Friday, August 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 430

மத்தியப் பிரதேசத்தின் மாடுகள் சரணாலயம் – A Horror Story !

மத்தியப் பிரதேசம் சலாரியா கிராமத்தில் 472 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் பசு சரணாலயம்.

மோடி அரசு பதவியேற்ற பிறகு சங்கிகள் கையில் எடுத்த முதல் பிரச்சினை பசு! மத்திய அரசு மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் பல்வேறு திட்டங்களின் பெயரில் பசுக்களுக்கான கோசாலை, மூத்திரத் தொழிற்சாலை, மூத்திர ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று ஆர்ப்பாட்டமாக அனுமதித்தார்கள். இன்னொரு புறம் பசுக்களைக் கொல்கிறார்கள் என்று வட இந்தியாவில் மாடுகளை விற்பனை செய்யும் முசுலீம்களை ஆங்காங்கே பிடித்து கொடூரமாக கொலை செய்தார்கள்.

இராஜஸ்தான் மாநில அரசாங்கம் பசுக்களின் சரணாலயத்தை முதலில் அறிவித்த பிறகு, மத்தியப் பிரதேச அரசும் ஒரு பிரம்மாண்டமான பசு சரணாலயத்தை திறப்பதாக பெரும் ஆரவாரத்துடன் அறிவித்தது. ஆனாலும் இன்று வரை அந்த சரணாலயத்திற்கு நிதி திரட்ட முடியவில்லையாம். பசுக்களுக்காக முசுலீம்களையும், தலித் மக்களையும் கொன்ற கயவர்கள் இரக்கப்பட்டு திறந்த மத்தியப் பிரதேச காமதேனு பசு அபய நிலையம் (Kamdhenu Gau Abhayaranya) ஐந்து மாதங்களுக்கு பிறகு தனது கதவுகளை இரக்கமற்று மூடி விட்டது. பசுக்களுக்கு அபயமளித்து சரணாலயம் நடத்துவதற்கு போதிய பணமோ, ஆட் பலமோ அந்த நிலையத்தில் இல்லை என்பதே பிரச்சினை.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆகர் மாவட்டத்தில் சலாரியா கிராமத்தில் 472 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த சரணாலயம் செப்டம்பர் 2017-ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே இதுதான் முதல் சரணாலயம் என்று தங்கள் வாழ்நாளில் பசுஞ்சாணியையோ, இல்லை செத்துப் போன பசுக்களை புதைப்பதையோ தொட்டிராத, பார்த்திராத ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் சமூக வலைத்தளத்தில் சீறி எழுந்தார்கள்.

இந்த சரணாலயத்தில் கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட பசுக்களைக் காப்பாற்றுவதோடு மாட்டுச் சாணி மற்றும் மூத்திரத்தில் இருந்து மருந்துகளும், பூச்சிகொல்லிகளும் தயாரிக்கப்படுமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. இந்த சரணாலயம் சுமார் 6,000 பசுக்களை பராமரிக்கும் திறன் கொண்டிருந்தாலும்  தற்போது 4120 பசுக்கள் மட்டுமே இருக்கிறதாம். தற்போது மாநில அரசின் விலங்குகள்நல வாரியத்தில் இருந்து பெறப்படும் பணம், இந்தப் பசுக்களுக்கு தீனி அளிப்பதற்கு கூட போதுமானதில்லையாம்.

“இந்த சரணாலயத்தின் அனைத்து செலவுகளுக்கும் தேவைப்படும் பணம் பத்து கோடி என்றாலும் அதில் பாதிதான் தரப்படுகிறது. அந்தப் பாதியிலும் நான்கு கோடி தீனிக்கு செலவழிக்கப்படுகிறது. இதற்கே இந்த கதி என்றால் புதிய கோசாலை திட்டங்களை பேசுவதற்கு வழியே இல்லை” என்கிறார் விலங்குகள்நல வாரியத்தைச் சேர்ந்த ஒருவர். அரசால் துட்டுக் கொடுக்க முடியாது என்பதால் மத்தியப் பிரதேச நிதித்துறை அதிகாரி, பசுப் பாதுகாப்பிற்காக நன்கொடை திரட்டுமாறு பசுநல வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கார்ப்பரேட்டுகளிடமிருந்து ஆயிரம் கோடி நன்கொடை பெறும் பாஜகவுக்கு 6000 பசுக்களைப் பராமரிக்க ஒதுக்கப்படவேண்டிய ரூ.14 கோடி என்பது தம்மாத்துண்டு பணம்தான்

இந்த சரணாலயத்தின் உதவி இயக்குநர் டாக்டர் வி.எஸ். கோசர்வால் மேற்கண்ட நிதி தட்டுப்பாட்டை ஒத்துக் கொள்வதோடு, “கடந்த பிப்ரவரியில் இருந்து நாங்கள் புதிய பசுக்களை ஏற்பதில்லை. இந்த வட்டார உதவி கலெக்டர்களும் பசுக்களை வண்டிகளில் கொண்டு செல்வதற்கு அனுமதிப்பதில்லை” என்கிறார். இந்துத்துவ இரக்கத்தின் இலட்சணம் இதுதான்.

இந்த பசு சரணாலயத்தின் எதிர்காலத் தேவைகளை ஒரு திட்டமாக முன்வைத்த பசு பாதுகாப்பு வாரியம் ஆரம்பத்தில் 22 கோடி ரூபாய்க்கு வரவு செலவு திட்டம் போட்டது. ஆனால் அதை நிதித்துறை மறுத்து விட்டபடியால் பிறகு 14 கோடி ரூபாய்க்கு திட்டம் போட்டது. அதையும் நிதித்துறை மறுத்து விட்டது. கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பா.ஜ கட்சி பெற்றது ஆயிரம் கோடி ரூபாய் எனும் போது ஆறாயிரம் பசுக்களை பராமரிப்பதற்கு தேவையான 14 கோடி என்பது ஒரு தம்மாத்துண்டு பணம் மட்டுமே.

இந்த நிலையில் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பசுக்களைப் பெறும் சரணாலயத்திற்கு வேறு வருமானம் இல்லை. இந்த பசுக்களிடம் இருந்து பாலை கறந்தும் விற்க முடியாது. அவை மடிவற்றியதால்தான் இங்கே கொண்டு வரப்படுகின்றன. இந்த வளாகத்தில் சுயதேவைக்கான மின்சாரத்தை தயாரிக்க மூன்று உயிரி-வாயு நிலையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. பசு மூத்திரத்தை சேகரிக்கும் சில எந்திரங்களும் வந்திருக்கின்றன. ஜபல்பூரில் இருக்கும் நானாஜி தேஷ்முக் கால்நடை ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தில் இருந்து எப்போதாவது நிபுணர்கள் வருகை புரிவார்கள். அவ்வளவுதான், மற்றபடி இந்த பிரம்மாண்டமான கோசாலை சரணாலயத்திற்கு வேறு கதியோ போக்கிடமோ இல்லை.

“முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம், விரைவில் நிதி வரும் என்று சொல்லும் விலங்கு நலத்துறை அமைச்சர் அன்டார் சிங் ஆர்யா, இந்த சரணாலயத்தை ஏதாவது தனியார் என்.ஜி.வோ நிறுவனத்திற்கு கொடுத்துவிடலாமா என்று யோசிப்பதாகவும் கூறுகிறார். வெளிநாட்டு என்.ஜி.வோ சதியை மூச்சுக்கு முன்னூறு முறை ஜபிக்கும் வாயில் இருந்து என்னே ஒரு ’பன்ச் டயலாக்’! ’தாய்’க்கு நிகரான பசுக்களை பராமரிப்பதற்கு சுதேசிப் பணமோ, சுதேசி தொண்டர்களோ இல்லையாம். அம்பிகளின் ’தேசபக்தி – பசுபக்தி’ என்பது முசுலீம்களை கொல்வதும் கொலைகாரர்களுக்கு பாராட்டு கூட்டம் நடத்துவதுதான் போலும்!

“இதுவரை வணிக நோக்கம் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே எங்களை அணுகியிருக்கின்றனர். ஆனால் சுயநலமற்ற இலட்சியத்தால் வழி நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களே தேர்வு செய்யப்படுவர்”. என்கிறார் மத்தியப் பிரதேசத்தின் பசு சம்வர்தன் நிர்வாக கவுன்சிலின் துணை தலைவரான சந்தோஷ் ஜோஷி. ஆக இதுவரை எந்த தொண்டு நிறுவனமும் இங்கே அவர்கள் வரையறுத்திருக்கும் இலட்சியப்படி இல்லையாம். வெள்ளம் வந்தாலும், ரத யாத்திரை வந்தாலும் நிவாரணப் பணிகளுக்கு போகும் ஸ்வயம் சேவக உறுப்பினர்கள் யாரும் இங்கே பசுக்களை பராமரிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இரண்டாவது முறை முதலமைச்சராக சவுகான் பதவியேற்ற 2012-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தால் இந்த சரணாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சரணாலய நிர்மாணப் பணிகள் நிறைவுற்றாலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் வந்து திறப்பார் என செப்டம்பர் 2017 வரை முதலமைச்சர் சவுகான் காத்திருந்தார். ஒருவேளை சரணாலாயத்தின் அழிவு விதுரனது திருஷ்டி போல மோகன் பகவத்திற்கு தெரிந்திருக்கும் போல!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மட்டுமல்ல, முதலமைச்சர் சவுகான் கூட திறப்பு விழாவிற்கு வராமல் தவிர்த்து விட்டார். அதிகாரிகளும் இந்த சரணாலயத்தில் அதிக உற்சாகம் காட்டவில்லை. இவ்வளவிற்கும் அருகாமை பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலிருந்தும் ஏராளமான பசு உரிமையாளர்கள் பால்வற்றிய பசுக்களை விடுவதற்கு இங்கே குவிந்தனர். இந்த மாநிலங்களில் மடிவற்றிய பசுக்களை விற்பதற்கு அனுமதி இல்லை. பராமரிப்பதற்கு விவசாயிகளிடம் நிதி இல்லை. இந்நிலையில் இங்கே பசுக்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வரப்படுவதில் ஆச்சரியமில்லை.

இந்த சரணாலயத்திற்கான உதவி இயக்குநரைத் தாண்டி, இரண்டு கால்நடை மருத்துவர்கள், ஆறு கால்நடை உதவியாளர்கள் இங்கே பணி புரிகின்றனர். தேவையை ஒட்டி தினக்கூலி அடிப்படையில் தொழிலாளிகள் எடுக்கப்படுகின்றனர். ஆனாலும் நிறைய ஆட்பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் ஒத்துக் கொள்கின்றனர். பசுக்களை பராமரிப்பதற்கு சம்பளம் கொடுத்து ஆட்கள் எடுக்க முடியவில்லை என்றாலும் சேவையாக செய்வதற்கு கூட எந்த இந்துவும் தயாரில்லை போலும்.

“இங்கே நிறைய பசுக்கள் இறந்து போனாலும், பத்து சதவீத பசுக்கள் ஒரு கோசாலையில் இறப்பது சகஜம்தான். நல்ல நிலைமையில் உள்ள ஒரு பால் பண்ணையில் கூட மூன்று சதவீத பசுக்கள் இறந்து போகும்” என்று இறப்பை நியாயப்படுத்துகிறார், அரசு கால்நடைத்துறை அதிகாரி. இதை வைத்துப் பார்த்தால் தினமும் பல பத்து பசுக்கள் இந்த சரணாலய நரகத்திற்கு பதில் செத்துப் போவது மேல் என சாகின்றன என்பது உறுதி.

மாட்டுக்கறி உண்ணும் வழக்கத்தை சட்டப்பூர்வமாக உறுதிப் படுத்தியிருந்தால் இந்த அவலம் அங்கே நிகழ்ந்திருக்காது. விவசாயிகளும் நிறைய பசுக்களை வாங்கி விற்பார்கள். விவசாயப் பொருளாதாரம் நல்லதொரு சுழற்சியில் வளரும். மக்களுக்கும் புரதச் சத்து நிறைந்த மாட்டுக்கறி மலிவாக கிடைத்திருக்கும்.

சங்கி மங்கி பாவிகள் மக்களைக் கொல்வதோடு மாடுகளையும் பரிதாபமான முறையில் கொன்று விட்டு, நீலிக் கண்ணீர் விடுகிறார்கள்

– வினவு செய்திப் பிரிவு

செய்தி ஆதாரம்:

கல்வி உரிமையைப் பறிக்காதே ! திருச்சி – விருதை புமாஇமு ஆர்ப்பாட்டம்

0

கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்ப்போம் !
பு.மா.இ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சி

தோழர் சுரேந்தர்

ல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்து விட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைக்கும் மசோதாவை எதிர்த்து புமாஇமு சார்பில் திருச்சி ஜங்க்சன் விக்னேஷ் ஹோட்டல் அருகில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் புமாஇமு மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்தர் தலைமை தாங்கினார். மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புமாஇமுவைச் சேர்ந்த தோழர் கபில் கண்டன உரையாற்றும் போது ”யூஜிசி-யைக் கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைக்கவிருப்பதன் நோக்கம், தனியார் கையில் ஒட்டுமொத்தக் கல்வியையும் ஒப்படைத்து, ஏழை மாணவர்களை கல்வியிலிருந்து ஒதுக்கி வைப்பதேயாகும்.

தோழர் கபில்

அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் கட்டுப்பாட்டின் கல்வியைக் கொண்டு வருவதே அதன் நோக்கம்.  மாணவர்களின் எழுச்சி மட்டுமே இதனை மாற்றுவதற்கான வழி” என்று பேசினார்.

தி.க மாணவர் அணியின் மாநில துணைத் தலைவர் தோழர் அஜிதன் பேசுகையில், ”மாணவர்களுக்கான  கல்வி உதவித்தொகையை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சி இது. இதன் மூலமாக குலத்தொழிலை மீண்டும் திணிக்கத் திட்டமிடுகிறது அரசு. இதனை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

தோழர் அஜிதன்

அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த தோழர் பாட்ஷா பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் போராடினாலும் மத்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து அதிக அழுத்தம் தரும் வகையில் மாணவர் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பேசுகையில், “யூஜிசியைக் கலைப்பது ஒரு சமூகத்தையே தற்குறியாக்குவதற்கு சமமானது. கல்வித்துறையில் கார்ப்பரேட்களின் கொள்ளையை உறுதி செய்ய மோடி அரசால் கொண்டு வரப்பட்ட முயற்சி இது.

1956-ல் இந்தியாவில் உயர்கல்வியை விரிவுபடுத்த மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட தன்னாட்சி அமைப்புதான் யூ.ஜி.சி. தற்போது அதனை ஒழித்துவிட்டு கொண்டுவரப்படும் உயர்கல்வி ஆணையம், முழுக்க முழுக்க கல்வியாளர்கள் யாரும் உறுப்பினராக இல்லாமல், 8 அதிகாரிகள் மற்றும் அவர்கள் தேர்வு செய்யும் தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு அமைப்பாகவே இருக்கும். அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராகவும் இருக்கலாம். அவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன அதிபர் அனில் அகர்வாலாகக் கூட இருக்கலாம்.

தோழர் கணேசன்

கடந்த 2000-ம் ஆண்டு அம்பானி, பிர்லா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, யூஜிசியைக் கலைத்துவிட்டு கல்வியை தனியார் கையில் கொடுத்து விடலாம் என பரிந்துரைத்தது. இன்று அதனை மோடி அரசு செய்து முடித்திருக்கிறது. இதனை முறியடிக்க பெற்றோர் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து போராட வேண்டும்.”- என்றார்.

இறுதியாக பு.மா.இ.மு தோழர் சுரேஷ் நன்றியுரையாற்றினார். அதில் மோடி அரசின் மோசடியை கேள்வி கேட்பவர்கள் அனைவரும் நக்சல்கள் என்றால் நாங்கள் அனைவருமே நக்சல்கள்தான் எனக் கூறினார். சுற்றி நின்ற மாணவர்களும், நாங்களும்தான் என்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

*****

கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்ப்போம்!
பு.மா.இ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் – விருத்தாசலம்

”கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்ப்போம்” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விருத்தாசலம் பாலக்கரையில் புமாஇமு விருத்தாசலம் மாவட்ட அமைப்பாளர் தோழர் மணியரசன் தலைமையேற்று கண்டன ஆர்ப்பாட்ட்டத்தை நடத்தினார். மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

புமாஇமு-வின் செயற்குழு உறுப்பினர் தோழர் யுவராஜ், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் தோழர் மணிவாசகம், விருதாச்சலம் மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விருதை.

பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் ! பாகம் 2

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !  – கட்டுரை வெளியானதில் இருந்து மூடர் கூட தம்பிமார்கள் நம்மை வசைபாடி மகிழ்கின்றனர்.

அந்த வசைகளை வரிசைப் படுத்தினால் “இயற்கை வைத்தியம் சரியானது, அலோபதி மருத்துவத்திலும் மரணம் அதிகம், பாட்டி வைத்தியம் – வீட்டு பிரசவங்களில் மரணமில்லை, இன்றும் கிராமங்களில் எந்தப் பிரச்சினையுமின்றி சுகப்பிரசவம் நடைபெறுகிறது, ஹீலர் பாஸ்கர் – பாரி சாலனை படித்தீர்களா, பார்த்தீர்களா?” என்பவை அதிகம் இருக்கின்றன. மொத்தத்தில் இலுமினாட்டி மூடத்தனத்தில் பலரும் மூழ்கிக் கிடப்பதை பரிதாபத்துடன் ஏற்கத்தான் வேண்டும்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இலுமினாட்டிகள் குறித்த தன் ‘ஆராய்ச்சியை’ விளக்குகிறார் விஞ்ஞானி சீமான்

நாம் தமிழர் சீமான் முன்வைக்கும் சதிக்கோட்பாடுகளின் நீண்ட பட்டியலில் இலுமினாட்டி சதிக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அந்தக் காலத்தில் தமிழ் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக சத்தியம் செய்கிறார். ஆதாரமாக சிறு தானியம் முதல், தென்னங் கள்ளு வரை கிருபானந்த வாரியார் போல அடுக்குகிறார்.

இவற்றின் வகை மாதிரியாக எழுத்தாளரும், பெரியாரை கடுமையாக திட்டுபவரும், தமிழ் தேசியம் – இயற்கை வைத்தியம் இன்ன பிறவற்றை ஆதரிப்பவருமான திருவாளர் பா. ஏகலைவன் என்பவர் கூறுவதைக் கொஞ்சம் கேட்போம்!

லூசுங்களா.
———————-
யு டியூப் பார்த்து சுகப்பிரசவம் பார்த்தால்தான் அந்த பெண்மணி இறந்தார். போலி தமிழ் தேசியம் பேசியவர்களால்தான் இப்படி நடந்தது. என்று விதம் விதமாக கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி, நவீன மருத்துவமனைகளில், நவீன மருத்துவத்தில் தினம் தினம் எத்தனை மரணங்கள் நடந்துகொண்டிருக்கிறது? அதனால் அந்த மருத்துவத்தையே மூடிவிடலாமா? அந்த மரணங்களுக்கு எந்த கார்பரேட் கம்பெனிகள் பதில் சொல்ல முடியும்?

இங்கே சுகப்பிரசவம் என்பது வாடிக்கையான ஒன்றுதான். இன்றைக்கும் கிராமங்களில் பல பிரசவங்கள் அப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த தலைமுறைக்கு முன்பிருந்த ஒவ்வொருவரும் அரை டசனுக்கும் குறையாத பிள்ளைகளை சுகப்பிரசவத்தில் பெற்றுப் போட்டவர்கள்தான். இந்த தலைமுறையினரில் பெரும்பகுதியினர் சுகப்பிரசவத்தில் பிறந்தவர்கள்தான்.

அந்த சுகப்பிரசவங்களிலும் பாதிக்கு மேலானோர் மருத்துவமனைகளுக்கு வெளியே சுகமாய் பெரியவர்களின், அனுபவஸ்தர்களின் மேற்பார்வையில் பிரசவித்தவர்கள்தான். ரத்தப்போக்கு அதிகம் ஆனால் எந்த தேசியம் பேசுபவர்கள் சொன்னாலும் சரி இறப்புதான். அலோபதி மருத்துவத்திலும் அதுதான் நடக்கும். இறந்துபோன அந்த பெண்மணிக்காக வருத்தப்படுவோம்.

அதே நேரத்தில் ஏன் அந்த ரத்தப்போக்கு நிகழ்ந்தது என்பதையும், அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து இனி அப்படி நடக்காமல் விழிப்புணர்வை சொல்வதையிட்டு ஒட்டுமொத்தமாக அந்த மரபுவழி மருத்துவமே- சுகப்பிரசவமே சரியில்லை என்று பேசக்கூடாது.

ந்த வாதத்தை நாம் இப்படிப் புரிந்து கொள்வோம் – ”மருத்துவமனையிலும் மரணம் நடக்கிறது, குரங்குக் குப்பன் வைத்தியம் பார்த்தாலும் மரணம் நடக்கிறது. எனவே மருத்துவர்களும் குரங்குக் குப்பனும் ஒன்று தான்” என்கிறார் ஏகலைவன். மருத்துவ சிகிச்சை பலனின்றி ஏற்படும் மரணங்களுக்கு காரணம் முதன்மையாக மருத்துவமல்ல. கர்ப்பம் தரித்த ஆரம்ப காலம் தொட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இருப்பது, ஊட்டச் சத்துக் குறைபாடு என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

ஆனால், திருப்பூரில் நடந்தது ஒரு கொலை. அந்த அப்பாவிப் பெண்ணின் கர்ப்பத்தை உரிய முறையில் நேரத்தில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகளைப் பின்பற்றி, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் இன்றைக்குத் தாயும் சேயும் நலமோடு இருந்திருப்பார்கள். நன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு பெண்ணின் மரணத்திற்கு தாங்கள் பரப்பிய முட்டாள்தனங்கள் தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் பேசும் சாமர்த்தியம் தம்பிமார்களுக்கே சாத்தியம். கிருத்திகாவின் கணவர் வறுமை காரணமாக இந்த தவறை செய்யவில்லை.

ஹீலர் பாஸ்கர், பாரி சாலன் உள்ளிட்ட இலுமினாட்டி வகையறாக்களின் பலமே அறைகுறை உண்மைகள் தான். மாயத்தோற்றங்களை (Hallucination) உளமாற நம்பும் மனநலம் குன்றியவர்களைப் போல் இவர்கள் பொய்களையும் சதிகளையும் நம்புகின்றனர். ஒரு வித்தியாசம், இவர்கள் தன்னுணர்வோடு நம்புவதோடு கேட்பவர்களை நம்பவைக்கும் சாமர்த்தியத்தையும் கொண்டிருக்கின்றனர். சுருக்கமாக காரியக் கிறுக்கர்கள்.

இத்தகைய முட்டாள்தனத்தில் மக்களை மூழ்கவைத்து அலைக்கழிக்கும் வழக்கம் அமெரிக்காவில் துவங்கி பல நாடுகளில் இருக்கிறது. உலகிலேயே அதிக மூடநம்பிக்கைகள், கடுங்கோட்பாட்டு மதப் பிரிவுகள் (பெந்தகோஸ்தே), இதர சதிக்கோட்பாட்டு கொள்கைப் பற்றாளர்கள் அதிகம் வாழும் நாடு அமெரிக்காதான். சூப்பர் ஸிங்கர் முதல் இலுமினாட்டி வரை அங்கிருந்துதான் இறக்குமதியாகின்றது.

தற்போது பிரசவகால மரணம் என்ற ஒரு அம்சத்தை மட்டும் பார்ப்போம். திரு ஏகலைவனும், மற்ற இயற்கை வழி வைத்தியத்தை ஆதரிப்போரும் அறுதியிட்டு சொல்வது, கிராமங்களிலும், பெரியவர்களால் வழிநடத்தப்படும் பிரசவங்களும் எந்த மரணமுமின்றி ஆரோக்கியமாக நடைபெறுகிறது என்பதே. எனினும் அதற்கு ஆதாரமாய் இவர்கள் ஒரு தரவையும் தருவதில்லை. எல்லாம் பொதுவில் ஒரு நம்பிக்கைதான்.

உண்மை என்ன? நவீன மருத்துவம் வளர்வதற்கு முன் அம்மை, பிளேக், மலேரியா போன்ற கொடிய கொள்ளை நோய்களாலும் இன்னபிற தொற்று வியாதிகளாலும் பிரசவத்தின் போதும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் பதினைந்து பிள்ளைகள் பெற்றனர் எனக் கூறுபவர்கள் அப்படி பிறந்த பத்துப் பதினைந்தில் எத்தனை பிழைத்தது என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும். ஆனால் இவர்கள் ஆதாரப்பூர்வமாகப் பேசுவதில்லை. “நாதஸ் திருந்தி விட்டான்” என நாதசே சொல்லிக் கொள்வதைப் போலத் தான் வாதிடுகிறார்கள், வசைபாடுகிறார்கள்.

நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்குப் பின் பிரசவ கால மரணங்கள் பல மடங்கு குறைந்திருப்பதற்கு ஏராளமான புள்ளி விவரங்கள் உள்ளன. அதே நேரம் இன்றைக்கும் இந்தியா போன்ற நாடுகளில் முன்னேறிய நாடுகளை விட அதிக மரணங்கள் ஏற்படுவதற்கு காரணம் மேற்கண்ட வளர்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை என்பது தான். அப்படி நமக்கு கிடைக்காத நவீன மருத்துவத்தை பெறுவதற்காக போராடுவதை விடுத்து இந்த அறிவிழந்த கோமாளிகள் நம்மை கற்காலத்திற்கே இழுத்துச் சென்று பெண்களை, மக்களை கொல்வதற்கு வழி சொல்கிறார்கள்.

பிரசவகால மரணங்களின் வரலாறும், புள்ளிவிவரமும் என்ன சொல்கின்றன பார்ப்போம்!

___________

யூனிசெஃப் நிறுவனம், பேறுகால மரண விகிதம் குறித்து ஒரு புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டது. 1990, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் பகுதி வாரியாக 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பிரசவித்த பெண்களின் கணக்கைக் கொண்டு இந்தப் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கப்பட்டது.

கடந்த 1990-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2015-ம் ஆண்டிற்கான பேறுகால மரண விகிதம் உலக அளவில் குறைந்துள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த 25 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 44% அளவிற்கு பேறுகால மரணம் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் சராசரியாக பேறு கால மரண விகிதம், கடந்த 1990-ம் ஆண்டு, 1,00,000 வெற்றிகரமான பிரசவத்திற்கு 385- மரணமாக இருந்தது. ஆனால் 2015-ல் அது 216-ஆக (44%) குறைந்திருக்கிறது. அதேபோல பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய வளரும் நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய மண்டலத்தில் 558-லிருந்து 182-ஆக குறைந்திருக்கிறது.

பேறுகால மரணம் – ஒப்பீட்டு அறிக்கை

இந்த மரணங்களில் பெருமளவு பங்களிப்பது, (சுமார் 27%) பிரசவத்தின் போது மற்றும் அதற்குப் பிறகு ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கே ஆகும். (கிருத்திகா மரணத்தில் ஏற்பட்டது, எவ்வித முன்னனுபவமற்ற மூடர்களின் முட்டாள்தனத்தால் ஏற்பட்ட இரத்தப் போக்கு) கருவுற்ற பெண்ணை மரணத்தை நோக்கித் தள்ளும் இத்தகைய இடர்பாடுகள், கர்ப்ப காலத்திலோ, பிரசவ காலத்திலோ எவ்வித எச்சரிக்கையுமின்றி எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறது இந்த அறிக்கை. மேலும், திறன்வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் நடைபெறும் பிரசவங்களே பெருமளவில் மரணத்திற்கு இட்டுச் செல்கின்றன என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது அந்த அறிக்கை.

கடந்த 2018, பிப்ரவரி 16 அன்று உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில், வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பேறுகால மரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில:

  1. ஒவ்வொரு நாளும் சுமார் 830 பெண்கள் கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் போதான தவிர்க்கக்கூடிய காரணங்களுக்குப் பலியாகின்றனர்.
  2. கர்ப்பகால / பிரசவ கால மரணங்களில் 99% மரணங்கள் வளரும் நாடுகளில் மட்டுமே நிகழ்கின்றன.
  3. கிராமம் மற்றும் பின் தங்கிய சமூகத்தினர் மத்தியில்தான் இந்த கர்ப்பகால/ பிரசவ கால மரணங்கள் ஏற்படுகின்றன.
  4. 2015-ம் ஆண்டில் மட்டும் சுமார் 3,03,000 மரணங்கள். இவற்றில் பெரும்பாலானவை போதுமான கர்ப்பகால / பிரசவ கால பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதாலேயே ஏற்படுகின்றன.

இவ்வகை மரணங்களில் கிட்டத்தட்ட 75% மரணங்கள் ஏற்படுவதற்கான காரணமாக அவ்வறிக்கையில் கூறப்படுபவையாவன:

  • கடுமையான இரத்தப் போக்கு
  • நோய்த்தொற்று
  • கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம்
  • பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்
  • பாதுகாப்பற்ற கருக்கலைப்பு

இவ்வகையான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுபவை:

  • வறுமை
  • அருகாமையில் மருத்துவ வசதி கிடைக்கப்பெறாமை
  • கர்ப்பகாலம், பிரசவம் குறித்த முழுமையான அறிவியல் அறிவு கிடைக்கப்பெறாமை
  • போதுமான சேவைகள் கிடைக்கப்பெறாமை
  • கலாச்சார நடவடிக்கைகள்

இவை அனைத்துமே முக்கியக் காரணங்களாக கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும், சுமார் 2,87,000 பேறு கால மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இம்மரணங்களில் சஹாரா – ஆப்பிரிக்க பகுதிகளில் 56% மரணங்களும், தெற்காசிய நாடுகளில் 29% மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இவ்விரண்டு பகுதிகளுமே மொத்த மரணத்தில் சுமார் 85% தன்னகத்தே கொண்டுள்ளன.  நாடுகளின் அளவில் பார்த்தால் கர்ப்பகால/ பிரசவ கால மரணங்களில் நம்பர் 1 இடத்தைப் பெற்றிருப்பது இந்தியாதான். ஒட்டுமொத்த பேறுகால மரணங்களில், 19% இந்தியாவில் நிகழுகின்றன. இதற்கு அடுத்தபடியாகத்தான் நைஜீரியா (14%) வருகிறது.

வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தற்போது வளரும் நாடுகளில் அதிக அளவில் பேறு கால மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால், 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டம் வரையில், வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும், சம அளவிலேயே பேருகால மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஏனெனில் மருத்துவ உலகில் விஞ்ஞான வளர்ச்சி பெரும்பாய்ச்சலில் நடைபெறாத காலகட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சியே நீடித்தாலும், மருத்துவ ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் வளர்ந்த பின்னர், அதன் பலன் கிடைக்கப்பெற்ற நாடுகளுக்கும், கிடைக்கப் பெறாத நாடுகளுக்குமிடையேயான வித்தியாசம் அதிகமாக வளர்ந்திருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரையில், எங்கெல்லாம் மருத்துவ வசதிகள்  அதிகமாக நிறுவப்பட்டனவோ அங்கெல்லாம் பேறுகால மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இது நாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல, மாநிலங்களுக்கு இடையிலுமான வித்தியாசத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது.

குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பேறுகால உயிரிழப்பு விகிதம், 22% வீழ்ச்சி அடைந்திருப்பதாக ’மாதிரி பதிவு அமைப்பு’, கடந்த ஜூன் 7 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

பேறுகால உயிரிழப்பு விகிதம் 2011-2013 காலகட்டத்தில், 1,00,000-க்கு 167-ஆக இருந்தது, கடந்த 2014- 2016 காலகட்டத்தில் 130-ஆக குறைந்திருப்பதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. குறிப்பாக தென்மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா,கேரளா, தமிழ்நாடு ஆகியவை மிகப்பெரிய முன்னேற்றமடைந்துள்ளன என்று கூறுகிறது.

ஐக்கியநாடுகள் சபை 17 சர்வதேச இலக்குகளை முன்வைத்து உருவாக்கிய நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றான பேறுகால மரண விகிதத்தை 1,00,000-க்கு 70 என்ற விகிதத்திற்குக் கீழ் கொண்டு செல்லவேண்டும் என்ற இலக்கை தமிழகம், கேரளா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்கள் அடைந்துவிட்டன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த இலக்கிற்கு நெருங்கி நிற்கின்றன. இந்தியாவில் பிற மாநிலங்கள் மிகவும் பின் தங்கியே உள்ளன.

’மாதிரி பதிவு அமைப்பு’ வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை, சுமார் 62,96,101 கர்ப்பிணிப் பெண்களின் தகவல்களைக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்பெண்களில் பேறுகால மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 556 ஆகும்.

மேற்கண்ட தரவுகளை வைத்துக் கொண்டு “முன்னோர்கள் முட்டாளில்லை” கூட்டமும், ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் பக்தர்கள் கூட்டமும், “எங்க முப்பாட்டன் காலத்திலிருந்தே நாங்கள் திடகாத்திரமாகத்தான் இருந்தோம்” என குதூகலமாக சுய இன்பம் அடைவது பச்சைப் பொய் என்பது உறுதி.

தமிழகமும் பிற தென் மாநிலங்களும் முன்னணியில் நிற்பதற்கு முக்கியக் காரணங்கள்  இங்கு பரவலாகத் திறக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவையே ஆகும். மேலும் இன்று தமிழகத்தில் மிகச்சிறு எண்ணிக்கையை தவிர்த்து விட்டு அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. இத்தகைய வளர்ச்சிகள் வருவதற்கு முன்னர், இந்தியா முழுவதுமே மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருந்தன என்பதற்கான ஆதாரங்களும் பல உள்ளன. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே, இத்தகைய நிலையில் பின்தங்கியே இருந்தன என்பதே உண்மை.

மேம்படுத்தப்பட்ட மருத்துவ கண்டுபிடிப்புகளால்தான் இன்றைய நீண்ட ஆயுளே ஒழிய, முப்பாட்டனின் பாரம்பரிய வழியினால் அல்ல!

இந்திய பிறப்பு இறப்பு பதிவேடுகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பாலகர் மரண விகிதத்தில் (infant mortality rate) இந்தியா மிகவும் பின் தங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 1000 பாலகர்களுக்கு 116 பாலகர்கள் மரணம் என்ற விகிதத்தில் இருந்தது. அதே காலகட்டத்தில் ஸ்வீடன் நாட்டின் பாலகர் இறப்பு விகிதம் 1000-க்கு 21-ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் பாலகர் இறப்பு விகிதம் 1000-க்கு 34 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் 2016-ம் ஆண்டு பாலகர் இறப்பு விகிதம் 1000-க்கு 2.72 ஆகும்.

1900-ம் ஆண்டு 1000-க்கு 232-ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் 1925-ம் ஆண்டு 174-ஆகவும், 1951-ம் ஆண்டு 116-ஆகவும் குறைந்துள்ளது. அதாவது பழங்காலத்தில் அதிகமாக இருந்த மரண விகிதம், விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, நவீன அலோபதி மருத்துவமுறையின் காரணமாக படிப்படியாக குறைந்து தற்போது மிகவும் குறைந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பதிவாளர் ஜெனரலின் அறிக்கைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்படும் புள்ளிவிவரக் கணக்கின் படி 1910-ம் ஆண்டு 1000-க்கு 35 ஆக இருந்த பேறுகால மரண விகிதம், 1950-ம் ஆண்டு 8-ஆகக் குறைந்திருக்கிறது.

மேலை நாடுகளில், அறிவியல் வளர்ந்து, நோய் தடுப்பு மற்றும் நோய்த்தொற்று கட்டுப்படுத்தும் மருத்துவ ஆராய்ச்சிகள் பெருகி, அவற்றின் பலனாகவே பாலகர்கள் இறப்பு விகிதமும், பேறுகால இறப்பு விகிதமும் குறைந்தனவேயன்றி தங்கள் மூதாதையர்களைப் போல அவர்கள் பின்னோக்கிச் சென்று அறிவியலற்ற முறையில் வைத்தியம் செய்து கொள்ளவில்லை.

”புள்ளி விவரங்களெல்லாம் இலுமினாட்டிகளின் மருந்து கம்பெனிகளுடைய சதி” என்று ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலனின் குரலாகக் கொதிப்போருக்கு புரிய வைக்க எங்களிடமிருக்கும் ஒரே வைத்தியம் பாட்டி வைத்தியம்தான்.  உங்கள் வீட்டின் / தெருவிலிருக்கும் வயதான பாட்டிமார்களிடம் கேட்டுப் பாருங்கள், ”அந்தக்காலத்தில் ’தமிழ் கலாச்சாரத்தின்படி’ பெற்றுக் கொள்ளப்பட்ட பிள்ளைகளில் எத்தனை உயிரோடு இருக்கும்? எத்தனை குழந்தைகள் மரணமடையும்?” என்று. பாட்டி சொல்லியாவது பேரன்மார்களுக்கு ஹீலர்பாஸ்கர், பாரிசாலன் பிணி ஒழிகிறதா என்று பார்க்கலாம்.

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !  –பாகம் 1

  • வினவு செய்திப் பிரிவு

RSS மிரட்டும் மலையாள எழுத்தாளர் ஹரிஷ்-ஐ ’கண்டிஷன் அப்ளை’-யுடன் ஆதரிக்கும் தமுஎகச – தீக்கதிர் !

தச்சார்பின்மையினைக் கொள்கையாகக் கொண்ட கேரளாவில் இருக்கும் இடதுசாரிகளின் அரசு, இராமாயணத்தைப் போற்றும் ஒரு மத விழாவை அரசு கொண்டாடப் போவதாக அறிவிக்கிறது. உடனே இது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகிறது.

கிருஸ்ண ஜெயந்தியை மார்க்ஸ், பகத்சிங் படங்களோடு கொண்டாடும் கேரள சிபிஎம் (கோப்புப் படம்: செப்டெம்பர் 2015)

“கேரளாவில் இந்துத்துவ கோஷ்டிகள் வளர ஆரம்பித்திருக்கின்றன. அதை தடுக்க வேண்டுமென்றால் நமக்கு ஆதரவாக இருக்கிற சமஸ்கிருத அறிஞர்களை பாதுகாக்க வேண்டும். அதற்காகத்தான் இராமாயண விழா கொண்டாடப்படுகிறது. இதை அரசோ, கட்சியோ ஸ்பான்சர் செய்யவில்லை. நாங்கள் ஆதரிக்க மட்டுமே செய்கிறோம்” என கேரள இடது முன்னணி அரசின் அமைச்சர்கள் விளக்கம் தருகிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.எம்.-மின் சமூக வலைத்தள தொண்டர்கள், தங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்க, கேரள சி.பி.எம். காயர்குலம் சட்டமன்ற உறுப்பினர் பிரதீபா, இராமாயணம் பாராயணம் செய்வதை வீடியோவாகவே வெளியிட்டு, “இராமயணம் வாசிப்பது நன்மையை பரப்புவதற்கே” என ஆன்மீகப் பரவசத்துடன் தலைப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதாவது நாங்களும் வேதகால நாகரிகத்தை ஆதரிக்கிறோம் என ஜோதியில் கலந்து விட்டார்.

இதற்கு தமிழக சி.பி.எம் தோழர்கள் வேறு ஒரு விளக்கம் தருகிறார்கள். அதாவது ராமாயணம் ஒரு நாட்டார் மொழி வரலாறு போல பல அரிய சேதிகளை, வரலாற்றை, நமது பொக்கிஷத்தை கொண்டிருக்கிறது. அதை முற்றிலும் மறுக்கக் கூடாது, அது ஒரு மகத்தான இலக்கியம் என்றெல்லாம் கூறுகிறார்கள். சரி, அப்படி வைத்துக் கொண்டாலும் கூட இராமயண காலத்தில் சாதி எப்படி இருந்தது, சடங்குகள் எப்படி இருந்தது, என்ன படிப்பினை என்று கருத்தரங்கம் நடத்துவதற்கு பதில் இப்படி பாராயணம் செய்தால் நல்லது என்று பஜனை வழி போவது எப்படி சரி? மறைந்த நம்பூதிரிபாடு அவர்கள் எழுதிய வேதகால நாகரிகம் நூல் முதல் இவர்கள் நல்லதொரு இந்துமதம் இருப்பதாக கண்டுபிடித்து கூறுகிறார்கள். ஒருவேளை இந்தியாவின் வரலாற்றில் பெருமைப்படத்தக்க மரபு என்றால் அது பார்ப்பனியத்திற்கு எதிரான மரபு, போராட்டம், இலக்கியம் என்றுதான் சொல்ல முடியுமே அன்றி பார்ப்பனிய ஏரியாவில் நல்ல பார்ப்பனியம் இருப்பது என்பது அடிப்படையிலேயே தவறானது.

இந்துத்துவ அமைப்புகள் செய்யும் வேலையை இடது முன்னணி அரசே செய்யும் என தெரிந்துவிட்ட பிறகு, இனி பரிவாரங்களுக்கு வேலை இருக்காது இல்லையா? அவர்கள் ராமாயணம், மகாபாரதம் படிப்பதை நிறுத்திவிட்டு, இலக்கியம் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் போலும். ஹரிஷ் என்கிற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்  ‘மீசை’ என்ற தொடரை ‘மாத்ருபூமி’ இதழில் எழுதி வந்தார். இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதாக ஒரு பகுதி வருகிறது.

கோவில் காதல் இல்லாத தமிழ் திரைப்படம் ஏது?

“உங்களுக்குத் தெரியுமா? கோயிலுக்குப் போகும்போது பெண்கள் ஏன் இப்படி அலங்காரம் செய்துகொண்டும், அழகான உடைகள் அணிந்தும் செல்கிறார்கள் என்று?”
– ஆறு மாதங்களுக்கு முன்பு வரை என்னுடன் பேசிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், என்னுடன் நடந்துகொண்டே இதைக் கேட்டார்..

“கடவுளை வணங்க” என நான் சொன்னேன்.

“இல்லை. நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள்…மிக அழகான உடைகளையும் நகைகளையும் அணிந்து கொண்டு கடவுளை வணங்கவா அவர்கள் வருகிறார்கள்? அவர்கள் தாங்கள் பாலியல் உறவுக்கு தயாராகி விட்டதை தங்களை அறியாமல் சொல்லவே இப்படி செய்கிறார்கள்.”

நான் மெலிதாக புன்னகைத்தேன்.

“அப்படியில்லை என்றால், அவர்கள் ஏன் மாதத்தின் நான்கைந்து நாட்கள் கோயிலுக்குள் செல்வதில்லை? இது வேறொன்றுமில்லை, நாங்கள் இப்போது தயாராக இல்லை என சொல்வதற்காகத்தான்”

இதைப் படித்து வெகுண்டெழுந்த ’ஹிந்து ஐக்கிய வேதி’ என்கிற பரிவார் கும்பல், எழுத்தாளர் ஹரிஷை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்கிறது. எழுத்தாளரின் குடும்பத்தினரை இழுத்து மோசமான வசைகளை எழுதுகிறது. ஹரிஷ் தனது முகநூல் கணக்கை முடக்குகிறார். தனது தொடரை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவிக்கிறார். சங் பரிவாரங்களுக்கு அதுவும் போதவில்லை. ஹரிஷின் கையை வெட்டுவோம் என அறைகூவல் விடுக்கிறார்கள். பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.

தனது தொடரை நிறுத்திக் கொள்வதற்காக மாத்ருபூமிக்கு அவர் எழுதிய கடிதத்தில், மாத்ருபூமி வார இதழில் பிரசுரமாகிவரும் என்னுடைய மீசை நாவல் மூன்று அத்தியாயத்தை கடந்துள்ளது. சிறுவயது முதல் மனதில்கிடந்ததும் அது சுமார் ஐந்து வருட உழைப்பின் பலனுமாகும். ஆனால் நாவலின் ஒரு பாகத்தை மட்டும் பிரித்தெடுத்து சிலர் மோசமான பிரச்சாரத்திற்கு உபயோகிப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஹரிஷ்

எனக்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ந்து மிரட்டல் உள்ளது.  ஒரு மாநிலத்தலைவர் தொலைக்காட்சி விவாதத்தில் என் கன்னத்தில் அடிக்கவேண்டும் என்று வெளிப்படையாகச் சொன்னார். அதைவிட என் மனைவியையும் இரண்டு சின்ன குழந்தைகளுடைய படங்கள் உபயோகித்து அசிங்கமான பிரச்சாரங்கள் தொடருகிறது. அம்மாவையும் சகோதரியையும் இறந்துபோன அப்பாவையும் அசிங்கமாக பேசுகின்றனர்.  

பெண்கள் ஆணையத்திலும் பல காவல் நிலையங்களிலும் எனக்கு எதிராக மனு கொடுத்துள்ளனர். அதனால் நாவலை தொடர்ந்து பிரசுரிப்பதிலிருந்து நான் பின்வாங்குகிறேன்.  உடனே புத்தகமாக்கும் எண்ணமும் இல்லை. சமூகத்தின் வெறுப்பு அடங்கி அது ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றும்போது வெளியிடுவேன்.

என்னை தொந்தரவு செய்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு முயற்சிக்கவில்லை.  காரணம் இங்குள்ள நீதிநியாய சட்டத்தில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை இழக்க நான் தயாரில்லை.

மேலும் நாட்டை ஆளும் வர்கத்திற்கு எதிரே போராடுவதற்கான பலம் என்னிடமில்லை. ஆதரவு தந்த எல்லோருக்கும் நன்றி. குறிப்பாக மாத்ருபூமி பத்திரிகை நிர்வாக குழு அங்கத்தினர்களுக்கு மேலும் எப்போதும் என்னுடன் துணை நிற்கும் குடும்பத்தினருக்கும். எழுத்து தொடரும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தான் எழுதிய விசயத்தில் திடமாக இருக்கும் ஹரிஷ் மன்னிப்புக் கேட்கவில்லை. இராமாயண விழாவில் பிசியாக இருந்த, முற்போக்கு-கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான இடது முன்னணி அரசு, இந்த சர்ச்சை தேசிய அளவில் பேசுபொருள் ஆன பிறகு, எழுத்தாளருக்கு வேண்டிய பாதுகாப்பை செய்யும் என அறிவிக்கிறது.

கருத்துரிமைக்கு பங்கம் வரும்போதெல்லாம் முதல் குரலாக ஒலிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.எம்மின் த.மு.எ.க.ச-வின் குரல் (தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்), ஹரிஷ் விவகாரத்தில் கொஞ்சம் தாமதமாக ஒலிக்கிறது. தங்களுடைய கட்சி மற்றும் கேரளாவில் ஆளும் அரசு என்ன சொல்கிறது பார்ப்போம் என காத்திருந்துவிட்டு, அறிக்கை விடுகிறது போலும். சி.பி.எம். கட்சி ஏடான தீக்கதிரில் அதன்பிறகே செய்தி வெளிவருகிறது.

கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் ஹரிஷ் அவர்களின் கருத்துரிமைக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கை:

சமூகத்தின் பிற்போக்கான பழமைவாத ஆதிக்கக் கருத்தியல் மீது எழுப்பப்படும் விமர்சனங்களை பரிசீலித்து நேர்செய்து கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களை ஒடுக்கும் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. கலை இலக்கிய ஆக்கங்கள் மற்றும் ஊடகங்களைக் கண்காணித்து அவற்றின் வழியாக வெளிப்படும் விமர்சனங்களை திசைதிருப்பி பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டிவிடுவதற்கென்றே சங்பரிவாரம் பல்வேறு பெயர்களில் சகிப்பின்மை குண்டர்களை களமிறக்கியுள்ளது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பண்பற்ற சகிப்பின்மை குண்டர்கள், விமர்சிப்பவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவது, அவதூறு செய்வது, தாக்குவது, கொன்றொழிப்பது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி பின்வாங்கச் செய்வது உள்ளிட்ட இழிவான வழிகளை கைக்கொண்டுள்ளனர்.

த.மு.எ.க.ச. தலைவர் சு.வெங்கடேசன்

பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதத்தில் கவிதையொன்றை மேற்கோள் காட்டியதற்காக ஊடகவியலாளர் கார்த்திக்கேயன் இவர்களது கடுமையான அவதூறுகளுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளார். இதேவிதமான நிலையை ஆண்டாள் குறித்த கட்டுரையொன்றில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளுக்காக எழுத்தாளர் வைரமுத்துவும் எதிர்கொள்ள நேரிட்டது. இப்போது கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ஹரிஷ் அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் இதன் தொடர்ச்சிதான்.

மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளியிடப்பட்டுவந்த அவரது ‘மீசை’ என்ற நாவலின் உள்ளடக்கத்திற்காக அவரது கைகளை வெட்டிவிடப்போவதாக யோக ஷேம சபா என்கிற அமைப்பினரால் மிரட்டப்பட்டுள்ளார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் பல்வேறு அவதூறுகள் சமூக வலைத்தலைங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால் கடும் மனவுளைச்சலுக்காளான ஹரிஷ் தனது நாவலை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். அவரை இந்த முடிவுக்கு நெட்டித் தள்ளிய சகிப்பின்மை குண்டர்களுக்கு எதிராக நாடெங்குமிருந்து ஒலிக்கும் கண்டனத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைகிறது.

மக்களாட்சி மாண்புகளில் ஒன்றான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்கும் போக்கினை அனுமதிக்க முடியாதென்றும் எழுத்தாளர் ஹரிஷ் தனது படைப்பாக்கப் பணியைத் தொடர்வதற்குரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. அவரது கருத்துரிமைக்காக திரண்டுள்ள ஆதரவினால் உத்வேகம் பெற்று ஹரிஷ் தனது எழுத்துப்பணியை முன்னிலும் காத்திரமாக தொடர வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

வெகுஜன ஊடகங்கள் ’சர்ச்சை’க்குரிய ஒரு செய்தியை வெளியிடும்போது, மிக சாமர்த்தியமாக  இந்த சர்ச்சை எதனால் வந்தது என்கிற விசயத்தை சொல்லாமல் மொட்டையாக சர்ச்சைக்குரிய வகையில் எழுதினார். எனவே, அதற்கு எதிர்ப்பு வந்தது என எழுதுவார்கள். வெகுமக்கள் மத்தியில் இந்த ’சர்ச்சைக்குரிய’ விசயத்தை சொன்னால் நமக்கும் எதிர்ப்பும் வரும் என்கிற சுயதணிக்கையே காரணம். ஆனால், தமுஎகச, தீக்கதிர் போன்ற முற்போக்கு-கடவுள் மறுப்பு-மதச்சார்பின்மையை ‘கொள்கை’யாகக் கொண்ட அமைப்பு-நாளேடு ஏன் சுயதணிக்கை செய்து கொள்கிறது? சுயதணிக்கை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஒரு எழுத்தை எழுதிய எழுத்தாளருக்கு இவர்கள் ஏன் ஆதரவு தருவதாக சொல்கிறார்கள்?

இத்தகைய பாதுகாப்பான ‘கருத்துரிமைக்கான’ போராட்டம் என்பது நமது தோழர்களுக்கு முதல்முறையல்ல. “மாதொருபாகன்” நாவல் தொடர்பாக இந்துமதவெறியர்கள் எழுப்பிய பிரச்சினையில் பெருமாள் முருகனுக்காக “கருத்துச் சுதந்திரம்” என்றே தற்காப்புடன்தான் களமிறங்கினார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி வெறி, அதை உசுப்பிவிடும் இந்துமதவெறியர்களின் மதவெறி என்று குறிப்பாகச் சொல்வதை தவிர்த்தார்கள்.

கீழடியில் பூமி பூஜை, ஆந்திராவில் அம்மனுக்கு தீச்சட்டி, கேரளத்தில் இராமாயண பாராயணம், திருவண்ணாமலை தீபத்திற்காக சிறப்பிதழ் என வாக்கரசியல் சி.பி.எம் வகைப்பட்ட இடதுசாரிகளின் பரிணாமம் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஹரிஷ், பெண்கள் மாதவிடாய் நாட்களில் ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற கேள்விக்கான பதிலை உளவியல் பூர்வமாகவும் பகுத்தறிவின் மூலமாகவும் தேட முயன்றிருக்கிறார்.

உளவியல் மருத்துவர் ஷாலினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதும், அலங்காரமாக உடை அணிவதும் ஆண்களை வசீகரிக்கவே. இதை தன்னை அறியாமல் செய்தாலும் உளவியல் பின்னணி இதுதான்’ என்று பேசியது இங்கே நினைவுகூறத்தக்கது. இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும். எழுத்தாளர் ஹரிஷோ இந்த இனக்கவர்ச்சி நடவடிக்கைகளைத் தாண்டி அதை மதம் சார்ந்த பிற்போக்கு நடவடிக்கைகளை கண்டிப்பதற்கோ அல்லது சுட்டிக் காட்டுவதற்கோ பயன்படுத்துகிறார்.

ஒரு உளவியல் மருத்துவர் சொல்லத் துணிந்த சமூக யதார்த்தத்தை, புரட்சி செய்யப் போவதாகக் கூறும் சிபிஎம் கட்சியும் அதன் அமைப்புகளும் சொல்லத் தயங்குவது ஏன்?

மாதவிடாய் நாட்களில் பெண்களை கோவிலில் அனுமதிப்பதில்லை. மற்ற நாட்களில் அனுமதிக்கிறார்கள். அப்படியானால் கோவிலுக்கு வருவது அல்லது வராததை வைத்து ஒரு பெண்ணை பாலியல் நோக்கில் ‘ஆண்கள்’ புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று எவராவது சொல்ல முடியுமா? இல்லை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, பரிசீலிக்க கூடாது என்றால் மாத விடாய் நாட்களில் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதை மாற்ற வேண்டும். எல்லா பணிகளுக்கும் எல்லா நாட்களிலும் செல்லும் பெண்கள் கோவிலுக்கு மட்டும் எல்லா நாட்களிலும் செல்லக்கூடாது என்றால் அதுதான் ஆகப்பெரும் இழிவு அன்றியே எழுத்தாளர் ஹரிஷ் சுட்டிக் காட்டும் யதார்த்தம் அல்ல. பெண்ணை போகப் பொருளாக பார்ப்பனியம் கருதுவதாலேயே அந்த நான்கு நாட்களில் கோவிலுக்கு வரக்கூடாது என்று மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயே ஒரு மூலையில் வைத்து வீட்டுசிறையில் அடைக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறது. இப்படி பல பொருளில் எழுத்தாளர் ஹரிஷ் எழுதிய அந்த உரையாடலை விவாதிக்க முடியும்.

இந்துக்களை ஒரேயடியாக விமரிசிக்க கூடாது, அப்படி விமரிசித்தால் ‘இந்துக்கள்’ நம்மை புறக்கணிப்பார்களோ என்ற தவறான தயக்கம் காங்கிரசு, தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இருப்பது போல சி.பி.எம் கட்சிக்கும் நிறையவே இருக்கிறது. இதுதான் சங்கிகளின் பலம். சிதம்பரம் தில்லை நடராசர் கோவில் போராட்டத்தை ம.க.இ.க – ம.உ.பா.மை எடுத்த போது பார்பனியம் என்ற சொல்லை பயன்படுத்துவதால் விலகுகிறோம் என்று சி.பி.எம் கட்சி கூட்டு நடவடிக்கையில் இருந்து விலகியது. ஆனால் இன்றைக்கு தமிழக சூழலில் சிபிஎம் தோழர்கள் நிறைய பேர் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதோ, சித்தாந்த ரீதியாக ஆர்.எஸ்.எஸ்-ஐ அம்பலப்படுத்துவதையோ தொடர்ந்து செய்கிறார்கள். அத்தகைய மாற்றம் தொடரவேண்டும் என்றால் அவர்கள் இன்னும் தீவிரமாக போராட வேண்டும்.

பகுத்தறிவை நம்புகிற இயக்கம் அல்லது அமைப்பு, சமூகத்தின் உளவியலை ஆராய முனையும் ஹரிஷ் போன்ற எழுத்தாளர்களுக்கு ‘இன்னும் நீங்க நிறைய எழுதணும்’ என வெற்று வார்த்தைகளால் தைரியம் சொல்லாமல், அவர் என்ன எழுதினார் என்பதை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பத்தோடு பதினொன்றாக ஆதரவு கொடுப்பதற்கு முற்போக்கு இயக்கம் என்கிற பெயர் எதற்கு? சி.பி.எம் தோழர்கள் பரிசீலிக்க வேண்டும்.

– கலைமதி

செய்தி ஆதாரம்:

எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !

பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தாயைப் போலப் பசுமை பொங்கும் வயலை பறிகொடுத்துக் கதறும் விவசாயப் பெண்மணி.

டக்குமுறைகளின் மூலமும் ஆசை வார்த்தைகளின் மூலமும் எதிர்ப்பின்றி சேலம் எட்டுவழிச் சாலைக்கு நிலங்களை அபகரித்துவிடத் துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கும் அவரது டெல்லி துரைமார்களுக்கும் தமிழகம் பணிய மறுக்கிறது. நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மூதாட்டி உண்ணாமலையையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்து அப்புறப்படுத்திய அடக்குமுறை ஒன்றே, விவசாயிகளின் துணிவையும் இந்தத் திட்டத்தை அவர்கள் எந்தளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

‘‘நிலத்தைத் தரும் விவசாயிகளுக்குக் கோடிகோடியாய் இழப்பீடு கிடைக்கும்” என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ஒரு தேன் தடவிய அறிவிப்பைச் செய்தாரே, அந்த பாச்சாவெல்லாம் உண்ணாமலையிடம் மட்டுமா செல்லுபடியாகவில்லை. ‘‘எங்களுக்கு இவங்க யாருங்க சலுகை காட்டுறது? எனச் செருப்பால் அடித்தாற்போலத் திருப்பியடிக்கிறார்கள் விவசாயிகள். (நக்கீரன், ஜூன் 27)

‘‘ஒரு சில விவசாயிகள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்கிறார் முதல்வர் எடப்பாடி. எதிர்ப்பே இல்லையென்றால், இத்துணை பெரிய போலீசு பட்டாளம் எதற்கு? போர்க்களத்திற்குப் போவது போல, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆள், அம்பு, படை, சேனையோடு கிராமத்திற்குள் நுழைய வேண்டிய அவசியம் என்ன?

‘‘விவசாயிகளை வெளியிலிருந்து யாரோ தூண்டிவிடுகிறார்கள்” என தினமலர் போன்ற ஆட்காட்டி அரசியல் மஞ்சள் ஏடுகள் எழுதுகின்றன. ஆனால், மாணவி வளர்மதி, இயற்கை ஆர்வலர் பியூஷ் மனுஸ், சி.பி.எம். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 19 பேர், இயக்குநர் கவுதமன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்ட பிறகும், நிலம் அளவிடும் கிராமங்களில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

சேலம் – அடிமலைபுதூரில் நிலத்திருடர்களை எதிர்த்து நிற்கும் மூதாட்டி உண்ணாமலை.

நிலம் அளவீடு செய்யப்படும் கிராமங்கள் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட பிறகும், நிலத்தின் உரிமையாளர்கள் தவிர மற்றவர்கள் யாரும் அண்டவிடாதபடி தடுக்கப்பட்ட பிறகும் எதிர்ப்புகள் ஓயவில்லை.

விவசாயிகள் தமக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்புகளைக் காட்டி வருகிறார்கள். நிலத்தில் படுத்தபடி அளவீடு செய்வதைத் தடுக்க முயலுகிறார்கள். ‘‘எங்க அனுமதியில்லாம எங்க நிலத்துல நீங்க எப்படி இறங்கலாம்? எனத் துணிந்து எதிர்க்கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்கிறார்கள். ஆதார், குடும்ப அட்டைகளைத் தூக்கியெறிந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறார்கள்.

செய்யாறு நகரையொட்டியுள்ள எருமைவெட்டி, கிராமவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி, தனது ஐந்து ஏக்கர் கரும்பு வயலுக்குள் அத்துமீறி நட்ட கல்லைப் பிடுங்கிப் போடவில்லையென்றால், தீக்குளித்து மாண்டு போவேன் எனக் கூறி மண்ணெண்ணெய் கேனைத் திறக்க, அதை அதிகாரிகள் பிடுங்கி எறிகிறார்கள். அடுத்த நொடியே மீனாட்சியின் மகள் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொள்கிறார். அதிகார வர்க்கமோ இரக்கமற்று அடுத்த நிலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது.

***

சேலம் பசுமை (அழிப்பு) சாலைத் திட்டம் குறித்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் சாத்தியப்பாடு அறிக்கை (feasibility report) 2,791 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடுகிறது. இதன் விளைவாக ஏறத்தாழ 7,237 குறு, சிறு, நடுத்தர விவசாயிகள் தமது நிலங்களை இழந்து வெளியேற வேண்டியிருக்குமென்றும், 20,000 கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படுமென்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் எருமவெட்டி கிராமத்தில் 18 வயதேயான தேவதர்ஷினி கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டபோதும், அடுத்த வயலைத் தேடிபோனது அதிகார கும்பல்.

கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள், காவிரி டெல்டா விளைநிலங்களைப் போல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பண்படுத்தப்பட்டவையல்ல. இந்த விளைநிலங்கள் ஒரு நூறு ஆண்டுக்குள்ளாகத்தான் கழனியாக  நெல்லும், தென்னையும், பாக்கும் விளையும் பசுஞ்சோலையாக மாற்றமடைந்திருக்கின்றன. அதனால், நிலத்தை இழக்கவுள்ள ஒவ்வொரு விவசாயியிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது.

69 வயதான கைலாசம், சேலத்தைச் சேர்ந்தவர். 40 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் மத்திய அரசு சார்பில் இரும்பாலை அமைக்கப்பட்டபோது, தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை அரசுக்குக் கொடுத்துவிட்டு வெள்ளியம்பட்டிக்குக் குடிபெயர்ந்தார். கைலாசமும் அவரது மனைவி அமராவதியும் பாடுபட, தரிசு நிலம் செழிப்பான விளைநிலமானது. இப்போது இருக்கும் நிலமும் வீடும் கிணறும் தென்னை மரங்களும் கைலாசமும் அவருடைய மனைவி அமராவதியும் மாடாய் உழைத்து உருவாக்கியவை. அப்படி உழைப்பால் உருவான நிலமும் இன்று சேலம்  சென்னை எட்டுவழிச் சாலைக்கு இரையாகவிருக்கிறது.

‘‘இந்த வயசுக்கு மேல இருக்கிற வீட்டையும் சோறு போடுற நிலத்தையும் விட்டுட்டு எங்க போறதுன்னே தெரியலே” எனக் கண்கலங்கி நிற்கிறார், அமராவதி.

மாணவி வளர்மதியை வலுகட்டாயமாகக் கைது செய்யும் போலீசு.

‘‘தருமபுரிதான் எனது சொந்த ஊர். பல ஆண்டுகளுக்கு முன்பு பாப்பம்பட்டியில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கிக் குடியேறினோம். தரிசாகக் கிடந்த நிலத்தை எங்களது உழைப்பால் விளைச்சல் பூமியாக மாற்றி வைத்திருக்கிறோம். இந்த நிலத்தை அரசாங்கம் தட்டிப் பறித்துக் கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்கிறார், விவசாயி வேலு.

சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவருக்கு 2 ஏக்கர் நிலம்தான் மிஞ்சும். அந்த நிலமும் சாலைக்குக் கிழக்கே ஒரு ஏக்கர், மேற்கே ஒரு ஏக்கர் எனக் கூறுபோடப்பட்டிருக்கும். ஒரு நிலத்தில் இருந்து இன்னொரு நிலத்திற்குச் செல்ல அவரது குடும்பம் 20 கி.மீ. தூரம் சுற்றி அலைய வேண்டும்.

‘‘8 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்வோம். இப்போது பசுமை வழிச் சாலையால் எனது விவசாய நிலம் இரண்டாக பிளக்கப்பட்டு, 4 ஏக்கர் மற்றும் 2 கிணறு பறிபோகிறது. இரண்டு கிணறும் பறிக்கப்பட்டால், மீதம் உள்ள நிலத்தில் தண்ணீர் இல்லாமல் பயிரிட முடியாது. மேலும், நிலம் பிளக்கப்பட்டு நடுப்பகுதியில் சாலை செல்லும்போது இரண்டுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்” என்கிறார் திருவண்ணாமலையை அடுத்துள்ள காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த அனந்தசயனம்.

இந்தக் கதைகளைக் காது கொடுத்துக் கேட்க விரும்பாத அரசாங்கமும், அவர்களது விசுவாசிகளும் ‘‘வளர்ச்சி தேவையில்லையா?” என வன்மத்தோடு எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். அதிவிரைவுச் சாலைகளும், கார்களும், மால்களும், அடுக்குமாடிக் கட்டிடங்களும், ஒருசில அதிநவீனமான தொழிற்சாலைகளும், பங்குச்சந்தை ஏற்றமும்தான் வளர்ச்சியின் அறிகுறிகள் என்றால், இந்த விவசாயிகளின் உழைப்பை, அதனால் சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் பலன்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பொய்களும் வதந்திகளும் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாக ‘வளர்ச்சியின் ஆதரவாளர்கள்‘ குற்றஞ்சுமத்துகிறார்கள். இது அழுகுணித்தனமும் கயமைத்தனமும் நிறைந்த குற்றச்சாட்டு.  இதற்குப் பதில் அளிப்பதைவிட, வளர்ச்சி, வளர்ச்சி என கீறல் விழுந்த ரிகார்டு போல ஆளுங்கும்பல் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறதே, அந்த வளர்ச்சி குறித்துக் கட்டப்பட்டிருக்கும் பொய்களையும் கட்டுக்கதைகளையும்தான் முதன்மையாக நாம் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.

***

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தின் நன்மைகள் குறித்து ஆளும் அ.தி.மு.க. அரசும் பா.ஜ.க. அவிழ்த்து விட்டுவரும் பொய்களிலேயே பிரம்மாண்டமான பொய், நிலத்தை இழக்கவுள்ள விவசாயிகளுக்கு, மிக அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்பதாகும்.

கையகப்படுத்தப்படும் நிலம் மற்றும் அதிலுள்ள மாட்டுக் கொட்டகைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்திற்கும் இழப்பீடாக 2,605 கோடி ரூபாய் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கிறது, சாத்தியப்பாடு அறிக்கை. இந்த ஒதுக்கீட்டின்படி கணக்குப் போட்டால், முன்னூறு ஹெக்டேருக்கும் குறைவான விளைநிலங்களுக்குத்தான் ஒன்பது கோடி ரூபாயை இழப்பீடாகத் தர முடியும். அப்படியென்றால், மீதி நிலங்களுக்கு…? கலெக்டர் ரோகிணியின் அறிவிப்பு தேன் தடவிய நஞ்சு. பணத்திற்கு விவசாயிகளை மயங்கச் செய்யும் கீழ்த்தரமான தந்திரம்.

சாத்தியப்பாடு அறிக்கையில் நிலம், அதிலுள்ள வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மட்டும்தான் இழப்பீடு தொகை குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, பயிர்களுக்குத் தனியாக இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அரசோ ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் அதிகபட்சமாக ரூ.50,000/ இழப்பீடு வழங்கப்படும் எனத் துணிந்து அடித்துவிட்டிருக்கிறார்.

இந்த உடான்ஸ் பேர்வழியின் யோக்கியதை என்னவென்பதை இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்பட்ட வறட்சி, தமிழக விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத் தென்னை விவசாயிகள், பட்டுப்போன ஒவ்வொரு மரத்திற்கும் குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.3,000/ அளிக்க வேண்டுமெனத் தமிழக அரசிடம் கோரிவந்தனர். பத்து மாதமாக இந்தக் கோரிக்கை குறித்து முடிவெடுக்காமல் இழுத்தடித்து வந்த தமிழக அரசு, இறுதியாக ஒரு மரத்திற்கு ரூ.103/ அளிக்க முன்வந்தது எனக் கூறுகிறர், பா.ம.க. நிறுவனர் ராமதாசு. (தமிழ் இந்து, 24.06.2018)

எனவே, தென்னை, பாக்கு போன்ற பணப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இழப்பீடு, காகித அறிவிப்பின் யோக்கியதையைக்கூடப் பெறும் தகுதியற்றவை.

சென்னை வண்டலூரை அடுத்துள்ள சுற்றுச்சாலை அருகே தொடங்கி, சேலத்தை ஒட்டியுள்ள அரியானூர் அருகே முடிவடையும் இந்த எட்டுவழிச் சாலையை 120 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், இந்தச் சாலையில் 60 கி.மீ. வேகத்தைத் தாண்டவே திணறும் அரசுப் பேருந்துகள் செல்ல வாய்ப்பில்லை.

ஜிண்டால் நிறுவனம் சூறையாடத் துடிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கவுத்தி வேடியப்பன் மலைத்தொடர்.

அரசுப் பேருந்துகள் பயணிக்க முடியாத சாலையால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பலன் கிட்டக்கூடும்? 60 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடிய அரசுப் பேருந்துகளின் கட்டணமே மலைக்க வைக்கும் அளவிற்கு இருக்கும்போது, 120 கி.மீ. வேகத்தில் அரசுப் பேருந்துகள் விடப்பட்டால், அதில் நாம் கால்வைக்க முடியுமா? சென்னைவாசிகள் மெட்ரோ ரயிலைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதைப் போல, எட்டுவழிச் சாலை தமிழகத்தின் தலையில் கட்டப்படும் இன்னொரு தங்க முள்கிரீடம்.

பெட்ரோல், டீசல் விலையில் சல்லிக்காசுகூடக் குறைக்க மறுத்துவரும் மத்திய, மாநில அரசுகள் எட்டுவழிச் சாலையால் பெட்ரோல் செலவு மிச்சமாகும் என நமக்குப் பொருளாதாரப் பாடம் நடத்துகிறார்கள். சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாகவுள்ள நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை மூட மறுக்கும் எடப்பாடி, சாலை விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில்தான் எட்டுவழிச் சாலையை அமைப்பதாகக் கூறுகிறார்.

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய இமாலயப் பொய் இந்தச் சாலையால் எதிர்காலத்தில், மேற்குப் பகுதியிலுள்ள ஐந்து மாவட்டங்கள் அடையப் போவதாகக் காட்டப்படும் வளர்ச்சி குறித்த சித்திரம்தான். விவசாயிகள் தமது விளைபொருட்களை மிக விரைவாக ஏற்றுமதி செய்ய இந்தச் சாலை பயன்படும் எனத் தொடங்கி இராணுவத் தளவாட உற்பத்தி கேந்திரம் உருவாகும், சிறுதொழில்கள் பெருகும் என அடுக்கிக்கொண்டேபோகிறார்கள்.

இந்தச் சாலையை முழுமையாக அமைப்பதற்கே நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது. அதன் பின், மேற்சொன்ன பில்டப்புகளெல்லாம் உருவாக வேண்டுமென்றால் இன்னுமொரு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அடுத்த காலாண்டிலேயே இந்தியப் பொருளாதாரம் குப்புறக் கவிழ்ந்துவிடலாம் என ஆளும் வர்க்கப் பொருளாதார நிபுணர்களே அஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில், எட்டுவழிச் சாலை குறித்த பில்டப்புகளெல்லாம் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதைதான்!

2015 ஏற்பட்ட பெருவெள்ளம், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகிய சுமைகளால் தமிழகத்தில் ஏறத்தாழ 50,000 சிறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன என்றும், அ.தி.மு.க. கும்பலின் இலஞ்சப் பசி காரணமாகப் புதிய தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வருவதில்லை என்றும் முதலாளித்துவப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், ஒரு அதிவிரைவுச் சாலை தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிப் போட்டுவிடும் என்ற விளம்பரத்தை நம்புவதற்குக் காதில் பூ சுற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.

10,000 கோடி ரூபாய் பெறுமான இந்தத் திட்டத்தில் 4,000 கோடி ரூபாய் அளவிற்கு இலஞ்சம் பெற முடியும் என்ற ஒரே காரணத்திற்காகவேதான், சென்னையிலிருந்து சேலத்திற்குச் செல்ல ஏற்கெனவே மூன்று சாலை வழிகளும், இரண்டு இருப்புப்பாதை வழிகளும், விமான சேவையும் இருந்துவரும் நிலையிலும், இத்திட்டம் தமிழகத்தின் மீது வலிந்து திணிக்கப்படுகிறது. அதற்கு வளர்ச்சி என்ற சல்லாத்துணி போர்த்தப்படுகிறது.

***

தையும் எதிர்மறையாகவே பார்க்கும் வக்கிரப் பார்வை இது என நம்மீது சிலர் பாயலாம். அந்த நேர்முறை சிந்தனையாளர்களிடம் நாம் கேட்போம், கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியால் பலன் அடைந்தவர்கள் யார்?

மோடியின் ஆட்சியில் பங்குச் சந்தை குறியீடு 30,000 புள்ளிகளைத் தொட்டிருக்கலாம். கோடீசுவர இந்தியர்களின் எண்ணிக்கை ஒருசில நூறுகளைத் தொட்டிருக்கலாம். முகேஷ் அம்பானி உள்ளிட்ட ஒரு சில தரகு முதலாளிகள் உலகப் பணக்காரர்களாக ஆகியிருக்கலாம். அதேசமயம், பல பத்து கோடிக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின், விவசாயிகளின், நடுத்தர வர்க்கத்தினரின் வேலை நிலைமையிலும் வாழ்க்கைத் தரத்திலும் என்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது?

இன்னமும் இந்திய நாட்டு விவசாயிகள் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையைத் தரக் கோரிப் போராடி வருகிறார்கள். அதனை உத்தரவாதப்படுத்த மறுக்கும் அரசுகளால், அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்டப்பட்ட ஐ.டி. துறை, அமெரிக்க  ஐரோப்பியப் பொருளாதாரம் குப்புறக் கவிழ்ந்தவுடனேயே தானும் படுத்துவிட்டது. ஐ.டி. துறையை நம்பித் தொடங்கப்பட்ட இன்ஜினியரிங் படிப்பு மோகமும் மட்டையாகிவிட்டது.

படித்து முடித்தவர்களுக்கு வேலையில்லை. வேலை கிடைத்தவர்களுக்கோ வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டக் கூடிய சம்பளம் கிடைப்பதில்லை. வேலை தேடி உள்நாட்டிலேயே அகதிகளாக அலையும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருத்துக்கொண்டே போகிறது.

எதையும் எதிர்மறையாகவே பார்க்கும் வக்கிரப் பார்வை
இது என நம்மீது சிலர் பாயலாம். அந்த நேர்முறை சிந்தனையாளர்களிடம் நாம் கேட்போம், கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியால்
பலன் அடைந்தவர்கள் யார்?

சாலை, விமான நிலையங்கள், தொலைதொடர்பு, மின்சாரம், கனிம வளச் சுரங்கங்கள் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் துறையை வளர்த்து எடுத்தால்தான் இந்தியா வல்லரசாகும் எனக் கூறி, அந்தத் துறையில் இறங்கிய தரகு முதலாளிகளுக்குப் பொதுத்துறை வங்கிகளின் பணத்தைக் கடனாகக் கொட்டினார்கள்.  விளைவு, வங்கிகள் வாராக் கடனில் சிக்கித் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இப்பொழுது அந்த நட்டத்தை ஈடுகட்ட பொதுமக்களின் மீது வரிச் சுமையும், புதிது புதிதாகச் சேவைக் கட்டணங்களும் திணிக்கப்படுகின்றன.

பிரதமர் மோடி பாரத்மாலா திட்டத்தை  நாட்டின் 500 மாவட்டத் தலைநகரங்களைச் சாலை வழியாக இணைக்கக்கூடிய 5.35 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான திட்டம்  டாம்பீகமாக அறிவித்திருப்பதைப் போலவே, முந்தைய பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாயி தங்க நாற்கர சாலை திட்டத்தை அறிவித்து,  இந்தியா ஒளிரப் போவதாகப் படம் காட்டினார்.

____ பெட்டி செய்தி ___________________________________________________

மாமியார் உடைத்தால் மண்குடமாம்…
மருமகள் உடைத்தால் பொன்குடமாம் !

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் எனத் தொடங்கி தேசத் துரோகிகள் என்பது வரை பல வகையிலும் அவதூறு செய்ய பா.ஜ.க.  அ.தி.மு.க. கும்பல் தயங்குவதேயில்லை. இப்படிப்பட்ட தூய வளர்ச்சிவாதிகளின் உண்மை முகம் என்ன?

1,822 கோடி ரூபாய் பெறுமான சென்னை துறைமுகம்  மதுரவாயல் இணைப்புச் சாலை தி.மு.க.  காங்கிரசு கூட்டணி ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது தொடங்கிவைக்கப்பட்டது.

நட்டாற்றில் கைவிடப்பட்ட,
துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்.

2011 தி.மு.க. தோற்று ஜெயா முதல்வரானவுடனேயே, கட்டுமான வேலைகள் நடந்துவந்த நிலையிலேயே இத்திட்டத்தை அப்படியே முடக்கிப் போட்டார். தனது பரம வைரி கருணாநிதியால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற காழ்ப்புணர்ச்சியைத் தவிர, இந்தத் திட்டத்தை முடக்குவதற்கு ஜெயாவிற்கு வேறு காரணங்கள் தேவையாக இருக்கவில்லை.

ஜெயாவிற்கு மதுரவாயல் திட்டம் என்றால், இந்துத்துவ பா.ஜ.க. கும்பலுக்கு ராமர் பாலம் திட்டம். கிட்டதட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, கடற்பகுதியை ஆழப்படுத்தும் வேலைகளெல்லாம் நடந்துவந்த நிலையில், ராமர் பாலம் இந்துக்களுக்குப் புனிதமானது என்ற பார்ப்பன மூடநம்பிக்கையை முன்னிறுத்தி இந்தத் திட்டத்தை முடக்கிப் போட்டது, ஆர்.எஸ்.எஸ். பரிவாரம்.

ஜெயாவின் காழ்ப்புணர்ச்சியைவிட, பார்ப்பனக் கும்பலின் மூடநம்பிக்கையைவிட, மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமானதில்லையா?

___________________________________________________________________

இந்த தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதுதான் சென்னை  மதுரை நான்கு வழி விரைவுச் சாலை. இந்த சாலையால் தமிழகம் அடைந்த வளர்ச்சி என்ன? ஐந்து, பத்து கிலோமீட்டருக்கு ஒன்று என கும்பகோணம் டிகிரி காபி கடைகளையும், வசந்த பவன், ஆரிய பவன் ஹோட்டல்களையும் தாண்டி இந்தச் சாலை நெடுகிலும் தொழிற்சாலைகள் உருவாவதற்கான அறிகுறிகள் இப்பொழுதுகூடத் தென்படவில்லை. டோல்கேட், மோட்டல்களின் அடாவடித்தனமான கொள்ளைதான் நாம் கண்டுணர்ந்த ஒரே வளர்ச்சி.

இந்தியா எட்டு சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கொண்டுவரப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டமே தோற்றுப்போய்விட்ட நிலையில், இந்தியப் பொருளாதாரம் குப்புறவீழ்ந்து கிடக்கும் நிலையில் மோடியால் கொண்டுவரப்படும் பாரத்மாலா திட்டம் யாருக்குப் பலன் அளிக்கும்?

இரும்புக் கம்பிகள், சிமெண்ட் ஆலைகள், எல் அண்ட் டி, காமன் போன்ற சிவில் காண்டிராக்டு கம்பெனிகள், தமிழக நெடுஞ்சாலைத் துறையைக் குத்தகைக்கு எடுத்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியும் சம்பந்தியுமான ராமலிங்கத்தின் கம்பெனி, எடப்பாடியை நத்திப் பிழைக்கும் அ.தி.மு.க. மற்றும் பல்வேறு ஓட்டுக்கட்சிகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ஆகியோருக்கு இந்தத் திட்டத்தால் உடனடிப் பலன் கிடைக்கும். சாலை அமைந்தால் டோல்கேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் பேருந்து முதலாளிகளின் கொள்ளைக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனைத் தாண்டி வேறெந்த அதிசயமும் மாயமும் நடந்துவிடாது.

  • ரஹீம்

________________________ துணைக் கட்டுரை _________________________

அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற செக்குமாட்டுப் பாதை!

மோடி ஷா கும்பல் வளர்ச்சியைக் கொண்டுவரப் போவதாகக் கூறி ஊதிவிட்ட அனைத்து நீர்க்குமிழிகளும்  மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா  கருவான வேகத்திலேயே ஊனமாகிப் படுத்துவிட்டன. எட்டு சதவீத வளர்ச்சியைக்கூட எட்டிப் பிடிக்க முடியாமல், சாண் ஏறினால் முழம் வழுக்கும் கதையாக இந்தியப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற பா.ஜ.க.வின் சவடால் வாக்குறுதி, அதற்கு நேர் எதிர்திசையில் பயணம் செய்து, ஏற்கெனவே இருந்துவரும் வேலைவாய்ப்புகளையும் காலி செய்துகொண்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில் ஏதாவது செப்படி வித்தை செய்து, தன்னை வளர்ச்சியின் நாயகனாக முன்னிறுத்திக் கொள்ளவும், கேந்திரமான தொழில் துறைகளுக்கு அரசுப் பணத்தில் உயிர்த் தண்ணீர் ஊற்றவும்தான், புல்லட் ரயில் திட்டம், பாரத்மாலா திட்டம், சாகர்மாலா திட்டம் ஆகிய மெகா திட்டங்கள் அடுத்தடுத்து மோடி அரசால் அறிவிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டங்களின் சாத்தியப்பாடு என்ன, இந்தத் திட்டங்களைச் சுற்றிக் கூறப்படும் தொழில் வளர்ச்சி சாத்தியம்தானா என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இத்தகைய ஜிகினா திட்டங்களைத் தாண்டி ஆளுங்கும்பலிடம் மக்களின் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான திட்டங்கள் வேறு இல்லை என்பதுதான் உண்மை.

தனியார்மயம் தொடங்கிய காலத்திலிருந்தே அடிக்கட்டுமானத் துறையில் அரசு முதலீடு செய்தால்தான், தனியார் முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற கோட்பாட்டை முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் திரும்பத்திரும்பக் கூறி வருகின்றனர். நரசிம்ம ராவ் தொடங்கி மோடி வரையிலான அனைத்துக் கட்சி பிரதமர்களும் இந்தச் செக்குமாட்டுப் பாதையில்தான் பயணம் செய்தனர், பயணம் செய்கின்றனர்.

வாஜ்பாயி தங்க நாற்கர சாலை திட்டத்தை அறிவித்தார். மன்மோகன் சிங் கனிம வளத் துறையைத் தனியாருக்குத் திறந்துவிட்டு, அதில் முதலீடு செய்ய வங்கி கஜானாவைத் திறந்துவைத்தார். இப்பொழுது, மோடி, தன் பங்குக்கு கிட்டதட்ட 15 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான மூன்று மெகா திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

இந்தச் செக்குமாட்டுப் பாதை இந்தியப் பொருளாதாரத்தில், சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அபகரித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்து, விவசாயிகளை நகர்ப்புறத்திற்கு வேலை தேடி அகதிகளாகத் துரத்தியடித்தது. இரும்பு, நிலக்கரி, அலைக்கற்றை உள்ளிட்ட தாது மற்றும் இயற்கை வளங்கள் அடிமாட்டு விலைக்கு இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கப்பட்டன. சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் துறைக்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் வாராக் கடனில் மூழ்கி, திவால் நிலைக்குத் தள்ளப்பட்டன. பெல்லாரி சகோதரர்களின் இரும்புத் தாது ஊழல், அம்பானியின் கிருஷ்ணா பெட்ரோலியப் படுகை ஊழல், நிலக்கரி ஊழல் என மெகா ஊழல்கள் பிறப்பதற்கு வழிவகுத்து, அம்பானி, அதானி போன்ற சில ஒட்டுண்ணி முதலாளிகளை உலகக் கோடீசுவரர்களாக ஆக்கியிருக்கிறது. 

இதைப் போன்றே சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டமும் ஒட்டுண்ணி முதலாளித்துவக் கும்பலுக்குக் கொழுத்த இலாபத்தை வாரி வழங்கப் போவதைத் தாண்டி வேறெந்த வளர்ச்சியையும் கொண்டுவந்துவிடாது.

இந்த எட்டுவழிச் சாலைத் திட்டமே, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கவுத்தி மலை  வேடியப்பன் மலைப் பகுதியில் புதைந்துள்ள இரும்புத் தாதுவை வெட்டியெடுத்து, அதனை சென்னை துறைமுகத்திற்கு விரைந்து எடுத்துவரும் நோக்கில் அமைக்கப்படுகிறதென்றும், ஜிண்டால் என்ற தனியார் முதலாளியின் நலனும் இலாபமும் இதன் பின்னே மறைந்துள்ளதென்றும் பலரும் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர்.

அ.தி.மு.க. அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும், சாலை வடிவமைப்பு இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலையை அடுத்த சாலையனூர், சேத்பட் ஆகிய இடங்களில் இணைப்புச் சாலைகளை அமைப்பதற்காக 239 ஹெக்டர் நிலங்களைக் கையகப்படுத்தவுள்ளனர்.   இவற்றுள்  சாலையனூர் இணைப்பு சாலையுடன் நாயுடுமங்கலம் வழியாக இனாம்காரியந்தல் வரை தனிச்சாலை அமைக்கும் திட்டமும் உள்ளது. இனாம்காரியந்தல் கிராமம் எல்லையில்தான் இரும்புத் தாதுக்களை கொண்டுள்ள கவுத்தி மலை  வேடியப்பன் மலை இருக்கிறது.

ஜிண்டால் உள்ளிட்ட சில பனியா முதலாளிகளின் இலாபத்திற்காக ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரம் அதிகாரத்தின் துணையோடு பறிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைத் துடிதுடிக்கக் கொன்ற கும்பல், மேற்கு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைச் சிறுகச்சிறுகக் கொல்லத் துணிந்திருக்கிறது. இதன் பெயர் வளர்ச்சியா, வன்முறையா?

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

50

திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, வயது 28. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவர் கார்த்திகேயன் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கிருத்திகா இரண்டாவது முறையாக கருவுற்றுள்ளார். தமிழகத்தில் சமீபமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்சப் போன்ற ஊடகங்களில் பரவி வரும் ’இயற்கை வாழ்வியல்’ குறித்து இத்தம்பதியினருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது.

திருப்பூர் கிருத்திகா மரணம்
கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர்

இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், தனது மனைவிக்கு இயற்கையான முறையில் மருத்துவ உதவி இன்றி வீட்டிலேயே சுக பிரசவம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். தனது மனைவிக்கு மட்டுமின்றி தனக்குத் தெரிந்த வேறு சிலருக்கும் வீட்டிலேயே இயற்கை முறையில் சுக பிரசவம் மேற்கொள்ள தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். கிருத்திகாவுக்கும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் செய்து கொள்ள தான் உதவுவதாக முன்வந்துள்ளார். ஏற்கனவே ’இயற்கை’ முறைகளின் மேல் ஆர்வம் கொண்ட கார்த்திகேயனுக்கு அவரது நண்பரின் ஆலோசனைகள் ஆர்வமேற்படுத்தியுள்ளன. அதைத் தொடர்ந்து தாங்களும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக  கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் ஏராளமான வீடியோக்களைப் பார்த்து தங்களைத் ‘தயார்படுத்தி’க் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் தங்களது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது உடனடியாக கார்த்திகேயன் தனது நண்பரான பிரவீன் – லாவண்யா தம்பதியரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு கார்த்திகேயன், அவரின் தாயார் காந்திமதி மற்றும் பிரவீன் – லாவண்யா தம்பதி சேர்ந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த கிருத்திகாவுக்கு நஞ்சுக் கொடி வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு நிமிடங்களில் கிருத்திகா மயக்கமடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார்.

இது போன்ற கோமாளித்தனங்கள் திருப்பூருக்குப் புதிதல்ல. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருப்பூர் முத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்கிற ’இயற்கை’ ஆர்வக்கோளாறு நபர் இதே போல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். தற்செயலாக அந்தப் பிரசவத்தில் தாய்க்கும் சேய்க்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், இவ்வாறு பிரசவம் நடந்துள்ளதை அறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சதீசின் வீட்டிற்குச் சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட முயற்சித்துள்ளனர். இதற்கு சதீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், மருத்துவர்கள் அவரது குடும்பத்திற்கு எடுத்துச் சொல்லி தடுப்பூசி போட்டுச் சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கினர் ஹீலர் பாஸ்கரும் பாரி சாலனும். ஆங்கில மருத்துவ சதி, அமெரிக்க சதி போன்ற இத்தியாதிகளோடு இரண்டு அவுன்ஸ் இலுமினாட்டி சதியையும் போட்டுக் குலுக்கி இருவரும் வீடியோக்களை வெளியிட்டனர். நவீன அலோபதி மருத்துவமே கொடூர வில்லன் போலச் சித்தரித்த இவர்கள், குழந்தை பெற்றுக் கொள்வதும், அதை எப்படிப் பெற்றுக் கொள்வது, எப்படி வளர்ப்பது என்றெல்லாம் தீர்மானிப்பதும் தனிமனித சுதந்திரம் என வியாக்கியானம் செய்திருந்தனர்.

தற்போது அந்த ‘தனிமனித சுதந்திரம்’ கிருத்திகா என்கிற பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது. அறிவியலுக்கு முரணான வழியில் மக்களுக்கு வழிகாட்டியதற்கும் அதன் மூலம் ஒரு உயிரைப் பறித்ததற்கும் இவ்விரு முட்டாள்களின் மேலும் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஒரு புது விதமான ’டிரெண்ட்’ தற்போது பரவி வருகிறது. சாதி அடிப்படையிலான தமிழ் தேசியம், கொஞ்சம் நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, சிறுதானிய உணவு, பழந்தமிழர் பண்பாட்டு பகுமானங்கள், அறைகுறையான சூழலியல் புரிதல், குலப்பட்டம் மற்றும் குலதெய்வம், பழைய நிலபிரபுத்துவ குடும்ப உறவுகளைப் புனிதப்படுத்தல் (தாய்மாமன் சடங்கு இத்தியாதி), பசுமை விகடன்.. என்கிற இந்த களேபரமான கூட்டணியோடு இலுமினாட்டி சதி மற்றும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையும் கை மருத்துவத்தின் மீதான காதலும் சேர்த்து மொத்தமாக டப்பாவில் போட்டு குலுக்கி யூ-டியூப் வீடியோக்களாக இறக்குகின்றனர்.

https://www.youtube.com/watch?v=qDONFQwwveI

இந்த மோஸ்தரில் ஹீலர் பாஸ்கர் முதலில் ’பிரபலமானார்’; அடுத்து பாரி சாலன். நவீன மருத்துவம் கார்ப்பரேட்மயமாகவும் ஏகபோகமாகவும் மாறி வருவது; இதன் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அது எட்டாக்கனி ஆகி வருவது ஒருபுறமும், நவீன சமூகத்தில் உருவாகும் புதுப்புது வியாதிகள் இன்னொரு புறமும் மக்களை அச்சுறுத்துகின்றன. இது உண்மையின் ஒரு பகுதி – இதே உண்மையின் இன்னொரு பகுதி நவீன மருத்துவமே விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பதாகும். ஆனால், இலுமினாட்டி பிரச்சாரகர்கள் உண்மையின் முதற்பகுதியை மட்டும் கத்தரித்து எடுத்துக் கொண்டு அதனோடு சதிக் கோட்பாடுகளைக் கலந்து கடை விரிக்கும் போது படித்த இளைஞர்களே கூட அதற்கு பலியாகிப் போகின்றனர்.

இந்த சிக்கலுக்குத் தீர்வு அரசின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையாகவும், அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவத்திலேயே இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யப் போராடுவது என்பதாகவும்தான் இருக்க வேண்டும். மாறாக, மக்களை விஞ்ஞானமல்லாத மருத்துவ முறைகளுக்குள் நெட்டித் தள்ளி சாகடிப்பது தீர்வல்ல. பாரி – ஹீலர் வகையறாக்கள் இதில் இரண்டாவதைச் செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாவதற்கு எதிராக மக்கள் போராடுவதைத் தடுத்து மடைமாற்றி அவ்வாறு கார்ப்பரேட்மயமாகும் போக்கை நிலைநிறுத்த துணை போகின்றனர். இப்படி மக்களை சுடுகாட்டுக்கு அனுப்பும் பாதைக்கு ‘தற்சார்பு’ பொருளாதார முறை என்கிற அலட்டலான பெயரையும் சூட்டியுள்ளனர்.

அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் – பாரி வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. ஆனால் அவர்கள் சொல்லும் வாழ்வியல் நடைமுறையில் இறங்குவதற்கு ஒரு விதமான முரட்டு முட்டாள்தனம் தேவை. அவ்வாறானவர்கள் கொங்கு பகுதியில் கணிசமாக இருக்கிறார்கள் என்பதையே கிருத்திகாவின் மரணம் உணர்த்தியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் பாரி சாலனும் ஹீலர் பாஸ்கருமே கூட கோவையைச் சேர்ந்தவர்கள் தாம். கோவையைச் சுற்றி அனேகமாக இந்தியாவில் உள்ள அனைத்து கார்ப்பரேட் சாமியார்களுக்கும் கிளைகள் உண்டு. ஜக்கி, அமிர்தானந்தமயி, மனவளக் கலை வேதாத்ரி போன்றோரின் தலைமையகமே கோவைதான்.

திருப்பூர் கிருத்திகா மரணம்
பித்தலாட்ட ஹீலரும், பாரிசாலனும்

மூட நம்பிக்கைகளுக்கு கொங்கு பகுதியில் ஒரு கொழுத்த சந்தை உண்டு. அது அ.தி.மு.க / பா.ஜ.க ஆதரவு மனநிலையாகட்டும், ஈமு கோழி வகை ரெண்டாம் நம்பர் பிசினஸ் ஆகட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் ஆகட்டும், இயற்கை வாழ்வியல் ஆர்வக்கோளாறுகள் ஆகட்டும், அனைத்தையும் பரிசோதித்துப் பார்க்க தயாராக இருக்கும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினர் கோவையில் அதிகம். மிகப் பிற்போக்கான  நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் திடீர் பணக்காரர்கள் நிறைந்த பகுதி என்பதால் ஹீலர் வகையறாக்கள் கடை விரிக்க ஏதுவாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களின் மூலம் இவ்வாறான அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகளையும், சதிக் கோட்பாடுகளையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுக்காது. ஏனெனில், மக்கள் அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பது ஆளும் வர்க்கத்துக்கு ஆதாயமானதுதானே. கிருத்திகாவைப் போன்ற ஓரிரு உயிர்கள் அதற்காக கொடுக்கத்தக்க விலை என்பதே ஆளும் வர்க்கத்தின் கணக்காக இருக்க முடியும். எனவே ஹீலர் வகையறாக்களை ஒரு கட்டம் வரை வளர அனுமதிப்பார்கள்; தங்களாலேயே தாங்க முடியாத நியூசென்ஸ் கேசாக மாறும்வரை விட்டு வைத்து விட்டு, தங்கள் மார்பிலேயே பாயும்போது நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்தியாவிலேயே குழந்தை இறப்பு தடுப்பு விகிதத்தில் கேரளத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருப்பதும், இங்கு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினை நாட்டிலேயே குறைவாக இருப்பதும் நவீன மருத்துவத்தால்தான் சாத்தியாமானதே தவிர பாட்டி வைத்தியத்தால் அல்ல. மக்கள் இதை உணர்ந்து கொண்டு அறிவியலுக்குப் புறம்பான வைத்திய முறைகளையும், அதை முன்வைக்கும் அறிவுக்குப் பொருந்தாத இலுமினாட்டி சதிக் கோட்பாடுகளையும் புறம் தள்ளுவதோடு நவீன மருத்துவம் எல்லோருக்கும் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு மருத்துவமனை கட்டமைப்பு மக்களுக்கானதாக நீடிக்கவும் போராட முன்வர வேண்டும்.

– சாக்கியன்

பாகம் 2: பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?

2

சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குதான் ஜூலை 18-ம் நாளின் பிரதான செய்தி. சமூக ஊடகங்களில் கோபமும் பயமும் வழிந்தோடுகிறது. வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அடித்து வெளுத்திருக்கிறார்கள். அவர்களுக்காக வாதாட முடியாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது (இது ஒரு குழந்தைத்தனமான நாடகம்). பாலியல் குற்றங்கள் மீதான இந்த திடீர் உணர்வெழுச்சி பல தருணங்களில் உருப்படியான பலன்களைக் கொடுப்பதில்லை. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நாம் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோமே தவிர ஒரு சிக்கலின் காரணிகள் மற்றும் அதன் தீவிரத்தன்மை பற்றியும் அக்கறையின்றி இருக்கின்றோம்.

  • இந்த பாதகத்தை செய்தவனின் குறியை அறுப்போம், விசாரணை ஏதுமின்றி என்கவுண்டர் செய்யலாம் என்பதாக பலர் கொந்தளிக்கிறார்கள்.
  • பெண் குழந்தைகளுக்கு ’குட் டச், பேட் டச் ‘ கற்றுக்கொடுங்கள் என்கிறார்கள் சிலர்.
  • ஆண் குழந்தைகளை ஒழுங்காக வளருங்கள், பெண் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் என எழுதுகிறார் ஒருவர்.

ஏராளமான உளவியல் கண்ணோட்டங்கள் சுற்றுக்கு விடப்பட்டு, அவை சலிக்க சலிக்க விவாதிக்கப்பட்டாயிற்று (ஆனால், அவை எல்லாம் ஒரு நாள் மட்டுமே நீடித்தன). எனவே இந்த செய்தியை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு இதோடு தொடர்புடைய வேறொரு (கவனிக்கப்படாத) செய்தியை விவாதிக்கலாம்.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் 150 பேரிடம் எடுக்கப்பட்ட தரவுகளின் படி அவர்களில் மூவரைத் தவிர ஏனையோர் யூடியூப் செயலியை பாவிக்கிறார்கள். அவர்களில் பலர் எதேச்சையாக பெரியவர்களுக்கான (18+) வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள் என்பதை தனிப்பட்ட உரையாடல்கள் மூலம் அறிய முடிகிறது (பள்ளி ஆற்றுப்படுத்துனர்களின் பணியிட தரவுகள் மூலம் பெறப்பட்ட செய்தி, மேலதிக தகவல்கள் தருவதற்கில்லை).

செல்பேசிகளில் யூடியூப் செயலியை நீக்கிவிட்டு யூடியூப் கிட்ஸ் செயலியை மட்டுமே நிறுவுமாறு நாங்கள் பெற்றோரை இப்போது வலியுறுத்துகிறோம்.

எட்டாம் வகுப்பில் காதல் எனும் வார்த்தை மிக சகஜமாக புழங்குகிறது. வகுப்பறையில் மாணவர்களிடையேயான முக்கியமான பேசுபொருளாக அது இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் தனக்கென ஒரு காதலரையோ அல்லது காதலியையோ (எதிர் தரப்பு ஏற்றுக்கொள்ளாமல் வெறும் விருப்பமாக கொண்டிருப்போர் உட்பட) கொண்டிருக்கிறார்கள். இதற்கான எச்சரிக்கைகள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தரப்படுவது பள்ளிகளில் சகஜமாக இருக்கிறது.

இருபாலரும் பயிலும் பள்ளிகளில் 7 – 10-ம் வகுப்புக்களில் மாணவிகள் விகிதம் ஆரம்பப்பள்ளி எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் எப்போதுமே குறைவாக இருக்கும். பெண் பிள்ளைகளை 5ஆம் வகுப்போடு பெண்கள் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றிவிடுகிறார்கள். அதற்கு பள்ளிகளில் உள்ள காதல் பிரச்சினை மீதான அச்சமும் ஒரு காரணம்

பாலியல் குற்றங்கள்
ஒரு பதின்மூன்று வயது மாணவி, 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருக்கிறாள். அதை விட மோசமான விசயம் என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார்

பதின்மூன்று வயது மாணவி ஒருவரது டைரியை வாசித்தபோது, அதில் 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ஒன்று வகுப்பறையில், இன்னொன்று அவரது நெருங்கிய உறவுக்காரரால் நடந்திருக்கிறது. சம்பவங்களைவிட மோசமான செய்தி என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண டிராஃபிக் விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார். (மாணவி வேறொரு பிரச்சினைக்காக ஆற்றுப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். டைரி அவரது ஒப்புதலோடு பெறப்பட்டது – சமயங்களில் கவுன்சிலிங் செயல்பாடுகளுக்கு டைரி உதவிகரமாக இருக்கும்)

இவை இருபாலரும் பயிலும் பள்ளிகளுக்கான பிரச்சினை மட்டும் என்று சமாதானமடைய வேண்டாம். ஆண்கள் பள்ளிகளில் ஹோமோ செக்ஷுவாலிட்டி ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை. பெண்கள் பள்ளியொன்றில் “ஃபிகர்” என்றொரு நடைமுறை இருக்கிறது. கீழ் வகுப்பு (6, 7 & 8) மாணவிகள் மேல் வகுப்பு மாணவிகளில் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து நீ எனது “ஃபிகராக” இருப்பாயா என கேட்பார். அவர் ஒப்புக்கொண்டால் இருவரும் முத்தமிட்டுக்கொண்டு பிரத்தியேக நண்பர்களாக தொடர்வார்கள் (இதில் அச்சமடைய ஒன்றுமில்லை. இது ஒரு வட்டாரத்தில் இருக்கும் கலாச்சார நடைமுறை என கருத எல்லா நியாயமும் இருக்கிறது. சாமியாடுவது, அன்னியபாஷை பேசுவது போன்ற ஆன்மீக கலாச்சாரங்களைப் போல).

ஹோமோ செக்‌ஷுவாலிட்டி ராணுவம் மற்றும் கப்பல் பணிகளில் சகஜம். அவர்களில் பலர் ”இயல்பு” வாழ்க்கைக்கு வந்த பிறகு அப்பழக்கத்தை தொடர்வதில்லை. இது பாலியல் நாட்டத்துக்கான வடிகாலாகவும் ஒருவரால் பயன்படுத்தப்படலாம்

இவை எல்லாம் உங்களை அச்சுறுத்துவதற்காக சொல்லப்படுபவை அல்ல. உங்கள் பார்வை எல்லைக்கு வெளியே உள்ள சிறார்கள் உலகத்தில் பாலுறவு பற்றிய அவர்களது ஆர்வமும், பல வெரைட்டிகளில் கிடைக்கும் போர்ன் வீடியோக்களும் பெருமளவு பாதகங்களை செய்துகொண்டிருக்கின்றன. பதின்பருவத்தின் துவக்கத்தில் பாலியல் ஆர்வம் என்பது மிக இயல்பானது. ஆனால் இன்றைய மாணவர்களுக்கு இருக்கும் நேர நெருக்கடியும் குறைவான விளையாட்டு வாய்ப்புக்களும் அவர்களது இயல்பான பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

விளையாட்டில் ஈடுபடவும் ஏனைய பொது விசயங்களை பேசவும் நேரம் இருக்கையில் அவர்களுடைய பாலியல் நாட்டம் மட்டுப்பட வாய்ப்புண்டு. அவை இல்லாதபோது உள்ளார்ந்த விருப்பமான பாலுறவு ஆர்வமும் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும் போர்ன் வீடியோக்களும் மாணவர்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன.

எல்லா மாணவர்களும் போர்ன் வீடியோ அடிமையாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஆனால் வகுப்பறைகளில் பாலுறவு என்பது பேசுபொருளாகும்போது போர்ன் வீடியோ ஆர்வம் மற்றவர்களுக்கு பரவுகிறது. சுய இன்பம் மற்றும் ஆபாசப்படம் பார்க்கும் நாட்டம் ஆகியவற்றின் மீதான குற்ற உணர்வு கொண்ட பல மாணவர்களை பள்ளி ஆற்றுப்படுத்துனர்கள் எதிர்கொள்ள நேர்கிறது.

சமூக வலைதளங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் எந்தவித அச்சமோ தயக்கமோ இல்லாமல் தங்கள் காதலை பகிரங்கப்படுத்துகிறார்கள். நெருக்கமானவர்களுக்கு மட்டுமேயான செய்தி எது எல்லோருக்கும் பகிரங்கப்படுத்த வேண்டிய செய்தி எது என்பதை பிரித்துப் பார்க்க அவர்களுக்கு தெரியவில்லை. இன்ஸ்டாகிராம் ஒரு பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஆற்றுப்படுத்துனர்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றன.

இவை வெறுமனே நகர்ப்புறப் பள்ளிகளில் மட்டும் இருக்கும் பிரச்சினை என கருதவேண்டாம். கிராமப்பகுதி பள்ளிகளிலும் இதனையொத்த பிரச்சினைகள் இருக்கின்றன (இதில் முழுமையான தரவுகள் தரும் ஆட்கள் என் தொடர்பு வட்டத்தில் இல்லை). பாடம் நடத்தும்போது தமது அவயங்கள் குறித்து அசிங்கமாக மாணவர்கள் கிண்டலடிக்கிறார்கள் என்றார் ஒரு பெண் ஆசிரியர், அவர் குறிப்பிட்டது ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலரைப்பற்றி என்பது அவரது குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை உணர்த்தும்.

பாலியல் குற்றங்கள்
பல்வேறு திரைப்படங்களிலும் பெண் ஆசிரியர்கள் ஆபாசப் பண்டமாகவே காட்டப்படுகிறார்கள்.

சிதறலாக கிடைக்கும் இப்படியான பல்வேறு தரவுகளை ஒருங்கிணைத்து பார்க்கையில் அவை பெரிதும் கவலையுற வைக்கிறது. இவற்றை கையாள்வது என்பது ஆசிரியர் மற்றும் ஆற்றுப்படுத்துனரின் சக்திக்கு அப்பாற்பட்டவை என்றாலும் கவலைக்குரிய விடயம் அதுவல்ல.

பள்ளிகளில் இருக்கும் இத்தகைய பிரச்சினை குறித்த எந்த தரவுகளும் நம்மிடம் இல்லை (ஒருகோடி பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்).

அப்படியான தரவுகளை திரட்டுவதற்கான எந்த அமைப்பும் வழிகாட்டும் நெறிமுறைகளும் நம்மிடம் இல்லை. பள்ளிகளில் ஆற்றுப்படுத்துனர்கள் இருக்க வேண்டும் எனும் உயர்நீதிமன்ற உத்தரவு பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறது.

மாணவர்கள் பேசவும் செயல்படவும் மிகக் குறைவான வாய்ப்புக்களே அவர்கள் வசம் இருக்கின்றன. அதிலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் உழல வேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண அரட்டைக்குரிய நேரமும் விசயங்களும் குறைவாக இருப்பதால் கிடைக்கும் அவகாசங்களில் அவர்களுக்கான பேசுபொருளாக சினிமாவும் காதலும் செக்ஸுமே இருக்கின்றது (இருபாலரிலும்).  எண்ணிக்கையிலோ அல்லது சதவிகிதத்திலோ சொல்ல இயலாது. ஆனால் குறிப்பிடத்தக்க அளவிலான மாணவர்களுக்கு இது பொருந்தும். இவர்களில் சிலரை எளிதாக பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ளவும், பாலியல் குற்றங்களுக்கு கூட்டு சேர்த்துக்கொள்ளவும் முடியும்.

பாலியல்சார் நடத்தை சிக்கல்களை கொண்டிருக்கின்ற அல்லது பள்ளியில் காதல்வயப்படுகின்ற மாணவர்களை பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் முரட்டுத்தனமாக கையாள்கிறார்கள் (பள்ளியை மாற்றுவது மற்றும் கடும் தண்டனைகள் கொடுப்பது). இவ்வகையாக சிக்கல்களை கையாள்வது குறித்த தேர்ச்சி, கல்வித்துறையின் அதிகார அடுக்கில் அனேகமாக எங்கேயும் இல்லை.

இத்தகைய விவகாரங்களில், மூடி மறைக்கும் வேலையையே பள்ளிகளும் பெற்றோர்களும் செய்ய முற்படுகிறார்கள்.

பாலியல் குற்றங்கள்
குழந்தைகளை பாதிக்கின்ற விசயங்கள் மிக இயல்பாக நடந்தேறுகின்ற நாட்டில் “குட் டச், பேட் டச்” சொல்லித் தருவது மட்டும் பிரச்சினையை தீர்த்துவிடப் போதுமானதா ?

இன்னும் பத்தாண்டுகளில் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை செலுத்தப்போகிற இன்றைய மாணவர்கள் மீது நாம் கொஞ்சமும் அக்கறையற்று இருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு துலக்கமான உதாரணம். இதில் மேற்குறிப்பிட்ட சில தடங்கல்கள் நிலைமையை இன்னும் சிக்கலாக்குகின்றன. இவற்றால் நாம் இத்தகைய சிக்கல்களை முன்கூட்டியே தடுக்கவும் வந்த பின்பு சரிசெய்யவும் உள்ள சாத்தியங்களை இழக்கின்றோம். இதன் பின்விளைவுகளை நம்மால் அனுமானிக்கக்கூட முடியாது என்பதே நிதர்சனம்.

ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வுக்கு அதீதமாக கொந்தளித்து பிறகு களைத்துப்போய் அடுத்த அதிர்ச்சிவரை காத்திருப்பதே நமது செயல்பாடாக இருக்கிறது. இந்த இயல்பினால் பல சிக்கல்களை நம்மால் அடையாளம் காண முடியாமல் போகிறது (குறிப்பாக மாணவர் தொடர்பான விவகாரங்களில்). இதற்கு தீர்வு சொல்வது கட்டுரையின் நோக்கம் அல்ல, அது ஒரு சாமானியனால் ஆகும் காரியமும் அல்ல. ஆனால் இங்கே குறிப்பிட விரும்புகிற செய்தி, ஒரு மாணவியின் துயரத்துக்கு இவ்வளவு தூரம் ஆவேசம் கொள்கிற நம் நாட்டில்தான் பெருந்தொகையான மாணவர்களை பாதிக்கின்ற விசயங்கள் மிக இயல்பாக நடந்தேறுகின்றன. இதற்கான பரிந்துரைகள் தருமளவுக்கு எனக்கு ஞானமில்லை, ஆனால் நாம் இத்தகைய சிக்கல்களை சரிசெய்வதற்கான காலத்தை இழந்துகொண்டிருக்கிறோம் என எச்சரிக்கும் அளவுக்கு அனுபவம் இருக்கிறது. பதிவின் நோக்கமும் அதுதான்.

– வில்லவன் இராமதாஸ்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

ஊடகங்களை மிரட்டுகிறது காவிக் கும்பல் – குரல் பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் !

புதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்

’மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை எனினும், அவர் அதற்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், ‘அவரை பணி நீக்கம் செய்யும் வரையிலும் விடப்போவதில்லை’ என்று மிரட்டுகிறது இந்த காவிக் கும்பல்.

மிரட்டுகிறது காவிக் கும்பல்
புதிய தலைமுறை கார்த்திகேயன்

வளர்த்துவிட்ட நச்சுப்பாம்பு தன்னையே கொத்த வருகிறது என்பதை இப்போதேனும் தமிழ் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அமைப்பு பலமோ, மக்கள் செல்வாக்கோ துளியும் இல்லாத, வெறும் வாய்ச்சவடால் கும்பலான பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் பரபரப்பு செய்தியில் இடம்பெறும் வகையில் பராமரித்தவர்கள் இந்த 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள்தான். தலைப்புக்கு தொடர்பு இருந்தாலும், இல்லை என்றாலும் பா.ஜ.க. சார்பாக ஒருவரை அழைத்து வந்து விவாத நிகழ்ச்சிகளில் கத்தவிடும் கலாசாரத்தை வளர்த்து எடுத்தவர்கள் இவர்கள்.

தெரிந்தே பொய் சொல்வது, பொய் அம்பலப்படும்போது கூச்சமே இல்லாமல் கூச்சலிடுவது, சரக்கே இல்லாமல் சர்வரோக நிவாரணியாக அனைத்துப் பிரச்னைகளிலும் அடித்துவிடுவது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘நீ மட்டும் யோக்கியமா?’ என திசைதிருப்பல் கேள்விகளில் தந்திரமாக ஒளிந்துகொள்வது.. – இவைதான் பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்களின் தகுதிகள். இருந்தும் இவர்களை விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பாரதிய ஜனதா கட்சி என்ற செத்துப்போன பாம்புக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றும் வேலையை செய்து வந்தன ஊடகங்கள். இப்போது அந்த பாம்புகள் கொத்த தொடங்கியிருக்கின்றன.

பார்ப்பனக் கொழுப்பு வழியும் எஸ்.வி. சேகர்

இது கார்த்திகேயன் விவகாரத்தில் தொடங்கவில்லை. ஏற்கெனவே இதே புதிய தலைமுறையில் தீபாவளி தொடர்பான ஒரு விவாதத்திலும் வேண்டும் என்றே சர்ச்சை கிளப்பினார்கள். தாலி தொடர்பான ஒரு விவாதத்தில் புதிய தலைமுறை மீது டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீசினார்கள். நியூஸ் 7 விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பா.ஜ.க-வை சேர்ந்த எஸ்.வி.சேகர், ’நியூஸ் 7 விவாதங்களுக்கு வே.மதிமாறனை அழைக்கக்கூடாது’ என நியூஸ் 7 உரிமையாளர் வைகுண்டராஜனுக்கே போன் போட்டு பேசினார். அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

தினமணியில் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்கு, தமிழக பார்ப்பனக் கும்பல் தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் பல போராட்டங்களை நடத்தியது. தமிழ் இதழியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், வைரமுத்து எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் திருவில்லிபுத்தூருக்கே நேரில் சென்று மன்னிப்புக் கேட்டார். திருப்பதி நாராயணன் போன்ற பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்கள் ஸ்டுடியோவில் அமர்ந்துகொண்டு சக பங்கேற்பாளர்களையும், நெறியாளரையும் நேரடியாக மிரட்டுவதையும் பார்க்கிறோம். இது ஒரு லைவ் நிகழ்ச்சி; மக்கள் பார்க்கிறார்கள் என்ற அச்சமோ, பதற்றமோ இல்லாமல் இவர்கள் துணிந்து பொய் சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் கவுரி லங்கேஷையும், எம்.எம்.கல்புர்கியையும், மஹாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கரையும், கோவிந்த் பன்சாரேவையும் கொலை செய்த மரபு கொண்டவர்கள் இவர்கள். ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சித்தும், அந்தக் கட்சியின் பொய்களை அம்பலப்படுத்தியும், இந்த ஆட்சியின் அவலங்களை தோலுரித்தும் எழுதி வரும், இயங்கி வரும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்துவரும் இந்த கருத்துலக அடாவடியின் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவது தொடர்பான விவாதத்தில்தான் கார்த்திகேயன் அந்த கவிதையை மேற்கோள் காட்டினார். மாதவிடாய் நாட்கள் காரணமாகத்தான் பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றால், பெண் தெய்வங்களை என்ன செய்வீர்கள் என்ற அந்த கேள்வி மிக இயல்பானது; நியாயமானது. இதை பாரதிய ஜனதாவினர் எதிர்க்கும்போது, நியாயமாக, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுத்து வைத்திருக்கும் இந்து மதத்தின் அடிப்படை விவாதப் பொருளாக மாறியிருக்க வேண்டும். கோயிலின் கருவறைக்குள் சூத்திரர்கள் செல்லக்கூடாது; கோயில் வளாகத்துக்குள் தலித்துகள் செல்லக்கூடாது; கோயில் இருக்கும் பக்கமே பெண்கள் செல்லக்கூடாது என்ற இந்து மதத்தின் இழிவான படிநிலை அமைப்பு பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக காவிக்கும்பலின் மிரட்டலுக்கு பதில் சொல்வதாக மற்றவர்களின் பணி சுருங்கிவிட்டது.

மிரட்டுகிறது காவிக் கும்பல்
நம்மை தடுத்தாடும் ஆட்டத்திற்குத் தள்ளி விட்டு, அடித்து ஆடும் ஆட்டத்தை ஆடி வருகிறது பார்ப்பனக் கும்பல்

இந்த ’தடுப்பாட்ட’ எல்லைக்குள் நம்மை நிறுத்தி வைத்து காவிக்கும்பல் தாக்குதல் ஆட்டத்தை ஆடி வருகிறது. நாம் மீண்டும், மீண்டும் இவர்களுக்கு விளக்கம் சொல்வோராகவும், இவர்களின் பொய்களை அம்பலப்படுத்துவோராகவும் இருந்து வருகிறோம். அவர்கள் நம்மை மூச்சிரைக்க ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த வதந்தியை ஆற, அமர தயார் செய்கிறார்கள்.

‘கார்த்திகேயனை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற இந்த பச்சையான மிரட்டலை புதிய தலைமுறை நிர்வாகம் நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். முன் எப்போதும் அப்படி நடைபெறாததைப்போலவே இப்போதும் நடைபெறவில்லை. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்கள் நிர்வாகங்களால் கைவிடப்படும் தமிழ் இதழியலின் மரபு இப்போதும் தொடர்கிறது. இதன்மூலம், இனிமேல் ’அடக்கி வாசிக்கும்படி’ பத்திரிகையாளர்கள் நேரடியாகவும்; மறைமுகமாகவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த அவலமான சூழலில் நிறுவனம் என்ற குடையின் கீழ் அல்ல.. பத்திரிகையாளர்கள் என்ற பணியின் பொருட்டு நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த எதிர்ப்பு காவிக் கும்பலின் அடாவடிக்காக அல்ல… பத்திரிகையாளர் என்ற வேலையை மனசாட்சியுடன் செய்வதற்கே அவசியமானது.

நன்றி: குரல்

எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !

0
மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார் – 16
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

  1. உண்மையான போர் முழக்கத்தைத் தேடல்

…..நாம் ஒரு புதிய கொள்கையுடன், இதுதான் உண்மை, இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக் கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம். – கார்ல் மார்க்ஸ்(1)

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தை விரித்துரைப்பதை நோக்கி மார்க்ஸ் எந்த வழிகளில் முன்னேறினார்?

மார்க்ஸ் 1842-ம் வருடத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய கட்டுரைகளில் ஒன்றில் நாத்திகவாதம், பொருள்முதல்வாதம், மனிதாபிமானத்தின் அகத்தூண்டுதலான அறிவிப்பாளரான லுத்விக் ஃபாயர்பாஹை “நம் காலத்தின் பாவம் போக்குமிடம்”, சுதந்திரம் மற்றும் உண்மைக்குப் பாதையில் இருக்கின்ற “நெருப்பு ஆறு” என்று பிரகடனம் செய்தார்.(2)

அவர் “ஊக முறையில் சிந்திக்கின்ற இறையியலாளர்களுக்கும் தத்துவஞானிகளுக்கும்”, அதாவது இறையியலாளர்களுக்கும் கருத்துமுதல்வாதிகளுக்கும் பின்வரும் வேண்டுகோளை விடுத்தார்: “விஷயங்கள் யதார்த்தத்தில் மெய்யாக எப்படி இருக்கின்றன என்பதை நீங்கள் அறிய விரும்பினால் பழைய ஊக முறைத் தத்துவஞானத்தின் கருத்தமைப்புகள் மற்றும் தப்பெண்ணங்களிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.”(3)

லுத்விக் ஃபாயர்பாஹ்

லுட்விக் ஃபாயர்பாஹ் எழுதிய கிறிஸ்துவ சமயத்தின் சாராம்சம் என்ற நூலை மார்க்ஸ் 1841-ம் வருடத்தின் கோடைகாலத்தின் போது படித்தார். அந்தச் சமயத்தில் இளம் ஹெகலியவாதிகள் மீது இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தை எங்கெல்ஸ் அழகாக வர்ணித்துள்ளார். இளம் ஹெகலியவாதிகள் சிக்கிக் கொண்டிருந்த எல்லா முரண்பாடுகளையும் இந்நூல் “ஒரேயொரு அடியில்” ஒழித்து பொருள்முதல்வாதத்தின் வெற்றியை நேரடியாகப் பிரகடனம் செய்தது. “எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை. அதன் அடித்தளத்திலே தான் மனித இனத்தவராகிய நாம் – நாமும் இயற்கையின் உற்பத்திப் பொருட்கள்தாம் – வளர்ந்து வந்திருக்கிறோம். இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பாற்பட்டதாய் எதுவும் இல்லை.

நம்முடைய சமய வழிப்பட்ட கற்பனைகள் படைத்துள்ள கடவுளர்கள் எனப்பட்டவர்கள் நம் சாராம்சத்தின் விசித்திரமான பிரதிபலிப்பே ஆகும். மந்திரம் என்பது உடைத்தெறியப்பட்டது; ‘அமைப்புமுறை’ தகர்க்கப்பட்டு விட்டது; முரண்பாடு என்பது நம் கற்பனையில் மட்டுமே இருப்பது என்று காட்டப்பட்டுக் கலைக்கப்பட்டது. அறிவுக்கு விடுதலை அளிப்பது போன்ற இந்நூலின் பாதிப்பை அனுபவித்தவர்களுக்குத்தான் அதைக் கற்பனை செய்து பார்க்க முடியும். எங்கும் உற்சாகம் கரைபுரண்டோடியது: நாங்கள் அனைவரும் உடனே ஃபாயர்பாஹ் வாதிகளாகிவிட்டோம்.”(4)

இந்தப் பகுதியை எங்கெல்ஸ் உணர்ச்சியுடன் எழுதியிருக்கிறார். ஆனால் மார்க்ஸ் ஃபாயர்பாஹை ஒரு முறை படித்தவுடனே முன்னாள் கருத்துமுதல்வாதியும் இளம் ஹெகலியவாதியும் குட்டிக்கரணம் போட்டுப் பொருள் முதல்வாதியாகிவிட்டார் என்று சொல்கின்ற முறையில் மேற்கூறிய பகுதியை மார்க்சின் ஆன்மிக வளர்ச்சிக்கு மிகை எளிமையான முறையில் கையாளக் கூடாது.

மார்க்ஸ் தன்னுடைய இளமைப் பருவத்தில் கூட மிகவும் ஆழமான, சுதந்திரமான சிந்தனையாளராக இருந்தபடியால் அவருடைய அடிப்படையான தத்துவ நம்பிக்கைகளில் மாற்றத்தைத் திடீரென்று ஏற்பட்டதாகவோ அல்லது முற்றிலும் அந்நியத் தாக்கத்தினால் ஏற்பட்டதாகவோ கருதிவிட முடியாது.

மார்க்ஸ் பிறந்தார்புதிய கோட்பாடுகளை – அவை நம்பக் கூடிய விதத்திலும் அகத்தூண்டுதலான முறையிலும் விளக்கப்பட்டாலும் கூட – உடனடியாக நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற நபர்களில் மார்க்ஸ் ஒருவர் அல்ல. மெய்யான தத்துவ விஞ்ஞானியைப் போல அவர் “மற்றவர்களுடைய” நம்பிக்கைகளை இரவல் பெறவில்லை; தன்னுடைய சொந்த நம்பிக்கைகளைப் படைப்பதற்கு அவற்றை அடிப்படையாகப் பயன்படுத்தினார்.

அவர் ஒரு புதிய தத்துவக் கருத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தன்னுடைய விமர்சனச் சிந்தனை – அது அதனிடத்தும் இரக்கமில்லாதது – என்ற சோதனைக்கு உட்படுத்துவார். மேலும் புதிய கோட்பாடுகளைப் பழையவற்றோடு அப்படியே “சேர்த்துக் கொள்ளமாட்டார்”. திரட்டப்பட்ட மொத்த ஆன்மிகச் செல்வத்தையும் மறுமதிப்பீடு செய்வார். உலகக் கண்ணோட்டத்தின் மொத்த அமைப்பில் அவை தமக்குரிய இடத்தை அடைய வேண்டும். அவை முற்றிலும் “பொருந்தியிருக்க வேண்டும்” என்பதற்காக அமைப்பும் கோட்பாடுகளும் மறுபடியும் திருத்தியமைக்கப்படும்.

ஒவ்வொரு சிந்தனைச் சாயலுக்கும் – மிகவும் அற்பமானவற்றுக்கும் கூட – இத்தகைய அணுகுமுறை மார்க்சின் குறியடையாளமாக இருந்தது. எனவே அவருடைய தத்துவஞான நம்பிக்கைகளில் மிகவும் முக்கியமான திருப்புமுனையை மதிப்பீடு செய்கின்ற பொழுது இதை நினைவிலிறுத்துவது இன்னும் அவசியமானதாகும்.

மார்க்ஸ் பொருள்முதல்வாதத்தை அடைந்த பாதை எளிமையாக இருக்கவில்லை. அதில் தீர்மானமான பாத்திரத்தை வகித்தவர் ஃபாயர் பாஹ் மட்டுமே என்றும் கூறிவிட முடியாது. மார்க்ஸ் ஒரு நீண்ட, பல்தொகுதியான ஆன்மிக வளர்ச்சியின் மூலமாகவும் முற்காலத்திய அனைத்துத் தத்துவஞானக் கலாச்சாரத்தின் சாதனைகளையும் விமர்சன ரீதியாகத் தன்வயப்படுத்திக் கொள்வதன் மூலமாகவும் மதம் சார்ந்த உலகக் கண்ணோட்டத்துடன் போர் தொடுத்தும் ஹெகலின் கம்பீரமான அமைப்புடன் – முதலில் அதை நவீனப்படுத்துகின்ற நோக்கத்துடனும் பிறகு அதை முறியடிக்கின்ற நோக்கத்துடனும் – தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாகவும் பொருள்முதல்வாதத்தை நோக்கி முன்னேறினார்.

ஹெகலியத் தத்துவஞானத்தின் “ஊக இயல்புடன்” அதிருப்தி, தத்துவஞானத்துக்கும் “உலகத்துக்கும்” இடையில் இன்னும் நெருக்கமான இணைப்பைத் தேடல், தன்னுடைய நாத்திக நம்பிக்கைகளுக்கு முரணில்லாத் தத்துவ அடிப்படையைத் தேடல் – இவை அனைத்தும் ஏற்கெனவே டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் மார்க்ஸ் பொருள்முதல்வாதத்தை நோக்கித் தன்னுடைய கவனத்தைத் திருப்பும்படி செய்தன. எனினும் இங்கே பண்டைக்கால கிரேக்கப் பொருள்முதல்வாதத்திடம் அவர் காட்டிய அனுதாபம் இன்னும் தத்துவ ரீதியில் நிறுவப்படவில்லை.

ஃபாயர்பாஹ் எழுதிய கிறிஸ்துவ சமயத்தின் சாராம்சம் என்ற நூலும் மற்ற புத்தகங்களும் மார்க்சின் சிந்தனை ஏற்கெனவே முன்னேறிக் கொண்டிருந்த திசையில் கூடுதலான, வன்மையான தூண்டுதல்களாக இருந்தன என்பதில் ஐயமில்லை.

ஆனால் Rheinische Zeitung பத்திரிகையில் மார்க்சின் தீவிரமான கட்டுரைப் பணிகள், ஒடுக்கப்பட்ட மக்களைத் தீவிரமாக ஆதரிப்பவர் என்ற முறையில் அவர் மேற்கொண்ட நிலை, அரசியல் மற்றும் சமூக சக்திகள், வர்க்க விருப்பார்வங்கள் மற்றும் பொருளாயத நலன்களின் சிக்கலான மோதலையும் இடைச் செயலையும் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவருடைய விருப்பம் ஆகியவையே இத்திசையில் அவர் முன்னேறுவதற்கு மிகப் பெரிய தூண்டுதலாக ஒருக்கால் இருந்திருக்கக் கூடும்.

இதில் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானம் எப்படிச் சிறிதளவும் உதவவில்லையோ அப்படியே ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதமும் உதவவில்லை. மார்க்ஸ் எல்லாவற்றுக்கும் மேலாக எந்தத் துறையைப் பகுப்பாய்வு செய்வதற்கு விரும்பினாரோ அந்தத் துறையில், சமூக உறவுகள் துறையில் ஃபாயர்பாஹ் ஒரு கருத்துமுதல்வாதியாகவே இருந்தார். இங்கே அவர் ஹெகலுக்கும் தாழ்ந்தவராகவே இருந்தார்.

சமூக உறவுகளைப் பற்றிய விளக்கத்தை நோக்கிச் சென்ற மார்க்சின் சிந்தனை உண்மையின் மணிகளை எப்படிப் பொறுக்கியெடுத்தது என்பதை ஆராய்வது சுவாரசியமானதாகும்.

“பொருளின் மொழியில்” பேசுவது, “ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அதன் சாராம்சத் தன்மைக்கு ஏற்ப(5) புரிந்து கொள்வது அவசியம், பொருள்கள் “அவை மெய்யாகவே இருக்கின்ற முறையில்”(6) புரிந்து கொள்வதில்தான் உண்மை இருக்கிறது என்று மார்க்ஸ் 1842ம் வருடத்தின் தொடக்கத்தில் எழுதினார்.

இக்கூற்றுகளில் பொருள்முதல்வாதப் போக்கு அடங்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது மிகவும் சூக்குமமான வடிவத்தில்தான் இருக்கிறது, மேலும் அது சமூகப் பிரச்சினைகளைத் தொடவில்லை.

மார்க்ஸ் 1842ம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் விறகு திருடப்படுவதைப் பற்றிய கட்டுரையை எழுதிய பொழுது உடைமைக்கும் சட்டத்துக்கும் இடையிலுள்ள உறவைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். தனிச் சொத்துடைமை தனிநபர் மீது அதிகாரம் செலுத்துகின்ற உரிமையை, உடைமை இல்லாதவர்கள் மீது சட்டவியல் மற்றும் அரசு-நிர்வாக அதிகாரங்களைப் பிரயோகிக்கின்ற உரிமையைக் கொடுப்பதால் அரசியல் மற்றும் சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்ற காரணி அது தானா? இதற்கு ஆமாம் என்பதே பதில் என்பது வெளிப்படையாகத் தோன்றினாலும் மார்க்ஸ் இன்னும் அதை வெளிப்படையாக வகுத்தளிக்கவில்லை.

1843ம் வருடத்தின் ஆரம்பத்தில் மார்க்ஸ் சமூக உறவுகளின் பொறியமைவைப் பற்றிய உண்மையான விளக்கத்தை இன்னும் திட்டவட்டமான முறையில் நெருங்குகிறார். மோஸெல் பிராந்தியத்தின் திராட்சை பயிரிடுபவர்களை ஆதரித்து எழுதுகின்ற பொழுது சமூக அநீதிகள் தனிப்பட்ட நபர்களுடைய நடவடிக்கைகளினால் ஏற்படவில்லை, இந்த நபர்கள் “தம் காலத்திய உறவுகளின் கொடுமைகள் அனைத்தின்” உருவகமாக இருக்கிறார்கள், இந்த உறவுகள் “பொதுவான பார்க்கவியலாத மற்றும் நிர்ப்பந்திக்கின்ற சக்திகள்”(7) என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார்.

தனிப்பட்ட நபர்களின் சித்தத்துக்கும் “சுவாசித்தலுக்கும்” சம்பந்தமில்லாததைப் போலவே இந்த உறவுகளும் சுதந்திரமானவை. நாம் அதிகாரிகளின் தரப்பில் அல்லது ஏழை மக்களின் தரப்பில் நல்லெண்ணம் அல்லது தீய எண்ணத்தைத் தேடக் கூடாது, ஆனால் “புறநிலை உறவுகளின் விளைவுகளைக் காண வேண்டும்”.(8)

இரசாயன விஞ்ஞானி இரசாயனப் பொருட்களுக்கிடையில் நடைபெறுகின்ற “மோதல்களை” எவ்வளவு துல்லியமாக நிர்ணயிக்க முடியுமோ அப்படி உத்தேசமாகவாவது சிக்கலான சமூக மோதல்களைப் புரிந்து கொள்வதற்கு இத்தகைய அணுகுமுறை உதவும் என்ற கருத்துக்கு மார்க்ஸ் வந்து கொண்டிருக்கிறார். “இருக்கின்ற உறவுகள் ஒரு நிகழ்வை அவசியப்படுத்துகின்றன என்பதை நிரூபித்து விட்டால் எத்தகைய வெளிப்புற சந்தர்ப்பங்கள் அதை மெய்யாகவே தயாரிக்கின்றன என்பதையும் ஏற்கெனவே அது தேவையாக இருந்தாலும் அதைத் தயாரிக்க முடியாதிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் கண்டறிவது இனியும் கஷ்டமான காரியம் அல்ல.”(9)

பத்திரிகைச் சுதந்திரம் இல்லாதிருப்பது சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பெரிய தடை என்பதை மார்க்ஸ் சிறிது காலத்துக்கு முன்பு கண்டார் என்றால் இப்பொழுது அவர் புதிதாக ஏற்றுக்கொண்டுள்ள பொருள்முதல்வாத அணுகுமுறைக்கு ஏற்றபடி மோஸெல் பிராந்தியத்தின் துன்பகரமான நிலைமையின் பிரத்யேகத் தன்மையிலிருந்து பத்திரிகைச் சுதந்திரத்தின் அவசியம் பிறக்கிறது என்று எடுத்துரைக்கிறார்.(10)

இப்பொருள்முதல்வாத நிலையிலிருந்து மார்க்ஸ் ஹெகலின் “பல கடவுளைக் கொண்ட இறைஞானத்தை” விமர்சித்தார்; அங்கே “சிந்தனை அரசின் தன்மையுடன் பொருந்துவதில்லை, ஆனால் அரசு முன்னரே தயாரிக்கப்பட்ட சிந்தனை முறையுடன் பொருந்துகிறது.”(11) பல்வேறு வடிவங்களைப் பெறுகின்ற அரசின் உள்ளடக்கத்தை அதன் மூலமாக, “அரசு என்ற கருத்தின் மூலமாக” விளக்கமளிக்கக் கூடாது, ஆனால் குடும்பம் மற்றும் “சிவில் சமூகம்” என்ற பொருளாயத உறவுகளின் துறையிலிருந்து விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்ஸ் வலியுறுத்துகிறார்.

சமூக உறவுகளை விளக்கக் கூடிய, நெடுங்காலமாகத் தேடப்பட்ட திறவுகோல் அகப்பட்டுவிட்டது. ஹெகல், ஃபாயர்பாஹ் ஆகிய இருவருடனும் ஒப்பிடுகின்ற பொழுது மாபெரும் காலடி முன்னே எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றும். சமூக சக்திகள், அகநிலையான விருப்பார்வங்கள், தனிப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்களின் போராட்டம் என்ற குழப்பத்துக்கு நடுவில் புறநிலையான தர்க்கவியலின் விளிம்புகளை மார்க்சின் கண்கள் பார்க்கத் தொடங்கிவிட்டன.

ஆனால் அவை விளிம்புகள் மட்டுமே; அதன் உருவரைகள் தெளிவில்லாதவை, திட்டவட்டமாக இல்லாதவை. மக்களுடைய வறுமைக்குக் காரணம் புறநிலையான உறவுகளில் இருக்கின்றது என்று அவர்களிடம் கூறுவது போதுமானதல்ல, அவற்றின் இயல்பையும் வெளிப்படுத்த வேண்டும், சுதந்திரத்துக்கு வழியைச் சுட்டிக்காட்ட வேண்டும், “உண்மையான போர் முழக்கத்தைக்” கொடுக்க வேண்டும். இப்போர் முழக்கம் என்றால் என்ன? “ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர்” ஆதாரமாகக் கொள்ள வேண்டிய சக்தி எங்கே இருக்கிறது?

மார்க்சின் அறிவு சமூகப் பிரச்சினைகளை விளக்குகின்ற கடமையுடன் தொடர்ந்து போராடுகிறது; ஆனல் ஒரு “உச்சவரம்பு” தடுக்கிறது. அரசியல் பொருளாதாரம், வரலாறு மற்றும் சமூக உறவுகளின் தத்துவம் ஆகிய துறையில், கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மற்றும் கற்பனாவாதக் கம்யூனிசத்தின் பிரதிநிதிகளுடைய போதனைத் துறையில் அறிவில் இடைவெளிகள் இருப்பதை உணர்கிறார்.

குறிப்புகள்:

(1) Ibid., p. 144.
(2) ஜெர்மன் மொழியில் “ஃபாயர்பாஹ்” என்ற சொல்லை “ஃபாயர்” (நெருப்பு), பாஹ் (ஆறு) என்று பிரிக்க முடியும். மார்க்ஸ் இச்சொல்லின் நேர்ப் பொருளை இங்கே சிலேடையாகக் கையாள்கிறார்.
(3) Marx, Engels, Werke, Bd. 1, Berlin, 1969, S. 27.
(4) பிரெடெரிக் எங்கெல்ஸ், லுத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும், முன் னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1977, பக்கங்கள் 25-26.
(5) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 113.
(6)Marx, Engels, Werke, Bd. 1, S. 27.
(7) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 354.
(8) Ibid., p. 337
(9) Ibid.
(10) Ibid.
(11) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 19.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் , உலகம் முழுவதும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் வழிந்தோடுவதாகச் சொல்லப்படும் ஐரோப்பிய –  அமெரிக்க நாடுகளிலிருந்து, மதச்சடங்கின் பெயரால் சிறுமிகளின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து விடும் ஆப்பிரிக்க நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் பல்வேறு வடிவங்களில், அளவுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெண்ணைத் தாயாகப் பார்க்கும் பாரம்பரியம் கொண்டதாகச் சொல்லப்படும் இந்த “பாரத புண்ணிய தேசத்தில்” மத்தியில் ஆளும் பாஜகவின் அடிபொடிகளே, மோடி அரசுக்கு எதிராக எதிர்கருத்தைக் கூறும் பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதும், அடிபொடிகளைக் கண்டிக்காமல் மவுனம் காப்பதுமே, இந்தியாவில் பெண்களின் நிலையை எடுத்தியம்புகிறது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? சோதித்துத்தான் பார்ப்போமே !

கீழ்கண்ட கேள்விகளுக்கான சரியான விடையை பின் வரும் வினாடி வினா பகுதியில் தேர்ந்தெடுக்கவும். இவை வெறுமனே கேள்வி பதில் மட்டுமல்ல, சரியான பதில்கள் நமது சிந்தனைகளில் நிரந்தரமாய் பதிவாகவும் வேண்டும்.

  1. உலகளவில் எத்தனை சதவீதம் பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள்?
  2. பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்முறைகளை முன்னரே தடுப்பது என்பது?
  3. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று கடைபிடிக்கப்படும் சர்வதேச தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?
  4. உலகளவில் எத்தனை பெண்கள் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளாக இருக்கும் போது மணமுடிக்கப் படுகிறார்கள்?
  5. ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பெண்கள் சிறுமிகளில் கணிசமானோருக்கு செய்யப்படும் பிறப்புறுப்பு வெட்டும் செயல் எந்த வயதுக்கு முன்பு நடத்தப்படுகிறது?
  6.  “நம்மில் பாதிப்பேர் முடக்கிவைக்கப்படும் போது நம்மால் வெற்றி பெற முடியாது” – இதைச் சொன்னவர் யார்?
  7. உள்நாட்டுப் போர் நடைபெறும் பகுதிகளில் _______ சதவீதம் இளம் பெண்கள், உயர்நிலைப் பள்ளி கல்வியை விட்டு வெளியேறுகிறார்கள்.
  8. யூஸ்ரா மார்டி என்பவர் யார்?
  9. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 28 உறுப்பு நாடுகளில் எத்தனை சதவீதம் பெண்கள் ஏதேனும் ஒரு அளவில் உளவியல் வன்முறைகளை சந்திக்கிறார்கள்?
  10. 2016-ம் ஆண்டின் சர்வே ஒன்றின்படி அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில் உள்ள பெண்கள் எத்தனை பேர் பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் வன்முறைகளை சந்திக்கிறார்கள்?
  11. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பத்து பெண்களில் ஒருவர்  _______ வகை பாலியல் தொந்தரவுகளை சந்திக்கிறார்.
  12.  “ரேப்” எனப்படும் பாலியல் வன்புணர்ச்சியை செய்த ஒருவர் அந்தப் பெண்ணை மணம் முடித்திருந்தால் அவரை சட்டப்படி விசாரிக்க முடியாது என எத்தனை நாடுகள் விலக்கு கொடுத்திருக்கின்றன?
  13. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2015-ம் ஆண்டின் தரவுகளின் படி எந்த இந்திய மாநிலம் அதிக எண்ணிக்கை பாலியல் வன்புணர்ச்சி வன்முறையைக் கொண்டிருக்கிறது?
  14. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்புணர்ச்சி வன்முறை நடைபெறும் நகரங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நகரம் எது? முதல் இடத்தை ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் பெற்றிருக்கிறது.

பதிலளிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

செயற்கை முளையம் : தோற்றத்தின் இரகசியத்தை உடைக்கும் விஞ்ஞான வளர்ச்சி

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை உயிர் ஆராய்ச்சியில் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளனர். பேராசிரியை மகதலேனா ஸெர்னிகா கோயெட்ஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு எலிகளின் குருத்தணுக்களில் (Stem Cells) மூன்று வகையான குருத்தணுக்களை இணைத்து ஏறத்தாழ இயற்கையான முளையத்தை (Embryo) ஒத்த செயற்கை முளையம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட முளையத்திற்கு ஈரடுக்குக் கருக்கோள (Gastrulation) முறையில் வளர்ச்சியடையும் சாத்தியம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

செயற்கை முளையம்
3 குருத்தணுக்களால் உருவாக்கப்பட்ட கருமுளையத்தை ஒத்த செயற்கை அமைப்பு. (3 வகை குருத்தணுக்களும் மஞ்சள், பிங்க்., பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள) (நன்றி: படம் – Zernicka-Goetz lab – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்)

இதற்கு முன்பே பேராசிரியை மகதலேனா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவானது, இரண்டு வகையான குருத்தணுக்களைப் பயன்படுத்தி எலியின் முளையத்தை ஒத்த செயற்கை முளையம் ஒன்றை உருவாக்குவதிலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை முளையத்தை ஒரு முப்பரிமாணக் கருக்கூட்டினுள் (3D Scaffold) வைத்து வளர்த்தெடுப்பதிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியை மகதலேனாவின் ஆராய்ச்சியில் மூன்று குருத்தணுக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு செயற்கையாக உருவாக்கப்பட்ட முளையமானது ஈரடுக்குக் கருக்கோள முறையில் சுயமாகவே வளர்ச்சியடையும் சாத்தியங்களைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கையான பாலூட்டியினங்களில் கருமுட்டையில் உயிரணு நுழைந்த பின் உயிர் உருவாக்கத்தின் துவக்க கட்டத்தில் என்ன நடக்கிறது? கருத்தரித்த 3-லிருந்து 4 நாட்களுக்குள், கருவின் பிளக்கும் அணுக்கள் ஒரு கோள வடிவத்தை அடைகின்றன. இந்நிலையில் உள்ள கரு, ’மோருலா‘ எனப்படுகிறது. 4-லிருந்து 5 நாட்களுக்குள், மோருலாவிற்குள் ஒரு வெற்றிடம் உருவாகிறது. இந்நிலையில் உள்ள கரு ’பிளாஸ்டோசிஸ்ட்’ எனப்படுகிறது. பிளாஸ்டோசிஸ்டிலுள்ள அணுக்கள் ’உள்ளடங்கிய அணுப் பிண்டம்‘ என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்குத் தேவையான தலை, உடல் மற்றும் பிற அமைப்புகளை அளிக்கிறது. உள்ளடங்கிய அணுப் பிண்டத்திலுள்ள அணுக்கள் முளையக் குருத்தணுக்கள் (embriyonic stem cells) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் 200-க்கும் மேற்பட்ட செல் வகைகளை உருவாக்கும் திறமை படைத்தவை.

இதைத் தொடர்ந்து, பிளாஸ்டோசிஸ்டின் வெளிப்புறம் உள்ள அணுக்கள் நஞ்சுக்கொடியின் ஒரு பகுதியை உருவாக்குகின்றன. இது தாய் மற்றும் கருவின் குருதி ஓட்ட அமைப்புகளை இணைக்கிறது. நஞ்சுக்கொடி தாயிடமிருந்து பிராணவாயு, ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள், மருந்துகள் ஆகியவற்றை வளரும் குழந்தைக்கு அளிக்கிறது; கழிவுப் பொருட்களை அகற்றுகிறது; தாயின் குருதி கருவின் மற்றும் சிசுவின் குருதியுடன் கலந்துவிடாமல் தடுக்கிறது. நஞ்சுக்கொடி உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் கருவின் மற்றும் சிசுவின் உடல் வெப்ப நிலையை தாயின் உடல் வெப்ப நிலையை விட சற்று அதிகமாக நிலைப்படுத்துகிறது.

கடந்த 2017 மார்ச் மாதம் பேராசிரியை மகதலேனா வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின் படி, மரபணு மாற்றப்பட்ட எலியின் முளையக் குருத்தணுக்களை இணைவித்து முப்பரிமாணக் கருக்கூட்டினுள் வைத்து வளர்க்கப்படும் முளையமானது இயற்கையான முளையத்தின் பண்புகளைக் கொண்டிருப்பது விளக்கப்பட்டிருந்தது. செயற்கையான முளையத்தினுள் இருந்த இரண்டு குருத்தணுக்களும் தங்களை வளர்ந்து வரும் முளையத்தின் எந்தப் பகுதிக்குள் நிலை நிறுத்திக் கொள்வது என்கிற தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

எனினும் சென்ற ஆண்டு நடந்த ஆராய்ச்சியில் கருவளர்ச்சிக்கு மிக அடிப்படையான ஈரடுக்குக் கருக்கோள முறையிலான வளர்ச்சியானது இல்லாதிருந்தது. ஈரடுக்குக் கருக்கோள முறையில்தான் முளையமானது ஓரடுக்கில் இருந்து உள்ளடுக்கு (endoderm), இடையடுக்கு (mesoderm), வெளியடுக்கு (ectoderm) ஆகிய அடுக்குகளைப் பெறுகிறது. இந்த வளர்ச்சிப் போக்குதான் எந்த முளையத்தின் அணுக்கள் பல்வேறு உடலுறுப்புகளுக்கான அடிப்படையாக அமைகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.

”மிகச் சரியான முறையில் நடக்கும் ஈரடுக்குக் கருக்கோள வளர்ச்சியானது மூன்று வகையான குருத்தணுக்களின் இணைவினால்தான் சாத்தியம். உயிரின் இந்த நுட்பமான நடனத்தை மறுகட்டமைப்பு செய்து பார்க்க நாங்கள் விடுபட்டுப் போன மூன்றாவது குருத்தணுவைச் சேர்த்துக் கொண்டோம்” என்கிறார் பேராசிரியை மகதலேனா. ”முந்தைய ஆராய்ச்சிகளில்  முப்பரிமாண கருக்கூட்டினுள் நாங்கள் பயன்படுத்திய ஜெல்லிக்கு பதிலாக மூன்றாவது குருத்தணுவைப் பயன்படுத்தினோம். அதன் பின் நாங்கள் பார்த்த முளையத்தின் கட்டுமான வளர்ச்சியானது ஆச்சர்யமான முறையில் வெற்றிபெற்றது” என்கிறார் மகதலேனா.

செயற்கை முளையம்
7-8 வார வயதுடைய மனிதக் கருமுளையம்

”எங்களது செயற்கை முளையங்கள் இயற்கையான வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டத்தைக் கடந்துள்ளன. இப்போது அவை இயற்கையான முளையங்களுக்கு ஏறத்தாழ மிக நெருக்கமாக வந்து விட்டன. இந்த ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாக இந்த செயற்கை முளையங்களை ஒரு தாயின் உடலிலோ அல்லது செயற்கைக் கருப்பையிலோ வைத்து வளர்த்துப் பார்க்க வேண்டும். அதே போல் மனிதர்களின் குருத்தணுக்களைக் கொண்டும் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் பேராசிரியை மகதலேனா.

தற்போது வெளியாகி இருக்கும் ஆராய்ச்சி முடிவுகளின் படி, முளையத்தினுள் இருக்கும் குருத்தணுக்கள் தங்களுக்குள் எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்பதும் அதன் மூலம் முளையத்தின் வளர்ச்சி எவ்வாறு நடக்கின்றது என்பதும் தெரிய வந்துள்ளதாக இதே துறையில் உள்ள மற்ற விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் 14 நாட்களுக்கு உட்பட்ட வளர்ச்சியுடைய முளையங்களையே ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக இருக்கிறது. இந்தத் தடை நீக்கப்பட வேண்டியது கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சட்டங்கள் தவிர மதவாதிகளின் குறுக்கீடுகள் இன்னொரு சிக்கல். விஞ்ஞானத்தின் ஒளிக் கதிர்கள் எட்டாத பகுதிகளை எல்லாம் ‘கடவுளின் செயலாக’ சொந்தம் கொண்டாடி வரும் மதவாதிகளின் கையில் எஞ்சி நிற்கும் வாதங்கள் “உயிர்களின் மூலமும் – முடிவும்”தான். தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி இதுகாறும் நிழலாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்த ‘மூலத்தையும் முடிவையும்’ விளக்கும் ஆற்றல் பெற்று வருவது மதங்களின் அடித்தளத்தையே அசைத்துப் பார்ப்பதாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் செயற்கை உயிர்கள் குறித்த ஆராய்சிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பு தனது இனத்தின் பிறப்பு மற்றும் இறப்பின் இரகசியங்களை மனித குலம் அறிந்து கொள்வதோடு அவற்றை வெல்வதற்கும் உதவக் கூடும். மெய்யாகவே கடவுள் கல்லறைக்குள் பதுங்கப் போகும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் திண்ணம்.

– வினவு செய்திப் பிரிவு

செய்தி ஆதாரம்:

தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி

மு.வி.நந்தினி

ரு தனிமனிதன் என்ன உண்ண வேண்டும் என தீர்மானிக்க நினைக்கிறது ஓர் அரசு. உலகின் எந்த ஒரு அரசும் செய்யாத திணிப்பை இந்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் அரசு ஊக்கப்படுத்தி வளர்க்கும் கும்பல் குண்டர்கள், அம்மக்கள் எதை உண்டுகொண்டிருக்கிறார்கள் என சதா கண்காணித்தபடியே இருக்கிறார்கள்.  மக்கள் உண்டது மாட்டிறைச்சியா, ஆட்டிறைச்சியா என குடலைக் கிழித்து பார்க்கவும் இந்த குண்டர்கள் தயங்குவதில்லை.

முன்பொரு காலத்தில் பசுக்களை இவர்களுக்கு கட்டளையிடும் கும்பல் தலைவர்கள் விரும்பி உண்டார்கள் என்கிற வரலாற்றை இவர்கள் ஒருபோதும் அறியப்போவதில்லை. தினம் தினம் மனித உயிர்களை ‘அடித்துக்கொல், அடித்துக்கொல்’ என கிளம்பும் இவர்களுக்கு மட்டுமல்ல, அசைவம் உண்பதை வெளியே சொல்வது கூட கவுரவக் குறைச்சலை ஏற்படுத்தும் என நம்பிக்கொண்டிருக்கும் இந்தியாவின் 70 சதவீதம் பேருக்கும் வரலாற்று-அறிவியல் உண்மைகளை சொல்ல விரும்புகிறோம்.

சைவமா ? அசைவமா ?

சுமார் 2.6 மில்லியன் வருடங்களுக்கு முன், அதாவது மனிதர்களாக பரிணாமம் அடைவதற்கு முன் குரங்குகளாக திரிந்தபோது நம் மூதாதையரின் முக்கியமான உணவு, பூமிக்கடியிருந்து கிடைக்கும் கிழங்கு வகைகள். இந்த கிழங்கு வகைகளை (சமைக்கும் பழக்கமெல்லாம் பின்னாளில் வந்தது) மெல்லுவதற்கு அதிக நேரம் எடுத்தது. ஒரு நாளின் பெரும்பகுதியை மெல்லுவதற்காகவே இவர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவற்றை ஜீரணிக்கும் குடல் பகுதி பெரிதாக (தாவர உண்ணிகளின் குடல்பகுதி, விலங்கு உண்ணிகளின் குடல் பகுதியைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். தாவரங்களை எளிதில் ஜீரணிக்க முடியாது என்பதே காரணம்) இருந்தது. சிந்திப்பதற்கோ, செயலாற்றுவதற்கோ பெரும் வாய்ப்பு இல்லாத காரணத்தால் அவர்களின் மூளையும் சிறியதாகவே இருந்தது.

உணவு பற்றாக்குறையின் காரணமாக இறைச்சி உண்ணும் பழக்கம் அவர்களிடம் உண்டாகியிருக்கிறது. மனித பரிணாமத்தின் பாய்ச்சலை ஏற்படுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. விலங்குகளின் இறைச்சியை வெட்டி உண்ண கற்றுக்கொள்கிறார்கள். வெட்டி உண்பதால் மெல்லும் நேரம் குறைகிறது. கிழங்கு, பழங்களைக் காட்டிலும் இறைச்சியின் மூலம் அவர்களுக்கு கூடுதல் சத்து கிடைக்கிறது. குறைந்தபட்ச இறைச்சிகூட ஒரு நாளுக்கு தேவையான கலோரிகளை தந்துவிடும் என்பதால் அவர்களுக்கு செயலாற்ற நேரம் அதிகம் கிடைத்தது. மெல்லுவது குறைந்ததால் தாடையின் அளவு சிறுத்தது. பேசுவதற்கான உறுப்புகள் உருவாக அது உதவியது.  2 மில்லியன் வருடங்களுக்கு முன், ஹோமோஏரக்டஸ் என்ற நம் மூதாதையரின் மூளை பெரிதாக வளர்ச்சியடைய கலோரிகள் மிக்க இறைச்சியும் எலும்பு மஜ்ஜையுமே காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மற்ற உறுப்புகளைக் காட்டிலும் மூளையின் வளர்ச்சிக்கு கலோரிகள் நிறைந்த உணவு தேவை. அதை அமினோ அமிலங்களும் நுண் சத்துக்களும் நிறைந்த இறைச்சி கொடுத்ததாலேயே ஹோமோஎரக்டஸின் மூளை சிறப்பான, முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியை எட்டியது என்கிறார்கள்.

Homo erectus
ஹோமோஎரக்டஸ்

அப்படியேனில் நாம் மனிதர்களாக பரிமாணம் அடைந்தது முதல், இறைச்சியை மட்டும்தான் உண்டோமா என்றால் இல்லை. எல்லா நேரங்களிலும் வேட்டையாடுதல் சாத்தியமில்லை. இறைச்சி கிடைக்காதபோது, பழங்களும் கொட்டைகளும் கிழங்குகளும் உணவாகின.  வேட்டையாடிகளாகவும் உணவுகளை சேகரிப்பவர்களாகவும் இருந்த மனிதர்கள் மிக சமீபத்தில்தான் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் வேளாண்மையை தொடங்கினார்கள். தானியங்களை இனம்கண்டு பயிரிட்டு உண்ண கற்றுக்கொண்டார்கள். மனிதர்களின் வாழ்வியலை மாற்றியமைக்க இவை அனைத்துமே உதவியிருக்கின்றன.

பின், ஏன் நாம் பொதுவெளியில் நான் அசைவம் உண்பேன் என்பதை சொல்லிக்கொள்ளக்கூட கூச்சப்படுகிறோம்? உலகின் மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் ஏன் உணவின் மூலமாக தாழ்ந்தவர் – உயர்வானவர் என கருதும் பழக்கம் இருக்கிறது? மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் விரும்பி உண்ணும், சமைக்கும்  டேவிட் ராக்கோ போன்ற உலகப் புகழ் பெற்ற சமையல் கலைஞர்கள் தென்னிந்தியர்களின் உணவு இட்லியும் சாம்பாரும்தான் என ஏன் சொல்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடும் முன், டேவிட் ராக்கோவுக்கு நடிகர் மோகன்ராமின் மகள் விதுலேகா சொல்லிக்கொடுத்த தென்னிந்திய சமையல் பற்றி பார்ப்போம்.

பல ஆங்கில லைஃப் ஸ்டைல் சேனல்கள் தமிழ் பேசுகின்றன. சதா சாம்பாரும் காரக்குழம்பும் வைக்கக் கற்றுத்தரும் தமிழ் சேனல்கள் போல் அல்லாமல் உவ்வே என ஒதுக்கித்தள்ளும் இறைச்சி ரெசிபிகளை நாள்முழுவதும் இந்தச் சேனல்களில் காண முடியும். மாட்டிறைச்சிக்காக மனிதர்களைக் கொல்லும் இந்த நாட்டில் எப்படி மாட்டிறைச்சி சமையல் குறிப்புகள் வீடு தேடி வர அனுமதிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமூட்டுகிறது. விஷயத்துக்கு வருவோம்.

இத்தாலியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற செஃப்பான டேவிட் ராக்கோ இந்தியாவின் சமையல் வரலாற்றை உலகுக்கு தெரியப்படுத்தும் ஒரு தொடர் நிகழ்ச்சியை செய்கிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, சென்னை மயிலாப்பூர் மார்க்கெட்டில் வந்து இறங்குகிறார். டேவிட்டை வரவேற்கும் விதுலேகாவிடம் எனக்காக என்ன இறைச்சி சமைக்கப் போகிறீர்கள் என கேட்கிறார். பதற்றத்தோடு விதுலேகா, நாங்களேல்லாம் ப்யூர் வெஜிடேரியன்ஸ், இங்கே வெஜிடேரியன் உணவு மட்டும்தான் கிடைக்கும் என்கிறார்.

இட்லி-தோசை-சாம்பார் ஆகியவைதான் ஒட்டுமொத்த தென்னிந்தியர்களின் உணவாக உலகின் முன் கட்டமைக்கப்பட்டு விடுகிறது. டேவிட் ராக்கோவுக்கு விதுலேகா தென்னிந்தியர்களின் உணவு கலாச்சாரத்தை சொல்லும் பிரதிநிதியாக உள்ளார். ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பன பனியாக்களின் கலாச்சாரமே ஒட்டுமொத்த கலாச்சாரம்; அவர்களின் உணவே இந்தியர்களின் உணவு. ஆக, அனைத்தையும் பார்ப்பனியமே தீர்மானிக்கிறது.

சைவ உணவு திணிப்பு
உலகின் முன் கட்டமைக்கப்படும் தென்னிந்திய மக்களின் உணவு கலாச்சாரம் இட்லி-தோசை-சாம்பார்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியர்களின் உணவு பழக்கத்தில் பார்ப்பன பனியா கூட்டம் தன்னுடைய ஊடக-அரசியல்-ஆட்சி பலத்தின் காரணமாக தாக்கம் செலுத்தி வருகிறது. ஊடகங்களில் சைவ உணவு குறிப்புடன், அசைவ உணவுக் குறிப்பு வந்துவிட்டால் கடிதம் எழுதி சண்டை போடும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி சமையல் குறிப்பு எந்தவொரு தமிழ் வெகுஜன ஊடகத்திலும் இதுவரையிலும் வந்ததில்லை.  இதுவும் ஒருவகை தீண்டாமைதான். நம்மால் கண்டுகொள்ளப்படாத தீண்டாமை.

பெரும்பான்மை சமூகத்தில் சைவமே சிறந்தது என்கிற கருத்தை விதைக்க பார்ப்பன-பார்ப்பனமயமாக்கப்பட்ட ஊடகங்கள் பெரும்பாங்காற்றுகின்றன.  சிறு தெய்வ வழிபாட்டில் ஆடு, கோழி, பன்றியை பலியிடுதல் முக்கியமான சடங்கு. அதை ஒழிக்க சிறு தெய்வங்களை பார்ப்பனமயப்படுத்தினார்கள். கடந்த இருபதாண்டுகளில் வெகுமக்களிடம் பக்தி என்கிற பெயரில் இந்துத்துவத்தை இந்த ஊடகங்கள் பரப்பின; பரப்பிவருகின்றன. பள்ளிக்கு அசைவ உணவு எடுத்துச் செல்வது தடை செய்யப்படும் அளவுக்கு சமூகத்தில் அசைவத்தின் மீதான அசூயை பரப்பப்பட்டுவிட்டது.

ஊட்டச்சத்து குறைபாடு
விட்டமின் பி12 நிறைந்த இறைச்சியை அந்நியமாக்கும் பார்ப்பனியம்

உணவு மீதான தீண்டாமை என நாம் எதிர்க்க காரணமிருந்தாலும், ஒரு சமூகத்தையே நோஞ்சாண் ஆக்கும் உணவின் மூலம் செலுத்தும் வன்முறையை நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டும். வாரத்தின் ஒரு நாள் அல்லது இரு நாள் இறைச்சி உண்பது வளரும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்குமேகூட போதுமான சத்தை வழங்காது.

இந்தியர்களின் சத்து குறைபாடு தொடர்பாக வெளிவரும் அத்தனை ஆய்வுகளிலும் விட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்து குறைபாடு பிரதானமாக உள்ளதை பார்க்க முடிகிறது. விட்டமின் பி12 இறைச்சியில் மட்டுமே உள்ளது. இரத்த சோகையை தடுக்கவும் நரம்பு மற்றும் இரத்த அணுக்களின் செயல்பாட்டுக்கும் இது முக்கியமானது. சத்து மாத்திரைகள் பின் விளைவுகளை தருமே தவிர, சத்தை தராது. சத்து தரும் இறைச்சி ஒதுக்கப்பட்டுவிடுகிறது.

மாட்டிறைச்சி தடை
மாட்டிறைச்சி

ஹீமோகுளோபின் மற்றும் மைலோகுளோபின் என்ற இரண்டு அத்தியாவசிய புரதங்களை உடலில் உற்பத்தி செய்ய இரும்பு சத்து உதவுகிறது. காய்கறிகளில் உள்ள இரும்பு சத்து, ஹீமோகுளோபின் புரதத்தை உற்பத்தி செய்ய உதவுவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீனில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது என பரிந்துரைக்கிறார்கள். மாதவிடாய் காரணமாக அதிக ரத்த இழப்பை சந்திக்கும் பெண்கள் இரும்பு சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஆடி, ஆமாவாசை, புரட்டாசி, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை  என காரணம் சொல்லும் விரதம் என்னும் பெயரில் பெண்களை நோஞ்சான் ஆக்குகிறது பார்ப்பன மதம்.

சமணர்களிடமிருந்து சுவீகரித்துக்கொண்ட புலால் உண்ணாமையை பார்ப்பன இந்துமதம், அதை ஒற்றை உணவு பழக்கமாக பெரும்பான்மை சமூகத்தின் மீது திணித்துக்கொண்டிருக்கிறது. இறைச்சி மீதான சுயதடையை செய்துகொள்ள சமூகத்தை அது பழக்கிக்கொண்டிருக்கிறது. சக மனிதர்கள் பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்படும்போது இதே மனத் தடையுடன் சமூகம் தள்ளி நின்று பார்க்கிறது.  விலங்கிலிருந்து பகுத்தறிவு பெற்ற மனிதன் மீண்டும் விலங்காக மாறுவது இங்கிருந்து தொடங்குகிறது. உண்மையில் இது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்று

– மு.வி.நந்தினி.

கட்டுரை ஆதாரங்கள்:
Sorry Vegans: Here’s How Meat-Eating Made Us Human
The Evolution of Diet
Evidence for Meat-Eating by Early Humans

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

எதையும் தாங்கும் இதயம் ஓ.பி.எஸ் – கருத்துக் கணிப்பு !

முதலில் பிளாஷ் ஃபேக்:   தமிழக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மதுரை மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு வர உதவினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இராணுவத்தின் ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பியதுதான் அவர் செய்த உதவி. ஒக்கிப் புயலுக்கு வராத இராணுவம் இங்கே ஓ.பி.எஸ் குடும்பத்திற்கு ஓடி வருகிறது.

பிறகு தமிழகத்தில் எடப்பாடி பினாமிகள் இடத்தில் வருமானவரித்துறை சோதனை. தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.கவை ஒரு கலக்கு கலக்கி குலுக்கி கக்கத்தில் வைக்க நினைக்கும் பா.ஜ.கவின் இத்தகைய மிரட்டல்கள் ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கும் போதே துவங்கி விட்டன. ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும் அந்த செய்திகள் காணாமல் போகும். பணம், தங்கம் இதர பரபரப்புகள் புதைக்கப்படும். விசாரணையும் இருந்த இடம் தெரியாமல் போகும்.

அ.தி.மு.க கும்பலோ மத்தியிலே சரணாகதி, மாநிலத்தில் கமிஷனே கதி என்று படுவேகமாக இயங்கி வருகிறது. துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மூலம் வந்த ஆணைக்கிணங்க பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக பாராளுமன்ற அணி பா.ஜ.கவிற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டது. அதில் நாலு ஓட்டு வரவில்லை என காவிகள் உளவுப்படையை முடுக்கி விட்டிருக்கிறார்களாம்.

இந்நிலையில் ஓ.பி.எஸ் அவர்கள், மைத்ரேயன் துணையோடு டெல்லி செல்கிறார். அங்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமனை பார்க்கப் போவதாக தெரிவித்திருந்தார். இதற்காக மைத்ரேயன் மூலம் சந்திப்பிற்கு ஒழுங்கு செய்யப்பட்டதாம். எதற்காக இந்த சந்திப்பு? இதற்கு நேற்று (24.07.2018) காலை வண்டலூர் சென்ற முதல்வர் எடப்பாடி பதிலளிக்கிறார். அங்கு பிறந்த ஒரு புலிக்குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டியவர், பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஓ.பி.எஸ் டெல்லி சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது, நிர்மலா சீதாராமன் அனுப்பிய விமான சேவைக்கு நன்றி கூறும் பொருட்டு நடக்கிறது என்று போட்டு உடைத்தார்.

வேறு வழியின்றி தில்லியிலும் இதையே ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். நிர்மலா சீதாராமனை சந்திக்கப்போவதாக அவர் கூறியதை சந்தித்து விட்டார் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டதாம். இதனால் கொதித்தெழுந்த நிர்மலா, தனது இராணுவ விமான உதவி செய்தி வெளியே வந்து, இப்படி சந்திக்காமலேயே சந்தித்துவிட்டதாக செய்தி போடுகிறார்களே என்று சீறினாராம்.

உடனே வெளியே அமர்ந்திருந்தவர்களில் மைத்ரேயனை மட்டும் உள்ளே அனுமதித்தவர், ஓ.பி.எஸ்-ஐ சந்திக்காமல் திருப்பி அனுப்பி விட்டாராம். அதையே டிவிட்டரிலும் போட்டு மானத்தை வாங்கியிருக்கிறார்.  ஓபிஎஸ் அவரைச் சந்திக்கப் போனது அ.தி.மு.க அரசு குறித்த வருமான வரி சோதனைகள், அடுத்த தேர்தலுக்கான கூட்டணி பேரங்கள் மற்றும் இதர மிரட்டல்கள் – சரணாகதிகள், திரை மறைவுப் பேரங்களுக்கு என்பது ஊரறியும். ஜெயா உயிரோடு இருந்த போது இதே மாதிரி பல மத்திய தலைவர்களை சந்திக்காமல் அவமதித்திருக்கிறார். அதனால்தான் போயஸ் தோட்டம் என்றாலே பல தலைவர்களுக்கு அலர்ஜி. எப்படி இருந்தாலும் இந்த மாதிரி அவமானங்கள் எல்லாம் அதிமுகவில் சகஜம்.

தில்லி சென்று வெறுங்கையோடு சென்னை திரும்பிய ஓ.பி.எஸ், நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும என்று அண்ணா கூறியதாக கூறி தனது தோல் தடிப்பு என்று சென்று விட்டார்.

மாலை டி.வி விவாதத்தில் பங்கேற்ற சில அப்பாவிகள் ஓ.பி.எஸ் எனும் 7.5 கோடி தமிழக மக்களின் துணை முதல்வரை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்து விட்டார் என கண்ணீர் வடித்தனர்.

அய்யா, டயரைத் தொழுதவர்கள், ஹெலிகாப்டர்களை பறக்கும் போதே மண்ணைத் தொட்டு வணங்கியவர்கள், ஜெயா கோட்டைக்கு வரும் போதும், செல்லும் போதும் கும்பல் கும்பலாக தொழுசாசனம் செய்தவர்கள் எல்லாம் இந்த மான அவமானங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது அவர்களது ஆன்மாவிற்கே தெரியும். ஆனால மைத்ரேயன் போன்ற மயிலாப்பூர் வாசிகளுக்கு மட்டும் இன்னும் முதல் மரியாதை இருக்கிறது என்பதையும் சிலர் புகார் சொல்கின்றனர்.

பா.ஜ.கவோ இந்த அடிமை எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறானே என்று கருணை காட்டுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்து துவைக்கிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.க, ரஜினி, அ.தி.மு.க என கூட்டணி பேரம் வைத்து சீட்டுக்களை கைப்பற்றுவதற்கு அ.தி.மு.க-விற்கு அளிக்கும் மோடி அரசின் ட்ரில்தான் இந்த எதையும் தாங்கும் இதயம் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

மூன்று பதில்களைத் தெரிவு செய்யலாம்!

இன்றைய கேள்வி:

ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் நிர்மலா சீதாராமன் அவமதித்ததன் விளைவு என்ன?
ஒரு மாலைநேர வெட்டி விவாதம்
ரெய்டு பயத்தினால் நடுங்கும் அ.தி.மு.க-விற்கு அடுத்த அடி
தேர்தல் கூட்டணிக்காக பா.ஜ.க மிரட்டுவதன் ஆரம்பம்
தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம்
எடப்பாடியின் சதியால் அடிவாங்கிய ஓ.பி.எஸ்
பார்ப்பனர்களுக்குத்தான் தில்லியில் மரியாதை

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

டிவிட்டரில் வாக்களிக்க:

காவிரி : தொடருகிறது வஞ்சனை !

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில், தமிழகத்துக்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளைக்கூட மதிக்காத கர்நாடக அரசு, ஆணையத்தின் இந்த உத்தரவைப் பிசகாமல் நடைமுறைப்படுத்துமா என்பதுதான் இப்பொழுது தமிழகத்தின் முன்நிற்கும் கேள்வி. ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த மறுத்தால், ஆணையமும் மைய அரசும் உடனடியாகத் தலையிட்டுத் தமிழகத்திற்கு நியாயம் வழங்குமா என்பது மற்றொரு கேள்வி.

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்டிருக்கும் ஆணையம், கர்நாடக அணைகளைத் திறந்துவிடக் கூடிய சுதந்திரமான, தன்னதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கப்படவில்லை. மைய நீர்ப்பாசன அமைச்சகத்தின் துணை அமைப்புப் போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது” எனத் தமிழகத்தின் எதிர்க்கட்சிகளும், தமிழ்த் தேசிய மற்றும் புரட்சிகர அமைப்புகளும் அம்பலப்படுத்தியிருக்கும் நிலையில், இந்தக் கேள்விகளை யாரும் புறந்தள்ளிவிட முடியாது.

கடந்த ஜூலை – 2 அன்று தில்லியில் நடைபெற்ற
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம்.

இந்தக் கேள்விகள் அனுமானத்தின் அடிப்படையில் எழவில்லை. ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க கபினி, கிருஷ்ணசாகர் அணைகளிலிருந்து ஜூலை மாதத்திற்குரிய நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிடுவதற்குப் பதிலாக, அதற்கு சவால்விடும் விதத்தில், ஆணையத்தின் உத்தரவு வெளியான ஓரிரு நாட்களிலேயே கபினி அணையிலிருந்து தமிழகத்திற்குத் திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவைக் குறைத்து, ஆணையத்திற்கு பெப்பே காட்டியிருக்கிறது, கர்நாடக அரசு.

கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளை, தீர்ப்புகளை மதிக்காமல் நடந்துகொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பின் நாட்களைக் கடத்தும் சூழ்ச்சியிலும் இறங்கியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் முன்பே காவிரி ஆணையத்தை அமைத்திட உத்தரவிட்டாலும், கர்நாடகத்தின் சூழ்ச்சியாலும் அதற்கு அணுசரணையாக பா.ஜ.க. அரசு நடந்து கொண்டதாலும் ஆணையம் அமைப்பதும் ஒரு மாதம் தாமதமாகி, அதன் முதல் கூட்டமே ஜூலை 2 நடைபெற்றது. இந்த சூழ்ச்சியின் மூலம் ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை உரிய தேதியில் திறந்துவிடுவதை கர்நாடக அரசு தவிர்த்துவிட்டது.

இன்னொருபுறம், தென்மேற்குப் பருவ மழை அபரிமிதமாகப் பெய்து, கர்நாடகத்தின் அணைகளில் தேக்கி வைக்க முடியாத நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட்டுவிட்டு, ஜூன் மாதத்தில் தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரின் அளவிற்கு மேல் தந்திருப்பதாக ஆணையக் கூட்டத்தில் வாதிட்டிருக்கிறது. ஆணையமும் கர்நாடகத்தின் அந்தச் சூழ்ச்சியான வாதத்தை ஏற்றுக்கொண்டு எவ்வளவு நீர் அதிகமாகத் திறக்கப்பட்டிருக்கிறதோ, அதனை ஜூலை மாதப் பங்கில் கழித்துக் கொள்ள கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக கடந்த ஜூன் 17 அன்று மோடியைச் சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி.

இப்படி கர்நாடகத்தின் தார்மீக நியாயமற்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள ஆணையம், ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரை ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பவில்லை. அந்த நீரை இப்பொழுது சேர்த்துக் கொடுக்குமாறு கட்டளையும் இடவில்லை. இந்த ஒருதலைப்பட்சமான அநீதியைக் கேட்டால், ஆணையத்தின் செயல்பாடுகள் ஜூலையில் தொடங்கியிருக்கிறது என்ற சால்ஜாப்பைச் சொல்லவும் தயங்கமாட்டார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவிலும், அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும்கூட இத்தகைய காலந்தாழ்த்தும் சூழ்ச்சிகளையும் சால்ஜாப்புகளையும் நெடுகக் காணமுடியும்.

முதலாவதாக, நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரில் 14.75 டி.எம்.சி. நீரை அபகரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபரிமிதமாக இருப்பதாக சால்ஜாப்பு சொல்லி, தனது அநீதியை நியாயப்படுத்தியது. மேலும், நடுவர் மன்றத் தீர்ப்பின் உயிர்நாடியையேப் பிடுங்கிப்போடும் வண்ணம், தன்னதிகாரம் கொண்ட வாரியம் அமைப்பது பற்றித் தனது தீர்ப்பில் குறிப்பிடாமல், நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் செயல்திட்டத்தை 29.03.2018 உருவாக்க வேண்டும் என்ற மட்டோடு நின்றுகொண்டது. யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்த கதையாக, இந்தச் செயல்திட்டத்திற்கு ஒவ்வொரு விசாரணையின் போதும் விதவிதமான விளக்கங்களை அளித்தது. 

இந்தச் செயல்திட்டத்தை உருவாக்குவதற்கு ஆறு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தபோதும், மைய பா.ஜ.க. அரசு அக்காலக்கெடுவிற்குள் செயல்திட்டத்தை உருவாக்காமல் சண்டித்தனம் செய்தது. மேலும், கால அவகாசம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, 31.3.2018 அன்று செயல்திட்டம் என்றால் என்ன? என விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவிலேயே செயல்திட்டத்தை உருவாக்க மேலும் மூன்று மாத கால அவகாசமும் கேட்டது. தமிழகத்தின் உரிமைகளை கேலிப் பொருளாகக் கருதும் பா.ஜ.க. அரசின் திமிரும் அலட்சியமும் இந்த மனுவின் மூலம் வெளிப்பட்டது.

இந்த மனுக்களை சாவகாசமாக 09.04.2018 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், பா.ஜ.க. அரசின் இழுத்தடிப்பைக் கண்டிப்பது போல ஒருபுறம் பாவனை செய்துவிட்டு, இன்னொருபுறமோ செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்க மே 3 வரை மீண்டும் கால அவகாசம் அளித்தது. மே 12 அன்று கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடக்கவிருந்த நிலையில் மே 3 வரை அளிக்கப்பட்ட கால அவகாசம், உச்ச நீதிமன்றம் பா.ஜ.க.விற்குக் காலத்தினால் செய்த பேருதவியாகும்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்.

உச்ச நீதிமன்றம் அளித்த இரண்டாவது கால அவகாசம் முடிந்த பின்னும் பா.ஜ.க. அரசு செயல்திட்டத்தை உருவாக்கவில்லை. இது தொடர்பாக மே 3 அன்று நடந்த விசாரணையில், ‘‘செயல்திட்டம் உருவாகிவிட்டதென்றும், கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் உள்ளிட்டோர் அம்மாநிலத்திற்குச் சென்றுவிட்டபடியால், வரைவு செயல்திட்டத்தை மைய அமைச்சரவை கூடி விவாதித்து இறுதி செய்ய முடியவில்லை” என்ற சால்ஜாப்பை நீதிபதிகளின் முன்வைத்தது, பா.ஜ.க. அரசு.

இதுவொரு வடிகட்டிய பொய். இந்தக் கெடு தேதிக்கு முதல் நாள்தான் மைய அமைச்சரவை கூடி, சென்னை உள்ளிட்ட மூன்று விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்திருந்தது. கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையிலும் செயல்திட்டத்தை உருவாக்கக் கூடாது என்ற தீயநோக்கம் அன்றி இதற்கு வேறு காரணம் கிடையாது. எனினும், உச்ச நீதிமன்றம் செயல்திட்டத்தை வகுப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மே 8 அன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறி, வழக்கை ஒத்திவைத்தது. பா.ஜ.க. அரசிற்கு மூன்றாவது முறையாக அளிக்கப்பட்ட சலுகை இது.

செயல்திட்டத்தை உரிய தேதியில் வகுக்காமல் சால்ஜாப்புகளைச் சொல்லிவந்த பா.ஜ.க. அரசு, இன்னொருபுறத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புப் போராட்டங்களை வேவு பார்ப்பதற்கும், அவற்றை ஒடுக்குவது குறித்துத் திட்டமிடுவதற்கும் ஏற்ப அதிவிரைவுப் படையை அனுப்பி ஒத்திகை பார்த்தது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்து மே 14 அன்று வரைவு செயல்திட்டத்தைத் தாக்கல் செய்த பா.ஜ.க. அரசு, அதன் கீழ் அமைக்கப்படும் ஆணையம் மைய நீர்வளத் துறையின் எடுபிடி அமைப்பாகச் செயல்படும் நோக்கில், ‘‘காவிரி ஆணையத்தின் முடிவை ஒரு மாநிலம் ஏற்கவில்லையென்றால், அதில் இந்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது. இந்திய அரசு எந்தக் கட்டளை இட்டாலும் அதை காவிரி ஆணையம் செயல்படுத்த வேண்டும்” என இரு விதிகளை உருவாக்கியிருந்தது.

1990 தொடங்கி இன்றுவரையிலும் காவிரிப் பிரச்சினையில் இந்திய தேசிய அரசு எப்படி ‘நடுநிலையோடு நடந்து வந்திருக்கிறது என்பதை நினைவுகூர்ந்தாலே, இந்த விதிகளின் பின் ஒளிந்திருக்கும் அபாயத்தை யாரும் புரிந்துகொள்ள முடியும். புதுச்சேரி மாநில வழக்குரைஞர் இவ்விதிகளை நீக்கக் கோரி வாதாடிய பின்தான், தமிழக அரசிற்குச் சொரணை வந்தது.

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற
காவிரி நதிநீர் உரிமைப் போராட்ட வெற்றிப் பொதுக்கூட்டம்.

இவ்விதிகள் நீக்கப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளைத் தென்மேற்கு பருவ மழை தொடங்கு முன்பே அமைக்க வேண்டுமென 18.05.2018 அன்று தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.

இந்த ஆண்டிற்கான தென்மேற்குப் பருவ மழை மே 29 அன்று தொடங்கியது. இடைப்பட்ட இந்த 10 பத்து நாட்களில் செயல்திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுக்களுக்கான உறுப்பினர்களையும் நியமித்து, தமிழகத்தில் குறுவை சாகுபடி தொடங்குவதற்கு ஏற்ப செயல்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், மைய அரசோ வேண்டுமென்றே காலதாமதம் செய்து ஜூன் 1 அன்று இரவில்தான் செயல்திட்டத்தை அரசிதழில் வெளியிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்கள் அடுத்தடுத்து தமது உறுப்பினர்களை அறிவித்த நிலையில், கர்நாடகம் தனது உறுப்பினர்களை அறிவிக்காமல் சண்டித்தனத்தில் இறங்கியது.

இதனிடையே மைய அரசும் கர்நாடகாவும் பேசி வைத்துக் கொண்டாற்போல ஒரு நாடகத்தை அரங்கேற்றின. ஜூன் 12 கர்நாடகம் தனது உறுப்பினர்களை அறிவிக்க வேண்டும் என மைய அரசு கர்நாடகாவிற்குக் கட்டளையிட்டது. வழமைபோலவே அந்த உத்தரவை கர்நாடக அரசு ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. மைய அரசும் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாகப் பெய்யத் தொடங்கும் முன்புகூட அம்மாநில (காவிரி) அணைகள் காய்ந்துபோய்க் கிடக்கவில்லை. விகிதச்சார முறைப்படித் தமிழகத்திற்குத் தண்ணீரை திறந்துவிடும் அளவிற்கு கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுகளில் நீர் இருப்பு இருந்தது (தினமணி, 9.6.2018, பக்.9). இந்த இருப்பிலிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கைப் போராடிப் பெறும் வக்கும் தெம்பும் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி, மழை பெய்து மேட்டூர் நிரம்பினால் தண்ணீரைத் திறந்துவிடுவோம் எனக் கூறி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். மதுரைக்குச் சாமி கும்பிட்டுப் போக வந்த கர்நாடக முதல்வரும் இதையே கூறினார். எதிரியும் துரோகியும் எவ்வித ஒளிவுமறைவுமின்றி ஒரே படகில் பயணித்ததைத் தமிழகம் கண்டது.

ஜூன் மாத மத்தியிலேயே தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடக் கூடிய கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டிவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது. மைய அரசு நியாயமாக நடந்திருந்தால், தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில அரசுகள் அறிவித்திருந்த உறுப்பினர்களைக் கொண்டே காவிரி ஆணையத்தை முன்கூட்டியே அமைத்து, அதன் கூட்டத்தை நடத்தி, ஜூன் மாதத்திற்குரிய பங்கைத் தமிழகத்திற்குத் திறந்துவிடும்படி கர்நாடகாவிற்கு உத்தரவிட்டிருக்க முடியும். ஆனால், கர்நாடகம் தனது உறுப்பினர்களை அறிவிக்காததைக் காரணமாகக் காட்டியே ஆணையம் அமைப்பதைத் தள்ளிப்போட்டு தமிழகத்தை வஞ்சித்தது.

ஜூன் மாதத்தில் கபினியிலிருந்து தமிழகத்திற்கு அதிகப்படியாகத் திறந்துவிடப்பட்டதாகக் கூறப்படும் காவிரி நீர், அந்த அணையில் தேக்க முடியாத உபரி நீரேயொழிய, தமிழகத்திற்குரிய சட்டப்படியான பங்கு அல்ல. கர்நாடகம் தமிழகத்தை வடிகால் பூமியாகத்தான் கருதுகிறது, நடத்தி வருகிறது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உறுதிபட்டிருக்கிறது.

மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பத்து நாட்களுக்கு ஒருமுறை கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை அளவிடும் உத்தரவை மாற்ற வேண்டும் எனக் கோரிவரும் கர்நாடக அரசு, இதன் காரணமாக கர்நாடகாவில் சட்டம் பிரச்சினை ஏற்படும் என மிரட்டியும் வருகிறது. கர்நாடக அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை ஏரி, குளங்களுக்கு மடை மாற்றிவிட்டுவிட்டு, அணைகளில் போதிய நீரே இல்லை என முதலைக் கண்ணீர் வடிக்கும் நாடகத்தை கர்நாடக அரசு நீண்ட காலமாகவே நடத்தி வருகிறது. ஏறக்குறைய 30 டி.எம்.சி. தண்ணீர் இப்படி மடைமாற்றி விடப்படுவதாகத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். காவிரியிலிருந்து 30 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் சாமர்த்தியமாகத் திருடி வருகிறது. இந்தத் தண்ணீர் திருட்டைத் தொடரவும், மூடிமறைக்கவும்தான் பத்து நாட்களுக்கு ஒருமுறை அணைகளில் உள்ள நீர்மட்டத்தை ஆய்வு செய்வதை கர்நாடகா எதிர்க்கத் தொடங்கியிருக்கிறது.

இதோடு, காவிரி நீர்ப் பங்கீடு குறித்த செயல்திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதால், அது ஏற்புடையதல்ல என்ற முட்டுக்கட்டையையும் போட்டு வருகிறது, கர்நாடகம். ஏறக்குறைய ஓராண்டிற்கு முன்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை மூன்று நாட்களுக்குள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பா.ஜ.க. அரசிற்கு உத்தரவிட்டபோது, ‘‘அதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்குக் கிடையாது, நாடாளுமன்றத்திற்குத்தான் உண்டு” என வாதிட்டு, தமிழகத்தை வஞ்சித்தது, மோடி அரசு. அந்த வஞ்சகம் நிறைந்த வாதத்தை இப்பொழுது பா.ஜ.க.விற்குப் பதிலாக, காங்கிரசுமதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

கர்நாடகா மாநில அதிகாரத்தைக் கைப்பற்ற எலியும் பூனையுமாக மோதிக் கொண்ட பா.ஜ.க.வும், காங்கிரசு கூட்டணியும் தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்பதில் ஒன்றாக நிற்கின்றன. நடுவண் பா.ஜ.க. அரசு ஜூலை 2 இல் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தும் அறிவிப்பை வெளியிடுகிறது. அதேசமயத்தில், கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவும், கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மைய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடாவும் கர்நாடகா அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்திற்குத் தண்ணீரைத் தருவதைத் தடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள்.

“ஜூலை 10 அணை திறக்கப்பட்டால்தான், குறுவை சாகுபடியை உத்தரவாதப்படுத்த முடியும்; இல்லையென்றால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாவது நிச்சயம்” என எச்சரிக்கின்றன தமிழக விவசாய சங்கங்கள். டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வா, சாவா என்ற இக்கட்டில் மீண்டும் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதன்படி அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் அதிகாரம் ஆகியவை சோளக்காட்டு பொம்மைகளா, இல்லையா என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வெகுகாலம் காத்திருக்கத் தேவையில்லை.

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

மோடியைக் கொல்ல சதியாம் !

ன்முறையைத் தாங்களே அரங்கேற்றிவிட்டு பழியை எதிர்த்தரப்பினர் மீது போட்டு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது என்பது  நாஜிகள் காலம் தொட்டு பாசிஸ்டுகள் கடைபிடித்து வரும் அணுகுமுறை. இந்த விசயத்தில் பார்ப்பன பாசிஸ்டுகள் நாஜிகளை விடவும் கைதேர்ந்தவர்கள். தூத்துக்குடியில் மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, அதையே காரணம் காட்டி 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, பிறகு போராடிய மக்கள் மீதும் முன்னணியாளர்கள் மீதும் சரம் சரமாகப் பொய்வழக்குகள் போடுகிறார்கள். இது மாநில உளவுத்துறையை கைப்பாவையாக வைத்துக் கொண்டு மத்திய உளவுத்துறை அரங்கேற்றிவரும் நாடகம்.

மே – 22 பின் தூத்துக்குடி பிரச்சினையில் என்ன நடக்கிறதோ அதுவேதான் கடந்த ஜுன் – 7 ஆம் தேதியன்று  மகாராட்டிரத்திலும் நடந்தது. 2018 ஜனவரி – 1 ஆம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில், இலட்சக்கணக்கான தலித் மக்கள் கலந்து கொண்டதால், ஆத்திரம் கொண்ட இந்துவெறி அமைப்புகள் அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டே வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன.

2018 ஜனவரி 1-ம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு
நினைவு தின நிகழ்ச்சியில் திரண்ட இலட்சக்கணக்கான தலித் மக்கள்.

தற்போது வன்முறைக்குக் காரணம் மாவோயிஸ்டுகள்தான் என்று பொய்க்குற்றம் சாட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முன்னணியாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் வேட்டையாடி வருகிறது மகாராட்டிர அரசு. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர்களே மாவோயிஸ்டுகள்தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததைப் போல மோடியைக்  கொலை செய்வதற்கு மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டி, ஜுன் 7 ஆம் தேதியன்று 5 பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்திருக்கிறது மகாராட்டிர போலீஸ்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்யப்பட்ட (இடமிருந்து) சுரேந்திர காட்லிங், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், ஷோமா சென், ரோனா வில்சன்.

கைது செய்யப்பட்ட சுரேந்திர காட்லிங் (வயது 47) வழக்கறிஞர். நாக்பூரில் பிறந்தவர். 1990 ஆவ்கான் நாட்டிய மஞ்ச் என்ற புரட்சிகர பண்பாட்டு அமைப்பில் செயல்பட்டவர். பிறகு சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு  எதிரான வன்கொடுமைகள், அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மக்கள் வழக்கறிஞர்.  முக்கியமாக பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கறிஞர். எளிய வாழ்க்கை வாழ்பவர். சி.பி.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் செயல்வீரர். பீமா கோரேகான் நிகழ்வு நடைபெற்ற ஜனவரி 1 ஆம் தேதியன்று, கல்கத்தா நீதிமன்றம் ஒன்றில் வழக்கு நடத்திக் கொண்டிருந்த அவரை இவ்வழக்கில் தொடர்புபடுத்தியிருக்கிறது, மராத்திய பா.ஜ.க. அரசு.

சுதிர் தவாலே (54) நாக்பூர் குடிசைப்பகுதி ஒன்றில் தலித் சமூகத்தில் பிறந்த இவர், 2011 இல் மாவோயிஸ்டு தொடர்புக்காக கைது செய்யப்பட்டு 40 மாதங்களுக்குப் பின் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். வெளியே வந்தவுடன் ஏற்கனவே தான் நடத்திவந்த வித்ரோகி என்ற பத்திரிகையை தொடர்ந்து தீவிரமாக நடத்தினார். முக்கியமாக சுமார் 200 தலித் இயக்கங்களை ஒன்றிணைத்து பீமா கோரேகான் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்தியதுதான் இவர் செய்த மிகப்பெரிய குற்றம்.

மகேஷ் ராவத் (30)  மராத்திய மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009 இல் படிப்பதற்காக மும்பையில் உள்ள டாடா சமூகவியல் ஆய்வுக் கழகத்தில் சேர்ந்த பிறகுதான் இவர் சமூக கண்ணோட்டம் பெறத் தொடங்கினார் என்கிறார் இவரது சகோதரி. கட்சிரோலி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இவர் ஆற்றிய பணியின் காரணமாக, பிரதமரின் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆய்வாளராக அங்கீகரிக்கப்பட்டவர். சூரஜ்கர் இரும்புக் கனிமச் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக பழங்குடி மக்களை திரட்டி பல போராட்டங்களை நடத்தியவர்.

ஷோமா சென் (60) நாக்பூர் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கியத் துறைத் தலைவர். ஒருசில நாட்களில் பணி ஓய்வு பெறவிருந்தவர். பெண் விடுதலை இயக்கங்களிலும் மனித உரிமை அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டவர். அவரது கணவர் துஷார்காந்த் பட்டாசார்யா, 2007 ஆம் ஆண்டில் மாவோயிஸ்டு தொடர்புக்காக நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து 2011 இல் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டவர்.

ரோனா வில்சன் (47) கேரளத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் வசிப்பவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவராக இருந்தவர். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர். கிலானியுடன் இணைந்து அரசியல் கைதிகளுக்கான விடுதலை இயக்கத்தை நடத்தி வருபவர். இவர் பீமா கோரேகான் நிகழ்வுக்கு செல்லவில்லை என்பதும், அதனை ஏற்பாடு செய்தவர்களுடன்  இவருக்கு எந்தவிதத் தொடர்பும்இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கை விடுதலை செய்யக்கோரி நாக்பூர் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

மோடியைக் கொல்லச் சதி செய்ததாக குற்றம் சாட்டி, இந்த ஐந்து பேரையும் கைது செய்வதற்கு அரசு தரப்பு கொடுத்த  ஆதாரம் ஒரு மொட்டைக் கடிதம். மாவோயிஸ்டு அமைப்பைச் சேர்ந்த எம் என்பவரால் பிரகாஷ் என்பவருக்கு, ஏப்ரல்,  18,  2017 இல்  எழுதப்பட்ட ஒரு கடிதம்.  ரோனா வில்சனின் வீட்டை ஏப்ரல் 2018 இல் சோதனை செய்தபோது இந்த கடிதத்தின் நகலை அவருடைய கணினியிலிருந்து கைப்பற்றியதாக போலீஸ் கூறுகிறது. இதற்குமேல் அந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மைக்கு வேறு எந்த ஆதாரமும் கிடையாது.

“பிரதமரை கொலை செய்யவிருக்கிறார்கள் என்ற தகவல் அடங்கிய கடிதம் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில், அக்கடிதத்தினை ஏப்ரல் மாதத்தில் கைப்பற்றிய போலீஸ், ஜுன் மாதம் வரையில் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் அந்தக்  கடிதத்தின் நகலைக் காட்டுகிறாரே, அவர் கைக்கு அது வந்தது எப்படி?” என்று பல கேள்விகளை எழுப்புகிறார் மார்க்சிஸ்டு கட்சியின் புனே நகரத் தலைவர் சுபோத் மோரே.

இது மட்டுமல்ல, ஒரு மாபெரும் கொலைச் சதிக்கு ஆதாரமாகக் காட்டப்படும் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கமே நகைக்கத்தக்க கேலிக்கூத்தாக அமைந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில் எம் என்று கையொப்பமிட்டுள்ளவர் மாவோயிஸ்டு கட்சியின் மராட்டிய மாநிலச் செயலர் மிலிந்த் தெல்தும்டெ என்று கூறுகிறது போலீஸ்.

பீமா கோரேகான் நிகழ்வின் செலவுகளுக்குப் பொறுப்பு சுதிர் தவாலே என்றும், எதிர்கால நிதி தேவைகளுக்கு ஷோமா சென், சுரேந்திர காட்லிங் ஆகியோரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாடெங்கும் தலித் போராட்டங்களை கிளப்பி விடுவதற்கு தோழர்கள் ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோர் உதவுவார்கள் என்றும், இது விசயமாக மாவோயிஸ்டு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியுடனும் தொடர்பில் இருப்பதாகவும் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  மோடி ஆட்சியை அகற்றியே தீரவேண்டும் என்றும், ராஜீவ் காந்தி சம்பவத்தை போல ஒன்றை நடத்துவதுதான் அதற்கு வழி என்றும் கடிதம் கூறுகிறது. இது மட்டுமல்ல, நான்கு கோடி ரூபாய் பணம், ஒரு எம்-4 ரக துப்பாக்கி, சில இலட்சம் ரவுண்டு தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது பற்றியும் அதே கடிதம் குறிப்பிடுகிறது.

நக்சலைட் தீவிரவாத பீதியூட்டும் ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் இதழின் அட்டைப் படம்.

அதாவது, போலீஸ் கைது செய்ய விரும்பும் எல்லோருடைய பெயரும் இடம்பெறுகின்ற வகையிலும், ஜிக்னேஷ் மேவானி முதல் காங்கிரசு வரையிலான பா.ஜ.க. அரசியல் எதிரிகள் அனைவரின் பெயரும் இருக்கும் வகையிலும், ஊபா சட்டத்தின் எல்லா குற்றப் பிரிவுகளும் வரும் வகையிலும் தயாரிக்கப்பட்டிருக்கும் கடிதம்தான் இது.

இதன் நம்பகத்தன்மையை முன்னாள் உயர் போலீஸ்  அதிகாரிகளே ஏற்றுக்கொள்ளவில்லை. ‘‘தமது கடிதங்களில் சம்மந்தப்பட்ட நபர்களின் உண்மையான பெயர்களை மாவோயிஸ்டுகள் எப்போதுமே பயன்படுத்த மாட்டார்கள்” என்கிறார் முன்னாள் ஜார்கண்ட் டி.ஜி.பி. ஜி.எஸ்.ராத்.

“இப்படித்தான் குஜராத்திலும் இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 22 பேர் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு போலி மோதலில் கொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு வழக்கிலும் இவ்வாறு கொல்லப்படுபவர்கள் லஷ்கர் இ தொய்பா அல்லது ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் மோடியைக் சொல்லச் சதி செய்ததாகவும்தான் சொன்னார்கள். ஆனால் டி.ஐ.ஜி. வன்சாரா கைது செய்யப்பட்டவுடனே இத்தகைய கொலைகள் நின்றுவிட்டன” என்கிறார் குஜராத்தின் முன்னாள் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.  ஆர்.பி.ஸ்ரீகுமார்.

“மோடியைக் சொல்லச் சதி என்ற நாடகம் ஏற்கனவே அரங்கேறிய பழைய நாடகம்தான்.  இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலையில் என்ன நடந்ததோ அதுதான் இதிலும் நடக்கிறது. மோடி கொலைச் சதியில் வழக்கறிஞர் காட்லிங்கை தொடர்புபடுத்துவதென்பது, தலித் மக்களின் போராட்டத்தை மாவோயிஸ்டு சதி என்று  திசைதிருப்புவதற்கான  திட்டமிட்ட முயற்சி” என்கிறார் ஆனந்த் தெல்தும்ப்டெ.

_________________________________________________________________

ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆத்திரம் வருவது ஏன்?

லட்சக்கணக்கில் மக்கள் திரண்ட பீமா கோரேகான் வெற்றியின் 200 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் ஆத்திரத்தைக் கிளறியதில் வியப்பில்லை.  ஆர்.எஸ்.எஸ் இன் மூதாதைகளான பார்ப்பன பேஷ்வாக்களின் ஆட்சியின் கீழ் தாங்கொணா சாதிய ஒடுக்குமுறையை சந்தித்து வந்த மகாராட்டிரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மகர் சாதியினர், கிழக்கிந்தியக் கம்பெனிப் படையின்  சிப்பாய்களாக நின்று போரிட்டு, 1818 இல் பீமா கோரேகானில் பேஷ்வா படையினை முறியடித்தனர். அந்த வெற்றி கிழக்கிந்தியக் கம்பெனியின் வெற்றியாக இருந்த போதிலும், தங்களைக் கொடூரமாக ஒடுக்கி வந்த பேஷ்வாக்களுக்கு எதிரான அந்தப் போரை தமது சொந்தப் போராகவே கருதிப் போரிட்டனர், மகர் சிப்பாய்கள்.

அந்த வெற்றியின் நினைவாக ஆண்டுதோறும் நினைவுநாள் நடத்தப்படுவதும், அந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவதும் வழமையாக நடப்பதுதான். 2018 என்பது 200 ஆம் ஆண்டு என்பதால், எல்லா தலித் அமைப்பினரையும் ஒன்றுபடுத்தி ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இந்த ஆண்டு ஜனவரி 1 அன்று அது நடத்தப்பட்டது. ஜிக்னேஷ் மேவானி போன்றோர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியால் ஆத்திரமூட்டப்பட்ட இந்து வெறி அமைப்புகள், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். சரத் பவார் உள்ளிட்ட எல்லா கட்சியினரும் இதனைக் கண்டித்தனர்.

பீமா கோரேகான் வன்முறையின் சூத்திரதாரிகளான மிலிந்த் ஏக்போடே மற்றும் சம்பாஜி பிடே.

சமஸ்த இந்து அகாதி என்ற அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போடே, சிவ் பிரதிஷ்டான் இந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவரான சம்பாஜி பிடே ஆகிய இருவர்தான் இந்த வன்முறையின் சூத்திரதாரிகள் என்று அம்பலமான பின்னரும், ஏக்போடேயை மட்டும் கைது செய்து உடனே பிணையில் விடுவித்தது மராத்திய அரசு. குற்றவாளிகளைக் கைது செய்ய மறுக்கும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் அமைப்புகள் அறைகூவலின் கீழ், ஜனவரி 4 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட மாநில பந்த் பெரும் வெற்றி பெற்றது.

இந்த அரசியல் எதிர்ப்புகளால் ஆத்திரம் கொண்ட பா.ஜ.க. அரசு, சுதிர் தவாலே மற்றும் பலர் மீது 153-ஏ (இரு வகுப்பினரிடையே மோதலைத் தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் மற்ற நான்கு பேரையும் இந்த வழக்கில் சேர்த்தது.  ஏப்ரல் மாதம் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்தியது. இந்த சோதனையில்தான்,  ரோனா வில்சனின் கணினியில் மாவோயிஸ்டு கட்சியினரின் கடிதத்தையும், அதில் மோடியைக் கொலை செய்வதற்கான சதியையும் ‘கண்டுபிடித்தது மகாராட்டிர போலீஸ்.

__________________________________________________________________

அது மட்டுமல்ல, போராடும் மக்கள் மற்றும் இயக்கங்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அறிவுத்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கொலை செய்து அத்தகையவர்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்புவது அல்லது அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறை வைப்பது என்பதுதான் இந்துத்துவ பாசிஸ்டுகளின் முதன்மையான திட்டம்.

வழக்கறிஞர் காட்லிங்கின் கைதை எதிர்த்து நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியிருக்கிறது.  ஐ.ஏ.பி.எல். அமைப்பின் சார்பில் காட்லிங்கின் கைதைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் பல முன்னணி வழக்கறிஞர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இத்தகைய எதிர்ப்புகளும்கூட எழும்பாமல் நசுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனது ஊடகத்துறை வேட்டைநாயான அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி.யை ஏவி விட்டிருக்கிறது பா.ஜ.க.

கடந்த ஜூலை 4 ஆம் தேதி ‘‘சூப்பர் எக்ஸ்க்ளூசிவ் பிரேக்கிங் நியூஸ்” என்ற பெயரில் ஒரு பொய்ச்செய்தியை பரப்பியது ரிபப்ளிக் டிவி. பி.யு.சி.எல். அமைப்பின் தேசியச் செயலர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு எழுதிய கடிதம் சிக்கி விட்டதாகவும், அதில் காஷ்மீரைப் போன்ற நிலையை உருவாக்க வேண்டுமென்று அவர் எழுதியிருப்பதாகவும், அவருக்கு மாவோயிஸ்டுகளிடமிருந்து பணம் வந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் அச்செய்தி கூறியது.

சுதா பரத்வாஜைப் பற்றி மட்டுமல்ல, பி.யு.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் நிறுவனரான கவுதம் நவ்லகாவுக்கும் மாவோயிஸ்டு கட்சியுடன் தொடர்பு இருக்கிறது என்று அடுத்த புரளியை ரிபப்ளிக் டிவி கிளப்பியது. இவை குறித்து  தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது பி.யு.சி.எல். அமைப்பு. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக சிவில் மற்றும்  கிரிமினல் மான நட்ட வழக்கு தொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார், சுதா பரத்வாஜ்.

எல்லா முனைகளிலும் தோற்று, மக்களின் வெறுப்பை மென்மேலும் ஈட்டி வரும் மோடி அரசு, கார்ப்பரேட் கொள்ளையையும் இந்துத்துவ பாசிசத்தையும் எதிர்க்கின்ற முன்னணியாளர்களைக் கொலை செய்வதன் மூலமும், பொய் வழக்குகளில் சிறை வைப்பதன் மூலமும், மக்களின் எதிர்ப்பை நீர்த்துப் போகவைக்க முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. அதன் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை.

  • சூரியன்

புதிய ஜனநாயகம் – ஜூலை 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com