
08.04.2026
பாசிச பா.ஜ.க அரசே!
ஒடிசாவில் நடத்திவரும் நரவேட்டையை உடனே நிறுத்து!
கண்டன அறிக்கை
ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டத்தில் உள்ள சிஜிமாலி (Sijimali) பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிராகப் போராடிய பழங்குடியின மக்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியா முழுவதும் கனிம வளங்களை அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் பெரு முதலாளிகள் அபகரிப்பதற்காக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை அப்புறப்படுத்தும் வேலையை பாசிச பா.ஜ.க அரசு செய்து வருகிறது.
ஸ்டெர்லைட்-இன் தாய் நிறுவனமான வேதாந்தா (Vedanta) நிறுவனத்திற்கு ஒடிசா மாநிலம் ராயக்கடா மாவட்டத்தில் உள்ள சிஜிமாலி பாக்சைட் சுரங்கப் பணிகளுக்காக, புருலாங் முதல் ஷாகாபாரி வரை 3 கி.மீ நீளமுள்ள சாலை அமைத்து அங்குள்ள கனிம வளங்களை சுரண்டி செல்ல முனைகின்றனர். இதற்கு பழங்குடியின மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது.
ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஷாகாபாரி கிராமத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது, போலீசு போராடும் மக்களை தாக்கியது. இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
பாக்சைட்டை பிரித்தெடுக்கும் சுரங்கத்தினால் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் நீரும் மண்ணும் விசமாக மாறுகின்றன. இதன் காரணமாக மலையை பூர்வீகமாகக் கொண்ட பழங்குடியின மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டப்படுகின்றனர். இதற்கு எதிராக போராடுபவர்களையும் பேசுபவர்களையும் ஒன்றிய அரசானது திட்டமிட்டு மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகிறது.
இதன் நீட்சியாகத்தான் சிஜிமாலி கிராம பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை நாம் பார்க்க வேண்டும்.
பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை கொன்றொழித்து விட்டு தமிழ்நாட்டில் 13 பேரின் உயிரைக் குடித்த வேதாந்தா நிறுவனத்திற்காக நாடு முழுவதும் மலைகளையும் காடுகளையும் தாரைவார்க்கத் துடிக்கும் பாசிச பா.ஜ.க-விற்கு எதிராகக் களத்தில் ஒன்றிணைவோம்.
பாசிச பா.ஜ.க அரசே! ஒடிசாவில் சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தி நரவேட்டையாடுவதை உடனடியாக நிறுத்து!
![]()
இவண்
தோழர் மாறன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு – புதுவை.
9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











