Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 537

புதிய ஜனநாயகம் – மார்ச் 2017 மின்னிதழ்

0

புதிய ஜனநாயகம் மார்ச் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன?
“தமிழகத்தையே சாவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதற்குப் பொறுப்பான ஜெயலலிதா, எப்படிச் செத்திருந்தால் எங்களுக்கென்ன?”

2. ஹைட்ரோ கார்பன் திட்டம் : மோடி ஏவிவிடும்ம் பேரழிவு!
ஷேல் எரிவாயுவை எடுக்கும் நீரியல் விரிசல் முறைக்கு மிகப்பெருமளவு தண்ணீர் தேவை. ஷேல் கிணறுகள் இருக்கின்ற நீரை உறிஞ்சுவதுடன், மிச்சமிருக்கும் நீரையும் நஞ்சாக்கி விவசாயத்தையும் குடிநீரையும் அழிக்கிறது.

3. ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி!
இந்தத் திட்டத்தின் நோக்கம் சுயசார்பும் அல்ல, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவம் அல்ல. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கூறு போட்டு விற்பதுதான்.

4. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் : வளர்ச்சியல்ல, திருட்டு!
ஆற்று மணலை, தாது மணலைத் தோண்டியெடுத்ததில், கிரானைட் மலைகளை வெட்டியெடுத்ததில் என்ன நடந்ததோ, அதுதான் நெடுவாசலிலும் நடக்கும்.

5. குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம்?
தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் கொள்ளைக்காரியாக, சதிகாரியாக, மேல்தட்டுப் பொறுக்கியாக, ரவுடியாகவே வாழ்ந்து மறைந்தவர்தான் ஜெயலலிதா.

6. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம்!
ஜெயா, சொத்துக் குவிப்பு வழக்கை 21 ஆண்டு காலம் இழுத்தடிப்பதற்கு உடந்தையாகவும், அவர் கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்படுவதற்கு புரோக்கராகவும் செயல்பட்ட உச்சநீதி மன்றம், அவர் இறந்த பிறகும் குழப்பத்துக்கு இடமளிக்கும் தீர்ப்பையே அளித்திருக்கிறது.

7. பிர்லா-சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது!
இலஞ்சம் வாங்கியிருப்பவர், மோடி; அதை மூடி மறைத்தவர், இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர்; அதை விசாரிக்க மறுப்பவர்கள், உச்சநீதி மன்ற நீதிபதிகள்; மொத்த விவகாரத்தையும் இருட்டடிப்பு செய்தவை ஊடகங்கள்.

8. பண மதிப்பு நீக்கம் : கருப்பை வெள்ளையாக்கியதே மோடியின் சாதனை!
நாட்டில் நான்கு இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் புழங்குவதாகக் கூறி வந்தார், மோடி. அந்தக் கருப்பெல்லாம் வங்கிகளின் வழியாகவே வெள்ளையாக மாறிச் சென்றுவிட்டதை வங்கிகளின் பண இருப்பு விவரம் காட்டுகிறது.

9. கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்!
கீழடி அகழாய்வை நிறுத்திவைப்பதன் மூலம் திராவிட வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிடலாம் எனப் பகற்கனவு கண்ட ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல், தமிழ் மக்களின் எதிர்ப்பால் பின்வாங்கியிருக்கிறது.

10. தகுதி, திறமை, நுழைவுத் தேர்வு : புதிய மனுநீதி!
தகுதி, திறமை என்ற போர்வையில், அந்தமான்-நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு உரிமையை அங்கீகரிக்க மறுத்திருக்கிறது, இந்திய மருத்துவ கவுன்சில்.

புதிய ஜனநாயகம் மார்ச் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

பாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் !

0
ஃபாசில் அல் அராஜ்

சுரேல் ஆக்கிரமித்திருக்கும் மேற்குக் கரையில் உள்ள அந்தப் பழைய வீட்டுச் சாளரத்தின் திரைச்சீலைச் சற்றே விலகியிருந்தது. அங்கிருந்து தான் ரமல்லாவின்(Ramallah) தெருக்களை 34 வயதான பாசில் அல்-அராஜ்(Basil al-Araj) கவனித்துக் கொண்டிருப்பார். அந்தப் பழைய வீட்டின்  சாளரத்தின் விளிம்பில் தண்ணீர் புட்டிகள் வரிசையாக இருந்தன. அங்கு தான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் தலைமறைவாகச் சென்றார்.

மேசையில், பாசில் படித்த நூல்களுக்குச் சற்றுத் தள்ளி சிகரெட் துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. அவர் கடைசியாகச் சாப்பிட்ட பீன்ஸிற்கு அருகே ஒரு கோப்பையில் காபி இன்னும் அப்படியே இருக்கிறது. வீட்டின் தரையெங்கும் உலர்ந்த இரத்தக்கறை படிந்திருக்கிறது.

பல மாதங்களாக தேடப்பட்டு வந்த பாசில் படுகொலை செய்யப்பட்டதை இசுரேலிய இராணுவம் அறிவிப்பதற்கு முன்னதாக மார்ச் 6 ஆம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு துப்பாக்கி வெடியோசைகள் ரமல்லாவின் தெருவெங்கிலும் கேட்டன.

இசுரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டதற்காக பாசில் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களும் மிகவும் மதிக்கும் நபராக அறியப்பட்டார். இசுரேலுடன் இயல்புநிலைக்கு திரும்புவதற்காக பாலஸ்தீன [தேசிய] ஆணையத்தால்(Palestinian Authority) எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஆபத்துக்கள் வரும் என்று நம்பிய அவர் தொடர்ந்து அதற்கெதிராக இளைஞர்களை அணிதிரட்டி ரமல்லாவில் போராட்டங்களை நடத்தினார். தேசிய அளவிலான தேர்தலுக்கும் அறைகூவல் விடுத்தார். பாலஸ்தீன தேசிய ஆணையம் – ரமல்லாவைத் தலைமையிடமாகக் கொண்டு மேற்குக் கரையை(West Bank) ஆட்சி செய்யும் ஒரு தன்னாட்சி அமைப்பு(semi-governmental body).

பாசிலையும் அவரது நண்பர்கள் பலரையும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வடக்கு ரமல்லாவில் உள்ள ஒரு கிராமமான அருராவிற்கு(Arura) அருகில் பாலஸ்தீனிய பாதுகாப்புப் படை கைது செய்தது. உரிமம் பெறாத ஆயதங்களை அந்த இளைஞர்கள் வைத்திருந்ததாகவும் இசுரேலிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே இசுரேலுடைய ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்ததைப் பாலஸ்தீன ஆணையத்தின் தலைவரான முஹம்மது அப்பாஸ் பெருமைபடக் கூறினார்.

“தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக எங்களது பாதுகாப்புப் படையினர் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு சில நாட்கள் முன்பு தான் ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த மூன்று இளைஞர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இசுரேலுடனான எங்களது பாதுகாப்பு ஒப்பந்தம் நன்றாகச் செயல்படுகிறது” என்று ஜெர்மன் செய்தி நிறுவனமான டெர் ஸ்பீகலிடம்(Der Spiegel) அப்பாஸ் தெரிவித்தார்.

சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதையும் மோசமாக நடத்தப்பட்டதையும் எதிர்த்து அந்த இளைஞர்கள் ஒன்பது நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதன் பின்னணியில் உருவான மக்கள் இயக்கம் ஒன்று அவர்களை விடுதலை செய்யச் சொல்லி பாலஸ்தீன தேசிய ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பரில் பாசில் விடுதலை செய்யப்பட்டு தலைமறைவானார். பிறகு அவர் இசுரேலிய இராணுவத்தால் தொடர்ச்சியாகத் தேடப்படுபவர் ஆனார்.

பாசில் உள்ளிட்ட அவரது நண்பர்கள் ஆறு பேரும் சிறையில் மிகவும் கடினமான காலத்தைக் கழித்ததாகவும் அவர்களுடையக் கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் பாசிலின் வக்கீலான முஹான்னத் காரியா(Muhannad Karrajeh) சிறையில் அடைக்கப்பட்ட போது அல்ஜசீராவிடம் கூறினார்.

“சட்ட நடைமுறைகள் என்ற பெயரில் ஒரு ஆறு மாதங்கள் அந்த இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இது குறித்து புலனாய்வு செய்வதில் பாலஸ்தீனிய அரசாங்க வக்கீல்கள் ஆர்வம் காட்டவில்லை” என்று காரியா கூறினார்.

விடுதலை செய்யப்பட்டவுடன் ரமல்லாவில் ஒரு வாடகை வீட்டில் பாசில் குடி புகுந்தார். தன்னை ஒரு சுவீடன் குடிமகன் என்று பாசில் கூறியதாகவும் ஆங்கிலத்தில் பேசியதாகவும் அந்த வாடகை வீட்டின் உரிமையாளர் கூறினார். “அவர் அந்த வீட்டை விட்டு ஒரு போதும் அகன்றது இல்லை. நான் ஒவ்வொரு முறை வாடகை வாங்க வரும் போதும் தனக்கு பாசில் காபி கொடுப்பார்” என்று அவர் அல்ஜசீராவிடம் கூறினார்.

பெத்லேகம் நகருக்கு அருகிலிருக்கும் அல்- வாலாஜ்(al-Walaja) ஊரிலிருக்கும் பாசிலுடைய வீடு அவரைக் கைது செய்வதற்காக இசுரேலின் இராணுவத்தால் பல முறை சோதனை செய்யப்பட்டது.

பாசிலுடைய இடத்தைக் கண்டறிய இசுரேலிய இராணுவம் பாலஸ்தீன ஆணையத்துடன் சேர்ந்து செயல்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் பெரும்பாலான பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீன ஆணையத்தையும் அதற்கும் இசுரேலுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தங்களையும்(security coordination)  குற்றஞ்சாட்டுகின்றனர்.

இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய பாசில் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்த நடவடிக்கையானது இசுரேல் மற்றும் பாலஸ்தீன தேசிய ஆணையத்திற்கு இடையே ஒரு ஒப்பந்தம் இருந்துள்ளதைக் காட்டுவதாக பாசிலுடைய மாமா காலித் அல்-அராஜ்(Khalid al-Araj) கூறினார்.

மகன் கொல்லப்பட்ட செய்தியறிந்த பாசிலுடைய தாய் உணர்ச்சிவயப்பட்டு மனமுடைந்ததாக காலித் கூறினார். தனக்குள்ளே அழுதபடியே இருந்தாலும் அந்த தாய் உறுதியாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டார். “பாசிலுடைய குடும்பம் அமைதியாகவும் விடாப்பிடியான நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். அவர்கள் பாசிலையும் அவர் தேர்ந்தெடுத்தப் பாதையையும் நம்புகிறார்கள்.“ என்று காலித், அல்ஜசீராவிற்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.

பாசில் தலைமறைவாக இருந்த வீட்டில் ஆயுதங்களைக் கண்டுபிடித்ததாகக் குற்றஞ்சாட்டிய இசுரேலிய இராணுவம் அதைக் குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டது. இசுரேலிய இலக்குகளுக்கு எதிராக ஷெல் தாக்குதல்களுக்குத் திட்டமிடும் குழுவிற்கு பாசில் தலைவராக இருந்தார் என்று இசுரேல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அவர் படுகொலைச் செய்யப்பட்ட உடனே அங்கு பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களும் குடும்பத்தினரும் சென்றனர். பாசிலுடைய உருவப்படங்களைத் தங்கள் கைகளில் ஏந்தியபடி கண்ணீருடன் தெருவில் அணிவகுத்து சென்றனர். “பாதுகாப்பு ஒப்பந்தத்தால் கொல்லப்பட்டத் தியாகி (martyr of security coordination)” என்று பாசிலை அவர்கள் அழைத்தனர்.

பாசிலுடையப் படுகொலையைத் தொடர்ந்து பாலஸ்தீன தேசிய ஆணையம் மற்றும் இசுரேலுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கண்டித்து காஸாவைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு எதிர்ப்பியக்கமான ஹமாஸ் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. “ஆக்கிரமிப்பு எதிர்ப்பை நசுக்குவதனாலும் மக்களுடைய உறுதிப்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதனாலும் திட்டமிட்டப் படுகொலைகளும் இசுரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தமும் வெற்றி பெறாது” என்று அது கூறியிருக்கிறது.

இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிரான துரோகம் என்று பாலஸ்தீன விடுதலைக்கான இடதுசாரி மக்கள் முன்னணி(The leftist Popular Front for the Liberation of Palestine) கருத்துத் தெரிவித்துள்ளது. “ஒரு சக மனிதனாக பாசிலை நாங்கள் இழந்து விட்டோம். ஆனால் அவரது கருத்துக்களும் மதிப்பீடுகளும் என்றென்றும் எங்களிடையே இருக்கும்” என்று பாசிலுடைய நெருங்கிய நண்பரான ஹம்சா அக்ரபவி (Hamza Aqrabawi) அல்ஜசீராவிடம் கூறினார். “பாசிலுடைய மரணம் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்திற்கும் ஒரு பேரிழப்பாகும் ஆனால் ஆக்கிரமிப்பிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அவரது போராட்ட மரபு எங்களை என்றென்றும் வழிநடத்தும்” என்றும் அவர் கூறினார்.

ஃபாசிலுக்கு நீதி கேட்டு வாஷிங்கடனில் போராட்டம்!

செவி வழி வரலாறுகளைச் சேகரிப்பதில் பாசில் குறிப்பான ஆர்வம் கொண்டிருந்ததாக அக்ராபவி குறிப்பிட்டார். “தன்னுடைய மக்கள் மற்றும் தாய்நாட்டின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள அந்த வரலாறுகள் உதவும் என்று படித்த நபரான பாசில் நம்பினார் என்று எங்களுக்குத் தெரியும். ஒரு ஆய்வாளராக எங்களது வரலாற்றையும் போராட்டத்தையும் ஆழமாக ஆய்வு செய்தார் என்பதும் எங்களுக்கு தெரியும்” என்று அவர் கூறினார்.

“இளைஞர்களின் கலங்கரை விளக்கம் பாசில். பாலஸ்தீன வரலாற்றை சேகரிக்கும் அனைவருக்கும் ஒரு அடையாளத்தை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். அவர் தான் நம்பிய அந்த உறுதியான பாதைக்காக தன்னுடைய இரத்தத்தையே தியாகம் செய்துள்ளார்” என்று அவர் கூறினார்.

எகிப்தில் மருந்தியலைக் கற்றரிந்த பாசில் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்திருக்கிறார். பாலஸ்தீனியர்களின் உடைமைகள் பறிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றிய அரசியல் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். முறைகேடான இசுரேலிய குடியிருப்பான கிலோவிற்கு(Gilo) அருகில் அவரது சொந்த நகரத்தில் இசுரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களுக்குத் தலைமை வகித்ததற்காக அவர் அறியப்பட்டார். அங்கு இசுரேல் எழுப்பிய பிரிவினைச் சுவர் அவரது குடும்ப நிலத்தின் ஒரு பகுதியை விழுங்கியிருந்தது.

எருசலேத்திற்குள் நுழைவதற்கு மேற்குக் கரையில் வாழும் பாசில் உள்ளிட்ட 30 இலட்சம் பாலஸ்தீனியர்களும் இசுரேலிடம் நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். ஆனால் அது மிகவும் கடினமானது. ஆனால் அவர்களது நண்பர்களைப் பொறுத்தவரையில் இசுரேலிய ஆக்கிரமிப்பை மீறுவதற்கு பாசில் முடிவு செய்துவிட்டார்.

“2010 ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்பு குடியிருப்புவாசிகளை ஏற்றிக்கொண்டுச் சென்ற பேருந்தில் பாசில் பயணம் செய்து எருசலேத்திற்குள் நுழைந்தார்” என்று பெயர் சொல்ல விரும்பாத பாசிலுடைய நண்பர் ஒருவர் அல்ஜசீராவிடம் கூறினார். “எருசலேம் தன்னுடைய நகரம். என்றும் அங்கு செல்வது தன்னுடைய உரிமை என்றும் பாசில் கூறினார்” என்கிறார் அவரது நண்பர்.

பாசில் தான் இறப்பதற்கு முன் எழுதியக் கடைசிக் கடிதத்தில் பின்வருமாறுக் குறிப்பிடுகிறார். “அரபு தேசீயம்(Arab nationalism), தாய்நாடு(homeland) மற்றும் விடுதலைக்கான(liberation) வாழ்த்துக்கள்….எனக்கான விடைகளை நான் கண்டறிந்து விட்டதால் விதிக்கப்பட என்னுடைய சாவை நோக்கி மனநிறைவுடன் இப்போது நடந்து செல்கிறேன். தாய்நாட்டு விடுதலைக்காக உயிர் துறக்கும் ஒரு தியாகியுடைய வாக்குமூலத்தை விடத் தெளிவான ஒன்று ஏதேனும் இருக்கிறதா என்ன?”.

நன்றி: அல்ஜசிரா
தமிழாக்கம்: சுந்தரம்

மூலக்கட்டுரை: ‘Basil al-Araj was a beacon for Palestinian youth’

ஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் !

0

மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரி ஓசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக 16.03.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 18.07.2012 அன்று மாருதி ஆலையில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி 148 தொழிலாளர்கள் 4- ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாகவே வைத்திருக்கப்பட்டனர். இந்திய வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய அடக்குமுறை.

மேற்கண்ட 148 தொழிலாளர்களில் 117 பேர் குற்றமற்றவர்கள் எனவும், மாருதி சுசுகி தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரையும் உள்ளிட்ட 31 பேர் குற்றவாளிகள் எனவும் 2017 மார்ச் மாதம் 10-ம் தேதி குர்கான் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இவர்களுக்கு நாளை (மார்ச் 17) அன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

சங்க நிர்வாகிகள் அனைவரும் இந்தக் குற்றவாளிப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆலை நிர்வாகமே திட்டமிட்டு நடத்திய வன்முறை என்பதையும், தொழிலாளர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதையும், சங்க நிர்வாகிகள் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்ததிலிருந்தே தெளிவாக உணரமுடிகிறது. ஆகையால், மாருதி தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும், காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்யவேண்டும். தொழிலாளர்கள் மீதான மாருதி சுசுகி நிர்வாகத்தின் அடக்குமுறையை விசாரணை கமிசன் அமைத்து முறையாக விசாரிக்கவேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார். பல தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

சிறப்புரையாற்றிப் பேசிய தோழர் பரசுராமன் தனது உரையில், மாருதி தொழிலாளர்மீது புனையப்பட்டுள்ளது அனைத்தும் பொய்வழக்கு. மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் என்பது மார்ச் 2012-இல் தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் அந்தச் சங்கம் கோரிக்கை மனுவைக் கொடுக்கிறது. ஜூலை மாதத்தில் மேற்கண்ட வன்முறை சம்பவத்தை அரங்கேற்றி 2,300 சங்க உறுப்பினர்களை பணிநீக்கம் செய்துள்ளது ஆலை நிர்வாகம். ஆலை நிர்வாகம் கொடுத்த பட்டியலின் படி 148 முன்னணியாளர்கள் மீது குற்றம் சுமத்தி சிறையிலடைத்தது போலீசு.

சங்கம் தொடங்கப்பட்ட 4 மாதத்திலேயே இப்படி ஒரு வன்முறையை மிகவும் நன்கு திட்டமிட்டு நிர்வாகத்தால் நடத்தப்பட்டதற்கு முக்கிய காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றவேண்டும் என்றும் சங்கம், உரிமைக்காகப் போராடியதுதான். இது சங்கத்துக்கு எதிரான பொய்வழக்கு என்பதை புரிந்துக்கொள்ள இதைவிட ஒரு நிரூபணம் தேவையில்லை.

18.07.2012 அன்று காலை 7.20 க்கு வன்முறை நடந்து முடிந்தது. ஆனால், போலிசோ காலை 11 மணிக்குத்தான் வந்தது. அந்தபோலீசும் ஆலைக்குள்ளே நுழையவில்லை. ஆனால், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுவிட்டது, எப்படி? காரணம், நிர்வாகம் கொடுத்த பட்டியல் அடிப்படையிலே அந்த எஃப். ஜ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

முதல்நாள் சம்பவம் நடந்து மறுநாள் காலை 6 மணி வரை தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி முடிக்கின்றனர். முற்றிலும் எரிந்துப் போன அறையை பல பாகங்களாக பிரித்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். தடவியல் ஆய்வாளர்களுக்கு கிடைக்காத ஆதாரங்களை (தீப்பெட்டி) அதற்கு பிறகு போலியாக ஆலை நிர்வாக அதிகாரிகளே தயார்செய்து கொடுத்தனர். அந்த வகையில்தான் தொழிலாளர்கள் மீது தீவைப்பு சம்பவம் திணிக்கப்பட்டது.

ஒரு அதிகாரியை 4-5 தொழிலாளர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதாக எஃப்.ஐ.ஆர். சொல்கிறது. தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட எந்த அதிகாரியும் மருத்துவ சான்றிதழ்களை கொடுக்கவில்லை. ஒரு அதிகாரி தனது பல்லின் ஈறு அழுக்குகள் பிரச்சனைக்காக மருத்துவம் எடுத்துக் கொண்டதை தான் தாக்கப்பட்டதற்கான சான்றாக நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். அதிகாரிகள் தாக்கப்பட்டதாக சொல்வது பொய் என்று இதனைவிட வேறு காரணங்கள் வேண்டுமா?

இறந்து போன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியோ மூச்சுத்திணறலில்தான் இறந்து போனதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது. ஆனால், தொழிற்சங்க நிர்வாகிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, இது எப்படி?

குற்றம் சாட்டப்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் (89 பேர்) பெயர் காண்ட்ராக்ட்காரனின் பதிவேட்டில் உள்ள அகரவரிசைப்படி (A, B, C…Z) அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு சாட்சி சொல்பவர்களும் அகரவரிசைப்படியே  முதல் 25 பேருக்கு ஒருவர் அடுத்த 25 பேருக்கு ஒருவர் என்று சாட்சி சொல்கின்றனர். இது போன்றவையெல்லாம் இந்த சாட்சிகளும் குற்றப்பட்டியலும் முற்றிலும் பொய்யானவை என்பதை நிரூபிக்கவில்லையா? சாதாரண பொது அறிவு உள்ள எவரும் ஏற்கதக்க இந்த உண்மைகளை குர்கான் மாவட்ட நீதிபதி ஏன் ஏற்கவில்லை ?

இது தான் நீதிமன்றம். இதுதான் போலீசு. தண்டனையை அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். குற்றங்களை முன்னமே தயார் செய்துவிட்டார்கள். சம்பவங்களை அதற்காக நிகழ்த்திவிட்டார்கள். இதற்கு மேல் அதற்கேற்ப குற்றப்பட்டியலையும் ‘நீதி’ விசாரணையையும் நடத்திக் காட்டும் பொறுப்பு போலீசுக்கும் நீதிமன்றத்திற்கும் கொடுத்துள்ளனர். அதற்காக எந்த சட்டங்களைப் பற்றியும் கவலைப்படாமல், எந்த நீதி நியாயங்களையும், இயற்கை நியதிகளைப் பற்றியும் கவலைப் படாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது குர்கான் நீதிமன்றம்.

போலீசின் வேலை இத்துடன் முடிந்து விடவில்லை. அடுத்தக் கட்டமாக தொழிலாளர்கள் கிளர்ந்தெழாத வகையில் தடுக்கும் ‘கடமை’ அதற்கு கார்ப்பரேட் உலகத்தினால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு வழங்கவிருந்த கடந்த 9-ம் தேதி முதல் குர்கான் மானேசர் தொழிற்பேட்டை முழுவதும் துணை இராணுவப்படை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொழிலாளர்கள் கூட்டம் நடத்துவதற்கும், நடமாடுவதற்கும், பேசுவதற்கும் கூட நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாருதி தொழிலாளர்கள் ஆலைக்குள்ளே சிறைவைக்கப்பட்டு ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒரு போலீசு என்ற அளவிற்கு நிறுத்திவைத்து கொடிய அடக்குமுறை செலுத்தப்பட்டு வருகிறது. பொய்வழக்கை போட்டது மட்டுமல்ல மேற்கண்ட அடக்குமுறையையும் இந்த போலீசுதான் செலுத்தி வருகிறது. இதன் மூலமெல்லாம் தொழிலாளர் போராட்டங்களை நசுக்கிவிடலாம் என்று போலீசு கருதினால் அது பகல்கனவே.

அரியானா அரசு தன்பங்குக்கு இன்னும் கூடுதலாக தொழிலாளர்கள்மீது அடக்குமுறை செலுத்திவருகிறது. இதனைப் புரிந்து கொள்வது மிக அவசியம். தொழிலாளர்களுக்கு எதிரான இந்த வழக்கை நடத்துவதற்கு மாருதி ஆலை நிர்வாகம், அரசு தரப்பு வழக்கறிஞர் மட்டும் வாதாடவில்லை. குறிப்பாக, அரசே தனிச்சிறப்பாக 5.5 கோடி ரூபாய் செலவு செய்து கே.டி.எஸ். துளசி என்ற வழக்கறிஞரை நியமித்துள்ளது. இந்த வழக்கறிஞர் ஒரு முறை நீதிமன்றத்ததில் ஆஜர் ஆவதற்கு ரூ.11  லட்சம் கட்டணமாகப் பெற்றுள்ளார். இவ்வளவு செலவு செய்துதான் இந்த மோசடியான தீர்ப்பை அரியானா அரசு மாருதி கார் நிறுவனத்துக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. 148 தொழிலாளர்கள்  4 ஆண்டுகள் வரை சிறையில் விசாரணைக் கைதிகளாகவே, பிணைவழங்கப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்; இன்னும் 11 சங்க நிர்வாகிகளுக்கு பிணை வழங்கப்படவில்லை. முக்கியமாக இன்று 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் அரசின் தீவிரமான முயற்சியால்தான் நடந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்காக இவ்வளவு முயற்சிகளை அரியானா அரசு எடுத்துள்ளது? யாருடைய பாதுகாப்புக்காக? யாருடைய சொத்தைப் பாதுகாப்பதற்காக? மாருதி-சுசுகி ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறை-இலாபங்களை பாதுகாக்க!

தமிழகத்தில் உள்ள எந்த பத்திரிக்கையும் மாருதி தொழிலாளர் மீதான இவ்வளவு பெரிய அடக்குமுறையைப் பற்றி ஒரு வரிகூட பேசவில்லை. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக இவை அனைத்தும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகவும், கெயில் எரிவாயு திட்டத்துக்காகவும் மீத்தேன், கூடங்குளம், நியூட்ரனோ போன்ற பல்வேறு அழிவுத்திட்டங்களை தமிழகத்தின்மீது திணிக்கும்போதும் அரசு, நீதிமன்றம், போலீசு, இதே வகையான அடக்குமுறைகளைத்தான் செலுத்தி வருகின்றன. ஓசூரில் கமாஸ் வெக்ட்ரா, வெக் இந்தியா, குளோபல் ஃபார்மாடெக், ஏ.பி.எல்,லால், சாகாகீல், உமாமகேஸ்வரி, போன்ற பல ஆலைகளிலும் உரிமைக்கோரி போராடிய தொழிலாளர்களுக்கு எதிராக இதே வழியிலதான் கூட்டுசேர்ந்து அடக்குமுறை செலுத்தின, செலுத்தி வருகின்றன. ஆகையால், நீதிமன்றம், போலீசு, இந்த அரசு கட்டமைப்பு முழுவதுமே கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் செயல்படுகிறது என்பதை நாம் உணர்ந்து, இவற்றிற்கு வெளியே இந்த ஒட்டுமொத்த கட்டமைவுக்கு எதிரானதொரு எழுச்சியை கட்டியமைப்பதன் மூலமாகத்தான்  தொழிலாளர் வர்க்க உரிமைகள், உழைக்கும் மக்களின் அடிப்பபடைத் தேவையை பாதுகாக்க முடியும்.

மாருதி ஆலைத் தொழிலாளர்கள் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியாகப் போராடி வருகின்றனர். குர்கான் – மானேசர் தொழிலாளர்கள் 9-ம் தேதிமுதல் உணவுப் புறக்கணிப்பு, ஆலைவாயில்கூட்டங்கள் போட்டு இந்த தீர்ப்பைக் கண்டித்து வருகின்றனர்; மாருதி தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒருமித்த வகையில் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது. நீதியும் சட்டமும் வெறும் மாயை என்பதை உணர்ந்து வருகின்றனர். இந்த சட்டத்திடமிருந்து இது போன்ற ஒரு தீர்ப்புதான் வரும் என்பதை உணர்ந்தும் வருகின்றனர். இனி ஒன்றுதான் தீர்வு, குர்கான் முதல் ஒசூர் வரையிலான தொழிலாளர்கள் ஒன்றிணைக்கப்படவேண்டும்! முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு அது பெரிய அடியாக அமையும். அடுத்து அதற்கு சவக்குழி தோண்டுவதற்கான தொடக்கமாகவும் இருக்கும்!

அந்த வகையில், மாருதி தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்த நீதிமன்ற அரசுக்கட்டமைப்புக்கு வெளியே ஒரு தொழிலாள வர்க்க எழுச்சியை நாம் உருவாக்குவோம் என்ற அடிப்படையில் அறைகூவி அனைவரையும் அழைக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தருமபுரி -கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784


Judiciary and police not for us! Save Maruthi Suzuki Workers!

Statewide Protest

On March 16, 2017 at 5 p.m. near Ram Nagar Anna Statue, Hosur

Dear Workers!

On March 10, Once again the Delhi-Gurgaon Sessions court proved that, the judiciary, police and entire state machinery is against working people. In the judgment of criminal case against Maruthi-Suzuki workers (MSW) the court released 117 workers are innocence and announced that 31 workers including entire body of the MSW union are criminals. Among the 31 workers, the crime of murder is imposed on 13 workers and the crime of violence, setting fire and looting. The quantum of punishment for these crimes the 31 workers will be held on coming March 17.

Conspiracy of State machinery and Owners!

On 18.07.2012, Violence was erupted in the Factory of Maruthi-Suzuki Car Company which was located in Manesar industrial estate near New Delhi. This violence and setting fire was performed by the hundreds of goons arranged by the management of this company. In this violence a HR officer, Mr.Avanishdev was dead. By name of the death the management terminated 2,300 workers and 148 were arrested by the false case of murder, violence, setting fire, looting.

The Maruthi-Suzuki workers were demanding Hariyana Government, to arrange an Enquiry Committee leading by the present Judge. Not only the Haryana Government rejected the plea of workers, but also opposed to give bail the workers in the court. By the reason the workers took bail by hard struggle in the court for a long time of 3 ½ years.

But, in the name of Maruthi-Suzuki violence, the Haryana Government and the owners of Multi-National Companies (MNCs) jointly restricted the workers unions in the hundreds of MNCs situated in the industrial area of Gurgaon-Manesar.

Collaboration of Police-Judiciary-Managements!

In every stages of the trail of this case, it was witnessed that the above collaboration actively tried to suppress the workers movement. The police blatantly lied in the court that in the violence of the workers 90 police men and managing officers of Maruthi-Suzuki were injured, but, no one worker was not. The court accepted it. The same court released 117 accused workers have no offence. Then, who was injured the officers, particularly the striking force police men? It become clear that the accusation of gang violence was fabricated by the police.

The evidences and witnesses produced by the police in the court are fake and guilty. Majority of the witnesses gave confessions in the court. And they openly stated in the court that they were not at the spot of violence and police forced them to give false witness. The postmortem report of the diseased officer was not proved the murder. The role of the 13 workers who are subjected to crime does not establish beyond doubt. The Gurgaon Court has accused the all workers despite many loopholes in the ‘preparation’ of police.

What is the lesson to learn?

The judiciary, police and the entire state machinery is against working people. Each and every day the Capitalist terrorism is killing thousands of workers by the accidents in factories, unsafe working conditions. The labour department is unfit to sake the hair of corporate owners and and buckling like worm in front of the corporate owners who is flush the employment of lacks of workers and torturing, threatening the workers to do hard work and banning the workers union.

The Labour department which is Betraying workers trying to form a union, sightseeing the owners attacks the union and getting them to bribery and the Judicial system which covers might makes right eye are not save us. The police threaten workers by registering false cases like from murder to riot. Why we have to stoop to these? It’s time to stand united working class. The unity of working class is protecting not only to Maruthi workers, but the entire working class!

Let us unify the working class! Defeat the Capitalist terrorism!

New Democratic Labour Front
Krishnagiri – Dharmapuri – Salem Districts.
For Contact: 97880 11784 – ndlfhosur2004@gmail.com


న్యాయ స్థానములు, పోలీసులు మనకోసం కాదు!
మారుతి కర్మాగర కార్మికులను రక్షించెదము!

రాష్ట్రం పూర్తిగ ఆర్బాటం
2017 మార్చి 16 సాయంకాలం 5.00 గంటలకు
రామనగర్ అణ్ణాశిల ప్రక్కన హొసూరు.

ప్రియమైన కార్మికులారా!
న్యాయస్తానము, పోలీసులు, ప్రభుత్వ నిర్మాణము పూర్తిగ కష్ఠపడు ప్రజలకు విరుద్దం అనుట మార్చి 10 తేదిన డిల్లినందు గుర్కాన్ జిల్లా క్రిమినల్ న్యాయస్తానము మరల ఒక్కసారి నిరూపించినది. మారుతి కర్మాగార కార్మికుల పైన నడపించుచున్న క్రిమినల్ కేసునందు 117 మంది కార్మికులను విడుదల చేసిన న్యాయస్తానం 31 కార్మికులను అపరాదిలుగ ప్రకడించినది. వీరులో 13 మంది హత్య అపరాదులని 18 మందిపై హింసాకాండం, దోపిడి తగల పెట్టుట వంటి నేరములు మోపబడినది. ఈ నేరములకు తగిన దండన వచ్చు మార్చి ౧౭వ తేది నందు ప్రకటించునట్లు తెలియపరచినది.
ప్రభుత్వము-మొదళాలిలు దిట్టమేసిన తంత్రం!

గడచిన 18.07.2017 నందు డిల్లి మనేసర్ పారిశ్రామిక ప్రాంతములొ నడపుతున్న మారుతి సుజుకి కారు కర్మాగారములో తగరాలు ఏర్పడినది. యాజమాన్యం సూరారు మంది గూండాలను కర్మాగారం లోపలికి రప్పించి ఈ హత్యాకాండమును నిప్పంటించుట వంటి అసంబవములను నడపించినది. ఈ అసంబవములో అవానిష్ దేవ్ అను హె.ఆర్. అధికారి చనిపోయినాడు. ఈ చావును కారణముగా చెప్పి 2,300 కార్మికులను పనులనుండి తొలగించినారు. 148 కార్మికులపై హత్యా, నిప్పంటించుంట, దోపిడి, హత్యాకాండం వంటి కేసులు పదవిచేసి జైలునందు పెట్టినారు.

ఈ అసంబవమునకు కారణం ఎవరు? అదికారిని చంపినది ఎవ్వరని విచారించు సుప్రీం కోర్టు న్యాయాదిపతి అద్యక్షతన విచారణ కమిసన్ జరపవలయునని కార్మికులు కోరు కొనుదానిని అర్ధం చేసుకొనక రాష్ట్ర ప్రబుత్వం నిరాకరించినది. పైగ ఖైదు చేయబడెన కార్మికులను జామీనునందు విడవరాదని న్యాయస్తానములో పోరాడినది. దీనినుండి కార్మికులు కొన్ని సంవత్సరములు పోరాడినపిదప జామీను దొరకినది. ఈ అసంబవమును వాదుకొనిన గుర్కాన్-మానేసర్ పారిశ్రామిక ప్రాంతములో నడపుతున్న నూరారు బహుళజాతి కంపెనిలలో కార్మిక సంఘములు స్థాపించక పోవు సందర్బములలో హరియాన రాష్ట్ర ప్రభుత్వం – బహుళజాతి కంపెనిలు చేతులుకలిపి నడపుతున్నారు.
పోలీసు-మొదళాలిలు-న్యాయస్థానములు ఉమ్మడి!

బ్రదుకు జీవితములో ఒకోక్క సంభవములో ఈ ఉమ్మడి నడవడికలు కార్మిక వర్గ సంఘములను నులిపిటను తీవ్రముగ ప్రయత్నం చేయుట కన్నుల ముందు తెలిసినది. కార్మికుల తగరాలులలో 90 మంది పోలీసులు మరియు మారుతి అధికారులు గాయపడినట్లు చెప్పిన పోలీసు, ఓకేఒక కార్మికునకు కూడ చిన్నగాయమోకాని, గీతనేకాని ఏర్పడలేదని అపద్దమును చెప్పినది. దీనిని న్యాయస్తానం అంగీకరించినది. కాని ఈ న్యాయస్థానము 148 మందిలో 117 మంది నిరపరాదులని విడుదలచేసెనది. అట్లున్న 90 అధికారులకు-ముఖ్యముగ స్ట్రైకిం ఫోర్స్ పోలీసులకు గాయములను ఏర్చరచినది ఎవ్వరు? గుంపు జగడములను క్రిమినల్ పోలీసు మూలముగనే నడచినదని తెలియపరచలేద!

పోలీసు తీసుకొచ్చిన సాక్షిలు, కాగితములు తప్పని పలుసందర్భములలో నిరూపించబడినది. పోలీసు తీసుకొని వచ్చిన సాక్షిలలో కొందరు సంబవం నడచిన స్తలమునందు లేదని, తప్పుసాక్షిచెప్పుమని నిర్బందించినారని న్యాయస్థానమునందే వాక్మూలము చెప్పినారు. చనిపోయిన అధికారి శవ పరిక్షలో హత్య అని నిర్ణయంచలేదు. ఇప్పుడు హత్యనేరమునకు గురియైన 13 మందికి బాగము ఏమనునదిని సందేహపరిస్థితిలో యున్నప్పడికి తీర్పునిలపడం లేదు. పోలీసు తయారింపులో యున్న ఇన్ని తూట్లను మీరి సంఘ నాయకులందరిని నేరస్తులని బావించిన గుర్కాన్ న్యాయస్థానం.
నేర్చుకోవలసిన పాఠం ఏమి?

పోలీసు-న్యాయస్థానములు మాత్రంకాదు, అన్ని ప్రభుత్వ యంత్రాంగములు ఉమ్మడిచేరి కష్ఠపడు ప్రజలకు వ్యతిరేకముగ యున్నది. కర్మాగార అపఘాతములు, అనురక్షిత పనిపరిస్తితిని మొదళాలి భయంగరవాదులు దినదినము వేలాది మంది కార్మికులను చంపి పూడ్చుచున్నది. లక్షలాది మంది కార్మికుల పనులను తీసి, మానసికముగ హింసించి హత్యవెర్రి ఆట వేయు కార్పరేట్ మొదళాలిల చిన్నవ్రేలు కదలించడానికి చేతకాని లేబర్ డిపార్టుమెంట్ (కార్మిక శాఖ).

సంఘం స్థాపించాలని ప్రయత్నించిన కార్మికులను చూపించు, సంఘము నడపించు నాయకులపై నడవడికలను ఎత్తు యాజమాన్యాం వేడికలను చూచు లేబర్ డిపార్టుమెంట్, మొదళాలిలు చెప్పినదే చట్టం అని కల్లుమూసుకొనిన న్యాయస్థాం, మనలను రక్షించలేదని మనం నేర్చుకోవలసిన పాఠం.

హత్య కేసునుండి అల్లర కేసువరకు తప్పు కేసులు దాకల్‌చేసి కార్మిక వర్గామునకు భయపెట్టిన పోలీసులకు ఎందుకు భయపడవలేను? కోట్లాదికోట్ల కార్మికులు ఐక్యమైయుటకు సందర్పమిది. ఈ కార్మికుల ఐక్యం మారుతి కర్మికుల మత్రమే కాదు అన్ని కార్మికుల వర్గములను రక్షించి మొదళలి భయంకరవాదములను ఓడించెదము!

కార్మిక వర్గ ఐక్యతను కట్టికాపాడుదము! మొదళాలి భయంకరవాదమును ఓడించెదము!

నుతన ప్రజాస్వామ్య కార్మిక రంఘం
క్రిష్ణగిరి-ధర్మపురి-సేలం జిల్లాలు.
సంప్రదింపులకు: 97880 11784

பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்டுவோம் – கருத்துப் படங்கள்

217

குருதியில் மலர்ந்த மகளிர் தினம் !

புத்தகத்தை பார்த்து புதுக்கோலம் போடும் விழாக்காலமல்ல இது !
புதைந்து போன வாழ்வை புனரமைக்கும் புரட்சிகர தினம் !


பெண் : தன்னை மட்டுமல்ல சமூகத்தையே விடுவிக்க போராடுகிறாள் !

நந்தினி, நிர்பயா, ஹாசினி, ரித்திகா
பச்சிளம் குழந்தை வரை தொடரும் பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்ட அமைப்பாவோம் !


மெரினாவைத் தொடர்ந்து நெடுவாசலில் கிளர்ந்த பெண்களின் எழுச்சி வெல்லட்டும் !

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வோ, மாநிலத்தின் எடப்பாடியோ…
மண்ணை அடகுவைக்கும் மாஃபியாக்களாக மாறிவரும் ஆட்சியாளர்களுக்கெதிராக வீரம் செறிந்த போராட்டத்தில் பெண்கள் !


பெண்ணே எழு !

படிதாண்டு, கூந்தல் நறுக்கு
பூ வெறு, பொட்டழி, தாலி மறு,
மனமறிந்து மணம்புரி
நீ விரும்பினால் பெரு
தகாத மணமெனில் முறி
தடை மரபை உடை
அடிமை என்றால் அடி
கேட்டால் சொல்…

நீயும் நானும் ஒன்றென்று !


அழுகிப் போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிடு…

பார்ப்பன சனாதன இந்து மதத்தை விட்டு வெளியேறினார் டாக்டர் அம்பேத்கர் !
பார்பனியத்தை தோலுரித்தார் தந்தை பெரியார் !

அழுகிப் போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிட்டு…
புதிய சமூகத்தை கட்டியமைக்கும் மாற்று அரசியலுக்கான எழுச்சியே பெண்விடுதலையை சாதிக்கும் !


புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் !

இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். அல்லது புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்

தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம் உருப்படியாகாது !

-தந்தை பெரியார்

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி, தொடர்புக்கு : 97503 74810.

நமது அந்தரங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமா ? சிறப்புக் கட்டுரை

27

துணிக்கடைகளில் உடை மாற்றும் அறைகள், ஹோட்டல்களில் தங்கும் அறைகள், விடுதிகள், குளியலறைகள் ஆகிய இடங்களில் இரகசிய கேமராவை வைத்து ஆபாசப் படம் எடுக்கும் வக்கிரக் கும்பல்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இடங்களுக்குச் செல்லும் போது எச்சரிக்கையாக சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ’நமது வீட்டிற்குள் மட்டும் தான் நமது தனியுரிமைக்கும், அந்தரங்கச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு’ என்று எண்ணியிருந்திருப்பீர்கள். அப்படி ஒரு எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., இந்த நொடியிலும் கூட உங்களை ஸ்மார்ட் ஃபோன், அதிநவீன தொலைக்காட்சி மற்றும் கணினி மூலமாக உங்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து கொண்டிருக்கலாம். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ?

உங்கள் வீட்டில் உள்ள மின்னணு சாதனங்கள் அனைத்தின் இயங்குதளங்களுக்குள்  (Operating System) புகுந்து, உங்களது செயல்பாடுகளை ஒன்று விடாமல் பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பிவைக்கத்தக்க வகையில் மால்வேர்கள்(Malwares) என்றழைக்கப்படும் தீய மென்பொருள்களை உருவாக்கி அதனை வைத்து கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது சி.ஐ.ஏ. இதனை மறுக்க முடியாத ஆதாரங்களோடு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ் இணையதளம்.

விக்கிலீக்ஸைப் பற்றி பெரியதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. முதன்முதலில், கடந்த 2010ம் ஆண்டு உலகப் பெரியண்ணன் அமெரிக்காவின் வண்டவாளங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ். ஆப்கனிலும், ஈராக்கிலும் அமெரிக்கா நடத்திய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் மற்றும் வீடியோப் பதிவுகளை அமெரிக்க இராணுவத்தின் சர்வர்களில் இருந்து ’ஹேக்’ (Hack) செய்து வெளியிட்டது விக்கிலீக்ஸ்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சேவைப் பிடிக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெறி கொண்ட ஓநாய்களைப் போல இலண்டனில் இருக்கும் ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தின் வாயிலில் எச்சில் வழியும் நாக்கோடு இன்றும் காத்துக் கொண்டிருக்கின்றன.

அசாஞ்சேவைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவத்தின் காண்ட்ராக்ட் ஊழியரான எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் ( NSA) ‘ப்ரிஸ்ம்’ என்னும் இரகசிய உளவு நடவடிக்கை குறித்து கடந்த 2013-ம் ஆண்டு அனைத்து ஆவணங்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். அதன் மூலம் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், முக்கிய தொழிலதிபர்கள், பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்ற முக்கியஸ்தர்களின் கணினியிலிருந்து தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை திருடியதை அம்பலப்படுத்தினார். உடனடியாக அவரையும் கைது செய்யத் துரத்தியது அமெரிக்கா. ஸ்நோடன் வெளியிட்ட ஆவணங்களில், ரசிய அதிபர் புதினை ‘நாய்’ எனத் திட்டி ஒரு அமெரிக்காவின் தூதரக அதிகாரி அனுப்பிய மின்னஞ்சலையும் சேர்த்து அம்பலப் படுத்தியதாலோ என்னவோ, ரசியா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.

அதன் பிறகு தற்போது விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ எவ்வாறு நாம் உபயோகிக்கும் மின்னணு சாதனங்களின் மூலம் நம்மை வேவு பார்த்து, நமது அனுமதியின்றியே நமது அந்தரங்கங்களைப் பதிவு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதன் முதல் பகுதியை வால்ட்-7 என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ்.

நமது கணினியில் செயல்படும் விண்டோஸ் (Windows), மாக்(MAC), லினக்ஸ்(Linux) ஆகிய இயங்கு தளங்களில் உட்புகும் வகையில் மால்வேர்களை (Malware) உருவாக்கி, அதனையே நம்மைக் கண்காணிக்க உபயோகித்து வருகிறது சி.ஐ.ஏ. . நமது கணினியின் அனைத்துத் தகவல்களையும் திருடவும், அதன் வெப்கேமராவையும் , மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் நமக்கே தெரியாமல் உபயோகித்து ஒலி, ஒளிப்பதிவு செய்து, தனது சர்வருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பிக் கொள்ளவும் ஏற்ற வகையில் இந்த மால்வேர்களை சி.ஐ.ஏ, உருவாக்கியிருக்கிறது.

உங்கள் கைப்பேசி உங்களைக் கண்காணிக்கிறது

கணினியைப் போலவே நமது ஸ்மார்ட் போன்களின் (Smart Phone) இயங்குதளங்களாகிய ஆண்டிராய்ட் (Android), ஐ.ஓ.எஸ் (IOS), ஆகியவற்றிற்குள் புகுந்து ஆக்கிரமிக்கும்படியான மால்வேர்களையும், செயலிகளையும்(Apps) உருவாக்கியிருக்கிறார்கள். இந்தச் செயலிகளும் மால்வேர்களும் நமது அலைபேசியின் தகவல்களைத் திருடுவதோடு, நமக்குத் தெரியாமலேயே நமது செல்போனின் கேமராவையும், மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் ’ஆன்’ (ON) செய்து ஒளிப்பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பி வைக்கும்.

அது தவிர “ஜீரோ டேஸ்”(Zero Days) எனப் பெயரிடப்பட்ட இரகசிய நடவடிக்கைகளின் மூலமாக கடந்த ஆண்டு மட்டும் 24 ஆண்ட்ராய்ட் இரகசிய ஆப்களை சி.ஐ.ஏ. உருவாக்கியுள்ளது. இந்தச் செயலிகள் வாட்ஸப், டெலிகிராம், சிக்னல், வீபோ ஆகிய சமூக தகவல் பரிமாற்ற செயலிகளில் நாம் பகிர்ந்து கொள்ளும் குறுஞ்செய்திளையும், தொலைபேசி அழைப்புகளையும், வீடியோ அழைப்புகளையும், சி.ஐ.ஏ. சர்வருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கும். இதைப் போலவே ஐ.ஓ.எஸ்.-க்கான செயலிகளையும் சி.ஐ.ஏ. உருவாக்கியிருக்கிறது.

அடுத்தபடியாக, உங்கள் வீட்டு ஸ்மார்ட் தொலைக்காட்சியின்(Smart Television)  மூளைக்குள்ளும் கையை விட்டிருக்கிறது சி.ஐ.ஏ. கடந்த 2014-ம் ஆண்டிலேயே, சாம்சங் நிறுவனத்தின் எஃப் 8000 ரக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை ஊடுறுவுவதற்குத் திட்டமிட்டு, அத்திட்டத்திற்கு ”அழும் தேவதை” (Weeping Angel) எனத் திருநாமம் சூட்டியிருக்கிறது. ஸ்மார்ட்  தொலைக்காட்சிகளில், பயனாளரின் வாய் வழி உத்தரவிற்கிணங்க சேனல்களை மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ‘மைக்’கின் கட்டுப்பாட்டை தனது கையில் எடுத்துக் கொள்கின்றன சி.ஐ.ஏ. மால்வேர்கள். இந்த மைக்கை நமக்கே தெரியாமல் எப்போது வேண்டுமானாலும் ’உயிர்ப்பித்து’ நாம் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பதிவு செய்து இணையத்தின் மூலம் சி.ஐ.ஏ. சர்வருக்கு நேரடியாக அனுப்பும் வகையில் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் மென்பொருளிலும் மால்வேர்களின் மூலம் மாற்றம் செய்திருக்கிறது அமெரிக்கா. இதெல்லாம் ஹாலிவுட் படங்களில் கற்பனையாக பார்த்திருப்போம். இனிமேல் அவை வெறும் கற்பனையல்ல.

அமெரிக்க வல்லூரின் திருட்டுக் கண்கள் – சி.ஐ.ஏ.

உங்கள் கணினியையோ, அலைபேசியையோ நீங்கள் அதில் உள்ள இயங்குதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் மூலம் அணைத்து(Shut down) வைத்தாலும், அவற்றை உண்மையாகவே அணைய விடாமல், அவை அணைந்தது போன்ற ஒரு போலித் தோற்றத்தை இந்த மால்வேர்கள் ஏற்படுத்தும். ஆனால் பின்னணியில் மைக் மற்றும் கேமரா ஆகிய உபகரணங்கள் சி.ஐ.ஏ.வால் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அதைப் போலவே தொலைக்காட்சியை நீங்கள் ரிமோட் மூலம் அணைத்தாலும், அதன் மைக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டு, உங்கள் பேச்சுக்கள் பதியப்பட்டு சி.ஐ.ஏ.விற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்.

இதை விட முக்கியமாக, ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை ஒரு சாலை விபத்தில் மரணமடைந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொலை செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தைக் கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. பல நவீன கார்களில், கார் தயாரிப்பு நிறுவனங்கள், கார்களின் கட்டுப்பாட்டகத்தின் மென்பொருளை இணையத்தின் வழியாகவே மேம்படுத்தும் வசதியை வைத்திருக்கின்றன. அந்த வசதியைப் பயன்படுத்தி, கார்களின் மென்பொருளை ஹேக் செய்து அதனைத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் வேலையையும் சி.ஐ.ஏ. செய்திருக்கிறது. இதன் மூலம் சி.ஐ.ஏ.-வால் காரின் கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் தளர்த்தி தமக்கு எதிரானவர்களை சந்தேகத்திற்கிடமில்லாத படி கொலை செய்யவும் முடியும்.

சி.ஐ.ஏ.வின் இந்த பொறுக்கித்தன்ங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் நிறுவனர் அசாஞ்சே, சி.ஐ.ஏ.வின் இந்த நடவடிக்கைகளின் பின்விளைவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். சி.ஐ.ஏ இவ்வாறு உருவாக்கி வைத்திருக்கும் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட மின்னணு சாதனங்களைச் சிறிது ஹேக்கிங் தொழில்நுட்பம் தெரிந்த யார் வேண்டுமானாலும் எளிதில் தவறாக உபயோகித்துக் கொள்ள முடியும். அடுத்தவர்களின் அந்தரங்கத் தகவல்களை சேகரிப்பது, அதனைக் கொண்டு மிரட்டுவது, பணப் பரிவர்த்தனையை முடக்குவது, வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது என அனைத்து வகையான மோசடிகளையும் செய்ய முடியும். ஆகவே தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல, இது பெரும் இழப்பையும், துயரையும் ஏற்படுத்தப் போகும் செயல் ஆகும் என்று எச்சரிக்கிறார் அசாஞ்சே.

உலக நாடுகளை வேவு பார்த்த பெரியண்ணனின் டவுசரைக் கிழித்த ஸ்நோடன்

இதற்கு முன்னர் எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் ’பிரிஸ்ம்’ என்னும் தூதரகத் தகவல் திருட்டு நடவடிக்கை குறித்த ஆவணங்களை வெளியிட்டபோது, அதில் தமது நாட்டையும், தமது கணினியையும் உளவு பார்த்ததற்காக பிரேசில் நாட்டின் அப்போதைய அதிபர் தில்மா ரூசப், அமெரிக்காவிற்குப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். ரசிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். ஆனால் அப்போதைய மத்திய அரசு என்ன சொன்னது தெரியுமா?  “ இதெல்லாம் சர்வதேச அரசியலில் சாதாரணமாக நடக்கக் கூடிய விசயங்கள் தான்” எனக் கூறியது. சட்டீஸ்கரில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையை எதிர்த்து, ’மக்களின் உரிமைகளைப் பறித்து கனிம வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்காதே’ எனப் போராடினால், ”அது இந்திய இறையான்மைக்கு எதிரானது” என சவுண்டு கொடுக்கும் இதே அரசு தான் அமெரிக்க ஆண்டை தம்மை வேவு பார்ப்பதை அங்கீகரித்து, ”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!” என மம்மியைப் பார்த்த எம்.எல்.ஏ.-வாகப் பம்மியது.

தற்போது உலக மக்கள் அனைவரையும் வேவுபார்க்கும் அமெரிக்காவின் திட்டம் அம்பலப்படுத்தப்பட்ட போதும், ’தேஷாபிமானி’ மோடி தலைமையிலான மத்திய அரசு இது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் பதிவு செய்ய வில்லை. தங்களது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வேவு பார்ப்பது அயோக்கியத்தனம் என்றோ, இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் என்றோ வாய் திறக்கவில்லை.

அதற்குப் பதிலாக, அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் அமெரிக்காவின் இணைய வலைக்குள் இந்திய மக்கள் அனைவரையும் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ’மாமா’ வேலையைத் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார் மோடி. அது தான் மோடியின் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம். ஊர் ஊருக்கு சாலை இருக்கிறதோ இல்லையோ, வை-ஃபை யும், இண்டெர்நெட்டும் கொண்டு வந்துவிட வேண்டும் என மோடி கும்பல் துடியாய் துடிப்பதன் நோக்கம், மக்கள் அனைவரையும் தமது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது தான்.

ஏற்கனவே, ஒட்டு மொத்தக் குடிமக்களுக்கும் ‘மாட்டிற்குச் சூடு போடுவது’ போல் கை, கண் அடையாளங்களை எடுத்து ஆதார் அட்டையைக் கொடுத்து அதனை அவரவர் வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கிறது இந்திய அரசு. நமது அன்றாட நடவடிக்கைகளில் அவசியமானதாக மாற்றப்பட்டுள்ள ஆதார் அட்டைக்கு நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களால் தவறாக உபயோகிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் அம்பலமானது.

நம்மைக் கண்காணிப்பு வளைக்குள் கொண்டு அந்து நமது தகவல்களைத் திருடி வியாபாரம் செய்யக் காத்திருக்கும் கூகுள், பேஸ்புக், மைரோசாப்ட் நிறுவன்ங்களின் தலைமை அதிகாரிகளான சுந்தர் பிச்சை, மார்க் சூக்கர்பெர்க், சத்யா நாதெலா வுடன் டிஜிட்டல் இந்தியா ‘மோடி’

நமது தனித்தன்மை வாய்ந்த தனிப்பட்ட தகவல்கள் எப்படி தனியார் நிறுவனங்களுக்கு கசியவிடப்பட்டன என்பது குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஸ்க்ரோல்.இன்(scroll.in) என்னும் இணையதளம் கேட்ட போது, அது அரசு இரகசியம் எனக் கூறி அது குறித்த தகவலை வெளியிட மறுத்தது மத்திய அரசு.

முதலாளிகளுக்கு  நமது சேமிப்பை அள்ளிக் கொடுக்க, தற்போது நம்மைப் பணமில்லாப் பரிவர்த்தனையை நோக்கி முட்டித் தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. பணமதிப்பு நீக்கத்தின் மூலமும், பணப் பரிவர்த்தனைக்கு எதிரான வங்கிகளின் அதிரடி நடவடிக்கைகள் மூலமும், இணையம் மற்றும் மொபைல் ஆப்புகளின் வழியான பரிவர்த்தனைகள் மூலமும் நம்மை அமெரிக்காவின் இணைய கண்காணிப்பு வலைக்குள் தள்ளிவிடுகிறது மோடி அரசு.

நாம் நமது அண்டை வீட்டுக்காரரைக் கூட நமது தனிப்பட்ட விவகாரங்களுக்குள் தலையிட அனுமதிப்பதில்லை. ஆனால் எங்கோ இருக்கும் அமெரிக்கா நமது படுக்கையறை வரை நமது ஒப்புதல் இன்றியே வந்து நமது அந்தரங்கங்களைப் படமெடுத்துக் கொள்ள அனுமதிக்கப் போகிறோமா?  அமெரிக்க ஆண்டையின் அத்துமீறல்களுக்கு இந்திய ஆளும் வர்க்க அடிமைகள்  வேண்டுமானால் ஒத்துழைக்கலாம், உழைத்து உணர்வோடு வாழும் நாம் ஒத்துழைக்கலாமா?

– நந்தன்

மேலும் படிக்க:

சீர்காழி : ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் போலீசு

0

மிழகத்தின் காவிரி டெல்டாவை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் ONGC – யை கண்டித்து 14-03-2017 அன்று தாண்டவன்குளம் மற்றும் அதனை சுற்றியிருக்கும் கிராம மக்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுத்த காவல்துறை கிராம மக்களுக்கு அனுப்பிய குறிப்பாணை.

தடையை மீறி 14/03/2017 – அன்று நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையபாளையம் தாண்டவன்குளம் பகுதியில் ஒ.என்.ஜீ.சி, ஹைட்ரோ கார்பன் இயற்கை பேரழிவு கொள்ளை திட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ் அராஜகமாக  நடந்து கொண்டது. இதனை செய்தியாக மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி கொடுத்த தகவலை, வினவுக்கும் முகநூல் பதிவுக்கும் மக்கள் அதிகாரம் ஆதரவாளர் தோழர் வீரசோழன் அனுப்பியுள்ளார். இத்தகவலை முகநூல் பதிவில் பார்த்த புதுப்பட்டினம் காவல்துறை ஆய்வாலர் முருகேசன் தோழர் வீரசோழனை அழைத்து,”எப்படி நீ காவல்துறையை பற்றி எழுதலாம் இனிமேல் இப்படி எழுதினால் உன்மேல் நடவடிக்கை எடுப்பேன் ஜாக்கிரதையாக இரு” என்றும் ”F.I.R. போட்டுவிடுவேன்” என்றும் மிரட்டினார்.

தகவல்
ஒருங்கினைப்பாளர் ரவி
மக்கள் அதிகாரம். தொடர்புக்கு 9843480587

***

இன்று (16.03.2017 )சீர்காழி தாலுக்கா தாண்டவன்குளம் பகுதியில் இயற்கை எரிவாயு பேரழிவு கொள்கைக்கு எதிராக நடக்க இருந்த போராட்டம் போலீசின் பீதியூட்டலாலும், அச்சுறுத்தலாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தாண்டவன்குளத்திற்கு வரும் சாலை பகுதியிலுள்ள மைதானம், பண்ணீர்கோட்டகம், பழையபாளையம், தாண்டவன்குளம், புதுப்பட்டினம்  என 15 கீ.மீ வரை சீர்காழியின் டி.எஸ்.பி  தலைமையில் 500க்கும் மேற்ப்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுக்கின்றனர். போலீசு கிராமம் முழுவதையும் ரீமாண்ட் செய்துவிடுவோம் யாரும் போராட்டத்திற்க்கு வரக்கூடாது என்று எச்சரிப்பதுடன், ஊர் நாட்டாமை, முக்கியஸ்த்தர்கள், போராட்டக்குழு என அனைவரையும் மிரட்டி போராட்டம் நடத்த கூடாது என்று எழுதிவாங்கி கொண்டனர். போலீசின் பீதியூட்டலால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். ஒரு பக்கம் போலீசு சில அமைப்பு தோழர்களை கைது செய்து கொண்டு இருக்கின்றது, இருப்பினும் இன்னோரு பக்கம் போராட்டத்தை உறுதி படுத்த மக்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்று கொண்டே இருக்கின்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
சீர்காழி

மணப்பாறை – தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0

ணப்பாறையில் 15-03-2017 புதன்கிழமை காலை 10-00 மணிமுதல் மாலை 05-00 மணிவரை மக்கள் அதிகாரம் தோழர் பாண்டியன் தலைமையில்
துப்பாக்கிச்சூட்டுக்கு மீனவர் பலி ! காவிரி துரோகத்துக்கு விவசாயிகள் பலி !!
கோக்கோ கோலாவிற்கு தாமிரபரணி பலி ! ஹைட்ரோகார்பனுக்கு நெடுவாசல் பலி !!
புதிய பொருளாதாரக் கொள்கையின் தனியார் மயம், தாராளமயம், உலகமயத்திற்கு நாடே பலி !
என்ற முழக்கத்தை முன்வைத்து மணப்பாறை பெரியார் சிலை அருகில் தர்ணா போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு  காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் 13-03-2017 அன்று எழுத்துப்பூர்வமாக அனுமதிவழங்கியுள்ளனர்.

தர்ணா போராட்டம் குறிப்பிட்ட தேதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் 15-03-2017 அன்று காலை 10-00 மணியளவில் அனுமதி மறுக்கப்பட்டது என வாய்மொழி உத்தரவு மூலம் காவல் துறை தடுத்தனர். இதில் காவல்துறை அதிகாரிகளுக்கும், மக்கள் அதிகார தோழர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டமாக மாற்றி நடப்பட்டது.

தோழர் இரும்பொறை பிச்சை, நகர தலைவர், திராவிடர் கழகம்
திரு மணவை துரை காசிநாதன் திமுக தலைமைகழக பேச்சாளர்
தோழர் பழனிச்சாமி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்
தோழர் ந. பிரபாகரன் மாநில து. பொதுச்செயலாளர், முற்போக்கு மாணவர் கழகம்
தோழர் வீ. தனபால் திராவிடர் விடுதலைக்கழகம்
திரு தே. கோபி புதிய தமிழகம், புறநகர் மாவட்டச் செயலாளர்
தோழர். கராத்தே வீர. முருகன் மாவட்டச் செயலாளர், ஆதிதமிழர் கட்சி
வழக்கறிஞர் கு. தமிழ்மணி சமூக ஆர்வலர்
திரு சுப்பிரமணியன் சேர்மன் சூர்யாநர்சிங்கல்லூரி, வையம்பட்டி
கவிஞர் பசுலுதீன், தலைவர், மணவைத்தமிழ்க் கழகம்
கவிஞர் வே. பால சுப்பிரமணியன், மணவை தமிழ்ச்சங்க பொருளாளர்
கவிஞர் அறிவுச் செல்வன் சமூக ஆர்வலர்
தோழர் வை.கண்ணன் மக்கள் அதிகாரம், மணவை

ஆகிய தோழர்கள், மாற்றுக் கட்சி நண்பர்கள் மற்றும் முற்போக்கு ஜனநாயக் சக்திகள் கலந்துகொண்டு தங்களது கருத்தை பதிவு செய்தனர். நிறைவாக தோழர்காளிதாஸ் நன்றியுரை ஆற்றினார்.

மக்கள் அதிகார தோழர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சுமார் 30 பேரை கைசெய்து மாலை 06:00 மணிக்கு விடுதலை செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
மணப்பாறை. தொடர்புக்கு – 98431 30911

ஷாப்பிங் மால்களுக்காக தரைக்கடை வணிகர்களை அழிக்கும் வேலூர் மாநகராட்சி

0

வேலூர் மாவட்ட நிர்வாகமே ! மாநாகராட்சியே !! தரைக்கடை வியாபாரிகளுக்கு கட்டிய கடைகளை மாநகராட்சியே ஏற்று நடத்து என்று 13.03.2017 அன்று திங்கள் மாலை வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.ஜ.தொ.மு.-வின் கிளை சங்கமான வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தரைக்கடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், அடுக்கம்பாறை பகுதி தரைக்கடை வியாபாரிகள் மற்றும் ம.க.இ.க. தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

பு.ஜ.தொ.மு.-வின் மாவட்ட இணை செயலாளர் மற்றும் இச்சங்கத்தின் செயலாளர் தோழர் சரவணன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.  வேலூர் லாங் பஜாரில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக  வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளை போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறி அப்புறப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். பின்னர் வேறு இடத்தில் கடைக்கட்டி தந்து அதை தனியாரிடம் ஒப்பந்தம் என்ற பேரில் டெண்டர் விட்டு  தனியார் பகல் கொள்ளைக்கு மாநகராட்சியே துணை நின்றது இதை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்தாக  இரு பகுதி சங்க செயலாளர்கள் மாநகராட்சி மற்றும் போலீசு ஆகியோர் முன்பு எவ்வாறு நடத்தினர் என்றும் இச்சங்கத்தில் இணைந்த பிறகு எவ்வாறு சுயமரியாதையுடன் தொழில் செய்து வருகிறோம் என்றும் விளக்கி பேசினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் இவ்வார்ப்பாட்டம் கடந்த மாதம் நடத்தப்படிருக்க வேண்டியது, சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று சொல்லி போலீசு மறுத்துவிட்டதை அம்பலப்படுத்தினார்.

சாதாரண உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக போராடும்போது சட்டம் ஒழுங்கை காட்டும் போலீசு இன்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் இந்நாட்டை கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல்களுக்கு பாதுகாப்பு தருகிறது. சாதாரண வியாபாரிகளுக்கு போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம் இங்குள்ள பெரிய பெரிய உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் முன் சாலைகளை மறித்து நிற்கும் வாகனங்களை தடுக்காமல் அவற்றுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இது எந்த வர்க்கத்திற்கான அரசு இதில் உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை நடைமுறை ஆதாரமாக விளக்கினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு.-வின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் இவ்வியாபாரிகள் தினந்தோறும் வட்டிக்கு கடன் பெற்று பிழைப்பு நடத்துவதையும், இத்தொழில் என்பது சதவீத சாதாரண உழைக்கும் வர்க்கத்துக்கு எந்தளவு இன்றுள்ள விலைவாசியில் பயனுள்ளதாக உள்ளது என்பதையும் விளக்கிப்பேசினார். இதை தனியார்மயம் தாராளமயம் உலகமயம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர்களில் இவர்களின் வாழ்வுரிமையை பறித்து கொள்ளை கும்பலிடம் தாரை வார்க்கிறது என்பதையும் விளக்கிக்கூறினார். இன்று அனைத்து பிரிவு மக்களும் போராடுகிறார்கள், போராட்டம் தான்  நம் அனைவருக்குமான தீர்வு என்று கூறினார்.

இறுதியாக தோழர் சுப்பிரமணி நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஒரு நாள் தனது வியாபாரத்தை இழந்தாலும் அவர்களுடைய தொழிலே போய்விடும் என்ற நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம்)
வேலூர் மாவட்டம். தொடர்புக்கு : 84897 35841

ஆறு வருசத்துதல மூணு சாவு – ஆனாலும் குடும்பத்த காப்பாத்தணுமே !

1

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 5

ழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னைச் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் இளநீர் கடை வைத்திருக்கும் சத்தியவாணியைச் சந்தித்தோம்.

“மகளிர் தினமா? கேள்வி பட்டுருக்கேன். அது எங்க நடக்குதுன்னு தெரியாது. நான் போனதுமில்ல. எந்த நல்ல நாளு வந்தாலும் எனக்கு ரொம்ப சந்தோசம்தாங்க. ஏன்னு கேட்டா நாளு கெழமையில இன்னும் நாலு எழநி கூட விக்குமே!. சரி அது போகட்டும் உழைக்கும் மகளிர் தினம் கொண்டாற்றீங்கன்னா நீங்க எங்கள நெதமும் கொண்டாடனும்.பொண்ணுங்களுக்கான நல்ல நாளுன்னா சந்தோசமா எதுனாச்சும் சொல்லனும் எங்கிட்ட அப்படி ஒன்னும் இல்லையே என்னத்த சொல்ல.”

சத்தியவாணிக்கு வயது 46. திருமணம் செய்துக் கொள்ளாமல் தனி ஒருவராக ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தூக்கிச் சுமக்கும் போராட்ட மனுசி. இதே இடத்தில் 40 வருடங்களுக்கு முன் அவர் அப்பா, அம்மா ஆரம்பித்த இளநீர் கடையைக் கடந்த 17 வருடங்களாக நடத்தி வருகிறார். வெளியூரிலிருந்து லாரியில் கொண்டு வரப்படும் இளநீரை, நடு இரவிலும் தனி ஆளாக நின்று இறக்கி பத்திரப்படுத்திவிட்டு தன்னையும் பாதுகாத்துக் கொண்டு வாழும் தைரியமான பெண்.

“கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு கொள்கையெல்லாம் கெடையாதுங்க. எல்லாரப் போலவும் கல்யாண பன்னிக்கிட்டு புருசம் புள்ளையோட வாழ ஆசப்பட்டவதான் நானும். 1998-ல அப்ப எனக்கு 25 வயசு. கல்யாணம் பேசி அதுக்கான வேலைங்க சந்தோசமா நடந்துட்டு இருந்துச்சு. கல்யாணத்துக்கு நாலு நாள் இருக்கறப்ப எங்க அம்மா இதே எடத்துல அடிப்பட்டு எறந்து போச்சு. என்ன செய்ய ஏது செய்யன்னு ஒன்னும் புரியல. நாலு மாசம் தள்ளி வச்சுக்கலான்னு மாப்ள வீட்டல சொன்னோம் அவங்களும் ஒத்துக்கிட்டாங்க.”

“அம்மா அப்பா ரெண்டு பேருமே நடு ராத்திரி எழநி எறக்க வந்தாங்க. எறக்குனது அசதியாருக்குன்னு அப்பா கொஞ்சம் கண்ண மூடிருக்காரு ,அம்மா வெத்தல போட்டுட்டு காவலுக்கு உக்காந்திருக்கு. எந்தப் பாவியோ எமனப்போல எங்குட்டுருந்து வந்தானோ அடிச்சு தூக்கிட்டான். அஞ்சு நிமிசத்துல அப்பா மடியிலேயே  அம்மா உயிரு போச்சு. ஸ்டேசனுக்கு அலஞ்சு பாத்தோம் யாருன்னே கண்டுபிடிக்க முடியலன்னு சொல்லிட்டாங்க. அம்மா செத்து கல்யாணம் தள்ளிப் போயி என்ன செய்றதுன்னு முழி பிதுங்கி நிக்கிறப்ப ஆண்டவன் அடுத்த பாரங்கல்ல நடு மண்டையில நச்சுன்னு போட்டான்.”

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, 6 வயது வளர்ப்பு குழந்தை இதுதான் சத்தியவாணியின் குடும்பம். பெற்றோர் இறந்ததால் அனாதையான மாமன் மகனை 3 வயதிலிருந்து சத்தியவாணியின் அம்மா எடுத்து வந்து வளர்த்துள்ளார். அம்மா இறப்புக்கு பிறகு தன் பிள்ளையாகவே வளர்த்துள்ளார் சத்தியவாணி. இந்தச் சூழலில் சோதனைகளும் அவரை துரத்துவதை விடவில்லை.

“பட்ட கால்லேயே படும் கெட்ட குடியே கெடுமுன்னு பழமொழி ஒன்னு சொல்லுவாங்களே அது எனக்குதாங்க பொருந்தும். சரி போனது போச்சு, ஆக வேண்டியத பாக்கலான்னு திரும்பவும் கல்யாணத்துக்கு நல்ல நாள் பாக்க ஆரம்பிச்சாங்க. அப்ப அண்ணெ லவ் பெயிலியருன்னு மண்ணன்னெய ஊத்தி கொளுத்திக்கிட்டான். தலையில இருந்து கால் வரைக்கும் சரி பாதியா வெந்துப் போச்சு. ஆறு மாசம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா நடந்து உயிரக் காப்பாத்தி கொண்டாந்தேன். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. ஆனா அங்கங்க நரம்பு சுருட்டி இழுத்துகினு பாக்க கோரமா இருப்பான். கையில வெரலெல்லாம் கோணிக்கிச்சு. எந்த வேலையும் செய்ய முடியாது.”

“வீட்டுல நான் ஒரு பொம்பள வயசான அப்பா, முடியாத அண்ணன், வெவரம் இல்லா தம்பி, வயசு கொழந்த எல்லாரையும் அம்போன்னு விட்டுட்டு கல்யாணம் செஞ்சுக்க மனசு வரல. அப்பா ஆத்தா இல்லாதப் புள்ளைய நெனச்சு பாருங்க, அம்மாவும் போச்சு நானும் கல்யாணம் பன்னிட்டு போனா எங்கன்னு போவும் அந்தக் கொழந்த. மாப்ள வீட்டுல ஒரு வருசம் போலக் காத்துருந்தாங்க வேற எடம் பாத்துக்கச் சொல்லிட்டேன்.”

“அம்மா சாவரதுக்கு முன்ன வரைக்கும் வீட்டு வேலை மட்டும் செய்வேன். எந்த வெளி வேலைக்கும் போனதில்ல. அம்மா செத்து தெவசம் முடிஞ்சுச்சு இனிமே வீட்டுல இருக்க கூடாது தொழில கத்துகனும்னு அப்பாக் கூட நானும் கொஞ்ச நேரம் கடைய பாத்துக்க ஆரம்பிச்சேன். சரியா மூனே வருசம்தான் 2001-ல அப்பா எறந்துட்டாரு. வேலையே செய்ய முடியலன்னாலும் ஆதரவா இருந்த அண்ணனும் அடுத்ததா போய் சேந்துட்டான். ஆறு வருசத்துல மூனு சாவு தாங்க முடியல. நானே ஒரு நட பொணமா மாறிட்டேன்.”

“கெட்டது நடந்த வீட்டுல ஒரு நல்லது நடந்தா கொஞ்சம் நெலம மாறுன்னு நெனச்சேன். சொந்தத்துல ஒரு பொண்ண பாத்து தம்பிக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன். சொந்தக்கார புள்ள நம்மள நல்லா பாத்துக்குமுன்னு நெனச்சேன். நெனப்பு பொய்யாப் போச்சு. எந்தம்பியும் ரொம்ப பாசக்கார பய. என்ன பாசம் இருந்தாலும் தாம்பொண்டாட்டி புள்ளன்னு வரும்போது நாம கொஞ்சம் தூரம்தான்.”

“ஒரு வருசத்துக்குள்ள குடும்பத்துல எண்ணிப் பாக்க முடியாத பிரச்சன. தனியா போய்ட்டான். கொஞ்சமா குடிச்சவன் முழு நேர குடிகாரனாயிட்டான். அரிசி, பருப்பு அத்தனையும் நான் கொடுக்கனும். மொளகா, மல்லியக் கூட அரச்சு கொடுக்கனும். தம்பி நல்லாருந்தா போதுமுன்னு அத்தனையும் செஞ்சேன். 2 வருசமாச்சு அவனும் என்ன விட்டுட்டு போய்டாங்க. அவன நெனச்சு நெனச்சு உருகொலஞ்சு போய்டேன். கழுத்தே தெரியாது அந்த அளவு குண்டா இருந்தேன். வேல செய்ய முடியல ஒடம்ப கொறையனுமுன்னு என்னான்னாவோ செஞ்சு பாத்தேன். எந்தம்பி செத்தான் தானா உடம்பு எறங்கிப்போச்சு.”

உறவினர் ஒருவர் இரட்டை பெண் குழந்தைகளை வைத்து பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டார்.  அந்தக் குழந்தையை அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார். தம்பி தனி குடித்தனம் சென்றதில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் குழந்தையை வைத்து சரிசெய்ய நினைத்தார்.  பெண் குழந்தை என்பதால் தான் அம்மாவாக பாவித்து ஆசையாக வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

“கல்யாணம் தான் ஆகல ஆனா ரெண்டு பிள்ளைங்களுக்கு தாயாயிட்டேன். மனசார சொல்றேன் இந்தக் கொடுப்பன யாருக்கு வரும் சொல்லுங்க. (பெருமையோடுஅழகாக சிரிக்கிறார்) எம்பொண்ணும் என்ன அம்மான்னுதான் கூப்பிடுவா. மாமா பையனும் என்ன அம்மான்னுதான் கூப்பிடுவான். இப்ப அவனும் ஒரு குடும்பமாயிட்டான். தம்பி எறந்ததால தம்பி பொண்டாட்டியும் எங்கூடத்தான் இருக்கா ஆனா நாங்க இருக்கும் போது இந்தப் பொண்ணு எதுக்கு வளக்குறேன்னு அப்பப்ப வம்பு பன்னுவா. யாருக்காகவும் எம்பொண்ண நான் விட்டுத் தர மாட்டேன்.”

எம் பொண்ண ஒரு வயசுலேருந்து வளத்துகினு இருக்கேன். நாலு கட தள்ளிதான் அவளப் பெத்த அப்பா கட போட்ருக்கான். அவனாண்ட ஒர்ரூவா எனக்கு வேணுன்னு போய் நிக்க மாட்டா. எல்லா நல்லது கெட்டதும் நானே பாத்துப்பேன். படிப்பு வரல எத்தனேயோ சொல்லிப் பாத்துட்டேன் படிக்க மாட்டேன்னுட்டா. இப்ப ஒரு கடைக்கி வேலைக்கிப் போறா சம்பளத்த அப்படியே எங்கிட்ட குடுத்ருவா. அவளுக்கு நல்லபடியா ஒரு கல்யாணத்த பன்னிப் பாக்கனும் அதுதான் என் கடைசி ஆசை.”

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏரோபிக் அண்ட் ஃபிட்னஸ் அசோசியேசன் ஆப் அமெரிக்கா என்ற அமைப்பு அங்கீகரித்த ‘பெல்லேடி’ என்ற நடனத்தை சென்னை ஜூம்பா நடன அமைப்பு தமிழகத்தில் பல இடங்களில் அறிமுகம் செய்திருக்கிறதாம். இந்த நடனம் ஆடினால் பெண்களின் மன அழுத்தம் குறைந்து இலகுவாக காணப்படுவார்களாம். சத்தியவாணி போன்ற உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு உள்ள மன அழுத்தத்தைக் குறைக்க எங்கு செல்வது?

– வினவு செய்தியாளர்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி !

5
"பெட்ரோல் டெக்" சர்வதேச மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்கள், முதலீட்டாளர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடியதையடுத்து, அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நாடகமாடிய மோடி அரசு, அதே திட்டத்தை “ஹைட்ரோகார்பன் திட்டம்” என்ற பெயரில் நரித்தனமாகக் கொண்டு வந்துள்ளது.  கூடங்குளம் அணு மின்நிலையம், நியுட்ரினோ ஆய்வுத் திட்டம், ஷெல் எரிவாயுத் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, மற்றும் தமிழகக் கடற்கரை முழுவதையும் அணு மின்னுற்பத்திக் குவிமையமாக்கும் திட்டம் ஆகியவற்றின் வரிசையில் தமிழகத்தைச் சுடுகாடாக்குவதற்கு மோடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம்!

ஹைட்ரஜன், கார்பன் என்ற இரு வேதிப்பொருள்கள் இணைந்த மீத்தேன், ஈத்தேன், புரோத்தேன், ஹெக்சேன், மண்ணெண்ணெய், பெட்ரோலியம் போன்ற 14 வகைக் கனிமங்கள் ஹைட்ரோகார்பன்கள் எனப்படுகின்றன. பூமிக்கடியில் சுமார் 6000 மீட்டர் ஆழம் வரை பாறை இடுக்குகளில் படிந்திருக்கும் இந்த எரிவாயுவை ஆழ்துளையிட்டு உறிஞ்சி எடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

நெடுவாசலில் எரிவாயுவை எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு.

இந்தியாவின் எண்ணை மற்றும் எரிவாயுவின் ஒரு ஆண்டுத்தேவை 226 மில்லியன்  டன்கள். இதில் 70 மில்லியன் டன்கள் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, நமது மொத்தத் தேவையில் 78 சதவீதத் தேவைக்கு இறக்குமதியை நம்பியுள்ளோம்.  அதிகரித்துவரும் இந்த இறக்குமதியில் 10 சதவீதத்தைக் குறைப்பதுதான் நோக்கம் என்று மோடி அரசு கூறுகிறது. இந்தக் கூற்று உண்மையா?

ஒ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா முழுவதும் ஆய்வு செய்து எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் அதிகமுள்ள 310 இடங்களைக் கண்டறிந்தன. இதில் முதல்கட்டமாக, மகராஷ்ட்ராவில் 29, ஆந்திராவில் 15, அஸ்ஸாமில் 13, குஜராத்தில் 6, இராஜஸ்தானில் 2, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2, (நெடுவாசல்,காரைக்கால்) என மொத்தம் 67 இடங்களில் ஆய்வுக்கான நிலங்களைக் கையகப்படுத்தி, ஒவ்வொரு இடத்திலும் எத்தனை டன் எண்ணெய் உள்ளது, எத்தனை கனஅடி எரிவாயு உள்ளது என்று ஆய்வுகள் செய்து முடித்துள்ளன. இவ்வாறு மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் எரிவாயுவை, அன்னிய நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதென்று முடிவு செய்திருக்கிறார் மோடி.

“பெட்ரோல் டெக்” சர்வதேச மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்கள், முதலீட்டாளர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

2016 டிசம்பர்  5-ம் தேதி, சர்வதேச எண்ணெய் நிறுவன முதலாளிகள் கலந்துகொண்ட ”பெட்ரோல் டெக்”’ என்ற சர்வதேச மாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் பழைய லைசென்ஸ் நடைமுறைகள் கைவிடப்பட்டு விட்டன. இப்போது அந்நிய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களைப் போல கையாள்கிறோம். தாராள சலுகை அனுமதிகள் வழங்குகிறோம். இந்தியாவின் எண்ணெய் எரிபொருள் தேவை ஒவ்வொரு ஆண்டும் 3.5% அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் தயக்கமின்றி முதலீடு செய்யுங்கள்” என கார்ப்பரேட் கம்பெனிகளை தாஜா செய்தார்

பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ””கண்டுபிடிக்கப்பட்ட சிறு வயல்களின் ஏலத்தில் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி., மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் கலந்து கொள்ளாது” என்று அன்னிய முதலாளிகளுக்கு சத்தியம் செய்கிறார்.

பன்னாட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு வழங்கும் வாக்குறுதிகளையும் சலுகைகளையும் பாருங்கள்:

  • ஏலம் எடுக்கும் நிறுவனங்களுக்கு தொழிலில் முன்அனுபவம் எதுவும் தேவையில்லை. தொழில்நுட்ப அறிவு மட்டும் இருந்தால் போதுமானது.
  • இதற்கென இறக்குமதி செய்யப்படும் எந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள் அனைத்துக்கும் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • ஏலம் எடுத்த நிலப்பரப்பில் எத்தனை கிணறுகள் வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளலாம்! இத்தனை மீட்டர் ஆழம்தான் தோண்ட வேண்டும் என்றும் நிபந்தனை இல்லை.
  • ஷேல், மீதேன் உள்ளிட்ட எல்லா வகையான ஹைட்ரோ கார்பன்களையும் எடுப்பதற்கு எந்தவித தடையோ, கட்டுப்பாடோ கிடையாது.
  • பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரி கிடையாது, எரிவாயுவுக்கு ராயல்டி 10% மட்டுமே.
  • உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சர்வதேச சந்தை விலையில் விற்றுக் கொள்ளலாம். ஏலம் எடுக்கும் அந்நிய நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரில் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
  • ஒப்பந்த காலமான 15 ஆண்டுகள் முடிந்தபின், மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்க முடியும். ஒப்பந்த காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தாலோ அல்லது காரணமின்றியோ திட்டத்திலிருந்து விலகும் நிறுவனங்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது.

இப்படி அடுக்கடுக்கான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது மோடி அரசு.

நெடுவாசல் பூமியின் அடியில் கிடக்கும் வளத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.எம்.சித்தேஸ்வரா

எண்ணெய், எரிவாயு வயல்களைச் சர்வதேச சந்தையில் ஏலம் விடுவதற்காக மோடி அரசு நியமித்திருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற தரகு கம்பெனி வெளியிட்டிருக்கும் ஆவணமும், 14.10.2015 தேதியிட்ட பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆவணமும், டைரக்டரேட் ஜெனரல் ஆப் ஹைட்ரோ கார்பன்ஸ்-இன் ஆவணங்களும் மேற்கூறிய விவரங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன.

நெடுவாசல், காரைக்கால் மட்டுமல்ல, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், இராமநாதபுரம், அரியலூர், ஆகிய மாவட்டங்களில் சுமார் 3,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 398 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் திட்டமிட்டுள்ளது மோடிஅரசு. நெடுவாசலை பி.ஜே.பி.-யின் முன்னாள் மத்திய மந்திரியான ஜி.எம்.சித்தேஸ்வராவின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளதைப் போல, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையை ரிலையன்ஸ் மற்றும் அதானிக் குழுமத்திற்கும், இராஜஸ்தானில் வேதாந்தா மற்றும் கெய்ர்ன் நிறுவனங்களுக்கும், குஜராத்தில் அதானிக்கும் ஒதுக்கியிருக்கிறது மோடிஅரசு. இதற்காக நாடு முழுவதும் 16,82,657சதுர கி.மீ. பரப்பளவு நிலங்கள் கண்டுபிடிப்புகளுக்கும், எண்ணெய் உற்பத்திக்கும் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 2015-16 வரை சுமார் 40  பில்லியன் டாலர் தனியார் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மோடி அரசு சொல்லிக் கொள்வது போல, இந்த திட்டத்தின் நோக்கம் சுயசார்பும் அல்ல, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவதும் அல்ல. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கூறுபோட்டு விற்பதுதான் மோடி அரசின் நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

வெளிப்படையாகத் தெரியாத நோக்கம் ஒன்றும் மோடி அரசுக்கு இருக்கிறது. காவிரி வடிநிலத்தை ஹைட்ரோ கார்பன் வேட்டைக்குப் பயன்படுத்துவதற்காகத்தான், காவிரி நீரை மோடி அரசு திட்டமிட்டே தடுத்து வருகிறது என்பது இப்போது உறுதியாகிறது.

  • மாறன்.
    புதிய ஜனநாயகம், மார்ச் 2017

புத்தகத்தைப் பார்த்து புதுக்கோலம் போடுவதல்ல மகளிர் தினம் !

0

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மார்ச் 8 – ஆம் தேதி உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி  பெ.வி.மு தோழர்.ஜெயமணி தலைமையில் மாலை அணிவித்து பெண் விடுதலைக்கான முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர். வெடிவெடித்து முழக்கமிட்டு, அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்குள் சென்று பிரசுரங்கள் விநியோகித்து இனிப்பு கொடுக்கப்பட்டது.

மகளிர் தினம் என்பதையே அறியமுடியாத அளவு நிறைய பெண்கள் இருப்பதை அங்கே காண முடிந்தது. தேநீர் கடைகள், உணவகங்களில் பணியாற்றும் பெண்களிடம் சென்று பிரசுரம் கொடுத்து விளக்கப்பட்டது. அதன்பிறகு மாலை அரங்குக்கூட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள சுமங்கலி மகாலில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

தலைமையேற்ற பெ.வி.மு தலைவர் நிர்மலா இன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு போராட்டத் தீ பற்றியுள்ளது. மெரினாவின் போராட்டம் போட்ட விதை நெடுவாசலில் முளை விட்டுள்ளது. கோக், பெப்சி கம்பெனிகளை தடுத்து நிறுத்த கோரி, தாமிரபரணி தண்ணிரை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என நெல்லையில்கூடியுள்ளனர்.

கடலில் மீன்பிடிக்க சென்று தொடர்ந்து தமது உடமைகளை சிங்கள கடற்படைக்கு பறிகொடுத்து இறுதியில் 2O வயதில் உயிரையும் கொடுத்துவிட்டு மீனவ மக்களையும் போராட்டக்களத்தில் குதிக்க வைத்துள்ளான் அந்த இளைஞன் பிரிட்ஜோ. மகளிர் தின வரலாறும், போராட்டத்தை உள்ளடக்கியதுதான். ஐரோப்பா, அமெரிக்காவில் வீதியில் திரண்டபெண்கள் முதலாளித்துவ சுரண்டலுக்கு சாவுமனி அடித்தனர்.

இந்தப் போர்க்குணத்துக்கு தலைவணங்கி சோசலிசப் போராளி கிளாரா ஜெட்கின், சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிப்பதன் தேவையை உலகுக்கு அறிவித்தார். தோழர் மாமேதை லெனினும் அதை வழிமொழிந்தார். ஆக இந்த போராட்டதினம், பெண்கள் மீதான கொடுமைகளை தொடர்ந்து பொசுக்கும் என்றார்.

தோழர் சிவானந்தம் குடும்பமும், மகளிர் எனும் தலைப்பில் பேசும் போது பெண் எப்போது அடிமையாக்கப்பட்டாள்? அது தனியாக நடந்த நிகழ்வு அல்ல சமூகமாற்றத்தின் போக்கே என்பதை விளக்கினார்.

மனிதர்கள் தமது வாழ்க்கை மீதான பயம், அவமான உணர்ச்சி, வேதனை, தாழ்வு மனப்பான்மை, வாழ்வுக்கான வழிதெரியாமல் கையறு நிலை இவைகளை தனித்து பார்த்து திகைப்பதை விட இந்த சமூகமே அனைத்துக்குமான காரணிஎன்பதை உற்றுப் பார்ப்பதே முதன்மையானது.

சுயநலத்தை விட்டொழித்து பொதுநலத்தை பேணும் போது உடலில் உள்ள நோய்களும் ஓடிப்போய்விடும். அதை நடைமுறையில் சாத்தியமாக்கும் போராட்டத்தில் ஒன்றிணைவோம் வாரீர் என அறைகூவினார்.

அவரைத் தொடர்ந்து. பெண் விடுதலை இந்த கட்டமைப்புக்குள் சாத்தியமா? என  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பேசினார்.

பெண்கள் இன்று ஒன்று திரள துவங்கியுள்ளார்கள். மெரினாவுக்கு பின் இன்று போராட்டம் என்றால் வருகிறார்கள். மெரினாவில் நாம் பறை அடித்து பாடும் போது பெண்கள் 5 வயதிலிருந்து 70 வயது வரை உள்ளவர்கள் என அனைவரும் அங்கு  ஆதரவு தருகின்றனர்.

மாணவர்களை நாங்கள் தவறாக நினைத்திருந்தோம். போன், வாட்ஸ்அப், என உருப்படாம போகிறார்கள் என்று நினைத்திருந்தோம் அதே போதில் மெரினா புரட்சிக்கு வித்திட்டவர்கள் இவர்கள் தான் என்ற போது ஒரு தாய் அங்கே மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

அடுப்படியில் கிடந்த பெண்ணின் நிலை மாறி உள்ளது. ஆனால் ஆணின் சிந்தனை மாறி உள்ளதா? அது இன்னும் வக்கிரமாக, இரக்கமற்றதாக மாறியுள்ளது. நிர்பயா துவங்கி, சுவாதி முதல் இன்று நந்தினி, ஹாசினி, ரித்திகா என எண்ணிலடங்கா பெண்கள், குழந்தைகள் ஈவிரக்கமற்று பாலியல் துன்புறுத்தலுக்கும் கொடுர ஆணாதிக்க வெறியாலும் குதறப்படும் நிலையை வார்த்தையால் சொல்ல முடியாது. அதிகாரியாலும் அடிமட்ட ஊழியர்களாலும் சிதைக்கப்பட்டு நடைப்பிணங்களாக எத்தனைபேர் வாழ்கின்றனர்.

சந்தேக கேசுன்னு ஸ்டேசனில் வைத்து மானபங்கம் செய்து வெளியில் தெரியாமலே புதைக்கப்பட்டனர். சிறுமிகள் எத்தனை பேர் பாலியல் துன்புறுத்தல் உறவினர்களால் செய்யப்பட்டு, புகார் கொடுக்க சென்று காவல்துறையை சேர்ந்த 10, 15 பேரால் கூட்டுபாலியல் வன்முறைக்குள்ளானது தமிழகமே அதிர்ச்சியடைந்தது.

நீதி கேட்டு நீதிமன்ற படியேறினால் அங்கும் பாலியல் வெறியர்கள். இந்த நிலைத் தொடர்ந்தால் பெண்கள் யாரிடம் பாதுகாப்புக்கு செல்ல முடியும். அதிகார வர்க்கம், காவல்துறை, நீதிமன்றம் என ஒட்டு மொத்த அருவருப்பான இந்தகட்டமைப்புதாரர்கள் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்தரமுடியாது.

சமூக விடுதலையை சாதிக்கும் போது பெண் விடுதலை தானாய் வரும், பெண்ணின் பாதுகாப்பு பலப்படும். இத்தகைய மாற்றத்தை நோக்கி பயணிப்போம், நன்றி என்றார்.

இறுதியில் பெ.வி.மு தோழர்களின் நாடகம் – பஞ்சாயத்தை கலைக்கிறான் பா.ஜ. என நெடுவாசலில் மக்களின் விவசாயத்தை காக்கும் போராட்டம் வெல்ல வேண்டும், அதை மடைமாற்றும் அரசியல்வாதிகளை தோலுரிப்போம், எனும் களத்தை வைத்து நடத்தப்பட்டது. புரட்சிகர பாடல்கள், நடனத்துடன் பெண் தோழர்களால் அரங்கேற்றப்பட்டது. சமூக விடுதலையே பெண் விடுதலை என மூன்று பெண் தோழர்கள் கவிதைவாசித்தனர்.

நன்றியுரையாக பெ.வி.மு தோழர். ஜெயமணி பேசினார். அரங்குநிறைந்த கூட்டமாக 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரங்கு வளாகத்தில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. சமீபகால பெண்களின் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வரவேற்பை பெறுவதை எடுத்துக்காட்டி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, அது பெண் தோழர்களை மேலும் ஊக்கப்படுத்துவது போல் இருந்தது.

மகளிர் தின நிகழ்ச்சிக்கு இடம் தேடுவது பெரும்பாடானது.

ஜனநாயக நாடு என பேசும் விளக்கெண்ணைகள் உள்ள நாட்டில் ஒரு கூட்டம் போட மண்டபம் வாடகைக்கு கிடைக்கவில்லை, காரணம் மண்டப உரிமையாளிடம் போய் பேசும் போது என்ன அமைப்பு, என்ன விலாசம் இதை நீங்க அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுதி கொடுங்கள் இல்லையேல் மண்டபம் தர இயலாது என்றனர்.

ஏங்க மகளிர்தினத்தை பெண்களிடம் பேச எதுக்குங்க காவல்நிலையம் போகணும் என்றதற்கு, எங்களுக்கு இப்படி தாம்மா ஆர்டர் போட்டிருக்காங்க என்றனர். இறுதியாக ஏற்பாடு செய்த மண்டப உரிமையாளரிடம் என்ன பேசுறாங்க என கேட்டது போலீசு. அதற்கு அவர் “வாடகைக்கு கொடுக்கிறது மட்டும் தான் எங்க வேலை, யார் வருவாங்க என்ன பேசப் போறிங்க என்று கேட்பது நாகரீகமில்ல, அது எங்க வேலையும் இல்ல என மூக்குடைத்து அனுப்பியுள்ளார்.”

மக்களை, புரட்சிகரஅமைப்புகளை வேவுபார்க்கும் இந்தகேடுகெட்டஅரசைகாறிஉமிழ்வோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி.

மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !

0
தொழிலாளர்களின் போராட்டம்

14.03.17

பத்திரிக்கைச் செய்தி

டந்த மார்ச் 10-ம் தேதியில் தில்லி குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மாருதி ஆலைத்தொழிலாளர்கள் மீது நடந்து வந்த குற்றவியல் வழக்கில் 117 தொழிலாளிகளில் 31 பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் மீது கொலைக் குற்றமும், 18 பேர் மீது வன்முறை, தீயிடல், சூறையாடல் குற்றமும் திணிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும், போலீசு – நீதிமன்றம் – முதலாளிகளும் கூட்டணி சேர்ந்து கொண்டு தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்கத் தீவிரமாக முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

வன்முறை நடந்ததாகச் சொல்லப்படுகின்ற சம்பவத்தில் அதிகாரிகளும் போலிசும் காயமடைந்ததாக பொய்க் குற்றச்சாட்டை போலீசு புணைந்துள்ளது. போலிஸ் தரப்பிலிருந்து சொல்லப்பட்ட அனைத்தும் பொய்யெனத் தெரிந்தும், நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகச் செயல்படுகின்ற போலிசையும், நீதிமன்றத்தையும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், வருகின்ற 17-ம் தேதியன்று மேற்படி வழக்கில் தீர்ப்பு வழங்க இருப்பதால் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் நிரபராதிகள் என அறிவித்து வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்கிற கோரிக்கையின் அடிப்படையில் 16.03.2017 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த திட்டமிட்டுள்ளது.

மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு எமது சங்கத்தின் கிளை / இணைப்புச் சங்க தொழிலாளர்களும், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர் சங்கம், பெல் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி, கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் ஆகிய மாநில இணைப்புச் சங்கங்களும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள்.

1 திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம்,வேலூர் மாவட்டங்கள். ஆவடி புதிய நகராட்சி அலுவலகம் எதிரில்
2 புதுச்சேரி திருபுவனம் தொழிற்பேட்டை எதிரில்
3 கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம் ராம் நகர் அண்ணாசிலை அருகில்
4 கோவை, நீலகிரி செஞ்சிலுவை சங்கம் அருகில்

இவண் :
சுப. தங்கராசு, மாநிலப் பொதுச் செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – 94448 34519

ஹைட்ரோ கார்பன் சிறப்புக் கட்டுரை : மோடி ஏவிவிடும் பேரழிவு !

5
ஷேல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக பிலடெல்பியா நகரில் அமெரிக்க மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப்படம்)
ஷேல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக பிலடெல்பியா நகரில் அமெரிக்க மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப்படம்)

நெடுவாசல் போராட்டத்துக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் கூறி வரும் பொய்களில் முதன்மையானது, இத்திட்டத்தை நாங்கள் கொண்டுவரவில்லை, காங்கிரசும் தி.மு.க.வும்தான் கொண்டு வந்தன என்பதாகும்.

காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் ஏற்கெனவே உள்ளன என்பது உண்மை. மீத்தேன் திட்டத்தை அனுமதித்துப் பின்னர் அதற்காக தி.மு.க. வருத்தம் தெரிவித்ததும் உண்மை. காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுவுக்கான ஆய்வுகளை ஓ.என்.ஜி.சி. மேற்கொண்டதும் உண்மை.

ஆனால் காங்கிரசு, தி.மு.க.வின் மேற்கண்ட நடவடிக்கைகளும், தற்போது மோடி கொண்டு வந்திருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் ஒன்றுதான் என்று பாரதிய ஜனதா சொல்கிறதே, அது கடைந்தெடுத்த பொய். அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் எடுப்பது எண்ணெயா, எரிவாயுவா என்று பார்க்கும் அதிகாரமும், எவ்வளவு எடுக்கிறார்கள் என்று சோதிக்கும் அதிகாரமும் இதற்கு முந்தைய அரசின் துரப்பணவுக் கொள்கையில் (New Exploration and Licencing Policy) அரசாங்கத்திடம் இருந்தது.

மார்ச் 2017-இல் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலிருந்து, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருக்கின்ற புதிய கொள்கை (Hydrocarbon Exploration and Licencing Policy – HELP), “கிணற்றை ஏலம் எடுக்கும் கார்ப்பரேட் கம்பெனி, அதிலிருந்து எண்ணெயோ, எரிவாயுவோ, மீத்தேனோ, ஹைட்ரோகார்பனோ எடுத்து விற்கலாம். எதை எடுக்கிறார்கள், எவ்வளவு எடுக்கிறார்கள் என்று அரசு கண்காணிக்காது. அவ்வாறு செய்வது கார்ப்பரேட்டுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருப்பதால், கண்காணிப்பை நீக்கவிட்டோம்” என அறிவிக்கிறது.

அதேநேரத்தில், நெடுவாசலில் போராடும் மக்களுக்குப் “பின்னால்” இருப்பவர்கள் யார், “சைடில்” இருப்பவர்கள் யார் என்றெல்லாம் கண்காணிக்க வேண்டுமென மாநில அரசுக்கு உத்தரவு போடுகிறார் இல.கணேசன். கள்ளனைக் கண்காணிக்கக் கூடாது, காப்பானைத்தான் கண்காணிக்க வேண்டும் என்ற இந்த உன்னதமான கொள்கையை மோடிஜி அவர்கள் அவசரமாகக் கொண்டு வருவதற்கும் ஒரு தனிச்சிறப்பான காரணம் இருக்கத்தான் செய்கிறது.

கிருஷ்ணா-கோதாவரிப் படுகை எரிவாயு ஊழல் என்றழைக்கப்படும் மோடி – அம்பானி கூட்டுக்கொள்ளையை (19,700 கோடி ரூபாய்) சி.ஏ.ஜி. கண்டுபிடிக்க முடிந்ததற்கு முக்கியமான காரணம், எண்ணெய் எரிவாயு உற்பத்தியைக் கண்காணிப்பதற்கு அரசு கொண்டிருந்த அதிகாரம். அந்த அதிகாரத்தையே அரசிடமிருந்து பிடுங்கினால்தான் கார்ப்பரேட்டுகள் பூரண சுதந்திரத்துடன் கொள்ளையிட முடியும் என்பதனால்தான் புதிய (ஹெல்ப்) HELP கொள்கையை உருவாக்கியிருக்கிறார் மோடி. ஹெல்ப் கொள்கையின்படி நெடுவாசலில் சித்தேஸ்வரா நிறுவனம், மண்ணெண்ணெய் எடுக்கலாம், ஷேல் வாயு எடுக்கலாம், புதையல் கிடைத்தாலும் எடுக்கலாம். அரசாங்கம் கண்காணிக்காது.

நெடுவாசலின் “மண்ணெண்ணெய் குழாய்”, ஹைட்ரோகார்பன் குழாயாக மாற்றப்பட்ட கதை இதுதான்.

000

பிரிட்டனின் ப்ரெஸ்டன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப்படம்). ஷேல் எரிவாயு, மீத்தேன் திட்டங்களுக்கு எதிரான பிரிட்டிஷ் மக்களின் தொடர் போராட்டங்களால் அந்நாட்டில் இத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

டக்கே பாண்டிச்சேரியில் தொடங்கி தெற்கே மன்னார் வரை நிலத்தில் 25,000 ச.கிலோ மீட்டரும், கடலில் 30,000 ச.கிலோ மீட்டரும் கொண்டது  காவிரிப்படுகை (Cauvery Basin) என்ற அவர்கள் குறிப்பிடும் பகுதி. காவிரிப்படுகையில் இவர்கள் எடுக்கத் திட்டமிட்டிருக்கும் ஹைட்ரோ கார்பனின் பெயர், ஷேல் எரிவாயு.

இந்தியாவில் 584 டிரில்லியன் கன அடி ஷேல் வாயு இருப்பதாகவும் அதில் 96 டிரில்லியன் கன அடி காவிரிப்படுகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிக செலவில்லாமல் இலாபகரமாக எடுக்கத்தக்கதாக 9 டிரில்லியன் (9,00,000 கோடி) கன அடி ஷேல்வாயு காவிரிப்படுகையில் உள்ளது.

1990-களின் துவக்கத்தில் ஷேல் எனப்படும் ஒருவகை களிமண் பாறைகளில் இருக்கும் துளைகளுக்குள் எரிவாயு தங்கியிருப்பதை எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் கண்டுபிடித்தன. சில ஆண்டுகளுக்குப் பின், பூமியில் 5 கி.மீட்டருக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, அப்படியே பக்கவாட்டில் குடைந்து செல்வதற்கான தொழில் நுட்பமும் உருவாக்கப்பட்டது.

அவ்வாறு குடையப்பட்ட துளையின் வழியே வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீரை ஷேல் பாறைகளின் மீது பாய்ச்சி, அவற்றின் துளைகளுக்குள்ளே இருக்கும் எரிவாயுவை வெளியேற்றி எடுக்கின்ற “நீரியல் விரிசல் முறை”யும் (Fracking) கண்டுபிடிக்கப்பட்டது.

நரிமணம், குத்தாலம் போன்ற இடங்களில் ஏற்கெனவே இருக்கின்ற கிணறுகள் வழமையானவை (convenitional) என்றழைக்கப்படுகின்றன. ஷேல் கிணறுகள் வழமைக்கு மாறான ரகத்தை சேர்ந்தவை (unconventional). இரண்டும் ஒன்றுதான் என்று பா.ஜ.க.வினர் சித்தரிப்பது மிகப்பெரிய பித்தலாட்டம். ஷேல் வாயுக் கிணறுகள் ஏற்படுத்தும் பாதிப்பு பன்மடங்கு அதிகமானது.

தற்போது தஞ்சை டெல்டாவில் இருக்கும் பழைய வகை எரிவாயுக் கிணறுகள் ஒவ்வொன்றும் பத்து சதுர கி.மீ சுற்றளவில் உள்ள எரிவாயுவை உறிஞ்சி எடுக்கக் கூடியவை. எனவே தான், இந்த கிணறுகளுக்கான உரிமம் நூறு முதல் ஐநூறு சதுர கி.மீ. சுற்று வட்டாரத்துக்குத் தரப்படுகிறது. ஆனால், ஷேல் வாயுக் கிணறுகளைப் பொருத்தவரை அவற்றின் உரிமப் பரப்பளவு சுமார் 25,000 சதுர கி.மீ இருக்கும் என்கிறார் இந்திய எரிசக்தி துறையின் ஆலோசகர் அனில் குமார் ஜெயின். எனவே, காவிரிப் படுகை முழுவதும் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்படும் என்ற அச்சம் கற்பனையானதல்ல.

இந்த துளைகளுக்குள் 78 விதமான வேதிப் பொருட்களும் மணலும் கலந்த தண்ணீர், ஒரு சதுர அங்குலம் பாறையின் மீது சுமார் 6 டன் அழுத்தத்தைக் கொடுக்கின்ற வேகத்தில் செலுத்தப்படும். வேதிப்பொருட்கள் கலந்த மணல் பாறைகளின் மெல்லிய துளைகளுக்குள் இருக்கும் எரிவாயுவை விடுவித்து மேல்நோக்கி அனுப்பும்.

இந்த ஆழ்துளைகளின் சுவர்கள், இரும்பாலும் கான்கிரீட்டாலும் கவசமிடப்படுவதால் கசிவு ஏதும் ஏற்படாது என்று எரிவாயு நிறுவனங்கள் கூறிக்கொண்டாலும், கசிவு ஏற்படுவது உண்மை என்று அமெரிக்காவிலேயே நிரூபணமாகியிருக்கிறது.

எரிவாயுவுடன் மீத்தேனும் சேர்ந்தே வெளியேறும் என்பதால், அது நிலத்தடி நீருடன் காற்று மண்டலத்திலும் கலந்து அதனை நஞ்சாக்கும். பாறைகளின் இடுக்குகளில் பல பத்தாயிரம் ஆண்டுகளாக பூமியினுள் தங்கியிருக்கின்ற கடல் நீர், பன்மடங்கு உவர்த்தன்மை வாய்ந்தது. கதிர் வீச்சையும் வெளிப்படுத்தக் கூடிய தன்மை கொண்டது. இந்தக் கடல் நீரும் மேல் நோக்கி வந்து நிலத்தடி நீருடன் கலக்கும்.

பூமிக்குள் செலுத்தப்பட்ட கோடிக்கணக்கான லிட்டர் வேதிப்பொருட்கள் கலந்த நீரீல், மெத்தனால், ஹைட்ரஜன் புளூரைடு, கந்தக அமிலம், புற்று நோயை உருவாக்கும் பி.டெக்ஸ், காரீயம், பார்மால்டிஹைடு ஆகியவையும் அடக்கம். புற்றுநோயை உருவாக்குபவை என்று வகைப்படுத்தப்பட்ட 650 இரசாயனப் பொருட்களை, சுமார் ஒரு கோடி காலன் அளவுக்கு அமெரிக்க ஷேல் வாயு நிறுவனங்கள் பூமிக்குள் செலுத்தியிருப்பதாக 2011-இல் அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.

மாசுபட்ட இந்த நீரை மீண்டும் அவர்கள் பயன்படுத்துவதில்லை. பென்சில்வேனியாவிலும் மேற்கு வர்ஜீனியாவிலும் இக்கழிவுநீர் ஆறுகளில் விடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. நம் ஊரில் என்ன நடக்கும் என்பதை திருப்பூர், ஆம்பூர், கடலூர் ஆகியவற்றுக்கு நேர்ந்திருக்கும் கதியிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம்.

ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயுத் திட்டங்களின் விளைவாக அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் நடந்த நிலநடுக்கம் (கோப்புப்படம்)

பூமியில் குப்பையைப் புதைப்பது போல, அருகாமையிலேயே இன்னொரு கிணறு தோண்டி, கழிவுநீரை பூமிக்குள் செலுத்துகின்றன எரிவாயுக் கம்பெனிகள். இதனால் நிலத்தடி நீர் நஞ்சாவது மட்டுமல்ல, ஷேல் வாயு எடுக்கப்படும் மாநிலங்களிலெல்லாம் நிலநடுக்கம் அதிகரித்திருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அனைத்திற்கும் மேல் முதன்மையான பிரச்சினை தண்ணீர். நீரியல் விரிசல் முறைக்கு மிகப்பெருமளவு தண்ணீர் தேவை. ஷேல் கிணறுகள் இருக்கிற நீரை உறிஞ்சுவதுடன், மிச்சமிருக்கும் நீரையும் நஞ்சாக்கி விவசாயத்தையும் குடிநீரையும் அழிப்பதால், எல்லா நாடுகளிலும் இதனை மக்கள் எதிர்க்கின்றனர்.

உலகில் மிக அதிகமான ஷேல் வாயு இருப்பு உள்ள நாடு சீனா. அடுத்து அல்ஜீரியா. சீனாவில் ஷேல் வாயு இருக்கின்ற பகுதிகள் வறட்சிப் பகுதிகள் என்பதால் அப்பகுதிகளில் எடுக்கப்படுவதில்லை. அல்ஜீரியா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் எதிர்ப்பால் இது கைவிடப்பட்டிருக்கிறது. பல்கேரியா, பிரான்சு போன்ற நாடுகளில் முற்றாகவும் ஜெர்மனியில் கணிசமாகவும் தடை செய்யப்பட்டிருக்கிறது.  பாகிஸ்தானில் ஷேல் வாயு எடுப்பதற்கு உதவுவதாக அமெரிக்கா கூறியபோதிலும், தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக அந்நாட்டு அரசு இதுவரை இதில் இறங்கவில்லை.

அமெரிக்காவைப் பொருத்தவரை, அங்குதான் ஷேல் வாயு எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பதுடன், எண்ணெய் கம்பெனிகள் அமெரிக்க அரசியலைக் கட்டுப்படுத்தும் முக்கிய சக்திகளாகவும் இருக்கின்றன. அமெரிக்காவில் பெரும் நிலப்பரப்பு இருப்பதாலும், தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதாலும் ஷேல் வாயு எடுப்பது ஒப்பீட்டளவில் அதிகமாக நடக்கிறது. நீரும் சூழலும் நஞ்சாவது குறித்து எதிர்ப்புகள் இருந்த போதிலும், தமது அரசியல் செல்வாக்கின் மூலம் அந்த எதிர்ப்புகளை எரிவாயுக் கம்பெனிகள் முடக்கி விடுகின்றன.

ஷேல் வாயு நிறுவனங்களை அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்ய முடியாது என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் சட்டத்திலிருந்து நீரியல் விரிசல் நடவடிக்கைக்கு விலக்களித்தும் 2005-இல் அதிபர் புஷ் சட்டத்திருத்தமே நிறைவேற்றியிருக்கிறார்.

அம்பானியும் அதானியும்தான் மோடியின் புரவலர்கள் என்பது போல, ஜார்ஜ் புஷ்ஷும் துணையதிபர் டிக் செனியும் ஹாலிபர்ட்டன் என்ற எண்ணெய்க் கம்பெனியின் கைப்பிள்ளைகள். சுற்றுச்சூழல் சட்டத்தில் போடப்பட்டிருக்கும் இந்த ஓட்டைக்கு, “ஹாலிபர்ட்டன் ஓட்டை” என்றே அங்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். (நாமும் மோடியின் எரிசக்திக் கொள்கையை “ஹெல்ப் அம்பானி கொள்கை” என்று அழைக்கலாம்.)

ஷேல் வாயு எடுக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மூளை, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடியவை; தோல் நோய்கள் முதல் புற்றுநோய் வரை பலவற்றையும் தோற்றுவிக்கக் கூடியவை என்று அமெரிக்க சூழல் ஆய்வு நிறுவனம் பல தரவுகளைத் தொகுத்திருக்கிறது. ஆனால், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டபின் அத்தரவுகளை தனது ஆய்வறிக்கையிலிருந்தே நீக்கியிருக்கிறது.

இதுதான் அமெரிக்காவின் நிலை என்றால், இந்தியாவில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. 2022-இல் எண்ணெய் இறக்குமதியில் 10% குறைக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காகத்தான், காவிரி உள்ளிட்ட படுகைகளைப் பாலைவனமாக்குகிறார்களாம். இந்தப் பேரழிவுக்கு மோடி சூட்டியிருக்கும் பெயர் வளர்ச்சி. அந்த வளர்ச்சிப் பாதையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, இந்த அழிவுப்பாதையிலிருந்து நாம் நாட்டை மீட்க முடியாது.

– சூரியன்
புதிய ஜனநாயகம், மார்ச் 2017

மேலும் படிக்க:

சிவகாசி பட்டாசு ஆலையில் 5 பேர் பலி ! மக்களை சாகக் கொடுக்கும் அரசு !

0
வெடி விபத்தால் தரைமட்டமாகிக் கிடக்கும் அறை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள வெற்றிலையூரணியில் சக்தி சண்முகத்தின் நாகமல்லி ஃபயர் ஒர்க்ஸ் ஆலை 6 வருடமாக இயங்கி வருகிறது. சுமார் 40 பேர் வரை மட்டுமே உற்பத்தியில் ஈடுபடும் கட்டுமான வசதிகளை கொண்ட இதில் 150 பேர் வரை விதிகளை மீறி உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 11.03.17 காலை 10 மணியளவில் தரைச்சக்கர பிரிவில் முனைமருந்து செலுத்தும் வேலையில் ஒட்டம்பட்டியை சேர்ந்த சண்முகவேல் ஈடுபட்டிருந்த பொழுது அந்த அறையே வெடித்து சிதறியிருக்கிறது. இதில் அறைக்கு வெளியில் அமர்ந்து (விதிமீறி) உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களும் பலியாகினர்.  5 பேர் உடல் சிதறி பலியாக, 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற நாகமல்லி ஃபயர் ஒர்க்ஸ் ஆலை

விபத்து நடந்த மறுநாள் காலை (12.03.17) மக்கள் அதிகாரம் சார்பாக நேரில் சென்று ஆலையை பார்வையிட்டோம். ஊர் மக்களை சந்தித்து விபத்து குறித்தும் விசாரித்தோம். அதில் தெரிய வந்ததை தொகுத்து தருகிறோம்.

காலையில் சென்றபோது நாகமல்லி ஆலையின் வாயில் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் வண்டியில் வந்த சத்தம் கேட்டு கருவமரத்தின் பின்னிருந்து இருவர் வந்து விசாரித்தனர்.

வெடி விபத்தால் தரைமட்டமாகிக் கிடக்கும் கட்டிடம்

“உள்ளே போனா உங்க உசுருக்கு நாங்க பொறுப்பில்லை. எப்ப எதுவேனா வெடிக்கலாம்” என்று பீதியூட்டினார் காவலாளி அருணாச்சலம். எட்ட நின்று பார்க்கிறோம் என்று கேட்டை திறக்க வைத்து உள்ளே நுழைந்தோம். தொலைவில் இருந்த கட்டிடங்கள் வெடித்து சிதறியிருந்தாலும் அருகிலுள்ளவை பாதுகாப்பாக இருந்தன. அங்கு இறந்து போன 5 தொழிலாளிகளின் சாப்பாட்டுக்கூடைகள் இருந்தன.

நம்மை எச்சரிக்கையுடன் அனுகும் காவலாளி. கீழே இறந்தவர்களின் சாப்பாட்டுக் கூடைகள்.

அந்த அறையின் வெளிப்புற சுவரில் தொழிற்சலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முதலுதவி பயிற்சி பெற்றவர்கள் என்று பொறுப்பு பெயர் மட்டும் பெயிண்டில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் இல்லை.

அந்த இடம் வரை நம்முடன் வந்தனர் காவலர்களில் 80 வயதான சின்னத்தம்பியின்ஒரு மகன் டிரைவராக இருக்க மற்ரொரு மகனும் அங்கு சட்டி காண்ட்ராக்டராக (பூச்சட்டி தயாரிப்பு) 10 பேரை வைத்து வேலை செய்துள்ளார். தரைச்சக்கரம் பிரிவு வெடித்தபோது சற்று தள்ளி இருந்ததால் உயிர் தப்பியுள்ளார். பெரியவர் சின்னத்தம்பி நான் மொதல்ல விவசாயக்கூலியா இருந்தேன். இப்ப எங்க விவசாயம் நடக்குது? என்னாலயும் முன்ன மாதறி உழைக்க தெம்பில்லை. அதான் இங்க கெடக்கேன்” என்றார்.

மற்றொரு காவலாளியான அருணாச்சலம் “நான் அப்பப்ப திடீர்னு ரவுண்ட்ஸ்க்கு வருவேன். முதலாளி சொன்னாலும் அப்படி வருவேன். ராத்திரி காவல் காக்குறவங்க எல்லாத்தையும் செக்பண்ணி பூட்டவைச்சுட்டு வெளியே கெடப்பாங்க. உள்ள ஒரு எலி கடிச்சா கூட வெடிச்சு செதறிடும்! இந்த கம்பெனில 4 பேர் நைட்டுல வாட்சுமேன், எதுக்கும் துணிஞ்சுதான் சுதாரிப்பா கெடப்பாங்க. பகல்ல இத விட ஆபத்து. வேலை நடக்கும்ல. எப்ப எதுவேனா நடக்கும்.”  என்றார்.

தொழிற்சலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முதலுதவி பயிற்சி பெற்றவர்கள் விவரமின்றி கிடக்கும் அறிவிப்பு பலகை.

30 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்துவந்த சுப்புராஜை ஊருக்குள் பார்த்து பேசினோம். இப்பொழுது பட்டாசு வேலைக்கு செல்கிறார். “மழை இல்லை. தீவனம் இல்லை. 2 வருசத்தில காய்ந்து வீணான கூழத்தை, தட்டையை காசுக்கு வாங்கி தீவனமாக போட்டதில் 1.25 லட்சம் நஷ்டம் வந்தது. பசும்பாலில் 4க்கு 1 தண்ணி கலக்கலாம். ஆனால் எருமைப்பாலில் 4க்கு 4 தண்ணி கலக்கலாம். வெளியே டீக்கடைக்கு ஊத்தினால் 35 ரூபாய் கிடைக்கும். ஆனால் அதிகாரிகள் நான் ஏதோ சட்டவிரோதமாக தொழில் செய்வதுபோல பிடித்து லஞ்சம் வாங்குவார்கள். கலப்படம் செய்ததாக அபராதம் போடுவார்கள். இவர்கள் தொல்லை தாங்காமல்தான் கம்பெனிக்கு ஊத்தினேன். அவர்கள் 25 ரூபாய்தான் தருகின்றனர். பிறகு எப்படி பால்மாடு வைத்து லாபம் பார்க்க முடியும். 8 ஏக்கர் சோவேரிக்கு(குத்தகை) விவசயமும் பார்த்தேன். இன்று குளம் குட்டைகளில் எருமைக்கு தேவையான நீர் இல்லை. நான் வேறு வழி இல்லாமல் எல்லாத்தையும் வித்துட்டேன். இப்ப 5மாடுதான் இருக்கு. ஃபயர் ஆபீசுதான் சோத்துக்கு வழி” என்றார்.

விதிமீறல்களை விளக்கும் கன்னிராஜன் ஸ்டேண்டர்டு பட்டாசு ஆலையின் முன்னால் ஊழியர்.

இறந்துபோன பெண்ணின் தெருவில் வசிக்கும் கன்னிராஜ் முன்னர் ஸ்டேண்டர்டு கம்பெனியில் நிரந்தர வேலையில் இருந்தவர். இவர் தனது ஆதங்கத்தை கொட்டினார். “சட்டப்படி எவனும் கம்பெனி நடத்துறதில்ல. இங்க கூட கலவை கலக்குற எடத்துல மேஜை மேல, விரிப்பை விரிச்சுதான் நின்னுக்கிட்டு வேலை செய்யனுங்கறது ரூல்ஸ். ஆனா கீழே உக்கார வச்சு வேலை வாங்கிறது மட்டுமில்ல, ஒரெ இடத்துல ராக்கெட், சட்டி(பூச்சட்டி), சிட்டுபுட்டு (ஒரு வகை பேன்சி ரகம்) மூனையும் செஞ்சுருக்குறாங்க. ஆனா தனித்தனியா செய்யனும்கறது விதி” என்று விபத்தின் பின்னுள்ள விதி மீறலை விளக்கினார்.

அருகிலுள்ள மருத்துவனை  – தாயில்பட்டி என்று ஆலையில் எழுதிப்போடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு மருத்துவரோ, தீக்காயத்துக்கான சிகிச்சை வசிகளோ இல்லை. போனால் வலிக்கு ஊசிமட்டும் போட்டு சிவகாசிக்கு அனுப்புவார்கள் என்று அரசு மக்கள் மீது காட்டும் அக்கறையை கூறினர் தொழிலாளிகள்.

தொழிலாளியை இப்படி உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யத்தூண்டியது எது? அதாவது இந்த பேன்சி ரக மருந்து கலவை – குறிப்பாக இங்கு தரைச்சக்கரத்தின் முனையில் கட்டியாக உறைந்திருக்கும் முனை மருந்து – கலந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டாசில் அடைக்கப்பட்டுவிடவேண்டும். நேரம் தாண்டினால் அது நீர்க்க ஆரம்பிக்கும். அதன்பின் அதை தொட்டாலே வெடித்து சிதறிவிடும்.  அதேபோல் சல்பர் அளவு சில மில்லிகிராம் கூடினாலும் கலக்கும்போதே வெடிக்கவும் செய்யும். காண்ட்ராக்ட் முறையில் செய்த வேலைக்கேற்பவே கூலி என்பதால் மொத்தமாக அளவுக்கு அதிகமாக மருந்தை கலந்து வேகவேகமாக பட்டாசு தயாரிக்கிறார்கள். அதிகரிக்கும் அளவால் வெடிவிபத்து நடக்கிறது.

இத்தகைய ஆபத்து நிறைந்த தொழிலில் பெண்கள் ஏன் வேலை செய்கிறார்கள்? வேறுவழி இல்லை என்று பெண்கள் விளக்கினர். மகளிர் குழுவில் அனைவரும் பணம் வாங்கியுள்ளனர். வாரம்தோரும் வசூலிக்க வருவார்கள். பிள்ளையின் படிப்பு, குடும்ப செலவு என ஒவ்வொருவரும் நுண்கடன் நிறுவனங்களின் பிடியில்  சிக்கியுள்ளனர். அவர்கள் அட்டையை தந்துவிட்டு வசூல் வேட்டையை நடத்துகின்றனர். இதனால்தான் பெண்கள், வெடிக்கும் என்று தெரிந்தும் பட்டாசு வேலைக்கு செல்கின்றனர்.

நுண்கடன் வலையில் உழைக்கும் மக்கள்

கம்பெனியில எதுத்து கேள்வி கேட்டா அதோட சரி! வேலை கிடைக்காது! அடிமையா இருந்து சாகலாம் என்பதுதான் சிவகாசியின் நிலை! இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் இந்த நரபலி வாங்கும் கும்பலின் பின்னேதான் நிற்கின்றனர். விபத்து (படுகொலை) நடந்துவிட்டால்  கட்டப்பஞ்சாயத்து பேசி முதலாளியிடம் பணத்தை வாங்கித்தந்து வாயை அடைப்பது மட்டுமே இவர்களின் பணி.

பணம் தந்துவிட்டால் படுகொலைகளை தொடரலாம் என்கிறது அரசு.  மக்களை பலிகடாவாக்கி, விவசாயத்தை, மாடு வளர்ப்பை அழியவிட்டு இந்த நிலைக்கு தள்ளிய அரசை கேள்வி கேட்டு போராட்டம் நடத்துவதை உணராத வரை மக்களுக்கு இங்கே பாதுகாப்பில்லை. அந்த சிந்தனையை விதைக்கும் முகமாக இப்பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவில்பட்டி.

இழிவுகளே பெருமை ! எகனாமிக் டைம்ஸின் மகளிர் தின ஸ்பெஷல் !

1

‘முதலாளித்துவ கட்டமைப்பையே அகற்றினால் தான் பெண்ணுக்கு சுவாசம்’ என்று தோழர் துரை சண்முகத்தின் கவிதையைப் படித்த வினவின் வாசக நண்பர் ஒருவர், ‘முதலாளித்துவம்தான் பெண்ணுக்கு பல அக்கப்போர்களிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தது. நாப்கின், வாசிங் மெசின், டிஷ் வாசர், மைக்ரோவேவ் ஓவன், ரெடிமேட் உணவு, ரூம்பா ரோபாட், டயப்பர், பால்பவுடர், கருத்தடை சாதனம் போன்றவையல்லாம் முதலாளித்துவத்தின் சாதனைகள்’ என்று பட்டியலிட்டிருந்தார்.

வியப்பூட்டும் வகையில் நமது வாசகரை விட இந்தவருடம்  பல முதலாளித்துவ ஊடகங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் மிகவும் பெருந்தன்மையுடன் உழைக்கும் மகளிர் தினத்தில் (உழைக்கும் என்பதை மட்டும் தூக்கிவிட்டு) மகளிர் தினம், மகளிர் தின ஸ்பெசல் என்று விளம்பரங்கள், செய்திகள் என்று சக்கைப்போடு போட்டனர். அவற்றிலிருந்து சில செய்திகளை புகைப்படங்களாக இங்கு முன்வைக்கிறோம். முதலாளித்துவம் பெண்களை எப்படி பார்க்கிறது? நமது வாசக நண்பர் முன்வைக்கும் கருத்து எப்படிப்பட்டது? பதிலை அறிவதற்கு இவை உதவும்.

எகானமிக்ஸ் டைம்ஸ்-பனாச் சிறப்பிதழ், மகளிர் தின வாழ்த்துக்கள் என்று இலச்சினையை போட்டு சிறப்பிதழின் உள்ளே பல சங்கதிகளைச் சொல்லியிருக்கிறது.

எகானமிக்ஸ் டைம்ஸ், ‘இந்த மகளிர் தினத்தில் உங்களது காதலிக்கு கீழ்க்கண்ட அழகுசாதனப்பொருட்களை வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்’ என்று ஒரு செய்தியைப் போட்டிருக்கிறது.

இந்த சாதனைப் பட்டியலில் ஐபுரோ, நகப்பாலீசு, பேசியல் டச் அப் மற்றும் இது இன்னதென்று தெரியாத பல கருமாந்திரங்களும் அவற்றின் அடக்கவிலையும் இங்கு கச்சிதமாக தரப்பட்டிருக்கின்றன. இந்த அழகு சாதன பொருட்கள் இல்லை என்றால் ‘போட்டிகள்’ நிறைந்த ‘காதலர்கள் உலகில்’ நீங்கள் தோற்றுப் போவீர்கள் என்பதே இவ்விளம்பரக் ‘கவிதை’ முன்வைக்கும் கருத்து. இதயத்தின் மொழியாக பேசப்படும் காதல் இங்கே ‘இன்டெக்ஸ்’ பட்டியலாக உணர்த்தப்படுகிறது.

பெண் உரிமை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தப்பட்டியலில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட வஸ்துக்கள் பெண் கருப்பாக இருப்பதை அசிங்கம் என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறதே? தன்மானமுள்ள எவர் ஒருவரும் தன்னை அழகுபண்டமாக பார்க்கும் இந்த இழிவை ஏற்பாரா? ஒவ்வொரு மனித முகமும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுவதே அழகு எனும் இயற்கைக்கு எதிராக அனைவரும் ஐஸ்வர்யா போன்ற பார்பி பொம்மைகளாக மாறவேண்டும் என்றால் இதை விட பெண்களை இழிவுபடுத்துவதற்கு வேறு என்ன வேண்டும்?

உழைக்கும் மகளிர் தினத்தில், எங்களுக்கு வேலை வேண்டும், வேலை நேரத்தை ஒழுங்கமைக்க வேண்டும், குடும்ப வன்முறையிலிருந்து விடுதலை பெறவேண்டும், மருத்துவம், மகப்பேறு, குழந்தைநலத்தை காப்பதற்கான குறைந்தபட்ச அரசமைப்பு கூட இல்லாதிருப்பதை எதிர்த்து போராட வேண்டும் என்று சனநாயக அமைப்புகள், புரட்சிகர இயக்கங்கள் உழைக்கும் மகளிரை அணிதிரட்டும் பொழுது, உங்கள் காதலியை மேற்கொண்டு அழகுபடுத்துங்கள் என்று சொல்வதன் பின்னணியில் நுகர்வு மட்டுமல்ல பெண்கள் மீது ஆயிரம் ஆண்டுகளாக சுமத்தப்பட்டிருக்கும் பார்ப்பனிய கொடுங்கோன்மையும் சேர்த்தே அடங்கியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக இந்துப்பண்பாட்டின் காமசூத்திரம் ரஜோ, தமோ, சாத்வீக குணம் என்று பெண்களை பிரிக்கிறது. சாத்வீகமான பெண் அதிர்ந்து பேசமாட்டாளாம். கற்பூர வெற்றிலையுடன் கமகமக்கும் சிவப்பு செவ்வாயுடன் கணவனுக்கு சேவைசெய்ய காத்திருப்பாளாம். இங்கு கற்பூர வெற்றிலைக்குப் பதிலாக உதட்டிற்கு லேக்மே சாயம் பூசி பெண்களை சாத்வீகமாக்குங்கள் என்று சொல்கிறது முதலாளித்துவம்.

பெப்சி கோக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடும் உழைக்கும் பெண்களுக்கு எதிராக ‘பெப்சியின் தலைமை அதிகாரியாக தன் உழைப்பால் உயர்ந்திருக்கிறார் இந்திரா நூயி ’ இதுதான் மகளிரின் சிறப்பு என்று வாதிட்டால் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட படம் தான் கீழே நீங்கள் பார்ப்பது.

வினவு செய்தியாளர்கள் சலவைத் தொட்டி, கடை வியாபாரிகள், தனித்து வாழும் முதியோர்கள் என்று பெண்களின் நிலையைக் காட்டினால், பெண்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஜாய்ண்ட் வென்ச்சர், தனியார் கந்துவட்டி நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக இருக்கிறார்கள் பாருங்கள் என்கிறது எகானமிக்ஸ் டைம்ஸ். ஆனால் உழைக்கும் மகளிர் தினம் என்பதே இத்தகைய முதலாளிகளை ஒழிப்பதற்குத்தான்.

மேற்கண்ட படத்தில் பெண்கள் முதலாளிகளாக இருப்பதைப் பார்த்து எகானமிக்ஸ் டைம்ஸ் பெருமைப்படுவதைப் போலத்தோன்றும். ஆனால் அதுவல்ல நிசம்! பெண்களை முதலாளித்துவம் பாலியல் பண்டமாக நடத்துகிறது என்பதற்கு இந்தப் பத்திக்கு பக்கத்திலேயே மேட்டுக்குடிகளுக்கான (எலைட்) செக்ஸ் கிளப்பில் சேருவதற்கு உண்டான விளம்பர செய்தியை எகானாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்..

படத்தில் நீச்சல் உடையை மறைத்திருக்கிறோம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியுயார்க் நகரில் அமைந்துள்ள இந்த பாலியல் விடுதி, ஆண் பெண் இருபாலருக்கும் குழு பாலுறவு என்ற அழைக்கப்படும் குரூப் செக்ஸ், பாலுறவுத் துணையை அடிமையாக நடத்தும் ஜீனர்கள், தீம் செக்ஸ் போன்ற சேவைகளை வழங்குகிறதாம். இதற்கு கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் 48 இலட்சமாம்!

ம் நாட்டில் பழங்குடியினர் இயற்கையை தாயாக பாவித்து போற்றி வளர்க்கும் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். இப்படிப்பட்ட பழங்குடியினர் மீது இந்த அரசு பச்சை வேட்டை நடத்தி அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. எதற்காக? யாருக்காக? மில்லியன் டாலர் கனிம வளங்களை வேதாந்தா போன்ற தரகு முதலாளிகள் அபகரிப்பதற்காக.

இதுவரை இந்த கனிமவேட்டைக்காக சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட பெண்கள் எத்துணை பேர்? மத்திய துணைராணுவப்படையின் வன்புணர்வால் சீரழிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் எத்துணை பேர்? இயற்கையை தாயாக போற்றிப் பாதுகாக்கும் பழங்குடியினரின் நிலை இதுவென்றால் வேதாந்தா நிறுவனம் மேற்கண்ட படத்தில் பெண்களின் மேம்பாட்டிற்காக தனது நிறுவனம் உழைப்பதாக பிசினஸ் ஸ்டேண்டர்டு நாளிதழில் மகளிர் தின செய்தி வெளியிட்டிருக்கிறது.

இப்பொழுது சொல்லுங்கள் முதலாளித்துவத்தின் கீழ் பெண்களின் நிலை என்ன? உழைக்கும் மகளிர் தினம் என்பதே இந்த முதலாளித்துவத்தையும் இத்தகைய முதலாளிகளையும் ஒழிப்பதற்குத்தான் என்பதில் மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா?

– சம்புகன்