இந்த வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 14 ஜூலை 2017

0
2

ந்த வாரம் 10.07.2017 முதல் 14.07.2017 வரை வினவு தளத்தில் வெளியான 32 குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் ஜி.எஸ்.டி, விவசாயப் பிரச்சினைகள், கேலிப்படங்கள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆவணப்படங்கள், புகைப்படக் கட்டுரைகள், செய்தி வீடியோக்கள், பாஜக – மோடி அரசின் மீதான விமரிசனச் செய்திகள், தமிழக அரசியல் – செய்திகள் என பல வகைகள் இருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்திகள் குறித்து உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள்,விமரிசனங்களையும் அறியத் தாருங்கள்! நன்றி
– வினவு

விவசாயிகளைக் காப்போம் – நெல்லையில் மக்கள் அதிகாரம் கூட்டம் !

விவசாயியை வாழவிடு! ஆக 5 தஞ்சை மாநாடு மக்கள் அதிகாரத்தின் பலத்தை நிரூபிப்பதற்கோ, பிரபலப்படுத்துவதற்கோ அல்ல, விவசாயியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத்தான்.

ஆப்ரிக்க அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்கக் கூடாது – பில்கேட்ஸ்

ஒரு ஏழை நாட்டில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறக் காரணமான வறட்சி, போர் இரண்டுமே ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்கான விளைவு எனும் போது அந்த வல்லாதிக்க நாடுகளை தண்டிப்பதற்கு பதில் ஏழை நாட்டு மக்களை தண்டிக்க வேண்டிய அவசியம் என்ன?

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர் விவரங்கள் திருடப்பட்டன !

ஒரு சில ஜியோ எண்களை உள்ளீடு செய்த போது அதன் உரிமையாளருடைய ஆதார் எண்ணும் வெளியானதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

மாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல் – கொதித்தெழும் விவசாயிகள்

மாடுகள் அனைத்தும் முறையான இரசீதோடு தான் கொண்டு செல்லப்படுகின்றன. விதிமுறை மீறலுக்காக பறிமுதல் என்று எழுதாமல், மாட்டு வியாபாரிகளைக் கடத்தல்காரர்களைப் போல் சித்தரித்து ஊடகங்கள் எழுதுகின்றன.

தோழர் வினோத் பிணை மனுவை தள்ளுபடி செய்த கோவை நீதிமன்றம் !

மனுவை விசாரித்த நீதிமன்றம் போலீசு கூறிய காரணங்களையே வழிமொழிந்து தோழர் வினோத் அவர்களது பிணை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஜிஎஸ்டி – வரியல்ல, வழிப்பறி ! ஆவடியில் ஆர்ப்பாட்டம் !

என் பிணத்தின் மீது தான் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த முடியும் என கொக்கரித்த மோடி தான் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி புதிய இந்தியா பிறந்துள்ளதாக கூறியுள்ளார்.

டாஸ்மாக் – கள்ளச்சாராயத்தை தடை செய்த பென்னாகரம் பெண்கள் !

கள்ளச்சாராயம்மோ, நல்லச்சாராயமோ? எதுவாக இருந்தாலும் இனிமேல் எங்கள் ஊருக்குள் விடமாட்டோம். என்று எச்சரிக்கை விடுத்த அடுத்த கணமே அக்கும்பல் அலறி அடித்து சரக்கை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர்.

இறைச்சியில் மாட்டிறைச்சியைக் கண்டுபிடிக்க தனிக் கருவி !

கள்ளக் கடத்தல் செய்யும் மாபியா கும்பலைக் கையாள்வதைப் போல் மாட்டிறைச்சி உண்ணும் மக்களைக் கீழ்த்தரமாக நடத்துவதற்கே இந்தக் கருவியும் சோதனைகளும் பயன்படுத்தப்படும்.

டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டைத் தடை செய்தது துருக்கி

மிக உயரமான மலைச்சிகரங்களில் உயிர்ப்பிழைத்திருப்பதற்கான பெருங்கூர்ப்பை (macroevolution) மூவாயிரம் ஆண்டுகால போராட்டத்தினால் திபெத்திய மக்கள் பெற்றிருக்கிறார்கள். இது டார்வினின் இயற்கைத்தேர்வுக்கு மிகச்சிறந்த நிரூபணங்கள்

கிராமங்களை அழித்துவிட்டு என்ன கிராமப் பண்பாடு ! கேலிப்படம்

கிராமப் பண்பாட்டில் தான் நாட்டின் எழுச்சி ! மோகன் பகவத்

விருதை கொளஞ்சியப்பர் கல்லூரி முதலாமாண்டு மாணவருக்கு புமாஇமு வரவேற்பு !

மாணவர்கள் மத்தியில் பு.மா.இ.மு -வின் கொள்கைகள் மற்றும் போராட்ட அனுபவங்கள் விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை பு.மா.இ.மு -வில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

ஜி.எஸ்.டி -யால் திண்டாடும் சிறுவணிகர்கள் – வீடியோ

பண மதிப்பு நீக்கத்தின் விளைவால் சரிந்த வணிகர்கள் இன்று வரை எழுந்திருக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். தற்பொழுது கொண்டு வந்திருக்கும் ஜிஎஸ்டி வரி சிறுவியாபாரிகளை அதளபாதாளத்திற்கு நெட்டி தள்ளியுள்ளது.

G20 : ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம் !

இல‌ங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற‌ நாடுக‌ளில் பேர‌ழிவு த‌ந்த‌ போர்களை உருவாக்கி, இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை அக‌திக‌ளாக‌ அலைய‌விட்ட‌வ‌ர்க‌ள், G20 என்ற‌ பெய‌ரில் கூட்ட‌ம் போடுகிறார்க‌ள்.

மாடு விற்கத் தடை நீக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – ஒரு பார்வை

மனுதாரர்கள் முன்வைத்தது போல், இவ்வறிவிப்பின் அரசியல் சாசன விரோதத் தன்மை குறித்தோ, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மை குறித்தோ தமது தீர்ப்பில் வாய் கூடத் திறக்கவில்லை.

அனிதாக்களுக்காக “நீட் தேர்வை” எதிர்ப்போம் !

“நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?”, என்று கேட்டேன். ” இல்லீங்க. போகலை”. “அப்பா என்ன பண்றார்ம்மா?”. ” திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு”. இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை.

ஜிஎஸ்டி : ஒரு வழிப்பறிக் கொள்ளை ! சிறுவணிகர்கள் நேர்காணல்

எங்க சார் கருப்புப் பணம் ஒழிஞ்சது? பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடி நாமெல்லாம் ஐநூறு ரூபா கிடைக்குமான்னு ஏ.டி.எம் வாசல்லே காத்து நின்னோம்.. அதே அதிகாரிங்க வீட்லேர்ந்து கட்டுக் கட்டா பணத்தை எடுக்கிறாங்க. அவங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது?

தில்லை கோயிலில் திருமுறை பாட ரூ.5,000 – தீட்சிதர்கள் அறிவிப்பு ! கேலிப்படம்

செத்த மொழின்னா சும்மா பாடு… செம்மொழின்னா துட்ட குடு…

ஜி.எஸ்.டி-யை எதிர்த்து தமிழக மெழுகு தீப்பெட்டி ஆலைகள் போராட்டம் !

மோடி அரசின் இந்த நடவடிக்கையால் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளை நம்பி உள்ள 5,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தலைவெட்டி சவுதி அரேபியாவை எதிர்த்து உலகெங்கும் போராட்டம் – படக்கட்டுரை

தாங்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத துயரங்களுக்கு மத்தியில் சவுதியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர் காஷ்மீர் மக்கள்.

சூரத்: மோடியின் மண்ணில் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து இலட்சம் பேர் பேரணி !

மோடியின் பக்தர்களான குஜராத் வணிகர்களும் தற்போது நேரில் சிக்கினால் மோடியின் கழுத்தைப் பிடிக்கும் அளவிற்கு கடுங்கோபத்துடன் இருக்கின்றனர்.

பசு பாதுகாவலர்களை எல்லைக்கு அனுப்புங்கள் – கேலிப்படம்

அங்க யார அடிச்சி என்னத்த புடுங்குறது ஜி…

இஸ்லாமியர்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல !

இஸ்லாமியர்கள் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த இன்னும் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க நிறைய சுயபலிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது.

புதிய ஜனநாயகம் – ஜூலை 2017 மின்னிதழ்

இந்த மாத இதழில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, விவசாயத்தின் அழிவு, மகாராஷ்டிர விவசாயிகள், பருப்பு விவசாயிகள், மிளகாய் விவசாயிகள், ஆரியர்கள் வருகை, பி.டி கடுகு……….

சரக்கு மற்றும் சேவை வரி : புறவாசல் வழியாக இந்து ராட்டிரம் !

“ஒரு தேசம், ஒரு சந்தை, ஒரு வரி” என்ற முழக்கம் “ஒரே தேசம் ஒரே பண்பாடு” என்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் கொள்கையைச் சுமந்து வரும் தேர்.

நடிகர் திலீப் கைது : ஒரு பார்வை

ஆரம்ப கால மலையாள சினிமா உலகில் நல்ல படங்கள் வந்தன, நல்ல படைப்பாளிகள் இருந்தனர், என்பதெல்லாம் பழங்கதையாக மாறியதற்கும் திலீப் ஒரு திரைத்துறை தாதாவாக மாறியதற்கும் பெரும் வேறுபாடு இல்லை.

ஏர் இந்தியா விமானத்தில் அசைவ உணவுக்கு தடை ! கேலிப்படம்

நம்ம ஃபிளைட்டு வந்துருச்சுடா…அம்பி…

“வளர்ச்சி” தோற்றுவித்த விவசாயிகளின் கலகம் !

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 2016-க்கும் பிப்ரவரி 2017-க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் 1,982 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சாம்சங்கிற்கு எதிராக மகளை இழந்த ஒரு தந்தையின் போராட்டம் ! ஆவணப்படம்

சோக்சோ நகரில் டாக்சி ஓட்டுநராக இருக்கும் அவர், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சியோலுக்கு செல்கிறார். அங்கு தனது மகளின் புகைப்படத்துடன் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எதிரில் தனியாளாகப் போராடுகிறார்.

கறி போடுவதால்தான் எர் இந்தியா நட்டத்தில் ஓடுகிறதா ?

இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 88% பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஆகும். அவர்களை, அதாவது ஆகப்பெரும்பான்மையான மக்களை இழிவு படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

அமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடை போடும் மத்திய அரசு !

தமக்கு எதிராக ஒரு சிறிய கருத்தைக் கூட விட்டு வைக்காமல், அதனை முளையிலேயே கிள்ளி எரிய தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வானளாவிய அதிகாரத்தையும் இந்தக் கும்பல் தமது இந்து ராட்டிரக் கனவை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டுள்ளது

இனிமே தக்காளிய மறந்துரு மக்கா !

ஆறுமாதத்திற்கு முன்னால் கடுமையான விலை வீழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கடுமையான விலை உயர்வும் என தக்காளியின் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

வீராங்கனை காஞ்சனமாலாவை பிச்சைக்காரியாய் பெர்லினில் அலைய விட்ட பாஜக அரசு !

இத்தனை இடர்பாடுகளையும் கடந்து ஜெர்மனில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் காஞ்சனமாலா.