மாட்டிறைச்சி அரசியலும் பா.ஜ.க-வின் இரட்டை நிலைப்பாடும்
2019-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் சோதனையைச் சந்தித்த பின்னரே அலானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் வெறும் ₹2 கோடியாக இருந்த பா.ஜ.க-விற்கான இக்குழுமத்தின் நன்கொடை, தற்போது ₹30 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஏ.ஐ துறையில் அதானி முதலீடும் பாசிச கும்பலின் கார்ப்பரேட் சேவையும்!
தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
டெல்லி: குடிசைப் பகுதி மக்களை விரட்டியடிக்கும் மோடி அரசு
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜங்புராவில் உள்ள மதராஷி முகாமில் 370 தமிழர் வீடுகளை பாராபுல்லா வடிகாலை ஆக்கிரமித்துள்ளது என்று பொய்க் குற்றஞ்சாட்டி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. தற்போது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மூன்று குடிசைப் பகுதி மக்களை வெளியேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம்: 18 பேரின் கண் பார்வையைப் பறித்த தனியார் மருத்துவமனை!
கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய கருவிகளில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக நீக்காமல் அலட்சியமான முறையில் பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் 18 பேர் கண்களையும் பார்வையையும் இழந்து கடும் வேதனையிலும் கடும் பொருளாதார நெருக்கடியிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
விவசாயிகளின் விதை மீதான உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
விவசாயிகளின் விதை மீதான
உரிமையைப் பறிக்கும் மோடி அரசு | தோழர் குருசாமி
https://youtu.be/VBtqHsTXpow
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இணையவழிப் பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் விதிப்பு: எஸ்.பி.ஐ. வங்கியின் பகற்கொள்ளை
சேவைக் கட்டணம் என்ற பெயரில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்ற வங்கிகள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாராக் கடன்களை எந்தவித அபராதமும் விதிக்காமல் தள்ளுபடி செய்கின்றன. ஆக, சேவை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது.
சிறார் நீதிச் சட்டம் – 10 ஆண்டுகள் நிறைவு: எதார்த்தம் என்ன?
சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வறுமையை மட்டுமே காரணமாகக் கூறுவது ஆபத்தானது. இது குடிசைப் பகுதிகளில் (Slum) மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற வகுப்புவாத கருத்துகளுக்கு வழிவகுக்கிறது. வர்க்கப் பாகுபாடு நிறைந்த இத்தகைய பார்வைகள், வேகமான நகரமயமாக்கலினால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்கின்றன.
அசாமில் இனப்படுகொலைக்கு அறைகூவல் விடுக்கும் பா.ஜ.க: துணைபோகும் உச்சநீதிமன்றம்!
இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள அசாமில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை, இனப்படுகொலைக்கான தயாரிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது பாசிச கும்பல். உச்சநீதிமன்றமோ அதற்குத் துணைபோகிறது.
விவசாயிக்கும் விதைக்குமான உறவை முறித்துவைக்கும் வரைவு விதைகள் மசோதா 2025
ஒவ்வொரு பகுதியின் மண் வளம், நீர் வளம், காற்று போன்ற சூழலியல் காரணிகளுக்குத் தகுந்தாற்போல் தாக்குப்பிடித்து வளரும் வகையில் உள்ள பாரம்பரிய விதைகளைத் தரமற்றவை என்று கூறி அதை நிராகரித்து ஒரே மாதிரியான விதை வடிவங்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வருகிறது இந்த சட்டம்.
ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? | வெற்றிகரமாக நடைபெற்ற கருத்தரங்கம்
“ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?” என்ற தலைப்பில் 13-2-2026 அன்று மாலை 4:30 மணிக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகாரக் கழகம், சி.பி.ஐ(எம்-எல்) ரெட் ஸ்டார்...
ஒடிசா: தலித் பெண் சமையலரைப் புறக்கணிக்கும் ஆதிக்கச் சாதிவெறி
தலித் பெண் சமையலராக நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதும், அங்கன்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தடுப்பதும் அப்பட்டமான சாதிய தீண்டாமையாகும். இதனைத் தூண்டிவிடும் சாதிவெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து தண்டிக்க வேண்டும்
மகாராஷ்டிராவில் சாதியற்ற கிராமம்: தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடங்கப்பட்ட மகாராஷ்டிரா மாவட்டத்திலேயே ஒரு கிராமம் தன்னை சாதியற்றதாக அறிவித்துக் கொண்டிருப்பது, பாசிச கும்பலுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
மேற்குவங்கம்: பூட்டிய உணவுக்கிடங்கில் கருகிய தொழிலாளர்கள்
தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உள்பட இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை நடத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
குஜராத் மாடல் போலிகளின் மாடல்!
புகார்களின் அடிப்படையில் ஸ்ரீசத்யா டெய்ரி பிராடக்ட்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகளாக பால் மற்றும் பால் பொருட்களில் யூரியா, டிடர்ஜென்ட் பவுடர் போன்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைக் கொண்டு செயற்கையான பால் பொருட்களைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

























