மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 07-03.2017 அன்று சென்னை கவின் கலைக் கல்லூரி (சென்னை ஓவியக் கல்லூரி) மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். கல்லூரியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றிருந்தாலும் மீதமிருக்கின்ற மாணவர்கள் அணிதிரண்டு எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திணிப்பு, நியுட்ரினோ திணிப்பு, மீத்தேன் திட்டம் திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்ற எதிர்ப்பு குரலை எழுப்பியுள்ளனர். தங்களுடைய எதிர்ப்பை ஓவியங்கள் மூலம் காட்டியுள்ளனர். மத்திய , மாநில அரசுகள் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பதை அனைத்து மாணவர்களும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பதற்கு இப்போராட்டமும் ஒரு சான்று.
இந்த போராட்டத்திற்கு பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட அனைவரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சுமார் 3 மணி நேரமாக நடந்த போராட்டத்தின் இறுதியில் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நடத்த போவதாக கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இங்கிலாந்து நாட்டில் சில பென்னி நாணயங்களே தேவைப்படும் 14 சிகிச்சைகளுக்கான செலவு அல்லது மருந்துகளின் விலை 1000 விழுக்காடு வரை அதிகரித்திருக்கின்றன.
NHS – இங்கிலாந்து மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு பொதுச் சுகாதார நிறுவனமாகும். ஆண்டு ஒன்றிற்கு அரசால் 8 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இயங்கும் இந்த தேசிய சுகாதாரச் சேவை(NHS) இங்கிலாந்து மக்களின் நாடித்துடிப்பு என்றே சொல்லலாம். 2014 ஆம் ஆண்டு உலக வல்லுனர்கள் குழு ஒன்று, வளர்ந்த 11 நாடுகளின் மருத்துவத்துறைகளை ஒப்பிட்டு ஒரு ஆய்வினை வெளியிட்டது. நலம்புரி அரசுகளின் எச்சமாக இருக்கும் இங்கிலாந்தின் NHS-யை அவற்றில் மிகச்சிறந்ததாக தேர்வு செய்தனர். அதே நேரத்தில் மிகவும் மோசமானதாக அமெரிக்க சுகாதாரத்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இது ஒன்றே NHS-க்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்த போதுமானதாக இருக்கிறது. இந்த நிலையில் மருந்துகளின் விலையை மருந்து நிறுவனங்கள் தாறுமாறாக அதிகரித்துவிட்டதால் இங்கிலாந்து மக்களும் தவிக்கின்றனர்.
காப்புரிமை காலாவதியான புற்றுநோய் மருந்துகளின் விலையை ஏற்றுவதின் மூலம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. இந்த விலை உயர்வால்ஏற்கனவே பணப்பற்றாக்குறையில் தவிக்கும் இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை நிறுவனம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 வகையான புற்றுநோய் மருந்துகளின் விலை 100 விழுக்காட்டிலிருந்து 1000 விழுக்காடு வரை உயர்ந்து விட்டதாக மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். விலையேற்றம் செய்யப்பட இந்தப் பொதுமருந்துகள் அனைத்தின் காப்புரிமைகளும் அங்கே காலாவதியாகிவிட்டன. அதாவது மூலப்பொருட்களின் விலையை விட சற்றேக் கூடுதலான விலையில் அம்மருந்துகளை இனி தயாரிக்க முடியும்.
ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஐரோப்பிய புற்றுநோய் கலந்தாய்வு கூட்டத்தில்(European Cancer Congress) ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த வல்லுனர்கள் பொதுமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அநியாய விலையேற்றம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர். உயிர்க்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு அளிக்கப்படும் தாராபிரிம்(Daraprim) என்ற மருந்தின் காப்புரிமையை அமெரிக்காவைச் சேர்ந்த டூரிங் என்ற மருந்து நிறுவனம் 2015 ஆண்டு பெற்ற பின்னர் அதன் விலையை 904 ரூபாயிலிருந்து (13.5 டாலர்) இருந்து 50,228 ரூபாயாக (750 டாலர்) அதாவது 5,500 விழுக்காடு அநியாய விலையேற்றம் செய்தது. டூரிங் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியான மார்டின் ஸ்ரேலி (Martin Shkreli) அமெரிக்க மக்களின் மிகவும் வெறுக்கத்தக்க மனிதரானது மட்டுமல்லால் ஜனாதிபதி தேர்தலிலும் இது எதிரொலித்தது.
விலையேற்றத்தின் காரணமாக இங்கிலாந்தின் தேசியச் சுகாதார சேவைக்கான செலவீனம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்குமென்று லிவெர்பூல் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் சிகிச்சைத்தீர்வியல் துறையைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹில் கூறினார். இதனால் சந்தைக்கு வரும் மிக அதிக விலை கொண்ட புதிய புற்றுநோய் மருந்துகளின் பயன்பாடு 20 விழுக்காடு வரை குறைக்கப்படும் என்று NHS கூறியிருக்கிறது. “இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயில் இருந்து 8,337 கோடி ரூபாய்(£1 பில்லியன்) கூட இருக்கும்” என்று அவர் கூறினார்.
நன்றி: தி கார்டியன், ஜனவரி 2015 ல் 10,500 க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன
இந்த நிதிவெட்டுக் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 30,000 மரணங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் 50 வயதை கடந்தவர்களின் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக பதிவாகி இருக்கின்றது.
NHS க்கு ஆகும் திட்ட வட்டமான செலவைக் கண்டறிய ஆண்ட்ரூ ஹில் மற்றும் இலண்டன் சுகாதார மற்றும் வெப்பமண்டல மருத்துவப்பள்ளியின் இணையாசிரியரான மெலிசா பார்பர் இருவரும் ஈடுபட்டனர். புற்றுநோய்க்கான மருந்துகளைக் குறித்துக் கொடுக்கும் மருத்துவமனைகளில் இருந்து தகவல்களைச் சேகரிக்க இயலாததால் NHS-ற்கு ஆகும் செலவினை இவர்களால் கணக்கிட இயலவில்லை. இந்த ஆய்விற்காக உலகச் சுகாதார நிறுவனமும்(WHO) திறந்தவெளி சமுதாய அறக்கட்டளையும்(Open Society Foundation) நிதியுதவி செய்திருந்தன. அதேநேரத்தில் புற்றுநோய்க்கான மருந்து மட்டுமல்ல பொது மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் பரிந்துரைக்கும் அனைத்து பொதுமருந்துகளின் விலையும் கடுமையாக அங்கே உயர்ந்திருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. பொதுமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையை ஏற்றிவிட்டதால் 2015 ஆம் ஆண்டில் 3,160 கோடி ரூபாய் (380 மில்லியன் பவுண்டுகள்) அதிகமாக NHS செலவழித்துள்ளது. இது இங்கிலாந்து மக்கள் அதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன் காணாத கடும் விலையேற்றம்.
விலையேற்றம் செய்யும் மருந்து நிறுவனங்களை கண்காணிக்கவோ அல்லது அவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்தவோ NHS முயலவில்லை என்கிறார் ஹில். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மருந்து நிறுவனங்கள் செய்யும் விலையேற்றம் கண்டுகொள்ளப்படவில்லை.
கருப்பைப் புற்றுநோய்க்கு வழங்கப்படும், காப்புரிமை காலாவதியான விலையேற்றப்பட்ட மருந்துகளில் ஒன்றான மெல்பாலான் என்ற மருந்தை இங்கிலாந்து நிறுவனமான கிளாக்சோஸ்மித்கிலைன் (GlaxoSmithKline) தயாரித்திருந்தது. அந்த மருந்துடன் காப்புரிமை காலாவதியான வேறுசில புற்றுநோய் சிகிச்சைகளுக்கான மருந்துகளும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆஸ்பென் மருந்து நிறுவனத்திடம் 2009 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆஸ்பென் நிறுவனத்தின் 16 விழுக்காடு பங்குகளை கிளாக்சோஸ்மித்கிலைன் வைத்திருந்தது.
2011 ஆம் ஆண்டு 2 மி.கி மெல்பாலான் மருந்தின் விலை 46 ரூபாயிலிருந்து(55 பென்னி) 2016 ஆம் ஆண்டு 151 ரூபாயாக (1.82 பவுண்டு) அதாவது 230 விழுக்காடு எகிறிவிட்டதாக ஹில் மற்றும் பார்பரது ஆய்வு கூறுகிறது. இதற்கெதிராக எந்த நடவடிக்கையும் NHS எடுக்கவில்லை. இத்தாலியில் 2014 ஆம் ஆண்டு இந்த மருந்தின் விலையை 1500 விழுக்காடு அதிகரிக்க ஆஸ்பென் முயற்சி மேற்கொண்டது. மறுத்தால் கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அனைவருக்கும் மருந்து வழங்குவதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியது. ஆனால் இதற்க்கெதிராக இத்தாலியின் வர்த்தக சுதந்திரத்திற்கான ஆணையம் (Italian competitions authority) 36 கோடி ரூபாய் (5.5 மில்லியன் டாலர்) அபராதம் விதித்தது. இத்தாலியின் மருந்து சந்தைக்கான நேரடி வழங்கலை(Direct Supply) கடுமையாக பாதிக்குமளவிற்கு இந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் இருந்ததாக அந்த ஆணையத்தின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
ஆஸ்பென் நிறுவனத்தின் மருந்து தட்டுப்பாட்டால் இங்கிலாந்து மட்டுமல்ல ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. மருந்துத் தட்டுப்பாட்டிற்கான காரணத்தைப் பற்றிய கேள்விகளுக்கு ஆஸ்பென் நிறுவனம் பதிலளிக்கவில்லை. மெல்பாலான் மருந்து கிடைக்காததால் மாற்றுமருந்து கொடுக்கப்பட்ட மூன்று பிரான்ஸ் பெண்கள் உயிரிழந்துள்ளனர். மெல்பாலான் சந்தைப்படுத்தபடுவதற்கு முன்னர் சைக்ளோஸ்பாமைடின் மருந்தே பரிந்துரைக்கப்பட்டு வந்ததால் இது கண்டிப்பாக பாதுகாப்பானதாக தான் இருக்க வேண்டும். இதைக்குறித்த ஆய்வு ஒருபுறம் நடந்து வருகிறது.
இங்கிலாந்தில் அதிக விலையேற்றம் செய்யப்பட்டது அதே ஆஸ்பென் நிறுவனம் தயாரித்த பசல்ஃபேன் என்ற மருந்து என அக்குழு கண்டறிந்தது. நாட்பட்ட இரத்த வெள்ளையணு புற்றுநோயான மைலாய்டு உலுக்கேமியாவிற்கு பயன்படும் மருந்தான பசல்ஃபேனின் விலை 2011 ஆம் ஆண்டு 2 மி.கி-ற்கு 17 ரூபாயாக (21 பென்னி) இருந்தது. ஆனால் 2016 ம் ஆண்டில் தடாலடியாக 217 ரூபாயாக (2.61 பவுண்டுகள்) அதாவது 1,143 விழுக்காடு அதிகரித்துவிட்டது.
ஆஸ்பென் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2010-லிருந்து 650 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. கிளாக்சோஸ்மித்கிலைன் நிறுவனம் தனது ஆஸ்பென் நிறுவன பங்குகளை மூன்று பகுதிகளாக விற்றது. கடைசிப் பகுதியை விற்றதில் சுமார் 12,500 கோடி ரூபாய்(1.5 பில்லியன் பவுண்டுகள்) அதற்குக் கிடைத்தது.
ஃ`பைசர்(Pfizer) என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு 2016 டிசம்பரில் 700 கோடி ரூபாய் (84 மில்லியன் பவுண்டு) அபராதம் விதிக்கப்பட்டது. பிளின் பார்மா(Flynn Pharma) என்ற மற்றொரு பொதுமருந்து நிறுவனத்துடன் சேர்ந்து காப்புரிமை காலாவதியான கை-கால் வலிப்பு எதிர்ப்பு மருந்து ஒன்றிற்கான விலையை 2,600 விழுக்காடு அதிகரித்து NHS-யிடம் வசூலித்ததாக குற்றஞ்சாட்டி இங்கிலாந்து போட்டி ஆணையம் இந்த அபராதத்தை விதித்து இருந்தது. NHS-ற்கு வேறு போக்கிடம் இல்லாததைப் பயன்படுத்தி அதனை அந்நிறுவனம் சுரண்டியிருக்கிறது. ஏனெனில் அந்த மருந்தை வேறெந்த நிறுவனமும் தயாரிக்கவில்லை. இதனால் முறையான காரணங்களின்றி செய்யப்படும் விலையேற்றத்தை விசாரிக்க இங்கிலாந்தின் சுகாதாரத்துறைக்கு அதிகாரத்தை அளிக்கக்கூடிய ஒரு மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற உள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் கவலையளித்திருப்பதாக டோரி கட்சி எம்.பி சாரா வோலஸ்டன் கூறுகிறார். “மருந்து நிறுவனங்கள் செயற்கையாக விலையேற்றம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதனால் ஏனைய இன்றியமையாத சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் நிதி தவிர்க்கவியலாமல் வெட்டப்படுகிறது.” என்று அவர் கூறினார்.
இந்த விலையுயர்வு வேறு எந்த மூர்க்கத்தனத்தை விடவும் மோசமானது என்று ஐரோப்பிய புற்றுநோய் கழகத்தின் நோயாளிகளுக்கான ஆலோசனைக்குழுவின் தலைவர் இயான் பேங்க்ஸ் கூறுகிறார். இந்த விலையேற்றத்தினால் ஒரு நோயாளியாவது அவரது உயிர்காக்கும் சிகிச்சை பெறமுடியாமல் இருக்கிறார் அல்லது அந்த பணத்தை வைத்து குறைந்தது அவரது வாழ்க்கைத்தரத்தையாவது உயர்த்திக் கொள்ளமுடியும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.
மார்பக புற்றுநோய்க்கான மருந்தான தமொக்சிபேன் உள்ளிட்ட பொதுமருந்துகளை விலையேற்றம் செய்வதற்காக மருந்து நிறுவனங்கள் கூறும் பரிந்துரைகள் குறித்தும் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இது ஏற்கனவே தடுமாற்றத்தில் இருக்கும் NHS-ற்கு மேலும் சிக்கலைத்தான் உருவாக்கும் என்று “நிகழ்கால மார்பக புற்றுநோய்’’ (Breast Cancer Now)” என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மியா ரோசன்பிளாட் கூறுகிறார்.
நன்றி: தி கார்டியன், 2015 இல் இறப்பு விகிதங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளை விட அதிகபட்ச உயர்வை எட்டியது
அதிக விலை கொண்ட மருந்துகளைத் தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் தங்களது முதலீடுகளைத் திரும்ப பெற குறுகிய காலமே இருப்பதாகவும் எதிர்காலத்தில் மருந்துகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்குமென்பது சுகாதாரக் கட்டுப்பாட்டுத் துறைகளின் புரிதலில் ஒன்றாக இருக்கிறது.
பொதுமருந்துகளின் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருவதுதான் உண்மையான பிரச்சினையாகும். சுகாதார சேவை மருத்துவப் பொருட்களுக்கான மசோதா மூலம் இந்தப் பிரச்சினையை சரி செய்ய முயலும், அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ரோசன்பிளாட் மேலும் கூறுகிறார். ஆனால் இம்முயற்சிகளெல்லாம் நிறுவனங்களின் கொள்ளையை தடுத்து நிறுத்துவது கடினம்.
இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பான்மையான மருந்துகளுக்கு போட்டியான மாற்று மருந்துகள் எதுவும் கிடையாது. ஏனெனில் ஒரேயொரு நிறுவனம் மட்டுமே ஏகபோக தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது என்று பிரிட்டிஷ் பொதுமருந்து தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு(The British Generic Manufacturers Association) கூறியிருக்கிறது. ஒட்டுமொத்தச் சந்தையின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதால் மருந்து தயாரிக்கவும் சோதிக்கவும் காப்புரிமை வாங்கவும் போடும் முதலீட்டை நிறுவனங்களால் திரும்பப் பெற முடியாது என்பதால் பொதுமருந்து நிறுவனங்கள் அதில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுவதில்லை என்று ஒரு அறிக்கையில் அது கூறியிருந்தது.
ஆனால் பொதுமருந்து ஒன்றைப் புதிதாக தயாரிக்க ஆகும் செலவு அதிகம் கிடையாது என்கிறார் ஹில். NHS-ற்கு மருந்து நிறுவனங்கள் தற்போது கொடுக்கும் மருந்தை விட மலிவு விலை மருந்துகளை இந்தியாவில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியும் என்று கூறுகிறார். உலகின் பல்வேறு வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் பொது மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது. அதையும் முன்னர பன்னாட்டு நிறுவனங்கள் தடை செய்திருந்தன.
இன்று உலகின் பெரும்பாலான மருந்துகளின் காப்புரிமைகளைப் பெருநிறுவனங்களே வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் புதிய மருந்திற்கான ஆராய்ச்சிக்கு நிதியை ஒதுக்குவதை விட கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் காப்புரிமைகளை வாங்கவே அதிகம் செலவிடுகின்றன. மேலும் காப்புரிமை காலாவாதியான பின்னரும் மருந்துகளுக்கு காப்புரிமையை நீட்டித்துக் கொள்கின்றன. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான நோவர்டிஸ்(Novartis) புற்றுநோய்க்கான கிலீவச்(Gleevec) என்ற மருந்தைச் சிறுமாற்றம் செய்து காப்புரிமை நீட்டிப்பை பெற இந்தியாவில் முயன்றது குறிப்பிடத்தக்கது.
அரசின் அத்தனை உறுப்புகளையும் பணமும் அதிகாரமும் படைத்த பெரும்பணக்காரர்கள் தான் கட்டுபடுத்துகின்றனர். காப்புரிமைச் சட்டங்களையும் அவர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள். தனிநபர்கள் காப்புரிமை வாங்குமளவிற்கு பணபலம் மற்றும் அரசியல் பலமற்றவர்கள். இவர்களிடம் இருந்து காப்புரிமையைக் கைப்பற்றியப் பின்னர் பெருநிறுவனங்கள் அதை ஏகபோகமாக்கிவிடுகின்றன.
காப்புரிமை இல்லையென்றால் புதிய மருந்துகள் கண்டுபிடிக்க யாரும் முயற்சிக்க மாட்டார்கள் அல்லது அவர்களுடைய உழைப்பை யாராவது ஏமாற்றி பறித்துக்கொள்வார்கள் என்பது முதலாளித்துவவாதிகள் கூறும் வழமையான காரணங்களில் ஒன்று. ஆனால் சூரியனுக்கு காப்புரிமை வாங்க முடியுமா என்று கேட்டார் போலியோவிற்கான மருந்தை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஜோனஸ் ஸ்டால்க்.
தனிமனிதனே எதையும் உருவாக்கி விடுவதில்லை. புராதன இனக்குழு மக்கள் தாங்கள் கண்டறிந்த சக்கரத்திற்கும் நெருப்பிற்கும் காப்புரிமை வாங்கியிருந்தால் நவீன அறிவியலே கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒரு சில மனிதர்களுக்கோ அல்லது ஒருசில தனியார் நிறுவனங்களுக்கோ சொந்தமல்ல. நவீன இயற்பியலின் ஆகச்சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் தத்துவத்திற்கு (E=mc2) பின்னால் மைக்கேல் ஃபாரடே, எமிலி டூ சாட்லே, லிசா மைட்னர் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் அறிஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பங்களிப்பு இருக்கிறது.
காப்புரிமைப் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை உண்மையில் சாகடித்துவிடுகிறது. உருவாக்குவது, சோதித்தறிவது, சரி செய்வது என்று மீண்டும் மீண்டும் நடக்கும் இந்த நிகழ்ச்சிப்போக்கானது உண்மையில் பரந்துபட்ட மக்களின் பங்களிப்பில் தான் சாத்தியமாகிறது. காப்புரிமையும் ஏகபோகமும் அறிவியலின் இந்தச் செயல்முறையைச் சில தனிப்பட்ட நபர்களின் கைகளில் சேர்ப்பதன் வாயிலாக மனிதச் சமூகத்தின் சிந்தனையைக் காயடிக்கின்றன.
இந்தியாவில் தற்போது மலிவு விலையில் போடப்படும் தடுப்பூசிகளின் நிலையை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள். இப்போதே அரசு போடும் தடுப்பூசிகளை விட தனியார் மருத்துவமனைகள் அதிக ஊசிகளை மிக அதிக விலையில் போடுகின்றன. நாளைக்கே இத்தடுப்பூசிகளை போட்டே ஆக வேண்டும் என்ற நிலையை அனைவருக்கும் உருவாக்கி விலையையும் அதிகம் உயர்த்துவார்கள். ஏற்கனவே பல தடுப்பு மருந்துகள் அப்படி உயர்த்தப்பட்டிருக்கின்றன. இப்படித்தான் மருந்து துறை செயல்படுகிறது. இறுதியில் காசு உள்ளவனுக்கு மருந்து இல்லாதவனுக்கு மரணம் என்பதே இவர்கள் வகுத்திருக்கும் நீதி! இந்தியாவானாலும் இங்கிலாந்தானாலும் முதலாளித்துவ சந்தை முறை நீடிக்கும் வரை இங்கே அறிவியலுக்கும், மருத்துவத்திற்கும், மக்களுக்கும் விடுதலை இல்லை!
இவர்கள் வேறு பெண்கள். சென்னை நகரின் அழுக்கை துவைக்கும் வெள்ளை மனம் கொண்ட கடும் உழைப்பாளிகள். உழைப்பின் அழகில் தோய்ந்திருக்கும் அவர்களது முகங்கள் வயதை கூட்டியே காண்பித்தன. அன்றாடம் அடித்து துவைத்து, குனிந்து நிமிர்ந்து உடல் என்பது இவர்களைப் பொறுத்த வரை ரப்பர் போன்றது. அத்தோடு வீட்டு வேலைகள். வழக்கமாய் குடிக்கும் ஆண்கள். ஊரைச் சுற்றி கடன். மழை வந்தால் வெள்ளாவி வேலை இல்லை. கடன் அதிகம் வேண்டும். பிள்ளைகளை படிக்க வைக்க முயன்றும் வேறு வழியின்றி சோப்பையே ஆயுதமாக எடுக்க வேண்டியிருக்கிறது. சென்னை நகரின் கூவத்திற்கு அருகே இருக்கும் திடீர் நகரின் டோபி கனா என்று அழைக்கப்படும் சலவைத் துறைக்கு வாருங்கள். இந்த மகளித் தினத்தை இவர்களோடு செலவழிப்போம்.
சிறு சிறு பகுதியாக தடுக்கப்பட்டு சிதிலமடைந்த நீளமான சிமண்ட்டு தண்ணீர் தொட்டி. அதனருகில் அடித்துத் துவைக்க இடுப்பளவு உயரமுள்ள சலவைக் கல். துவைத்தது, துவைக்காதது, நீலம், கஞ்சி போட்டது, போடாதது என பிரித்து வைக்கவும் நின்று வேலை செய்யவும் நீண்ட சிமெண்ட் களம். கார்ப்ரேசன் லாரி தண்ணீரை நம்பித்தான் சலவை என்பதால் தண்ணீர் பிடித்துவைக்க பெரிய சிறிய டிரம் மற்றும் பாத்திரங்கள். துணிகளைக் காயவைக்க கயிறு கட்டிய திறந்த வெளி. துணிகளுக்கான கஞ்சியைக் காய்ச்சும் இடம். குடித்தனமாகவும் பயன்படுத்தப்படும் சலவையர் ஓய்வறை. துவைத்த கழிவுநீர் சரியாக ஓட வழியில்லாததால் ஒரு பக்கம் சாக்கடைத் தேக்கம். இதுதான் சென்னை சைதாப்பேட்டை திடீர் நகரில் இருக்கும் டோபி கனா என்று அழைக்கப்படும் சலவைத் தொழிலாளர் துறை.
இங்கே 500-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனர். தண்ணீர் வசதியுடன் துவைப்பதற்கு ஒவ்வொரு சலவைத் தொழிலாளிக்கும் கல் பலகை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அங்கே 50 பலகைதான் இருக்கிறது. சலவைத் தொழிலுக்கு மூலதாரமான தண்ணீருக்கு இங்கு எந்த வாய்ப்பும் கிடையாது. 20 வருடங்களாக லாரி தண்ணீரை நம்பித்தான் தொழில் செய்கிறார்கள். அதற்கு அவர்களே செலவும் செய்கிறார்கள். ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு சலவைக் கல்லுக்கு மாதம் 12 ரூபாய் வரி கட்டுகிறார்கள். கல், தண்ணீர், துணி காயும் இடம் போன்றவற்றில் வரும் சிக்கல்களை இவர்களது சங்கத்தின் தீர்த்துக் கொண்டு தொழில் செய்கின்றனர்.
சலவை மட்டும் செய்பவர்கள், வாடகை கடை, தள்ளுவண்டி, அயனிங் என்று சிறு ஏற்ற இறக்கத்துடன் ஓடுகிறது இவர்கள் வாழ்க்கை. வாடிக்கையாளர்கள் வீடு, அரசியல்வாதி, மருத்துவமனை, அழகு நிலையம், நட்சத்திர விடுதி, சாதாரண விடுதி போன்ற இடங்களில் இருந்து இவர்களுக்கு துணிகள் சலவைக்கு வருகின்றது. இது போக வயதான சலவைத் தொழிலாளிகளுக்கு வரும் துணிகளை பிரித்தும் கொடுக்கிறார்கள். தள்ளாத வயதிலும் துவைக்கும் கரங்களை அங்கே காணலாம். துவைக்கவே இயலாதவர்களுக்கு மடிக்கவும், ரகம் பிரிக்கவும் வேலை உண்டு. சில இளைஞர்கள் மட்டும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அயனிங் வேலைக்கு செல்கிறார்கள்.
எது வீடு, எது கழிவறை என இனம் காண முடியாத நெருக்கடியான குடியிருப்பு. துவைத்த துணிகளுக்கும் கழுவிய பாத்திரத்துக்கும் நடுவில் மீன் அலசும் பெண். தெரு முழுவதும் வழிந்தோடும் சாக்கடையில் விழுந்து விடாமல் சாமார்த்தியமாக விளையாடும் குழந்தைகள். அன்னக்கூடை, தண்ணீர் கேன், தண்ணீர் குடம், அழுக்குத் துணி மூட்டைகள், அழுக்கு பாத்திரமும் அதை கழுவ தண்ணீர் வாளியும், தக்காளி வைக்கப்படும் மரப்பெட்டியில் பலதரப்பட்ட பொருட்கள் என வறண்டு போன ஒரு தோற்றம் தெருமுழுதும். வீட்டுக்கு வெளியேயும் வரிசைகட்டி நிற்கும் பொருட்களைப் பார்க்கும்போது எதுவரை அவர்கள் வீட்டு எல்லை, எந்த பொருள் யாருடையது எனப் பிரித்து பார்க்க முடியாத குழப்பம் நமக்கு.
உச்சிப் பொழுது வெயில் உடலை சுட்டெரிக்கும் வரை துணிகளைத் துவைத்துவிட்டு காய வைப்பதும் மடிப்பதும் சலவை செய்வதும் என அன்றாடம் மூச்சு முட்ட ஓடிக் கொண்டிருக்கிறது இவர்களது வேலை. இவர்கள் குடியிருப்பில் யாரேனும் இறந்து விட்டால் அன்று மட்டும் விடுமுறை. அந்நாள்தான் இவர்களுக்கு கிடைக்கும் அரிதான ஓய்வு. வேலை செய்துகொண்டே பாட்டுக் கேட்பதும் டிவி பார்ப்பதும்தான் இவர்களுக்கிருக்கும் ஒரே பொழுது போக்கு. தலைமுறை தலைமுறையாக இத்தொழிலோடு போராடும் இவர்களுக்கு உடுத்திக் கொள்ள ஒரு நல்ல துணி கிடையாது. வெள்ளுடையாளர்கள் வேண்டாமென்று ஒதுக்கும் உடைகள்தான் இவர்களுக்கு பல சமயம் புத்தாடை.
நகம் வெட்டும் நேரம் கூட இல்லாது சிலர் உழைப்பதாகச் சொல்வார்கள். ஆனால் சலவை தொழிலாளிக்கு நகம் வெட்டும் தேவையே இருப்பதில்லை. சோப்பு மற்றும் பல்வேறு வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதாலும், அதிக நேரம் நீரிலையே நனைக்க வேண்டியிருப்பதாலும் பலருடைய கை நகக்கண்கள் பாதிக்கும் மேல் மென்று கரைக்கப்பட்டு ரத்தம் சொறிந்திருந்தது. அதேபோல் துணிக்கு மருந்து போடும் வேலையை அக்குடும்பத்தின் ஆண்கள் மட்டுமே செய்வார்கள். காரணம் மருந்து பட்டால் கை தார் போல் கருத்து போய்விடும். ஆனால் பல பெண்களின் கையும் அங்கே அப்படி இருந்ததைப் பார்க்க முடிந்தது.
குழந்தைப் பருவம் முதல் இத்தொழிலில் ஈடுபட்டதால் கல்யாண வயதில் உள்ள ஒரு பெண்ணுக்கு உடல் முழுதும் மாநிறமும் கைகளின் நிறம் மட்டும் தாரின் கருப்பாகவும் இருந்தது. அந்த பெண் எட்டாவது மட்டும் படித்திருந்தார். “எட்டாவது படிச்சா போதும் கலக்டர் வேலை தர்ரேன்னு சொன்னாங்க அதான் வீணா எதுக்கு படிச்சுகிட்டுன்னு நிறுத்திட்டோம்.” என்று அருகில் துவைத்துக் கொண்டிருந்த ரத்தினம் கேலியாகச் சொன்னார்.
“முடி வெட்றவனுக்கும் துணி வெளுக்குறவனுக்கும் தகுதி தராதரம் ஒன்னும் கூடிடலங்க. ஆத்துக்கறையில, குளக்கறையில செஞ்ச தொழில அந்தஸ்தா அழகு நிலையத்துலயும் அயனிங்க கடையிலயும் கூலிக்கு செய்யிறோம். இதைத் தாண்டி சாதித் தொழில் பாக்குற யாரும் மேல வர முடியாது. பிள்ளைங்களும் விரும்பியோ விரும்பாமலோ இந்த தொழில செஞ்சுதான் ஆகவேண்டிருக்கு. என்ன படிச்சாலும் தலைமுறை பல தாண்டியும் இந்தக் குலத்தொழில விட்டு மீள முடியலையே” என்றார்.
இப்பகுதியில் ஆண் பெண் பேதமில்லாமல் அனைத்து வேலைகளையும் இருபாலரும் கலந்தே செய்கின்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் ஒரு ஏரில் பூட்டிய இரு மாடுகளாக பாரம் சுமக்கின்றனர். வீட்டில் துணிகளைத் துவைக்க எந்திரத்தின் உதவியை பலர் நாடும் போது ஊர் அழுக்கை அடித்துத் துவைக்கும் இப்பெண் தொழிலாளிகள் என்ன சொல்கிறார்கள்?
ரமணி வயசு 70. மகன் மனைவியுடன் சித்தாள் வேலை செய்து வேறு இடத்தில் வசித்து வருகிறார். தள்ளாத வயதில் தனிக் குடித்தனம் செய்யும் ரமணியம்மா மற்ற தொழிலாளிகள் பிரித்து தரும் துணிகளை துவைத்து கொடுக்கிறார். “வயசாகி போச்சுன்னு சும்மா உக்காந்திருந்தா வயிறு பசிக்காம இருக்குமா? எங்க போரது? யாரு குடுப்பா? நேரத்துக்கு பசிக்கும் வயித்துக்காக வேலை செஞ்சுதானே ஆகனும்.”
சுமதி வயசு 50. தள்ளுவண்டி, அயன் கடையும் வைத்துள்ளனர். “நாங்க சாதியிலயே வண்ணான். எங்களப் போயி எத்தன வருசமா தொவைக்கிறீங்கன்னு கேட்டா என்னத்த சொல்ல. எங்க அப்பன், பாட்டன் காலத்துல ஆரம்பிச்சு எனக்கு கருத்து தெரிஞ்ச நாள்லேருந்து துணி வெளுக்குறேன். எம்பிள்ளைங்களாவது வேற வேலைக்கு போகாதான்னு ஏக்கமா இருக்கு”
உஷா வயது 55. பெண்கள் தினமா? துணிக்கு போட்ற சோப்பு பேரே எனக்கு ஒழுக்கா சொல்லத் தெரியாது. இதுல்லாம் எனக்கு எங்க தெரிய போகுது. நீங்க எதுக்காக வந்திருந்தாலும் சரி, எனக்கு இந்த உதவிய மட்டும் பண்னுங்க மேடம். எனக்கு ரேசன்ல சர்க்கரை அட்டை (அதிக வருமானம் உள்ள குடும்பத்துக்கான ரேசன் அட்டை) போட்டு குடுத்துருக்காக. அரிசி பருப்பு எதுவும் வாங்க முடியல அதை மாத்தி குடுத்திங்கன்னா புண்ணியமா போகும்.”
அமுதா. வயது 26 “எப்படியாவது ஒரு அயனிங்க கட போடனுன்னு ஆசை. ஆசைய மட்டும் வச்சுட்டு என்ன செய்ய முடியும். ரெண்டு லட்சம் மூனு லட்சம் பணம் வேணுமே? எங்களப் போல உள்ளவங்களுக்கு பேங்குல கடன் தரதா சொல்றதெல்லாம் டிவில பாக்குறதோட சரி. அதை யாரப் புடிச்சி எப்படி வாங்குறதுன்னு எந்த வழிமுறையும் தெரியல.”
பூவம்மாள் வயது 50 வயதை கடந்திருப்பார். “நெனவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து அப்பங்கிட்ட, பொறவு புருசங்கிட்ட வெள்ளாவி வெளுப்புதான் எம்பொழப்பு. மிச்சமுன்னு எதுவும் வேண்டாம் கடன் இல்லாம இருக்கவிடுன்னு இந்த படித்தொற அம்மாட்டதான் வேண்டிக்கிறேன்.”
கங்கம்மா. சலவை தொழிலாளி. “ரெண்டு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்து பேரப்பிள்ள எடுத்து பாட்டியாயிட்டேன். அத வெச்சு வயசு பாத்துக்கோ. 3 மாசமா ரேசன்ல எந்த பொருளும் குடுக்க மாட்றான். இன்னைக்கி சண்ட வலிச்சதுல சக்கர மட்டும்தான் இருக்கு வாங்கினு போன்னான். அவன விடாம டார்சர் பன்னி அரிசி, பருப்பு வாங்கினாதான் எனக்கு மகளிர் தினம்னு போடுங்க.”
லட்சுமி வயது 48. “எங்களுக்கு பொழுது விடியறதே கல்லாண்டதான். ஓய்வு பொழுது போக்கு எதுவும் இல்லாமத்தான் உழைக்குறோம். ஒரு வார காலம் வேலை இல்ல, தவணக்காரன் தயவு இல்லாமெ உயிர் வாழவே முடியாது..”
ஜீவா. வயது 25. பத்தாவது வரைப் படித்தவர். “நான் பொறந்ததும் கல்யாணம் செஞ்சதும் இங்கேதான். எங்க வீட்டுக்காருக்குப் பேச்சு வராது, காதும் கேக்காது. ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. அவருக்கு உள்ள குறைய விட மத்த ஆம்பளங்களைப் போல குடிக்காம இருக்குறது எனக்குப் பெரிய விசயமா தோணுச்சு.”
கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 6 2017) இரவு பத்து மணி அளவில் கச்சத்தீவு அருகே மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராமேஸ்வரத்தில் இருந்து 464 விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படை பிரிட்ஜோ இருந்த விசைப்படகு மீது சராமரியாக சுட்டிருக்கிறது. கழுத்தில் குண்டு பாய்ந்த பிரிட்ஜோ அங்கேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு மீனவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீன் பிடிதொழிலுக்காக ஒரு மீனவர் கொல்லப்படுவது உலகத்திலேயே இந்தியா அன்றி வேறு எங்கு இருக்கும்?
அதே மருத்துவமனையில் இருக்கும் பிரிட்ஜோவின் உடலுக்கு பிரதே பரிசோதனை முடிந்தாலும் உடலை வாங்க மக்கள் மறுப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கை இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும், இதுதான் கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும் என்பதே. இதற்கு மத்திய மாநில அரசுகள் உறுதி தரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் கொலை செய்த இலங்கை கடற்படை வீரர் கைது செய்யப்படவேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை.
சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோ. இதுதான் கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
கடந்த ஆறு ஆண்டுகளில் யாரும் சுட்டு கொல்லப்படவில்லை என்றாலும் அன்றாடம் மீனவர்களை தாக்கும் அட்டூழியத்தை இலங்கை கடற்படை தொடர்ந்து செய்கிறது. 130க்கும் மேற்பட்ட படகுகள் மாதக் கணக்கில் இலங்கை வசம் பிடித்து வைக்கப்பட்டு 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கே சிறையில் இருக்கின்றனர். இதுநாள் வரை தமது வாழ்வாதாரம்தான் பாதிக்கப்பட்டது என்பது போய் இப்போது மீண்டும் உயிரையே பலி கொடுக்கும் நிலைமை வந்திருக்கிறது என்று கதறுகிறார்கள் மீனவர்கள்.
இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் 30 கடல் மைல் தூரம் உள்ளது. இதை சர்வதேச விதிகளின் படி சரியாக பிரித்தால் 15 கடல் மைல் அளவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். ஆனால் 1974 இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த போதும் அதற்கு பிறகு அதே ஒப்பந்தம் 76-ம் ஆண்டில் புதுப்பிக்கப் பட்ட போதும் கடல் தூரத்தை சமமாக பிரிக்கவில்லை.
கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி தமிழக மீனவர்கள் அத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், ஆண்டு தோறும் நடக்கும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்று இரண்டு உரிமைகளை மட்டும் வழங்கியிருக்கிறார்கள். மாறாக அங்கே மீன் பிடிக்க கூடாதாம். இந்தக் குழப்பங்களோடு குறைவான தூரத்தில் எது சர்வதேச எல்லை என்று பிரித்தறிவது கடினம்.
ராமேஸ்வரத்திலிரிந்து முதல் மூன்று கடல் மைல் பரப்பில் நாட்டுப்படகுகளும், அதற்கடுத்த நான்கு கடல் மைல் பரப்பில் பாறைகள் இருப்பதால் 7 மைல்களுக்கு மேல்தான் தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தனி. ஒரு வேளை தமிழக மீனவர்கள் இந்தக் குழப்பமான சர்வதேச எல்லையை மீறுவதாகவே வைத்துக் கொண்டாலும் அவர்களை சுட்டுக் கொல்வது எப்படி சரி?
இதற்கு முன்னர் ஈழத்தமிழர் போராட்டத்தின் போது சுமார் 600 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போது புலிகளும் இல்லை, போராட்டமும் இல்லை. ஆனால் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அங்கே இராணுவம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மதயானை போல பெருத்து இருக்கிறது. மற்ற நாடுகளின் மக்கள் தொகையில் இராணுவத்தின் விகிதம் குறைவாக இருந்தால் இலங்கையில் அது அதிகம். இப்படி ஊட்டி வளர்க்கப்பட்ட் ஒரு விலங்கு தனது சுபாவத்தை கைவிடுவது கடினம்.
மேலும் புலிகளை ஒடுக்குவதற்கு பாக் நீரிணையில் மீனவர்களை அவ்வப்போது கொன்றால்தான் தமிழகத்தில் இருந்து வரும் பொருட்களை நிறுத்த முடியும் என்று இலங்கை அன்று அமல்படுத்தியது. அதை அப்போது இந்தியாவும் அங்கீகரித்தது. இப்படித்தான் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை எங்கு பார்த்தாலும் அடித்து ஒடுக்கும் காட்டிமிராண்டித்தனத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்தியாவின் மறைமுக ஆதரவுதான் இலங்கை கடற்படை இப்படி கேட்பார் இன்றி கொல்வதற்கு முக்கியமான காரணம்.
சுட்டுக் கொல்லைவில்லை என்றால் வலைகளை சேதப்படுத்தி, படகுகளை தாக்கி அல்லது பிடித்துச் சென்று என்று அன்றாடம் எல்லா வதைகளையும் படுகிறார்கள் தமிழக மீனவர்கள். விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள் அனைவரும் அன்றாட ஊதியத்திற்கு வேலை பார்க்கும் தொழிலாளிகள்தான். அவர்களைப் பொறுத்த வரை கடற் தொழில் என்பது போர் முனையில் சாகும் அபாயத்தை கொண்டிருப்பதாக மாறிவிட்டது.
இத்தாலியர்கள் அரபிக் கடலில் கேரள மீனவர்களை சுட்ட போது அவர்களை கைது செய்த இந்திய அரசு தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது ஏன் வாய் பொத்தி நிற்கிறது என்று இராமேஸ்வரம் மீனவர்கள் கேட்கிறார்கள். எதிரி நாடு எனக் கூறப்படும் பாகிஸ்தான் கூட இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. இதற்கு மேல் நாங்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்? எங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் இலங்கையோடு கூட சேர்த்து விடுங்கள் என்று கோபமாக கேட்கிறார்கள் அவர்கள்.
மத்திய பாரதிய ஜனதா அரசோ இந்த படுகொலைக்கு வெறும் வருத்தம் மட்டுமே தெரிவித்திருக்கிறது. பெயரளவு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. இலங்கை அரசோ தமது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை என்று முழுப்பொய்யை அதிகாரப்பூர்வமாக கூறுகிறது. பிறகு விசாரிக்கிறோம் என்று கூறுகிறது. இறுதியில் இந்த விசாரணையை வைத்தே தான் கடுமையான நடவடிக்கை எடுத்து விட்டதாக இந்திய அரசு நாடகமாடும்.
எல்லையிலே சர்ஜிக்கல் ஸ்டிரைக், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று உதார் காட்டிய மோடி இப்போது ஏன் பயந்து ஓடுகிறார் என்று மீனவர்களோடு சேர்ந்து இதர பிரிவு தமிழக மக்களும் கேட்கிறார்கள். இலங்கையிலேயே ஏராளம் முதலீடு செய்துள்ள தரகு முதலாளிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மோடி அரசு ஒரு மீனவனின் உயிருக்காக ஒன்றும் செய்யாது என்பதே யதார்த்தம். இதற்கிடையில் சிலர் இலங்கையை யார் கட்டுப்படுத்துவது என்று சீனா – அமெரிக்காவிற்கு இடையே நடக்கும் போராட்டம் என்று கண்டதையும் உளறி இந்த சம்பவத்திற்கு பயங்கரமான பின்னணி ஆய்வு தருகின்றனர்.
தமிழக் மக்களை ஒடுக்கிய இலங்கை இராணுவத்தின் கடற்படை தனது பழைய பழக்கத்தை அதாவது தமிழக மீனவர்களை ஒடுக்கும் பேட்டை ரவுடித்தனத்தை விடவில்லை. மேலும் தற்போது இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. அனைத்து பிரிவு மக்களும் அங்கே அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் குறிப்பான பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டங்களை திசை திருப்பக் கூட இலங்கை அரசு தனது கடற்படையை ஏவி இந்தக் கொலையை செய்திருக்கலாம். ஆகவே இலங்கை கடற்படை என்பது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, போராடும் இலங்கை மக்களுக்கும் எதிரிதான்.
முக்கியமாக இலங்கை அரசின் கடற்படை ரவுடித்தனத்திற்கு சோறும் சரக்கும் போட்டு வளர்த்து ஆசீர்வசித்த இந்திய அரசு இலங்கையில் ஏர்டெல், டாடாவிற்கு சேவை செய்யுமா தமிழக மீனவரின் உயிரை காக்குமா?
நெடுவாசலை அடுத்து தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் பொருட்டு இளைஞர்களுக்கு அடுத்த போராட்டம் வந்து நிற்கிறது. களமிறங்குவோம் !
கோவையில் மருதமலை அருகில் உள்ள பாரதியார் பல்கலை கழகத்தில் 06.03.2017 அன்று மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், நெடுவாசல் மக்களின் போராட்டத்தை ஆதரித்தும் பல்கலை கழக மாணவர்கள் போராட்டம் துவங்கினர். அனுமதி வாங்கி போராட்டம் செய்யும் மாணவர்கள் அன்று போராட அனுமதி தரவில்லை என்றாலும் போராடுவோம் என உறுதியாள நின்றனர். போராட்டத்தை ஆதரித்து சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் சென்றனர்.
இன்டர்னல் மார்க்ல கை வச்சுருவேன் ஒழுங்கா கலைஞ்சு போங்க
மாணவர்கள் விண் அதிர முழக்கமிட்டு கொண்டிருக்கையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அந்த மழையை சற்றும் பொருட்படுத்தாது மாணவர்கள் தொடந்து போராட்டத்தை நடத்தினர்.
உடன் ஓடி வந்த காவல் துறை போராட்டத்தை கலைக்கும் படியும், போராட்டம் நடத்த கூடாது எனவும் மிரட்டினர். கோரிக்கை நிறைவேற வில்லை என்றால் திரும்பவும் நீங்கள் ஒன்று கூடி போராடலாம் என்ற காவல் துறையின் நயவஞ்சக பேச்சை மாணவர்கள் நம்பவில்லை.
சட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளே இருப்பதை தெரிந்து கொண்ட காவல்துறை மாணவர்களை கலைக்க பல்கலை கழக பேராசிரியர்களை அழைத்து பேசினர். பேராசிரியர்கள் மாணவர்களிடம் வந்து இங்கு மற்ற கல்லூரி மாணவர்களை வெளியேறுமாறு கூறினர்.
அதன் பின் காவல்துறை பேராசிரியர்களையும், நிர்வாகத்தையும் அழைத்து அவர்களின் மூலமாகவும் ” இன்டர்னல் மார்க்ல கை வச்சுருவேன் ஒழுங்கா கலைஞ்சு போங்க ” என கூறியும் மிரட்டியுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை மக்கள் பார்த்துவிட கூடாது என எண்ணிய காவல்துறை பல்கலை கழக வாயிலில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தை மறைத்தனர்.
மழையை சற்றும் பொருட்படுத்தாது மாணவர்கள் தொடந்து போராட்டத்தை நடத்தினர்.
காவல்துறையும், நிர்வாகமும் மிரட்டினாலும் அதற்கு அஞ்சாமல் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர். பின்பு காவல்துறை கைது செய்வதாக அறிவித்து வேனில் ஏற்றி வடவள்ளியில் உள்ள மண்டபம் ஒன்றில் அடைத்தனர். கைது செய்து மண்டபத்தில் உள்ள மாணவர்களை பார்க்க தோழர்கள் சென்ற போது சட்ட கல்லூரி மாணவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என கூறினர்.
மண்டபத்தின் உள்ளே உள்ள மாணவர்கள் இனி போராட கூடாது என நினைத்த காவல்துறை பெற்றோரின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை கேட்டும் , வழக்கு தொடுப்பேன் என மிரட்டத் துவங்கினர்.
எனினும் மாணவர்கள் போலீசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம் அடுத்த முறை எங்களின் எண்ணிக்கை பலம் அதிகரிக்கும் எனவும் உறுதியேற்றனர். கல்லூரி நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் சற்றும் அஞ்சாத போர்க்குணத்தையும் , உறுதியையும் வெளிப்படுத்திய மாணவர்களை பு.மா.இ.மு போற்றுகிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி கீழமை நீதிமன்றம். மாவோயிஸ்டு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனும் பயங்கரவாத “ஊபா” சட்டத்தின் கீழ் அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்ட சாய்பாபாவுக்கு எதிராக “அரசுக்கு எதிராக போர் தொடுத்தார்” என பொய்வழக்கு தொடுத்தது மகாராஷ்டிர அரசு.
பேராசிரியர் சாய்பாபாவுடன் கைது செய்யப்பட்ட ஹேம் மிஸ்ரா, பாண்டு நரோட்டே, மகேஷ் திர்கெ மற்றும் பிரஷாந்த் ராஹி ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபரான விஜய் திர்கெவுக்கு பத்தாண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போர் தொடுத்த முதல் குற்றவாளியான பேராசிரியர் சாய்பாபாவின் உடல் 90 சதவீதம் செயல்படாத நிலையில் சக்கர நாற்காலியின் துணையுடன் நடமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் . சாய்பாபா
கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் தண்டகாரண்ய வனப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்களின் கனிமக் கொள்யை எதிர்த்துப் போராடிய பழங்குடியின மக்களை ஒழித்துக் கட்ட பச்சை வேட்டை எனும் பெயரில் இராணுவம் களமிறக்கப்பட்டது. இதை நாடெங்கும் இருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகள் எதிர்த்துப் போராடினர். மனித உரிமைப் போராளியும், புரட்சிகர ஜனநாயக முன்னணி என்கிற அமைப்பின் இணைச்செயலாளராகவும் இருந்த பேராசிரியர் சாய்பாபா பச்சை வேட்டைக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக அறிவுத் துறையினரிடையே அறியப்பட்டவரும், மனிதவுரிமைப் போராளியுமான அவரை ஒழித்துக்கட்ட தருணம் பார்த்துக் கொண்டிருந்தது மத்திய அரசு.
இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டெம்பர் 12-ம் தேதி சுமார் 50 போலீசார் ‘திருட்டுப் போன பொருளைத் தேடுவதற்கான நீதிமன்ற ஆணை’ ஒன்றுடன் பேராசிரியர் சாய்பாபாவின் வீட்டைச் சோதனையிட்டுள்ளனர். சட்டவிரோதமான இந்த தேடுதலில் சாய்பாபாவுக்கு எதிராக ஏதும் கிடைக்காத நிலையில், அவரது மடிக்கணினி மற்றும் சில பென் டிரைவ்களைத் திருடிச் சென்றுள்ளனர் போலீசார். இரண்டு வாரங்கள் கழித்து பேராசிரியர் சாய்பாபாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மடிக்கணினியின் கடவுச் சொல்லைக் கேட்டுப் பெற்றுள்ளனர்.
2014-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி பேராசிரியர் சாய்பாபாவை விசாரிக்கும் போலீசார், அதே ஆண்டு மே 9-ம் தேதி நீதிமன்றப் பிடி வாரண்டு ஏதுமின்றி அவரது காரை வழிமறித்து கடத்திச் சென்றது. கைது செய்த போதும் சரி, அதற்குப் பின்னும் சரி பின்பற்றியிருக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தையும் மதிக்காத போலீசார், சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத, இன்னொருவரின் உதவியின்றிக் கழிவறைக்குக் கூட செல்ல முடியாத மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவைக் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளது.
சட்டவிரோதமாக பேராசிரியர் சாய்பாபாவைக் கடத்திய அரச பயங்கரவாதிகள், அவரை நாக்பூர் சிறையில் அடைக்கிறார்கள். அரசியல் கைதியான சாய்பாபாவை சாதாரண கிரிமினல்களுடன் அடைத்த போலீசார், பிறர் உதவியின்றி நகரக் கூட முடியாத அவரை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரையில் தர தரவென இழுத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே உடல் இயக்க குறைபாட்டுடன் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளோடு போராடி வந்த பேராசிரியர் சாய்பாபாவின் உடலின் மேல் போலீசார் கட்டவிழ்த்து விட்ட குரூரமான சித்திரவதையின் விளைவால் அவரது இடது கை முடமானது. இத்துடம் தமிழகத்தை கொள்ளையடித்த குற்றவாளி ஏ 2 சசிகலாவுக்கு பரப்பன அக்ரகார சிறையில் அளிக்கப்படும் ஆடம்பர வசதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்!
ஒருபுறம் நீதிமன்றத்தில் போலீசார் தொடுத்த பொய் வழக்கை எதிர்த்துப் போராடி வந்த பேராசிரியர் சாய்பாபா, இன்னொரு புறம் தனது நோய்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச மருத்துவ வசதிகளுக்காகவும் போராடி வந்தார். நியாயமாக அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய மருத்து சிகிச்சைகளைத் தடுத்து சிறையிலேயே கொன்று விடும் நோக்கத்தில் அரசு செயல்பட்டு வந்த நிலையில் தான் தற்போதைய தீர்ப்பு வந்துள்ளது.
சட்டவிரோதமாக போலீசார் திருடிச் சென்ற கணினி மற்றும் பென் டிரைவ்களை ஆதாரமாக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பேராசிரியர் சாய்பாபாவின் தரப்பில் போலீசாரால் திருடிச் செல்லப்பட்ட கணினியில் எந்த வகையான ‘ஆதாரத்தையும்’ சொருகி வைக்க முடியும் என முன்வைத்த வாதங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்துள்ளது. பென் டிரைவ் ஒன்றில் அபாயகரமான மின் ஆவணங்களை சேமித்து அதை கட்சிரோலி காட்டுப்பகுதியில் உள்ள நர்மதாக்கா எனும் மாவோயிஸ்டு பெண் தளபதியிடம் தனது தோழர்கள் மூலம் பேராசிரியர் சாய்பாபா கொடுத்து அனுப்பினார் என அரசு தரப்பு வைத்த குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு ஆதாரமாக பென் டிரைவ்களை ஏற்றுக் கொண்டுள்ளது நீதிமன்றம்.
அரசு தரப்பால் பேராசிரியர் சாய்பாபாவுக்கு எதிராக சோடிக்கப்பட்ட எந்த ‘ஆதாரங்களையும்’ சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவ முடியாத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கு எதிராகவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இயற்கை வளங்களை கூறு போட்டு விற்கும் அரசின் ‘கொள்கைகளை’ எதிர்க்கும் எவருக்கு எதிராகவும் இது போல் ஆயிரக்கணக்கான பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனையும் ஆற்றல் போலீசாருக்கு உள்ள நிலையில், எந்த தர்க்க நியாயமும் சட்டவாத அதனடிப்படையும் இன்றி தண்டனை வழங்க நீதிமன்றங்கள் தயாராக உள்ளன என்பதை இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
பேரா. சாய்பாபா மற்றும் அருந்ததி ராய் மட்டுமல்ல நாளை நெடுவாசல் கிராமத்தினர் மீதும் இந்த அரச பயங்கரவாதம் பாயும்.
சாய்பாபா 90 சதவீதம் முடமானவர் என்பதைக் கணக்கில் கொண்டு அவருக்கு கருணை காட்ட முடியாது எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், அவர் உடல் ரீதியாக ஊனமுற்றவராக இருந்தாலும் சிந்தனை ரீதியாக உறுதியானவரெனவும் எனவே தண்டனை பெற்றாக வேண்டுமெனவும் எனத் தெரிவித்துள்ளனர். அதாவது, ஒருவர் அரசுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த வேண்டுமென்பதில்லை – சிந்தித்தாலே சிறை தான் என கொக்கரிக்கிறது இத்தீர்ப்பு. ஒருவரின் மூளைக்குள் இன்னது தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க போலீசார் அளிக்கும் “பென் டிரைவுகளும்” அதில் அவர்களே நிரப்பிக் கொடுக்கும் “ஆதாரங்களுமே” போதுமானவை என்கிற கேலிக்கூத்தான முன்னுதாரணத்தை துவங்கி வைத்துள்ளது இத்தீர்ப்பு.
இது எங்கோ கட்சிரோலியில் நடந்த அநீதியாகவோ, பேராசிரியர் சாய்பாபாவுக்கு நேர்ந்த ‘துரதிர்ஷ்டமாகவோ’ கடந்து செல்ல முடியாது. நாடெங்கும் பன்னாட்டு கம்பெனிகளுடனும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுடனும் கைகோர்த்துக் கொண்டு இயற்கை வளங்களைச் சூரையாடும் அரசின் சட்டப்பூர்வ கொள்ளைகளுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், இத்தீர்ப்பை ஜனநாயக சக்திகளுக்கு அரசு விடுக்கும் மிரட்டலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மெரினாவில் துவங்கி, நெடுவாசல், தாமிரபரணி, சேலம் உருக்காலை என தமிழகத்தின் வீதிகளில் அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடி வரும் மக்களும் ஜனநாயக சக்திகளும் இத்தீர்ப்பு தங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடியான சவால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் – நீதிமன்றங்கள் அநீதிமன்றங்களாக உருவெடுத்திருப்பதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடாவிட்டால் இன்று பேராசிரியர் சாய்பாபாவின் மேல் பாய்ந்தது நாளை மக்களின் மீதும் பாயும்.
’’வாடிவாசலை திறக்காமல் வீடு வாசல் இல்லை’’ என்று மாணவர்களும், இளைஞர்களும், மக்களும் மெரினாவில் லட்சக்கணக்கில் திரண்டு பார்ப்பன பாசிச மோடி அரசுக்கு எதிராக மூட்டிய போராட்டத் தீ இன்று நெடுவாசலிலும் கொழுந்துவிட்டு எரிகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரட்டாமல் வீடு திரும்பமாட்டோம் என்று விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
மீண்டுமொரு மெரினா எழுச்சி நடந்துவிடக்கூடாது, காளையை அவிழ்த்துவிட்டது போல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ள மோடி அரசோ, தனது எடுபிடியான எடப்பாடியின் போலீசை ஏவி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. இதனை முறியடித்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது
கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதி.
மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி மண்ணெணெய் எடுக்கப்போகிறோம் என்று பொய் சொல்லி விவசாயிகளிடம் குத்தகை பத்திரத்தில் வெறும் கைநாட்டு வாங்கிக்கொண்டு நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. அந்த நிலத்தில் சுமார் 10 ஆயிரம் அடிக்கு ஆழ்துளை பம்புகளை போட்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு இருப்பதை கண்டுபிடித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 15 -ந் தேதி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போவதாக அறிவித்தது மோடி அரசு. அதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி சித்தேஸ்வராவிற்கு சொந்தமான ஜெம் லெபாரட்டரீஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போட்டுள்ளது.
மக்கள் குடியிருக்கும் கிராமப் பகுதியில், அதுவும் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற எரிவாயுக்களை எடுப்பது அந்தப் பகுதியையே சுடுகாடாக்கிவிடக் கூடியது. பல நாடுகள் இதுபோன்று பூமிக்கு அடியில் இருந்து எரிவாயு எடுக்கும் ஃபிராக்கிங் தொழிற்நுட்பத்தை கைவிட்டு, தடையும் விதித்துள்ளன. ஆனால், மோடி அரசோ நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. இதற்குப் பெயர்தான் தேசநலனா? இல்லை. தேசதுரோகம்.
இந்நிறுவனங்கள் அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கண மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு வைத்துள்ளன. இது கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதி.
இந்த சதியை மூடி மறைத்துக்கொண்டு ’’நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டும்’’ என்கிறார் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வானரக்கூட்டத்தை சார்ந்த இல.கணேசன். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்காக தமிழக மக்களை அழிப்பதற்கு பெயர் ‘வளர்ச்சியா?’. இல்லை. இது ஒரு வீழ்ச்சி. கார்ப்பரேட்டுகளுக்கான வளர்ச்சியை ஒட்டுமொத்த மக்களுக்கான வளர்ச்சியாகக் காட்டும் இந்த மக்கள் விரோதிகள்தான் தங்கள் மண்ணையும், மக்களையும் காக்க போராடும் விவசாயிகளை, மாணவர் – இளைஞர்களை, அவர்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் புரட்சிகர, முற்போக்கு அமைப்பைச் சார்ந்தவர்களை தேசதுரோகிகள் என அவதூறு பரப்பி, பீதியூட்டி போராட்டத்தை சீர்குலைக்க பார்க்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகள் வாழ மக்களை தியாகம் செய்யச் சொல்லும் இந்த தேசவிரோதிகளை தமிழகத்தில் நடமாட அனுமதிக்கலாமா?
ஓட்டுக்கட்சிகளை நம்பக் கூடாது என்று உறுதியாக இருக்கும் நெடுவாசல் மக்கள், அதே போல போராட்டத்தில் புகுந்துள்ள NGO குழுக்களையும் நம்பக்கூடாது. பி.ஜே.பி மக்களின் எதிரி என்றால், NGO க்கள் மக்களின் துரோகி. இவைகள் கார்ப்பரேட்டுகள் பெற்றெடுத்த விசவித்துக்கள். இவைகளை புடுங்கியெறிவதோடு, வளர்ச்சியின் பெயரால் மக்களை கொல்ல வரும் கொள்ளிவாய்ப் பிசாசான ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும், தமிழக மக்கள் மீது நாசகரத்திட்டங்களை அன்றாடம் திணித்து வரும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலையும் தமிழகத்தில் இருந்தே விரட்டியடிப்போம்!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை – 9445112675
“இதையெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்கிற தனிப்பட்ட விருப்பமெதுவும் எனக்கில்லை. நான் யாருக்கும் அஞ்சவும் இல்லை. நான் பலவீனமானவனும் இல்லை, இந்த செயலைக் கோழைத்தனமான சரணாகதியாகவும் நான் பார்க்கவில்லை…”
”இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு எனக்கு இருக்கும் ஒரே காரணம் – மக்களைத் தட்டியெழுப்ப வேண்டும்; இந்த மாநிலத்திலும் நாட்டிலும் நடந்து கொண்டிருக்கும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே. ஊழல் என்கிற எதார்த்தம் இந்த அமைப்புமுறை எங்கும் பற்றிப் படர்ந்துள்ளது. ஆனால், மக்களுக்கோ மறதி அதிகம்; அவர்கள் விரைவில் மறந்து விடுகிறார்கள். எனவே மக்களுடைய நினைவுகளை உலுக்கி அவர்களை தட்டியெழுப்பி பிரச்சினையின் ஆழத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்பதற்காகவே இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன்…”
– அருணாச்சல பிரதேச முன்னால் முதல்வர் கலிகோ புல்லின் அறுபது பக்க தற்கொலைக் குறிப்பிலிருந்து..
கலிகோ புல்
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் இட்டாநகரில் முதல்வருக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ம் நாள் தூக்கில் தொங்கிய நிலையில் கலிகோ புல்லின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தனது இருபத்தாறு வயதில் (1995ல்) காங்கிரசு கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கலிகோ புல். 1995 முதல் 2016 வரை 23 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், சுமார் 22 ஆண்டுகள் அமைச்சராகவும் பொறுப்பு வகித்த கலிக்கோ புல் தனது 47-வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் “என் பார்வையில்” எனத் தலைப்பிட்டு 60 பக்கங்களுக்கு தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி அனைத்து பக்கங்களிலும் கையெழுத்திட்டுள்ளார் கலிகோ புல். தன்னுடைய பால்ய காலத்திய வாழ்கைக் விவரிப்புகளோடு துவங்கும் அந்த தற்கொலைக் குறிப்பில், அவர் அரசியலில் வளர்ந்த விதம், முதல்வர் பொறுப்புக்கு வந்தது, முதல்வர் பதவியைப் பறிகொடுத்தது குறித்த விவரங்கள் அவருடைய கோணத்திலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளன.
இறுதியாக, அரசியல் குத்துபிடி சண்டையில் பதவியை இழக்கும் கலிகோ புல், அதை மீண்டும் கைப்பற்ற எந்தெந்த கட்சித் தலைவர்கள், எத்தனை கோடிகளுக்கு தன்னிடம் பேரம் பேசினார்கள் என்பதோடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தரப்பிலிருந்து தன்னிடம் பேரம் பேசப்பட்டது குறித்தும் விவரிக்கிறார்.
அந்தக் குறிப்பு நெடுக தன்னை நேர்மையின் மறுவடிவமாக கலிகோ புல் முன்னிறுத்திக் கொள்வது மட்டுமின்றி அதற்காக அவர் அடுக்கும் வாதங்களும் தர்க்க ஓர்மையற்று அபஸ்வரமாய் ஒலிக்கிறது. இருப்பினும் அதோடு சேர்த்து நாம் கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்களும் உள்ளன. ஓட்டுக்கட்சி அரசியல் பன்றி மலத்தை விடக் கேவலமாய் நாறி வரும் நிலையில், அதையே சாதகமாக்கிக் கொண்டு இந்துத்துவ பாசிஸ்டுகளால் எப்படி அதிகாரத்தைப் புறவாசல் வழியாக சதித்தனமாக கைப்பற்ற முடிகிறது என்பதற்கு அருணாச்சல பிரதேச அரசியலும் கலிகோ புல்லின் மரணமும் ஒளிவீசும் உதாரணங்கள்.
அருணாச்சல பிரதேசத்தின் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டியது கலிகோ புல்லின் மரணத்தின் நிமித்தமோ, இந்தியாவின் இன்னொரு மூலையில் அம்பலப்பட்டுப் போன பாரதிய ஜனதாவின் நரித்தனங்களை அறிந்து கொள்வதற்கோ மட்டும் அல்ல. அருணாச்சல பிரதேசத்தில் நடந்த அதே விசயங்கள் அதே வரிசைக் கிரமத்தில் தமிழ்நாட்டிலும் ஏன் இந்தியாவெங்கும் நடந்து வருகின்றன. சில இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் ஏஜெண்டுகள் மூலமும் நடந்து வருகின்றன. இந்த அமைப்புமுறையை அம்பல்படுத்தும் ஆவணமாக இத்தற்கொலைக் குறிப்பு இருக்கின்றது.
வடகிழக்குக் குரங்காட்டம் :
மோடியுடன் கலிகோ புல்
அருணாச்சல பிரதேசத்தின் ஓட்டுக்கட்சி அரசியல் இந்திய அரசியலின் துலக்கமான உதாரணம் – எனவே, அம்மாநிலத்தின் கட்சித்தாவல் அரசியல் என்பது கிறுக்குப் பிடித்த பத்துக் குரங்குகள் மரக் கிளைகளில் மாறி மாறித் தாவுவதைக் கண்டதைப் போல் தலைசுற்ற வைக்கும். முடிந்த வரை அந்தக் காட்சிகளைப் புரிந்து கொள்வோம்.
இந்தியாவின் மேல் பீடை கவிந்த அதே 2014 ஏப்ரல் மாதம் தான் அருணாச்சல பிரதேசத்தின் அரசியல் வானில் இருள் சூழ்ந்தது. அந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரசு 42 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற, பாரதிய ஜனதா கட்சிக்கு வெறும் 11 இடங்களே கிடைத்தன. நாடெங்கும் அடித்ததாக சொல்லப்பட்ட மோடி அலையில் அடித்துச் செல்லப்படாத வெகுசில மாநிலங்களில் அருணாச்சல பிரதேசமும் ஒன்று. அப்போதே அம்மாநிலத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் திட்டத்துடன் பாரதிய ஜனதா களமிறங்கியது.
தேர்தலில் வென்று காங்கிரசின் சார்பாக முதல்வரானார் நபாம் டுக்கி. நபாம் டுக்கியின் மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கலிகோ புல் அளித்தாரென 2015 ஏப்ரல் மாதத்தில் கட்சியிலிருந்து விலக்கப்படுகிறார். பாரதிய ஜனதா உடனடியாக கலிகோ புல்லை தத்தெடுத்துக் கொண்டு தமது விசுவாசியான ஜோதி பிரசாத் ராஜ்கோவாவை கவர்னராக அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்புகிறது.
கவர்னர் ராஜ்கோவாவின் துணையோடு கட்சி கலைப்பு வேலைகளில் இறங்கிய பாரதிய ஜனதா, கலிகோ புல்லின் தலைமையில் பதினாறு சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்கிறது. குதிரை பேரத்துக்கு தோதான சூழல் ஏற்பட்டவுடன் ஜனவரி 2016-ல் கூடவிருந்த சட்டசபையை டிசம்பர் 2015-லேயே கூடச் செய்கிறார் கவர்னர். துணை சபாநாயகரை விலைக்கு வாங்கி, சபாநாயகரின் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு, காங்கிரசால் சட்டமன்றம் பூட்டபட்ட நிலையில் ஒரு சமூக நலக்கூடத்தில் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுகிறது கலிகோ புல் – பாரதிய ஜனதா கூட்டணி.
நடந்த பேரத்தில் புதிதாக வாங்கிய குதிரைகளோடு வெறும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த அருணாச்சல மக்கள் மக்கள் கட்சியில் இணையும் கலிகோ புல், பாரதிய ஜனதாவின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் அவர்களின் ஆதரவுடன் ஒரு ‘காங்கிரசு’ அரசை அமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கிறார். அதன்படி டிசம்பர் 17-ம் தேதி ஒரு ஓட்டலில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலிகோ புல்லை முதல்வராக தேர்ந்தெடுக்கிறார்கள்.
இதற்கிடையே சட்டமன்றத்தை கலைத்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்புகிறார் ராஜ்கோவா – அதனை உடனே அமல்படுத்துகிறது மத்திய பாரதிய ஜனதா அரசு. பாரதிய ஜனதா உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் கலிகோ புல் பிப்ரவரி 19 தேதி முதல்வராக பதவியேற்கிறார். பாரதிய ஜனதா நடத்திய உள்குத்து விளையாட்டில் ஆட்சியை கலிகோ புல்லிடம் இழக்கும் நபாம் டுக்கி, உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்.
வடகிழக்கு மாநிலங்களில் ’காங்கிரசு இல்லாத’ என்கிற பாரதி ஜனதாவின் செயல்திட்டத்திற்காக கழுதையாக உழைக்கிறார்
இதற்கிடையே பாரதிய ஜனதாவின் ஆதரவுடன் ‘காங்கிரசு’ அரசை அமைத்து முதல்வராக பொறுப்பேற்கும் கலிகோ புல், வடகிழக்கு மாநிலங்களில் ’காங்கிரசு இல்லாத’ (Congress mukth North East) என்கிற பாரதி ஜனதாவின் செயல் திட்டத்திற்காக கழுதையாக உழைக்கிறார். வட கிழக்கில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்களையும், அதற்கு முகமூடிகளாகச் செயல்பட்டு வரும் மற்ற மாநில தலைவர்களையும் சந்தித்து ”வடகிழக்கு தேசிய கூட்டணி” (பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்காளி அமைப்பு) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார்.
ஒருவாறாக ஆட்களைப் பீறாய்ந்து தலைகளைத் தேற்றிய பின், 2016 ஜூலை 13-ம் தேதி அமித் ஷாவின் தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் “வடகிழக்கு தேசிய கூட்டணியின்” துவக்க விழா ஏற்பாடானது. கலிகோ புல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அதே நேரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசு தொடுத்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது. ராஜ்கோவாவின் நடவடிக்கையை ‘சட்டவிரோதமானது’ எனச் சாடிய உச்சநீதிமன்றம், டிசம்பர் 15 2015-க்கு முன் நபாம் டுக்கியின் தலைமையிலான ஆட்சி சட்டப்பூர்வமானது என்றும் அதுவே தொடர வேண்டுமெனவும் தீர்ப்பளித்து உத்தரவிடுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கலிகோ புல் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், ஜூலை 16-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு (உச்ச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மீண்டும்) முதல்வரான நபாம் டுக்கியைப் பணிக்கிறார் பொறுப்பு கவர்னர் டதாகதா ராய். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு பதவியை ராஜினாமா செய்கிறார் நபாம் டுக்கி. அடுத்து கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் அருணாச்சல பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி கந்துவின் மகனும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினருமான பெமா கந்து முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டு தனது பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.
ஆட்சியை இழந்த கலிகோ புல் ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கிடையே காங்கிரசு சார்பாக ஆட்சியமைத்த பெமா கந்து, 2016-ம் ஆண்டு செப்டெம்பர் 16-ம் நாள் தன்னுடன் (நபாம் டுக்கியைத் தவிற மீதமுள்ள) 41 சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திக் கொண்டு அருணாச்சல் மக்கள் கட்சியில் ஐக்கியமாகிறார். மீண்டும் 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தன்னுடன் 33 உறுப்பினர்களைக் கடத்திக் கொண்டு நேரடியாக பாரதிய ஜனதாவிலேயே ஐக்கியமாகிறார். தற்போதைய நிலவரப்படி சுமார் 47 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பெமா கந்து முதல்வராகத் தொடர்ந்து வருகிறார். கடந்த தேர்தலில் வெறும் பதினோரு இடங்களை மட்டும் வென்ற பாரதிய ஜனதாவுக்கு தற்போது 47 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். தேர்தல் ஜனநாயகம் வடகிழக்கு மாநிலங்களின் தெருக்களில் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறது.
கலிகோ புல்லுடன் முன்னாள் கவர்னர் ராஜ்கோவா
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட நிலையில் பதவி விலக மறுத்து வந்த ராஜ்கோவாவை கடந்த ஆண்டு செப்டெம்பர் 12-ம் தேதி பதவி நீக்கம் செய்கிறார் ஜனாதிபதி. ராஜ்கோவாவுக்கு பதில் பொறுப்பு கவர்னராக வந்து சேர்ந்த ‘அந்தப்புரம்’ புகழ் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன், மைனர்தனங்களில் ஈடுபட்டதாக புகார் வரவே பதவி 2017 ஜனவரி 26-ம் தேதி பதவி விலகுகிறார். சண்முகநாதனைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களின் பாரதிய ஜனதா பொறுப்பாளராக இருந்த பத்மநாப ஆச்சார்யா அருணாச்சல பிரதேசத்தின் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியா முழுவதையும் கபளீகரம் செய்து விட வேண்டுமென்கிற தொலைநோக்குத் திட்டம் பாரதிய ஜனதாவுக்கு உள்ளதென்றாலும், உடனடியாக வடகிழக்கில் கால் பதித்து விட வேண்டுமென்கிற வெறி கொஞ்சம் அதிகம். விசுவ இந்து பரிசத்தில் துவங்கி சேவா பாரதி வரை ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் மொத்த வானரப் படைகளையும் வெவ்வேறு பெயர்களில் இதற்கென களமிறக்கியிருக்கிறார்கள். வடகிழக்கு மாநில மக்களுக்கு “இந்திய தேசிய” உணர்வு குறைவு என்பதால் அங்கிருந்து பெண் குழந்தைகளைக் கடத்தி வந்து பிற மாநிலங்களில் வைத்து மூளைச்சலவை செய்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது நினைவிருக்கும்.
ஒருபுறம் பரிவார அமைப்புகளின் வலைப்பின்னல் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் பாரதிய ஜனதாவைக் களமிறக்கி அதற்குத் தெரிந்த அரசியல் தரகு வேலைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்து பாசிச அரசியலின் மிக நீண்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு சிறிய அத்தியாயம் தான் கலிகோ புல். அந்தத் தற்கொலைக் குறிப்பு நெடுக தன்னை ஒரு மக்கள் தலைவராகவும், நேர்மையின் உறைவிடமாகவும் கலிகோ புல்லினால் எவ்வாறு முன்வைக்க முடிந்தது? அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? பாரதிய ஜனதா கலிகோ புல்லை ஏன் கைவிட்டது?
உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பணிகள் புரியும் பெண்களை சென்னை நகரெங்கும் சந்தித்தோம். உழைப்பதற்கென்றே விதிக்கப்பட்ட அந்த பெண்களுக்கு வாழ்வில் வேலையன்றி வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. அனைவரிடமும் சொந்த வாழ்க்கை குறித்த அவலமான கதைகள் ஏராளமுண்டு. ஆண்களின் குடி, வருமானத்திற்காக விடாப்பிடியான போராட்டம், குடும்பத்தை தூக்கி நிறுத்தும் கடமை இறுதியில் செய்யும் பணிக்கேற்ற உடல் வலி… இருப்பினும் அவர்கள் அழகானவர்கள் – வலிமையான பெண்கள். மகளிர் தினம் என்னவென்றே அறியாத இப்பெண்களின் பங்கேற்பின்றி இங்கே என்ன சமூக மாற்றம் வந்து விடும்?
– வினவு
ராதா
40 வருசமா இந்த பூ வியாபாரம் பாக்குறேன். வீட்டுகாரரு இருக்கும் போது காய் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தோம். வயசு இப்போ 82 ஆவுது. ஏசப்பா ஆசீர்வாதத்துல நல்லா இருக்கேன்.
ஆண்டவர் கொடுத்த ஒடம்பு இன்னும் நல்லா இருக்கு, இப்ப வரைக்கும் என் உழப்புல தான் சோறு துன்னுறேன்.
இந்த வயசுலயும் ஏன் வேலை பாக்குறீங்க பாட்டி?
ஒரு நாள் கேக்கலாம். டேய் அன்பு டீ வாங்கி குடு, டே ஐசக்கு டீ வாங்கி குடு, தேவா டீ வாங்கி குடுன்னு தினக்கி கேக்க முடியுமா? யாராவது குடுப்பாங்களா? ஏன் நீ டீ வாங்கி குடுப்பியா? பேரப்புள்ளைங்களுக்கு நாம தா எதாவது செய்யனும் அவங்கள கேக்க முடியாது.
ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி 500 ரூபாய்க்கி பூ வாங்குவேன், காலைல பாரிஸ் பூக்கட மார்கட்ல தான் ஆட்டோவுல போய் வாங்கியாருவேன். காலையில 7 மணிக்கெல்லாம் கடைய தொறந்துடுவேன். வூட்டுக்கு போக சாயந்தரம் 7 ஆயிடும். எங்க சக்காளத்தியார் வயித்து புள்ள வீட்டுலதான் இருக்கேன். அங்க இருந்து சோறு எடுத்தாருவாங்க. என் வூட்டுகாருக்கு அவங்க ரெண்டாவது தாரம். எனக்கு பொண்னுங்க தான் பையன் இல்ல அதனால அவரு அவங்கள கட்டிகிட்டாரு.
பூ வித்தா 100, 200 கைல நிக்கும். சில நாள் எதுவும் கிடைக்காது. ஒரு நா விக்கலனா தூக்கி போடரது தான். வச்சா புள்ளயாரு வழிச்சி போட்டா சாணி அவ்வளவு தான்.
மினியம்மா, வயது 40 சாலை பணியாளர், திருவண்ணாமலை.
ஊர்ல விவசாயம் இல்ல, சொந்தமா காடும் இல்ல அதனால இங்க வந்து வேல பாக்குறோம். காலைல 9 மணில இருந்து சாயங்காலம் 5 மணி வரை வேலை 300 ரூபா சம்பளம், நாங்க சித்தாளு. பெரியாளுக்கு 500 ரூவா சம்பளம், ஆம்பளைங்க பெரியாளு. அரும்பாக்கத்துல காண்ட்ராக்டர் கொட்டா போட்டு குடுத்துருக்காரு.
பொழுதுபோறதுக்கு என்ன செய்வீங்கக்கா?
பொழுதா போகமாட்டீங்குது? பஸ்சுக்கு காத்திருந்து போய் சேற எப்படியும் 7 – 8 மணி ஆயிடும். அதுக்கப்பறம் எங்க….. அசதியா இருக்கும் வீட்டு வேலை செஞ்சிட்டு தூங்க வேண்டியது தான்.
காலைல 7 மணிக்கே சமச்சி முடிச்சி மத்தியானத்துக்கும் சேத்து எடுத்துட்டு வந்துடுவேன். வீட்டு வேலைய நான் தான் செய்யனும். செய்யுறதுக்கு யாருமில்லைங்க.
வீட்டுக்காரரு இருக்காருங்களே அக்கா?
வீட்டுக்காரரு அதெல்லாம் செய்யமாட்டாரு.
இங்க வேலை முடிஞ்சுருச்சுன்னா ஊருக்கு போனாலும் அங்க காட்டு வேல எதாவது இருந்தா அத செய்வோம். மகளிர் தினமா அதெல்லாம் தெரியாது பா.
______________
குமாரி, வயது 50, சலவைக் கடை.
நானும் வீட்டுகாரும் அயன் கட தான் வச்சி இருக்கோம், அவரு புரசைவாக்கம் பக்கத்துல கட வச்சிருக்காரு. இங்க காலைல 7 மணில இருந்து 10 பத்தரை வர வேல பாப்பேன். அப்புறம் வீட்டுக்கு போய் அங்க இருக்குற வேலைய முடிச்சிட்டு திரும்ப சாயங்காலம் 4 மணிக்கு வருவேன்.
பொழுதுபோக்குன்னு கேட்டா என்ன மதியானத்துல வள்ளி சீரியல் மட்டும் பாப்பேன். வீட்டுகாரு இப்பலாம் தண்ணி அடிக்கிறத கம்மி பண்ணிட்டாரு. பசங்கல்லாம் வளந்துட்டாங்க இல்லயா. பையன் வேலைக்கு போறான் பொண்ணுக்கு கல்யாணம் செய்யனும். நர்சிங் முடிச்சிட்டு வீட்டுல தான் இருக்கு.
என்ன செய்ய வருமானம் பத்தல பொம்பளைங்க வெளியவும் வேலைக்கு போகனும், வீட்டு வேலையும் செய்யனும் அது அவங்க விதின்னு போவறது தான்.
இந்த வேலைல கழுத்து, கையெல்லாம் வலி எடுக்கும், மாத்திரய வாங்கி போட்டுகிட்டு வேலைய பாக்க வேண்டியது தான். டாக்டருகிட்ட போனாலே நேரத்துக்கு சாப்படனும்னு சொல்லுவாரு. எங்க காலைல தான் கொஞ்சம் வேல பரபரப்பா இருக்கும் அந்த நேரத்துல சாப்புட்டுகிட்டு இருக்க முடியாது. 10 மணிக்கு மேல தான் கால சாப்பாடே. மூணு வேளையும் சாப்பாடு நேரம் தள்ளிப்போயிடுது.
__________
பிரசன்னா, வயது 50 டீ கடை, ஊர் கேரளா. சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல் எதிரில் டீக்கடை.
சேத்துபட்டின் மையமான இடம் இந்த அம்பேத்கர் திடல். இன்று வரை அரசியல் கூட்டங்கள் எதுவென்றாலும் இந்த பகுதியில் தான் நடக்கும். தற்போதுள்ளது போல குறைந்த செலவில் முன்னர் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு கிடைக்காது. அந்த நேரங்களில் இவர் கடையில் இருந்து தான் மின்சாரம் தருவார்.
ஒரு பெண்ணாக இருந்துகிட்டு தன்னந்தனியா டீக்கடை வச்சிருக்கீங்களே, டீக்கடையில ஆயிரத்தெட்டு பிரச்சனை வருமே எப்படி சமாளிக்குறீங்க?
நாங்க இங்க 30 வருசமா கடை வச்சிருக்கோம். பத்து வருசத்துக்கு முன்னாடி வீட்டுக்காரரு இறந்துட்டாரு. அப்புறம் நா மட்டும் நடத்துறேன். எல்லாரும் இங்க தெரிஞ்சவங்க தான். சேச்சி கஷ்டப்படுதுன்னு யாரும் பிரச்சனை பண்ணமாட்டாங்க. துணைக்கு இதோ இப்ப போனானே அவன், என் தம்பி தான் அவன் இருக்கான். சொந்த ஊரு கேரளா.. திருச்சூர் பக்கத்துல.. அங்க கொஞ்சம் தென்னை இருக்கு.. அத சொந்தக்காரங்க கிட்ட பாத்துக்க சொல்லி விட்டிருக்கோம்.
காலையில எத்தனை மணிக்குகா கடை தொறப்பீங்க?
இப்ப எல்லாம் லேட்டா காலையில 4 மணிக்கு தான் கடை தொறக்குறேன்.
விடுமுறை நாட்களில் தோழர்கள் வேலைகளுக்கு கூப்பிடும் போது, 10 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு போய் கூசாமல் ”லேட்டாயிடுச்சுங்க தோழர்” என்று சொல்லும் எங்களுடைய காரணத்தைப் போலவே சட்டென ”4 மணியே லேட்டுங்களா அக்கா?” என்று கேட்டேன்.
ஆமங்க, முன்ன எல்லாம் 24 மணி நேரம் எங்க கடை இருக்கும். இப்ப போலீசுக்காரங்க 11 மணிக்கு கடைய மூட சொல்றாங்க. அது கூட பிரச்சனை இல்லை. எதுனா பிரச்சனைன்னா கேசுக்கு, சந்தேகக்கேசுக்கு, ஆள் காட்டி விடச் சொல்றாங்க. நம்ப புள்ளைங்கள நாம எப்படி காட்டிக் கொடுக்குறது சொல்லுங்க..
இப்படிப்பட்ட மக்களைத்தான் சில தமிழினவாதிகள் வந்தேறீகள் என்று சொல்லி இனவெறியைத் தூண்டுகின்றனர்.அதெல்லாம் சேச்சிக்கு மட்டும்ல, சேத்துப்பட்டு மக்களுக்கும் தெரியாது.
ஜெயலலிதா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஊழல் செய்பவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக அமையும் என்று ஊடகங்கள் எழுதுவது முரண்பாடானது. சந்தர்ப்பவாதமானது. நீதிபதி குன்ஹா தீர்ப்பின் போது ஜெயா சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக குண்டர்கள் கலவரம் நடத்தினார்கள். இதற்கு அரசோ, நீதிமன்றமோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை பற்றி ஊடகங்கள் கண்டும் காணாமல் இருந்தன. ஆனால் குமாரசாமி தீர்ப்பின் போது அதனை ஆரவாரமாக வரவேற்று பத்திரிகைகள் எழுதியதை நாம் மறக்க முடியாது.
இந்த சூழலில், மெரீனா கடற்கரையில் உள்ள குற்றவாளி ஜெயா சமாதியை அகற்ற வேண்டும், ஜெயாவின் படங்கள், அரசு அலுவலகம், பள்ளி பாடப்புத்தகம் உட்பட எங்கும் இருக்க கூடாது. இது எதிர்கால சமூகத்திற்கு ஒரு தவறான செய்தியாக மாறிவிடும் என்று சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் மக்கள் அதிகாரம் அறிவித்தது.
தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக 20.02.2017 அன்று விருத்தாசலம் சட்டமன்ற அலுவலகத்தை தோழர் ராஜு தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தோழர்களை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தது காவல்துறை. பத்து நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் தோழர்களிடம் சிறை அனுபவத்தை கேட்டோம்.
தோழர் ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்.
கடந்த 20ம் தேதி நாங்கள் விருத்தாசலம் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினோம். காவல்துறை எங்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
உங்கள் போராட்டம் தமிழகத்தில் பரபரப்பு செய்தியாக மாறிவிட்டது. மேலதிகாரிகள் எங்களை கடிந்து கொள்கிறார்கள். அதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்கிறோம் என்றது காவல்துறை. அதே சமயம் மண்டபத்திற்கு வெளியில் அதிமுக குண்டர்கள் இவர்களை கைது செய்ய வேண்டும், சட்டமன்ற பொருட்களை சேதப்படுத்தி விட்டனர் என்று கூறி சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயன்றனர். அதிமுகவினரை சமாதனப்படுத்தும் நோக்கிலே எங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் (IPC-506,353,447,158,147,148) கீழ் வழக்குகள் பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தது காவல்துறை.
பத்து நாட்களுக்கு பிறகு மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை பிணையுடன் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் காலை 10.30 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் தவறாமல் பதினைந்து நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்று கூறியுள்ளது.
பிணை விவாதத்தில், மக்கள் அதிகாரத்தின் தோழர்களை பிணையில் விடுவித்தால் அவர்கள் நேராக நெடுவாசலுக்கு செல்வார்கள். எங்கு போனாலும் போராட்டம் நடத்துவார்கள். ஏற்கனவே அவர்கள் மீது டாஸ்மாக்கை உடைத்த வழக்கு இருக்கிறது. அதனால் அவரை விடுவிக்க கூடாது என கடுமையாக ஆட்சேபித்தார் அரசு தரப்பு வழக்கறிஞர். உளவுப்பிரிவினரும் அங்கேயே முகாமிட்டிருந்தனர். அரசின் கடுமையான நெருக்கடி காரணமாக ஒரு நாள் தள்ளிவைத்து விட்டு வேறு வழி இல்லாமல் இந்த பிணை வழங்கியுள்ளது.
அதற்கு காரணம் வெளியில் மக்கள் அதிகாரம் தொடர் பிரச்சாரம், துண்டறிக்கை விநியோகம், தமிழகமெங்கும் போராட்டம் தொலைக்காட்சி விவாதங்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயா படத்தை அகற்ற கோரி பல்வேறு வழக்குகள் என்று மக்களிடையே பிரச்சாரம் நடந்தது. இதனை ஆயிரக்கணக்கான மக்களிடம் அரசியல் பிரச்சாரமாக மாற்றியது மக்கள் அதிகாரம். இல்லையென்றால் பிணை வழங்கியிருக்க மாட்டார்கள்.
அதே நேரத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களை ஒடுக்குவதற்கு காரணம், இது போன்ற போராட்டங்கள் மக்கள் மத்தியில் பரவி விடுகிறது என்ற அச்சம் தான். பல்வேறு கட்சிகளும் இந்த சம்பவத்தை வரவேற்று ஆதரித்துள்ளனர். சில அரசு அலுவலகங்கில் தாங்களாகவே ஜெயா படத்தை எடுத்து விட்டு திருவள்ளுவர் படத்தை மாற்றியுள்ளனர். மாணவர்கள் மத்தியில் குற்றவாளி படத்தை வைத்து கொள்ள கூடாது என்ற சிந்தனையை விதைத்துள்ளது.
எங்களை காவல்துறை கைது செய்த போதும், சிறையில் சென்ற போதும், மக்களை அதிகாரம் செய்தது தவறு என்று எள்ளளவும் சொல்லவில்லை. சிலர் வெளிப்படையாக ஆதரித்து பேசினார்கள். எங்களின் போராட்டத்தில் நியாயம் உள்ளது. யாராலும் எங்களை வெறுக்கவும் முடியாது. எந்த சிறையும் எங்களை ஒடுக்கவும் முடியாது.
தோழர் மணியரசன்
எங்களை முன்கூட்டியே கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வளாகத்தை சுற்றி காவல்துறை இருந்தும், மக்கள் அதிகார தோழர்கள் அங்கு வசிக்க கூடிய பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருந்து சரியாக பத்து மணிக்கு அந்த வீடுகளில் இருந்து கொடி, பேனர், தட்டி மற்றும் தற்காப்பு உபகரங்களை எடுத்துக் கொண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில், மின்னல் வேகத்தில் சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்து ஜெயலலிதா படத்தை அகற்றினோம்.
தோழர் மணியரசன்
நாங்கள் ஜெயிலுக்குள் இரவில் சென்றதால் அங்கு உள்ள கைதிகள் யாருக்கும் நாங்கள் வந்தது தெரியவில்லை. காலை 6 மணிக்கு மேல் நாங்கள் பனியனுடன் இருந்ததை பார்த்து விட்டு சக கைதிகள் எங்களை தேனீக்கள் சூழ்வதை போல் சூழ்ந்து கொண்டு மக்கள் அதிகாரம் என்றால் என்ன, என்று ஆர்வமாக கேட்க தொடங்கினார்கள். ஏன் வந்தீர்கள் என்று கேட்டனர். “நாங்கள் குற்றவாளி ஜெயா படத்தை அகற்ற வேண்டும் என்று போராடினோம். அதற்காக எங்களை கைது செய்தார்கள் என்று கூறியதும் எங்களை வாழ்த்தினார்கள்.
தொடர்ந்து கைதிகள் அனைவரும் எங்களுடன் பேசுவது, நாங்கள் பாடல் படும் பொழுது ஆர்வமாக வந்து கேட்டு அவர்களும் பாடுவது என்று அன்று முழுவதும் உற்சாகமாக இருந்தனர். நாங்கள் தொடந்து கைதிகளுக்கு அரசியல் கற்று கொடுத்ததை கவனித்த சிறை நிர்வாகம் நாங்கள் இருந்தால் கைதிகளுக்கு உரிமையை கற்று கொடுத்து விடுவோம் என்று அஞ்சி அன்று மாலையே எங்களை தனிச்சிறைக்கு மாற்றியது.
அதனால் என்ன, அங்கே உள்ள தண்டனை கைதிகளிடம் அரசியல் பேசினோம்.
சிறையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, எங்கள் பத்து பேருக்கும் போர்வை, தட்டு குறைவாக கொடுத்தனர். காலை உணவை மறுத்து போராடியதும் எங்கள் தேவையை நிறைவேற்றினார்கள். தினமும் மருத்துவரையே எங்கள் அறைக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்தார்கள், மனு எழுதுவதற்கு தாள்கள், அஞ்சல் கடிதம் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை கேட்டோம், அனைத்தையும் தாமதிக்காமல் உடனடியாக செய்து கொடுத்தனர். விளையாடுவதற்கு மைதானத்தை சுத்தம் செய்து கொடுத்தனர்.
கழிப்பறை மிக மோசமாக இருக்கும் அதை சுத்தம் செய்வதே கிடையாது. நீங்கள் வந்த பிறகு தான் இதனை சுத்தம் செய்தார்கள், கொசு மருந்து அடித்தார்கள். நாங்கள் கேட்டால் எங்களை அடிப்பார்கள். உங்களோடு சேர்ந்து நாங்கள் கேட்டால் நீங்கள் சென்றதும் அடிப்பார்கள் என்று சீனியர் கைதிகள் ஆச்சரியமாக கூறினார்கள்.
சிறையில் ஏதேனும் ஒரு பேப்பர் தான் கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் தமிழ் உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்கள் அனைத்தும் வேண்டும் என்றோம். அத்தனை செய்தி தாள்களையும் வாங்கி வந்து கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் கேட்காமலேயே சிறை நிர்வாகம் எங்களுக்கு அத்தனையும் செய்து கொடுத்தது.
அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில்அன்றாட செய்தி தாள்களை படித்து அதிலிருந்து ஒரு அரசியல் விவாதங்களை நடத்துவோம். மக்களிடம் எப்படி செல்வது, அவர்களை எப்படி அமைப்பாக்குவது என்ற முறையில் தினமும் விவாதிப்போம். அந்த வகையில் தான் கடந்த பதினோரு நாட்களையும் பயிற்சி பட்டறையாக கருதினோம்.
சிறை என்றால் நான் அச்சத்துடனே இருந்தேன். எங்கள் வீட்டில் இருந்து சிறைக்கு வந்து பார்த்த பொழுது அழுதார்கள். ஆனால் தோழர்கள் அவர்களுக்கு எங்கள் போராட்டத்தின் நியாயத்தை புரிய வைத்ததும் ஏற்றுக்கொண்டார்கள். கிராம மக்களும் சரியான விஷயத்திற்கு தானே சென்றுள்ளான் என்று ஆதரவாக பேசியது அவர்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டது என்கிறார் மாணவர் மணியரசன்.
தோழர் செந்தாமரைக் கண்ணன்
நான் மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகள் செய்தாலும் கிரமமாக உடற்பயிற்சி செய்வதில்லை. சிறை எனக்கு அதனை கற்றுக் கொடுத்தது. போராட்டத்தின் போது காவல்துறையை எதிர்கொள்வதற்கு திடகாத்திரமான உடல்நிலை வேண்டும். அதற்கான பயிற்சியினை மேற்கொள்ள சிறை ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
தோழர் செந்தாமரைக் கண்ணன்
காலையில் 6 மணிக்கு எழுந்திருப்போம். எனக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை மற்ற தோழர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். ஒவ்வொரு தோழரும் ஒரு கட்டுரை படித்து விட்டு கூடத்தில் விவாதிக்க வேண்டும்.
சிறை எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது. உண்மையில் நாங்கள் யாரும் பிணையை எதிர்பார்க்கவில்லை. எப்பொழுது வந்தாலும் வரட்டும் என்று தான் நாங்கள் இருந்தோம். என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் அந்த 45 வயது இளைஞர்.
தோழர் விநாயகம்
சிறைக்கு முதல்முறையாக சென்றுள்ளார். அவர் கூறுகையில், காவல்துறை எங்களை கைது செய்து நீதிபதியிடம் அழைத்து செல்லும் பொது “ பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் வழக்கு உள்ளது” என்று கூறினார், ஜெயலிலிதா பொது சொத்தா என்று தோழர் ராஜு கேட்டது, திகைத்து போன நீதிபதி, அதெல்லாம் எனக்கு தெரியாது. உங்க மேல கேஸ் போட்டாச்சி. நீங்க ஜெயிலுக்கு போகணும் என்றார். நீதிபதியாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்டதை பார்த்ததும் அதிர்ச்சியானேன். இது எனக்கு புதிய அனுபவமாக தான் இருந்தது.
“சிறையில் சட்டையை கழட்ட முடியாது” என்று உரிமையுடன் போராடியது, ஒரு தோழரை சிறை போலீசார் “டா” போட்டு மரியாதை குறைவாக பேசியதும் மற்ற தோழர்கள் சண்டை போட்டதும் மன்னிப்பு கேட்டார். எங்கு சென்றாலும் நாம் உரிமைக்காக போராட வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.
தோழர் முத்து
தோழர் முத்து. நாங்கள் சிறையில் இருக்கிறோம் என்ற எண்ணமே எங்களுக்கு வரவில்லை. எங்களை பார்பதற்காக தோழர்கள், மக்கள் தொடர்ந்து வருவார்கள். அவர்களுடைய வருகை எங்களை மேலும் உற்சாகமூட்டியது.
தோழர் பாலு, 1987 இல் இருந்து சிறைக்கு சென்று வருகிறேன். இந்த ஆண்டுடன் முப்பதாவது வருடம் என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பொழுதெல்லாம் சிறைக்குள்ளேயே ரவுடிகளுக்கிடையில் மோதல் நடக்கும். கஞ்சா அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும். சிறை நிர்வாகமும் இதற்கு உடந்தையாக இருக்கும். இப்ப குறைந்துள்ளது.
அப்பொழுது எங்களை தனியாக வைப்பார்கள். காரணம் நக்சலைட், மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி அச்சமூட்டுவார்கள். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகாலம் தொடர்ச்சியாக நமது அமைப்பு போராட்டத்தின் விளைவாக இன்று அப்படி அவர்களால் சொல்ல முடியவில்லை.
சென்ற ஆண்டு முதல் மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டத்தின் விளைவு இன்று முற்றிலும் மாறியுள்ளது. நம் மீதான அச்சத்தின் காரணமாக தனி சிறையில் வைக்கிறார்கள். இருப்பினும் நமக்கான தேவைகள் அனைத்தும் நிறைவேற்றுகிறார்கள்.
தோழர் பாலு
திமுக காரர்களும் இப்பொழுது சிறைக்கு வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு நம்மை போன்று உரிய மரியாதை கிடைக்கவில்லை. காரணம், என்ன அமைப்பு, அவர்களுக்கு எந்த மாதியான பின்புலம் உள்ளது என்பதை எல்லாம் சிறை அதிகாரிகள் தெரிந்து அதற்கேற்றவாறு தான் மரியாதையை தருகிறார்கள்.
சிறைக்கு பலமுறை சென்றுள்ளதால் வீட்டில் ஒரு புரிதல் உள்ளது. எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள். தோழர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். மக்களுக்காக போராடுறோம். போராளிகளுக்கு மக்கள் தான் பாதுகாப்பு.
நாங்கள் வெளியில் வரும் போது ஜெயிலரிடம் போயிட்டு வருகிறோம் என்றோம்.
என்ன இப்படி சொல்றிங்க. இங்க யாரும் வரக்கூடாதுன்னு தானே போவார்கள் என்றார் ஜெயிலர்.
அதற்கு நாங்கள், “மக்களுக்கு எதிரான அரசு இருக்கும் வரை போராடுவோம். அடிக்கடி சிறைக்கு வருவோம்” என்று கூறினோம்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை பாலஸ்தீனம் என்றொரு ஊர் இருக்கிறது என்றும், அங்கே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றும் மட்டுமே அறிந்துவைத்திருந்தேன். அதற்கு மேல் எதுவும் தெரியாத நிலைதான்.
பாலஸ்தீனத்திலிருந்து அகதிகளாக ஐரோப்பா வந்திருந்த சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் கதைகளைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. தூக்கத்தைப் பறித்துக்கொள்ளும் சக்திவாய்ந்த கதைகள் அவை. அதன்பிறகு சர்வதேச பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சிலவற்றில் என்னை இணைத்துக்கொண்டேன். அம்மக்களின் பிரச்சனைகளை இவ்வுலகுக்கு எடுத்துச்சொல்லும் பணிகளில் சிறிதளவேனும் பங்குபெறமுடிந்தது. இந்நூலை எழுதியதும் அதன் ஒரு பகுதியாகத்தான்…
பாலஸ்தீனம் குறித்து எனக்கிருந்த கேள்விகளுக்கு பலநூல்களை வாசித்தும், பல பாலஸ்தீனர்களோடு உரையாடியும், நூற்றுக்கணக்கான திரைப்படங்களைப் பார்த்தும் சேகரித்த பதில்கள், இந்நூலை எழுதுவதற்கு பெருமளவில் உதவின…
பாலஸ்தீனத்தின் வரலாறு என்ன?
பாலஸ்தீனம் ஏன் நாடற்ற பகுதியானது?
இஸ்ரேல் உருவான கதையென்ன?
இன்றைய பாலஸ்தீனர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது?
பாலஸ்தீனப் போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளா?
பாலஸ்தீனத்தின் எதிர்காலம்தான் என்ன?
என்கிற கேள்விகளுக்கு 147 பாலஸ்தீனத் திரைப்படங்களின் உதவியோடு எழுதப்பட்ட நூல் இது.
“மாப்பிள்ளை விநாயகர்” என்ற பெயரை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மதுரை சுற்று வட்டார இளைஞர்களுக்கு அது ஒரு திரையரங்கின் பெயராக நினைவிருக்கலாம். ஆனால் அதே பெயரில் ஒரு குளிர்பானமும் “பெப்சி – கோக்” வருகைக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்தது. மாப்பிள்ளை விநாயகர் திரையரங்க உரிமையாளர்களே இந்த குளிர்பான நிறுவனத்தையும் நடத்தி வந்தனர்.
விற்பனையாளர்களுக்கு அதிக இலாபத்தைக் கொடுப்பது, குளிர்சாதனப் பெட்டியை விற்பனையாளர்களுக்கு குறைந்த மாதத் தவணையிலோ இல்லை இலவசமாகவோ கொடுத்து தமது கோலாக்களை மட்டும் விற்பனை செய்ய வற்புறுத்துவது, திரையரங்குகளில் பெரும் பணம் கொடுத்து விற்பனை செய்வது, சோடா பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களைக் கைப்பற்றுவது, சினிமா- கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்டு விளம்பரம் செய்வது என ”பெப்சி – கோக்” நிறுவனங்கள் 1990-களில் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்தன. ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிலேயே வெறும் பெப்சி மட்டுமே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிறுவனங்கள் எவ்வாறு, இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்களை ஒழித்துக் கட்டி வளர்ந்துள்ளன என்பதை 2001-ம் ஆண்டே மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !! என்னும் கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியது புதிய கலாச்சாரம்.
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் செயல்படத் துவங்கிய கோகோ கோலா ஆலைக்கு எதிராக கடந்த 2005-ம் ஆண்டு ம.க.இ.க, பு.மா.இ.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தொடர் பிரச்சாரங்களையும், ஆலை முற்றுகைப் போராட்டங்களையும் மேற்கொண்டன. இருப்பினும் போலீஸ் அடக்குமுறை, பொய் வழக்குகள், சிறை, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கோக் நிறுவனத்திற்கு அடியாள் வேலை பார்த்தது அரசு. அன்றைக்கு நெல்லை பேருந்து நிலையத்தில் கூட கோக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடியாது. மீறிய தோழர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கவெறி
இப்புரட்சிகர அமைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாகக் களத்தில் நின்று அமெரிக்கக் கோலாக்களுக்கு எதிராகப் போராடிய போது வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் போன்றோர் இப்போராட்டங்களை ஆதரித்தாலும் சில்லறை வணிகர்கள் பலரும் வருமானம் கருதி அமெரிக்கக் கோலாக்களுக்கு எதிரான நிலையை எடுக்க முன்வரவில்லை. அமெரிக்க கோலாக்கள் தமிழகத்தின் நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி, பல்வேறு உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை முடக்கி, தாமிரபரணி போன்ற ஜீவநதிகள் வற்றியதையும்தமிழக மக்களோடு சில்லறை வணிகர்களும் படிப்படியாக கண்டுணர்ந்தனர்.
இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழக மக்கள் இவ்வாண்டு (2017) ஜனவரி மாதம் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயல்நாட்டு குளிர்பானங்களான ”பெப்சி, கோக்கைத் தடை செய்” என்பதை ஒரு முழக்கமாகவே முன் வைத்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமெரிக்க கோலாக்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பினை மக்கள் பதிவு செய்தனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜனவரி 26 முதல் தமது பேரவையின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் கடைகளில் அமெரிக்க கோலாக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்ச் 1 முதல் விற்கமாட்டோம் என அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை கிட்டத்தட்ட 75% வரையில் குறைந்தது. ஒட்டு மொத்த இந்தியக் குளிர்பானச் சந்தையில் சுமார் 14,000 கோடியை ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொண்டிருக்கும் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு விழுந்த முதல் அடி இது. தமிழகத்தின் வணிகர் சங்கங்களின் இந்த நடவடிக்கை பெப்சி கோக்கிற்கு மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களுக்கே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவிலேயே வெறெங்கும் இல்லாத வகையில் இப்படியானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.
இது ஒன்று போதாதா? உடனடியாக இந்திய முதலாளிகளின் சங்கங்களும், அவர்களின் விளம்பரங்களை வைத்து செய்திக்கடை விரிக்கும் ஊடகங்களும், இவர்களின் அமெரிக்க ஆண்டையிடம் நிதியும் அறிவும் இரவல் பெற்று ‘போராடும்’ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தற்போது குய்யோ முய்யோ என குதிக்கின்றன.
இது வெறுமனே தனித்த ஒரு அமைப்பின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக இருப்பதால் இக்கூட்டத்தினரால் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை அரசு அடக்குமுறையைக் கொண்டு நேரடியாக அடக்க முடியாது. ஆகவே அறிவியல், சூழலியல் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கூச்சலிடுகின்றனர்.
”இத்தகையத் தடை விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களின் நலனிற்கு எதிரானது. பொருளாதார வளர்ச்சிக்கு நிறுவனங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் இந்தத் தடை அறிவிப்பு இருக்கிறது” என புலம்பியிருக்கிறார் இந்திய பானங்கள்- உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் வர்மா. அதாவது பெப்சி – கோக்கின் உற்பத்திதான் இந்தியாவின் பொருளாதாரத்தை வளரச் செய்து விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, கல்வி – சுகாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை தீர்த்து வருகிறதாம். கேழ்வரகில் நெய் அல்ல அமுதமே வடியும் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார்கள் இக்கோமான்கள்.
அடுத்ததாக இவர்கள் கையிலெடுத்திருக்கும் வாதம் “சுதந்திரச் சந்தை ஜனநாயகத்துக்கு” ஆபத்து என்பது தான்! அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் பெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் ! இத்தகைய சுதந்திரச் சந்தை ஜனநாயகத்தைத்தான் இந்திய மக்கள் காப்பாற்ற வேண்டுமாம்.
நித்யானந்த் ஜெயராமன் – என்ஜிவோ சூழலியலாளர்.
அடுத்ததாக இவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம், ’நீர்நிலைகள் மீதான அக்கறை’. இதனைக் கையிலெடுத்திருப்பவர்கள் சூழலியல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ-க்கள்). பெப்சி , கோக் விற்பனையை புறக்கணித்திருக்கும் வணிகர் சங்கங்களின் முடிவை வரவேற்றிருக்கும் சூழலியல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன், ”பன்னாட்டுக் குளிர்பானங்களுக்கு பதில் உள்ளூர் குளிர்பானங்களை பயன்படுத்துவதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை” என்றும் தண்ணீர் பஞ்சத்திற்கு பவண்டோ, காளிமார்க், டொரினோ உள்ளிட்ட உள்நாட்டு குளிர்பானத் தயாரிப்பாளர்களும் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். கொஞ்சம் விட்டால் அடுத்தபடியாக, இளநீரும், பதநீரும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விரயமாக்குவதால் மக்கள் வெறும் நீரை மட்டும் குடிக்க வேண்டும் என்று நித்தியானந்த் ஜெயராமன் போராடுவார் என எதிர்பார்க்கலாம்.
மேலை நாடுகளில் மட்டுமல்ல, சிங்கப்பூர் போன்ற ’மாதிரி’ மேலை நாடுகளாக இருக்கும் நாடுகளிலும் இன்று தாகம் வந்தால் மக்கள் தண்ணீரைக் குடிப்பதில்லை. ஒரு உணவு விடுதிக்குச் சென்றால் கூட அங்கு நம்மூர் போல குடிநீர் வைக்கப்படுவதில்லை, கோலாக்கள் தான் வைக்கப்படுகின்றன. அமெரிக்க கோலா நிறுவனங்கள், ’மக்களுக்கு தாகம் வந்தால் தமது கோலாக்கள் தான் நினைவுக்கு வரவேண்டும்’ என்ற அளவிற்குத் கோலாக்களை அத்தியாவசியப் பண்டமாக மாற்றுவதை தமது இலக்கு என வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றன. தண்ணீரை வியாபாரமயமாக்குவதையே இலக்காக வைத்திருக்கும் இந்நிறுவனங்களை உள்ளூர் கோலி சோடா நிறுவனங்களோடு ஒப்பிடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். மேலதிகமாக இன்று குடிநீர் கூட அரசால் அளிக்கப்படுவதற்கு பதில் தனியார் நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்டு மக்கள் அதற்கென மாதந்தோறும் கணிசமான பணம் ஒதுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
நெடுவாசல் போராட்டத்திற்கும் கூட ”காவிரி டெல்டாவில் விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. அதுவும் சுற்றுச் சூழல் பாதிப்பே!, ஆகவே ஹைட்ரோ கார்பனை எதிர்ப்பவர்கள், விவசாயத்திற்கு நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப் படுவதையும் எதிர்க்க வேண்டும்” என்று சில அறிவுஜீவிகள் சமூக வலைத்தளங்களில் கண்டிசன் போடுகிறார்கள். சரி, நிலத்தடி நீரை எடுக்குமாறு விவசாயிகளை நிர்ப்பந்தித்த குற்றவாளிகள் யார்? விவசாயிகளா ? காவிரியை மறுத்து, மணலைக் கொள்ளையடித்து, கார் கம்பெனிக்கும், கோலா கம்பெனிக்கும் ஆற்று நீரை அள்ளிக் கொடுத்த முதலாளிகள் – அரசியல்வாதிகள் – அதிகாரிகள் கூட்டணியா?
ஏகாதிபத்தியங்களின் நிதியில் வளர்ந்து ஏகாதிபத்தியங்களின் நலனுகாக செயல்படும் இத்தகைய சூழலியல் என்.ஜி.வோ-க்கள் அனைவரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை திசை திருப்புவதோடு பன்னாட்டு நிறுவனங்களின் நலனை இறுதியில் வேறு காரணங்களை முன்வைத்து காப்பாற்ற உதவுகிறார்கள்.
இந்த ஏகாதிபத்தியங்கள் வடிவமைத்திருக்கும் நுகர்வுக் கலாச்சார வாழ்வின் அங்கங்களான மல்டி பிளக்ஸ், ஆடம்பர உடைகள், ஆடம்பர பொழுதுபோக்குக் கருவிகள், வாகனங்கள், உணவகங்கள், பிசா, பர்கர், கேஎப்சி வகையறாக்களில் முதன்மையான சின்னமே பெப்சியும் கோக்கும் தான். உள்ளூர் சோடாக்கள் எவையும் மேற்கண்ட நுகர்வுக் கலாச்சார ஆக்கிரமிப்பின் அங்கமாக அணிவகுப்பதில்லை. அவை விலையுயர்ந்த வாஷிங்டன் ஆப்பிளின் அருகே பரிதபமாய் சிதறிக் கிடக்கும் இலந்தைப் பழம் போன்றவையாகவே இருக்கின்றன. அதனால்தான் உலகமெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஓர் குறியீடாக கோக் இருக்கிறது. கோக், பெப்சிக்கு எதிராக பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. முக்கியமாக நீரை தனியார்மயமாக்க கூடாது என்று பல நாட்டு மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். என்ஜிவோ நிறுவனங்களோ தனியார்மயம், தாராளமயத்தை எதிர்ப்பதற்கு பதில் பெப்சி கோக்கை எதிர்த்தால் கோலி சோடாவையும் எதிர்க்க வேண்டுமென்று கூறி அமெரிக்க கோலாக்களுக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குகிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு முழக்க அட்டை. பெப்சி கோலாவை தமிழன் தடை செய்கிறான்!
கடைசியாக, அறிவியலை ஆயுதமாய் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்குகிறார்கள் சிலர். அமெரிக்க கோலாக்களில் இருக்கும் வேதிக் கரைசல்களைப் போன்றதே, உள்ளூர் சோடாக்களின் வேதிக் கரைசல்களும். ஆகவே பெப்சி- கோக் மட்டுமல்ல காளிமார்க் வகையறாக்களும் கெடுதியே என்று இரண்டையும் தடை செய்யக் கோருவதும் அயோக்கியத்தனமே.
காளிமார்க் குடிப்பதால் வரும் உடல்நலக்கேட்டை, அமெரிக்க கோலாக்களால் வரும் சமூக – பொருளாதார – அரசியல் கேட்டோடு துளி கூட ஒப்பிட முடியாது. ஆகவே நீங்கள் அமெரிக்கக் கோலாவைக் குடிப்பதால் முழுகும் குடியை விட பவண்டோவைக் குடிப்பதால் ஒன்றும் பெரியதாகக் குடிமுழுகி விடாது. நீங்கள் பவண்டோவைக் குடித்தாலும் சரி, குடிக்காவிட்டாலும் சரி, நமது சமூக, பொருளாதார, அரசியல் சுய சார்பைப் பறிக்கும் அமெரிக்கக் கோலாக்களை எதிர்ப்பதில் ஒன்று சேருவதே முக்கியம்.
இன்னும் சிலர் வணிகர் சங்கத் தலைவர்கள் நாடார் சாதிக்காரர்களாக இருப்பதால் காளிமார்க் எனும் நாடார் சாதி முதலாளிக்கு ஆதரவாக பெப்சி கோக்கை எதிர்ப்பதாக ‘பயங்கரமான’ ஆய்வு செய்கிறார்கள். ஒரு பெட்டிக் கடைகாரருக்கோ இல்லை மளிகைக் கடைக் காரருக்கோ வாடிக்கையாளர் வாங்கும் அனைத்தையும் வைத்திருந்தால்தான் வருமானம் வரும். பெப்சி கோக்கை விற்பதால் வரும் வருமானத்தை விட காளிமார்க்கின் வருமானம் பல மடங்கு குறைவே. பொது மக்களின் பொதுக் கருத்து வலிமையினால்தான் அவர்கள் பெப்சி கோக் வருமானத்தை இழக்க முன்வந்திருக்கிறார்களே அன்றி சாதி நலனுக்காக அல்ல. மேலதிகமாக வணிகர்கள் அல்லாத பிரிவினர் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், நட்சத்திர விடுதிகள், பெரும் தொடர் அங்காடிகள் போன்றோர் பெப்சி கோக்கை விற்பார்கள். எப்படிப் பார்த்தாலும் இது சிறு வணிகர்களுக்கு இழப்பே!
இன்னும் அரசு, போலீசு, நீதிமன்றம் மூலமாக சிறு வணிகர்களுக்கும் பெரும் நெருக்கடியும், ஏன் அடக்குமுறையும் கூட வரலாம். பெப்சி – கோக் எனும் அமெரிக்க கம்பெனிகளின் பொருட்களை விற்கமாட்டோம் என்று சொல்வது சாதாரணமான ஒன்றல்ல! இத்தகைய சூழலில் வணிகர்களின் முடிவை வரவேற்பதோடு, அவர்களது கடைகளைக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசு மூலம் பிரச்சினை வந்தால் அதை எதிர்த்து போராடுவது போன்றவற்றையும் நாம் செய்ய வேண்டும். கூடவே மாறுவேடம் போட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.
மெல்லிய இசையுடன் துவங்கும் அந்த காணொளியில் இளம் சிறுவன் ஒருவன் மெல்ல நடக்கிறான். வயதுக்கேற்ற உடல்வாகுடன் இருந்தாலும் நடையோ 60 வயது முதியவர் போல இருக்கிறது. அவன் சென்ற இடத்தின் அருகிலேயே இன்னொரு சிறுவன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். அவனால் சூரிய வெளிச்சத்தை எதிர் கொள்ள முடியவில்லை. நான்கு வருடங்கள் சூரியனையே பார்க்காமல் இருந்ததன் விளைவால் கண் கூசுகிறது. அது மட்டுமன்றி அவர்கள் உடல்களில் பல இடங்களில் தழும்புகள் இருக்கின்றன. முன்னவன் ஷ்யாம் பிந்தையவன் லக்கி. இவ்விரு சிறுவர்களுக்கும் நோயெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் இருவரும் குழந்தை தொழிலாளிகள்.
முதலாளி சுத்தியலால் அடித்துதான் எங்களை ஏழு மணிக்கு எழுப்புவார்.
இவர்கள் போலவே இன்னும் ஏராளமான சிறுவர்கள் அந்த சிறிய குடிலை சுற்றி இருந்தார்கள். அவர்கள் செல்வதுடன் அந்த காணொளி முடிகிறது. இவர்கள் அனைவரும் 2017 பிப்ரவரி மாதம் டெல்லி சீலம்பூரில் உள்ள ஒரு ஜீன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டவர்கள். மொத்தம் 26 சிறுவர்கள் அனைவரும் 8 லிருந்து 13 வயதிற்குட்பட்டவர்கள்.
அச்சிறுவர்களின் பணிச்சூழல் பற்றி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
“நாங்கள் தினமும் காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டிருந்தோம். முதலாளி சுத்தியலால் அடித்துதான் எங்களை ஏழு மணிக்கு எழுப்புவார். கடந்த நான்கு வருடங்களாக தினசரி இரு வேலை உணவாக உருளைக்கிழங்கும் சோறும் மட்டுமே. இந்த உணவு மாறியதே இல்லை. அறையிலிருந்து ஒரு நொடி கூட வெளியே செல்ல எங்களுக்கு அனுமதி கிடையாது.” இதை சொல்வது வெறும் ஏழே ஏழு வயதான ரஹீம்.
இவர்களது வேலை ஜீன்ஸ் துண்டுகளை கத்தரித்து அதை பேக் செய்வது. பத்து நிமிடத்தில் பத்து எண்ணிக்கை. இதில் கடைசியாக முடிப்பவருக்கு சுத்தியல் அடி கட்டாயம். கொஞ்சம் அதிகமாக உணவு சமைத்தால் சுத்தியல் அடி. வேலை செய்கையில் தூங்கினால் சுத்தியல் அடி. கழிவறைக்கு சென்றால் கூட சுத்தியல் அடி என கிட்டத்தட்ட நரகத்திலிருந்து மீண்டுள்ளார்கள்.
அந்த சிறுவன் ஷியாம் மேற்கண்ட தொழிற்சாலைக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக ஐந்து சிறுவர்கள் வருவதை பார்த்திருக்கிறான். நாங்கள் அவனை மீட்கையில் அவனால் நகரக் கூட முடியவில்லை. நாங்கள் அவனை தூக்க வேண்டியிருந்தது. இப்போது பிஸியோதெரபி சிகிச்சை தொடர தொடர கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைக்கிறான். நாங்கள் அங்கு பார்த்த ஒவ்வொரு சிறுவனும் காயத்துடனும் ஊட்டச்சத்து குறைபாட்டுடனுமே இருந்தான் என்கிறார் மீட்புக் குழுவில் இருந்த தன்னார்வ தொண்டர் ஒருவர்.
“நாங்கள் மிகச்சிறிய அறை ஒன்றினுள் அடைக்கப்பட்டிருந்தோம். அங்கு சூரிய வெளிச்சம் என்பதே இல்லை. நான் மீட்கப்பட்ட பொழுது என்னால் கண்ணையே திறக்க முடியவில்லை. நாங்கள் குளிக்கவோ கழிவறை செல்லவோ கூட அனுமதிக்கப் படவில்லை. நாங்கள் தினமும் சுமார் 5000 எண்ணிக்கையில் துணிகளை பேக் செய்ய வேண்டியிருந்தது.” இதைக் கூறுவது லக்கி.
இவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்த சிறுவர்கள். அதில் அறுவர் குழந்தை கடத்தல் கும்பலால் வந்தவர்கள். இப்போது அந்த தொழிற்சாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூஹி சவுத்ரி
ஓரிரு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக-வின் துணை அமைப்பான மகிளா மோர்ச்சா வின் ஜல்பைகுரி மாவட்ட தலைவர் ஜூஹி சவுத்ரி குழந்தை கடத்தல் கும்பலில் முக்கிய புள்ளியென போலிசால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது செல்வாக்கு மிக்க பாஜக தலைவர்கள் பலரது பெயரையும் கூறியிருப்பதோடு தான் ஒரு அப்பாவி எனவும் கூறியிருக்கிறார்.
இது மட்டுமன்றி பாஜக-வின் மாநிலத் தலைவர் திலீப் கோஷ், ஜூஹி சவுத்ரி குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்த குற்றவாளியுடன் கட்சி அனுமதி இல்லாமல் டெல்லி சென்று கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறார் எனவே நாங்கள் அவரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
இவை மட்டுமல்லாமல் காவல்துறை விசாரணையில் முன்னுக்கு பின் உளறி கொட்டியுள்ளார்கள். பிறந்த குழந்தைகள் கடத்தலில் நேரடியாக ஜூஹி ஈடுபட்டுள்ளார் என சிஐடி துணை இயக்குனர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.
இவ்விரு செய்திகளும் நமக்கு அறியத்தருபவை எப்படிப்பட்ட ஒரு குற்றக் கும்பலின் ஆளுகையின் கீழ் எவ்வளவு ஒரு மோசமான முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான். ஒரு ஜூஹி சவுத்ரி என நாம் இதை யோசிக்க முடியுமா…? கலவரங்கள், குற்றக் கும்பல்கள், ரவுடித் தலைவர்கள், குண்டு தயாரித்தல், அசீமானந்தா, பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பது தொடங்கி ரவுடிகளை நேரடியாக ரெக்ரூட் செய்வது முதல் சமீபத்தில் பினராயி விஜயன் தலைக்கு விலை வைத்தது வரை ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் க்ரைம் ரேட் மற்ற எல்லா கட்சியினரை விடவும் அதிகம்.
சுமங்கலி திட்டம்
உலக ஆய்வறிக்கை ஒன்றின்படி அனைத்து உதிரி வேலைகள் பார்ப்பவர்களை உள்ளிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட நவீன அடிமைகள் இந்தியாவில் அதிகமாம். சுமார் 18 மில்லியன் பேர். இது இந்திய மக்கள் தொகையில் 1.4% என்கிறார்கள். இந்த புள்ளிவிவரமே மிகக்குறைவு என்றே தோன்றுகிறது.
ஷியாம் லக்கியை போலவே தமிழகத்து பஞ்சாலைகளில் கேம்பஸ் கூலி என்ற பெயரிலும் சுமங்கலித் திட்டம் என்ற பெயரிலும் அன்றாடம் உழன்று கொண்டிருப்பவர்கள் ஏராளமான சிறுமிகள் மற்றும் சிறுவர்கள். அவர்கள் 14 என்கிற வயதைத் தாண்டி 15 -லும் 16 -லும் இருப்பதால் நம் சட்ட வரையறையில் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள் இல்லை.
சுமங்கலித் திட்டத்தில் பணிக்கு வரும் தொழிலாளிகள் மேலதிகாரிகளினால் அடையும் பாலியல் சீண்டல் துன்புறுத்தல்கள் சொல்லொணாத் துயரம் தோய்ந்தவை. இவையெல்லாம் கேள்விக்கு அப்பாற்றட்டவையாக மாறியிருக்கிறது. எட்டு மணி நேர வேலையும் அடுத்த சிப்டிற்கு ஆள் வரவில்லையெனில் அதையும் சேர்த்து பார்க்க வேண்டிய கட்டாயமும் இங்கு மிக இயல்பானதாக ஆக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இந்துத்துவமும் முதலாளித்துவமும் கலந்து நம் மக்களை கசக்கி பிழிகிறது. குழந்தை தொழிலாளர்களை மீட்பதோ அவர்களை சமூக நிலையில் உயர்த்துவதோ, பஞ்சை பராரிகளாய் இருக்கும் ஒப்பந்த தொழிலாளரை விடுதலை செய்வதோ பார்ப்பனியத்தையும், முதாளித்துவத்தையும் எதிர்த்து போராடுவதில் இருக்கிறது.
(ஹிந்துஸ்தான் டைம்ஸில் வந்த கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)
பில் மெலிண்டா கேட்ஸ் ஜோடி மூன்றாம் உலக நாடுகளை குறிவைத்து நடத்தும் அனைத்து மானுடவிரோத மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்குப் பின்னாலும் வெறும் வணிக நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தான் இதுவரை புரிந்து கொள்ளப்பட்டிருகிறது. ஆனால் ஃபிலந்த்ரோபி (Philanthropy) என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளில் இவர்கள் நடத்தும் வெறியாட்டம் வணிக இலாபங்களைத் தாண்டிய நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வெள்ளிடை மலையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.
4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை.
தாராளமயம், தனியார்மயம், உலகமயத்தின் இறுதி இலக்கான ”உலக பேரரசை ஆளம் தகுதி யாருக்கு?” என்பது தான் 2017 ஜனவரியில் சுவிட்சர்லாண்ட் டாவோஸில் உலக பொருளாதார நிறுவனத்தின் நிகழ்ச்சிநிரல். உலகெங்கும் ஊழல்மயப்பட்ட, ஆளத்தகுதியிழந்த, எதிர்நிலை சக்தியாக மாறியுள்ள அரசியல் நிறுவனங்களின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக பறைசாற்றும் டாவோஸ் பணக்காரர்கள், மாற்றுத் தலைமையை முன்வைக்கிறார்கள். ஏன் மாற்றுத் தலைமை தேவை? யார் அந்த மாற்று?
உலகின் மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு போவதாக குறைபடும் உலக மீப்பெரு பணக்காரர்கள், இதனால் ஏற்படப் போகும் காலநிலை மாற்றத்தைப் பற்றி கவலைப் படுகிறார்கள். காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்கு காரணமான நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என TED மாநாட்டில் 2010-ல் பில்கேட்ஸ் கூறுகிறார். இதற்கு அவர் கண்டுபிடித்த வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P என்றால் மக்கட்த் தொகை.
2010-இல் 700 கோடியாக இருந்தது 2050-இல் 900 கோடியாகும் என கணக்கிடுகிறார். S என்றால் ஒரு நபருக்கான சேவைகள். அதாவது உணவு, நீர், காற்று, இருப்பிடம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், இணையம் போன்றவை அனைத்தும். E என்றால் ஒருசேவைக்கு தேவைப்படும் ஆற்றல்/ மின்சாரம். C என்றால் மின்சாரம் தயாரிக்கும் போது வெளிப்படும் கரியமில வாயு. பூமியின் காலநிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயுவை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர வேண்டுமென்றால் சேவைகளையோ, மின்சாரத்தையோ குறைப்பதன் வழி செய்ய முடியாது. ஏனென்றால் நான்காவது தொழிற்புரட்சியை உலக மீப்பெரு பணக்காரர்கள் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார்கள். நான்காவது தொழிற்புரட்சியின் அடிப்படையே மின்சாரம் தான். செயற்கை நுண்ணறிவு (AI); ஐஓடி (IoT) எனப்படும் டிஜிட்டல் உலகம்-பருப்பொருள் உலகம்- உயிரியல் உலகம் ஆகியவற்றின் இணையம்; டிசைனர் பீயிங்ஸ் (Designer beings) எனப்படும் ஆய்வகங்களில் வடிவமைக்கப்பட்ட மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள், நுண்கிருமிகள்; 3டி பிரிண்டிங்; ரோபோர்டிக்ஸ் ஆகியவை தான் நான்காவது தொழிற்புரட்சியின் முக்கியமான கூறுகள். இவற்றை மின்சாரமில்லாமல் நிறைவேற்ற முடியாது.
கூடவே 4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை. அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் கொண்டுவரப்பட்டால் உழைக்க மனிதர்கள் தேவையில்லை. இயந்திரங்களே உற்பத்தியை பார்த்துக் கொள்ளும். இதில் கீழ்மட்ட வேலைகளுக்கு மட்டும் தான் ஆப்பு என நடுத்தர வர்க்கம் நினைக்கலாம். ஏனென்றால் இரண்டாவது தொழிற்புரட்சி என முதலாளித்துவ உலகம் கொண்டாடும் 1910-இல் உற்பத்தியில் கன்வேயர் பெல்ட் புகுத்திய கார் தொழிற்சாலைகள், கூடவே ஊட்டி வளர்க்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தையும் உருவாக்கியது. அதைப் போலன்றி 4 –வது தொழிற்புரட்சி விவசாயிகளையும், தொழிலாளர்களையும், முறைசாராத் தொழிலாளர்களையும், முதலாளிகளின் ஒரு பகுதியனரை மட்டுமன்றி, டாக்டர், வக்கீல், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஐடி தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவரின் வேலைகளையும் பறித்து ஏதிலியாக்குமென நான்காவது தொழிற்புரட்சியின் தந்தை கிளாஸ் ஷ்வாப் எச்ச்சரிக்கிறார்.
காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் முன் வைக்கும் வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P
உலகின் வெறும் 5% பேருக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு. ஏதிலிகளாக மாறப்போகும் மிச்ச 95% பேருக்கு மாற்று வேலை வாய்ப்பை வழங்க 4-வது தொழிற்புரட்சியின் சிற்பிகள் தயாராக இல்லை. மாற்றாக எதை முன்வைக்கிறார்கள் தெரியுமா? அடிப்படை வருமானம் (Basic Income) எனப்படும் நூறுநாள் வேலைத்திட்டம். வேலையிழந்தவர்கள் புரட்சி செய்ய வாய்ப்பிருகிறதல்லவா? அதைத் தடுப்பதற்குத் தான் ஆதார் மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு. ஆனால் அது போதாது. இங்கு தான் பில் கேட்சின் சூத்திரத்திற்கு வேலை.
பருவநிலை மாற்றத்திற்கும் கரியமில வாயு வெளியேற்றத்துக்குமான உறவில் முக்கிய பங்கு வகிக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றத்திலிருந்து மட்டுமல்ல, ஏகபோகங்களின் மீப்பெரு வளர்ச்சியை தொடங்கி வைத்திருக்கும் 4-வது தொழிற்புரட்சியின் முக்கிய சவாலான வேலையற்ற 95% உலக மக்களை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதற்கான உத்தியும் ஒளிந்துள்ளது. உலக மக்கட்தொகையைக் 10-15% ஆகக் குறைக்க சிறந்த வழி தடுப்பூசிகள், இனப்பெருக்கக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார பாதுகாப்பு என்கிறார் பில்கேட்ஸ். மூன்று வழியில் இதை செய்ய முடியும்.
(அ) எயிட்ஸ், எபோலா போன்ற சிதைவு நோய்க்கிருமிகளை ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களிலும் பரவச் செய்வது; (ஆ) கருத்தரிப்பு தடுப்பூசிகளை மூன்றாமுலக நாடுகளின் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் குழந்தைபெறும் வயதையெட்டும் ஒவ்வொரு மனிதனையும் மலடாக்குவது; (இ) டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற பெரும் பரவலாக தொற்றும் நோய்க்கிருமிகளை வெடித்துப் பரவ செய்வது போன்ற முறைகள் வழி உலகின் மக்கட்த் தொகையை வெறும் 10-15 % ஆகக் குறைக்கலாம். இது மாபெரும் நிறவெறிப் படுகொலையல்லவா?
இத்திட்டத்தை நம் நாட்டு அரசையே செய்ய வைக்க முடியுமா? ஆம். அதற்காக உருவாக்கப்பட்டது தான் கவி வாக்ஸின் அலையன்ஸ். இதில் ஐநாவின் உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், உலகவங்கி, ஐஎம்எஃப், மற்றும் ஏகாதிபத்திய மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் ஆகியவை கேட்ஸ் ஜோடியின் தலைமையில் செயல்படுகின்றன. நமது அரசு இவர்களின் கைப்பாவை. ஏகாதிபத்தியத்தின் அடுத்த கட்ட நகர்விற்காக, நான்காவது தொழிற்புரட்சியின் சிற்பிகள், கவி வாக்ஸின் அலையன்ஸ் போலவே ஒவ்வொரு துறையிலும் உலகெங்கும் உள்ள நாடுகளை கட்டுப்படுத்த அரசு-தனியார் கூட்டு என்ற போர்வையில் ஆட்சிக் கூட்டணிகளை (governance alliance) உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இறையாண்மையுள்ள நாட்டின் அரசையும் தனது கைப்பாவையாக்கி தனது போர்தந்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இதே கேட்ஸ் ஜோடி தலைமையில் இயங்கும் பெட்டர் தான் காஷ் அலயன்ஸ் (better than cash alliance) எனும் கூட்டணியின் பங்களிப்பு பத்திரிகைகளில் அம்பலப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். இவர்களைத் தான் இன்று அரசியல் மாற்றாக இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தக் கூட்டணிகளெல்லாம் வெறும் தரகர்கள் தான். இவர்கள் பின்னாலிருந்து ஆட்டுவிப்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில உலகப் பெரும் பணக்காரர்களும், ஒட்டுமொத்த உலகையும் தனியே கபளீகரம் செய்யத்துடிக்கும் அவர்களின் பேராசை பிடித்த போர்தந்திரத் திட்டங்களும் தான்.
தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் பங்களிப்பை செலுத்தும். 2009-இல் கனடாவில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட போது டெட்டனஸ் தடுப்பூசி பரந்த அளவில் போடப்பட்டதால் 65% பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நேரத்தில் பாரிய அளவிலான தடுப்பூசி இயக்கம், பெரும்பான்மையான குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும். இதனால் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகமாக ஏற்பட்டு மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது போல இதுவரை சந்தைப்படுத்தப்படாத தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியில் hCG போன்ற கருத்தரிப்பு தடுப்பு ஹார்மோன்கள் கலக்கப்படவில்லை என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் கென்யாவிலும் இந்தியாவிலும் உலகின் பல்வேறு ஏழை நாடுகளிலும் கேட்ஸ்-கவி கும்பல் இதற்குமுன் இழைத்திருக்கும் மானுட விரோத மனிதத் தன்மையற்ற குற்றங்களின் அனுபவங்கள் நம் முன்னே நிற்கின்றன.
01-03-2017 அன்று பெற்றோரின் அனுமதியின்றி ரூபெல்லா தடுப்பூசியைப் போடப் போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காலடியில் போட்டு நசுக்கி, 15 வயதிற்குள்ளான பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிராக ஒரு மீப்பெரு குற்றத்தை செய்யும் இதே அரசு, நெடுவாசலுக்கு ஆதரவாகப் போராடச் செல்லும் கல்லூரி மாணவர்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற்று தான் வரவேண்டும் என்ற வினோத சட்டத்தைக் கூறி போலீசை வைத்து விரட்டியடிக்கிறது. பாங்க் வாசல், வாடி வாசல், நெடுவாசல், பள்ளிவாசல் எனத் தனித்தனியான போராட்டங்கள் தீர்வைத் தராது. தமிழினத்தை அழிக்கத் துடிக்கும் இக்குற்றக்கும்பலை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்காவிட்டால் நம் தமிழினமே அழிந்து போகும் அபாயம் தொலைதூரத்திலில்லை.