வீட்டை கூட்டுவதற்கும் தெருவை சுத்தம் செய்வதற்கும் அவசியமான துடைப்பம், இன்று மோடியின் ஆட்சியில் அதைத் தாண்டிய அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆம், ‘தூய்மை இந்தியா’ என வீதிகளில் குப்பையைக் கொட்டி கவர்னர்களும், பிரபலங்களும் ஆளுக்கொரு துடைப்பத்துடன் போட்டோவிற்கு போஸ் கொடுக்க உதவும் கருவியாக மாறியுள்ளது. இதே வேலையை அன்றாடம் செய்யும் துப்புரவுத் தொழிலாளிகளின் வாழ்க்கை மட்டுமலல, அந்த துடைப்பங்களை பின்னிக் கொடுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
ஒரு நாள், சிலநாட்கள் அல்ல தங்கள் வாழ்க்கையையே வீதிகளில்தான் வாழ்ந்து முடிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் சோகம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. இங்கே சென்னை ஆலந்தூரில் துடைப்பங்களை பின்னி விற்கும் சில தொழிலாளிகளைச் சந்திப்போம்.
அழகர்சாமி, சொந்த ஊர் திண்டுக்கல்.
என்னோட பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து துடைப்பம் வியாபாரம்தான். நாங்க அம்பது வருசமா இதே பிளாட்பாரத்துல இருக்கோம். தொழிலுக்கு பேங்குல லோனு கேட்டா ஆயிரம் கேள்வி, சொத்து பத்து எல்லாம் கேக்குறாங்க. சொத்துக்கு நா… எங்க போவேன்?
பாப்பாத்தி, அழகர்சாமியின் மனைவி.
எங்களுக்கு ரெண்டு பசங்க. ஊர்லயே இருக்காங்க. ஏழாவது வரைக்கும்தான் படிக்க வைக்க முடிஞ்சது. இப்ப ஓட்டல்ல வேலை செய்யுறாங்க. பசங்கள இங்க அழைச்சிட்டு வரலாம்னா வீடு இல்ல. நாங்க குளிக்கிறது, தூங்கறது எல்லாம் பிளாட்பாரத்துல, சாப்பாடு அம்மா ஓட்டல்ல. இப்படியே எங்க பொழப்பு ஓடிட்டு இருக்கு.
மூணு மாசம் வரைக்கும் லோடுவர துடைப்பத்த பின்னி சுத்தம் பண்ணுவோம். அப்புறம் தலை சுமையா தூக்கிட்டு விக்கறதுக்கு கெளம்பிடுவோம். ஒரு துடைப்பம் 15 ரூபா. ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய்க்கு துடைப்பம் வித்தாலே எங்க பாரம் கொறஞ்ச மாதிரி.
திண்டுக்கலைச் சேர்ந்த தம்பதியினர்.
தேனி, வத்தலகுண்டு, உசிலம்பட்டியில இருந்து மொத்தமா துடைப்பம் வாங்குறோம். தமிழ்நாடு முழுவதும் துடைப்பம் பின்னும் வேலை செய்யிறவங்களுக்கு சரக்கை கொண்டு வந்து கொடுப்போம். இந்த தொழில்ல லாரி வாடகை, சாப்பாட்டு செலவுன்னு அதிகம். குடும்பத்துல இருக்கவங்களே சேர்ந்து வேலை செஞ்சாதான் சோறு. சரக்கு எடுக்க கடன் வாங்குறது அதுக்கு வட்டி கட்றதுன்னு வாழ்க்கை ஓடுது.
வீரம்மாள், சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை.
நா… உளுந்தூர்பேட்டை விழுப்புரம் பக்கம். பதினாலு வயசுல இந்த (சென்னை ஆலந்தூர்) ஊருக்கு வந்தேன். என் வீட்டுக்காரு மீன்பாடி வண்டி ஓட்டுனாரு. அவரு போயி சேந்துட்டார். முப்பந்தஞ்சி வருசமா இந்த வேலைய செய்யுறேன். ஒரு நாளைக்கு 100, 150 சம்பாதிக்கிறேன். அதை வச்சிக்கிட்டுதான் ஒப்பேத்துறேன். நோயிங்க அதிகமா வருது. தூசு தும்பு பாடாபடுத்துது. அடிக்கடி தலைவலி, கைகால் நோவு, படபடன்னு இருக்கும். இப்ப கண்பார்வையும் சரியா தெரில.
நல்லதம்பி, முன்னாள் விவசாயி.
சின்ன வயசுல விவசாயம் பண்ணேன். மழை இல்லாததால விவசாயம் பண்ண முடியல. இங்க வந்தா கெடச்சது இந்த வேலைதான். ஒரு நாளைக்கு இருநூறு தருவாங்க. அதுவும் நாலு நாளைக்குதான் வேலை. லோடு வந்தா கூப்பிடுவாங்க. வேற என்ன சொல்ல?
சமீபத்தில் கிறித்தவப் பாதிரியார்கள் 5 பேர் தம்மிடம் பாவ மன்னிப்பு பெறவந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, கேரளா உள்ளிட்டு முழு இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலியல் வன்முறையையும் சாமியார்களையும் பிரிக்கவே முடியாது எனும் வண்ணம் இந்தக் குற்றங்கள் எல்லா மதங்களிலும் அதிகரித்து வருகின்றன.
மடங்கள் மற்றும் டிரஸ்டுகள் மூலம் கருப்புப்பண பரிமாற்றத்திலும், ஆயுர்வேத வஸ்துகள் விற்பனை, தியானம், யோகா ஆகியவற்றின் மூலம் ஆன்மீகக் கொள்ளையிலும் ஈடுபட்டுவரும் இவர்கள், நவீன ஆன்மீக கார்ப்பரேட்டுகளாக உருவெடுத்துள்ளனர். இவர்களுக்கிடையில் சொத்துக்களை பங்கு பிரிப்பதிலும் வாரிசாவதிலும் நடக்கும் சண்டைகளும் அவ்வப்போது அம்பலமாகின்றன.
வேதாந்தி ஹவாலா புரோக்கராக செயல்பட்டதும், ராம்ரகீம் அரியானா பா.ஜ.க-வின் ஓட்டு வங்கியை தயார் செய்ததும், சங்கராச்சாரி அரசியல் புரோக்கராக செயல்பட்டதும், சங்கரமடத்தை காமக் கூடாரமாக்கியதும், கூலிப்படையை அமர்த்தி சங்கரராமனைப் போட்டுத் தள்ளியதும் தமிழகம் அறிந்த சில உதாரணங்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜக்கி வாசுதேவும், பாபா ராம்தேவும் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆன்மீக அடியாட்களாக பணியாற்றுகின்றனர்.
இந்தியாவில் 90-களில் விரிவடைந்த மறுகாலனியாக்க சந்தைப் பொருளாதாரம், நடுத்தர வர்க்கத்தின் கைகளில் ஓரளவு பணத்தைக் கொடுத்ததோடு கூடவே வேலை நெருக்கடிகள், நுகர்வு வெறி ஆகியவற்றையும், இவற்றின் உபவிளைவுகளான மன அழுத்தம், நிம்மதியின்மை ஆகியவற்றையும் அள்ளிக் கொடுத்தது.
இங்கேதான் இந்தச் சாமியார்கள் தங்களை யோகா, தியானம் என நிவாரணம் வழங்கும் இரட்சகர்களாக காட்டிக் கொள்கின்றனர். அதன்மூலம் முதலாளித்துவ சுரண்டலோடு ஒத்துவாழ் மக்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றனர். பிரதிபலனாக இவர்கள் முதலாளிகளால் ஆராதிக்கப்படுகின்றனர், ஊடகங்களால் பிரபலப்படுத்தப்படுகின்றனர். அரசுகளோ சொத்து சேகரிப்புக்கு துணைபோகிறது.
தமது ஆன்மீக – பொருளாதார – அரசியல் அதிகாரத்தை உறுதிபடுத்தும் இந்த கிரிமினல் சாமியார்கள், இறுதியில் தம்மிடம் நிவாரணம் தேடிவரும் பக்தர்களையே பாலியல் வன்முறைக்குள்ளாக்கி சிதைக்கின்றனர். ஜெயேந்திரன், ஆசாராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா, கிறித்தவ பாதிரியார்கள்… என்று இந்தப் பட்டியில் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் பி.ஜைனுலாபிதீனும் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆன்மீகக் கிரிமினல்களை அடையாளம் காட்டுகிறது இந்த தொகுப்பு!
தோழமையுடன் புதிய கலாச்சாரம்
ஆன்மீகக் கிரிமினல்கள் ! – புதிய கலாச்சாரம் ஜுலை 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
ஆன்மீகக் கிரிமினல்கள் ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
‘புனிதமும்’ வக்கிரமும் : திருச்சபையின் இரு முகங்கள்
5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள்!
குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !
விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !
சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!
அடங்கமாட்டியா நித்தியானந்தா ?
பரகால ஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள் !
பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
இயற்கை வளங்கள் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டக்காரர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைப்பது, கருத்துரிமை – எழுத்துரிமையை மறுப்பது என்று தொடரும் மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த குரல் 21-07-2018 சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணிக்கு தஞ்சை இரயிலடியில் ஓங்கி ஒலித்தது.
கடந்த 08-07-2018 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் அனைத்துக் கட்சிகள் – இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்று தமிழகத்தில் நிலவிவரும் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்தது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டது. ஒருசில பத்திரிகைகள் தவிர வேறு ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை.
அதன் தொடர்ச்சியாக 10-07-2018 அன்று தஞ்சை மண்டல காவல்துறை தலைவரையும், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோரை அனைத்துக் கட்சிகள் – இயக்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளை போலீசு தடைசெய்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 21-07-2018 அன்று தஞ்சை இரயிலடியில் நடைபெறவிருக்கும் தொடர்முழக்கப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தப்பட்டது.
மனுவை பரிசீலித்து அனுமதி அளிப்பதாக, தஞ்சை மண்டல காவல்துறை தலைவர் வாக்குறுதி தந்தார். பங்கேற்பாளர்கள் விவரங்கள் அடங்கிய துண்டுபிரசுரமும், சுவரொட்டிகளும் நகரில் பரவலாக விநியோகிக்கப்பட்டும், ஒட்டப்பட்டும் மக்களின் கவனத்தை ஈர்த்தன.
வழக்கம்போலவே 20-07-2018 அன்று கேள்விகேட்டு விளக்கம் பெறும் சடங்குகளை முடித்துவிட்டு அனுமதி மறுத்தது காவல்துறை. கேள்விக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும் தடைக்குக் காரணம் கூறியது.
20-07-2018 அன்று மாலையே அனைத்துக் கட்சிகள் – இயக்கங்கள் பிரதிநிதிகள் கூடி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அடக்குமுறை கடுமையாக இருந்தாலும் எதிர்கொளவது சிறைக்குச் செல்ல வேண்டி இருந்தாலும் செல்வது என்ற முடிவோடு கைதுக்குத் தயாராக கைலி, துண்டுடன் பலர் வந்திருந்ததை ஆர்ப்பாட்ட இடத்தில் பார்க்க முடிந்தது. 200க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை இரயிலடியில் குவிந்து போலீசின் கட்டளை செல்லுபடியாகாது என்ற நிலையை உருவாக்கத் தயாராகினர்.
தஞ்சை ஆர்ப்பாட்டம்
1 of 5
போலீசு சற்று பின்வாங்கி கெடுபிடிகளைக் குறைத்துக்கொண்டு 2 மணிநேரம் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தது. சரியாக 5.30 மணிக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலர் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்ட இடத்தைச் சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் நின்று ஆதரவு அளித்தனர். கருத்துரிமை பறிப்புக்கு எதிராக விண்ணதிர முழக்கம் எழுப்பப்பட்டது.
கோ.திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்), சு.பழனிராஜன் (சமவெளி விவசாயிகள் சங்கம்), மருத்துவர். இளரா. பாரதிச்செல்வன் (மீத்தேன் திட்ட எதிரப்புக் கூட்டமைப்பு), அருண்ஷோரி (தமிழ் தேசிய மக்கள் முன்னணி), வைகறை (மாவட்ட செயலர் – தமிழ் தேசியப் பேரியக்கம்), செல்லப்பா (மனிதநேய மக்கள் கட்சி), ஜீவா (சி.பி.ஐ – எம்.எல் – லிபரேசன்), விடுதலை குமரன் (சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை), காளியப்பன் (மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர்), கோ.நீலமேகம் (மாவட்ட செயலர் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), செந்தில் (மாவட்டக்குழு உறுப்பினர் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் உரையாற்றினர்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், நாடு முழுவதும் நடைபெறும் மோடி, எடப்பாடி அரசுகளின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் எழுந்த ஒன்றுபட்ட கண்டனக்குரல் மக்கள் மத்தியிலும், ஜனநாயக சக்திகள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. தஞ்சையில் அடக்குமுறைக்கு அஞ்சாமல், பதிலடி கொடுத்த ஒற்றுமைக் குரல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையை இந்த ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தி: அவினாசி திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடுவதா என்று கவுண்டர் சாதிவெறியர்களின் அட்டூழியம் செய்திருக்கின்றனர். பாத்திரங்களை உடைத்து, சமையல் செய்யவிடாமல் செய்தனர். அரசுப் பள்ளி நிர்வாகமும் பாப்பம்மாளை ‘காலனி’யில் செயல்படும் பள்ளிக்கு இடமாற்றம் செய்து விட்டது.
பிறகு பாப்பம்மாளுக்கு ஆதரவாகவும், சாதிவெறியர்களுக்கு எதிராகவும் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் கருத்து வர ஆரம்பித்ததும் அவரை அதே பள்ளியில் பணியில் அமர்த்தியது அரசு. ஆனாலும் சாதிவெறியர்கள் அதை ஏற்பதாக இல்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பது போன்றவை செய்து தமது எதிர்ப்பில் உறுதியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்னரும் பாப்பம்மாள் இதே சாதிவெறிக் காரணத்தால் நான்கைந்து பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் உயர்கல்வி அமைப்பான யூ.ஜி.சி. (UGC) என்ற பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க முன்வரைவுச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம். இதன் மூலம் பெரும்பான்மை மாணவர்களின் உயர் கல்வி கற்கும் வாய்ப்பை அடியோடு ஒழித்துக்கட்ட முடிவு செய்துவிட்டது மோடி அரசு.
நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் 1956 –இல் நாடாளுமன்ற சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுதான் பல்கலைக்கழக மானியக்குழு. புதிய பல்கலைக்கழகங்களை, உயர்கல்வி நிறுவனங்களை எந்தவொரு மாநிலத்தில் தொடங்குவதற்கும் 60% நிதி உதவி செய்து வருகிறது யூ.ஜி.சி. இதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்து நிதி உதவியும் செய்கிறது. பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கும் இந்த நிதி உதவி கிடைக்கும். கல்வியாளர்களை அதிகப்படியாக கொண்ட யூ.ஜி.சி, உயர்கல்வி நிறுவனங்களை நேரடி ஆய்வுகள் மூலம் மதிப்பீடு செய்து தரத்தை உத்திரவாதப்படுத்தும் கடமையும், பொறுப்பும் கொண்ட தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதனால்தான் அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளால் கடந்த காலங்களில் தரமான கல்வியை கொடுக்க முடிந்தது.
அரிகவுதம், முன்னாள் யூ.ஜி.சி தலைவர்.
கல்வியில் தனியார்மயத்தை புகுத்தி வியாபாரமாக்கப்பட்ட பின்பு, யூ.ஜி.சி யை இடையூறாக பார்க்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். 18 ஆண்டுகளுக்கு முன்பே யூ.ஜி.சி யை கலைத்துவிட முயன்றது கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பி.ஜே.பி அரசு. 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் உயர் கல்வி சீர்திருத்தத்திற்காக கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா – அம்பானி தலைமையில் குழு அமைத்தார்கள். அந்தக் குழு “உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி நிதி வழங்கக் கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியோடு அந்தந்த பல்கலைக்கழகங்களே நிதி திரட்டிக்கொள்ள வேண்டும்’’ என்று யூ.ஜி.சி யை கலைக்க தூபம் போட்டது. மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததும் 2015-இல் முன்னாள் யூ.ஜி.சி தலைவர் அரிகவுதம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூ.ஜி.சியை கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிக்கை கொடுத்தது. அதனடிப்படையில்தான் இன்று மோடி அரசு யூ.ஜி.சி யை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை ஏற்படுத்த சட்டம் கொண்டு வருகிறது. நம் கையை முறித்து நமக்கே சூப் வைத்து தருகிறார்கள்.
’தரத்தை’ உயர்த்தவே உயர்கல்வி ஆணையம் கொண்டுவரப்படுகிறது என்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர். இதே காரணத்தைச் சொல்லி கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தரத்தின் லட்சணம் என்ன? தனியார்பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரம் என்ன? பல நிர்மலாதேவிகளையும், மோசடி செய்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட செல்லதுரை போன்ற கிரிமினல் துணைவேந்தர்களையும்தான் உருவாக்க முடியுமே தவிர வேறெதையும் கிழிக்க முடியாது. உன்னதமான சேவையான கல்வியை இலாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றிவிட்டார்கள். இலஞ்சம், ஊழல், முறைகேடு என ஒட்டுமொத்த கல்வித்துறையும் கிரிமினல் மாஃபியாக்கள் பிடியில் சிக்கியிருக்கிறது. இவர்களால் எப்படி தரமான கல்வியை தரமுடியும்? இதை நம்ப நாம் என்ன கேனைகளா?
ஜவடேகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்.
கல்வியின் மீதான மாநில அரசுகளின் உரிமையை முழுமையாக பறித்து மையப்படுத்துவது. அதை அப்படியே கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பது. இது தான் மோடி அரசின் மாஸ்டர் பிளான். இதை செய்வதற்கான அமைப்புதான் உயர் கல்வி ஆணையம்.
உயர்கல்வி ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 8 பேர் மத்திய அரசு உயரதிகாரிகள். இதன் தலைவர் அதிகாரிகளால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் வெளிநாடுவாழ் இந்தியராகவும் இருக்கலாம். அப்படியென்றால், கொலைகார ஸ்டெர்லைட்டின் அனில் அகர்வால்கூட இதன் தலைவராகலாம். ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தையும் மூடும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு. அரசு செலவீனங்களை குறைப்பது என்ற பெயரில் அரசு உயர்கல்வி நிறுவனங்களை எல்லாம் நிச்சயமாக மூடி விடுவார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களை நடத்துவார்கள்.
பல நூறு அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும், ஐ.ஐ.டி-க்கள், ஐ.ஐ.எம்-களை நடத்துவதற்கும் நிதியை நீங்களே கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என தன்னாட்சியாக்கப்படுகின்றன. ஆனால், இன்னும் ஒரு செங்கல்லைக்கூட வைத்து கட்டப்படாத, வெறும் பேப்பரில் மட்டும் பிளானாக இருக்கும் அம்பானியின் ’ஜியோ பல்கலைக்கழகத்திற்கு’ மேன்மைதகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கி 5 ஆயிரம் கோடியை அள்ளிக்கொடுக்கிறார் மோடி.
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அரசு இதுவரை வழங்கி வந்த ஸ்காலர்ஷிப் (அரசாணை.92 அடிப்படையிலானது) நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்காலர்ஷிப் குறைக்கப்படுகிறது. இவைகளெல்லாம் உயர்கல்வியை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஒழித்துக்கட்டுவதன் வெளிப்பாடுகள்தான். ஏற்கனவே நீட் தேர்வை திணித்து மருத்துக்கல்வியை பறித்துக்கொண்டார்கள். பொறியியல் கல்வியும் இல்லை, ஏதாவது ஒரு டிகிரியை வாங்கி முன்னேறிவிடலாம் என நினைக்கும் ஏழை – நடுத்தர வர்க்க மாணவனின் கனவையும் அடித்து நொறுக்குகிறார்கள். தனியார்பள்ளியில் என்னதான் செலவு செய்து படித்தாலும் இனி +2 தாண்ட முடியாது.
ஒருபக்கம், உயர்கல்வியை கார்ப்பரேட் கழுகுகள் சூறையாடப்போகிறார்கள். இன்னொரு பக்கம், தரத்தின் பெயரால் பணக்கார மேட்டுக்குடிகளான ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் உயர்கல்வி, ஏழை – நடுத்தர வர்க்கத்தினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரான பெரும்பான்மையினருக்கு உயர்கல்வியை மறுப்பது சட்டப்பூர்வமாகப்போகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்? ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவராமல் போனதன் விளைவை இன்று நம் மாணவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டுமொரு அநீதியை சகித்துக்கொண்டு செல்லக்கூடாது. கலை, அறிவியல் கல்லூரி, சட்டம், பொறியியல், மருத்துவம், பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒன்றுசேர்வோம். பேராசிரியர்கள், பெற்றோர்களையும் ஒன்றிணைப்போம். கல்வி கற்கும் உரிமையை பறிக்கும் உயர்கல்வி ஆணைய முன்வரைவு சட்டத்தை தகர்க்கும் முன்னுதாரணமான களமாக தமிழகத்தை மாற்றுவோம்.
கண்டன ஆர்ப்பாட்டம்
ஜூலை 25, 2018 காலை 11 மணி, வள்ளுவர்கோட்டம்.
தலைமை:
தோழர்.வா.சாரதி, மாநகர செயலர், பு.மா.இ.மு.,சென்னை.
கண்டன உரை:
பேரா.ப.சிவக்குமார், முன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக்கல்லூரி.
பேரா.அ.கருணானந்தன், வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர், விவேகானந்தா கல்லூரி.
தோழர். தினேஷ், மாநில செயலாளர், அகில இந்திய மாணவர் பெருமன்றம்.
தோழர்.பிரின்ஸ் என்னாரசு பெரியார், மாநில செயலாளர், திராவிடர் கழக மாணவரனி.
வழக்கறிஞர்.தோழர்.கு.பாரதி, செயலாளர், ஜனநாயக வழக்கரிஞர்கள் சங்கம்.
பேரா.சாந்தி,
தோழர்.த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை -95, 94451 12675.
தூத்துக்குடி மடத்தூர் கிராம மக்கள் சார்பில் கடந்த 16.07.2018 அன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள இலவச சட்ட உதவி மையத்தின் மூலம், தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.
16.07.2018 அன்று அளிக்கப்பட்ட மனுவின் நகல்
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அம்மனுவில் ;
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக வழக்கு நடத்த வேண்டும்.
ஸ்டெர்லைட்டுக்கு தமிழக அரசு வழங்கிய அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
பொய் வழக்குகள் பதிவு செய்து மக்களை அச்சுறுத்துவதையும், கைது செய்யும் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். மேலும் மக்கள்’மூளைச்சலவை’ செய்யப்பட்டு போராட தூண்டப்பட்டனர் என்ற வதந்தி தொடர்சியாக பரப்பட்டு வருவதையும் கண்டித்து அம்மனுவில் தங்களது விளக்கங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 20.7.2018 அன்று அம்மனுவின் மீதான விசாரனை தூத்துகுடி மாவட்ட நீதிமன்றதில் அமைந்துள்ள இலவச சட்ட உதவி மையத்தில் நடைபெற்றது. அவ்விசாரணையில் மனுவில் உள்ள கோரிக்கைகள் குறித்து உதவி செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அனைத்து கோரிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி, மாவட்ட ஆட்சி தலைவருக்கு இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது.
மக்கள் அளித்த மனுவின் மீது இலவச சட்ட உதவி மையம் வழங்கியுள்ள பரிந்துரை :
இலவச சட்ட உதவி மையத்தில் 20.07.2018 மனுவின் மீதான விசாரனை அன்று வந்திருந்த மடத்தூர் கிராம மக்கள்
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பஞ்சாபிலிருந்து வெளிவரும் டிரிப்யூன் ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் ஹரீஷ் கரே பதவி விலகியிருக்கிறார். அதாவது நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆதார் தரவுகள் இரகசியமானவை, அவற்றை யாரும் திருட முடியாது என்ற மோடி அரசின் இமாலயப் பொய்யை அம்பலப்படுத்தும் கட்டுரையை டிரிப்யூன் நாளேட்டில் எழுதியதே அவருடைய வெளியேற்றத்துக்கு காரணம்.
“ஐநூறு ரூபாய் கொடுங்கள், பத்து நிமிடம் பொறுங்கள், நூறு கோடி மக்களின் ஆதார் தரவுகள் கிடைக்கும்” என்று தலைப்பிட்டு ஜனவரி 3 ஆம் தேதி ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டது டிரிப்யூன் நாளேடு. ஒரு ஆதார் முகவருக்கு பே டிஎம் வழியாக 500 ரூபாய் செலுத்தி அடுத்த பத்தே நிமிடத்தில் ஆதார் தளத்தில் நுழைவதற்கான பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் பெற்றார் அப்பத்திரிகையின் செய்தியாளர் ரச்னா கெய்ரா. யாருடைய ஆதார் எண்ணைக் கொடுத்தாலும் அதற்குரிய ஆதார் அட்டையை அச்சிடுவதற்கான மென்பொருளையும் 300 ரூபாய்க்கு ஆன்லைனிலேயே வாங்கினார் கைரா. இந்த செய்தி வெளிவந்தவுடன், ஆள் மாறாட்டம், போர்ஜரி போன்ற குற்றங்களுக்காக அந்த பெண் பத்திரிகையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்தது மோடி அரசு.
ஹரீஷ் கரே
ரச்னா கெய்ரா
தன்னுடைய பத்திரிகையாளர் மீது வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தார் ஆசிரியர் ஹரிஷ் கரே. வழக்கை டிரிப்யூன் நாளேடு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று அறிவித்தார். எடிட்டர்ஸ் கில்டு உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகளும் கண்டித்தன. ஸ்னோடன் கண்டித்தார். சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இத்தனைக்கும் பிறகு, ஹரிஷ் கரேயின் வெளியேற்றம்.
இதில் நாம் கவனிக்கத்தக்க விசயம் ஒன்றிருக்கிறது. இந்த புலனாய்வுக் கட்டுரைக்காக அந்த பத்திரிகையாளர் மீது மட்டும்தான் வழக்கு பதிவு செய்திருக்கிறது. வழக்கை டிரிப்யூன் நாளேடு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என அறிவிக்காமல், வழக்கை எதிர்கொள்ளும் பொறுப்பை அந்தப் பெண்ணின் தலையிலேயே தள்ளிவிட்டிருந்தால் ஹரிஷ்கரே தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்.
பாபிகோஷ்
முதலில் பத்திரிகையாளர்களைத் தனிமைப்படுத்தித் தாக்குவது, அந்த பத்திரிகை நிர்வாகம், பத்திரிகையாளருக்கு ஆதரவாக நின்றால் பிறகு அந்த பத்திரிகையின் மீதும் தாக்குதல் தொடுப்பது என்பதுதான் மோடி – அமித் ஷா கும்பல் கையாண்டு வரும் உத்தி.
நாடு முழுவதும் நடைபெறும் மதவெறி, சாதி வெறி தாக்குதல் குற்றங்கள் குறித்த செய்திகளை, வாசகர்களையே தொகுக்கச் செய்து இணையத்தில் வெளியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் பாபி கோஷ், மோடியின் நேரடித் தலையீட்டின் பேரில் அந்த பத்திரிகையின் முதலாளியால் சென்ற ஆண்டு தூக்கியெறியப்பட்டார்.
ஜே.என்.யு. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டதற்காக, இராஜஸ்தான் பத்ரிகா நிறுவனத்துக்கு சொந்தமான கேட்ச் நியூஸ் என்ற இணையப்பத்திரிகையிலிருந்து அதன் ஆசிரியர் ஷோமா சவுத்ரி முன் அறிவிப்பின்றி வெளியேற்றப்பட்டார்.
இந்தியா டுடே தொலைக்காட்சியில் டு தி பாயின்ட் என்ற பேட்டி நிகழ்ச்சியை நடத்தி வந்த முன்னணி பத்திரிகையாளர் கரன் தபாருக்கு இன்று எந்த தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி இல்லை. மோடியை கரன் தபார் எடுத்த பேட்டி பிரபலமானது. குஜராத் படுகொலை பற்றி கேள்வி எழுப்பி பேட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே மோடியை எழுந்து ஓடவைத்தவர்.
கரன்தபார்
அவுட்லுக் வார இதழின் ஆசிரியர் கிருஷ்ணபிரசாத்தும் வெளியேற்றப்பட்டார். அசாமின் பழங்குடிச் சிறுமிகளை குஜராத்துக்கும் பஞ்சாபுக்கும் கடத்திச் சென்று ஆர்.எஸ்.எஸ். வெறியர்களாக வளர்த்து மீண்டும் அவர்களை அசாமிற்கு கொண்டு வந்து பழங்குடி மக்களை தன் பிடிக்குள் வைத்துக்கொள்வது என்ற வக்கிரமான திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அமல்படுத்தி வருவதை ஆதாரங்களுடன் வெளியிட்டது அவுட்லுக் வார இதழ். இக்கட்டுரையை எழுதிய நேகா தீட்சித் என்ற பத்திரிகையாளர், ஆசிரியர் கிருஷ்ணபிரசாத், அவுட்லுக் வார இதழின் வெளியீட்டாளர் இந்திரநீல் ராய் ஆகியோர் மீது மதக்கலவரத்தை தூண்டுவதாக அசாமில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக்கட்டுரை வெளிவந்த சில நாட்களிலேயே கிருஷ்ணபிரசாத்தை ஆசிரியர் பதவியிலிருந்து வெளியேற்றியது அவுட்லுக் நிர்வாகம்.
அதானிக்கு மோடி வழங்கிய 500 கோடி பம்பர் பரிசு, அதானி குழுமத்தின் 1000 கோடி வரி ஏய்ப்பு? என்ற தலைப்புகளில் ஜூன் 2017 இல் கட்டுரைகள் வெளியிட்டார் எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லியின் ஆசிரியர் பரஞ்சோய் குஹா தாகுர்த்தா. உடனே அக்கட்டுரைகள் திரும்பப் பெறப்பட்டு இணையத்திலிருந்தும் அகற்றப்படவில்லையெனில் மானநட்ட வழக்கு தொடுப்போமென அதானி குழுமத்தின் சார்பில் விடப்பட்ட மிரட்டலுக்கு அஞ்சியது நிர்வாகம். ஜூலை மாதமே தாகுர்த்தா பதவி விலக நேரிட்டது.
கிருஷ்ணபிரசாத்
இதே கட்டுரையை வயர் இணையப் பத்திரிகை பிரசுரித்தது. அதன் மீதும் 6 பத்திரிகையாளர்கள் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்தது அதானி நிர்வாகம். வயர் இணைய தளம் அதனை எதிர்த்து குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடத்த வேண்டி வந்தது.
அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் ஊழல் குறித்து வயர் இணையப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தவுடன் அதன் மீது 100 கோடி ரூபாய்க்கு மானநட்ட வழக்கு தொடுத்தார் அமித் ஷாவின் மகன். அது மட்டுமல்ல ஜெய் ஷாவை பற்றி எந்த கட்டுரையும் வெளியிடக்கூடாது என்று வயர் பத்திரிகைக்கு குஜராத் உயர் நீதிமன்றத்திம் வாய்ப்பூட்டு உத்தரவும் போட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறது வயர் இணையதளம்.
இவை சமீபத்திய சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இவற்றில் மோடி அரசால் குறிவைக்கப்பட்டவர்கள் அனைவரும் பிரபல பத்திரிகையாளர்கள். இருந்த போதிலும், தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக்கூட தனது பத்திரிகை ஆசிரியர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் இறங்கவில்லை. அவர்களைக் கை கழுவிவிட்டது. மோடி கும்பலிடம் விலை போகாதவர்களும் கூட, வழக்குக்கும் அடக்குமுறைகளுக்கும் தாக்குதலுக்கும் அஞ்சிப் பின்வாங்குவதைப் பார்க்கிறோம்.
தாகுர்த்தா
பாரதிய ஜனதாக் கட்சியாகட்டும், மோடி அமித்ஷா கும்பலாகட்டும், இவர்கள் அனைவரும் பார்ப்பன பாசிஸ்டுகள் என்பதையும் தம் இயல்பிலேயே ஜனநாயக விரோதிகள் என்பதையும் நாமறிவோம். இருப்பினும் தற்போது மோடி கும்பல் வெளிப்படுத்தும் வெறி என்பது அடிபட்ட மிருகத்தின் வெறி. வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வாய்ச்சவடால்களே என்று மக்கள் மத்தியில் மென்மேலும் அம்பலமாகி வருவதால், குற்றங்களை மறைக்கும் முயற்சியிலும், உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர்களை ஒழித்துக் கட்டும் முயற்சியிலும் வெறித்தனமாக இறங்கியிருக்கிறது இந்தப் பாசிசக் கும்பல்.
சமூக ஊடகங்களைக் கண்காணிக்கிறோம் என்ற ஸ்மிருதி இரானியின் மிரட்டல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்பவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்திருப்பது, நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல், மர்ம மரணம், எதிர்க்கட்சியினர் மீது ஏவப்படும் வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சி.பி.ஐ. ரெய்டுகள்… ஆகிய அனைத்தும் காட்டுவதென்ன?
பாசிசக் கும்பல் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மதிப்பிழக்கிறதோ அந்த அளவுக்கு அதன் வெறித்தனமும் அதன் விளைவான பாசிச அபாயமும் அதிகரிக்கிறது. பதுங்குவதற்கும் ஒதுங்குவதற்குமான இடம் ஜனநாயக சக்திகளுக்கு குறைந்து கொண்டே வருகிறது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
இலண்டனில் 2018 மே-5 அன்று, மார்க்ஸ் 200 சர்வேதேச மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை மற்றும் 1883 – ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று இலண்டனில் உள்ள ஹைகேட் கல்லறையில் கார்ல் மார்க்ஸ் இறுதி நிகழ்வில் எங்கெல்ஸ் ஆற்றிய உரை ஆகியன இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
வளர்ச்சி குறித்த விதியை அல்லது இயற்கையில் உள்ளமைந்த கட்டமைப்பை எவ்வாறு டார்வின் கண்டுபிடித்தாரோ, அதைப் போன்றே மனித வரலாற்றின் வளர்ச்சி குறித்த விதியை, மிக எளிமையான உண்மையை, தத்துவத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்த உண்மையை மார்க்ஸ் கண்டறிந்தார்.
…இன்றைய முதலாளித்துவ வகைப்பட்ட உற்பத்தி முறையை, இந்த உற்பத்தி முறை உருவாக்கிய முதலாளித்துவ சமூகத்தை மேலாண்மை செய்யும் சிறப்பான செயல்பாட்டு விதியையும் மார்க்ஸ் கண்டறிந்தார். அவருக்கு முன்னாள் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களும், சமூகத்தை விமர்சித்து வந்தவர்களும் மேற்கொண்டு வந்த அனைத்து ஆய்வுகளிலும் அவர்கள் இருட்டிலேயே உழன்று கொண்டிருந்த போது, மார்க்ஸின் உபரி மதிப்பு என்ற இந்த கண்டுபிடிப்பு நீண்ட நாட்களாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது.
காலங்களை எல்லாம் கடந்து அவரது பெயர் நிலைத்திருக்கும். அதைப் போலவே அவரது எழுத்துக்களும் சாகாவரம் பெற்றவையே. (எங்கெல்ஸ்)
”மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி” என்ற தலைப்பில் மார்க்சியத்தின் சிறப்பியல்பையும், மார்க்சிய பார்வையில் இன்றைய உலக நிலைமைகளோடு இந்திய நிலைமையையும் ஒப்பிட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி,
”…மார்க்சியம் ஒரு வறட்டுச் சூத்திரமல்ல, மாறாக, அது ஓர் ‘ஆக்கப்பூர்வமான அறிவியல்’. அது, இதர அனைத்தையும் விட, ”துல்லியமான நிலைமைகள் குறித்த ஒரு துல்லியமான ஆய்வின்” அடிப்படையில் அமைந்துள்ளதாகும்… மார்க்சால் அளிக்கப்பட்ட அடித்தளத்தின் அடிப்படையில் இன்றைய சமூகநிலைமையைப் புரிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தில் எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியக் கூறுகளை அறிந்து கொள்வதற்கும், நாம் நம்முடைய சிந்தனையை தொடர்ந்து வளப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மார்க்சியம் ஒரு மூடப்பட்ட தத்துவார்த்த சிந்தனை என்ற நிலையிலிருந்து, தொடர்ந்து செறிவூட்டப்பட்டு ஒரு வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்திடும்.” என்கிறார்.
”ஜனரஞ்சக தேசியவாதம்: இந்தியப் பின்னணி” என்ற தலைப்பிலான மற்றொரு உரையில்,
ஒரு நாட்டில் உள்ள அபரிமிதமான செல்வ வளத்தைச் சூறையாடுவதன் மூலமும், தொடர்ந்து நாட்டிலுள்ள தங்கங்கள், வைரங்கள், மற்றும் இதர கனிம வளங்களை அடிமை உழைப்பாளர்களைக் கொண்டு நேரடியாகவே சூறையாடுவதன் மூலமும், தங்களுடைய ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கான வழிமுறைகளாகத்தான் இவர்கள் ‘தேசியவாதம்’ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்களேயொழிய, அந்நாட்டிலுள்ள மக்களில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நிலைமைகளை முன்னேற்றுவதற்கும் இதற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.
இந்தியாவில், தற்போது, கார்ப்பரேட்டுகளும், இந்துத்துவா மதவெறியர்களும் கை கோர்த்துக்கொண்டு, ‘தேசம்’ என்ற பெயரால் ஜனநாயக உரிமைகள் உட்பட மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் தியாகம் செய்திட வேண்டும் என்றும், மக்களின் நலன்களுக்கும் மேலானது ‘அபரிமிதமான தேசியவாதம்’ என்கிற சிந்தனை என்றும் தீவிரமாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களுக்கு மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் தங்களுக்குக் கீழ்பட்டு வாழ்ந்திட வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக இப்போதுள்ள ”இந்திய தேசம்” என்பதை ”இந்து தேசியவாதம்” என்று மாற்றியமைத்திட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.
இவர்கள் தற்போதுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்புவது போல ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ – ஆக முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று கோருகிறார்கள்.”
இவ்வாறு இந்திய நிலைமைகளை விவரிக்கும் யெச்சூரி, மார்க்சியத்தின் தேவையை இந்நூலில் சுருங்கக் கூறியிருக்கிறார்.
நூல்: மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி ஆசிரியர்:சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018.
தொலைபேசி: 044 – 24332924, 9444960935. மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
வினவு பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் அனைத்திலுமாக சேர்த்து சுமார் 2,00,000 பேர் வினவு தளத்தை பின் தொடர்கிறார்கள். கடந்த சில மாதங்களாக புதிய வடிவமைப்பில் இயங்கி வருகிறது வினவு.
2008 ஜூலை 17 – 2018 ஜூலை 17 பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவு
இந்த ஆண்டு கடும் அடக்குமுறையை சந்தித்து வருகிறது தமிழகம். ஸ்டெர்லைட் ஒடுக்குமுறைக்கு பிறகு தமிழகமெங்கும் கைதுகள் தொடர்கின்றன. போராட்டங்களை நேரலையாக பதிவு செய்வது, கூட்டங்களை நேரடி ஒளிபரப்பில் காட்டுவது ஆகியவை இந்த ஆண்டில் புதிய சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள். செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. செய்வோம்.
இந்த 10 ஆண்டுகள் அனுபவத்தை தொகுத்துப் பார்க்கும்போது, இணையத்தில் ஒரு மக்கள் ஊடகம் எப்படி இயங்க வேண்டும், எப்படி இயங்கக் கூடாது என்பதை வினவு எங்களுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருப்பது தெரிகிறது.
எத்தகைய எதிர்க் கருத்தாக இருந்தாலும் விவாதத்தை ஒட்டி வரும் பட்சத்தில் அவற்றை அனுமதிக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று. ஆரம்பத்தில் அது குறித்து நிறைய தயக்கம் இருந்தது. எதிர்க் கருத்துக்கள் கொண்டிருப்போரை பேசவிடுவதன் மூலமே அவற்றை அறிந்து கொள்வதற்கும் மாற்றுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறோம். அதன் விளைவாகவே இன்று வரை வலதுசாரி நபர்கள் கூட வினவு தளத்தை பின் தொடர்கிறார்கள். திட்ட வேண்டும் என்று வருபவர்களில் சிலராவது தொடர் வாசிப்பில் சரியாகத் திட்ட வேண்டும் என்று முயற்சித்து பிறகு திட்டுவது கடினம் என்றாவது யோசிக்கிறார்கள்.
இந்த 10 ஆண்டுகள் அனுபவத்தை தொகுத்துப் பார்க்கும்போது, இணையத்தில் ஒரு மக்கள் ஊடகம் எப்படி இயங்க வேண்டும், எப்படி இயங்கக் கூடாது என்பதை வினவு எங்களுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருப்பது தெரிகிறது.
பல ஊடகங்களும், தனிநபர்களும் இன்று வரை அத்தகைய மாற்றுக் கருத்துக்களை அனுமதிப்பதில்லை. இந்த ஆண்டு முதல் வினவு தளத்தில் நீங்கள் இடும் மறுமொழிகளுக்கான மட்டறுத்தல் இல்லை. தானாகவே வெளியாகி விடும். இருப்பினும் ஆரம்ப வருடங்களில் இருந்த பிரபலமான வினவு வாசகர் விவாதம் இன்று குறைந்து விட்டது. சமூக வலைத்தளங்கள் ஓரளவு காரணம் என்றாலும், காத்திரமாக விவாதிக்கும் பண்பினை மீட்டுக் கொண்டு வருவதை நாம் பரிசீலிக்க வேண்டும்.
தரவுகள், புள்ளி விவரங்கள், ஆதாரங்கள் அனைத்தும் சரிபார்த்து எழுதுவதோடு, வாட்ஸ்அப் வதந்திகளை அடியோடு நிராகரிக்க வேண்டும் என்பதையும் கடைபிடிக்கிறோம். இன்று வாட்ஸ்அப் வதந்திகள் அதன் விளைவுகள் குறித்து கார்ப்பரேட் ஊடகங்களில் விவாதம் நடக்கிறது. வினவு தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னரே இது குறித்து முடிவெடுத்து அமல்படுத்துகிறோம். அத்தகைய வாட்ஸ்அப் ட்ரண்டிங்கில் வரும் செய்திகள் பலவற்றை சில தோழர்கள் பரிந்துரைத்த போது அவற்றை தவிர்த்திருக்கிறோம். பலமுறை அவை பொய்ச் செய்திகளென நிருபிக்கப்பட்டிருக்கின்றன.
ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பாம் – இதை சன் நியூஸ் முதல் ஆளாக காட்டுகிறதாம்! என்ன ஒரு சாதனை!
வெளியிடப்பட்ட பதிவுகளை ஒருபோதும் திரும்பப் பெறக் கூடாது, அப்படி திரும்பப் பெறுவதாக இருந்தால் அதை வாசகரிடம் அறிவித்து விட்டே செய்ய வேண்டும் என்பதையும் அமல்படுத்தி வருகிறோம். நடிகை கனகா ‘மரணமென்ற’ வதந்தியை தினமணி போன்ற தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல, பிபிசி போன்ற மேற்குல ஊடகங்களே வெளியிட்டு விட்டு பிறகு சப்தமில்லாமல் தூக்கிவிட்டன. இத்தவறுகள் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன?
செய்திகளை முந்தித் தருவதுதான் இன்றைய 24 X 7 ஊடகங்களின் தொழில் மந்திரம். அதனாலேயே அனேக செய்தி சேனல்களில் ஒரே மாதிரியான செய்திகள் – காட்சிகள், யார் முதலில் காட்டுகிறார்கள் என்ற போட்டியில் நைந்து போய் விட்டன. இப்படி வதந்தியை வெளியிடுபவர்கள்தான் இன்று வாட்ஸ்அப் வதந்தி குறித்து மக்களுக்கு புத்திமதி சொல்கிறார்கள்!
சென்னை பெருவெள்ளம் 2015-ஆம் ஆண்டில் வந்த போது தாம்பரம் முடிச்சூர் ஏரி உடைந்தது என தந்தி டி.வி ஃபர்ஸ்ட் விசுவல் காட்சி டைட்டில் போட்டு காட்டியது. மக்களை துயரத்திற்குள்ளாக்கும் இயற்கைப் பேரிடரில் இப்படி ஒரு தற்பெருமை! இன்று கிருஷ்ணராஜ்சாகர் அணையில் நீர் திறந்துவிடப்படும் காட்சியை சத்யம் டி.வி அதே போன்று வெளியிடுகிறது. எரிச்சலூட்டும் இந்த முதல் பெருமை எதற்கு?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் வெளியான அந்த மஞ்சள் சட்டை போலீசு ஃபோனில் பேசியதாக ஒரு செய்தியை இதே சத்யம் டி.வி மிகுந்த விளம்பரத்துடன் வெளியிட்டது. மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திய பெருமையுடன் அந்த ஆடியோவை வெளியிடுகிறார்கள்.
ஒரு நிகழ்வு இப்படி நடந்தது என்பது ஒரு முதல்கட்ட பதிவு மட்டுமே. அடுத்தடுத்த நகர்வுகளில் அந்த நிகழ்வு ஏன் எப்படி நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே ஒரு பொறுப்பான ஊடகப் பணி.
அதில் அந்த மஞ்சள் சட்டை தானொரு அப்பாவி, சக போலீசார் தன்னை சிக்கவைத்து விட்டனர், உண்மையில் தான் யாரையும் சுடவில்லை, ஆயுதங்கள் வேண்டுமென்று கேட்டார்கள், கொண்டு சென்றேன், வேனில் படுத்திருந்து குறிபார்த்தாலும் அதற்கு முன்பே துப்பாக்கிச் சூடு நடந்து முடிந்து விட்டது, தனது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உணர்ச்சியற்ற குரலில் பேசுகிறார்.
முதல் பார்வையிலேயே இது போலீசின் செட்டப் முயற்சி என்று தெரிகிறது. போலீசின் தாக்குதல் குறித்து ஒரு போலீசு இப்படி ‘வெளிப்படையாகப்’ பேசி விட முடியுமா என்ன? சுட்டுக் கொலை செய்ததினால் வந்த கெட்ட பெயரை தணிப்பதற்காக அதே வாட்ஸ்அப் வதந்தியை போலிசார் கையிலெடுக்கிறார்கள். விவாதங்களில் வரும் ஓய்வு பெற்ற போலீசு அதிகாரிகள் இந்த செய்தியை மேற்கொள் காண்பித்து ”காவல்துறை யோக்கியமானது” என்கிறார்கள். இன்று போராட்டம் தொடர்பான முதல்பார்வை ஊடக செய்திகள் அனைத்தும் போலீசால் தயாரிக்கப்படுகின்றன. அதையே கேள்வி கேட்காமல் அனைவரும் வெளியிடுகின்றனர். போலீசு ஆட்சியை எதிர்ப்பதற்கு முன் நிபந்தனை இந்த போலீசு செய்தியை வெளியிடும் ஊடகங்களை அம்பலப்படுத்துவது!
ஒரு நிகழ்வு இப்படி நடந்தது என்பது ஒரு முதல்கட்ட பதிவு மட்டுமே. அடுத்தடுத்த நகர்வுகளில் அந்த நிகழ்வு ஏன் எப்படி நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே ஒரு பொறுப்பான ஊடகப் பணி. இதை ஓரளவுக்கு ஓரிரு அச்சு ஊடகங்கள் முன்பு செய்து வந்தன. இன்றோ அதற்கான கதவுகள் மூடப்பட்டு வருகின்றன. தரமான ஆங்கில இணையதளங்கள் சில மட்டுமே அவற்றை இன்றும் இந்தியச் சூழலில் செய்து வருகின்றன.
ஸ்னோடன் குறித்த செய்தியை தமிழில் வினவு தளம்தான் முதலில் வெளியிட்டது என ஒரு தோழர் கூறியது நினைவுக்கு வருகிறது. அப்போது ஸ்னோடனின் முக்கியத்துவம், விளைவுகள் குறித்த பரபரப்பு தோன்றியிருக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை ஒரு வல்லரசு நாட்டின் உளவுவேலையை அதே நாட்டின் நபர் தனது உயிரைப் பணயம் வைத்து வெளியிடும் போது இந்த உலகம் எத்தகைய கண்காணிப்பில் அச்சுறுத்தப்படுகிறது என்பதே முக்கியமானது.
அதே போன்று செயற்கை நுண்ணறிவு குறித்து தனி நூலே கொண்டு வந்தோம். இதுவும் கூட தமிழில் முதலாவது என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் முதலாவது என்ற இந்த வியாதியும் அது ஏற்படுத்தும் வணிக பரபரப்பும் கூட அதே செயற்கை நுண்ணறிவு டேட்டாக்களின் திசைதிருப்பும் உத்தியில் தோற்றுவிக்கப்படுபவைதான் எனும் போது முதலாவது என்ற இந்த கர்வத்தால் என்ன பயன்?
இத்தகைய உலகச் செய்திகளை – அதிகமில்லையென்றாலும் – அவ்வப்போது வெளியிடுகிறோம். சில தோழர்கள், இந்த உலக செய்திகளுக்கு பதில் தமிழ்நாட்டு செய்திகளை அதிகம் வெளியிடலாமே என்கிறார்கள். உண்மையில் உலக செய்திகளை இதர தமிழ் ஊடகங்களில் மட்டுமல்ல வினவு தளத்திலும் பலர் படிப்பதில்லை என்பது உண்மையே. அதனால்தான் ஸ்னோடன் கூட ஆரம்பத்தில் கவனிக்கப்படவில்லை.
உள்ளூர் செய்திகளைத்தான் அந்தந்த மக்கள் படிப்பார்கள் என்பதை சுருக்கினால் அது நெல்லை, மதுரை, கோவை செய்திகளைத்தான் அந்தந்த மக்கள் படிப்பார்கள் என்று சுருங்கி விடும். அதனால்தான் அச்சு நாளிதழ்கள் உள்ளூர் பதிப்பை துவக்கி வட்டார செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. அதில் அதிகமும் குற்றச் செய்திகளே ஆக்கிரமிக்கின்றன. இன்று குழந்தைகள் கடத்தல் குறித்த வாட்ஸ்அப் வதந்திகள் தினசரி ஓரிருவரைக் கொன்று வருகின்றன.
ஆனால் மக்கள் அரசியல்மயப்படுத்தப்படுவதும், தமக்குத் தெரிந்த உலகிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து தெரியாத உலகைப் பார்க்கும் போதுதான் தன்னிலை குறித்த விழிப்புணர்வே வரும். ஆகவே பிரேசிலைக் குலுக்கிய வேலை நிறுத்தப் போராட்டம், அமெரிக்க வால்மார்ட் ஊழியர்களின் போராட்டம், ஆப்பிரிக்காவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் பெண் போராளி போன்றவை முக்கியமான செய்திகளில்லையா? இந்த செய்திகளுக்கு வரவேற்பு இல்லை என்றாலும் இவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு மக்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
மக்கள் அரசியல்மயப்படுத்தப்படுவதும், தமக்குத் தெரிந்த உலகிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து தெரியாத உலகைப் பார்க்கும் போதுதான் தன்னிலை குறித்த விழிப்புணர்வே வரும்.
ஊடக சுதந்திரம் குறித்து சமீபத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய புதிய தலைமுறையின் கார்த்திகைச் செல்வன், “நீட் அனிதா மரணமடைந்த போது கூட உடனடியாக அதை வெளியிடாமல் அரைமணிநேரம் பல ’சோர்ஸ்’களில் உறுதிபடுத்தி விட்டே வெளியிட்டோம்” என்றார். பொதுவில் பார்க்குமிடத்து இது பொறுமையாகவும், விரிவாகவும் செய்திகளை உறுதிபடுத்தும் ஊடக தர்மத்தின் அடையாளம் என்று தோன்றலாம். ஆனால் இம்மதிப்பீடு எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படுவதில்லை.
அதே கார்த்திகைச் செல்வன், நெறியாளராக இருக்கும்போது பாடகர் கோவன் கைது குறித்த விவாதம் ஒன்றில் பா.ஜ.கவின் நபர் ஒருவர், ’ராஜீவ்காந்தியை கொல்லுவோம்’ என கோவன் பாடியதாக கூறினார். ”இதற்கு என்ன ஆதாரம்?, கோவன் எப்போது பாடினார்?” என்று நெறியாளர் கேட்கவில்லை. தமிழ் ஊடகங்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் குறித்து போலீசு தரும் செய்திகளையும், மக்கள் அதிகாரம்தான் கலவரத்தை தூண்டிவிட்டது என அரசு தரும் அறிக்கைகளையும் அப்படியே வெளியிடுகின்றன. இச்செய்திகள் உண்மையா என உறுதிப்படுத்திக் கொள்வதில்லை.
நீட் அனிதாவின் மரணம் என்பது பா.ஜ.கவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் அதில் கார்த்திகைச் செல்வன் கவனமாக இருக்கிறார். ஆனால் கோவன் சொல்லாத கருத்து ஒன்றையோ, மக்கள் அதிகாரம் குறித்து வரும் அபாண்டமான கருத்துக்களையோ இவர்கள் சரிபார்ப்பதில்லை.
நீட் அனிதாவின் மரணம் என்பது பா.ஜ.கவிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் கார்த்திகைச் செல்வன் கவனமாக இருக்கிறார். ஆனால் கோவன் சொல்லாத கருத்து ஒன்றையோ, மக்கள் அதிகாரம் குறித்து வரும் அபாண்டமான கருத்துக்களையோ இவர்கள் சரி பார்ப்பதில்லை.
திரேஸ்புரத்தில் சில மீனவர்கள், மடத்தூரில் சிலர் மக்கள் அதிகாரம்தான் தங்களைத் தூண்டிவிட்டது, மூளைச்சலவை செய்தது என்று கூறியதை ஆர்ப்பாட்டமாக பல ஊடகங்கள் பொன்னாரின் தொனியில் வெளியிட்டன. பிறகு அதே மடத்தூரில் பல மக்கள் யாரும் எங்களை மூளைச்சலவை செய்யவில்லை என்று மனு கொடுத்த போது ஒரு ஊடகமும் அதை செய்தியாகக் கூட வெளியிடவில்லை.
முசுலீம்கள் குறித்து வரும் அவதூறு செய்திகளும், தலித் மக்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளும் கூட இத்தகைய பாரபட்சங்களோடுதான் வெளியாகின்றன. கேட்டால் சாதி மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செய்திகளை நாங்கள் வெளியிடுவதில்லை என்று அனைத்து ஊடகங்களும் ஒரு நல்லெண்ண அறிவிப்போடு தப்பித்துக் கொள்ளும்.
ரதயாத்திரை பாடலுக்கு ராமபக்தர்களை விட மோடி பக்தர்களின் வசவுகள் தான் அதிகம்
வினவு தளத்தைப் பொறுத்தவரை சாதிவெறி, மதவெறி எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிடும் போது அந்தந்த சாதிவெறி, மதவெறி அமைப்புகள் மற்றும் சமூக பிரிவுகளின் தொல்லைகளுக்கு பலமுறை ஆளாகியிருக்கிறோம்.
அனேகமாக ஆண்டுக்கு இருமுறையாவது இந்த பிரச்சினை வருகிறது. சமீபத்தில் ரத யாத்திரை குறித்த பாடலை வெளியிட்டதற்காக தமிழகம் முழுவதும் எமது தொலைபேசியில் சங்கபரிவாரத்தினர் படையெடுத்த வண்ணம் இருந்தனர். பேசுபவர்களில் கணிசமானோர் கெட்டவார்த்தைகளை சரளமாக பேசியவாறு அடுத்தடுத்து அழைப்பார்கள். பொறுப்பாக பேசுவோருக்கு பதில் அளிப்போம், திட்டுவோருக்கு சில வாய்ப்புகள் அளித்து விட்டு துண்டிப்போம். இதே திட்டுமழை என்பது தவ்ஹீத் ஜமாஅத், சில ஆதிக்க சாதிவெறியர்களிடமிருந்தும் முன்னர் சந்தித்திருக்கிறோம்.
ஆகவே சாதி-மதம் குறித்து ஒரு கட்டுரையோ வீடியோவோ பாடலோ வெளியிடும் போது இத்தகைய பிரச்சினைகள் அனைத்தையும் கணக்கில் கொள்கிறோம். நாம் சொல்கின்ற கருத்து அதனளவில் சரியாக இருக்கிறதா என்பதை எப்போதும் விழிப்பாக கவனிக்கிறோம். ஆரம்பத்தில் இப்படியான கட்டுரைகள் வெளியாகும்போது அந்த “விழிப்புணர்வு” எங்களிடத்தில் பெரிய அளவில் இல்லை. இன்று அது தேவை என்பதை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஆரம்பத்தில் இப்படியான கட்டுரைகள் வெளியாகும்போது அந்த “விழிப்புணர்வு” எங்களிடத்தில் பெரிய அளவில் இல்லை. இன்று அது தேவை என்பதை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
மேலும் தொலைபேசியில் திட்டும் பலருடன் பேசும்போதுதான் தமிழ் சமூகத்தில் முற்போக்கு கருத்துகள் பெரிதும் பலவீனமாகவே இருப்பதும், அவ்வாறு திட்டுபவர்களில் கணிசமானவர்கள் பரிதாபத்துக்குரிய மூடர்களாக இருப்பதும் தெரியவருகிறது. நாம் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பதே யதார்த்தம். ஆகவே திட்டுபவர்கள் குறித்து குறைபடத் தேவையில்லை. இதுவும் வினவு கற்றுக் கொடுத்த அனுபவம்தான்.
தொடக்க காலம் தொட்டு பாலியல் பிரச்சினைகள் குறித்த காத்திரமான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம்.போர்னோ குறித்த கட்டுரைத் தொடர்மற்ற ஊடகங்கள் தயங்குகின்ற விசயங்களை பகிரங்கமாக முன்வைத்தது. இன்று அன்றாடம் சிறுமிகள் பலர் பாலியல் வன்முறைகளில் பலியாகும் போது பொதுவில் பலரும் அதிர்ச்சியடைவதைத் தாண்டி என்ன செய்ய வேண்டும், ஏன் இப்படி நடப்பது அதிகரித்திருக்கிறது என்று சிந்திக்கும்போது வினவு கட்டுரைகள் உதவி செய்யுக்கூடும். சினிமா, பாலியல் தொடர்பாக ஊடகங்கள் மலிவாக நடந்து கொள்ளும் போக்கிற்கு எதிராக இத்துறைகள் சார்ந்து காத்திரமான விழிப்புணர்வு வரவேண்டும் என்பதை எமது அனுபவம் உறுதிப்படுத்துகிறது.
இன்றைய தொலைக்காட்சி நெறியாளர்கள் பலரும் விவரங்கள், தரவுகள் விசயத்தில் கவனம் காட்டுவது, தனிநபர் தாக்குதல்களைத் தவிர்ப்பது, அரசியல்ரீதியாக ஜாக்கிரதையாக இருப்பது, விமர்சனத்திற்குரியவர்கள் இல்லாதபோது பேசக்கூடாது என்பன போன்ற அம்சங்களைத் தாண்டி கண்ணோட்டம் என்ற கோணத்தில் மிகவும் பலவீனமாகவே இருக்கிறார்கள். பலவீனம் என்பதை விட இதற்கு மேல் எல்லை மீறக்கூடாது என்ற பாதுகாப்புணர்வாகவும் அதை சொல்லலாம்.
கண்ணோட்டம் என்பது ஏதோ முனைவர் பட்ட படிப்பு சார்ந்த திறமை போன்ற ஒன்றல்ல. அது நீங்கள் யாருக்காக பேசுகிறீர்கள், அப்படி பேசுவதற்காக எதை இழக்கிறீர்கள், எதை பெறுகிறீர்கள் என்பதோடு தொடர்புடையது.
கண்ணோட்டம் என்பது ஏதோ முனைவர் பட்ட படிப்பு சார்ந்த திறமை போன்ற ஒன்றல்ல. அது நீங்கள் யாருக்காக பேசுகிறீர்கள், அப்படி பேசுவதற்காக எதை இழக்கிறீர்கள், எதை பெறுகிறீர்கள் என்பதோடு தொடர்புடையது.
ஒரு சிறுவணிகர் ஐம்பது பைசாவை வரி கொடுக்காமல் ஏமாற்றுவதும், ஒரு முதலாளி 10,000 கோடி வரி ஏய்ப்பு செய்வதும் ஒன்றுதான் என பானுகோம்ஸ் வாதிடும் போது ஊடக நெறியாளர்கள் வாயடைத்து நிற்கிறார்கள். ரஜினி ஆதரவாளரான பிரவீண்காந்த், தூத்துக்குடி சென்ற ரஜினி சமூகவிரோதிகள் என்று யாரையும் கூறவில்லை என்று அடித்துக் கூறும் போது அந்தப் பொய்யை பொய் என்று சொல்லத் தயங்கும் நெறியாளர்கள் அதற்காக கடுகளவும் வெட்கப்படுவதில்லை.
குமரி மீனவ கிராமத்தில் புதிய தலைமுறை சார்பாக ஒக்கிபுயல் விவாதம் நடக்கிறது. கடலில் தத்தளிக்கும் மக்களை மீட்க கடற்படையோ, கடலோரக் காவற்படையோ வரவில்லை என்பதை மீனவர்கள் பலரும் அனுபவங்களாக கூறுகிறார்கள், அரசைக் கண்டிக்கிறார்கள். நெறியாளர் செந்திலோ, “மக்கள் கூறுவதிலிருந்து மீட்பு பணிகள் இன்னும் வேகமெடுத்திருக்க வேண்டும்” என்கிறார். தான் சறுக்கித்தான் பேசுகிறோம் என்பது அவர் அறியாத ஒன்றல்ல. உடல்ரீதியில் சறுக்கி விழுவதால் ஏற்படும் எலும்பு முறிவுகூட ஒன்று சேர்ந்து விடும். கருத்துரீதியான முறிவுகள் – அவை பல நேரம் எடிட்டோரியல் நிர்ப்பந்தங்கள் என்றாலும் – தொடரும் போது நாம் நம்மை அறியாமலேயே வேறு ஒன்றாக – அறமிழந்த தக்கை மனிதர்களாக மாறிவிடுவோம்!
கார்ப்பரேட் ஊடகங்களில் தொடர்ந்து பணிபுரியும் போது இத்தகைய அழுத்தங்கள் – சமரசங்கள் – திசைதிருப்பல்கள் – பயங்கள் நம்மை தேர்ந்த தொழில்முறை நிலைய வித்வான்களாக மாற்றிவிடும்.
கார்ப்பரேட் ஊடகங்களில் தொடர்ந்து பணிபுரியும் போது இத்தகைய அழுத்தங்கள் – சமரசங்கள் – திசைதிருப்பல்கள் – பயங்கள் நம்மை தேர்ந்த தொழில்முறை நிலைய வித்வான்களாக மாற்றிவிடும்
ரஜினி தன் ரசிககர்களை சந்திப்பதைக் கூட நேரலையாகப் போட்டு ‘கடமையாற்றும்’ ஊடகங்கள்
ரஜினி தும்மினாலும், துவண்டாலும் ஊடகங்களில் ஓரிரு நாட்களோ, வாரங்களோ விவாதங்கள் அனல் பறக்கும். இந்த செயற்கையான அனலை அதே விவாதங்களுக்கு வரும் ஒரு சமூக ஆர்வலர் சுட்டிக் காட்டும்போது என்ன நடக்கிறது? ஊடகங்கள்தான் ரஜினியை தூக்கிப் பிடிக்கின்றன என்று அவர் வலியுறுத்துகிறார். உடனே நியூஸ் 18 குணசேகரன், என்னதான் இருந்தாலும் ரஜினிதான் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார், அவர் தெரிவிக்கும் ஒன்றை விவாதிப்பது ஊடகங்களின் கடமை என்று நியாயப்படுத்துவார். அதாவது இங்கே அவர் தனது ஊடகத்தின் நலனை ஒரு நடுநிலையான கருத்து போல முன் வைக்கிறார்.
நியூஸ் 18 குணசேகரன், என்னதான் இருந்தாலும் ரஜினிதான் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார், அவர் தெரிவிக்கும் ஒன்றை விவாதிப்பது ஊடகங்களின் கடமை என்று நியாயப்படுத்துவார்.
’வெள்ளுடை வேந்தர்’ ஏ.வி.எம். சரவணன் 80-களில் தயாரித்த “முரட்டுக்காளை”யில் துவங்கி ’உத்தமர்’ சுபாஷ்கரண் அல்லிராஜாவின் லைக்கா மொபைல் உபயத்தில் வெளியான “காலா” வரை ரஜினியின் சூப்பர் ஸ்டார் இமேஜ் என்பது கோடிக்கணக்கான ரூபாய் விளம்பரத்தில் ஊதப்படுவது. ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் ஏன் இத்தனை பெரிய பட்ஜெட்டில் விளம்பரச் செலவு? இந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமலேயே படம் ஓடவேண்டுமே? ரஜினி படங்களுக்காக வரும் விளம்பர வருமானம் அனைத்து ஊடகங்களுக்கும் முக்கியம். அதிகாரப்பூர்வமாக வெளியிடும் விளம்பரங்களோடு அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரஜினி குறித்த செய்திகளும் வெளியிடுவதுதான் அந்த விளம்பர வருமானத்தின் எழுத்தப்படாத ஒப்பந்தம். இறுதியில் ரஜினியே செய்தியாக, விளம்பரமாக, வருமானமாக, மக்களுக்கு நொறுக்குத் தீனி ரசனையாக முன்வைக்கப்படுகிறார். இதில் எங்கே இருக்கிறது அவரது சுயம்பு சூப்பர் ஸ்டார் செல்வாக்கு?
குத்து விளக்கு பூஜை நடக்க இருக்கிறது, சுமங்கலிகள் அனைவரும் வாருங்கள், ஒரு குங்கும டப்பா இலவசம் என்று ஆர்.எஸ்.எஸ் அறிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கில் பெண்கள் வருவார்கள். பெண்களை அடிமைப்படுத்தும் தாலி தேவையா என்று ஒரு முற்போக்கு அமைப்பு நடத்தும் கருத்தரங்கிற்கு நிச்சயம் ஆயிரக்கணக்கில் பெண்கள் வர மாட்டார்கள். ஆனாலும் எண்ணிக்கை அடிப்படையில், நியூஸ் வேல்யூ எனும் ஊடக விதியின்படி முன்னதுதான் செய்தியாக காட்டப்படும் மதிப்புடையது, பின்னது காட்ட முடியாத ஒன்று என்று நம்மிடம் நியாயம் பேசுகிறார்கள்!
ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குழுமங்களின் திட்டப்படி தமிழகத்தில் இன்று பலர் விவாதங்களில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். இறுதியில் 2002 குஜராத்தில் மோடி செய்த குற்றங்கள் என்ற உலகறிந்த உண்மையைக் கூட ஒரு விவாதத்தில் ஒரு நெறியாளர் கூட பேச முடியாத நிலைமை இருக்கிறது. ஜெயாவின் சொத்து திருட்டு வழக்கில் குமாரசாமி தீர்ப்பு வந்த அன்று தந்தி டி.வி பாண்டே நடத்திய விவாதத்தில் காலஞ்சென்ற ஞாநி வந்திருந்தார். அவர் ஜெயாவை விமரிசித்த போது குறுக்கிட்ட பாண்டே, தான் முழுத்தீர்ப்பையும் படித்து விட்டதாகவும், அதில் குமாரசாமி மிகத்தெளிவாக இந்த சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமான கணக்கில் சேர்க்க கூடாது என்று தரவுகளுடன் கூறியிருப்பதாக வலியுறுத்தினார்.
சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் பக்தர்களுக்கு இடமளிக்கும் ஊடக அறம்
அதாவது தீர்ப்பு வந்த அன்றே பாண்டே அதை கரைத்துக் குடித்து கணக்கு சரிபார்த்து விட்டார். பிறகு நீதிமன்றம் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்படித்தான் பாண்டே போன்றவர்கள் ஜெயா போன்ற கிரிமனல்களை மட்டுமல்ல, நீதித்துறையின் ஊழல்களையும் வக்காலத்து வாங்குகிறார்கள். நியூஸ் 7 நெல்சன் சேவியரோ மிகச்சாதரணமாக யாராவது நீதிமன்றத்தின் தீர்ப்புக்களையோ, நீதிபதிகளையோ விமரிசித்தால், இது உங்களது சொந்தக் கருத்து, நீங்களே பொறுப்பு, நீதித்துறையை விமரிசிக்க கூடாது என்று அவசர அவசரமாக டிஸ்கி போடுகிறார். அதிகார வர்க்கம், நீதித்துறை மற்றும் போலீசு, அரசு போன்றவை இப்படியாக பொது விமரிசினங்களுக்கு அப்பாற்பட்டது என ஊடகங்கள் எப்போதும் விழிப்போடு இருக்கின்றன.
நியூஸ் 7 நெல்சன் சேவியரோ மிகச்சாதரணமாக யாராவது நீதிமன்றத்தின் தீர்ப்புக்களையோ, நீதிபதிகளையோ விமரிசித்தால், இது உங்களது சொந்தக் கருத்து, நீங்களே பொறுப்பு, நீதித்துறையை விமரிசிக்க கூடாது என்று அவசர அவசரமாக டிஸ்கி போடுகிறார்.
ஆகவே வினவு தளத்தில் மேற்படி துறைகளைப் பற்றிய கட்டுரைகள் கடுமையான விமரிசனங்கள் எழுதும் போது இது குறித்து பிரச்சினைகள் வந்தால் சந்திப்போம் என்று முடிவெடுத்து விட்டே வெளியிடுகிறோம்.
வானதி சீனிவாசன் – கேடி ராகவன் – லைக்கா மொபைல் ஊழல் குறித்து மறுக்க முடியாத ஆதரங்களோடு வினவு தளத்தில் தொடர்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆதாரங்கள் அனைத்தும் இணையத்திலேயே இருக்கின்றன. பெரும் நிறுவன பலம் இருந்தும் ஊடகங்கள் எவையும் இத்தகைய ஆழமான புலனாய்வில் இறங்குவதில்லை. ஊடகங்கள் குறித்த எந்த விமரிசனமும் வாசகரிடம் பெருவரவேற்பு பெறுவதைப் பார்க்கும்போது மக்கள் முட்டாள்களில்லை என்பது நிரூபிக்கப்படுகிறது.
இன்றைக்கு பாண்டேவின் பா.ஜ.க ஆதரவு விவாதமோ இல்லை எச் ராஜாவின் நேர்காணலோ யூடியூபில் வெளியாகும் போது மக்களே மறுமொழிகளில் காத்திரமாக வாதிட்டு அம்பலப்படுத்துகிறார்கள். தற்போது ஊடகங்கள் மீதான விமரிசனங்கள் என்பது சமூக வலைத்தளங்களின் முதன்மையான பணியாகவே மாறிவிட்டது.
ஆரம்பத்தில் சினிமா விமர்சனம் (சமூகவியல் பார்வையில்), ஊடக விமர்சனம், இலக்கியவாதிகள் மீதான விமர்சனம் போன்றவை வினவு தளத்தில் எழுதப்படும்போது தனியாக நாம் மட்டும் எழுதுவதாக உணர்ந்தோம். மெரினா போராட்டத்தைத் தொடர்ந்து பலர் இன்று சமூக வலைத்தளங்களில் நாங்கள் எழுதுவதற்கு மேல் எழுதுகிறார்கள். இது குறித்து உண்மையிலேயே மகிழ்கிறோம்.
மெரினா போராட்டத்தைத் தொடர்ந்து பலர் இன்று சமூக வலைத்தளங்களில் நாங்கள் எழுதுவதற்கு மேல் எழுதுகிறார்கள். இது குறித்து உண்மையிலேயே மகிழ்கிறோம்.
அதனால்தான் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து காத்திரமாக எழுதப்படும் செய்திகளை தொகுத்து அவ்வப்போது வெளியிடுகிறோம். அத்தகைய நண்பர்களை உற்சாகப்படுத்த விரும்புகிறோம். கார்ப்பரேட் ஊடகங்களோ சமூக வலைத்தளங்களில் வரும் மீம்கள், காமடிகள், போன்றவற்றை மட்டும் அவியலாக, துணுக்குச் செய்திகளாக வெளியிடுகின்றன. அல்லது பாதுகாப்பான முறையில் தங்களுக்கு பிரச்சினையில்லாத எழுத்துக்களை தெரிவு செய்து வெளியிடுகிறார்கள்.
ஆகவே இன்று எல்லாப் பிரச்சினைகளையும் நாங்களே எழுத வேண்டும் என்ற நிலையும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. மக்களே அப்படி எழுதுவார்கள் என்ற நம்பிக்கையளிக்கும் சூழல் உருவாகி வருவதைக் காண்கிறோம். அதே நேரம் அப்படி எழுதும் நண்பர்கள் வினவு தளத்தோடு நெருங்குவதற்கு முன்னரே கார்ப்பரேட் ஊடகங்கள் தூக்கிச் சென்று விடுகின்றன. அங்கே சென்று ஓரிரு ஆண்டுகளுக்குள் அவர்களும் நிலைய வித்வான்களாக ஆகிவிடும் துயரமும் நடந்து வருகிறது. எனினும் அங்கே பத்து பேர் சென்றால் இந்தப்பக்கம் வருவதற்கு இரண்டு பேராவது இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையான சூழலும் இருக்கிறது.
எல்லா ஊடகங்களிலும் எங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக பல உள்வட்ட ‘செய்திகள்’ எங்கள் காதுகளை நோக்கி வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எனினும் அத்தகைய செய்திகளுக்கு நாங்களே காது தணிக்கை போட்டிருக்கிறோம். வெளிப்படையான விமரிசனம், உரையாடல் என்பதைத் தாண்டி இத்தகைய இரகசிய செய்திகளை வைத்து ஒரு போதும் எழுதக் கூடாது என்பதையும் இந்த ஆண்டுகளில் கறாராக கடைபிடித்து வருகிறோம். குறிப்பாக நண்பர்களாக இருப்போரின் படைப்புகள் – நிகழ்ச்சிகளைக் கூட தேவை ஏற்படின் விமரிசித்தும் இருக்கிறோம். அதுவே வினவு தளத்தின் மீது பல பத்திரிகையாளர்களுக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வெளிப்படையான விமரிசனம், உரையாடல் என்பதைத் தாண்டி இத்தகைய இரகசிய செய்திகளை வைத்து ஒரு போதும் எழுதக் கூடாது என்பதையும் இந்த ஆண்டுகளில் கறாராக கடைபிடித்து வருகிறோம்.
இன்றைய அதிவேக இணையத்தின் காலத்தில் வினவு ஒரு குடிசை வீட்டில் இருந்து மண்பானை செய்யும் கிராமத்து தொழிலாளியைப் போன்றே இருக்கிறது.
ஆனால் நம்மால் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை இணைத்து போர் தொடுக்க முடியும். குடிசை வீட்டில் இருப்பதாலேயே இழப்பதற்கு ஏதுமற்றவர்களின் தைரியமும், போராட்ட குணமும் நமது மாபெரும் சொத்துக்களாக இருக்கின்றன.
தொழில்முறை ஊடகமாக மாறுவதற்கு முதல் பிரச்சினை நிதி. சொல்லிக் கொள்ளுமளவு எமக்கு நிதி வருவதில்லை. என்றாலும் அதையே சொல்லிச் சொல்லி வற்புறுத்துவதுமில்லை. நாங்கள் எழுதக் கோரிய நண்பர்களும் உரிய ஆர்வம் காட்டவில்லை. இந்த இரண்டிலும் நீங்கள் பங்களிக்க முடியும். வினவு தளத்தின் பயணம் இன்னும் வீரியமாக தொடர்வதற்கு உதவவும் இயலும்.
எங்களுக்கு உரிமையான மலைகளை வேதாந்தா நிறுவனம் அபகரிக்க விடமாட்டோமென எதிர்த்து நிற்கும் டோங்கிரியா கோண்டு இன மக்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த, தியாகம் தோய்ந்த போராட்டம், ஒடிசா மாநிலத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்தின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரிப் போராடிவரும் டோங்கிரியா கோண்டு (Dongria Kondh) பழங்குடியின மக்கள், தூத்துக்குடி போராட்டத்தால் உற்சாகமடைந்து தமது போராட்டத்தையும் தீவிரப்படுத்துவதென அறிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் காலஹந்தி, ராயகடா மாவட்டங்கள் இரண்டிலும் விரிந்து பரந்திருக்கும் நியம்கிரி மலைத்தொடர்தான் டோங்கிரியா கோண்டு பழங்குடியின மக்களின் தாயகம். முப்பதுக்கும் மேற்பட்ட வற்றாத நீரோடைகள், நாகபாலி, பன்ஷாதரா என்ற இரண்டு ஆறுகள் ஆகியவற்றின் பிறப்பிடமான அம்மலைத்தொடரின் 112 கிராமப்புறப் பகுதிகளில் இவ்வின மக்கள் வசித்து வருகின்றனர்.
டோங்கிரியா கோண்டு இன மக்கள் இன்னும் இந்துமயமாக்கப்படவில்லை. அவர்கள் அந்த மலையைத்தான், நியம் ராஜா எனப் பெயரிட்டு, குலசாமியாக வணங்கி வருகிறார்கள். நியம் ராஜாவைத் தவிர, அவர்கள் வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை.
இப்பழங்குடியினரின் பிரதானத் தொழில் விவசாயம். மாம்பழம், அன்னாசி, வாழைப்பழம், பழாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்டுப் பலவகையான பழவகைகளையும், மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட நறுமணப் பொருட்களையும் பயிர் செய்து வருகின்றனர்.
நியம்கிரி மலைத்தொடர் வளமிக்க விவசாயப் பகுதி மட்டுமல்ல, தாதுவளத்தையும் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. இம்மலைத்தொடர் பகுதியில் மட்டும் 8 கோடி டன் அளவிற்கு அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்ஸைட் புதைந்திருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், இம்மலைத்தொடரை எப்படியாவது கோண்டு பழங்குடியினத்தவரிடமிருந்து அபகரித்துக் கொள்ள கடந்த 14 ஆண்டுகளாக முயன்று வருகிறது, வேதாந்தா.
நியம்கிரி மலைத்தொடரின் அடிவாரத்திலுள்ள லஞ்ஜிகரி எனும் பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு வேதாந்தா குழுமம், ஸெஸா ஸ்டெர்லைட் எனும் பெயரில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கியது. இவ்வாலை ஆண்டொன்றுக்கு 10 இலட்சம் டன் அலுமினியம் உற்பத்தி செய்வதற்கு ஒடிசா அரசும் மைய சுற்றுப்புறச் சூழல் துறையும் அனுமதி அளித்திருந்தன.
நியம்கிரி மலையடிவாரத்தில் பழங்குடி மக்களின் வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் வேதாந்தாவின் அலுமினியத் தொழிற்சாலை.
ஒட்டகம் மூக்கை நுழைத்துவிட்டதை அப்பொழுதே புரிந்துகொண்டுவிட்ட அப்பழங்குடியின மக்கள், நியம்கிரி பாதுகாப்பு கமிட்டி எனும் அமைப்பை உடனடியாக உருவாக்கி வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். அம்மக்கள் பயந்தபடியே ஒடிசா அரசு, நியம்கிரி மலைத்தொடரில் பாக்சைட்டைத் தோண்டியெடுப்பதற்கான அனுமதியை, ஒடிசா சுரங்கக் கழகத்திற்கு வழங்கியது. இந்த நிறுவனத்திடமிருந்து பாக்ஸைட் தாதுவைக் கொள்முதல் செய்து கொள்வதற்கு வேதாந்தாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தந்திரம் என்பதைப் பச்சைக் குழந்தைகூடப் புரிந்துகொள்ள முடியும்.
நியம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட்டைத் தோண்டுவது கோண்டு பழங்குடியின மக்களுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. அவர்கள் தமது தாயகப் பகுதியிலிருந்து துரத்தப்படுவார்கள், அவர்களது விவசாயம் அழியும் என்பதையும் தாண்டி, பாக்ஸைட் சுரங்கத்தின் தொடக்கம் இரண்டு நதிகளின், இரண்டு மாவட்டங்களின் அழிவில் சென்றுமுடியும். இந்தக் காரணங்களால் கோண்டு பழங்குடியின மக்கள் நியம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் சுரங்கம் அமைக்கப்படுவதை எதிர்த்துப் போராடினர்.
பல்வேறு அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து நடைபெற்றுவந்த அப்போராட்டம் நாடெங்கிலுமுள்ள முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்றது. அப்போராட்டம் தொய்வின்றி ஒன்பது ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில், பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராக நடைபெற்ற வழக்கில், பாக்சைட் சுரங்கத்தை அனுமதிப்பதா, வேண்டாமா என்பதைப் பழங்குடியின மக்களின் கிராமசபை முடிவெடுத்து அறிவிக்கும் என 2013-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.
அவர்கள் தமது தாயகப் பகுதியிலிருந்து துரத்தப்படுவார்கள், அவர்களது விவசாயம் அழியும் என்பதையும் தாண்டி, பாக்ஸைட் சுரங்கத்தின் தொடக்கம் இரண்டு நதிகளின், இரண்டு மாவட்டங்களின் அழிவில் சென்றுமுடியும்.
இத்தீர்ப்பின் அடிப்படையில் பழங்குடியின மக்களின் கிராம சபை நியம்கிரி மலைப்பகுதியில் ஒடிசா சுரங்கக் கழகம் பாக்சைட் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்தது. ஒடிசா அரசு இம்முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து, கிராம சபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், ஒடிசா அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வெற்றி முழுமையானதல்ல என்பதை உணர்ந்திருந்த கோண்டு இன மக்கள், வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரித் தமது அடுத்தகட்ட போராட்டத்தைக் கடந்த ஐந்தாண்டுகளாக நடத்திவருகின்றனர்.
இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 10 இலட்சம் டன் அலுமினியத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே அனுமதியைப் பெற்றிருந்த வேதாந்தா, அரசின் அனுமதியைப் பெறாமலேயே தனது உற்பத்தியை 20 இலட்சம் டன்னாக உயர்த்திக்கொண்டது. தனது ஆலைக்கழிவுகளை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக ருஷிகுல்யா நதியில் திறந்துவிட்டு, அந்நதியை மாசுபடுத்தி வருகிறது. மேலும், இந்த அலுமினிய சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானமும் விரிவாக்கமும் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருப்பதோடு, ஏனோதானோவென்று நிர்வகிக்கப்படுகிறதென்றும் ஒடிசா மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் மாநில அரசிற்கு அறிக்கை அளித்தது.
இத்தகைய விதிமீறல்களுக்காக அவ்வாலையை மூடுமாறு வேதாந்தாவிற்கு ஒடிசா அரசு உத்தரவிட்டிருக்க வேண்டும். வேதாந்தா குழுமத்தையும் அதன் முதலாளி அனில் அகர்வாலையும் குற்றவாளியாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அம்மாநில அரசோ வேதாந்தா அலுமினிய ஆலை, தனது உற்பத்தித் திறனை ஆண்டொன்றுக்கு 60 இலட்சம் டன்னாக உயர்த்திக்கொள்ள அனுமதிக்கும் முடிவை எடுத்தது.
இதனையடுத்து, இந்த உற்பத்தித் திறனுக்கு ஏற்ற மூலப்பொருளைச் சொந்த மாநிலத்திலிருந்தே கொள்முதல் செய்வது என்ற முகாந்திரத்தைச் சொல்லி, கோராபுட் மாவட்டத்திலுள்ள கோதிங்காமாலி மலைப்பகுதியிலிருந்து பாக்ஸைட் வெட்டியெடுக்கும் அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு அளிக்கும் முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது.
போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியாகவும், தீவிரமாகவும் நடத்துவது என நியம்கிரி பாதுகாப்பு கமிட்டி முடிவெடுத்து அறிவித்திருக்கிறது. அம்முடிவுக்கு தூத்துக்குடி போராட்டம்தான் ஆணிவேராக அமைந்திருக்கிறது.
மைய பா.ஜ.க. அரசும் தன் பங்குக்கு, நியம்கிரி பகுதியில் வளர்ச்சியைக் கொண்டுவருவது என்ற முகாந்திரத்தில், சாலைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சாலைகள் நியம்கிரியிலிருந்து பாக்ஸைட் வெட்டியெடுத்துக் கொண்டுவரும் நோக்கத்திற்காகவே அமைக்கப்படுகிறது என கோண்டு பழங்குடியினர் அம்பலப்படுத்துகின்றனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிவரும் கோண்டு பழங்குடியின மக்களின் மீது மேலும் கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிடும் நோக்கில், நியம்கிரி பாதுகாப்பு கமிட்டிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பிருக்கிறது என்ற ஆதாரமற்ற பழியைச் சுமத்தியிருக்கிறது, மத்திய உள்துறை.
மைய, மாநில அரசுகளின் வேதாந்தாவிற்குச் சாதகமான இந்த நடவடிக்கைகள், நியம்கிரியை மலையை டோங்கிரியா கோண்டு பழங்குடியின மக்களிடமிருந்து அபகரித்துக்கொள்ள ஆளுங்கும்பல் குறுக்குவழியில் இறங்கியிருப்பதை அம்பலப்படுத்துகின்றன.
சர்வதேசக் குற்றவாளி என அம்பலமாகிப் போயிருக்கும் வேதாந்தா நிறுவனத்திற்காக ஆளுங்கும்பல் எதையும் செய்து கொடுக்கத் தயாராகிவிட்ட நிலையில், அதற்கு எதிராக, எத்தகைய விலை கொடுக்க நேர்ந்தாலும், போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியாகவும், தீவிரமாகவும் நடத்துவது என நியம்கிரி பாதுகாப்பு கமிட்டி முடிவெடுத்து அறிவித்திருக்கிறது. அம்முடிவுக்கு தூத்துக்குடி போராட்டம்தான் ஆணிவேராக அமைந்திருக்கிறது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்
பாகம் :7 (இறுதிப்பாகம்)
ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.
“மதிப்புக் கூடுதலா” — அல்லது மதிப்பு கைப்பற்றலா?
இதுவரை நாம் பார்த்த சுயமுரண்களும், ஆய்வு செய்த சர்வதேச உற்பத்தி பணங்களும் வர்த்தகம், ஜி.டி.பி தொடர்பான தரவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதன் விளைவாக கிடைக்கும் தவறான சித்திரத்தை வெளிப்படுத்தின. அதற்கான காரணத்தை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள ஜி.டி.பி என்பதை இன்னும் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
அடிப்படையில் ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் உருவாக்கிய “மதிப்புக் கூடுதலின்” கூட்டுத் தொகைதான் ஜி.டி.பி. அதாவது, மதிப்புக் கூடுதல் என்பதுதான் ஜி.டி.பி-யின் அடிப்படை அளவீடு. மதிப்புக் கூடுதல் என்பது ஒரு நிறுவனம் தான் வாங்கிய அனைத்து பொருட்களுக்கும் கொடுத்த விலைக்கும், விற்ற பொருட்களுக்கு பெற்ற விலைக்கும் இடையே உள்ள வேறுபாடாக கணக்கிடப்படுகிறது.34. இந்த மையமான புதியசெவ்வியல் கருதுகோளின்படி ஒரு நிறுவனத்தின் விற்கும் விலை, வாங்கும் விலைகளை விட எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவும் அந்த நிறுவனம் படைத்த மதிப்பு என்று கருதப்படும். [அதாவது கிராமத்தில் இருந்து கிலோ ரூ 10-க்கு தக்காளி வாங்கி, அதை சந்தையில் ரூ 50-க்கு விற்கும் வேலையை ஒருவர் செய்தால் அவர் சேர்க்கும் மதிப்பு 1 கிலோ தக்காளிக்கு ரூ 40. 1000 கிலோ வாங்கியிருந்தால் ரூ 40,000. அதே நேரம் அந்த 1,000 கிலோ தக்காளியை விளைவித்த விவசாயி வாங்கிய பொருட்களின் விலை ரூ 8,000 என்றால் அவருக்குக் கிடைத்த விற்பனை விலையிலிருந்து அதைக் கழித்து பார்த்தால் ரூ 2,000 அவர் சேர்த்த மதிப்பு. 3 மாதம் உழைத்து தக்காளி விளைவித்தவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 2, அதை வாங்கி கைமாத்தி விட்டவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 40]. ஆனால், இந்த மதிப்புக் கூடுதல் மற்ற நிறுவனங்களுக்கு கடத்தப்படவோ, அவற்றால் கைப்பற்றப்படவோ முடியாது என்கிறது புதிய செவ்வியல் பொருளாதாரவியல்.
புதிய செவ்வியல் கோணத்தில் பார்க்கும் போது, உற்பத்தி என்பது ஒரு ஒளி புக முடியாத கருப்புப் பெட்டி (உள்ளே என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது), அதைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் அதற்குள்ளே போகும் உள்ளீட்டு பொருட்களுக்கு அளிக்கப்பட்ட விலையும், அதிலிருந்து வெளியில் வரும் உற்பத்தி பொருட்களுக்கு பெறப்படும் விலைகளும்தான். அது அதைப் போன்ற மற்ற கருப்புப் பெட்டிகளிலிருந்து இறுக்கமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. லாபத்துக்கான போட்டியின் காரணமாக அவற்றுக்கிடையே எந்த மதிப்பும் கடத்தப்படவோ மறுவினியோகிக்கப்படவோ முடியாது.
மார்க்சிய அரசியல் பொருளாதாரம் இந்த அபத்தத்தை நிராகரிக்கிறது. இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கருதுகோளை முன்வைக்கிறது. அதன்படி ஒரு நிறுவனத்தின் மதிப்புக் கூடுதல் என்பது உண்மையில் அது கைப்பற்றிய மதிப்பைத்தான் குறிக்கிறது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மதிப்புக் கூடுதலில் ஒரு நிறுவனம் கைப்பற்றும் மதிப்பைத்தான் அது அளவிடுகிறது [முந்தைய உதாரணத்தில் விவசாயி உருவாக்கிய மதிப்பில் பெரும்பகுதி – கிலோவுக்கு ரூ 30 – என்று வைத்துக் கொள்வோம் இடைத்தரகரால் கைப்பற்றப்படுகிறது]. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் படைக்கப்பட்ட மதிப்புக்கும் அது சந்தையில் கைப்பற்றும் மதிப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. உண்மையில், மார்க்சிய மதிப்புக் கோட்பாட்டின்படி, மதிப்புக் கூடுதலை உருவாக்குவது போலத் தோன்றும் பல நிறுவனங்கள் (உதாரணமாக, நிதிச்சேவை நிறுவனங்கள்) உற்பத்தி சாராத நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டுள்ளன, அவை எந்த மதிப்பையும் உற்பத்தி செய்வதில்லை.
வழக்கமாக, “உள்நாட்டு உற்பத்தி”யைக் கணக்கிடும்போது சேர்க்காமல் விடப்படுபவற்றை முன்வைத்து ஜி.டி.பி விமர்சிக்கப்படுகிறது. புறவிளைவுகள் என்று அழைக்கப்படுபவை – உதாரணமாக, சுற்றுச்சூழல் மாசு, புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே போவது, பாரம்பரிய சமூகங்கள் அழிக்கப்படுவது முதலியன – கணக்கில் எடுக்கப்படுவதில்லை. மேலும், “உற்பத்தி எல்லை” என்று அது வகுத்துக் கொள்வதும் விமர்சிக்கப்படுகிறது. அந்த “உற்பத்தி எல்லை” பரிவர்த்தனை சரக்கு பொருளாதாரத்துக்கு வெளியில் நடக்கும் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளையும், குறிப்பாக வீடுகளில் நடக்கும் உழைப்பை ஒதுக்கி விடுகிறது.
இருப்பினும், ஒரு கருதுகோள் என்ற அளவில் ஜி.டி.பி ஒருபோதும் முறையான விமர்சனத்துக்குட்படுத்தப்படவில்லை. மார்க்சிய விமர்சகர்களோ மைய நீரோட்டத்தின் விமர்சகர்களோ கூட இந்தப் பணியை இதுவரை செய்யவில்லை. ஏன் என்பதற்கான விடையின் ஒரு பகுதி, மார்க்சிய மதிப்புக் கோட்பாடும், புதிய செவ்வியலின் கூடுதல் மதிப்புக் கோட்பாடும் ஒரு புள்ளியில் இணைகின்றன என்பதில் அடங்கியிருக்கிறது. சரக்குகளை விற்கும்போது பெறப்படும் விலைகள் உற்பத்தியில் உருவாக்கப்பட்ட மதிப்புகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த தனித்தனி வேறுபாடுகள் ஒன்றை ஒன்று ரத்து செய்து விடுகின்றன என்பதை மார்க்சியக் பொருளாதாரவியல் கண்டுபிடித்தது. அதாவது, ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, மொத்த மதிப்பு மொத்த விலைகளுக்கு சமமாக உள்ளது. 35
ஒரு நாட்டு பொருளாதாரத்தில் ஒரு நிறுவனம் உருவாக்கிய மதிப்பு (அதாவது, ஒரு உற்பத்தி நிகழ்முறை) மற்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்த பண்டங்களுக்கு கொடுக்கப்பட்ட விலைகளில் அடக்கப்படலாம் என்றால், வெவ்வேறு நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் இடையேயும் இது நடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக இப்போதைய உலகளாவிய உற்பத்தி சகாப்தத்தில் இது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், டேவிட் ஹார்வி ஒருமுறை முன்வைத்தது போல, “உபரி மதிப்பின் புவிசார் உற்பத்தி, அதன் புவிசார் வினியோகத்திலிருந்து வேறுபடலாம்”36 எந்த அளவுக்கு அது விலகியிருக்கிறதோ, மொ.உ.உ ஒரு நாட்டின் உற்பத்தியை அளப்பதற்கான பருண்மையான, ஏறக்குறைய துல்லியமான சராசரி என்ற நிலையிலிருந்து (அது ஒருபோதும் அப்படி இருந்ததில்லை என்பது தனி விஷயம்.) மேலும் விலகிச் செல்கிறது. அதற்கு மாறாக, ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளின் வாழும் உழைப்புக்கும் இடையேயான மேலும் மேலும் ஒட்டுண்ணித் தன்மையிலான சுரண்டல் அடிப்படையிலான உறவை, வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஏகாதிபத்திய தன்மையை மறைக்கும் திரையாக அது உள்ளது.
முடிவுரை
முன்பு குறிப்பிடப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கை பற்றி கருத்து கூறிய பைனான்சியல் டைம்ஸ் எழுத்தாளர் ஜில்லியன் டெட், “பொருளியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால் ஆழமானது. முன்பெல்லாம் பொருட்கள் எங்கு “உற்பத்தியாகின்றன” என்பதை கவனிப்பது மூலம் அவர்கள் ஒரு பொருளாதாரத்தின் வெளியீடுகளை அளவிட்டனர். ஆனால், ஒரு ஐஃபோன் (அல்லது ஒரு இத்தாலிய சூட் அல்லது அமெரிக்க சிறுமி பொம்மை)-ன் “மதிப்பு” எந்த நாட்டுக்குச் சொந்தமானது? நிறுவனங்கள் தமது விருப்பப்படி லாபங்களை இடம் மாற்றிக் கொண்டிருக்கும் உலகில் உண்மையான ‘வெளியீடு’ எங்கு வெளிப்படுகிறது?”37 என்று கூறியிருக்கிறார். உண்மையில் கேட்கப்பட வேண்டிய கேள்வி, “உண்மையான வெளியீடு” எங்கிருந்து வருகிறது என்பதை விட, அது எங்கு போகிறது, யார் அந்த வளத்தை உருவாக்குகிறார்கள், யார் அதைக் கைப்பற்றுகிறார்கள் என்பதுதான்.
மூன்றாம் உலக நாடுகளின் சுரங்கங்கள், தோட்டங்கள், வியர்வைக் கூடங்களிலிருந்து பெறப்படும் பொருட்கள் எங்கும் நிறைந்திருந்தாலும் இப்போது ஆதிக்கத்தில் உள்ள கண்ணோட்டங்கள் அவற்றை விளிம்புகளாகவும், உலக வளத்துக்கு அவற்றின் பங்களிப்பு முக்கியத்துவம் அற்றதாகவும் பார்ப்பது ஏன் என்பதை மொ.உ.உ தோற்றமயக்கம் பகுதியளவு விளக்குகிறது. மூன்றாம் உலக வாழும் உழைப்பு நமது ஆடைகள், மின்னணு பயன் பொருட்கள், நமது மேசையில் உள்ள பூக்கள், ஃபிரிட்ஜில் உள்ள உணவு, ஏன் அந்த ஃபிரிட்ஜையும் கூட படைப்பதாக இருந்த போதும் இதுதான் அவற்றின் கண்ணோட்டமாக உள்ளது.
ஒரு நாட்டுக்குள்ளான மொ.உ.உ-ல் உழைப்பின் பங்கு அந்த நாட்டுக்குள் நிலவும் உழைப்புச் சுரண்டல் வீதத்துடன் நேரடியாகவோ, எளிமையாகவோ தொடர்பு கொண்டிருப்பதில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் “மொ.உ.உ”யின் ஒரு பெரும்பகுதி, சுரண்டப்பட்ட மூன்றாம் உலக தொழிலாளர்கள் படைத்த மதிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
நாம் எடுத்துக் கொண்ட மூன்று சர்வதேச விற்பனை பண்டங்கள் ஒரு சிறு மாதிரியாக வெளிப்படுத்தியது போல, உற்பத்தி உலகமயமாவது என்பது அதே நேரத்தில் மூலதனம்/உழைப்பு உறவு உலகமயமாவதும் ஆகும். இந்த மாபெரும் உருமாற்றத்துக்கான முக்கியமான இயக்க சக்தி குறைந்த கூலி மற்றும் அதிகரித்த சுரண்டலுக்கான மூலதனத்தின் தணிக்க முடியாத வேட்டை. இதன் முக்கிய விளைவு, ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளும் முதலாளித்துவமும் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களையும், வாழும் உழைப்பையும் சுரண்டுவதால் கிடைக்கும் வருமானத்தை சார்ந்திருப்பது இன்னும் அதிகரித்திருப்பது ஆகும். முதலாளித்துவத்துக்கு ஒரு முன் நிபந்தனையாக ஏகாதிபத்திய அடிப்படையில் உலகம் பிரிக்கப்படுவது இருந்தது, இப்போது அதன் உள்ளார்ந்த அம்சமாக மாறியிருக்கிறது. 38 புதிய தாராளவாத உலகமயமாக்கம், முழுவதும் பரிணாம வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வடிவத்தின் தோற்றத்தை குறிக்கிறது.
இறுதியாக, இங்கு விவரிக்கப்பட்ட கருதுகோள்கள், புள்ளிவிபரங்கள் பற்றிய விமர்சனம் உலக நெருக்கடி பற்றிய நமது புரிதலுக்கு மிகப்பெரிய தாக்கங்களை கொண்டிருக்கிறது. உலக நெருக்கடி, வடிவத்திலும், தோற்றத்திலும் மட்டுமே “நிதி” நெருக்கடி. எந்த நெருக்கடிக்கு எதிர்வினையாக அயல் உற்பத்தி முறை தோன்றியதோ அந்தக் கட்டமைப்பு நெருக்கடியின் மறு தோற்றத்தை இது குறிக்கிறது. அயல் உற்பத்தி முறையில் அதிக செலவிலான உள்நாட்டு தொழிலாளர்களுக்குப் பதிலாக குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்களை பயன்படுத்தியது, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் லாபங்களுக்கும், நுகர்வு மட்டங்களுக்கும், குறைந்த பணவீக்கத்துக்கும் அடிப்படையாக இருந்தது. 1970-களின் நெருக்கடிகளிலிருந்து ஏகாதிபத்திய பொருளாதாரங்கள் தப்பித்ததற்கு, கடன் பொருளாதார விரிவாக்கத்தோடு கூடவே அயல் உற்பத்தி முறை முக்கியமானதாக இருந்தது. மேலும் கட்டமைப்பு நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கு அயல் உற்பத்தி முறையின் ஆழமான தொடர்பு பல வழிகளில் வெளிப்பட்டிருக்கிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியை பகுப்பாய்வு செய்வதில் உற்பத்தி வளையத்துக்கு மைய இடம் கொடுப்பது பல மார்க்சிய பொருளியலாளர்களின் கவனத்தை பிரதானமாக ஈர்த்திருக்கிறது. இதற்கு கடந்த மூன்று பத்தாண்டுகளாக நடந்து வரும் புதியதாராளவாத உலகமயமாக்கலின் மூலம் இந்த வளையத்தில் நடந்திருக்கும் மகத்தான உருமாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்வது தேவையானதாக இருக்கிறது. அதற்கு மொ.உ.உ தோற்றமயக்கத்தை விட்டொழிப்பது தேவையாக உள்ளது.
(நிறைவடைந்தது …)
34. How do GDP accounts treat government activity? While the cost of governments’ inputs are precisely known, its outputs—from provision of healthcare to providing “security” in Afghanistan—are not sold on markets and cannot be measured by their prices of sale. National accounts deal with this problem by assuming that the total value of services provided by governments is equal to the costs of providing them. Thus the public sector, by definition, produces no value added.
35. Marx wrote that “the distinction between value and price of production…disappears whenever we are concerned with the value of labour’s total annual product, i.e. the value of the product of the total social capital.” Capital, vol. 3, 971.
36. David Harvey, TheLimitstoCapital (London: Verso, 2006), 441–42.
37. Gillian Tett, “Manufacturing is All Over the Place,” Financial Times, March 18, 2011, http://ft.com.
38. This has been most clearly articulated by Andy Higginbottom, who has argued that holding “(southern) wages…below the value of (northern) labour power is a structurally central characteristic of globalised, imperialist capitalism…. Imperialism is a system for the production of surplus value that structurally combines national oppression with class exploitation.” Andy Higginbottom, TheThird Form of Surplus Value Increase, conference paper, Historical Materialism Conference, London, 2009.
”பல கலாச்சாரங்கள் கூடி வாழும் ஒரு சமூகம் என்பது பல முனைகளில் முரண்படும் சமூகம் ஆகும். வெவ்வேறு கலாச்சாரங்கள் கூடி வாழ்வது என்பது சாத்தியமற்றது. ஆனால், அப்படித்தான் வாழ வேண்டும் என்றால் சிறுபான்மைக் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மைக் கலாச்சாரத்தை மதித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” – இதைக் கேட்பதற்கு நாம் தமிழர் தம்பிமார்கள் ‘வடுக வந்தேறிகளுக்கு’ எதிராகவோ, ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் முசுலீம்களுக்கு எதிராகவோ பேசும் வாதங்களை ஒத்தது போல் இருக்கிறதா?
கேதென் தஸ்ஸாவே
இல்லை. இந்தக் குரல் பிரான்சு தேசத்தில் இருந்து ஒலிக்கிறது. ஆம், சுமார் இருநூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன் எதேச்சதிகாரத்தையும் நிலபிரபுத்துவத்தையும் இரத்தப் புரட்சியின் மூலம் வீழ்த்தி ‘ஜனநாயக’த்தைப் பிரசவித்த அதே பிரான்சு தான். இன்றைக்கும் பிரெஞ்சு ஜனநாயக விழுமியங்களும், சகிப்புத்தன்மையும் உலகறிந்த விசயங்கள்தாம்; அதற்காகவே முதலாளித்துவ ஜனநாயகத்தின் மாதிரியாக அந்த நாடு கொண்டாடப்படுகின்றது. எனினும், அதே பிரான்சு தேசத்தினுள் இன்னொரு தேசமும் உள்ளது. அதற்கென்று ஒரு இருண்ட முகமும் உள்ளது. கட்டுரையின் துவக்கத்தில் உள்ள வார்த்தைகள் பிரான்சின் வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவின் தலைவரும் அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமான கேதென் தஸ்ஸாவே (GAETAN DUSSAUSAYE) உதிர்த்தவை.
இந்து பயங்கரவாத அமைப்பினரின் செயல்பாடுகளால் அவ்வப்போது தர்மசங்கடத்திற்கு உள்ளாகும் நமது ஊடகங்கள் போலியாகப் பயன்படுத்தும் ‘ஃபிரின்ஞ் எலிமெண்ட்ஸ்’ எனும் போர்வைக்குள் பிரான்சின் தேசிய முன்னணியை அடைத்து விட முடியாது. கடந்த அதிபர் தேர்தலின் போது இம்மானுவல் மாக்ரோனை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணியின் மேரி லீ பென் பெற்ற வாக்குகளின் சதவீதம் 33.9. பிரான்சு இசுலாமியமயமாகி வருவதாகவும், வந்தேறிகளின் கலாச்சாரம் பிரெஞ்சு கலாச்சாரத்தை நசுக்கி வருவதாகவும் தேசிய முன்னணி தீவிரமாக பிரச்சாரம் செய்தது. இன்றும் இசுலாமியர்களுக்கும் பிற இனச் சிறுபான்மையினருக்கும் எதிராக பிரெஞ்சு மக்களிடம் விசத்தைப் பரப்பி வரும் இக்கட்சி விதிவிலக்கான உதிரிக்கட்சியல்ல; மக்களின் கணிசமான ஆதரவு பெற்ற மைய நீரோட்டக் கட்சி.
பிரெஞ்சு சமூகத்தினுள் மிக ஆழமாகப் பரவி வரும் இனவெறிக் கலாச்சாரத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது ”பாரீஸ் : ஒரு பிளவுண்ட நகரம்: பிரெஞ்சுக்காரர்களாய் இருப்பதன் பொருள் என்ன” (Paris: A Divided City: What does it mean to be French?) எனும் அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஆவணப் படம்.
https://www.youtube.com/watch?v=bXDmFlyPZOY
***
அடமா எனும் கருப்பின இளைஞனின் கொட்டடிக் கொலையை விவரிப்பதில் இருந்து துவங்குகிறது இந்த ஆவணப்படம். கடந்த ஆண்டு (2017) ஜூலை மாதம் தனது 24ம் பிறந்த நாளைக் கொண்டாட நண்பர்களோடு செல்கிறார் அடமா தரோ (Adama Traoré). அது கருப்பினத்தவர்கள் அடர்த்தியாய் வசிக்கும் பியோமோண்ட் சுரோசேய் (Beaumont-sur-Oise) எனும் புறநகர்ப்பகுதி. அப்போது வேறு ஒரு குற்றவாளியைத் தேடி அங்கே வரும் போலீசார், அடமாவையும் அவரது நண்பர்களையும் தடுத்து நிறுத்துகின்றனர்.
பிரெஞ்சு போலீசாருக்கும் கருப்பினத்தவருக்குமான முறுகல் நிலை அனைவரும் அறிந்த இரகசியம்தான். போலீசாரால் கருப்பின இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்படுவதும் மிக இயல்பானது. சாதாரணமாக வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஒருவரை விட கருப்பினத்தவர் நான்கு மடங்கு அதிகமாகவும், அரபிகள் ஏழுமுறை அதிகமாகவும் போலீசாரின் சோதனைகளுக்கு ஆளாகிறார்கள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. போலீசார் தடுத்து நிறுத்தும் போது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லையென்றால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவார்கள். அன்று அடமாவின் கையில் அடையாள அட்டை இல்லை.
போலீசாரால் கைது செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில் அடமா ஓட்டமெடுக்கிறார்; போலீசார் விரட்டிப் பிடிக்கிறார்கள். கைது செய்யப்படும் போது போலீசார் அதிகளவு வன்முறையைப் பிரயோகித்துள்ளனர். நெருக்கிப் பிடிக்கப்பட்ட அடமா மூச்சுத் திணறலால் மயங்கி விழுகிறார். உடனிருந்த நண்பர்கள் அடமாவை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு போலீசாரிடம் கேட்கின்றனர். ஆனால் போலீசார் அவரை காவல் நிலையத்துக்குத் தூக்கிச் செல்கின்றனர். காவல் நிலையம் சென்ற அடமா இறந்து போகிறார்.
போலீசின் இனவெறி தாக்குதலால் இறந்துபோன அடாமாவுக்கு நீதி கேட்டு நடத்தப்படும் பேரணி
அடமா இறந்த செய்தியை உடனடியாக வெளிப்படுத்தாமல் மறைக்கும் போலீசார், பின்னர் பிரேதப் பரிசோதனை ஒன்றை நடத்தி கைது செய்யப்படும் போது அடமா போதையில் இருந்ததாக அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். அது ரம்ஜான் மாதம்; அடமா நோம்பில் இருந்த சமயம். ரம்ஜானின் போது தனது மகன் போதை உட்கொண்டிருக்க வாய்ப்பே இல்லை என சந்தேகப்படுகிறார் அடமாவின் தாயார்; அவரது குடும்பத்தார் மறுபரிசோதனை தேவை என்று கோருகின்றனர். முதலில் போலீசார் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அடமாவின் குடும்பத்தினர் தனியார் மருத்துவ மனையில் மறு பிரேதப் பரிசோதனை ஒன்றை நடத்துகின்றனர். இதில் அடமா மூச்சுத்திணறலால் இறந்தார் எனத் தெரியவருகிறது. அது ஒரு படுகொலை என்பது உறுதியாகிறது.
அடமாவின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிய அவரது சகோதரர் இன்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்; மற்றொரு சகோதரி நண்பர்களின் துணையுடன் போராடி வருகிறார்.
“அந்த இளைஞர்கள் போலீசாரின் உத்தரவுகளுக்கு கீழ்படிய மறுக்கிறார்கள்”
”சட்டத்தை அமல்படுத்துவதற்கே போலீசார் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள்”
”இதைத் தானே நாம் சட்டத்தின் ஆட்சி என்கிறோம்?
ஆவணப்பட இயக்குநர் சந்தித்த ஓய்வு பெற்ற போலீசு அதிகாரியின் குரலில் ஒரு அநியாய மரணம் விளைவித்திருக்க வேண்டிய எந்த துயரமும் இல்லை. அவர்கள் இறந்து போக வேண்டியவர்கள்தானே என்கிற திமிர்த்தனமே அருவெறுக்கத்தக்க வகையில் வெளிப்படுகிறது. அந்த உரையாடல் பிரெஞ்சு மொழியில் மட்டும் நடக்கவில்லை – உலகெங்குமுள்ள உழைக்கும் மக்கள் அறிந்து வைத்துள்ள அந்த மொழி ஆதிக்கத்தினுடையது.
***
இது அடமா என்கிற இளைஞர் ஒருவருக்கு நிகழ்ந்த தனிப்பட்ட துயரம் அல்ல. பளபளப்பான பாரீஸ் நகரைச் சுற்றி அமைந்திருக்கும் புறநகர்ப் பகுதியின் சேரிகளில் வாழும் இசுலாமியர்களும், கருப்பின மக்களும் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை. க்ளிச்சே சோஸ்போ எனும் புறநகர்ப் பகுதியில் 2005-ம் ஆண்டு இரண்டு இளைஞர்கள் போலீசாருக்கு அஞ்சி ஓடிய போது மின்சாரம் தாக்கி இறந்து போனார்கள். இதையடுத்து வெடித்த கலவரம் பிரெஞ்சு சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இனவெறியை உலகறியச் செய்தது. அரசால் புறக்கணிக்கப்பட்ட இப்பகுதியில் நிலவும் ஏழ்மை நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.
ஔல்ஃபா எனும் கருப்பினப் பெண் க்ளிச்சே சோஸ்போ பகுதியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர். ஆவணப்பட இயக்குனருக்கு தங்களது வாழிடத்தை அவர் சுற்றிக் காட்டுகிறார். அங்கே ஒரு கடை உள்ளது. மலிவான விலைக்குப் பொருட்கள் விற்கும் கடை. பெரிய கடைகளில் வீசப்படும் அழுகிப் போன, கெட்டுப் போன உணவுப் பண்டங்களையும் காலாவதியான மளிகைப் பொருட்களையும் அள்ளி வந்து குறைவான விலைக்கு அங்கே விற்கிறார்கள். “இங்கே உள்ள வாழ்க்கை பெண்களுக்கானது அல்ல. பையன்களாவது எப்படியாவது சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மிகக் கொடூரமானவை” என்கிறார் அந்தப் பெண். வறுமையின் அழுத்தம் விரக்தியான வார்த்தைகளில் வெளிப்படுகிறது, “இந்த தேசத்தை நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் குடியேறிகள்தான். என்றாலும், யாருக்கும் குறையாத அளவுக்கு தேசபக்தி கொண்டவர்கள். இந்த தேசம் எங்களுக்கு நீதி வழங்கவில்லை என்றாலும் நாங்கள் இந்த தேசத்தை நேசிக்கவே செய்கிறோம்” என்கிறார் ஔல்ஃபா.
தனது பயணத்தில் கருப்பினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் போதைப் பொருள் பழக்கத்தையும், போதை மாஃபியா கும்பலையும் சந்திக்கிறார் இயக்குநர்.
2005-ல் பிரான்ஸ் நாட்டில் புகைந்துக்கொண்டிருந்த இனவெறி வெடித்த கலவரம்
”நான் பிரான்சுக்கு வந்த முதல் 25 ஆண்டுகள் கொடூரமான வறுமையில் கழிந்தது. சில நாட்கள் சாப்பிடுவதற்கு கூட ஒன்றும் கிடைக்காது. மாஃபியா கும்பலில் சேர்வதெல்லாம் எங்களுடைய விருப்பத் தெரிவு அல்ல. நாங்களும் அலுவலகங்களில் கணினிகளின் முன் அமர்ந்து வேலை செய்யவே விரும்புகிறோம். ஆனால், அந்த வாய்ப்புகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எனது பெற்றோரும் எனக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வறுமை என்பது அத்தனை சுலபமானது அல்ல” என்கிறார் அந்த மனிதர். அவர் போதை மருந்து கும்பலைச் சேர்ந்தவர். தனது முகத்தை கருப்புத் துணியால் மறைத்துக் கொண்டு ஆவணப்பட இயக்குனருக்குப் பேட்டியளிக்கிறார்.
பிரான்சில் குடியேறிகளின் வாழ்க்கை ஏராளமான சவால்கள் நிறைந்தது. அர்ஜெண்டேய் எனும் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த தௌஃபிக் ஒரு தற்காப்புக் கலை ஆசிரியர். நண்பர்களோடு சேர்ந்து ஒரு பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். சிறுவயதில் அடக்க ஒடுக்கமான பையனாக வளர்க்க இவரது பெற்றோர் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். “இங்கே நிலவும் சூழல் உங்களை அமைதியானவனாக இருக்க அனுமதிக்காது. ஒரு கட்டத்தில் எனக்கும் பொறுமை இழந்து வன்முறைப் பாதையைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது அதில் இருந்தெல்லாம் விலகி வந்துள்ளேன்” எனக் கூறும் தௌஃபிக், தனது நண்பர்களின் 80 சதவீதம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மீதி 20 சதவீதம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறார்.
பாரீசில் மட்டும் சுமார் 55 லட்சம் இசுலாமியர்கள் வசிக்கின்றனர். அதில் பெரும்பான்மையானோர் வளர்ச்சியடையாத புறநகர்ப் பகுதிகளிலேயே வசிக்கின்றனர். ஏழைகளை அவர்களது வாழ்விடத்தில் இருந்து விரட்ட புதுமையான முறை ஒன்றைக் கையாள்கிறது பிரான்ஸ் அரசு. தெரிவு செய்யப்பட்ட புறநகர்ப் பகுதிகளை மேம்படுத்துவதாகக் கூறி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் நிலங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. அந்த நிலங்களில் எழும்பும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை குடியேற்ற மக்கள் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு கவுரவமான வாழ்க்கை வாழ்ந்து கொள்ளலாம் என்பது அரசின் திட்டம். வீடு வாங்குவதற்கு காசில்லாதவர்களின் நிலை? ’மேம்படுத்தப்பட்ட’ பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு விடப்படுவதில்லை என்பதால் அவர்கள் வெளியேறுவதைத் தவிற வேறு வழியில்லை.
தனது ஆவணப்படத்திற்காக லீ மோண்ட் பத்திரிகையில் பணிபுரியும் ஆலென் கேரெஷ்ஷை சந்திக்கிறார் இயக்குனர். இசுலாமியர்களின் தரப்பை நியாயமான முறையில் எடுத்துக்கூற பத்திரிகைகள் தவறி விட்டதெனக் கூறும் ஆலென், “ஐ.எஸ்.ஐ.எஸ், நீங்கள் பிரெஞ்சு முசுலீம்கள் அல்ல; முதலில் முசுலீம் அப்புறம் தான் பிரெஞ்சு குடிமகன் என்கிறது. இதையே தான் பிரான்சு அரசாங்கமும் நடைமுறையில் செய்கிறது. இசுலாமிய மக்களைக் குடிமக்களாக கருதாமல் அவர்களின் மத அடையாளத்தைப் பிராதனப்படுத்துகிறது. இதில் இருந்து தான் எல்லா பிரச்சினைகளும் துவங்குகின்றன” என்கிறார்.
சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி இதர ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவருமே அன்றாடம் சந்திக்கும் துன்பங்களின் ஒரு குறுக்கு வெட்டுச் சித்திரத்தை வழங்கும் இந்த ஆவணப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
நன்றி: அல்ஜசீரா இணையதளத்துக்காக அப்துல்லா எல்ஷமி எடுத்த ஆவணப்படம்
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரான ஒரு படுகொலையை நடத்தி முடித்து விட்டு, அந்தப் படுகொலையை நிகழ்த்திய கொலைகாரர்களே, பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொய்க்குற்றம் சுமத்திச் சிறை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது இரண்டாவது சுற்றுத் தாக்குதல். 13 உயிர்களைப் பறி கொடுத்த மக்களின் கண்ணீர் அடங்குவதற்குள், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கான சதி வேலைகள் தொடங்கிவிட்டன.
மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் தூத்துக்குடி மக்களை மூளைச்சலவை செய்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக ஒரு மனுவை போலீசே தயார் செய்து, மக்கள் சிலர் அதனைக் கொடுப்பது போல ஊடகங்களில் விளம்பரப்படுத்தினர். தமிழக அரசால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஊடகங்கள் எவ்விதக் கேள்வியுமின்றி ஸ்டெர்லைட் கொடுத்த இந்த விளம்பரத்தை ‘‘செய்தி’’ என்ற பெயரில் வெளியிட்டன.
இந்தச் செய்தி வெளியாகின்றபோதே, ஸ்டெர்லைட் ஆலை மூடலால் வேலையிழக்கும் தொழிலாளர்கள், பாதிக்கப்படும் துணைத் தொழில்கள், தடுமாறும் தூத்துக்குடி பொருளாதாரம், தாமிரப் பற்றாக்குறை என்று பல நாளேடுகளில் அடுக்கடுக்கான கட்டுரைகளை அனில் அகர்வாலின் பணம் பிரசவித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் துப்பாக்கிச் சூடு என்று அழைக்கப்படும் சட்டவிரோதப் படுகொலை குறித்த புலனாய்வில் ஓரிரு பத்திரிகைகளைத் தவிர வேறு யாரும் ஈடுபடவில்லை.
ஜார்ஜ் புஷ் நடத்திய இராக் ஆக்கிரமிப்புப் போரின்போது, அமெரிக்க இராணுவத்தின் வாகனத்திலேயே சென்று, அவர்கள் போட்ட சோற்றைத் தின்று, அவர்கள் காட்டிய திசையில் காமெராவைத் திருப்பிய பத்திரிகையாளர்கள் ‘‘embedded journalists’’ என்று அழைக்கப்பட்டனர். ‘‘உடன்படுக்கை ஊடகவியலாளர்கள்” என்று அந்தச் சொல் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்த மொழியாக்கத்தின் துல்லியத்தை இன்றைய ஊடகங்கள் பல தமது நடத்தை மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
தூத்துக்குடி படுகொலை பற்றி இந்து ஆங்கில நாளேட்டில் (The Thoothukudi fables, 8.6.2018) எழுதிய ஷிவ் விசுவநாதன், ‘‘காசா முனைக்கும், காஷ்மீருக்கும், தூத்துக்குடிக்கும் இடையிலான வேறுபாடு மறைந்து விட்டது. அங்கே பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்தும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளை தூத்துக்குடியில் சொந்த மக்களுக்கெதிராக போலீஸ் பயன்படுத்துகிறது. காஷ்மீரில் அரங்கேறும் இணைய முடக்கம் தூத்துக்குடியிலும் அரங்கேறுகிறது. குடிமகன் என்ற சொல்லின் பொருளே இப்போது சந்தேகத்துக்குரியவன் என்று மாறிவிட்டது. இப்பகுதி மக்களிடம் காணப்படும் புற்றுநோய், தோல் நோய் போன்றவற்றுக்கான விநோத அறிகுறிகளை ‘ஸ்டெர்லைட் சிம்ப்டம்’ என்ற சொல்லால் தூத்துக்குடி மருத்துவர்கள் அழைக்கிறார்கள். அதுபோல, நாம் இன்று எதிர்கொள்ளும் சூழலை ‘ஸ்டெர்லைட் ஜனநாயகம்’ என்றுதான் அழைக்க வேண்டும்’’ என்றவாறு குறிப்பிடுகிறார்.
இந்த ‘‘ஸ்டெர்லைட் மாடல்’’ ஒடுக்குமுறையில் ஊடும் பாவுமாகப் பல இழைகள் ஓடுகின்றன. இது கார்ப்பரேட் முதலாளிகள் இலஞ்ச, ஊழல் மூலம் அதிகாரவர்க்கத்தையும் அரசாங்கத்தையும் தம் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்ளும் வழமையான விவகாரம் அல்ல. சட்டீஸ்கரைப் போல சல்வா ஜுடும் என்ற தனியொரு கார்ப்பரேட் கூலிப்படையை உருவாக்க வேண்டிய அவசியமின்றி, போலீசே அத்தகைய கூலிப்படைத் தன்மையை எட்டியிருப்பதை தூத்துக்குடி மாடல் காட்டுகிறது.
“சட்டத்தின் ஆட்சி” என்ற பம்மாத்தை உதறிவிட்டு, காசு கொடுக்கின்ற பன்னாட்டு நிறுவனத்திடம் தயக்கமின்றி தமது மண்ணை விற்கின்ற ஆப்பிரிக்க இனக்குழுத் தலைவர்களைப் போல, தன்னை விலை கூறிக்கொள்ளும் அ.தி.மு.க. அரசையும், குஜராத்தி பனியா தரகுமுதலாளித்துவ கும்பலுக்கு முடிந்தவரை நாட்டை எழுதி வைத்து வரும் மோடி அரசையும் தூத்துக்குடி மாடல் அடையாளம் காட்டுகிறது. பார்ப்பன பாசிசம் தமிழகத்தின் மீது கொண்டிருக்கும் சந்தேகத்தையும், தனிச்சிறப்பான வெறுப்பையும், கம்யூனிசப் புரட்சியாளர்கள் மீது கொண்டிருக்கும் வன்மத்தையும் தூத்துக்குடி விவகாரத்தில் மத்திய உளவுத்துறையின் மிதமிஞ்சிய தலையீடு நிரூபிக்கிறது.
சட்டீஸ்கரைப் போல சல்வா ஜுடும் என்ற தனியொரு கார்ப்பரேட் கூலிப்படையை உருவாக்க வேண்டிய அவசியமின்றி, போலீசே அத்தகைய கூலிப்படைத் தன்மையை எட்டியிருப்பதை தூத்துக்குடி மாடல் காட்டுகிறது.
13 பேரைச் சுட்டு வீழ்த்திய பின்னரும் தூத்துக்குடி மக்களின் போராட்டம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து ஆளும் வர்க்கம் மீண்டுவிடவில்லை. ‘‘இது நெடுங்காலமாக அடக்கப்பட்ட கோபங்கள் குமுறி வெடிக்கின்ற, உயர் அழுத்த கலகங்களின் காலம். இது மொத்த அரசியல் அமைப்பும் பணக்காரர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவாகத்தான் இயக்கப்படுகிறது என்ற புரிதலிலிருந்து வருகின்ற கோபம். கடந்த காலத்தின் போராட்டங்களுக்கும் இன்றைய போராட்டங்களுக்கும் உள்ள தன்மைரீதியான வேறுபாடு என்னவென்றால், இன்று போராட்டத்தில் மொத்த சமூகமும் ஈடுபடுகிறது. போராட்டங்கள் மென்மேலும் தலைவர்கள் இல்லாப் போராட்டங்களாகி வருகின்றன” என்று எச்சரிக்கை செய்கிறார் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் (தி 15.6.2018).
“தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த போராட்டங்கள் எல்லாமே அந்தந்த பகுதிகளில் சில்லறை சக்திகளால் தூண்டப்பட்டு நடத்தப்படுகின்றனவே தவிர, பெரிய கட்சிகளால் அல்ல. இந்தப் போக்கு தொடர்ந்தால், அது தமிழக அரசியல் லகானை அராஜக சக்திகளின் பிடியில் கொடுத்தது போல ஆகிவிடும்” என்று எச்சரிக்கை செய்கிறார் குருமூர்த்தி. (துக்ளக், 6.6.2018 )
“அராஜகத்தை தோற்றுவித்து தேசத்தையே நிலைகுலைய வைக்கும் தீய நோக்கம் கொண்டது ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம். ஒக்கி புயலைத் தொடர்ந்து, 2017 டிசம்பரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப்பெரிய கலவரத்தை தூண்டுவதற்கு மக்கள் அதிகாரம் மேற்கொண்ட முயற்சிகளை, அதன் முன்னணியாளர்களைக் கைது செய்ததன் வாயிலாக போலீசு முறியடித்து விட்டது” என்கிறது ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசர். “ஸ்டெர்லைட் ஆலை மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள், வி.ஏ.ஓ. அலுவலகத்துக்குத் தீ வைக்கத் திட்டமிட்டார்கள்” என்று மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எதிராகப் பொய்களையும் புனைகதைகளையும் அவிழ்த்து விடுகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றதொரு தமிழகம் தழுவிய மக்கள் எழுச்சி மீண்டும் தோன்றிவிடும் என்ற பீதி சங்கபரிவாரத்தினரின் பேச்சிலும் எழுத்திலும் தெரிகிறது. ‘‘மக்கள் அதிகாரம் அமைப்பைத் தடை செய்தால் மட்டும் போதாது, அவர்களைக் கருவறுக்க வேண்டும்” என்று நஞ்சைக் கக்குகிறார் பொன். இராதாகிருஷ்ணன்.
புதிய தாராளவாதக் கொள்கைகளின் தோல்வி, மாபெரும் மீட்பராக முன்நிறுத்தப்பட்ட மோடியின் தோல்வி, இந்த அரசமைப்பின் தோல்வி ஆகியவற்றை பார்ப்பன பாசிஸ்டுகளால் மறைக்கவும் இயலவில்லை, ஏற்கவும் இயலவில்லை. தமது பேச்சுகள் வாயிலாக இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும் தங்களது பாசிச முகத்தையும் இவர்கள் மக்களுக்கு ஒருசேர அறியத் தருகிறார்கள்.
புதிய தாராளவாதம் என்று கூறப்படும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் தம் இயல்பிலேயே ஜனநாயகத்துக்கு விரோதமானவை. புதிய தாராளவாதக் கொள்கைகளின் விளைவான தீவிர முதலாளித்துவச் சுரண்டலும், சமூக ஏற்றத்தாழ்வு அதிகரிப்பும், உற்பத்தி தேக்கமும், வேலையின்மை அதிகரிப்பும் மீளமுடியாத முட்டுச்சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரத்தை நிறுத்தியிருக்கின்றன. சூதும் திருட்டும் மட்டுமே இனி முதலாளித்துவம் இலாபமீட்டுவதற்கான வழிகள் என்றாகிவிட்டன.
இயற்கை வளங்களைக் கொள்ளையிடுதல், சிறு உடைமையாளர்களின் தொழில்களைக் கைப்பற்றுதல், பொதுத்துறை நிறுவனங்களைப் பிடுங்குதல், வரிச் சலுகைகள் – மானியங்கள் என்ற பெயரில் அரசு கஜானாவைக் கொள்ளையிடுதல், வங்கிகளைக் கொள்ளையிடுதல் போன்றவற்றைத்தான் ‘‘இலாபமீட்டும் தொழில்களாக” பன்னாட்டு முதலாளிகளும் பெரு முதலாளிகளும் தெரிவு செய்திருக்கிறார்கள். புல்லட் ரயில், எட்டு வழிச்சாலை என்பன போன்ற திட்டங்கள் பயனற்றவை மட்டுமல்ல, இயற்கை வளங்களை அழிப்பதுடன், சிறு உடைமை விவசாயிகளின் சொத்தைத் திருடி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதையும், டோல்கேட் என்ற வழிப்பறியைச் சாத்தியமாக்குவதையும், கனிம வளங்களைக் கொள்ளையிட வகை செய்வதையுமே நோக்கமாகக் கொண்டவை.
காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய அனில் அகர்வால், தூத்துக்குடி மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியதைவிட வேறு ஒரு அமைப்பால் அம்மக்களைப் போராடத் தூண்ட முடியுமா?
எனவேதான், எழுப்பப்படும் கேள்விகள் எதற்கும் அறிவுபூர்வமான விளக்கத்தை இவர்களால் தர முடிவதில்லை. ‘‘மக்களின் கருத்தறிதல்” என்பதெல்லாம் சட்டங்களில் ஏட்டளவில் இருந்தாலும், அவை எதையும் எப்போதுமே இவர்கள் அமல்படுத்துவதில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டம்- 2013 கூறுகின்ற வழிமுறைகளாக இருக்கட்டும், ‘‘வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்றல், மக்கள் பங்கேற்பு” (Transperance, Accountability, Participation) என்று உலகவங்கி போன்ற நிறுவனங்கள் தேனொழுகச் சிபாரிசு செய்கின்ற நடவடிக்கைகளாக இருக்கட்டும், எதுவும் பின்பற்றப்படுவதில்லை. இதன் பொருள் என்னவென்றால், மறுகாலனியாக்கத்துக்கு மனித முகம் அணிவிப்பது (Globalisation with a human face) சாத்தியமில்லை என்பதுதான்.
“வளர்ச்சி” என்று புனை பெயர் சூட்டுவதனால் ‘‘திருட்டு” என்பதற்கு வேறு பொருள் வந்து விடுவதில்லை. எனவேதான், இந்த கொள்ளைக்காரத் திட்டங்களுக்கு எதிராக எழுப்பப்படும் வெகுளித்தனமான ஆட்சேபங்கள்கூடத் தேசவிரோத நடவடிக்கைகளாக சித்தரிக்கப்படுகின்றன. போராட்ட உரிமை இருக்கட்டும், அரசியல் சட்டம் கூறுகின்ற கருத்துரிமையைக் கோருவதே வரம்பு மீறிய தீவிரவாத நடவடிக்கையாக சித்தரிக்கப்படுகின்றது. மதுரை உயர் நீதிமன்றம் தூத்துக்குடி போராட்டத்துக்கு 144 தடை உத்தரவு போட சிபாரிசு செய்கிறது. சென்னை உயர் நீதிமன்றமோ எட்டு வழிச்சாலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்திக் கருத்து கூறுவதற்கே தடை விதிக்கிறது.
முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தூத்துக்குடி போராட்டம் குறித்து ஆங்கில இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில் அரசமைப்பின் தோல்வியையும் நீதித்துறையின் தோல்வியையும் மறுக்கவில்லை. எனினும், தூத்துக்குடி போராட்டம் போன்ற பெருந்திரள் போராட்டங்களை முளையிலேயே கிள்ளுவதற்கு போலீசும் உளவுத்துறையும் கையாளவேண்டிய புத்திசாலித்தனமான உத்திகள் குறித்து அவர் உபதேசிக்கிறார். அத்தகைய ‘‘தேர்ச்சி நயமற்ற” பாசிஸ்டான குருமூர்த்தி, ‘‘மனிதனுக்கு உடல் பயம் இருக்க வேண்டும். அப்போதுதான் 100-க்கு 99 பேர் ஒழுங்காக இருப்பார்கள்… போலீஸ் மீது விசாரணை என்றால், பிறகு போலீசாருக்கு வேலையில் என்ன ஆர்வம் இருக்கும்?” என்று சோ பேசியதையும் ரஜினி பேசியதையும் வழிமொழிகிறார். (துக்ளக், 13.6.2018)
“எதற்கெடுத்தாலும் போராட்டமா?” என்ற கருத்தை ஆமோதித்து, உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டத்துக்கு எதிராக முகம் சுளித்து வந்த நடுத்தர வர்க்கத்துக்கும்கூட இன்று புத்தி தெளிந்து விட்டது. தனியார்மயக் கொள்கைகள் மீதான அதன் மயக்கம் மறைந்து விட்டதால், அது மக்கள் போராட்டங்களை ஆதரிப்பதுடன், களத்திலும் இறங்கத் தொடங்கி விட்டது. அதனால்தான், ‘‘போராட்டங்களைக் கையாளும் உளவுத்துறை இன்றைய போராட்டங்களில் நடுத்தர வர்க்கம் ஆற்றும் பாத்திரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கிறார் எம்.கே.நாராயணன். அருண் ஜெட்லியோ, மக்கள் போராட்டங்களை ஆதரிக்கும் அறிவுத்துறையினர் மீது ‘‘நகர்ப்புற நக்சல்கள், அறிவுத்துறை நக்சல்கள், அரை மாவோயிஸ்டுகள்” என்று முத்திரை குத்தி அச்சுறுத்துகிறார். ‘‘போராடத் தூண்டும் தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்” என்று கூச்சலிடுகிறார்கள் பார்ப்பன பாசிஸ்டுகள்.
காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய அனில் அகர்வால், தூத்துக்குடி மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியதைவிட வேறு ஒரு அமைப்பால் அம்மக்களைப் போராடத் தூண்ட முடியுமா? எட்டுவழிச் சாலைக்காக நிலப்பறி இயக்கம் நடத்தும் எடப்பாடி அரசை மிஞ்சி, வேறொருவன் ஐந்து மாவட்ட விவசாயிகளை வீதிக்கு இழுத்து வந்திருக்க முடியுமா?
ஒரு சங்கிலித் திருடன்கூட, தன்னிடம் கழுத்துச் சங்கிலியைப் பறிகொடுக்கும் பெண், ‘‘தன்னை எதிர்ப்பாள், தடுப்பாள், போராடுவாள்” என்ற ‘நியாயத்தை’ அங்கீகரிக்கிறான். ‘‘யாரோ ஒரு வழிப்போக்கனோ, போலீஸ்காரனோ தூண்டி விட்டிருக்காவிட்டால், அவள் கூச்சல் போடாமல் கழுத்துச் சங்கிலியைக் கழற்றி என்னிடம் கொடுத்திருப்பாள்” என்று யார் மீதும் அவன் பழி சொல்வதில்லை. மோடி, எடப்பாடி அரசுகள் அப்படித்தான் சொல்கின்றன. மக்கள் அதிகாரத்தை முடக்கி விட்டால், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட மக்கள் போராட்டங்களை அவித்துவிடலாம் என்று கூறும் இவர்களுக்கு, ஒரு சங்கிலித் திருடனிடம் இருக்கும் ‘நேர்மை’யும் இல்லை, அறிவும் இல்லை.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து ஒராண்டு நிறைவடைந்துவிட்டதையொட்டி, ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட நாளான ஜூலை – 01 அன்று, ஜி.எஸ்.டி. நாளாக கொண்டாடியது மோடி அரசு.
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., என அடுத்தடுத்து தொடுக்கப்பட்ட தாக்குதலால் தீப்பெட்டி ஒட்டும் தொழிலாளர்கள் தொடங்கி, சிறுபட்டறை அதிபர்கள் வரையில் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கி உழல்கிறார்கள். இந்தப் பின்னணியில், ஜி.எஸ்.டி.யினால் விளைந்த சாதனைகள் என்று பா.ஜ.க. கும்பல் பட்டியலிடுவது வக்கிரமின்றி வேறென்ன?
அதை ஆதாரப்பூர்வமாக அறிய இந்த நூல் உதவி செய்யும். ஜி.எஸ்.டி.யைப் பற்றியும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் மிகச்சுருக்கமாக பேசுகிறது, இச்சிறுநூல். நூலாசிரியர் என்.மணி, கல்லூரி பேராசிரியர் என்பதால், வகுப்பறையில் மாணவர்களிடம் உரையாடுவது போலவே, நூலை வடிவமைத்திருக்கிறார். பல்வேறு சிறு கேள்விகளை கேட்டு விளக்கமளித்திருக்கிறார்.
நான்கையும் மூன்றையும் கூட்டினால் பத்து வருமா? நிச்சயம் வரும். என்ன குழப்புகிறீர்கள்? என்போருக்கு நம்ம ஊர் ஜி.எஸ்.டி. வரியைப் பார்த்த பிறகுமா இந்தக் கேள்வி என்று திருப்பிக் கேளுங்கள். பல்முனை வரியை ஒருமுகப் படுத்தினாலும் எளிமைப் படுத்தினாலும் வரியின் அளவு ஒன்றாகத்தானே இருக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். இங்கு வரிகள் எகிறிக் குதித்துள்ளதே ஏன்?
ஜி.எஸ்.டி. என்பது சாதாரண மக்களின் தலையில் புதிய சுமைகளை ஏற்றக்கூடியது. சிறு, குறு நிறுவனத்தினர், அமைப்பு சாராத சில்லரை வர்த்தகத்தினர், அவர்கள் சார்ந்த தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும். ஜவுளித் தொழில், பீடி, மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, கட்டுமானம், போக்குவரத்து, தையல், சிறுபத்திரிகைகள், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில், வேளாண்மை அதுசார்ந்த தொழில்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.
ஜி.எஸ்.டி. எப்படி அமலுக்கு வந்தது? ஜி.எஸ்.டி. வரிக்கு முன் அதன் ஆதரவாளர்கள் கற்பிக்கும் காரணங்கள் என்ன, காங்கிரசு என்ன சொல்கிறது? இடதுசாரிகள் கருத்தென்ன? தமிழக கட்சிகள் சொல்வதென்ன? யார் சொல்வது சரியானது? ஜி.எஸ்.டி. வரியால் ஜி.டி.பி. அதிகரிக்குமா? ஜி.எஸ்.டி. வரி விகிதங்ளை எப்படி நிர்ணயித்தார்கள்? உலக சமத்துவமின்மை அறிக்கை 2018க்கும் ஜி.எஸ்.டி.க்கும் என்ன தொடர்பு? ஜி.எஸ்.டி மூலம் வரிகள் மையப்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி அதற்குரிய சுருக்கமான விளக்கத்தை தந்திருக்கிறார், நூலாசிரியர்.
நூல்: அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ! ஆசிரியர்:பேரா.என்.மணி
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: : 044 – 24332924 மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
பக்கங்கள்: 20 விலை: ரூ.10.00
சென்னையில் கிடைக்குமிடம்: கீழைக்காற்று, (கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
தூத்துக்குடி மாடல் வளர்ச்சி ! புதிய ஜனநாயகம் ஜுலை 2018 இதழ்
வெளியான கட்டுரைகள்:
1. உண்மையைப் பேசாதே! மோடிஜி சர்கார் பத்திரிகையாளர்களுக்கு விடுக்கும் மிரட்டல்!
முதலில் பத்திரிகையாளர்களைத் தனிமைப்படுத்தித் தாக்குவது, அந்த பத்திரிகை நிர்வாகம் பத்திரிகையாளருக்கு ஆதரவாக நின்றால் பிறகு அந்த பத்திரிகையின் மீதும் தாக்குதல் தொடுப்பது என்பதுதான் மோடி, அமித் ஷா கும்பல் கையாண்டு வரும் உத்தி.
2. தூத்துக்குடி மாடல் வளர்ச்சி !
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரான ஒரு படுகொலையை நடத்தி முடித்து விட்டு, அந்தப் படுகொலையை நிகழ்த்திய கொலைகாரர்களே, பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிறை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
3. போராடும் உரிமை குற்றமா? தமிழகமெங்கும் தொடரும் மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறை!
மே 22 துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகும் போலீஸ் என்பது ஸ்டெர்லைட்டின் கூலிப்படை என்று புரிந்து கொள்ளாதவர்கள் அனைவருக்கும், தாங்கள் கூச்ச நாச்சமில்லாத, வெட்கம் கெட்ட கூலிப்படைதான் என்பதைக் கைது நடவடிக்கைகள் மூலம் புரிய வைத்திருக்கிறது போலீசு.
4. மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறை : தலைவர்கள் கண்டனம்
“இது மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளுக்கு விடப்பட்ட சவால்கள், எச்சரிக்கைகள், நடவடிக்கைகள் என்று அதை நாம் தவறாகப் புரிந்து கொண்டால் தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளின் எதிர்காலமும் மிகப்பெரிய நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.” – பீட்டர் அல்போன்ஸ், காங்கிரசு.
5. சிறு பொறி… பெருங்காட்டுத் தீ !
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டம், ஒடிசா பழங்குடியினரை எழுச்சியடையச் செய்திருக்கிறது.
6. எட்டுவழிச் சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !
ஜிண்டால் உள்ளிட்ட சில பனியா முதலாளிகளின் இலாபத்திற்காக ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரம் அதிகாரத்தின் துணையோடு பறிக்கப்படுகிறது.
7. காவிரி : தொடருகிறது வஞ்சனை!
கர்நாடகம் தமிழகத்தை வடிகால் பூமியாகத்தான் கருதுகிறது, நடத்தி வருகிறது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உறுதிப்பட்டிருக்கிறது.
8. மோடியைக் கொல்ல சதியாம்! இந்துத்துவ பாசிஸ்டுகளின் கபட நாடகம் !
தன்னைக் கொல்ல வந்த பயங்கரவாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 22 பேரைப் போலி மோதலில் கொலை செய்த பாசிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் மீது கொலைப்பழி சுமத்தி 5 பேரை ஆள்தூக்கி ஊபா சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.
9. பா.ஜ.க. – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !
ஸ்டெர்லைட் அதிபர் அனில் அகர்வாலுக்கும் பா.ஜ.க. -விற்கும் இடையே இன்று நேற்றல்ல, கடந்த இருபது ஆண்டுகளாகவே நகமும் சதையும் போல நெருக்கம் இருந்து வருகிறது.
10. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் களப்பலியான தியாகிகளுக்கு வீரவணக்கம்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024