privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

-

மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன்  ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம்.

-வினவு

சத்குரு-ஜக்கி-வாசுதேவ்

ஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”

இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில்….

கோவை மாநகரில், மாநகராட் சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத் தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும்,இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும்‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகை யாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்:

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களி லும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது….

ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகை யாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

சத்குரு-ஜக்கி-வாசுதேவ்-கார்டூன்

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்தது தான் மிச்சம். இதுபோல பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?

__________________________

நன்றி – இனியவன்

__________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

  1. ரொம்ப பழைய நியூஸுங்க இது. ஹசாரே குழு புதுசு புதுசா தினமும் ஒரு படம் ரிலீஸ் பண்றாங்க. அது உங்க ஏரியா, சீக்கிரம் வந்து விளையாடுங்க.

  2. லாபத்திலிலிருந்து முதலாளித்துவத்தை எப்படி தனியே பிரிக்க முடியாதோ, அது போல் நக்சல்பாரி அரசியலிலிருந்து உழைக்கும் மக்களை தனியே பிரிக்க முடியாது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு விசைக்கும் அதற்கு இணையான எதிர் விசை ஒன்று உண்டு என்பதை இந்த கூமுட்டை முதலாளிங்க அப்பப்ப மறந்துடுறாங்க.

  3. மடத்துக்கு மடம் சளைத்தது அல்ல!
    ஒவ்வோரு மடத்திளும் “மாமா”க்கள் அதிகம்!

  4. இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசாது. பேசினால் போச்சு, அதனால் சோரம் போகாத பத்திரியையாளர்கள்தான் ஜக்கியின் அந்தரங்களை அக்கு வேறு ஆணி வேறாக வெளியிட்டால்தான் ஜாக்கி பேசுமா.குலைக்குமா என்று தெரியவரும்

    _

  5. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில்/// நித்தியை விட்டுட்டீங்க…ஆனாலும் வினவுக்கு நித்தி மேல ஒரு சாஃப்ட் கார்னர்தான்.முந்திய பதிவுகளிலேயே பார்த்தோமே!

  6. இனியவன் பதிவில் தட்டினால் என்ற வலைத்தளத்திற்கு இட்டுச் செல்கிறது. அது ஒரு தீம்பொருள் பரப்பும் வலைத்தளமாக எனது வலைஉலாவி குறிப்பிடுகிறது. என்ன இது.

  7. இனியவன் பதிவில் தட்டினால் fastonlineusers.com என்ற வலைத்தளத்திற்கு இட்டுச் செல்கிறது. அது ஒரு தீம்பொருள் பரப்பும் வலைத்தளமாக எனது வலைஉலாவி குறிப்பிடுகிறது. என்ன இது.

  8. இந்த ஜக்கி கோயம்புத்தூர் ல நடத்துற தியான லிங்கம் ஆசிரமத்துக்கு நானும் போயிருக்கிறேன். அது ஒரு 9 வருஷத்துக்கு முன்னாடி.

    பெரிய காமெடி என்னன்னா அங்க தியானமெல்லாம் பண்ணியிருக்கிறேன். அங்க இருக்கிற white and white uniform போட்ட சீடர்களின் buildup கொஞ்சம் ஓவரா இருக்கும்.

    1 . இந்த தியான லிங்கத்த ஜக்கியே design பண்ணி கட்டினாரு.

    ————————- ( எங்க ராம்நாட்டுல ஒன்னு , விருதுநகர்ல ஒன்னு , தருமபுரில ஒண்ணுன்னு கெட்டி கொடுப்பாரா ? )

    2 .இந்த கட்டிடம் 20,000 வருசத்துக்கு ஒன்னும் ஆகாது.

    ——————( இன்னும் 50 வருசத்துக்கு மேல எவனும் உயிரோட இருக்கப்போவதில்லை என்கிற தைரியம் )

    3 .குண்டு போட்டால் கூட இந்த கட்டிடத்திற்கு ஒன்னும் ஆகாது .

    ——————-( கோயம்புத்தூர்ல இருந்து 30 கிலோ மீட்டார் தள்ளி சிறுவானிக்கு போற வழியில காட்டுக்குள்ள இருக்கிற இந்த ஆசிரமத்தின் மேல எவன் குண்டு போடபோரான்னு ஒரு தைரியம்.)

    அப்புறம் இது செங்கல்ல கட்டுனது, சிமென்ட் இல்ல, பெயின்ட் இல்லன்னு நீளமா போகும் பில்ட் அப்பு.

    யாராவது சமீபத்துல போயிட்டு வந்தவங்க சொன்னீங்கன்னா வசதியா இருக்கும். அட, நீங்களும் உணமையிலேயே ‘தியானம்’ பண்ண போயிருந்திருக்கலாம்.

  9. கட்டுரைக்கு அடியில் உள்ள நன்றி இனியவன் சுட்டியை கிளிக் செய்தால் அந்த site ல மால்வேர் இருக்கறதா எச்சரிக்கை வருது.google search வழியா தேடிபோனாலும் வருது.இனியவன் கவனிக்க வேண்டும்.

    • நன்றி நண்பரே,
      சுட்டியை நீக்கிவிட்டோம்
      தோழமையுடன்
      வினவு

  10. இது ஒரு வருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயட்சி சரி அவரே முன்பு கஞ்சா வித்தார் கொலையில் சம்பந்தம் என்றால் அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போலிஸ் ஸ்டேஷன் போய் கேட்ட்க வேண்டியது தானே இப்ப அவர் சட்டத்துக்கு முரணாக செயல் படுகிறாரா

      • இதை அணுகும் முறை பிழை .ஒருவரிடம் அவரின் குற்றங்களை சொன்னவுடன் ஏற்று கொண்டு சிறை செல்வாரா போகவேண்டிய இடம் நீதி மன்றம் அங்கு வைத்து கேள்வி கேட்க வேண்டும் இங்கு வந்து சொல்லவதை எல்லாம் நம்ப வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது ஆதர பூர்வமாக நீருப்பிக்க வேண்டும் ஆதாரம் இருந்தால் வழக்கை போட்டு நடவடிக்கை எடுங்கள்

  11. சதுர்வேதி சாமின்னு ஒர்த்தன் ஒரு ஆண்ட்டியை ஒட்டகமா மாத்திருவேன்னு பயமுறுத்தி அவளிடம் பதினைந்து லட்சம் வரை கறந்திருக்கிறான்.என்னிடம் படுத்தால் முக்தின்னு சொல்லி அமெரிக்காவுல படிச்சு அங்கே லட்சக்கணக்குல சம்பாரிச்ச ஆர்த்திராவ் என்ற பெண்ணை நித்யானந்தா மேட்டரை முடிச்சிருக்கான்.இப்படி பணம்முள்ள முட்டாள்களும் படித்த முட்டாள்களும் இருக்கும் வரை ஈஷா போன்றவர்கள் வளர்வதை தடுக்கவே முடியாது.

    • so many people are getting over this… so want to prevent many people before going to wrong path. Reporters and police officials should take steps to stop this. Single man cannot do anything. If its true then show the proof of all mischievous that is done by jaggi vasudev then only people will accept it. many spiritual leaders who is doing like this had theft-ed by reporters and police and also by public. so bring those wrong things with proof to public otherwise nobody can stop this.

  12. Good initiative but request you to do put the true facts…Guyz pls check the dates they have mentioned …they have put the press conf date as 13.12.2011 and they have mentioned the next day they gave police complaint and the date they have mentioned is something different ..so these people are putting news which are not true..if we go through line by line we can say lots

    I’m not the follower or supporter but ..if you ppl are pointing someone dont do without knowing proper news …

  13. பெரியார் கடவுள் மறுப்பு மட்டுமே செய்தார் என்று நினைப்பது எவ்வளவு பெரிய மடத்தனமோ அதைவிடவும் பெரிய மடத்தனம் அவரது கடவுள் மறுப்பை மட்டும் விட்டுவிட்டு பிற கொள்கைகளை ஆதரிக்கிறோம் என்று சொல்வதும். வசதியாக சில ஆன்மீகவாதிகள் இவ்வாறு சொல்வதுண்டு. நாம் அவ்வாறு அல்லாமல் பெரியாரை முழுதும் தொழுகிறோம். கடவுளுக்கே நாம் அவ்வளவுதான் மதிப்புத் தருகிறோம் எனும் போது இந்த ஆன்மீகவாதிகளுக்கு என்ன மரியாதை தரப்போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆன்மீகப்போர்வையிலே மக்களின் அறியாமையை போற்றிப் பாதுகாத்து தன்னம்பிக்கையை துளிர்விடாது செய்யும் அயோக்கியத்தனத்தையே பலரும் செய்துவரும் வேளையில் எப்போதாவது அரிதாக சில மனிதர்களையும் நாம் பார்க்க நேர்கிறது.

    திரு. ஜக்கி வாசுதேவையும் நான் அவ்வாறே காண்கிறேன். அவரின் அழகழகான கருத்துக்களை ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற விகடன் வெளியீட்டுப்புத்தகத்தில் காணலாம். அவர் ஆய்ந்தறிந்த ஈஷா யோகா கலையைப்பற்றிய ஒரு விளம்பர சிடி இப்போது எல்லா பிரபல புத்தகக்கடைகளிலும் விகடன் மற்றும் நய்ஹா உபயத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

    துள்ளலான இசையோடும் கவிதைத்தனமான காட்சிகளோடும் ஆரம்பிக்கும் அந்த சிடியில் ஆரம்பக்காட்சிகள் நிறைவடைந்து ஜக்கியின் பேட்டி துவங்குகிறது.. ‘தனியொரு மனிதன்’ என்பதை ‘ப்ரத்யொரு மனிதன்’ என்றும் ‘தொழில்நுட்பம்’ என்பதை தொழிர்நுற்பம்’ என்றும் கூறும் அவரது கொஞ்சும் தமிழ் நம்மை கவர்கிறது. அற்புதமான மயக்கும் குரலில்,

    ஜனனம் சகதம்..
    மரணம் கருணம்..

    என்ற ஸ்லோகத்தோடு (எனக்குப் புரியவில்லை) துவங்கி பேட்டியை இவ்வாறு ஆரம்பிக்கிறார்,

    “ நாம் எப்போ ஒரு மனிதனா பிறந்தோம்.. அப்பவே நமக்கு ஒரு பிரச்சினை வந்துடுச்சு.. நாம மற்ற ம்ருகங்கள் மாதி வந்திருந்தா நமக்கு சாப்பாடு, இனப்பெருக்க செயலு இது ரெண்டு நடந்தா வாழ்க்கை முடிஞ்ச மாதிரி இருக்கும். எப்போ மனிதனா வந்துட்டோமோ ஒரு பிரச்சினை.. வயிறு. வயிறு காலியா இருந்தா.. சாப்பாடு. வயிறு புல்லாயிருச்சுன்னா.. நூறு பிரச்சினை.. நமக்கு.! ”

    முதல் முறையாக கேட்கும்போது களுக்கென சிரித்துவிட்டேன். எவ்வளவு எளிமையான வரிகள். தொடர்ந்து ஆனந்தத்தேடல் குறித்தும், ஈஷா யோகா குறித்தும் சில விளக்கங்கள் தருகிறார். கடவுள் நம்பிக்கையை அவர் கொண்டிருந்தாலும், அல்லாதோரையும் வற்புறுத்தாமல் அரவணைத்துச்செல்வதை இவரது சிறப்பாக நான் காண்கிறேன். கட்டுக்கள் இல்லாத ரசனைகள் நிரம்பிய இயல்பான சிந்தனாவாதியாக இருக்கிறார். உடலைப்புரிந்துகொள்வதை முன்நிறுத்துகிறார். யோகாவைப்பற்றிய இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. ஜக்கி வாசுதேவைப் புகழ்வது இந்தப்பதிவின் நோக்கமல்ல என்றாலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைக்கொண்ட ஆன்மீகவாதிகள் அனைவருமே இவரைப்போலவே தெளிந்த சிந்தனையோடு இருக்கக்கூடாதா.. என்ற ஏக்கம் எழவே செய்கிறது.

    பி.கு : அந்த சிடியில் இடையிடையே நய்ஹாவின் புண்ணியத்தில் டிவியில் நாம் பார்த்திராத ‘பெண்மையைப்போற்றுவோம்’ விளம்பரங்கள் வருகின்றன. அனைத்திலும் விதவிதமான வசனங்களோடு திரு. சாலமன் பாப்பையா நம்மை மயக்குகிறார்.

    “ ஒருவரோட வலிய இன்னொருவர் உணர முடியுமா..
    ஒருத்தரோட பசிய இன்னொருத்தர் புரிஞ்சுக்க முடியுமா..
    முடியுதே..
    ஒருத்தரால முடியுதே.. யாரு.. யாரு? அம்மா.!
    குழந்த வலியில அழுவுதா, பசியில அழுவுதான்னு தாய்க்கு மட்டுந்தானேய்யா தெரியுது. அந்த ஒடம்புக்கு ஏதாவது ஒண்ணுன்னா இவ ஒடம்பு பதறுதே.. குழந்தைக்கு பசிச்சா.. இவ நெஞ்சுல பாலூறுதே.! விந்தைய்யா..விந்தை. இந்த அபூர்வ பெண்மணிய தினமும் வணங்கணும்யா.. ”

    என்று அவர் கம்பீரமாக கூறும் போது ஆமா.. ஆமா.. என்று சொல்லத்தோன்றுகிறது.

    “சொல்லச்சொல்ல இனிக்கிற சொல் அம்மா.
    ஒரு சொல்லுக்குத்தான் எத்தனை பரிணாமம்.
    இது இயற்கையின் ஒலி.
    நினைச்சா தியானம்.
    உச்சரிச்சா மந்திரம்.
    அந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்வோம்.
    அம்மாவை கையெடுத்து வணங்குவோம்”
    இன்றைய பெரியார் – ஜக்கி

  14. சத்குருவின் “”ஜென்”னல் !
    குரு சீடனை அழைத்தார். “”எனக்கு வயதாகி விட்டது. எனது வாரிசாக உன்னை அறிவிக்கிறேன். அதற்கு அடையாளமாக இந்தப் புத்தகத்தை உன்னிடம் கொடுக்கிறேன்” என்றார்.
    “” குருவே, உங்களிடமிருந்து இதுவரை பெற்றவையே எனக்குப்போதும். புத்தகம் தேவையில்லை.”
    “” மறுக்காதே. தலைமுறை, தலைமுறையாக குரு தன் வாரிசாகக் கருதும் சீடனுக்கு வழங்கும் புனிதப்புத்தகம் இது. ”
    குரு வற்புறுத்தியதால், சீடன் புத்தகத்தை அவரிடம் இருந்து வாங்கினான். நெருப்பில் எறிந்தான்.

    சத்குருவின் விளக்கம் : ஆன்மீகத்தின் அடிப்படை இந்த உயிர் பற்றியது. இதைப்பற்றி கடவுளே சொன்னது என்று நீங்கள் நம்பக் கூடியதானாலும், அந்தப் புத்தகத்தைப் படித்து, உயிர் பற்றி உணர்ந்து விடமுடியாது.
    விகடனில் இதைச் சொல்கிறேனே, இதையே ஆயிரம்பேர் ஆயிரம் விதமாகப் புரிந்து கொள்வார்கள். ஆயிரம் விதமான தத்துவங்களை உருவாக்கிக் கொள்வார்கள். எதைக் கொடுத்தாலும், அதை அதன் போக்குக்கு ஏற்றவாறு சிதைத்துப் புரிந்துகொள்ளும் தன்மை, மனிதனின் மனதில் மேலோங்கியிருக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொன்று சொல்லிச் சொல்லி மனிதனின் மனதில் எல்லாவிதக் குழப்பமும் வந்துவிட்டது.

    புத்தகம் படிப்பது ஒரு உத்வேகத்துகாகத்தான். யாரோ ஒரு மகான் பற்றி, அவர் வாழ்ந்த வாழ்க்கை பற்றி, அவர் எப்படி எல்லாம் இருந்தார் என்பது பற்றிப் படிக்கையில் நம் வாழ்க்கையும் அப்படி அமைய வேண்டும் என்று நமக்கு ஓர் ஊக்கம் வரலாம். ஆன்மீகப் பாதையில் பயணம் செய்ய உத்வேகம் வரலாம்.மற்றபடி, புத்தகம் மூலமாகச் சொல்லிக் கொடுக்கும் தன்மையல்ல, ஆன்மீகம்.
    படைத்தவனே உருவாக்கிய புத்தகம் நீங்கள். அதைப் புரிந்து கொள்ளாமல், வேறு ஏதோ புத்தகத்தை எதற்காக நாடிப் போக வேண்டும் ?
    சிஷ்யனுக்குப் புரிந்தது அந்தக் குருவுக்குப் புரியவில்லை.
    ஆன்மீகம் தொடர்பான எல்லாப் புத்தகங்களையும் அந்தச் சீடனைப் போல் எரித்து விட்டால், தேவையற்ற போதனைகள் குழப்பாது. உயிரை உணர்வதற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.

  15. To realize what’s sadhguru real work if you have patience please go through a video where he conducted a Yoga class and especially at the end go through the feedback which people give http://www.youtube.com/watch?v=AW7y_0hjCEA&feature=related

    If a person can understand all the work an enlightened being is doing then the person either should be an enlightened being or so stupid. Because a Guru’s work is not at only mere body and mind level. He touches way beyond and this is from my personal experience. It is not that I read somewhere.

  16. “இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம்”

    Born 3 September 1957 (age 55) 2013

    http://en.wikipedia.org/wiki/Jaggi_Vasudev

    The article has been published in 2011, so he was 53 years at the time. The author alleges he did something before 40 years, means he was 13 year old at the time. This simple states the allegations is a blatant lie.

    Please publish with proof.

  17. பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

    Please provide proof, when he is participating in many public functions all over India & World, it’s a joke Iniavan stating that central agencies are looking for him.

    Vinavu please stop publishing just allegations without verifying the facts.

  18. 3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?

    So when did you change your name to Iniavan ?

    It’s an absurd question.

  19. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது…

    Again he was 13 year old at 1970,

    Iniavan please clarify this.

  20. 1970 இல் ஜக்கியின் வயது 13. அப்பவே கஞ்சா விற்று கல்யாணமும் செய்து மனைவியைக் கொலையும் செய்து விட்டாரா?

    • 13 வயசுல கஞ்சா விற்க கூடாதா? ஆதியோகியிடம் சொல்லி உம்மை கவனிக்க சொல்லணும் போல இருக்கிறதே.

Leave a Reply to perama பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க