மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!
பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெற நம் நாட்டின் இயற்கைவளங்களை நாசம் செய்வதோடு, நம்முடைய உழைப்பையும் குறைந்த விலைக்கு சுரண்டி கொழுப்பதற்கே இதுபோன்ற திட்டங்கள்!
நிலக்கரி சுரங்கங்கள்: டெல்டாவை சூறையாடத் துடிக்கும் கார்ப்பரேட்டுகள்
மோடி அரசு வேறுவழியில்லாமல் ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மூன்று வட்டாரங்களை நீக்கி அறிவித்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்புதான் பிரதான காரணமாகும். ஆளும் தி.மு.க அரசு இத்திட்டத்திற்கு எதிராக இருப்பது முக்கிய காரணமாகும்.
ஏப்ரல் 11 : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கோட்டை முற்றுகைப் போராட்டம் வெல்லட்டும்!
இன்று உலகளாவிய அளவிலும் பல நாட்டு அரசாங்கங்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களை கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கேற்ற திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.
சாதிய படிநிலையை அமல்படுத்தும் ஹைதராபாத் பல்கலைக்கழகம்!
பட்டியல் சாதி விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 30.2 ஆக இருந்தது. ஆனால், அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரியோ வெறும் 12 மட்டுமே.
பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம்!
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலியல் துன்புறுத்தல்கள் கலாஷேத்ராவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனை அம்பலப்படுத்தி நூற்றுக்கணக்கான நபர்கள் போராடுகிறார்கள். 90-க்கு அதிகமான எழுத்து பூர்வ புகார்கள் வந்துள்ளன. அந்த ஒற்றை நபர் மீது வழக்கு பதியவும் கைது செய்யுமே இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.
தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்: கார்ப்பரேட் திட்டங்களால் கற்றல்திறன் உயரவில்லையா? || புமாஇமு
எப்போதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ அப்போதெல்லாம் மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் பழியை போட்டுவிட்டு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தப்பித்துக் கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இவர்கள்.
மோடி அரசுக்கு எதிராக மகாராஷ்டிர விவசாயிகள் மாபெரும் போராட்டம்!
வெங்காயம், பருத்தி, சோயா பீன்ஸ், பச்சைப் பயிறு முதலான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கூட கிடைக்காமல் கடன்பட்டு வருகிறார்கள் விவசாயிகள்.
ஏகாதிபத்திய சுரண்டலுக்கு துணைபுரியும் இந்திய பார் கவுன்சில்!
இந்நடவடிக்கை பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் சுரண்டலையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் துணைகொண்டு சட்டரீதியாக மேற்கொள்ளத்தான் வழிவகை செய்யும்.
திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!
பொதுத்துறை என்பதன் பொருள் உழைக்கும் மக்களின் வரியால் உழைப்பால் உருவானது என்பதே. எனவே அதை முதலாளிகளுக்கு எடுத்துக்கொடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை!
கோட்டா – நவீன வதைமுகாம்!
எந்த விளையாட்டு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் மாணவர்கள், வதைமுகாமைப் போல தினந்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இக்கொடுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், இந்நகரத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!
அனுதினமும் தற்கொலைகள் தொடர்கிறது. இதை சாதாரண செயலாக எண்ணி கடந்து செல்வது என்பது இனி நம் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு அல்ல அதை நினைப்பதற்கே பயம் கொள்ளும் நிலைமையே நோக்கி செல்லும்.
1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்
மெரினாவை அழகுபடுத்தும் திட்டத்தை எதிர்க்கும் மக்களை ஒடுக்கவே அங்கு காவல் நிலையம் அமைத்திருக்கிறார்கள் என்பது பின்னர்தான் புரியவருகிறது. மீனவ நண்பனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடைபெற்ற இந்த கோரசம்பவம் மீனவர்கள் மத்தியில் ஒரு ஆறாவடுவாக இன்றுவரை நீடிக்கிறது.
சாலை விரிவாக்கத்தைக் கைவிடு! மக்களை வாழவிடு!
சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!
திமுக அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூய்மைப் பணியாளர்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் அவல நிலையும் தொடர் போராட்டங்களும் இயல்பு நிலையாகவே மாறிவிட்டன.
வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?
ஒன்றிய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவரை சதித்தனமாக திணிப்பதையும், அன்றாட வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்து குறைவான கூலிக்கு உழைப்பவர்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.

























