Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 540

இராம அடையாளமும் தலித்துக்களின் நூற்றாண்டு துயரமும்

2

ட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகர் இராய்பூரில் இருந்து 250 கி.மீ தொலைவிலுள்ள சில கிராமங்களில் நீல நிறம் பூசப்பட்ட சிதிலமடைந்த வீடுகளையும் அவற்றை இணைக்கும் உடைந்து போன சாலைகளையும் காணலாம். அங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் தலித்துக்கள் – பார்ப்பனிய இந்துமத சாதியமைப்பில் கடைக்கோடியிலிருக்கும் சாதிப்பிரிவினர்.

60 வயதான தானி ராம் சன்வானி, சார்போரா கிராமத்தில் ஒரு சிதிலமடைந்த வீட்டில் வசிக்கும் விவசாயி. “உரிமைகள் ஏதுமற்ற தலித்துக்கள் ஆதிக்கச்சாதியினரால் அடக்கியொடுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்பட்டனர். நாங்கள் சமர் என்றும் “அக்கூட்” [தீண்டத்தகாதவர்கள்] என்றும் மோசமாக விளிக்கப்பட்டோம். எங்களது முன்னோர்கள் விலங்குகளை விட மோசமான நிலையில் நடத்தப்பட்டனர். கோயில்களிலும் அவர்களால் நுழைய முடியாது” என்று அவர் கூறுகிறார். இப்படிக் கூறும் சன்வானியின் முகத்திலும் உடலிலும் இந்துக் கடவுளான இராமனின் பெயர் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது. அவர் மட்டுமல்ல அவரது ஊரைச் சேர்ந்தவர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்று இதில் பேதமேதுமில்லை.

“கடவுளின் பெயர் எங்கள் மீது பச்சைக் குத்தப்பட்டிருக்கும் போது எங்களுக்கு கோயில் எதுவும் தேவையில்லை. கோயிலில் மட்டுமல்ல கடவுள் எங்கும் இருக்கிறார். எங்களது ஊருக்கருகில் ஒரு கோயில் இருக்கிறது. எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் அதனுள்ளே ஒருபோதும் சென்றதில்லை. அந்தக் கோவிலில் எந்தக் கடவுளின் உருவம் இருக்கிறது என்பதே எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களது முன்னோர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது போல எங்களது நிலைமை தற்போது இல்லை தான் ஆனாலும் பார்ப்பனிய இந்துமதச் சாதியமைப்பின் ஏற்றத்தாழ்வு முற்றிலுமாக நீங்கும் வரை இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

பரசுராம் பரத்வாஜ் என்பவரால் 1890-களில் தொடங்கப்பட்ட இராம்நமி சமாஜ் என்ற சமய மறுமலர்ச்சி இயக்கத்தை அங்கிருக்கும் தலித்துக்கள் பின்பற்றுகிறார்கள். சட்டிஸ்கரைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் கோயிலில் நுழைய அவர் மறுக்கப்பட்டதன் எதிர்வினையாகத் தான் இந்த இயக்கத்தை அவர் தொடங்கினார். இது குமரி மாவட்டத்தின் அய்யா வழிபாட்டின் மூலவர் வைகுண்டநாதரின் வரலாற்றைப் போன்றது.

1901 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட தலித் மக்களை ஒருங்கிணைத்து முதன்முறையாக இராம்நமி மேளாவைப் பரசுராம் தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிலாஸ்பூர் மற்றும் இராய்பூர் மாவட்டங்களில் தலித் மக்களின் பங்கேற்புடன் இராம்நமி மேளா நடைபெறுகிறது.

வரலாறு நெடுகிலும் உழைக்கும் மக்களின் விழுமியங்களையும் கலாச்சராங்களையும் பார்ப்பனிய இந்து மதம் அங்கீகரித்ததில்லை மாறாக நசுக்கியே வந்துள்ளது. இராம்நமி மேளாவில் தலித்துக்கள் ஒன்றுகூடுவதை ஆதிக்கச்சாதி இந்துக்கள் வெறுத்தது மட்டுமல்லாமல் இராமனின் பெயரைப் பயன்படுத்துவதையும் எதிர்த்துக் கடுமையாக அவர்களைத் தாக்கியிருக்கின்றனர். இராமாயண புராணபுரட்டு இராமனல்ல எங்களது கடவுள், மாறாக நெருப்பு, சூரியன் மற்றும் சந்திரன் போன்ற இயற்கையின் கூட்டுத்துவம் தான் எங்கள் நாயகன் என்று பரசுராம் அறுதியிட்டு கூறினார். ஆனாலும் இராமனின் பெயரும் ஹரிஜன அடையாளமும் தலித் மக்களைப் பீடித்திருக்கும் நோய்கள் என்பதை ஏனையோரை விட தலித்மக்களே இன்று நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

உருவ வழிபாட்டில் நம்பிக்கையின்மை, இயற்கைக்கு மாறான எதிலும் நம்பிக்கை கொள்ளாமை, புனித கங்கை நீர் பாவத்தைப் போக்கும் போன்ற மூடப்பழக்கங்களில் நம்பிக்கைக் கொள்ளாமை, கோயிலுக்குச் சென்று இந்துக்கடவுளை வழிபடாமை, பார்ப்பனர்களின் மேலாதிக்கம் மற்றும் அவர்களது புனித நூல்களான மனுஸ்மிரிதி மற்றும் இராமசரிதமானஸ் போன்றவற்றை ஏற்காமை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தில் நம்பிக்கைக் கொள்ளல் போன்றவை இராம்நமி மகா சபாவின் கொள்கைகளாக இருந்தன.

முந்தையக் காலங்களில் இராம்நமி சமூக மக்கள் தங்களது திருமணத்திற்கு பிறகு பச்சைக் குத்தி கொண்டனர். முன்பு இச்சமூகத்தினருக்குப் பொதுவாக 11-14 வயதிற்குள் திருமணம் நடைபெறும். பச்சைக் குத்திக்கொள்ளும் இந்தக் கலாச்சாரம் இதேபோல இனி இருக்காது. ஏனெனில் பச்சைக் குத்திக்கொள்ளும் செயல்முறையானது மிகவும் வலி நிறைந்தது. புகைக்கரியுடன் தண்ணீரைச் சேர்த்து தயாரிக்கப்படும் மையைக்கொண்டு பச்சைக் குத்தப்படும் இந்த நடைமுறையைப் பெரும்பாலும் பெண்களே முன்பு செய்தார்கள்.

தனது 13 வது வயதில் திருமணம் நடந்த மறுகணமே தனக்கு பச்சைக் குத்தப்பட்டதை நினைவு கூறுகிறார் படே சிபட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 71 வயதான சாமுந்து பாய். “எனது கணவர் அவருடைய உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டிருந்தார். இராமனது பெயரைப் பச்சைக் குத்திக் கொள்ளுதல் எங்களது சமூகத்தின் சமயம் மற்றும் கலாச்சராம் தொடர்புடையது என்பதால் எனது முகத்தில் பச்சைக் குத்திக்கொள்ளுமாறு கணவர் என்னை வலியுறித்தினார். பச்சைக் குத்திக்கொள்ளும் போது ஏற்பட்ட வலியானது ஒரு கெட்ட கனவு. ஒரு ஆறு மாதத்திற்கு என்னால் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் முடியவில்லை.” என்று அவர் கூறுகிறார்.

இராம்நமியைப் பின்பற்றும் இளைஞர்கள் இனி ஒருபோதும் பச்சைக் குத்திக்கொள்ள போவதில்லை. இன்றும் பெரும்பான்மையான இடங்களில் சாதி அடக்குமுறை கோலோச்சும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறையானது அவர்களது சாதி அடையாளத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களைப் பின்னுக்கு இழுப்பதாகும் என்று ஜன் ஜக்ராம் சமிதி (மக்கள் விழிப்பு சமூகம்) அமைப்பின் தலைவரான விபிஷன் பட்ரே கூறுகிறார்.

தேசியகீதத்தைப் பாடினால் காவல்துறை அடிக்காது என்பது போல இராமன் பெயரை உடம்பில் பச்சைக் குத்திக்கொண்டால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கை ஒன்றும் அகண்ட பாரதத்தில் பயனளிக்காது என்பதைத் தலித் மக்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள்.

பார்ப்பன எதிர்ப்பை அடிநாதமாக கொண்டுத் தொடங்கப்பட்ட இராம்நமி இயக்கம் பின்னாளில் வெறுமனே பக்தி இயக்கமாக ஒடுங்கிவிட்டதில் யாதொரு வியப்புமில்லை. இராம்நமி சமாஜ் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய சமய சீர்திருத்தங்கள் பெரும்பாலும் ஒன்று பார்ப்பனியத்தால் அழிந்துபடும் அல்லது அதனால் செரிக்கப்பட்டு பொருளற்ற வெற்றுச்சடங்குகளாகிவிடும். பார்ப்பனியத்தின் அடக்குமுறையால் தனிச்சமயமான அய்யாவழி வழிபாடும் இன்று வெறும் சடங்கு ரீதியாகவே தொடர்கின்றது.

இந்தியச் சமூகப் அமைப்பின் ஆணிவேரான சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் பார்ப்பனியத்தை வெட்டி வீழ்த்தாமல், நில உரிமையில் பங்கு இல்லாமல் தலித்துக்களுக்கு விடுதலை என்றுமே கிடையாது. இராம்நமி இயக்கமானது தொடங்கப்பட்டக் காலத்தில் இருந்து பார்ப்பனியத்திற்கு ஒரு பிரச்சினையாக அது இருந்ததில்லை.  அதாவது மையரீதியான பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பது சாத்தியமில்லை என்ற நிலையில் தனது அடையாளத்திற்கான தனி வழிபாடு, சடங்கு என மட்டும் ஏற்படுத்திக் கொண்டது. அதுவும் பின்னர் பக்தி பெருமூச்சாக மட்டுமே வரலாற்றில் தொடர்கிறது. இன்றைக்கு தமிழக நாட்டுப்புற  சாமிகளை செரிக்க  முயலும் இந்து மதவெறி அமைப்புக்கள் இத்தகைய சாதிக்கேற்ற தனிக்கடவுள், வழிபாடுகளை ஆதரிக்கின்றன. அப்போதுதான் பெருந்தெய்வ வழிபாட்டில் பார்ப்பனர்களை தவிர்த்து யாரும் உள்ளே நுழைய முடியாது.

பீமா-கரோகான் நினைவுத்தூனும் இராய்ப்பூரின் நீல நிற வீடுகளும் பார்ப்பனிய இந்துமத எதிர்ப்புச்சின்னங்களாக இன்றும் நம் கண்முண்ணே இருக்கின்றன. இவையிரண்டுமே பார்ப்பனியத்திற்கு எதிரான தலித் மக்களின் வெஞ்சினம் தான். ஆனால் முன்னது சமரசமில்லா வீரியமான போராட்டத்தினால் பார்ப்பனியத்தை வீழ்த்தி எதிர்காலத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் காலத்தை வென்று நிற்கிறது. ஆனால் பின்னது பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராக தோன்றினாலும் தீண்டாமை அடையாளங்களுடன் சிதிலமடைந்த நீலநிற சுவர்களுடன் சேரிகளுக்குள் முடங்கிவிட்டது.

இருப்பினும் இந்தியாவின் பார்ப்பனிய எதிர்ப்பு வரலாற்றை அதுவும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முதல் முறையாக ஐந்து வயதில் பச்சைக் குத்தப்பட்டதைப் பற்றி சரஸ் கேளா கிராமத்தைச சேர்ந்த 71 வயதான இராம் நிவாஸ் விவரிக்கிறார். “ராம் என்ற பெயரை என் நெற்றியில் எனது தந்தை 4 முறை பச்சைக் குத்தினார். எனக்கு 30 வயது முடிந்தபோது முகம், கைகள் மற்றும் கால்கள் அனைத்திலும் பச்சைக் குத்திக்கொண்டேன்” என்று அவர் கூறினார். அதே போல அவருடைய 4 பிள்ளைகளுக்கும் அவர்கள் இளம்வயதாக இருந்த போது 4 முறைப் பச்சைக் குத்தினார். “ஆனால் அவர்கள் நாட்டின் பிற மாநிலங்களில் வேலை செய்வதால் உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொள்ள விரும்பவில்லை. பச்சைக் குத்திக்கொள்வது தீண்டத்தகாதச் சமூகத்தைச்[முன்பு இப்படி தான் தலித்துக்கள் அறியப்பட்டனர்] சேர்ந்தவர்கள் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் என்பதால் என் பிள்ளைகள் இதை விரும்பவில்லை” என்று அவர் விளக்கினார். “என் பேரக்குழந்தைகளுக்கு பச்சைக் குத்தப்படவே இல்லை” என்கிறார்.

ஜவாலி கிராமத்தில் தன்னுடைய வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறார் 60 வயதுடைய தன்பாய். தலித் உரிமைகளுக்கான இயக்கத்துடன் நீலநிறத்திற்கு தொடர்பிருப்பதால் இங்கே பெரும்பாலான வீடுகளுக்கு நீலநிறம் பூசப்பட்டு இருக்கிறது. நீலநிறம் என்பது அமைதி, வீடு பேறடைதல், தூய்மை மற்றும் தேற்றுதல் ஆகியவற்றைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பல்கலைக்கழக பேராசிரியரான கோல்டி எம் ஜார்ஜைப் பொருத்தமட்டில் இந்த வண்ணப்பூச்சு கலாச்சாரம் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கருடன் தொடங்கியது. பாபாசாகேப் என்று பிரபலமாக அறியப்படும் அம்பேத்கர் ஒரு இந்தியச் சட்ட நிபுணர், பொருளாதாரவாதி, அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். தலித் புத்த இயக்கத்திற்கு (Dalit Buddhist Movement) ஊக்கமளித்த அவர் சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.

சாமுந்து பாய்க்கு 75 வயதாகிறது. கணவரின் வற்புறுத்தலினால் தன்னுடைய 13 வது வயதில் முகத்தில் பச்சைக் குத்திக்கொண்டார். அதனால் ஏற்பட்ட கடும் வலியினால் ஆறு மாத காலம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் முடியாமல் தவித்ததை அவர் நினைவு கூறுகிறார்.

என்னுடைய அப்பா மற்றும் தாத்தா இருவரும் தங்களது உடல் முழுவதும் கடவுள் இராமன் பெயரைப் பச்சைக் குத்திக்கொண்டார்கள். ஆனால் நான் வேலைக்குச் செல்ல என்னுடைய தந்தை விரும்பியதால் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். அதனால் எனக்கு பச்சைக் குத்தவில்லை. நான் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். நான் பச்சைக் குத்திக் கொள்ளவில்லை என்றாலும் என்னுடைய இராம்நமி (Ramnami) அடையாளத்தை நான் விரும்புகிறேன். இராம்நமி சமாஜ் இயக்கத்தை பின்பற்றுபவர்கள் அணியும் கலாச்சார உடையையே பெரும்பாலான நேரங்களில் நான் உடுத்துகிறேன். அந்த உடையில் இராமன் பெயர் எழுதப்பட்டு இருக்கிறது. நான் இந்த சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று 65 வயதான கோல்பரா இராம்நமி கூறுகிறார்.

“எங்களது உடலில் பச்சைக் குத்தியிருப்பதை மக்கள் பார்க்கும் போது எங்களைப் பெயர்சொல்லி (வயதான பெரியவர்கள் உட்பட) சில நேரங்களில் அழைப்பார்கள். ஆனால் வெளிப்படையாக சொல்வதானால் இது ஒரு பெரிய விடயமில்லை. என்னுடைய கடவுளின் பெயரை உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொண்டதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று 68 வயதான செட் பாய் கூறுகிறார்.

பெரும்பாலான இராம்நமி சமாஜ் சமூக மக்கள் வறியநிலையில் இருக்கிறார்கள். பிற நிலவுடைமை சாதியினரின் நிலங்களில் கூலி வேலை செய்கிறார்கள்.

“நான் கடவுள் இராமனுக்காக பஜனைகள் பாடுவதில் பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கிறேன். என்னுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு பச்சைக் குத்தப்படாததில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இராம்நமி சமாஜ்ஜை எப்படி பின்பற்ற வேண்டுமென்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம்” என்று 64 வயதான சாகிப் இராம் குரே கூறுகிறார்.

85 வயதான படும் இராம் பாரதியின் கைகள் மற்றும் கால்களில் பச்சைக் குத்தப்பட்டுள்ளது. “நீங்கள் பார்த்ததிலேயே என்னுடைய மனைவிதான் மிகவும் அழகானவராக இருப்பார். என்னுடைய முகத்தில் நான் பச்சைக் குத்திக்கொண்டால் என்னை விட்டு விலகிவிடுவேன் என்று அவர் பயமுறுத்தியதாக கூறினார். அவருக்காகத் தான் என்னுடைய முகத்தில் நான் பச்சைக் குத்திக்கொள்ளவில்லை என்று கூறுகிறார்.

இராம்நமி சமாஜ்ஜை பின்பற்றுபவர்கள் உருவ வழிபாட்டை நம்புவது இல்லை. அவர்கள் இராமனின் பெயரைப் பாடி வழிபடுகிறார்கள்.

பச்சைக் குத்தப்பட்டதால் பேறுபெற்றதாக 76 வயதான நகு இராம் குர்ரே கூறுகிறார். அவருடைய நெற்றி, கைகள் மற்றும் கால்களில் பச்சைக் குத்தப்பட்டுள்ளது.

தலித் தலைவரான பரசுராம் பரத்வாஜ் மூலம் 1890 ஆம் ஆண்டுகளில் உடல்களில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறை இராம்நமி சமாஜ் சமூகத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

13 வயதான பூமிகா நிரலாவும் அவளுடைய 10 வயது தம்பியும் வீட்டிற்கு வெளியே இருக்கிறார்கள். “நான் என் உடலில் ஒருபோதும் பச்சைக் குத்திக் கொள்ளமாட்டேன். உயர்கல்வி கற்க கிராமத்தை விட்டு வெளியே செல்ல விரும்புகிறேன்” என்று பூமிகா கூறுகிறாள். “என்னுடைய சாதியை வைத்து மக்கள் என்னை அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. உடலில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் ஒரு ஆசிரியராக என் சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே விரும்புகிறேன்” என்று மேலும் கூறுகிறாள். பள்ளிக்குச் செல்லும் இவர்கள் இருவருக்கும் காலணிகள் கிடையாது.

தன்னுடைய இராம்நமி அடையாளம் குறித்து பெருமை கொள்கிறார் 70 வயதான இராம் பகத் மகிலேஞ்சு. சட்டீஸ்கர் மாநிலத்தின் வறுமைமிகு பகுதியியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 35 வது வயதில் முகம், காதுகள் உள்ளிட்டு உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொண்டார்.

பெரும்பாலும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பின்பற்றப்படும் இராம்நமி சமாஜ் என்பது ஒரு சமய மற்றும் சமூக சீர்திருத்த இயக்கமாகும்..

“என்னுடைய உடலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கடவுள் ராமனின் பெயரைப் பெருமையாக சுமந்து வருகிறேன். அவர் என்னோடு இருக்கிறார். நாங்கள் உள்ளே நுழைய கோயில்கள் தடுக்கலாம் ஆனால் எங்களுடன் கடவுள் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்று ஜம்காஹா கிராமத்தில் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருக்கும் 77 வயதான மஹேத்தர் இராம் டாண்டன் கூறுகிறார்.

– நன்றி அல்ஜசிரா
தமிழாக்கம்: சுந்தரம்

மூலக்கட்டுரை: In the name of Ram: Tattoos in India’s Dalit community

திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கருத்தரங்கம் – அனைவரும் வருக !

0

குருதியில் மலர்ந்த அனைத்துலக உழைக்கும் பெண்கள் தினம் !

மார்ச் 8 ஆம் தேதியை அனைத்துலக மகளிர் தினமாக கடைபிடித்து வருகிறோம். வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர்தினம். ஆனால், இன்றைய சமூகத்தில் பெண்ணின் நிலையென்ன ? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணுர் ரித்திகா, பெங்களூர் விமானப்பணிப்பெண், நடிகை பாவனா…

ஒவ்வொருவருடமும் மகளிர் தினம்பற்றி பேச முற்படும்போது இப்படி ஒருபட்டியல் வரிசைகட்டிநிற்கிறது. காதலன் என்ற கயவனாலேயே கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டு அவரது பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து, கருவை உறுவி எரித்துக்கொன்று நிர்வாணமாய் பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டாள் அரியலூர் நந்தினி. காணாமல் போன அன்றே புகார் கொடுத்தும் 15 நாள் பொறுத்து பிணமாக  கண்டுபிடித்து கொடுத்தது காவல்துறை ! ஆணாதிக்க வெறியுடன் சாதி ஆதிக்க வெறி, இந்து மதவெறி தலைக்கேறிய மணிகண்டன் என்ற இந்து முன்னணி பொறுக்கிகளின் வக்கிரச்செயலின் விளைவுதான் சிறுமி நந்தினி.

நந்தினிக்கு நேர்ந்த கொடுமை இப்படியென்றால் 6 வயது பெண் ஹாசினிக்கும் 3 வயது குழந்தை ரித்திகாவுக்கும் நேர்ந்த கொடுமை நெஞ்சை பதற வைக்கிறது. தாழ்த்தப்பட்ட ஏழை குழந்தைகள் மட்டுமென்றில்லை, பெங்களூரு விமானப் பணிப்பெண்ணாக இருந்தாலும், பிரபல நடிகை பாவனாவாக இருந்தாலும்கூட பெண்ணாக பிறந்த யாரும் இந்த பொறுக்கித்தனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. வாழத் தகுதியற்றதாக மாறிவிட்ட சமூக நிலையை துலக்கமாக எடுத்துக்காட்ட பெண்கள் மீதான இந்த வன்முறைகள் போதாதா ? நிர்பயா தொடங்கி நந்தினி வரை ஒவ்வொரு சம்பவத்தின்போதும் குற்றம் சாட்டப்படுவதோ கொடுமைக்குள்ளான பெண்கள்தான். வன்முறைக்கு ஆளான பெண்ணையே ஏன் 6 மணிக்குமேல் வெளியே சென்றாய் ? ஏன் ஆண்களுடன் இயல்பாய் பேசினாய் ? ஏன் சத்தம்போட்டு சிரித்தாய் ? என்று குற்றம் சாட்டுவது அவள் மீது சமூகம் தொடுக்கும் இரண்டாவது வன்முறை !

பாலியல் வன்முறை என்பது இத்துடன் அடங்கி விடுவதில்லை. பெண்பாலாய் பிறந்தாலே பிறந்தது முதல் குடும்பத்தில் தந்தை, சகோதரன், கணவன், கடைசியாய் மகனால், அண்டி வாழ நிர்பந்திக்கப்படுகிறோம். முதலாளியால், உயர் அதிகாரிகளால், சக ஆண் ஊழியர்களால், சக மாணவனால் … என பெண்கள் வன்முறைக்கு ஆளாவது தொடர்கதையாய் உள்ளது ! தனது வாழ்க்கையையும் வாழ்க்கைத் துணையையும் கூட வயதுக்கு வந்தபெண் தானே தேர்ந்தெடுக்க குடும்பமும், சமூகமும் அனுமதிப்பதில்லை. சாதி, மதம் மாறி திருமணம் செய்யும் பெண்கள் கவுரவத்தின் பெயரில் குடும்பத்தாலேயே கொலை செய்யப்படும் வக்கிரம். பெண்ணுரிமை சமூக உரிமைபற்றி பேசும்படங்களை தடைசெய்யும் அரசு ஆணாதிக்கம் சாதி ஆதிக்கம், ஆபாசம், ஆகியவற்றை சினிமா இணையங்களில் தடை செய்ய மறுக்கிறது.

அரசின் தனியார்மயம் – தாரளமயம் – உலகமயக் கொள்கைகளால் கல்வி, மருத்துவம், குடிநீர் மின்சாரம், … அனைத்தும் காசுக்கு என்றான நிலையில் பெண்களும் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டு விட்டது. அங்கு அற்பக்கூலிக்கு கொத்தடிமைகளாக உறிஞ்சப்பட்டு எச்சில் இலைபோல வீசப்படுகிறோம். படித்த பெண்களும் கடைகளில் கால்கடுக்க, நாள் முழுக்க நின்று வேலை செய்து, வீடு திரும்பினால் அங்கும் வீட்டுவேலை அடித்து துவைக்கிறது. சமூகத்தின் மனப்போக்கு மட்டுமல்ல… போலீசு, நீதித்துறை, சட்டமன்ற, நாடாளுமன்றங்கள், செய்தி ஊடகங்கள் என அனைத்தும் ஆணாதிக்க தன்மையுடனே இயங்குகின்றன. மொத்த கட்டமைப்புமே பெண்களுக்கு எதிராக நிற்கும்போது இந்த சமூக கட்டமைப்புக்குள்ளேயே பெண் விடுதலை சாத்தியமாகுமா?

மெரினா எழுட்சியில் தமிழகமெங்கும் இரவு பகலாக, ஆண்களுக்கு நிகராக பெண்களும் போராடினோம், ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் குழுமியிருந்தும் ஒரே ஒரு பாலியல் சீண்டலுக்குக்கூட பெண்கள் ஆளாகவில்லை. அழுகிப்போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிட்டு புதிய சமூகத்தை கட்டியமைக்கும் மாற்று அரசியலுக்கான எழுச்சியே பெண் விடுதலையை சாதிக்கும் என்பதற்கான துலக்கமான எடுத்துக்காட்டு இது ! உலக மகளிர் தினத்தை கடைபிடிக்கும் நிலையில் அத்தகைய மாற்றுஅரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் !

குருதியில் மலர்ந்த மகள் தினம்

அரங்குக்கூட்டம்
புரட்சிகர பாடல்கள் | கவிதை | நாடகம்

8.3.2017 அன்று மாலை 6.00 மணி
சுமங்கலி மஹால்
ஹோட்டல் அருண்,
இரயில் நிலையம் அருகில்,
திருச்சி.

மெரினாவும் … நெடுவாசலும் உணர்த்துவது ஒன்றுதான், உரிமைகள் வேண்டுமா ? போராடு !

தலைமை :
தோழர் நிர்மலா
தலைவர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.

சிறப்புரை :
தோழர் சிவானந்தம்
திருச்சி.

தோழர் கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

அனைவரும் வாரீர்

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி
9750374810

வயக்காட்ட பாத்த எவனும் சோத்துல கை வைக்க முடியாது !

0

pongal paanai psவிவசாய உழைக்கும் மக்கள், உழைப்புக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொண்டாடி மகிழும் விழா பொங்கல். ஆனால் எலிக்குக் கூட ஒரு பிடி நெல்லு இல்லாத நிலையில் புத்தரிசி பொங்கலிட எங்கே போவான் விவசாயி? விதைத்த பயிர் பருவமடைந்து தையில் அறுவடைக்கு வந்ததின் ஆனந்தத்தின் வெளிப்பாடான பொங்கல் விழா இவ்வருடம் எழவு வீட்டு விசேசமாகி விட்டது.

அதே தஞ்சையில் மன்னார்குடியின் பெயரைக் கெடுக்கும் சசிகலா நடராசனின் கும்பல் தஞ்சையில் மூன்று நாள் விழா நடத்தி கேளிக்கை நிகழ்ச்சிகள் காட்டி, அறுசுவை ஊட்டி விவசாயிகளை இழிவுபடுத்துகிறது. இந்நிலையில் தஞ்சை விவசாயிகளை சந்தித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எப்படி ஏன்று கேட்டோம்.

நடராஜன்:

“பொங்கலா” விரக்தியுடன் சிரித்தார். “என்னோட ஆயிசுக்கும் பாத்ததில்ல’’. வடிகாலுக்குக் கூட நாத்தங்கால்ல தண்ணி இல்லாத நெலமை. 6 பையி வெதை நெல்லு வாங்குனே, ஆத்துல தண்ணி வருமோ வராதோன்னு பயந்து போர்வல் தண்ணிய நம்பி 3 பையில உள்ள வெத நெல்ல மட்டும் நாத்து விட்டேன். எப்படியும் மழை பெய்யும், ஆத்துல பின்னகட்டியாவது(பின்னாடி) கொஞ்சம் தண்ணி வரும் பாத்துக்கலான்னு நம்புனேன். நம்பிக்கதான் மிச்சம் நாத்து பூத்துருச்சு. பக்கத்தூர் போர்வல்காரரு நாத்த வாங்கிக்கிறதா அட்வான்ஸ்சும் கொடுத்தாரு. நாத்து அரிச்சு சேறு அலம்பக் கூட தண்ணியில்லாம அதுவும் போச்சு. வெத நெல்ல கருதா அறுக்க மனசு வராம மாட்ட விட்டு மேச்சுட்டேன்.

மொத்தமா உழுதுட்டு மார்கழி பட்டம் பயிறு உளுந்து வெதச்சுருக்கேன். ஒரு மழை பேஞ்சா ஒரு பயிறு கருகினாலும் ஒன்னு துளுத்துக்கும். ஆண்டவன் கணக்கு எப்படியோ.? இந்தப் பொழப்பெல்லாம் நம்மோட போகட்டுமுன்னு 2 லட்சருவா 3 பைசா வட்டிக்கி வாங்கி பையன வெளிநாடு அனுப்பிச்சேன். கத்தார் போயி ரோட்டுக்கு தாரு போடுற வேலைங்கிறான். நெஞ்சு வெடிச்சுரும் போலிருக்கு.”

பானுமதி:

மன்னார்குடி மாஃபியாவின் பொங்கல்!

மூணு ஏக்கர் நெலமும் தரிசா கெடக்கு. ஊருக்கே மொதல் ஆளா நடவுநட்டு அறுப்பருப்பேன். அந்த அரிசியிலதான் பொங்கல் வப்பேன். பொங்கலுக்கு முன்ன அறுவடை செய்யாதவங்களுக்கு அறுப்பு முடிஞ்சதும் தாங்கன்னு நெல்லக் கடனா குடுப்பேன். இன்னைக்கி ஒரு பிடி நெல்லு இல்ல வீட்டுல. புதுப்பாணை, புது அரிசி, புது தவுடு எல்லாம் போயி ரேசனுல அம்மா குடுத்த புளுத்தரிசி பொங்கல்தான் இந்த வருசம். என்னத்த சொல்லன்னு சங்கடப்பட்டுதான் பொங்கப் பானைய அடுப்புல வச்சேன்.

நம்ம பாடுதான் திண்டாட்டமுன்னா 2 கறவமாடு நிக்குது. அதுக்கு வைக்கோலும் மில்ல மேச்சலுக்கு புல்லும்மில்ல. ஒரு மழத்தண்ணி பேஞ்சா கொஞ்சம் பயிர் பச்ச இருக்கும். வயக்காட்டுப் பக்கம் போயி பாத்தா விரிச்சான்னு கெடக்கு. காவிரித் தண்ணியும் வந்த பாடு இல்ல.மாட்டுக்கு பாலு கூடுமின்னு ஒரு படி அரிசி கஞ்சி வப்பேன். வெளிய சொன்னா வெக்கம் இப்ப இன்னும் ஒரு படி சேத்து வைக்கிறேன்.”

மாணிக்கம்:

“பொங்கலுக்கும் விவசாயிக்கும் எந்த சம்மந்தமும் இல்லாம போச்சுங்க. முன்னெல்லாம் மார்கழி மாசமே கொண்டாட்டம் ஆரம்பிச்சுரும். கருது அறுப்புக்கு வந்துரும். எந்த பக்கம் திரும்புனாலும் களத்துமேட்டுல முட்டு முட்டா நெல்லு குவிஞ்சு கெடக்கும். வெள்ளாம சிறுசோ பெருசோ வெளச்சல் சரியில்லனாலும் வருசம் பூரா உழைச்சவனுக்கு கையில நாளு காசிருக்குற சந்தோசம் தெரியும்.

இந்த நெலம அழிய ஆரம்பிச்சு பல வருசமாச்சு. அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமா அழிஞ்சது போயி இந்த வருசம் மொத்தமா விவசாயி பொழப்பு தரிசா போச்சு. பொங்கலப்ப தஞ்சாவூரு மார்கெட்டு போயி பாருங்க எள்ளு போட்டா எள்ளு தெரிக்கும் அப்படி ஒரு கூட்டம். வாழத்தாரு வெட்டுன கொண்டக்கட்டையில இடரி விழாதவன் இருக்கவே முடியாது. இந்த வருசம் வாழ, மஞ்ச, கரும்பு எல்லாமே பேருக்குதான் மார்கெட்டுக்கு வந்துருக்கு. அதையும் வாங்க ஆளில்லாம நாதியத்துக் கெடக்கு.

கலைராணி:

“பொங்கலா? பொங்கல் போலவா இருக்கு. ஊருல வேண்டா வெறுப்பா செய்ய வேண்டிருக்கு. இந்நேரம் ஊரே ஜெ ஜென்னு இருக்கும். டி.என்.சி(அரசு நெல் கொள்முதல் நிலையம்) நால்ரோட்டுல நாலாப் பக்கமும் நெல்லு கீயுகட்டி நிக்கும். காஞ்சது, காயாதது நாமுந்தி நீ முந்தின்னு நெல்ல வித்துட்டு பொங்கல் தடபுடலா கொண்டாடிருக்கும் மக்க.

நம்ம கையிலதான் காசு இல்ல கருது அறுத்தவங்க கிட்ட வாங்கிக்கலான்னா அதுக்கும் வழியில்ல. ஆத்துல தண்ணி வல்ல, விவசாயி வீட்டுல அரைக்காப்படி அரிசிக்கி வழியில்ல. இதைப்பத்தி ஆள்றவங்க யாருக்கும் கவலையுமில்ல. ‘யார் வீட்டு எழவோ பாய் போட்டு உறங்குன்னு’ இருந்தா நாங்க மட்டும் அழிய மாட்டோம் எங்களோட சேத்து மத்தவங்களும் அழிஞ்சுதான் ஆகனும்”

எங்களுக்கு மூனு ஏக்கர் சொந்த நெலம் இருந்துச்சு. 10 வருசத்துல படிபடியா எழந்து இன்னைக்கி ஒரு குழி நெலம் கெடையாது. உங்கத் தேவைக்குதானே வித்தீங்கன்னு நீங்க கேக்கலாம். உண்மைதான் ஆனா விவசாயி பொழப்பு இந்த நெலமையில இருந்தா விக்காம என்ன செய்ய முடியும். மூனு வருசமா சும்மாவே இருந்துட்டு இந்த வருசம் மாமா வீட்டு நெலத்து மேல சாப்தாரி போட்டு பேங்குல லோனு எடுத்து டிராக்டெர் வாங்குனோம். ஆத்துல தண்ணி வந்தாதானே ஏரு ஓட்டி சம்பாரிக்க முடியும். பேங்குக்காரன் சும்மா விடுவானா? பைனான்ஸ் எடுத்து தவணையக் கட்டுறோம். எந்த வகையில விவசாயத்துல நொழஞ்சாலும் முன்னேற முடியலையே?

கோபால்:

pongal padayal ps“பானை பொங்குச்சா காலு வீங்குச்சான்னு சொல்லுவாங்க”. விளைச்சலோட சந்தோசம்தான் பொங்கலோட வெளிப்பாடு. வெள்ளாமை இல்லாத இந்த வருச பொங்கல் சடங்குக்கான வெளிப்பாடு.

ஆத்துல தண்ணி வராம நடவு நட்டு என்ன பண்ண முடியும். 90 நாளு பயிருக்கு 60 நாளாவது தண்ணி கெடக்கனும். அரசாங்கத்து மேல நம்பிக்க வச்சு ஆண்டவன் மேல பாரத்த போட்டு நட்டுவச்சுட்டு கடங்கரான் ஆனதுதான் மிச்சம். ரெண்டு ஏக்கர் நெலமும் தரிசா போச்சு. இப்ப மீண்டும் உழுதுட்டு மானாவாரி பயிர வெதச்சு வச்சேன். பயிரப் பாத்தா நல்லாருக்கு களையெடுத்தா ரெண்டு எள்ளு, உளுந்து வெளையும் ஆனா களபுடுங்க மண்ணக் கொத்துனா இருக்க ஈரமும் காஞ்சுப்போயி பயிரெல்லாம் சருகாப் போயிடும். இந்த நெலையில பொங்கவச்சு மண்ணாப் போனேன் போங்க.

விவசாயி வீட்டு எருக்குழி, கட்டுத்தறி, வைக்கப்போரு இதப்பாத்து பொண்ணுக் கூடுன்னு சொல்லுவாங்க. அப்புடி பெருமையோட வாழ்ந்தவன் விவசாயி. இன்னைக்கி தரிசா கெடக்குற நெலத்த பாத்தா நாண்டுகிட்டு சாகலாம் போலிருக்கு. கடைமடை வரைக்கும் பாயும் காவேரி ஆத்துத்தண்ணி ஓடுன ஊருல குடிக்கத் தண்ணியில்லாமப் போவுது. பம்புச்செட்டுல குழாய் நெறையா வந்த தண்ணி இன்னைக்கி காக்குழாய்க் கூட வரல. இருக்குறத அழிச்சுட்டு அடுத்த நாட்டுக்கிட்ட சாப்பாட்டுக்கு கையேந்தப் போறோம். அதவிட அசிங்கம் வேறதுவும் இல்ல. வெள்ளக்கார அரசாங்கமாவது வாழ வழி செஞ்சு குடுத்து நம்மள அடிமையா வச்சிருந்தான். இன்னைக்கி இருக்கவனுங்க இருக்குறத புடிங்கிகிட்டு சாகுங்கடாங்குறான்.

நா எதுவும் தப்பா பேசுறதா நெனைக்க வேண்டாங்க. அம்புட்டு கோவம் வருது. எங்கயோ யாருக்கோ அப்புடின்னு இந்த பிரச்சனைய ஒதுக்க முடியாது. கவலைப்பட வேண்டியவனே விவசாயிங்க சாவு விதி வந்து முடிஞ்சதுங்கறான். ‘கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லைங்க’. வயக்காட்டுப் பக்கம் வந்து ஒரு தரம் பாத்துட்டு போவட்டும். மனசாட்சி உள்ள எவனா இருந்தாலும் சோத்துல கைய வைக்க முடியாது.

அரசு வேளாண்மைத் துறை அலுவலர்:

“பொங்கல் கொண்டாட்டம் நமக்கு சிறப்பா இருந்துச்சு. பொதுவா பாக்கும் போது மக்கள் கடமையேன்னுதான் செய்றாங்க. காரணம் விவசாயம் பொய்யாப் போனதுதான். பொன்னா விளையிற பூமி தரிசாவும், நட்டப் பயிரு தீஞ்சும் கெடக்குறத ஒரு விவசாயியா இருந்து பாக்கும் போது ரொம்ப கொடுமையா இருக்கு.

திருவாரூர் மன்னார்குடி விவசாய நிலம்தான் அதிக பாதிப்பு அதுக்கு காரணம் ONGC நிறுவனத்தால கேஸ் எடுக்கப்பட்ட துளைகள்தான். இதனால கடல் தண்ணி தாராளமா நிலப் பகுதிக்கு வந்துருச்சு. 150 அடிக்கு மேலயே உப்புத்தண்ணி இருக்கு. இதனால போர்வல் தண்ணிய பயன்படுத்த முடியாது. ஆத்துத் தண்ணிய முழுசா நம்பிதான் அந்தப் பகுதி விவசாயம். ஆத்துல வர்ர வண்டல் மண் ஈரப்பதத்த அதிகமா தக்கவச்சு பயிருக்கு பாதுகாப்பா இருக்கும். ஆத்துல அதிகமா மணல் அள்ளப்படுவதால வண்டல் மண்ணுக்கு வழியில்ல. இப்படியே தொட்டு தொட்டுப் பிரச்சனை போயிட்டே இருக்கு.

பாதிப்புக்கு உள்ளான நிலப் பகுதிய கணக்கு எடுத்து அனுப்பனும். வறட்சியால விவசாயம் பாதித்த ஊர்கள்ல நாலு பக்கம் 4 வயல தேர்ந்தெடுத்து 4-க்கு-4 என்ற கணக்குல அறுவடை செஞ்சு எத்தனைச் சதவீத அளவு விளைச்சல் என்பதை நிர்ணயித்து அது பயிர் காப்பீட்டு திட்டத்துக்குள் இருக்கான்னு கணக்கு கொடுக்கனும். பாதிச்சது ஒரு பக்கம் இருக்க கட்சித் தலையீடு குறுக்கிட்டு போர்வெல் பலத்துல விளைஞ்ச பகுதியையும் நிவாரணத்துல சேக்க சொல்லி கொடைச்சல் குடுக்குறாங்க. பொங்கல் ஒரு பக்கம் இருக்க இதுதான் அதிகமா மண்ட காயிது.”

– சரசம்மா

கோவில்பட்டி தரை டிக்கெட் கல்லூரியில் இருக்கைகள் வந்தது எப்படி ?

0

கோவில்பட்டி அரசுக் கல்லூரி மாணவர்களின் உறுதியான போராட்டம்
– துணை நிற்கும் புரட்சிகர மாணவர் இளைஞர முன்னணி RSYF

னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஒன்றுதான் கோவில்பட்டி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு அரசுக் கல்லூரி இதுதான். கோவில்பட்டி நகரப் பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏறக்குறைய 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர்.

 40 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 15 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
40 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 15 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல்லூரியின் நிலைமை அவலத்துக்குரியதாக உள்ளது. மொத்தம் ஐந்து பாடப்பிரிவுகளில் இளநிலைப் படிப்பு உள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 8 பேராசிரியர் வீதம் 40 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது  மொத்தமாக 15 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதன் விளைவாக பாடங்கள் முழுமையாக முடிக்கப்படுவதில்லை. நடத்தப்படாத பாடங்கள் Asignment என்ற பெயரில் மாணவர்களின் மீது சுமையாக திணிக்கப்படுகிறது. இந்த நிலைமை மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்களும் ‘அரியர்’ வைக்கும் நிலைமை அதிகரித்துள்ளது. இதன் மூலம் தகுந்த மதிப்பெண் எடுக்க முடியாமல் மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல், கல்லூரியில் மாணவர்கள் உட்கார இருக்கை வசதியும் குறைவாகவே உள்ளது. 300 மாணவர்கள் தரையில் உட்கார்ந்து படிக்கின்ற நிலைமை. முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தரையில் உட்கார்ந்துதான் படிக்கின்றனர். விளையாட்டு மைதானம் கிடையாது. விளையாட்டுக் கென்று உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. கலை விழாக்கள் கிடையாது. கேண்டீன் கிடையாது. இயற்பியல் செய்முறை சொல்லித் தருவதற்கும் ஆள் இல்லை. இதனால் இயற்பியல் தொடர்பான கருவிகளின் பெயர்கள் கூட மாணவர்களுக்கு தெரியாத நிலைமைதான் உள்ளது.

கல்லூரியில் வகுப்புகள் முழுமையாக நடப்பதில்லை. ஒரு நாளைக்கு 5 வகுப்புகள் (hours) நடத்தப்பட வேண்டும். ஆனால் 3 வகுப்புகள்(hours) மட்டுமே நடத்தப்படுகின்றன. அதிலும் ஒரு நாள் பேராசிரியர்கள் வேறு ஏதாவது வேலையாக சென்று விட்டால் அவர் சம்பந்தப்பட்ட துறைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இப்படி தான்தோன்றித்தனமாகவும், எந்த வித பொறுப்பும் இல்லாமல்தான் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களும், மாணவிகளும் வகுப்பில் இருந்து முழக்கத்தைக் கேட்டு போராட்டத்திற்குள் இறங்கினர்.
முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களும், மாணவிகளும் வகுப்பில் இருந்து முழக்கத்தைக் கேட்டு போராட்டத்திற்குள் இறங்கினர்.

இதற்காக ஆறு மாதத்திற்கு முன்பே கல்லூரி நிர்வாகத்திடம் மனு அளித்தனர், மாணவர்கள். அதன் பிறகு உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ வை பேராசிரியர்கள் சந்தித்துப் பேசியபோதும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.  அவரும் அலட்சியப் போக்குடனே செயல்படுகிறார். அதிகாரிகளும் என்ன ஏதென்று கண்டு கொள்ளவில்லை.

பிப்ரவரி இறுதியில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளிவந்தது. அதில் பெரும்பாலான மாணவர்களுக்கு அரியர் விழுந்தது.

பேராசியர்கள் சம்பள உயர்வுக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், வெளியில் இருந்து தனியார் ஆட்கள் செமஸ்டர் பேப்பர் திருத்தியுள்ளனர்.  இதனாலும் அரியர் அதிகமாக விழுந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இது மாணவர்களிடையே கோபத்தை உருவாக்கியது. கோபம் போராட்டமாக மாறியது. பிப்.23 2017 வியாழக்கிழமை காலை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மாரிமுத்து தலைமையில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

வெல்லட்டும்! வெல்லட்டும்!
மாணவர் போராட்டம் வெல்லட்டும்!
ஓங்கட்டும்! ஓங்கட்டும்!
மாணவர் ஒற்றுமை ஓங்கட்டும்!

அஞ்சு ரூபா ஒடச்ச கடல!
காலேஜில பெஞ்சு இல்ல!
பத்து ரூபா ஒடச்ச கடல!
பேராசிரியர் பத்த வில்ல!

மனு கொடுத்தோம்! மனு கொடுத்தோம்!
ஆறு மாசம் முன்னாடியே
மனு கொடுத்தோம்! மனு கொடுத்தோம்!

இப்போராட்டத்தை ஆதரித்து RSYF சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.
இப்போராட்டத்தை ஆதரித்து RSYF சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அதிகாரியும் வரவில்ல!
அரசியல்வாதியும் வரவில்ல!
ரெண்டு பேரும் சேந்துகிட்டு
அடிக்கிறாங்க கொள்ள கொள்ள!

அவங்க வீட்டுப் பிள்ளைங்கெல்லாம்
தனியாருல படிக்குமாம்!
சொகுசாக படிக்குமாம்!
நாங்க என்ன இளிச்சவாயார்களா?

கல்வி கொடுக்க வக்கில்ல!
வேலை கொடுக்க துப்பில்ல!
டாஸ்மாக்குல சாராயத்த
ஊத்தி மட்டும் கொடுக்கிறான்!
தூ… மானங்கெட்ட கவர்மெண்டு!

பேராசிரியர் பணியிடத்துக்கு
லட்சக் கணக்கில் லஞ்சம்! லஞ்சம்!
மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை
ஏத்துறான்! ஏத்துறான்!

கொள்ளையடிக்காதே! கொள்ளையடிக்காதே!
MSU வே கொள்ளையடிக்காதே!

காணோம்! காணோம்!
MLA வ காணோம்!
காணோம்! காணோம்!
அதிகாரிய காணோம்!

வரச்சொல்! வரச்சொல்!
MLA வை வரச்சொல்!
அதிகாரிய வரச்சொல்!

ஓட்டுக் கேட்க வருவல்ல!
வேட்டு வெப்போம் வேட்டியில!

கல்வி என்பது அடிப்படை உரிமை!
நீங்க போடும் பிச்சையல்ல!
பயனில்ல! பயனில்ல!
அரசியல்வாதியும் அதிகாரியும்
நம்புவதால பயனில்ல!

ஒன்றிணைப்போம்! ஒன்றிணைப்போம்!
அனைத்துக் கல்லூரி மாணவர்களையும்
ஒன்றிணைப்போம்! ஒன்றிணைப்போம்!

கையிலெடுப்போம்! கையிலெடுப்போம்!
அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!

உருவாக்குவோம்! உருவாக்குவோம்!
மெரினாவை உருவாக்குவோம்!

மண்ணை இழந்தால் மரமது இல்லை!
தன்மானத்தை இழந்தவன் மனிதனே இல்லை!

இம் முழக்கங்கள் மாணவர்களின் முழக்கங்களாக மாறின. உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர். முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களும், மாணவிகளும் வகுப்பில் இருந்து முழக்கத்தைக் கேட்டு போராட்டத்திற்குள் இறங்கினர்.

கிரிமினல்களோடும், சமூக விரோதிகளோடும் இரண்டறக் கலந்து நிற்கும் போலீசுக்கு உரிமைக்காக உறுதியுடன் போராடுபவர்களை எப்படிப் பிடிக்கும்?
கிரிமினல்களோடும், சமூக விரோதிகளோடும் இரண்டறக் கலந்து நிற்கும் போலீசுக்கு உரிமைக்காக உறுதியுடன் போராடுபவர்களை எப்படிப் பிடிக்கும்?

போலீசு உடனே கல்லூரிக்கு வந்துவிட்டது. பயந்து கொண்டு சிறிது நேரத்தில் மாணவர்கள் கலைந்து விடுவார்கள் என்று நினைத்தது போலீசு.  எப்படியாவது மாணவர்களை மிரட்டி கலைத்து விடலாம் என்று முயற்சி செய்து பார்த்தனர். பேராசிரியர்களிடம் சென்று பேசிப் பார்த்தனர். நமது தோழரைப் பற்றி, அமைப்பைப் பற்றி அவதூறு செய்து பார்த்தனர். எதுவும் வேலையாகவில்லை. கிரிமினல்களோடும், சமூக விரோதிகளோடும் இரண்டறக் கலந்து நிற்கும் போலீசுக்கு உரிமைக்காக உறுதியுடன் போராடுபவர்களை எப்படிப் பிடிக்கும்?

பேராசிரியர்களை கூட்டி கல்லூரிக்குள்ளேயே போலீசு கூட்டம் போட்டு பேசியது. கல்லூரி முதல்வரின் அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கியது. பேராசிரியர்களுக்கு போலீசு உத்தரவிட்டுக் கொண்டிருந்தது. இதெல்லாம் எந்த சட்டத்தில் உள்ளது? உள்ளே வைத்து க்யூ பிரிவு போலிசு ஹரி என்பவர் எல்லோரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். உடனே மாணவர்கள் அனைவரும் போட்டோ எடுக்காதே என்று ஒரே குரலில் கூறியதால் போட்டோ எடுப்பதை நிறுத்திவிட்டார்.

கல்லூரிக்கு  அன்றே விடுமுறை அளித்து எல்லோரையும் அனுப்பியது நிர்வாகம். வகுப்புகளில் இருந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு விட்டது நிர்வாகம். ஆனாலும் போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை.

போராடிய மாணவர்களின் உறுதியை குலைக்க முடியவில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் போராட்டத்தை நகர்த்தவும் மாணவர்கள் தயாராகவே இருந்தனர். மாணவர்களின் ஒற்றுமையைக் கண்டு பதறியது நிர்வாகம். அன்றே கல்லூரியின் துணை முதல்வர்  தூத்துக்குடி மாவட்ட கலெக்டரைச் சென்று சந்தித்து பேசினார். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார் என்பதை மாணவர்கள் மத்தியில் வந்து கூறினார்.

இரண்டு நாட்களில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டத்தைத் தொடர்வோம் என்ற எச்சரிக்கையோடு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இப்போராட்டத்தை ஆதரித்து புரட்சடிகர மாணவர் இளைஞர் முன்னணி – RSYF சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.

பிப்ரவரி 28 இரவு மூன்று லாரிகளில் இருக்கைகள் கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டன. மாணவர்களின் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி!

ஒரு கோரிக்கை நிறைவேறிவிட்டது. பேராசிரியர்களை நிரப்ப வேண்டும் என்ற மற்றொரு முக்கியமான கோரிக்கைக்கு என்ன தீர்வு?

தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய 93 அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. அடிப்படை வசதிகள் கிடையாது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக நீடிக்கிறது. இதைப் பற்றி அக்கறைப்பட வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகமோ சொரணையற்றும், ஊழல் மலிந்தும் கிடக்கிறது. துணைவேந்தர்களோ மன்னார்குடி மாஃபியாவின் காலில் சென்று விழுகின்றனர். ஒட்டுமொத்த கல்வித்துறையே சீர்குலைந்து, நிர்வாணமாக நிற்கிறது. கல்வியோ தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கான களமாக மாறிவிட்டது. எந்த இடத்திலும் உரிமைகளுக்காக போராடுவதற்கு மாணவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். மாணவர்களோடு நின்று உரிமைக்காக குரல் கொடுக்க நினைக்கும் பேராசிரியர்களும் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

மீண்டும் மெரினாவை உருவாக்குவதைத் தவிர வேறு என்ன தீர்வு இருக்க முடியும்?

பத்திரிகை செய்திகள் :

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
கோவில்ப்பட்டி

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றவாளி ஜெயா பெயர் அகற்றும் போராட்டம்

0
குற்றவாளி ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டில் கருப்பு மை பூசினர்
குற்றவாளி ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டில் கருப்பு மை பூசினர்

குற்றவாளி ஜெயலலிதாவின் சமாதியை மெரினாவிலிருந்து அகற்ற வேண்டும், அவரது பெயரை பாட நூல்கள் மற்றும் இதர அரசு அறிவிப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என்று “மக்கள் அதிகாரம்” அமைப்பு தமிழகமெங்கும் போராடிக் கொண்டிருக்கிறது. பல ஊர்களில் பாட நூல்களில் ஜெயா படத்தை மறைத்து திருவள்ளுவர் படம் ஒட்டும் போராட்டம் மாணவர்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. சில ஊர்களில் அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயா பெயர் கருப்பு மையால் மறைக்கப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 2, 2017) வியாழக்கிழமை அன்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நூறடி சாலையில் இருக்கும் புறநகர் பேருந்து நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 300-க்கும் அதிகமானோர் திரண்டு மறியலை ஆரம்பித்தனர். புறநகர் நிலையத்திற்கு இரு வாயில் இருக்கிறது. ஒரு வாயிலில் மறியல் தொடங்கியதும் சில தோழர்கள் மற்றொரு வாயிலில் இருக்கும் குற்றவாளி ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டில் கருப்பு மை பூசினர்.

ஆர்ப்பட்டத்தால் கோயம்பேடு ஸ்தம்பித்தது. உடன் பெரும்படையுடன் வந்த போலீசு அனைவரையும் கைது செய்து அருகாமை மண்டபம் ஒன்றில் வைத்திருக்கிறது. குற்றவாளி ஜெயாவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக மக்களிடத்தில் இந்தப் போராட்டம் போர்க்குணமிக்க முறையில் கொண்டு சென்றிருக்கிறது. தொலைக்காட்சிகள் பல இந்தப் போராட்டத்தை நேரலையில் காண்பித்தன. மக்கள் அதிகாரம் சார்பில் ஊடகங்களுக்கு நேர்காணலும் வழங்கப்பட்டது.

 

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை

எதிர்த்து நில் ! புதிய கலாச்சாரம் மார்ச் 2017

0

யிரக்கணக்கான பிரச்சினைகளால் வதைபடும் உலகமிது. சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் பறிகொடுத்து, ஆயுள்தண்டனைக் கைதி போல நைந்து மடியும் வாழ்க்கை. சகிக்கவே முடியாத நிலையில் தற்கொலை.

இது மட்டும்தான் எதார்த்தமா? இல்லை.

மெரினாவில் மின்மினிப் பூச்சிகளாய் எழுந்த ஒளிமழையுடன் அலை அலையாய் எழுந்த முழக்கங்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் ருமேனியாவின் புச்சாரெஸ்ட்டிலும் எதிரொலிக்கின்றன. ஆளும் வர்க்கங்களை அச்சுறுத்துகின்றன.

கொலைகார ராணா பிளாசா முதலாளிக்கு எதிராக அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடுகிறார்கள் வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளிகள். பெங்களூரிலோ ஆயத்த ஆடைத் தொழிலாளிகளின் போராட்டத்தால் தொழிலகங்கள் நொறுங்கின, போலீசு நிலையம் எரிந்தது, மோடி அரசு பணிந்தது.

மோடியின் குஜராத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செத்த மாடுகளை வீசி, உன்னுடைய கோமாதாவை நீயே புதைத்துக்கொள் என்றனர் தலித் மக்கள். இது உனாவில் வெறியாட்டம் போட்ட பார்ப்பனியம் வாங்கிய பதிலடி.

மல்லையாவிடம் அபராதம் வசூல் செய்யத் துப்பில்லாத அரசுக்கு என்னி டம் அபராதம் வசூலிக்க என்ன அருகதை இருக்கிறது என்று ரயில்வே நிர்வாகத்திடம் கலகம் செய்து சிறை சென்றார் பிரேமலதா பன்சாலி எனும் மும்பைப் பெண். மக்கள் வறுமையில் வாடுகையில், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்காக பல கோடிகளை வாரியிரைத்த அரசுக்கு எதிராக 2014-ஆம் ஆண்டில் பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்கள் எழுந்தன.

2011-இல் நடந்த இலண்டன் கலகம் இன்றளவும் உலக முதலாளி வர்க்கம் மறக்க விரும்பும் கெட்ட கனவு. ஐந்து ஆண்டுகளில் 7,000-ம் பேர் தற்கொலை செய்து கொண்ட கிரீசில், எங்களுடன் இணைந்து போராடுங்கள் என்று அழைக்கிறார் ஒரு தொழிலாளி. பட்டினி கிடப்போரே பணக்காரனைத் தின்று பசியாறுங்கள், என்ற முழக்கம் வால்ஸ்ட்ரீட்டில் மட்டு மல்ல உலகமெங்கும் எதிரொலிக்கிறது.

சுரண்டலையும் ஆதிக்கத்தையும் சகித்துக் கொள்வது ஒரு நோய். சகித்துக் கொள்வதன் விளைவும் நோய்தான். எதிர்த்து நிற்பதுதான் ஆரோக்கியம். மகிழ்ச்சி என்றால் என்ன என்ற கேள்விக்கு போராட்டம் என்ற ஒரே சொல்லில் பதிலளித்தார் கார்ல் மார்க்ஸ்.

ஆம். உலகெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம்?

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • மகழ்ச்சி என்பது போராட்டமே: மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை !
  • வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
  • கிரீஸ் : பிச்சை எடுப்பதை விட போராடுவதையே விரும்புவேன் !
  • இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும் !
  • பிரேசில் கால்பந்து அணியை தோற்கடிக்கும் பிரேசில் மக்கள் !
  • பா.ஜ.க அரசைப் பணிய வைத்த இராஜஸ்தான் பள்ளி மாணவிகள் !
  • அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள் !
  • குஜராத் : நாறுகிறது உன் கோமாதா !
  • துனிசியா: சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி !
  • இது மக்களின் போர் ! போலீசு சித்திரவதையில் தோழர்கள் !
  • நெடுவாசல் விவசாயிகளின் போராட்டம் வெல்லும் !
  • முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை !
  • வால் ஸ்ட்ரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி !
  • வண்ணப் புரட்சிகள்: “மேட் இன் அமெரிக்கா !”

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

ஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் !

0

தூத்துக்குடியில் மக்களின் எதிரியான காவல்துறைக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து விழா எடுத்த மார்க்சிஸ்ட்  ‘புரட்சி’யாளர்கள் !

இந்த வெற்றிவிழா யாருக்கு?
இந்த வெற்றிவிழா யாருக்கு?

ல்லிக்கட்டு வெற்றிவிழா குழு என்ற பெயரில், 2017 பிப்.25ம் தேதி, தூத்துக்குடி SAV மைதானத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. சிபிஐ மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யும் அவர்களின் வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து இந்த வெற்றிவிழாவை நடத்தின.

பிரம்மாண்டமான மேடை, மைதானத்தில் பெரிய பரப்பளவில் உட்காருவதற்கான ஏற்பாடு, பேனர், சுவரொட்டி, அழைப்பிதழ், பொழுது போக்குவதற்கான ஏற்பாடுகள் என இந்த வெற்றிவிழாவுக்கான செலவுகள் எப்படியும் சில லட்சங்களைத் தாண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

சரி, இந்த வெற்றிவிழா யாருக்கு? அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததை கூறுகிறோம். போராடிய மாணவர்கள், பொதுமக்களுக்கு என்று தொடங்கும் வாக்கியம் அதன்பின் மாணவர்களுக்கு நல்லமுறையில் பாதுகாப்பளித்த  தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் நன்றி என்று முடிகிறது. விழா சுவரொட்டிகள் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழுவின் பெயரில் கடைத்தெருக்களில் வசூலும் நடந்தது.

நாம் மக்களின் எதிரியான அரசுக்கும், அதன் நகங்களான போலீசுக்கும் நன்றி தெரிவிக்கும் SFI – யின் மானங்கெட்ட செயலை கண்டித்து பிரசுரம் போட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக அம்பலப்படுத்தினோம்.

SFI – யின் மானங்கெட்ட செயலை கண்டித்து பிரசுரம் போட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக அம்பலப்படுத்தினோம்
SFI – யின் மானங்கெட்ட செயலை கண்டித்து பிரசுரம் போட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக அம்பலப்படுத்தினோம்

அரசே இயக்கும், போலீசே வழிநடத்தும் விழாவுக்கு பள்ளி மாணவர்கள் சிலரை வரவழைத்திருந்தனர். சிறுவர்களை மேடையேற்றி சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடவிட்டனர். பகல் முழுவதும் இப்படி  பாட்டு, விளையாட்டு என்று ஒப்பேற்றினர்.

மாலை 7.00 மணியளவில் மேடையில் SFI யின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் தலைமை உரையாற்றினார். “நாங்க கோவில்பட்டியில் காவல்துறையினருக்கு லட்டு தந்தோம். அதிகாரிகளிலிருந்து ஊர்க்காவல் படையினர் வரை 200க்கு மேற்பட்டோருக்கு லட்டு தந்தபோது அடைந்த சந்தோசத்தை என்ன வென்பது! ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களுக்கு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி” என்று இருகரம் விரித்து மனமுருகி  சிலாகித்தார்.

இப்படி அவர் பேசி முடித்து  அடுத்ததாக வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பிரதிநிதி மைக்கை பிடித்தார்.  அவர் பேச தொடங்கியவுடன் இளைஞர்கள் கூட்டம் ஒன்று மேடையை முற்றுகையிட்டது.  “ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? வெற்றிவிழா நடத்த உங்களுக்கு என்ன உரிமை? போராடியது நாங்கள்! வசூல் வேட்டையில் நீங்களா?” என்று உலுக்கி எடுத்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் மைக்கை வைத்துக்கொண்டு பேச்சாளர் தவிக்க, காவல்துறை ஓடோடி வந்தது.

வாங்க ஒரமா போய் பேசிக்கலாம் என்று ஆய்வாளர் இழுத்துச் சென்றார். அங்கு கூடிய இளைஞர்களிடமிருந்து பேசுபவர்களை மட்டும் தனிமைப்படுத்த காவலர்களுக்கு உத்தரவிட்டார்.  எனினும் இளைஞர்கள் மீண்டும் மீண்டும் சூழ்ந்து வந்து கேள்விகளால் ஆய்வாளரை திணறடித்தனர். “ஒரு நிமிசம் மட்டும் மைக்கை வாங்கி குடுங்க! இங்கு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் இப்ப விழா நடத்துற SFI க்கும் எந்த தொடர்பும் கிடையாதுங்கறத மட்டும் அறிவித்துவிட்டு வெளியேறி விடுகிறோம்” என்றனர்.

பேச அனுமதி மறுத்த காவல்துறை, விழாவை முடித்துக்கொள்ள வலியுறுத்தியது.  உடனே போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசளிப்பு தொடங்கியது. வணிகர் சங்கத்தை சேர்ந்த வெள்ளையன் உள்ளிட்டோர் பேசாமலே விழா முடிந்தது.

இந்த விழாவிற்கு என்ன தேவை வந்தது?

தமிழக காவல்துறையின் அராஜகம்  நாடு முழுவதும் அம்பலப்பட்டு நாறியுள்ளது. காக்கிகள் யாருக்கானவர்கள் என்று சென்னை மேடவாக்கத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான  DYFI தோழர்கள் பட்ட காயம்கூட ஆறவில்லை; அதற்க்குள் அடித்தவனுக்கு பாராட்டு விழா!

கால்தான் எட்டி உதைத்தது ! நாங்கள் கைக்குதான் முத்தம் தருகிறோம் !! என்பதாக நடந்துகொள்கிறது SFI.  ஒருவேளை இவர்கள் தமிழக காவல்துறைக்கு விழா எடுக்க வில்லை ! தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்குதான் நன்றி  கூறுவதாக விளக்கம் அளிக்கலாம்.

சரி தூத்துக்குடி காவல்துறையின் யோக்கியதை என்ன?

ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் நடத்தும் சிவாலய ஓட்டம் என்ற நிகழ்ச்சிக்கு வரவேற்று, வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி போடும் DYFI
ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கு போட்டியாக  சிவாலய ஓட்டம் நிகழ்ச்சிக்கு வரவேற்று சுவரொட்டி போடும் DYFI

அன்று நடைபயணம் புறப்பட்ட DYFI யினரை இதே போலீசார்தான் தெற்கு காவல்நிலையம் முன்பு அடித்து துவைத்தது.  ஜனவரியில் தேவாலயத்திற்க்கு அசன விருந்து சாப்பிட வந்த இளைஞனை எதிர்த்து கேள்வி கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இரவு முழுவதும் லாக்கப்பில் வைத்து அடித்தே கொன்றதும் இதே போலீசுதான். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் இந்த கொட்டடி படுகொலையை கண்டித்து, காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பிரச்சாரம் செய்தது. ஆனால் மார்க்சிஸ்டு கட்சியோ பாதிக்கப்பட்டவரிடம் “அரசு வேலை வாங்கித் தருகிறோம்;  இழப்பீடு வாங்கித் தருகிறோம்” என்று பேசி உடலை வாங்க வைத்து, காவல்துறைக்கு “உடுக்கை இழந்தவன் கையாக” நின்றது !

மாவட்ட செயலர் சுரேஷ் பாண்டியிடம் லட்டு வாங்கிய காவலர்களுக்கு தனிப்பட்ட முறையில் பழக்கம் உண்டு ! இவரை நள்ளிரவில் இழுத்துச்சென்று அடித்து துவைத்து அச்சில் ஏற்றமுடியாத வக்கிர தாக்குதல்களை நடத்தியதும் இதே காவல்துறைதான் ! இவர்களை கண்டிக்க, எதிர்க்க துப்பில்லாவிட்டாலும் பரவாயில்லை; இப்படியா  மானங்கெட்டு சரணடைவது !

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசின் அராஜகம் வெளிவந்து தமிழகமே கொதித்திருந்த சூழலில் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? மக்கள் அதிகாரம் சார்பாக “போலீசு ராஜ்ஜியம்; எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்” என்ற பிரசுரத்தை வ.உ.சி. கல்லூரி வாயிலில் தந்தபோது SFI-யினர் பணமதிப்பு நீக்கத்தை கண்டித்து மனித சங்கிலிக்கு வரும்படி பிரசுரம் தந்தனர். பணமதிப்பு நீக்கம் குறித்து போராடுவது சரியென்றாலும் இப்போது தமிழகமே கொந்தளிக்கற பிரச்சினையை விட்டுட்டு இது  தேவையா? என்று கேட்டோம். “நாங்க ஜனநாயக அமைப்பு தோழர். உங்கள மாதிரி தீவிரமா சொல்ல முடியாது ! இந்த முறைக்குள்ள இப்படித்தான் இருக்கணும்” என்று இதே சுரேஷ் பாண்டி மழுப்பினார். அதாவது நாம் தீவிரவாத அமைப்பு போலவும் இவர்கள் ஜனநாகயமாக செயல்படுவதாகவும் கூட இதை புரிந்து கொள்ளலாம். ஜனநாயக ரீதியாக போராடிய மாணவர்களை தாக்கிய போலீசைக் கண்டிப்பது தீவிரவாதம்; தாக்கிய போலீசை பாராட்டுவது ஜனநாயகம் என்றால் இந்த புதிய புரட்சி தத்துவ விளக்கத்தை யாரிடம் சொல்லி அழ?

போலீசுடன் மட்டுமல்ல பா.ஜ.க-வுடனும் ஒத்துப்போகிறார்கள். குமரி மாவட்டத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவில்களுக்கு இரவில் ஓடி வழிபடும் வழக்கம் உண்டு. இந்த சிவாலய ஓட்டத்தை இந்துமதவெறியர்கள் பயன்படுத்தி சுவரொட்டி ஒட்டுவர். தற்போது இவர்களுக்கு போட்டியாக சி.பி.எம் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் வரவேற்பு சுவரொட்டியை ஒட்டுகின்றனர். .   “யாராக இருந்தாலும் நம் விவேகானந்தரை, இந்துத்துவாவை ஏற்றே தீரவேண்டும். இதோ CPM காரர்கள் அப்படி நமக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்” என்று  நாகர்கோவிலில் எள்ளி நகையாடியுள்ளது  பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான ABVP.

இதற்க்கு மேலும் இவர்களிடம் இருக்கலாமா செங்கொடி !

தகவல், படங்கள்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

துத்துக்குடி

சீர்காழியில் இருப்பது அரசு போலீசா குற்றவாளி ஜெயாவின் போலீசா ?

0

ல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது சீர்காழி போலீசு. அடுத்ததாக ஜெயா சமாதியை அகற்றக் கோரி சுவரொட்டி ஒட்டியதற்காகவும் மக்கள் அதிகாரம் அமைப்பின் இரண்டு தோழர்கள் மீது வழக்கு போட்டது. தற்போது இந்த வழக்கை கண்டித்தும் காவல் துறையின் ஜனநாயக மீறலையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தக் கோரினால் அதற்கு அனுமதி மறுத்திருக்கிறது சீர்காழி போலிசு. இந்த சுவரொட்டி ஒட்டினாலும், ஒட்டியவர்களை கைது செய்ததைக் கண்டித்தாலும் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாம்! என்ன பிரச்சினை? சொத்து திருட்டு வழக்கில் ஏ 1 ஆன ஜெயலலிதாவைப் பேசினால் அல்லது அவரது சமாதியை அகற்றுவதுதான் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று பொருள். மாறாக அந்த குற்றவாளியின் பெயரை அரசு அலுவலங்களில் எடு என்று சொன்னால் அதுதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தோற்றுவிக்கும் என்றால் சீர்காழி போலீசு யாருக்கு வேலை செய்கிறது? அரசியல் சட்டத்திற்கா இல்லை திருட்டு அதிமுகவிற்கா? குற்றவாளி ஜெயாவை எதிர்ப்பது அரசை எதிர்ப்பதாம்!

சீர்காழி காவல்துறையின் ஜனநாயக மீறலை கண்டித்து 02/03/2017 நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு அனுமதி மறுத்த காவல்துறையின் ஆணவ ஆவணம்:

ந.க.எண் – 37/D1  PS/2017
நாள்: 28.02.2017

சீர்காழி காவல் நிலையம்
நாகப்பட்டினம் மாவட்டம்

குறிப்பாணை

மக்கள் அதிகாரம் சார்பில் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க அனுமதி கேட்டு, அனுமதி காவல்துறையில் மறுக்கப்படுவதை கண்டித்தும், சுவரொட்டி, ஒட்டினால் வழக்கு போடுவதை கண்டித்தும் வருகின்ற 02.03.2017 ந் தேதி சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் மாலை 4.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி கேட்டு 25.02.2017 ந்தேதி மனு கொடுத்துள்ளீர். மேற்கண்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாலும் சீர்காழி காவல் சரகத்தில் 30(2) Police Act நடைமுறையில் உள்ளதாலும் தங்களுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என்பதனை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இக்குறிப்பாணையை பெற்று கொண்டமைக்கு ஏற்பளிப்பு அளிக்கவும்.

பெறுநர் : T.ரவி
மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர்,
அரசாலமங்கலம்,
பச்சபெருமாள் நல்லூர்.

நகல்:

கனம் துணைகாவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
சீர்காழி உட்கோட்டம், சீர்காழி.

தகவல்
மக்கள் அதிகாரம், சீர்காழி

தொடர்புக்கு 9843480587

பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

6

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 2

தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க மட்டும் தான் உபயோகப்படுத்தப் படுகிறதா?

ஆண்களுக்கும் ஹார்மோன்கள் சுரப்பதை தடுப்பதிலும், உயிரணுக்களை அழிப்பதிலும் இத்தடுப்பூசி உபயோகிக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் ஆண்களையும் பெண்களையும் இத்தடுப்பூசிகள் மலடாக்குகின்றன.

ருத்துவ உலகம், குறிப்பாக அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசிகள் பற்றிக் கூறும் போது உடனே அலெக்சாண்டர் பிளெமிங்கையும் அவரின் பென்சிலின் தடுப்பூசியையும் நன்றியோடு நினைவூட்டுவார்கள்.  ஆம்!  அலெக்சாண்டர் பிளெமிங்கின் பென்ஸிலின் தடுப்பூசி மானுட குலத்திற்கு ஒரு கொடை தான் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.  ஆனால் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றால் உருவாகும் நோய்களுக்கு மட்டுமன்றி கடந்த இருபது ஆண்டுகளாக இம்யூனோகாண்டிராசெப்டிவ் எனப்படும் கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகளும் உபயோகத்தில் உள்ளன. அலோபதி மருத்துவத்தில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கான சிறந்த வழியாக தடுப்பூசி முறை முன்னிறுத்தப்படுகிறது.

இந்தியாவில் டாண்டன் என்ற ஆராய்ச்சியாளர் பல பத்தாண்டுகளாக இத்தடுப்பூசிகளை உருவாக்கும் திட்டத்தில் வேலை செய்கிறார். மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இத்திட்டத்திற்கு பல கோடிகளை இதுவரை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் 2014 வரை உரிமம் பெற்ற கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகள் எதுவுமில்லை.

கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படும்? இத்தடுப்பூசி நரம்பு வழியாக இரத்தத்தில் வழங்கப்படும்.  இத்தடுப்பூசியினால் உடலில் உருவாகும் எதிர்ப்பணுக்கள் இரண்டு வகையாக வேலை செய்கின்றன.  பெண்களில் கருவுறுதலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதை இத்தடுப்பூசி உருவாக்கும் எதிர்ப்பணுக்கள் தடுத்து விடுவதால், கருவுறுதல் நடைபெறுவதில்லை.  இரண்டாவதாக உயிரணுக்களை உடலே நோய்க்கிருமியாக நினைத்து எதிர்ப்பணுக்களைக் கொண்டு அழித்து விடும். இதன் மூலம் கருவுறுதல் தடுக்கப்படும். ஆண்களுக்கும் ஹார்மோன்கள் சுரப்பதை தடுப்பதிலும், உயிரணுக்களை அழிப்பதிலும் இத்தடுப்பூசி உபயோகிக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் ஆண்களையும் பெண்களையும் இத்தடுப்பூசிகள் மலடாக்குகின்றன.  செல் வழியாக உருவாக்கப்படும் கருத்தடைகள் மற்ற எல்லா முறைகளையும் விட வெற்றிகரமானதென மக்கட்த்தொகைக் கட்டுப்பாட்டின் பிரச்சாரகர்கள் கொண்டாடுகிறார்கள். தற்போது டி என் ஏ தடுப்பூசி எனப்படும் நோய்க்கிருமிகளின் ஜீனோமை எடிட் (genome edited) செய்யப்பட்ட சொட்டுமருந்துகள் மூக்கு/வாய் மூலம் வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி வடிவங்களும் ஆராய்ச்சி நிலையில் உள்ளன.

மீப்பெரு கருத்தரிப்புத் தடுப்பூசியும் நிறவெறிப் படுகொலையும்

உலக மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கை (depopulating the world) என்ற பெயரில் மூன்றாம் உலக ஏழை நாடுகளின் குழந்தைகளை பெண்ணின் கருப்பையில் உருவாகும் போதே அழிக்கும் கொடூரமான திட்டமிது.
உலக சுகாதார நிறுவனம், கென்ய அரசுடன் இணைந்து பல இலட்சம் பெண்குழந்தைகள் மற்றும் பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கிய இரண்டாம் கட்ட டெட்டனஸ் தடுப்பூசிகள் அனைத்தும் பீட்டா human chorionic gonadotropin எனப்படும் ஹார்மோன் கலந்திருந்ததாக கென்ய நாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் குற்றம் சாட்டினர். 

மார்ச் – அக்டோபர் 2014 காலகட்டத்தில் கென்ய நாட்டில் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம், கென்ய அரசுடன் இணைந்து பல இலட்சம் பெண்குழந்தைகள் மற்றும் பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கிய இரண்டாம் கட்ட டெட்டனஸ் தடுப்பூசிகள் அனைத்தும் பீட்டா human chorionic gonadotropin எனப்படும் ஹார்மோன் கலந்திருந்ததாக கென்ய நாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் குற்றம் சாட்டினர்.  கருத்தரிப்பு சிகிச்சையில் hCG ஹார்மோன் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அது நரம்பு வழியாக தடுப்பூசி வடிவில் கொடுக்கப்படும் போது அது கருத்தடையை உருவாக்குகிறது. கென்யாவில் hCG கலந்த டெட்டனஸ் தடுப்பூசி வழக்கத்துக்கு மாறாக இரண்டாண்டுகளில் 5 முறை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஆப்பிரிக்க நாடுகளிலும் இதற்கு முன்னர் இதுபோன்ற பாரிய அளவிலான கருத்தரிப்புத் தடுப்பூசிகள் போடப்பட்டதை கேள்விப்பட்ட பாதிரிகள் கென்ய சுகாதார அமைச்சகத்திடம் முறையிட்டு தேவையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியும் அரசு பாராமுகமாக இருந்துள்ளது.  இதைத்தொடர்ந்து பாதிரியார்களே உள்நாட்டு மருத்துவர்களின் உதவியுடன் இத்தடுப்பூசிகளின் மாதிரிகளை பன்னாட்டு சோதனை சாலைகளுக்கு அனுப்பி சோதித்துப் பார்த்ததில் அனைத்து vial களிலும் hCG எனப்படும் கருத்தரிப்பு தடுப்பு ஹார்மோன் இருந்துள்ளதை உறுதி செய்தனர். கென்னிய அரசாங்கமும் அதன் சுகாதாரத்துறையும் இக்குற்றச்சாட்டுகளை விசாரிக்க மறுத்தன. ஏனென்றால்  யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தைப் போன்றே கென்ய அரசும் கூட்டுக் குற்றவாளியாக இருந்து கருத்தரிக்கும் வயது வந்த பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசியைப் போட்டுள்ளது. இம் மீப்பெரு கருத்தடையை ஒரு ’நிறவெறிப் படுகொலை’ என்றே குற்றம்சாட்டுகின்றனர்.

ஏனென்றால் உலக மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கை (depopulating the world) என்ற பெயரில்  மூன்றாம் உலக ஏழை நாடுகளின் குழந்தைகளை பெண்ணின் கருப்பையில் உருவாகும் போதே அழிக்கும் கொடூரமான திட்டமிது.  இதற்கான நிதி போதிய அளவு கென்னிய அரசிடம் இல்லாத நிலையில், இத்தடுப்பூசிகளுக்கான உதவியை GAVI vaccine alliance (கவி) என்னும் அமைப்பு வழங்கியுள்ளது.  இது போன்ற பாரிய அளவிலான போலியோ சொட்டுமருந்தை கடந்த காலத்தில் பிலிப்பன்ஸில் 5 இலட்சம் குழந்தைகளுக்கும், சிரியாவில் 17 இலட்சம் குழந்தைகளுக்கும் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம் மூலம் கவி  வழங்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. 

யார் இந்த கவி?

பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்
பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்

2000-ஆம் ஆண்டில் பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய 750 மில்லியன் டாலர் நிதியில் உருவாக்கப்பட்ட அரசு-தனியார் கூட்டான இவ்வமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், ஆராய்ச்சி மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்கள், குடிமை சமுதாயங்கள், பில் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆகியவை.

இதன் மையக் குறிக்கோள் மூன்றாம் உலக நாடுகளின் அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளை வழங்குவது. குறிப்பாக கருப்பை புற்று நோய்க்கான பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, மஞ்சள் காமாலை, தட்டம்மை-ரூபெல்லா, தட்டம்மை இரண்டாவது டோஸ், ஐந்துகூட்டுத் தடுப்பூசிகள், ரோட்டாவைரஸ், மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றிற்கான தடுப்பூசிகளை மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கு கட்டாயமாக வழங்குவது. தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி முதல், கிளினிக்கல் ட்ரயல், உரிமம் வழங்குவது, பாரிய அளவிலான உற்பத்தி, கொள்முதல், விநியோகம் வரை அனைத்தையுமே  உள்ளடக்கிய மாபெரும் வலைப்பின்னலைக் கொண்ட அமைப்பிது.

இதன் முக்கியமான இயங்குதளம் மூன்றாம் உலக நாடுகளான தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் 49 நாடுகள். இந்நாடுகள் கவி நாடுகள் என்றே அழைக்கப்படுகின்றன.  2013 ஆம் ஆண்டு வரை கேட்ஸ் ஃபவுண்டேஷன் இவ்வமைப்பிற்கு 1.5 பில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளது.  இதுவரை 370 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை இவ்வமைப்பு வழங்கியுள்ளது. அடுத்து 7 மில்லியன் குழந்தைகளைக் குறிவைத்துள்ள இவ்வமைப்பு இதுவரை உதவி என்ற பெயரில் தடுப்பூசி மற்றும் அடிப்படை மருத்துவத்திற்கு மூன்றாம் உலக நாடுகளுக்கு செலவிட்ட தொகை சுமார் 10 பில்லியன் டாலர்கள். இதில் சுமார் 2 பில்லியன் டாலர் கேட்ஸ் ஃபவுண்டேஷனின் முதலீடு. மேலும் இவ்வமைப்பின் உறுப்பினர்களில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் தவிர எந்த நிறுவனங்களின் பெயரும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்பதிலிருந்தே கவி தடுப்பூசிக் கூட்டமைப்பே மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளையும் பெண்களையும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் எனும் ஆக்டோபஸின் மாயப் பிடிக்குள் கொண்டுவருவதற்கான ஒரு கருவி மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதே கவி மூலம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியால் தான் தற்போது நமது குழந்தைகளுக்கு வழங்கப் போகும் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் உரிமம் வழங்கி கொள்முதல் செய்து யூனிசெஃப் வழியாக உலகெங்குமுள்ள மூன்றாம் உலக நாடுகளின் அப்பாவிக் குழந்தைகளுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும் வழங்கப் போகிறார்கள். அதன் முன்னோட்டம் தான் பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கும் பாரிய அளவிலான தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம்.  அதன் பின் தற்போது தேசிய நோய்தடுப்புத் திட்டத்தின் கீழ் 9-வது மாதத்திலும் 16-24-வது மாதத்திலும் வழங்கப்படும் தட்டம்மை தடுப்பூசியை முழுவதுமாக நிறுத்திவிட்டு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை மட்டுமே அரசு வழங்கும். 

ஏற்கனவே தேசிய தடுப்பூசித் திட்டத்தில் வழங்கப்படும் டிபிடி மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுடன் எச்ஐபி சேர்க்கப்பட்டு பெண்டாவாலெண்ட் என்ற ஒரே தடுப்பூசியாக தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 2011-ல் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் 54 குழந்தைகள் இத்தடுப்பூசியால் இறந்ததால் குழந்தை நல மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் இத்தடுப்பூசிக்கெதிராக அரசிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லை. சாந்தா பயோடெக் எனும் ஹைதராபாத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பாளர் உற்பத்தி செய்யும் இத்தடுப்பூசியை இந்திய அரசு தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த 165 மில்லியன் டாலரை கவி வழங்கியுள்ளது. ஐந்து வருடங்களுக்குப் பின் இத்திட்டத்தை அரசே முழுமையாக முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். 2013-இல் ரூ 312.7 கோடியை செலவழித்த இந்திய அரசு 2017-இல் ரூ 3587.1 கோடி மக்கள் பணத்தை பெண்டாவாலண்டுக்கு மட்டும் செலவிடப் போகிறது.  பெண்டாவாலெண்ட் உற்பத்தி சாந்தா பயோடெக் நிறுவனத்தின் தாய் நிறுவனத்திலும் மெர்க் நிறுவனத்திலும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் முக்கியமான பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011-13 ஆண்டுகளில் மானுடகுலத்திற்கெதிராக கேட்ஸ் ஃபவுண்டேஷன் நடத்திய மனிதத் தன்மையற்ற பல கொடிய குற்றங்களும் அம்பலப்பட்டு தேசிய நாளிதழ்களில் செய்திகளாகியது.

மெலிண்டா கேட்ஸ்வுடன் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி.நட்டா

கென்யாவில் நடத்தப்பட்ட ’மீப்பெரு கருத்தடை’ தடுப்பூசி நடவடிக்கையின் போது உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், கென்ய அரசு ஆகியவை அம்பலப்பட்ட அளவிற்கு கவி மற்றும் அதன் பின்னாலிருக்கும் கேட்ஸ் ஃபவுண்டேஷனின் குற்றம் அம்பலப்படவில்லை.  ஆனால் 2009-2010 ஆண்டுகளில் பாத் (PATH) என்னும் தொண்டு நிறுவனம் மூலம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவு இந்தியாவை மட்டுமன்றி சர்வதேச அறிவியல் சமூகத்தைக் கூட குலைநடுங்கச் செய்தது.

2013 இல்  இக்கொடிய அழிவைப் பற்றி விசாரித்த இந்திய பாராளுமன்ற கமிட்டி, இக்குற்றத்தின் பின்னணியில் இருந்த அத்தனை சக்திகளையும் பெயர்சொல்லி அம்பலப்படுத்தியது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR), இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு பொது மேலாளர் (DCGI) போன்ற அரசு நிறுவனங்கள் எவ்வாறு தானே உருவாக்கிய சட்டங்களை மதிக்காமல் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் அமெரிக்க தொண்டு நிறுவனம் மூலம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளான கிளாக்ஸோ ஸிமித் கிளைன் மற்றும் எம் எஸ் டி ஃபார்மஸ்யூடிகல்ஸ் தயாரித்த இத்தடுப்பூசிகளை இப்பழங்குடிப் பெண் குழந்தைகளில் சோதிக்கத் துணை நின்ற மாபெரும் குற்றத்தை செய்தன என இவ்வறிக்கை வெளிப்படுத்தியது.  மத்திய அரசின் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தைப் பயன்படுத்தி கேட்ஸ் மற்றும் அதன் கூட்டுக் குற்றவாளிகள் இச்சோதனைகளை நடத்தியது. இதனாலேயே இத் தடுப்பூசி சோதனைக்கு மரியாதையும் அதிகார பூர்வ ஒப்புதலும் ஏற்பட ஆந்திர குஜராத் மாநில அரசுகள் வழிவகை செய்தது.  15 வயதிற்குட்டப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்கின்ற மிகக் குறைந்த பட்ச நடைமுறையைக் கூட பின்பற்றாத இத்தடுப்பூசி நடவடிக்கையில், பெரும்பாலான ஒப்புதல்கள் சோடிக்கப்பட்டவை என அம்பலமாகியது.

இத்தடுப்பூசியின் மிகக் கொடூரமான விளைவு, இது தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்.  ஆனால் ஆந்திர மற்றும் குஜராத் மாநில அரசுகள் இத்தடுப்பூசியின் பின்விளைவுகளால் இறந்த/தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை கூட செய்யாமல் கேட்ஸ் ஃபவுண்டேஷனை தப்பிக்க வைத்தன.  அரசு நிறுவனங்களான ICMR & DCGI ஆகியவை இந்திய நாட்டின் சட்டங்களுக்கும், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கும் விரோதமாக இந்த சோதனைகளுக்கு ஒப்புதலை வழங்கி, நடைமுறைப்படுத்தவும் உதவி செய்ததோடு, அரசு நிதியை தகாத வழியில் உபயோகித்தது, தனியார் நிறுவனத்தின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைக்கு அரசு ஊழியர்களையும் அரசாங்க உட்கட்டமைப்பையும் (infrastructure) வழங்கி இக்குற்றத்தில் கூட்டு பங்காளிகளாகவும் செயல்பட்டுள்ளன.

கேட்ஸ் ஃபவுண்டேஷனின் சட்டபூர்வ சோதனைசாலையானது இந்தியா .

இந்திய நாட்டின் குழந்தைகளை சோதனை சாலை எலிகளைப் போல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் உபயோகிக்க அரசின் அவ்வளவு துறைகளையும் அதுவே வகுத்த சட்டங்களை மதிக்காமல், அவற்றை இந்நிறுவனங்களின் ஏவலாளியாக்கி ஒரு கொடூரக் குற்றத்தை செய்ய வைக்க வேண்டுமென்றால், கண்ணுக்குத் தெரியாத எவ்வளவு பெரிய வலைபின்னலை நம் மக்களைச் சுற்றி கேட்ஸ் ஃபவுண்டேஷன் பின்னியுள்ளது? இதே போன்ற சோதனைகளை பெரு, வியட்நாம், உகாண்டா ஆகிய நாடுகளின் 2006-ஆம் ஆண்டு கேட்ஸ் ஃபவுண்டேஷன் இதே தொண்டு நிறுவனம் மூலம் நடத்தியுள்ளதை அந்நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய தொகை 27.8 மில்லியன் டாலர்.

பாராளுமன்ற கமிட்டி இக்குற்றம் குறித்து இந்நாடுகளின் அரசுகளுக்கு இராஜாந்திர உறவுகள் வழி உடனடியாக அறிவித்து இதன் மேல் அந்த அரசாங்கங்களையும் நடவடிக்கையெடுக்கப் பரிந்துரைக்க வேண்டும் என இந்திய அரசிற்கு கட்டளையிட்டது.   இதை விட முக்கியமான குற்றசாட்டு, இக்குற்றவாளிகள் இதே பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கட்டாயமாக்கி பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்க அரசிடம் இலாபி செய்துள்ளது.  பாராளுமன்றக் கமிட்டியின் 72-ஆவது அறிக்கை இதை மிகப்பெரியதொரு சதித் திட்டமென்றே குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது கவியின் குறிக்கோளை நினைவு படுத்திப் பாருங்கள்.  பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி மட்டுமல்ல, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியையும் இந்திய மக்களுக்கு மட்டுமன்றி கவி நாடுகள் எனப்படும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கும் கட்டாயமாக அந்நாட்டு அரசுகள் மூலம் வழங்குவதே அதன் திட்டம்.   எதற்காக இதை செய்கிறார்கள்; அவர்கள் யாரை எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் பாராளுமன்ற கமிட்டியால் மிகப்பெரும் நெறிமுறையற்ற, சட்டத்தை மீறிய குற்றச் செயலாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த வழக்கு என்னானது என்பதைப் பார்ப்போம்.

2015-இல் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இம்மண்ணின் இதுவரையான சட்டங்கள் எதைக் கொண்டும் இக்குற்றங்களைச் செய்த இத்தொண்டு நிறுவனத்தையோ அதற்கு நிதியுதவி வழங்கிய கேட்ஸ் ஃபவுண்டேஷனையோ இதற்கு துணைபோன ICMR, DCGI, மாநில அரசுகள் ஆகியவற்றையோ தண்டிக்க முடியாது எனக்கூறி வழக்கை வாபஸ் வாங்கியது மோடி அரசு. அதுபோலவே பாராளுமன்றக் கமிட்டியின் மற்ற வழிகாட்டுதல்களும் குப்பைத் தொட்டிக்கு சென்றன.  ஆம்! இதன் பின்னர் இந்தியா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் சட்டபூர்வ சோதனைசாலையானது, குழந்தைகளும் பெண்களும் எலிகளென செத்து மடிகின்றன.

(தொடரும்)

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1

செய்தி ஆதாரம்:
ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்…!
Gates Foundation may fund Pune institute
Bill & Melinda Gates Foundation Vaccine Empire on Trial in India
Calls in India for legal action against US charity
“Mass Sterilization”: Kenyan Doctors Find Anti-fertility Agent in UN Tetanus Vaccine
‘Can’t penalise US NGO for violating drug trial norms’
GAVI – The Vaccine Alliance
Gates Foundation continues to support national health mission, no links terminated: Govt
‘Conflict of interest’: NHM panel raises questions on Bill Gates Foundation
Nigeria: WHO Begins Vaccination of 4.7 Million Children in North-East

தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?

2

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொண்ட 9-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி பூமிகா இரு நாட்களுக்கு முன் உயிரிழந்தார் என நக்கீரன் ஏடு பிப்ரவரி 27, 2017 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.  பெற்றோரின் சம்மதமின்றி குழந்தைகளுக்கு கட்டாயமாக தடுப்பூசி போடுவதாகக் கூறி ஈரோட்டில் பொதுமக்கள் சுகாதாரத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிப்ரவரி 6ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தடுப்பூசி திட்டத்தால் எவ்வளவு குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியே வரவில்லை. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் இது போன்ற பல செய்திகள் ’பரபரப்பு’ என்ற தகுதியை இழந்து விட்டன.  ஒருசில சமூக வலைதளப் பகிர்வுகள் கூட தக்க ஆதாரம் இல்லாததால் புரளி என்ற அடிப்படையில் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் தடுப்பூசி விவகாரத்தில் ஊடகங்களின் கள்ளமௌனம் முதுகெலும்பைச் சில்லிடச் செய்கிறது.

இந்நோய்கள் ஒருமுறை வந்தால் இயல்பாகவே இந்நோய்க்கிருமிக்கெதிரான எதிர்ப்பணுக்களை உடலே உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் இரண்டாவது முறை இவை வருவது அபூர்வமானது.
ரூபெல்லா போன்ற அம்மை நோய்கள் ஒருமுறை வந்தால் இயல்பாகவே இந்நோய்க்கிருமிக்கெதிரான எதிர்ப்பணுக்களை உடலே உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் இரண்டாவது முறை இவை வருவது அபூர்வமானது.

ஜனவரி 29 ஆம் தேதி தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டினார். அடுத்த நாள் தேசிய நாளிதழ்கள் உட்பட அனைத்து பத்திரிகைகள் வாயிலாகவும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இதே மிரட்டலை விடுத்தது. இத்தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்கள் வழியாக பரப்புபவர்களைக் கண்காணிக்க சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசையும் அரசே களத்தில் இறக்கியுள்ளதாக பொது சுகாதார இயக்குநர் மரு. குழந்தைசாமி அறிவித்தார்.

அதுவரை சமூக வலைதளங்களில் இது குறித்து வந்த செய்திகள், எச்சரிக்கைகள் மீது பாராமுகமாக இருந்தவர்களுக்குக் கூட தமிழ்நாடு அரசின் இவ்வறிக்கைகளால் ”ஒரு தடுப்பூசி எதிர்ப்புக்குப் போய் சிறையா?” என்ற கேள்வி எழத் தொடங்கியது.  எனவே இதுகுறித்த கட்டுரை எழுத அரசின் இணைய தளம், பல்வேறு உயிர் அறிவியல் தொழில்நுட்ப பதிப்பகங்களின் இணைய தளங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள், கவி தடுப்பூசி கூட்டமைப்பு (GAVI VACCINE ALLIANCE), பில் மெலிண்டா கேட் ஃப்வுண்டேஷன், உலக சுகாதார நிறுவனம், USAID, இந்திய குழந்தைநல மருத்துவர்களின் கூட்டமைப்பு, சீரம் இன்ஸ்டியூட் இந்தியா போன்றவற்றின் இணையதளங்கள், அறிக்கைகள், செயல்திட்டங்கள், ஆண்டறிக்கைகள்  மற்றும் பல்வேறு பத்திரிகை செய்திகள், துறைசார் வல்லுநர்களின் கட்டுரைகள்  ஆகியவற்றிலிருந்து ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.

தட்டம்மைரூபெல்லா தடுப்பூசியின் அவசியம் என்ன?

ட்டம்மை மற்றும் ஜெர்மன் தட்டம்மை எனப்படும் ரூபெல்லா போன்ற அம்மை வகைப்பட்ட நோய்கள் தாக்கினால் 3-7 நாட்கள் காய்ச்சல் மற்றும் தோலில் தடிப்புக்கள் ஏற்படும். இந்நோய்கள் ஒருமுறை வந்தால் இயல்பாகவே இந்நோய்க்கிருமிக்கெதிரான எதிர்ப்பணுக்களை உடலே உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் இரண்டாவது முறை இவை வருவது அபூர்வமானது.  இதனால் முதலாளித்துவ நாடுகளில் ஒருவருக்கு ரூபெல்லா வந்தால் அவர் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக் குழந்தைகளை விருந்துக்கு அழைப்பார். இதற்கு பேர் ஜெர்மன் மீசெல்ஸ் பார்ட்டி. இது வழியாக நோயைப் பரப்பி இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வார்கள்.

இந்தியாவில் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தடுப்பூசிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு முதல் முறை 9 மாதத்திலும் பின்னர் இரண்டு வயதிற்குள் இரண்டாவது முறையும் தட்டம்மை தடுப்பூசி வழங்கப்படுகிறது.  தனியார் மருத்துவமனைகளும் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லாவிற்கான முத்தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன.  பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ரூபெல்லாவிற்கான தடுப்பூசிகள் பெரும்பாலும் கருத்தரித்தலுக்கு முன் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜனவரி 29 ஆம் தேதி தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டினார்

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் ஏற்கனவே முழுஅளவில் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும் போது தான் பாரிய அளவிலான தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் நடத்தப் போவதாக டிசம்பர் மாதம் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.  இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கோவா, கர்நாடகா, அந்தமான், இலட்சதீவு ஆகிய மாநிலங்களின் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்  – சுமார் 5 கோடி குழந்தைகள்- தடுப்பூசி பிப்ரவரி 6 முதல் 28 வரை பள்ளிகள் வழியாக கட்டாயமாக வழங்கப் போவதாக நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து பல இதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் இத்தடுப்பூசி குறித்து எதிர்மறைக் கருத்துக்கள் பரவத் தொடங்கியதும், தேசிய நாளிதழ்களும் தமிழ் இந்து போன்ற தமிழ் பத்திரிகைகளும் தடுப்பூசிக்கு ஆதரவாக தலையங்கங்களையும் கட்டுரைகளையும் தீட்டின.

இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது இம்முதற்கட்ட தடுப்பூசி திட்டத்தில் தமிழ்நாடும் கர்நாடகாவும் மட்டுமே பெரிய மாநிலங்கள். மற்றவை குறைந்த மக்கள் தொகை கொண்ட பிராந்தியங்கள். இதில் கர்நாடகாவின் பெரும்பான்மையான தனியார் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களுடன் கருத்துக் கேட்கும் சந்திப்புகளை நடத்திய பின்னர் எழுத்துப்பூர்வ ஒப்புதலைக் கேட்டுள்ளனர். அதில் 90%-ற்கும் மேல் எதிர்மறைக் கருத்தை வெளியிட்டதால், பள்ளி நிர்வாகமே இத்திட்டத்தை பள்ளிவளாகங்களில் நடத்துவதற்கு பதில் ஆரம்பசுகாதார நிலையங்களில் நடத்த வேண்டும் என சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளன.   அதனால் தற்போதைய நிலவரப்படி கர்நாடக அரசு இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் அரைகுறை மனதுடன் இருப்பதாகவே செய்திகள் வெளியாகின்றன.

ஆனால் மோடியின் பினாமி – ஓபிஸ், ஏபிஎஸ் அரசாங்கங்கள், தமிழ்நாட்டு மக்களை அழிக்க துணிந்து இறங்கியதாலோ என்னமோ, எங்குமே பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தைப்பட்டதாகவோ, பெற்றோர்களின் அச்சத்தை போக்க அறிவியல்பூர்வமான விளக்கத்தை அளித்தாகவோ ஆதாரமே இல்லை. இதுகுறித்தான அரசாணைகளோ, சுற்றறிக்கைகளோ அரசாங்க இணையதளத்தில் இதுவரை தரவேற்றவுமில்லை. ஆனால் இதற்கெதிராக பேசினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அனைவரும் கண்காணிக்கப்படுவதாகவும் பத்திரிகை செய்திகள் வாயிலாக அரசு தரப்பிலிருந்து மிரட்டல்கள் மட்டும் விடப்படுகின்றன. மேலும் இத்திட்டத்தை சுகாதாரத்துறையும், சுகாதார அமைச்சகமும் நடைமுறைப்படுத்தும் விதம் சிறிதளவாவது மூளை செயல்பாட்டில் இருக்கும் எவராலும் செரிக்க முடியாததாக உள்ளது.

தமிழ்நாட்டில் 1.8 கோடி குழந்தைகளுக்கு 22 நாட்கள் தடுப்பூசி போட மொத்தம் 1000 மருத்துவர்களும் 12,000 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் 3 அறைகளை இவர்களுக்கு ஒதுக்க வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு முன் 9-15 வயதிலான குழந்தைகளை முதல் அறையில் உட்கார வைத்து 15-45 நிமிடங்கள் இத்தடுப்பூசியின் வல்லமை குறித்து விளக்கமளிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் அடுத்த அறைக்கு இட்டு செல்லப்பட்டு ஊசி போட்டபின்னர், கையில் மை வைக்கப்பட்டு மூன்றாவது அறையில் 15 நிமிடம் கண்காணிக்கப்படுவர். காய்ச்சலுக்கான மாத்திரை வழங்கப்படும். ஏற்கனவே காய்ச்சல் இருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ, மோப்-அப் டிரைவ் எனப்படும் துடைத்தழித்தல் இயக்கத்தின் போது அவர்களுக்கும் போடப்படும்.  இப்படி 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?

தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் எழுப்பும் எச்சரிக்கையும் கேள்விகளும்

 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?
15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?

திர்ப்பாளர்கள் பொதுவாக பாரிய அளவிலான இத்தடுப்பூசி ஏற்படுத்தப்போகும் பின்விளைவுகள் குறித்து முதன்மையாக அச்சத்தை வெளியிடுகின்றனர். குறிப்பாக ஆட்டிஸம் போன்ற நீண்டகால பாதிப்புகளும் ஒவ்வாமை போன்ற உடனடி பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.  இத்தடுப்பூசி ஏற்கனவே கிளினிக்கல் ட்ரயல் எனப்படும் மருத்துவ முன்னோட்டம் செய்யப்பட்டது என்பதற்கான சான்றிதழை தமிழக அரசு வழங்க வேண்டும் என்கின்றனர். அதாவது நம் குழந்தைகள் சோதனை சாலை எலிகளல்ல என்பதை நிறுவ அரசாங்கத்தைக் கோருகின்றனர்.

அடுத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று அன்னிய நிறுவனங்களின் இலாபத்திற்காக இத்தடுப்பூசி போடப்படுகிறது என்பது தான்.  கடைசி கேள்வி தவிர மற்றவற்றிற்கான பதில்கள் தடுப்பூசி ஆதரவு அலோபதி மருத்துவர்களின் கட்டுரைகளில் நிரம்பி வழிகின்றது. கடைசி குற்றச்சாட்டான அன்னிய நிறுவனங்களின் இலாப வேட்டை என்னும் குற்றசாட்டை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் இன்னும் அலாதியானது.

இத்தடுப்பூசியை உலகிலேயே ஒரே ஒரு நிறுவனம் மட்டும் தான் கடந்த 17 ஆண்டுகளாக தயாரிக்கிறது. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்கிற இந்திய தரகு முதலாளியின் நிறுவனம் தான் அது.  உலக சுகாதார நிறுவனத்திடம் 2000-த்தில் பிரீ-குவாலிஃபைட் எனப்படும் முன் – அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி இது.  ஒரு டோஸ் ரூ. 125 விலையுள்ள இம்மருந்தை வெறும் ரூ. 25-ற்கு அரசிற்கு வழங்கும் அளவிற்கு நல்லுள்ளம் படைத்தவர் இந்நிறுவனத் தலைவர் பூனாவாலா.

மேலும் உலக சுகாதார நிறுவனத்துடன் இந்நிறுவனம் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி கவி நாடுகள் எனப்படும் 49 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இம்மருந்தை யூனிசெஃப் வழியாக குறைந்த விலைக்கு எதிர்காலத்தில் வினியோகிக்கப்போகிறது. போதாக்குறைக்கு இதே தடுப்பூசியை சீரம் நிறுவனத்திடம் யூனிசெஃப் வாங்கி வியட்நாம் அரசு வழியாக வியட்நாம் குழந்தைகளுக்கு ஏற்கனவே கொடுத்துள்ளது. அப்படியிருக்கையில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் பெரும்பாலான அச்சங்களுக்கும் கேள்விகளுக்குமான விடைகள் ஏதோ ஒரு விதத்தில் கிடைத்துவிட்டது என நடுநிலையாளர்கள் நினைக்கலாம் அல்லவா? எனில், இவ்வளவு எளிமையான விடைகளை ஏன் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டு மக்களின் மிகசாதாரண அச்சத்தைக் கூட போக்க முன்வரவில்லை என்பதும் எதிர்மறைக் கருத்துக்களுக்கு இவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் என்பதுமே இங்கு விவாதிக்கப் போகும் முக்கியமான பொருட்கள்.

(தொடரும்)

செய்தி ஆதாரம்:

ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்…!
Gates Foundation may fund Pune institute
Bill & Melinda Gates Foundation Vaccine Empire on Trial in India
Calls in India for legal action against US charity
“Mass Sterilization”: Kenyan Doctors Find Anti-fertility Agent in UN Tetanus Vaccine
‘Can’t penalise US NGO for violating drug trial norms’
GAVI – The Vaccine Alliance
Gates Foundation continues to support national health mission, no links terminated: Govt
‘Conflict of interest’: NHM panel raises questions on Bill Gates Foundation
Nigeria: WHO Begins Vaccination of 4.7 Million Children in North-East

நெடுவாசல் நேரடி ரிப்போர்ட் – படங்கள்

0

சோலைவனத்தை கருக்க வரும் HELP – திட்டத்தை முறியடிப்போம்!
புதுகை – நெடுவாசல் மண்ணையும், மக்களையும் பாதுகாப்போம்!

நெடுவாசல் அருகே இருக்கும் நல்லாண்டார் கொல்லையில் உள்ள எரிவாயு போர் எந்திரத்தில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்!

புதுக்கோட்டை – நெடுவாசலில் அமுல்படுத்தவிருக்கும் ஹைட்ரோ-கார்பன் திட்டம் என்பது முற்றிலும் புதிய திட்டம் அல்ல. ‘ புதிய மொந்தையில் பழைய கள்ளு ‘ போன்றதுதான். டெல்டா பகுதியில் அமுல்படுத்த முயன்று தோற்றுப்போன மீத்தேன் திட்டத்தில் உள்ள அனைத்துவித பாதிப்புகளும் இத்திட்டத்தில் ஒருங்கே அமைந்துள்ளன.

புதுக்கோட்டை என்றாலே வறட்சி மாவட்டம். ஆனால் அதற்குள்ளேயும் முப்போகம் விளையும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. டெல்டா பகுதி கருகிய சூழலில் அதன் எல்லையோரத்தில் கற்பாறைகள் அற்று, மணல் திட்டுகள் மட்டுமே கொண்ட நீர்பரப்பு பகுதி அது. விளைச்சல் மிகுந்த பசுமை நிறைந்த சோலைவனம்தான் அந்த நெடுவாசல்.

விவசாயிகள், சிறுதொழில் செய்வோர், பெட்டிக்கடை, பழக்கடை வைத்திருப்போர், IT, மருத்துவ, பொறியியல், சட்டக்கல்லூரி மாணவர்கள், வெளிமாவட்டத்தில், வெளிமாநிலத்தில் வேலை செய்வோர் என 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் நெடுவாசல் வட்டாரத்தில் வாழ்கின்றனர். விவசாயிகளின் வாரிசுகளான மாணவர்கள் – இளைஞர்கள் தான் இத்திட்டத்தின் பாதிப்பை தமது ஊர் மக்களுக்குத் தெரிவித்து பின் உலகுக்கும் தெரியப்படுத்தினர்.

ஹைட்ரோ-கார்பன் திட்டத்தின் பாதிப்பை உணர்ந்த மறுகணமே போராட துவங்கிவிட்டனர் அப்பகுதி மக்கள். கடந்த ஒரு வார காலமாக நெடுவாசலைச் சுற்றியுள்ள கிராமங்கள் மத்திய-மாநில அரசுக்கு எதிராக ‘கருப்பு’ கொடிகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு கம்பெனி மற்றும் மத்திய-மாநில அரசின் வஞ்சகத்தால் தம்முன்னோர்கள் ஏமாற்றப்பட்டதையும், இனி நாங்கள் ஏமாற மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். அவர்களின் உள்ளக் குமுறலை உங்கள் முன் வைக்கிறோம்.

கடந்த 10-3-16 அன்று மோடி அரசு ஹைட்ரோ கார்பன் (Hydrocarbon Exploration and Licensing Policy – HELP) திட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அறிவித்தது. 11 மாதம் கழித்து 15-2-17 அன்று நெடுவாசல் பகுதியில் இனி வெளிப்படையாக திட்டத்தை அமுல்படுத்தி ஹைட்ரோ-கார்பன் எடுக்க போவதாக அறிவித்தது.

“ தஞ்சை டெல்டா பகுதியில் விரட்டியடிக்கப்பட்ட மீத்தேன் திட்டம் வேறு பெயரில் அதே டெல்டா பகுதியின் கடைகோடி பகுதியில் மீண்டும் தொடங்க இருக்கின்றது. எங்க ஊர் புள்ளைங்க சென்னை IT யில படிக்கிறாங்க, வெளிமாநிலத்தில, வெளிநாட்டுல வேலை செய்யுறாங்க, இவங்கதான் இதன் ஆபத்தை புரிஞ்சுக்கிட்டு wattsapp, Facebook மூலம் எங்களுக்கும் தெரியபடுதினாங்க, அதுக்கப்புறம் தான் போராட்டத்தை தொடங்கினோம் “ என்கிறார் அப்பகுதி விவசாயி செல்வம் என்பவர்.

நல்லாண்டார் கொல்லையில் மக்கள் போராட்டம்.

“ 16 வருசத்திற்கு முன்பே அரசாங்கம் அனுமதி வழங்கிருச்சி சார், எங்களுக்கு தெரியல. எங்க ஊருலேயும் 16 வருசத்துக்கு முன்னால வெள்ளையும் சொள்ளையுமா இருக்குறவங்க வந்து உங்க ஊருல மண்ணெண்னை புதைஞ்சிருக்கு, அதை எடுத்தா உங்களுக்கு இலவசமா மண்ணெண்னை கிடைக்கும், தார்ரோடு போட்டுதருவோம் என ஆசைக்காட்டி நிலத்த வாங்குனானுவ, அதுக்கப்புறம் அந்த எடத்துல என்ன நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது. இந்தி காரங்க வாட்ச்மேனா இருப்பாங்க. எங்கள உள்ளேயே விட மாட்டாங்க. உள்ளுர்காரங்கள வெளி வேலைக்குதான் வச்சிக்குவாங்க ! அதிகாரிங்க வெளிநாட்டுகாரனுங்க காருல வரும்போது எங்க வயலுக்குள்ள இருக்கும் பயிர் மேல வுட்டு ஏத்திட்டு வருவாங்க.எதுத்து கேள்வி கேட்க முடியாது. அப்படி கேட்டதால பக்கத்து வயகாரங்கள அடிச்சிருக்காங்க. இப்பதான் தெரியுது இவங்களோட சதிவேலை, எவன் வந்தாலும் எங்க இடத்த விட்டுக் கொடுக்க மாட்டோம் சார்.

இந்த பூமியில எது போட்டாலும் மொளைக்கும் சார். இந்த ஊருல இருந்து 20 கி.மீ சுற்றளவில் நெல், சோளம், வேர்கடலை, பலா, முந்திரி, வாழை, தென்னை, பூ , உளுந்து, மிளகு என எங்க திரும்பினாலும் சோலைவனமா காட்சியளிக்கும். இத அழிக்கிறதுக்கு எப்படி சார் மனசுவருது அரசாங்கத்துக்கு, இந்த இடம் வேணுமுன்னா மொதல்ல எங்கள கொல்லட்டும்  இந்த அரசாங்கம், அதுக்கப்புறம் எரிவாயுவ உறிஞ்சிக்கட்டும் “ என்றார் ஆதங்கத்துடன் ஒரு விவசாயி.

“ எங்கள் ஊர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தோட சேர்ந்தது. இப்போ புதுக்கோட்டை மாவட்டத்தோடு இணைச்சிட்டாங்க . இங்குள்ள நெடுவாசல மையமா வச்சி கருக்கா குறுச்சி, வாணகண்காடு, மாங்காடு, வடகாடு, புள்ளான் விடுதி, கணியன் கொல்லை, நல்லாண்டார் ஆகிய கிராமங்களிலேயும் போர்போட்டு ஆராய்ச்சி செஞ்சிருக்காங்க. அதனையும் இணைச்சி ஹைட்ரோ-கார்பனை உறிஞ்சப் போறாங்களாம். அப்படி உறிஞ்சா இப்பகுதியை சுற்றி வாழும் 5 லட்சம் மக்களின் வாழ்வு கருகிப் போய்விடும் “ என அச்சப்படுகின்றனர்.

நல்லாண்டார் கொல்லையில் எரிவாயு சோதனையின் போது வந்த எண்ணெய்க் கழிவுகள் பல ஆண்டுகள் ஆகியும் அழியாமல் அதே நாற்றத்துடன் தேங்கி இருக்கிறது.

10 வருசத்துக்கு முன்னால 30, 40 அடியில தாராளமா தண்ணீர் கிடைக்கும், இப்ப வறட்சி கடுமையாக இருக்கு, 100, 200 அடி போர் போட்டாத்தான் தண்ணீர் கிடைக்குது. எரிவாயு எடுத்தா மொதல்ல நிலத்தடி நீரத்தான் வெளியேற்றுவாங்களாம். தண்ணீர் இல்லன்னா நாங்க எங்க சார் போவோம். எங்க புள்ள, பொண்டாட்டி, ஆடு, மாடு எல்லாம் எங்கத்தான் போறது. அந்த காலத்துல இலவச மண்ணெண்ணை தரோமுன்னு எங்க முன்னோர்கள ஏமாத்துனாங்க. இப்ப பி.ஜே.பி அமைச்சர் H.ராஜா பேசும்போது மத்திய அரசோட திட்டம் அமுல்படுத்தியே தீருவோம் என்கிறார். அ.தி.மு.க கட்சிகாரனுங்க இந்த திட்டத்திற்க்கு ஒப்புதல் அளிச்சிட்டாங்க. ஆனா நாங்க இந்த திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டோம். எங்க உசுரே போனாலும் எங்க நிலத்த தரமாட்டோம் சார் என மத்திய அரசின் மீதான தனது வெறுப்பை உமிழ்ந்தார்கள் அக்கிராம மக்கள்.

மத்திய – மாநில அரசின் உதவியோடு காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க போய் தோற்றுப்போன பன்னாட்டு கம்பெனி வேறுபெயரில் டெல்டாவையும் சேர்த்து உறிய நெடுவாசலை நுழைவு வாயிலாக பயன்படுத்த பார்க்கிறது, ஜெம் லேபாரட்ரீஸ் என்ற பன்னாட்டு துபாய் கம்பெனி. இக்கொலைகார கம்பெனியை விரட்டியடுக்கும் வீரமிக்க போராட்டத்திற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்போராட்டத்தை செழுமைப் படுத்தும் வகையில் நம் கண்முன்னே ஏராளமான அனுபவத்தை விதைத்து சென்றுள்ளது ஜல்லிக்கட்டுப் போராட்டம். அதே சமயம் தனது போராட்டத்துக்கு தலைமை சக்தியை ஏற்படுத்திக் கொள்ளாததால் இறுதியில் இழப்புகளை சந்தித்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்று இங்கும் என் ஜி வோ எனப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்த முயல்கின்றன.

NGO தலைமையை ஏற்றுக் கொண்ட அனைத்து போராட்டங்களும் தோற்றுப்போய் இறுதியாக ஆளும் அரசுக்கு சாதகமாக கொண்டு சேர்த்ததற்கு பல சான்றுகள் உள்ளன. மத்திய, மாநில ஆளும் கட்சிகளை நம்பக் கூடாது என்று உறுதியாக இருக்கும் நெடுவாசல் அதே போல இத்தகைய  NGO குழுக்களையும் போராட்ட தலைமைக்கு வரவிடாமல் விரட்டியடிக்க வேண்டும்.

சாதி – மதம் கடந்து ஜனநாயக – முற்போக்கு சக்திகள் விவசாயிகள் , மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து தமக்கான தலைமையை தானே நிறுவிக்கொண்டு போராடும் போதுதான் வாடிவாசல் திறக்காமல் வீடுவாசல் மிதிக்க மாட்டோம் என்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல மாற்றுப் பெயரில் வரும் மீத்தேன் திட்டத்தை நெடுவாசலை விட்டு விரட்டாமல் எம் தெருவாசலை மிதிக்கமாட்டோம் என்ற போராட்ட அறைகூவலை முன்னெடுத்து செல்வதுதான் நம்முன் உள்ள ஒரே வழி.

 

 

படங்கள்,தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

கரூர் அருகே தலித் சிறுவன் மீது ஆதிக்க சாதி வெறியாட்டம் !

3

ரூர் – தும்பிவாடி கிராமம், சிவன் காலனி பகுதியில் வசிக்கும் சுமார் 100 தலித் மக்கள், கவுண்டர், நாடார் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். தும்பிவாடி, 5 ரோடு, டீ கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனியாக டம்ளர் பயன்படுத்தும் முறை இன்றளவும் உள்ளது. பெஞ்சில் உட்காரக்கூடாது தள்ளித்தான் நிற்கவேண்டும்.

சிவன் காலனியில் உள்ள பால் சொசைட்டியில் கூட தலித் குழந்தைகளுக்கு பால் ஊற்றுவது இல்லை. அங்க பக்கத்தில் செல்லக்கூட அனுமதியில்லை. இந்த தீண்டாமை காரணமாக, சிவன் காலனியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது பாக்கெட் பால்தான்.

சிவன் காலனியில் நாடார் சமூகத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். மேற்படி பெட்டிக்கடைக்கு கடந்த 18.02.2017 அன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கஜேந்திரன், கண் மை வாங்குவதற்கு சென்றுள்ளான். அப்பொழுது கையில் வைத்திருந்த 6 ரூபாய் காசை கடையில் உள்ள மிட்டாய் டாப்பாவின் மீது வைத்தபோது அது தவறி கடைக்குள் விழுந்துவிட்டது. அதனை எடுப்பதற்காக கடைக்குள்ளே காலை வைத்திருக்கிறான் அந்தச் சிறுவன். உடனே, “சக்கிலிய நாயே, எதுக்குடா கடைக்குள் வர்றே”, என கெட்ட வார்த்தைகளால் திட்டி, இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்து, தலையை பிடித்து சுவரில் மோதியிருக்கிறார் கடை முதலாளி சரத்குமார். வலி பொறுக்க முடியாமல் கஜேந்திரன் கத்தவே, “அடித்ததை வெளியே சொன்னால் கல்லாவிலிருந்து காசை திருடினாய் என்று கம்ப்ளெயின்ட் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன்” என்றும் மிரட்டியிருக்கிறார். “கிழக்குத் தெருக்காரன் மேற்கு தெருவிற்கு வரக்கூடாது. சக்கிலி பசங்க இந்த பக்கம் வந்தால் செருப்பாலேயே அடிவிழும்” என்று சரத்குமாரின் பெரியப்பா கணேசன், மனைவி அன்புமலர் ஆகியோர் சேர்ந்து கொண்டு அடித்திருக்கின்றனர்.

மேற்படி சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த கஜேந்திரனின் பெரியம்மா வளர்மதி, “எதற்காக எங்கள் மகனை அடிக்கீறீர்கள்” என கேட்க, “உங்களால் என்னடி செய்ய முடியும்” என்று எகத்தாளமாகப் பேசியிருக்கின்றனர்.

தலித் மக்கள் ஒன்று கூடி சின்னதாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பயனில்லை. மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு தகவல் வந்தவுடன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.சக்திவேல் மற்றும் தோழர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மறுநாள் 19.02.2017 அன்று அப்பகுதி மக்களுடன் சின்னதாராபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று சரத்குமார் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர். புகாரை பதிவு செய்யாமல் சமரசம் செய்து திருப்பி அனுப்ப முயன்றது போலீசு. மக்களும் மக்கள் அதிகார தோழர்களும் உறுதியதாக இருந்ததால், வேறு வழியின்றி அரவக்குறிச்சி DSP வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். அடுத்த கணமே கஜேந்திரன் மீது சரத்குமார் திருட்டுப் புகார் கொடுக்க, அந்த பொய்ப்புகாரையும் பதிவு செய்து கொண்டது போலீசு. சரத்குமாரும் கணேசனும் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நாடார் சமூகத்தினர் எண்ணிக்கையில் குறைவானவர்களே என்ற போதிலும், அந்த வட்டாரத்தில் கவுண்டர் சாதியினர் செலுத்தும் ஆதிக்கத்தின் பின்புலத்தில்தான் தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. கடைக்குள் கால் வைத்த குற்றத்துக்காக ஒரு தலித் சிறுவனுக்கு இப்படிப்பட்ட கொடுமை! கோகுல்ராஜ் கொடூரமாக கொல்லப்பட்டதன் பின்புலம் இதுதான்.

இந்த கொங்கு மண்டலத்தின் தனியரசுதான் சபாநாயகர் தனபாலுக்காக தொலைக்காட்சிகளில் பொங்கினார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். முதல்வர் நாற்காலியில் உட்கார்வதற்காக எடப்பாடி பிடித்த கால்கள் சசிகலாவின் கால்கள் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.

அப்புறம் அந்த மளிகைக் கடை முதலாளியின் பெயரைக் கவனித்தீர்களா? “சுயமரியாதைச் சிங்கம்” விரட்டி விரட்டி அடித்தாலும் அம்மாவின் காலையே சுற்றி வந்த சரத்குமார்!

அவருடைய கட்சியின் பெயர் “சமத்துவ” மக்கள் கட்சி!

 

 

சாதி வெறியர்களின் கொலை வெறித்தாக்குதலை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டி

தகவல்
மக்கள் அதிகாரம்
கரூர் – (9791301097)

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் : வளர்ச்சியா அழிவா ?

24
ஜோஷ்ஃபாக்சின் அவணப்படம் - கேஸ் லாண்ட் GAS LAND

நெடுவாசல் வட்டாரத்தில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும் என்று எகத்தாளமாய் கேலி செய்கிறார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். குரங்குகள் கல்லால் இலங்கைக்கு பாலம் கட்டியதாகவும், அதற்கு நாசா புகைப்படம் இருப்பதாகவும் பேசியது மட்டுமல்ல, வழக்கு போட்டு உச்சநீதிமன்றத்தையும் அப்படி பேச வைத்த இந்த அடி முட்டாள்கள் அறிவியல் பற்றி பேசுவது மிகவும் எரிச்சலூட்டுகிறது.

தற்போது கல்வித்துறை நிபுணர்கள், அறிவியல் நிபுணர்கள், மத்திய அரசு அதிகாரிகள் என விதம் விதமாக பலரையும் இறக்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தக் கேடும் இல்லை, மக்களுக்கு விளக்கமளித்தாலே போதும் என்று வகுப்பு எடுத்து வருகிறார்கள். இது சதி என்பதற்கு போபால் முதல் திருப்பூர் வரை ஏராளம் சான்றுகள் ரத்தமும் சதையுமாய் இருக்கின்றன. இருப்பினும் ஆளும் வர்க்கங்கள் இப்படி பிரச்சாரம் செய்யும் போது அதே அறிவியலை வாழ்வியலோடும், மக்களோடும் இணைத்து நாமும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அறிவியல் என்பது யாருடைய விருப்பு வெறுப்புக்கும் ஏற்ப திரியும் ஒன்றல்ல. அது இயற்கை குறித்து மனிதன் ஆய்வு நடத்தி கண்டறிந்து வரும் ஒரு துறை. இயற்கையின் விதிகளோடு ஆய்வு செய்து நிரூபிக்கப்படும் அல்லது வளர்க்கப்படும் உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. அதே நேரம் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாரால் எதற்காக பயன்படுத்த்தப்படுகின்றது என்பதற்கேற்ப இந்த உலகமும், மக்களும் அழிவையோ முன்னேற்றத்தையோ சந்திக்கிறார்கள். இன்றையே வாழ்வின் பல்வேறு வளர்ச்சியினை அறிவியல் சாதித்திருப்பது உண்மை போலவே முதலாளிகளின் இலாபவெறி அணுகுண்டு, புவி வெப்பமடைதல் உள்ளிட்டு பல அழிவுகளுக்கும் அறிவியலை பயன்படுத்துகிறார்கள்.

முதலாளித்துவ சுரண்டலுக்காக உலகமெங்கும் பல தொழிலாளிகள் சுரங்கங்களிலும், கட்டுமானப்பகுதிகளிலும், ஆலைகளிலும், தொற்று நோயாலும் சாகின்றனர். அறிவியல் உண்மை பேசும் பாஜக கட்சியினரோ இல்லை தூய அறிவியல் பேசும் ஆல்பர்ப்பஸ் அங்கிள்களோ எவரும் இந்த சாகும் பட்டியலில் இல்லை. அமெரிக்காவில் தேசபக்தி பேசும் குடியரசு – ஜனநாயகக் கட்சியின் காங்கிரசு உறுப்பினர்களின் பிள்ளைகளோ இல்லை இந்தியாவில் தேஷபக்தி பேசும் பாஜக – காங்கிரசு எம்பிக்களின் பிள்ளைகளோ போர்வீரர்களாக போரில் சாவதில்லை.

இங்கே இரண்டு வீடியோக்களை பாருங்கள். முதல் வீடியோவில் நெடுவாசலைச் சேர்ந்த சுரேஷ் என்பதவர் குவைத்தில் எண்ணெய் எரிவாயுத் துறையில் பணியாற்றுகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அவர் தொழில்நுட்ப ரீதியாக விளக்குகிறார். மக்கள் வாழாத இடங்களில் இத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை எதிர்க்க போவதில்லை என்று கூறும் அவர் நெடுவாசல் போன்ற விவசாயம் செழிப்பாக இருக்கும் இடங்களில் அத்திட்டங்கள் ஏற்படுத்தும் அழிவை விளக்குகிறார். இதை மத்திய அரசிற்கும் அதன் துறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார். ஆகவே இவரை ஐ.எஸ் சதிகாரர் என்று ஆர்.எஸ்.எஸ் முத்திரை குத்த முடியாது.

இரண்டாவது வீடியோ இது குறித்து முழுமையான பார்வையையும், அனுபவத்தையும், அழிவையும் ஆதாரங்களுடன் தருகிறது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஜோஷ் ஃபாக்ஸ் 1972-ல் தனது வீடு கட்டப்பட்டதையும் அங்கே தானும் தனது குடும்பத்தாரும் வாழ்ந்ததை விவரிக்கிறார். அதே ஆண்டில் அமெரிக்க அதிபர் நிக்சனால் “சுகாதாரமான குடிநீர் சட்டம்” முதன்முறையாக கொண்டு வரப்படுகிறது. அதாவது குடிநீர் என்பது மனிதனின் அடிப்படை குடியுரிமையாக ஏற்கப்படுகிறது. அந்தக் காலம்தான் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின் ஆரம்பம் என்கிறார் ஜோஷ். 2009-ம் ஆண்டில் அவரது நிலம் ஒரு எண்ணெய் எரிவாயு நிறுவனத்திற்கு தேவைப்படுவதாக கடிதம் வருகிறது. ஒரு ஏக்கருக்கு 4750 டாலர் கிடைக்கும் என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது. அவரிடம் இருக்கும் 19.5 ஏக்கரை விற்றால் ஒரு இலட்சத்திற்கும் நெருக்கமான டாலர் கிடைக்கும். இது அவ்வளவு எளிமையானதா என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ஜோஷ்.

அமெரிக்காவில் இருக்கும் இயற்கை எரிவாயு வளத்தை பயன்படுத்தினால் அந்நாடு எந்த நாட்டையும் எரிசக்திக்காக சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றகிறார் முன்னாள் துணை அதிபர் டிக் சென்னி. இதையேதான் வானதி சீனிவாசன் போன்ற தேஷ்பக்தர்களும் டிவி விவாதங்களில் கூறுகிறார்கள். 2005-ம் ஆண்டு துணை அதிபர் டிக் செர்னியால் தயாரிக்கப்பட்டு காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட எரிசக்தி முன்வரைவுச் சட்டம் பல்வேறு சுற்றுச்சூழல் சோதனைச் சட்டங்களிலிருந்து விலக்கு பெறுகிறது. எண்ணெய் எரிவாயுத் துறை எதற்கெல்லாம் விலக்கு பெறும்? பாதுகாக்கப்பட்ட குடிநீர் சட்டம், சுத்தமான காற்று சட்டம், சுத்தமான நீர் சட்டம், என பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஜனநாய முறைகளில் இருந்து எண்ணெய் எரிவாயுத் துறைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

ஜோஷ்ஃபாக்சின் ஆவணப்படம் – கேஸ் லாண்ட் GAS LAND

அதன் பிறகு அமெரிக்காவின் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய ஹாலிபர்ட்டன் தொழில்நுட்பத்தை வைத்து அமெரிக்கா எங்கும் துளைத்தெடுக்கிறார்கள். தற்போது 34 மாநிலங்களில் இந்த துளைகள் பரவி இருக்கின்றன. பூமியை குதறும் இந்த நுட்பத்திற்கு பெயர் “ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்”. இது நீரையும் சில வேதிப்பொருட்களையும் கலந்து சுமார் 8000 அடி வரை நிலத்தில் அனுப்பி குடைந்தெடுக்கிறது. இதை ஏதோ ஃபோர்வெல் போடும் பணியாக நினைக்க கூடாது. கிட்டத்தட்ட சிறு நிலநடுக்கங்கள் அல்லது வெடிப்பு கீறல்களை இந்த துளைப்பு பூமிக்குள் நடத்துகிறது. இந்தக் கலவையின் அதியுயர் அழுத்தம் எந்தப் பாறைகளையும், தடைகளையும் தகர்த்து தூளாக்கும்.

இந்தக் கலவையில் பயன்படுத்தப்படும் 500-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களில் பல நமக்கு தெரியாது, உச்சரிப்புக்கு கூட வாயில் வராது என்கிறார் ஜோஷ். தெரிந்த வேதிப்பொருட்களும் கூட பல சக்தியும் வீரியமும் அழிவும் வாய்ந்தவை. இதற்காக ஏராளமான நீரையும் பயன்படுத்துகிறார்கள் என்று அதன் அளவையும் மதிப்பிடுகிறார் ஜோஷ். அமெரிக்காவில் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் 4,50,000 எரிவாயு கிணறுகளை பதினெட்டால் பெருக்கி, அதை 127 மில்லியன் காலன்ஸால் பெருக்கினால் 40 டிரில்லியன் காலன்ஸ் நீர் 595 வேதிப்பொருட்களோடு சேர்ந்து………………..

ஜோஷ்ஃபாக்ஸ்

இது குறித்து அவர் அனைத்து நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார், யாரும் பதிலளிப்பதில்லை. ஆவணப்படத்தின் கடைசியில் இந்த படத்திற்காக நேர்காணலை மறுத்த நிறுவனங்கள் டைட்டிலாக வந்து போகின்றன. ஒருவேளை நாமும் அரசுத் துறைகளிடம் நமது நிபுணர்களை அனுப்பி நெடுவாசல் குறித்து கேள்வி எழுப்பினால் இதேதான் நிலைமை.

மேறகொண்டு முழு படத்தையும் நீங்களே பாருங்கள், வாய்ப்பிருப்பின் இந்தப் படம் குறித்து முழுமையாக எழுத முயல்கிறோம். இணையத்தில் எண்ணைய் எரிவாயு குறித்து ஏராளமான கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு அறிவாயுதத்தோடும் நெடுவாசல் போராட்டத்தை முன்னெடுப்போம். வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று உளறும் பாஜக பண்டாரங்கள்தான் மக்கள் என்ன அறிவியலாளர்களா என்று திமிருடன் கேட்கிறது. அதற்கு உலகெங்கும் போராடிய மக்களும் அறிவியலாளர்களும் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு பாஜக மட்டுமல்ல அவர்களது ஆண்டையான அமெரிக்காவிடம் கூட பதிலில்லை.

இவ்வளவு அழிவுகளோடு எடுக்கப்படும் எரிபொருள் யாருக்கு பயன்படுகிறது? இன்னமும் மண்ணெண்ணைக்காக ரேசன் கடைகளில் இருக்கும் இந்திய மக்களுக்கா, இல்லை அமெரிக்காவின் ஏழைகளுக்கா? குடிநீர் பஞ்சம், தட்டுப்பாடு, வறட்சி ஆகியவை ஏதோ இயற்கை சார்ந்த துயரமாக பார்க்கப்படுவதால் இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம் தப்பிக்க நினைக்கிறது. ஆனால் உலக மக்களுக்கு எதிரி இயற்கையின் அழிவு அல்ல. இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்தான்.

நெடுவாசல் போராட்டத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் குப்பைக் கிடங்கில் மக்கள் வாழ்க்கை

1

பிப்ரவரி 21 2017 அன்று மும்பை மாநகராட்சிக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி மும்பையின் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளைப் பற்றி ஸ்க்ரோல் இணையதளம் வெளியிட்ட கட்டுரைத் தொடர்களின் சுருக்கப்பட்ட வடிவம். இது மும்பை கிழக்கு வார்டில் உள்ள தியோனர் குப்பைக் கிடங்கின் நிலைக் குறித்தக் கட்டுரை. வளர்ச்சி என்றால் அது அனைத்து மக்களுக்கென்றும், அதன் பொருட்டு சிலரோ சில மாநிலங்களோ தியாகம் செய்ய வேண்டும் என்றும் உளறும் பாஜக கும்பல்கள் ஒருபுறம். மறுபுறம் வளர்ச்சியை அறிவியலின் சாதனை என்றும் அதை எதிர்ப்போரை பழமை வாதிகள் என்றும் சித்தரிக்கும் அறிவுவீங்கிய கும்பல்கள். இன்னும் ஏழ்மையை மறைத்து விட்டு சூழலியல், இயற்கை நேசம், ஆர்கானிக் என்று சுத்தபத்தமாக பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் மறைக்கும் உண்மை என்ன? இந்தியாவில் வசதிபடைத்தோர் வாழ்வதற்காக ஏழைகளே அனைத்து அவலங்களையும் ஏற்குமாறு விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மீத்தேன் திட்டமோ, குண்டலினி யோகமோ, ஷாப்பிங் மால்களோ, அதி உயர் சாப்பாட்டுக் கடைகளோ, மல்டி பிளக்ஸ் திரையரங்கோ, சாட்டிலைட்டு சாதனைகளோ எதுவாகவும் இருக்கலாம். இதற்கான கழிவுகளை ஏழைகளும்- விவசாயிகளும், இதில் கிடைக்கும் செல்வங்களை பணக்காரர்களும், ஓரவளவு நடுத்தர வர்க்கமும் பகிர்ந்து கொள்கின்றனர். மறுப்பவர் கொஞ்சம் மூக்கை அடைத்துக் கொண்டு மும்பை தியோனர் கிடங்கில் குதியுங்கள்! – வினவு

தியோனர் குப்பைக் கிடங்கு

ன்பது வயது அஷ்ரபும் பதினோரு வயது ஷாருக்கும் நண்பர்கள். அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற சிறுவர்களைப் போல இவர்களும் நினைவு தெரிந்த நாள் முதல் வேலை செய்து வருகின்றனர். அது கிழக்கு மும்பை புறநகரான தியோனர். அந்தப் பகுதிச் சிறுவர்கள் சில நேரம் தங்களுடைய தந்தை, தாய் அல்லது வேறு உறவினர்களுடன் வேலைகளுக்குச் செல்வார்கள் – சில நேரம் தனியாகச் செல்வார்கள். வேலை இல்லாத ஒருசில நாட்கள் பள்ளிக்கூடத்திற்கும் செல்வதுண்டு.

பள்ளிக் கட்டிடம் சிதிலமடைந்து நொறுங்கி விழும் நிலையிலிருப்பதால், வேலைக்குச் செல்வதே உயிருக்கு பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். அவர்களது வேலையிடம் தியோனரில் அமைந்துள்ள பழமையான திறந்தவெளிக் குப்பைக் கிடங்கு. அது தான் அவர்களுக்கு வீடு -. ஏன் அவர்களின் உலகமே அது தான். தியோனரின் குப்பைக் கிடங்கு எப்போதும் பொங்கி வழிந்து கொண்டிருக்கும்.

தங்களுடைய சின்னக் கைகளால் அஷ்ரபும், ஷாருக்கும் அந்தக் குப்பைக் கிடங்கைக் கிளறுகின்றனர். சில நேரம் அந்த மாபெரும் குப்பைக் கடலின் மையப்பகுதி வரைக்கும் சென்றும் விடுகின்றனர்.

“மொத்த மும்பையின் கழிவுகளும் இங்கே வந்து எனது கைகளைக் கடந்து தான் செல்கின்றன” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் ஷாருக். அவனுக்கு தன்னுடைய பெயரோடு இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

”எனது கையைப் பாருங்கள்.. எப்படி நாற்றமடிக்கிறது. அவரெல்லாம் எனது கைகளைப் பிடித்துக் குலுக்குவாரா?” ஒரு பழிப்புச் சிரிப்புடன் குறிப்பிடுகிறான்.

இங்கே உள்ள மற்ற பையன்களைப் போல அஷ்ரபும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் விலையுயர்ந்த செண்டுகள், அழுகுக் களிம்புகளின் பெயர்களை உதிர்க்கிறான்… “ஆனால் அவையெல்லாம் வேலை செய்யாது… நாங்கள் நாறிக் கொண்டு தான் இருப்போம்” அவனது குரலில் ஒரு உறைந்த தன்மைக் காணப்பட்டது.

அந்தப் பகுதியே கடுமையாக நாறுகின்றது. குடலைப் பிடுங்கும் நாற்றத்திற்குக் காரணமான அந்தக் குப்பைக் கிடங்கு ரஃபீக் நகர் சேரி மற்றும் நல்லா (nallaah) பகுதிகளுக்கு இடையில் அமைந்திருக்கின்றது. நாற்றம் தான் அந்தச் சேரிகளின் அடையாளம். அங்கே செல்லும் எவராலும் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைக் கழிவுகளைக் காணாமல் இருக்க முடியாது. இங்கே தான் மும்பை மாநகரம் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யும் 9,600 மெட்ரிக் டன் குப்பையில் சரிபாதி கொட்டப்படுகின்றது.

தினோனர் திறந்தவெளிக் குப்பைக் கிடங்கு 1927-ல் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின் முலுந்த் மற்றும் கோராய் பகுதிகளில் வேறு இரண்டு குப்பைக் கிடங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தியோனர் குப்பைக் கிடங்கு சுமார் 111 ஹெக்டேர்களில் அமைந்துள்ளது. சுமார் எட்டு மாடிக் கட்டிடம் அளவுக்கு உயரமாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இங்கே கொட்டப்பட்டுள்ள அழுகிய மற்றும் காய்ந்த வீட்டுக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் என மொத்தக் கழிவுகளின் அளவு சுமார் 160 கோடி டன்கள் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ரபீக் நகர் சேரியிலிருந்து தியோனர் குப்பைக் கிடங்கிற்கு செல்லும் வழி

தியோனர் குப்பைக் கிடங்கில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகள் மொத்த மும்பையையும் அடர்த்தியான புகையால் மூடிவிடும். கழிவுகளுக்கு இடையே கலந்திருக்கும் இரசாயனப் பொருட்கள் மற்றும் அதிலிருந்து உற்பத்தியாகும் மீத்தேன் போன்ற அபாயகரமான வாயுக்கள் நெருப்புப் பிடித்துக் கொள்ளும் போது அவற்றை அனைப்பதற்கு பலநாட்கள் ஆவதுடன், ஒட்டுமொத்த மும்பையின் நுரையீரலுக்கும் கான்சரைப் பரிசளித்துச் செல்கின்றன. மேலும் தற்போது கழிவுகளின் காரணமாக நிலத்தடி நீரும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ரஃபீக் நகர் வாழத்தகுதியற்ற இடமாக இருப்பினும், மும்பைக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளிகள் வேறு எங்கும் தங்குமிடம் கிடைக்காத நிலையில் கிழக்கு மும்பைச் சேரிகளான இந்தப் பகுதிகளில் ஒதுங்குகின்றனர். அதே போல் கிழக்கு மும்பை சேரிகளில் சில ஆண்டுகளாக வசிப்பவர்கள் பின்னர் வேறு பகுதிகளில் இடங்களில் வீடு தேடினாலும் ”கச்ராவாலாக்கள்” (குப்பை பொறுக்குபவர்) எனச் சொல்லி வீடுமறுக்கப்படுவதாகச் சொல்கிறார் 45 வயதான சவுக்கத் சயீத்

கிழக்கு ‘மும்பை’ எனச் சொல்லப்பட்டாலும் மும்பையின் ’அடையாளங்களென’ சொல்லிக் கொள்ளப்படும் பளபளப்பான ஷாப்பிங் மால்களோ, வழுக்கும் சாலைகளோ, நீச்சல் குளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளோ இந்தப் பகுதியில் இல்லை. தாராவியைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் இந்தப் பகுதியை ஏழ்மையான தாராவி எனப் புரிந்து கொள்ளலாம். மும்பை கிழக்கு வார்டின் 78 விழுக்காடு மக்கள் தொகை சேரிகளில் தான் வசிக்கின்றது.

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமெனப் பீற்றிக் கொள்ளப்படும் மும்பையில் தான் 28 பில்லியனர்களும், 45,000 மில்லியனர்களும் வசிப்பதாகவும் அவர்களது மொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 820 பில்லியன் டாலர்கள் (53.30 லட்சம் கோடி ரூபாய்) என மதிப்பிடப்படுகின்றது (New World Wealth Report – 2016). இந்தப் பணக்கார மும்பையின் ஆசன வாயாகவே மும்பையின் சேரிகளை அரசு நிர்வாகம் மதிக்கின்றது.

இது வெறும் குப்பைக் கிடங்கு பற்றிய பிரச்சினை அல்ல. கடுமையான வறுமை, கீழ்த்தரமான வாழும் சூழல், சிவில் நிர்வாகப் பணிகள் புறக்கணிப்பு, குடிநீர்த் தட்டுப்பாடு, கல்வி நிலையங்களோ மருத்துவ வசதிகளோ இல்லாத நிலை, ரியல் எஸ்டேட்டிலிருந்து குடிநீர் சப்ளை வரை கட்டுப்படுத்தும் மாபியா கும்பல்கள், அந்த மாபியா கும்பல்களின் போதை வியாபார வலைப்பின்னல் என மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மும்பையின் சேரிகளைப் பராமரிக்கிறது அரசு நிர்வாகம்.

மோசமானவற்றில் முதலாவதாக நிற்கின்றன மும்பைக் கிழக்கு வார்டில் அமைந்துள்ள சேரிகள். குறிப்பாக தியோனர் குப்பைக் கிடங்கின் இருபுறமும் அமைந்துள்ள சேரிப் பகுதிகளின் நிலை விவரிக்கவொண்ணாததாக உள்ளது. 90 ஆண்டுகளுக்கு முன் தியோனர் பகுதியைக் குப்பைக் கிடங்கு அமைப்பதற்காக உருவாக்கிய போது, அங்கே இருந்த குடியிருப்புப் பகுதிகள் இவ்வளவு அடர்த்தியானதாக இல்லை என்பதோடு அந்தக் காலகட்டத்தில் மும்பை உற்பத்தி செய்த கழிவுகளும் குறைவாகவே இருந்துள்ளது.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் நகரங்களை மட்டுமே – குறிப்பாக அதில் உள்ள பணக்காரர்களின் பகுதியை மட்டும் – குறிவைத்து வளர்த்தெடுத்த அதே சமயம், ஆகப் பெரும்பான்மையான மக்கள் ஈடுபட்டிருந்த விவசாயம், கிராமப்புற நெசவு உள்ளிட்ட தொழில்களை அழித்தொழித்தது. ஊரகப் பகுதிகளில் பிழைப்பை இழந்த மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்தனர். நாடெங்கும் பிழைப்புத் தேடி அலைந்தவர்களை மும்பை ஈர்த்ததில் எந்த வியப்புமில்லை. அவ்வாறு வந்து குவிந்த உழைக்கும் மக்களைக் கொண்டு பணக்காரர்களின் உலகத்தை அழகுபடுத்துவதும், அந்த மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொள்வதும் நடந்தது. அதே சமயம், இவ்வாறு வந்து குவிந்த மக்களுக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புறக்கணித்தது – மக்கள் தியோனர் போன்ற சேரிகளில் வந்து விழுந்தனர்.

ஒரே ராக்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சாட்டிலைட்டுகளை அனுப்பியதாக இந்தியா பெருமை பீற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் தியோனர் குப்பைக் கிடங்கில் சிறுவர்கள் வெறும் கைகளால் கழிவுகளுக்கு இடையே ஏதாவது கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கழிவுகளைக் கையாள்வது, அவற்றை மட்கும் / மட்காத குப்பைகள் எனத் தரம் பிரிப்பது, மறுசுழற்சி செய்வது என அனைத்தும் இயந்திரமயமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் “வல்லரசு” இந்தியாவின் எதிர்கால மன்னர்களோ குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.

– முகில்

மேலும் படிக்க:

‘Shah Rukh won’t shake my hands, see how they smell’: The stench of despair from Mumbai’s underbelly

திருத்துறைப்பூண்டி போலீசின் காலில் மிதிபடும் ஜனநாயகம்

2

னநாயக நாடு ஒன்றில் விவசாயிகளின் தற்கொலை குறித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்கிறீர்கள். அந்நாட்டு ஜனநாயகத்தை காக்கும் பொறுப்புள்ள போலீசு அந்த அனுமதியை ஆய்வு செய்து, விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசுவது வன்முறைக்கு வழிவகுக்கும், சீருடையுடன் கொடியும் தடியும் முதலான ஆயுதங்களை வைத்துள்ளீர்கள், ஏற்கனவே விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் அளித்து விட்டதால் நீங்கள் கூட்டம் நடத்துவது தேவையற்றது என்று பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கிறது. இது கற்பனை இல்லை. திருத்துறைப்பூண்டியில் மக்கள் அதிகாரம் நடத்த இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசு இப்படித்தான் எழுதிக் கொடுத்திருக்கிறது. இதுதான் இந்தியா – தமிழகத்தில் நிலவும் அதி உயர் ஜனநாயகத் தரம். செத்துப் போன விவசாயிகள் குறித்து நீங்கள் கூட்டம் நடத்த தேவையில்லை என்று அலட்சியமாகவும் சாதரணமாகவும்  கூறும் இந்த ஜனநாயகத்தின் பெயர் சர்வாதிகாரமா காட்டாட்சியா போலீஸ் ராஜ்ஜியமா? கீழே போலீசு எழுதிக் கொடுத்திருக்கும் ஆணவ ஆவணத்தை படியுங்கள்!

– வினவு

திருத்துறைப்பூண்டி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரின் செயல்முறை ஆணை

முன்னிலை :
திரு.M.கண்ணதாசன்
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
திருத்துறைப்பூண்டி உட்கோட்டம்,
திருவாரூர் மாவட்டம்.

ந.க.எண்: ……/து.கா.க/திரு.பூண்டி/2017
நாள்:   .02.2017

பொருள்:- காவல் – திருத்துறைப்பூண்டி உட்கோட்டம் – திருத்துறைப்பூண்டி காவல் சரகம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்துநிலையம் அருகில் விளக்க பொதுக்கூட்டம் நடத்தக்கோரி மனு செய்தது  – காவல் துறை அனுமதி மறுப்பது தொடர்பாக

பார்வை:- திரு முரளி, மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம் அமைப்பு, அம்மையப்பன், திருவாரூர் என்பவரின் மனு…

தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கும், இறந்த விவசாயிகளுக்கும் நிவாரணம் கோருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டி காவல் சரகம், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் எதிர்வரும் 26.02.17 அன்று மாலை 17.00 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் திரு.காளியப்பன் அவர்கள் தலைமையில் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதாக சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள் அச்சடித்து தாங்கள் அமைப்பு வெளியிட்ட தகவலின் பேரிலும், மாவட்ட செயலாளராகிய தாங்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் அணுகி பொதுக்கூட்டம் நடத்த கோரியிருந்த மனுவின் பேரிலும், பரிசீலனைக்கு பிறகு தங்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் அறிவிக்கப்பட்டு, தாங்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகின்றது

1) தாங்கள் வலியுறுத்தியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான நிவாரணம் குறித்து ஏற்கனவே தமிழக அரசு கடந்த வாரம் நிவாரணம் அறிவிப்பு செய்துள்ளது. மேற்படி கோரிக்கைகளுக்காக தங்களது அமைப்பு நடத்தும், விளக்க பொதுக்கூட்டம் தேவையற்ற ஒன்றாகும். இத்தகைய சூழ்நிலையில் தாங்கள் நடத்தும் பொதுக்கூட்டம் பொதுமக்கள் மத்தியில் வன்முறை போராட்டத்தினை தூண்டும் விதமாகவும், பொதுக்கட்டம் குறித்து வெளியிட்டு வரும் அறிக்கைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும் உள்ளதால் இதனால் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

2) மேலும் இதே போன்று விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நிவாரணம் கோரி கடந்த 11.01.17 அன்று திருவாரூர் நகர காவல் சரகம், திருவாருர் புதிய இரயில் நிலையம் அருகில் தொடர் முழக்க ஆர்பாட்டம் நடத்த தாங்கள் திருவாருர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரியிருந்த மனுவின் பேரில் தங்களுக்கு நிபந்தனையுடன் செயல்முறை ஆணை வழங்கிய நிலையில் தாங்கள் நடத்திய தொடர்முழக்க ஆர்பாட்டத்தில் நிபந்தனைகளை மீறி உரை நிகழ்த்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாகவும், மேலும் போராட்டத்தின் போது தங்களது அமைப்பினர் சீருடை அணிந்து பெரிய அளவில் தடி மற்றும் கம்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தமாறு அறிவுறுத்தியும் மீறி அத்தகைய ஆயுதங்களை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளீர். இதுகுறித்து திருவாரூர் நகர காவல் நிலைய குற்ற எண். 08/17 u/s. 143, 188, 504, IPC r/w 109 IPC-ன் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடதக்கது

3) மேலும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடமானது மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாகும். தங்களது பொதுக்கூட்டத்திற்கு தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களிலிருந்து அமைப்பினர் வாகனங்களில் வரும் சமயத்தில் திருத்துறைப்பூண்டி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேற்கண்ட காரணங்களால் தாங்கள் கோரிய விளக்க பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகின்றது.

இச்செயல்முறை ஆணையினை பெற்றுகொண்டமைக்கு ஏற்பளிக்கவும்.

காவல் துணை கண்காணிப்பாளர்
திருத்துறைப்பூண்டி உட்கோட்டம்.

 

பெறுநர்:
திரு. முரளி, மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம் அமைப்பு,
அம்மையப்பன், திருவாருர்.

நகல்:
1. காவல் கண்காணிப்பாளர், திருவாரூர் மாவட்டம், திருவாரூர்… மேலான பார்வைக்காக.
2. காவல் ஆய்வாளர், திருத்துறைப்பூண்டி காவல் நிலையம்.

காவல் ஆய்வாளர், திருத்துறைப்பூண்டி (இந்த செயல்முறை ஆணையினை மனுதாரருக்கு சார்வு செய்து ஏற்பளிப்பு நகலை உட்கோட்ட அலுவலகம் அனுப்பு வைக்கவும்)

***

மக்கள் அதிகாரம் கண்டன சுவரொட்டி
அரசின் நிவாரணம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் கண் துடைப்பு நடவடிக்கையே, வேதாரண்யத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை – மக்கள் அதிகாரம் கண்டன சுவரொட்டி

 

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்