் கொண்டிருந்த போது தலையில் ஸ்பீக்கர் கட்டிய ஆட்டோ ஒன்று தெருவில் நுழைந்தது. ஸ்பீக்கரில் இருந்து கண்டிப்பான குரல் ஒன்று நிதானமாக வழிந்து கொண்டிருந்தது. இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்களை ‘டிபிடிஎல்’ என்கிற மானிய ஒழிப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக வரக் கோரிய ஸ்பீக்கர் குரல், அதற்க்கான இறுதிக் கெடுவாக ஜனவரி ஒன்றாம் தேதியை குறிப்பிட்டது. நாங்கள் ஆட்டோவில் இண்டேன் அதிகாரியைத் தேடினோம், ஓட்டுனர் மட்டுமே இருந்தார்.

”அண்ணே, மானியத் தொகையை வங்கிக் கணக்குல போடப் போறதா சொல்றாங்களே.. வங்கி கணக்கு இல்லாதவங்க என்னா செய்யனும்? வங்கிக் கணக்கு ஆரம்பிக்க குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்கனுமே, மாசக் கடைசில மக்கள் என்னா செய்வாங்க?” ஆட்டோ ஓட்டுனர் ராஜூவிடம் வினவினோம்.

இண்டேன் அறிவிப்பு
“ஏதோ துட்டு வருதேன்னு நானும் ஒத்துகிட்டு வந்தேன். இங்க பாத்தா ஜனங்க ஆளாளுக்கு பிலுபிலுனு பிடிச்சிக்கிறாங்க. “

”அய்யோ சார்… காலைலேர்ந்து இதே தொண தொணப்பு சார். இண்டேன் கம்பேனி அதிகாரிகள் கூப்பிட்டு ’இந்தா மாதிரி ஸ்பீக்கர் கட்டிக்கினு இந்தா மாதிரி ஏரியாவுக்கு இன்ன நேரத்துக்கு ரவுண்ட் அடிச்சிட்டி வா’ அப்டினு சொன்னாங்க. வேற எந்த விவரமும் சொல்லலை. ஏதோ துட்டு வருதேன்னு நானும் ஒத்துகிட்டு வந்தேன். இங்க பாத்தா ஜனங்க ஆளாளுக்கு பிலுபிலுனு பிடிச்சிக்கிறாங்க. எனுக்கு பேங்குன்னா இன்னா தெரியும்… ரூல்சுன்னா இன்னா தெரியும் சொல்லுங்க சார்” ராஜூ சலித்துக் கொண்டார்.

”மக்கள் என்ன சார் செய்வாங்க. ஆமா, அதிகாரிகள் அடிப்படையான விவரங்கள் கூடவா சொல்லி விடலை?”

”அவனுக்கு இன்னா சார் ஜனங்க பத்தியா கவலை? ஜனவரிக்குள்ளே திட்டத்தை மாத்தனும்னு பாக்கறானே கண்டி எவன் செத்தா என்ன வாழ்ந்தா என்னா”

”நீங்க இந்த திட்டத்தில சேர்ந்தாச்சா?”

“இன்னும் இல்ல சார். எங்க ஏரியாவுல எல்லாரும் என்ன செய்யிறாங்கன்னு பார்த்துட்டு அப்பால சேர்லாம்னு இருக்கேன்”

“நாலஞ்சி மாசம் காசு கொடுத்துட்டு அப்புறம் அதை குறைச்சாலோ நிறுத்தினாலோ என்னா செய்வீங்க? சந்தை விலைக்கு வாங்க பழக்கப்படுத்திட்டு பின்னாடி காலை வாரி விட்டாங்கன்னா?”

“என்னா செய்ய முடியும் எல்லாம் அவன் கால்லே போய் விழ வேண்டியது தான்” இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக் காட்டினார்.

நாங்கள் ராஜூவைப் புகைப்படம் எடுத்து விட்டு ஆட்டோ அறிவிப்பை வீடியோவாகவும் பதிந்து கொண்டோம். நாங்கள் புகைப்படம் எடுப்பதையும், ராஜூவிடம் பேசியதையும் கண்ட பகுதிப் பெண்கள் எங்களை அதிகாரிகள் என்று கணித்து சூழ்ந்து கொண்டனர்.

அரசு பற்றி அரும்பாக்கம்”சார்.. வூட்டுக்காரர் வெளியூர்ல கீறாரு.. எப்டி அக்கவுண்டு தொறக்கணும்னு எனுக்குத் தெரியாதே சார்”

“இப்டி திடீர்னு வந்து ஒண்ணந்தேதிக்குள்ற மாத்துன்னா எப்டி சார் மாத்துறது? கைலேர்ந்து தொள்ளாயிரம் ரூபா போட்டா எப்ப சார் மிச்ச காச கொடுப்பீங்க?”

”சார் எனுக்கு பேங்குல போய் பாரம் பில் பண்ணவே தெரியாதே சார்”

“ஜனங்க பாடு ஒங்களுக்கு எங்க தெரியப் போவுது.. எல்லாம் வாரிக்கினு போய்டும் சார்”

”நீயே வூட்டுக்கு வந்து பாரு… எம்புருசங்காரன் மொண்டி சார்.. ஏன் சார் எங்கள அலைய வுடுறீங்க? நல்லா இருப்பீங்களா சார் நீங்க?”

ஆத்திரக் குரல்களிடம் நாங்கள் அதிகாரிகள் இல்லையென்பதையும், வினவு தளம் பற்றியும் விளக்கினோம். குரல்களின் தன்மை இப்போது மாறியது.

”சார் பத்திரிகைல இந்த அநியாயத்த எழுது சார். பால் வெலைய ஏத்தி இப்பல்லாம் நாங்க பாலே வாங்கறதில்ல சார். மண்டவெல்ல காப்பி தான். இப்ப கேசு வெலையும் ஏத்தினா இன்னாசார் பண்ண முடியும்? எப்டி சார் குடித்தனம் பண்ண முடியும்?”

அரசு பற்றி அரும்பாக்கம்

”இப்பயே ரெண்டு வேளை ஒலை போட்ட செலவுன்னு ஒரு வேளைக்கு ஒலை வச்சி நைட்டு வரைக்கும் அத்தையே துண்றோம்.. இனி சிலிண்டரு வெலையும் ஏத்தினா இன்னா சார் பண்ண முடியும்?”

அவர்களிடம் விடை பெற்று கிளம்பினோம். அவர்கள் தங்களுக்குள் ஆத்திரத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தனர்.

மோடியின் செயல்பாடுகள் மட்டுமின்றி மொத்தமாக அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்றிருந்தனர். அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினரிடமும் இந்தக் கோபம் வெளிப்பட்டது. சிலர் மோடி என்றதுமே வசைபாடத் துவங்கினர்.

“கோட்சேவை பாராட்டிப் பேசினவன் நாக்கை அறுக்க வேணாம்? அதெப்படி சார் செத்தவனும் நல்லவன் அவனைக் கொன்னவனும் நல்லவனா இருக்க முடியும்? பார்லிமெண்டுக்கு போயிருக்கிற நம்மா என்னா மயித்தைப் புடிங்கிட்டு வாறாங்க” என்றார் சவரி முத்து. அறுபது வயதான இவர் பேப்பர் மில் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

முசுலீம் மக்களை தனிமைப்படுத்தி இந்து ஓட்டு வங்கியை வளர்க்கும் பாரதிய ஜனதாவின் திட்டத்தை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்..

“எல்லாம் ஓட்டு வாங்கத் தான் பாஸ். ஆடுங்க முட்டிக்கிட்டு செத்தா ஓநாய்க்குத் தானே லாபம்? அவங்கவுங்க அவங்கவுங்க சாமிய கும்பிட்டு போறதிலே இவனுக்கு என்ன வலிக்குது? அவனும் நம்மளை மாதிரித் தானே பாஸ் கஷ்டப்படுறான்? மோடி வந்தா எதாவது டெவலப்மெண்ட் வரும்னு நினைச்சேன். டாக்ஸ் கம்மி பண்ணுவாப்லனு சொன்னாங்க. இப்ப பாத்தா தேவையில்லாத வம்பு இழுத்துகிட்டு இருக்காரு. இதெல்லாம் சரியில்ல பாஸ். சீக்கிரம் ஒழிஞ்சி போறதுக்கு வழி இது” ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் முப்பது வயது இளைஞர் செல்வகுமாரின் அங்கலாய்ப்பு இது.

அரும்பாக்கம் மத நல்லிணக்கம்
தாஜ்மகாலை சிவன் கோயில் என்றும் பாரதிய ஜனதா சொல்வதைக் கேட்டு பலரும் எள்ளி நகையாடினர்.

தாஜ்மகாலை சிவன் கோயில் என்றும் பாரதிய ஜனதா சொல்வதைக் கேட்டு பலரும் எள்ளி நகையாடினர். கருப்புப் பண விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் பல்டிகளைப் பார்த்து நடுத்தர வர்க்கம் ஏமாந்து போனது நன்றாகவே புலப்பட்டது. தாங்கள் நம்பவைத்துக் கழுத்தறுக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

என்றாலும், மக்களின் ஆத்திரமெல்லாம் ஓட்டுக் கட்சிப் போலி ஜனநாயகத்திற்கு மாற்று ஒன்றைத் தேடும் இல்லாமல் இலக்கில்லாத கோபமாகவே இருக்கிறது. சிலர் அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்ததும் சலிப்போடு ஒதுங்கிச் செல்ல முற்பட்டனர். விடாது நெருக்கிக் கேட்டால் அவர்கள் மோடியைப் புதிய ரட்சகராக எதிர்பார்த்து ஏமாந்தவர்களாக இருந்தனர். எப்படியிருந்தாலும், மக்களின் ஏமாற்றமும் அந்த ஏமாற்றம் விளைவித்த ஆத்திரமும் சரியான வழியில் நடத்திச் செல்லப்படுவதற்காக காத்திருக்கிறது.

– வினவு செய்தியாளர் குழு.

கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!

2

பால் விலை உயர்வை அடுத்து எந்நேரத்திலும் மின் கட்டண உயர்வு தமிழக மக்களின் தலையில் இறங்கக் காத்திருக்கிறது. கொஞ்ச நஞ்சமல்ல, ஏறத்தாழ 6,805 கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை அறிவித்திருக்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இது குறித்துத் தமிழகத்தின் மூன்றே மூன்று நகரங்களில் மட்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற நாடகத்தையும் நடத்தி முடித்துவிட்டது.  தமிழகத்திலுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தக் கட்டண உயர்வின் பெரும்பகுதியைத் தமிழக மக்களும், சிறு உற்பத்தியாளர்களும்தான் சுமக்க வேண்டியிருக்கும். அதுவும் சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாடகை வீட்டில் வசித்துவரும் குடும்பங்கள் மீது விழப்போகும் மின் கட்டண சுமை அச்சமூட்டக்கூடியதாகவே இருக்கும்.

07-electricity-charges-meetingசென்னை, நெல்லை, ஈரோடு ஆகிய மூன்று நகரங்களில் ஆணையம் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டங்களில், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்  தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் இக்கட்டண உயர்வின் பின்னே உள்ள தனியார்மய பகற்கொள்ளையை அம்பலப்படுத்தியது, அதற்குப் பொதுமக்கள் பெருத்த ஆதரவைத் தந்தது மற்றும் இக்கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஆகியவை காரணமாக இக்கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ 6,854 கோடி ரூபாயாக இருக்குமென்றும், அதனை ஈடு செய்யவே இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக ஆணையம் விளக்கமளித்திருக்கிறது. ஜெயா முதல்வராகப் பதவியேற்றவுடனேயே மின்சாரத் துறையை முந்தைய தி.மு.க. அரசு நட்டத்தில் தள்ளவிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, அதனை ஈடு செய்ய 37 சதவீதக் கட்டண உயர்வைச் சுமத்தினார். அதன் பிறகும் நட்டம் குறையவில்லையென்றால், அதற்கு என்ன காரணம், யார் பொறுப்பு என்ற கேள்விகளுக்கு ஆணையமும் விளக்கம் அளிக்கவில்லை; ஜெயாவின் பினாமி அரசும் பதில் தரவில்லை.

தமிழக மின்சார வாரியம் இதற்கு முன்பு நட்டமும் அடைந்திருக்கிறது, இலாபமும் சம்பாதித்திருக்கிறது. அப்பொழுது ஏற்பட்ட நட்டத்திற்கு மின் கடத்தலில் ஏற்படும் இழப்பு, மின் திருட்டு, அதிகாரிகளின் ஊழல் உள்ளிட்டுப் பல காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்கள் இப்பொழுதும் நீடித்தாலும், மின் வாரியம் தற்பொழுது சந்தித்துவரும் நட்டம் அதன் தன்மையிலேயே வேறானது. காட் ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து மின்சார உற்பத்தியில் தனியார் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிகவிலை கொடுத்து வாங்குவதற்கு ஏற்பச் சட்டமியற்றப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் தடையற்ற மின்சாரம் வழங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு என்ற இந்த நச்சுச்சுழல்தான் தமிழக மின்வாரியத்தை 2001-02-ம் நிதியாண்டிலிருந்து தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வரும் கட்டமைப்பு நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. அதனால்தான் எத்துணை முறை கட்டண உயர்வை அறிவித்தாலும், இந்த நட்டம் தொடர்கதையாகிவிட்டது.

தனியார் மின்உற்பத்தியாளர்கள், அவர்கள் போட்டுள்ள மூலதனத்தை நான்கே ஆண்டுகளில் எடுத்துவிடும்படி அவர்களிடமிருந்து பெறப்படும் மின்சாரத்திற்குக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இதற்கு அப்பால், அவர்களுக்குத் திறன் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுதோறும் தனியாக மொய் எழுத வேண்டும் என மின்சாரச் சட்டம் வரையறுக்கிறது. இப்படிபட்ட தனியாருக்குச் சாதகமான, மக்களுக்கு அநீதியான சட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட மின்வாரியங்கள் இலாபத்தில் இயங்குவதற்கான சாத்தியமுண்டா? மேலும், இச்சட்டம் மின்சாரத்தை மானிய விலையில் வழங்கக்கூடாது என்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் உற்பத்திச் செலவுக்கேற்ப அதன் கட்டணத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்குகிறது. இதன் பொருள், மின் வாரியம் நட்டத்தில் இயங்கினாலும், இலாபத்தில் நடந்தாலும் ஆண்டுதோறும் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்பதுதான்.

தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக பத்து ரூபாய் கொடுத்து வாங்குகிறது. இது தவிர்த்து, தனது சொந்த மின்நிலையங்கள், மைய அரசுக்குச் சொந்தமான மின்நிலையங்களிடமிருந்தும் மின்சாரத்தைப் பெறுகிறது. இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு ரூ.6.14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் இயங்கி வரும் 29 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ஐந்து ரூபாய்க்கு விற்கிறது, மின் வாரியம்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ பெற்றுக்கொள்ள கம்பித் தடங்களைப் பெற்றிருக்கும்பொழுது, தமிழக மின்வாரியம் இவர்களுக்குப் பத்து ரூபாய் மின்சாரத்தை ஐந்து ரூபாய் மானிய விலையில் வழங்க வேண்டிய அவசியமோ, அதனால் ஏற்படும் நட்டத்தைச் சுமக்க வேண்டிய தேவையோ கிடையாது. ஆனாலும், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக மின் வாரியத்தை நட்டத்தில் தள்ளிவிடுகிறார்கள், ஆட்சியாளர்கள்.  மின் வாரியத்தின் நட்டம் மின் கட்டண உயர்வாகத் தமிழக மக்களின் மீது சுமத்தப்படுகிறது.

ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவோம் எனச் சவடால் அடித்த ஜெயாவின் இந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் மின் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை. அதேசமயம் இந்த மின்பற்றாக்குறையைக் காட்டி வெளிமாநிலங்களிலுள்ள வணிக மின் உற்பத்திக் கழகங்களிடமிருந்து 3,800 மெகாவாட் மின்சாரத்தை வாங்கும் நீண்ட கால ஒப்பந்தங்களை கடந்த ஆகஸ்டு மாதம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களின் காலத்தையும் நீட்டித்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் ஏற்ப, தமிழகத்தில் கட்டப்படும் அரசுத் துறை மின் உற்பத்தித் திட்டங்கள் ஆமை வேகத்தில் நகர்த்தப்படுகின்றன. தமிழக மின்வாரியம் தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வருவதற்கும், மின் கட்டண உயர்வு வாடிக்கையாகிவிட்டதற்கும் பின்னால் உள்ள உண்மைகள் இவைதான்.

– சுடர்
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________