யற்கையாய் அமைந்த இவ்வுலகில் இப்பிரபஞ்சத்தில் மனிதன் தோன்றி 2-1 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. உயிர்கள் தோன்றி கிட்டத்தட்ட 2.5 பில்லியன் ஆண்டுகள் (அமிபா, பூஞ்சை ) இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், நம் உலகில் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு உள்ளாக தோன்றிய மதங்கள் உலகம் மற்றும் பிரபஞ்ச படைப்பை பற்றி கூறும் கதைகளை நினைத்தால் வேடிக்கையாகவும், அறியாமை நிறைந்ததாகவும் இருக்கிறது.
மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாக செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி. விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்…

திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் தங்களை வருத்தி ஒப்பற்ற சேவைதனை மக்களுக்கும் இயக்கத்துக்கும் செய்திருக்கிறார்கள். அன்று போதிய கல்வியறிவு அற்ற மக்களிடம் பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு சென்றதில் எஸ்.டி. விவேகி போன்றவர்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைய கல்வி அறிவு பெற்ற சமூகமும் அன்றைய மக்களைப் போன்றுதான், இன்றும் விழிப்புணர்வற்று, அறிவியல் மனப்பான்மையற்று, அடிமை உள்ளம் கொண்டு மதமவுடீகத்தில் வீழ்ந்து அலைந்து திரிகிறார்கள்.

இன்றும் விவேகி போன்ற கருத்தாளர்களின் கருத்து தேவையானாதாகவே இருக்கிறது.
வேத மத புரோகிதத்தால் நாம் எவ்வளவு வீழ்ச்சிக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை எத்தனை ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார். நமது இன்றைய நிலையிலும் அடிமையாய் வாழ்ந்து, அடிபடும் இனமாக இருப்பதை எண்ணி வேதனைப்படமால் இருக்கமுடியாது. பார்பனியத்தின் சூழ்ச்சி சோ, சுப்ரமணியசாமி வடிவில் இன்றும் சாணக்கியத்தனம் செய்து அழிக்கத்தானே நினைக்கிறது!

அன்றைய அடிமை அரசர்களைப்போல் தான், இன்றைய அடிமை அரசாங்கங்களும் செயல்படுகின்றன. ஆசிரியரின் சொற்கள் மத வாதிகளை கடுமையாகவும் வேறுபாடு இன்றியும் தாக்குவது அவரது நேர்மையையும், உண்மையையும் காட்டுகிறது. நம்மை தாழ்த்தியும் வேறுபடுத்தியும், கேவலப்படுத்தியும் வரும் மத புரோகிதத்தின் மீதான கோபமும், வேதனையும் அவரை கடுமையாக விமர்சிக்கும் சூழ்நிலைக்கு தள்ளியிருக்கிறது இதனை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்..

கேரளாவில் புழக்கத்தில் உள்ள சொல்லாடல்களில் ஒன்று “ஒரு தந்தைக்கு பிறக்காதவனே” என்று திட்டுவது, விபச்சாரி மகன் என்பதை எப்படி இலக்கிய வடிவில் சொல்வது போன்று சொல்கிறார்கள். அது போல் நமது மதங்களும் மனிதர்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் கேவலப்படுத்துவதில் தலைசிறந்து விளங்குகிறது.
அதன் மீதான கோபமே ஆசிரியரின் கடுமையான சொற்களுக்கு காரணமாகும்.
இந்நூல் பழைய தமிழகத்தை ஆண்ட அரசர்களின் மற்றும், இந்திய அரசர்களின் அடிமைப் புத்தியையும், ஐரோப்பிய மத புரோகிதத்தின் அறிவியல் மானிட எதிர்ப்பு சிந்தனைகளையும் வெட்டவெளிச்சமாகப் புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நம்புகிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து)

தோழர் எஸ்.டி. விவேகி அவர்கள் மிகச் சிறந்த நாத்திகர், தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே தந்தை பெரியாருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கூட்டங்களில் பேசியவர்கள் இருவர். ஒருவர் திருவாரூர் தங்கராசு மற்றொருவர் எஸ்.டி. விவேகி.
சாகுல் அமீது என்ற தன் பெயரை விவேகம் நிறைந்தவர் என்ற பொருளில் விவேகி என்று மாற்றிக் கொண்டார்.

தமிழகத்தில் இஸ்லாமியர்களில் மசூதிக்கு போகாமல் வெளிப்படையாக நாத்திகம் பேசியவர்களில் ஒருவர் எஸ்.டி. விவேகி… எஸ்.டி. விவேகி அவர்கள் மிகச் சிறந்த மத ஆராய்ச்சியாளர். எல்லா மதங்களையும் நன்கு ஆராய்ந்து அறிந்தவர், குரான், பைபிள், இந்து புராணங்கள் என ஒன்று விடாமல் அலசி ஆராய்ந்து பேசியவர்- எழுதியவர்.

படிக்க:
பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்
நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

தந்தை பெரியாரின் பஞ்சசீலம் என்று 5 நாட்கள் தொடர்ந்து ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் ஒரே தலைப்பில் இருபது மணி நேரம் பல கூட்டங்களில் பேசியுள்ளார். தனியாகவும் பல மணி நேரம் பேசியுள்ளார். அவருடைய அறிவாற்றலை எண்ணி எண்ணி வியப்படைவேன்.

இன்னும் நாம் அறிந்து உயரவேண்டிய நல் அறிவும், பேரறிவாற்றலும் உள்ள மாபெரும் பகுத்தறிவு களஞ்சியத்தை, நமக்காக நம் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச்சென்றுள்ளார்கள். அவற்றிலிருந்து இயன்ற அளவு எடுத்தும், அறிவியல், புவியியல், வானியல், வரலாற்றியல் ஆதாரங்களோடு இணைத்தும் தோழர் S.D.விவேகி அவர்களால், ‘பைபிள்’ ‘குர்-ஆன்’, ‘ரிக்’ முதலான வேத வசனங்களோடு மோதவிட்டும் தொகுக்கப்பட்டுள்ள நூல்தான் இந்த ‘வேதமும் விஞ் ஞானமும்’ என்ற நூல்.

இந்த நூலில், உலக வரலாற்றின் உண்மை நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து, ஆதி முதல், இன்று வரையில் ஏற்பட்டுள்ள வேத – விஞ்ஞானப் போராட்டங்களுக்கு ஏற்பப் பொருத்தமாகக் குறித்துத் தரப்பட்டுள்ளன! மடமைக்கும் – அறிவுடைமைக்கும்
இடையே நீண்ட நெடுங்காலமாகத் நிகழ்ந்து வந்தப் பயங்கரக் கொலை பாதகக் கொடிய காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளை படிப்போர் உள்ளம் பதைபதைக்கும்!!

கி.பி. 1619-ல் வானனி என்ற பெயருடைய தத்துவஞானி ஒருவரை, பிரஞ்சுக் கிறிஸ்துவப் பாதிரிகள், கொடுந்தீயிலிட்டுக் கொளுத்தப்போகும்போதும் அவர் அஞ்சாது கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ளாதுக் கோபப்பட்ட அக்கொடியோர். அத்தத்துவ ஞானியின் நாக்கை பலாத்காரமாகப் பிடுங்கித் தீயிலிட்டு எரித்துவிட்டுப் பிறகுதான், துடித்துடித்துத் தவித்து வாய்வழியே இரத்தம் கொட்ட வதைபட்டுக்கொண்டிருந்த அவ்வறிஞர் வானனியையும் அதே தீயிலிட்டு எரித்துச் சாம்பலாக்கினர், அந்த “அன்பே கடவுள்” (LOVE IS GOD) என்று பாசாங்காகப் பேசி பாமரமக்களை மயக்கும் அக்கொலைகாரப் பாதிரிமார்கள் என்றால், இதைப்படிக்கும் எவருள்ளந்தான் பதைபதைக்காமலிருக்கும்?

அதேபோல், நம் நாட்டிலும் “அன்பே சிவம்” என்று பாசாங்காகப் பேசி, பாமர மக்களை ஏமாற்றி, சைவசமயத்திற்கு ஆள் சேர்த்துக் கொண்டு அலைந்த கொலைகாரனாகிய வேதியக்கயவன் சம்பந்தன் மதுரையிலேயே எண்ணாயிரம் சமணத் தத்துவ ஞானிகளைப் பலாத்காரமாகப் பிடித்துக் கொண்டுவரச்செய்து கொஞ்சமும் ஈவிரக்கமே இல்லாமல், கழுவிலேற்றி சித்திரவதை செய்து சாகடித்த சண்டாளக்கொலை பாதகத்தைப் படிக்கும்போதும், யாருடைய உள்ளந்தான் பதைபதைக்காமலிருக்கும்?

கி.பி. 600-ல். “அலெக்ஸாண்டரியா பல்கலைக்கழகத்தின் மீது ஆத்திரம் கொண்டு, பாய்ந்து சென்ற இஸ்லாமிய மதவெறியன் அமீர் என்பவன் அப்பல்கலைக்கழகத்தின் மகத்தான அறிவியல், வானியல் களஞ்சியமாகிய மாபெரும் நூல் நிலையத்தில் இருந்த விஞ்ஞான தத்துவ விளக்கங்கள் நிறைந்த – நூல்களை எல்லாம் தீயை வைத்துக் கொளுத்தி எரித்துச் சாம்பலாக்கி விட்டான் என்றால், எந்த பகுத்தறிவாளரின் மனந்தான் பதை பதைக்காமலிருக்க இயலும்? (நூலின் முன்னுரையிலிருந்து)

நூல்:வேதமும் விஞ்ஞானமும்
ஆசிரியர்: எஸ்.டி.விவேகி

வெளியீடு: அங்குசம் வெளியீடு,
எண்:15, எழுத்துக்காரன் தெரு, திருவொற்றியூர், சென்னை – 600 019.
தொலைபேசி: 94443 37384

பக்கங்கள்: 224
விலை: ரூ 110.00 (இரண்டாம் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: marinabooks | panuval

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

 

23 மறுமொழிகள்

 1. //நம் நாட்டிலும் “அன்பே சிவம்” என்று பாசாங்காகப் பேசி, பாமர மக்களை ஏமாற்றி, சைவசமயத்திற்கு ஆள் சேர்த்துக் கொண்டு அலைந்த கொலைகாரனாகிய வேதியக்கயவன் சம்பந்தன் மதுரையிலேயே எண்ணாயிரம் சமணத் தத்துவ ஞானிகளைப் பலாத்காரமாகப் பிடித்துக் கொண்டுவரச்செய்து கொஞ்சமும் ஈவிரக்கமே இல்லாமல், கழுவிலேற்றி சித்திரவதை செய்து சாகடித்த சண்டாளக்கொலை பாதகத்தைப் படிக்கும்போதும், யாருடைய உள்ளந்தான் பதைபதைக்காமலிருக்கும்?//

  நேரில் நின்று பார்த்தது போலவே கூறுகிறார்கள் … சமணர்கள் வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டார்கள் என்பது தான் வரலாறு . சைவர்கள் பக்கமிருந்து கழு ஏற வேண்டும் என்று அவர்கள் நிபந்தனைகள் எதஹுக் வைக்கவில்லையே.தோற்று போனால் கழுவில் ஏறுகிறோம் என்று அவர்களாகவே(சமணர்கள்) தான் சவடால் அடித்தார்கள் , செத்தும் போனார்கள், .. இதில் சம்மந்தரின் பங்கு எதுவுமே இல்லையே ..

  • ஆமாமாம்..! ஆயிரக்கணக்கான சமணர்கள் தாங்களாகவே கழுமரம் ஏறி ‘உட்கார்ந்து’ கொண்டதை பார்த்துக்கொண்டு இருப்பதற்கும் ஒரு “மனம்” வேண்டும்.
   அதுதான் “முக்தி நிலை”யோ?

   • Rebecca Mary is right. Jains were firm and they, as a matter of principle, decided stick to their promise. Further, some say that ‘ennayiram’ may also indicate a sect and not eight thousand. I am not sure. Also, Sambandhar has to challenge Jains alone, since, they had support of King.

    • //Jains were firm and they, as a matter of principle, decided stick to their promise.//
     இதிலும் சமணர்கள்தானே உயர்ந்து காணப்படுகிறார்கள்!
     வாதத்தின்போது சமணர்களிடம் முன்நிபந்தனையாக அவர்களது உயிர் பெறப்பட்டதற்கு யார் பொறுப்பெடுத்துக் கொள்வது ?

      • ‘அன்பே சிவம்’ என்று போதிப்பவர்களுக்கு இந்த சாவுகளை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இருக்கிறதா, இல்லையா?

       • 1.When somebody is very firm, it happens. For example, Kumarila Buttar disguised as a Jain student and studied. When it was discovered, the Jains tired to kill him but he suffered only a wound on the eye. But subsequently, Kumarila Buttar realised that even if a student learns one letter, the teacher is a guru. For betrayal, the punishment is ‘thushanki prevesam’. Accordingly, he decided to under go that self-inflicted toruture and died.

        2. Amara Simhan is a jain. He worshiped Saraswathi and written books with aim to destroy beliefs not acceptable to jains. Finally, he was defeated in argument by Adi Sankarar. Heart-broken, secretly he has set fire to his books.
        3. As stated in (1) above, Jains tried to kill Kuarila Battar. Further, the jains made several attempts to kill Thirunavukarasar.

   • One more point. Sambandhar did not convert people as Shivaites. Pandiyan King was converted as Jain. Finally, after various events, he restored faith in Shivam. That’s all. There were followers of renowned Shivates as well as Vaishnavites. It is not correct to label them as “ஆள் சேர்த்துக் கொண்டு அலைந்த”. It may also be noted that Sambandhar did not go with any group to challenge Jains. He went alone, of course, having unshakeable faith in Shiva.

 2. One more point. Sambandhar did not covert people as Shivaites. King of Pandiya Nadu was converted as Jain. Finally, after various events (narrated in Periya Puranam), King restored faith in Shivam. That’s all. There were followers for renowned Shivaites as well as Vaisnavites. It is not correct to label them as ‘ஆள் சேர்த்துக் கொண்டு’ as mentioned by Mr.S.S.Karthikeyan. Sambandhar single-handedly tackled Jains, of course, based on his faith in Shiva.

  • அப்படி என்ன மாதிரி வாதத்தால் பார்ப்பனியத்தை போற்றுகின்ற சைவ வைணவர்கள், சமத்துவத்தை போதித்த சமணர்களை வென்றிருப்பார்கள் என்று இந்த மரமண்டைக்கு புரியவில்லை.
   ‘அன்பே சிவம்’ என்று போதிப்பவர்கள் கண் முன்னே துள்ளத்துடிக்க சமண முனிகள் சாவதை எவ்வாறு எடுத்துக்கொள்வது?
   ஒருவேளை ரெபெக்கா மாமி சொல்வதைப்போல் வாயைக் கொடுத்து ____ஐ புண்ணாக்கிக் கொண்டார்கள் என்று எண்ணியிருந்திருப்பார்களோ?

   • My views are based on Periyapuranam. Of course, we cannot prove now whether miracle has happened in the past. In case Jains have won, what would have happened? Of course, it is hypothetical. Now, see what Srilankan Buddisits do. My point is that Jains gave life for their principle. Even if they are persuaded not to sacrifice their lives, they would have done that. Nobody is happy about that.

    P.S. At one place, I have mentioned by mistake that ‘ஆள் சேர்த்துக் கொண்டு’ as mentioned by Mr.S.S.Karthikeyan. Actually, it is stated by the author of the article. and not by Mr.Karthikeyan.

    • இலங்கையில் புத்த மதவெறி தோன்றியது போல் இந்தியாவில் சமண மதவெறி தோன்றிவிடலாகாது என்ற தீர்க்க தரிசனத்துடன் சம்பந்தர் ஆட்கொண்டார் என்றால் இந்தியாவில் இந்து மதவெறி இல்லையா?
     “கழுதை விட்டையில் முன் விட்டை என்ன? பின் விட்டை என்ன?” என்ற ஊர் வழக்குதான் நினைவுக்கு வருகிறது

     • All that I have stated is that the converted King restored faith in Shivam due to Sambandhar. That’s all. One can question all. What I have pointed out is that Jains’ activities were not questioned in the article.

      • 1. I have not stated that Sambandhar has argued with ‘foresight’. Even during his time, Jains made conversions with support of King which finally was stopped.

       2. The question why the fate of jains could not be stopped raised by you should have been raised by the author of the article. Instead, he has given wrong information that type of arguments and punishment were demanded by Sambandhar while the truth is the same was demanded by jains. Is this un-biased article?

       3. Attempts of jains to kill Thirunavukarasar were conveniently forgotten by the author of the article

    • Also, the jains influenced the King to set fire on the place where Sambandhar stayed. Look. Who tried to kill whom? The author of the article used abusive language about Sambandhar.

 3. 1) கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் ஞானசம்பந்தரை ஏற்றுக்கொள்கின்றனர். ஞானசம்பந்தரை ஏற்றுக்கொள்வதால் ‘சிவ – பார்வதியையும்’ ஏற்றுக்கொள்கிறார்களா என்று தெரியவில்லை ? ஏனென்றால் ஞானசம்பந்தர் ‘ஞானப்பால்’ குடித்தவர் என்று புராணங்கள் சொல்கிறது

  2) ‘சமணர் கழுவேற்றம்’ பற்றி குறிப்பிடும் போது யார் முதலில் வாதத்திற்கு அழைத்தார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடவில்லை. நான் படித்த வரை ;சமணர்கள்’ தான் வாதத்திற்கு அழைத்துள்ளார்கள்

  3) ஞானசம்பந்தர் 16 வயதுவரை தான் வாழ்ந்தார் என்று கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து நிலவுகிறது. வெறும் 16 வயதான பாலகனிடம் ‘8000 சமணர்கள்’ வாதம் செய்தனர் என்பதில் logic இருப்பது போல் தோன்றவில்லை

  8000 பேருடன் எப்படி ஒருவர் வாதாட முடியும் ? மன்னர்கள் காலத்தில் ஒலி பெருக்கி இருந்ததா என்று தெரியவில்லை

  Ramachandran அவர்கள் சொன்னது போல் ‘எண்ணாயிரம்’ என்பது ‘8000 சமணர்களை’ குறிக்கவில்லை. மாறாக ‘அஷ்ட சஹஸ்ரம்’ (Ashta Sahasram) என்ற ‘சமணர்களின் பிரிவையே’ குறிக்கிறது என்று நான் அறிகிறேன்

  4) அனல் வாதம், புனல் வாதம் என்பதிலும் logic இருப்பது போன்று தோன்றவில்லை. ஞானசம்பந்தர் ஏடு மட்டும் ‘எரியவில்லை’ என்பது நம்பமுடியாததாக இருக்கிறது/ ‘புனல் வாதமும்’ அதே போன்று தான் இருக்கிறது

  5) ஞானசம்பந்தர் ‘கழுவேற்றத்தை’ வேடிக்கை பார்த்தார் (அல்லது) தடுத்து நிறுத்தவில்லை என்பதும் நம்பமுடியவில்லை

  “நாணி லீர்! மன்னன் முன்னர் நல்ல சொல்கிறேன், கண்டீர்: பூணும் வெண்ணிறு பூசும்; போற்றி ஒயஞ்செழுத்தை போதும்” காணொணா முத்தி இன்பம் காணலாம்,”

  என்று திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இந்த பாடலுக்கு மறுப்பு பாடல் இருக்கலாம் . அந்த மறுப்பு பாடலுக்கும் வேறு ஒரு மறுப்பு பாடலும் இருக்கலாம்

  நன்றி

  • Dear Mr.Satish,

   Just one point. For ‘Anual’ vadam and ‘Punal’ vadam, no loud speaker is required. Further, once it is stated that it is miracle, no logic can be searched for. Either it is true (for believers) or it is myth (for non-believes).

 4. இவர்கள் எல்லாம் ஹிந்து மதத்தை பற்றி பொய்யான தகவலை பரப்புவதையே கொள்கையாக வைத்து இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரையில் மாதங்களுக்கு இடையே வாதங்கள் நடக்கும், அந்த வாதங்களின் முக்கிய நோக்கம் தனது மதமே உயர்ந்தது என்பதை நிறுவி தோற்றவரை தனது மதத்திற்கு மாற்றுவது தான்.

  இந்த வாதங்களில் சமணர்கள் தான் தங்களது உயிரையும் பணயம் வைத்தார்கள் தோற்றால் உயிரை விடுவதாக சவால் விடுவார்கள்.

  இந்த நூல் ஆசிரியர் எல்லா மதங்களை பற்றியும் படித்து தெரிந்தவர் என்று சொல்கிறார்கள் சரி, சமணர் கழுவேற்றம் உண்மையிலேயே நடந்ததா ? சரி ஒரு வாதத்திற்கு நடந்தது என்றே வைத்துக்கொள்வோம் அதற்கு சம்பந்தர் தான் காரணமா ?

  இந்த அடிப்படை ஆராய்ச்சியே இல்லமால் எல்லோரையும் போல் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை தூண்ட ஒரு பத்தாம்பசலி தனமாக எழுதி இருக்கிறார்கள்.

 5. சமணர் கழுவேற்றம் உண்மை என்று எடுத்து கொண்டால் பிறகு சைவர்களை சமணர்கள் கொடூரமாக நடத்தியது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும்… அப்பரை சுண்ணாம்பு கலவையில் போட்டு கொடுமை செய்தது, சம்பந்தரை கொல்ல முயன்றது, பதினாறாயிரம் சைவர்களை கொல்ல சதிசெய்ததும், கோயில்களை அழித்ததும் எல்லாம் உண்மையாகிவிடும்… ஆனால் இந்தியாவில் எங்குமே இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்தது இல்லை.

  ஒழுங்காக ஆராய்ச்சி செய்யாமல் கிறிஸ்துவ மிஸ்ஸியனரிகளை போல் ஹிந்து மதத்தின் மீது பொய்களை பரப்புவதையே நோக்கமாக இந்த நூலை எழுதி இருக்கிறார்கள்.

 6. ஒரு சின்ன கேள்வி சமணர்கள் கழுவேற்றம் என்று சொல்லி சில ஓவியங்களை ஆதாரமாக வைத்து தான் இவர்கள் பேசுகிறார்கள். ஒரு சின்ன கேள்வி சமணர்கள் எப்போதுபா முடி வளர்த்தார்கள்… ? சமணர் கழுவேற்றம் என்று சொல்லி இவர்கள் காட்டும் ஆதார ஓவியங்கள் அனைத்திலும் சமணர்களுக்கு தலை முடி உள்ளது.

  இவர்கள் எல்லாம் என்ன ஆராய்ச்சி செய்தார்களோ ? கிறிஸ்துவ மிஸ்ஸியனரி பொய்களை பரப்புவதை தான் ஆராய்ச்சி என்று சொல்கிறார்களோ என்னமோ.

 7. Dear Mr.Manikandan,

  Irrespective of drawings, as per Periyapuranam, Jains voluntarily done that as a matter of keeping with their promise. Even today some do self immolation for some cause. The point is there is no plot behind சமணர்கள் கழுவேற்றம் . Only the Jains influenced the king to set fire on the place where Sambandhar stayed and after its failure and after Sambandhar cured stomach pain of the King, invited Sambandhar for anul and punal vadam and that too through King. As I said Jains made several attempts to kill Thirunavukarasar also.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க