இமாச்சலப்பிரதேசம்: செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட ஆப்பிள் விவசாயம்!

தொடர்ந்து தண்ணீர் ஊற்றவில்லையென்றால் இந்த தாவரங்களால் உயிர் வாழ முடியாது. சராசரியாக, ஒரு செடிக்கு வாரத்திற்கு 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

0

ப்பிள் உற்பத்தி, இமாச்சலப் பிரதேசத்தின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். மொத்த பழ உற்பத்தில் ஆப்பிள் 85 சதவிதம் மற்றும் பழங்களின் மொத்த பரப்பளவில் ஆப்பிள் கிட்டத்தட்ட 48.8 சதவிதமாகும். இந்தியாவின் ஆப்பிள் உற்பத்தியில் இம்மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

1950-51 ஆண்டில் வெறும் 500 ஹெக்டேர் நிலத்தில் இருந்த ஆப்பிள் உற்பத்தி 1960-61 ஆண்டில் 5,025 ஹெக்டேர், 2021-22 ஆண்டில் கிட்டத்தட்ட 1,15,016 ஹெக்டேர் பரப்பளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கனவே சந்தைக்குள் நுழைந்து, ஆப்பிள் பயிரை வாங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இம்மாநிலத்தின் கோட்காய் பகுதியில் உள்ள கும்மாவை சேர்ந்த பணக்கார விவசாயி ஒருவர் இத்தாலியில் உள்ள நர்சரியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய வகை ஆப்பிள்களை பரிசோதித்துள்ளார். அவர் கிட்டத்தட்ட 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் 1,500 செடிகளை நட்டுள்ளார்.

படிக்க : இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!

இந்த தாவரங்கள் வழக்கமான தாவரங்களிலிருந்து வேறுபட்டவை. இவை வேர் தண்டுகள், குளோன் செய்யப்பட்ட உயர் அடர்த்தி வகைகள். இதற்கு முன்பு பயிரிடப்படும் விதைகளிலிருந்து வளரும் தாவரங்கள் முதிர்ச்சியடைய கிட்டத்தட்ட 10-12 ஆண்டுகள் ஆகும். மாறாக, புதிய ஆணிவேர் வகை தாவரங்கள் மூன்றே ஆண்டுகளில் காய் காய்க்கத் தொடங்கிவிடுகிறது.

1,500 செடிகளை நடுவதற்கு ஏறக்குறைய ரூ.30 லட்சம் செலவாகும். மேலும் நடவு முறையானது ‘பாதுகாக்கப்பட்ட சூழலில்’ செய்யப்படுகிறது. மிகவும் இயந்திரமயமாக்கப்பட்ட மற்றும் டிஜிட்டல் பயிர் முறை இதுவாகும். இச்சந்தையில் இத்தாலியர்கள் மட்டுமல்ல; இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் பெல்ஜியர்கள் உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு (AI) பயிர்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த AI நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய நிறுவனங்களை முதலீட்டாளர்களாகக் கொண்டுள்ள Fasal நிறுவனம் ஆகியவை மண்ணின் ஈரப்பதத்தை வரைபடமாக்குவதற்கும், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) போர்ட்டலைப் படிப்பதற்கும், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைக் கட்டமைப்பை வழங்குகிறது.

இதுவரை, எல்லாம் நன்றாக இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.7,000 ஆண்டு வாடகை எடுத்து அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைக்கிறது. AI ஆனது இந்தத் தரவை சேகரித்து வைத்துக்கொள்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட குளோன் செய்யப்பட்ட பயிர்களை பற்றி தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விஜய் சிங் கூறுகையில், “இந்த பயிர் முறையில் தாவரங்களின் முக்கிய பிரச்சினை என்னவென்றால், ‘ரூட் ஸ்டாக்’ தாவரங்களின் வேர்கள் மிகவும் ஆழமற்றதாக இருக்கும். இதனால் தொடர்ந்து தண்ணீர் ஊற்றவில்லையென்றால் இந்த தாவரங்களால் உயிர் வாழ முடியாது. சராசரியாக, ஒரு செடிக்கு வாரத்திற்கு 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

பண்ணையின் அளவைப் பொறுத்து முதலீட்டின் மூலதனச் செலவு ரூ.30 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மாறுபடும். இந்த வகை உற்பத்திக்கு பணக்கார விவசாயிகள் வேகமாக மாறி வருகின்றனர்.

“சீனா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் ஒரு ஹெக்டேர் விளைச்சல் இந்தியாவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாக மகசூல் கிடைக்கிறது. இந்த சந்தையில் நாங்கள் போட்டியிடவேண்டுமென்றால் இந்த வகை உற்பத்திக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை” என்று பணக்கார விவசாயிகள் கூறுகிறார்கள்.

இருப்பினும், 95 சதவிதம் ஆப்பிள் விவசாயிகள் அத்தகைய மாற்றத்திற்குள் செல்லவில்லை. ஆனால், அதிகமான அளவில் இந்த வகை பயிர் முறைக்கு செல்லத்துவங்கினால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு முற்றிலும் பாதிக்கப்படும். இதன் விளைவுகள் விரைவில் வரத் தொடங்கும்” என்று பேராசிரியர் விஜய் சிங் விளக்குகிறார்.

படிக்க : இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் அதானி குழுமம்!

பருவம் தவறிய மழையால் பூக்கள் அடித்துச் செல்லப்பட்டு, இப்பகுதியில் ஆப்பிள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கும். இந்த மாறுபாட்டால், ஒரு நிலையான பயிர் முறையை உறுதி செய்வது கடினம்.

பருவம் தவறிய மழைப்பொழிவால் பூக்கள் அடித்துச் செல்லப்பட்டு இப்பகுதியில் ஆப்பில் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மேலும், இந்த புதிய பயிர் முறைக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் என்பதால் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுகின்றன. மலைப்பகுதில் இவ்வாறு ஆழ்துளை கிணறுகள் அமைப்பது மிகவும் ஆபத்தானது. எனவே இந்த மாறுபாடுகளால், ஒரு நிலையான பயிர் முறையை உறுதி செய்து செயல்படுவது விவசாயிகளுக்கு கடினமான சூழ்நிலையையே ஏற்படுத்தும்.

தோட்டக்கலைப் பல்கலைக்கழகங்களின் விரிவாக்க மையங்கள் மற்றும் பிரதான் மந்திரி க்ரிஷி விக்யான் கேந்திராக்களின் தோல்வியை இந்த மாற்றங்கள் நமக்கு உணர்த்துகிறது.

புகழ்
செய்தி ஆதாரம் : newsclick

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க