வாக்காளர்களை மிரட்டிய பாஜக! | தோழர் அமிர்தா
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வாக்காளர்களை மிரட்டிய பாஜக! | தோழர் அமிர்தா
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கடந்த வாரம் தொடங்கிய கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பல கிராமங்களை முற்றிலுமாக அழித்துவிட்டது. இதனால் அங்கு வசித்துவந்த மக்களில் 315 பேர் உயிரிழந்துள்ளனர். 1,600 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை (20-05-2024) அன்று பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 50 பேர் இறந்துள்ளனர்.
மத்திய கோர் மாகாணத்தின் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் தலைநகரான ஃபெரோஸ்-கோவில், மக்கள் வசித்து வந்த 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. 4,000 வீடுகள் கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. 2,000 க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.




![]()
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஈழ இனப்படுகொலை – வர்க்கமாய் ஒன்றிணைவோம்! : கவிதை
எத்தனை யுகங்கள் கடப்பினும்
ஈழத்தில் செத்து வீழ்ந்த
எம் தமிழ் உறவுகளின் கதறல் சத்தமும்,
வீழ்ந்த குண்டுகளின் சத்தமும்
மண்டைக்குள் நித்தம் ஒரு யுத்தத்தை
நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கிறது
எழுத பேனா எடுத்தா..
அதுவும் தன் குருதியை வரியா வடிச்சு கொடுக்குது.
எத்தனையோ பால்மணம் மாறா பச்சிளம் பிஞ்சுகளை
சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு
துண்டு துண்டாக்கி முச்சந்தியில் வீசியெரிந்தது!
தடுத்த தாயையும் நிர்வாணமாக்கி,
பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்தது !
இளம் பெண்களோ பெற்ற தகப்பனின் கண்முன்னே அம்மணமாக்கப்பட்டு, அடித்து துன்புறுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவங்கள் கேட்கும் மனித மனங்களை ஆழ்துளைக்கு இட்டுச் செல்ல மறப்பதில்லை!
ஆயிரக்கணக்கான ஆண்களோ அடித்தே கொல்லப்பட்டார்கள்!
ஆடைகள் அவிழ்த்து துப்பாக்கி ரவைகளை மண்டைக்குள் புதைத்தது இனவெறி பிடித்த ராஜபக்சே அரசு!
ரத்த வெறிபிடித்த அமெரிக்காவும் இந்தியாவும்
தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும்,
இலங்கையின் வளங்களை கொள்ளையடிக்கவுமே இப்போரை நிகழ்த்தியது.
அமெரிக்காவும், இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு கொடுத்த ஆயுதங்களும்
செய்த நாசகர வேலைகளும்
லட்சம் மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கவும், லட்சம் மக்கள் அகதிகளாக்கப்படவும் மூலதனமாகியது !
இனவெறி நஞ்சை சிங்கள மக்களிடம் விதைத்து,
தமிழ் மக்களின் பிணங்களை அறுவடை செய்த ராஜபக்சேவின் கோர முகம்
நாடு நெருக்கடியில் சிக்கியபோது இலங்கை மக்களிடம் அம்பலமானது.
இன்று ராஜபக்சே சொந்த மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டது, வரலாறு மக்கள் பக்கம் திரும்பியிருப்பதைக் காட்டுகிறது.
இனம், மொழி பேதம் கடந்து
வர்க்கமாய் யாவரும் ஒன்றாவோம் !
இப்போராட்டங்களே நமக்கான வழி !
களம் காண்போம் வாருங்கள் உறவுகளே !
விடுதலை காற்றினை சுவாசிக்க !
![]()
செந்தாழன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

முடிவுறாப் பயணம்?
புலம்பெயர் தொழிலாளர்கள் கவிதை
இதுநாள் வரையிலான
எங்கள் பயணங்களில்
எதையுமே திட்டமிட்டதில்லை
கொரானா ஊரடங்கிற்கு முன்பு வரை…
அனைத்து ஊரிலும்
அனைத்து ஊர்திகளும் அமைதியாக்கப்பட்டிருந்தது
அரசின் திடீர் அறிவிப்பால்..
நெடுந்தூரம் கடக்க
திட்டம் என்ன இருக்கு?
சிந்தனையில் அமிலம் இறங்கி
சிந்திக்க சிரமமாக்கியது…
எட்டும் தூரம் என்றாலுங்கூட
எழுநூறு மைல் தள்ளி இருக்கிறார்கள்
என் பெற்றோர் உற்றார் உறவுகள்..
குடுவைத் தண்ணீர்
கொஞ்சம் ரொட்டிப் பைகள்
கைப்பிடியளவு தைரியம்
நோயுற்ற மிதிவண்டிகளோடு
நெடும் பயணத்தை நிகழ்த்தினோம்…
உச்சி வெயில் உச்சந்தலையில் விழ
வெஞ்சினமாய் வெப்பக்காற்று வீச
தாகத்திற்கு உதவா கானல்நீர் பாதையெங்கும் பளபளக்க
கல்லும் முள்ளும் கால்களை பிளக்க
தொடர்ந்தது பயணம்…
ஓய்வு கேட்டு உடல் உருக
இளைப்பாற நெஞ்சம் மறுக
மெல்லத் தவழும் மிதிவண்டியும் முனக
இருள்கவிந்த இடமாய் எங்கும் தென்பட
ஓடித் தேய்ந்த மிதிவண்டிகளை ஓரம் நிறுத்தி விட்டு
வல்லிய பசியில் மெல்லிய பாடல் பாடியபடி
ஊரே அடங்கியபின் ரயிலா வரப்போகிறதென்றெண்ணி
தண்டவாளத்தில் தலைவைத்து
இரவுக்கும் களைப்புக்கும் அடிபணிந்து
உறங்கிப் போனோம் …
ஓநாயென ஊளையிட்டு வந்த ரயில்
முந்நூறு மைல்கள் கடந்து வந்த
உடல்களைச் சிதைத்தப் போது
முடிவுக்கு வந்தது
எங்கள் முடிவுறாப் பயணம்…!
ஏகலைவன்
மும்பை புழுதி புயல்: என்ன நடந்தது? | தோழர் ரவி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்?
பாலஸ்தீனம்!
உலக வரைபடத்தில் இருந்து
களவாடப்பட்ட ஓர் தேசம்!
இளம் பிஞ்சுகளின்
இறுதி கதறல்களும்,
மரண ஓலங்களும் கேட்கும்
மரண தேசம்!
காசா வீதிகளில் கட்டிட குவியல்களுக்கு
அடியில் புதைந்து கிடக்கும்
பச்சிளம் குழந்தைகளும்
பிறக்காமலேயே தாயின் கருவறையிலேயே
புதைக்கப்பட்ட சிசுக்களின் கதைகளும்
நம் இதயத்துடிப்பை ஒரு நிமிடம்
நிறுத்திவிட்டே செல்கிறது…
வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளினால்
மரணித்த தாயின் மார்பினில் பால் தேடும்
குழந்தைக்குத் தெரிய வாய்ப்பில்லை,
தன் தாயின் மரணச் செய்தி.
இஸ்ரேல் எனும் யூத இனவெறி பிடித்த ஓநாய்
பாலஸ்தீன மக்களின் ரத்தம் குடிக்க
நடத்தும் இறுதி யுத்தமே, இப்போர்!
படிக்க: நாங்கள் ராமனின் அணில்கள் அல்ல! | கவிதை
அமெரிக்கா எனும் மரண வியாபாரியின்
அரசியல் மேலாதிக்க போட்டிக்கும்,
ஆயுத வியாபார முதலைகளுக்கு
தீனிபோடவுமே இப்போர்!
உருக்குலைந்த உடல்களையும்,
எஞ்சிய உயிர்களையும் காப்பாற்ற
தப்பிப்பிழைத்த மக்கள் தஞ்சம் புகுந்த மருத்துவமனை மீது
குண்டு மழை பொழிந்து கொல்கிறது, இனவெறி இஸ்ரேல்.
பசித்த வயிறு ஒட்டிக் கிடக்க,
துண்டு ரொட்டிக்கு மக்களை
திண்டாட வைத்துவிட்டு சத்தமின்றி
மற்றொரு யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
35 ஆயிரத்திற்கும் அதிகமான
பிணங்களை கண்ட பின்பும்
லட்சம் மக்களை அகதிகளாக்கிய பின்பும் அடங்காத
இஸ்ரேலின் ரத்த வெறிக்கு
அடுத்தக் குறி ரஃபா!
ஆனால்,
சுட்டெரிக்கும் சூரிய வெப்பம்
நெத்திப் பொட்டில் பட்டுத்தெரிப்பது போல,
சாளர கம்பிகளுக்குப் பின் இருந்துக்கொண்டு
விடுதலைக்கான சுவாசக்காற்றினை
ஒருபோதும் சுவாசிக்க முடியாது
என்பதை உணர்ந்த மாணவ-இளைஞர் கூட்டம்
போரட்டம் எனும் ஆயுதம் ஏந்த துவங்கியுள்ளது.

அந்த ஆயுதம்,
அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களை பூகம்பமாய்
ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.
ஆம், அதுவே நமக்குமான ஆயுதம்!
உலகம் முழுவதும் அவ்வாயுதங்களை
ஏந்தி களம் காண்போம்!
பாலஸ்தீன விடுதலைக்கான
விடியலை நோக்கி
பாதைகள் படைப்போம்!
செந்தாழன்
அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
மே 2024 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
குறையும் வாக்குப்பதிவு:
பா.ஜ.க-விற்கு மட்டும்தான் நெருக்கடியா?
தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!
பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!
நாடாளுமன்றத் தேர்தல்: மாற்று அரசு கட்டமைப்பைக் கோரும் மக்கள் கோரிக்கைகளும் அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!
பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? வழிகாட்டும் வெளியீடு!
பாசிசக் கும்பலின் பிடியில் திரைத்துறை: மோடி கும்பலின் அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரம்!
சத்தீஸ்கர் படுகொலை: பாசிசக் கும்பலால் நடத்தப்படும் நரவேட்டை
ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்கா-இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு
மணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி!
முன்குறிப்பு: ஏப்ரல் மாதத்தில் மட்டும் வரி என்னும் பெயரில் உழைக்கும் மக்களிடம் மோடி அரசு உறிஞ்சி கொழுத்தது, 2 லட்சம் கோடியை தாண்டுமாம்! மக்கள் மீது வரி விதிப்பதில் அமெரிக்காவையும், சிங்கப்பூரையும் முந்திச் செல்கிறது, பாசிச மோடியின் அம்பானி-அதானி சேவை இந்தியா!
பச்சிளம் பிஞ்சுகள் குடிக்கும் பாலுக்கும் வரி!
பசிக்கு உண்ணும் பிஸ்கட்டுக்கும் வரி!
தயிருக்கு வரி!
மோருக்கு வரி!
பருத்திக்கு வரி!
நூலுக்கு வரி!
ஜவுளிக்கு வரி!
விற்பனைக்கு வரி!
பணக்காரர்களுக்கு ஒரு வரி!
ஏழைகளுக்கு ஒரு வரி!
இங்கு இதுவே நியதி!
பெண்கள் பயன்படுத்தும்
நாப்க்கினுக்கு வரி!
முதியவர்கள் பயன்படுத்தும்
மாத்திரைகளுக்கு வரி!
அதானியின் கஞ்சாவுக்கு மட்டும்
துறைமுகத்தில் என்ட்ரி ஃப்ரீ!

ஜி.எஸ்.டி-க்கு பின்
சிறுகுறு முதலாளிகளின்
முகவரி கேட்டால்,
பெரும்பாலும் கல்லறைக்கு
வழி சொல்கிறார்கள்.
மிச்சசொச்சம் இருந்த அண்ணாச்சிகளோ,
தொழில் என்னாச்சி எனக் கேட்டால்,
“எல்லாம் நாசமாப் போச்சு” என்கிறார்கள்.
மானம் மறைக்க கோவணம் கட்டியவனின்
கோவணத்தையும் பறித்துக் கொண்டது ஜி.எஸ்.டி!
அவசரத்திற்கு மூத்திரம் வந்தாலும்,
இனி அதற்கும் வரி!
பிணங்களை எரிக்கும்
சுடுகாடுகளை விட்டு வைத்திருக்கிறார்கள்.
அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால்,
அதற்கொரு வரிப்போட்டு
செத்தவன் நெற்றிக் காசையும்
களவாண்டு விடுவார்கள்.
இன்னும் எத்தனை வரிகளைதான்
தாங்கும் எங்கள் முதுகுகள்.
பாசிசக் கூட்டமே,
நாங்கள் ஒன்றும் அணில்கள் அல்ல,
உங்கள் ராமனின் வரிகளை
முதுகிலே சுமந்துத் திரிய!
செந்தாழன்
காவிகளின் “சூரத் ஃபார்முலா”:
தேர்தல் ‘ஜனநாயகத்துக்கு’ வெட்டப்படும் சவக்குழி
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக மோடி – அமித்ஷா கும்பல், தன்னுடைய அதிகார பலம், பண பலம், ஊடக பலம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு மூலம் பல்வேறு சதி நடவடிக்கைகள், மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, தன் கட்சியினரை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் சுயேட்சை வேட்பாளர்களையும் மிரட்டி, வேட்பு மனுக்களை திரும்பபெற வைத்துக் கொண்டு இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் சூரத் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சூரத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலேஷ் கும்பானி மற்றும் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்பு மனுக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி சௌரப் பார்தியால் நிராகரிக்கப்பட்டது. இவர்களின் மனுக்களை முன்மொழிந்திருந்த நால்வரும், மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று தன்னிடம் புகாரளித்ததை அடுத்து வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க : ஃபெலிக்ஸ் சவுக்கோட முடியாது! | தோழர் மருது நேர்காணல்
மேலும், சூரத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 7 சுயேட்சை வேட்பாளர்களும் ஒரு பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரும் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். எனவே, முகேஷ் தலாலை எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாத காரணத்தால்தான் அவர் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களை முன்மொழிந்தவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், பகுஜன் கட்சியின் வேட்பாளர் ஆகியோர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த குண்டர்களாலும், குஜராத் போலீசாலும் மிரட்டப்பட்டுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சியே வேட்பாளர்கள் தங்களுடைய மனுக்களை திரும்பப்பெற்று கொண்டுள்ளனர்.
ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, சுயேட்சை வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்களை திரும்பப்பெறுமாறு தனது கட்சி கோரிக்கை விடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளதே அதற்கு சான்றாகும். அதாவது வேட்பு மனுக்களை திரும்பப்பெறுமாறு மிரட்டியதைதான் கோரிக்கை விடுத்ததாக கூறுகிறார்.
அதேபோல, ஏப்ரல் 29-ஆம் தேதி மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்திபாம், தனது வேட்புமனுவை திரும்பப்பெற்று பா.ஜ.க-வில் இணைந்தார். காந்திபாமின் இந்நடவடிக்கையானது, 2007-ஆம் ஆண்டு அவர் மற்றும் அவருடைய தந்தைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிலத் தகராறு வழக்கில் சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி) சேர்க்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில நாட்களுக்கு பிறகே நடந்துள்ளது. எனவே இதன்மூலம் காந்திபாமும் பா.ஜ.க குண்டர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தே தன்னுடைய வேட்புமனுவை திரும்பப்பெற்றுக்கொண்டு காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார் என்பதும் உறுதியாகிறது.
அதேபோல, மே மாதத் தொடக்கத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடும் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களில் 12 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். 4 பேர் சிறிய கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களும் பா.ஜ.க குண்டர்களாலும் போலீசாலும் மிரட்டப்பட்டுள்ளனர்.

16 பேரில் மூவர், தங்களுடைய வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்காக உள்ளூர் பா.ஜ.க அரசியல்வாதிகள் மற்றும் பா.ஜ.க கட்சியுடன் தொடர்புடையவர்களால் மிரட்டப்பட்டதாக ஆங்கில ஊடகமான “ஸ்க்ரோல்”-யிடம் கூறியுள்ளனர். மேலும் அவர்களில் இருவர், தங்களை குஜராத் போலீசும் மிரட்டியது என்றும் கூறியுள்ளனர். வேட்பு மனுவை திரும்பப்பெற்ற சுயேட்சை வேட்பாளரான ஜிதேந்திர சவுகான், “என் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்; இந்த தேசத்தைக் காப்பாற்றுங்கள்; அது ஆபத்தில் உள்ளது” என்று தான் வெளியிட்ட காணொளியில் கூறுகிறார்.
காந்திநகரில் பிரஜாதந்திர ஆதார் கட்சி சார்பில் போட்டியிடும் 43 வயதான சுமித்ரா மவுரியா காவிக்குண்டர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறார். காவிக் குண்டர்களின் மிரட்டலில் இருந்து தன்னை தற்காலிகமாக தற்காத்துக் கொள்ள 400 கிலோமீட்டருக்கு அப்பால் சென்ற சுமித்ரா மௌரியாவையும் குஜராத் போலீசு அவர் இருக்கும் இடத்திற்கே சென்று மிரட்டியுள்ளது. ஆனால், அவர் இன்றுவரை தன்னுடைய வேட்பு மனுவை திரும்பப்பெறவில்லை.
இவ்வாறு, மோடி – அமித்ஷா கும்பல் தற்போது வரை மூன்று மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை மிரட்டி வேட்பு மனுக்களை திரும்பப்பெற வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவுதான் முடிவுற்றுள்ள நிலையில், மேலும் பல எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப்பெற காவிக் குண்டர்களாலும் போலீசாலும் மிரட்டப்படுவர் என்றே கருதத்தோன்றுகிறது. பா.ஜ.க. கும்பலின் இந்நடவடிக்கையானது முதலாளித்துவ ஊடகங்களிலாலேயே “சூரத் ஃபார்முலா” என்று விமர்சிக்கப்படுகிறது.
இந்த மூன்று தொகுதிகளும் இதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. கும்பல் வெற்றி பெற்ற தொகுதிகளாகும். தற்போதைய தேர்தலிலும் பா.ஜ.க-வினரே நிச்சயம் வெற்றி பெறுவர் என்று நம்பப்படுகிறது. தாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க-வினர் கருதுகின்ற தொகுதிகளிலும் ஏன் எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை மிரட்ட வேண்டும் என்ற கேள்வியை முதலாளித்துவ ஊடகங்களும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் எழுப்புகின்றனர்.
“1984 முதல் சூரத் மற்றும் இந்தூர் மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால், 2024-இல் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு, வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்யப்பட்டுள்ளனர். ஏன்?” என்று தன்னுடைய “எக்ஸ்” பதிவில் கேள்வியெழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
படிக்க : மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி
பா.ஜ.க கும்பல் தன்னுடைய தோல்வி பயத்தால் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜ.க-வின் இந்நடவடிக்கைகளை அந்த அடிப்படையில் பார்க்க முடியாது. மாறாக, பா.ஜ.க கும்பலின் நீண்டகால கனவான ஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் ஒரே கட்சி என்ற நோக்கத்தின் அடிப்படையிலான “எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா” என்பதன் ஓர் அங்கமாகும்.
அந்த நோக்கத்திலிருந்துதான், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னுடைய அடியாட்படைகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டுவது, அடிபணிய வைப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவரும் பா.ஜ.க. கும்பல், தற்போது சுயேட்சை வேட்பாளர்களையும் காவிக் குண்டர்கள் மூலமும் போலீசின் மூலமும் மிரட்டத் தொடங்கியுள்ளது.
இனி வருங்காலங்களில் சூரத் ஃபார்முலா அடிப்படையிலான நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். அதன்மூலம், சூரத்தை போன்று தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிட ஆட்களே இல்லாத நிலையை உருவாக்க காவிக்கும்பல் விழையும்.
இவ்வாறு இந்த பெயரளவிலான ஜனநாயக அரசுக் கட்டமைப்பை தங்களுடைய இந்துராஷ்டிர அரசுக் கட்டமைப்பாக படிப்படியாக மாற்றி வருகின்றனர் பாசிஸ்டுகள்.
கதிர்
மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வெளியீடு: கல்வி: காவிமயம் – கார்ப்பரேட் மயம்!
முதற்பதிப்பு: மே 2024
வெளியிடுவோர்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு

முன்னுரை:
மோடி ஆட்சிக்கு வந்த பின், பாடத்திட்டங்களில் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை குறித்தான விஷயங்களை நீக்கியது, திப்பு சுல்தானின் வரலாற்றை நீக்கியது என்று கல்வியையே பிற்போக்குக் கருத்துகள் நிறைந்ததாக, பாசிசமயமாக மாற்றி, மாணவர்களை சாதி -மத வெறியர்களாகவும், மூடநம்பிக்கைகள் உடையவர்களாகவும் உருவாக்க முயற்சி செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்.
இன்னொரு பக்கத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள், கோச்சிங் நிறுவனங்கள், இணையவழிக் கற்பித்தல் நிறுவனங்கள் கொள்ளையைத் தீவிரப்படுத்துகிறது. இதற்கேற்ப புதிய புதிய நுழைவுத் தேர்வுகள், கொள்கைகளை அறிமுகம் செய்கிறது.
ஒன்றிய அரசு திணித்து வரும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள்; ஐஐடி முதல் ஜே.என்.யூ வரை பல பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் நடக்கும் சாதி – மதவெறியர்களின் ஆதிக்கத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் என ஒன்றிய அரசின் கல்வித்துறை மீதான காவி – கார்ப்பரேட்மய நடவடிக்கைகள் தொடர்ந்து மாணவர்களைக் காவு வாங்கி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி ஹைதராபாத் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டாத மாநிலங்கள் கூட வெவ்வேறு சொற்றொடர்களைப் பயன்படுத்தி, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.
படிக்க: “ஒரே நாடு ஒரே ஜெர்சி!” – காவிகளின் பிடியில் இந்திய கிரிக்கெட் அணி!
ஆம், உண்மைதான். ஆரம்பத்தில் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என கூறிக்கொண்ட திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுவை அமைத்தது. அதன் பிறகு, தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வோம் என பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பேச ஆரம்பித்தார்கள். இச்சூழலில் தான், புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை மாநில கல்விக் கொள்கையில் சேர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் நெருக்கடியை அம்பலப்படுத்தி, இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் ஜவகர் நேசன் அதிலிருந்து வெளியேறினார்.
மாநில கல்விக் கொள்கையை இறுதி செய்வதற்கு முன்பே, ‘இல்லம் தேடிக் கல்வி’ ‘வானவில் மன்றம்’ ‘எண்ணும் எழுத்தும்’ ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ ‘நான் முதல்வன்’ ‘உயர் கல்வியில் பொதுப் பாடத்திட்டம்’, எமிஸ் தகவல் சேகரிப்பு, போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களின் மூலம் பள்ளிக் கல்வியில் நேரடியாகத் தொண்டு நிறுவனங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் கொண்டு வந்து புகுத்தும் வேலையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதன் விளைவாக, பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை அரசின் அடிப்படைக் கட்டமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகள் ஓங்கும் நிலை உருவாகி வருகிறது.
புதிய கல்விக் கொள்கையானது, கல்வியில் காவி – கார்ப்பரேட்மயத்தைப் புகுத்தக்கூடிய பேராபத்து மிக்கது; ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே பண்பாடு என்ற ஒற்றைத்துவ பாசிச நடவடிக்கைகள் அனைத்தையும் கல்வியிலும் புகுத்தக்கூடியது; இதன் மூலம் இந்தி சமஸ்கிருத திணிப்பு கட்டாயமாக்கப்படும்; மாநில அளவிலான பாடத்திட்டங்கள் வரலாறுகள், புறக்கணிக்கப்பட்டு பொய்யான வரலாறுகளும் அறிவியலுக்கு புறம்பான குப்பைகளும் திணிக்கப்படும் என்பதே மாநில அரசின் கருத்து. ஆனால், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ‘கலா உத்சவ்’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கலை திருவிழாக்கள் இந்தி – சமஸ்கிருதப் பண்பாட்டை முன்னிறுத்துபவையே.
மாநில அரசின் இந்தப் போக்குகளைக் கண்டுதான் மத்திய அமைச்சர் மகிழ்கிறார்.
ஒன்றிய அரசு கல்வித்துறை மீது தொடுத்து வரும் காவி-கார்ப்பரேட்மய நடவடிக்கைகளும், அவை ஏற்படுத்தும் விளைவுகளும் சமூகத்தில் சீற்றத்தை ஏற்படுத்துகின்றன.
படிக்க: பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்
இதிலிருந்து உருவாகும் எதிர்க்கருத்துக்களுடன் இணைந்தும், அவற்றின் பலனை அறுவடை செய்து கொள்ளவும், நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு பேசியது திமுக. ஆட்சிக்கு வந்த பின், நீட் தேர்வை ரத்து செய்ய நடத்தி வரும் பலகட்ட சட்டப் போராட்டங்கள் அனைத்தும் முட்டு சந்தில் நிற்பதை உணர்ந்தாலும், களப்போராட்டங்கள் உருவாகாமல் தார்மீகரீதியாக தடுத்து வருகிறது. இன்னொரு பக்கத்தில், புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தியும் வருகிறது.
சட்டப் போராட்டங்கள் என்ற பெயரில் திமுகவுக்கு வால் பிடித்துச் செல்வதாலும், பிஜேபி எதிர்ப்பு என்பதற்காக திமுக அரசு கொண்டுவரும் கார்ப்பரேட்மயத் திட்டங்களை ஆதரிப்பதாலும் இழப்பு மக்களுக்கே என்பதை திமுகவை ஆதரிக்கும் ஜனநாயக சக்திகள் உணர வேண்டிய நேரமிது.
கல்வித்துறை எதிர்கொள்ளும் இந்த அபாயத்தை, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியும், புதிய ஜனநாயகம் இதழும், மக்கள் கல்விக் கூட்டியக்கம் போன்ற அமைப்புகளும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் புதிய ஜனநாயகம் இதழில் கடந்த ஈராண்டுகளாக வெளியிடப்பட்ட, கல்வித்துறை மீதான தாக்குதல்கள் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து இந்த வெளியீட்டைக் கொண்டு வருகிறோம்.
இதுபோல் கல்வி உரிமைக்காகப் போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் இணைந்து மக்களிடம் சென்று, களப்போராட்டங்களைக் கட்டியமைக்க உதவும் இலக்கில் இந்த வெளியீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
நன்கொடை : ரூ.50.00
புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

சமீபத்தில் பாலஸ்தீன மக்களை, ரஃபாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல் இராணுவம்.
இஸ்ரேலின் இன வெறிப்போரால் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், திட்டமிட்ட குண்டு வீச்சாலும், தேவையான மருத்துவ வசதி கிடைக்காததாலும், சர்வதேச மனிதாபிமான உதவிகள் கிடைக்காததாலும், பசியாலும், பட்டினியாலூம் இதுவரை 35,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த இனப்படுகொலையில் இருந்து தப்பித்து, தங்கள் உடலில் மீதமிருக்கும் உயிரை வைத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயருகின்றனர் பாலஸ்தீன மக்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களை தேடித்தேடி படுகொலை செய்துவருகிறது இஸ்ரேல்.
14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தான் தற்போது தஞ்சமடைந்துள்ளனர். அந்த கடைசி பாதுகாப்பிடத்தையும் திட்டமிட்டு நிர்மூலம் செய்யத்துடிக்கிறது இனவெறிப்பிடித்த இஸ்ரேல்.
இந்த இனப்படுகொலையை நடத்திவரும் அமெரிக்காவின் முகத்திரை ஏற்கனவே கிழிந்துவிட்டது. சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் “காஸாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் ஒரு திட்டமிட்ட படையெடுப்பை மேற்கொண்டால் என்ன நடக்கும் ? என்று பைடனிடம் கேட்டபோது, அப்படியென்றால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை என்றார்.” பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான ஆயுதங்களை வழங்கிவிட்டு, அதனை மறைக்க தற்போது பல நாடகங்களை நடத்தி வரும் பைடனின் முகத்தில் மனித மலத்தை தான் எறிய வேண்டும்.
பாலஸ்தீன மக்களின் கடைசி பாதுகாப்பு இடமான ரஃபாவை அழித்துக்கொண்டிருக்கும் இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச அளவிலான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்.





ஆதன்
நன்றி – அல் ஜசீரா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கெஜ்ரிவால் மீது NIA விசாரணை?
தொடங்கியது மோடியின் அடுத்த கட்ட சதி!
தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இறைச்சி கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும்
தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் | மக்கள் ஆவேசம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
![]()
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மோடி வெறுப்புப் பேச்சு
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
