அடால்ப் ஹிட்லர் ஆரிய இன வெறியைத் தூண்டி ஒரு பேரழிவை தோற்றுவித்தது போல மருத்துவர் ராமதாசு வன்னிய சாதிவெறியைத் தூண்டி முயற்சி செய்கிறார். 25.04.13 இரவு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா அதை முன்னுரைக்கிறது.
சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுக்க முயன்று அதில் தோற்றுப் போன ராமதாசு இப்போது அப்பட்டமான சாதி வெறி அரசியலைக் கையிலெடுத்து அதில் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். அதற்காக ஆண்ட பரம்பரை என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரையும் திரட்டி வருகிறார்.
எண்பதுகளில் ராமதாசு வன்னியர் சங்கத்தைத் தொடங்கி மார்க்ஸ் முதல் அம்பேத்கர், பெரியார் வரை இணைத்துக் கொண்டு முற்போக்கு வேடமிட்டபோது தமிழகத்தின் பல்வேறு “முற்போக்குகள்” சிலிர்த்துப் போனார்கள். ஆனால் ‘ராமதாசு அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஆதிக்க சாதிவெறியால் ஓட்டுப் பொறுக்கி பிழைக்கும் ரகம்தான்’ என்பதை அன்றிலிருந்தே மகஇக உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்கள் சொல்லி வருகின்றன. அதனை இன்று உண்மையென்று உணர்த்தியிருக்கிறார் ராமதாசு.
ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள், முசுலீம் எதிர்ப்பு இந்துமத வெறி பாசிசத்தை முன்னிறுத்தி அட்டூழியங்களை எப்படிச் செய்து வருகின்றனவோ அப்படியே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை நிறுத்தி மோடியைப் போல ரத்தச் சேற்றில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் துணிந்து விட்டார் ராமதாசு.
அதனை எடுத்துரைக்கவே இந்தச் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் கலாச்சார மாநாடு”.
தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை, சம நீதிப் பேரவை என்ற பெயர்களிலே ஆதிக்க சாதிச் சங்கங்களையெல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார். அவரே சொல்வதைப் போல பிராமணர்கள் முதல் நரிக்குறவர் வரை இதில் இணைத்திருக்கிறார்களாம். இவர்களெல்லாம் தாழ்த்தப்பட்ட குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் (பறையர்) சேர்ந்தவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். சொத்து பத்துக்கள் பெண்டு பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாமல் ராமதாசை அடைக்கலம் தேடி வந்துள்ளார்களாம். இதை மேடையில் அறிவிக்கிறார், ராமதாசு.
தேவர் சாதியின் பெயரால் தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கட்ட விழ்த்து விடப்படும் வன்கொடுமைக்குத் தலைமை தாங்கும் சாதிவெறியன் பி.டி.அரச குமார், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் வாண்டையார், மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் கொங்குவேளாளர் சங்கத் தலைவர் நாகராஜ், நாடார் பேரவை, செட்டியார், ரெட்டியார், முதலியார், நாயுடு, பிராமணர் சங்கங்களின் தலைவர்கள் எல்லாம் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக முழங்கிய சங்கநாதம் இதுதான்;
வன்கொடுமை தடுப்புச் சட்டம் (PCR ACT) நீக்கப்பட வேண்டும்; (ராமதாசுக்கு மட்டும் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.) தாழ்த்தப்பட்டவர்கள் நடத்துகிற காதல் நாடகம் ஒழிக்கப்பட வேண்டும்; ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மீண்டும் நாடாள வேண்டும்; எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்ற வேண்டும்; 2016- சட்டமன்றத் தேர்தலில் சின்ன அய்யா அன்புமணி ராமதாசு முதலமைச்சராக அமர வேண்டும்; அப்போது தான் வன்னியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது அமைச்சரவையிலேயே சிறந்த அமைச்சர் என்று ஐநா சபையே புகழ்ந்ததாம். பொது இடத்தில் புகைக்கக் கூடாது. 108 ஆம்புலன்ஸ் திட்டம் இவர் கொண்டு வந்த உலகிலேயே முன்னோடித் திட்டமாம். தமிழ்நாட்டுக்கு அவரை விட சிறந்த முதலமைச்சர் கிடைக்க மாட்டார் என்று புகழாதவர்கள் பாக்கி இல்லை. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் பலகோடி சுருட்டியதாக அன்புமணி மீது வழக்கு உள்ளதை அக்கினி சட்டி பரம்பரையினர் யாருக்கும் நினைவில்லை போலும். பசுமைத்தாயகம் திட்டத்திற்காக ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து பெறப்படும் நிதி எங்கே போகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. வன்னிய சங்கமும், பா.ம.கவும் ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒப்பற்ற இயக்கங்கள் என்பதைப் போலவே பேசப்பட்டது.
தேவர் சாதி வெறியன் பி.டி.அரச குமார் பேசும்போது “கடந்த அக்டோபர் 30-ல் தேவர் குருபூசை விழாவுக்கு வந்த அப்பாவி இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதையும், மதுரை சிந்தாமணியில் தேவர் பூசைக்கு செல்பவர் போல் நடித்து ஏமாற்றி வேனுக்குத் தீ வைத்து பலர் கொலை செய்யப்பட்டதையும் எவனாவது கேட்டானா? தாழ்த்தப்பட்டவன் ஒருவன் தாக்கப்பட்டால் அவனுக்காக எல்லோரும் குரல் கொடுக்கின்றான். நான் கண் அசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு பயல் வெளியே நடமாடமுடியாது, வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது. அய்யா (ராமதாசு) என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். காலம் கனியட்டும் அதுவரை காத்திரு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்று வன்கொடுமையாக கொப்பளித்தார்.
“ஈழத் தமிழர் நலனுக்காகவும் அன்னைத் தமிழுக்காகவும், மதுவை ஒழிக்கவும் வாழ்கின்ற ஐயாவின் பின்னால் நாமெல்லாம் அணிவகுத்துள்ளோம். இத்தனை லட்சோப லட்சம் இளைஞர்கள் திரண்டிருக்கிற இந்தக் கூட்டத்தில் ஒரு சதவீதமாவது சாராய வாடை இருக்குமா? சொல்ல முடியுமா” என்று கேட்டார் அரசகுமார். தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிலே குடிக்காத ஒரே தலைவர் மருத்துவர் ஐயா தான் என்று சான்றிதழும் வழங்கினார் அந்தக் குடிகார அரச குமார்.
ஆனால் சித்திரை முழுநிலவு நிகழ்ச்சி நடந்த அன்று பகலில் புதுச்சேரியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் வந்தவர்கள் மரக்காணம் வழியாக வரக்கூடாது என்று போலீஸ் தடுத்தும் கூட கேட்காமல் அதே வழி வந்தவர்கள் வேன் கூரைமேல் அமர்ந்து குடித்து விட்டு பீர் பாட்டிலை (அது ஏவுகணையைப் போல இருக்கும்) சாலையில் நின்ற இளைஞர்கள் மீது எரிந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கத்தி, அரிவாள் உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களுடன் மரக்காணம் காலனிக்குள் சென்று வீட்டிலிருந்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். கடைகளுக்குள் புகுந்து சூறையாடியதுடன் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர்களை அடித்து உதைத்ததாகத் பல்வேறு தினசரிகளின் செய்திகள் கூறுகின்றது. அதுமட்டுமல்லாமல் தாக்குதலில் 17 வயது இளைஞர் ஒருவர் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரனின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே இருந்த காவலர்களால் சமாளிக்க முடியாமல் கூடுதல் காவல்படை வரவழைக்கப்பட்டு தடியடியும், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் பி.டி.அரச குமாருக்கு சாராய வாடையே இல்லையாம். குடித்திருப்பவனுக்கு வாசனை தெரியாது என்பது உண்மைதான்.
(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)
ராமதாசு ஹிட்லரின் வாரிசு என்றால் காடுவெட்டி ஜெ.குரு கோயபல்சு என்று சொல்லலாம். ஆனால் காடுவெட்டி, கோயபல்சையும் விஞ்சியவர் என்பது தெரிந்தது. குரு பேசியவுடன் கூட்டம் குத்தாட்டம் போட்டது.
காடுவெட்டியின் தலைமையில் தான் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வன்னிய சாதிவெறி மாநாடு நடைபெற்றது. அவர் சிந்திய மாணிக்கப் பரல்களில் சில:-
“வன்னியன் ஆண்ட பரம்பரை. ஆனால் இன்று பன்னி மேய்க்கிற நிலையில் உள்ளான். சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் பரம்பரை. சத்திரிய குலம். சிவபெருமான் பார்வதி முன்னிலையில் பித்ரு முனிவர் நடத்திய யாகத்தின் போது நெருப்பில் போடப்பட்ட வன்னிக்குச்சியிலிருந்து உருவெடுத்தவன் தான் வன்னியன். முருகன், விநாயகன் நமது சகோதரர்கள். சீதை அக்கினிப் பிரவேசம் செய்தவள், பாஞ்சாலி அக்கினி பிரவேசம் செய்தவள். வன்னியன் அக்கினியிலிருந்து பிறந்தவன். அவனை யாராலும் அழிக்க முடியாது.”
“80 களில் ஐயா வன்னியர் சங்கத்தை தொடங்கி இருக்காவிட்டால் ஆந்திராவைப் போல் நாங்கள் எல்லாம் நக்சலைட்டுகளாக மாறியிருப்போம். ஐயா தான் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகக் கூறி எங்களை கட்டுப்படுத்தினார். ”
“தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தியவர் மருத்துவர் ஐயா தான். நம்மிடமே அவர்கள் வேலையைக் காட்டுகின்றனர். ‘வாய்யா என்று கையைக் கொடுத்தால் உம் பொண்ணக் குடுன்றான்’ என்ன திமிர். நீ காதலி, உன் மாமன் பொண்ணக் காதலி, அக்கா பொண்ணக் காதலி, யாரு வேணாம்னு சொல்றா? அத விட்டுப்புட்டு எங்க பொண்ணக் கிட்ட வந்து காதல் நாடகம் ஆடுறியே விடுவமா? தருமபுரி கலவரத்துக்கு நாங்க காரணம்னு எல்லா கச்சிக்காரணும் சொல்றான். ஊடகங்களும் சொல்லுது. ஆனா நாங்களா காரணம், நியாயத்தை சொல்லணும்.”
‘வன்னியன் பொண்டாட்டி எனக்கு வப்பாட்டி’ என்கிறான். நான் கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? நான் காவல்துறைக்கு, சிறைக்கு அஞ்சாதவன். நான் பார்க்காத சிறையா? நான் எதற்கும் தயார். நான் என்ன மோளம் வாசிக்கிறவனா?”
“வன்னியன் படிப்பறிவில்லாத முட்டாள். தலித்களுக்கு இன்னைக்கு அரசாங்கம் எல்லா வசதியும் கொடுக்குது. 20% இட ஒதுக்கீடு ஐயா கேட்டார். கொடுத்திருந்தா இப்படில்லாம் நடக்குமா?”
“மாநாட்டுக்கு வர்றீங்க, கூட்டமெல்லாம் கூடுறீங்க ஆனா ஓட்டுமட்டும் போட மாட்டேன்றீங்க. இலவசத்தக் கொடுத்து இந்த திராவிடக் கட்சிக்காரங்க. நம்மள பிச்சைக் காரனா ஆக்கிட்டாங்க. யாருக்கு வேணும் உங்க இலவசம். எங்களுக்கு அதிகாரம் வேணும். ஆனா நம்ம வன்னியன் தேர்தல் வரைக்கும் நல்லா இருப்பான். தேர்தல் வரும் போது ஓட்டுக்கு 3000, 2000 வாங்குவான். ஒரு வீட்டுல 6 ஓட்டு இருந்தா 3 ஓட்டு 3000 தந்தவனுக்கு. 2 ஓட்டு 2000 தந்தவனுக்கு. ஒரு ஓட்டு மட்டும் வன்னியனுக்கு. ஒரு ஓட்டு வாங்கி வன்னியன் எப்படி ஜெயிப்பான். எனவே ஓட்டுக்கு காசு வாங்குறது கேவலம். வரப்போற தேர்தல்ல வன்னியர்கள் கட்சியா பிரியக் கூடாது வன்னியனா ஒண்ணு சேரணும். நம்ம பின்னாடி அனைத்து சமுதாய மக்களும் இருக்கறாங்க. நாம ஒண்ணு சேர்ந்தால் ஆட்சி அதிகாரம் நம்ம கையில தான். அடுத்த முதல்வர் நம்ம சின்ன அய்யாதான் (காடுவெட்டி குரு தலித் ஒழிப்புத்துறை அமைச்சராவாரோ?) வன்னியர்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மீண்டும் நாம் ஆள வேண்டும். அதற்கு வன்னியர்கள் ஒன்றாகத் திரள வேண்டும்.”
கடைசியில் வன்னியன் ஆண்ட பரம்பரை என்பதற்கு காடுவெட்டி தரும் ஆதாரம் என்ன? பித்ரு முனிவர் யாகத்தில் பிறந்தவனாம். சிவன்- பார்வதி வழித்தோன்றல்களாம். இத்தகைய புளுகு பார்ப்பனப் புரட்டுக்கள்தான் வன்னியர் வரலாறு என்றால் பெரியார் மட்டும் இருந்திருந்தால் குருவை வெறித்துப் பார்த்தே விரட்டியிருப்பார். இதில் பெரியார் உயிரோடு இருந்த போது அவரை அதிகம் வன்னியர்கள் பின்பற்றினார்கள் என்று வேறு பெருமை பேசினார் குரு. உண்மைதான். இன்றும் பெரும்பான்மை வன்னியர்கள் பெரியாரை மதிப்பவர்கள் என்பதால்தான் பாமக, வன்னியர் சங்க சாதி வெறியை அவர்கள் ஏற்கவில்லை. அதுதானே ராமதாஸ் மற்றும் குருவுக்கு எரிச்சலைத் தருகிறது. இதில் வன்னிய மக்கள் நக்சலைட்டுகளாக மாறுவதை ராமதாஸ் தடுத்து நிறுத்தினார்; வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தவுடன் வன்னிய இளைஞர்கள் நக்சல் கட்சிகளுக்கு போகவில்லை என்று பெருமை பேசினார். அதென்னவோ உண்மைதான்.இந்த ஆளும் வர்க்க எடுபிடித்தனத்துக்காக உருவாக்கப்பட்டதுதானே பாமக?
தலித்துகளைப் பற்றி குரு பேசியது வெளிப்படையான சாதித்தமிர். ஏதோ இவர்களது தயவில்தான் தலித்துகளுக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது போலவும் அதை கெடுத்துக் கொண்டால் நடப்பது வேறு என்பதாக பச்சையாக மிரட்டி பேசினார். இதை தமிழ்த்திரைப்படங்களில் நம்பியார், பொன்னம்பலம் போன்றோர் கிராமத்து ஏழைகளைப் பார்த்து பேசுவது போலவே அச்சு அசலாக இருந்தது.
கடைசியாக மருத்துவர் ராமதாசு பேசினார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் அவரிடம் புகார் மனுக்கள் கொடுத்திருக்கிறார்களாம். கழுகுமலை அருகில் ஒரு கிராமம். 400 குடும்பங்கள் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 40 குடும்பங்கள் தலித் குடும்பங்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிய வில்லை. விடலைப் பையன்கள் பள்ளிக்குப் போகிற பெண்களைச் சீண்டி, சைக்கிள் பின்னால் உட்காரு, உனக்கு வேறு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்று சொல் கிறார்கள். காவல் துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. புகார்கொடுத்தவர்கள் மீதே நடவடிக்கை என்கிறது காவல்துறை.
காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் (தலித்துகள்) தான் அதிகாரியாக இருக்கிறார்கள். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எல்லாச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எல்லாமே அவர்களுக்கு இலவசம். நமக்கு எல்லாமே கட்டணம். எல்லா தவறுகளையும் செய்து விட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நம்மீது புகார் கொடுக்கிறார்கள். என்னையே ஒரு முறை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். நான் 32 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்ற போது குண்டாந் தடிகளோடு வந்து தடுக்கிறார்கள். அரை நிர்வாணமாக போராட்டம் நடத்துகிறார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்தத் தெரியாதா? தாக்கத் தெரியாதா? காடுவெட்டி குழு கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? தமிழ்நாட்டில் 80 சதவீதம் நாம் இருக்கிறோம். 18 சதவீதம் தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் பயந்து வாழ வேண்டியதிருக்கிறது.
நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந்தைகளை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கர்ப்பமாக்கி கை விட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அது தான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்கு சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக் கூட கொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோட அப்பன் செத்துப் போனான். இழப்பு எங்களுக்குத்தான். காதல்-கலப்புத் திருமணம் இதையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. உரிமை இல்லை என்று சொல்றான். பெற்றோர் தலையிடாமல் பின் யார் தலையிடுவது? காதலுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் சாதி பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது
தலித்துகளை வளர்த்துவிட்டது நான்தான். அவர்களுடைய பிரச்சனைகளுக்காக என்னை விட அதிகமாகப் போராடியவன் எவன் உண்டு. அப்படி இல்லாமலா அம்பேத்கார் விருது, தமிழ்குடி தாங்கி விருதெல்லாம் எனக்கு கொடுத்தார்கள். இப்போது பலர் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள். “நீங்கள் தானே அவர்களை வளர்த்து விட்டீர்கள்” என்று.
தமிழ்நாட்டில் 2 ½ கோடி வன்னியர்கள் இருக்கிறோம். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நமது பின்னணியில் இருக்கிறார்கள். ஆனால் அதிகாரம் நம் கையில் இல்லை. அதிகாரம் நம் கையில் வேண்டும். தமிழ்நாட்டில் நாம் தான் பெரும்பான்மை சமூகம். ஆனால் சிதறுண்டு கிடக்கிறோம். திராவிடக் கட்சிகளின் பின்னால் சென்று அவர்களை வாழவைத்து விட்டோம். நம்பி ஏமாந்து விட்டோம். இனி ஒரு போதும் நாம் யாரோடும் கூட்டணி சேரப்போவதில்லை. ஆனால் யார் வேண்டுமானாலும் நம்மோடு கூட்டணி சேரலாம்.
என்னை சாதிவெறியன் என்று சொல்கிறார்கள். ஊடகங்கள் உண்மையைச் சொல்ல மறுக்கின்றன. நான் சாதிவெறியன் இல்லை. ஒரு சிறுபான்மை பிரிவினருக்கு அதிக சலுகை இருக்கிறது. சட்டம் அவர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. காவல்துறை அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. அவர்கள் நாடகக் காதல் செய்கின்றனர். நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அப்படியானால் நல்லிணக்கம் எப்படி வரும்? வராது. அதனால் தான் கருத்து ஒற்றுமை உடையவர்கள் ஒன்றாக இணைந்து உள்ளோம். இந்தக் கூட்டணி பலமான கூட்டணி 82% பெரும்பான்மை கூட்டணி.
இவ்வாறு ராமதாஸ் பேசினார். அவர் பேசியது அனைத்தும் காவல் துறைக்குத்தான் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டார்.
ராமதாஸின் காதல் குறித்த விளக்கம் என்ன? அதாவது தைலாபுரம் தோட்டத்து வன்னிய பண்ணைகள் காங்கிரசிலிருக்கும் கிருஷ்ணசாமி போன்ற பண்ணைகளோடு காதல் வைத்துக் கொள்ளலாம். இதைத் தாண்டி ஒரு ஏழை வன்னிய இளைஞன் கூட ஒரு பணக்கார பாமக வன்னியர் பெண்ணை காதலிக்கக் கூடாது. இதைத் தவிர மற்ற காதல்களையெல்லாம் நாடகம் என்று எதிர்க்கிறார் ராமதாஸ். இதற்கு ஆதரவாக முசுலீம் மற்ற பிற ஆதிக்கசாதிகளை அணி சேர்க்கிறார். முசுலீம் இளைய தலைமுறை மாற்று மத, சாதியினரோடு காதலிக்க கூடாது என்பதற்கு தமுமுக மற்றும் தவ்கீத் ஜமாத் உட்பட பல்வேறு இசுலாமிய அமைப்புகள் ஆதரவு தரும். அந்த வகையில் இசுலாமிய அமைப்புகள் ஆதிக்க சாதிவெறியர்களின் அணியில்தான் இருக்கின்றனர் என்பதை முசுலீம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு உலகமயமாக்க ஏகாதிபத்திய பண்பாட்டுச் சூழலில் மண முறிவு என்பது அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே குற்றம் சுமத்துவது நவீன மனுவாதம் அன்றி வேறென்ன? சாதியை வைத்துப் பிழைப்பு நடத்த துணிந்து விட்ட ராமதாசுக்கு தன் சாதியக் கூட்டமைப்பு தகர்வதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. எனவே தான் மோடியைப் போல திட்டமிடுகிறார்.
தமிழ், தமிழ்ப் பண்பாடு என்று கூறி பட்டம் வாங்கும் ராமதாசு காதலும் வீரமும் தமிழர் தம் பண்பாடு என்பதிலிருந்து வன்னியப் பெண்களுக்கு விலக்கு அளிக்க விரும்புகிறார்.
அடுத்து ஆதிக்கசாதி வெறியின் பெரும்பான்மையை வைத்து தலித் மக்களை அவர் எச்சரிக்கிறார். இதே பெரும்பான்மையை வைத்துத்தான் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் இசுலாமிய மற்றும் கிறித்தவ மக்களை எச்சரிக்கிறது. அந்த வகையில் சாதிவெறியும், மதவெறியும் ஓரிழையில் ஒன்றிணைகின்றன. சாதி மாறி காதலித்தால் பண்பாடு கெட்டு விடும் என்ற வாதத்தை இந்துமதவெறியர்களும் மனம்குளிர ஆதரிப்பார்கள்.
காதலுக்கு எதிரி இல்லை. சாதிவெறியன் இல்லை. சமூக நீதிக்காகத்தான் பாடுபடு கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் ராமதாசு வன்னியன், தேவர், நாயுடு, கவுண்டர், நாடார் என்பவை எல்லாம் எதைக் குறிக்கிறது என்று கருதுகிறார்? ஆண்ட பரம்பரை தான் அது தான் மீண்டும் ஆளவேண்டும் என்றால் மன்னராட்சி முறையல்லவா வரவேண்டும். அதனால் தான் வாரிசுரிமை என்ற அடிப்படையில் அன்புமணி (சின்ன அய்யா) யைக் கொண்டு வந்திருக்கிறார். அதையும் அவருடைய அனைத்து சாதி ஜால்ராக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
வன்னிய இளைஞர்களை நல்வழிப் படுத்துவதற்காக அவர்களுக்கு பல்வேறு பயிற்சிப் பட்டறை நடத்துவதாகச் சொல்கிறார். அதன் லட்சணம் மரக்காணத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. வீரம் என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ‘சேரி’ (ராமதாசு சொன்ன வார்த்தை) மக்களை மேலும் மேலேறித் தாக்குவது, குடி போதையில் ரவுடித் தனத்தைக் கட்டவிழ்த்து விடுவது, சேரிப் பெண்களைப் பெண்டாள்வது இது தான் இவர்களுக்கு கற்றுத்தரும் பண்பாட்டின் பின்னணி. 82 % பெரும்பான்மை சமூகம் 18% சிறுபான்மை சமூகத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று ராமதாசு சொல்வது வடிவேலுவே பொறுத்துக் கொள்ள முடியாத காமெடி. சட்டம் அப்படி PCR விஷயத்தில் துல்லியமாக வேலை செய்கிறதாம். என்ன கூத்து இது.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்தால் காவல்துறை அந்தப் புகாரைப் பதிவு செய்வதே இல்லை. புகார் பதிவு செய்யப்படுவதற்கே-ஏன் பெற்றுக் கொள்வதற்கே- மிகப் பெரிய அழுத்தம் தரவேண்டும் என்பதே உண்மை. பெரும்பாலான வழக்குகளில் காவல்துறை சமரசம் செய்வதற்கே முயற்சி செய்கிறது.
இரண்டாவதாக அப்படியே வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்து எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளி விவரத்தைத் தேடினால் பதிவு செய்யப்படும் வழக்குகள்-மற்றும் தீர்ப்புகளின் நிலை மிகப் பரிதாப நிலையிலேயே உள்ளது.
எப்படி, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு என்று அரசாங்கம் முன்வைக்கும் தண்டனைகள் ஒரு …யும் புடுங்கவில்லையோ, அது போலவே தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதாரமான சட்டங்களின் நிலையும் அதற்கு காரணம் பார்பனீயம் ஏற்படுத்திய சாதிய அடுக்குமுறையும் அதைப் பேணிப் பாதுகாக்கும் ஆதிக்க சாதி வெறியர்களின் அரசியல் அதிகாரமும் தான்.
இந்தச் சூழ்நிலையில் அப்பட்டமான பிழைப்பு வாத சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி மதிப்பிழந்து போன ராமதாசு கேடு கட்ட சாதி அரசியலைக் கையிலெடுத்து மறுபடியும் முதல் பரோட்டாவிலிருந்து தொடங்கியிருக்கிறார். இந்தக் கழுதைக்குப் பெயர் முத்துமாலையாம்.
மாநாட்டுக்கு அழைப்பு விடும் மன்னர் பரம்பரை
வன்னியர் புராணப் புளுகு
-செவத்தி வீரன்.

![2 R UMAX PowerLook 2100XL V1.4 [2]](https://www.vinavu.com/wp-content/uploads/2013/04/tamil-nadu-rajapakse-slider.jpg)











சித்திரை முழு நிலவு மாநாடாம்.
மாநாட்டுக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம்??
“விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு மாநாடு” என்று பெயர் வைத்து இருந்திருக்கலாம்.
என்னவொரு வன்மம் நிறைந்தப் பேச்சு!
#பதவி அரசியல் படுத்தும் பாடு!
சாதி மக்களை கைகாட்டி கூட்டணியில் நாலு சீட்டு அதிகம் கேட்பதற்காகத்தானே அத்தனை கூத்துக்களும்!!
இந்தப் பொழப்புக்கு …………
மக்களே உஷார், சாதி திருவோட்டை ஏந்தி ஓட்டுப்பிச்சை கேட்கும் கும்பலைப் புறக்கணிப்போம்.
சாதி, மத வெறி பிடித்தவன் எல்லாம் எதுக்கு அடுத்தவன் வீட்டை, கடையை அடிச்சி நொறுக்கிறான்??
தன் வீட்டை அடிச்சி நொறுக்கி, தீய கொளுத்தி விட வேண்டியதுதானே!!
Stupid fellows!!!
// சிவபெருமான் பார்வதி முன்னிலையில் பித்ரு முனிவர்
பிருகு முனிவர் கேள்விபட்டிருக்கேன். யாருயா அது பித்ரு முனிவர்?
Vinavu,
you are too much in writing this. Why you expect drainage to smell like scent and shit to smell like sandal? ramadoss is a retard. and all people with caste affiliation are shit eaters. do we need to let them do all these things silently?
வினவு திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை? வினவு என்ற பெயரை மாற்றுங்கள் என்று பலமுறை கூறிவிட்டோம். மறுமொழிகள் குறித்து கொள்கை வகுக்கத்தெரிந்த உனக்கு கட்டுரையை வெளியிடும் போது அந்த கொள்கை காற்றில் பறந்து விடுகிறதோ? தலித் ஆதரவு கட்டுரை மட்டுமே வெளியிடப்படுவதற்கு தமிழ் தேசியம் என்ற முகமுடி எதற்கு? ஆதிக்கம் ஆதிக்கம் என்று சொல்லியே அடுத்தவர்களை சீண்டுவது தான் வேலை என்றால் வெளிப்படையாக செய்யுங்கள். தனிநபர் தாக்குதல் என்பது தலித் நபர்களுக்கு மட்டும் தானா? ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று அம்மக்களை நீங்கள் தான் தாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்த வினவு தளம் எதற்காக உருவாக்கபட்டது..அதை மரந்துடிங்கலா………
மக்கள் உண்மையில் வர்க்கமாக பிரிந்துள்ளனர் அதை மறைத்து சாதியாக, மதமாக பிரிக்கும் வேலையைசெய்யும் இது போன்ற ஜந்துக்களை சமூகத்தைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும். வன்னியர்களில் பெரும்பான்மை மக்கள் உழைக்கும் மக்கள் ஆனால் அவர்களை ஆண்ட பரம்பரை என்று ஏய்த்து, இவன் மட்டும் பணம் சம்பாதிக்க, பதவி சுகம் காண நினைக்கிறான். பணத்துக்காக பதிவிக்காக மலத்தை தின்னவும் தயங்க மாட்டார்கள் இந்த சமூக விரோதிகள். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடும் போது அடக்கி வாசிச்சான் திரும்பவும் ஆரம்பிச்சுட்டான். (மாணவர்கள் ஒற்றுமையாக போராடுவதை பார்த்து வயிர் எரிந்திருப்பான் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து)
“சிவனும் பார்வதியும் வன்னியர்களே” மாமல்லபுரத்தில் வெளியிடப்பட்ட மாபெரும் கண்டுபிடிப்பு!
ஒரு வாதத்துக்காக இதை அப்படியே ஏத்துக்குவோம். இந்த இரண்டு வன்னியர்களை தொட்டு, தொடச்சி, குளுப்பாட்டி, கும்புடறதுக்கு இன்னைக்கு வன்னியர்களுக்கு உரிமை இருக்கா? இல்லேன்னா ஏன் இல்லை? யார் தடுக்கிறார்கள்? ஏன் தடுக்கிறார்கள்? எதை சொல்லி தடுக்கிறார்கள்? அதை முறியடிக்க வன்னியர் சங்கமும் அதன் அரசியல் கிளையான பாமகவும் என்ன போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்கள்?
இன்னும் சொல்வதானால் இவர்கள் புதிய போராட்டம் எதையும் முன்னெடுக்கத் தேவையில்லை. அனைத்துசாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதில் வன்னியர் சங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டு சிவனும் பார்வதியும் எங்க முன்னோர்கள். அவங்க எங்க ஜாதிக்காரங்க. அவங்களை தொடக்கூடாதுன்னு எங்களை சிலர் தடுக்கிறார்கள். அது தவறு. எங்க முன்னோர்களான சிவனையும் பார்வதியையும் தொட்டு, குளுப்பாட்டி, அழகுசெய்து, பூசை செய்வதற்கான உரிமையை எங்களுக்கு குடுங்கன்னு கேக்கலாமே? கேப்பாங்களா?
இப்படி கேட்பதன் மூலம் வன்னியர்களுக்கு உண்மையிலேயே மிகப்பெரும் பொருளாதார பலன்களும் கிடைக்கும். காரணம் சிவனுக்கும், பார்வதிக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம், பல்லாயிரக்கணக்கான கோடிகள் பெறுமானமுள்ள நகைகள் சொந்தமா இருக்கு. தினசரி கோடிக்கணக்குல வருமானமெல்லாம் வருது.
வெறும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும், நேபாளத்திலும், இலங்கையிலும் கூட சிவன் பார்வதிக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு.
எனவே வன்னியர் சங்கம் தங்களின் முன்னோரான சிவன் பார்வதியை தொட்டு பூசிக்கும் உரிமையை இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்காடி வென்றுவந்தால் தமிழ்நாட்டு வன்னியர்களெல்லாம் ஒரே நாளில் கோடீஸ்வரராவதோடு, எதிர்காலத்திலும் கூட வன்னியர்களெல்லாம் வேலைக்கே போகாமல் அடுத்தவர் சொத்துகளை கொள்ளையடிக்கமால், உட்கார்ந்து சாப்பிட வழி பிறக்கும்.
எனவே இதை உடனடியாகச் செய்யும்படி வன்னியர் சங்கத்தை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். செய்யுமா வன்னியர் சங்கம்?
Avungalukku urimai irukku,
nobody can stop you from building a temple and taking care of it.
// இப்படி கேட்பதன் மூலம் வன்னியர்களுக்கு உண்மையிலேயே மிகப்பெரும் பொருளாதார பலன்களும் கிடைக்கும். காரணம் சிவனுக்கும், பார்வதிக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம், பல்லாயிரக்கணக்கான கோடிகள் பெறுமானமுள்ள நகைகள் சொந்தமா இருக்கு. தினசரி கோடிக்கணக்குல வருமானமெல்லாம் வருது //
சும்மா இந்த பிட்டு போடாதீங்க. தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருக்குற கோவில்கள் மொத்தம் 38500. இதுல 34500 கோவில் ஆண்டு வருமானம் ரூபாய் 10000 க்கு கீழே. மொத்த சொத்து 5 லட்சம் ஏக்கர். இந்த நிலங்களை 125000 பேர்களுக்கு லீசுக்கு விட்டுருக்காங்க. இந்த சொத்துகளை அடிமாட்டு வாடகைக்கு எடுத்து அதையும் ஒழுங்கா கட்டாம இருக்குறவங்க யாரு? ஒரு சர்வே எடுத்து சொல்லுங்க.
http://www.tnhrce.org/institution.html
http://www.tnhrce.org/temple.html
சர்வேக்கு முதல் கட்டமாக கபாலீசுவரர் கோவிலை மட்டும் எடுத்துக் கொண்டு அதனைக் கொள்ளையடிப்பவர்களைப் பாருங்க..https://www.vinavu.com/2012/02/22/kapaleeswarar-temple-property-stolen/
சுட்டிக்கு நன்றி, கண்ணன்.
கபாலீஸ்வரர் கோவிலில் குத்தகை பாக்கி வைத்திருப்பவர் பட்டியல் போர்ட் பார்த்திருக்கிறேன். அதில் அமிர்தாஞ்சன் மட்டுமே எனக்கு தெரிந்த பெயராய் இருந்தது. பி எஸ் பள்ளி, பாரதிய வித்யா பவன் போன்றவை ஆட்டையை போட்ட விவரம் இந்த கட்டுரையில் இருந்து தெரிந்து கொண்டேன்.
தமிழ்நாடளவில் விவரம் தெரிந்தால் தெளிவு கிடைக்கும்.
இது தொடர்பாக இணையத்தை தேடிய போது இந்த லிஸ்ட் கிடைத்தது.
http://www.mylaporetimes.com/2011/12/kapali-temple-officers-keen-to-recover-leased-rented-properties/
ஆதிக்க சாதி வெறி அடால்ப் ஹிட்லர் ராமதாசு!
இன்று பாவேந்தர் பாரதிதாசனின் 123 வது பிறந்தநாள்.
அவரின் பாடல்களை படித்தவர்கள் ,கேட்டவர்கள் ராமதாசைப்போல் நடந்து கொள்ளமாட்டார்கள்.”பாரடா
மானிடப்பரப்பை”படியுங்கள்,கேளுங்கள்,பாடுங்கள் மற்றும் பரப்புங்கள்.
வினவு. இந்த பக்கத்தின் உள் அரசியல் தெரியாமல் இவ்வளவு நாளாக இதைப் படித்து வந்துள்ளேனா…. ஓ.. நீங்கள் வன்னியர்கள் ஒழித்துவிட வேண்டும் என்று தீவிரமாகச் செயல்படும் ….களா…. அடப்பாவிகளா. சாக்கடை என்று தெரியாமலேயே அதை அருகில் வைத்திருந்திருக்கிறேனே. இன்றோடு முடித்துக்கொள்கிறேன். சாக்கடையின் பக்கம் தலை வைப்பதை.
/வன்னியர்கள் ஒழித்துவிட வேண்டும் என்று தீவிரமாகச் செயல்படும்/
நீ சொன்னதிலே இது மட்டும் தான் சரி. ஒருவன் உண்மையிலே நல்லவனா இருந்தா வன்னியரை மட்டுமல்ல பறையர், செட்டியார், கவுன்டர், பள்ளர், தேவர், ஐயர், முதலியார், etc., etc., எல்லோரையும் ஒழித்துவிட்டு அறிவுள்ள நல்லாகேட்டுக்கோ ”அறிவுள்ள மனிதனாக” மாற்றதான் நினைப்பான்.
ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்துரவன்தான் மக்களை சாதியாக, மதமாக பிரித்து பொருக்கி தின்னுவான்.
வினவு= சாக்கடை. எப்போதுமே உன் சாக்கடை நாற்றத்தைத்தானே வீசுகிறாய். நீ என்றைக்குத் திருந்தப்போகிறாய். புழுபுழுத்த உன் கட்டுரைகளை என்றைக்கு நிறுத்தப்போகிறாய். போலியாக உனக்கு தமிழ் முகமூடி வேறு. வினவு என்றால் தமிழினத் துரோகி என்ற பொருளாக மாறிவிட்டது.
என்ன ஆதி மாநாட்டுக்கு அடிச்சது இன்னும் தெளியலையா? சாக்கடைன்னு தெரியாம தலை வச்சு படுத்துட்டேன்னு சொன்னீங்க நாலு நிமிசம் கழித்து எப்போதுமே சாக்கடை நாற்றத்தை வீசுவதாக சொல்றீங்க. இந்த ரெண்டுல எது மப்புல சொன்னது.
modhalla sonandhu.
வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் – அது குற்றமே இல்லை! தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம்: மனுவின் மறுபதிப்பாகும் தலித் ஆதரவு!!
http://arulgreen.blogspot.com/2013/04/Dalit-Atrocity-against-Vanniyars-at-Marakkanam.html
வாங்க அருள், உங்க திரைக்கதை வடிக்கும் திறமையைப் பார்த்தா சின்னய்யா முதலமைச்சரா இருக்கும் போது நீங்கதான் கோயாபல்சு டிபார்ட்மெண்டுக்கு மந்திரி, கவலைப்படாதீங்க! பிறகு முழுநிலவு கூட்டத்தின்போது புதுவை, மாமல்லபுரம் பகுதியில் சரக்கு விற்பனை கன ஜோராமே!
சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கும், சாதி விசத்தை உமிழ்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
உங்க பதிவில் உள்ள ஒரு வரி…
/முகத்தில் வெட்டப்பட்ட வன்னியர் லட்சுமணன்/
உண்மையில் நல்லவனா இருந்த எப்படி எழுத வேண்டும், ‘வன்னிய சாதியை சேர்ந்த லட்சுமணன்’ அல்லது அறிவுள்ளவனாக இருந்தால் எப்படி எழுத வேண்டும் ‘வன்னியர் என்ற சொல்லப்படுகிற வகுப்பை சார்ந்த லட்சுமணன்’ என்று எழுத வேண்டும் அதை விட்டுவிட்டு இப்படி ( வன்னியர் லட்சுமணன்) சொல்ல வெட்கமா இல்லை? சாதி எங்கிருந்து வந்துச்சு உங்களுக்கெல்லாம்.
சரி அதை விடுங்க காரணம் இல்லாமல் ஒரு அணுக்கூட அசையாது (உதாரணம் ரமதாசு பதவி சுகம் காண சாதி வெறியை தூண்டுவது போல்) தாக்குதல் நடக்க என்ன காரணம்? யார் காரணம்?
avuru vanniyarnnu avuru solraru,
adha pathi kekka neenga yaaru? avuru verum manushannu solaradhukku neenga enna annaviyaa?
எனக்கு கொஞ்சம் அறிவியல் தெரியும் அதை வைத்து சொன்னேன். அவர்களுக்கு கொம்போ, வாலோ, நான்கு காலோ, மூன்று கண்ணோ இப்படி மனித இனத்திற்கு சாராத எந்த ஒரு வேறுபாடும் இல்லை. எனது நண்பர்களில் ஒருவர் தலித் வகுப்பையும், இன்னொருவர் வன்னியர் வகுப்பையும் சேர்ந்தவர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு நலமா வாழ்கிறார்கள், இரண்டு குழந்தைகள் வேறு இருக்கிறது. இப்படி எல்லாமே அறிவியல் விதிகளுக்கு உட்பட்டுள்ளதால் அப்படி கூறினேன்.
சரி மேட்டருக்கு வருவோம்.
எல்லோரையும் விட பார்ப்பனன் உயர்ந்தவன் கடவுளுக்கு ஒப்பானவன். அதை தானே சொல்லவருகிறாய் அரிகுமாரா?
naan onnume sollaliye,
vanniyar personum,dalit personum sernthu vaazhuraanga sari,so adhu oru dalit-vanniyar kozhandai avlo thaana.
oru doubtuu
antha kozhandaikku oru parentu MBC,innoru parentu SC,appo entha reservation kuduppanga?
manusha kozhandai thaan,manithargalukku pirandha kozhandai thaan,aana entha reservation kuduppangalam?
பதவிக்காக( தனக்கு இல்லாவிட்டாலும, தன் அல்லக்கைகளுக்கு ) யார் காலையும் நக்கத் துணிபவர்தான் இந்த அயோக்கியர் ராமதாஸ். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மாநாட்டில் மது ஒழிப்பிற்காக முப்பது வருடமாக வன்னிய இளைஞர்களைப் பயிற்றுவிக்கிறோம் என்று கூருகிறார். ஆனால் மாநாட்டுக்குச்சென்ற பெரும்பான்மையானவர்கள் முழு போதையில் இருந்தனர். மேலும் வண்டியில் செல்லும் போது சில பேர் மிகவும் கீழ்த்தரமாக சாலையில் உள்ள பெண்களைப் பார்த்து வேட்டியைத் தூக்கிக் காண்பித்தனர். மருத்துவர் ராமதாஸ் நன்றாகத் தான் பயிற்சி அளித்திருக்கிறார்!
தன்மானமுள்ள வன்னிய இளைஞர்களே, உங்களைத் தவறாக வழி நடத்துகிற இந்த மானங்கெட்ட ராமதாஸ், காடுவெட்டி குரு அயோக்கியக் கும்பலை நையப்புடையுங்கள்.
சுய மரியாதையுள்ள வன்னியப் பெண்களே, தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் போட்டு வன்னியப்பெண்களைப் பெண்களை மயக்குகிறார்கள் என்று உங்களைக் கொச்சைபடுத்திய இந்த அயோக்கியன் ராமதாசை செருப்பால் அடியுங்கள்.
ஆதிக்க சாதி வெறிக்கெதிராகப் போராடும் தலித் மக்களே, இவ்வளவுக்குப் பிறகும், ராமதாசை சேர்ந்து களமாட அழைக்கும் திருமா உள்ளிட்ட தலித்திய பிழைப்புவாதக் கும்பல்களைப் புறக்கணியுங்கள்.
ஜனநாயக உணர்வுடைய அனைவரும் எந்த சாதியாக இருந்தாலும் தங்கள் சுயசாதி அபிமானத்தை விடுத்து சாதி வெறிக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும்..
#சுய மரியாதையுள்ள வன்னியப் பெண்களே, தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் போட்டு வன்னியப்பெண்களைப் பெண்களை மயக்குகிறார்கள் என்று உங்களைக் கொச்சைபடுத்திய இந்த அயோக்கியன் ராமதாசை செருப்பால் அடியுங்கள்.
ஆதிக்க சாதி வெறிக்கெதிராகப் போராடும் தலித் மக்களே, இவ்வளவுக்குப் பிறகும், ராமதாசை சேர்ந்து களமாட அழைக்கும் திருமா உள்ளிட்ட தலித்திய பிழைப்புவாதக் கும்பல்களைப் புறக்கணியுங்கள்.#
ஆடுடா இராமா ஆடு இராமா அரசியல் விளையாட்டு ஆடு இராமா…..
1989இல் இராமதாஸ் அவர்களது கூட்டம் அவர்கள் இருந்த பகுதிகளில் வாய்த்த பதாகை “அரசியல்வாதி நாய்கள் உள்ளே வராதீர்கள்”…..
1990இல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு குரைக்க ஆரம்பித்தார் இராமதாசர்.
ஜெயலலிதா அம்மையாரின் கட்சியோடு கூட்டா? அது என் தாயோடு உறவு கொள்வதற்கு சமம்… சொன்னார் ராமதாஸ் ஆனால் ….. அ.தி.மு.க.வோடு உடனே வைத்தாரே கூட்டு… இதைவிட கேவலமாக பேசவும்,நடந்து கொள்ளவும் ஆற்றல் படைத்த மாமனிதர் இராமதாஸ்…
தலைமை செயலகத்தில் நானோ எனது குடும்பதினரோ காலடி வைக்க மாட்டோம் சத்தியம் செய்தார் உத்தமசீலர் இராமதாஸ்…. தனையன் குட்டி.இராமதாஸ் மேலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டி தலைமை செயலகத்தில் தவமாய் தவமிருந்தார் தன்மானமில்லா தலைவர் இராமதாசர் ……..
கட்டிய வேட்டியை உருவிவிடுவார் கலைஞர், சொன்னவர் இராமதாஸ் மீண்டும் மீண்டும் கலைஞருடன் கூட்டணி கண்டார்… வேட்டியினை இழப்பதில் அவருக்கோர் அலாதி சுகமோ……..
சாதி பாசம் பேசும் இவர் சொந்த சாதிகாராய் இருந்தும், பதவி வெறியில் அதிகார ஆசையில் முன்னின்று திண்டிவனம் அன்றைய சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கொலைவெறி தாக்குதலில் அப்பாவி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் A 1 இராமதாஸ் A 2 குட்டி இராமதாஸ் பின் அதிகார வலிமையில் வழக்கில் இருந்து தப்பி A 1 ஆக பதவி செய்யப்பட்டவர் அவரது உறவினர் இரகு, அந்த இரகு மர்மமான முறையில் தைலவரம் தோட்டத்தில் இறந்து கிடந்தது , அந்த சாவின் மர்ம முடிச்சு இராமதாசர் அவர்களால் மட்டுமே அவிழ்க்க முடியும்.
2016 இல் ப.ம.க.ஆட்சியாம், அப்போது யார் யாருக்கு என்ன இலாகா என்பதை சிறப்பாக பிரிபாராம் சொல்வது யார் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்கிற பெயரில் அமைப்பு நிறுவி பல்வேறு பள்ளிகளுக்கு அனுமதி வங்கி தருகிறேன் என்று பல இலட்சம் மோசடி பேர்வழி பி.டி.குமார்.
வன்னியர் ஆண்ட பூமியினை அன்னியர் ஆள்வதா?
என கேட்கும் இவர்களோடு அன்னியர் (வன்னியர் அல்லாத மற்றவர்) இணைய வேண்டுமாம்….
அவலை அன்னியர் கொண்டு வர உமியை வன்னியர் கொண்டுவர இராமதாசும் குட்டி இராமதாசும் ஊதி ஊதி.. தின்பார்களாம்……
Thank you Vinavu for constantly educating people about these corrupt, bigoted politicians who are exploiting the poor vanniyars and dalits, while the common folks have to struggle for their next meal and their basic needs in this tough world, these Hyenas are quenching their blood thirst by unleashing rampages, violence and social unrest to put themselves on the political ladder, they have no brain or humanitarian qualities but a jungle animals characters. And, they are ready for killing, the Dharmapuri vanniyar rampage took place 6 months ago, while there is no solace or remedy found yet for the suffering dalit victims and the state did not care much, there is yet another Rampage in Marakanam.
But, what is shocking and amazing that neither Ramadoss nor Kaduvetti or the future mahatma and god of the universe Anbumani expressed any anguish, or pain or condemnation of the dalit violence, not a single person in a leadership position in PMK or vanniyar sangam condemned the violence but instead both ramadoss and kaduvetti keep bragging and spewing venoms in public about dalits?. Where can tell this terrible story of the perpetrators are going around the state of TN, to all districts with their drama and violent speeches and but the victims have no voices?, Tamil Nadu is like the Murders will continue to do theirs and live a happy life, but the victims have nothing, no justice, no support, no voice, no bragging and no nothing?.
Thanks for you work.
You must consider reading my Editorial that provides the intricate web of Fire terrorism unleashed by Kaduvettigals………it is a must read for all.
Thanks,
Saint
——————–
Another Rampage of vanniyar caste mobs: “Fire”, the Emergence of Vanniyar Terrorists
After this Editorial:
Latest Vaniyar terrorism in Marakanam: Pic from FB
Some dalit or non dalit politicians are trying to place themselves to be raising voice, but are they Real?.
Some of them are more of a political Drama than genuine actions but we must make sure understand what these politicians are going after>
The movie actor turned politician
——-Vijaykanth for the first time (malaimalar news), came out of his closet and spoke about Caste atrocities in Tamil Nadu, also announced 25Lakh aid to victims.
Even though it is a good gesture Mr.Vijayakanth, where were you all these days man, do you have any responsibility or concern that you are a Opposition party leader and you have said nothing and did nothing about Dharmpuri vanniyar rampage?, and then myriads of other caste atrocity, In your press release you kind of mention two groups of communities, why, do you live in the Mars, don’t you know which communities are involved and why are saying two communities man, it was vanniyar thugs who carried out this riots, rampages and burning homes time and again, can’t you be honest for one day and mention?.
Also, talking castes, and mentioning Bharathiyar, that is ok, but when you can say Periyars name, why your tongue got paralyzed to Say Dr.B.R.Ambedkar or Iyothee /thaas or Thatha Rattaimalai Srinivasan, you lousy politicians who are overwhelmingly voted and elected by the Dalits do not have even a minimum courtesy to honor or mention the right names and people in your press release?
——–Dr.Krishnaswamy, of Puthiya Tamilagam, walked out of the Assembly session in protesting that no Arrests or punishment is given to the Marakanam or caste atrocity masterminds
As far as Dr.Krishnaswamy, you do too little and too late, man, you got to bang that lady;s door and call for a meeting, a Dalit representatives meeting with Chief Minister and question her as to what the hell she did to protect dalits from caste vanniyars and Thevar thugs?
——-Thol Thiruma, the DPI leader not only condemned the state govts inaction and spectatorship, but warned the state to take severe actions on the criminals who unleash caste atrocity……………
As far as Thol concerned, you are a seller of dalit pride and live like a Slave, first Jaya and then MK, and then PMK, your behavior is not just bizzare but like a typical slaves, you must stop selling Dalits,Dr.B.R Ambedkar and Buddha for your own selfish, notoriously casteist political purposes.
People of TN must send Jaya, Thol, MK, PMK and all these terrible politicians home and choose some good ones, may be independent politicians, so that they can listen to people and do something to the needy.
Evidence NGO, Mr.Kathir writes to state and the police to safeguard and provide support to the victims
Kathir’s TV interview was great and this is the only man who spoke clearly, giving stern warning to the police and state that they have been ignoring dalit issues. Good work.
Read more details at Upliftthem Blog
ஐயா வினவு
தலீத் தலீத் என உருகுகின்றீர்களே அவர்களே அவர்களுக்குள் அடித்துக்கொள்வது எந்த வகை நியாயம்
இவர்கள் வேலையே செய்யமாட்டார்களாம் பதவி உயர்வு மட்டும் வேண்டுமாம்
வேண்டுமெனில் பொதுவில் எல்லோருடனும் போட்டி போடுங்கள் படிப்பாகட்டும் வேலையாகட்டும்
குலத்தளவே ஆகும் குணமாம்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே
நமக்கு இன்றைய தேவை ஒரு ராமதாஸ், ஒரு தேவர் ஐயா இல்லை நமக்கு தேவை 100 ராமதாசுக்கள் 1000 தேவர் ஐயாக்கள் இருந்தால் தான் தமிழகம் மீண்டும் தலை நிமிரும்
வினவு தனது மோசமான வேலையை மறைமுகமாக ஆரம்பித்து விட்டது.
தலித் தலித் என்று கூறி மனித உரிமை என்ற போவையில் சிலரை அழைத்து சென்று “உண்மை” அறிகிறார்கலாம்!! என்ன கொடுமை. இவர்கள் சொல்லுவதும் எழுதுவதும்தான் உண்மையாம்! மற்றவர்கள் சொல்லுவதெல்லாம் பொய்யாம்!! இத்துடன் நில்லாமல் முஸ்லிம்களை நல்லவர்கள் போல எழுதி உள்ளது அப்பட்டமான பொய் அல்லவா! கலவரம் என்ற சொல்லுக்கு உலக அளவில் உரித்தானவர்கள் முஸ்லீம்கள்தான்.
மரக்காணம் கலவரத்தில் குஜராத் மோடி, இந்துக்கள் மற்றும் அதன் இயக்கங்களை தூற்றுவது எதற்கு. இதெல்லாம் ஒரு சந்தர்ப்ப வாதம் இல்லையா!!
இதெல்லாம் இந்த செய்திக்கும் இதற்கும் சம்பத்தமில்லாதது. தலித்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை குறிப்பிட்டு அனைத்து மக்களின் ஆதவையும் பெறுவதில் தவறு இல்லை.
“மரம்வெட்டி” ராமதாஸை அரசியலிலிருந்து அகற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெற முயற்சிக்கலாம். அதை விடுத்து சம்மந்தமில்லாத பிற செய்தியுடன் இணைப்பது வினவுவின் “ராஜ தந்திரம்” போலும்! காலத்தின் கொடுமை!!!!
எலே சித்தப்புகள…..வன்னிகுல சத்ரியன்.. சத்ரியன் என்பது தமிழ் வார்த்தையே இல்லை…பாப்பான் வட நாட்டிலிருந்து கொண்டு வந்தது …வன்னியன், முதலி , தேவர் இவையெல்லாம் பட்ட பெயர்கள் ..ஜாதி பெயர்கள் அல்ல …..வெள்ளக்காரன் மாதிரி சறுக்கு மட்டும் வேணும்..அவன மாறி சாதி இல்லாம வாழ முடியாது..சாதி என்பதும் தமிழ் வார்த்தை இல்லை…பறையன் , பல்லன் இவனுங்க எல்லாம் இட ஒதுகீட ஒழுங்கா பயன்படுத்தி முன்னுக்கு வாங்கடா…நானும் வன்னியன் தான்…சோ, ராமதாஸ் , திருமாவளன் மாறி ஆட்களை வளர்க வேணாம் ..வாழ்க தமிழ் வளர்க இங்கிலீஷ்
சாதி என்பது என்ன? என்ன நம்பிக்கை அது? என்ன வெளிப்பாடு? அல்லது எங்கே அதற்கு அடையாளம் இருக்கிறது.சாதிக்கு என்று என்ன தனித்துவம் இருக்கிறது.சாதி என்பது இந்தியாவிலும் இந்தியாவாக இருந்த நாடுகளிலும் மட்டும் தான் இன்றைக்கும் உலகில் இருக்கிறது.பர்மாவிலே இருக்கிறது . பாகிஸ்தானில் இருக்கிறது இலங்கையிலே இருக்கிறது என்று சொன்னால் அவை எல்லாம் ஒரு காலத்திலேயே இந்தியாவாய் இருந்தன. வேறு உலக நாடுகளில் சாதி இல்லை. நீங்கள் ஜெர்மனிக்கு போனால், கனடாவுக்கு போனால் அங்கு வன்னியரும் இல்லை , முதலியாரும் இல்லை, தலித்தும் இல்லை , செட்டியாரும் இல்லை ஏன் வேறு சாதிகள் எதுவும் இல்லை இந்த சாதி என்பது மனிதர்களை பிரிக்கிற ஒரு பொய்யான சுவர். இன்னும் எத்தனை ஆண்டு காலம் தான் இந்த சுவற்றில் முட்டி, முட்ட வைக்கப்பட்டு ,பல அப்பாவிகள் பலியாவர்களோ தெரியவில்லை. என்றைக்கு இந்த சுவர் சுக்கு நூறாக உடைகிறதோ அன்று தான் நாமெல்லாம் மனிதன் என்று சொல்ல தகுதியுடைவைர்களாகிறோம்.