ஞ்சை அருகில் உள்ள திருமலை சமுத்திரத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த அரசு நிலங்களை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் திருப்பித்தர வேண்டும் என்றும், அக்டோபர் 3-ம் தேதிக்குள் அந்நிலத்தை விட்டு சாஸ்திரா பல்கலைக்கழகம் வெளியேற வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்றளவும் அந்த உத்தரவை சிறிதும் மதிக்காமல் வெளியேற மறுத்து வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம்.

திறந்த வெளி சிறைச்சாலைஅமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கொண்டாடி வருகிறது தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம். தஞ்சையில் சிறைத்துறைக்கு சொந்தமான 58.17 ஏக்கர் நிலத்தில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து அதில் 28 கட்டிடங்களையும் எழுப்பியுள்ளது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். அதனைத் தொடர்ந்து மாநில அரசு அந்த நிலத்தை திருப்பிக் கொடுக்க வேண்டுமென சாஸ்த்ராவுக்கு நோட்டீசு அனுப்பியது. இதனை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இருவர் அமர்வு கடந்த செப்டம்பரில் இவ்விவகாரத்தில் இருவேறு தீர்ப்புகளை வழங்கியது. நீதிபதி நூட்டி ராம் மோகன் ராவ் அந்த நிலத்தின் சந்தை மதிப்பான ரூ.10 கோடியை பெற்றுக் கொண்டு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதியான எஸ்.எம். சுப்பிரமணியம், ஆக்கிரமிப்பாளருக்கு நிலத்தைத் தருவது என்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறி அந்த நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பெழுதினார்.

படிக்க:
சாஸ்த்ரா – கல்விக்கூடமா ? ஆர்.எஸ்.எஸ்-ன்கொலைகார பயிற்சிக்கூடமா? (பு.மா.இ.மு)
சாஸ்திராபல்கலைக்கழகத்தை இழுத்துமூடு !தஞ்சைஆர்ப்பாட்டம் (ம.க.இ.க)

மேலும், 4 வாரத்திற்குள் அந்த நிலத்தை அரசு மீட்க வேண்டும் என்றும் அக்காலகட்டத்தில் அந்த நிலத்துக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இருவர் அமர்வின் வேறுபட்ட தீர்ப்புகளின் காரணமாக, வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டார் அப்போதைய தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியனின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அந்த நிலத்தில் இருந்து அக்டோபர் 3-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்றளவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை திருப்பியளிக்கவுமில்லை. அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை.

மத்தியில் ஆளும் பார்ப்பன பாஜக கும்பலோடு நெருங்கிய உறவு வைத்துக் கொண்டு மாநில அரசையும் நீதித்துறையையும் மதிக்காத போக்கைக் கடைபிடித்து வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். எச்.ராஜாவின் பாசையில் சரியாகச் சொன்னால் நீதிமன்றத்தையும், மாநில அரசையும் ‘மயிராக’ மதிக்கிறது.

எச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும் எவ்வளவு இழிவாகப் பேசினாலும், அவர்கள்  மீது வழக்குகள் பாய்வதில்லை. மீறி வழக்குகள் போடப்பட்டாலும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மத்திய பாஜக அரசின் ஆசி இருந்தால், பட்டப்பகலில் கொலையே செய்தாலும், மறுநாள் ஏதேனும் நீதிபதி வீட்டு திருமணத்தில் பங்கேற்கலாம் என்னும் நிலைதான் தமிழகத்தில் நீடிக்கிறது.

சாஸ்த்ரா பல்கலையைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு மிகவும் நெருக்கமான ஒரு பல்கலைக்கழகம். அந்த கல்லூரி வளாகத்திலேயே ஆர்.எஸ்.எஸ் சாகாக்கள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதை ம.க.இ.க. மற்றும் பு.மா.இ.மு. அமைப்புகள் அம்பலப்படுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு அவ்வளவு நெருக்கமான உறவு கொண்டிருக்கையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆஃப்ட்ரால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கெல்லாம் பயப்படுமா என்ன ? சங்கரமடம் என்பது பார்ப்பனர்களின் அரசியல் அதிகார வர்க்க தலைமை மடம் என்றால் சாஸ்த்ரா பல்கலை என்பது பார்ப்பனர்களின் கல்வி அதிகார தலைமை இடம் என்று சொல்லலாம். தமிழகத்திலேயே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் முதல் இடம் வகிப்பது சாஸ்திரா பல்கலை எனலாம். அதனால்தான் நீதிமன்றத்திலும் கூட நியாயமான தீர்ப்பு என்பது தாமதமாகவே வருகிறது.

மக்களை உறிஞ்சிக் கொழுத்த இந்த நச்சுப் பாம்புகளை நீதிமன்றத் தீர்ப்புகள் என்றும் தண்டிக்கப் போவதில்லை. அப்படி தண்டிக்க வேண்டுமென்றால் மக்களாகிய நாம்தான் திருடப்பட்ட நமது பொதுச் சொத்துக்களை இந்த திருட்டுக் கூட்டத்திடமிருந்து பறித்தெடுக்க வேண்டும். அதுதான் இன்றைய சூழலில் நம்முன் உள்ள ஒரே வழி. அதன்போக்கில்தான் நீதிமன்றமோ அரசோ ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும்.