ஊர் உலகில் பிரச்சினை எதுவாக இருந்தாலும், தங்க நகை விளம்பரங்களுக்கு மட்டும் எப்போதும் குறைவில்லை! தங்கம் விற்று காசாக்குவதை இவர்கள் ஏதோ மாபெரும் மனிதாபிமான நடவடிக்கையாக ஏமாற்றுவதை பகடி செய்கிறது இந்த ‘வெளம்பரப் படம்’!
ஊர் உலகில் பிரச்சினை எதுவாக இருந்தாலும், தங்க நகை விளம்பரங்களுக்கு மட்டும் எப்போதும் குறைவில்லை! தங்கம் விற்று காசாக்குவதை இவர்கள் ஏதோ மாபெரும் மனிதாபிமான நடவடிக்கையாக ஏமாற்றுவதை பகடி செய்கிறது இந்த ‘வெளம்பரப் படம்’!
ஹம் ஆப் கே ஹை கோன்? – இது 1994-இல் வெளிவந்த ஒரு இந்தித் திரைப்படத்தின் தலைப்பு. இதன் பொருள் – உனக்கு நான் என்ன உறவு முறை வேண்டும்?
நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு? நமோவுக்கும் அம்பானிக்கும் என்ன உறவு? அம்பானிக்கும் நிமோவுக்கும் என்ன உறவு? நிமோவுக்கும் அதானிக்கும் என்ன உறவு?
பஞ்சாப் நேஷனல் வங்கியை ஆட்டையைப் போட்ட அக்யூஸ்டு நிரவ் மோடியின் குருநாதரும், அவரது மாமாவுமான மெகுல் சோக்ஸியை, மெகுல் அண்ணாச்சி என்று பாசத்தோடு அழைக்கிறார் பிரதமர்.
நிரவ் மோடியின் எல்லாக் கம்பெனிகளுக்கும் நிதி ஆலோசகர், அதாவது வங்கிக் கொள்ளைக்குத் திட்டம் போட்டுக் கொடுப்பவர், முகேஷ் அம்பானியின் சித்தப்பா நாதுபாய் அம்பானியின் மகன் விபுல் அம்பானி.
நிரவ் மோடியின் தம்பி நீஷல் மோடிக்குத்தான், தன்னுடைய தங்கை மகள் இஷிதாவைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. அம்பானியின் ஆன்டிலா அரண்மனையில்தான் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியை மணக்கப்போகும் பெண் ஸ்லோகா மேத்தா. அவளுடைய தந்தை ரஸ்ஸல் மேத்தா பெரிய வைர வியாபாரி. ஸ்லோகாவின் அம்மா மோனா மேத்தா நிரவ் மோடிக்கு நெருங்கிய சொந்தம்.
நிரவ் மோடியின் 3 பிள்ளைகளும் சென்ற ஆண்டு வரை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் படித்தவர்கள். இப்போது எல்லோரும் இருப்பது அமெரிக்காவில்.
அடுத்தபடியாக அதானி.
3,696 கோடி வங்கிப்பணத்தைச் சுருட்டிய ரோட்டோமேக் பேனா கம்பெனி அதிபர் விக்ரம் கோத்தாரியின் மகள் நம்ரதாவை மணந்திருப்பவர், கவுதம் அதானியின் மருமகன் பிரணவ் அதானி.
கவுதம் அதானியின் அண்ணன் வினோத் சாந்திலால் அதானியின் மகள் கிருபாவை மணந்திருப்பவர், ஜதின் மேத்தா என்ற வைர வியாபாரியின் மகன் சூரஜ். ஜதின் மேத்தா 7,000 கோடி ரூபாய் வங்கிக்கடனை ஏமாற்றி இந்தியாவிலிருந்து தப்பி, செயின்ட் கிட்ஸ் தீவு என்ற வரியில்லா சொர்க்கத்தின் குடிமகன் ஆகிவிட்டவர்.

நிரவ் மோடி – அம்பானி – அதானிகளுக்கு இடையிலான உறவு மண உறவு. டாவோசுக்கு வந்த பிரதமர் மோடியுடன் குரூப் போட்டோவில் உட்கார்ந்திருக்கிறார் நிரவ் மோடி. இது என்ன உறவு என்றுதான் விளங்கவில்லை.
– தொரட்டி
(புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018)
பிரதமர் மோடி தற்போது லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் நேற்றைய (18.04.2018) பேட்டி அனைத்து ஆங்கில செய்தி சேனல்களிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. #GoBackModi
சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை சந்திக்கத் துப்பில்லாத சூரர் லண்டனில் முன்தயாரிக்கப்பட்ட திரைக்கதையில் டைமிங்கில் பதில்களை அள்ளிவீச அவருக்கு அப்ளாஸ்கள் குவிகின்றன.
ஆனால் கடந்த 12-ஆம் தேதி ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலாய் “காவிரியைத் தடுக்கும் தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப்போ !” என முழங்கியது. இதனை இருட்டடிப்பு செய்தன வட இந்திய ஊடகங்கள்.
உலகளவில் டிவிட்டரில் பலரால் பின்தொடரப்படும் நபர்களில் ஒருவர், சமூகவலைதளங்கள் மூலம் எப்போதும் இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பவர் என்று மார்தட்டிய மோடியின் 56 இன்ச் பலூனை வெடிக்கச்செய்தது “#GoBackModi” எனும் குண்டூசி.
திருவிடந்தையில் நடந்த மொத்த நிகழ்ச்சியிலும் முகத்தில் ஈஆடாமல் சவக்களையுடன் தான் அமர்ந்திருந்தார் மோடி. மெய்நிகர் உலகில் மட்டுமல்ல மெய்யுலகிலும் அவருக்கு பாடம் கற்பித்தது தமிழகம். டெல்லியின் அதிகாரம் இங்கு செல்லுபடியாகாது என்பதை நிரூபித்தன தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறோம்.
”காவிரியைத் தடுக்கும் தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப்போ !”
– தமிழகம் தழுவிய அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள்!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சென்னையில்…

சென்னை கிண்டி பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நடத்திய மோடி எதிர்ப்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தது போலீசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
விழுப்புரத்தில்…
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கம்பத்தில்…
தேனி மாவட்டம் கம்பம் பகுதில் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோடியின் உருவப்படம் எரிக்கப்பட்டது மேலும் மோடியின் ‘திரு உருவத்திற்கு’ செருப்படி பூஜையும் செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கோவையில்…
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: மக்கள் அதிகாரம்.
**********
குடந்தை மாணவர்கள் போராட்டம் !
“காவிரியில் அநீதி ! துரோகி மோடியே வெளியேறு !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 12.04.2018 அன்று குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பு.மா.இ.மு சார்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பலரும் ஆர்வமாக தாங்களாகவே வந்து மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து கொண்டனர். இறுதியாக கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீனவர்களை கடற்கரையை விட்டு வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 2011-ஆம் ஆண்டு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தினை கொண்டு வந்தது மத்திய அரசு. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்திற்கான வரைவு அறிக்கையை, சென்னையிலுள்ள நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) தயாரித்து உள்ளது. இந்த வரைவு அறிக்கை, பொது மக்கள் பார்வைக்காக, சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில், பிப்-9 இல் வெளியிடப்பட்டது. இதன்மீது பொதுமக்களின் கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும் 45 தினங்களுக்குள் தெரிவிக்கக் கோரியிருந்தது. இந்த கெடுவும் ஏப்.06-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
அரசின் அறிக்கையும், கருத்துக் கேட்பு அறிவிப்பும் ஆங்கிலத்தில் இருந்ததோடு, இணையதளத்திலும் ஆங்கில செய்திதாள்களில் மட்டுமே வெளியிடப்பட்டது. இதன்மூலம், அரசின் நோக்கம் அம்மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்பதல்ல; சம்பிரதாயமான சடங்கு ஒன்றை முடித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
வனப் பாதுகாப்பு என்ற பெயரில், காடு மலைகளிலிருந்து பழங்குடி மக்களை விரட்டியடித்ததைப்போல… விவசாயத்திலிருந்து விவசாயிகள் படிப்படியாக வெளியேற்றப்படுவதைப்போல போல… கடற்கரையிலிருந்து மீனவர்களை விரட்டியடிப்பதற்கான திட்டம்தான் இது என்பதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மீனவர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகர் அருகேயுள்ள ஆல்காட், ஆரூர் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கருப்புக்கொடி நிரந்தரமாகப் பறந்துகொண்டிருக்கிறது. கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

ராதாகிருஷ்ணன் மற்றும் சந்திரசேகர், மீனவ சங்க பிரதிநிதிகள்.
கடற்கரை மேலாண்மை வாரியம் என்ன சொல்லுது? கடற்கரை மீனவனுக்கு சொந்தம் இல்லை. கடல் தண்ணீர் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து கி.மீ வரை கடலுக்கு சொந்தம். அங்கு அரசு என்னவேணாலும் செய்யலாமாம். கடலும் கடற்கரை பகுதியும் மீனவனுக்கு சொந்தம். மீனவனின் வாழ்வாதாரமே கடலை நம்பித்தான்.
சுரேஷ் .
எங்க குப்பத்துல 1500 குடும்பம் இருக்கிறது. சில குடும்பங்கள் இந்த தொழிலை விட்டு வேறு பொழப்பை தேடி போய் விட்டார்கள். நாங்க காலையில ஆறு மணிக்கு கடலுக்கு போனா சிலநாள் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்துடுவோம். இல்லனா மறுநாள் காலையிலதான். சராசரியா ஒரு நாளைக்கு 35 கி.மீ. தூரம் வரைக்கும் போவோம். சீசன் என்றால் 70 கி.மீ. போவோம். நாங்க கூலி தொழிலாளி. எங்ககிட்ட போட் இல்லை. பைபர் போட், ஸ்டீமர் போட் இரண்டு வகை இங்க இருக்கு. ஒரு பைபர் போட் வாங்கி சொந்தமா தொழில் செய்ய நாலு லட்சம் செலவாகும். ஒன்னரை லட்சம் போட், ஒன்னரை லட்சம் வலை, நாற்பத்தி ஏழாயிரம் இஞ்சின் .
இந்த ஒரு போட் இருந்தா ஐந்து குடும்பம் பிழைக்கும். ஒருமுறை கடலுக்கு போனா 35 கிலோ மீட்டருக்கு டீசல் செலவு 500 ஆகும்; 100 ரூபா மீனுக்கு இறை வாங்குவோம். எங்களுக்கு ஆயிரம் ரூபா மீன் கிடைத்தால் கூட செலவு போயி, கூலி ஒருத்தருக்கு 75 ரூபா கிடைக்கிறதே கஷ்டம்.
நிர்மலா.
வீட்டு பெண்கள் கூடையில் மீன் வாங்கி தெருவில் விற்று பிழைக்கிறோம். ஆயிரம் ரூபா சரக்கு எடுத்து போனா முன்னூறு ரூபா கூலியா கிடைகிறது கஷ்டம். இதுல புள்ளைங்களோட செலவயும் பாக்கணும். சொந்தம் பந்தம்னு யாராவது வந்தா கவனிக்கனும்.
கலா
ஆண்டுக்கு நாற்பத்தி ஐந்து நாள் மீன்பிடி தடைக்காலம் வரும்போது அரசாங்கம் கொடுக்கிற பணம் நான்காயிரம் ரூபா. அதுல இருந்தே எங்களோட ஒருநாள் வருமானம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு எண்பது ரூபா கூட இல்ல எங்க வருமானம்.
மதுமிதா,அனுசியா.
அடையாறு அவ்வை இல்லத்தில் படிக்கும் மீனவக் குழந்தைகள். வக்கீலாக வேண்டுமென்று எதிர்கால ஆசை. “பிள்ளைங்க எல்லாம் கவர்மெண்டு பள்ளிக்கூடத்துல தான் படிக்க வைக்கிறோம். இங்க எல்லோரும் அதிகபட்சம் பத்தாவது, பன்னிரெண்டாவது தான் படிச்சிருக்காங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியல” என்கிறார்கள் பெற்றோர்கள்.

எங்க புள்ளைங்க பதினெட்டு வயசுல கடல் வேலைக்கு வந்துடுவாங்க. ஒரு நாளைக்கு எங்களுக்கு 500 ரூபா கெடச்சா எங்க பிள்ளைங்களை எங்க விருப்பம் போல படிக்க வைப்போம். பெரிய படிப்பு படிக்க வச்சி நல்ல வாழ்க்கை கொடுக்கலாம். இப்ப மீனவ பசங்க தானேன்னு இளக்காரமா பாக்குறாங்க.
கந்தன், குழந்தை மிதுன்.
கடலுக்கும் போவேன், அங்கு வருமானம் இல்லனா பீச்சில பஜ்ஜி கடைபோடுவேன். இன்னா பண்றது பொழைக்கனும்ல. அதுக்கும் இப்ப வேட்டு வச்சிட்டானுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு எப்பபாரு 144 தடையுத்தரவு. இப்ப காவிரி போராட்டத்த வச்சி பீச்ச சுத்தமா மூடிட்டான்.
எங்களால் மீனவ தொழிலை விட்டு போக முடியாது. எங்க உயிர் போனாலும் அது இந்த கடல்ல தான் போகணும்.! – என்கிறார்கள், பகுதி வாழ் மீனவ மக்கள்!
– நேர்காணல், படங்கள்: வினவு புகைப்படச் செய்தியாளர்.

பத்திரிகைச் செய்தி
நாள் : 14.04.2018
14.04.18 முதல் வரை 29.04.2018 வரை கல்லணையில் தொடங்கி பூம்புகாரில் முடியும் வண்ணம் காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாங்கள் நடத்த இருந்த பிரச்சார நடைபயனத்துக்கு ஒருநாள் முன்னதாக 13.04.2018 அன்று இறுதி நேரத்தில் காவல் துறை தடை விதித்துள்ளது.

அதேபோல சென்ற மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்திய தபால் நிலைய முற்றுகை போராட்டத்தின்போது பாடிய ஒரு பாடல் பிரதமரையும் முதல்வரையும் தாக்குவதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டி நேற்று ம.க.இ.க.வின் பாடகர் கோவனை திருச்சி நகர காவல் துறை மிருகத்தனமான முறையில் கைது செய்து இழுத்துச் சென்றது.
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் விட மறுக்கிறது, மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அரசு மறுக்கிறது என்று சொன்னால் எடப்பாடி அரசின் அடக்குமுறை இவற்றை விட கொடியதாக இருக்கிறது. நாம் பிறந்து வளர்ந்த காவிரிக் கரை ஓரமாக நடந்து செல்வதே குற்றம் என்று அதற்கும் தடை விதிக்கின்றது இந்த அரசு.

காவிரி உரிமைக்கான தமிழக மக்களுடைய போராட்டங்களை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுகின்றது இந்த பினாமி அரசு. குறிப்பாக மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமே எழுந்து நின்று நடத்திய கறுப்புக் கொடி போராட்டத்திற்குப் பின் மோடி, எடப்பாடி அரசின் அடக்குமுறை வெறி அதிகரித்துள்ளது.
எமது அமைப்பினர் மீது டெல்டா மாவட்டங்களில் பல வழக்குகள் இருப்பதால் நடை பயணத்துக்கு தடை விதிப்பதாக தனது தடை உத்தரவில் காவல் துறை குறிப்பிட்டுள்ளது. அவை எல்லாம் காவிரி உரிமைக்கான போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளே அன்றி கொலை வழக்குகளோ பாலியல் வல்லுறவு வழக்குகளோ அல்லது ஊழல் வழக்குகளோ அல்ல. மேற்படி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் நடத்தப்படும் மத்திய மாநில அரசுகள் எங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பது நகைப்புக்கு உரியது.

இந்த சட்ட விரோத உத்தரவை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம். எங்களுடைய காவிரி மண்ணில் நாங்கள் நடை பயணம் செல்வதை யாரும் தடுக்க முடியாது. தடைகளை மீறி மீண்டும் நடைபயணம் செல்வோம்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்க ஆட்சியில் கூட நடை பயணத்துக்கு தடை விதிக்கும் இத்தகைய அக்கிரமம் நடந்ததில்லை. இதனை முறியடிப்போம். கோவன் தொடர்ந்து பாடுவார். தொடர்ந்து போராடுவோம் – காவிரி உரிமையை மீட்கும் வரை.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றோர்:
வழக்கறிஞர் சி.ராஜூ, மக்கள் அதிகாரம்.
தோழர் கோவன், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தோழர் காளியப்பன், மக்கள் அதிகாரம்.
தோழர் வெற்றிவேல் செழியன், மக்கள் அதிகாரம்.
தோழர் கற்பகவிநாயகம், மக்கள் அதிகாரம்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு, தொடர்புக்கு – 99623 66321.
தோழர் கோவனை கைது செய்ய போலீசு அத்துமீறல் ! மக்கள் மீது அதிரடி போலீசு தாக்குதல் !
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு பாடகரான தோழர் கோவன் அவர்களை கடந்த 13.04.2018 அன்று காலை கைது செய்வதற்காக வந்துள்ளோம் எனக் கூறிக்கொண்டு, சிலர் அவர் வசிக்கும் திருச்சி அரவானூர் பகுதிக்கு TN – 15 G – 1063 எனும் வேனில் வந்தனர்.

வேனில் வந்த 15 பேரும் தங்களை போலீசு என கூறிக்கொண்டாலும் அதற்கான எந்த அடையாளத்தையும் காண்பிக்காமல் ஒரு கடத்தல் கும்பலைப் போல் செயல்பட்டனர். இந்த ஆள்கடத்தல் நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவன் அவர்களின் துணைவியார் கோவன் அவர்களை காக்க முயற்சி செய்துள்ளார். அவரை கீழே தள்ளிவிட்டது அந்த கும்பல்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் திரண்டு வருவதைப்பார்த்த அந்த கும்பல் ஓடிவிட்டது. அதன்பின்னர் காவல்துறை வாகனத்தில் திருச்சி போலீசார் வந்துள்ளனர். அவர்கள் தோழர் கோவன் அவர்களை கைது செய்வதாக அறிவித்தனர். ஆனால் ஒருவரை கைது செய்யும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் போலீசு கோவன் அவர்களை பலவந்தப்படுத்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவன் அவர்களை காக்கும் பொருட்டு தோழர் கோவன் வீட்டினுல் போலீசு நுழையாதவாறு தடுப்பரணாக நின்றனர். இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அங்கு பத்திரிக்கையாளர்கள் குவியத்தொடங்கினர். தங்களின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அம்பலப்பட்டுபோய்விடும் என பதறிய போலீசு அதிரடிப் படைகளைக் கொண்டு அரணாக நின்ற பொதுமக்களைத் தாக்கத் தொடங்கியது.
மேலும் தோழர் கோவன் அவரது வீட்டுக் கதைவை உடைத்து அராஜகமாக கைது செய்தது. கைது செய்து அவரை அழைத்து (இழுத்து) சென்றபோதும் அவரை பத்திரிகையாளர்களிடம் பேசமுடியாதவாறு தடுத்தது போலீசு.
ஏற்கனவே ஜெயா உயிருடன் இருக்கும் போது டாஸ்மாக் பாடலுக்காக இதே போல சட்டவிரோதமாக கைது செய்து வழக்கு போட்டனர். தற்போதும் பாஜக ஆணையின் பேரில் தமிழக அரசும், போலீசும் தோழர் கோவனை கைது செய்து அவரது பாடலை முடக்கப் பார்த்தனர்.
ஆனால் இந்த தடைகளைத் தாண்டி வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் தோழர் கோவனை அன்று மாலையே பிணையில் விடுவித்தது நீதிமன்றம்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தோழர் கோவன் தனது பேட்டியில் “ஏற்கனவே டாஸ்மாக் பாடலுக்காக என்னை கைது செய்து என் மனவலிமையை உடைக்கப் பார்த்தார்கள். அதே போல இப்போதும் செயல்பட்டுள்ளார்கள், உண்மையில் கைது நடவடிக்கைகளுக்கு நான் அஞ்சவில்லை. அதே போல் ஆட்சியாளர்களை விமரிசிப்பதை எனது நோக்கம், திட்டுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஒரு மனிதனாக எமது மக்களை அழிக்க நினைக்கும் அரசின் செயல்பாடுகளைக் கண்டு அமைதியாக இருக்கமுடியாது. அவர்களின் மொழியே எங்களது பாடல்கள்; அவர்களின் சொற்களை நாங்கள் பாடல்களில் சொல்கிறோம்.” எனக் கூறினார்.
துருக்கியின் மக்கள் கவிஞன் நசீம் இக்மத் அவர்கள் “என்று கவிதை எழுதத் தொடங்கினேனோ அன்றிலிருந்தே – கலை, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அது நல்ல எதிர்காலம் படைக்க அவர்களை அறைகூவி அழைக்கவேண்டும் என்றே விரும்பினேன்; கலையை மக்களின் துன்பதுயரம், அவர்களின் கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி, வேதனைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் – கருவியாக்கிவிட வேண்டும்.” என்று கூறியிருந்தார். அப்படி செயல்படும் ம.க.இ.க கலைக்குழுவை முடக்கவேண்டும் என்பதே அரசின் முடிவு. ஆனால் அவர்கள் இதற்கு அஞ்சப் போவதில்லை.

மக்கள் பாடகர் கோவன் கைது – தாக்குதல் !
கருத்துரிமைக்கெதிரான அராஜகத்தை முறியடிப்போம் !
பத்திரிகைச் செய்தி
நாள் : 13/4/2018
மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், கலைக்குழு பொறுப்பாளருமான தோழர் கோவனை திருச்சி காவல்துறை கைது செய்துள்ளது. சீருடை அணியாத காவல் துறை எந்த நாகரீக, சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாது அவரது குடும்பத்தினரையும் தாக்கி, வீட்டுக்கதவை உடைத்து கைது செய்துள்ளது. பாடல் மூலம் வன்முறையை தூண்டியதாக 153A,504,505 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அன்றாடம் சிறுபான்மை மக்களின் மீதும் பெரும்பான்மை மக்களின் மீதும் அவதூறுகளை பரப்புவதையே வேலையாகக்கொண்ட காவி பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசு , திருச்சியிலேயே தங்கி தொடர்ந்து ம.க.இ.க , மக்கள் அதிகாரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வரும் தோழர் கோவனை ஏதோ பயங்கரவாதியைப் பிடிப்பது போல அநாகரீகமாகவும் அராஜகமாகவும் கைது செய்துள்ளது
ஆர்.எஸ்.எஸ்-ன் அடியாளாகவே மாறிவிட்ட தமிழக காவல்துறையின் இந்த அராஜகத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக காவல்துறை கருத்துரிமையைப் பறித்து ஆட்டம் போடுகிறது. ஆர்.எஸ்.எஸ் ரத யாத்திரிக்கைக்கு முழு பாதுகாப்பளித்து எதிர்ப்பு தெரிவித்தோரை கைது செய்து ஒடுக்கியது மட்டுமின்றி 144 தடையுத்திரவே போட்டது.
பாஜக மோடி அரசின் துரோகத்தால் கொதித்துப்போயுள்ள தமிழக மக்களின் போராட்டத்தை ஒடுக்கவும், காவிரிக்கான உரிமைப்போராட்டத்தை நசுக்கவும் அடிமை எடப்பாடி அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை ஒரு போதும் வெற்றிபெறாது. தற்போது தோழர் கோவன் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அவரது விடுதலைக்குத் துணை நின்ற வழக்குரைஞர்கள். ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றியையைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கோவன் மீதான தாக்குதல் என்பது கருத்துரிமை மீதான பாசிஸ்டுகளின் தாக்குதல் எனவே மக்களை நேசிக்கின்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள்
தோழர். காளியப்பன்
மாநிலப் பொருளாளர்
மக்கள் அதிகாரம்
*****
தோழர் கோவன் கைதை கண்டித்து குடந்தையில் ஆர்ப்பாட்டம் !

மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, 13.04.2018 மதியம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் குடந்தை மீன் மார்க்கெட் பகுதியில் வழக்கறிஞர் தோழர் ஜெயபாண்டியன் (மக்கள் அதிகாரம்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை. தொடர்புக்கு : 97892 61624
‘’காவிரியை மீட்க கிராமங்கள் தோறும் கிளர்ந்தெழுவோம்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சிறுநகர், சிறுகலத்தூர், கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர், அப்பகுதி மக்களை அணிதிரட்டி கடந்த 8.04.18 அன்று, சித்தாமுர் நான்கு வழிசாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதற்கு முன்னதாக, மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி வழியே பேரணியாகச் சென்றனர். பேரணியில், உணர்வுப் பூர்வமாகப் பங்கேற்ற பெண்களும் குழந்தைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ‘’தமிழகத்தை மீண்டும் மெரினாவாக்குவோம்’’ என்றும் சூளுரைத்தனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
சிறுநகர், தொடர்புக்கு : 94451 12675.
காவிரி : தன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் !
“காவிரியை தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு !” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 09.04.2018 அன்று காலை திருச்சி லால்குடியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு – 94454 75157, 95979 12822.
காலத்திற்கேற்ப வினவு தளத்தை புதுப்பிப்பது குறித்து அவ்வப்போது ஆலோசிப்போம். பிறகு அப்படி மாறினாலும் தொடர்வதற்கு நம்மிடம் பலம் இல்லையே என மறப்போம். இந்த முரண்பாடு இப்போது என்றில்லை, வினவு துவக்கம் முதலே இருக்கிறது. சமூக மாற்றத்திற்கான அனைத்து முயற்சிகளிலும் இந்த முரண்பாடு இல்லையென்றால்தான் அதிசயம். மோடி, டிரம்பின் டிஜிட்டல் படையெடுப்பை எதிர்த்து சண்டையிடுவதில் நாம் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். அதே நேரம் நம்மிடம் கருவிகளும், ஆள் பலமும் போதுமானதாக இருப்பதில்லை.
ஆரம்ப காலத்தில் இருந்து வினவு தளத்தினை வளர்த்தெடுக்க நண்பர்கள், வாசகர்கள் பலர் ஆலோசனைகளை தெரிவித்திருக்கின்றனர். அவற்றில் பல நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு காரணம், முன்னர் கூறியதுதான். அதே நேரம் அந்த முரண்பாட்டை களைவதற்கான முயற்சிகள் இல்லை என்றால் இன்று வரை வினவு நீடித்திருக்காது. இப்படியும் சொல்லலாம். போராட்டத்திற்கான கருவிகள் குறைபாடுகளோடு இருந்தாலும், போராடும் உணர்ச்சியை நாம் இழந்து விடவில்லை! இழந்து விடக்கூடாது!
வினவு அன்றும் இன்றும்
அமெரிக்காவில் சப் பிரைம் நெருக்கடி துவங்கிய 2008-ம் ஆண்டு, வினவு தளத்தின் துவக்கமும் கூட. அன்று சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் இல்லை. இணைய பழக்கத்தின் ஆரம்ப காலமது. பிளாக் எனப்படும் வலைப்பூக்கள் பலருக்கும் எழுதும் பயிற்சியை அளித்து வந்தன. தமிழகத்தில் கருணாநிதி அரசு, ஈழத்தில் போராட்டம் என அந்த ஆண்டுகள் கடந்து கொண்டிருந்தன.
“ஐ.டி. நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா” என்றொரு கட்டுரை அப்போது வெளியிட்டோம். ஐ.டி. துறையில் சங்கம் எதற்கு என்று நிறைய எதிர்வினைகள் வந்தன. பத்தாண்டுகளில் ஐ.டி. துறையில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் போராட்டம் என்பது தவிர்க்க வியலாத ஒன்றாக மாறிவிட்டது.
இடைக்காலத்தில் மோடி அரசு வந்த பிறகு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் கூட வேறு ஒரு திசையில் அடியெடுத்து வைத்திருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளும், சமூகத்தை நிர்வகிக்கும் அரசின் இயலாமையும் அதிகரித்து வருகின்றன. போராட்டமோ, எதிர்ப்போ இல்லாத நாளோ, செய்தியோ இல்லை.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் முகமாக நேற்று (10.04.2018) ஐ.பி.எல். கிரிக்கெட் பந்தயத்தை எதிர்த்து சேப்பாக்கம் மைதானத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர். உள்ளேயும் ஆயிரக்கணக்கானோர் டிக்கெட்டுடன் கிரிக்கெட் விறுவிறுப்பை பார்க்கச் சென்றனர். இடையில் ஆயிரக்கணக்கான போலிசார் போராட்டக் காரர்களை அடித்தும், கலைத்தும் விரட்டினர். ஊடகங்களோ இரண்டு ‘விறுவிறுப்பையும்’ அதிரடிச் செய்திகளாக காட்டிக் கொண்டிருந்தன.
இப்படித்தான் நமது சமூகம் பிரிந்திருக்கிறது. காவிக்கறையின் ஏவலில் கறை வேட்டிகள் இரண்டு தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தாலும் சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விதிமுறைப்படி வேட்டி கட்டுவோருக்கு அனுமதி இல்லை. வேட்டி தமிழ் மரபுதான். ஐல்லிக்கட்டும் தமிழ் மரபுதான். பார்ப்பனியத்தின் பிடியில் இருந்து காளைகளை விடுவித்த தமிழ் மக்கள் தங்களை விடுவிப்பதற்கு இன்னமும் போராடி வருகிறார்கள்.
ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்தினால் காவிரி நீர் வந்து விடுமா என்கிறார்கள்? டிக்கெட்டுகளை பல நூறு ரூபாய்களுக்கு வாங்கிய ரசிகர்கள். பதவி விலகினால் காவிரி வந்து விடுமா என்று பொன்.இராதாகிருஷ்ணனும் கேட்டார். அ.தி.மு.க. அமைச்சர்களும் கேட்டனர். எப்போதுதான் காவிரி வரும் என்று கேட்டு சலித்த மக்கள் இப்போது இல்லை என்றால் எப்போதுமில்லை என்று போராடுகிறார்கள்.
ஆம். இப்படித்தான் போராட்டமும், போராட வேண்டாமென்பதுமாக நம் சமூகம் பிரிந்திருக்கிறது. ஆகையால் சமூகவலைத்தளங்கள் வளர்ந்த இன்றைய நிலையில் கூட பெரும்பான்மை மக்கள் சமூக மாற்றத்திற்கான அரசியல் வெளி குறித்து அறியாத நிலையிலேயே முடக்கப் பட்டிருக்கிறார்கள்.
மெரினா ஜல்லிக்கட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர், ஐ.பி.எல். போட்டியை நிறுத்துவதில் என்ன பயன் என்று ஆர்.ஜே.பாலாஜி வீடியோவில் பேசுவதை ஏற்கலாம். வாட்சப் வதந்திகளைப் பார்த்து இலுமினாட்டி சதிகளை நம்பலாம். மோடியைத் திட்டி முழக்கமிட்டுவிட்டு பிக்பாசில் நியாயம் பேசலாம். இதன் நீட்சியில் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்தும் முதலாளித்துவம் நம்மையும் கட்டிப் போடுகிறது. தேவைக்கேற்ப ஆட்டுவிக்கிறது.
முற்போக்கு கருத்துக்கள் அதிகரித்து வருவதான இன்றைய தோற்றத்தை ஊடுருவிப் பார்த்தால் அது பெரிதும் கலங்கலாக இருக்கும். முக்கியமாக கட்சி, அரசியல், மார்க்சியம் போன்றவற்றை மறுத்து தனிநபர் நீதிபோதனைகளை ஊக்குவிக்கும் ஊடகமாக சமூகவலைத்தளங்கள் மாற்றப்பட்டுவிட்டது. அல்லது அந்த நோக்கத்திற்குத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இடத்தில்தான் வினவு தேவைப்படுகிறது.
இன்றைய இணைய வளர்ச்சியில் வினவு தளத்தின் இடமென்ன?
இணைய அரசியல் உலகில் சமூக மாற்றம் குறித்த நம்பிக்கையை மட்டுமல்ல அதன் அறிவியலையும் அயராமல் கொடுப்பதிலேயே வினவு உயிர்த்திருக்கிறது. அதன் வழி ஒரு வாசகர் தன்னை நடைமுறையில் செயல்படும் கடமையை கண்டுணர முடியும்.
தமிழ் இணைய வரலாற்றில் காத்திரமான இடத்தோடு துவங்கிய வினவு தளத்தின் இடம் முன்னிலும் அதிகமாய் தேவைப்படுகிறது. அதை ஏற்பதால்தான் நாம் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் இன்றைய இணைய வளர்ச்சியில் வினவு தளத்தின் இடமென்ன?
பிரேக்கிங் நியூஸ் போய் இப்போது பிக் பிரேக்கிங் நியூஸ் என அதிரடி செய்திகளை கடை விரிக்கும் ஊடகங்கள் பரபரப்பை நோக்கி ஓடுகின்றன. முதல் செய்தி, முதல் காட்சி, விறுவிறுப்பான விவாதங்கள் என்பதை அளவிடும் கருவிகளாய் வைத்திருப்பதால் கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் ஒரே மாதிரி பேசுகின்றன. அந்த ஒரே மாதிரியில் சமூக மாற்றத்திற்கான இடம் அரிதான ஒன்று. அம்பானிகளும், கல்வி ’வள்ளல்களும்’, மணல் ‘முதலாளிகளும்’ ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டு ’நீதி போதனை’ பேசும் போது முன்னிலும் அதிகமாய் பேசவேண்டிய வினவு ஏன் பேசுவதில்லை என்று நண்பர்கள் பலர் அவ்வப்போது கேட்பதுண்டு.
முன்பு நாம் பேசிய போது மைதானத்தில் சில நூறுபேர் இருந்தனர். இன்றோ அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் வந்த வண்ணம் இருக்கின்றனர். வீட்டோடு மட்டும் தமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று மக்கள் உணர்ந்த படியால் அவர்கள் போராட்ட வெளியை தேடி வருகிறார்கள். அதே மைதானத்தில் ஆங்காங்கே சிறு சிறு கவன ஈர்ப்புகள். யூ டியூப் காமடி வீடியோக்கள், ஃபேஸ்புக்கின் மீம்கள், வாட்ஸ் அப்பின் வதந்திகள், அன்றாடம் உருவாகும் பெயர்ப்பலகை அமைப்புகள், தனிநபரை முன்னிறுத்தும் சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள், புதிய கட்சிகள்…..
இந்தப் பிரச்சினை எமக்கு மட்டுமல்ல. தமிழில் முற்போக்கு கட்சிகள் – அமைப்பினர் சார்ந்து இணைய தளம் நடத்தி வந்த பலர் பிறகு அதன் தோல்வி காரணமாக விலகினர் அல்லது ஒப்புக்கு நடத்துகின்றனர். அதே போல இன்று ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் பலரும் தத்தமது இணைய தள முயற்சிகளை கை கழுவித்தான் வாசகர் வட்டத்தை விரித்திருக்கின்றனர்.
இணைய தளமோ, சமூக வலைத்தளமோ எங்கு பேசினால் என்ன, நாம் பேசுவது அதிகம் கேட்கப்படுவதுதானே முக்கியம் என்று சிலர் கேட்கலாம். ஆனால் நாம் பேசுகிறோமா இல்லை நம்மை பேச வைக்கிறார்களா என்பதை கேம்ரிட்ஜ் அனலாட்டிகா தெளிவாக காட்டிவிட்டது. அல்லது இதையே இப்படி பெயர்க்கலாம்.
நீங்கள் முற்போக்காவே பேசினாலும் அது அரட்டை, பொழுது போக்கு, நடைமுறையில் இருந்து விலகி நிற்பது என்ற விதிகளின் படியே ஃபேஸ்புக்கில் பிரபலமாக முடியும். இன்றைக்கு வலது சாரிகள், சாதி, மதவெறியர்கள் கூட சமூகவலைத்தளங்களில் தத்தமது ஆதரவை பெருக்கிக் கொண்டுதான் வருகின்றனர். பிற்போக்கான கொள்கைகள் தம்மை கடை விரிப்பதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ஒரு குத்து விளக்கு பூசை மூலம் அப்பாவி பெண்களிடம் முசுலீம்கள் மீதான வன்மத்தை விதைக்க முடியும்.
எச்.ராஜாவின் ஒரு வாந்தியை வைத்துக் கூட ஊடகங்களில் ஒரு இந்துத்துவ அஜண்டாவை பேசுபொருளாக்க முடியும். கவுன்சிலர் தேர்தலில் வெல்ல முடியாத கட்சியாக கேலி செய்யப்படும் பா.ஜ.க.-வின் தலைவர் தமிழிசையின் அறிக்கைகள் மாலை நேர டி.வி. விவாதத்திற்கு கருப் பொருளாகும். மக்கள் அதிகாரம் திரட்டிய மக்களை விட மக்கள் நீதி மய்யம் குறைவாகவே மக்களை திரட்டினாலும் லைவ், ’நம்மவருக்குத்தான்’!
கொள்கையைக் கேட்டால் தலை சுற்றும் ரஜினியின் பொன் மொழிகளுக்கு கிடைக்கும் இடம் கொள்கைக்காகவே வாழ்வை அளித்தோருக்கு இருக்க வேண்டியதில்லை. ஆகவே படிப்போரை ஒரு திசை வழி நோக்கி சமூக மாற்றத்திற்கான நடைமுறையில் ஈடுபடுத்தவேண்டும் என்ற இலக்கே வினவு தளத்தின் பலம். நமது பாதையை சிரமமாக இருப்பதற்கும் காரணமும் அதுதான்.
பலர் இந்த முயற்சியில் தோற்றாலும் வினவு தொடர்ந்து பயணிக்கிறது. அதாவது வாசகர்களை தோழர்களாக மாற்றும் கடமையை விருப்பத்துடன் செய்து வருகிறது. ஆகவே பரபரப்பு, டி.ஆர்.பி., பிரபலம், அதிக ஹிட்ஸ் போன்ற போட்டிகளில் நாம் என்றும் இல்லை. ஆனால் நம் கருத்துக்களை, நோக்கத்தை பரந்து பட்ட மக்களிடம் கொண்டு சென்றே ஆக வேண்டும். அதற்கு தொழில் நுட்ப சாத்தியங்களை பயன்படுத்தியாக வேண்டும். குறிப்பாக இளைஞர்களை கவர வேண்டும். கருத்தில் இளைமைத் துடிப்பிருப்பது போல வடிவத்திலும் இருக்க வேண்டும். தத்துவத்தை எளிமையாகவும், ஆழமாகவும் விளக்குவது போல இது.
வினவு தளத்தின் புதிய பகுதிகள்
வினவு தளத்தின் இந்த புதிய வடிவமைப்பு அப்படி ஒரு முயற்சி. இதில் அன்றாடம் மாறும் புதிய பகுதிகளை சேர்த்திருக்கிறோம். இன்றைய புகைப்படம் – மேற்கோள் – வரலாற்றில் இன்று – கேலிச்சித்திரம் போன்றவை நாளுக்கொன்றாய் இடம்பெறும்.
வாசகர் விவாதங்களை எளிமைப்படுத்தும் பொருட்டு மறுமொழிகளை மட்டறுப்பதை எடுத்து விட்டோம். மின்னஞ்சல் முகவரியுடன் கணக்கு துவங்கும் எவரும் நேரடியாக மறுமொழிகளை வெளியிடலாம். (தற்போது தொழில் நுட்ப பணிகள் நிறைவடையவில்லை என்பதால் பழைய மட்டறுத்தல் முறையில் இருக்கிறது.)
குறுஞ்செய்திகள், அரசியல் கட்டுரைகள், சமூக பண்பாட்டு கட்டுரைகள், வீடியோ என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி இந்த வடிவம் உங்களுக்கு பயனளிக்கும்.
சமூக ஊடகத்தை அரசு அதிகாரத்தின் மூலம் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும், பொய்ச் செய்திகளைப் பரப்புவதும், தமது நோக்கத்துக்கேற்பத் திசை திருப்புவதும் மென்மேலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் வலதுசாரிகள் மற்றும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான நமது போராட்டத்தை பயனுள்ளதாகவும் வீரியமிக்கதாகவும் மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. இணைய உலகில் இலக்கின்றித் தெறித்துச் சிதறும் முற்போக்குக் கருத்தாளர்களை இயன்றவரை ஒருமுனைப்படுத்தவும், அவர்களை சமூக செயல்பாட்டாளர்களாக மாற்றியமைக்கவும் வேண்டியிருக்கிறது.
எழுத்தாளர்கள் பங்குபெறும் கருத்தாடல் பக்கம்
இதனைக் கணக்கில் கொண்டு, இளைஞர்களிடம் நமது கருத்துக்களை எளிமையாகவும், விரும்பத்தக்க வகையிலும் கொண்டு செல்லும் விதத்தில் எழுத்தாளர் சிலரின் பத்திகள் இடம்பெறுகின்ற கருத்தாடல் பக்கத்தை அறிமுகம் செய்கிறோம். ஆங்கில இணையத் தளங்களில் வரும் Opinion page போன்ற பக்கமிது.
இது இணையப் பரப்பில் திக்குத் தெரியாமல் உழலும் எண்ணற்ற இளம் தலைமுறை வாசகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். அதன் போக்கில் அவர்கள் செயல்படுபவர்களாக வளருவதையும், அவர்களிடையே ஓர் ஒருங்கிணைவு ஏற்படுவதையும் சிறிய அளவிலேனும் சாத்தியமாக்கும்.
சமூகவலைத்தளத்தின் வடிவமைப்பு காரணமாக, பலருடைய முகநூல் பக்கங்களில் எழுதப்படும் காத்திரமான விசயங்கள் கூட காலப்போக்கில் ஒரு “முற்போக்கு அரட்டையாக” காற்றில் கரைந்து பயனற்றுப் போய்விடுகின்றன. மேலும், ஆர்வமுள்ள ஒரு வாசகர் அத்தகைய எழுத்துக்களை ஒரு நூலகத்தைப் பயன்படுத்துவதைப் போலத் தேடிப் பயன்படுத்த முடிவதும் இல்லை. கருத்தாடல் பகுதியில் வெளிவரும் எழுத்தாளர்களது பத்திகள் கால வரிசைப்படி தொகுக்கப்படுவதால் மேற்கண்ட குறை நீங்கி அதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
இதற்கடுத்து புதிய வினவு தளத்தில் வரும் முக்கியமான பகுதி “மெரினா”. ஃபேஸ்புக் போன்ற வசதிகள், வடிவமைப்பில் மக்கள் பங்கேற்கும் குழும பக்கம் இது. ஓரிரு நாளில் அறிமுகம் செய்கிறோம். மெரினாவில் வினவு வாசகர்கள் பேசிக் கொள்வதற்கும், பகிர்வதற்கும், விவாதிப்பதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும் சமூக அக்கறையுள்ள வாசகர் வட்டத்தில் பேசிக் கொள்வதற்கும், பயின்று கொள்வதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. நாம் தனியாக இல்லை என்ற நம்பிக்கையையும் மெரினா கொடுக்குமென நம்புகிறோம்.
வினவுக்குத் தோள்கொடுங்கள்! நன்கொடை தாருங்கள்!!
புதிய வினவு தளத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடிவடையவில்லை. உங்கள் ஆலோசனைகள் இருப்பின் தெரியப்படுத்தவும். புதிய வினவு தளத்தை ஒரு தொழிற்முறை பத்திரிகையாக மாற்றுவதற்கு நாங்கள் தயார் என்றாலும் நீங்கள் தயார் இல்லை என்றால் அது சாத்தியமில்லை.
ஆம். நிதிச் சுமை. அனைத்து துறைகளிலும் அதிக பணி செய்வதற்கு போதுமான நிதி தேவைப்படுகிறது. தற்போது பேபால் வசதி இருப்பதால் வெளிநாட்டில் இருப்போரும் நன்கொடை அளிக்கலாம். பொதுவில் தோழர்களை உள்ளிட்டு, வினவு தளத்தை தவறாமல் படிக்கும் நண்பர்களும் இந்த ஊடக வேலைக்கு பெரும் செலவு இருப்பதை உணர்வதில்லை. ஒக்கி புயல் குறித்து ஒரு ஆவணப்படம் எடுப்பதோ, உடனுக்குடன் போராட்டச் செய்திகளை நேரலை செய்வதோ, செய்தியாளர்களை பணியில் அமர்த்துவதோ, வீடியோக்கள் தயாரிப்பதோ அனைத்தும் பெரும் செலவு பிடிக்கும் பணி என்பதை அறிவீர்கள்.
ஆதரியுங்கள். ஆலோசனைகளை தெரிவியுங்கள். சேர்ந்து பயணிப்போம்.
வாழ்த்துக்களுடன்
வினவு
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!! சாலை மறியல்!!!
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் மக்கள் 55 நாட்களைக் கடந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கெதிரான போராட்ட உணர்வு கிராமம் நகரம் என்பதைத் தாண்டி மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது.
அந்தவகையில் பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மீளவிட்டான், சில்வர்புரம், மடத்தூர், தபால் தந்தி காலனி, 3-ஆம் மைல், தெற்கு வீரபாண்டியாபுரம், கோரம்பள்ளம், மாப்பிள்ளையூரணி என்று பல பகுதிகள் ஸ்டெர்லைட்டை எதிர்த்து தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 09.04.2018 அன்று தூத்துக்குடியில் அறிவிக்கப்படாத பேரணி – முற்றுகை – சாலை மறியல் நடைபெற்றது.
வழக்கமாக திங்கள் காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெரும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பல்வேறு கிராம மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மனு கொடுக்க திரண்டிருந்தனர், ”ஏற்கனவே தரப்பட்ட மனுவின் மீதான நடவடிக்கை என்ன? எப்போது ஸ்டெர்லைட்டை மூடுவீர்கள்” என்று முழக்கமிட்டவாறு கேட்கத்துவங்கினர்.
மக்களின் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டார் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்.
இதுவரை மனு வாங்ககூட நேரம் ஒதுக்காமல், மக்களை நேரில் சந்திக்க அனுமதிக்காமல் அலைகழிப்பது. பெயருக்கு 2 பேரை அழைத்து மனுவை வாங்கிக் கொள்வது என செயல்பட்டுவரும் ஆட்சியரின் நடவடிக்கைகள் மீது வெறுப்படைந்திருந்த மக்களை இது மேலும் ஆத்திரத்துக்குள்ளாகியது.
ஆட்சியரின் இந்த அலட்சியப் போக்கிற்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், ஆயிரத்தும் அதிகமானோர் திரண்டு திருநெல்வேலி சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில், மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் எடுத்து நடத்தி வருகிறது. மேலும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டமும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராடும் மக்களுக்கு உறுதுணையாக வழக்கறிஞர்களும் களத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஏற்கனவே போராடும் மக்களுடன் மக்கள் உரிமை பாதுகாப்புமைய தோழர்களும், மக்கள் அதிகாரம் தோழர்களும் களத்தில் இணைந்துள்ளனர். இது ஆளும்வர்க்கங்களுக்கு பீதியுண்டாக்கியுள்ளது.
இவ்வாறு இப்போராட்டத்தின் பரிமாணம் விரிவடைந்து செல்வதை கண்டு பதறியடித்துக்கொண்டு வந்த ஆட்சியர் வெங்கடேசன் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
போராட்டக் களத்தில் இருந்த பெண்கள் “இதுவும் தலைக்கு வெச்சு தூங்கத்தான் போகும்” என்று தங்கள் அனுபவத்தில் இருந்து நேரடியாக விமர்சித்தனர். பதில் சொல் “மூடுவியா – மூடமாட்டியா?” என்று கொதித்துக் கேட்டனர்.
முதல்முறை கலெக்டரை வெளியே வரவழைத்த இப்போராட்டதில் இருந்து, இது போன்ற போராட்டங்கள்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு என்பதை உணர்ந்துள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.
திருச்சி ’இந்தி பிரச்சார சபா’ முற்றுகை – மோடி படம் எரிப்பு – பிஜேபி கொடி எரிப்பு – ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு
“காவிரியைத் தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம், திருச்சி மண்டலத்தின் சார்பில் இன்று (07.04.2018) காலை 11 மணியளவில் இந்தி பிரச்சார சபா முற்றுகையிடப்பட்டது. முன்னதாக திருச்சி முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதியில் காலை முதலே, நூற்றுக்கணக்கான போலீசை குவித்து பரபரப்பை ஏற்படுத்தியது அரசு.
பறையிசை, முழக்கங்களுடன் பேரணியாக வரும் வழியில் தோழர்களை போலீசு தடுத்து நிறுத்தியதால், அங்கேயே போராட்டம் நடத்தப்பட்டது. மோடியின் படத்தையும், பிஜேபி-யின் கொடியையும் எரிப்பதற்காக வெளியில் எடுத்ததை பார்த்தவுடன், அதிர்ச்சியடைந்த போலீசு பாய்ந்து பிடுங்க முயற்சித்தது. அதையும் மீறி, மோடியின் படத்தை செருப்பைக் கொண்டு அடித்ததுடன், எரிக்கவும் செய்தனர்.
தன் எஜமானின் படத்தை கிழித்ததைக் கண்டு ஆத்திரமடைந்த போலீசு, மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் உள்ளிட்டு அனைத்து தோழர்களையும் அடித்து தர தரவென இழுத்து கைது செய்தது.

காவல்துறை, தோழர்களை வன்முறையாக கைது செய்து கொண்டிருந்த சூழலில், ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு தோழர்கள் பாலத்தின் மீதிருந்தபடி இந்தி பிரச்சார சபாவின் போர்டின் மீது கருப்பு மையை அடித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
கீழே இருந்த மற்றொரு போர்டில் கருப்பு மை அடிக்க முயற்சித்த போது காவல்துறை தடுத்து நிறுத்தியதால் தோழர் சரவணன் தடுப்பு சுவர் மீது ஏறி போர்டை கிழித்து எறிந்தார். அதை பார்த்த இளைஞர்கள் விசில் அடித்தும், கை தட்டியும் ஆரவாரம் செய்தனர். இதைக் கண்டு பொறுக்காத அடிமை எடப்பாடியின் எடுபிடி போலீசு, அவரைக் கீழே தள்ளி, அடித்து – உதைத்து சித்ரவதை செய்தனர்.
இதைக் கண்ட பொதுமக்கள் “ அவரை அடிக்காதே, அடிக்காதே ” எனக் கத்தினர். இதனிடையே பத்திரிக்கையாளர்களுக்கும், காவல்துறைக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் செய்தனர். ஹிந்தி எழுத்துக்களை அழித்ததை, பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. “இவங்க செய்வாங்கன்னு எதிர்பார்த்தோம். அதே மாதிரி செஞ்சிட்டாங்க” என போலீசுகாரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க, அவற்றின் மீது அழுத்தவும்)
போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 80-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவரின் மீதும் கடுமையான தாக்குதலை நடத்தி கைது செய்தது போலீசு. டில்லியின் அடிமை எடப்பாடி அரசின் உத்தரவின் பேரில், கைது போராட்டத்தில் பங்கெடுத்த அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்கிறது போலீசு. அனைவர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கத் துடிக்கிறது எடப்பாடி அரசு. தோழர்களோ சிறைக்கு அஞ்சாமல் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். கடைசிச் செய்தியின் படி 13 தோழர்களை ( 11 ஆண், 2 பெண்) சிறையில் அடைத்திருக்கின்றனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி மண்டலம்.
பத்திரிக்கை செய்தி
மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கும்
மக்கள் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்!
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் கொடுத்த இறுதித் தீர்ப்பு, தமிழர்கள் மீது தில்லி தொடுத்துள்ள போர்தான். எந்த சட்ட நியதிகளுக்கும், மரபுகளுக்கும் மதிப்பளிக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது மோடியின் அரசு. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக, டம்மியான ஓர் அமைப்பை அமைக்கப் பார்க்கிறது. அதையும் இப்போது அமைத்தால் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று முடக்குகிறது. ”சட்டம் ஒழுங்கைக் காக்க முடியா விட்டால் பதவி விலகு” என்று நீதிபதிகள் சொல்லவில்லை. அதை ஆமோதிப்பது போல் நடந்து கொள்கிறார்கள். ஆக, தமிழக உரிமைகளை நசுக்குவதில் நீதித்துறையும், மோடி அரசும் கூட்டாளிகளாகவே செயல்படுகின்றன. தமிழகத்தின் மீது டெல்லி கொண்டுள்ள இந்த வஞ்சத்திற்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள், கட்சிகள் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
தில்லிக்கு எதிராக தமிழகத்தில் எழுந்திருக்கும் எல்லா போராட்டங்களும் தில்லியின் அதிகாரத்தை முடக்கும் வகையில் இருக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை செயல்படாமல் முடக்குவது, ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இருப்பது, சுங்க சாவடிகளில் வரி கொடுக்க மறுப்பது உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கும் மக்கள் எழுச்சி தமிழகத்தில் உருவாக வேண்டும்.
காவிரி நீரில் தமிழகத்திற்குள்ள உரிமையை மறுக்கும் கர்நாடக மாநிலக் கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசுகின்றன. காவிரியில் எல்லா நியாயங்களையும் உரிமைகளையும் வைத்துள்ள நாம் ஏன் தனித்தனியே போராடிக் கொண்டிருக்க வேண்டும்? ஒரே அணியில் திரண்டு, தமிழகத்தின் மீது தில்லி தொடுத்திருக்கும் இந்தத் தாக்குதலை முறியடிக்க முன்வருமாறு கட்சிகளையும், தமிழ் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். காவிரி உரிமை போராட்டங்கள் அனைத்தையும் மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் நடக்கும் தில்லிக்கு எதிரான போராட்டங்களையும் மக்கள் அதிகாரம் ஆதரிக்கின்றது. ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று காவிரிக்கான போராட்டங்கள் அனைத்திலும் மக்கள் சாதி, மதம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தங்கள்
வழக்கறிஞர்.சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
***
காவிரி பிரச்சனையை ஒட்டி ”காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு” என்ற தலைப்பில் குடந்தை வழக்கறிஞர் சங்கம் சார்பாக கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் இன்று (05/04/18) நடைப்பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம்
குடந்தை – 97892 61624
***
”காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து அனைத்து கட்சியினர் சார்பாக கோத்தகிரியில் சாலை மறியல் இன்று (05.04.2018) நடத்தப்பட்டது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். சாலை மறியலில் மக்கள் அதிகாரம் கோத்தகிரி ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் உரையாற்றினார். இதில் சுமார் 300 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி
***
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய மோடி அரசையும், மாநில ஒபிஎஸ், ஈபிஎஸ் அரசையும் கண்டித்து சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் அதிகார தோழர்கள் மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை
***
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் மக்கள் அதிகார தோழர்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை.
***
காவிரி மேலண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தருமபுரியில் அனைத்து கட்சிகளுடன் மக்கள் அதிகாரம் இணைந்து இன்று (05-04-2018) தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி.
“காவிரியை மறுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு!” என்ற முழக்கத்தின் கீழ் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக காவிரியை மறுக்கும் பா.ஜ.க வை கண்டித்து கும்மிடிப்பூண்டி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் கடந்த 03-04-2018 அன்று நடத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட தோழர்களைக் கைது செய்தது போலீசு.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
தொடர்புக்கு: 94444 61480
*****************
“டெல்லி அதிகாரத்தை முடக்கு” என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 04-04-2018 அன்று கடலூர் மக்கள் அதிகாரம் தோழர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
காலை 6.00 மணிக்கு விழுப்புரம் பேசஞ்சர் ரயிலில் கடலூர் மக்கள் அதிகாரம் தோழர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். “டெல்லி அதிகாரத்தை முடக்கு”, “டோல்கேட் கட்டணம் கட்டாதே”, “ரயிலில் கட்டணம் கட்டாதே” என்று பிரச்சாரத்தையும், டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
நூற்றுக்கணக்கான இரயில் பயணிகளிடையே இந்த போராட்ட வழிமுறை பெருத்த வரவேற்பை பெற்றது. மாணவர்கள் சிலரும் தோழர்களுடன் இணைந்து கொண்டு பேசினார்கள். பொதுமக்களிடையே காவேரியில் உச்சநீதிமன்றத்தின் கேடுகேட்ட தீர்ப்பு என்பது தமிழகத்தின் டெல்டாவை பாலைவனமாக்கும் சதி. மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி கும்பல் திட்டமிட்டு தமிழகத்தை கொலைவெறியோடு தாக்கி வருகிறது.
எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் போராடி வருகின்ற சூழ்நிலையில் கர்நாடக தேர்தலை முன்வைத்து தான் இப்படி தீர்ப்பளித்துள்ளதாக சொல்வது தவறு. ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ், மீத்தேன், நிலக்கரிக்காக, அம்பானி, அதானி கொள்ளையடிக்க நாம் தண்ணீர் இல்லாமல் சாக வேண்டுமா? இது விவசாயிகள் பிரச்சனை அல்ல. தமிழினத்தின் மீதான தாக்குதல்.
நீட் திணிப்பு, இந்தி சமஸ்கிருத திணிப்பு, நியுட்ரினோ, ஸ்டெர்லைட், நெடுவாசல், காவேரி தடுப்பு என்று தமிழகத்தையே மரண பூமியாக மாற்றுகிறது மத்திய அரசு. டெல்லியோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. தமிழக மக்களே களம் இறங்கி போராடுங்கள்! மக்கள் அதிகாரத்தோடு வாருங்கள் என அறைகூவல் விடுக்கப்பட்டது.
விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை மற்றும் மயிலாடுதுறை முதல் விழுப்புரம் வரை ரயிலில் பிரச்சாரம் செய்யப்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் ரயில் நிலையத்தில் இடைமறித்த ரயில்வே அதிகாரிகள் டிக்கெட் எடுக்காதது தவறு என எழுதிக் கொடுக்குமாறு கேட்டனர். ” நாங்கள் எழுதி கொடுக்க மாட்டோம், உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டோம் இது எங்கள் போராட்ட முறை. நீங்கள் வழக்கு போடுங்கள், காவல் நிலையமானாலும், ரயில் நிலையமானாலும், நீதிமன்றமானலும், சிறையானாலும் நாங்கள் இந்த அரசியலைதான் பேசுவோம்” என்று தொடர்ச்சியாக முழக்கமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. கூட்டம் கூடியது. ரயில்வே போலிசார் வந்தார்கள். பின்னர் தமிழ்நாடு போலிசுகாரர்கள் வந்தார்கள்.
ஒரு கட்டத்தில் போன் அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு, தோழர்களைக்கைது செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றது போலீசு. தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்க கூடாது என்று பேருந்துகள், ரயில்கள், பொது இடங்களில் மக்கள் அதிகாரம் தொண்டர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
தகவல்:
மக்கள் அதிகாரம்
கடலூர்.
*******
சென்னை ஆவடியில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் இரயில் மறியல் போராட்டம் இன்று (05-04-2018) நடத்தப்பட்டது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் அப்பகுதி மக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை.