யார் இந்த சவுக்கு?
கை உடைக்கப்பட்டது சரிதானா?
தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

யார் இந்த சவுக்கு?
கை உடைக்கப்பட்டது சரிதானா?
தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நேற்றைய தினம் சென்னையில் திரு. சச்சின் எனும் 25 வயது சகோதரர் வெப்ப வாதம் ஏற்பட்டு அதன் விளைவாக ரேப்டோமயோலைசிஸ் எனும் தசைச் சிதைவு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தவனாய் இந்த விழிப்புணர்வு கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.
அதீத வெப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து நீண்ட நேரம் கடினமான பணியைச் செய்யும் போது தசைகள் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால் ஓரளவுக்கு மேல் தாங்கும் சக்தியை இழந்து சிதைவுக்கு உள்ளதாகத் தொடங்கி விடுகின்றன. அப்போது தன்னகத்தே கொண்ட பொட்டாசியம் பாஸ்பேட்க்ரியாடினின் கைனேஸ் மயோகுளோபின் யூரிக் ஆசிட் ஆகிய பொருட்கள் மிக அதிக அளவில் ரத்தத்தில் கலந்து விடும்.
இத்தகைய நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பணியை நமது சிறுநீரகங்கள் செய்ய வேண்டும். ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் வெப்பமான சூழ்நிலையில் இருந்தமையால் அதீத நீர்ச்சத்து இழப்பு நிலையின் விளைவாக சிறுநீரகங்கள் தொய்வாகவே அதன் பணியைச் செய்யும்.
கூடவே ஒரே நேரத்தில் மிக அதிகமான அளவில் நச்சுப் பொருட்களை சுத்தீகரிக்க வேண்டிய பணியை சிறுநீரகங்கள் செய்ய உந்தப்படும் போது அவையும் அயர்ச்சிக்கு உள்ளாகி தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்யத் துவங்கி விடும். இதன் பொருட்டு ரேப்டோமயோலைசிஸ் – மருத்துவ அவசர நிலையாக உருமாறும்.
– அதீத தசை வலி
– தசைகளில் வீக்கம்
– தசைத் தளர்ச்சி
– சிறுநீர் நிறம் அடர்த்தியாக செல்வது (தேநீரின் நிறம் முதல் ரத்த நிறத்தில் செல்வது) ஆகியவை அறிகுறிகள்.
படிக்க: ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்) | நூல் மதிப்புரை
உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்து க்ரியாடினின் கைனேஸ் அளவுகளைச் சோதித்து ரேப்டோமயோலைசிஸ் உறுதி செய்யப்பட்டு அவசர சிகிச்சை ஆரம்பமாகும். ரத்த நாளம் வழி திரவங்களும், தாதுஉப்புகளையும் ஏற்ற வேண்டும்.
சிறுநீரகம் செயல்பட மறுத்தால் டயாலசிஸ் எனும் ரத்த சுத்தீகரிப்பு சிகிச்சை செய்து நச்சுப் பொருட்களை வெளியேற்றி சிறுநீரகங்களுக்கு சற்று ஓய்வு அளிக்க வேண்டும். ரேப்டோமயோலைசிஸ்- விபத்துகளால் ஏற்படும் காயங்கள் / தீக்காயங்கள் ஆகியவற்றால் ஏற்படலாம். சிறுகச் சிறுக உடல் தசைகளுக்கான ஒர்க் அவுட்களைக் கூட்டிக் கொண்டே செல்லாமல் திடீரென அதிரடியாக அதீத பளுவை தசைகளுக்கு ஒர்க் அவுட் மூலம் கொடுத்தாலும் ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம்.
நீண்ட தூரம் ஓடுபவர்களும் தங்களது நீர்ச்சத்து மற்றும் தாது உப்பு அளவுகளை பராமரிக்காமல் தசைகளுக்குத் தேவையான மீளும் காலத்தை வழங்காமல் தொடர் சிரத்தைக்கு உள்ளாக்கினால் ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம். சில விஷப்பாம்புக் கடிகளில் தசைச் சிதைவு ஏற்படுவதைக் காண்கிறோம்.
மனநோய் சிகிச்சை மருந்துகள், ஸ்டாட்டின் எனும் கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரை உட்கொள்ளும் நீரிழிவு நோயர்கள் மற்றும் கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு அரிதிலும் அரிதாக ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம். கவனம் தேவை.
மது அருந்துபவர்கள், ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதை வஸ்துக்களை உபயோகப்படுத்துபவர்களுக்கு அதீத வெப்பத்தால் நீர்ச்சத்து குறைவு ஏற்படும் போது ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம். முதியோரும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
எப்படி தற்காத்துக் கொள்வது? காயங்கள் குறிப்பாக பெரிய அளவில் தீக்காயம் அடைந்தவர்கள் – அதற்குப் பிறகு சில நாட்கள் இந்த ரேப்டோமயோலைசிஸ் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
படிக்க: மழைவெள்ளத்திற்குக் காரணம் காலநிலை மாற்றமா? தொழில்நுட்ப பிரச்சினையா?
வெப்பம் அதிகமாக நிலவும் சூழ்நிலையில் தசைகளுக்கு தொடர்ந்து அதிக நேரம் ரெக்கவரி நேரம் இல்லாமல் வொர்க் அவுட் / நீண்ட நேரம் ஓடுவது / சைக்ளிங் செய்வதை தவிர்க்கலாம். முறையாக நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகளை பராமரித்து வருவது நல்லது.
வெயிலில் கடினமான வேலைகள் செய்பவர்கள் கட்டாயம் அவ்வப்போது நிழலில் ஓய்வு எடுப்பதையும் நீர் அருந்துவதையும் உறுதி செய்ய வேண்டும். ரேப்டோமயோலைசிஸ் அரிதானது எனினும் ஏற்படும் போது உயிருக்கு ஆபத்தான அவசர நிலையாகும்.
– அதீத தசை வலி
– தசை வீக்கம்
– சிறுநீர் ரத்தம் போல சிவப்பாகச் செல்லுதல் ஆகிய அறிகுறிகளை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

புதிய ஜனநாயகத்தின் மே 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – மே 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
குறையும் வாக்குப்பதிவு:
பா.ஜ.க-விற்கு மட்டும்தான் நெருக்கடியா?
தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!
பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!
நாடாளுமன்றத் தேர்தல்: மாற்று அரசு கட்டமைப்பைக் கோரும் மக்கள் கோரிக்கைகளும் அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!
பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? வழிகாட்டும் வெளியீடு!
பாசிசக் கும்பலின் பிடியில் திரைத்துறை: மோடி கும்பலின் அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரம்!
சத்தீஸ்கர் படுகொலை: பாசிசக் கும்பலால் நடத்தப்படும் நரவேட்டை
ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்கா-இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு
மணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த
டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரை!
மோடி – அமித் ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட
மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்!
06.05.2024
கண்டன அறிக்கை
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா பரிந்துரை செய்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவேந்திர பால் புல்லரை விடுதலை செய்வதற்காக காலிஸ்தான் ஆதரவு குழுவான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பிடம் இருந்து 2014 – 2022 வரை ரூபாய் 134 கோடி பணம் பெற்றதாகவும், காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவான உணர்வுகளை தூண்டுவதாகவும் அகில இந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அஷூ மோங்கியா அளித்த புகாரின் அடிப்படையில் சக்சேனா இந்த பரிந்துரையைச் செய்துள்ளார்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அறிவு ஜீவிகள் அனைவரையும் பொய்யாக கைது செய்து சிறையில் அடைக்கவே பாசிச மோடி அரசால் திட்டமிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது பல வகைகளில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
படிக்க: தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!
எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கிய மோடி அமித்ஷா பாசிச கும்பல், மக்கள் போராட்டங்களின் முன் தோற்று, கோழையைப் போல் அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அவரையும் அக்கட்சியையும் மொத்தமாக அழிக்கும் நோக்கத்துடன் தற்பொழுது தடைசெய்யப்பட்ட அமைப்பிடமிருந்து நிதி வாங்கினார் என்ற ஒரு சதி வழக்கை திட்டமிட்டு அவர் மீது போட்டுள்ளது.
தனக்கு ஒத்து வராத, கீழ்படியாத அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் பொய் வழக்குகளையும் பல்வேறு சதி வழக்குகளையும் போட்டு அவர்களை சிறையில் அடைக்கும் சதியே இது.
படிக்க: சேலம்: ஓமலூர் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை! | மக்கள் அதிகாரம்
யார் மீது வேண்டுமானாலும் எவ்விதமான வழக்குகளையும் பதிவு செய்யலாம். அதற்கு எவ்விதமான ஆதாரங்களும் தேவையில்லை. கைது செய்துவிட்டு அதற்குப் பிறகு எல்லா விதமான பொய்யான சான்றுகளையும் பாசிச பிஜேபி ஆட்சியாளர்கள் உருவாக்கி விடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை.
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்கமே இந்த சதி வழக்காகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பல், அமைதியான முறையில் ஒரு போதும் செயல்படாது என்பதையே கெஜ்ரிவால் மீதான நடவடிக்கை உள்ளிட்டு அனைத்து பாசிச நடவடிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன.
இதற்கு எதிரான செயல்பாட்டை எதிர்க்கட்சிகள் தேர்தல் மேடைகளில் மட்டும் மேற்கொள்ளாமல் வீதிகளில் மக்களை திரட்டி மக்கள் எழுச்சிகளை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா | 300 பெண்கள் பாலியல் வன்கொடுமை | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அமித்ஷாவிற்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களுக்கு மிரட்டல்!
| தோழர் ரவி | வீடியோ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மார்க்சியம்..!
சுரண்டல்கள்
சூரையாடிய போது
சுகமில்லாமல்
தொழிலாளி ஏங்கித் தவிக்கும் போது!
வர்க்க பிரச்சினை
வாழ்க்கை முழுவதும்
நிரம்பிய போது!
முதலாளித்துவத்தின் கோரப்பிடிகள்
மூச்சு விடாமல்
தொழிலாளி வர்க்கத்தை
இறுக்கியபோது!
மொழி, இனம், சாதி, மதம்
சூழ்ந்து நின்று
அடித்தபோது!
மக்களின் வலிசொல்ல
வழியில்லாமல்
நிர்க்கதையாய்
நின்றபோது!
ஒடுக்கப்பட்டு
ஓரங்கட்டி
கேவலமாய் திட்டி
ஒதுக்கி வைக்கும்
சாதிய படிநிலை போது!
இருப்பவன்
இல்லாதவன் என்ற
பிரிவினை தோன்றும் போது!

கூலிக்கு மாரடிக்கும்
கும்பல்கள் ஏன்
இன்னும் குனிந்தே கிடக்கிறது
என்று நினைக்கும் போது!
வானம், காற்று, நிலம், நீர்
பொதுவாக இருந்தும்
தனியுடைமை ஆனது எப்படி
என்று கேள்வி எழும்போது!
எல்லோரையும்
பாதாள குழியில் தள்ளிப்
புதைக்கும் இந்த அரசை
ஏன் ஆதரிக்க வேண்டும்
என்ற எண்ணம் எழும் போது!
காதல் மறுப்பு திருமணங்கள்
காலமெல்லாம் மறுப்பது ஏன்
என வினவும்போது!
ஊர் ஊராய் ஏன் இன்னும்
சாதி கலவரங்கள்
தீயிட்டு எரித்துக் கொள்கின்றன
என்று தோளை நிமிர்த்தி
கேள்வி கேட்கும் போது!
பாலியல் தொல்லையால்
பலியாகிப் போன
பச்சிளம் பெண்களுக்கு
ஏன் இந்த நிலைமை என்று
கோபப்படும் போது!
உழைத்த செல்வங்கள்
வேறொரு பக்கம்
சேர்ந்த போது!
அரசியல்வாதியின் ஊழல்களும்
கார்ப்பரேட்டின் திருட்டுத்தனமும்
காலூன்றி, கால் வயிற்றுக்
கஞ்சி குடிக்கும் தொழிலாளியின்
உரிமையை ஏன் தட்டிப் பறக்கிறது
என்ற சிந்தனை நிலவும் போது!
போதும், போதும், போதும்,
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை
வாழ்வதற்கு இடமும்மில்லை
வாருங்கள் தோழரே
நம்மின் இத்தனை பிரச்சினைக்கு
மாற்றம் மார்க்சியம் என்று
முழங்கு – நின்று!
மணிவண்ணன்
பாசிஸ்டுகளின் அன்ன போஸ்ட் வியூகம் | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கல்குவாரிகளுக்குள்
புதைக்கப்படும் அப்பாவி உழைப்பாளி மக்கள்!
கந்தகத் துகள்களுக்குள்
சிதறிய உடல்களை பார்க்கும்
குடும்ப உறவுகளின் கண்ணீரும், கதறல்களும்
தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன.
அரசு அதிகாரிகளும், கல்குவாரி முதலாளிகளும்
இணைந்து அடிக்கும் கொட்டமும்
நீண்டு கொண்டுத்தான் இருக்கிறது.
முதலாளிகள் சொத்துகள் சேர்த்து உடல் வளர்க்க,
அற்ப கூலிக்காக உடல் சிதறி
அப்பாவி உழைக்கும் மக்கள் மட்டும்
மாண்டு போவது என்ன நீதி?
வெடித்த சத்தம் பல மைல் தொலைவில் இருக்கும்
ஊர் மக்களின் காதில் கேட்டு ஓடி வர…
இதுவரை நவ துவாரங்களையும் அடக்கிக் கொண்டு இருந்த போலீசு
போராடும் மக்களை தடுக்கவும், கலைக்கவும் ஓடி வருகிறது.
“எத்தனை உயிர்கள் பிரிந்தது?” என்று கணக்கெடுப்பு நடத்த
விஜயம் செய்யும் அரசு அதிகாரிகளே,
உங்களின் கேளாத செவிகளை கேட்க
இன்னும் எத்தனை பெண்களின் தாலி அறுபட வேண்டும்?
இன்னும் எத்தனை குழந்தைகள் அப்பாக்கள்
இழந்தவர்களாய் மாற்றப்பட வேண்டும்?
எப்போது உங்கள் செவிகளில் கேட்கும்?
பட்டாசு ஆலையோ, கல் குவாரியோ
தினம் தினம் கந்தகத் துகள்களுக்குள்ளேயே
கரைந்து போகும் மனிதர்களாய், அப்பாவி உழைக்கும் மக்கள்.
![]()
செந்தாழன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மே 5 | ஆசான் காரல் மார்க்சின் பிறந்த தினம்! | தோழர் யுவராஜ் | வீடியோ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


03.05.2024
சேலம் மாவட்டம், ஓமலூர் தீவட்டிப்பட்டியில்
தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை!
கலவரத்துக்கு காரணமான ஆதிக்க சாதி வெறியர்களை கைது செய்!
ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்!
கண்டன அறிக்கை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி வட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையக்கூடாது என்று ஆதிக்க சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விழா பாதியில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கோயில் மூடப்பட்டது.
இந்த பிரச்னை தொடர்பாக நேற்று ( 2.05.2024) காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த அதிகாரிகள், கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் வரக்கூடாது என தடை விதிக்க முடியாது. அனைவரும் சென்று வழிபடும் வகையில்தான் அரசு வழி வகுத்துள்ளது என்றனர். இதுதொடர்பாக ஊரில் கலந்து பேசி நாளை (இன்று) முடிவு எடுப்பதாக தெரிவித்து விட்டு சென்றுள்ளனர்.
படிக்க : மே தினத்தில் சூளுரைப்போம்! | தோழர் யுவராஜ் | வீடியோ
தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிப்பதை அரசு தடுக்காது என்பதை அறிந்த ஆதிக்க சாதி வெறியர்கள் திட்டமிட்டு நேற்று கலவரத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இதில் தீவட்டிப்பட்டியில் உள்ள பல கடைகள் எரிக்கப்பட்டும் அடித்து நொறுக்கப்பட்டும் சேதம் அடைந்துள்ளன. கலவரம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 31 பேரை இதுவரை போலீசு கைது செய்துள்ளது.
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்று சொல்வதற்கு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இது நாள் வரை அப்படிப்பட்ட இழிவான ஒரு நிலைமை இருந்தது என்றால் அதற்குக் காரணமான அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டது, சமூக நீதியில் முன்னேறிவிட்டது என்றெல்லாம் பெருமை பொங்க பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடக்கூடாது என்ற அவலமும் நிறைவேறி உள்ளது.
படிக்க : பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்
அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதிவெறியர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்தக் கலவரம் என்பது திட்டமிட்டதாகும். இதற்குக் காரணமான ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட வேண்டும். ஆதிக்க சாதி வெறியை தூண்டிவிட்டு வயிறு வளர்க்கும் ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தமிழ்நாடு அரசு முற்றாக தடை செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மேலும்
![]()
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
மே தின கவிதை | வீடியோ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ரஞ்சித் vs கம்யூனிசம் | அம்பேத்கரை இழிவுபடுத்திய இளையராஜா |
தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மே தினத்தில் சூளுரைப்போம்! | தோழர் யுவராஜ் | வீடியோ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைக்கும்
பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
