ராமன் கோவில் திறப்பு என்ற பெயரில் பாசிசக் கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் சகித்துக்கொள்ள முடியாதவையாக உள்ளன. அரசு இயந்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நாடு முழுவதும் மதவெறியைக் கிளப்பி வருகிறது இக்கும்பல். பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்தும் காவி பாசிஸ்டுகளுக்கு சேவகம் புரிவதற்கான ஏற்பாடுகளை முனைப்பாக செய்து வருகின்றன. ஆனால், எப்போதும் போல இவர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்களாக உழைக்கும் மக்கள்தான் உள்ளனர்.
மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை
அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளும் ராமன் கோவில் திறப்பு காரணமாக 22-ஆம் தேதி 2:30 மணி வரை மூடப்படும் என்று ஜனவரி 20-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் இந்த முடிவை திரும்ப பெற்றுள்ளது.
மருத்துவமனைகள் மூடப்படுவதால் டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் மட்டும் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெறும் 32,000 நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என “தி வயர்” இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களின் உயிரை காவிக்கும்பல் எப்படி பார்க்கிறது எனபதற்கு இது சிறந்து சான்று.
அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 22-ஆம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மதியம் 2.30 மணிக்கு முன் உள்நுழைய தேவையில்லை என அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
சில மாநிலங்களில் முழு நாள் விடுமுறை
பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம், கோவா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தராகண்ட், திரிபுரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்களில் முழு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களும் இதே போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இதற்கிடையில், நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசும் விடுமுறை அளித்துள்ளது.
இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மக்களை மதவெறிக்குள் மூழ்கடிப்பதற்கான ஏற்பாடுகள்தான்.
இந்திய ரிசர்வ் வங்கியும் ஜனவரி 22-ஆம் தேதி பண சந்தைகள் மூடபடும் என்று அறிவித்துள்ளது. அரசாங்கப் பத்திரங்கள் (முதன்மை மற்றும் இரண்டாம் நிலை), அந்நியச் செலாவணி, பணச் சந்தைகள் மற்றும் ரூபாய் ஆகியவற்றில் எந்தவிதமான பரிவர்த்தனைகள் மற்றும் செட்டில்மென்ட்கள் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கூடுதலாக, தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையும் ஜனவரி 22 அன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தம் செய்யப்படும் கோவில்கள்
ஜனவரி 22-ஆம் தேதி ராமன் கோவில் திறப்பை முன்னிட்டு ’தூய்மை இயக்கம்’ ஒன்றை மோடி தொடங்கி வைத்துள்ளார். இது நாடு முழுவதும் உள்ள கோவில்களை சுத்தம் செய்வதற்கான இயக்கம். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கலாராம் கோவிலில் சுத்தம் செய்வது போல வீடியோ எடுத்து தன் அதிகார்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருந்தார் மோடி.
அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. முதல்வர்கள், ஆளுநர்கள் என ஒட்டுமொத்த காவிக்கும்பலும் இதேபோன்ற ”துடைத்த தரையை துடைப்பது” போன்ற படங்களைப் பதிவேற்றத் தொடங்கியது.
மும்பை நகரத்தின் உலகின் பணக்கார குடிமை அமைப்புகளில் ஒன்றான பிரஹான் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன், கோவில் வளாகங்களைசுத்தம் செய்யும் இதேபோன்ற இயக்கத்தில் பங்கேற்க மக்களையும் அழைத்துள்ளது. ஆனால் உண்மையில் மும்பை நகரம் 10 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகளுடன் உலகின் 10 அசுத்தமான பெரிய நகரங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குப்பையெல்லாம் அவர்கள் கண்களுக்கு தெரியாது போலும்.
இறைச்சிக் கடைகள் அடைப்பு
ராஜஸ்தான் பா.ஜ.க அரசு, ஜனவரி 22-ஆம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்து பண்டிகைகளையொட்டி இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என அடிக்கடி வன்முறைகள் நடைபெறுவதே இந்த அறிவிப்புக்கான காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறது பா.ஜ.க அரசு. வன்முறைகளில் ஈடுபடுவதும் இதே பா.ஜ.க-வின் குண்டர்படை தான் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
மின்சார சேவை
மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஏ.கே சர்மா, ராமன் கோவிலில் நடைபெறும் விழா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளின் போதும் “தடையின்றி உயர்தர மின்சாரம் வழங்கப்படுவதை” உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ஒத்திகை நடத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் அதேசமயம், நாடு முழுவதும், குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் தென் மாநிலங்களில் மின்வெட்டு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா முழுவதும் குறிப்பாக ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ராமன் கோவில் திறக்கப்படும் அதே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா செக்டார் 53-இல் மின்வெட்டு காரணமாக கடுமையான குளிரில் சிக்கித் தவிக்கும் மக்கள் ஹீட்டர்களை இயக்க முடியாமல் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 முதல் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலவச ரயில் சேவை
சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு அயோத்தி யாத்திரைக்கு ஆர்வமுள்ள மக்களுக்கு இலவச ரயில் பயணத்திற்கான அனுமதியை அளிப்பதாக அறிவித்துள்ளது. சத்தீஸ்கரின் புதிய முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஜனவரி 10-ஆம் தேதி இந்த முடிவை அறிவித்தார்.
ஆனால் இதே இந்த இந்திய ரயில்வே துறைதான் இதற்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டிகளை அதிகரிப்பதற்காக, பொதுப்பெட்டிகளை குறைத்தது. இதனால், முக்கியமாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கழிவறைகளில் அமர்ந்து வர வேண்டிய அவலநிலைக்குக் கூட மக்கள் தள்ளப்பட்டனர். இப்போது ராமன் கோவில் செல்ல மட்டும் இலவச ரயில் சேவை வழங்கப்போகிறார்களாம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்பாக ராமன் கோவில் திறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் ஆர்ப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இது ‘இந்து’ மத மக்களின் உணர்வாக அன்றி பாசிசக் கும்பலின் கொண்டாட்ட நாளாகவே அமைந்துள்ளது. இந்நாளுக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலும் அதன் சங்கப்பரிவார அமைப்புகளும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அதற்கான நாசகர வேலைகளை பார்த்துவந்துள்ளன. அதேசமயம் இன்று ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதற்கு பின்னால் வரலாறு நெடுக இந்திய நீதிமன்றங்களின் செய்துவந்த கரசேவை ஒளிந்துள்ளது.
1950-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது என இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த தொடர் அநீதியில் இந்திய நீதிமன்றங்களின் துரோகங்களின் பங்கு முக்கியமானது. 1949-இல் மசூதிக்குள் ராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது முதல் பாபர் மசூதி இருந்த இடம் ராமர் கோவில் கட்ட தாரைவார்க்கப்பட்டது வரை பாபர் மசூதி மீதான இந்துமதவெறியர்களின் ஆதிக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நீதித்துறையால் அது அங்கீகரிக்கப்பட்டது என்பதே உண்மை.
பைசாபாத் சிவில் நீதிமன்றத்தின் கரசேவை:
1949 டிசம்பர் 22 அன்று, பைசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் நகர மாஜிஸ்திரேட் ஆகியோரின் ஒத்துழைப்போடு பாபர் மசூதிக்குள் இந்து மதவெறி கும்பலால் ராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது. இந்நிகழ்வுதான் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டதற்கும் கலவரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை அப்புறப்படுத்திவிட்டு காவி குண்டர்களை தூக்கி சிறையில் வைப்பதற்கு பதிலாக, அயோத்தியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக்கூறி நிர்வாக மாஜிஸ்திரேட்டின் உத்தரவின்பேரில் மசூதி வளாகம் முனிசிபல் வாரியத்தின் பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து, ஜனவரி 1950-இல் மசூதியின் நுழைவாயில் நகராட்சி வாரியத்தால் பூட்டப்பட்டது. இந்நாளில்தான், பாபர் மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு முடிவுரை எழுதப்பட்டது. அதன்பிறகு மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வாய்ப்புகள் வழங்கப்படவே இல்லை.
1950-களில் மசூதி வளாகத்தில் ராமரை வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உள்ளே இருக்கும் சிலைகளை அகற்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1951-ஆம் ஆண்டில் காவி குண்டர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பைசாபாத் சிவில் நீதிமன்றம், சிலைகளை அகற்றக்கூடாது என்றும் மசூதியின் வெளிப்புற முற்றத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யலாம் என்றும் அயோக்கியத்தனமாக உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை 1955-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இத்தீர்ப்பு பாபர் மசூதியை இஸ்லாமிய மக்களிடமிருந்து பிடுங்கி காவி பாசிஸ்டுகளின் கரங்களில் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியது.
1959-ஆம் ஆண்டில், நிர்மோஹி அகாரா என்ற இந்து மதவெறி பிரிவினரும் சாமியார் ரகுநாத் தாஸும் பாபர் மசூதி நிலத்தின் உரிமையைக் கோரியும் அதனை கோயிலாக நிர்வகிக்கக் கோரியும் வழக்குத் தொடர்ந்தனர். 1961-ஆம் ஆண்டில், நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கட்டடத்தை மசூதியாக அறிவிக்க வேண்டும் என்றும் சன்னி மத்திய வக்ஃப் வாரியம் கோரியது. அடுத்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தன.
1986-ஆம் ஆண்டில், மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக உத்தரவு பிறப்பித்த பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் மசூதியின் கதவுகளைத் திறக்க உத்தரவு பிறப்பித்து வளாகத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய மசூதியை திறந்துவிட்டு இஸ்லாமிய மக்களுக்கு துரோகமிழைத்தது. இதற்காக, கடந்த 35 ஆண்டுகளாக மசூதி வாயிலில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ததையும் அந்தக் காலகட்டத்தில் (மசூதி பூட்டப்பட்டு வெளிப்புற முற்றத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்கப்பட்ட காலம்) முஸ்லிம்கள் தொழுகை நடத்தவில்லை என்பதையும் கூறி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதித்த தனது தீர்ப்பை நியாயப்படுத்த முயன்றது நீதிமன்றம். மேலும், மசூதியின் பூட்டைத் திறப்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்காது என்றும் மசூதி பூட்டப்பட்டிருப்பது கடவுள் சிலையிடருந்து பக்தர்களைப் பிரிக்கிறது என்றும் கரசேவை புரிந்தது.
இதற்கிடையே, டிசம்பர் 1990-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளால் பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டு அவ்விடத்தில் தற்காலிக கோவில் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து 1993-ஆம் ஆண்டில் பாபர் மசூதி நிலத்தை கையகப்படுத்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசரச் சட்டம் இயற்றியது. அதே ஆண்டில் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த அவசர சட்டம், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யும் தற்போதைய நிலை பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் சொத்து தொடர்பான அனைத்து வழக்குகளும் குறைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு 1993-இல் 3:2 பெரும்பான்மையுடன் வழங்கிய தீர்ப்பில், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை உறுதிப்படுத்தியது. ஆனால், நிலுவையில் உள்ள வழக்குகளைத் தடுக்கும் விதியை ரத்து செய்தது. இதன் விளைவாக, நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
இதற்கிடையே பாபர் மசூதி நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 1989-இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. அவ்வழக்குகளையொட்டி 2010-இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் மோசடியான ஒரு தீர்ப்பை வழங்கியது. நிலத்தை மூன்றாகப் பிரித்து, சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா (இந்துமதவெறி அமைப்பு) மற்றும் ராமர் சிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையாளரான ராம் லல்லா விராஜ்மான் ஆகியோருக்கு தலா ஒரு பங்கைக் கொடுத்தது. இடிக்கப்பட்ட மசூதியின் பிரதான குவிமாடத்தின் கீழ் உள்ள நிலம் இந்துக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. நிலத்தின் வெளிப்புற முற்றமே வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த முடிவை பலரும் விமர்சித்து எதிர்த்தனர். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலராலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதனையடுத்து, 2011-இல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அடுத்த பல ஆண்டுகளுக்கு இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு
ஜனவரி 2019-ஆம் ஆண்டு இவ்வழக்கை தூசிதட்டி எடுத்த அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த மோடி அரசின் சேவகனான ரஞ்சன் கோகோய் இவ்வழக்கை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்தார்.
2019 மார்ச் மாதத்தில், இவ்விவகாரத்தில் தீர்வை எட்டுவதற்கு மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா, மூத்த வழக்கறிஞரான ஸ்ரீராம் பஞ்சு மற்றும் ஆன்மீகத் தலைவர் என்ற பெயரில் திரியும் மோசடிக்காரனும் சங்கியுமான ரவிசங்கர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழுவை நீதிமன்றம் அமைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஏமாற்று முயற்சி பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நீதிமன்றம் தினசரி விசாரணையைத் தொடங்கியது. இறுதியாக நவம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 1949-இல் மசூதிக்குள் ராமன் சிலையை வைத்தது மற்றும் 1992-இல் பாபர் மசூதியை இடித்தது ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்று கூறிவிட்டு, நிலத்தின் உரிமையை ராம் லல்லா விராஜ்மானுக்கு நீதிமன்றம் வழங்கி காவி பாசிஸ்டுகளுக்கு தங்களது உச்சக்கட்ட கரசேவையை புரிந்தது. அதேசமயம் இஸ்லாமியர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்த அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்துக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு நாடகமாடியது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடித்தது குற்றம் என்று கூறிவிட்டு குற்றம் நடந்த இடத்தில் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது அயோக்கியத்தனமானது என்றும் பாபர் மசூதியை இந்துமதவெறியர்கள் அபகரித்ததை உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக்கிவிட்டது என்றும் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்கள் உச்சநீதிமன்றத்தின் மீதிருந்த தங்களது கடைசி துளி நம்பிக்கையையும் இழந்தனர்.
மேலும், சட்ட ரீதியாகவும் இந்த தீர்ப்பில் பல்வேறு ஓட்டைகளும் குளறுபடிகளும் இருந்தன. இந்திய வரலாற்றில் தீர்ப்பு எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாத ஒரே தீர்ப்பு இந்த தீர்ப்பேயாகும். மேலும், நீதிபதிகள் அமர்வில் பெயர் குறிப்பிடாத நீதிபதி ஒருவரின் கூடுதல் சேர்க்கையும் இத்தீர்ப்பில் இருந்தது. இதனை இந்தியாவிலுள்ள கணிசமான சட்ட வல்லுநர்கள் அம்பலப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பையடுத்துதான் தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்துராஷ்டிரத்தின் திறவுகோலாக கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோவில் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சம் ஏற்படுத்தப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலின் இந்துமதவெறியாட்டங்களோடு பாசிச கும்பலுக்கு கரசேவையாற்றிய நீதிமன்றங்களின் துரோகமும் அயோக்கியத்தனங்களும் இணைந்துள்ளன.
இந்து மதவெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இருந்தும் அன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட பயபீதி இன்று முன்பைக் காட்டிலும் மேலோங்கியுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி, ராமன் கோவில் திறப்பு விழாவின் போது, “பயணத்தை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே இருப்பது” என்ற மனநிலைக்கு அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் வந்திருக்கின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என்பது அந்த ஒருநாளில் கரைந்து போகக்கூடிய விஷயம் அல்ல. ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு, இன்னும் மூர்க்கமாகவும் கொடூரமாகவும் முஸ்லிம் மக்கள்மீது மதவெறி தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்படும். இதுகுறித்து அயோத்தியில் தற்போது வசித்துவரும் முஸ்லிம் மக்களின் மனநிலை என்ன என்பதை அவர்களின் அனுபவங்கள் வாயிலாகக் காண்போம்.
தற்போது ராமன் கோவில் திறப்பு விழா குறித்தும் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்தும் நினைவு கூர்கிறார் இரண்டு குழந்தைகளின் தாயான சபா காலித்.
“டிசம்பர் 6, 1992 அன்று லக்னோவில் உள்ள எங்களது வீட்டிற்கு 100 கி.மீ. தொலைவில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியை மரண பீதியுடன் கேட்டோம். அன்று எனக்கு வயது 10.
இந்து குடும்பங்கள் சூழ்ந்திருக்க நாங்கள் மட்டும்தான் முஸ்லிம். ஆனால், இதற்கு முன்பு இதுபோல் ஒருபோதும் யோசித்து பார்த்ததில்லை. ’யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்’ என தாத்தா கூறினார். நாங்கள் எலிகளை போல அமைதியாக பல நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தோம்.
கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது, ரயில்கள் தீவைத்து எரிக்கப்படுவது என அடுத்தடுத்து வந்த செய்திகளால் நாங்கள் பீதியுற்றோம். இதை இப்போது நினைவு கூரும்போதே என் உடல் நடுங்குகிறது. இதற்கு முன்பு நாங்கள் எங்கள் உயிருக்கு ஒருபோதும் பயந்ததில்லை. அந்த உணர்வை விவரிக்க முடியாது. நல்வாய்ப்பாக, நாங்கள் வசித்து வந்த பகுதியில் இந்துமத வெறி ஊட்டப்பட்டவர்கள் யாரும் இல்லை. இருந்தும் நாங்கள் அந்நியப்படுத்தப்பட்டோம்” என்கிறார் சபா காலித்.
30 வருடங்களுக்கு பிறகு தற்போதும் முஸ்லிம் இந்துக்கள் சேர்ந்து வாழும் பகுதியில்தான் சபா காலித் வசித்து வருகிறார். சபா காலித்தின் வீட்டின் கதவில் குரான் வசனம் எழுதப்பட்டிருப்பதை பார்த்தும், ராமன் பாடலை பாடியபடியே, அயோத்தியில் ராமன் கோவில் கட்ட காவிக்கொடியுடன் கதவை தட்டி நன்கொடை கேட்டுள்ளனர்.
“எனது இரண்டு குழந்தைகளும் சிறுவர்களாக இருப்பதால், பயபீதியை ஏற்படுத்தக்கூடாது என பாபர் மசூதி இடிப்பு பற்றி அவர்களுக்கு சொல்லவில்லை. ஆனாலும் வெளி உலகம் அவர்களுக்கு கற்பித்துவிடுகிறது. அவர்கள் பள்ளிக்கூடத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இந்துமதம் சார்ந்ததாகவே இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது 12 வயது மகனின் வகுப்பு மாணவன் ஒருவன், தன் பெற்றோர் இந்துக்களுடன் மட்டுமே நட்பு கொள்ள சொன்னதாக கூறினான். அதேபோல, என் 8 வயது மகன் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர், ’நான் இந்து நீ முஸ்லீம். இரண்டு பேரும் எதிரிகள்’ என்று அவனிடம் கூறியிருக்கிறாள்.
“எனது குழந்தைகள் இந்த நாட்டில் வெறுப்பை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் எங்களைப் போலவே குழந்தை பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவர் வலியில் துடித்துக்கொண்டிருக்கும்போது மற்றொருவர் கொண்டாடுவது என்ன மனநிலை. நாங்கள் இந்த நாட்டில் நம்பிக்கையற்றவர்களாகவும் ஏமாற்றப்பட்டவர்களாகவும் உணர்கிறோம். இரண்டாம் தர குடிமக்களை போலக்கூட நாங்கள் நடத்தப்படவில்லை” என்கிறார் சபா காலித்.
***
வெளிநாட்டில் கல்வியாளராக இருக்கும் ஒருவர், இந்தியாவில் இருக்கும் தனது பெற்றோரை சந்திக்க ஜனவரி வரவிருந்தார். ஆனால், “கோவில் திறப்பு விழாவில் என்ன நிகழுமோ” என்ற அச்சத்தில் பயணத்தை பிப்ரவரிக்கு தள்ளிவைத்துவிட்டார்.
பெயர் சொல்ல விரும்பாத இவருக்கு பாபர் மசூதி இடித்தபோது வயது 9. பாபர் மசூதி இடிப்பு குறித்து பெரிதும் கவலைப்படாத இவர், பள்ளிக்கூடத்தில் முஸ்லிம்கள் ஏன் மசூதியை விட்டுக்கொடுக்கவில்லை அவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என பல தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறார்.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மதவெறி கலவரம் குறித்து செய்தி கேட்டுகொண்டிருந்த போது, “முஸ்லிம்களை கொல்ல வேண்டும்” என்று ஆவேசத்தில் கத்தியிருக்கிறான். “நான் அங்கு இருந்ததை அந்த மாணவன் கவனிக்கவில்லை” என்கிறார் அவர்.
”போலிசாலும் நீதிமன்றத்தால் முஸ்லிம்கள் குறிப்பாக ஏழை முஸ்லிம்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறார்கள். என் மகள் வளரும் போது இந்திய முஸ்லிம் குறித்து நான் என்ன சொல்வது” என கவலையடைகிறார்.
***
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வழக்கறிஞர் அஷ்மா இஸ்ஸாத் என்பவருக்கு ஒன்பது வயது. “அன்று நடந்த நிகழ்வு இன்றும் நினைவில் இருக்கிறது. அன்று மக்கள் கடுமையான தலைவரை பற்றி பேசிவந்தனர். அவர்தான் அத்வானி” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ஆஷ்மா.
டிசம்பர் 6, 1992 அன்று நடந்தது குறித்து மட்டுமல்ல, ராமன் கோவில் கட்டப்படுவதும் திறப்பு விழா கொண்டாடப்படுவதைக் கண்டும் அச்ச உணர்வை வெளிப்படுத்துகிறார், ஆஷ்மா. உ.பி. உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை வழக்கறிஞராக இருந்தாலும் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. இதர முஸ்லிம் குடும்பத்தை போலத்தான் பயத்தில் உறைந்துள்ளார்.
“வெளிநாட்டில் வேலை கிடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என தினமும் எண்ணுகிறேன். இப்படி சொல்ல வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுதான் உண்மை” என்கிறார் கணத்த இதயத்துடன்.
அயோத்தியில் ராமன் கோயில் திறப்பையொட்டி, அப்பகுதியில் ஆங்காங்கே புல்டோசர்கள், துளையிடும் இயந்திரங்கள் காணக்கிடக்கின்றன. இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடைபாதை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று முக்கிய சாலைகளுக்கு, ராமர் பாதை, பக்தி பாதை, ராம ஜென்மபூமி பாதை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழித்தடங்கள் காவி நிறமிடப்பட்டதாகவும், வில் மற்றும் அம்பு கொண்ட ராமாயண உருவங்களாலும், சூலாயுதம், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
புதிய விமான நிலையம், இராமாயண தீம் பார்க், இணைய வசதி மண்டலங்கள் (wifi zones) கொண்ட பகுதியாக அயோத்தி மாற்றப்பட்டுவருகிறது. ஆனால், கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள், தாங்கள் எதிர்ப்பார்த்த வளர்ச்சி இதுவல்ல என்று குமுறுகிறார்கள். ராமன் கோயிலுக்காக யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டு வரும் ‘மேம்பாட்டு திட்டம்’ என்பது காலங்காலமாக அங்கு வசித்து வந்த மக்களின் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் சிதைத்து எழுப்பப்பட்டு வருகிறது.
“அயோத்தியில் ராமன் கோயில் கட்டப்படுகிறது. இனி மத கலவரங்கள், ஊரடங்கு உத்தரவுகள், போலீஸ் கண்காணிப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்” என்று எண்ணியிருந்த மஞ்சு மோதன்வால், அயோத்தி ராமன் கோயில் திட்டத்தின் ஒரு பகுதியாக – சாலை விரிவாக்கத்திற்காக – இடிக்கப்பட்ட தனது வீட்டில் எஞ்சியிருக்கும் பொருட்களை எடுத்துகொண்டே “இனி என்ன இருக்கிறது” என பெருமூச்சு விடுகிறார்.
கடந்தாண்டு ஏப்ரலில், அயோத்தி சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக மஞ்சு மோதன்வால் குடும்பத்தின் வாழ்வாதாரமான சிறு கடையை கொண்ட அவர்களது வீட்டின் முன்பகுதி இடிக்கப்பட்டது. இதுவன்றி, பழங்கால கோவில்கள் மற்றும் மசூதிகள் உட்பட, 13 கி.மீ.க்கு சாலையை விரிவுபடுத்த 4,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கடைகள் இடிக்கப்பட்டன. மஞ்சு மோதன்வால் போல்தான் அப்பகுதியில் வசித்து வந்த பெரும்பாலான மக்கள் ராமன் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டபோது தங்களது வீடுகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்படும் என்று துளியும் எண்ணியிருக்கவில்லை.
சிறு வியாபாரியான பாபு சந்த் குப்தா, “அயோத்தியின் முக்கிய நகரத்தில் சாதாரண மக்களுக்கு நிலம் எதுவும் இல்லை. அனைத்து நிலங்களையும் அரசு கையகப்படுத்தி வருகிறது. நாங்கள் எங்கு செல்ல” என கேள்வி எழுப்புகிறார்.
நடுத்தர வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தையே முழுவதுமாக இழந்து நிர்கதியாக்கப்பட்டிருக்கின்றனர். “பூர்வீக மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திட்டம் நடைமுறைபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம், அச்சுறுத்தப்படுகிறோம்” என்கிறார் அயோத்தி உத்யோக் வணிகர் தொழிற்சங்கத் தலைவரும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினருமான நந்து குமார் குப்தா. சாலை விரிவாக்கத்திற்கு வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், தனது வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவரது கடையில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். “சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யாரும் குரல் எழுப்பத் துணிவதில்லை. குரல் எழுப்பினால், போலீஸ் வழக்கு போடுமோ, அல்லது புல்டோசர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது” என்கிறார்.
ராமன் கோயிலுக்கு நூறு மீட்டர் தொலைவில் உள்ள நிலத்தை நம்பியிருந்த மக்களையும் கையறுநிலைக்கு தள்ளியுள்ளது யோகி அரசு. அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த பூ தோட்டத்தை அழித்துள்ளது.
கடந்த ஆகஸ்டு 23 அன்று, சாலை விரிவாக்கத்திற்காக கிஷோர் என்பரது தோட்டத்தில் இருந்து பூக்களை அகற்றுமாறு அதிகாரிகள் மிரட்டல் விடுத்து சென்ற அடுத்த நாளே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ், ஜேசிபி இயந்திரத்துடன் வந்து பூச்செடிகளை தரைமட்டமாக்கினர். கையகப்படுத்தப்பட்ட இடத்தின் ஒரு பகுதி சாலையாகவும், மீதமுள்ள பகுதி அகமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கும் சென்றது. அவ்விடத்தில் விரைவிலேயே கான்கிரீட் கூடாரங்கள் போடப்பட்டது.
“இந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு நாங்கள் என்ன அகதிகளா? எங்கள் பேச்சை கேட்க யாரும் இல்லை. நாங்கள் இந்தியர்கள் இல்லையா? நாங்கள் எங்கே போவது?” என கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்.
“கோயில் கட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் உள்ளுக்குள் நாங்கள் வருத்தப்படுகிறோம். இது எங்கள் வாழ்நாள் சேமிப்பு. நாங்கள் ஏழைகளாக இருப்பதால் துன்புறுத்தப்படுகிறோம். ஏழைகள் வெளியேற்றப்பட வேண்டும் என ராமர் கூறினாரா?” என்கிறார்கள் தலித் சமுக மக்கள்.
ரகுநந்தன் யாதவ் என்பவர் “என்னிடம் மூன்று எருமைகள் இருந்தன. அவைதான் எனது குடும்பத்திற்கு வாழ்வாதாரம். ஆனால் வீடுகள் இடிக்கப்பட்டதும் அவைகளை வைத்து பராமரிக்க முடியவில்லை. கொஞ்ச நாளிலேயே அவையும் இறந்துவிட்டன” என்கிற அவர், “நான் விளையாடி வளர்ந்த இடத்தில் இன்று என்னால் செல்ல முடியாது. நாங்கள் எங்கள் மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டால், வேறு எங்கு செல்வோம்” என்கிறார் விரக்தியாக.
42 வயதான கீதா யாதவ் என்பவர் தனது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு ராமன் கோயில் வளாகத்தின் மேற்கு எல்லையில் வசித்து வருகிறார். அவர், “நான்கு அறைகள் கொண்ட வீடு இருந்தது. ஆனால் இப்போது எருமைகள் வைத்திருந்த கொட்டகையில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். என் வாழ்வாதாரம் போய்விட்டது. எனக்கு உணவு இல்லையென்றால், ராமனை பார்த்தால் உணவு வந்துவிடுமா?” என்கிறார்.
கோவிலில் மத சடங்குகளை செய்து வரும் விஷால் பாண்டே என்பவர் “எனது நஷ்டம் ரூ.25 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால் அதை விட குறைவாகதான் நஷ்ட தொகை பெற்றுள்ளேன். ராமர் கோயிலால் அயோத்தி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதால், புகார் செய்ய வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லீம் மக்களின் நிலை என்ன?
பாபர் மசூதி இருந்த பகுதியில் இந்து மக்களுடன் அண்டை வீடுகளில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கு பாபர் மசூதி இடிப்பு தொடங்கி நீண்ட காலமாகவே மதவெறியர்களால் பயங்கரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்தபோது அப்பகுதியில் இந்துமத வெறியர்கள் ஈடுபட்ட கலவரத்தில் பல முஸ்லிம் குடும்பங்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகளை சூறையாடப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன.
கோட்வாலி எனும் பகுதியில் வசிக்கும் முகமது உமர், “இனி அயோத்தியில் ஏராளமான இந்து யாத்ரீகர்கள் வரத் தொடங்குவார்கள். அப்போது நடந்தது மீண்டும் இப்போது நடக்கலாம்” என்று டிசம்பர் 1992 நிகழ்வுகளை நினைவு கூர்கிறார். 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், தனது வீடு இந்துத்துவ மத வெறியர்களால் எரிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கட்டிய வீடும், கடையும் கடந்த டிசம்பரில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.
இப்படியாக முஸ்லிம்கள், இந்துக்கள் என பாரப்பட்சமில்லாமல் அனைத்து உழைக்கும் மக்களது வீடுகளும் வாழ்வாதாரமும் ராமன் கோயில் திட்டம் பெயரில் பறிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்தை எப்படி மீட்பது என்பது தெரியாமல் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் இரண்டு நாட்களில், உ.பி. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமர் கோவில் திறப்புதான் பேசுபொருள். இந்திய ஊடகங்களும் மோடி இப்போது விரதம் இருக்கிறார், மோடி இப்போது நடக்கிறார், உட்காருகிறார் என மோடி காட்டும் வித்தைகளை ஒன்று விடாமல் ஒளிப்பரப்பி வருகின்றன.
காவிக்கும்பல் கோவில் கருவறையின் பிரதான வாயிலில் பொருத்தப்பட்ட கதவு தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. மேலும், 13 தங்கக்கதவுகள் பொருத்தப்பட இருக்கின்றன. 8 உலோகங்களை கொண்டு 25 லட்ச செலவில் 2,400 கிலோ எடையில் ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது என்று பெருமை பேசி வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என இந்தியா முழுவதும் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசின் சாதனை, இந்துக்களுக்கான வெற்றி என்றவாறெல்லாம் ராமர் கோவில் திறப்பை ஊதிப்பெருக்குகிறது மோடி அரசு
ஆனால், ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. ஆளும் இதே உத்தரபிரதேச மாநிலத்தின் உழைக்கும் மக்கள், பெண்களின் நிலை என்ன என்பதற்கு சில சான்றுகள் இவை.
கடந்த தீபாவளி பண்டிகையின்போது உத்தரப் பிரதேசத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றி, முந்தைய ஆண்டின் கின்னஸ் சாதனையை முறியடித்தோம் என பீற்றி கொண்டது யோகி ஆதித்யநாத் அரசு. ஆனால், அவ்விளக்குகள் அணைந்த மறுகணமே அங்கு ஓட்டோடி வந்த சிறுவர்கள், மிச்ச மீதியிருந்த எண்ணெய்யை தங்களது வீடுகளில் சமையலுக்காக சேகரித்த கொடுமை அரங்கேறியது. உ.பி.யின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலை இதுதான்.
விளக்குகளில் எண்ணெய் சேகரிக்கும் கொடுமை ஒருபுறம் நடக்க, யோகி ஆதித்யநாத்தோ ‘இலங்கையில் இருந்து ராமன் திரும்பும் காட்சியை’ மீண்டுருவாக்கம் செய்ய, சில நடிகர்களுக்கு ராமன், லட்சுமணன், சீதா வேடமிட பணத்தை வாரியிரைத்ததோடு, அவர்களுக்கு வானத்தில் இருந்து வந்திறங்க அரசு ஹெலிகாப்டரையும் வழங்கியிருந்தார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கூட்டு பாலியல் வன்கொடுமைகளில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசம்தான். 2022 ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 65,743 வழக்குகள் பதிவாகியுள்ளன.
உ.பி. ராம்நகரில், நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி சாலை விரிவாக்கத்திற்காகவும் விமான நிலைய திட்டத்திற்காகவும் மக்கள் குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் கையகப்படுத்தி வருகிறது யோகி அரசு.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அருகே இருக்கும் தெருவோர வியாரிகளின் தள்ளுவண்டிகளை யோகி அரசின் போலிசு பறிமுதல் செய்து வியாபாரிகளை நிர்கதியாக்கியது.
நிலம் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது ஒருபுறம் நடக்க, ஹர்தோய் உன்னாவ், சீதாபூர் உள்ளிட்ட உ.பி. கிராமங்களில் அனாமத்தாக சுற்றுதிரியும் கால்நடைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க இரவு முழுவதும் காவல் காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் விவசாயிகள். தங்களை ‘பசு காவலர்கள்’ என்று காட்டிக்கொள்ளும் இந்துத்துவ அரசுக்கு, பயிர்கள் கால்நடைகளால் நாசமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த, பசு கொட்டகைகள் அமைக்க எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளே தங்களது பயிர்களை பாதுகாக்க கூர் கம்பிகளால் வேலி அமைப்பதையும் சட்டவிரோதமாக்கியுள்ளது யோகி அரசு.
கடந்த 2021 ஆம் ஆண்டு உ.பி. லக்கிம்பூர்கேரியில் அமைதியாக பேரணி சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீது அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றி 4 விவசாயிகளை படுகொலை செய்தான்.
2021 ஆம் ஆண்டு, உ.பி. பாரபங்க் என்னும் கிராமத்தில் உள்ள மதுகடைகளை அகற்ற கோரி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மக்கள்மீது சராமாரியாக தாக்குதலை நடத்தியது யோகி அரசு. ஆனால், ஜனவரி 22 ஆம் தேதி இராமர் கோவில் திறப்பை முன்னிட்டு மதுகடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
உ.பி.யில் உதவி ஆசிரியர்கள் போன்ற ஒப்பந்த ஊழியர்கள் தங்களது பணியை உத்தரவாதப்படுத்த கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஆசிரியராக விரும்பிய ஷிகா பால் என்பவர், கல்வி இயக்குநரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் மேல் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அவரது கோரிக்கைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
10 ரூபாய் போஸ்டல் ஆர்டர் கொடுத்தால், தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறமுடியும். ஆனால் ஆர்.டி.ஐ-க்கு விண்ணப்பம் அனுப்பும் போஸ்டல்கள், உ.பி. லக்னோ, கான்பூர், பாரபங்கி, மொராதாபாத் மற்றும் வாரணாசி அஞ்சலகங்களில் இருந்து காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது அரசாங்கம் குறித்து எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற யோகி அரசின் பாசிச நடவடிக்கை இது.
ஜனவரி 22: ராமர் கோயில் திறப்பு விழா! இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! இந்துராஷ்டிரத்திற்கான திறவு கோல்!
பத்திரிகை செய்தி
1949 ஆம் ஆண்டு பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக குழந்தை ராமர் சிலையை வைத்து, ராமர் தானாகவே எழுந்தருளினார் என்று ஒரு கட்டுக் கதையை உருவாக்கி கலவரத்தைத் தொடங்கி வைத்த ஆர்எஸ்எஸ் கும்பல், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்தது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோரை திரட்டி கொண்டு போய் கலவரத்தை உருவாக்கி பாபர் மசூதியை இடித்தது ஆர்எஸ்எஸ் கும்பல். அன்றைக்கு அந்த கலவரத்துக்கு தலைமை தாங்கிய அத்வானி இந்த நாட்டின் துணைப் பிரதமராக கூட இருந்தார்.
அதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் இஸ்லாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்கள், கலவரங்கள் எண்ணில் அடங்காதவை. குஜராத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் குஜராத் இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என்பதை அறிவித்தது. அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இப்பொழுது இந்த நாட்டின் பிரதமராக இருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் புல்டோசர் ஆட்சி இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்து நொறுக்கி, தலித் மக்களுக்கும் பார்ப்பனர் அல்லாத இதர மக்களுக்கும் பெரும் அநீதியை இழைத்தது. உன்னாவ்வில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முதுகெலும்பு அடித்து நொறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை, பெற்றோருக்கு தெரியாமலேயே இறந்துபோன அச்சிறுமியின் உடல் எரிக்கப்பட்டது. குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்களை, அந்தப் பெண்ணின் முன்பே கொடூரமாகக் கொலை செய்து, அப்பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதாலேயே முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் கூட, அந்த குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளியே வரும்போது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது யாராலும் மறக்க முடியாது. இந்து மத வெறி நடவடிக்கைகள் ஒருபுறம் இவ்வாறு இருக்கும் போது அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்காக ஒட்டுமொத்த நாடே சூறையாடப்பட்டு விட்டது.
அதற்கு எதிராக போராடுவோர் எல்லாம் கொடூரமாக நசுக்கப்பட்டனர். இவையெல்லாம் கடந்த 9 ஆண்டுகளில் பாசிச மோடி அமித்ஷா கும்பல் நடத்திய பாசிச நடவடிக்கைகளில் சில துளிகளே.
ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என்று காங்கிரசு உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்த போதும், ராமர் கோயில் திறப்பு என்பது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி என்பதை சுட்டிக்காட்டவில்லை. இந்தியா கூட்டணிக்குள்ளேயே சில கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாட்டமாக நடத்துவதற்கு அனைத்து வேலைகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அட்சதை அரிசி கொடுப்பதும், கோயில் திறப்பு விழாவை நேரடியாக ஒளிபரப்புவதும் அதற்கான ஏற்பாடுகளும், கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச கும்பலால் நடந்தேறி வருகின்றன. பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டியது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற உணர்வே இல்லாதபடி பக்தி என்ற பெயரில் இந்து மக்களின் ஜனநாயக உணர்வை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கின்றது பாசிச கும்பல்.
1992 இல் பாபர் மசூதி இடிப்பின் போது இருந்த இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான சூழல் இப்போது இல்லை. அப்படிப்பட்ட சூழலை உருவாக்க எதிர்க்கட்சிகள் செயல்படவும் இல்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துப்படி இது ஒரு தேர்தல் அரசியல் பிரச்சாரம் என்பதாக மட்டுமே இருக்கிறது.
ஆனால் உண்மை அதுவல்ல; ராமர் கோயில் திறப்பு என்பது, இதுவரை இந்த நாட்டில் கூறப்பட்ட ஜனநாயகம், மதநல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்திற்கும் சமாதி கட்டுவது தான். இந்த நாடு ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிஸ்டுகளுக்கானது என்பதை தான் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அறிவிக்கிறது. இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது இந்த நாட்டில் உள்ள இஸ்லாமியர் அல்லாத அனைத்து மக்களின் கடமை. இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முழங்க வேண்டும்.
ஜனவரி 22 பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் திறப்பு விழா என்றால் அதே நாளை ஆர்எஸ்எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிஸ்டுகளுக்கு எதிரான நாளாக மாற்றிக் காட்டுவோம். இந்து மதவெறி பாசிஸ்டுகள் அளித்த அட்சதை அரிசியையும் அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் புறக்கணிப்போம். இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக, இந்த நாட்டை மோடி – அமித்ஷா பாசிச கும்பல் இந்துராஷ்டிரத்தின் நுழைவாயிலுக்கு இழுத்துச் செல்வதற்கு எதிராக ஜனவரி 22 ஆம் தேதி அனைவரும் குரல் எழுப்புவோம் என்றும் தமிழ்நாட்டில் பாசிசத்துக்கு எதிரான அரணை கட்டியமைப்போம் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன் தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை 9962366321
“உலக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான் சில மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன.”
– மௌலானா அபுல் கலாம் ஆசாத்
இந்து உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கில் அளித்திருக்கும் தீர்ப்பை மேற்கண்ட கூற்றோடு பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியாது. இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது இந்திய முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட போர் எனக் கொண்டால், அந்த அநீதிக்கு எள்ளளவிலும் குறைந்ததல்ல உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பு.
முடிவாக, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பும், அம்மசூதி கட்டப்பட்ட பிறகும், அம்மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் பகவான் ராமன் பிறந்தான் என்பதுதான் இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருவதோடு, அந்த நம்பிக்கை ஆவணங்கள் மற்றும் வாய்மொழி சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காணப்படும் இணைப்பின் இறுதிப் பத்தியில் ஆணித்தரமாகக் கூறப்பட்டிருக்கிறது. இம்முடிவிற்கும் ராம ஜென்மபூமி குறித்த ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களுக்கும் இடையே யாரும் வேறுபாடு காண முடியுமா?
பாபர் மசூதி நில வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்: (இடமிருந்து வலமாக) அப்துல் நஸீர், எஸ்.ஏ.பாப்டே, ரஞ்சன் கோகோய், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன்.
தீர்ப்பின் இணைப்பு மட்டுமல்ல, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த ஒருமனதான தீர்ப்பும்கூட ராமனின் பிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கை என ஆர்.எஸ்.எஸ். கூறிவரும் கருத்தை அடிநாதமாகக் கொண்டுதான் அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு ‘மதச்சார்பற்ற குடியரசின் உச்ச நீதிமன்றம் பார்ப்பன மத நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பை அளித்திருப்பதாகப் பளிச்செனத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கிரிமினல் வழக்குகளில் சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிக்கு அளித்து விடுதலை செய்யும் சட்ட நடைமுறை இருப்பதைப் போல, சிவில் வழக்குகளில் மனுதாரரும் எதிர் மனுதாரரும் முன்வைக்கும் ஆதாரங்களுள் ஒரு தரப்பு ஆதாரத்திற்கு அனுகூலத்தையும் (balance of probabilities) கூடுதல் முக்கியத்துவத்தையும் (preponderence of probabilites) அளித்துத் தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை உள்ளது. சட்டப்படியான இந்தக் கொல்லைப்புற வழியையும் இந்து மத நம்பிக்கை, புராணங்கள், வரலாறு, தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றையும் தேவைக்கேற்ப நைச்சியமாகப் பயன்படுத்திக் கொண்டு பாபர் மசூதி வளாக நிலத்தின் மீதான பாத்தியதையைக் குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
ஓரவஞ்சனை நிறைந்த விசாரணை
உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த மேல்முறையீட்டு வழக்கில் நிர்மோகி அகாரா, சன்னி வாரியம் மற்றும் குழந்தை ராமர் (ராம் லல்லா விராஜ்மான்) ஆகிய மூன்று தரப்புகள்தான் முக்கிய வழக்காடிகள். இவர்களுள் நிர்மோகி அகாராவை, அத்தரப்பு ஃபைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூல வழக்கில் இணைந்து கொள்ள கால வரம்பைத் தாண்டி மனு செய்திருக்கிறது; குழந்தை ராமரின் பூசாரியாக இருந்து வருவதாக நிர்மோகி அகாரா உரிமை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு அத்தரப்பை வழக்கிலிருந்து தள்ளுபடி செய்துவிட்டனர் நீதிபதிகள்.
1900- பாபர் மசூதியின் தோற்றம் (இடது) மற்றும் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு.
சன்னி வாரியத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும், 1528 கட்டப்பட்ட பாபர் மசூதியில், அம்மசூதி கட்டப்பட்ட ஆண்டு தொடங்கி 1857 ஆண்டு வரையிலும் அயோத்தி முஸ்லிம்கள் அம்மசூதியில் தொழுகை நடத்தியதற்கான ஆதாரங்களைத் தரவில்லை, அம்மூன்று நூற்றாண்டுகளும் அம்மசூதி முஸ்லிம்களின் முழுமையான அனுபோக உரிமையின் கீழ் இருந்து வந்ததை நிரூபிக்கவில்லை” என்ற காரணங்களைக் கூறி, பாபர் மசூதி வளாகத்தை சன்னி வாரியத்திடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.
எஞ்சி நின்ற இந்துத் தரப்பான குழந்தை ராமரிடம் பாபர் மசூதி வளாக நிலத்தை ஒப்படைப்பதற்கு, பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கைக்கு” அப்பால், உச்ச நீதிமன்றத்திற்கு வேறு எந்தவொரு சான்றும் தேவையாக இருக்கவில்லை.
இவ்வழக்கின் ஒரு மனுதாரரான இந்து மகாசபை, முகம்மது நபி கூறிச் சென்ற மரபுகளின் (ஹதித்)படி பாபர் மசூதி அமையவில்லை. எனவே, அதுவொரு மசூதியில்லை” என வாதாடியதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அது மசூதிதான் என ஏற்றுக்கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். மசூதி என ஏற்றுக்கொண்ட பிறகு, அங்கே 1857 முன்பாகத் தொழுகை நடந்ததா எனக் கேள்வி எழுப்புவது அபத்தமானது.
மேலும், பாபர் மசூதி அமைந்திருந்த அயோத்தி, 1857 முன்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த அவத் மாகாணத்தின் அங்கமாக இருந்துவந்தது. ஆங்கிலேய காலனி அரசு அவத் மாகாணத்தை இணைத்துக் கொள்ளும் முன்பு வரை அம்மாகாணம் முஸ்லிம் மன்னர்களால்தான் ஆளப்பட்டு வந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் 1857 முன்பாக அம்மசூதியில் தொழுகை நடந்ததா எனக் குதர்க்கவாதிகளால் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும்.
1857 நடந்த முதல் வட இந்திய சுதந்திரப் போரில் அவத் மாகாணத்தில் ஏராளமான ஆவணங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறியாத ஒன்றல்ல. எனினும், இப்பாதகமான நிலைமையையும் மீறி, பாபர் மசூதிக்கு மன்னர் பாபர் அறுபது ரூபாய் நிதியுதவி அளித்ததற்கான சான்றையும், அது போலவே பிரிட்டிஷ் அரசும் சன்னி வாரியத்திடம் நிதியுதவி அளித்து வந்ததற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, சன்னி வாரியம். நிதியுதவி மசூதியின் பராமரிப்புக்கு அளிக்கப்பட்ட ஒன்றே தவிர, அது நில உரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது” எனக் கூறி இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.
பாபர் மசூதியை இடிப்பதற்காக அதன் மீது ஏறி நின்று வெறிக் கூச்சலிடும் சங்கப் பரிவாரக் கும்பல்.
1528 தொழுகை நடக்கவில்லை எனக் கூறப்படும் மசூதிக்கு எந்த ஆட்சியாளராவது பராமரிப்பு நிதி அளிப்பார்களா?” இச்சாதாரண கேள்வி இந்து மத நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்த நீதிபதிகளின் மனச்சான்றிடம் எழும்பாதது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல!
அயோத்தி முஸ்லிம்கள், பாபர் மசூதியில் 329 ஆண்டுகள் தொழுகை நடத்தி வந்ததற்கான ஆவணங்களை முஸ்லிம் தரப்பிடம் கறாராகக் கேட்ட உச்ச நீதிமன்றம், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, திரேதா யுகத்தில் ராமன் பிறந்தான் என்பதற்கு நிரூபணமாகக் கூறியிருக்கும் சான்று, இந்துக்களின் நம்பிக்கை.
“பாபர் மசூதியின் மைய கோபுரத்தை நோக்கி இந்துக்கள் வணங்கி வந்திருக்கிறார்கள்.”
“பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வணங்கி வந்திருக்கின்றனர்.”
“பாபர் மசூதியையும் ராம் சபுத்ராவையும் பிரிக்க ஆங்கிலேயே ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் அருகே நின்று, பாபர் மசூதியை நோக்கி வணங்கியிருக்கிறார்கள்.”
“ஸ்கந்த புராணம், ராமசரித மானஸ் ஆகிய இந்து மத நூல்களில் ராமன் அயோத்தியில்தான் பிறந்தான் எனக் குறிப்புகள் உள்ளன.”
“டிஃபேன்தாலர், மார்டின் ஆகிய வெளிநாட்டுப் பயணிகள், தமது பயணக் குறிப்புகளில் அயோத்தியில் ராமன் பிறந்த இடத்தில் வழிபாடு நடந்ததாகக் குறிப்பிடுள்ளனர்.”
என இந்நம்பிக்கைக்கு ஆதாரமாகப் புராணங்களையும், வாய்வழிச் செய்திகளையும், வெளிநாட்டுப் பயணிகள் போகிற போக்கில் கூறியவற்றையும் ஏற்றுக்கொண்டு, பகுத்தறிவுக்குப் புறம்பான, அறிவு நாணயமற்ற, ஒருதலைப்பட்சமான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.
வரலாற்றைத் திரித்த தீர்ப்பு
ஆங்கிலேயக் காலனி அரசு 1856 அவத் மாகாணத்தை இணைத்துக்கொண்ட பிறகு, பாபர் மசூதி வளாகத்தில், மசூதியையும், ராம் சபுத்ராவையும் பிரிக்குமொரு தடுப்புச் சுவரை அமைத்தது. இத்தடுப்புச் சுவரை அமைப்பதற்கு அயோத்தியில் 1855 இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் காரணமாகப் பயன்படுத்திக் கொண்டது ஆங்கிலேய அரசு. முதல் வட இந்திய சுதந்திரப் போருக்கு இரண்டு ஆண்டுகள் முன் இக்கலவரம் நடைபெற்றிருக்கிறது. இந்து, முஸ்லிம் மோதலைத் தோற்றுவிப்பது கும்பினி ஆதிக்கத்துக்கே பயன்பட்டிருக்க முடியும் என்ற கோணத்திலும் இந்தப் பிரச்சினையின் அவதார நோக்கத்தை நாம் பரிசீலிக்க வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்ட தற்காலிக இராமர் கோயில்.
1855 கலவரம், அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் ஆகிய நிகழ்வுகளின் பிறகுதான், பாபர் மசூதியின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ராம் சபுத்ராவில் இந்துக்கள் வழிபாடுகளையும் திருவிழாக்களையும் தொடர்ந்து நடத்தத் தொடங்கினர். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ 1855 நடந்த இந்து மோதலையும், அதன் விளைவாக அமைக்கப்பட்ட அத்தடுப்புச் சுவரையும் இந்துக்கள் பாபர் மசூதியினுள் வழிபாடு நடத்தும் தமது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாகத் தீர்ப்பில் சித்தரித்து வரலாற்றையே வளைத்துள்ளனர்.
முதலாவதாக, 1855 இந்து இடையே நடந்த கலவரம் ராம ஜென்ம பூமிக்காக நடைபெறவில்லை. இக்கலவரம் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து நிர்மோகி அகாரா ராம் சபுத்ராவில் கோவில் கட்டிக்கொள்ள தம்மை அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கிலும் ராம் சபுத்ராவைத்தான் ராமர் பிறந்த இடமாகக் கூறியதேயொழிய, பாபர் மசூதியை அல்ல.
ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, இந்துக்கள் அத்தடுப்புச் சுவரின் அருகே நின்றுகொண்டு, பாபர் மசூதியின் மையக் கோபுரத்தை நோக்கி, ( மசூதியின் மையக் கோபுரத்தைத் தீர்ப்பில் கர்ப்பக் கிரகம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.) வணங்கி வந்தனர்” என வாய்வழிச் செய்திகள் கூறுவதைக் காட்டி, இந்துக்களின் இந்நடவடிக்கை, அம்மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான்” என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு என்றும், மசூதியில் தமது உரிமையை நிலைநாட்டும் இந்துக்களின் முயற்சியென்றும் புது விளக்கம் அளித்திருக்கின்றனர். மேலும், 1857 முன்பாக பாபர் மசூதி அயோத்தி முஸ்லிம்களின் முழு அனுபவப் பாத்தியதையின் கீழ் இல்லை, இந்துக்கள் மசூதியினுள் சென்று வழிபாடு நடத்தியிருக்கின்றனர் என்பதையும் இவை காட்டுவதாகப் பொழிப்புரை எழுதியுள்ளனர்.
பாபர் மசூதி வளாகம் தடுப்புச் சுவர் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ராம் சபுத்ரா அமைந்திருந்த வெளிப்புறப் பகுதி இந்துக்களின் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. அதில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை. அதேசமயம், வளாகத்தின் உட்புறப் பகுதியில் அமைந்திருந்த பாபர் மசூதியிலும் தமது உரிமையை நிலைநாட்டத் தொடர்ந்து முயன்று வந்தனர்” எனக் கூறுகிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
தேவகி நந்தன் அகர்வால்.
இந்துக்கள் வெளிப்புறப் பகுதியில் இருந்தபடியே மசூதியின் மையக் குவிமாடத்தை நோக்கி வணங்கி வந்தார்கள், பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வணங்கினார்கள், தடுப்புச் சுவர் அருகே நின்றுகொண்டு பாபர் மசூதியை நோக்கி வணங்கினார்கள்” எனப் பட்டியல் இடும் நீதிபதிகள், இவற்றையெல்லாம் பாபர் மசூதியின் மீது தமக்குள்ள உரிமையை நிலைநாட்டும் இந்துக்களின் முயற்சிகளாகச் சித்தரித்துள்ளனர்.
இந்துக்கள் கடைப்பிடித்து வந்ததாகக் கூறப்படும் இந்த வழிபாடுகளுக்கு அப்பால், 1930 மசூதியின் குவிமாடத்தை இந்துக்கள் சேதப்படுத்தியது, 1949 மசூதியினுள் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டது உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளையும் இந்துக்களின் முயற்சியாகச் சித்தரிக்கிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இந்த அடாவடித்தனங்களை ஒருபுறம் சட்டவிரோதச் செயல் எனத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் நீதிபதிகள், இன்னொருபுறத்தில் இச்சட்டவிரோதச் செயல்களை இந்துக்களின் முயற்சியாகச் சித்தரிப்பது மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் மோசடியாகும்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த வாதப்படிப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ். காலிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் குற்றத்தையும்கூட இந்துக்களின் முயற்சியாகக் கூறமுடியும். தீர்ப்பின் இம்மோசடியின் காரணமாகத்தான், பாபர் மசூதியை இடித்த முதன்மைக் குற்றவாளியான அத்வானி, தீர்ப்பு வெளிவந்தவுடனேயே, மசூதி குறித்த தனது நிலைப்பாடு சரியானது” என நிரூபிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
1855 அயோத்தியில் இந்து முஸ்லிம் கலவரத்தையடுத்து, அப்பொழுது அவத் மாகாணத்தின் மன்னனாக இருந்த நவாப் வாஜித் அலி ஷா, அக்கலவரம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமரசத்தின் காரணமாகவே நிர்மோகி அகாரா பிரிவினர் ராம் சபுத்ராவை வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும், இந்துக்களின் வழிபாட்டில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை எனக் கூறுவதோ அப்பட்டமான பொய், வரலாற்றுத் திரிபு.
1949 பாபர் மசூதி வளாகத்திற்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட குழந்தை இராமன் சிலை.
நிர்மோகி அகாராக்கள் மசூதியின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு நிரந்தரமான மேடையை அமைத்து வழிபாடு நடத்தத் தொடங்கியது குறித்து பாபர் மசூதியில் தொழுகை நடத்திவைத்து வந்த மௌல்வி முகமது அஸ்கர் 30.11.1858 அன்று காலனிய நீதிமன்றத்திடம் புகாராகத் தெரிவித்திருக்கிறார். மேலும், 1860, 1877, 1883, 1884 ஆண்டுகளிலும் இந்துக்களின் வழிபாடு குறித்துப் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. (அயோத்தி: இருண்ட இரவு, பக்.90) இவையெல்லாம் ராம் சபுத்ரா பகுதியில் தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முஸ்லிம்கள் எடுத்த முயற்சிகளாக நீதிபதிகளின் காவி காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லை.
அப்படியே அவர்கள் தலையீடு செய்யவில்லை எனக் கொண்டால், அது அயோத்தி முஸ்லிம்களின் பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும்தான் எடுத்துக்காட்டுகிறது. ஒருபுறம் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் முஸ்லிம்களின் இப்பெருந்தன்மையை நன்றியறிதலோடு அங்கீகரிக்கவில்லை என்பதோடு, முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை என்ற பொய்யைச் சொல்லி முஸ்லிம்களின் சொத்தான பாபர் மசூதி வளாக நிலத்தைக் கயமைத்தனமாக அபகரித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், 1857 பின் மசூதியின் வெளிப்புறப் பகுதியில் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைதான் வழங்கப்பட்டது. அந்த வழிபாட்டு உரிமையை சொத்தின் மீதான உரிமையாக கிரிமினல்தனமான முறையில் மடைமாற்றிவிட்டது, உச்ச நீதிமன்றம்.
அரசியல் சாசனத்தின் இந்து ஆன்மா
வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து மசூதியைச் சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும் என்ற சூட்சுமம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே புரிந்திருந்தது.
உரிமையியல் சட்ட விதி 32 இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமையைக் கடவுள் சிலை பெற்றிருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. சட்டரீதியான இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த நில உரிமை வழக்கில் முதலில் தேவகி நந்தன் அகர்வாலும், அவர் இறந்த பிறகு விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த திரிலோகி நாத் பாண்டேயும் குழந்தை ராமரின் காப்பாளர் என்ற பெயரில் இணைந்து கொண்டனர்.
கடவுள் சிலை நிரந்தரமான மைனர் என்ற சட்டத் தகுதியைப் பெற்றிருப்பதால், உரிமையியல் வழக்கில் விதிக்கப்படும் கால வரம்பு என்பது கடவுளுக்குக் கிடையாது. இந்த அடிப்படையில்தான், 1949 எழுந்த பிரச்சினைக்கு 1989 இல் இராமபிரானின் சார்பில் தேவகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த மனுவை அனுமதிக்கத்தக்கதாக உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்துக் கடவுள் பெற்றிருக்கும் இந்தச் சிறப்புரிமையை அரசியல் சட்டத்தின் 25, 26 பிரிவுகள் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை ராமனின் சிலை கள்ளத்தனமாக மசூதியினுள் வைக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, அப்படிக் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட சிலைக்கு இறைத்தன்மையை வழங்க முடியாது; சுயம்புவாகத் தோன்றிய கடவுளர்க்குத்தான் சட்டபூர்வத் தகுதியை வழங்க முடியுமேயொழிய குழந்தை ராமருக்கு வழங்க முடியாது” என சன்னி வாரியத்தின் சார்பாக வழக்காடிய மூத்த வழக்குரைஞர் ராஜிவ் தவான் மறுப்புத் தெரிவித்ததை, பக்தனின் நம்பிக்கையில் குறுக்கிட முடியாது என்ற காரணத்தைக் கூறி உச்ச நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது.
மசூதி சட்டவிரோதமானது, கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டியிருக்கிறார்கள், ராம ஜென்மபூமி என்ற நிலப்பகுதியே சட்டபூர்வ நபர்” எனக் குழந்தை ராமரின் தரப்பில் வாதிடப்பட்டு, நிலத்தின் மீதான உரிமை கோரப்பட்டது. இம்மூன்று வாதங்களையுமே நிராகரித்திருக்கும் உச்ச நீதிமன்றம், நிலத்தின் மீது குழந்தை ராமர் தரப்பு உரிமை கோருவதையும் நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், இத்தர்க்க நியாயத்திற்கு முரணாக, பாபர் மசூதியின் மைய மாடத்தின் நேர் கீழேதான் ராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிலத்தை குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது.
இந்த நம்பிக்கைக்குச் சட்டப்படியான அங்கீகாரம் அளிக்கும் பொருட்டு, சட்டத்தின் சந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாபர் மசூதி கட்டப்பட்ட 1528-ம் ஆண்டு தொடங்கி 1857 முடியவுள்ள காலக்கட்டத்தில் அதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. அதேசமயம், 1857 முன்பே பாபர் மசூதியில் ராமரை இந்துக்கள் வழிபட்டு வந்ததற்கு டிஃபேன்தாலர், மார்டின் ஆகியோரின் பயணக் குறிப்புகள் உள்ளிட்டுப் பல சான்றுகள் உள்ளன என எடுத்துக்காட்டி, அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்தும் (preponderence of probabilites);
இராமர் கோயில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிசத் அடுக்கி வைத்திருக்கும் தூண்கள்.
1857-க்கு பின், ராம் சபுத்ரா, சீதாவின் சமையலறை ஆகியவை அமைந்திருந்த பாபர் மசூதி வளாகத்தின் வெளிப்புறப் பகுதி இந்துக்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை. அதேபொழுதில் 1857-க்கு பின் பாபர் மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திவந்தபோதும், ராமனின் பிறப்பிடம் என்ற நம்பிக்கையில் பாபர் மசூதியில் தமது உரிமையை நிலைநாட்ட இந்துக்கள் தொடர்ந்து முயன்று வந்துள்ளனர் என்ற அடிப்படையில் அதற்குக் கூடுதல் அனுகூலம் (balance of probabilites) அளித்தும் பாபர் மசூதி வளாகத்தைக் குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
சட்டப்படியான இந்த அனுகூலத்தையும், முக்கியத்துவத்தையும் இந்து தரப்புக்கு அளிப்பதற்கு மத நம்பிக்கை, புராணங்கள், வெளிநாட்டுப் பயணக் குறிப்புகள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றைத் தமது நோக்கத்திற்கு ஏற்ப நைச்சியமாகப் பயன்படுத்திக்கொண்ட நீதிபதிகள், முஸ்லிம்கள் தரப்பில் நின்று சன்னி வாரியம் அளித்த பல சான்றுகளை மட்டையடியாக மறுத்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். அடியாட்படை
இந்தத் தீர்ப்பு வேறுவிதமாக, அதாவது முஸ்லிம்களுக்குச் சாதகமாக வருவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது என்பதை பாபர் மசூதி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் கடந்த கால அணுகுமுறையில் இருந்தே யாரும் புரிந்துகொள்ள முடியும்.
கோவிலை அங்கேயே கட்டுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகள் இந்து மதவெறியைத் தூண்டிவருவதை அறிந்திருந்தும், 1992, டிசம்பரில் பாபர் மசூதி வளாகம் அருகே பூமி பூஜை செய்வதற்கு சங்கப் பரிவாரக் கும்பலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அக்கும்பலோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்டபடி பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதோடு, அந்த இடிபாடுகளின் மீதே குழந்தை ராமருக்கு ஒரு தற்காலிகக் கோவிலையும் அமைத்தது.
பாபர் மசூதிக்குள் குழந்தை ராமர் சிலைக் கள்ளத்தனமாக வைக்கப்பட்டதை ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது என்றால், மசூதியை இடித்துவிட்டு அமைக்கப்பட்ட அத்தற்காலிகக் கோவிலுக்கு அங்கீகாரம் அளித்தது, உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய பாபர் மசூதி இறுதித் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு கட்சிகள் சார்பில் கோவையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அப்பொழுது இருந்த காங்கிரசு அரசு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டமொன்றை இயற்றியது. இந்தியா சுதந்திரமடைந்த 1947 எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எந் தெந்த மதத்தினருக்குச் சொந்தமாக இருந்ததோ, அதனை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது என அச்சட்டம் கூறினாலும், இந்து மதவெறிக் கும்பலின் ராம ஜென்மபூமி அரசியலுக்குச் சாதகமாக, அதில் பாபர் மசூதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்தச் சட்டத்திற்கும் அதில் அளிக்கப்பட்ட விதி விலக்கிற்கும் உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது.
பாபர் மசூதி வளாக நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அந்நடவடிக்கைச் சரியா, தவறா எனத் தீர்ப்புக் கூறுவதற்கு அப்பாலும் சென்று, இசுலாம் மதத்தைப் பின்பற்றுவதற்கும் தொழுகை நடத்துவதற்கும் மசூதி என்பது அவசியமான ஒன்றல்ல. முஸ்லிம்கள் திறந்தவெளியில்கூடத் தொழுகை நடத்தலாம்” என அத்தீர்ப்பில் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.
பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, மசூதி குறித்து உச்ச நீதிமன்றம் கூறியிருந்த இந்தக் கருத்தை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென முஸ்லிம் தரப்பினர் வாதிட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
இதற்கு நேர்எதிராக, இந்து மதம் குறித்து சங்கப் பரிவார அமைப்புக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்துத்துவா அல்லது இந்துயிசம் என்பது மதம் என்ற குறுகிய பொருள் கொண்டதல்ல, அது இந்திய வாழ்க்கை முறை” என இந்து மத உணர்வைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது குறித்த வழக்கொன்றில் குறிப்பிட்டது, உச்ச நீதிமன்றம்.
1992 ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அப்பொழுதிருந்த நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த மைய அரசு, அவ்விடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தவும், அவ்வாராய்ச்சியின் முடிவுப்படி அந்த இடத்தின் உரிமை யாருக்கு எனத் தீர்மானிக்கவும் முடிவு செய்து, இது பற்றிக் கருத்துக் கூறுமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றம் இவ்விடயத்தில் கருத்துக்கூற மறுத்துவிட்டது. எனினும், 2003 அலகாபாத் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தை அணுகாமலேயே, தன் விருப்பப்படி பாபர் மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட்டது. தானே சம்மதம் தெரிவிக்காத அந்த அகழாய்வு முடிவுகளைத்தான் ஆதாரமாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
பாபர் மசூதி மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டால், அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது மட்டும்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னிருந்த கேள்வி. ஆனால், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளோ அந்த வரம்பையும் தாண்டி, மைய அரசு மூன்று மாதங்களுக்குள் ஓர் அறக்கட்டளையை அமைத்து, அதனிடம் நிலத்தை ஒப்படைத்து, கோவில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
ராமர் பிறந்த இடத்தில் மசூதியா?” என்ற பொய்யைச் சொல்லித்தான் மசூதியை இடித்தது ஆர்.எஸ்.எஸ். அங்குதான் ராமன் பிறந்தான்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளித்து, அந்த நிலத்தில் கோவிலை கட்டச் சொல்லித் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பொய்ப் பிரச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கிவிட்டது உச்ச நீதிமன்றம்.
அயோத்தியில் ராமர் கோவில், 370 ரத்து செய்வது, ஒரே சிவில் சட்டம் இந்த மூன்றும்தான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் உயிராதாரமான திட்டங்கள்.
இவற்றுள் ராமர் கோவில் திட்டத்தை உச்ச நீதிமன்றமே நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு ஒரே சிவில் சட்டம் என்பதல்ல ஆர்.எஸ்.எஸ். இன் நோக்கம். முஸ்லிம்களுக்குத் தனிச்சலுகை வழங்கும் சிவில் சட்டங்களை ஒழிப்பதுதான் அதனின் எண்ணம். முத்தலாக் மணமுறிவு முறையைச் சட்டவிரோதமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த சிவில் விவகாரத்தைக் கிரிமினல் குற்றமாக்கிவிட்டது, மோடி அரசு.
அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 370 செயலற்றதாக்கியிருக்கும் மோடி அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்துவருகிறது. இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களிடமிருந்து பாபர் மசூதி நிலத்தை அபகரித்துவிட்ட உச்ச நீதிமன்றம், காஷ்மீர் மக்களிடமிருந்து 370 பிரிவு அபகரிக்கப்பட்ட நடவடிக்கையைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்திவிடாதா என்ன?
இவை மட்டுமின்றி, தேசியக் குடியுரிமைப் பதிவேடு வழக்கு, ரஃபேல் ஊழல் வழக்கு, நீதிபதி லோயாவின் சந்தேகத்திற்குரிய மரணம் குறித்த வழக்கு, மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு குறித்த வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த மீளாய்வு எனப் பல்வேறு வழக்குகளிலும் பா.ஜ.க.விற்குச் சாதகமாகவே உச்ச நீதிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இத்தீர்ப்பு ஒருமனதாக அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பினும், தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்ற விவரம் மறைக்கப்பட்டு, நீதிமன்ற மரபு மீறப்பட்டிருக்கிறது. மேலும், இந்து மத நம்பிக்கைகளைக் கொண்டாடும் தீர்ப்பின் இணைப்பை எழுதிய நீதிபதியின் பெயரும் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. இவை, தீர்ப்பு மண்டபத்தில் எழுதப்பட்டு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டிருக்கிறதா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
இந்திராவின் அவசர நிலைக்கால ஆட்சிக்குத் துணை நின்ற குற்றத்தை இழைத்த உச்ச நீதிமன்றம், இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் இந்து ராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொடுக்கும் அடியாட்படையாகச் செயல்படுகிறது. ராமன் பிறப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருக்கும் பொய்மையின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு அதனை உறுதிப்படுத்துகிறது.
1924 ஜனவரி 21 அன்று, அந்த செய்தியைக் கேட்ட பிறகு உலகப் பாட்டாளி வர்க்கம் உறைந்துதான் போனது. வார்த்தைகள் இல்லை; கண்களில் நீர் தாரைதாரையாய் வழிந்தது. உலகப் பாட்டாளி வர்க்கம் தன் தலைவனின், ஆசானின் ஈடு செய்ய முடியாத இழப்பை எண்ணி வருந்தியது.
இந்த ஆண்டு, நாடு கடந்து உலகப் பாட்டாளி வர்க்கத்தால் நேசிக்கப்பட்ட, 1917-இல் ரசிய சோசலிசப் புரட்சியை நிகழ்த்தி, அழுக்கு சட்டைகளின் அதிகாரத்தை நிலைநிறுத்திய தோழர் லெனினின் 100-ஆம் ஆண்டு நினைவுதினம்.
தோழர் லெனின் நோயுற்றிருந்த தருணத்தில் தோழர் ஸ்டாலின் அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “தோழர் லெனினைப் பார்த்தவுடன் நமது மனதில் பட்டுத் தெறிக்கும் விசயம், செய்திகளை அறிவதற்கான அவரது தணியாத தாகம்; கடமையாற்றுவதற்கான அடங்காத – அடக்கவே முடியாத அவரது துடிப்பு; இவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அவர் ஏதோ பட்டினி போடப்பட்டவர் போல காணப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது”.
“எல்லா உழைப்பாளர்களின்பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது” என்று “லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிடுகிறார் கர்பீன்ஸ்கி.
“லெனின் மனிதக்குலம் அனைத்துக்கும் மேலே நிற்கிறார், நமக்குப் புலப்படாத உண்மைகளைத் தமது அசாதாரண சிந்தனைத்திறன் காரணமாகவே அவரால் காண முடிகிறது என்று எனக்குத் தென்பட்டது” எனக் கூறுகிறார் போல்ஷ்விக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அலெக்சாந்தரா கொலந்தாய். ரத்தக்களறியும் குழப்பமும் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் லெனினது அச்சமற்ற உறுதியைக் கண்டு வியக்கிறார் கொலந்தாய். ஆம், அவரது அசாதாரண சிந்தனைத்திறன் என்பது மார்க்சியத்தைத் தொடர்ச்சியாக இடைவிடாமல் நடைமுறையில் இருந்து கற்றுக்கொண்டிருந்ததோடு தொடர்புடையது.
லெனின் ஒரு புரட்சியாளர் என்பதற்காக மட்டும் நாம் அவரை நினைவுகூரவில்லை, பாட்டாளி வர்க்கத்திற்காக மண்ணில் ஒரு சொர்க்கமான சோசலிச ரஷ்யாவிற்கு அடித்தளமிட்டவர்; பாட்டாளி வர்க்க அரசு வந்தவுடன் பெண்களின் கைகளிலிருந்து கரண்டிகளையும், துணிகளையும், பாத்திரங்களையும் பிடுங்கி எறிந்துவிட்டு அவர்களது கைகளில் புத்தகங்களையும், டிராக்டர்களையும் கொடுத்து, உழைப்பு சுரண்டலிலிருந்து விடுவித்த பெண்ணியவாதி; ரஷ்ய நாட்டை மின்மயமாக்கியவர்; பொது சுகாதாரக் கட்டமைப்பு, பொது ரேசன், மகளிருக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக் கல்வி, தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் என உலகப் பாட்டாளி மக்கள் குறைந்தபட்சமாவது பெற்றிருக்கிறோம் என்றால் அதன் அடிநாதம்தான் தோழர் லெனின்.
லெனினது நினைவுகள் இன்றும் நமக்குத் தேவைப்படுகின்றன, நூற்றாண்டு கடந்தும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான விடை தோழர் லெனின்.
அம்பானி-அதானி கும்பலுக்கான மோடி-அமித்ஷாவின் பாசிச பேயாட்சியில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்படுகிறது; உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைக்கப்படுகிறது; காவிகளின் சாதி-மதக் கலவரங்களால் உழைக்கும் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்; போலி ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்படுகின்றன; பெண் என்பவள் அடிமை என்கிற பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிராகவும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு தடையாகவும் இருப்பதால் பெண்களுக்கான மாதவிடாய்கால விடுப்பு மறுக்கப்படுகிறது. இத்தகைய கொடூர சூழலில் உழலும் இந்திய உழைக்கும் மக்களாகிய நமக்கு அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைத்தளையிலிருந்து விடுபடவும், பாசிச அபாயத்தை முறியடிக்கவும் தோழர் லெனின் தேவைப்படுகிறார்.
1914, முதல் உலகப்போர் காலகட்டத்தில் காவுத்ஸ்கி தலைமையிலான இரண்டாம் அகிலத் தலைவர்கள் மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டி புரட்சியை நீர்த்துப் போகச் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தனர்; புரட்சியெல்லாம் தேவையில்லை, முதலாளித்துவத்தின் கீழேயே மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று முதலாளித்துவ அடிமைத்தனத்தைப் பரப்பிக் கொண்டிருந்தனர், சந்தர்ப்பவாதப் புதைசேற்றில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தனர்; இன்னொரு பக்கம் ரசியாவில் மார்க்சியத்தை அறிமுகப்படுத்திய பிளக்கானவ் உள்ளிட்டோர் ஏகாதிபத்திய போர்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் புரட்சியை நடத்துவது பற்றிய பார்வையின்றி தேசவெறியில் மூழ்கினர்.
அந்தப் பிற்போக்கான சூழலில்தான், முதலாளித்துவத்தை ஆய்வு செய்து, “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சககட்டம்” என்ற நூலின் மூலம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்திருக்கிறது என்று உலகிற்கு அறிவித்தார் லெனின். ஏகாதிபத்தியமாய் வளர்ந்த முதலாளித்துவத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்கப் புரட்சிதான் தீர்வு என்று அதற்கான புரட்சிகர நடைமுறையையும், புதிய பாணியிலான போல்ஷ்விக்மயமான கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்டியமைத்தார். ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி என்பது காலனிய நாடுகளின் விடுதலை எழுச்சியுடன் தொடர்புடையது என்று ஆசான் மார்க்சின் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற முழக்கத்துடன் “ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கத்தை இணைத்து மார்க்சியத்தை லெனினியமாக வளர்த்தெடுத்தார்.
ரஷ்ய சோசலிசப் புரட்சி மூலம் உள்நாட்டு-வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களை ஒருசேர வீழ்த்தி, காலனிய நாடுகளின் விடுதலைக்கு ஒளியூட்டினார். அந்த ஒளியில்தான், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் உண்மையான விடுதலையை அடைந்தனர்.
மேலும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஊடாகத்தான் உண்மையான தேசிய இன விடுதலையைப் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கோட்பாட்டு ரீதியாகவும், பல்வேறு தேசிய இனங்கள் விருப்பப்பூர்வமாக ஒருங்கிணைந்திருந்த சோவியத் யூனியனை உருவாக்கி நடைமுறை ரீதியாகவும் வழிகாட்டினார், லெனின். ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து வாழவே முடியாது என்ற முதலாளித்துவ தேசியவாதத்தை, கோட்பாடு, நடைமுறை ஆகிய இரண்டு அம்சங்களிலும் அடித்து நொறுக்கினார்.
லெனினின் நினைவுநாளில், உழைப்பாளி வர்க்கத்தின் மீதான நேசமும், புரட்சியின் மீதான உறுதியும், மார்க்சியத்தை இடைவிடாது கற்றுக்கொண்டு செயல்படுத்திய அவரது அரசியல் மேதைமையும் நாம் அவரிடமிருந்து இறுகப் பற்றிக்கொள்ள வேண்டிய பண்புகள்.
எனினும், இவற்றையெல்லாம் தாண்டி, தோழர் லெனினது மகத்தான பங்களிப்புகளில் இன்று நாம் முதன்மையாக நினைவுகூர வேண்டியது, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு வழிகாட்டுகின்ற, உறுதிமிக்க ஒரு போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைத்ததைத்தான். ஏனெனில், இன்றைய உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மைத் தேவை அதுதான். ஏகாதிபத்திய-முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதம் அமைப்பு, “அமைப்பு மட்டுமே!”
கம்யூனிஸ்ட்டுகளின் பணி தொழிற்சங்கப் போராட்டங்கள் என்று புரட்சியிலிருந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிரித்து, முதலாளித்துவத்திற்கு சேவைசெய்த லெனின் காலத்து திரிபுவாதிகளைப் போல இன்றும் சித்தாந்தத்தை, கொள்கைகளை முதலாளித்துவத்திடம் அடகுவைத்துவிட்டு சொல்லில் சோசலிசம் பேசுகின்ற பலவண்ண திரிபுவாதிகள் உலகெங்கும் இருக்கின்றனர்.
உலகெங்கும் நடைபெறுகிற உழைக்கும் வர்க்கப் போராட்டங்கள், எழுச்சிகளைப் புரட்சியை நோக்கி வளர்த்துச் செல்லாத இத்திரிபுவாதிகள்தான் புரட்சியின் தடையரண்கள். மனிதவளம், இயற்கைவளம் என ஒட்டுமொத்த புவிக்கோளத்தையும் தனது கட்டற்ற லாபவெறிக்காக சுரண்டும் முதலாளித்துவத்தால் பட்டினி, பசி, போர், அகதிகளாகப் புலம்பெயர்வு, தேசிய இன அடக்குமுறைகள், சூழலியல் நெருக்கடிகள் என உலகமே பேரிடர்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த வலிகளுக்கு விடுதலையும், இளைப்பாறுதலும் கொடுப்பது பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டுமே! அத்தகைய புரட்சியை நடத்துவதற்குரிய, லெனினியக் கட்சியை உடனடியாகக் கட்டியமைப்பதன் மூலமே இந்தியப் பாட்டாளி வர்க்கமாகிய நாம் தோழர் லெனினை நினைவுகூர்வதற்கு உரிமையுள்ளவர்களாவோம்!
பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயிலின் மிச்சங்கள் இருப்பதாக இந்துத்துவ கும்பல் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தொல்லியலாளர்கள் சிலரைப் பயன்படுத்தி, பொய்யான தொல்பொருட்களை காட்டி, அதை ராமர் கோயிலின் மிச்சங்கள் எனவும் சாதித்தது இந்த கும்பல். 2003-ஆம் ஆண்டு பாபர் மசூதியை ஒட்டிய பகுதிகளில் இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு முடிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்த சன்னி வஃக்பு வாரியம் இந்த அகழாய்வு முடிவு, ‘தெளிவற்ற மற்றும் உள்முரண்பாடுகளுடன் உள்ளது’ எனக் கூறியது.
பாபர் மசூதியில் ஒரு பகுதியில் நடந்த அகழாய்வில் வஃக்பு வாரியத்தின் சார்பில் பங்கேற்ற சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகியோர் 2010-ஆம் ஆண்டில் ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ இதழில் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு முடிவு குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தனர். அந்தக் கட்டுரையில், முன்முடிவுகளை வைத்துக்கொண்டு இந்திய தொல்லியல் ஆய்வகத்தைச் சேர்ந்த தொல்லியலாளர்கள் ஆய்வில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.
அகழாய்வு.
“எந்தவொரு இந்திய தொல்லியலாளரோ, அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரோ அகழாய்வு நடத்த வேண்டுமெனில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முன் அனுமதி பெற்றாக வேண்டும். இதனால் பலம் பொருந்திய அந்த அமைப்பை எதிர்த்தும் அதன் காலாவதியான அகழாய்வு முறைகள் குறித்தும் பேச எவரும் துணிவதில்லை” என அவர்கள் எழுதியிருந்தனர்.
2019-ஆம் ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தனது தோற்றுப்போன ஆட்சி நிர்வாகத்தினை மறைக்க மீண்டும் அயோத்தி பிரச்சினையை கையெலெடுத்துள்ளது இந்துத்துவ கும்பல். அண்மையில் ஒன்றுகூடிய பரிவாரங்கள், நீதிமன்றத்தைப் பொருட்படுத்தாது ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என முழங்கின.
இந்தச் சூழலில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 26-வது கருப்பு தினம் வியாழன் அன்று நினைவு கூறப்பட்டது. இதையொட்டி ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளம், அகழாய்வில் பங்கேற்ற ஜே.என்.யு. பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரியா வர்மாவின் நேர்காணலை வெளியிட்டிருந்தது. அந்த நேர்காணலில் சுப்ரியா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வில் பல செயல்முறை குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார்.
“இப்போது பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததற்கான தொல்லியல் தடயங்கள் எதுவும் இல்லை. உண்மையில் பாபர் மசூதிக்கு அடியில் மற்றொரு மசூதியின் மிச்சங்கள்தான் உள்ளன” என்கிறார் சுப்ரியா.
இந்திய தொல்லியல் ஆய்வகம் அகழாய்வில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களாக மூன்று விசயங்களை கூறியிருந்தது. அந்த மூன்றும் கேள்விக்குறியவை என விளக்குகிறார் சுப்ரியா.
1. மேற்பகுதியில் இருந்த சுவர்: “மேற்கு பகுதியில் சுவர் இருப்பது மசூதி கட்டுமானத்தில் உள்ள முக்கிய அம்சம். அந்த சுவரின் முன்புதான் தொழுகை நடத்துவார்கள். கோயிலில் இப்படியான அம்சம் இல்லை. கோயில் கட்டுமானம் முற்றிலும் வேறானது.”
2. ஐம்பது தூண்களைக் கொண்ட அடிகட்டுமானம்: “இது முற்றிலும் ஜோடிக்கப்பட்டது. பலமுறை இந்த புரட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் புகார் செய்திருக்கிறோம். தூண்கள் என அவர்கள் சொல்லிக்கொள்ளும் அமைப்பு உடைந்த ஓடுகளால் ஆனது. அவற்றின் இடையே மண் நிரம்பி இருந்தது. வலிமையான கட்டடத்தைத் தாங்கும் தூண் எப்படி அவ்வாறு இருக்க முடியும்? என நீதிமன்றத்தில் வாதிட்டோம்”.
3. கட்டுமானத்தின் மிச்சங்கள்: “முக்கியமான கட்டுமான மிச்சங்கள் என 12 துண்டுகள் சமர்பிக்கப்பட்டன. இவை எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவை அல்ல. மாறாக, இவை பாபர் மசூதியின் சுண்ணாம்பு தரை தளத்தின் மேலே இருந்த கட்டிடக் கழிவுகள். அவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல, இது ஒரு கோயில், கற்களால் ஆன ஒரு கோயிலாக இருந்திருந்தால் இதைவிட பல ஆதாரங்கள், ஏன் கற்சிலைகள் கூட கிடைத்திருக்கலாம். ஆனால் அப்படியெதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
சுப்ரியா வர்மா.
சுப்ரியா வர்மா, இந்திய தொல்லியல் ஆய்வகம் நடத்திய அகழாய்வு, முன்பு நடந்த தொல்லியல் ஆய்வுகள் குறித்தும் பல விசயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். 1861-ஆம் ஆண்டும் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், பாபர் மசூதி இருந்த பகுதிகளில் ஆய்வுகள் செய்ததாக தெரிவிக்கிறார். அயோத்தியில் மூன்று பழமையான இடங்கள் இருந்ததாகவும் அவற்றில் இரண்டு புத்த ஸ்தூபிகளாகவும், ஒன்று விகாரையாகவும் இருந்ததாக கன்னிங்ஹாம் பதிவு செய்துள்ளார். அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் பகுதி மக்கள் இங்கிருந்த சில கோயில்கள் இடிக்கப்பட்டதாக வாய்வழி கதைகளை சொன்னதாகவும் ஆனால், பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என்பது குறித்து எவ்வித குறிப்பையும் கன்னிங்ஹாம் எழுதவில்லை என்றும் சுப்ரியா குறிப்பிடுகிறார்.
அதன் பின்பு 1969-ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை இரண்டாவது அகழாய்வை இந்தப் பகுதிகளில் (அயோத்தியில்) நடத்தியது. அந்த அகழாய்வு முடிவுகள் குறித்து தெளிவான அறிக்கைகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. கிடைத்த தகவலின்படி, அகழாய்வு நடந்த பகுதிகள் வரலாற்றின் தொடக்க மற்றும் மத்திய காலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக இருந்திருக்கலாம்.
1975-1980 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக இருந்த பி.பி. லால் இந்த அகழாய்வு திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தார். இந்துத்துவ அமைப்புகளின் புரட்டுக்கு ‘அறிவியல்’ சாயம் அடித்தவரும் இவரே.
சுப்ரியா சொல்கிறார், “அயோத்தி, மதுரா, வாரணாசி ஆகிய மூன்று இடங்களில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டதாக 1988-ஆம் ஆண்டு விசுவ இந்து பரிசத் பிரச்சினையை கிளப்பியது. அந்த ஆண்டு, பி.பி. லால், 1975-1978ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் அகழாய்வு செய்த இடத்தில் கண்டெடுத்ததாக ‘கோயில் தூண்கள்’ எனக்கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏடான ‘மன்தன்’-இல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதோடு, குரோஷியாவில் நடந்த உலக தொல்லியல் மாநாட்டில், இந்த புகைப்படத்தை சமர்பித்து அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட்டால் கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம் என பேசினார்.
இந்த லால், ராமாயணம், மகாபாரத புராணங்களில் சொல்லப்பட்ட இடங்களை அகழாய்வதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டவர். இவர் கொடுத்த ‘புராண புரட்டு ஆதாரங்கள்’ பாபர் மசூதியை வைத்து பா.ஜ.க., மிகப்பெரும் அளவில் அரசியலை கட்டியெழுப்ப உதவியது. 1992-ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு முதன்முறையாக வந்த பா.ஜ.க. (தேசிய ஜனநாயகக் கூட்டணி) ஆட்சியின் போது மீண்டும் அகழாய்வு செய்வது குறித்த பேச்சு எழுந்தது. பின்பு, அலகாபாத் நீதிமன்றம் 2002-ஆம் ஆண்டு அகழாய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு ஆணையிட்டது”
சுப்ரியா தன்னுடைய நேர்காணலில், அப்போது செய்யப்பட்ட அகழாய்வு குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தில் பல உண்மைகள் உள்ளன. உள்ளடக்கத்தில் பல தலைப்புகளில் வந்த கட்டுரையை எழுதியவர் யார் என்கிற விவரமும்கூட இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆய்வின் முடிவு பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ளது. முடிவுக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பே இல்லை என்கிறார் சுப்ரியா.
“முழு அறிக்கையையும் படித்தால், ஒரு இடத்தில் கூட கோயில் குறித்த பதிவு இடம்பெற்றிருக்காது. இது தரமான அறிக்கைதான். ஆனால், ஆகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டுகள் மற்றும் மனித எலும்பு கூடுகள் குறித்த பதிவு அறிக்கையில் இல்லை. அதுகுறித்து அவர்கள் பதிவு செய்யவே இல்லை. அவற்றை ஆய்வுக்கு அனுப்பினால் உண்மைகள் தெரிய வந்திருக்கலாம்.
இறுதியாக மூன்றே மூன்று ஆதாரங்களின் அடிப்படையில் பெயர் போடாமல் ஆய்வின் முடிவு ‘பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது” என எழுதப்பட்டுள்ளது. மூன்றே வரிகளில் எழுதப்பட்ட முடிவுக்கு உள்ளடக்கத்தில் எங்கேயும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் இரண்டு அல்லது மூன்று அடுக்கில் சிறு மசூதிகள் இருக்கலாம் எனகிற முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்கிற சுப்ரியா முசுலீம் மக்களின் குடியேற்றத்துக்கு முன், இந்தப் பகுதியில் பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் என்கிறார்.
“அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை இந்தப் பகுதி பவுத்த மக்களின் வசிப்பிடமாக இருந்திருக்கலாம் (அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பதிவு செய்திருக்கிறார்) என்றும் 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டில் முசுலீம் மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அப்போது பழைய இடிந்துபோன பவுத்த கட்டுமானத்தின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டிருக்கலாம். அதன்பின் 1528-ஆம் ஆண்டும் பாபர் மசூதி, பழைய மசூதிகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது” என தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார் சுப்ரியா.
பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது திருட்டுப் பார்ப்பனிய இந்துமதம். வரலாற்று காலம் தொட்டு இந்த திருட்டுத்தனத்தை செய்துவரும் இவர்கள், பாபர் மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது என சொன்ன புரட்டும் புஸ்வானமாகியுள்ளது.