யூ டூ புரூஸ் வில்லிஸ்???
அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை!
திருட்டுத் ‘தாண்டவம்’ !
எந்த நாளிதழ் அல்லது பத்திரிகைகளிலும் இது குறித்த செய்தி, ஒரு துணுக்காகக் கூட இதுவரை வரவில்லை. அப்படி செய்தி வரக் கூடாது என்பதற்காகவே தாண்டவம் பட விளம்பரங்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் வாரி வழங்கப்பட்டுள்ளன
சுந்தரபாண்டியன்: உசிலம்பட்டி வழக்கா, தேவர் சாதி அழுக்கா?
தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் "பாண்டியன்"’ என்ற சொல், ரசிக இலக்கு யார் என்பதை கோடிட்டுக் காட்ட... முதல் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம் என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.
அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!
ஊழலற்ற இந்தியாவை உருவாக்க தன் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்ப்பணிக்க அமலா பால் முன் வந்திருக்கிறார்
அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்!
செல்வராகவன் இயக்கத்தில் ஜார்ஜியாவில் நடந்த இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் அனுஷ்கா செய்த காரியம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி.
பவர் ஸ்டார் கைது! உசுப்பி விட்ட ஊடகங்களுக்கு என்ன தண்டனை?
'பவர் ஸ்டார்' என்னும் அடைமொழியை தனக்குத்தானே சூட்டிக் கொண்டு வலம் வரும் சீனிவாசன் என்னும் நபர், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்
கூடங்குளமும், த்ரிஷாவின் கல்யாணக் கவரேஜும்!
தலைப்பை படித்துவிட்டு கோபத்துடன் காறி உமிழத் தோன்றுகிறதா? கொஞ்சம் நில்லுங்கள்.
டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!
ஒரு கொலைகாரன் தனது கொலையை சிலாகிக்கலாம். கொல்லப்படுபவர்களால் அப்படி முடியுமா?
“ஹீரோயின்”: விளம்பரத்திற்க்காக ஒரு இந்தி சினிமா!
இந்த மாதம் 23-ம் தேதி "ஹீரோயின்" எனும் இந்திப் படம் வெளியாகப் போகிறது. 'அதன் உருவாக்கத்தில் ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது' என்று பத்திரிகைகள் பரபரப்பூட்டுகின்றன
சூர்யா விளம்பரங்களில் நடிப்பது சமூக சேவையாம்!
மணலை கயிறாக திரித்து சந்தையில் விற்க முடியுமா? முடியாது என்று சொல்பவர்கள் அப்பாவுக்கு தெரியாமல் 'ஜோ'வுக்கு செயின் வாங்கிக் கொடுத்த சூர்யாவின் பர்சனல் பேட்டி' வெளியாகியிருக்கும் இந்த வார 'குமுதம்' இதழை பார்க்கவில்லை என்று அர்த்தம்.
300 கோடி கொள்ளைக்கு காத்திருக்கும் தமிழ் சினிமா!
அடுத்த 16 வாரங்கள் முடிவதற்குள் எப்படியும் ரூபாய் 300 கோடி வரை தமிழர்களிடமிருந்து சுரண்டி விட வேண்டும் என்று தமிழ்ச் சினிமா பணப்பயிராக படையெடுப்பதற்கு தயாராகிறது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி!
ரஜினிகாந்துக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சிப் போராட்ட மனதை புரிந்த நம்பிக்கையை எவ்வளவு அழகாக அம்பலப்படுத்தி இருக்கிறார்
‘தல’யின் குடும்பத்தில் தயாராகிறது ஒரு ஒலிம்பிக் தங்கம்!
பர்கரை நொறுக்கியும் கோக்கை உறிஞ்சியும், " 120கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கப் பதக்கம் கூட இல்லையா, என்ன எழவு நாடிது" என்று சலித்துக் கொள்ளும் அவநம்பிக்கை அம்பிகள் எல்லாம் இடத்தைக் காலி செய்யுங்கள்
காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!
நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால் தயவு செய்து பார்க்க வேண்டாம், உடனே வெளியேறிவிடுங்கள். இது உண்மையாகவே அதிர்ச்சியானது என்று சிதையின் குழந்தைகளை அறிமுகப்படுத்தினார் ராஜேஷ் ஜாலா
நோய்கள் விற்பனைக்கு! மருந்து கம்பெனிகளின் மோசடி!! ஆவணப்படம்
அமெரிக்காவின் மருத்துவத் துறை, லாபம் தேடும் முதலாளித்துவ நிறுவனங்களால் திரிக்கப்பட்டு, முறுக்கப்பட்டு, உருத்தெரியாத ஜந்துவாக மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது Big Buck Big Pharma ஆவணப்டம்
























