Wednesday, May 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 98

மூடு டாஸ்மாக்கை! – மக்கள் நேர்காணல் | வீடியோ

மூடு டாஸ்மாக்கை! – மக்கள் நேர்காணல் | வீடியோ

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கஞ்சா விற்பனை கும்பலை தட்டிக்கேட்ட போராளிகள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள்!

கஞ்சா விற்பனை கும்பலை தட்டிக்கேட்ட போராளிகள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள்!

கிரிமினல் கும்பல்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

சட்டவிரோத லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையைக்  கண்டித்து இயக்கம் நடத்திய சேலம் DYFI மாவட்டச் செயலாளர் தோழர் பெரியசாமி, சமூக விரோதக் கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் இதே போல கஞ்சா விற்பனை கும்பலுக்கு எதிராக போராடிய DYFI தோழர் தவூபிக் தாக்கப்பட்டதை நாம் அறிவோம்.

போதை சீரழிவுக்கு எதிராக இயக்கம் நடத்தும் போராளிகள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். தோழர் பெரியசாமியை தாக்கிய கிரிமினல் கும்பல்கள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், சட்டவிரோத லாட்டரி, கஞ்சா விற்பனை ஆகியவற்றில் ஈடுபடும் கிரிமினல் கும்பல்கள் போலீசின் கள்ளக் கூட்டு இல்லாமல் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

லஞ்சம் வாங்கிக் கொண்டு போலீசே கிரிமினல் கும்பல்களை பாதுகாப்பதால்தான், சமூக விரோதச் செயல்களை எதிர்த்துப் போராடும் பெரியசாமி போன்ற செயற்பாட்டாளர்கள் கிரிமினல் கும்பல்களால் இப்படி துணிச்சலாக தாக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு போலீசின் “கஞ்சா வேட்டை 2.0” என்பதெல்லாம் வெறும் பம்மாத்து என்பதற்கான நிரூபணங்களே போராளிகள் மீதான தொடர் தாக்குதல்கள்.

சீரழியும் இளைஞர்களை கிரிமினல் கும்பல்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், பெரியசாமி, தவூபிக் போன்ற தோழர்களோடு மக்களும் இணைந்து போராடுவதே தீர்வு!

புதிய ஜனநாயகம்
13.07.2023

disclaimer

ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்

மீபத்தில் ஒடிசாவை சேர்ந்த தனியார் செய்தி நிறுவனமான ஒ.டி.வி (ஒடிசா டிவி), இந்தியாவின் முதல் பிராந்திய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை அறிமுகப்படுத்தியது. பொதுவாக ஆங்கில செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை இரண்டு மூன்று நாட்கள் கழித்தே பதிவிடும் பாலிமர், புதியதலைமுறை, நியூஸ் தமிழ் போன்ற தமிழ் செய்தி தொலைக்காட்சிகளின் சமூக வலைத்தள பக்கங்களில் இந்த செய்தி உடனடியாகவே இடம்பெற்றது. ஒரு மாநிலத்தின் பிராந்திய தொலைக்காட்சி ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழியில் சரளமாக பேசும் ஏ.ஐ செய்தி வாசிப்பாளரை வடிவமைத்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

பத்திரிகைத் துறையில் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் என்பது புதியது இல்லை. கடந்த 2018 ஆம் ஆண்டே சீனாவை சேர்ந்த சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆண் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் பிறகு பல நாடுகளில் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளர்கள் பயன்படுத்தப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா டுடே இந்தியாவின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர் சனாவை அறிமுகப்படுத்தியது. விகடன் டிவி-யின் “இம்பெர்பெக்ட் ஷோ” போன்ற யூடியூப் நிகழ்ச்சிகளில் கூட ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் லிசாவிற்கு தனி கவனம் கொடுக்கப்பட்டது. லிசா அசலாக பெண்ணை போல் காட்சியளித்ததும் இந்திய முக ஜாடையில் பொட்டு வைத்துக்கொண்டு காட்டன் புடவையில் கொண்டையோடு ‘சர்வ லட்சணத்துடன்’ காட்சியளித்ததும் இதற்கு முக்கிய காரணம்.

இன்ஸ்டாகிராமில் இந்த செய்திக்குக் கருத்து பதிவிட்டவர்களில் பலர் தமிழ் செய்தி வாசிப்பாளரை  “உனக்கு ஆப்பு வைக்க போறத நீயே வாசிக்கிற பாரு”, “நியூஸ் ரீடர்ஸ் ஃபுட் டெலிவரி வேலைக்கு தயாராகுங்கள்”, “இந்த செய்தியை வாசிக்கும் போது வெச்சான் பாரு ஆப்பு எனக்கு என்று செய்தி வாசிப்பவர் நினைத்திருப்பார்”, “நியூஸ் ரீடர்ஸ்க்கு வேல இல்லாம  போயிரும் போல இருக்கு”, “ரைட் டா அப்போ நியூஸ் ரீடர் வேலைய காலி பண்ண போறீங்க”, “செய்தி தொகுப்பாளர்களுக்கு பை” என்று தங்களது கருத்துகளை ’நகைச்சுவை’யுடனும் ஆதங்கத்துடனும் வெளிப்படுத்தியிருந்தனர்.


படிக்க: செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !


எப்படியிருப்பினும் அனைவரின் கருத்திலும் இந்த ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள் மூலம் செய்தி வாசிப்பாளர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்படவுள்ளது என்ற பொதுவான உண்மை மட்டும் வெளிப்பட்டது.

ஏனெனில் சமீப காலங்களாகவே செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் இதழியல் துறை பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி வருகிறது. தரவுகள் செய்திகள் சேகரிப்பது, ஆய்வு செய்வது, தரவுகள் சரிபார்ப்பது, கட்டுரை எழுதுவது போன்ற வேலைகளை தற்போது ஏ.ஐ-யே செய்கின்றது. சாட் ஜிபிடி-யின் வருகையானது இதில் ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது. குறிப்பாக  இதன் மூலம் சுதந்திர பத்திரிகையாளர்களின் (Independent Journalist) வேலை கேள்வி குறியாக்கியுள்ளது.

சான்றாக, கடந்த பிப்ரவரி மாதம் அசேல் ஸ்பிரிங்கர் என்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய பதிப்பகத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி மத்தியாஸ் டூப்ஃப்னர், “செயற்கை நுண்ணறிவு சுதந்திர பத்திரிகைத்துறையை முன்னெப்போதும் இருந்ததை விடச் சிறந்ததாக்கவும் அதை மாற்றுவதற்கும் ஆற்றல் கொண்டுள்ளது” என்று ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. மேலும் சாட் ஜிபிடி போன்ற ஏ.ஐ கருவிகள் தகவல் ஒருங்கிணைப்பில் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றும் சிறந்த அசல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மட்டுமே இனி தாக்குப்பிடிக்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதன் மூலம் பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து லண்டனைச் சார்ந்த சுதந்திர பத்திரிகையாளரான ஹென்றி வில்லியம்ஸ், “ஏ.ஐ சாட் ஜிபிடி-யிடம் நான் எனது வேலையை இழக்கப் போகிறேன்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் எனது ஒரு மணிநேர வேலையை ஏ.ஐ சாட் ஜிபிடி நொடிகளில் செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


படிக்க: செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் நோக்கமும் வளர்ச்சியும்


ஹென்றி, மென்பொருளுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்து அதில் வரும் கட்டுரையைச் சோதித்துள்ளார். முதலில் அந்த கட்டுரையின் தொனி சற்று எந்திரகதியாகவும் இருப்பினும் முக்கியமான புள்ளிவிவரங்களை உள்ளடக்கியதாகவும் இருந்துள்ளது. ஆனால் அதில் சில மாற்றங்களை செய்த பிறகு மற்ற கட்டுரைகளை போல அதுவும் நன்றாக இருந்ததைக் கண்டு ஹென்றி அதிர்ச்சியடைந்தார். “நான் 500 பவுண்ட் வாங்கும் ஒரு கட்டுரையை சாட் ஜிபிடி 30 வினாடிகளில் இலவசமாக உருவாக்கியுள்ளது” என்றார். மனித தலையீடு இல்லாமல் ஏ.ஐ இயங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

இந்த நிலை பத்திரிகை துறையில் மட்டும் இல்லை. ஒட்டுமொத்த சமூகமும் இந்த படுபாதக நிலையைத் தான் எதிர்நோக்கியுள்ளது. உற்பத்தித்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயற்கை நுண்ணறிவின் வருகையால் கொத்து கொத்தான வேலையிழப்புகளைச் சந்தித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் 30 கோடி வேலைகளை அகற்றக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் என்ற பன்னாட்டு முதலீட்டு வங்கி அறிவித்துள்ளது. இது போன்ற எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்த வண்ணமே உள்ளன.

லிசா போன்ற ஏ.ஐ செய்தி வாசிப்பாளர்கள், ஏ.ஐ பேராசிரியர்கள், வீட்டு வேலைக்கான எந்திரங்கள் போன்றவை உருவாக்கப்படுவதை வளர்ச்சி என்று பார்க்க முடியாது. தொழிலாளர்களை தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் ஏ.ஐ இயந்திரங்களைப் பொறுத்த வேண்டும் என்ற லாபவெறியே முதலாளித்துவத்தின் நோக்கம். இதனை சாட் ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்டபோதே பலர் எச்சரித்தனர். தொழில்நுட்பங்களையும் அறிவியலையும் தனது கேடான லாபநோக்கிற்காக பயன்படுத்தும் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி சோசலிச சமூகத்தைப் படைக்கும் வரை தொழிலாளர்கள் வேலையைவிட்டுத் தூக்கி எறியப்படுவதை தடுத்துநிறுத்த முடியாது.


சோபியா

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல! | வீடியோ

மூடு டாஸ்மாக்கை! 500 கடைகளை மூடுவது தீர்வல்ல!
சமூகத்தை காவுவாங்கும் டாஸ்மாக்கை உடனே மூடு!

மிழ்நாட்டில் டாஸ்மாக் பிரச்சினை என்பது எப்போதும் பற்றி எரிந்து வரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியானதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று பேசத் தொடங்கியது. அதுதான் தமிழ்நாடு அரசை 500 மதுக்கடைகளை மூடுவதை நோக்கித் தள்ளியுள்ளது.

ஆனால் ஒட்டுமொத்த பிரச்சினையும் இதனால் தீர்ந்துவிடாது. டாஸ்மாக்கை மொத்தமாக மூடுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

 

மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!

0

ணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி முதல் குக்கி (Kuki) மற்றும் மைதேயி (Meitei) சமூகத்தினரிடையே இனக்கலவரம் நடைபெற்று வருகிறது. பரவலான வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் அம்மாநிலத்தில் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளன. தற்போது வரை 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் மணிப்பூருக்குச் சென்ற உண்மை கண்டறியும் குழு அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் இன மோதல்களுக்கு அரசு தான் காரணம் என்று குற்றம்சாட்டியது. இதனையடுத்து அக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னி ராஜா (Annie Raja), நிஷா சித்து (Nisha Siddhu) மற்றும் தீக்ஷா திவேதி (Deeksha Dwivedi) ஆகியோர் மீது இம்பால் காவல் நிலையத்தில் ஜூலை 8-ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை மணிப்பூருக்கு பயணம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவான இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் (National Federation of Indian Women – என்.எஃப்.ஐ.டபிள்யூ) உண்மை கண்டறியும் குழுவில் இந்த மூன்று பெண்களும் இடம்பெற்றிருந்தனர். ராஜா என்.எஃப்.ஐ.டபிள்யூ-வின் பொதுச் செயலாளராகவும், சித்து அதன் தேசிய செயலாளராகவும் உள்ளனர். திவேதி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார்.

அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் (121- A), தேசத் துரோகம் (124A), இரு பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல் (153/153-A/ 153-B), அவதூறு (499), வதந்தி பரப்பி அமைதியைக் குலைத்தல் (504 & 505(2)), கூட்டு நோக்கம் (34) ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மூன்று பெண்களும் உண்மை கண்டறியும் குழுவின் மூலம் தாங்கள் கண்டறிந்ததைச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது விவரித்ததற்காக எல்.லிபென் சிங் (L. Liben Singh) என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.


படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!


முன்னதாக, ஒரு முன்னணி கல்வியாளர் மற்றும் இரண்டு குக்கி ஆர்வலர்கள் தி வயர் பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த பேட்டிகளின்போது வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டி மைதேயி ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்குகளில் இம்பால் நீதிமன்றம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் நடந்த மோதல்கள் ”வகுப்புவாத வன்முறை மட்டுமல்ல, அது இரண்டு சமூகங்களுக்கு இடையிலான சண்டை மட்டுமல்ல” என்று உண்மை கண்டறியும் குழுவைச் சார்ந்த மூவரும் ஜூலை 2-ஆம் தேதி ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர். இது ”நிலம், வளங்கள், இனவெறியர்கள் மற்றும் போராளி குழுக்களின் இருப்பு பற்றிய பிரச்சினைகளை உள்ளடக்கியது. அரசாங்கம் அதன் மறைமுக கார்ப்பரேட் சார்பு நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான உத்திகளைப் புத்திசாலித்தனமாக மேற்கொண்டது தான் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது”, என்று அவர்கள் கூறினர்.

மேலும், ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் பிரேன் சிங் மாநில மக்களின், அவர்கள் எந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் தனது அரசியலமைப்பு பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவர் தவறிவிட்டார். எனவே அவர் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். வன்முறை வெடித்த ஒரு வாரத்திற்குள் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை” என்று அவர்கள் கூறினர்.

இந்த நிகழ்வுகளை ”அரசு ஆதரவு வன்முறை” என்று அவர்கள் அழைத்தனர். நியூஸ்கிளிக் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ”இந்த வன்முறை எந்தவொரு கட்டமைப்பும் இல்லாமல் நடக்கவில்லை. இரு சமூகங்களிடையே அவநம்பிக்கை மற்றும் பதட்டத்தைத் தெளிவாக மாநில மற்றும் மத்தியில் ஆளும் அரசுகள் தூண்டிவிட்டு ஒரு முழுமையான உள்நாட்டுப் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளன”என்று அவர்கள் தெரிவித்தனர்.


படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!


“அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்க மக்களைத் தூண்டுவதன் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க இவர்கள் (இம்மூவரும்) சதி செய்கிறார்கள்” என்பதை மேற்கூறிய கூற்று காட்டுவதாக அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையிலான வன்முறையை அரசு ஆதரவு வன்முறை என்று உண்மை கண்டறியும் குழுவினர் கூறியதோடு மட்டுமல்லாமல், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றதை ”மேடை நாடகம்” என்றும் வகைப்படுத்தியதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். பிரேன் சிங் தனது முடிவை மாற்றுவதற்குக் காரணமான மீரா பைபி (The Meira Paibis) நடத்திய போராட்டங்களை இதன்மூலம் அவர்கள் அவமதித்து விட்டதாக லிபென் சிங் மேலும் குற்றம்சாட்டினார். மீரா பைபி என்பதற்கு விளக்கேந்திய பெண்கள் என்று பொருள். இவ்வமைப்பினர் இரவு நேரங்களில் சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகச் செல்லும்போது கைவிளக்குகளை / தீப்பந்தங்களை ஏந்திச் செல்வதால் இவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது.

பல்வேறு உள்ளூர் ஊடகங்களில் தங்கள்மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் குறித்த செய்திகள் வெளியானதன் மூலம்தான் வழக்குப் பதியப்பட்டிருப்பதை அறிந்துகொண்டதாகவும் எஃப்.ஐ.ஆர்-இன் நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்களுள் ஒருவர் கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது; மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம் பாசிச பா.ஜ.க அரசுக்குக் கவலையில்லை (மாநிலத்திலும் சரி மத்தியிலும் சரி). பாசிஸ்டுகளுக்கே உரித்தான இலக்கணப்படி, தனது பிம்பத்தின் மீது மட்டும்தான் அதற்குக் கவலை. தனது பிம்பம் உடைபட நேரிடும்போது அதற்குக் காரணமானவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது; ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உண்மை கண்டறியும் குழுவினரும் இதற்கு விதிவிலக்கல்ல.


பொம்மி

90 மில்லி பாக்கெட் சாராயம் அறிமுகம்: திமுக அரசின் தாலியறுப்பு திட்டம்! | புதிய ஜனநாயகம் போஸ்டர்

90 மில்லி பாக்கெட் சாராயம் அறிமுகம்: திமுக அரசின் தாலியறுப்பு திட்டம்!

குவாட்டருக்கு காசு இல்லாமல், பார்ட்னருக்காக காத்திருக்கும் குடிமகன்களுக்கு, 90 மில்லியில் பாக்கெட் சாராயம்.

கட்டிட வேலை போன்று கடுமையான பணி செய்பவர்களை கவனத்தில் கொண்டு, காலை 7.00 மணிக்கே கடையைத் திறப்பது பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.

ஏழை அடித்தட்டு குடும்பப் பெண்களின் தாலியறுத்து, அரசு கஜானாவை நிரப்பிக்கொள்ள நினைக்கிறது திமுக அரசு!

ஒரு பக்கம் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் என விளம்பரம்; இன்னொரு பக்கம் தானியங்கி விற்பனை இயந்திரம், பாக்கெட் சாராயம்…

“ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம்” என சொல்லிவிட்டு, நாங்கள் சொல்லவே இல்லை என நாக்குமாறி நாடகமாடும் திமுக அரசு இதற்கு மேலும் செய்யும்!

மக்கள் போராட்டங்களே, டாஸ்மாக்கை மூடும்!
“மூடு டாஸ்மாக்கை” என மீண்டும் வீதிக்கு வருவோம்!

புதிய ஜனநாயகம்
11.07.2023

கல்வி ஒரு மாயை.. | என் நினைவுக் குறிப்பு | களம் -2 | கருணாகரன்

கல்வி ஒரு மாயை..

நான் ஐந்தாவது முடித்து ஆறாவது சென்ற காலம் அது. அதுவரை சின்ன பள்ளிக்கூடத்தில் இரண்டு வகுப்பறை மட்டும் இருக்கும் அந்த அறைகளில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த எனது கால்கள் முதல்முறையாகப் பெரிய கட்டிடங்களுக்குள்ளே செல்ல ஆரம்பித்தது..

அந்த நிகழ்வு எனது வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணம், ஐந்தாவது முடித்த கம்பீரத்தோடு ஆறாம் வகுப்பு சேர்ந்த போது முதலில் அங்கு இருக்கும் நபர்களையும் அவர்களின் திறனையும் பார்த்து நான் பயந்து போனேன், சொல்லப்போனால் அவர்கள் மட்டும் என்னைக் கதி கலங்க வைக்கவில்லை, அங்கிருந்த கட்டிடங்களும் மைதானங்களும் கூட  சேர்ந்து என்னை மிக அதிகமாகப் பயமுறுத்தியது.

ஆரம்பத்தில் முதல் இரண்டு நாட்கள் யார்?யார்? எந்த வகுப்பு என்ற எந்த அறிவிப்பும் இல்லாததால் மரத்தடிகளில் மட்டுமே பாடம் கற்பிக்கப்பட, பிறகு ஆளுக்கு ஒரு வகுப்பாக இரண்டு ஆசிரியர்கள் வந்து என்னையும் என் எல்லோரையும்  பிரித்தனர்.

A,B,C என மூன்று பிரிவுகளாகப் பிரித்து மாணவர்களை அதில் உட்கார வைக்க நானும் அதில் ஒருவனாய் மூன்றாவது பிரிவில் சேர்ந்தேன். எனக்கு என் அப்பாவின் மூலம் புதிய சீருடையும் தாயின் மூலம் புதிய ஆலோசனைகளும் கிடைத்தது,எனது வகுப்பறைக்குள் நான் முதல்முறையாகச் செல்ல.

ஆரம்பத்தில் வகுப்பிற்கு வந்த ஆசிரியர்கள் எல்லோரிடமும் சில கேள்விகளைக் கேட்டனர். அந்த கேள்விகள் உங்கள் பெயர்? நீங்கள் எந்த ஊர்? இவை சில மாணவர்களுக்கு மட்டும் இருந்தது, சிலருக்கு இதில் ஒன்று கூடிப் போய் உங்கள் தெரு என்ன? என்று வந்தது, சிலருக்கு அது இன்னும் அதிகமாக உன் அப்பா அம்மா என்ன வேலை செய்கிறார்கள்? என அதிகமாக கூட கேட்டனர்.

எனக்கு அப்போது அது பெரிய கடுப்பை ஏற்படுத்தியது. ஏன் இவர்கள் இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக கேள்விகளை கேட்கின்றனர் என்று.

அந்தக் கேள்விகள் என்னை மிக வலுவாகத் துரத்தினாலும் அதனை புரிந்து கொள்ளக்கூடிய அறிவும் சக்தியும் எனக்கு அப்போது இல்லாததால் நான் அதனை அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


படிக்க: கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்


சில காலம் கழித்து வகுப்பு மாணவர்களும் என் படிப்பை கண்டு, எங்கள் வகுப்பு ஆசிரியருடன் சேர்ந்து என்னை வகுப்பு தலைவர் ஆக்கினர். அந்த அறிவிப்பு வந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல், என்ன செய்வது என்று புரியாமல் முதலில் விழுதுங்கி நிற்க பின் என் நண்பர்களின் துணையால் அதனை ஏற்றுக் கொண்டேன்.

அங்கே ஒரு பழக்கம் உண்டு அது என்னவென்றால்  ரெக்கார்ட் நோட் முதல் கட்டுரை நோட்டு வரை ஆசிரியர்கள்  எழுதக் கொடுக்க, அவற்றை எழுதி முடித்த பிறகு எடுத்துச் சென்று ஆசிரியர்கள் இருக்கும் அறைக்குள் வைக்க என் வகுப்புத் தோழர்கள் சிலர் பயன்படுத்தப்படுவது உண்டு, இது அவர்களின் வழக்கமும் கூட.

அவ்வாறு ஒருமுறை வடிவியல் நோட்டு கட்டுகளை கையில் ஏந்தி என் நண்பர்களுடன் சென்றபோது ஆசிரியர்களின் அறைக்கு வழியில் சில மாணவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டேன். அவர்கள் ஏன் இங்கே? இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.அவர்களிடம் போய் கேட்கலாம் என்று நினைத்து பார்த்தால் அதற்கும் எனக்கு மனம் இல்லாமல் போய்விட்டது,நானும் என் வகுப்பு தோழர்களும் அறைக்குள் உள்ளே செல்ல துணிந்தபோது அந்த அறையில் அப்போது எந்த கூட்டமும் இல்லாமல் இருப்பதை நான் கவனித்தேன்.

ஆசிரியர்கள் கூட அப்போது ஒன்று இரண்டு பேர் தான் இருந்தார்கள் நானும் அதனை எட்டி கவனித்துக் கொண்டு உள்ளே செல்ல துணியை எனது கணக்கு ஆசிரியர் அவர்களின் பெயர் கலைவாணி அவர் என்னுடன் சேர்த்து இரு நபர்களை நீங்கள் கொஞ்ச நேரம் வெளியில் நில்லுங்கள், இவர்கள் மட்டும் உள்ளே வரட்டும் என்று கூறினார். நாங்களும் என்ன காரணம் என எதுவும் கேட்காமல் வெளியில் இருந்த மரத்தடியில் நிற்க ஆரம்பித்தோம்.

அங்கிருந்து ஒரு மரத்தின் அடியில் எனது அக்காவும் அப்போது நின்று கொண்டிருந்தார். அவளை பார்த்த பார்த்தபோது “ஏதோ பல நாட்கள் அனுபவம் போல தெரிந்தது”நான் அவளை கண்டவுடன் வெகுவாக நடக்க அவளும் என்னை கவனித்துவிட்டால். அவள் என்னை பார்த்து “ஏலேய் உனக்கு இங்க என்ன வேலை’என்று கேட்க நானும் அவளிடம் வந்த வேலையை சொல்லிவிட்டு, “நீ எதுக்குமா இங்கே நிற்கிறே” என்று அவரிடம் கேட்டேன்.அதுக்கு அவங்க உள்ள கூப்பிடல வெளியிலே நிக்க சொல்லிட்டாங்க அதனாலதான் நானும் நிக்கிறேன்,நீ எப்படின்னு அவள் என்னை கேட்க “நானும் அப்படித்தான் உன்னை போலயே ஏன்னு தெரியாம வெளியில நின்னுகிட்டு இருக்கேன்” ஒரு இத்தனைக்கும் அந்த இடத்துல பெரிய கூட்டம் எல்லாம் எதுவுமே இல்லை, இருந்தாலும் உள்ள விடல ஏனோ! என்று சலித்துகொண்டன்.

அவள் சில காரணம் இருக்கு, அத உனக்கு நாளைக்கு சொல்றேன். அப்படின்னு சொல்லிட்டு அவள் பேச்சை வேறு பக்கம் திருப்பினால் நானும் அவ்வாறு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தேன்..

பின் அந்த மத்திய வேளையில் கணக்கு பாடம் ஒன்று இருந்தது. அந்த ஆசிரியர் இன்றைக்கு மாலை வடிவியல் நோட்டு கொண்டுவராதவர்கள் யாராக இருந்தாலும்,நாளைக்கு எல்லா வேலையும் முடிச்சிட்டு காலையில வந்தவுடன் உங்க கிளாஸ் லீடர் கிட்ட அதை கொண்டு வந்து கொடுத்துடுங்க, அவனும் சில பிள்ளைகளும் இதனை வாங்கிட்டு எங்க வீட்டுக்கு காலையில் 8:30 மணிக்கு கொண்டு வந்து கொடுத்திரணும் பார்த்துக்கோங்க என்று சொல்லிட்டு எல்லாரையும் கண்டித்து கண்டித்து விட்டு அங்கிருந்து கிளம்ப, எல்லோரும் என்னையவே பார்த்தார்கள் நானும் ” மேடம் வழக்கம் போல் ஏழரை மணிக்கு வந்து ” என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு அடுத்த ஆசிரியரை குறிப்பிட எனது நண்பர்கள் மூலம் சொல்லி அனுப்பினேன்.

அன்றைய  பொழுது முடிந்து இரவும் கடந்து மறுபடியும் ஒரு காலை பொழுது வர ஆரம்பித்தது. அப்போது எனக்கு ஆசிரியர் கொடுத்த வேலைகள் எல்லாம் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. காலையில் விட்டில் இருந்து  சென்றவுடன் அங்கு ஏற்கனவே இருந்த எனது பள்ளி தோழர்களின் நோட்டுகளை சேகரித்து விட்டு பின் 8 மணி வரை காத்திருந்து சில நபர்களின் நோட்டை வாங்கிக்கொண்டு அந்த ஆசிரியரின் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன்.


படிக்க: மாநிலக் கல்விக் கொள்கை: மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.!


அப்போது என்னுடன் எனது பக்கத்து வகுப்பு நண்பர்கள் கூட உடன் வந்தனர். அவர்களில் முக்கியமானவர் எனது தங்கை மாலதி. அவளுக்கு அந்த டீச்சர் அறிவியல் பாடம் எடுக்கிறார். நான் அவளிடத்தில் எனது கடமையைச் சொல்ல, அவளும் ”எனது நோட்டை என் வகுப்பு நண்பர்கள் வாங்காமல் சென்று விட்டனர்; அதனால் தான் நானும் வர வேண்டியது ஆயிற்று!” என்று அவள் கூற எங்களது பயணம் எனது ஆசிரியரின் வீட்டை நோக்கி தொடர ஆரம்பித்தது.

அப்படி நடந்து செல்கையில் அவர்களுடைய வீடும் வந்தது. அவர் வீடு இதுதான் என சிலர் அடையாளம் காட்ட நாங்கள் எல்லோரும் அதனை நோக்கி செல்ல துணிந்தோம்.

அங்கே இரண்டு வீடுகள் இருந்தது அந்த வீடு ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு இருந்தது நாங்கள் அதனைப் பார்த்ததும் மெதுவாக எங்கள் டீச்சரை அழைத்தோம் அவளும் வெளியில் வந்து எல்லோரும் உள்ளே வராதீர்கள் சிலர் மட்டும் வந்தால் போதும் எனக் கூறி சிலரை மட்டும் உள்ளே அழைத்துச் சென்று சிலரை வழியில் நிற்க வைத்தார். அவர்களும் வீட்டுக்குள் வராமல் வெளியிலே நின்று விட்டனர். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை ஏன் இவர் இப்படி நடந்து கொள்கிறார் என எனக்குள் நான் கேட்டவாறு வெளியில் நின்று கொண்டிருந்தேன் அவர்களில் ஒருவராக.

பின்பு அதெல்லாம் முடிந்து விட்ட பிறகு நான் எனது அக்காவிடம் இதனைப் பற்றி சொல்ல அவள் சொன்னால் இது இப்படித்தான் இருக்கும், காரணம் அவங்க எல்லாம் மேல் சாதியை சேர்ந்தவர்கள் நாம அவங்களுக்கு கொஞ்சம் கீழே இருக்கிறோம், அதனால கொஞ்சம் கீழ்தரமா தான் தெரியும் உங்களுக்கும் நாம வீட்டுக்குள்ள வந்தா நாம பள்ளிக்கூடத்துக்குள்ள வந்தா அவங்களுக்கு பெருசா பிடிக்கிறது, இப்படித்தான் சில டீச்சர்ஸ் எல்லாம் வந்து நம்ம ஆளுக்கெல்லாம் இருப்பாங்க நம்மள மாதிரி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அவங்க வந்து இருப்பாங்க, அவங்க எல்லாம் வந்து பெரிதளவில் மதிக்கிறார்களா? என்று கேட்டால் இல்லை, அந்த மாதிரி  என்னதான் படிச்சாலும் என்னதான் பெரிய இடத்துக்கு வந்து போனாலும் எங்க யாரும் சமமா பார்க்கப்படுவது கிடையாது, என்று கூற எனக்கு அது பெரிய அதிர்ச்சியாக மாறியது.

அப்படி என்றால் நாம் இப்போது இங்கே நிக்கிற மாதிரி நம்ம மக்களில் இருந்து பலரும் இப்படித்தான் நின்று இருப்பார்களா என்று அவளிடம் கேட்டேன்.

அவள் அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு என்று சொல்லி தனது பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அவளது பேச்சு  ஜாதி என்ற வார்த்தையைப் பற்றிய புரிதலை ஓரளவுக்கு ஆரம்பித்து விட்டது என்றால் எனது ஆசிரியரின் செயல் கல்வி என்ற வார்த்தையைப் பற்றிய மாயையும் எனக்கு ஆரம்பித்துவிட்டது.

சில நிகழ்வுகள் நம்மை முதிர்ச்சி அடைய செய்யும், பக்குவப்படுத்தும். அது போல் தான் இதுவும் இந்த நிகழ்வு சாதி குறித்த எனது எண்ணத்தைப் பேதம் குறித்த எனது பார்வையைக் கூர்மையடைய செய்தது..

அது அதன் பிறகு நடந்த நிகழ்வுகளில் இருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை எனக்கு வெளிச்சம் இட்டுக் காட்ட உதவியது.

அப்படி ஒரு காட்டுமிராண்டித்தனம் தான் தேசிய கொடியை சிலர் தொடக்கூடாது என்பது..

அதனைப் பற்றிய நிகழ்வுகளைக் களம் மூன்றில் காண்போம்.

கருணாகரன்

நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ்!

டந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி  காலை, தான் ஓட்டி வந்த காரை  நிறுத்த மறுத்ததாகக் கூறி நஹேல் என்ற 17 வயது சிறுவன் பாரிஸ் புறநகர்ப் பகுதியான நன்டெரேயில் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, பாரிஸ் மற்றும் பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ, “தங்களை தற்காத்துக் கொள்ளவே சுட்டோம்”  என்ற  போலீசு துறையின்  பொய் கதைகளை தொகுப்பாக  அம்பலப்படுத்தியுள்ளது. நான்டெர்ரேயில்  இரண்டு போலீசு மஞ்சள் காரை நிறுத்துவதையும் பின்பு காவலர்களில் ஒருவர், கண்ணாடியில் சாய்ந்து, மிகக் குறுகிய தூரத்தில் இருந்து காரை ஓட்டி வந்த சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

கொல்லப்பட்ட சிறுவன் நஹேல், அல்ஜீரியா வம்சாவளியைச் சேர்ந்தவன். பிரான்ஸ் போலீசிடம் புரையோடிப்போயிருக்கும் இனவெறி காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். இந்த குற்றச்சாட்டுக்குத் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் இதேபோல் 13 பேரை பிரான்ஸ் போலீசு கொலை செய்திருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் கருப்பின அல்லது அரேபிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நஹேல் போலீசால் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது; போராட்டங்களை தூண்டியது. காரணம், பிரான்ஸில் மேக்ரான் அரசாங்கம் தனக்கிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு அரசியல் சாசன வழிகளை குறுக்குவழியில் பயன்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து, இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கடந்த நான்கு மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


படிக்க: ரஃபேல் : ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை !


இந்த அமைதியான போராட்டங்களை போலீசு தண்ணீர் பீரங்கிகள் மூலமாகவும், கண்ணீர் புகை குண்டுகள் மூலமாகவும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு ஒடுக்கி வருகிறது.

நேஹேலை நிறுத்திக் கொன்ற போலீசு, மேக்ரோனின் புதிய ஓய்வூதிய  திட்டத்திற்கு எதிராக வெகுஜன எதிர்ப்பாளர்களின் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வரும் BRAV (Brigades for the Repression of Violent Action)  என்ற பிரிவின் உறுப்பினர்களாக இருக்கலாம்  என்று செய்திகள் வந்துள்ளன.

இதற்கிடையில்  போலீஸ் துறை சார்பாக வந்த கூட்டறிக்கையில் போராடும் மக்களை குறிப்பிட்டு, “இந்த காட்டுமிராண்டித்தனமான கூட்டங்களை எதிர்கொள்ளும் போது, ​​அமைதியைக் கடைப்பிடிக்கும்படி கேட்பது போதாது” என்றும், ”இது இந்த அற்ப பூச்சிகளுக்கு எதிரான போருக்கான நேரம்” என்றும் சொல்லிருப்பது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களை “அற்பப்பூச்சிகள்” என்று போலீசு அதிகாரிகள் விவரிப்பது, போலீசின் மக்கள் விரோத மனநிலையை மட்டும் வெளிப்படுத்தவில்லை, பிரான்ஸ் நாட்டில் தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையையும் இது அப்பட்டமாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பணக்காரர்களின் சேவைக்கான மேக்ரான் தலைமையிலான முதலாளித்துவ அரசு தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கப் போலீசு தாக்குதல் குழுக்களை அணிதிரட்டுகிறது என்பதையும் காட்டுவதாக இருக்கிறது.

இந்த வன்முறைகளை பற்றி மேக்ரோன் கூறுகையில், “பல சமூக ஊடகத் தளங்களில் வன்முறைக் கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்படுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.  ஒரு வகையான வன்முறையைப் பிரதிபலிக்கும்  போதையில் அவர்களை ஆழ்த்திய வீடியோ கேம்களில் நாம்  வாழ்கிறோம்” என்கிறார்.   நிகழும் வன்முறைகளுக்கு காரணம், வீடியோ கேம்கள் விதைத்த வன்முறை மனப்பாண்மை என்று சொல்வதன் மூலம்,  நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்களின் போராட்டங்கள், இந்த கட்டமைப்பிற்குள் வாழ வழியின்றி நெரிக்கப்படுவதையும் அதனால் இயல்பாகவே அவர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.


படிக்க: இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?


பிரான்சில் உள்ள வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவை  இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தி, மக்களின் மெய்யான கோரிக்கைகளை பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகள் இல்லாதது, இடதுசாரி கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட ஆளும் வர்க்க ப்ரோக்கர்களைப் போல் செயல்படுவதனால் ஏற்பட்ட அதிருப்தி மனநிலை ஆகியவை தான் இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடக் காரணங்களாகும். இந்த உண்மையான காரணங்களை மறைத்துவிட்டு,  சமூக ஊடகங்கள் அல்லது வீடியோ கேம்களால் தான் வன்முறை வெளிப்பட்டது என்று சொல்வது நிலவும் அநியாயமான சமூக பொருளாதார அரசியல் சூழலை திரையிட்டு மறைக்க நினைக்கும் அயோக்கியத்தனமாகும்.

தொழிலாளி வர்க்க இளைஞர்கள் எதிர்கொள்ளும் யதார்த்த நிலை என்னவென்றால், வேலைகள் இல்லாதது, தரமான கல்விக்கான வழி இல்லாதது, மற்றும் அரசு இயந்திரங்களால் தொடர்ச்சியான  துன்புறுத்தலுக்கு உள்ளாவது ஆகியவையாகும். மேலும் தொழிலாளர்களின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டம்,  தங்களை இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அந்த போராட்டங்களின் கோரிக்கைகளை நீர்த்துப் போகும் வகையில் துரோகத்தனமாக நடந்துகொள்வது ஆகியவை இந்த மக்களை அரசுக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடச் செய்கிறது. இந்த கட்டமைப்பிற்குள் நிலவும் ஒவ்வொரு அமைப்பும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதாக மாறிவிட்டதாலும், மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உரையாடக்கூட போதுமான நிறுவன அமைப்புகள் இல்லாமல் போனதாலும் தான், மக்கள்  தெருப் போராட்டங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை அமைப்பாக்கி தலைமை தாங்கும் புரட்சிகர கட்சி ஒன்று இல்லாதது தான் பெரும் குறையாக இருக்கிறது.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்ட போது எழுந்து பெரும் போராட்டங்களுக்குப் பின், அமெரிக்க ஜனநாயகக் கட்சி போலீஸ் வன்முறை எதிர்ப்புப் போராட்டக்காரர்களுடன் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டது. பின்பு, பைடன் பதவிக்கு வந்த பிறகு, போலீஸ் துறையின் நிதியுதவி மற்றும் இராணுவமயமாக்கலை பெருமளவில் அதிகரிக்க செய்தது. அதாவது போராடும் மக்களின் உணர்வுகளை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பின், மக்களை ஒடுக்கும் போலீசு இராணுவ துறையை வளர்க்க நடவடிக்கைகள் எடுப்பதுதான் எல்லா முதலாளித்துவ கட்சிகளின் இயல்பு. இது பிரெஞ்சு மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆகவே சரியான புரட்சிகர கட்சி அல்லது இயக்கத்தின் வழிகாட்டுதல்கள், தலைமை இல்லாமல் போகும் பட்சத்தில், இந்த போராட்டங்களில் இருந்து ஆளும் வர்க்கம் பாடங்கள் கற்றுக்கொண்டு முன்பைவிட மக்களை கடுமையாக ஒடுக்கும் ஒரு கருவியை கண்டுபிடிப்பதில் தான் போய் முடியும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

இந்த பிரான்ஸ் போராட்டங்கள் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள் புரட்சிகர இயக்கங்களின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன.


சீனிச்சாமி

ஓடிப் போனவரின் கதை!

பெண்ணுக்கு வயது 23-ஐ தாண்டிவிட்டது. வீட்டில் எவ்வித உரிமையும் கிடையாது. செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு எல்லாம் அம்மா தெருவில் வைத்து விளக்குமாற்றால் அடிப்பார். சிறு வயது முதல் தினம் தினம் அந்தப் பெண் சந்தித்த அவமானங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல.

குடும்பத்திலிருந்து வெளியேறுவதே அந்த பெண்ணுக்கு முதல் தேவையாக இருந்தது. அப்பா அம்மா என ஒட்டுமொத்த குடும்பம் தன்னை அடிமையாக நடத்துவதை அந்தப் பெண் விரும்பவில்லை.

வேலைக்குச் சென்ற இடத்தில் காதல் பூத்தது. பெண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். பையனோ ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்.

தினமும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் அடிகளையும் வாங்கிய அந்தப் பெண்ணின் மனதிற்குத் தென்றலாய் இருந்தது காதலனின் பேச்சு.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்ய, அந்தப் பெண்ணோ தான் ஒரு நபரைக் காதலிப்பதைச் சொல்ல, மீண்டும் குடும்பம் அடித்து உதைத்து, சித்திரவதை செய்தது. காதலனும் எப்படியாவது கிளம்பி வந்து விடு நாம் திருமணம் செய்து கொள்வோம் என்கிறான். அந்தப் பெண்ணின் விருப்பத்தை மீறி.


படிக்க : கர்நாடக தேர்தல் முடிவுகள்: பாசிஸ்டுகளின் மிகைமதிப்பீடும், பாசிஸ்டுகளைப் பற்றிய குறைமதிப்பீடும்!


நிச்சயதார்த்தம் முடிந்த அன்று, இரவில் அந்தப் பெண் வீட்டிலிருந்து தப்பித்து ஓடுகிறார். அப்பெண்ணின் குடும்பம் துரத்த ஊர் வேடிக்கை பார்க்கிறது. குடும்பத்திடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார்.

காதலனைச் சந்தித்து நாம் திருமணம் செய்து கொள்வோம் என்கிறார். தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்தால் ஊரில் பிரச்சினையாகும் என்று காதலனுக்கு திடீரென்று ஞானோதயம் பிறக்க அவன் விட்டுவிட்டு ஓடுகிறான்.

என்ன செய்வார் அந்தப் பெண்?

அடிமைப்பட்டுக்கிடந்த இடத்தில் இருந்து தப்பி வந்த பிறகு காதலன் ஏமாற்றிவிட்டு ஓடி விட்டான். திரும்பி அந்த இடத்துக்கு போக வேண்டுமா இல்லை, ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் சாக வேண்டுமா?

எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழ வேண்டும் என்ற இன்னொரு முடிவை அந்தப் பெண் எடுக்கிறார்.

தன்னுடைய பெண் நண்பர்களோடு இணைந்து அறையில் வாழ முடிவெடுக்கிறார். இதைக் கேள்விப்பட்ட அந்தக் குடும்பம், அந்தப் பெண்ணை மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து வர பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அழைத்து வருவது அந்த பெண்ணை மீண்டும் பழிவாங்குவதற்கே தவிர வேறு எதற்காகவும் இல்லை.

 

அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்துக்கு மீண்டும் திரும்பி வர மறுக்கிறார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் குடும்பம் போலீஸ் நிலையத்துக்குச் செல்கிறது. இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணிடம் பேசி பார்க்கிறார். அந்தப் பெண்ணோ குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் தனியாக வாழ்ந்து கொள்வதாகவும் கூறிவிட்டார். அந்தப் பெண் வீட்டிலிருந்து குண்டுமணி நகையைக் கூடக் கொண்டு செல்லவில்லை.

ஆனாலும் போலீசு யோசனை கொடுக்கிறது .”தாய் மாமன் வீட்டிலிருந்து நகையை உங்கள் பெண் திருடிக் கொண்டு ஓடி விட்டதாக ஒரு கம்ப்ளைன்ட் கொடுங்கள். அந்தப் பெண்ணை கைது செய்து கொண்டு வந்து ஸ்டேஷனில் வைத்து விடுகிறோம். பிறகு நீங்கள் வந்து பேசிக் கொள்ளுங்கள்”.

இதைக்கேட்டுப் பயந்துபோன அந்த தாய் மாமன், “இதெல்லாம் என்னால் முடியாது” என்று போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இப்போது வரை அந்தப் பெண் தன் நண்பர்களுடன் இருக்கிறார். இறுதிவரை தனியாக வாழலாம் அல்லது குடும்பத்தினரின் சித்திரவதையை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த புதைகுழியில் போய் விடக் கூட நேரலாம். இதெல்லாம் அந்தப் பெண்ணுடன் தொடர்பானது மட்டுமல்ல.

ஒரு பெண் தன்னுடைய விருப்பப்பட்ட வாழ்க்கையைத் தெரிவு செய்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிறதா இல்லையா? இல்லை என்பது தானே உண்மை.

ஏற்கனவே, இந்த சமூக முறையில் இருக்கின்ற குடும்பம் என்ற நிறுவனம் ஒரு கேடுகெட்ட நிறுவனம். அது எப்பொழுதுமே தனிப்பட்ட ஒரு பெண்ணின் அல்லது ஆணின் சுதந்திரத்தைப் பற்றிய உரிமைகளைப் பற்றியோ ஒருபோதும் யோசிக்காது. ஏற்கனவே, புரையோடிப்போன பழக்கவழக்கங்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு சுமக்கும். அதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான விபச்சாரத்தனமான வேலைகளையும் பார்க்கும். அதையும் மீறிச் சிந்திக்கின்ற குடும்பங்கள், ஏற்கனவே இருக்கின்ற குடும்ப அமைப்பு முறையை உடைத்துவிட்டுப் பிறந்தவையாக இருக்கின்றன.


படிக்க : டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!


இந்த கேடுகெட்ட குடும்ப அமைப்புமுறை தானாக மாறிவிடுமா? இந்தப் பெண்ணுடைய பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். தன்னுடைய வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. வீட்டிலே வாழ்வதற்கும் சரி; வீட்டைவிட்டு வெளியேறுவதற்கும் சரி.

வீட்டைவிட்டு வெளியேறிய அந்த பெண்ணின் தோல்வியைத் துடைப்பதல்ல இந்த குடும்பத்தின் நோக்கம்; மாறாக இழந்துபோன பெருமையை மீட்பதற்காக நடத்துகின்ற நாடகம். இதை அறிந்த போலீசின் செயல்பாடு என்னவாக இருக்கிறது? இந்த அரசமைப்பு முறைக்கு எதிராக அல்லவா இருக்கிறது? அந்தப் பெண் மீது பொய்ப்புகார் கொடுங்கள் நான் கொண்டு வந்து நிறுத்துகிறேன் என்று கூறும் அந்தப் போலீசின் உளவியல் என்னவாக இருக்கிறது? இந்த கேடுகெட்ட குடும்பம் என்ற நிறுவனத்தைக் காப்பதாக அல்லவா இருக்கிறது? போலீசின் உளவியல்தான் நீதிமன்றத்தின், அரசின் உளவியலாக எப்போதும் இருக்கிறது.

சாதி, மதம், குடும்பம், பாரம்பரியம், பழக்கவழக்கம், போலீஸ், நீதிமன்றம் எல்லாம் அரசு என்ற ஒரே சங்கிலியில் இணைக்கப்பட்டவைதான் எதுவும் வேறு அல்ல. இந்த அரசை அடித்து நொறுக்குகின்ற போராட்டத்தைத் தொடங்காமல் தனிப்பட்ட ஒருவரின் விடுதலை சாத்தியமாகலாம். அது ஒருபோதும் ஒரு சமூகத்திற்கான முழுமையானதாக இருக்காது.

மருது

புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஜூலை – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!
♦ ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!
♦ லுலு ஹைப்பர் மார்க்கெட்: எல்லா மாடலும் கார்ப்பரேட் சேவைக்கே! கார்ப்பரேட் சேவையில் ‘எம்மதமும் சம்மதமே’!
♦ அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!
♦ கழண்டது முகமூடி: பாசிசக் கும்பலின் தோல்வி முகமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்க போராட்டமும்!
♦ தோழர் லிங்கன் – ஒரு லட்சிய மீனவன் நம்மை விட்டுப் பிரிந்தார்!
♦ துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!
♦ தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!
♦ ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜியின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!
♦ மதுரை வழக்கறிஞர்கள் கைது: வெறியாட்டம் போடும் என்.ஐ.ஏ!
♦ புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!
♦ படக்கட்டுரை: அமெரிக்காவிலும் கிழிந்தது மோடியின் முகமூடி!
♦ ஒரு அடியாளின் அமெரிக்கப் பயணம்!

கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?

மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைத்துள்ளது காங்கிரஸ். கடந்த முறை 104 தொகுதிகளில் வென்ற பா.ஜ.க, இந்த தேர்தலில் 66 தொகுதிகளை மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், குதிரை பேரம் நடத்தினாலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத அவநிலை பா.ஜ.க.விற்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மக்களின் இந்தத் தீர்ப்பு, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்குமே உற்சாகத்தை அளித்திருக்கின்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்ற வலிமையான நம்பிக்கையையும் இத்தேர்தல் முடிவுகள் அக்கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன.

கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர் ராகுல் காந்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பெருமுதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட நிலப்பரப்பிலிருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று கூறினார்.

“இது 2024 பொதுத்தேர்தலில் பா.ஜ.க. வீழ்ச்சியின் தொடக்கம்” என்று கருத்து தெரிவித்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.

“பாசிச, வகுப்புவாத, பிளவுவாத பா.ஜ.க.வை சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தியதன் மூலம் கர்நாடக மக்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நம்பிக்கை ஒளிக்கீற்றை வழங்கியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி.

இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸுக்கு இது இரண்டாவது வெற்றி. எனினும் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றியைவிட கர்நாடகத்தின் தேர்தல் வெற்றியே காங்கிரஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக கருதப்படுகிறது. காங்கிரஸ் மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும் கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் தோல்வியை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாகக் கருதி மகிழ்கிறார்கள். இதற்கு சில காரணங்களும் உண்டு.

000

கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சியமைத்தது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பஞ்சாபை தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. வென்றது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1985-க்கு பிறகு மீண்டும் ஆளுங்கட்சி ஆட்சி அமைத்ததில்லை என்ற வழக்கத்தை பொய்யாக்கி பா.ஜ.க. வெற்றிபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவிலும், மேகாலயா தவிர்த்த இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியே அமைத்துள்ளது.

மேற்கண்ட தேர்தல்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றிகள், எதிர்க்கட்சிகளிடத்தில் ஒரு ஆழமான கருத்தை பதித்துச் சென்றது. இந்துமதவெறி, தேசியவெறி, ‘வலிமையான தலைவர்’ என்ற மோடியின் பிம்பம் ஆகியவற்றை எதிர்கொண்டு, ஒரு கட்சி பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது மிகச் சவாலான விசயம் என்பதே அந்தக் கருத்து. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த கருத்தை அடித்து நொறுக்கியுள்ளது. அதன் காரணமாகவே இத்தேர்தல் முடிவுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

“கர்நாடகாவில் மதவாதம் எடுபடவில்லை”, “இது மோடிக்கு கிடைத்த தனிப்பட்ட தோல்வி” போன்ற பல்வேறு தலைப்புகளில் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை; கர்நாடகாவில் பா.ஜ.க.வின் தோல்வியை எப்படி மதிப்பிடுவது, புரட்சிகர-ஜனநாயக சக்திகள் பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி-தோல்விகளை எப்படி புரிந்துகொள்வது என்பதை ஆய்வுப்பூர்வமாக தெளிவுபடுத்திக் கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேலைக்கு ஆகாத பிரம்மாஸ்திரங்கள்!

இமாச்சலப் பிரதேசம் பா.ஜ.க.வின் கைகளில் இருந்து நழுவி காங்கிரஸுக்குச் சென்றதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைப் போல, முஸ்லிம் வெறுப்பை கிளறிவிட்டு இந்துப் பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை திரட்டிக்கொள்ளும் வாய்ப்பு, இமாச்சலப்பிரதேசத்தில் குறைவு. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 2.18 சதவிகிதம் பேர் மட்டுமே முஸ்லிம்கள். மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் ஆதிக்கம் செலுத்தும் சாதியாக அல்லாமல், பல்வேறு சாதிகளும் பரவலாக வாழும் மாநிலமாகவும் இமாச்சலப்பிரதேசம் உள்ளது. ஆகவே, அடிமட்டத்தில் எவ்வித அணிதிரட்டலும் இல்லாத காரணத்தால், பா.ஜ.க. அங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், கர்நாடகா அப்படிப்பட்ட மாநிலமல்ல.

1980-களில் இருந்தே தீவிரமாக வேலைசெய்து கரையோர கர்நாடகத்திலும் வட கர்நாடகத்திலும் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல். மாநிலத்தில் 17 சதவிகிதம் உள்ள லிங்காயத்துகளை தனது ஆதரவுப் பிரிவாக மாற்றிவைத்துள்ளது. தென்னிந்தியாவிலேயே ராமஜென்ம பூமி இயக்கத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். தன்னை மிகப்பெரிய அளவில் வலுப்படுத்திக் கொண்ட மாநிலம் கர்நாடகம் மட்டுமே. ஆகவேதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் கர்நாடகத்தை தனது “தென்னிந்திய நுழைவாயில்” என்று அழைத்துக் கொள்கிறது.

உத்தரப்பிரதேசத்தில், “இது 80 சதவிகிதத்துக்கும் 20 சதவிகிதத்துக்குமான தேர்தல்” (இந்து முஸ்லிம் மக்கள்தொகை விகிதம்) என்று வெளிப்படையாக இந்துமதவெறியை தேர்தல் பரப்புரையாக வைத்து செயல்பட்டதைப் போல, கர்நாடகத்திலும் கையாண்டது காவிக் கும்பல்.

“சாலை, குடிநீர் வடிகால் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசத்தேவையில்லை. இந்து-முஸ்லிம் பிரச்சினை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலைச் சந்திப்போம். ஒரு முஸ்லிம் வாக்குகூட எங்களுக்கு தேவையில்லை” என்று வெளிப்படையாக அறிவித்தார் பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா.


படிக்க: கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது


முஸ்லிம்களின் நான்கு சதவிகித இடஒதுக்கீட்டைப் பறித்து, அதை லிங்காயத்துக்களுக்கும் ஒக்கலிகர்களுக்கும் தலா இரண்டு சதவிகித இடஒதுக்கீடுகளாக பிரித்து வழங்கியதன் மூலம் கர்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள இச்சமூகத்தினரின் வாக்குகளை திரட்டிக் கொள்ள முயன்றது காவிக் கும்பல்.

திப்பு சுல்தானைக் கொன்றது உரி கவுடா, நஞ்சே கவுடா என்ற ஒக்கலிக மன்னர்கள்தான் என்றொரு மதவெறிப் புரட்டை பரப்பினார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் வளரும் என்று நச்சுப்பிரச்சாரம் செய்தார்கள். “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று மோடியே பிரச்சாரம் செய்தார். “பஜ்ரங்தள் அமைப்பை தடைசெய்வோம்” என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை “பஜ்ரங்கியை (ஆஞ்சநேயரை) அவமதித்துவிட்டார்கள்” என்று மடைமாற்றினார் மோடி. வாக்களித்துவிட்டு “ஜெய் பஜ்ரங்பலி” என்று முழக்கம் போடுங்கள் என்றார்.

தேர்தலுக்கு முன்பிருந்தே மதமாற்றத்தடைச் சட்ட அமலாக்கம், ஹிஜாபுக்கு தடை, பாங்கு ஓத எதிர்ப்பு, ஹலால் ஜிகாத் பிரச்சாரம், பழம்பெரும் மசூதிகள் அனைத்தும் இந்துக்கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவை என்ற பிரச்சாரம், கோயிலுக்கு வெளியில் முஸ்லிம் வியாபாரிகள் கடைபோடுவதற்கு தடை என பல்வேறு வடிவங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துமதவெறி தூண்டிவிடப்பட்டது. பல்வேறு கலவரங்களை காவிக்கும்பல் திட்டமிட்டு நடத்தியது. ஆனால், இந்த மதவெறி தூபம் எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மேலும், தனது மூன்றரை ஆண்டுகால சாதனைகளாக எதையும் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாத நிலையிலும், காங்கிரஸின் “40 சதவிகிதம் கமிஷன் சர்க்கார்” என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாத நிலையிலும், பா.ஜ.க. முன்னெடுத்த “இரட்டை என்ஜின் சர்க்கார்” பிரச்சாரம் எடுபடவில்லை.

மாநிலப் பிரச்சினைகள் எதையும் பேசாமல் இஸ்லாமிய வெறுப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் தன்னைப் பற்றிய சுயவிளம்பரம் ஆகியவற்றையே முன்னிறுத்திய மோடியின் பிரச்சாரம் வடமாநில மக்களைப் போல கர்நாடக மக்களை கவரவில்லை. அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், பிரகலாத் ஜோஷி, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் இறக்கிவிடப்பட்டு ‘இரட்டை என்ஜின் சர்க்காரை’ வலியுறுத்திப் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். மோடிக்கு அடுத்து இந்துத்துவத்தின் தேசிய முகங்களாக அறியப்படுகின்ற யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்வா ஆகியோரையும் களமிறக்கிப் பிரச்சாரம் செய்தார்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

ஊழல், உள்ளடிச்சண்டை, செல்வாக்குமிக்க தலைவர்கள் இல்லாத சூழலில் ‘வெல்லப்பட முடியாத தலைவர்’ என்று கருதப்படுகின்ற மோடியை இறக்கிவிட்டது தனது கட்சிக்கு பலம் என்று கருதிக்கொண்டிருந்தது பா.ஜ.க. மோடி பங்கேற்ற 33 பேரணிகள், 28 ரோடு ஷோக்கள், ஏழுநாள் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்தும் பா.ஜ.க.வின் வாக்குவங்கியை கூட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “பா.ஜ.க. 80 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருந்தது; மோடியின் பிரச்சாரத்தால் அது குறைந்துவிட்டது” என்கிறது பிபிசி தமிழ். “மோடி பிராண்டு கர்நாடகத்தில் வேலைக்கு ஆகவில்லை” என்று கைகொட்டி சிரிக்கின்றன ஊடகங்கள்.

பாசிச பா.ஜ.க.வை தோல்வியுறச் செய்த உழைக்கும் மக்கள்!

சென்ற முறைப் பெற்ற தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், பா.ஜ.க. தனது வாக்குசதவிகிதத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று பா.ஜ.க.வினர் கூறுவதெல்லாம் மீசையில் மண் ஒட்டாமல் பார்த்துக் கொள்வதாகும். உண்மையில், பா.ஜ.க. தனது அடித்தளப் பகுதிகள் என்று பீற்றிக் கொண்டிருந்த பகுதிகளில்கூட வாக்குவங்கியை இழந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்டை என்று கருதப்படுகின்ற கடலோர கர்நாடகத்தின் 19 தொகுதிகளில் கடந்தமுறை 17 இடங்களை வென்றது; இந்த தேர்தலில் 13 தொகுதிகளையே தக்கவைத்துக் கொண்டுள்ளது. நியூஸ்18 பத்திரிகையின் பகுப்பாய்வின்படி, இந்த பிராந்தியத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்ற தொகுதிகளில்கூட 20 முதல் 40 சதவிகிதம் வாக்குவங்கி குறைந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

அண்மைக்காலமாக பா.ஜ.க.வின் செல்வாக்குமிக்க பிராந்தியங்களாக இருந்த மும்பை கர்நாடகா (-2.4), ஹைதராபாத் கர்நாடகா (-1.8), மத்திய கர்நாடகா (-7) போன்ற பிராந்தியங்களிலும் தற்போது அதன் வாக்குசதவிகிதம் சரிந்திருக்கிறது.

சாதிரீதியான முனைவாக்கம், மதரீதியான முனைவாக்கம் அனைத்தையும் கடந்து பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்தியதில் முக்கியமான பங்கு விவசாயிகள், தொழிலாளர்கள், அன்றாடம் காய்ச்சிகளான ஏழை உழைக்கும் மக்களுடையதாகும்.

அனைத்து சாதிகளிலும் மேட்டுக்குடிகள் மத்தியிலும் அதிக சம்பளம் பெறும் குடும்பத்தினர் மத்தியிலும் பா.ஜ.க.விற்கு பெருமளவு ஆதரவு இருப்பதையும், ஏழைகள், சொற்ப சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் குடும்பங்களிடம் காங்கிரஸுக்கு அதிக ஆதரவு இருப்பதையும் கன்னட செய்தி ஊடகமான ஈ-தினாவின் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியது.

224 சட்டப் பேரவைத் தொகுதிகளுள் 204 தொகுதிகளில் 41,169 பேரிடம் நேரில் சென்று பதிலைப் பெற்ற இக்கருத்துக் கணிப்பில், விவசாயத் தொழிலாளர் – அன்றாடங்காய்ச்சிகளில் 50 சதவிகிதம் பேர் காங்கிரஸூக்கும், 29 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கும் வாக்களிக்கப்போவதாக கூறியுள்ளனர். வியாபாரிகள், சொந்தமாக தொழில் செய்பவர்களில் 43 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வையும் 30 சதவிகிதம் பேர் காங்கிரஸையும் ஆதரிக்கின்றனர். அதிக அளவு ஊதியம் பெறுவோரில் குறைவானவர்களே காங்கிரஸை ஆதரிக்கின்றனர். குறைந்த அளவு ஊதியம் பெறுவோரில் அதிகமானோர் காங்கிரஸை ஆதரித்துள்ளனர்.

பா.ஜ.க.வின் உறுதியான வாக்குவங்கிகளாகக் கருதப்படும் முற்படுத்தப்பட்ட சாதிகளிலேயே மிகவும் ஏழைகள் 34 சதவிகிதம் பேர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். லிங்காயத்துகளில் பணக்காரர்களில் 24 சதவிகிதமும் ஏழைகளில் 32 சதவிகிதமும் காங்கிரஸை ஆதரித்துள்ளனர். அதேநேரம், பட்டியல் இனத்தவர்களில் ஏழைகளில் 31 சதவிகிதம் காங்கிரஸையும், பணக்காரர்களில் நான்கு சதவிகிதம் பேர் பா.ஜக.வையும் ஆதரித்துள்ளனர்; முஸ்லிம்களில்கூட முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் 22 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஈ-தினா வெளிப்படுத்தும் இந்த புள்ளிவிவரங்கள், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் மதவெறிப் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல், வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயப் பிரச்சினைகள் என தங்களது பொருளாதார வாழ்நிலையை கணக்கிலெடுத்துக் கொண்டு வாக்களித்த கிராமப்புற உழைக்கும் மக்களால்தான் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகின்றன.

பா.ஜ.க.வை தாங்கிப் பிடித்த நகர்ப்புற நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம்!

பல்வேறு பிராந்தியங்களில் பா.ஜ.க.வுக்கு வாக்குவங்கி சரிந்திருக்கிறது என்றால், அது மீண்டும் தனது வாக்குவங்கியை மீளப்பெற்றது எப்படி? கிராமப்புற பகுதிகளில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட்டு காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் பெரும்பாலான நகர்ப்புறப் பகுதிகளில் பா.ஜ.க. தனது வாக்குவங்கியைக் கூட்டியுள்ளது; நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கங்களே பாசிச பா.ஜ.க.வை தூக்கி நிறுத்தியுள்ளன என்ற மறுபக்கமும் சேர்ந்ததுதான் கர்நாடகத் தேர்தலின் முடிவுகள்.

பழைய மைசூர் மற்றும் பெங்களூருவில் 2018-ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளைவிட, இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 58 நகர்ப்புறத் தொகுதிகளில் 32 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவின் நகர்ப்புற வாக்குவங்கியில் 45.7 சதவிகிதத்தை பா.ஜ.க. மட்டுமே பெற்றுள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனது சீட்டுகளை இழந்தாலும் பல இடங்களில் வாக்குவங்கியை அதிகரித்திருப்பது குறித்து ஸ்வராஜ்யா தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை கீழ்கண்டவாறு விவரங்களை அடுக்குகிறது:

“மொத்தமாகப் பார்க்கும்போது, மும்பை கர்நாடகாவில் பா.ஜ.க. 2.4 சதவிகித வாக்குகளை இழந்திருக்கிறது. நெருக்கிப் பார்த்தால், மும்பை கர்நாடகாவின் 18 தொகுதிகளில் பா.ஜ.க. 7.4 சதவிகித வாக்குகளை இழந்திருக்கிறது. அதேநேரம் மீதமுள்ள 32 தொகுதிகளுள் 16 தொகுதிகளில் தனது வாக்குவங்கியில் 10 சதவிகிதம் உயர்வைக் கண்டிருக்கிறது.

37 தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய கர்நாடகாவில் (ஸ்வராஜ்யாவின் கணக்குப்படி) மொத்தமாகப் பார்க்கும்போது, 2.1 சதவிகிதம் வாக்குவங்கி சரிவு. நெருக்கிப் பார்த்தால் 15 தொகுதிகளில் மொத்தம் 10 சதவிகிதம் வாக்குவங்கி சரிவைக் கண்ட அதேநேரத்தில், மீதமுள்ள 22 தொகுதிகளில் 3 சதவிகிதம் வாக்குவங்கியை அதிகரித்திருக்கிறது.

ஹைதராபாத் கர்நாடகத்தில், மொத்தமாகப் பார்க்கும்போது 3.5 சதவிகிதம் வாக்குவங்கியை பா.ஜ.க. இழந்துள்ளது. நெருக்கிப் பார்த்தால், 18 இடங்களில் பா.ஜ.க.வின் வாக்குவங்கி அதிகரித்திருக்கிறது”

பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஸ்வராஜ்யா பட்டியலிடும் தொகுதிகளில் ஆகப் பெரும்பாலானவை நகர்ப்புறத் தொகுதிகளாகும். தெள்ளத்தெளிவாக, பாசிஸ்டுகளின் அரசியலுக்கு பலியாகியுள்ள பிரிவினரை வர்க்கரீதியாக நாம் அடையாளம் காணமுடிகிறது.

குறைந்தவையானாலும் பாசிஸ்டுகளுக்கு இது சித்தாந்த வெற்றி!

பொதுவாக ஊழல், நிர்வாக சீர்கேடுகள், ஒரு கட்சியின் அரசியல் கொள்கை ஆகியவை குறித்து பெரிதும் அக்கறைப்படும் வர்க்கமாக இருப்பது நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கங்களே. ஆனால், “40 சதவிகிதம் கமிஷன் சர்க்கார்” என்ற காங்கிரஸின் பிரச்சாரத்தை இந்த வர்க்கங்கள் துளியும் பொருட்படுத்தவில்லை. மேலும், இவர்கள் கொள்கை ரீதியாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை ஆதரித்துள்ளார்கள் என்பதுதான் அபாயகரமான உண்மை.

“பெருமழையால் பெங்களூரு நீரில் மூழ்கியது, பெருகும் போக்குவரத்து நெரிசல்கள், மோசமான திடக்கழிவு மேலாண்மை ஆகியவை பா.ஜ.க.வின் வெற்றியை பாதித்திருக்க வேண்டும். ஆனால், வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்தே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பெங்களூரில் உள்ள 7 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்” என்கிறது நியூஸ் கிளக் செய்தித்தளத்தின் ஒரு கட்டுரை.

கர்நாடகாவில் கிராமப்புறங்களில் காங்கிரஸுக்கு இருக்கும் அமைப்பு பலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு இல்லை. இன்றளவும் அது கிராமப்புற பகுதிகளில் பலவீனமாகவே உள்ளது. அதேநேரம், பல ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். கும்பல், கர்நாடகாவின் நகர்ப்புறங்களில் தீவிரமாக வேலைசெய்துவந்திருக்கிறது. அதன் பலனைத்தான் இத்தேர்தலில் அறுவடை செய்துள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நகர்ப்புற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். தனது ஷாகா வலைப்பின்னலை பெருக்கியது. அரசுப் பள்ளிகளிலேயே ஷாகா பயிற்சிகள் வெளிப்படையாக நடைபெற்றன. இன்று பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என முழங்கும் காங்கிரஸுதான் ஷாகா பயிற்சிகளை தடுத்தால், ‘இந்துக்கள்’ கோபித்துக் கொள்வார்கள் என வேடிக்கை பார்த்தது.

பலரும் தீவிரமான இந்துத்துவப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டதால்தான் பா.ஜ.க. தோல்வியுற்றது என்கிறார்கள். கர்நாடகத்தில் பாசிசக் கும்பலின் இந்த அணுகுமுறை பெரும்பான்மையான நடுநிலை, ஊசலாட்ட வாக்காளர்களை எதிர்வரிசைக்கு தள்ளியுள்ளது என்பதும், அதனால் பா.ஜ.க. தோல்வியுற்றது என்பதும் உண்மைதான். அதேநேரம் நாம் இதன் மற்றொரு பகுதியையும் கவனிக்க வேண்டும்.


படிக்க: கர்நாடகா: கோசாலைகளை இயக்க அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம்!


மாநில மக்களின் பிரச்சினைகளைப் பேசாதது, எடியூரப்பாவுக்கு அடுத்து மாநிலத்தில் பிரபலமான தலைவர்கள் இல்லாமல் போனது, ஜெகதீஷ் ஷெட்டர், லஷ்மன் சவடி போன்ற பா.ஜ.க. பெருந்தலைவர்கள் காங்கிரஸூக்கு ஓடிப்போனது, பல புதிய முகங்களை வேட்பாளர்களாக நிறுத்தியது, மூன்றரை ஆண்டுகால ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தி ஆகியவற்றையெல்லாம் கடந்து 30 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளார்கள். இவை அனைத்தும் சித்தாந்த ரீதியாக கிடைத்துள்ள வாக்குகளாகும்.

ஆனால், காங்கிரஸூக்கு கிடைத்த வாக்குகள் இப்படி சித்தாந்த ரீதியாக பெறப்பட்ட வாக்குகள் அல்ல. மக்களின் பொருளாதார வாழ்நிலை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே அவர்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழை எளிய மக்களின் வாக்குகளையும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாக்குகளையும் கவரும் வகையில் தனது தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைத்துக் கொண்டதே காங்கிரஸின் வெற்றிக்கு அடிப்படை. ஆகவே, இதிலிருந்துதான் பாசிஸ்டுகளின் தேர்தல் தோல்வியை நாம் பரிசீலிக்க முடியும்.

கர்நாடகத்தை குஜராத், உத்தரப்பிரதேசத்தைப் போலக் கருதிக் கொண்டு மிகைமதிப்பீடு செய்ததுதான், பா.ஜ.க. செய்த ஒரே தவறு. மைசூர் பல்கலைக்கழக கலைத்துறையின் தலைவரான முசாபர் அசாதி, வயர் தளத்திற்கு அளித்த பேட்டியில் இதைத் தெளிவாக விளக்குகிறார்.

“அப்படியானால், நீங்கள் இங்கு இந்துத்துவா வெற்றிபெற முடியாது என்று கருதுகிறார்களா?” என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பின்வருமாறு:

“இந்துத்துவாவிற்கு சில தனித்த கட்டங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். முதலில் இந்துத்துவா வெவ்வேறு சாதிக் குழுக்களை அல்லது அடையாளங்களை அங்கீகரித்து, அதனை பரந்த இந்து அடையாளத்தின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இரண்டாவது, இந்து அடையாளத்தை இந்துத்துவா அடையாளமாக (முஸ்லிம், கிறித்தவ வெறுப்பு) மாற்ற வேண்டும். மாற்றம் ஒவ்வொரு கட்டமாக நடைபெறுகிறது”

“கர்நாடகாவில் இந்துத்துவா இன்னும் முதல் கட்டத்திலேயே – அதாவது குழந்தைப் பருவத்திலேயே உள்ளது” என்கிறார். கடலோர கர்நாடகத்தைத் தவிர, ஒட்டுமொத்த கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால், முசாபர் அசாதி குறிப்பிடுவதுதான் உண்மையாகும்.

ஆகவே, கர்நாடகம் இன்னும் குஜராத்தாக மாறவில்லை; ஆனால், மாறும் போக்கில் உள்ளது. கர்நாடகத்தைப் பற்றிய தங்களின் மிகைமதிப்பீட்டை பாசிஸ்டுகள், இந்த தேர்தல் தோல்வியின் மூலம் உணர்ந்திருப்பார்கள். இனி அடுத்து தங்களது நிகழ்ச்சிநிரலை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், பா.ஜ.க.வின் இந்த தேர்தல் தோல்வியைப் பார்த்து “மதவாதம் வீழ்ந்துவிட்டதாக” பாசிச எதிர்ப்பு சக்திகள் இருமாந்திருந்தால், அடுத்த சுற்றில் நாம் எழுந்திருக்கமுடியாத வகையில் வீழ்த்தப்படுவோம்!


பால்ராஜ்

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!

2014-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. அந்தவகையில், டெல்லி யூனியன் பிரதேசத்தில், குடிமைப் பணி அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை) நியமிப்பது தொடர்பான விசயத்தில், ஆளுநரைக் கொண்டு டெல்லி அரசுக்கு நெருக்கடிகள் கொடுத்து வந்தது, ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு.

இது தொடர்பான வழக்கில், 2015-ஆம் ஆண்டில் தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு டெல்லி அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. ஆனால், அந்த தீர்ப்பு மோடி அரசின் மேல்முறையீட்டால் முறியடிக்கப்பட்டது. இதற்கெதிராக டெல்லி அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கிட்டதட்ட எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த மே 11-ஆம் தேதி டெல்லி யூனியன் பிரதேசத்தில் குடிமைப் பணி அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்குதான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை உறுதிசெய்துள்ளது.

அத்தீர்ப்பில் “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும்” மற்றும் “அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும்” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்று இருந்தனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “ஜனநாயகத்திற்கும் டெல்லி மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என வரவேற்று இருந்தார்.


படிக்க: டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!


இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக்கு சவால்விடும் விதமாக, மே 19-ஆம் தேதி டெல்லி யூனியன் பிரதேச அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில், தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தைத் (The Government of National Capital Territory of Delhi Act – 1991) திருத்தி, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (National Capital Civil Service Authority) உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது மோடி அரசு.

இந்த அவசரச் சட்டம் டெல்லி அரசின் குடிமைப் பணி அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை) நியமனம் மற்றும் மாறுதல் செய்வதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது.

இதன் மூலமாக, டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசிடமிருந்து மோடி அரசால் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எதிரான மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை ஆகும்.

இந்த அவசரச் சட்டத்தின்படி, அமைக்கப்படும் ஆணையக் குழுவில் முதல்வர் தலைமையில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் மற்றும் மாறுதல் செய்வதற்கான முதல்வரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு, பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒருமித்த முடிவு எடுக்கப்படாவிட்டால், துணைநிலை ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறப்பட்டுள்ளது.

000

இந்த வழக்கு விசாரணையின்போது மோடி அரசு, டெல்லியின் நிர்வாக அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தேச நலனுக்கு முக்கியமானது என்ற அடிப்படையில் வாதங்களை முன்வைத்தது. “டெல்லி இந்தியாவின் தலைநகராக உள்ளது. உலக நாடுகள் டெல்லியின் வழியாகத்தான் இந்தியாவை பார்க்கின்றன. இதனால் அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றம் ஒன்றிய அரசுக்கு தேவையான மற்றும் அவசியமான ஒன்று” என்று வாதிட்டது.

ஏற்கெனவே ஒன்றிய அரசு, தேச நலனைக் காரணம் காட்டி டெல்லி யூனியன் பிரதேசத்தின் பொது ஒழுங்கு, நிலம், காவல் ஆகியவற்றை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பல ஆண்டுகளாக, டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையையும் மறுத்து வருகிறது. தற்போது நிர்வாக அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதன் மூலம், யூனியன் பிரதேசம் என்பதற்குக் கூட அருகதையற்ற நிலைக்கு டெல்லியைக் கொண்டு சென்றுவிட்டது, மோடி அரசு.

ஆகையால், மோடி அரசு முன்வைக்கும் ‘தேச நலன்’ என்பது வெற்றுக் கூச்சலாகும். மாநிலங்களுக்கான அதிகாரங்களைப் பறித்து அவற்றை அதிகாரங்கள் ஏதுமற்ற சமஸ்தானங்களாக சுருக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஏதாவது ஒரு வகையில் தடையாக அமைந்துள்ளன என்பதுதான் எதார்த்தமாகும்.

எதிர்க்கட்சிகள் கூட கார்ப்பரேட் திட்டங்களைத்தான் நடைமுறைப்படுத்துகின்றன என்றாலும், அது மோடி அரசு முன்னிறுத்தும் கார்ப்பரேட் வர்க்கங்களின் நலனிற்கும் இந்துராஷ்டிரக் கொள்கைக்கும் எதிரானதாக இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டில், அடிமை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் பல்வேறு விசயங்களில், அ.தி.மு.க. எந்த எதிர்ப்பையும் காட்டியதில்லை. ஆனால், பி.ஆர்.எஸ். ஆட்சி புரியும் தெலுங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் ஏதாவது சில அம்சங்களில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு உட்படாமல் எதிர்த்து வருகின்றன.

மாநிலங்களுக்கென சில தனித்துவமான கோரிக்கைகள் இருப்பதைக் கூட மோடி அரசு விரும்புவதில்லை என்பதுதான் எதார்த்தம். மாறாக, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களே ஆனாலும், அவை மாநில உரிமை என்று எதையும் கேட்க முடியாது; கேட்கக்கூடாது என்பதுதான் இந்திராஷ்டிரத் திட்டமாகும்.

டெல்லியில் மட்டுமல்ல, பா,ஜ.க ஆட்சி செய்யாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுதான் பொது நிலைமை. ஆளுநர்கள் மூலமும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்களை அதிகாரிகளாக நியமிப்பதன் மூலம் இணையாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களை எந்த அதிகாரமும் அற்ற வெற்றுக் கூடுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளே அதற்கு சான்றுகளாகும்.


படிக்க: டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !


இது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தலைமையிலான மோடி அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டப்பூர்வமாகவே எந்த முறையிலும் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்பதற்கான அறிகுறி ஆகும். “நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம் என்பதால் இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது” என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு பெயரளவிலான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான அதிகாரம் ஒன்றிய அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிப்பதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டமும் இந்த அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அதிகாரம்தான்.

இந்த அரசியல் சாசனத்தின் ஒரு கூறைப் பயன்படுத்தி, பாசிஸ்டுகள், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி, நீட் போன்ற போட்டித் தேர்வுகள், புதிய கல்விக் கொள்கை, மின்சார திருத்தச் சட்டம் போன்ற பல பாசிச சட்டங்களை அதற்கு நாம் சான்றுகளாக கூற முடியும். அதாவது இந்த பெயரளவிலான ஜனநாயகக் கட்டமைப்பை பயன்படுத்தி, இந்துராஷ்டிரத்தை நிறுவிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இல்லை; எனவே எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டி அவசரச் சட்டத்தை ரத்து செய்து விடலாம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்.

மாநிலங்களவையில் போதிய வாக்குகள் இன்றி, அவசரச் சட்டம் தற்காலிகமாக கூட பின்வாங்கப்படலாம். ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்யலாம். ஆனால், அவையெல்லாம் தற்காலிகமானவைதான். ஏனென்றால், இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைப்பு என்பது பாசிஸ்டுகளுக்கு விளைநிலமாக அமைந்துள்ளது. பல்வேறு வகைகளில் சதித்தனமாகவும் அரசியல் சாசனத்தின் மற்ற ஓட்டைகளைப் பயன்படுத்தியும் மாநிலங்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலம் மாநில உரிமைகளைப் பறித்துவிடுவதில் மோடி கும்பல் கைதேர்ந்தது.

ஆகையால், பாசிஸ்டுகளைப் பின்வாங்க வைப்பதற்கான ஒரே வழி மக்கள் போராட்டங்கள் மட்டுமே. “சுற்றிவளைக்குது பாசிசப் படை, வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்பது தமிழ்நாட்டிற்கான முழக்கம் எனினும் இந்துராஷ்டிரத்திற்கு எதிரான உரிமை முழக்கமாகும். இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்காக, நாட்டையே சுற்றிவளைத்துக் கொண்டிருக்கும் பாசிசப் படைக்கெதிராக முழங்க வேண்டும். போலி ஜனநாயக மாயைகள் பாசிஸ்டுகளை வளர்க்கவே செய்யும்! பாசிசத்திற்கு எதிராக துவளாமல் போராடுவதற்கான மக்கள் எழுச்சிகளே பாசிஸ்டுகளைப் பின்வாங்க வைக்கும்!


குப்பு

140 ரூபாய்க்கு தக்காளி விலை கடுமையான உயர்வு! – தோழர் அமிர்தா | வீடியோ

140 ரூபாய்க்கு தக்காளி விலை கடுமையான உயர்வு!
அரசே நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்!
அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்!

கண்டன உரை: தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்
(குறிப்பு : காணொலியில் கூறும் விலை ஜூலை 5 அன்றைய விலை நிலவரம்)

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் | வீடியோக்கள்

நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் – வீடியோக்கள்

01.07.2023 | மாலை 5 மணி
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை.

தலைமை: தோழர் மருது, மக்கள் அதிகாரம்

000

தொடக்க உரை : வழக்கறிஞர் கார்க்கி வேலன்

000

வழக்குரைஞர் சங்கர சுப்பு :

000

வழக்குரைஞர் சத்ய சந்திரன்:

000

வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், MHAA, செயலாளர்:

000

வழக்குரைஞர் ரஜினிகாந்த், மாநில துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க:

000

வழக்குரைஞர் ஜான்சன்

000

தோழர் கு.பாரதி, தென்னிந்திய மீனவர் சங்கம்.

000

தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை:

000

முனைவர் பகத்சிங், ஆய்வாளர்.

000

தோழர் மனிதி செல்வி

000

தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.

000

தோழர் ரமணி, மாநிலப் பொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி:

000

வழக்குரைஞர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி.

000

தோழர் அதியமான், மாநிலச்செயலாளர், AICCTU.

000

தோழர் சாலமன், மாநிலக்குழு உறுப்பினர், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி.

000

தோழர் புவன், மக்கள் அதிகாரம், சென்னை.

000

ஏழு தமிழர் விடுதலைக்காகப் போராடிய அற்புதம் அம்மாள்

மற்றும் தோழர் லிங்கனுடன் இணைந்து பணியாற்றிய சமூக இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள்.

தலைமை: இராமு(எ)மருது, தொடக்க உரை: கார்க்கி வேலன்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: புளியந்தோப்பு மோகன், நிறைவுரை: மகிழன்

7358556847, 9710392882, 9840327140, 8939136163, 9025870613

ம.பியில் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க கிரிமினல் பிரவேஷ் சுக்லா! | புமாஇமு போஸ்டர்

0

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த பா.ஜ.க கிரிமினல் பிரவேஷ் சுக்லா!

இனம்,மதம்,மொழி என அனைத்தின் பெயராலும் வன்மத்தைக் கக்கும் நச்சுப்பாம்புகளே காவி பாசிஸ்டுகள்!

உழைக்கும் மக்களே,

இந்தக் கொடூரம் நடந்து மூன்று மாதங்களாக குற்றவாளியைக் காப்பாற்றியுள்ளது ம.பி பாஜக அரசு!

குற்றவாளி பிரவேஷ் சுக்லா தவறு செய்யவில்லை என பாதிக்கப்பட்ட நபரே சொல்வது போல் போலி வீடியோ போடுகிறது காவி கும்பல்!

குற்றவாளி சங்கி என அம்பலமானதும் வழக்கம் போல, தங்களுக்கும் அவனுக்கும் தொடர்பில்லை என அப்பட்டமாகப் புளுகுகிறது பி.ஜே.பி!

மணிப்பூர் கலவரம், லவ் ஜிகாத், பசுப் பாதுகாப்பு என்று பல பெயர்களில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது இன – மத – சாதிவெறி தாக்குதல், படுகொலை – கலவரங்களை நடத்தி வருகிறது காவி கும்பல்!

சமூக விரோத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலை ஒழிக்காமல் நாட்டுக்கு மக்களுக்கும் விடிவில்லை!

 

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு – 94448 36642.