பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் சந்தோஷ் தற்கொலை !

“ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் சிலர் மொத்த திட்டத்தில் 40 சதவீதம் - கிட்டத்தட்ட ரூ. 4 கோடி - பணத்தைச் செலுத்தும்படி என்னிடம் கேட்டார்கள்” என்று பாட்டீல் செய்தி ஊடகங்களில் கூறினார்.

0
ஒரு திட்டப்பணிக்கான மொத்த செலவில் 40 சதவீதம் லஞ்சம் கேட்டதாக கர்நாடக மூத்த அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது குற்றம் சாட்டிய பாஜக உறுப்பினரும் ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பாட்டீல், கடந்த ஏப்ரல் 12 அன்று உடுப்பியின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலகாவியில் உள்ள ஹிண்டலகாவைச் சேர்ந்த சந்தோஷ், ஏப்ரல் 11 திங்கட்கிழமை முதல் காணாமல் போனார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, என் மரணத்திற்கு ஈஸ்வரப்பா தான் நேரடிப் பொறுப்பு என்றும், அமைச்சரை தண்டிக்க வேண்டும் என்றும் தனது நண்பர்களுக்கு குருஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
ஈஸ்வரப்பாவைத் தவிர, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (RDPR) அதிகாரிகளும் ஊழல் செய்ததாக சந்தோஷ் குற்றம் சாட்டியிருந்தார்.
படிக்க :
ரஃபேல் : ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை !
குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !
கர்நாடகாவில் பாஜக அரசு ஒப்பந்ததாரர்களிடம் அதிக லஞ்சம் கேட்பதாகவும், ஊழல் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டிய பல ஒப்பந்ததாரர்களில் சந்தோஷும் ஒருவர். இந்து யுவ வாஹினியின் தேசிய செயலாளராக இருந்த சந்தோஷ், 2019-ல் முடித்த திட்டத்திற்கு ஈஸ்வரப்பா பணம் தரவில்லை என்றும், இதனால் அவர் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
“தொற்றுநோய் மற்றும் பிற அரசியல் காரணங்களால், வேலை செய்யவது தாமதமாகிக் கொண்டே வந்தது. நான் திட்டத்தை 2019-ல் முடித்தேன், ஆனால் இதுவரை ஒரு பைசா கூட பெறவில்லை. அதற்காக நான் பெருமளவில் கடன் வாங்கியிருக்கிறேன், இப்போது கடனை திருப்பி செலுத்தமுடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளேன்” என்று பாட்டீல் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஈஸ்வரப்பா, தனக்கு சந்தோஷை தெரியாது என்று கூறினார். மேலும் சந்தோஷ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டீல், ஈஸ்வரப்பாவின் சிவமொகாவில் உள்ள வீட்டில் ஈஸ்வரப்பாவுடன் தான் எடுத்தப் புகைப்படங்கள் என்னிடம் இருப்பதாகவும், பணத்தை விடுவிக்கக் கோரி ஓரிருமுறை அமைச்சரை சந்தித்ததாகவும் கூறினார்.
“ஈஸ்வரப்பா தான் அமைச்சர் அவர்தான் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறியதால், நான் பணி நியமனத்திற்காக காத்திருக்கவில்லை. நான் திட்டத்தை தொடங்கினேன். அதன்பிறகு, மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடந்ததன் மூலம் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது; எனவே எனக்கு பணி ஆணை வழங்க முடியவில்லை. அதற்கு கவலைப்படாமல் வேலையை தொடருமாறு ஈஸ்வரப்பா என்னிடம் கூறினார்” என்று பாட்டீல் கூறியிருந்தார்.
தற்கொலை செய்துகொண்ட இந்து யுவ வாஹினியின் தேசிய செயலாளராக இருந்த சந்தோஷ்
“ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் சிலர் மொத்த திட்டத்தில் 40 சதவீதம் – கிட்டத்தட்ட ரூ. 4 கோடி – பணத்தைச் செலுத்தும்படி என்னிடம் கேட்டார்கள்” என்று பாட்டீல் செய்தி ஊடகங்களில் கூறினார்.
முன்னதாக கர்நாடக அரசின் மூத்த அமைச்சர் மீது சந்தோஷ், லஞ்சப் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 11 அன்று சந்தோஷ் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, இந்த வழக்கை விசாரித்துவரும் போலீசு எஃப்.ஐ.ஆரில் ஈஸ்வரப்பாவை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளது. மேலும் சந்தோஷின் உறவினர் பிரசாந்த் பாட்டீல் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈஸ்வரப்பா, பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 34 மற்றும் 306 ஆகியவற்றின் கீழ் உடுப்பி நகர போலீசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
தனது நண்பர்களில் ஒருவருக்கு சந்தோஷ் கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தியை சதி என்று குற்றம்சாட்டி, விசாரணை நடத்தக் கோரிய ஈஸ்வரப்பா, சந்தோஷின் முகத்தை ஒருமுறை கூட பார்க்கவில்லை. இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசியதாகவும் அவர் கூறினார்.
ஒப்பந்ததாரர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாநிலம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஏப்ரல் 15 அன்று மாலை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். “நாளை (ஏப்ரல் 16) நான் ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுக்கிறேன், ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
படிக்க :
ராம ஜென்மபூமி அறக்கட்டளை : தொடர்ந்து அம்பலமாகும் பல கோடி ஊழல் !
ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !
தான் ராஜினாமா செய்யமாட்டேன் என்று கூறிவந்த நிலையில், தற்போது பாஜகவின் ஊழலுக்கு எதிரான முகத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவின் உயர் மட்டத்தின் அழுத்தம் காரணமாகவே ஈஸ்வரப்பா பதவி விலகியதாக கூறப்படுகிறது. ஈஸ்வரப்பாவின் ராஜினாமாவை மட்டுமல்ல, ஊழல் வழக்கிலும் அவரைக் கைதுசெய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி என்பது ஊழல் பெருச்சாளிகள் நீக்கமறநிறைந்திருக்கும் கட்சி என்பதற்கு மோடியின் ரஃபேல் ஊழல், அமித்ஷாவின் கூட்டுறவு ஊழல் என எண்ணிலடங்கா ஊழல் முறைகேடுகள் இருக்கின்றன. தற்போது ஈஸ்வரப்பாவின் ஊழல்முறைகேடு வெளியே வராமல் தடுப்பதற்கு, தன் சொந்த கட்சியை சார்ந்தவரையே தற்கொலைக்கு தள்ளியுள்ளார்கள் காவிக்குண்டர்கள். பாஜக ஊழல், கொலை, பயங்கரவாதம் செய்யும் கட்சி என்பதற்கு இத்தற்கொலையும் ஓர் சான்று.

காளி
செய்தி ஆதாரம் : thenewsminute, ndtv, thewire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க