நேபாளம் : மாதவிலக்கு தீண்டாமைக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் !
இந்த சட்டத்தின்படி கொட்டகையில் அடைக்கப்படும் பெண்கள் பாம்புக்கடியினாலோ, பாலியல் பாலாத்காரத்தினாலோ உயிரிழந்தாலும் அதே மூன்று மாத தண்டனையைத்தான் கொடுக்க முடியும்.
ஓவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச். ராஜா !
தனிநபர் தாராளவாதிகளின் தாக்குதலுக்குப் பணிந்து வலது இடது கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கங்கள், தமிழ் அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும் தங்களை 'நாகரீக'மாக மாற்றி வருகிறார்கள். இதை ‘ஓவியாமயமாக்கம்’ என்றும் கூறலாம்
கிராமிய அஞ்சலக ஊழியர்களை துன்புறுத்தும் மோடி அரசு
நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் கொண்டு செல்லுமளவிற்கு ஊழியர்களின் உதிரம் சிந்திய உழைப்பு என்பது அளப்பரியது.
ஊழல் செய்யாத உத்தமரா மோடி ?
“மோடி கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்” என்கிற ஒரு பிம்பம் இன்னமும் செல்வாக்குடன் பராமரிக்கப்படுகிறது. ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? மோடி ஊழல் புரியவே இல்லையா?
சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !
தின்னச் சோறில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, கௌரவத்தோடு வாழ வேலையில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி கூலி, ஏழை விவசாயிகளின் வேதனைக் குரலைக் கேட்கவும் ஆளில்லையோ?
உ.பி முசுலீம்களுக்கும் திரிபுரா முதல்வருக்கும் சுதந்திரம் இல்லை !
சர்க்காரின் உரையை வாங்கிப் பரிசீலித்த ’பிரச்சார் பாரதி’, சுதந்திர தினத்தின் புனிதத்தையும், தனிச்சிறப்பையும், சர்க்காரின் உரை பாதிக்கக் கூடியதாக இருப்பதாகக் கூறி சுதந்திர தின நிகழ்வுகளில் முதல்வரின் உரையை நேரலை செய்ய மறுத்து விட்டது.
தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?
''பூமியின் அடியாழத்திலிருந்து ஹைட்ரோ கார்பன்களை எடுக்கும்போது பாறைகள் மீது பெருமளவு அழுத்தம் செலுத்தி வந்த வாயுக்கள் அகற்றப்பட்டு விடுவதால்தான் அவற்றுக்கிடையிலான சமநிலை குலைந்திருக்கிறது''
பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா ?
பிக்பாஸ் வார நாட்களிலும், கமல் வார இறுதியிலும் வேலை செய்கிறார்கள். மக்களோ 24 X 7 என வாரம் முழுமையும் வேலை பார்க்கின்றனர். அதன்படி இவர்கள் தினசரி ஒன்றரை மணிநேரம் பார்க்கும் பிக்பாஸ் தொடரை வைத்து அந்த வீட்டில் இருக்கும் 101-ஆவது கேமராவாக மாறுகின்றனர்.
சிறப்புக் கட்டுரை : குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !
மோடி அரசு கொண்டுவரவிருக்கும் விவசாய நிலக் குத்தகை சட்டம், சிறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சமர்ப்பணம் செய்யும் சதித்தனங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இரசியாவில் மானத்தை வாங்கிய இந்திய இராணுவ டாங்கிகள் !
அப்படி இரகசியமாக வைக்கப்பட்ட சமாச்சாரங்கள் தான் சில மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்துகளாகவும், தற்போது இரசியாவில் டாங்கிகளின் பழுதாகவும் பல்லிளித்திருக்கின்றன.
பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் : மற்றுமொரு பேரழிவு ஆயுதம் !
இம்மண்டலம் அமைய நாம் அனுமதித்தால், விவசாயம் அழிந்து போவது மட்டுமல்ல; அக்கிராம மக்கள் ஊரையே காலிசெய்து விட்டு அகதிகளாக வெளியேறும் நிலைகூட ஏற்படக் கூடும்.
விவசாயி தீராத கடனாளியாவது ஏன் ?
புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பணப்பயிர்களுக்கான வாரியங்கள் தங்களது பணிகளை முழுமையாக நிறுத்திக் கொண்டன. இந்திய உணவுக் கழகம் தனது கொள்முதல் கொள்கையைச் சில பயிர்களுக்கு மட்டுமெனச் சுருக்கிக் கொண்டது.
கல்விக் கொள்ளை ஜேப்பியாரின் புதிய ஆக்கிரமிப்புக்கு உதவும் பொதுப்பணித்துறை !
ஏரியை பராமரிக்காத இந்த துப்புகெட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாராய ரவுடியான ஜேப்பியார் கல்லூரிக்கு சாலை அமைப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்!
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு பட்டை நாமம் !
நாடு முழுவதும், 100 -க்கு 5 விவசாயிகள் கூட இந்தக் காப்பீடு திட்டத்திற்கு சொந்த முறையில் பிரீமியம் கட்டவில்லை. எந்த விவசாயியிடமும் பாலிசிக்கான ஆவணமும் இல்லை. 95% விவசாயிகளை அவர்களுக்கே தெரியாமல் காப்பீடு திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.
மோடி அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை – 71 வது சுதந்திர தின உரை
பாரதப் பிரதமர் திருவாளர் மோடி அவர்களின் உரையைப் புரிந்து கொள்வதிலும், அதில் அவர் உதிர்த்துள்ள பொய்களையும் உண்மைகளையும் இனம் பிரித்துப் பார்ப்பதிலும் சில பல சிக்கல் உண்டு. அவற்றில் சில உங்களுக்காக....
























