காளையார்கோவில் உறுதிக்கோட்டை ஊராட்சி நெடோடை கிராவல் குவாரியை மூடு!

நெடோடை உறுதிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் போராட்டத்திற்குக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது. இதுவரை கிராவல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்கள் அரசு அதிகார வர்க்கத்தினர் அனைவரையும் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உறுதி கோட்டை ஊராட்சி, நெடோடை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 5 கிராம மக்கள் கிராவல் குவாரிகளை ரத்து செய்ய வலியுறுத்தி சிவகங்கை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் புலியடித்தம்பத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராவல் குவாரியால் உறுதி கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திட்டுக்கோட்டை கண்மாய் உறுதி கோட்டை கண்மாய், சிங்க மங்களம் கண்மாய், குமாரவேலூர் குடிதண்ணீர் ஊரணி, சீனமங்களம் குடி தண்ணீர் ஊரணி ஆகிய குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் அழியும், நாங்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகும் என்பதையும் குறிப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பலபத்தடிகள் வரை விவசாய நிலங்களை ஆழமாகத் தோண்டி விவசாயிகளின் வயிற்றைக் கிழிப்பது போல் நிலங்களைத் தோண்டி வரைமுறை இன்றி கொள்ளை அடிக்கின்றனர். தொடக்கத்தில் 50 லாரிகள் மணல் எடுத்த நிலையில் இன்று பல நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன என்பதை மக்கள் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்தே போராடிவரும் இக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. அரசின் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் இந்த கிராவல் கொள்ளை தொடர்ந்தது. இப்போது த.வெ.க. அமைச்சர் பிரபுவிடம் கிராவல் குவாரியை தடுத்து நிறுத்த சொல்லி மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்பதைப் போராடும் மக்கள் பதிவு செய்கின்றனர்.

நெடோடை உறுதிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் போராட்டத்திற்குக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது.

இதுவரை கிராவல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்கள் அரசு அதிகார வர்க்கத்தினர் அனைவரையும் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆகவே மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி அழித்துக் கொண்டிருக்கும் கிராவல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கோருகிறது.

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
மானாமதுரை, சிவகங்கை.
8438631587, 9442269220

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க