privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்) நீதிபதிகளை இவ்வாறு சித்தரிப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகிவிடுமோ? ஆகலாம். "நீதிபதியை அடிப்பது அவமதிப்பில்லை. அடித்ததை சொன்னால் அவமதிப்பா?" என்று கேட்கிறீர்களா - அது அப்படித்தான். சாக்கடைப் பிரச்சினை, குப்பைத் தொட்டிப் பிரச்சினைகளை suo moto வாக (யாரும் மனுச்செய்யாதபோதிலும தானே முன்வந்து) எடுத்துக் கொண்டு நீதி வழங்குபவர்கள் நீதியரசர்கள். பிப் 19 அன்று தானே அடிபட்ட பிரச்சினையில் "தானே முன்வந்து' போலீசாரைக் கைது செய்யும்படி அவர்கள் ஆணை பிறப்பிக்கவில்லை. அப்படிப் பிறப்பித்திருந்தால் வழக்குரைஞர் போராட்டம் தேவையில்லை. இரகசியமாக...

தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !

உயர்நீதிமன்ற போலீசு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தந்துள்ள இடைக்கால அறிக்கை, வழக்குரைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!

24
(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்) ஈழத்தமிழ் மக்களைத் தாலியறுக்கும் இலங்கை அரசின் மயான வேலைக்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் இந்திய அரசின் துரோகத்தை நியாயப்படுத்துவதற்கு மயிலை மாங்கொல்லையில் காங்கிரசு கயவாளிகளின் பொதுக்கூட்டம் நடந்ததும் அதில் ப.சிதம்பரம் ஊளையிட்டதும் நீங்கள் அறிந்ததே. இந்தக்கூட்டத்தில் புலிகள் ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு சரணடைய வேண்டும் அப்படி சரணடைந்தால் இலங்கை அரசுடன் பேச்சு வாரத்தைக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யும் எனப்பேசிய ப.சிதம்பரம் இந்தக்கூட்டத்தில் பா.ம.க ராமதாசுக்கு மறைமுகமாக மிரட்டலும் விடுத்தார். ஏற்கனவே தி.மு.க கூட்டணயில் சவுடால் வீரம்...

ஈழம்: போலீசின் அடுத்த குறி மாணவர்கள்!

உயர்நீதி மன்றத்தில் புகுந்து வழக்குரைஞர்கள் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கொலைவெறித் தாக்குதலை நடத்திய சென்னை போலீசு, அடுத்ததாக மாணவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. 3.3.09 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை மாநிலக்கல்லூரியில் புகுந்து தடியடி நடத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 5மாணவர்களை கல்லூரி வாசலிலேயே கைது செய்து, அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கும் போட்டு, சிறையில் தள்ளியிருக்கிறது. கடந்த செவ்வாயன்று காலை 8.45 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் ஈழத்தில்...

போஸ் கொடுக்கிறான் போலீசு இ.பி.கோவை நம்புறவன் லூசு !

வழக்குரைஞர் நண்பா ! கெட்ட வார்த்தைகளின் மீதேறி கல்லால் அடித்தார் கமிஷனர் சட்டசபைலிருந்தபடி சொல்லால் அடிக்கிறார் நிதியமைச்சர்.

நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!

26
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் பேயாட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா எனும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்கிறது. அதேசமயம் வழக்குரைஞர்களும் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கூறியிருந்தது.ஆனால் உயர்நீதிமன்றங்களின் எல்லா வழக்கறிஞர் சங்கங்களும் தடியடிக்கு காரணமான போலீசு அதிகாரிகளை வேலைநீக்கம் செய்யும்வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்வாதக உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை நிராகரித்திருக்கிறார்கள். தற்போது தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். அந்த உண்ணாவிரதத்தில் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். மேலும் தமிழகம் தழுவிய அளவில் வழக்குறைஞர் போரட்டமும் தொடர்கிறது....

போலீசு பாசிசத்தைக் கண்டித்து சென்னையில் இன்று கருத்தரங்கம் !

(படத்தை பெரிதாக காண படத்தின் மீது சொடுக்கவும்) சென்னையில் "காக்கி உடை பயங்கரவாத்த்திலுருந்து நீதிமன்றத்தை விடுவிப்போம்!" என்ற தலைப்பின் கீழ் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் 2.3.09 அன்று ஒரு கருத்தரங்கை நடத்துகிறது. இதில் தோழர் ராஜூ, ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமையேற்க, சீனியர் வழக்குரைஞர்களான காந்தி, திருமலைராஜன், சங்கர சுப்பு, பாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இடம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடம் (2ஆவது மாடி), எண்.7, நீலி வீராசாமி தெரு, (பைகிராப்ட்ஸ் ரோடு, சங்கீதா ஓட்டல் அருகில்) திருவல்லிக்கேணி, சென்னை-5 நேரம் : மாலை...

ரகுமானுக்கு ஆஸ்கார்! ஆழ்ந்த அனுதாபங்கள் !!

இந்து தேசியவெறியும் இசுலாமியர் எதிர்ப்பு வெறியும் பூத்துக்குலுங்கும் 'ரோஜாவின்' பார்ப்பன மணம் பரப்பி, சிவசேனையின் செய்திப்படம் மணிரத்தினத்தின் கரசேவை பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி, இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவில் வந்தே மாதிரத்தை காந்தியின் கைராட்டை சுதியிலிருந்து கழற்றி வீசி சோனி இசைத்தட்டில் சுதேசி கீதம் முழக்கி, ஒரு வழியாக இசைப்புயல் அமொரிக்க கைப்பாவைக்குள் அடங்கிற்று. மும்பைக் குடிசைகளின் இதய ஒலியை ரகுமான் "ஜெய் ஹோ! ஜெய் ஹோ!" என பிய்த்து உதறிவிட்டார் என தெருவில் வந்து கூத்தாடும் தேசமே! பீகார் தொழிலாளிகளை ராஜ்தாக்ரே கும்பல் பிய்த்து உரித்தபோது.. " அய்யகோ..!" என்று அலறியபோது எங்கே போனது இந்தியப் பாசம்? அல்லா ரக்கா ரகுமானின் ஆர்மோனிய சுரப்புகளை அலசி ஆராய்ந்து உள்நுணுகி உருகி விவாதிக்கும் அன்பர்களே, இசுலாமியர்களின் ஹார்மோன் சுரப்பிகளையும்...

வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி!

59
போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும், சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் கே.எம்.விஜயன் தினமணியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்

வினவு கருத்துப்படத்திற்காக 5 தோழர்கள் கைது !

35
சென்னைக்கு அருகே இருக்கும் பொன்னேரி என்ற ஊரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் 20 பேர் ஈழத்திற்காகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களை தாக்கிய போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும் கடந்த வெள்ளிக் கிழமை 20.02.09 அன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதில் வினவில் வந்த "போலீசு மக்கள் மோதலல்ல, ஈழத்திற்கு எதிராக பார்ப்பன பாசிச பேயாட்டம்!" என்ற கட்டுரைக்காக வெளியிடப்பட்ட போலீசின் வெறிக்குப் பொருத்தமாக ஓநாயாக சித்தரித்த கருத்துப்படத்தை டிஜிட்டல் பேனரில் பெரிதாக பிடித்தவாறு தோழர்கள் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். இந்தப் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட...

போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!

63
சு.சுவாமி எனும் பார்ப்பன வெறியனுக்காக நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மண்டை உடைப்பு ! போலீஸ் வெறியாட்டம் !! சுப்பிரமணிய சுவாமி எனும் பார்ப்பன பாசிஸ்ட்டை பலரும் ஒரு ஜோக்கரான கோமாளி என்றே மதிப்பிடுகின்றனர். ஆனால் நேற்று உயர்நீதிமன்றத்தில் சுமார் 4 மணிநேரம் போலீஸ் நடத்திய வெறியாட்டத்தைப் பார்த்த பிறகாவது சு.சுவாமியின் பலமும் அவருக்காக இந்த அரசும், போலீசும், ஊடகங்களும் எந்த அளவுக்கு வெறி கொண்ட முறையில் சாமியாடும் என்ற உண்மையை நாம் அங்கீகரித்தாக வேண்டும். சிதம்பரம் கோவில் எனும் மக்கள் சொத்தை திமிருடன் சுரண்டியும் விற்றும் வாழும்...

சுப்பிரமணியசாமி மீது வழக்கு! போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!!

29
பிற்பகல் 4 மணி போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்! சுப்பிரமணியசாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு! சு.சாமியைக் கைது செய்! உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கொந்தளிப்பு! வழக்குரைஞர்கள் மீது போலீசு வன்முறை! நேற்றைய உயர்நீதி மன்ற முட்டை நிகழ்வை ஒட்டி வழக்குரைஞர்கள் 20 பேர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரைக் கைது செய்து விட்டது போலீசு. இன்று உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத்தின் கூட்டம் நடந்த்து. நடைபெற்றுள்ள சம்பவம் என்பது ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டத்தின் அங்கம். ஈழத்தமிழ்...

ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !

23
தமிழக அரசியல்வாதிகளிடம் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடு படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது. அதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள்...

ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாபிஷேகம்! கருத்துப்படம் வித் சு.சுவாமி கமென்ட்ஸ் !!

26
படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்   ஸேது ஸமுத்ரம் மாத்ரி சிதம்ப்ரம் கோவில் மேட்ரையும் ஆம்லேட் போட்டுடலாம்னு வந்தேன் முடியல...ஸ்லிப் ஆயிடுத்து ஆல் ரவுடீஸ், விட்தல புலீஸ்....கெடுத்துட்டா ! கர்னாநிதி ஆட்சீல ஒரு ஆம்லெட் கூட போட முட்ல குனிஞ்சு என் வேஷ்டிய பாருங்கோ, ஐ ஹேவ் எவிடன்ஸ். சும்மா உட்ற மாட்டேன், ஐ வில் கோ டூ சுப்ரீம் கோர்ட்!  

ஈழம்: சுப்ரமணிய சுவாமிக்கு ஹை கோர்டில் முட்டையடி!

271
சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணிய சாமிக்கு முட்டையடி ! வக்கீல்களிடமிருந்து தப்பி நீதிபதியிடம் மேசைக்கு அடியில் ஒளிந்தார் சு.சாமி ! ஹைகோர்ட்டில் சு.சாமிக்கு ஸ்பெஷல் பூஜை! "சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டது தவறு" என்று தீட்சிதர்கள் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவில், தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணியசாமி. எதிர் மனுதாரராக அதே நீதிமன்றத்தின் அறைக்குள் நின்று கொண்டிருந்தார் ஆறுமுகசாமி. அந்தப் பக்கம் சுப்பிரமணியசாமியும் தீட்சிதர்களும். இந்தப் பக்கம் ஆறுமுகசாமியும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும். வெளியே ஈழப்பிரச்சினைக்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்...

அண்மை பதிவுகள்