Thursday, March 20, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!

கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!

-

கல்வியில்-தனியார்மயம்-ஒழிப்பு-மாநாடு

கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு

2012 ஜூலை – 15 ஞாயிறு
மாலை 5.00 மணி

மணிகூண்டு மஞ்சக்குப்பம், கடலூர்.

தலைமை: தோழர். கருணாமூர்த்தி , செயலர், பு.மா.இ.மு. கடலூர்.

வரவேற்புரை: தோழர். முத்து, பொருளாளர். பு.மா.இ.மு. கடலூர்.

உரைகள்:

“கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார் மயத்தை ஊக்குவிக்கவே!”

– தோழர். மில்ட்டன் சென்னை உயர்நீதிமன்றம். மனித உரிமை பாதுகாப்பு மையம், கிளை செயலர்.

“கல்வி தனியார் மயத்தை ஒழித்துகட்டு!”

– திரு. ஜானகி. இராசா, உதவிப் பேராசிரியர், கடலூர்.

“பொதுப்பள்ளி – அருகாமைப்பள்ளி முறை ஏன் தேவை!”

– திரு. கணேசன், மாநில அமைப்பாளர். பு.மா.இ.மு. தமிழ்நாடு.

“உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம்!”
– திரு. சி. ராஜீ மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

நன்றியுரை: தோழர். நந்தா, இணைச் செயலாளர். பு.மா.இ.மு. கடலூர்.

மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் அனைவரும் வருக!

___________

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே, உயர்ரக கல்விவரை அனைவரும் இலவசக் கல்விபெற முடியும்!

நச்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!

தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்குவோம்!

ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமை பள்ளி முறைமையை நிலை நாட்டுவோம்!

ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளுக்கு கொள்ளி வைப்போம்!

நக்சல்பாரி பாதையில் மக்களே கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

_________________________________________________________

புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, கடலூர்.

rsyf.wordpress.com | 9442391009
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

  1. கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே, உயர்ரக கல்விவரை அனைவரும் இலவசக் கல்விபெற முடியும்! ஒரு தனியார் பள்ள்யில் ஏர்பட்ட தீ விபதுக்கு இன்னும் தீர்ப்பு சொல்ல முடியவில்லை இவர்களால்… ஜுலை 16 கும்பகோணம் தீ விபத்து!
    மதுவிற்பனையையும்
    கேபிள் டிவியையும்
    அரசுடமையாக்கி கொண்டாடும்
    உங்கள் அரசுகள்
    குழந்தைகளை
    எப்போது கொண்டாடும்?

    இதை படியுங்கள்:http://tamilpadaipugal.blogspot.in/2011/07/blog-post_5577.html
    வினவு இதை பற்றி ஒரு தனி கட்டுரை போட்டால் நன்றாக இருக்கும்..

  2. 20 வருடங்களுக்கு முன்,

    எத்தனை அரசு பள்ளிகள் இருந்தன. எத்தனை தனியார் பள்ளிகள் இருந்தன.

    ஆனால் இப்போது எத்தனை அரசு பள்ளிகள் உள்ளன. எத்தனை தனியார் பள்ளிகள் உள்ளன.

    இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம் எல்லாக்கட்சிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு அரசு பள்ளிகளை தரம் தாழ்த்தி தனியார் பள்ளிகளை வளர்ப்பது.
    பேராசையும் கெளரவுமும் கொண்ட பெற்றோர்கள் இதை ஆதரித்து பின் அவதிப்படுகின்றனர்.

    பெற்றோர்கள் இனியாவது அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பார்கள் என்றால் அதுவும் மாட்டார்களாம்.(பெட்ரமாஷ் லைட்டேதான் வேணுமா?)

    எப்போது மக்கள் அனைவரும் மாறி அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பார்களோ அப்போது அரசு பள்ளிகளில் இடமில்லாமல் தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கி அனைவருக்கும் இலவச கல்வித்தர வேண்டிய சூழ்நிலை வரும்.

    வருடத்திற்கு ஒரு லட்சம் இன்ச்னியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் வெளிவருகிறார்கள்.

    எப்படி வேலை கிடைக்கும்!!!
    வருடாவருடம் ஒரு லட்சம் புது காலியிடமோ புதுக்கம்பெனியோ வருவதில்லை. இதேநிலை தான் அடுத்த மாநிலங்களிலும் அதனால் அங்கேயும் போக முடியாது.
    இதனால் பயனடைவது என்னமோ கம்பெனி முதலாளிகள்தான்.குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள்.இதுதான் அரசின் நோக்கமும்.
    அவர்களுக்கே (பெரும்பாலோருக்கு) சரியான ஊதியத்துடன் வேலை இல்லை.
    இருந்தும் மக்கள் அதில் பணத்தை கல்விக்காக கொட்டுகிறார்கள்.

    தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும்முன் இதை சற்றே சிந்திக்க வேண்டும்…. அரசு ஒன்றும் செய்யாது மக்கள் சிந்திக்கும் வரை…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க