வினவு ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் !

வினவு செயலியோடு இணைந்திருங்கள்! சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்! வினவு செயலியை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் – பகிருங்கள்! உங்கள் ஆலோசனை, தேவைகளையும் அறியத் தாருங்கள்

14

மேசைக் கணினியோடு துவங்கிய இணையம் இன்று செல்பேசியை மையமாக வைத்து நகர்ந்து விட்டது. வினவு தளம் ஆரம்ப வருடங்களில் பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் மேசைக்கணினியில் புழங்கினர். பிறகு மெல்ல அந்த எண்ணிக்கை செல்பேசிக்கு மாறிவிட்டது. இன்று மற்ற இணைய தளங்கள் போல வினவு தளமும் செல்பேசி வழியாக படிக்கப்படுவதே அதிகம்.

வினவு செயலியை அறிமுகம் செய்ய வேண்டுமென்று சில வருடங்களாகவே நினைத்திருந்தாலும் நடக்கவில்லை. இந்த ஆண்டு புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்திய பிறகு சில பல தொழில் நுட்ப சிக்கல்களை சரி செய்த பிறகு தற்போது  Vinavu  ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்கிறோம்.

Google Play இல் பெறுக

இந்த செயலி கடந்த ஒரு வாரமாக பயன்பாட்டில் இருந்தாலும் சோதனை முயற்சி என்பதால் உடன் அறிவிக்கவில்லை. தற்போது பிரச்சினைகள் இன்றி செயலி நன்கு இயங்குவதால் அனைவருக்கும் முறையாக அறிமுகம் செய்கிறோம்.

கூகிள் ஃப்ளே ஸ்டோரில் Vinavu பெயரில் இந்த செயலி உங்களது தரவிறக்கத்திற்காக காத்திருக்கிறது. வினவு மேசைக்கணினி வடிவமைப்பிலிருந்து சிற்சில மாற்றங்களோடு வினவு செயலியின் முகப்பு பக்கம் வெளியாகியிருக்கிறது.

இதில் இரண்டு முதன்மைச் செய்திகள், எட்டு அண்மைச் செய்திகள், ஆறு கருத்தாடல் கட்டுரைகள், மூன்று மோடி அரசின் பாசிசம் கட்டுரைகள், சினிமா – ஊடகம் சார்ந்த நான்கு கட்டுரைகள், இரண்டு புகைப்படக் கட்டுரைகள், வினாடி வினா பகுதி ஒன்று, ஆறு சமூகப் பிரிவு கட்டுரைகள், ஆறு அரசியல் வகைக் கட்டுரைகள், இரண்டு கேலிச்சித்திரப் பதிவுகள், களச்செய்திகள் ஐந்து, பெட்டகம் – மூன்று பழைய கட்டுரைகள், புதிய ஜனநாயகம் வகையில் ஆறு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. மொத்தம் 54 கட்டுரைகளை நீங்கள் வினவு செயலியின் முகப்பு பக்கத்தில் காணலாம். இவற்றில் ஓரிரண்டு தவிர பெரும்பான்மை கட்டுரைகள் தனித்தனியாக இருக்கும்.

இவற்றில் கருத்தாடல், மோடி அரசின் பாசிசம் (தற்காலிகமான அரசியல் பகுதி – தேவைக்கேற்ப மாறும்), சினிமா ஊடகம், கேலிச்சித்திரம், வினாடி வினா, புகைப்படச் செய்திகள், பெட்டகம் ஆகியவை ‘ரேண்டம்’ அடிப்படையில் புதிது புதிதாக வரும். இப்பிரிவுகளில் வரும் புதிய கட்டுரைகளை நீங்கள் அண்மைச் செய்திகளில் காணலாம். மேலும் பயணம் செய்யும் போதும், ஓய்வாக இருக்கும் போதும், படிக்கும் விருப்பத்தின் போதும் நீங்கள் வினவு தளத்தில் மேற்கண்ட தலைப்புகளில் வந்த முக்கியமான கட்டுரைகளை பொறுமையாக படிக்கலாம்.

மேலும் இன்றைய தேதி – அன்றைய சேதி, இன்றைய மேற்கோள், வினவு சமூகவலைத்தள பக்கங்கள், விழியாடி வழி வாழ்க்கை – இன்றைய புகைப்படம் ஆகியவையும் செயலியின் முதல் பக்கத்தில் இடம் பெறுகிறது.

இதன்றி செயலியின் முகப்பு பக்கத்தின் இடதுபுறம் உள்ள முதன்மை மெனுவில் வினவு தளத்தின் அனைத்து வகைகளிலும் சென்று நீங்கள் உரிய கட்டுரைகளை படிக்கலாம். செய்தி, அரசியல், சமூகம், கருத்தாடல், களச்செய்திகள், புதிய ஜனநாயகம், இதர மற்றும் இவற்றின் உட்பிரிவுகள் அனைத்தும் முறையாக உங்கள் தேடலுக்கு உதவி செய்யும். வகைகள், குறிச்சொற்கள், உட்பிரிவுகள் அனைத்தும் அழகான வடிவமைப்பில் நீங்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கும். இதுவரை வெளியான 8000த்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் படிக்கலாம். கூடுதலாக முகப்பு பக்கத்தின் வலது பக்கத்தில் இருக்கும் தேடுபொறி பெட்டியில் குறிப்பான குறிச்சொல்லை இட்டு நீங்கள் தேடும் கட்டுரைகளையும் கண்டு பிடிக்கலாம்.

புதிய கட்டுரைகள் குறித்த அறிவிப்பு செயலியை நிறுவியவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இது போக தேவைப்படும் வசதிகளை செயலியின் அடுத்தடுத்த அப்டேட் – மேம்படுத்தல்களில் அளிக்கிறோம்.

செயலியை அறிமுகப்படுத்தாத போதே இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்திருக்கின்றனர். தற்போது அனைவருக்கும் அறிவிப்பு செய்த பிறகு இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களை நோக்கி செல்ல வேண்டுமென்று விரும்புகிறோம். வினவு செயலியை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் – பகிருங்கள்! உங்கள் ஆலோசனை, தேவைகளையும் அறியத் தாருங்கள்!

கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு போக மற்ற வகை செல்பேசி வகைகளுக்கான செயலிகளையும் அறிமுகம் செய்கிறோம்.

செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்:

Google Play இல் பெறுக