Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 469

கோட்டையிலே கொலைகாரக் கூட்டம் ! கொந்தளிக்கிறது ஃபேஸ்புக்

தூத்துக்குடியில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற அரசின் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பலரும் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு! பாகம் 2

AD Bala
அரசியல் கட்சிகள் போராட்டங்களை சம்பிரதாயச் சடங்காக மாற்றின. மறுபுறம் அரசு மேலும் மேலும் மிருக பலமும் தடித்த தோலும் உடையதாக, குயுக்தி நிறைந்ததாக மாறியுள்ளது. இதன் காரணமாக போராட்டங்கள் தமது நெருக்கடி தரும் வலுவை இழக்கின்றன.

சூறாவளியாய் எழுகிற தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடுவழியில் திசை தெரியாத கப்பலாய் சிக்கிக்கொள்கின்றன.

ஒரு தொழிற்சாலையை அகற்ற அது அமைந்துள்ள இடத்தின் மக்கள் கூட்டாக தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதே போதுமானதாக இருக்கவேண்டும்.

கண்டிப்பா அடிப்பானுங்கனு தெரியும்., ஆனா சுடுவானுங்கனு நினைச்சு கூட பார்க்கல,
“பொம்பளைங்களுக்கெல்லாம் இங்க என்னடி வேலை, ஓடுங்கடி வீட்டுக்கு”னு சொல்லிட்டு தான் அடிச்சாய்ங்க..

இங்கோ 13 உயிர்கள்கூட போதுமானதா தெரியவில்லை.
கிருமிகள் மருந்துக்கு அடங்காதவையாக மாறும்போது மேலும் வீரியமிக்க மருந்துகள் ஆய்வகங்களில் உருவாவதைப் போல வீரியமிக்க போராட்ட வடிவங்களை, சட்ட உரிமைகளை, பாதுகாப்பு மிக்க போராட்டச்சூழலை உருவாக்குவதற்கு என்ன செய்வது என்ற சிந்தனை பல தரப்பிலும் நிகழவேண்டும்.

ஒவ்வொரு குடிமைப் போராட்டத்திலும் உயிர்களை இழப்பது நிகழ்ந்தே ஆகவேண்டிய தியாகமல்ல. மாற்றப்பட்டாகவேண்டிய சமூக ஒழுங்கு.
____________
Barathi Thambi
எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுத்துறை நண்பர்களே… தூத்துக்குடி மக்கள் மீதான தமிழக அரசின்; தமிழக காவல்துறையின் இரக்கமற்ற கொலைவெறி தாக்குதலை உடனே நிறுத்தக்கோரி வெளிப்படையான போராட்டம் ஒன்றை அவசரமாக நடத்த வேண்டும். அறிவுலகின் இந்த அமைதி உடனே உடைக்கப்பட்டாக வேண்டும். கூட்டறிக்கை போதாது. களத்துக்கு வர வேண்டும். உடனே… இன்றே… இப்போதே… அங்கே அரச பயங்கரவாதம் உயிர்களை இடைவிடாமல் கொன்றொழிக்கிறது. இணையதள சேவைகளை முடக்கி இது ஒரு சாட்சியமற்ற போராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைந்து வினையாற்றுவது அவசியம்.
__________
கி. நடராசன்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உதயம் மனோகரன், மில்லர், பார்வேந்தன், உட்பட மதுரை, நெல்லை, திருச்சி இன்னும் பல நகரங்களில் இருந்து பல குழுக்களாக 60 வழக்கறிஞர்கள் நேற்று தூத்துக்குடி சென்றனர்.

இனி வழக்கறிஞர் உதயம் மனோகரன் என்னிடம் விவரித்தன் சாரம்:
உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி சென்றதால் அங்காங்கே கும்பலாக இருந்த போலிஸார் தடுக்கவில்லை.. ஆனால் தூத்துக்குடி ஆள் நடமாற்றம் அற்ற சுடுகாடு போல் உள்ளது.
நெல்லை வழக்கறிஞர்கள் சங்கம் இதற்கு முன்பு சாதிரீதியாக பிரிந்து இருந்தன.. இந்த படுகொலைக்கு பின் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைந்து வழக்காடினர்.
மாவட்ட நீதிபதியிடம் ஆள் கொணர் மனு போட்டு ஆர்டர் வாங்கினர். துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உட்பட பல இடங்களில் அடைக்கப்பட்டு கிடந்த தூத்துக்குடி மக்கள் 65 பேரை அப்பொழுதுதான் கைது செய்ததாக பொய் வழக்கு போட்டு நீதிமன்றம் கொண்டு வந்தனர். நீதிபதி அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்…

தூத்துக்குடி மருத்துமனை முழுவதும் போலிஸ் குவிக்கப்பட்டு உள்ளது. தலை, மார்பு, தொடை, விலா எலும்பு என்று குண்டடிப்பட்டு 45 பேர் அங்கு இருந்தனர். அவர்கள் கூற்று படி மக்கள் அமைதியாக அறவழியில்தான் பேரணியாக சென்றனர். போலிஸ் திட்டமிட்டு தூப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்துள்ளது.

போலிசார் துப்பாக்கியால் சுட்டனர். அதனால் பலர் குற்றுயிறும் குலையுறுமாய் துடித்தனர்.. அவர்களை மருத்தமனைக்கு தூக்கு செல்லாமல் அப்படியே போட்டு விட்டு சென்றனர். குண்டடி பட்ட ஒருவர் அருகில் உள்ள மருத்தவமனைக்கு செல்ல அங்கு வந்த போலிஸ்காரன்கள் அவரை அடிக்க முயன்றனர். செவிலியர்கள் போலிஸ்கார்களிடம் மன்றாடி கையெடுத்து கும்பிட்டு அவரை காப்பாற்றினர்.
மேலும் இஸ்லாமிய சகோதரர்களின் ஆம்புலன்ஸ்சில் வந்துதான் குற்றுயிறும் குலையுறுமாய் துடித்தவர்களை மனித நேயத்துடன் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர்.

75 வயது மூதாட்டி இது வரை பல சாதி கலவரங்களை பார்த்துள்ளேன் ஆனால் இப்படியான போலிஸ் வெறியாட்டம் தனது வாழ்நாளில் பார்த்தது இல்லை என்றார்.
குண்டடி பட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.. புற்றுநோயால் சாவது. போராடி சாவது என்பதுதான் அது. நான் இறந்தால் என் மனைவி போராடுவாள் என்று குண்டடிபட்ட தூத்துக்குடி வாசி உறுதியாக சொன்னார். பல பகுதிகளுக்கு சென்று விட்டு சட்டரீதியாக உதவிகள் என்ன என்ன செய்வது என்று கூறிவிட்டு 60 வழக்கறிஞர்கள் திரும்பினோம்
__________
Mohana Dharshiny

கால்களிலும், கைகளிலும், தோள்பட்டைகளிலும் குண்டுகள் பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி போராளிகளை சந்தித்தோம். நாங்கள் நினைத்தது போல் எங்களை பார்த்ததும் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் அழுகவில்லை. புலம்ப வில்லை.

இந்த கேடுகெட்ட அரசிற்கெதிராகவும் காவல்துறைக்கெதிராகவும் ,ஸ்டெர்லைட் டிற்கெராகவும் கோபம் கொப்பளிக்க வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல வசனம் பேச யதை கேட்டு ஆச்சர்யமடைந்தோம்.

ஆனால் தங்கள் சக போராளிகள் இறந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் போது நொறுங்கிப் போனார்கள். ஒருவரது அழுகையை எங்களால் நிறுத்த வே முடியவில்லை.மக்கள் சக்தி மகத்தானது.

– தோழர் Suganthi P

//எல்லா பிற்போக்குவாதிகளும் காகிதப் புலிகள். தோற்றத்தில் பிற்போக்குவாதிகள் பயங்கரமானவர்கள். ஆனால் யதார்த்தத்தில் பலமுடையவர்கள் அல்ல. நீண்டகால நோக்கிலிருந்து பார்த்தால் உண்மையில் பலமுடையவர்கள் பிற்போக்குவாதிகள் அல்ல, மக்களே ஆவர்.
#மாசேதுங்///

மக்கள் சக்தியைப் பற்றிய மாவோவின் மதிப்பீடுகள் இப்போதும் மிகச் சரியானவையே…
_________
Naveen Krishnan

ஸ்டர்லைட் போராட்டத்தில் (மே 22) கலந்துகொண்ட தோழி ரோசி மது பதிவு

#போராட்டக்களம்_போர்க்களமானது_எப்படி..?? களத்திலிருந்து ஒரு சாட்சியம்
# முன்குறிப்பு: அந்த போராட்டத்துல கலந்துக்கிட்ட ஒரு சாதாரண பெண்ணோட மனநிலையில் இருந்து தான் இதை நான் எழுதியிருக்கேன்..
# காலையில பெயரளவுக்கு தடுத்துட்டு அனுமதிச்சப்பவே தெரியும், இவிய்ங்களாம் ஒன்னும் அவ்ளோ நல்லவய்ங்க இல்லயேனு.. அங்க ஏதோ விபரீதமா நடக்க போகுதுனு, நாங்க கடந்து சென்ற பாதையில் நின்றிருந்த பெண் போலீசார் சிலரின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது..

சில ஆண் போலீசின் முகத்திலோ, ‘போங்கடீ உங்களுக்கு அங்க இருக்கு’ பாவனைகள் தான்.. கடும் தண்ணி தாகத்துல சுட்டெரிக்கும் வெயிலுல வயசு பாகுபாடு இல்லாம ஒரு வயசு குழந்தையில இருந்து கிட்டத்தட்ட 60வயசு பெரியவங்க வரை கலந்துக்கிட்டாங்க..

போற வழி நெடுகிலும் போட்ட கோஷங்களை விட வழியெங்கும் ஒட்டியிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ஸ பார்த்து இவருக்கு இந்த கேன்சர், அவருக்கு அந்த கேன்சர்னு காதுல விழுந்தது தான் அதிகமா இருந்துச்சு..

அவங்க அடிபட்டு இருக்காங்கனு வந்த அழுகைய விட, அந்த வலியை கொஞ்சம் கூட முகத்துல காட்டிக்காம இருந்த அவங்களோட போராட்ட வெறி உடல் சிலிர்க்க வச்சுச்சு..

போற வழியில தடுத்து நிறுத்த முற்பட்டானுங்கனும், அதை மீறி மீறி தான் போனோம்னும் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. புதுத்தெருவுல இருந்து மாதா கோவில் போற வழியில ரெண்டு இடத்துல தடுத்தானுங்க, மாதா கோவில்ல இருந்து எல்லாரும் சேர்ந்து போனப்போ இரண்டு இடத்துல தடுத்தானுங்க..

மூணாவது தடவையா தடுத்தப்ப தான் கல்லெறிஞ்சுருக்கானுங்க போலீஸ்காரனுங்க.. நிறைய பேருக்கு மண்டை உடைஞ்சு, கால் உடைஞ்சு இரத்தம் ஒழுக ஒழுக தூக்கிட்டு ஓடுனாங்க..

அப்புறம் தான் நம்ம ஆட்களும் திருப்பி கல்லெறிஞ்சு போலீச ஓடவிட்டாங்க.. அதற்கடுத்துதான் சில கிலோமீட்டர் தாண்டி பாலம் வந்துச்சு, அந்த பாலத்துக்கு கீழ பெட்ரோல் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியது போலீஸ்காரனுங்க தான்.. எத்தனை குண்டுகள்னு கணக்கேயில்ல..
பாதிபேர் அந்த புகையையும், நெடியையும், கண்ணெரிச்சல், தோல் எரிச்சல் எல்லாத்தையும் தாண்டி முன்னேறி போயிட்டாங்க.. எங்களை கொஞ்ச நேரம் வெயிட் பன்ன சொன்னாங்க., கண்ணெரிஞ்சது, கண்ல தண்ணியா ஊத்துச்சு, மூச்சு முட்டுச்சு, மூக்கு அரிச்சுச்சு.. கிராஸ் பன்னி போக முடியல..

ஆளாளுக்கு கையில் இருந்த துண்டு, கர்சீஃப், ஷால் எல்லாத்தையும் வச்சு மூஞ்சிய மூடிட்டு முன்னேறி போனோம்..

நாங்க இங்க கொஞ்சம் தாமதிச்ச இந்த சமயத்துல தான் எங்களுக்கு முன்ன போனவங்க கலெக்டர் ஆஃபீஸ் உள்ள போயிட்டாங்க.. அங்கயும் அதிக அளவில் ஏதோ புகை வந்துட்டே இருந்தது.. அப்பவும் ஏற்கனவே எதிர்கொண்ட அதே symptoms..
நீங்க முதல் போட்டோவ கூர்ந்து கவனிச்சீங்கனா நல்லா தெரியும்.. அதுல முன்னாடி ஒரு பெரிய வண்டி நிக்குது, அதுக்கு பின்ன safe-ஆ தான் போலீஸ் படை நின்னுச்சு..

அப்படி இருக்கப்போ பெண்களோடவும், குழந்தைங்களோடவும் போன போராட்டக்காரர்கள் எப்படி அவிய்ங்கள மீறி கலெக்டர் ஆஃபீஸ் உள்ள போய் வேனை எரிக்க முடியும்..?? அவிய்ங்கள தாண்டி உள்ள போக துளி கூட வாய்ப்பில்ல..
இவ்ளோ பழி சுமத்துற அவிய்ங்க, ஒரு இடம்கூட விடாம கேமராவும் கையுமா அலையிற அவிய்ங்க போராட்டக்காரர்கள் கலெக்டர் ஆஃபீஸ் உள்ள வேனை எரிச்சாங்கன்ற வீடியோவ இருந்தா வெளியிட சொல்லுங்களேன் பார்ப்போம்..

அடுத்தடுத்து நிகழ்ந்தவை தான் ஒடுக்குமுறையின் உச்சம்.. முதல்ல உள்ள போனவங்கள ரெண்டு பேர் சுட்டுட்டதா ஓடி வந்தாங்க, ஒருத்தர் அங்கயே இறந்துட்டாருன்னும், இன்னொருத்தர மாற்றுத்திறனாளி ஒருத்தரோட வண்டியில வச்சும் தூக்கிட்டு வந்தாங்க..

அதை பார்த்துட்டு தான் வெளில நின்றிருந்தவங்க இன்னும் ஆக்ரோசத்தோட உள்ள போனாங்க.. திரும்பவும் குண்டுகள் பொழிய ஓடி வந்தாங்க.. துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு, அது துப்பாக்கி சத்தம் தான்னு நம்ம உறவுகள் செத்து வெளில வந்தப்ப தான் தெரியும்..

முதல் அரைமணி நேரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட இல்ல, அதுவரை பைக்லதான் குண்டடிபட்டவங்களை தூக்கிட்டு போனாங்க.. அரைமணி நேரம் கழிச்சு தான் ஆம்புலன்ஸ் வந்துச்சு.. நாங்க அங்க இருந்த அந்த சமயத்துல மட்டும் கிட்டத்தட்ட 20தடவைக்கு மேல அந்த ஆம்புலன்ஸ் போயிட்டு போயிட்டு வந்தது..
கண்டிப்பா அடிப்பானுங்கனு தெரியும்., ஆனா சுடுவானுங்கனு நினைச்சு கூட பார்க்கல, முதல்ல ஒருத்தர் சுடப்பட்டார்னு தெரிஞ்சப்பவே ஓடியோடி கேட்டேன், ‘சாவல இல்ல, சாவல இல்ல’னு..

உங்களுக்கு எல்லாம் சுட்டவங்களையும், செத்தவங்களையும் தானே தெரியும்.. ஆனா எத்தனை பேரு மண்டை உடைஞ்சு, கை, கால் உடைஞ்சு அந்த வலியை துளி கூட முகத்துல காட்டிக்காம பைக்ல வச்சு கூட்டி போனாங்கனு தெரியுமா..??
அவங்க அடிபட்டு இருக்காங்கனு வந்த அழுகைய விட, அந்த வலியை கொஞ்சம் கூட முகத்துல காட்டிக்காம இருந்த அவங்களோட போராட்ட வெறி உடல் சிலிர்க்க வச்சுச்சு.. ஒரு பைக்ல இரண்டு பேருக்கு இடையில ஒருத்தர் உட்கார்ந்து போறாருனா அவரு கண்டிப்பா அடிபட்டு இருக்காருனு அர்த்தம்.. அப்படி எத்தனை பேருன்னு கணக்கே இல்ல.,

அவங்க தலையிலயோ, கையிலயோ, கால்லயோ கட்டியிருந்த துணியையும், சட்டை நிறைய படிஞ்சுருந்த இரத்தத்தையும் வச்சுத்தான் அவங்க அடிபட்டு இருக்காங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது..

அடினா அடி சாதாரண அடியில்ல, ஒவ்வொரு அடிக்கும் தோலுரிஞ்சு இரத்தக்காயத்தோட தான் தடியடி இருந்தது.. எத்தனை பேரோட தோள்லயும், கையிலயும், கால்லயும் இரத்தம் வடிய வடிய தடியடிய நான் பார்த்தேன் தெரியுமா..??
அதுக்கு பிறகுதாங்க, சரி தற்போதைக்கு திரும்பி போகலாம்னு முடிவெடுத்து திரும்பி வந்துட்டு இருந்தோம்.. வர்ர வழியில ஒரு பெரிய டீமே காத்திருந்தாய்ங்க.. கிடைச்ச திசையில எல்லாம் ஆளாளுக்கு ஓடி ஒளிஞ்சுட்டோம்.. ஏன்னா கல்லெறிஞ்சாய்ங்க..

ரொம்ப நேரமாகியும், அவிய்ங்க அங்க இருந்து போறதா இல்ல, நாங்களும் வெயிட் பன்னி பார்த்துட்டு, சரி இப்படியே போலாம்னு வேற வழியா 2கிமீல போக வேண்டிய இடத்துக்கு, 8கிமீ நடந்தே வந்தோம்.. நடந்து வந்தோம்னு சொல்றத விட நடைபிணமா வந்தோம்.. ஒவ்வொரு மெயின் ரோடுக்கு போறப்பவும் எதிர்த்தாப்ல வந்தவங்ககிட்ட கேட்டப்ப, அங்க போலீஸ் இருக்கு, இருக்குனே சொன்னாங்க,
திரும்ப திரும்ப வேற வழியில ஒரு வழியா மெயின் ரோட் வந்து சேர்ந்ததும், நடந்த களைப்புல கொஞ்ச நேரம் ஒரு இடத்துல உட்கார்ந்தோம்.. அந்த இடத்துல பைக்ல பின்னாடி உட்கார்ந்து வந்த அம்மா நிலை தடுமாறி கீழ விழுந்துட்டாங்க.. ஓடிப்போய் தூக்கி, தண்ணி கொடுத்து, அவங்கள அனுப்பிட்டு திரும்பி பார்த்தா வரிசையா பெரிய பெரிய வேன்ல வந்தானுங்க..

நாந்தான் ஓடிப்போய் சொன்னேன், நிறைய வண்டி வருது, எதுக்கும் நாம அந்த பக்கம் போயிடலாம்னு சொல்லி கூட முடிக்கல, வண்டியிலயிருந்து திபுதிபுனு இறங்கி அடிக்க துரத்திட்டு வந்தானுங்க..நா சொல்லலனா யாரும் எதிர்பார்க்காம எல்லாரும் அடி வாங்கியிருப்போம்.. ஏன்னா அந்த பில்டிங்கோட பின்பக்கமும் அவிய்ங்க வந்துட்டாய்ங்க..

புள்ளைய தூக்கிக்கிட்டு, புள்ளைய பத்திரமா பார்த்துக்கனுமே, அய்யோ மாட்டுனோமா, அவ்ளோதானானு ஓடி ஒளிஞ்ச அந்த நொடிகளை மறக்கவே முடியாது.. பயந்தியா, ஓடுனியா, ஒளிஞ்சியானா ஆமா, சாதாரண பயமில்ல, உயிர் பயம்..நெஞ்ச நிமிர்த்தி நின்னு வீர மரணம் அடையிறதுக்கு நா ஒன்னும் தனி ஆள் இல்ல, என் மகளுக்காகவாச்சும் உயிர் வாழ வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கு..

உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய தருணம் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதது.. நாங்கள் ஓடி ஒளிந்த இடம் அனைத்துமே முட்டு சந்து, கிட்டத்தட்ட மூணு இடத்தை தாண்டி ஒளிய முயற்சித்த நாலாவது இடமும் மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடம்தான்.. ஆண்கள் எல்லாம் சிதறி நாலா பக்கமும் ஓடிட்டாங்க..
பெண்கள் அந்த மரங்களுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டோம், “பொம்பளைங்களுக்கெல்லாம் இங்க என்னடி வேலை, ஓடுங்கடி வீட்டுக்கு”னு சொல்லிட்டு தான் அடிச்சாய்ங்க.. கொஞ்ச நேரம் கழித்து தான் வெளில வந்தோம்., ஒவ்வொரு வீட்டுக்குள்ள இருந்தும் ஆண்களும் வர ஆரம்பிச்சாங்க..என்கூட இருந்ததுல நாலு பெண்களுக்கு அடி விழுந்துருக்கு..

வீட்டுக்கு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்துல சொல்றாங்க திரேஸ்புரத்துல பெண் உட்பட நாலு பேர சுட்டுட்டானுங்களாம் அப்படினு..
இன்னும் தொடர்ந்துக்கிட்டு தான் இருக்கு அங்க துப்பாக்கிச் சூடும், அடிதடியும்.. என்ன பன்ன போறோம்னு தெரியல..

பிகு: நான் அங்க இருந்தவரை நடந்ததுல கொஞ்சம் தான் எழுதியிருக்கேன்.. இதையொட்டி எழுகிற கேள்விகளும், விளக்கங்களும் எழுதுற மனநிலை இப்போ எனக்கு இல்லை.. இன்னும் மீள முடியாம தான் இருக்கேன்..
_________
Marx Anthonisamy
Outsiders = Outlaws : உருவாகும் புதிய மொழி

“Outsiders” தான் வன்முறைகளுக்குக் காரணம் என ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு தூத்துக்குடிக்கு வெளியிலிருந்து வரும் தமிழர்களைக் காய்கிறது தமிழக உளவுத்துறை

இன்றைய The Hindu நேற்றைய கொடுமைகள் பற்றிய செய்தியில் அது குறித்து வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் என்ன சொல்லியுள்ளனர் என்பதைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்த்துறை, “உளவுத் துறை சரியான தகவல் கொடுக்கவில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளது.

உளவுத் துறையோ எல்லாவற்றிற்கும் வெளியிலிருந்து வந்து ‘தீவிரமாகப்’ பேசிச் செல்லும் போராட்ட ஆதரவாளர்களைக் குற்றம் சொல்லியுள்ளது. “ஜல்லிக்கட்டு மற்றும் ஹைட்ரோகார்பன் போராட்டங்களில் பார்த்த அதே முகங்களை தூத்துக்குடியிலும் பார்க்க முடிந்தது” என outsiders மீது குற்றம்சாட்டுகிறார் அந்த உளவுத்துறை அதிகாரி..

அடுத்து நாம் எதிர்பார்த்தபடியே இந்த outsiders “தீவிரவாத இயக்கங்களுடன இணைக்கப்படுகின்றனர். “பெண்கள்கூட” என்கிறார் அவர்.
ஆக இனி கூடங்குளம் போராட்டம் என்றால் கூடங்குளத்து மக்கள்தான் போராட வேண்டும். வெளியிலிருந்து சுற்றுச் சூழல் இயக்கத்தினரோ இல்லை ஏன் கட்சிக்காரகளோகூட சென்றால் அவர்கள் தடுக்கப்படலாம், ஏன் கைதும் செய்யப்படலாம்.
“ஏன் இப்படியான outsiders ஐத் தனிமைப்படுத்தி கைது செய்யவில்லை?” எனக் கேட்கிறார் The Hindu நிருபர்.

ஊடக மனநிலை இப்படி உள்ளது.
இனி போராட்டங்கள் என்றால் அந்த உள்ளூர்க்காரர்கள்தான் போராட வேண்டும். நாம் யாராவது போனால் அவர்கள் Outsiders எனக் கைது செய்யப்படலாம்.
சென்ற ஆன்டு தெலங்கானாவிலிருந்து சட்டிஸ்கர் சென்ற உண்மை அறியும் குழுவைக் கைது செய்து ஆறு மாதங்கல் வரை சிறையில் அடைக்கவில்லையா அங்குள்ள பாஜக அரசு.
மக்களை இப்படி outsiders X locals என எதிர்வுகளாக்கி outsiders = outlaws என ஆக்கும் இந்த மொழி விளையாட்டு பாசிசமாகும் சூழலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
_________
Abdul Hameed Sheik Mohamed
தமிழகத்தை வட கிழக்கு மாநிலங்கள் போல, காஷ்மீர்போல ராணுவமயமாக்க விரும்பும் மத்திய அரசின் நோக்கமே இப்போதையை நிகழ்வுகளில் வெளிப்படுகிறது
_________
Chandran Veerasamy
144 தடை உத்தரவை மீறி, அதிக வாகனங்களில் சென்றதாக ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ திருமாவளவன், கமல்ஹாசன், ஜி.கே.வாசன், டி.ராஜேந்தர், ரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
#கொலைகாரக் கூட்டம் கோட்டையிலே
உள்ளவரை நாட்டின் நிலை இதுதான் !
_________
Vinayaga Murugan
போலீசுக்கு ரைபிள். சங்கிகளுக்கு போட்டோஷாப். இலக்கு ஒண்ணுதான். ஆயுதங்கள்தான் வேறு வேறு!
_________
Mahendra Kumar
கலவரத்தை அடக்கும் காவ்துறையின் முயற்சியில், தவறுதலாக இறந்துவிட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தான் காலங்காலமாக வழக்கம்.
திட்டமிட்டே சுட்டுக்கொலை செய்துவிட்டு, மீடியாவை சந்திப்பதற்கும், நிவாரணம் வழங்குவோம் என்று சொல்வதற்கும் எவ்வளவு தடித்த தோல் இருக்கவேண்டும் இவர்களுக்கு?

எதற்கும் துணிந்த கொலைகார அரசு இது! இந்த அடிமை அரசையும், அவர்களை சார்ந்தவர்களையும் இனியும் தலையெடுக்க விடாமல் செய்யவேண்டும்.
அதோடு மக்கள் விரோத பாஜக அரசை எந்த ரூபத்திலும் உள்ளே விடவும் கூடாது! இதுவே நமக்கிருக்கும் தலையாய பணி!
_________
Lakshmanasamy Odiyen Rangasamy
தூத்துக்குடி அப்டேசன்
மதியம் 1 மணி, 24-5-2018
1. துணை ராணுவம் எதுவும் வரவில்லை.
2. மற்றமாவட்ட காவல்துறைப்படைகள் தான் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
3. நேற்றிரவு மட்டும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை கணக்கில் 132தான் சொல்லப்படுகிறது. மீதமுள்ள நபர்களை சட்டப்படி கைது செய்யவில்லை, எனவே இந்த சட்டமீறலை நிறுத்தவேண்டும்.
4. காவல்துறை அழைத்துச்சென்றவர்கள் போக, 100க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காணவில்லை.
5. ஸ்டெர்லைட்டுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டாலும், Sterlite நிறுவனமே தனியாக 160மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் யூனிட் வைத்திருக்கிறது. (SESA Sterlite) எனவே இது கண்துடைப்பு.
6. காவல்துறைதான் வதந்திகளை கிளப்புகிறது, நேற்றிரவு காவலர் 2 பேர் வெட்டப்பட்டதாக, குண்டு வீசப்பட்டதாக சொல்வது வதந்தி, அப்படி யாரும் செய்யவில்லை.
7. இணையம் இருந்தால் உண்மை வீடியோக்களைப் பகிரலாம், இல்லாததால் எங்கள் பக்க உண்மைகளைப் பகிர முடியவில்லை, அனைவரும் பயந்துபோய் பதுங்கியிருக்கிறோம்.

அந்த பாலத்துக்கு கீழ பெட்ரோல் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியது போலீஸ்காரனுங்க தான்.. எத்தனை குண்டுகள்னு கணக்கேயில்ல..
பாதிபேர் அந்த புகையையும், நெடியையும், கண்ணெரிச்சல், தோல் எரிச்சல் எல்லாத்தையும் தாண்டி முன்னேறி போயிட்டாங்க..

8. இறந்தவர்கள் எண்ணிக்கை 26 பேர். 26 உடல்களும் தூத்துக்குடி அரசுமருத்தவமனையில் இருக்கிறது, ஆனால் உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது.
9. ஒவ்வொரு பகுதி மக்கள் பிரதிநிதியும் அழைத்துப்பேசினாலே பிரச்சினை நின்றுவிடும், ஆனால் காவல்துறையை நம்பிப்போகமுடியவில்லை.
10. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கையசைத்து உள்ளே வாருங்கள் என்று அழைத்ததே காவல்துறைதான், நம்பிப்போன மக்கள் பிரதிநிதிகளைத்தான் போலீஸ் சுட்டுக்கொன்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், 15 பேர் இப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
ரா புவன்
_________
வாசுகி பாஸ்கர்
நண்பர்கள் நிறைய பேர் பார்ப்பனர்களையும், பார்ப்பனர்களிடம் கழுவிக்குடிக்கும் சூத்திர அடிமைகளையும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர்கள் பேசும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பு வாதத்திற்காக unfriend செய்தபடி இருக்கிறார்கள்.

பலபேர் காலம் வரும்போது தான் உணர்வீர்கள், இதைத்தான் எல்லா பொழுதுகளிலும் சொல்லி வருகிறோம். இன்னமும் இந்த நாட்டில் எஞ்சிருக்கிற அரசியலமைப்பு சட்டம் தான் நம்மை காப்பாற்றி வருகிறது. பார்ப்பனர்களின் மனுநீதி அடிப்படையில் இந்த நாடு இயங்க ஆரம்பித்தால், அப்படியான கொடுங்கோல் ஆட்சியையும், வன்முறையையும், குரூர பாசிச முகத்தையும் உலகத்தின் எந்த பகுதியிலும் நீங்கள் பார்க்க முடியாது.
ஜெர்மனியின் யூத இன அழிப்பை அரிசி சேவை சாப்பிட்டுக்கொண்டே ரசித்தவர்கள் பார்ப்பனர்கள், ஹிட்லரின் கை ஓங்கினால் உருவி பிழைத்துக்கொள்ளலாம் என்று ஜெர்மன் மொழியை கற்க தயரானவர்கள் பார்ப்பனர்கள்.

வெளிச்சத்தை பார்க்கும் கருப்பான் பூச்சிகளை போல, சோப்பு நுரைக்கு முகம் சுளிக்கும் கழிவறை இடுக்குகளில் வாழும் நுண் கிருமிகளை போல பார்ப்பனர்களிடம் அஞ்சி ஓடும் ஒரு தன்மை உண்டு. அது அவர்களின் முகத்தை தோலுரிப்பதே. உண்மையை உள்ளது உள்ளபடி சொன்னால் பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை, பொய் புகழ்ச்சிக்கும், குறுக்கு வழியில் சோறு தின்று குறுக்கு வழியில் உடல் வளர்த்து ஊளைச்சதையில் திளைப்பவர்களால் நிஜத்தை உள்வாங்கவே முடிவதில்லை .

நீங்கள் அதை பேச ஆரம்பித்தால் தானாகவே ஓடுவார்கள், இடுக்குகளில் ஒளிவார்கள், எந்த பார்பனரையும், பார்பனீயவாதிகளையும் நான் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியதேயில்லை.

காலத்தால் அவர்களே ஓடினார்கள், ஒருநாள் கூத்தல்ல இது. ஆயிரம் வருஷமா நடக்குற கூத்து. ஸ்டெர்லைட் வரை பேசிவிட்டு பார்ப்பனியத்தின் எல்லா அக்கிரமங்களையும் வருடம் முழுவதும் ஏற்கத்தயாரான உங்கள் நிராகரிப்பில் அவர்கள் வாழ்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பேசுவதினால் நீங்கள் விலக கூடாது, இந்த தளமானாலும் இந்த மண்ணானாலும் அக்கறையோடு அறச்சீற்றமடையும் நீங்கள் தான் இங்கே இருக்கவேண்டியவர்கள், ஒட வேண்டியது அவர்கள்.

நாம் பேசித்தான் அவர்களை ஓட்டமெடுக்கச்செய்ய வேண்டும்.
______
Dinesh Guavera
நாங்கள் தான் தமிழ்நாட்டின் எதிர்கட்சி
நீங்கள் எங்களை துச்சமென நினைத்தாலும் உண்டியல் குலுக்கிகள் என்றாலும் செவ்வாழை என்றாலும் ஆளும் வர்க்கத்தை முதலாளித்துவத்தை எதிர்க்க இன்முகத்தோடு உங்களுக்காக களத்தில் நிற்க்கின்றோம் கம்யூனிஸ்ட்கள்… எங்களோடு இணைந்து போராடுங்கள் எங்களுக்கு பலம் சேருங்கள் இது ஓட்டுக்காக அல்ல சுட்டுக் கொல்லப்பட்ட மக்களின் நீதிக்காக…
-தினேஷ் குவேரா
_______
Tamil Selvan
குரல்வளையை நெரிப்பதன் மூலம் கொலைப்பழியிலிருந்து தமிழக அரசு தப்ப முடியாது.

தூத்துக்குடியில் வேதாந்தம் கம்பெனியாரின் உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையைக் காப்பதற்காக,13 பேரைச் சுட்டுப்பலி கொடுத்த தமிழக அரசு இப்போது உண்மைகளை மறைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.அப்பகுதியிலிருக்கும் நண்பர்கள் இளைஞர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இணையவெளியில் பல உண்மைகளைப் பேசி வருகின்றனர்.உண்மையில் கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர்?காவல்துறை பிடித்துச் சென்ற 122 இளைஞர்களின் கதி என்ன?பெனிஸ்டா என்கிற 18 வயது மாணவியின் வாயில் துப்பாக்கியை வைத்துச் சுட்டது ஏன்? என்று அரசுக்கு நெருக்கடியைத்தரும் கேள்விகள் இணையத்தின் மூலம் வெளி உலகுக்குச் சென்று கொண்டிருப்பதால், எடப்பாடி அரசு தென் மாவட்டங்கள் மூன்றிலும் இணையதள சேவைகளைத் தடை செய்துள்ளது.

கருத்துரிமைக்கு எதிரான இந்நடவடிக்கையை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.உடனடியாக முடக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழக அரசு குற்ற உணர்வு கொண்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பைக் கோரி ,விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும்.குரல்வளையை நெரிப்பதன் மூலம் கொலைப்பழியிலிருந்து தமிழக அரசு தப்ப முடியாது.
ச.தமிழ்ச்செல்வன், தலைவர்
சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர்
________
Jose Antoin
வெளிப்படையாக நமக்கு தெரிவதைவிட பா.ஜா.க. வின் அடிமையான எடப்பாடி அரசின் செயல்பாடுகள் மிகக்கொடூரமான நோக்கம் கொண்டவை. தற்போது சாட்சியங்களற்ற தாக்குதலுக்காக கட்டம் கட்டப்பட்டிருக்கின்ற மூன்று தென் மாவட்டங்களும் (தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி) சிறுபான்மையினர் அதிகமாக வசிப்பவை.(அருகிலுள்ள இராமநாதபுரம் மாவட்டமும் சிறுபான்மையினர்-குறிப்பாக முஸ்லீம்கள்- அதிகமாக வாழும் மாவட்டம்.) ஆக, மக்களை வேட்டையாடி, மத, சாதி அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி கலவரங்களை மூட்டிவிட்டு கார்பொரேட் நலன்களை பாதுகாப்பதுடன், இந்துத்துவ அரசியலை வலுவாக காலூன்ற வைப்பதே அரசின் எண்ணம்.

குருமூர்த்தியின் “சர்ச்சில் ஏன் போராட்டக்காரர்கள் குழுமினார்கள்” என்ற கயமைமிக்க வாதத்தையும், அவர் ஆன்மீக அரசியல் என்ற போர்வையில் பாசிச அரசியலை முன்னெடுக்கும் ரஜினியை சந்தித்ததையும், பா.ஜ.க – விற்கு ஆதரவு கொடுத்திருந்தால் தூத்துகுடியில் இந்த படுகொலை நிகழ்ந்திருக்காது என்ற பொன். இராதாகிருஷ்ணனின் கூற்றையும் ஒருசேர கணக்கிலெடுத்துப் பார்த்தோமென்றால் நாஜிக்களின் தந்திரோபாயங்களுடன் மத்திய மாநில அரசுகள் செயல்படுவதை பார்க்க முடியும். இது தமிழக வரலாற்றில் மதசார்பின்மை அரசியல் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் முறியடித்துவிட்டால் இந்துத்துவா சக்திகள் இம்மண்ணில் எழுந்திருக்க முடியாதபடி தோற்கடிக்கபட்டிருப்பர். எல்லா ஜனநாயக சக்திகளும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
_______
ஜெனி
நடுநிலைமையாளர்கள் என்றும், வளர்ச்சியின் பக்கம் நிற்பவர்கள் என்றும், தேசாபிமானம் கொண்டவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிபவர்களே!
உங்களின் பெயரால் தான் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. யார் தேசபக்தர்கள்? நாட்டின் அத்தனை வளங்களையும் அள்ளிக் கொடுத்து விட்டு தன் வருமானத்தையும், அதிகாரத்தையும் பெருக்கிக் கொள்பவர்களா? இல்லை உனக்காகவும், எனக்காகவும், அடுத்த தலைமுறைக்காகவும் குண்டடிப்பட்டு செத்துக் கிடப்பவர்களா?

தூத்துக்குடி இன்று தமிழகத்தின் நோய்களுக்கான தலைநகரம். கேன்சர் இன்று அத்தனை பேருக்கும் வருகிறது. ஏன்னு கேட்டிருக்குறோமா? மாரடைப்பும், கேன்சர் மரணமும் இன்று “இயற்கை மரணங்கள்” category-ல வந்திருக்கு. எப்படி இந்த நிலைமை?

போராடுற மக்கள சிறுமைப்படுத்துகிறவர்களுக்கு ஒரு கேள்வி….
“உங்கள் வீட்டில் கேன்சர் வந்து செத்தவர்கள் இல்லையா? இனிமேல் கேன்சர், இதய நோய் வந்து சாக மாட்டார்களா?”
போராடுற உழைக்கிற மக்களுக்காக இல்லை. உங்களுக்காக, உங்கள் குழந்தைகளுக்காக கேள்வி கேளுங்க.

தமிழ்நாட்டில் கொடைக்கானல், கடலூர், காவிரி பாய்ந்தோட வேண்டும் என்று நாம் விரும்பும் மேட்டூர், சேலம், தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, காயல்பட்டிணம், கூடங்குளம், வடசென்னை முழுவதும் இன்னும் இன்னும் அத்தனை இடங்கள் இன்று தொழிற்சாலைகளால் மாசுபட்டு கிடக்கின்றன. இதை நாமும் எதிர்க்காமல், எதிர்ப்பவர்களை அவங்க கிறிஸ்தவங்க, முஸ்லிமுங்க, இந்துக்களா இருந்தா தீவிரவாதிங்க…. Bore அடிக்குது. உருப்படியா சேர்ந்து வேலை பாக்கலைன்னா, சாவு எல்லாத்துக்கும் சேத்து தான் வரும். பாத்துக்கோங்க.
________
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்கும் தமிழக அரசு!
சென்னையில் போராட்டம் நடத்திய இளந்தமிழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோழர்கள் கைது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று (22-5-2018) ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற மக்களைத் தாக்கி வன்முறையில் இறங்கியது தமிழக காவல்துறை. அமைதியான முறையில் பேரணியாக சென்ற மக்கள் ஆட்சியர் அலுவலகத்தைத் தாக்கினர், வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தினர் என்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு போராடும் மக்கள் மீது தனது வெறியாட்டத்தை நிகழ்த்தியது காவல்துறை. மக்கள் மீது தடியடி நடத்தியதோடல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியும் வன்முறை வெறியாட்டத்தினை அரங்கேற்றியது.

நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 11க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கும் நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்குள்ளும் புகுந்து சிகிச்சை பெறுபவர்களைத் தாக்கி கைது செய்தது எடப்பாடி அரசின் காவல்துறை. இந்நிலையில், காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, காவல் துறையின் இவ்வன்முறை வெறியாட்டத்துக்கு முழு பொறுப்பாகிறார்.

ஆகையால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டு போராடிய பொதுமக்களை பச்சை படுகொலை புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அதற்குத் துணைநின்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் மீதும் கொலை வழக்கு பதியப்பட வேண்டும். மேலும், தமிழக காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மையமாக வைத்து இன்று காலை 9.30 மணி அளவில் இளந்தமிழகம் இயக்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் சென்னை அண்ணா சாலையில் மறியல் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 22 பேரை கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்த காவல்துறையினர், கைதானவர்களில் 8 பெண்களை மட்டும் விடுவித்துவிட்டு ஏனைய தோழர்களை இ.பி.கோ 341, 353, 143, 188, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

போராடிய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி பச்சைப் படுகொலை செய்து கொண்டிருக்கும் அதேவேளையில் அம்மக்களுக்குத் தோள் கொடுக்கும் எம் போன்ற தோழர்களையும் வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்கும் எடப்பாடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மக்கள் போராட்டங்களை சிறைகளோ, துப்பாக்கிக் குண்டுகளோ ஒருபோதும் அடக்கிவிட முடியாது என்பதை எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்துகிறோம். அரசின் அடக்குமுறைகள் மேலும் மேலும் எங்களை வீரியத்துடன் போராடவே தூண்டும்.

போலீஸ்: அதுக்கு விடமாட்டாங்கம்மா, வெறும் பிஸ்கட்டா திங்கிறோம் முடியல, பசியில இருக்கோம் அதாம்மா கேட்டோம்.
tuty அம்மாக்கள்: சரி, நாங்களும் ரெண்டு மூணு நாளா ஒல(உலை) வைக்கல, சின்னப்பிள்ளைகளுக்கு மட்டுந்தான் ஏதாவது செஞ்சு கொடுக்கோம், சரி கொஞ்சம் பொறுங்க மருமகள ரவ கிண்டித்தரச் சொல்றேன்.

எடப்பாடி அரசே,
1. தூத்துக்குடி ஸ்டெலைட் எதிர்ப்புப் போராட்டத்தை அரச பயங்கரவாதம் கொண்டு நசுக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிடு!
2. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு பச்சைப் படுகொலைகள் புரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குத் துணைபோன தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீது கொலை வழக்கு பதிவு செய்!
3. நீதி கேட்டு போராடிய இளந்தமிழகம் மற்றும் தமிழ்த் தேச மக்கள் முன்னணி தோழர்களை உடனடியாக விடுதலை செய்!
4. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வழிவகை செய்
5. காவல்துறையின் வன்முறை வெறியாட்டங்களுக்கும் நிகழ்த்தப்பட்ட பச்சை படுகொலைகளுக்கும் பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பதவி விலகு!
_______
ராஜசங்கீதன் ஜான்
என் பதிவில் அன்றே சொன்னது— இப்போது இன்று
தூத்துக்குடி பிரச்சினைக்கு ஏன் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களில் இணையம் முடக்கப்படுகிறது? ஏன் மூன்று மாவட்டங்கள் கவனிக்கப்படுகின்றன?
ஏன் சம்பந்தமே இல்லாமல் படகுகள் எரிக்கப்படுகின்றன?
துணை ராணுவத்தை எல்லாம் வரவழைத்திருப்பது வெறும் ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக மட்டும் அல்ல. உண்மையில் இந்த களேபரம் எல்லாம் சாகர்மாலா திட்டத்துக்காக!

சாகர்மாலா திட்டம் என்றால் என்ன?
கடலோர துறைமுகங்களை வர்த்தக துறைமுகங்களாகவும் இன்னும் புது துறைமுகங்களை உருவாக்குவதும்தான் சாகர்மாலா திட்டம். கடலோரங்களில் பொருளாதார மையங்கள் உருவாக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவை தாரை வார்க்கப்படும்.

மீனவன் வேலை இழப்பான். கடல்சார் உள்நாட்டு தொழில்கள் நசியும். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில் மையங்களை நிறுவ அந்த கடலோரங்களில் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய வேண்டியிருக்கும். அதில் மக்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படும். பூர்விக இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இவை எல்லாம் எப்படி சாத்தியம்?

துணை ராணுவத்தால் சாத்தியம்.
கூடங்குளம், மீனவ பிரச்சினை என மூன்று மாவட்டங்களில் எழும் எதிர்ப்பையும் ஒரேயடியாக நசுக்கியெறிந்து பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்கு துணை நின்று தம் சொந்த மக்களையே அரசுகள் கொன்று குவிக்கும் ஒரு நீண்ட வேலைக்கான அடித்தளம்தான் இப்போது அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
________
Chandra Sekaran
மொதல்ல இந்த சினிமாகாரனுங்கள அடிச்சி தொறத்தி விடணும் …போலீஸ்காரனுங்களுக்கு இந்த அளவுக்கு குருட்டு தைரியம் வர போலீஸ் வேஷம் போட்டு இவனுங்க பண்ண கூமுட்டத்தனம் ஒரு முக்கிய காரணம்!
________
Saraa Subramaniam
மாண்புமிகு முதல்வர் என்றும் பாராமல் #EncounterEdappadi என்பதை ட்விட்டரில் சென்னை ட்ரெண்டிங்கில் முதலிடத்தை நீடிக்கச் செய்வதுதான் உங்கள் அறமா?
144 தடை உத்தரவை மதித்து தானே முன்னுதாரணமாகத் திகழ்பவரும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கூட விளிம்புநிலை மக்கள் போல ஊடகம் மூலம் அறிந்துகொள்ளும் சாமானிய மக்களில் ஒருவராகத் திகழ்பவருமான முதல்வர் பழனிசாமியைக் கழுவியூற்ற எப்படி மனசு வருகிறது உங்களுக்கெல்லாம்..?
_______
Ezhilan M
எப்பேர்பட்ட முதல்வர் தமிழகத்தை ஆளும் காலத்தில் வாழ்கிறோம் என நினைக்கும் போது பெருமை பீறிட கண்களில் ஆனந்த கண்ணீர் வழிகிறது.
செய்தியாளர் : துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு இதுவரை ஏன் நீங்கள் செல்லவில்லை ?
முதல்வர் : நான் சட்டத்தை மதிப்பவன், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் நான் அங்கு செல்லவில்லை
செய்தியாளர் : ??????
____________
Bharathi Vasan
போராட்டக்களத்தில் தலையில் கல்லடிபட்ட காவலரை நான்கைந்து இளைஞர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.
மக்கள்திரளில் சிக்கி உதைபட்ட ஒருகாவலரையும் மீட்டு – அனுப்பியுள்ளனர்… இளைஞர்கள்.

இந்தப்போராட்ட களேபரங்களைக் கண்டு மயக்க நிலைக்குப்போன ஒரு பெண்காவலரை கூட்டிவந்து குடிக்க தண்ணீர் கொடுத்து – ஆசுவாசப்படுத்தி இருக்கின்றனர் – பகுதியினர்.

தொலைக்காட்சியில் தொடர்ந்து மக்களின் இந்த மனிதநேயம் – மனிதாபிமானம் குறித்தே சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்…
பாவிகள்…

கொடூரமான போலீஸ் படை திட்டமிட்டு தயவுதாட்சண்யமற்ற 10க்கும் மேற்பட்டவர்களையும் சுட்டுக் கொன்றிருக்கிறது.

மனிதாபிமானமும் மனிதநேயமும் சாதாரண மக்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் நியதியா… அதுதான் போற்றுதலுக்குரியதா….
மக்களிடமும் எதிர்தாக்குதலுக்கான ஆயுதம் வரும் வரையில் – இந்தக் கொடூரக் காட்டுமிராண்டிகளின் அதிகாரம் முடிவுக்கு வராது என்பதே எதார்த்தம்.
_________
Raja Prabhu VK
நடந்த கலவரத்தை ஊடகத்தில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் – எடப்ஸ்
ஒரு முதல்வர் மாதிரி பேசுயா… எதுக்கு சுட்டீங்கன்னு கேட்டா நான் சென்னைல இருந்தேன் சட்டத்தை மதிக்கணும்ன்னு கதை உட்டுகிட்டு
________
Kappikulam J Prabakar
போலீஸ்: யம்மா குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்..
tuty அம்மாக்கள்: இந்தாப்பா…. ஏம்ப்பா இப்டிப் போட்டு அடிக்கீங்க..
போலீஸ்: இல்லம்மா, எங்களுக்கே முடியல.. மேலதிகாரி சொல்றாங்க.. வெளியூர்காரங்க வந்திருக்காங்க, அவங்களுக்கு என்னன்னே தெரியலம்மா… யம்மா.. எங்களுக்கு சோறு பொங்கித்தர முடியுமா.. எவ்ளோ வேணாலும் காசு தாரோம்..
tuty அம்மாக்கள் : தம்பி உங்களுக்கு சும்மாவே நான் சோறு போடுவேன். ஆனா நீங்க செஞ்ச காரியத்துக்கு உங்கள பாத்தாலே பத்திக்கிட்டு எரியுது. செத்த பொணத்தக் கூட பாக்க விடாம ஆஸ்பத்திரிய பூட்டி வைச்சிருக்கீங்களே.. உங்களால அத தொறந்து விட முடியுமா..?
போலீஸ்: அதுக்கு விடமாட்டாங்கம்மா, வெறும் பிஸ்கட்டா திங்கிறோம் முடியல, பசியில இருக்கோம் அதாம்மா கேட்டோம்.
tuty அம்மாக்கள்: சரி, நாங்களும் ரெண்டு மூணு நாளா ஒல(உலை) வைக்கல, சின்னப்பிள்ளைகளுக்கு மட்டுந்தான் ஏதாவது செஞ்சு கொடுக்கோம், சரி கொஞ்சம் பொறுங்க மருமகள ரவ கிண்டித்தரச் சொல்றேன்.
காத்திருக்கும் காவலரும், கருணையுள்ள எம் மகளிரும்…- #தூத்துக்குடி

சுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா ? கொதித்தெழும் சென்னை மக்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்தும் அதிகாரவர்க்கத்தின் திமிர்த்தனமான அறிக்கைகள் குறித்தும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர் சென்னைவாசிகள்

பன்னீர்செல்வம் – கட்டிட மேஸ்திரிதூத்துக்குடியில 100 நாளு போராட்டம் பண்ணும்போது இந்த மந்திரிகளும் அதிகாரிகளும் ஏசி ரூம்ல கல்லாக்கட்டிக்கினு உக்காந்திருந்தானுங்க..
போராட்டம் வன்முறைக்குப் போயிடுச்சி… சுட்டோம்.. னு சொல்றானுங்க. நாளைக்கு நம்மளுக்கும் இதே கதிதான். ரேஷன் இல்ல. தண்ணி இல்ல, கரண்ட்டு இல்லனு போராடுனாலும் சுடுவானுங்க

தயாள குமார் – சினிமா கார்பெண்டர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிச்சிட்டு எதுக்கு இருக்குறானுங்க.. சுடுறதுக்கா? ஸ்டெர்லைட்டால மக்களுக்கு என்ன பிரச்சினைன்னு பாத்து அவங்களுக்கு வழிகாட்ட வேண்டிய வேலையிலதான அவனுங்க இருக்கானுங்க? சுட்டுட்டு திமிரா பேசுறானுங்க.. இவனுங்க அண்ணனையும் தம்பியையும் சுட்டா விட்றுவானுங்களா? ஜனங்க அடிமை மாதிரி கல்கூட எடுத்து வீசாத சாவனுமா?

சரவணன் – டப்பிங் ஆர்ட்டிஸ்ட்மாவோயிஸ்ட்டு ஊடுருவிட்டாங்கன்னு சொல்றான். நீ சரியில்லன்னா, அவுங்க வராங்க என்ன தப்பு? போலீசு சுட்டுக் கொன்னவங்க எல்லாம் வாலிப பசங்க.. எதிர்கால சந்ததிகள். குறிபாத்து கொலை பண்றானுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்துலயும் இதுதான் பண்ணாங்க. எதிர்கால தமிழகம் அடிமைகளா வாழனும்னு திட்டம் போட்டு செய்யுறானுங்க. இவ்வளவு படுகொலை நடந்தபிறகும் எல்லா எதிர்க்கட்சியும் டிராமா பண்றாங்க.. வெறும் அறிக்கையும் அடையாளப் போராட்டமும் விடுறாங்க.

மணி – டீக்கடைக்காரர்:
ஸ்டெர்லைட்டு மண்ணுல எதிர்காலத்துல யாரும் இருக்கக்கூடாது. அந்த ஆலையைத் தவிர 10 வருசத்துக்கு பிறகு எதுவும் இருக்காது. அதான் அவனுங்க திட்டம். ”144 தடையிருக்கு.. யாரும் வீட்ட விட்டு வெளிய வராதீங்க”ன்னு மைக்குல சொல்லிட்டு உள்ள இருக்கவங்களையும் வீடு பூந்து சுடுறான். யார ஏமாத்தறான்?

சின்னதம்பி – ஏசி மெக்கானிக்:
நான் அந்த ஊருக்காரன்தான்.. இப்ப அடிக்க வந்தவன் எல்லாரையும் அங்கேயே புடுச்சி வைக்கனும். அவனுங்கள சுட வேண்டியது இல்ல.. ஒரு வருசம் குழந்தை குட்டியோட அவனுங்கள அங்கேயே வாழச் சொல்லணும்.

கார்த்திக் – ஃபோரம் மால் ஊழியர்
ஏசி ரூம்ல மெட்ராசுல உட்கார்ந்து இருக்கவங்களுக்கே எவ்ளோ நோய், எவ்ளோ ஆஸ்பத்திரி ? அந்த இருக்க ஜனங்க நோயப் பத்தி சொன்னா மட்டும் சுட்டுடுவாங்களா? நாம எல்லாரும் சேர்ந்து அவங்கள காப்பாத்தணும். ஒரே வழி மொத்தமா எல்லாரும் அங்கங்க ரோட்டுல உட்காரணும். பிரச்சினை முடியற வரைக்கும் எழுந்திரிக்க கூடாது.

வேல்ராஜ் – பால் முகவர்:
நான் அந்த ஊருக்காரன்தான். இப்பவும் என் மாமா, சித்தப்பா அங்கதான் இருக்காங்க. பேப்பர்ல சொல்றதவிட சாவு எண்ணிக்கை அதிகம்னு அவங்க போன்ல சொன்னாங்க. குழந்தைக்கு பால் வாங்க, மருந்து வாங்கக் கூட வீட்டிலிருந்து வெளியே போக முடியலன்னு அழுவறாங்க. ஆம்பளைங்க மொத்தமா ஊரவுட்டு தலைமறைவா போறாங்க. அங்க இருந்தா செத்திருவோம்னு .. சொல்றாங்க.

-வினவு புகைப்படச் செய்தியாளர்

திருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் !

தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் ! ஓசூர் ஆர்ப்பாட்டம்

“ஸ்டெர்லைட்டை எதிர்த்த மக்கள் மீது துப்பாக்கி சூடு ! அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் திட்டமிட்டு நடத்திய படுகொலை !! படுகொலையின் குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் !!!” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக 24.05.2018 மாலை 5.00 மணியளவில் இரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு.-வின் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் இ.கோ வெங்கடேசன் நிறைவுரையாற்றினார்.

இவ்வமைப்பின் முன்னணி தோழர்கள், பெண்கள், குழந்தைகள், பெரியோர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டு தூத்துக்குடி படுகொலைக்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்க நிகழ்வாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி, துப்பாக்கிச்சூட்டில் பலியான போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் “மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக கொலைகார ஸ்டெர்லைட்டை மூடு! என்ற முழக்கத்தை முன்வைத்து அறவழியில் முற்றுகைப்போராட்டம் அறிவித்து நடத்தினர். இது வழக்கமான நடைமுறைதான். இருந்தபோதிலும் ஸ்டெர்லைட் முதலாளியின் இலாபவெறிக்காக மத்திய அரசின் துணைகொண்டு மக்களை கொலை செய்துள்ளது இந்த அரசு.

இப்படுகொலையின் சூத்திரதாரிகளான தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மக்கள் மத்தியில் பொதுவிசாரனை நடத்தி தண்டிக்க வேண்டும்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை பலரும் இறுதிவரை கண்டு, கேட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர். தொடர்புக்கு : 97880 11784.

***

அரச பயங்கரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் ! திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து “கார்ப்பரேட் கைக்கூலி எடப்பாடி அரசே, சாவுக்கு அஞ்சமாட்டோம் ஸ்டெர்லைட்டுக்கு சவக்குழி தோண்டும் வரை ஓயமாட்டோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து திருச்சி பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் 24.05.2018 அன்று மாலை 6:00 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் செழியன் தலைமை தாங்கினார். தோழர் ராஜா சிறப்புரையாற்றினார். மேலும் பல்வேறு மாற்று கட்சினரும், ஜனநாயக சக்திகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம், திருச்சி மண்டலம்.

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

சவ நாயகம்

கொலை செய்வதையே
கலையாகக் கற்றவர்கள்
சொல்கிறார்கள்,

”வெளியிலிருந்து வந்தவர்கள்
தூண்டி விட்டார்கள்”

வெளியிலிருந்து வந்து
தூண்டியவன் வேதாந்தா
உள்ளிருந்து
குறிபார்த்து சுட்டது போலீசு

வெளிப்படையான
இந்த உண்மைக்கு
முகம் கொடுக்க முடியாமல்,
கொலை நடுக்கம்
கொஞ்சமும் இல்லாமல்,
”சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்”
என பிணங்களின் மீதேறி
பேசுவதுதான் அரசு!

உண்மையில்
சமூக விரோதிகள்
ஊடுருவவில்லை
அரசாங்க கொலைக் கருவியுடன்
உயிர் உருவி நிற்கிறார்கள்.

சமூக விரோதிகளால்
சமூக விரோதிகளுக்காக
நடத்தப்படும் அரசாட்சியில்
நிலைமை கட்டுக்குள்.
இந்த நிலைமை மீறினால்
சுட்டுக் கொல்!
இது ஜனநாயகமல்ல
சவ நாயகம்!

சிங்கள இனவெறிக்கு
சிதைந்தது ஈழத்தமிழினம்
வேதாந்தாவின் லாபவெறிக்கு
அழிவதோ தமிழினம்!
உங்களை ஆளவிட்டது
எங்களை கொலை செய்யவா?

உப்பளத்து பறவைக்கு கூட
கொப்புளம் வராமல்
உறவாடும் மண்ணில்
எத்தனை படுகொலைகள்
எங்கள் வாசலில்..

பேசித் தீர்த்துக்கொள்வதுதான்
ஜனநாயகம் என்றிருந்தோம்,
பேசினாலே தீர்த்து விடுவதுதான்
ஜனநாயகம் என்பதை
எம் பெண்ணின்
வாயைச் சிதைத்த குண்டு
வரும் தலைமுறைக்கு சொல்கிறது!

மூச்சடக்கி முத்தெடுத்த
முத்துநகர் பரம்பரை
மூச்சிழந்து மூளியாகி
தெருப்பிணமாய்
இ‍ழுபடவோ எம் தலைமுறை

பயிர்க் கலையும்
பண்டை துறைமுகத்தை
உயிர் கலையுமாக்கிய
உழைக்கும் மக்களை
உயிர்க்கொலை புரிந்தவன்
மனித இனத்துக்கே கறை.
மன்னிக்காது வரும் தலைமுறை!

கொடிது! கொடிது
குடிமக்களை
கொலை செய்வது
அதனினும் கொடிது
போராடும்
உயிர்ப் பண்புடையோரை
ஒரு தேசம் இழப்பது.

போராட்ட குணமுள்ள
மக்களை மாய்ப்பது
தேசத்துரோகம்.

எதிர்ப்பவர்களை எல்லாம்
எரிப்பது என்றால்
இது தமிழ்நாடா?
இல்லை,
வேதாந்தா சுடுகாடா?

எண்ணி மாளா தோட்டாக்கள்…
எடுத்து மாளா துப்பாக்கிகள்…
கணக்கில்லாத கைத்தடிகள்..
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வேண்டிய
இராணுவக் கம்பெனிகள்…
எல்லாம் இருக்கலாம்
உங்களிடம்,
ஆனால்,
உங்களிடம் நீதி இல்லை!

அதனால்தான்,
நினைத்த வேகத்தில்
உங்களை புதைக்க விடாமல்,
போராடும் பிணங்களைப் பார்த்தும்
உங்களுக்கு பயம்.
இருப்பவர்களை பார்த்தாலோ
இன்னும் பயம்.
மனிதர்களே இல்லாத
மயான அமைதிக்கு
விகாரமாய் விரிகிறது
உங்கள் மனம்!

எம் தலைமுறைக்கோ
புரிகிறது,
போராடினால்
கொல்லப்படுவோம்,
போராடாவிட்டால்
சாகடிக்கப்படுவோம்.

சாவதை விட
போராடுவதே மேல்!

போராடுவதே
வாழ்க்கை என்பதால்
நாங்கள்
வாழத் துணிந்துவிட்டோம்!
இணையத்தை முடக்கலாம்
மக்களின் இதயத்தை
முடக்க முடியாது!

மனித உணர்வெங்கும்
துடிக்கிறது தூத்துக்குடி!

– துரை. சண்முகம்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் !

துரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், ஆரியபட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஜெயராமன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

துப்பாக்கி குண்டு தோழரின் வலது பக்க தலையில் நுழைந்து, மூளையை சிதறடித்து உள்ளது. இரு சக்கர வாகனம் ஒன்றில் ஜவுளித் துணிகளை வைத்துக் கொண்டு கிராமம் கிராமமாக சென்று விற்பனை செய்யும் கடின உழைப்பாளி தான் தோழர் ஜெயராமன்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதில் செயல்பட்டு வந்த விவசாயிகள் விடுதலை முன்னணியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு அமைப்பில் இணைந்தார்.  அப்போது முதல், அமைப்பின் அனைத்து வேலைகளிலும் உற்சாகமாக பங்கெடுத்து வந்துள்ளார்.  பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்று பல முறை சிறை சென்றுள்ளார்.

நேரம் தவறாமை என்பது தோழர் ஜெயராமனின் சிறப்புப் பண்பு.  அமைப்பு வேலைகளுக்கு தாமதமாக வரும் தோழர்களை கடுமையாக விமர்சிப்பார்.

தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் அமைப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்து தமது அரசியலை அவர்களும் ஏற்கும் வண்ணம் வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தோழரின் இளைய மகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.  மகள் இறந்த சோகத்தை சில நாட்களில் கடந்து மீண்டும் அமைப்பு வேலைகளுக்கு வந்துவிட்டார் தோழர் ஜெயராமன்.

மிகவும் அமைதியானவர்.  யாருடனும் அதிர்ந்து பேசமாட்டார். அப்படிப் பட்டவர், முல்லைப் பெரியாறு உரிமைக்கான போராட்டங்களின் போது போலீசு அதிகாரிகளுடன் கடுமையாக வாதிட்டு உள்ளார்.

மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், அமைப்பு வேலைகளுக்கும் மக்களுக்கான போராட்டங்களுக்கும் தவறாமல் வந்துவிடுவார்.

மே 22-ஆம் தேதி காலையில் கூட தன் அருகில் இருந்த தோழரிடம், “சீட்டுப் பணம் கட்டணும் தோழர், சிரமமா இருக்குது.  ஆனா இங்க இவ்ளோ பெரிய போராட்டம் நடக்குது.  அந்த சனத்த பாக்காம இருக்க முடியுமா?” என கூறி உள்ளார். அவர் அப்படி கூறிய சிறிது நேரத்திலேயே போலீசு அவரை சுட்டு விட்டது.

தோழனே!
உந்தன் வழியில் பயணிப்போம்!
உந்தன் கனவை முடித்து வைப்போம்!

– வினவு செய்தியாளர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க ?

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரை சுட்டுக்கொன்றது மோடி – எடப்பாடி கும்பல். இது அரசு பயங்கரவாதம். கார்ப்பரேட் நலனுக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தப்பட்ட இந்த கொலைவெறிச்செயல், சென்னை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் கோபக்கனலோடு ஒரு காவிக் குரலின் திமிரையும் கேளுங்கள்!

ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, வோடோஃபோன் இணையதள கம்பி தடம் பதிப்பவர்.

தூத்துக்குடி ஜனங்க என்ன கேட்டாங்க? நச்சு காத்து, மூச்சுகூட விடமுடியல. தாகத்துக்கு தண்ணிய வாங்கி வைக்க முடியலனு கேட்டது தப்பா?

100 நாள் அமைதியா போராடுனாங்க. பேரணியில வன்முறை செஞ்சிட்டாங்கன்னு யாரை ஏமாத்துறானுங்க. இப்படித்தான் மெரினாவுலயும் சொன்னானுங்க. போராட ஜனங்க வரக்கூடாதுன்னு போலீசு மிரட்டினாங்க, அடிச்சானுங்க, இப்ப சுடுறானுங்க. போராடுறவங்கள அவங்க இடத்திலிருந்து வெளியே வரவழச்சு சாவடிக்கிறானுங்க.

அமைதியா உட்கார்ந்து போராடினாலும் எவனும் வந்து என்னன்னு பாக்க மாட்டானுங்க. அவங்கள தேடி போனாலும் பாக்கவுடாம சாவடிப்பானுங்களாம்.

பிரசன்னா,  டாடா நிறுவனத்தின் சைட் இன்ஜினியர்.

இது இன்னொரு ஜாலியன் வாலாபாக் படுகொலை. இது ஜனநாயக நாடு. நாட்டை ஆள சி.எம்., பி.எம். வர்றதுக்கு நம்ம ஓட்டு தேவை. ஆனா, நச்சு கம்பெனியை தூக்குனு சொல்ல உரிமையில்ல.

வெளியே வரக்கூடாது, 144 தடை உத்தரவு, கரண்ட் கட்டுன்னு இப்ப சொந்த இடத்திலேயே நம்மள அகதிகளாக்கிட்டானுங்க. கலவரத்தத் தடுக்குறதா நெனச்சு இப்ப இணையதளத்தையும் முடக்கிட்டானுங்க. இனிமேதான் உலகம் முழுவதும் பரவப் போகுது பாருங்க.

எஸ்.பி.யை மாத்தி விசாரணைக் கமிசன் வைக்கிறதா நாடகமாடுறாங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்தில போலீசு கொளுத்துனது ஊருக்கே தெரியும். எந்த கமிசன் தண்டிச்சது?

தினேஷ், புதுக்கோட்டை.

தூத்துக்குடி டவுனுல ஒரு வருஷம் ரோடு தோண்டுற வேல செஞ்சேன். பாத்ரூம் போனா குண்டி கழுவக்கூட தண்ணி கிடையாது. தெருவுல சுத்துற பத்துல 6 நாய்களுக்கு உடம்புல முடி இருக்காது. அந்தளவுக்கு மண்ணெல்லாம் விசம். மனுசங்க எப்படி வாழ முடியும்?

ஓட்டுப் போடுற உரிமையுள்ள மக்களுக்கு ஒரு கம்பெனியை வேண்டாமுன்னு சொல்றதுக்குக் கூட உரிமை இல்லையா?

கோபால், கால் டாக்சி டிரைவர்.

தப்பு எங்க மேலதான். அவங்களுக்கு ஓட்டுப் போட்டது நாங்கதானே! 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பி.ஜே.பி. காரனுங்க? அப்படியே குதிச்சிருப்பானுங்களே… தமிழனுங்களோட உயிர் அவ்வளவு சாதாரணமா போயிருச்சு.

செந்தில், கால் டாக்சி டிரைவர்.

100 நாள் அமைதியா போராடுனவங்கள போலீசு அசிங்கம் பன்றானுங்க. மீடியாகாரனுங்களும் அதுக்கு துணை போரானுங்க. நரகத்துல தள்ளிவிட்ட மாதிரி ஜனங்களோட வாழ்க்கை. 17 வயசு குழந்தைய வாயிலேயே சுட்டு இருக்கானுங்க. அவங்களா வன்முறையில இறங்குனாங்க? இதுக்கெல்லாம் பதில் சொல்லாத அவங்கள நாம் சும்மா விடக்கூடாது.

சந்திரசேகரன், தொலைத்தொடர்புத் துறை பொறியாளர் (ஓய்வு).

நானே இப்ப ஒரு கார்ப்பரேட் கம்பெனியிலதான் பார்ட் டைமா ஜாப் பன்றேன். எல்லா போராட்டத்திலும் ஆதாயம் பாக்கிறதுக்குன்னு சில பேர் காத்திருக்காங்க. அவங்கதான் இத வன்முறையா மாத்திட்டாங்க. அவங்க ஆதிக்கம்தான் இப்ப நாட்டுல நடக்குது. தினமலர் பேப்பர படிச்சுப் பாருங்க, உங்களுக்கே உண்மை தெரியும்.

முத்துக்குமார், பிளம்பர், காரைக்குடி.

மக்கள் மூனு மாதம் போராடும்போது எந்த அசம்பாவிதமும் நடக்கல. போலீசு வந்தா மட்டும் எப்படி அது வன்முறையா மாறுது? பட்டப் பகல்ல வேன்மேலே ஏறி டி-சர்ட் போட்டு போலீசு சுடுறான். இதைவிட பெரிய வன்முறை என்ன இருக்க முடியும்? பேரணி போனவங்க பொணமா ஆனதுக்கு யார் காரணம்? எந்த மீடியாவாவது இத சொல்றானா? எல்லோரும் கூட்டுக் கயவாளிங்க. ஸ்டெர்லைட்காரன் பணத்துல வாழுறானுங்க. உழைச்சு வாழுற ஜனங்க சாகுறாங்க.

சின்னதம்பி, லோடு லாரி உரிமையாளர், மடுவாங்கரை.

என்னால தாங்க முடியல. நெஞ்சு கொதிக்குது. மந்திரி, நீதிபதி இவனுங்கள  நடு ராத்திரியில, விபத்து நடந்த வண்டிய கிரேன்ல தூக்குற மாதிரி மொத்தமா ஒரு வண்டியில ஏத்தி புழல் ஜெயில்ல போடணும். வேற பேச்சும் இல்ல, வழியுமில்ல.

200, 300 ரூபா சொம்பு திருடுனா உடனே ஜெயிலு. அவன் ஒரு தலைமுறைக்கே அடிக்கிறான், எல்லாம் வேடிக்கை பாக்குறானுங்க. நோக்கியாவ ஏன் மூடுனான்னு எவனும் கேக்கல, ஸ்டெர்லைட்ட மூடச்சொன்னா சுடுறானுங்க. நம்மள காப்பாத்த ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தா, இவனுக பணக்காரன் பின்னாடி நக்க போறானுங்க.

சிவா, லாரி உரிமையாளர்.

எங்கே போராட்டம்னாலும் அ.தி.மு.க.-க்காரனுங்க போலீச வுட்டு ரத்தத்தில மூழ்கடிக்கிறானுங்க. கடைசில போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவிட்டாங்க, மாவோயிஸ்ட்டுங்க பூந்துட்டாங்க, நக்சலைட்டு வந்துட்டாங்கன்னு மீடியாவுல பேட்டி கொடுக்கிறானுங்க. யார ஏமாத்துரானுங்க.

முருகன், மெக்கானிக்.

மெரினா போராட்டத்தில கடைசி வரைக்கும் இருந்து அடிவாங்குனவன் நான். போலீசுகாரனுங்க இன்னா செய்வாங்கன்னு எனக்கு இஞ்ச் பை இஞ்சா தெரியும். முதல் திருடனுங்க அவங்கதான். நகை திருடுபோச்சுன்னு ஸ்டேசன் போனா, எவ்ளோ போச்சுன்னுதான் கேப்பாய்ங்க, எப்படிப் போச்சுன்னு கேட்க மாட்டாய்ங்க… பங்குதானே அவனுங்களுக்கு தேவை.

மெரினா போராட்டத்தப்ப பட்டப்பகல்ல ஆட்டோவ போலீசுதான் கொளுத்தினாங்க. அவனுங்கள இந்த நீதிபதிங்க என்னா புடுங்கிட்டாங்க.

இப்ப துப்பாக்கி சூட்டுல செத்தவங்க குடும்பம் மட்டுமில்ல, நாங்களும் வெறிபுடுச்சி அலையுறோம், அந்தச் சாவ பாத்து.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை. ஸ்டெர்லைட் முதலாளிக்காக அதன் அடியாளாக தமிழக அரசு முன்னின்று நடத்தியிருக்கும் பச்சைப் படுகொலை. இது அரச பயங்கரவாதம் என்பதை அம்பலப்படுத்தியும், இந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராகத் தமிழகத்தின் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று திரள வேண்டுமன்ற கோரிக்கைகளுடனும் மக்கள் அதிகாரம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. தாங்கள் செயல்படும் பகுதிகளில் மாற்று அரசியல் கட்சியினரையும், இயக்கங்களையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அவர்களது பங்கேற்போடு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளை, சுருக்கமாக இங்கே தொகுத்தளிக்கிறோம்.

திருச்சி
“பன்னாட்டு ஸ்டெர்லைட்டுக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே யுத்தம் !” திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம். சென்னை
கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தின் வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசு 48 பேரை சிறையிலடைத்தது.

விருத்தாசலம்

கம்பம்
கம்பம் சிக்னலில் மக்கள் அதிகாரம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்ளிட்ட தோழர்களை போலீசு கைது செய்தது.
சீர்காழி
சீர்காழி ஸ்டேட் பாங்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் 5 நிமிடம் உயிர்நீத்த போராளிகளுக்கு மவுன அஞ்சலியும் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிட கழகம், மக்கள் CPML, CPMLவிடுதலை, SDPI, CPM, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை – கட்சிகளைச் சார்ந்த முன்னணியாளர்கள் பங்கேற்று கண்டனங்களை தெரிவித்தனர்.

புதுச்சேரி
வில்லியனூர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை
கோவையில் ஆதித்தமிழர் கட்சி, ம.தி.மு.க., த.பெ.தி.க. தி.வி.க., வி.சி.க., இளந்தமிழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளது பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை
பசுமை வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் முற்போக்கு மக்கள் மேடை சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம், சி.பி.எம்., வி. சி. க, வி. சி.க, நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
பட்டுக்கோட்டை
பென்னாகரம்
– தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

தூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் !

Abdul Hameed Sheik Mohamed
நடுநிலை சங்கி பானுகோம்ஸ் இன்று காலை ஒரு முக்கியமான கேள்வியை புதிய தலைமுறையில் கேட்டார்: ” போராட்டக்காரர்களுக்கு கல் எங்கிருந்து கிடைத்தது..?இதை முதலில் விசாரிக்க வேண்டும்”
கல் ஒருவகை கிடைப்பதற்கரிய ஆயுதம் என்பதை காலையிலேயே தெரிந்துகொண்டேன்
*******

Deepa Lakshmi
வடகிழக்குப் பகுதியிலிருந்து பிழைப்புத் தேடி வந்திருக்கும் மக்களுக்குக் கொதிக்கும் உணர்வு கூட இங்கேயே இருந்து … வளர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களுக்கும், அவர்களை நக்கிப் பிழைக்கும் சாதி அடிமைகளுக்கும் இருக்காது என்பதை இனியாவது புரிந்து கொள்வோம்.

எந்த இன உணர்வுக்கும் மூலதனம் மனிதம். அநீதி எங்கு நடந்தாலும் வலிக்கும் தான். நம் வாழ்வுக்கு நெருக்கமான சூழலில் நடக்கும் போது உயிரே வலிக்க வேண்டும். அதற்கு எந்த மயிரானும் டெஸ்ட் வைக்க வேண்டியதில்லை.
வலியே தெரியாமல் திரிபவர்களைக் கண்டு கொள்ளுங்கள்,போதும்.
*******

Thiru Yo
மூன்று மாவட்டங்களிலும் இன்று என்ன நடைபெறுகிறதென்கிற ஒற்றைச் செய்திகூட இல்லை. இணையம் முடக்கம் அறிவிப்பு நேற்றே வந்த போதும் இத்தனை அமைப்புகள், கட்சிகள், வழக்கறிஞர்கள் இருந்தும் இன்று தடைக்குப் பிறகுதான் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. செய்தி ஊடகங்கள் கண்களும், வாய்களும் கட்டப்பட்டுள்ளன. போக்குவரத்து முடக்கம். களச்செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் தற்போதைய நிலைமை பற்றி தகவல் இல்லை. எல்லா கண்களையும் மூடி கொலைகார அரசு சொல்வது மட்டுமே தகவலாகிறது.

இதை எதிர்கொள்ள கட்டமைப்பு, நுட்பம் எதுவும் இல்லை. தூத்துக்குடிக்கு தானே பிரச்சனை. மெதுவாக இரண்டுநாட்கள் கடந்து பார்த்துக்கலாமென தமிழ்நாடு உறங்குகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இந்த அடக்குமுறை பரவும்போது மயானத்தின் அமைதி வந்திருக்கும்.
எடப்பாடியை திட்ட நமக்கு எந்த தகுதியும் இல்லை.
*******

Karthik Meka

 

 

 

 

 

 

தூத்துக்குடியில் அடிவாங்கும் மக்கள் உழைக்கும் மக்கள் அதில் பெர்ணாண்டஸ், நாடார், பள்ளர், பறையர் , மீனவர்கள் , இஸ்லாமியர்கள் , கிறிஸ்துவர்கள் என்று அனைவரும் இருக்கிறார்கள். சாதிய மத கொம்பன்கள் தலைவர்கள் தங்கள் ஆண்ட பரம்பரை சாதிய வீரத்தை காட்டவும். அனைவரும் சூத்தை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் சாதியை விட வர்க்க நலனே முக்கியம் என்று
*******

Swara
கேவலம் போலீஸே இவ்வளவு அராஜகம் செய்கிறதென்றால் காஷ்மீரில் ராணுவம் எவ்வளவு அராஜகம் செய்திருக்கும் 😟
*******

Aazhi Senthil Nathan
தொலைக்காட்சி ஊடக ஆசிரியர்கள்/பொறுப்பாளர்களுக்கு ஒரு செய்தி…
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் என்கிற செய்தி சன் நியூஸ், சத்தியம் என ஓரிரு சேனல்களில்தான் வந்திருக்கிறது. மற்றவற்றில் இல்லை என்று தெரியவருகிறது. ( நானும் அவசர அவசரமாக தேடிக்கொண்டிருக்கிறேன்…)
தொலைக்காட்சி எடிட்டர்கள், செய்தியாளர்களுக்கு ஒரு ஆலோசனை.

தமிழ்நாட்டில் நீங்கள் நேர்மையான, உண்மையைச் சொல்லத்தயங்காத செய்தி சேனல்களாக தொடரவிரும்பினால், உண்மையைச் சொல்லுங்கள்.
உண்மையைச் சொல்லத் தவறினால், எங்களுக்கு எந்த இழப்புமில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் நொடிப் பொழுதுக்குள் உண்மை பரவிவிடும். நீங்கள் நம்பகத்தன்மை இழந்துவிடுவீர்கள். சில செய்தித்தாள்களைப் போல irrelevant ஆகிவிடுவீர்கள்.
உங்கள் சகாவாக இந்தப் பதிவைப் போடுகிறேன். நிர்வாகம் தயங்கினால் அதனுடனும் போராடத்தயங்காதீர்கள்.
*******

Mahendran Nagarajan
தோழர் நேற்று விவாதத்தில் ,இந்த கருத்தை பதிந்தபோது, நெறியாளர் ஜென்ராம்,”இந்த சம்பவம் தொடர்பாக உங்கள் கருத்துகளையும்,விவாதங்களையும் மட்டுமே நாங்கள் ஒளிபரப்பும் கட்டாயத்தில் இருக்கிறோம்”என்று சற்று உறுத்தலுடன் கூறினார். அந்த வார்த்தைகள் செய்தி நிறுவனங்களுக்கு உள்ள சார்பு நிலை,அரசுகளின் நிர்பந்தம் என அனைத்தையும் சுட்டியது.
*******

Mathavaraj
ஒரு நூற்றாண்டுக்கு முன், வ.உ.சி கைதையொட்டிய தூத்துக்குடி எழுச்சியை அடக்குவதற்கு கலெக்டர் ஆஷ் துப்பாக்கிச் சூடு நடத்தினான். அவனுக்கு நேர்ந்தது உலகமே அறியும். ஆஷ்துரைகளே! வரலாறு மீண்டும் எழும். தக்க பாடத்தையும், பதிலையும் எழுதும்.
*******

Karthik Meka
நியூஸ் 7 , புதியதலைமுறை, பாலிமர், தந்தி எல்லாம் நடுநிலை ஊடகம் என்று விளம்பரம் செய்ததோ அதற்கு முற்போக்குகள் ஆதரவு கரம் நீட்டினார்களோ. அந்த ஊடகத்தை எல்லாம் முற்போக்கு என்று தூக்கி பிடித்தார்களோ அவர்களே முதல் அரசியல் திருடர்கள். இந்த அரசியல் தான் பேசுவோம் என்று இருக்கும் சன் குழுமத்தையோ, ஜெயா டிவி, கேப்டன் டிவி, வசந்து டிவி, வெளிச்சம் டிவி, மக்கள் டிவிகளை பார்த்து விட்டு போகலாம். நடுநிலை என்பது தமிழ் சமூகத்தின் சாபக்கேடு என்பதை எப்போது புரியபோகிறம் நாம் ?
*******

Mahendra Kumar
காலை வணக்கம்! இனி என்ன நடக்கும்?
ஆலையை மூடச்சொல்லி வழக்கு நடக்கும். நீதிமன்றம், விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்! அரசாங்கம், ஸ்டெர்லைட் ஆலை எந்த அளவு பாதுகாப்பானது… அதன் மூலம் உண்டாக்கப்படும் நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள் என்ன என்பது உள்ளிட்ட தரவுகளை எடுத்துப்போடும்!

ஒரு சாரார் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அரசு அடிபணிந்தால், இப்படியே எல்லா தொழிற்சாலைகளையும் மூடச்சொல்லி போராடுவார்கள்… அப்படி மூடினால் நாட்டின் தொழில் வளம் என்னாவது… யார் தைரியமாக முதலீடு செய்து தொழில் தொடங்க முன் வருவார்கள்… எப்படி பொருளாதாரம் உயரும் என்றெல்லாம் வாதிடுவார்கள்!
நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொள்ளும்! சில பாதுகாப்பு பரிந்துரைகளோடு, தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கி உத்தரவிடுவார்கள்!
இந்தப்போராட்டத்தின் வீரியம் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டு விடும்! இடிந்தகரை போராட்டத்தை விட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது. என்ன ஆனது? கடைசிவரை அணு உலையை நிறுத்தமுடியவில்லையே?

எல்லாவற்றையும் போராடித்தான் பெறவேண்டுமென்றால், எவ்வளவு நாள் தான் மக்கள் போராடுவார்கள்? அவர்களும் ஒருநாள் களைத்துப்போவார்கள்… போராட்டங்களை கைவிட்டு, பிழைப்பை பார்க்க போய்விடுவார்கள்! இந்தியாவில் உரிமைகளுக்கான – வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களின் நிலை இது தான்! மாநில நலன்களை விட்டுக்கொடுக்காத – தன்மானம் மிக்க தலைமை வரும்வரை, மத்திய அரசாங்கத்தின் அடக்குமுறை அரசியல் தொடரும்!
*******

தோழர் Bala Bharathi
தொடர்கிறது துப்பாக்கிச்சூடு.
உயர்கிறது வீரத்தின் அளவு.
பிரதமரே, முதலமைச்சரே
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரே, எஸ்பியே
இன்னும்பிற அதிகாரவர்க்கமே
எங்களை கொல்லத்தானே போகிறீர்கள்.
அதற்குமுன்னால்
வெனிஸ்டாவைக்கொன்ற
காவலனை அனுப்புங்கள்.

அந்தச்சிறுமியின்
தொண்டைக்குள் இருந்த
வார்த்தைகளுக்கே பயந்துவிட்டீர்களே
வீரம் என்பது ஆயுதத்திலா இருக்கிறது?
அற்பனே!
பத்தாம்வகுப்பு சிறுமியின் புத்தியில் இருக்கிறது .

இந்தக்கோழைகளிடம்
குண்டடிபட்டு சாக எந்தவீரர்களுக்கும்
விருப்பமில்லை.
எங்களைக்கொல்ல வேண்டுமா
எங்களைப்போலவே ஆயுதமேந்தாத இலட்சியமேந்திய
ஒருவீரனை மட்டும் அனுப்புங்கள்

இல்லையென்றால் எங்கள் மரணத்திற்கு
தரும் பத்துலட்சத்தை
துப்பாக்கியேந்திய
அந்தப்பிணங்களுக்கே
தந்துவிடுங்கள்
மாண்புமிகுக்களே..
*******

Anbalagan Veerappan
தூத்துக்குடியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தி, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக 78பேர் கைது. சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்.
*******

Arunachalam Elagnairu
சுடப்பட்டது தீவிரவாதிகள் தான் – ஆவடி குமார்
மக்கள் விரோதக்கும்பல் ஆட்சிசெய்தால் மக்கள் தீவிரவாதிகளாகக் கூட மாறுவார்கள் கழிசடைகளே
*******

M.m. Abdulla
கூடன்குளம் அணு உலைக்கு எதிராகக் கூடிய போதோ, நியூட்ரினாவுக்கு எதிராகக் கூடிய போதோ சுட்டிருந்தால் கூட அரசின் திட்டத்தை எதிர்ப்பதால் அரசு சுட்டது (!) என்று நினைக்கலாம்! ஆனால் மோடியின் நண்பரான (அனில் அகர்வால்) ஒரு தனிநபரின் நிறுவனத்திற்கு ஆதரவாக ஸ்னைப்பர் துப்பாக்கிகளைக் கொண்டு சொந்த மக்களை அரசு சுட்டுக் கொல்கிறது என்றால் இது யாருக்காக நடக்கும் அரசு?
மக்களின் நலத்திற்காக யார் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்தனரோ அவர்களை குறி வைத்துப் படுகொலை செய்திருக்கிறது அரசு.

இதன் மூலம் மோடி அரசு தனது எடுபிடி எடப்பாடியின் மூலம் தமிழகத்திற்குத் தெளிவாக ஒரு செய்தியைச் சொல்லி உள்ளது… “நாங்கள் ஹைட்ரோகார்பன் கொண்டு வருவோம், நியூட்ரினோ கொண்டு வருவோம், நீட் கொண்டு வருவோம்..உங்களுக்குப் பிடிக்காத எதை வேண்டுமானாலும் கொண்டு வருவோம். எதிர்த்தால் சுடுவோம்..கொல்லுவோம்”.
*******

Mahendra Kumar
காவல்துறை அரசின் ஏவல் துறை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சுட்டார்களாம்.
வன்முறையாகவே இருக்கட்டும். தண்ணீரை பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள் இதையெல்லாம் ஏன் உபயோகிக்கவில்லை? அப்படி என்ன தீவிரவாதிகளா அங்கு கலவரம் செய்தார்கள்?

காவல்துறையினருக்கும் ஒரு உணர்வே இருக்காதா? அவர்களுக்கும் சேர்த்து தானே இந்தப்போராட்டம்? துப்பாக்கியால் சுடச்சொல்லி உத்தரவு வந்தால், ‘அப்பாவி மக்கள் அநியாயமாக பலியாவார்கள்’ என்று சொல்லி சுட மறுத்திருக்கலாம் தானே? உயர் அதிகாரிகள் மாற்றுவழிகளை ஏன் பரிந்துரைக்கவில்லை? அப்பட்டமான படுகொலை இது! போராட்டத்தை வழி நடத்தியவர்களாக பார்த்து போட்டுத்தள்ளி விட்டார்களோ என்று தோன்றுகிறது!

இவர்களே சுட்டுக்கொல்வார்கள்… பிறகு இவர்களே அதற்கு ஆணையம் அமைத்து விசாரிப்பார்கள்! அந்த விசாரணை நியாயமாக நடக்கும் என்று நாம் நம்பவேண்டும்! இதுவரை அடிமை அரசாக மட்டுமே இருந்த எடப்பாடி குரூப், இப்போது கொலைகார அரசாக உருவெடுத்திருக்கிறது! அவர்கள் செய்தது வன்முறை என்றால் நீங்கள் செய்ததற்கு என்ன பெயர்?
தூத்துக்குடி படுகொலை, திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம்!
*******

இரவிக்குமார்
Sources : All shops shut in Thoothukudi for the third day. No water or food available for the journalists who went there for reporting. Hundreds of foreign tourists in Kanyakumari, unable to use Credit cards or withdraw cash due to blocking of internet. Utter chaos prevailing.
கிடைத்துள்ள தகவல்களின் படி: தூத்துக்குடியில் மூன்றாவது நாளாக அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களுக்கு தண்ணீரோ, உணவோ கிடைக்கவில்லை. இணையம் தடைசெய்யப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் இருக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது கிரெடிட் கார்டுகளை உபயோகித்து பொருட்கள் வாங்கவோ பணம் எடுக்கவோ முடியவில்லை. மிகப்பெரும் குழப்பநிலை நீடிக்கிறது
*******

Magudeswaran Govindarajan
காவல்துறையின் காவல் அமைப்புகள், சிந்தனை முறைகள், முரணை எதிர்கொள்ளும் வகுபாடுகள் ஆகிய எல்லாமே பழங்கற்காலத்தில் இருக்கின்றன. இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரையிலான குடிமக்களின் அறிவு வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் வெள்ளையன் கற்றுக்கொடுத்த பாடங்களுக்குள்ளாகவே காவல்துறை உழல்கிறது. இன்றைய பள்ளி மாணாக்கர்கள் வரைக்கும் ஆயிரம் செய்திகள் எளிதில் எட்டிவிடுகின்றன. எவ்வொரு தனியாளும் தொண்ணூறுகள் வரைக்கும் இருந்ததைப்போன்ற அறியாமையில் இல்லை.

அவர்கள் ஒன்றுபோல் சிந்திப்பதை இனி யாரும் தடுக்க முடியாது. ஒன்று திரள்வதைத் தடுக்க எதுவுமே செய்ய இயலாது. அவ்வாறு திரள்வது குறுங்குழுத் தன்மையுடையதாக இராது. காய்ந்த புற்கூட்டத்தில் தீப்பற்றுவதுபோல் கடுகிப் பரவும்.
அவர்களைக் காவலர்களின் உதவியோடு எதிர்கொள்வது அரசின் மடைமை. தொடரும் பேச்சு வார்த்தைகளின் வழியாக உரிய தீர்வுகளை விரைந்து அடைந்து மட்டுப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்களும் அரசுத்துறையினரும் அவர்களிடையே தொடர்ந்து தென்பட வேண்டும். காணாத்தலையர்களாகவும் கண்டுகொள்ளாதவர்களாகவும் ஒளிவதைப்போன்ற மடைமை வேறில்லை. அத்தகைய போக்கு சூட்டைப் பெருக்கிவிடும்.

முப்பது நாற்பதாண்டுகளுக்கு முந்திய அறியாக் குடிகளா இவர்கள் ? அத்தகைய கண்மூடித்தனமான அறியாமையில் அரசுதான் இருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது. மக்களை நோக்கிக் கொலைக்கருவியை நீட்டியது கொடுந்தவறு. கூடுவது, குழுமுவது, ஊர்வலம் செல்வது, முழக்கமிடுவது என்பவை அறவழியில் எதிர்ப்பவர்களுக்கான இறுதி வழிகள். எதிர்க்கக் கூடும் மக்கள் கொலைக்கருவிகளை எப்போதும் தொடமாட்டார்கள். பிள்ளைகள் முதியவர்கள் அடங்கிய கூட்டத்தைக் கலைக்க கொலைக்கருவி பயன்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. நம் காவலமைப்புகள் எண்பதுகளில் தேங்கிக்கிடக்கின்றன என்றே தெரிகிறது.

அரசுக்கும் மக்களுக்கும் முரண் என்றால் காவல்துறை இருதரப்புக்கும் காவலாக இருக்க வேண்டும். கொல்லும்படி உத்தரவு வந்தாலும் அதை ஏன் ஏற்க வேண்டும் ? கண்ணீர்ப்புகை, வான்சுடல் என்னும் வரம்புகளோடு நிற்க வேண்டும்.
கொல்கருவிகளையும் அதிகாரத்தையும் நல்லரசு நடத்த விரும்புவோர் நம்பமாட்டார்கள். அவற்றையே நீட்டுவீர் எனில் மக்கள் அச்சப்படவும் மாட்டார்கள். ஆலையை நிறுவியபோது அது தொழில்வாய்ப்பாகக் கருதப்பட்டது, இன்றதன் தீமை தெரிந்துவிட்டது… நிகழ்காலத்திற்கு ஏற்ற முடிவினைத்தான் அரசு எடுக்க வேண்டும்.
காலத்தின் மாற்றத்தை உணர்ந்து அரசும் காவல்துறையும் தங்களை மாற்றிக்கொள்ளட்டும். கொல்வது, மிரட்டுவது, துரத்துவது, அடிப்பது, ஒடுக்குவது போன்ற பாடாவதி அணுகுமுறைகளைத் தூக்கி வீசட்டும். மக்களை நாடட்டும்.
*******

Kavin Malar
இதுவரை இச்சம்பவத்தை நான் பொதுவெளியில் எழுதவோ பேசவோ இல்லை. இன்றைக்குப் பேசியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மேட்டூரில் ஒரு தொழிற்சாலை உள்ளது. மால்கோ என்று பெயர். வேதாந்தாவுக்கு சொந்தமான நிறுவனம் அது. அந்த நிறுவனம் வெளியேற்றும் கழிவுகளாலும் புகையினாலும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் புற்றுநோய் உட்பட பல தோல் நோய்கள் உண்டாக்கி மக்கள் அவதியுறுகின்றனர். இக்கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் பேச உண்மை அறியும் குழுவின் ஒரு நபராக நானும் சென்றிருந்தேன். அது 2013. அக்கிராமங்களில் மக்கள் படும் அவதியை நேரில் பார்த்தோம். பொதுவாக உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்டவர்களை மட்டும் பார்க்காது. அது தொடர்புடைய அதிகாரிகளையோ அல்லது மக்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களையும் சந்தித்துப் பேச முயல்வது வழக்கம். அந்த வகையில் நாங்கள் மால்கோ நிறுவனத்துக்குச் சென்றோம். அங்கு பொறுப்பில் இருந்த ஒருவரிடம் பேசினோம். அவர் இன்முகத்தோடு எங்களை வரவேற்றுப் பேசினார்.

“நாங்கள் அக்கிராமங்களுக்குச் சென்று மாதமொரு முறை மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அதாவது இவர்களுடைய தொழிற்சாலையால்தான் மக்களுக்கு நோய்களும் வருகின்றன. இவர்களே மருத்துவமும் பார்ப்பார்களாம். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவார்களாம். அவருடைய பதிலை பதிவு செய்துகொண்டு திரும்பினோம். திரும்பும் வழியில் பொங்குமாங்காவிரிக்கு அருகே சிறிது நேரம் நின்று அதை ரசித்துவிட்டு காரில் ஏறி ஒரு சாலையில் பயணித்தோம்.

ஆளரவமற்ற சாலை அது. எங்கள் வாகனம் செல்லும் வழியில் இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனம் ஒன்றின் அருகில் நின்றுகொண்டிருந்தனர். அருகே செல்லச் செல்ல ஏதோ விபரீதமாய்ப் பட்டது. ஆனால் எனன்வென்று விளங்கவில்லை. ஒரு நபர் கையில் பெரிய கல் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அது எங்கள் வாகனத்தை நோக்கி வந்தது. குறி தப்பி வாகனத்தின் மேற்கூரையில் விழுந்தது. அந்தச் சத்தத்தில் அனைவரும் அதிர்ந்துபோனோம். அது ,மட்டும் கண்ணாடியைத் தாக்கி இருந்தால்…நினைத்தே பார்க்கமுடியவில்லை. எல்லோரும் பதட்டமாகி ஒருவரையொருவர் காப்பாற்றுவதற்காக ‘குனிங்க…ஒளிஞ்சுக்கோங்க…குனிங்க’ என்று அலறினோம். நான் முன்சீட்டில் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். டிரைவரிடம் ‘வேகம் வேகம். நிற்காம ஓட்டுங்க.. ” என்று நான் கத்தினேன். ஆனால் மீண்டும் மீண்டும் கற்கள் வந்து தாக்கின. கண்ணாடிகள் உடைந்தன. பின்னால் அமர்ந்திருந்த தோழர் ஒருவரின் தலையை உரசிக்கொண்டு ஒரு கல் வந்து விழுந்தது. அன்றைக்கு ஓட்டுநர் கொஞ்சம் சாமர்த்தியமாகவும் வேகமாகவும் இல்லையெனில் எல்லோர் மண்டையும் உடைந்திருக்கும்.

மின்னல் வேகத்தில் அவர் வாகனத்தை ஓட்ட, இரு சககர வாகனத்தில் கற்களை எரிந்துகொண்டே அவர்கள் துரத்தினர். ஆனால் காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை அவர்களால். மிக வேகமாக பிரதான சாலையை எங்கள் கார் தொட்டுவிட அங்கே மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் அதிகமிருக்கவே அந்த நபர்கள் எங்களை அதன் பின் தொடரவில்லை.

நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்று வண்டியை நிறுத்தி புகாரளித்தோம். தோழர் கொளத்தூர் மணியிடம் தகவல் சொல்லவும் அவர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை உடனே அனுப்பி வைத்தார். உடனடியாக செய்திச் சேனல்களில் அது செய்தியானது. குறிப்பாக புதிய தலைமுறையில் அதுகுறித்து விரிவாக செய்தி வெளியிட்டதாக நினைவு. அதன் பின் அந்த நபர்கள் யாரென விசாரித்ததில் அது வேதாந்தாவைக் காக்க மால்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட நபர்கள் என்று தெரிந்தது. இன்னமும் வழக்கு இருக்கிறது.

ஆக ஓர் உண்மையறியும் குழு என நான்கைந்து நபர்கள் வந்து விசாரித்து அறிக்கை அளிப்பதைக்கூட விரும்பாத வேதாந்தா, ஸ்டெர்லைட்டுக்காக இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் போராடுவதை எப்படி விரும்பும்? நான்கைந்து பேருக்கு தாக்குதல் என்றால்? ஆயிரக்கணக்கானோர் போராடினால் என்ன செய்யும்? இரும்புத் தடிகளால் அடிகளையும் துப்பாக்கிச் சூட்டையும் அளித்திருக்கிறது வேதாந்தா நிறுவனம். காவல்துறை,அரசு, அதிகாரிகள் என எல்லோரும் துணை நின்று இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி உயிர்குடித்திருக்கிறார்கள்.

எங்களைத் தாக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அடியாட்களுக்கும், இந்த அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வயிறு எரிகிறது வேதாந்தாவுக்கு அடியாள் வேலை செய்யும் இந்த அரசுகளின் கீழ் இருப்பதே ஒவ்வொரு நொடியும் நெருப்பில் நிற்பது போல் இருக்கிறது. அவமானமாகவும் இருக்கிறது. சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்த அரசுகள் அழியட்டும்.
*******

Mugil Siva
போலீஸ் அராஜகம் செய்யும் வீடியோக்கள் நேற்றும் இன்றும் அதிகமாகப் பரவியதல்லவா.தூத்துக்குடியில் இணையத்தைத் துண்டித்துவிட்டார்கள். அடுத்து மொபைல் நெட்வொர்க்குகளும் முடக்கப்படலாம்.
ஊரில் பல்வேறு நண்பர்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் சொல்லும் தகவல்கள் கண்ணீரைத் தருகின்றன. நம் ஊரிலா இப்படி என்ற அச்சத்தையும் அதிர்ச்சியையும் சேர்த்தே வரவழைக்கின்றன.

144 தடை உத்தரவு என்றால் என்ன, அதன் கட்டுப்பாடுகள் என்னவென்றே தெரியாத பாமர மக்கள் நிறைந்த ஊர்தான் தூத்துக்குடி. கடந்த இருபது வருடங்களில் பெரும் கலவரத்தையோ, அடக்குமுறையையோ இந்த இளைய தலைமுறையினர் கண்டதில்லை. பாஞ்சாலங்குறிச்சி, வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 10 முதல் மே 12 வரை 3 நாட்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போதெல்லாம் தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எந்தக் கெடுபிடியும் விதிக்கப்படவில்லை.

ஆக, அறியாமையால், அரசின் சதி புரியாமல் அங்குமிங்கும் ஏதோ ஆர்வக்கோளாறில் திரிபவர்கள் போலீஸின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இன்றைக்கு எனக்குத் தெரிந்த பதின்ம வயதுச் சிறுவன், விளையாட்டுப் போக்கில் வேடிக்கை பார்க்கச் சென்று காலில் குண்டடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். (காலில் ரத்தம் வழிய, தலைதொங்க, ஒரு சிறுவனை இருவர் பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சியை நீங்கள் கண்டிருக்கலாம்.)
நான் விசாரித்தவரையில் ஊரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, யாரும் வெளியில் கூடக்கூடாது, கூட்டமாக நிற்கக்கூடாது என்று காவல் துறை எங்கும் மைக்கில் அறிவித்தபடியும் எச்சரித்தபடியும் செல்லவில்லை. நேரடியாக தெருக்களுக்குள் கும்பலாகப் புகுந்து, யாராவது தென்பட்டால் கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள். அண்ணாநகரில் இன்று கொல்லப்பட்ட இளைஞன் அப்படி பலியானவனே. தவிர, படகுகளை எரித்துள்ளார்கள். இன்னும் பல அராஜக வீடியோக்களைக் கண்டிருப்பீர்கள்.

ரயில்கள் வழக்கம்போல இயங்குகின்றன. ஆனால், ஊர் எல்லைவரை மிக மெதுவாக. காரணம், தீவிரவாதிகள் தண்டவாளத்தை சேதப்படுத்தியிருக்கலாமாம். எம் மக்கள் செல்லும் ரயிலை அதிகார மையம் ஏதாவது செய்துவிடுமோ என்று நாங்கள்தான் அஞ்ச வேண்டும். இன்று ரயில் ஏறச்சென்ற உறவுக்கார இளைஞன் ஒருவன், ரயில் கிளம்பத் தாமதமாகும் என்பதால் பிளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருந்தபோது, போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் அடிக்க வந்திருக்கிறார். ‘உள்ள ஏறுல மரியாதையா…’ என்று மிரட்டியிருக்கிறார்.

இன்று மதிய நேர தொழுகைக்குச் சென்ற என் நண்பன் ஒருவன், பள்ளிவாசல் அருகில் கண்ணீர்ப்புகை தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறான். பள்ளிவாசலுக்குள் புகுந்ததால் ரப்பர் தோட்டாக்களிடமிருந்து தப்பியிருக்கிறான். நேற்றிரவில் இன்னொரு பள்ளி வாசலின் வெளியே நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இப்படி பல சம்பவங்கள். இவையெல்லாம் மக்களுக்கு காவல்துறை மீதான கோபத்தை பல மடங்கு அதிகப்படுத்தியிருக்கிறது. தெருவுக்குள் போலீஸைக் கண்டாலே பதறி, பயத்தில் கல்லைக் கையில் எடுக்கிறார்கள். வீசுகிறார்கள். பலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

அடுத்த ஐந்து நாள்களுக்கு இணையத்தை முடக்குவதாக மொபைல்களில் செய்திகள் வந்துள்ளன. எனில், அடுத்தடுத்த நாள்களில் இன்னும் என்ன வெறியாட்டம் ஆடப்போகிறார்களோ என்று மனம் பதறுகிறது. ஒன்று மட்டும் புரிகிறது. தென்னிந்தியாவின் காஷ்மீராக தூத்துக்குடி முடக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஊரே மயான அமைதியுடன் இருக்கிறது. ஆம், ஊரே மயானமாகியும் இருக்கிறது.
#TuticorinMassacres #SterliteProtest #தூத்துக்குடிபடுகொலைகள்
*******

Arul Ezhilan

தூத்துக்குடி கொலைகள் குஜராத் மாடல் கொலைகள் என்கிறார் காவல்துறை அதிகாரி!

சஞ்சீவ் பட்(ஐ.பி.எஸ்)
தூத்துக்குடி சம்பவம் நமக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். அமைதியான போராட்டக்காரர்கள் வேதாந்தாவின் நிறுவனமான ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இது குஜராத் மாடலின் எடுப்பான நடைமுறை வெளிப்பாடு. அஇஅதிமுக தங்களது பின்புறத்தை சங்கிகளுக்கு விற்றுவிட்டார்கள் போலத் தெரிகிறது

*******

தமிழ் சசி
அடிமை அமைச்சர் மாபா.பாண்டியராசன்

தூத்துக்குடியில் சுகாதாரமாகத் தாங்களும், தங்கள் குழந்தைகளும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காகப் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்ற தமிழக அடிமை எடப்பாடி அரசின் அமைச்சர் பாண்டியராசன் அமெரிக்காவிற்குத் தமிழ்ச்சங்கங்களின் அழைப்பில் வரக்கூடாது. தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பேரவை, உடனடியாகப் பாண்டியரசானுக்குக் கொடுத்த அழைப்பினை திரும்பப் பெற்று வலுவாகத் தங்கள் கண்டனத்தைத் தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இங்குள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்களும் இதனைச் செய்ய வேண்டும்.

கட்சி பேதமின்றி எந்தத் தமிழக அரசாக இருந்தாலும், அந்தத் தமிழக அரசாங்கங்களுடன் நல்லுறவை, அமெரிக்காவில் உள்ள அமைப்புகள் கடைபிடிப்பது நல்லது தான். காரணம், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நாம் மதிக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அப்படியானது அல்ல. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் தில்லியின் எசமானர்கள் சொல்படி செயல்படும் அடிமை அரசாங்கம்.
தற்போதையச் சூழல் அசாதாரணமானச் சூழல். தமிழர்களை அடக்கி, ஒடுக்கி அடிமையாக நடத்த முயலும் தில்லியின் அடிமைகளாக உள்ள எடப்பாடி அரசாங்கம், தமிழர்களின் அரசாங்கம் அல்ல.

எனவே பேரவை, அடிமை அரசாங்கத்தின் அமைச்சராக உள்ள மாபா.பாண்டியராசனுக்கு கொடுத்த அழைப்பினை திரும்பப் பெற வேண்டும்.
*******

Selva Prabhu
எனது தம்பியின் இரண்டு நண்பர்களை நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸ் பொறுக்கிகள் அடித்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தச் சிறுவர்கள் இருவருக்கும் வயது 15. இதுவரை அந்த இரண்டு பேரையும் போலீஸ் பொறுக்கிகள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற விவரம்கூட யாருக்கும் தெரியவில்லை. தெரியப்படுத்தவுமில்லை.
#Tuticorin_Massacre #Resign_EPS #No_invest_to_Vedanta #Ban_Sterlite
*******

Poornachandran Ganesan
தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென்று பெண்கள், சிறுவர்கள் என அனைவரையும் அடித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை இருட்டடிப்பு செய்யவே இணையம், தகவல் பரிமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளது.
நண்பர் காசிவிசுவநாதன் அங்கு தெருத்தெருவாக போலீஸ் ஈடுபடும் அராஜகக் காட்சி ஒன்றை மெசஞ்சரில் அனுப்பினார். அதை இங்கு வெளியிட எனக்குத் தெரியவில்லை.
*******

Elangovan Muthiah
சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருக்கிறது ஒரு கட்சி. அதற்குப் பெயர் “மாநில அரசு
இந்த அநீதியைத் தெரிந்தே அனுமதித்துக்கொண்டு, வழக்கைத் தள்ளிப்போட்டபடியே, இந்த அரசைக் காக்கும் இடத்திற்குப் பெயர் “நீதிமன்றம்

பெரிய மனிதர்களுக்குப் பாலியல் விருந்தளிக்க, அதற்கு மாணவிகளைப் பயன்படுத்த ‘ஆள் பிடிக்கிறார்’ ஒரு பெண். அவருக்குப் பெயர் “பேராசிரியர்

அப்படி ‘ஆள் பிடித்த வழக்கில்’ தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே தானே ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, அதன் அறிக்கையைத் தானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர். பேட்டியெடுக்க வந்த பெண் நிருபரின் கன்னத்தைத் தடவுகிறார் அந்தப் பெரிய மனிதர். அவருக்குப் பெயர் “மாநில ஆளுனர்

மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் இந்த மாநிலத்தின் குழந்தைகளுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் கொடுக்கப்படுகிறது. அலைச்சலில் சாகிறார் தந்தை ஒருவர். குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு அவர்களது கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர் “தகுதித் தேர்வு

பெண் பத்திரிக்கையாளர்கள் படுக்கையில் சமரசம் செய்துதான் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் “கட்சிப் பிரமுகர்
அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்திலிருக்கும் முக்கியமான ஒருவரோடு ஒரு நிகழ்வில் கலந்துகொள்கிறார் அந்த நபர். “அவரைப் பிடித்துத் தருவது என் வேலை அல்ல” என்கிறார் அந்த முக்கியமானவர். அவருக்குப் பெயர் “மத்திய அமைச்சர்

கைது செய்யப்பட வேண்டியவரின் வீட்டுக்கே காவல்துறை பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் செல்வாக்கு மிக்க அவரது உறவினர். அவருக்குப் பெயர் “தலைமைச் செயலாளர்

மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் போதைப்பொருளான குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் இருவர். ஒருவருக்குப் பெயர் “சுகாதாரத்துறை அமைச்சர்“. இன்னொருவருக்குப் பெயர் “காவல்துறை உயரதிகாரி
தீவிரவாதிகளுக்கு எதிரான ‘துல்லியத் தாக்குதல்’ போல குறிவைத்துச் சுட்டபிறகு, காயம்பட்டவர்களை மருத்துவமனைகளிலும் சென்று அடித்து நொறுக்குகிறது சீருடை அணியாத ஒரு கூட்டம். அதற்குப் பெயர் “காவல்துறை

விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, மக்களுக்குப் போக்குக் காட்டியபடியே, பின் வேறு வழியில்லாமல் செய்தியின் தீவிரத்தைக் குறைத்து வெளியே பரப்புகின்றன சில நிறுவனங்கள். விவாதங்களின் மூலம் அரசுத் தரப்பை நியாயப் படுத்தும் வேலையைத் தெளிவாகச் செய்யவும் தெரியும் அவர்களுக்குப் பெயர் “ஊடகங்கள்

தனது மாநிலத்தின் மக்கள் சுடப்பட்டுச் சாகும்போது “துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது” என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் “மாநில அமைச்சர்
“இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டுச் செத்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் பிச்சையிடுகிறார் ஒருவர். அவருக்குப் பெயர் “முதலமைச்சர்” இவையெல்லாவற்றுக்கும், விட்டுக்கொடுக்காமல் முட்டுக் கொடுக்கும் அற்பப் பதர்களுக்குப் பெயர் “தேச பக்தர்கள்” இதையெல்லாம் மனசாட்சியில்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பிற்குப் பெயர் “தேசம்

ஆனால், தங்களது வாழ்வாதாரத்திற்கும், தங்களது ஊரின் சுற்றுப்புறச் சூழலுக்கும், தங்கள் குடும்பத்தினரின் உடல்நிலைக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களுக்கும், இவ்வளவு ஏன், வாய்வழியே சுடப்பட்டுச் செத்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்குமான பெயர் மட்டும் “Fringe Elements
*******

Samaran Nagan
மண்ணை காக்கும் இந்த மாபெரும் போராட்டத்தில் நாம் வெல்லப்படுவோம் அல்லது கொல்லப்படுவோம், ஏனென்றால் தப்பித்து ஓடுவதற்கு நமக்கு இடமில்லை.
– கென் சரோ விவா
*******

உங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் ! மனுஷ்யபுத்ரன்

4

அரசாங்க லவுட் ஸ்பீக்கர்

அமைதியை நிலைநாட்ட உதவுங்கள்
உங்கள் அமைதிக்காகவே
உங்களைச் சுடுகிறோம்

உங்கள் வளர்ச்சிக்காக
உங்கள் நிலங்களை பிடுங்கியதுபோல
உங்கள் நல்வாழ்விற்காகவே
உங்கள் காற்றை நஞ்சாக்கியதுபோல

உங்கள் முன்னேற்றத்திற்காகவே
உங்கள் நீர் நிலைகளை அழித்ததுபோலவே
உங்கள் வேலைவாய்ப்பிற்காகவே
உங்கள் காடுகளையும் மலைகளயும் அபகரித்ததுபோல

உங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம்
எதிர்ப்பின்றி செத்துபோங்கள்
அமைதியை நிலைநாட்ட உதவுங்கள்

23.5.2018
பிற்பகல் 3.47
மனுஷ்ய புத்திரன்

அரசு வேகமாக செயல்படுகிறது

யார் சொன்னது
இந்த அரசாங்கம் கருணையற்றது என்று
மக்களின் சிரமங்களைக் குறைக்க
அது எவ்வளவோ திட்டமிடுகிறது

தெருவில் ஒருவனைச் சுட்டால்
தெருவில் தடியால் அடித்தால்
அவன் தெருவிலேயே
நீண்ட நேரம் கிடக்க வேண்டியிருக்கிறது

அவனது மனைவி மக்கள் வந்து
தொட்டு தூக்கி
அவசரமாக ஒரு வாடகைக்காரை
பிடிக்க ஓடும்வரை
அவனது ரத்தம் பெருமளவு வீணாகிவிடுகிறது

ஒரு நல்லரசு அதை கருணையுடன்
புரிந்துகொள்கிறது
மனிதர்களை தெருவில் சுடுவதற்குப் பதில்
தெருவில் அடிப்பதற்குப் பதில்
மருத்துவமனை வளாகத்திலேயே
அடிக்கவும் சுடவும்
இன்று உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது

உடனுக்குடன் சுட்டு
உடனுக்குடன் சிகிட்சை
அல்லது
உடனுக்குடன் பிணகூறாய்வு

அரசு வேகமாக செயல்படுகிறது

23.5.2018
மாலை 4.02
மனுஷ்ய புத்திரன்

சீருடை பயங்கரவாதிகள்

யாரும் காணவில்லையா
அதை?

காக்கி சீருடையில்
அரச பயங்கரவாதிகள் புகுந்துவிட்டார்கள்
பொறுக்கிகள் புகுந்துவிட்டார்கள்
ஆதாயக் கொலையாளிகள் புகுந்துவிட்டார்கள்
கார்பரேட் குண்டர்கள் புகுந்துவிட்டார்கள்
காவி பயங்கரவாதிகள் புகுந்துவிட்டார்கள்
சைக்கோ கொலையாளிகள் புகுந்துவிட்டார்கள்
அரசாங்கத்தின் நிழல் ஏஜெண்டுகள் புகுந்துவிட்டார்கள்

உற்றுப்பாருங்கள்
வேட்டையாடும் கண்களின்
ரத்த தாகத்தை
காக்கி சீருடையில்
இனக்கொலையாளிகள் புகுந்திருப்பதை

23.5.2018
மாலை 4.26
மனுஷ்ய புத்திரன்

முற்றுகை

தடை
நடமாடத் தடை
கூட்டம் கூட தடை
ஊர்வலம் போகத்தடை
தொலைகாட்சி அலைவரிசைகளுக்குத் தடை
இணைய சேவைகளுக்கு தடை
உயிரோடிருப்பதற்கு தடை
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை

அந்த நகரம் முற்றுகையிடப்பட்டிருக்கிறது
அந்த நகரம் இப்போது துண்டிக்கப்பட்டிருக்கிறது
அவர்கள் ஒரு பெரிய நாடகத்திற்கான ஒத்திகையை அரங்கேற்றுகிறார்கள்
அது ஒரு பத்ம வியூகம்
மக்கள் அபிமன்யூவைபோல
சூழப்பட்டிருக்கிறார்கள்
அந்த நகரம் இப்போது
ஒரு பலிபீடம் போலிருக்கிறது
பலிகளின் திருவிழாவை நோக்கி
ஆயுதம் தாங்கிய ராணுவம் விரைகிறது
குரூரமான சவ அமைதி
எங்கோ ஒரு தீனமான அழுகுரல்
யாரோ முதல் கல்லை எறிகிறார்கள்
துப்பாக்கிகள் மீண்டும் வெடிக்கின்றன
எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது
சில சடலங்கள் ஒளித்துவைக்கப்படுகின்றன
கொலைகளை கட்டுப்படுத்த முடியாது
எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது அவசியம்

வெறும் கைகளுடன் நிற்கும் மக்களைக்
கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்?
அந்த வெறும் கைகளை
ஏன் இவ்வளவு பதட்டமாய் முறிக்கிறார்கள்?
வெறும் கைகள்தான் வரலாற்றை எழுதுகின்றன
வெறும் கைகளால்தான் சாம்ராஜ்ஜியங்கள் சரிகின்றன

குண்டடிபட்ட ஒரு இளைஞன்
ரத்தவெள்ளத்தில் மல்லாந்து கிடக்கிறான்
ஒரு செத்த மாட்டை இழுத்து வருவதுபோல
அவனை தரதரவென இழுத்துவருகிறார்கள்
தார்ச்சாலையில் படுக்கவைத்த
அந்த இறந்த உடலை லத்தியால் அடிக்கிறார்கள்
” நடிக்காதடா எழுந்திரு” என்று
திரும்பத் திரும்பத் திரும்ப அடிக்கிறார்கள்
இறந்துவிட்ட அந்த மனிதன்
அதைக்கண்டுகொள்ளவே இல்லை
அவர்களின் முட்டாள்தனத்தைக்கண்டு சிரித்தபடி சாவகாசமாக விறைத்த நிலையில்
தார்ச்சாலையில் படுத்திருக்கிறான்

ஒரு சிறுவனை
பத்து சீருடைக்கொலையாளிகள்
ஆவேசமாக தாக்குகிறார்கள்
அந்தச் சிறுவனுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை
அவன் வாழ்நாளெல்லாம் காணப்போகும்
துர்க்கனவொன்று அரங்கேறிக்கொண்டிருக்கிறது
அந்தக் காட்சியை படம் பிடித்துக்கொண்டிருந்த ஒருவன்
” ஒரு சிறுவனை தாக்க
உனக்கு அவமானமாக இல்லையா?”
என்று கேட்கிறான்
கொலையாளிகளுக்கு எந்த அவமானமும் இல்லை
அவர்களுக்குத் தேவை வேட்டையாட உடல்கள்
இதயமற்று
கண்களற்று
வேட்டையாடும்போது
அவர்கள் முகங்களில்
காணச் சகிக்காத
ஒரு ஆபாசம் படர்கிறது

ஆளில்லாத தெருக்களில்
கொலையாளிகள் ஆவேசமாக ஓடுகிறார்கள்
அந்தக் காட்சி அவ்வளவு அபத்தமாக இருக்கிறது
தெருவில் யாரும் இல்லை என்றதும்
ஒரு வீட்டிற்குள் புகுந்து சுடுகிறார்கள்

துப்பாக்கி சுடுகிறவன்
இந்த இரவின் மங்கலான நீலவெளிச்சத்தில்
தன் மனைவியை அணைத்தபடி
அவள் காதில் கிசுகிசுப்பாக கூறுகிறான்
” நேற்று எவ்வளவு அற்புதமான நாளாக இருந்தது
நான் ஒருவன் மட்டும்
எட்டுபேரை சுட்டுக்கொன்றேன்
ஒரு புல்லட்கூட வீணாகவில்லை
என் மேலதிகாரிகள் என்னை இறுக அணைத்துக்கொண்டார்கள்
எத்தனை பேரைக் கொல்கிறேனோ
அத்தனையும் பதக்கங்கள் போன்றவை”
ஒரு தோட்டாவில் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு
சுருண்டுவிழுந்த ஒரு மனிதனை நினைத்தான்
அவனது விறைப்பு நிலை சட்டெனெ உச்சத்திற்கு சென்றது

இந்த நாள் முடிந்துவிட்டதா இல்லையா?
குரூரங்களுக்கு இடைவேளை ஏதும் உண்டா?
இவ்வளவு நீண்ட
நாள்
சமீப நாட்களில் வந்ததே இல்லை

23.5.2018
இரவு 10.34
மனுஷ்ய புத்திரன்

ஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் அரச பயங்கரவாதம் – வீடியோ !

தூத்துக்குடி மாவட்டம் போலீசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்று சென்னையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிவித்த அடுத்த கணமே, தொலைக்காட்சிகளின் நேரலைகள் நிறுத்தப்பட்டன. சாட்சியங்களின்றி போலீசு தமது வெறியாட்டத்தைத் தொடர்ந்த நிலையில், கையிலிருக்கும் கைபேசிகளையே ஆதாரமாகக் கொண்டு, போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து சமூகவலைத்தளங்களில் மக்கள் பலரும் பகிர்ந்தனர். எந்நேரமும் எதுவும் நடக்கலாம்; போலீசின் குண்டுக்குத் தானும் இரையாகநேரிடும் என்ற யதார்த்த சூழலுக்கு மத்தியிலிருந்துதான், இத்தகைய வீடியோக்களை களத்தில் எடுத்தனர் பல இளைஞர்கள். அவற்றையும் தூத்துக்குடி களத்திலிருந்த எமது செய்தியாளர்கள் அனுப்பியிருந்த வீடியோக்களையும் இங்கே தொகுத்தளித்திருக்கிறோம். பாருங்கள், பகிருங்கள்.!

22 மே 2018 நடக்கவிருந்த முற்றுகைப் போராட்டத்தின் முன்னணியாளர்களை மே 21 அன்றே கைது செய்யவும், மிரட்டவும் தொடங்கியது போலீசு. அது குறித்து வழக்கறிஞர் அரிராகவன் பேட்டி !

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக 21-5-2018 அன்று தோழர் கோவன் பாடிய பாடல் – “லட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !! – கோவன் பாடல்”

22 மே, 2018, போலீசின் பல்வேறு தடைகளையும் தகர்த்தெறிந்து கிளம்பியது மக்கள் பேரணி !  ஸ்டெர்லைட்டை மூடு! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! போராட்டக் காட்சிகள் -1

ஸ்டெர்லைட்டை மூடு! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! போராட்டக் காட்சிகள் – 2

ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு ! போராட்டக் காட்சிகள் – 3

தூத்துக்குடியில் மே 22 நடந்த துப்பாக்கிச்சூடு பற்றி தோழர் தங்கபாண்டியனிடம் தோழர் மருதையன் நடத்திய செல்பேசி நேர்காணல்.

22.5.2018 அன்று நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு மக்கள் மீது தூப்பாக்கிச் சூடு நடத்திய போது ”ஒருத்தனாவது சாவணும் ” என போலீசு பேசிய வீடியோ !

தூத்துக்குடி அண்ணாநகரில் 23-05-18 அன்று மதியம், போலீசு வெறிநாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் எனும் 22 வயது இளைஞர் கொல்லப்பட்டார். அரசின் பயங்கரவாதம் தொடர்கிறது!

தூத்துக்குடியில் கடந்த 22.05-2018 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குள் மக்களை நுழைய விடாமல் தடுத்து விரட்டுகிறது போலீசு. அச்சமயத்தில் அங்கு வந்த கமலஹாசனுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அங்கு குழுமியிருக்கும் போலீசு கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசு கும்பல் அவர்கள் மீது தடியடி நடத்தி துரத்தியுள்ளது

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் போலீசை வழிமறித்து நாட்டுப்படகை நிறுத்தும் மக்கள். நாட்டுப் படகுக்கு போலீசு கிரிமினல்கள் தீ வைத்துக் கொளுத்தும் காட்சி !

தூத்துக்குடியில் திரேஸ்புரத்தில் இருபத்திரண்டு வயதான காளியப்பனை போலீசு கொன்ற காட்சி

தூத்துக்குடியில் போலீசு நடத்தி வரும் கலவரத்தில் போலீசிடமிருந்து தப்பி ஓடிய இளைஞர்கள் புகுந்த ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவர்களை அடித்து இழுத்துச் சென்றது போலீசு. அங்கு இருந்த அவ்வீட்டுக் குழந்தைகளை எட்டி உதைத்திருக்கிறது போலீசு கிரிமினல் கும்பல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!
100 இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்களின் கதி என்ன? தூத்துக்குடியில் நடப்பது என்ன? இன்னும் பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்களை விளக்குகிறார், வாஞ்சிநாதன்.

தூத்துக்குடியில் போலீசின் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து புது தில்லி ஜே.என்.யு.வில் மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் இணைந்து 23.05.2018​ அன்று நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய காட்சிப் பதிவு.

தூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது, “ஸ்னைப்பர்” எனும் குறிபார்த்துச் சுடும் போலீசு அடியாட்களை வைத்து சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மூலம் விசாரணை செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பாவேந்தன் மற்றும் பார்வேந்தன் ஆகியோர் 23.05.2018 அன்று பொது நல வழக்கு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் போதே,

  • 1. காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்வர்களை மறு உடற்கூராய்வு (Re-Postmortem) செய்யவும்,
  • 2. காவல் துறையினரால் சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும்,
  • 3. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்ட உதவி வழங்கவும் மற்றும் விசாரணை செய்ய அனுமதி மறுக்கும் காவல்துறை நடவடிக்கைகளை தடை செய்யக்கோரியும்,
  • 4. திரு.வெங்கடேஷ் மற்றும் திரு.மகேந்திரன் ஆகியோர் முறையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும், காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணி செய்ய தடைவிதிக்கக் கோரியும் இடைக்கால மனுதாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கை, 23.05.2018 அன்று அவசர வழக்காக விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி வாதாடினார். அரசுக்கும், தனிநபர்களாக குறிப்பிடப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு வழங்கி, இவ்வழக்கினை 30.05.2018-க்கு ஒத்தி வைத்துள்ளது.

அதுவரையில்,

  • 1.இறந்தவர்களின் உடல்களை பாதுகாத்து வைக்கவும்,
  • 2.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு சட்ட உதவி செய்யவும் மற்றும் ஆய்வு செய்யவும் வழக்கறிஞர்களை எந்த வகையிலும் தடுக்க கூடாதென்றும் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

தகவல்:
ச. பார்த்தசாரதி (மனுதாரர்கள் வழக்கறிஞர்)
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
சென்னை.

(கடைசி தகவல்: எனினும் இந்த உத்திரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தின் சாட்சியங்களை அழிக்க இந்த ஜனநாயக உரிமைகள மறுப்பது அரசுக்கு அவசரத் தேவையாக இருக்கிறது.)

வழக்கின் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு அளித்த பேட்டி

கலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க ? கருத்துப்படம்

1

எஸ்.பி.- யை மாத்துனா எங்களுக்கென்ன?
கலெக்டர தூக்குனா எங்களுக்கென்ன ?
ஸ்டெர்லைட்டை தூக்கும் வரை போராட்டம் ஓயாது !

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

 

போலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்!

1

மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம்
எண் :1, அண்ணா நகர், சிவாஜிநகர் வழி, தஞ்சை -1

தேதி: 23.05.2018

பத்திரிக்கை செய்தி

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத பச்சைப் படுகொலையை  அரங்கேற்றியிருக்கிறது எடப்பாடி அரசு. இரத்தவெறி அடங்காத காவல்துறை இன்றும் துப்பாக்கி சூட்டை நடத்தி மேலும் ஒருவரை கொன்று வெறியாட்டம் போட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் உயிரோடு விளையாடி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி  நடந்த போராட்டங்கள் எதற்கும் செவிசாய்க்காமல் நாசகார ஆலையின் விரிவாக்கத்திற்கு துணைபோவதால் மக்கள் வேறு வழியின்றி போராட்டத்தைத் துவங்கினர்.

22-ம் தேதி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி ஆலையை மூட வலியுறுத்துவது என்பது மட்டுமே மக்களின் திட்டம். ஆலைக்கு ஆதரவான எல்லா நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்தது. போராட்டத்தை பிளவு படுத்தும் சதியிலும் இறங்கியது. 144 தடை உத்தரவு போட்டு முடக்க நினைத்த எண்ணம் ஈடேறவில்லை. வாழ்வா சாவா போராட்டத்தில் தூத்துக்குடியே திரண்டது. 22-ம் தேதி பகல் 12 மணிவரை அமைதியாக நடந்த ஊர்வலத்தை தடியடியால் கலைக்க முடியாத நிலையில் காட்டுமிராண்டித் தனமாக சுட்டுத்தள்ளியது.

மாவட்ட ஆட்சியர் தலைமறைவாகி மொத்த அதிகாரமும் கொலைகாரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எடப்பாடி அரசு திட்டமிட்டு நடத்திய பச்சைப் படுகொலை இது. அமைதியாகப் போராடிய மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவிவிட்டு மக்கள் வன்முறையில் இறங்கியதால்தான் தவிர்க்க முடியாமல் துப்பாக்கி சூடு என மாய்மாலம் செய்கிறது. இந்த படுகொலையை மக்கள் அதிகாரம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

எல்லா  விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு ராஜபக்சேவின் இனவெறி ராணுவம் போல் செயல்பட்டுள்ளது காவல்துறை. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் இவற்றை விட  ஸ்டெர்லைட் முதலாளியின் லாபம்தான் முக்கியம் எனச் செயல்படும் எடப்பாடி அரசு முற்றிலும் மக்கள் விரோத அரசாக சீர்குலைந்துவிட்டது. சற்றும் குற்ற உணர்ச்சியின்றி எகத்தாளமாக படுகொலையை நியாயப்படுத்துகின்றனர் அமைச்சர்கள்.

நியூட்ரினோ உள்ளிட்டு தமிழகத்தை நாசமாக்கும் மோடி அரசின் திட்டங்களை பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்று தமிழக மக்களுக்கு துரோகமிழைகிறது எடப்பாடி அரசு. அதிமுக பாஜக கூட்டணியின் துரோகத்தை முறியடிக்காமல் வாழ்க்கை இல்லை. காவல்துறைதான் தமிழக மக்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். எடப்பாடி அரசின் போலீஸ் ஆட்சிக்கு முடிவு கட்டியே தீரவேண்டும். அனைத்து மக்களும் ஓரணியில் திரளவேண்டும்.

  • எடப்பாடி அரசு உடனே ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும்!
  • படுகொலை நிகழ்த்திய டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும்.
  • மக்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் கைவிடப்பட்டு, சிறையிலிருப்போர் விடுதலை செய்யப்படவேண்டும்
  • பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்
  • போலீஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இப்படிக்கு

க.காளியப்பன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!

0

லையில் குண்டடி பட்டு மூளைச்சிதைவு அடைந்த நிலையில் மருத்துவ மனையில் இருந்த மக்கள் அதிகாரத்தின் தோழர் ஜெயராமன், சில மணித்துளிகள் முன் மரணமடைந்துள்ளார். சுமார் 100 இளைஞர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்திருந்த போலீசுக்கு எதிராக வழக்கு தொடுத்து அவர்களை கண்டு பிடித்திருக்கிறார்கள் தூத்துக்குடி வழக்கறிஞர்கள். இன்னும் பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்களை விளக்குகிறார், வாஞ்சிநாதன்.

தூத்துக்குடியில் நடந்தது என்ன ? தோழர் தங்கபாண்டியன் நேர்காணல் !

0

தூத்துக்குடியில் நடந்தது என்ன ? தங்கபாண்டியனிடம் தோழர் மருதையன் நடத்திய செல்பேசி நேர்காணல்.

நேற்று (22-05-2018) தூத்துக்குடியில் நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதலான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் மரணமடைந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மக்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார், களத்தில் இருந்த தோழர் தங்கபாண்டியன்.