Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 209

கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?

கான்பூர் தொழிற்சங்க இயக்கத்தினுடைய முண்ணனித் தோழரின் இளைய மகனிடமிருந்து ஏப்ரல் 27-ஆம் தேதி காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் வீட்டில் அனைவரும் கோவிட்-19 அறிகுறிகளால் பாதிக்கபட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அவரின் அப்பாவைத் தவிர வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அப்பாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டு வருவதாகவும் கூறினார். ஆக்சிஜன் கிடைப்பதும் மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பதும் தாமதமாகிக் கொண்டே வந்தது.

உதவிக்காக நான் பணிபுரியும் கல்வி வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்காக நடத்தப்படும் சமூக ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளரை அழைத்தேன். அவரோ தன்னுடைய மாமனார் போன வருடம் இதே நாளில் இறந்ததாகக் கூறினார். ஒரு வருடமாக தொடரும் இந்த நிலை தற்போது இன்னும் கோரமான வடிவத்தில், ஆக்ஸிஜன் இல்லை, மருத்துவமனையில் படுக்கை இல்லை எனத் தொடர்கிறது. இந்த ஒரு வருடம் காலத்தில் காலையில் கிரிக்கெட் புள்ளி விவரங்களை பார்ப்பதற்கு பதில் கொரோனா விவரங்களை பார்ப்பது வழக்கமாகி உள்ளது.

படிக்க :
யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !
பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

மாற்று ஊடகங்களில் நாம் பார்பது கூட கோவிட் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனைகள், மருத்துவ அவசர ஊர்தி, மருந்துகள், ஆகியவற்றை பெற முடிகிறவர்களை பற்றி செய்திகளைதான். இந்த வசதிகளையெல்லாம் பெற முடியாதவர்களின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. நான் பணிபுரியும் மேல்தட்டு வர்க்கத்திற்ககான உயர் தரமான கல்லூரிக்கு அருகாமையிலேயே சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட நான்காரி என்ற பகுதி உள்ளது.

தோட்டவேலை செய்பவர்கள், விடுதிகளில் வேலைசெய்பவர்கள், பேராசிரியர் வீடுகளில் வேலை செய்பவர்கள், செக்யூரிட்டிகள் என கல்லூரியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் ஆயிரக்கனக்கானோர் நான்காரி பகுதியில் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவச் சிகிச்சை பெற தகுதியுள்ள ஒரு மருத்துவர் இப்பகுதியில் கிடையாது. முறையாக மருத்துவம் படிக்காதவர்களே (jholawala doctors) – போலி மருத்துவர்களே – இப்பகுதியில் உள்ளனர்.

கொரோனா காலத்தில் இந்த போலி மருத்துவர்களின் வீட்டு வாசலில், தினமும் ஒரே அறிகுறிகள் உள்ள நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதாக நண்பர்கள் கூறக் கேள்விபட்டிருக்கிறேன். பொதுவான மருந்துகளைக் கூட பெறமுடியாத காரணத்தால் இந்த போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதை நிறுத்தினாலும், மக்கள் கூட்டம், கூட்டமாக இவர்களின் வீட்டிற்கு வந்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த போலி மருத்துவர்கள் அதே பகுதியில் வசிப்பதனால் தங்களுடைய வீட்டுக்கு வரும் நோயாளிகளை இவர்களால் புறக்கணிக்கவும் முடிவதில்லை. தற்போதைய சுகாதார நெருக்கடியில் இந்த போலி மருத்துவர்களே நாட்டைக் காப்பாற்றுகின்றனர் என்று அப்பகுதியில் வசிக்கும் என்னுடைய பழைய நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

தகுதியுள்ள மருத்துவர்கள் நான்காரியில் பகுதியிலிருந்து திடீரென வெளிறிவிடவில்லை. உழைக்கும் வர்க்க பிரிவினரும் நடுத்தர வர்க்கத்தினரும் வசிக்கின்ற இப்பகுதியில் எனக்கு தெரிந்தவரையில், நான் 27 வருடங்களாக இக்கல்லூரியில் பணிபுரிகிறேன், இங்குள்ள பெரும்பான்மையான உழைக்கும் வர்கத்தினரால் தகுதியுள்ள மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெற முடிந்ததில்லை. ஓரளவு வசதி படைத்தவர்கள் கூட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவர்கள் இப்பகுதியில் கிடையாது. மிக மோசமான பாதிப்புகளாக இருந்தால் ஜிடி சாலையிலும், வணிக பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லுவார்கள். இச்சூழலில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இப்போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பதைத் தாண்டி முறையான கொரோனா பரிசோதனைகளோ வழிகாட்டுதல்களோ எதுவும் கிடையாது.

கள நிலவரங்களை கவனிக்கும் நம்மில் பலருக்கு இந்த திடீர் மருத்துவ நெருக்கடி கொரோனாவால் ஏற்பட்டது அல்ல என்று புரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு சராசரி நபருக்கும் இது போன்ற மருத்துவ நெருக்கடிகள் மீள முடியாத ஒரு பெருந்துயரம் தான். வசதி படைத்தவர்களும் உயர்மட்ட தொடர்பு உள்ளவர்களும் தங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நினைத்திருந்தனர். இந்த நெருக்கடி அவர்களையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த வருடம், டிசம்பர் மாதம், பெருந்தொற்று சமயத்தில் அலகாபாத்தில் (இப்பொழுது ‘பிராயாக்ராஜ்’) உள்ள என் தந்தைக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டது. வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் இடையே எண்ணற்ற பயணத்தின் போது சாலைகளில் கோவிட் விதிமுறைகளான முக கவசம் அணிதல், வீட்டில் இருத்தல் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் இந்த கிருமியை ஒழித்து நமது மரியாதைக்குரிய மாநில முதல்வர் யோகி அவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சாரங்கள் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டே இருந்தன. ஒரு நாள் காலை ரிக்க்ஷாவில் சிக்னலில் காத்துக்கொண்டிருந்த போது பிச்சை எடுக்கும் ஒரு பெண் என்னிடம் வந்து இந்த முககவசத்தை எல்லாம் வைத்து என்ன செய்கிறீர்கள், “வீதிகளில் திரியும் எங்களை போன்றோர் இது இல்லாமலே சமாளிக்கிறோம் எங்களைப்பற்றி என்ன கருதுகிறீர்கள், உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லையா?” என்று கேட்டார்.

இந்த பிரச்சனை கடந்த ஒரு வருடகால நெருக்கடியினால் உருவானது என்று கருதுவது பிரச்சனையை எளிமையாகப் பார்ப்பதாகும். பெருந்தொற்றால் ஏற்பட்ட இந்த ஆழமானப் பிளவுகள் உண்மையில் நமக்கு என்ன வேண்டும் என்பதை காட்டுகின்றன. அதாவது: தற்போதைய ஆஷா ஊழியர்கள்(Asha workers) போல் இல்லாமல், நாம் வசிக்கின்ற பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க முறையான பயிற்ச்சி பெற்ற சமூக சுகாதார ஊழியர்கள் (உரிய சம்பளத்தோடு) பணியமர்த்த வேண்டும்; வழக்கமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வேண்டும்; குடியிருப்பு பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதிலிருந்து; இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்கள் வரை அனைத்து வசதிகளையும் கொண்ட நன்கு செயல்படக்கூடிய கிராமத்திலிருந்து பெரிய நகரங்களுடன் இணைக்கப்பட பொது சுகாதார மையங்களை அமைக்க வேண்டும். ஆனால் மிகவும் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வீடும் பெருந்தொற்றால் பற்றி எரியும் இந்த காலகட்டத்தில் (மே 2021) சாத்தியமான மேற்கூறிய இலக்குகள் கூட தொலைதூர கற்பனை போலவேத் தெரிகிறது.

ஒரு ஆண்டு முழுவதும் இழந்து விட்டோம் என்ற உண்மையை எண்ணி பலரும் வருந்துகின்றனர். பெருந்தொற்றை எதிர்கொள்ளுவதற்கான சிறந்த ‘திட்டமிடல்’ இருந்திருந்தால் (பரிசோதனைகள், மருந்துகள், ஆக்ஸிஜன், படுக்கைகள், பணியாளர்கள் மற்றும் பல), தற்போது இருக்கும் படுமோசமான நிலைக்கு நாம் வந்திருக்க மாட்டோம். ஆனால் நான் கூறுவது என்னவென்றால் தற்போதைய ஆட்சி, அடிப்படையில் பொது மக்களின் நலனுக்காக, அது பெருந்தொற்றோ அல்லது மற்றவையோ, சிந்திப்பது அல்லது வேலை செய்வது என்ற பொதுக் கண்ணோட்டத்திலிருந்து எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை. இவர்கள் திட்டமிட்டு இருக்கலாம், அதனை செயல்படுத்தவும் செய்திருக்கலாம். ஆனால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் தேசத்தைப் பற்றிய அவர்களுடைய கருத்தாக்கத்துடன் பொருந்தக்கூடியதாக பிரம்மாண்டம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.

உதாரணமாக உ.பி. ல் அடுத்த தேர்தல் வருவதற்குள் ‘ஜனம் பூமியில்’, ஒரு பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுவதற்கான பொறுப்பு பிரதமரின் முன்னாள் முதன்மை ஆலோசகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மிகப்பெரிய பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவது (கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கூட பிரதமர் இல்லம் கட்டுவது ‘அத்தியாவசிய’ சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது).

பொது சுகாதாரத்திற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டால் கூட அது, இந்தியா எத்தனை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளது அதன் மூலம் இந்தியா எவ்வளவு உயர்ந்த தேசம் என்று கூறும் வடிவத்தில் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான பல முக்கிய மூலப்பொருட்களுக்கு நாம் முதன்மையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவையே சார்ந்து இருக்கிறோம். ஒருவேளை அந்த நாடுகள் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் உரிமம் பெற்ற உற்பத்தியைக் கூட நிறுத்த வேண்டியிருக்கும் என்பதே எதார்த்தமாகும்.

படிக்க :
♦ கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ போன்ற வசனங்கள் பேசினாலும் நம்மிடம் தொழில்நுட்ப வலிமை இருந்தாலும், நம்மால் சொந்தமாக எதையும் உருவாக்கமுடிவதில்லை. மருந்து உற்பத்தித் துறை இதற்கு சிறிது விதிவிலக்காக இருக்கலாம். இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று, சுதந்திரத்திற்கு பின் எடுக்கப்பட்ட கூட்டு முயற்சிகளினால் உள்நாட்டு திறன்களை வளர்த்திடவும் மருந்துகளை தயாரிப்பதற்கான பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளடக்கிய வலைபின்னலை உருவாக்கியதன் மூலம் உள்நாட்டு மருந்து உற்பத்தியில் சுதந்திரமான பாதையை வடிவமைத்திருந்தனர்.

முக்கியமாக 1970-ல் கொண்டுவரப்பட்ட காப்புரிமைச் சட்டமானது உள்நாட்டு மருந்து உற்பத்தித் தொழிலை மேம்படுத்தவும் இந்தியாவை ‘உலகின் மருந்தகம்’ என்று மாறுவதற்கான வாய்ப்புகளையும் திறந்து விட்டது. 1990 களில் உலக வர்த்தக அமைப்பின் புதிய அறிவுசார் சொத்து உரிமை திட்டத்தில் காங்கிரஸ் அரசாங்கம் கையெழுத்திட்டதினால் மேற்கூறிய முயற்ச்சிகளனியத்துமே சிதைவுற ஆரம்பித்தன. தற்போது உள்நாட்டு மருந்து உற்பத்தி தொழில்கள் அனைத்தும் சர்வதேச சக்திகளை சார்ந்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உதாரணமாக, இந்திய மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு (70%) சதவிகிதம் சீனாவையே சார்ந்துள்ளோம். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சீனா இந்தியாவுக்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தினால் அதன் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறோம்?

மக்களுடைய நலன் சார்ந்த விசயங்களில் நேரடியாக அரசு பங்கெடுக்க வேன்டியதில்லை அதனை சந்தையின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்பது தற்போதுள்ள அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும். கூடவே தனியார் மூலதனம் சுகந்திரமாக செயல்படுவதற்கான சூழல் இல்லாமல் இருப்பதே பொருளாதார மேம்பாட்டுக்கான தடையாகக் கருதுகின்றனர். உதாரணமாக, ஊரடங்கின் போது தொழிலாளர் நலன்களை பறிக்கின்ற தொழிலாளர் சட்டத்தினை (Labour Codes) நிறைவேற்றியது, விவசாயச் சந்தையில் ‘மிருக வெறியை(Animal sprit) கட்டவிழ்த்து விடுவதற்கான மூன்று விவசாய சட்ட திருத்தங்களை கொண்டுவந்தது ஆகியவற்றைக் கூறலாம்.

போராடும் விவசாயிகள் என்ன கோருகிறார்கள் அல்லது தொழிலாளர் சட்டத் திருத்தத்தைப் பற்றி தொழிலாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் முக்கியமாக இவர்கள் கருதப்படுவதில்லை. தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு எது நல்லது என்று தெரியாத கோபக்கார சிறுவர்கள் அவ்வளவுதான். மேலும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு முக்கியத் துறையிலும் அரசின் தலையீடு இருப்பதை(பொதுத்துற நிறுவனங்கள்) பொருளாதார வளர்ச்சிக்கான தடையாக தற்போதைய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். எனவே பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பது, பங்குகளை விற்பது, தனியார்மயப்படுத்து போன்ற நடவடிக்கைகள் மூலம் இதனை சரிசெய்ய முடியும் எனக் கருதுகின்றனர். மேற்சொன்ன பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில் மிருகவெறியை (Animal spirit) கட்டவித்து விடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பெருந்தொற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

தனியார்முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதுதான் ஆத்மநிர்பர்

இந்த ஆட்சியாளர்கள் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக முயற்ச்சிப்பார்கள் என்று எண்ணுவது நம்முடைய விருப்பமாக இருக்கலாம். ஆனால் கடந்த கால அனுபவத்திலிருந்து பார்த்தால் அதற்கு வாய்ப்பில்லை என்று முடிவுக்கே வரமுடியும். பாராளுமன்ற கட்சிகள் அனைத்துமே, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களை தனியாரிடம் குறிப்பாக கார்ப்பரேட்டுகளிடம் விட்டுவிட வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் மாநில அரசாங்கள் கூட மருத்துவ காப்பீட்டை பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் ஆக்ஸிஜன் சிலிண்டரை பெறுவதற்கு மருத்துவக் காப்பீடு எவ்வாறு உதவும்? ஆனால் இந்த கேள்வியை கேட்க யாரும் தயாராவே இல்லை. இங்கே முரண்பாடு என்னவெனில், டாக்டர் மன்மோகன் சிங் கொரோனா சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபோன்ற உயர்தரமான அரசு மருத்துவமனைகளில் சலுகை பெற்ற சில நபர்கள் மட்டுமே செல்லமுடியும். மற்றவர்களுக்கான (பணக்காரர்கள் மற்றும் ஏழைகள்) மருத்துவ சேவையோ சந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பணக்காரர்களுக்கு ஏழு நட்சத்திர அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளிலும் ஏழைகளுக்கு தெருவிலும் மருத்துவம் பார்க்கப்படும்.

சந்தையே அனைத்தையும் நிர்வகிக்கின்ற தற்போதைய நிலையில் மருந்துகளிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் இறந்தவர்களை தகனம் செய்வது வரை அனைத்தும் அதிக விலைக்கே ஏலம் விடப்படுகிறது. இந்த சந்தை கருத்தியலானது ஒருவரோ அல்லது இருவரின் முட்டாள்தனத்தினால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மேல்தட்டு வர்க்கத்தினர் கடந்த 30 வருடங்களாக இந்திய துணைக்கண்டத்தில் திட்டமிட்டு கட்டியமைத்ததாகும். இதன் விளைவுகளை அனைத்தும் தற்போது கொரோனா பெருந்தொற்று பற்றவைத்த தீயினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த அரசைப் பொறுத்தவரை அது மக்களுக்கு ஆற்றக்கூடிய ஒரே கடமையாகக் கருதுவது சந்தைக்கான சிறந்த பொருளாக மக்களை ஒழுங்குபடுத்துவதே. மக்கள் ஏதாவது குறைக்கூறினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை திணிப்பது, ஆக்ஸிஜன் பற்றாகுறை பற்றி புகார் கூறினால் உத்திர பிரதேச அரசாங்கம் மிரட்டுவது போல, அது குடியுரிமை சட்டமாகட்டும் அல்லது விவசாய சட்டமாகட்டும் அனைத்திற்கும் இதே நிலைதான்.

இதற்கிடையில் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலண்டனில் வாரத்துக்கு யூரோ 50,000 என்ற மதிப்பில் ஒரு மாளிகையை வாடகை எடுத்து தங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டு இருக்கும் இந்நேரத்தில், திரு. முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். இதில் இங்கிலாந்தின் மிக சிறந்த கோல்ஃப் ஆடுகளம், விம்பிள்டன் வீரர்களின் பயிற்சிக்கான டென்னிஸ் ஆடுகளம் ஆகியவை ஸ்டோக் பார்கில் உள்ளன.

இது தான் நம்முடைய ஆட்சியாளர்களின் பார்வையில் வளர்ச்சியெனில், நம்முடைய தற்போதைய நிலைமை கண்டு ஒருவர் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை.

கட்டுரையாளர்: ராகுல் வர்மன்
மொழிபெயர்ப்பு: வருண், CCCE-TN
மூலக் கட்டுரை :
RUPE-India

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு : பேரா. ராகுல் வர்மன், ஐ.ஐ.டி. கான்பூரில் தொழில் மற்றும் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக உள்ளார். தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் குறித்து RUPE இணையத் தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் : கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 2

2012-வாக்கில் எம்.எஸ்.பார்த்திபன் என்ற வனச்சரகர் ஈஷா ஆசிரமத்திற்குள் சென்றார். சாடிவயலுக்கும் தாணிக்கண்டிக்கும் இடையில் யானைகள் சென்று வரும் வழியில், ஈஷா பல இடங்களை வளைத்துப் போட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். யானைகள் வரும் வழியில் சட்டவிரோதமாகக் கட்டங்கள், மின் வேலிகள், சுவர்கள் எழுப்பப்பட்டிருந்ததால், யானைகள் செம்மேடு மற்றும் நர்சீபுரத்திற்கு இடைப்பட்ட வனப்பகுதி வழியாக வெளியேறி விவசாயப் பயிர்களை நாசம் செய்ததோடு, விவசாயிகளையும் தாக்கிவந்தன.

படிக்க :
♦ காடுவெட்டி சத்குரு ! நாட்டை விற்கும் மோடி !! கேலிச்சித்திரங்கள்
♦ ஜக்கி காருண்யா ஆக்கிரமிப்பை மீட்காமல் சின்னத்தம்பிக்கு விடுதலை ஏது ?

“300 சதுர மீட்டர் பரப்பிற்கு மேல் எதைக் கட்ட வேண்டுமென்றாலும் HACAவின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், ஈஷா எந்த அனுமதியும் இன்றி மிகப் பெரிய அளவுக்கு கட்டுமானங்களை உருவாக்கியிருந்தது. அவர்கள் முதலில் கட்டடங்களைக் கட்டிவிட்டு பிறகு அனுமதிக்காக விண்ணப்பித்தார்கள். அவர்கள் புதிய கட்டுமானப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும்போது எங்கள் அனுமதிக்காக காத்திருந்ததேயில்லை.

ஆதியோகி சிலைக்கு அருகில் மின்சாரம் தாக்கி பலியான யானை.

விண்ணப்பித்துவிட்டு கட்டடம் கட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.” என்கிறார் பார்த்திபனின் சோதனையின்போது உடன் சென்ற ஒரு அதிகாரி. இவர் தன் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை. “ஈஷா கட்டடம் கட்டிய இடங்கள் யானைகள் நடமாடும் பகுதிகள். அதனால்தான் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்கிறார் அந்த அதிகாரி.

இக்கரை பொலுவம்பட்டியில் 33 கட்டுமானங்களை மதரீதியான பணிகளுக்கு என ஈஷா குறித்திருக்கிறது. இவை தமிழ்நாடு அரசின் கட்டுமான விதிகளின்படி இவை பொதுப் பயன்பாட்டிற்கான கட்டடங்கள்.  இம்மாதிரியான கட்டுமானங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதல் தேவை. மேலும் நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் துணை இயக்குனரின் ஒப்புதலும் தேவை.  ஆனால், இந்த அனுமதிகளைப் பெறுவது குறித்து ஈஷா அலட்டிக்கொள்ளவேயில்லை.

அதற்குப் பதிலாக அனுமதி கோரி அந்த கிராமப் பஞ்சாயத்தை அணுகினர். நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் அனுமதியின்றி அம்மாதிரி ஒப்புதலை அளிக்க அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே இல்லை.  பிறகு ஒரு வழியாக 2011ல் ஒப்புதல் கோரி திட்டமிடல் துறையை அணுகினர்.

ஈஷா வளாகத்தை ஒட்டி போடப்பட்டுள்ள மின் வேலி

ஆனால், அதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக பல கட்டங்கள் அங்கே கட்டப்பட்டிருந்தன.    ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டிய கட்டங்களுக்கு ஒப்புதல் கேட்டதோடு, புதிதாக 27 கட்டடங்களைக் கட்டவும் அனுமதி கோரினர். ஆனால், அந்த விண்ணப்பம் முழுமையானதாக இல்லை. 2012 பிப்ரவரிக்குள் புதிய விண்ணப்பத்தை அளிக்கும்படி நகர்ப்புற திட்டமிடல் துறை சொன்னது.

ஆனால், அதற்குள் ஈஷா விண்ணப்பத்தை தாக்கல் செய்யவில்லை. ஏழு மாதங்களுக்குப் பிறகு புதிய விண்ணப்பத்தை அனுப்பியது.  இதன் தொடர்ச்சியாக 2012 அக்டோபரில் திட்டமிடல் துறையின் அதிகாரிகள் ஈஷா வளாகத்திற்கு வந்தபோது, புதிய கட்டங்களைக் கட்டும் பணிகள் ஏற்கனவே துவங்கியிருந்தன. இந்தக் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அவர்கள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக 2012 நவம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஈஷா கண்டுகொள்ளவில்லை.

2012 டிசம்பரில் நகர்ப்புறத் திட்டமிடல் துறை மீண்டும் ஒரு நோட்டீஸை அனுப்பியது. ஒரு மாதத்திற்குள் சட்டவிரோதக் கட்டுமானங்கள் அனைத்தையும் இடித்துவிடும்படி அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் இயக்குனர் முன்பாக முறையிட்டது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அந்த நேரத்தில் கே. மூக்கைய்யா என்பவர் நகர்ப்புற திட்டமிடல் துறையின் துணை இயக்குனராக கோயம்புத்தூரில் பணியாற்றிவந்தார்.  நகர்ப்புறத் திட்டமிடல் துறை விதித்த ஆணைகளை ஈஷா அலட்சியப்படுத்திய நிலையில், அந்தத் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி வடிவம்

“அந்த நோட்டீஸை அனுப்பிய ஒரு மதத்திற்குள் நான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனுமதியைப் பெற்றார்களா இல்லையா என்பது தெரியவில்லை” என்கிறார் மூக்கைய்யா.

2012வாக்கில் ஈஷா 50 கட்டடங்களைக் கட்டியிருந்தது. மேலும் 27 கட்டடங்களைக் கட்டிவந்தது. எல்லா கட்டடங்களுமே சட்டவிரோதமானவை. ஆனால், ஈஷாவின் சட்டவிரோத செயல்பாடுகளை யாரும் எதிர்க்கத் துணியாத நிலையில், எதிர்க்கத் துணிந்த சிலர் இருந்தார்கள்.

அவர்கள் பூவுலகின் நண்பர்கள்!

(தொடரும் – 2)

பாகம் : 1

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு !

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)
முதலாவது மாநாட்டின் 51-வது ஆண்டு நிறைவு !!

திரிபுவாதத்திற்கு எதிரான போராட்ட மரபை
தொடர்ந்து உயர்த்திப் பிடிப்போம் !

1970-ஆம் ஆண்டு மே 15-16 தேதிகளில் கொல்கத்தா – கார்டன் ரீச் பகுதியின் ரயில்வே காலனியிலுள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் அந்த மாநாடு  (பேராயம்) நடந்து கொண்டிருந்தது. அது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாடு.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 7-வது மாநாடு மார்க்சிஸ்ட் (CPM) கட்சியாக இருந்தபோது நடத்தப்பட்டது. அதன் பின்னர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் நவீன திரிவுவாதத்தைத் திரைகிழித்த நக்சல்பாரி எழுச்சியைத் தொடர்ந்து, உண்மையான புரட்சிகரக் கட்சியாக உதயமான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்), அதன் தொடர்ச்சியாக இந்த முதலாவது மாநாட்டை – அதாவது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாட்டை நடத்தியது.

படிக்க :
♦ இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
♦ நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

போலீசு அடக்குமுறை நிலவிய அன்றைய சூழலில் கம்யூனிசப் புரட்சியாளர்களான நக்சல்பாரிகள், போலீசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இரகசியமாக அணிதிரண்டு அந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் கீழ்த்தளப் பகுதியில் ஆண்களும் பெண்களுமாக ஏறத்தாழ 50 கட்சித் தோழர்கள் கூடி, போலியான ஒரு திருமண விழாவை நடத்திக் கொண்டிருக்க, மேல்மாடியில் கட்சியின் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலே காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, அது வெளியே கசியாதவண்ணம், கீழே ஒலிபெருக்கியில் திருமண விழாவையொட்டிய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இந்த மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து 52 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், போலீசு அடக்குமுறைச் சூழலின் காரணமாக 35 கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களில் மே.வங்கம், ஆந்திரா, பீகார், பஞ்சாப், உ.பி, தமிழ்நாடு, ஒரிசா, காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 21 தோழர்கள் கட்சியின் மத்தியக் கமிட்டியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தோழர் சாரு மசும்தார் பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார். மத்தியக் கமிட்டியில் இருந்து 9 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு அமைக்க முடிவாகியது. தோழர்கள் சுஷிதல்ராய் சவுத்திரி, சரோஜ் தத்தா, சுரேன் போஸ் (இவர்கள் அனைவரும் மே.வங்கத்தைச் சேர்ந்தவர்கள்), சத்யநாராயண் சிங் (பீகார்), சிவகுமார் மிஸ்ரா (உ.பி), ஆர்.பி.ஷராப் (காஷ்மீர்), தோழர் அப்பு (தமிழ்நாடு) ஆகிய 7 பேர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு, மற்ற இரண்டு இடங்களும் இம்மாநாட்டில் பங்கேற்க இயலாத ஆந்திரத்தைச் சேர்ந்த தோழர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

★★★

நக்சல்பாரி – இந்தச் சொல் இன்றும்கூட நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில், இணையதளத்தில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

நக்சல்பாரி –- மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில், இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்குமுறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் 53 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி இருந்தது. ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது.

“உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன்வைத்து, 1967-ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி விவசாயிகள் இந்தியப் புரட்சிக்கான போர்ப் பிரகடனத்தைச் செய்தார்கள். அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.

இந்திய நாடாளுமன்ற அரசியலில் 1967-ஆம் ஆண்டு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சரானார். கூட்டணி அமைச்சரவையில் போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார். நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்னும் பின்னும் வெற்று வாக்குறுதிகளை வாரி வழங்கினர், போலி கம்யூனிஸ்டுகள்.

மார்ச்–18, 1967-இல் சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராக, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.

“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பறிமுதலும் விநியோகம் செய்யும் அதிகாரமும் விவசாயிகள் கமிட்டிகளுக்கே அளிக்கப்பட வேண்டும். இதைச் செய்ய வேண்டுமெனில், நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி வட்டச் செயலர் ஜங்கல் சந்தாலும், அன்றைய ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அறைகூவலை எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.

சாரு மஜூம்தார்

‘மார்க்சிஸ்டு’ கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலகக் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்களான சாரு மஜும்தார், கனு சன்யால், சுஷிதல் ராய் சவுத்திரி போன்ற தோழர்கள் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம். ‘மார்க்சிஸ்டு’ கட்சித் தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு, புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ஆம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் அமைப்புகளையும் – இயக்கங்களையும் கட்டியமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல்வாதத் துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால், இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மூட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். எனவே, மாநாட்டு அறைகூவலை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டிகளும் தற்காப்புக்காக ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்களும் அமைக்கப்பட்டன.

மே மாதத்தில் நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வில்லும், அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் போலீசு நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக்கூட முடியாது என்ற நிலைமை 1967 மே மாதத்தில் உருவானது.

மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். பின்வாங்கிய போலீசு, 25-ஆம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரைச் சுட்டுக் கொன்றது; விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பைத் தோற்றுவித்தது. கட்சித் தலைமையானது, இறந்து போனவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது. ஆனால், ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை இந்த முதலைக் கண்ணீரால் தடுக்க முடியவில்லை.

அஜய் முகர்ஜி

“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை!” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்!” என்ற முழக்கங்களால் கொல்கத்தா நகரச் சுவர்களை அதிர வைத்தனர், கொல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள். ‘மார்க்சிஸ்டு’ கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” (நக்சல்பாரி கிருஷாக் சங்கராம் சகாயக் சமிதி) ஒன்றைக் கட்டி ஜூன் 27-ஆம் தேதியன்று சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் அப்போதைய மாநிலக்குழு உறுப்பினரான சுஷிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ, நாடெங்கும் ‘மார்க்சிஸ்டு’ கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது. நக்சல்பாரிகளையும் அதன் ஆதரவாளர்களையும் குறுங்குழுவாதிகள், வறட்டுவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமின்றி, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம்கூட போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால், அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முதல் காலடி” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ஆம் தேதி ஒலிபரப்பில் சித்தரித்த சோசலிச சீனத்தின் பீகிங் வானொலி, ‘மார்க்சிஸ்டு’களின் ஐக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.

1967 ஜூலையில், நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறிய கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவைக் கட்டியமைக்கத் தீர்மானித்தது.

இதற்கிடையே கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒரு அரசியல் – சித்தாந்தப் பத்திரிகையை நடத்தி, அதன் மூலம் புரட்சிகர வழியைப் பிரச்சாரம் செய்வதெனத் தீர்மானித்தனர். ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் வங்காள மொழி வார இதழான ”தேஷ் ஹிதாஷி”யின் ஆசிரியராக இருந்த சுஷிதல்ராய் சவுத்ரி, கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். அவரையும் சுனிதி குமார் கோஷ்-ஐயும் ஆசிரியர்களாகக் கொண்டு 1967 நவம்பர் 11 அன்று “லிபரேஷன்” என்ற ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது. வங்க மொழியில் “தேசப் பிரதி” என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. லிபரேஷன் இதழ் 2,500 பிரதிகளும், தேசப் பிரதி 40,000 பிரதிகளும் விற்பனையாகின. இவ்விரு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களை அரசியல் – சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின.

இதைத் தொடர்ந்து ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் காஷ்மீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநில கமிட்டிகளின் பெரும்பான்மையான தோழர்கள் வெளியேறினர். “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்!” என்ற அறைகூவல் எங்கும் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஒரிசா – எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்சிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.

1967 நவம்பர் 12, 13 தேதிகளில் நாடு முழுவதுமுள்ள கம்யூனிசப் புரட்சியாளர்கள் கூடி, ஒருங்கிணைப்புக் குழுவை – ஒரு தற்காலிகக் கமிட்டியைக் கட்டியமைத்தனர். புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தி, அதன் தொடர்ச்சியாக ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டியமைக்க வேண்டுமெனத் தீர்மானித்தனர்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

இந்த கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவானது, மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையை வழிகாட்டும் சித்தாந்தமாக ஏற்றுக்கொள்வது, கம்யூனிசப் புரட்சியாளர்களை இந்தச் சித்தாந்த அடிப்படையில் ஐக்கியப்படுத்துவது, திரிபுவாதத்திற்கு எதிராக சமரசமற்றப் போராட்டத்தை நடத்துவது, புரட்சிகர போராட்டங்களை – குறிப்பாக நக்சல்பாரி பாணியிலான விவசாயிகளது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது – அத்தகைய போராட்டங்களுக்கு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக்கான கட்சித் திட்டத்தையும் செயல்தந்திர வழியையும் தயாரிப்பது – ஆகியவற்றைத் தனது கடமைகளாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து 1968 மே மாதத்தில் அதன் இரண்டாவது கூட்டம் – அதாவது, நக்சல்பாரி எழுச்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரானது, அனைத்து இந்திய கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு (AICCCR)  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தோழர் சுஷிதல்ராய் சவுத்திரி அதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் கமிட்டியானது, நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்தெழும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்றும் தனது முதல் பிரகடனத்தில் தீர்மானித்தது.

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழிநடத்துவதும் நமது கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்றுபட வேண்டும். மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்” என்ற அறைகூவலை அது விடுத்தது.

இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலைப் புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது – போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.

இதற்கிடையே நக்சல்பாரி வழியிலான போராட்டங்கள் காட்டுத் தீயாக 1968-இல் பரவத் தொடங்கின. குறிப்பாக, சிறீகாகுளம் போராட்டம் மிகப் பெரிய எழுச்சியாக வளர்ந்தது. இந்நிலைமையில் அ.இ.க.பு.ஒ. குழுவானது பிப்ரவரி 8, 1969 அன்று கூடியது. அது, ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை தீர்மானமாக நிறைவேற்றியது.

அ.இ.க.பு.ஒ. குழுவின் விரிவாக்கப்பட்ட கூட்டம் 1969 ஏப்ரல் 19 முதல் 22 வரை நடந்தது. அதில், தோழர் லெனினுடைய 100-வது பிறந்த நாளில் இந்தியாவில் ஒரு புரட்சிகர கட்சியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) யைத் தொடங்குவது என முடிவாகியது. நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது. கட்சியின் அமைப்பு விதிகளை வரையறுப்பது, கட்சியின் முதலாவது மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு, இதற்கென ஒரு ஒருங்கிணைப்புக் குழு கட்டியமைக்கப்பட்டது.

1969 மே தினத்தன்று, கொல்கத்தாவில் ஷாஹித் மினார் மைதானத்தில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் மேநாள் ஊர்வலமும், அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தோழர் கனு சன்யால், இந்தியாவில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாக மா-லெ கட்சி தொடங்கப்பட்டுள்ளதை பிரகடனப்படுத்தினார்.

1969, ஜூலை 12-ஆம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது போலீசு படையெடுத்தது. ஜங்கல் சந்தாலும் முன்னணி போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். 1969-இன் மத்தியில், துணை ராணுவப் படைகளை ஏவி போராட்டப் பகுதிகளில் தாக்குதலை நடத்தியதோடு, மா-லெ கட்சியின் தலைவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவதைத் தொடங்கியது. இதனால், கட்சியானது முழுவதுமாக தலைமறைவாகியது. ஏப்ரல் 1970-இல் லிபரேஷன், தேசப் பிரதி அச்சகங்களில் போலீசாரால் திடீர் சோதனை நடத்தப்பட்டு, அவை முடக்கப்பட்டதால், அப்பத்திரிகைகள் இரகசியமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. தலைவர்கள் மட்டுமின்றி, நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்டு அனைவரும் போலீசாரால் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர், அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழலில்தான் இ.பொ.க. (மா-லெ) யின் முதலாவது மாநாடு, அதாவது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 8-வது மாநாடு நடந்தது. அம்மாநாட்டுக்குப் பின், அரசின் அடக்குமுறையால் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலர் தியாகிகளானார்கள். மற்றவர்கள் சிறையிடப்பட்டு மரணமடைந்தார்கள்; அல்லது இயற்கை விதிகளின்படி, மரணமடைந்தார்கள்.

நக்சல்பாரி எழுச்சியும் கட்சியும் நசுக்கப்பட்டாலும், அதன் அரசியலும் சித்தாந்தமும் நாடு முழுவதும் பற்றிப் பரவியது. சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு, அசாம், காஷ்மீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. ‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகள், முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு அஞ்சி நடுநடுங்கினர். நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் நாடெங்கும் பரவின. நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.

1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக பழங்குடியின மக்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராமப்புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ள முயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆனால், போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக, துணை இராணுவமும் போலீசுப் படையின் அடக்குமுறையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு – வயல்வெளிகளிலும், கொல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் உடல்களை விசிறியடித்து, பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் இயல்பான நடைமுறையாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை பாசிச ஆட்சிக் காலத்திலும் இதேநிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்திரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.

ஆனால், அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டமாக நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அது, வெட்ட வெட்டத் துளிர்க்கும், வளரும். அது, நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

இன்று, இந்திய நாடாளுமன்ற போலி ஜனநாயகக் கட்டமைப்பே நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது. இன்று, ஓட்டுக்கட்சிக் கொடிகளும் சின்னங்களும் மட்டுமே வேறுவேறாக உள்ளன. ஆனால், “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” என்கிற கொள்கையில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் கிடையாது. நாடெங்கும் கிரிமினல் குற்றக் கும்பல்கள் தோன்றி அரசியலே கிரிமினல்மயமாகிவிட்டது. இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளாலும், சமூக விரோத கிரிமினல் குற்றங்களாலும் அரசியல் அமைப்பு முழுவதும் புழுத்து நாறுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே, மக்கள் அணி திரள்வதற்கும், தங்கள் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே மையமாக நக்சல்பாரி இயக்கமொன்றுதான் உள்ளது. அதுமட்டுமே நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, அதற்குப் புறம்பாகவும் எதிராகவும், ஆக்கபூர்வமான அரசியல், பொருளாதாரத் தீர்வு காணவும், மக்களை வழிநடத்தும் துணிவும் தெளிவும் கொண்டதாக உள்ளது.

நக்சல்பாரி என்ற சொல் இனியும் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை. இப்போது நக்சல்பாரி என்ற சொல், ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது. நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது. உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாக நக்சல்பாரிப் பாதை திகழ்கிறது.

இந்த மே மாதத்தில், கட்சியின் 8-வது மாநாடு நடந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டில் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் உருவாகி மறைந்து போய்விட்டன. ஆனால் 51 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் நக்சல்பாரி இயக்கம் அழியாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)-யை புரட்சியாளர்கள் உருவாக்கினார்கள். இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், விரைவிலேயே இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட கட்சியாக வளர்ந்து தனது 9-வது மாநாட்டை நடத்த வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

போர்க்குணம், புரட்சியைச் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம், எல்லா வகையான அடக்குமுறைகளையும் துச்சமாக மதிக்கும் எஃகுறுதி, முழுமையான அர்ப்பணிப்பு, எல்லா வண்ணத் திரிபுவாதங்களையும் எதிர்த்து முறியடிப்பதில் இடையறாத போராட்டம் – ஆகிய உயரிய பண்புகளை நக்சல்பாரி இயக்கம் தோற்றுவித்துள்ளது. சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் புரட்சிகர குழுக்களை ஐக்கியப்படுத்தி, நாடு தழுவிய கட்சியாக வளர்த்தெடுப்பதென்பது புரட்சியாளர்களின் அவசர, அவசியமான கடமையாக உள்ளது. இம்மகத்தான கடமையை நிறைவேற்ற, எண்ணற்ற தியாகிகளின் உதிரத்தால் சிவந்த நக்சல்பாரி புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல சூளுரை ஏற்போம்!

தங்கம்

கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !

முறிந்துகிடக்கும் இந்தியாவின் கொரோனா இறப்பு விவரங்கள் : தீர்வு காண்பது எப்படி?

கடந்த ஓராண்டு காலமாக, இந்திய ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் ஒரே ஒரு எளிமையான கேள்விக்கு பதில் சொல்ல பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை என்ன?

அரசாங்கத்தின் தரவுகளில் பெரும் முரண்பாடுகள் இருப்பதால், இந்த விவரங்களை வெளிக் கொண்டுவர ஊடகத்துறையினர் பல்வேறு வகையான, வழக்கத்திற்கு மாறான உத்திகளை பயன்படுத்துகின்றனர். அரசாங்கம் வெளியிடும் இந்த எண்ணிக்கையில் என்ன பிரச்சனை  இருக்கிறது? என்பதை பார்ப்போம்.

படிக்க :
♦ மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !

கோவிட்-19 இறப்பு கணக்கை தவறவிட மூன்று முக்கிய வாய்ப்புகள் உள்ளன.

  1. கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு இறந்த நபரை, தொற்று இல்லாமல் இறந்ததாக பதிவு செய்வது அல்லது தொற்று உறுதிசெய்யப்பட்டவர் வீட்டிலேயே இறந்துவிட்டால் அந்த இறப்பினைக் கணக்கில் எடுத்துக் கொள்ளமாலேயே விட்டுவிடுவது.
  2. கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ளாத நபர் நோய்த் தொற்றினால் இறந்தாலும், பரிசோதனை செய்து கொள்ளாததால் அவர் கோவிட்-19 இறப்புகளில் சேர்க்கப்படமாட்டார்.
  3. கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைவாகக் காட்டிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள்.

மேற்கூறியவற்றில் மூன்றாவது வாய்ப்பு முக்கியமானதும் பெரும்பாண்மை வகிப்பதும் என்று பலர் கருதலாம். அதேவேளையில், மற்ற இரண்டு அம்சங்களும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளபடி, தற்போதைய தொற்று நோயின் இறப்புகளைப் பதிவு செய்ய சில நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கூறுகிறது.

ஒரு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் மரணம் கோவிட்-19 மரணமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

மேலும், ஒரு நபர் தற்போதைய நோய்த் தொற்றின் எந்தவொரு அறிகுறிகளும் இல்லாமல் இறந்தாலும், அவரை கோவிட்-19 நோய்த் தொற்றினால் இறந்ததாக எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறியீடுகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பின் “நோய்களின் சர்வதேச வகைப்பாடு” (INTERNATIONAL CLASSIFICATION OF DISEASES _ ICD-10) வழிகாட்டியுள்ளது.

அதன்படி,

  1. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் சுவாசக் கோளாறு காரணமாக இறந்திருப்பதாகத் தோன்றினாலும், – தனித்துவமான இறப்பு முறையாக இருப்பதால் – அவரது இறப்பை கோவிட்-19ஆல் ஏற்பட்ட இறப்பு என்றே கணக்கில் கொள்ள வேண்டும்.
  2. தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு வேறு பல நோய்கள் இருப்பின் நிச்சயமாக அவர் சுவாசக் கோளாறு ஏற்பட்டு இறக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால், மற்ற நோய்களால் ஏற்பட்ட மரணம் என்று கருத்தக் கூடாது, மாறாக இறப்பின் காரணம் கோவிட்-19 எனக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. ஒருவர் கோவிட்-19 பரிசோதனையை எடுக்காமல் அல்லது நோய்த் தொற்று இல்லாதவர் என்று பரிசோதனையில் முடிவு வந்திருந்தாலும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவரது இறப்பு, “சந்தேகத்திற்குரிய அல்லது கோவிட்-19ஆல் ஏற்பட்ட மரணம்” என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், நடைமுறையில் இந்த வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படுவதே இல்லை. பல மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் எங்களுக்கு சொன்னது என்னவென்றால், ஒருவர் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்களில் உயிரிழந்தாலோ அல்லது அறிகுறிகள் தெளிவாக வெளிப்பட்டாலோ மட்டுமே அந்த மரணம் கொரோனாவினால் எற்பட்ட மரணம் என்று கணக்கிடப்படுகிறது.

இதுவே ஒரு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு சில வாரங்களில் தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்தாலும் வெளிப்படையான அறிகுறிகள் காணப்படலாம். இந்த நிலையில் அவர் இறந்தாலும் அவரது இறப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

பெரும்பாலான மாநிலங்கள் “சந்தேகத்திற்குரிய கொரோனா இறப்புகளை” கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக இரண்டாம் அலையின் போது பல சந்தேகத்திற்குரிய கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் மருத்துவமனை நடைபாதைகளில் மற்றும் வீடுகளில் இறந்துள்ளனர். இவர்கள்  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் பாதிக்கும் குறைவானவைதான் மருத்துவமனைகளில் நிகழ்கின்றன என 2018-இன் அரசின் தரவுகள் கூறுகின்றன. அப்படியிருக்கும் போது, தற்போது கோவிட்-19 இறப்புகள் என அதிகாரப் பூர்வமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மிகப் பெரும்பாலானவை மருத்துவமனைகளில் நிகழ்ந்ததுள்ளவை மட்டுமே.

அதே வேளையில், மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதால், மற்ற நோய்களினால் ஏற்படும் இறப்புகளின் சதவீதமும் உயர்ந்துள்ளது. உதாரணமாக, டயாலிசிஸ் (Dialysis) மற்றும் கோவிட் அல்லாத ஆக்சிஜன் தேவை காரணமாக நிகழும் இறப்புகளும் உயர்ந்து வருகின்றன. மேலும், பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு நெருக்கமான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசால் சொல்லப்படும் தரவுக்கும் உண்மையாக இறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் பொருத்தமில்லாமல் இருப்பதைக் கேள்வி எழுப்புகின்றனர்.

பெரும் வேறுபாடுள்ள கோவிட்-19 இறப்புகளின் தரவுகளினால், இப்பத்திரிக்கையாளர்கள் இறந்தவர்களைத் தகனம் செய்யும் இடங்களுக்கும் புதைக்கும் இடங்களுக்கும் சென்று தரவுகளைச் சேமிக்கின்றனர். ஆனால், இம்மாதிரி குளறுபடியான தரவுகளை ஒருங்கிணைப்பதனால் இந்த நோய்த் தொற்றை நம்மால் ஒருபோதும் சரி செய்ய முடியாது.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, தகனம் செய்யும் இடங்களிலும் புதைக்கும் இடங்களிலு பதிவேடுகள் முறையாகப் பாராமரிக்கப் படுவதில்லை. தகனம் செய்து முடிந்த நபர்களின் எண்ணிக்கை சரியாகப் பராமரிக்கப் படாததால் பெரும்பான்மை பத்திரிக்கையாளர்களின் தரவுகளை சரியாக கணக்கிட முடியாது. மேலும், கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறையின்படித் தகனம் செய்த நபர்களின் எண்ணிக்கையும் முறையாக இருப்பதில்லை. பெரும்பாலான இடங்களில், நோய்த் தொற்று உடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களும் நோய்த் தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் முன்னெச்சரிக்கையாக இந்த நெறிமுறையின்படியே தகனம் செய்யப்படுகின்றனர்.

இந்தியாவில், ஒரு மாநிலத்துக்குள்ளே அல்லது ஒரு நகரத்துக்குள்ளே தகனம் செய்யும் இடங்களில் சேகரிக்கப்படும் தரவுகள் முறையானதாக இருப்பதில்லை. உதாரணமாக, பெங்களுருவில், கோவிட்-19 தொற்று காரணமாக இறந்த நபரையும் கோவிட்-19 பரிசோதனை மட்டுமே எடுத்துக் கொண்ட நபரையும் ஒரே இடத்தில் தகனம் செய்கின்றனர். பரிசோதனை செய்துக் கொண்டவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதா? இல்லையா? என்ற எந்தச் சோதனையும் நடைபெறுவதில்லை. மேலும், பெங்களுருவில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு அடையாள அட்டை வழங்கப் படுகிறது. ஆனால், இந்த முறையானது வேறு எங்கும் இல்லை.

கேரளாவில், பல தகனம் செய்யும் இடங்களில் பதிவுகள் முறையாகப் பராமரிக்கப் படுவதில்லை. கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்பதற்கான மருத்துவரின் சான்றிதழை குடும்பத்தினர் முறையாக வைத்திருக்கும் போதிலும், தகனம் செய்யும் இடங்களில் அதைக் குறிப்பிடாமல் தவறவிடுகின்றனர். பல மருத்துவமனைகளில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதானது, வாய்வழியாக மட்டுமே உறவினர்களுக்குச் சொல்லப் படுகிறது. எனவே, அவர்கள் இறக்கும் போது முறையான ஆதாரங்கள், ஆவணங்கள் எதுவும் இல்லையென்பதால் அந்த மரணங்களும் கோவிட் அல்லாத மரணங்களாகவே தகனம் செய்யும் இடங்களில் பதிவு செய்யப் படுகின்றன.

மேலும், கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் தொற்றினை சரிசெய்து கொள்ள பெருநகரங்களுக்கு வருபவர்களில் சிலர் இறக்கின்றனர். இவர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப் படுகிறது. அதனாலும் பெருநகரங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

நோய்த் தொற்று காரணமாக இறப்புகளைப் பதிவு செய்வது இந்தியாவில் முழுமையற்றதாக உள்ளதால், முந்தைய ஆண்டுகளின் “எல்லா மரணங்களையும் அவற்றின் காரணங்களையும்” எடுத்து ஒப்பிட்டு பத்திரிக்கையாளர்கள் ஆய்வு செய்யலாம். 2018-இன் தரவுகளின்படி, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தில் 86 சதவீதம் இறப்புகள் மட்டுமே பதிவாகிறது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே முழுமையாக இறப்புகள் பதிவு  செய்யப்படுகிறது.

கேரளா மாநிலம் மட்டுமே அனைத்து இறப்புகளையும் அதற்கான காரணங்களையும் 2020-இல் பதிவு செய்துள்ளது. கேரள மாநிலத்தில், 2020-ல் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் 2019-இன் ஆண்டை விடக் குறைவு என்பதால் இதனை மரணத்தைக் குறைத்துக் காட்டும் தரவு என்றோ தவறான தரவு என்று எண்ணக் கூடாது. (2018-இல்-மொர்) குறிப்பிட்ட அளவிலான மரணங்கள் தாமதமாகவே பதிவு செய்யப்பட்டன. உதாரணமாக, 2018-இல் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் இறந்த ஒரு மாதத்திற்கு பின்பே பதிவு செய்யப்பட்டது. 2 சதவீதம் (4810) இறப்புகள் ஒரு வருடத்திற்கு பின்பு கூட பதிவு செய்யப்படவில்லை. 2020-ல் கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகள் 3,096. இதனை பதிவு செய்யாத இறப்புகளோடு ஒப்பிட்டால் குறைவுதான்.

படிக்க :
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

மும்பை, டெல்லி, வேறு சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இந்த இறப்பு பதிவுகள் முழுமையாக உள்ளதனால் முந்தைய ஆண்டை ஒப்பிட்டு பதிவிட்ட இறப்புகளின் சதவீதத்தை அறிந்து, இந்த நோய்த் தொற்றின் வீரியத்தையும் இதனால் நேராகவோ மறைமுகமாகவோ ஏற்படும் விளைவுகளையும் புரிந்துக் கொள்ள முடியும்.

மக்கள் தொகை பதிவுகள் முழுமையாக இல்லாத வடமாநிலங்களில் “மாதிரி பதிவு அமைப்பு” (Sample registration system) உதவும். இ்ந்த மாதிரி கணக்கெடுப்பு, ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அளிக்கிறது.

இந்த தரவுகள் வெளியிடப்பட்டால் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் மூலம் ஏற்பட்ட இறப்பு விகிதத்தை அறிந்துக் கொள்ள முடியும்.


கட்டுரையாளர்கள் : ஆஷிஷ் குப்தா, தன்யா ராஜேந்திரன், ருக்மிணி
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : மாதவன்
நன்றி : The Wire

கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !

ந்திய மக்கள் ஒவ்வொருவரையும் மரணம் துரத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா என்கின்ற கொடிய வைரஸ் பரவலின் கொடும் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வக்கற்ற மோடி அரசின் செயல்பாட்டை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்தும் நிலைக்கு கேடு கெட்டு போய் உள்ளனர் ஆட்சியாளர்கள்.

கொடிய வைரஸ் கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியைப் போடுவதற்குப் பாரதூரமான எந்த முயற்சியையும் மத்திய மோடி அரசு எடுக்கவில்லை. இந்திய துணை கண்டம் முழுவதும் மரண ஓலங்கள். உயிர் பிரிந்த மனித உடல்களை முறையாக தகனம் செய்வதற்கு கூட வழியில்லாமல் நிற்கதியாய் நிற்கின்றனர் மக்கள்.

படிக்க :
♦ கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

சுடுகாடுகள் நிரம்பி வழிந்து கங்கை நதி பிணங்களை சுமந்து செல்கிறது. “எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்” என்பதைப் போல் பிணத்தைக் காட்டி காசு பறித்து கொள்ளை அடிக்கின்றனர் கார்ப்பரேட் மருத்துவமனைகள்.

இது ஒரு புறமிருக்க, காவி பாசிச சங்பரிவார் கும்பல் மாட்டு மூத்திரத்தை குடித்தால் கொரோனா போய்விடும் என்றும், மாட்டு சாணத்தை தடவி குளிக்க வேண்டும் என்றும் உளறி மக்களை மூட நம்பிக்கைகளில் ஊற வைக்கிறது. அறிவியல் கண்ணோட்டம் சிறிதும் இல்லாத, கிஞ்சித்தும் ஈவு இரக்கம் அற்ற, எவ்வித மனித பண்புகளும் இல்லாத, ஒரு கொடுங்கோல் வர்ணாசிரம வெறி பிடித்த கும்பல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலின் அலட்சியத்தால் இந்த நாட்டின் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர்.

கொரோனா என்ற கொடிய வைரஸ் உருவாகியுள்ள இரண்டாவது அலை தாக்குதலில் உயிர் பிழைத்து இருப்போமா? என்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் இந்த நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் மரணப் பயத்தில் இருத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற மரண ஓலமும் உயிரற்ற மனித உடல்களும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எந்த உத்வேகத்தையும் கொடுக்கவில்லை. கோமாதா என்ற பெயரில் மாட்டுக்கு தரும் கரிசனத்தை சகமனிதருக்கு காட்ட மறுக்கிறது காவி பாசிசக் கும்பல். தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு தற்காப்பு நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, உண்மையான மரணத்தின் கணக்கை மூடி மறைக்கிறது மோடி அரசு.

மத்திய மாநில அரசு அறிவித்துள்ள தற்போதைய பொது முடக்கத்தினால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. கொடிய வைரஸை விட மிகப்பெரிய தாக்குதலை காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் இந்த நாட்டின் அனைத்து பகுதி மக்கள் மீது ஏவிவிட்டுள்ளது. சாமானிய சிறு-குறு தொழிலகங்கள் மூடப்பட்டு பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கின்றனர்.

நாட்டு மக்கள் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் கூட இந்தியாவிலுள்ள 10 சதவீத கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறுந்தொழில்கள் இழுத்து மூடப்பட்டு விட்ட அதே நேரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடை இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி கும்பலின் நலன் காப்பது என்ற ஒரே கொள்கையை தாரக மந்திரமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

கார்ப்பரேட்  முதலாளித்துவ கும்பலின் சொத்து மதிப்பு 75 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர்களின் வேலை இழப்பு புதிய உயரங்களை எட்டியுள்ளது. தொழிலாளர்களின் வருமானத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வறுமை, குறைந்தபட்ச வாழ்வாதாரத் தேவைகள் நிறைவு செய்ய இயலாமல் திண்டாடும் நிலை, சத்தான உணவு கிடைக்காமை, வீட்டு வாடகை, மின் கட்டணம், மருத்துவ செலவு உள்ளிட்ட குறைந்த பட்சத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாமல் இந்திய உழைக்கும் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்த ஆய்வின்படி 27 விழுக்காடு மக்களுக்கு எவ்வித வருமானமும் இல்லை. சம்பளம் பெறுபவர்களுக்கு, ஏற்கெனவே பெற்று வந்த சம்பளமும் குறைந்து உள்ளது.

அரசு அறிவித்த ஊரடங்கின் விளைவாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் 40.07 கோடி பேர் வேலையில் இருந்துள்ளனர். இந்த நிலைமை கடந்த மார்ச் மாதத்தில் 39.81 கோடியாக இருந்தது. மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றிய நிறுவனங்களிலிருந்து கணிசமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 2019-2020-ம் ஆண்டில் 85.9 மில்லியனாக இருந்த தொழிலாளர்  எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 73.3-ஆக குறைந்துவிட்டது.

புதிய வேலை வாய்ப்பு அறவே இல்லை என்கின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வேலையற்றோர் சந்தை பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. வேலை இழப்பை எதிர்கொண்டு புதிய வேலையை தேடாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 1.6 கோடியாக இருந்தது, ஏப்ரல் மாதத்தில் 1.94 கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு (Center for Monitoring Indian Economy) வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த நெருக்கடி இந்திய விவசாயத் துறையிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மோடி அரசின் கார்ப்பரேட் நலன் காக்கும் நடவடிக்கைகள், பெண்களின் வேலை வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 10-லிருந்து 12 வயதுச் சிறுமிகளும் பணியமர்த்தப்பட்டு கடுமையான சுரண்டல் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

நாடெங்கிலும் லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்கள் அழிவை நோக்கி  சென்று கொண்டிருக்கின்ற நிலையில், உரிய நாளில் ஜி.எஸ்.டி.யை செலுத்தவில்லை  என்ற காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சிறு தொழில் மற்றும் குறுந்தொழில் உரிமையாளர்கள், GST அபராதத் தொகையில் விலக்கு கேட்டு அரசிடம் மன்றாடி வருகின்றனர். பல இலட்சக் கணக்கான கோடி ரூபாய்களை, கடன் தள்ளுபடியாகவும், ஆத்மநிர்பார் எனும் பெயரிலும், அம்பானி – அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கு வாரி வழங்கிய காவி-கார்ப்பரேட் பாசிச கும்பல் சிறு மற்றும் குறுந்தொழில் உரிமையாளர்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது. இதன் விளைவாக லட்சக்கணக்கான உதிரிப் பாட்டாளிகள் மரணத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர். பொது முடக்கம் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.

கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தக் கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ செலவுகள் அனைத்தையும் மத்திய மாநில அரசுகளின் பொறுப்பில் செய்ய வைக்க வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான நிவாரண தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

படிக்க :
♦ கொரோனா : தடுப்பூசி கொள்கையின் அரசியல் பொருளாதாரம்
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!

கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் தனியார் முதலாளிகள் தங்களுடைய ஊழியர்கள் உடைய மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். லட்சோப லட்சம் தொழிலாளர்கள் காவி பாசிச கும்பலின் பொருளாதாரத் தாக்குதலின் காரணமாக வேலையில் இருந்து வீசி எறியப்பட்டு உள்ளனர்.

கொரோனா  பெரும் தொற்றில் இருந்து மக்களை காக்க வக்கற்ற ஆட்சியாளர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலுக்கும், காவி சனாதன வைரஸுக்கும் எதிராக மாபெரும் போராட்டத்தைக் கட்டி அமைக்க வேண்டியுள்ளது.


இரணியன்

 

தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !

மரணத்தின் வணிகர்கள் : கோவிட்-19 மற்றும் பெருவணிகம்

தனிமைப்படுத்தலின் தனிமை மற்றும் புதிய நோய்த் தொற்றுகளின் துயரம் மற்றும் தொற்று நோய் காரணமாக வழமையான வாழ்வில் இருந்து வேறொரு புதிய நெருக்கடியான வாழ்நிலைக்கு மாறியவர்களின் துயரம் தாங்க முடியாதது. நாமும் ஓர் ஆழமான கோபத்திற்கு உள்ளாகிறோம். ஏனெனில் முதலாளித்துவத்தின் பல தவறான சமூக மதிப்பீடுகளின் கொடூரமான அம்சங்களில் ஒன்று துருத்திக் கொண்டு வெளிவருகிறது. அது மக்களின் வாழ்வு மற்றும் மரணத்தையே தனது லாபத்திற்கான ஒரு வணிகமாக செய்து கொண்டிருக்கிறது.

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளுக்கு காப்புரிமை பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் எதிர்த்தன. இந்த முன்மொழிவு 2020 அக்டோபரில் உலக வர்த்தக அமைப்பின் முன், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவால் சமர்ப்பிக்கப்பட்டது.

பார்க்க :
♦ கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

மேலும், இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது அறிவுசார் சொத்து தடைகளை அகற்றுவதை உள்ளடக்கிய நகர்வு. இதனால், நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தையும் அறிவையும் மற்ற உற்பத்தி ஆலைகளுக்கு கொடுக்க முடியும். இதன் மூலம் உலக மக்களுக்கு முடிந்தவரை விரைவாக தடுப்பூசிப் போடுவதற்கு தேவையான அளவு  தடுப்பூசிகளை மிகப் பெரிய அளவில் உத்தரவாதமாக உற்பத்தி செய்ய முடியும். உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயசஸ் கருத்துப்படி, பல நாடுகளிலும் இதற்கான உற்பத்தி திறனும் ஆற்றலும் உள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (டிரிப்ஸ்) மீதான ஒப்பந்தம், பல ஆண்டுகளாக உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலுக்கான முதலாளித்துவ உரிமையாளர்களுக்கு பிரத்யேக உரிமைகளை ஒதுக்கும் அளவிற்கு ஏகபோகங்களின் சட்டரீதியான உருவாக்கத்தை தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் பயன்படுத்தும் வாதம் என்னவென்றால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்ய ஒரு ஊக்கத்தொகை உள்ளது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க இந்த காப்புரிமைகள் மட்டுமே ஒரே வழி.

“ஊக்கத்தொகை” அவர்களின் வலுவான வாதமாக இருப்பதால், இது பற்றிப் பரிசீலிப்போம். காப்புரிமை மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் அடைவது என்னவென்றால், இந்த உலகில் யார் வாழ்வது, யார் இறப்பது, அதே போல் நாம் எப்படி வாழ்வது, எப்படி இறப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மருந்து நிறுவனங்களுக்கு வழங்குவதாகும். மருந்து நிறுவனங்கள் தான் ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். மிகவும் இலாபகரமானதாக இருக்கும் மருந்துகளை மட்டும் உற்பத்தி செய்வதாக இது இருக்கும்.

நோய்களை நாள்பட்டதாக ஆக்குவதும், தற்செயலான ஒன்று அல்ல. உண்மை என்னவென்றால், ஆராய்ச்சிக்கான நிதி தனியார் மருந்து தொழில் ஆதாரங்களில் இருந்து வரவில்லை. இது வரலாற்று ரீதியாக நிதி ஆதாரங்களை கிடைக்கச் செய்த அரசாங்கங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் முக்கியமான பொது நிறுவனங்கள் தான் ஆராய்ச்சியை உருவாக்கியுள்ளன. பின்னர், மருந்துத் தொழில் நிறுவனங்கள் இந்த தொழில் நுட்பத்தைக் கையகப்படுத்தியுள்ளன.

கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 1390 கோடி டாலர்களில், அரசாங்கங்கள் 860 கோடி டாலர்களை வழங்கியுள்ளன; அரசு சாரா நிறுவனங்கள் 190 கோடி டாலர்களை வழங்கியுள்ளன. அதே நேரத்தில் தனியார் மருந்து நிறுவனங்கள் 340 கோடி டாலர்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது மொத்த செலவில் வெறும் 25 சதவீதம் மட்டுமே. தடுப்பூசிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சந்தை உள்ளது என்பதையும் ஒருவர் கவனிக்க வேண்டும். உண்மையில், டிசம்பர் 2020 வரை, வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படுபவை 1038 கோடி டோஸ்களை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளன.

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா கோவிட்-19க்கு எதிராக 100 சதவீதம் பொது நிதியுடன் 250 கோடி டாலர்களைப் பெற்று ஒரு தடுப்பூசியை உருவாக்கியது. முன் ஆர்டர்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 31 டாலர்கள் விலையில் 78 கோடி டோஸ்கள். இது சுமார் 2400 கோடி டாலர்கள் அமெரிக்க வருவாயை உருவாக்கும். இந்த வணிகத்தின் இலாபங்கள் என்னவாக இருக்கும் என்பதை சாதாரணமான மக்களே கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

ஃபைசர் / பயோஎன்டெக், மேலும் அமெரிக்க நிறுவனங்கள், அரசாங்க ஆதாரங்களில் இருந்து சுமார் 195 கோடி டாலர் பெற்றது. அவர்கள் ஆராய்ச்சிக்கு செலவழித்ததில் சுமார் 66 சதவீதம். 128 கோடி டோஸ்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு சராசரியாக 18.50 டாலர் என்ற விலையில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டன. இது சுமார் 2368 கோடி டாலர்கள் வருவாய் ஆகும். ஆங்கில மூலதனத்திற்கு சொந்தமான அஸ்ட்ராஜெனிகா / ஆக்ஸ்போர்டு, 329 கோடி டோஸ்களுக்கு முன் ஆர்டர்களைப் பெற்றது.

இது ஒவ்வொன்றும் 6 டாலருக்கு விற்கப்பட்டு, 1974 கோடி டாலர்கள் வருவாயைப் பெறும். ஆனால், ஆராய்ச்சிக்காக அது செலவழித்த 220 கோடி டாலர்களில் 67 சதவீதம் பொது ஆதாரங்களில் இருந்து வந்தது. ஜான்சன் & ஜான்சன் 127 கோடி டோஸ் தடுப்பூசிக்கான ஆர்டர்களைக் கொண்டுள்ளது. இது ஒரு டோஸ் ஒன்றுக்கு 10 டாலரில் விற்கப் படுகிறது. இதன் மூலம் 1270 கோடி டாலர்கள் வருமானத்தை உற்பத்தி செய்யும். அவர்கள் ஆராய்ச்சியில் 81.9 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இதில் 100 சதவீதம் பொது ஆதாரங்களில் இருந்து நிதியளிக்கப்பட்டது.

தடுப்பூசிகளின் விலைகள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 4 முதல் 37 டாலர்கள் வரை : ஸ்புட்னிக்-V $ 10 / டோஸ்; சனாபி / ஜி.எஸ்.கே ஒரு டோஸ் மருந்துக்கான விலை 10 முதல் 21 டாலர் வரை; நோவாக்ஸ் $ 16 / டோஸ்; மாடர்னா ஒரு டோஸ் மருந்துக்கான விலை 25 முதல் 37 டாலர் வரை; சினோவாக் $13 முதல் $29 வரை / டோஸ்; (ஏற்கனவே குறிப்பிடப் பட்டவற்றுக்கு கூடுதலாக.)

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் ஒரு வளர்ந்து வரும் வணிகமாக, எங்கள் காலத்தின் சிறந்த வணிக வாய்ப்பாகத் தோன்றுகிறது. ஆராய்ச்சி முதலீட்டின் பொறுப்பை அரசுகள் எடுத்துக் கொண்டு தனியார் மருந்துத் தொழில்களுக்கு நிதியளித்தன. அவர்கள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சந்தையைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அதே அரசாங்கங்கள் அவர்கள் நிதியளித்த பெருநிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளன.

அனைத்து இலாபமும் மருந்துத் தொழில் நிறுவனங்களுக்கு செல்லும். அவற்றில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்கள். மேலும், அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (டிரிப்ஸ்) மீதான உடன்படிக்கையால் அதே அரசாங்கங்கள் வழங்கிய ஏகபோகத்தின் காரணமாக, பல ஆண்டுகளாக உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலின் பிரத்யேக உரிமைகளைக் கொண்டுள்ளன.

இந்த காப்புரிமைகளின் விளைவாக, தடுப்பூசியைப் பெறுவதற்கான இந்த கட்டுப்பாடு, தினமும் 5,00,000 பேர் பாதிக்கப்பட்டு வரும் அதே நேரத்தில் நடைபெறுகிறது. மேலும் கோவிட்-19 காரணமாக ஒவ்வொரு நாளும் 8,000 பேர் இறக்கின்றனர்.

முதலாளித்துவத்தின் இதயமற்ற லாபவெறிக்கான எடுத்துக்காட்டு அல்லவா இது?

இன்று, அதிக வருமானம் பெறும் நாடுகள் வினாடிக்கு ஒரு நபருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் போது, பெரும்பாலான நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடப்படவில்லை என்று ஆக்ஸ்பாம் கூறுகிறது. இன்று வரை தயாரிக்கப்பட்ட 12.8  கோடி தடுப்பூசி அளவுகளில், உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் 60 சதவீதத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வெறும் 10 நாடுகளில் நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமான தடுப்பூசிகள் குவிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 250 கோடி மக்களைக் கொண்டுள்ள 130 நாடுகளில், தடுப்பூசி செயல்முறைக் கூட தொடங்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. நாம் 2021-க்குள் ஆறு மாதங்கள் இருக்கும் நேரத்தில், மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளின் மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே தடுப்பூசிப் போடப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த சூழ்நிலையில், இந்த மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே தடுப்பூசிப் போடப்பட்டிருப்பார்கள். (ஆக்ஸ்பாம்) இது இந்த நாடுகளின் பொருளாதார மீட்சியை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், அந்த நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதையும் தாமதப்படுத்தும். உலகில் கிடைக்கக் கூடிய அனைத்து தடுப்பூசிகளிலும் அமெரிக்கா 25 சதவீதம் பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 12.6 சதவீதம் பெற்றுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தின் திமிர்த்தனம் மிகவும் பெரியது. அவற்றின் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக, அவர்கள் 2001-ல் உலக சுகாதார நிறுவனத்தில் உடன்பட்டாலும், பொது சுகாதார அவசரநிலை சந்தர்ப்பங்களில் அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பாக நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க காப்புரிமைகளில் இருந்து விலக்கு அளிக்க மறுத்து விட்டனர். (தற்போது அமெரிக்கா சற்று கீழிறங்கி, இந்த விலக்கு அளிப்பதற்கான பேச்சு வார்த்தைக்கு உதவுவதாக கூறியுள்ளது.) (மொ.ர்).

“… டிரிப்ஸ் ஒப்பந்தம் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுப்பதை தடுக்காது மற்றும் தடுக்கக் கூடாது. இது தொடர்பாக, தோஹா பிரகடனம், உலக சுகாதார நிறுவனம் பல ஆண்டுகளாக பகிரங்கமாக வாதிட்டு, முன்வைத்தக் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. அதாவது பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், ஏழை நாடுகள் மருந்துகளை எளிதாகப் பெறுவதை அதிகரிக்கவும் டிரிப்ஸ் ஒப்பந்தத்தின் பாதுகாப்பு விதிகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களின் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்துதல்.”

படிக்க :
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!
♦ கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

மேலே உள்ள அனைத்தும் போதாது என்பது போல், ஒரு டோஸ் ஒன்றுக்கு சராசரியாக 15 டாலர் என்ற விலையில், உலகின் 790 கோடி மக்களுக்கு தலா இரண்டு டோஸ்கள் வழங்கப் படுகின்றன என்பதை கணக்கெடுத்தால், உலக மக்களுக்கு தடுப்பூசிப் போடுவதற்கு 23100 கோடி டாலர்கள் தேவைப்படும் என்பது மிகவும் ஆத்திரமூட்டுகிறது.

ஏனெனில், இது உலகிலுள்ள 2,000 கோடீஸ்வரர்கள் தொற்று நோயின் போது அடித்த கொள்ளை லாபத்தில் 5 சதவீதம் கூட கிடையாது. இப்படி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபமடிக்க அரசாங்கங்கள் அவர்களுக்கு மக்களின் பணத்தை வாரியிறைத்த அதே நேரத்தில், 50 கோடி மக்கள் தீவிர வறுமையில் வாழ்பவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்த பட்டியல் இப்போது சுமார் 400 கோடி மக்கள் என உயர்துள்ளது.

[குறிப்பு : பாஸ்குவாலினா கர்சியோ வெனிசுலாவில் உள்ள Simón Bolívar பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்]

கட்டுரையாளர் : பாஸ்குவாலினா கர்சியோ
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : Frontierweekly

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் : கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1

கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும் போதெல்லாம், “இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?” என்று கேள்வியெழுப்புவது இந்தச் சாமியாரின் வழக்கம்.

ஆகவே, இவரது ஆசிரமம் குறித்து பல்வேறு அரசு ஊழியர்கள், செயற்பாட்டாளர்கள், ஊழலை அம்பலப்படுத்துபவர்களிடம் பேசியது நியூஸ் லாண்ட்ரி. ஈஷா ஃபவுண்டேஷன் குறித்த பல்வேறு அரசு ஆவணங்களைப் பார்வையிட்டது. ஈஷாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற வழக்குகளை ஆராய்ந்தது.

படிக்க :
♦ துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !
♦ கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

ஈஷா ஃபவுண்டேஷனின் கதை ஒரு வழக்கமான ஊழல் மற்றும் பேராசை பிடித்த சாமியாரின் கதைதான். நம் மக்களிடம் மதம் மற்றும் கலாச்சாரம் மீது இருக்கும் உணர்வைப்(sentiment) பயன்படுத்தி சட்டவிரோத காரியங்கள் செய்யப் பட்டிருக்கின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இக்கரைப் பொலுவம்பட்டி என்ற ஆதிவாசி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஈஷாவின் சாம்ராஜ்யம்.

வெள்ளையங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த இக்கரைப் பொலுவம்பட்டியில் 150 ஏக்கரில் 77 கட்டுமானங்களுடன் செயல்பட்டு வருகிறது இந்த ஈஷா ஆசிரமம். இந்தக் கட்டிடங்கள் எல்லாம் சட்டங்களையும் விதிகளையும் மீறி 1994-க்கும் 2011-க்கும் இடையில் கட்டப்பட்டவை. பொலம்பட்டி காப்புக் காடுகளை ஒட்டி இந்த ஆசிரமம் அமைந்திருக்கிறது. இந்த காப்புக் காடுகள் யானைகளின் வாழிடங்கள்.

ஆகவே, இந்தப் பகுதியில் மனித நடமாட்டம் என்பது Hill Area Conservation Authority என்ற ஆணையத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது. தமிழ்நாட்டில் மலைப் பிராந்தியக் காடுகளில் வனவிலங்கு மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்காக 1990-ல் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் 300 சதுர மீட்டர் அளவுக்கு மேல் கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் இந்த ஆணையத்தின் அனுமதியில்லாமல் அதைச் செய்ய முடியாது. தமிழ்நாடு அரசின் வனத்துறை, நகர்ப்புறத் திட்டமிடல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஆவணங்களை நியூஸ் லாண்டரி ஆராய்ந்த போது, 1994-ல் இருந்து 2011 வரை 63,380 சதுர மீட்டர் அளவுக்கு கட்டடங்களைக் கட்டியிருக்கிறது ஈஷா.

1,402.62 சதுர மீட்டரில் ஒரு செயற்கை ஏரியையும் உருவாக்கியிருக்கிறது. இவற்றில் எந்தக் கட்டுமானத்திற்கும் ஒப்புதல் இல்லை. 32,855 சதுர மீட்டர் அளவுக்கு கட்டடங்களைக் கட்ட தங்களுக்கு உள்ளூர் பஞ்சாயத்தின் ஒப்புதல் இருப்பதாக வாசுதேவனும் (ஜக்கிதான்) அவரது ஈஷா ஃபவுண்டேஷனும் சொல்கிறார்கள். உண்மையில் Hill Area Conservation Authority-யின் கீழ்வரும் பகுதியில் கட்டிடம் கட்ட ஒப்புதல் அளிக்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது.

எல்லா சட்டவிரோத கட்டிடங்களையும் கட்டி முடித்த பிறகு 2011-ல் Hill Area Conservation Authorityக்கு (HACA) விண்ணப்பித்தார் வாசுதேவன். வனத்துறையில் கிடைத்த ஒரு ஆவணத்தின் படி ஜூலை 2011-ல் HACA-வுக்கு ஒரு விண்ணப்பத்தைப் போட்டார் இந்த நல்ல மனுசன். அதாவது ஏற்கனவே சட்டவிரோதமாக 63,380 சதுர மீட்டருக்குக் கட்டிங்களைக் கட்டிவிட்டோம். அதற்கு ஒப்புதல் கொடுங்கள். மேலும், 28582.52 மீட்டருக்கு கட்டுமானங்களைக் கட்டப் போகிறோம். அதற்கும் ஒப்புதல் கொடுங்கள் என்றது விண்ணப்பம்.

இந்த விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு கோயம்புத்தூரின் வனத்துறை அதிகாரி வி.திருநாவுக்கரசு 2012 பிப்ரவரியில் ஈஷா ஆசிரமத்திற்கு சென்றார். உள்ளே சென்று பார்த்தவர் அசந்துபோனார். சட்டவிரோதமாக ஏகப்பட்ட கட்டிடங்களைக் கட்டி வைத்திருந்தது ஈஷா. 28,582.52 சதுர மீட்டருக்கு புதிதாக அனுமதி கேட்டார்களே? அதிலும் கட்டிடம் கட்டி வைத்திருந்தார்கள்.

இதுபோக, ஆசிரமத்தின் சுற்றுச் சுவரும், பிரதான வாயிலும் வனத்துறையின் நிலத்தில் கட்டப்பட்டிருந்தன என்பதையும் அவர் கண்டறிந்தார். இதுபோக, ஈஷா கட்டிய கட்டிடங்களாலும் அந்த ஆசிரமத்திற்கு பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் வந்து போவதாலும் யானைகளின் நடமாட்டம் பாதிக்கப் பட்டிருந்தது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்திருந்தது.

ஆகவே, இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி மறுத்தார் வி.திருநாவுக்கரசு. தனது விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறிய ஈஷா, தனது விண்ணப்பத்தை அந்த ஆண்டு அக்டோபரில் திரும்பப் பெற்றுக் கொண்டது. 2014 வரை மீண்டும் விண்ணப்பிக்கவில்லை.

அங்கிருந்து திருநாவுக்கரசு வேறு பணிகளுக்குப் போய்விட்டு, 2018-ல் கோயம்புத்தூரின் தலைமை வனக் காப்பாளராகப் பதவியேற்றார். ஆனால், நான்கே நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார்.

(தொடரும் – 1)

குறிப்பு : கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து newslaundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பு. மூன்று பாகங்களாக வாசுதேவனின் சரித்திரத்தை நியஸ் லாண்ட்ரி வெளியிடவிருக்கிறது. பகுதி பகுதியாக அதன் மொழிபெயர்ப்பை தருகிறேன்.

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு !!

சாம் மாநிலம் பிரம்மபுத்திரா நதியின் பள்ளத்தாக்கில், நவ்காங் என்னும் நகரத்தின் அருகில் அமைந்துள்ள அழகிய கிராமமே புலாகுரி. நவ்காங்கிற்கும் அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுஹாத்திக்கும் இடையில் நல்ல நீர்ப்போக்குவரத்து இருந்ததாலும் பல்வேறு பயிர்கள் செழிப்பாக அப்பகுதியில் விளைந்ததாலும் நவ்காங் நகரமானது காலனியாதிக்க காலத்தில் முக்கிய வர்த்தகத் தளமாகவும் வேளாண் உற்பத்திக்கு புகழ்பெற்ற இடமாகவும் இருந்தது. அரிசி, சோளம் மற்றும் பல்வேறு பருப்பு வகைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டு வந்தன.

இந்தியா கும்பனியாட்சியின் பிடியில் இருந்தபோதே (பிரிட்டிஷின் நேரடி ஆட்சியின் கீழ் வராதபோதே) ஆங்கிலேயர்கள் திணித்த வரிச்சுமையாலும் கும்பனியாட்சியின் கொடூரத்தாலும் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வந்தனர்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ்
♦ வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

ஆட்சியாளர்கள் பராமரிக்க வேண்டிய நீர்நிலை மராமத்துப் பணியை கைகழுவிய ஆங்கிலேயர்கள், விவசாயிகளிடமிருந்து வரியைப் பிடுங்குவதில் மட்டுமே மும்மரமாக இருந்தனர். 1852-1853-ஆம் ஆண்டில் அசாமின் நவ்காங் மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ. 1,55,651 வரியாக வசூலிக்கப் பட்டிருக்கிறது என்பதிலிருந்து இதன் கொடூரத்தை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

வரியைப் பிடுங்குவதில் தீவிரம் காட்டிய அரசோ, கொள்ளை நோய்கள், பஞ்சம், வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களால் மக்கள் சாகும் போதும் விளைபொருள்கள் அழியும் போதும் அதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் மக்களைச் சுரண்டுவதில் மட்டுமே குறியாக இருந்தது.

1857-ல் வெடித்த மாபெரும் இந்திய விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கிய பின் – விக்டோரியா மகாராணியின் கீழான – பிரிட்டிஷ் அரசானது, மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியது. இதைச் சமாளிக்க அப்போதைய பிரிட்டிஷ் அரசின் கருவூலத்தின் நிதிச் செயலாளராக இருந்த ‘ஜேம்ஸ் வில்சன்’ என்பவர் சில பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதன்படி இந்திய மக்கள் மீது, குறிப்பாக  விவசாயிகள் மீது மேலும் அதிக வரிச்சுமை திணிக்கப்பட்டது. இதனால், நாடெங்கும் விவசாயிகளிடையே பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிரான கொந்தளிப்பான சூழல் அப்போது நிலவியது.

அசாமிலும் விவசாயிகள் மீது நிலவரி மற்றும் வருமான வரியையும் அதிகரித்தது பிரிட்டிஷ் அரசு. காடுகளில் எடுக்கக் கூடிய மூங்கில், கரும்பு, மரங்களுக்கும் வரி விதிக்கப்பட்டது.

ஏற்கனவே, காலனியாட்சியில் விவசாயிகளின் துணைத்தொழில் என்று சொல்லப்படும்  நெசவுத் தொழிலும் அழிக்கப்பட்டதால், வரியைக் கட்ட முடியாமல் கடன்பட்டே தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர் அசாம் விவசாயிகள். ஒரு விவசாயி “கடனிலேயே பிறந்து, கடனிலேயே வாழ்ந்து கடனிலேயே மடிகிறான்” என்ற அளவுக்கு கடனில் மூழ்கியிருந்தனர். இதற்கு மாறாக, அவர்களின் விளைபொருள்களுக்கோ அடிமாட்டு விலைதான் சந்தையில் கிடைத்தது.

நவ்காங்கில் ஒரு கிலோ அரிசியை வெறும் நான்கு முதல் ஐந்து பைசாவுக்கே விவசாயிகள் விற்றனர். அதிலும், அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் ஐந்தில் ஒரு பங்கு தொகையைத் தான் விவசாய விளைபொருள்களுக்குக் கொடுத்தனர். இவ்வாறாக ஒருபுறம் வட்டி லேவாதேவிக் கும்பலாலும் மறுபுறம் பிரிட்டிஷ் அரசாலும் ஒட்டச் சுரண்டப்பட்டனர். இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு மேலும் வரிச் சுமையைத் திணித்தது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்தது.

அசாம் மாநிலத்தின் முக்கிய விளைபொருட்களான வெற்றிலைக்கும் பாக்குக்கும் வரிபோட முற்பட்டது பிரிட்டிஷ் அரசு.

அசாமில் தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்காக “தரிசு நிலக் கொள்கை” (waste land policy) என்ற ஒன்றைக் கொண்டு வந்து விவசாயிகளின் பசுமையான விளைநிலங்களையும் அதன் பெயரில் அபகரித்தது பிரிட்டிஷ் அரசு. இதனால், அசாம் விவசாயிகள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனர்.

குறிப்பாக அசாமின் விவசாயிகள் மீது இத்தகைய கொடூரமான வரிகள் விதிக்கப்பட்டதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உள்ளது. இத்தேயிலைத் தோட்டங்களில் அப்போது மிகப்பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை நிலவியது. வெளியூரிலிருந்து வேலைக்கு வந்தவர்களோ அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இறந்து வந்தனர். உள்ளூரிலேயே குறைந்த கூலிக்கு அடிமைகளாக ஆட்கள் வேண்டும் என்ற தேவையும் பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. எனவே, வரிகளை உயர்த்துவதன் மூலம் விவசாயிகள் நசிந்து கூலிகளாக வருவார்கள் என்றும் கணக்குப் போட்டது பிரிட்டிஷ் அரசு.

அனைத்து வழிகளிலும் ஒட்டச் சுரண்டப்பட்ட விவசாயிகள் வேறு வழியின்றி, தங்கள் வாழ்க்கைத் தேவைக்கான இறுதி வழியாக அபினிப் பயிரிடுவதை மேற்கொண்டனர். ஆனால், 1861-ல் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த  அபினிக் கொள்கையின் படி, விவசாயிகள் தாமாக அபினியை உற்பத்தி செய்யக் கூடாது என்றும் அரசுதான் அபினியை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் என்றும் கூறியது. இப்படி அபினி உற்பத்தி செய்ததன் மூலம் ஆங்கிலேயர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது என்பது தனிக்கதை.

இவை அனைத்தாலும் பிரிட்டிஷ் அரசுக்கெதிரான அசாமியர்கள் நெஞ்சில் கனன்ற தீ 1861-இல் நவ்காங்கிலும், 1868-1869-இல் காம்ரப்பிலும் (Kamrup), 1893-1894-இல் தர்ரங்கிலும் (Darrang) விவசாயிகளின் கிளர்ச்சிகளாக வெடித்தது.

செப்டம்பர் 17, 1861 அன்று பல்வேறு பகுதிகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புலாகுரிக்கு அருகில் உள்ள நாம்கர் என்னும் கோயிலின் அருகே கூடினர். நிலம், வீடு, தோட்டம், விளைபொருட்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட கொடிய வரிகளை எதிர்த்தும், தங்களது கடைசி போக்கிடமாக இருந்த அபினி சாகுபடியைத் தடை செய்ததை எதிர்த்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் அனைத்து வாழ்வாதார அடிப்படைகளையும் பறித்துவிட்டு, அவர்களை அபினி சாகுபடியை நோக்கித் தள்ளிய பிரிட்டிஷ் அரசு, விவசாயிகளின் போராட்டத்தை அபினி உண்பவர்களின் போராட்டம் என கொச்சைப் படுத்தியது.

இக்கொடிய வரிவிதிப்பு முறைகளை இரத்து செய்யுமாறு கோரி மனு அளிக்க, அங்கிருந்து நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். ஆனால், நீதிமன்றமோ போராடுபவர்களை சிறையிலடைத்தும் தண்டம் விதித்தும் அவமதித்தது. இதனால், விவசாயிகள் மேலும் ஆத்திரமடைந்தனர். போர்க்குணம் கொண்ட விவசாயிகள் இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென எண்ணினர்.

அக்டோபர் மாதம் விவசாயிகள் ஒன்றுக்கூடி கூட்டம் நடத்தி, பிரிட்டிஷ் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என முடிவெடுத்தனர். காலனியாட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் விவசாயிகளிடமிருந்துதான் தொடங்கியதே அன்று காந்தியிடமிருந்து அல்ல. தொலைதூர கிராமத்திலுள்ள விவசாயிகளும் பங்குபெற வேண்டும் என்பதற்காக இக்கூட்டம் ஐந்து நாட்களாக நடத்தப்பட்டது. இது ராய்ஜ் மெல் (மக்கள் மன்றம்) என்று அழைக்கப்பட்டது.

ராகா, ஜாகி, காய்கர் மெளசா, பிரபுஜியா, சப்பாரி, காம்பூர், ஜமுனாமுக் (Raha, Jagi, Kahighar mouza, Barpujia, Chapari, Kampur, Jamunamukh) ஆகிய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இதில் பங்கெடுத்தனர். அக்டோபர் 15-ம் தேதியன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடினர். அவர்களில் பெரும்பாலோர் (கம்பு, தடிகள் உள்ளிட்ட) ஆயுதந்தாங்கியிருந்தனர்.

அக்டோபர் 17 அன்று, பல்வேறு கிராமங்களிலிருந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடினர். இக்கூட்டத்தைக் கலைக்க பிரிட்டிஷ் அரசு ஒரு படைப்பிரிவை அனுப்பியது. ஆனால், ஆங்கிலேயர்களின் அப்படை விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்டது.

பல உள்ளூர் மன்னர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்தக் கிளர்ச்சியில் பங்கெடுத்தனர். இப்படி மக்கள் ஒன்றிணைவதைக் கண்ட போலிசு கூட்டத்தைக் கலைக்க அதன் தலைவர்களில் சிலரை அதே நாளில் கைது செய்தது. மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் அங்கு சென்ற சிங்கர் என்னும் ஆங்கிலேய அதிகாரியிடம் போராடும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆனால், அந்த அதிகாரியோ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டான். விவசாயிகளோ மிரட்டலுக்கு அடிபணியாமல் எதிர்த்து நின்றனர். சிங்கர் விவசாயிகளிடமிருந்து கம்பு, தடிகளைப் பறிமுதல் செய்ய முயற்சித்தபோது ஏற்பட்ட மோதலில் அந்த அதிகாரி கொல்லப்பட்டு கலாங் என்ற ஆற்றில் தூக்கியெறியப்பட்டான். இதைக் கண்டு பீதியடைந்த பிரிட்டிஷ் போலிசு அங்கிருந்து தப்பியோடியது.

சிங்கர் கொல்லப்பட்ட செய்தி நவ்காங் நகரெங்கும் பரவியது. சிங்கர் கொல்லப்பட்டதைச் சாக்கிட்டு, கிளர்ச்சியை நசுக்க மாவட்ட நீதிமன்றம், ஹாலந்தர் பரோவ் ஆங்கிலேய அதிகாரி தலைமையில் படையை அனுப்புகிறது. நகருக்குள் நுழைந்த படைகள் போராடும் விவசாயிகளை ஈவிரக்கமின்றிச் சுட்டதில் பலர் உயிர் துறக்கிறார்கள், சிலர் படுகாயமடைகிறார்கள். இதைக்கண்டு விவசாயிகள் அஞ்சவோ பின்வாங்கவோ இல்லை.

ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளை எதிர்த்து தங்களின் வில், அம்பு, தடிகளுடன் வீரப்போர் புரிகிறார்கள் விவசாயிகள். எனினும், ஆங்கிலேய காலனியாதிக்க அரசை எதிர்த்து விவசாயிகள் நடத்திய இந்த மாபெரும் கிளர்ச்சி, இறுதியாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

அக்டோபர் 23-ம் தேதி 100 சிப்பாய்களுடன் புலாகுரிக்கு வந்த அசாம் ஆணையர் ஜெனரல் ஹென்றி ஹாப்கின்சன் ரகா, புலாகுரி பிராந்தியத்தில் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். புலாகுரி, நவ்காங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுக்க உள்ள விவசாயிகளைத் தேடித் தேடிக் கைது செய்து, உணவு – தண்ணீர் வழங்காமல் அவர்களைக் கொடிய சிறையில் அடைத்தான். அவன் செய்த கொடுமைகளால் மக்கள் படும் துயரம் கண்டு கலக்கமடைந்த எழுச்சியின் தலைவர்கள் ஆங்கிலேய அரசின் முன் சரணடைந்தனர்.

லெப்டினன்ட் சிங்கரைக் கொன்றதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். லாலங் ராஜா என்ற மன்னனின் மகன்கள் உட்பட 41 பேர் சிங்கரைக் கொன்றதற்குக் காரணம் என நவ்காங் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். மற்ற தலைவர்கள் அந்தமான் தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை மோடியும் அவரது பரிவாரத்தைச் சேர்ந்தவர்களும் “பஞ்சாப், ஹரியான விவசாயிகள்  மட்டும்தான் போராடுகிறார்கள்” என்று எப்படிக் கொச்சைப் படுத்தியதோ அப்படித்தான் அன்று பிரிட்டிஷ் அரசும் செய்தது.  நவ்காங் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் சேர்ந்து நடத்திய இப்போராட்டத்தை, “சில பழங்குடி இனத்தவர்கள் மட்டும் நடத்தும் போராட்டம்” என்றும் “அபினி உட்கொள்பவர்களின் கலகம்” என்றும் கொச்சைப் படுத்தியது.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 – 1951
♦ நெவாலி : மராட்டியத்தில் மீண்டும் ஒரு விவசாயிகள் எழுச்சி !

ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களையும் துருப்புகளையும் எதிர்த்து வில், அம்புடன் நடத்திய இக்கலகம் அப்போது தோற்கடிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், அசாமில் காலனியாட்சிக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த விவசாயிகளின் கிளர்ச்சிக்கு இது உந்து சக்தியாகத் திகழ்ந்தது.

நாம் வரலாற்றுப் புத்தகங்களில் கேள்விப்பட்டிராத இக்கலகம் நடந்து 160 ஆண்டுகள் ஆகின்றன. இன்று சிங்கர், ஹாலந்தர் பரோவ் இடத்தில் மோடி-அமித்ஷா கும்பலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தில் அமெரிக்க மேல்நிலை வல்லரசும் நிற்கின்றன. டெல்லியை முற்றுகையிட்டு நிற்கிறார்கள் புலாகுரி தியாகிகளின் வாரிசுகள். போர்  இன்னும் முடியவில்லை !

தீரன்
செய்தி ஆதாரங்கள் : அசாம் விவசாயிகள் போராட்டம், புலாகுரி உழவர் எழுச்சி

உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்

PP Letter head

24.05.2021

பத்திரிகைச் செய்தி

உசிலம்பட்டி தோழர் திசை கர்ணன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !

திசை கர்ணன் என்றொரு தோழர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பொறுப்பு மேட்டுப்பட்டி ஊரில் நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் திசை கர்ணன். அவரது தந்தை ஊராட்சித் தலைவராக (பிரஸிடெண்ட்) இருந்தவர். ஆறு அண்ணன் தம்பிகள் என செல்வாக்காக வாழ்ந்தவர் திசை கர்ணன்.

1980 வாக்கில் அமைப்பிற்கு அறிமுகம் ஆகிறார். நக்சல்பாரி புரட்சிகர அரசியலை ஏற்றுக் கொண்டு, உழைக்கும் மக்களுக்காக செயல்படத் துவங்கினார். அதற்கு இடையூறாக இருந்த தனது அரசு வேலையை (கூட்டுறவு சொசைட்டி எழுத்தர்) இராஜினாமா செய்தார்.  மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகள் செய்வதற்குத்  தகுந்தவாறு சிறு விவசாயியாக தனது குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

திசை கர்ணனைப் போன்ற குடும்பப் பின்னணி கொண்ட மற்றவர்கள் எல்லாம், வட்டிக்கு விட்டு பணம் சேர்ப்பது, அந்தஸ்தை உயர்த்துவது என்பதையே வாழ்வின் லட்சியமாக கொண்டு இருந்தபோது, திசை கர்ணனோ மக்கள் விடுதலைக்காக உழைத்தார்.

உசிலை வட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பை முதன் முதலில் கட்டி எழுப்ப முன்னணியாக நின்றவர் திசை கர்ணன். கிராமம் கிராமமாக மக்களிடம் புரட்சிகர அரசியலை கொண்டு சென்றார். குறவன் குறத்தி ஆட்டம், நாடகம், பாடல்கள், உரைகள் என எல்லா வடிவங்களிலும் மக்களிடம் சென்றார் திசை கர்ணன்.

ஆதிக்க சாதிக் குடும்பத்தில் பிறந்திருந்தபோதும், சாதி உணர்வு கிஞ்சித்தும் இல்லாதவர் திசை கர்ணன். ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக செயல்பட்ட ஆதிக்கச் சாதியினருக்கு எதிராக கடுமையாகப் போராடியவர் திசை கர்ணன்.

தன்னுடன் சில இளம் தோழர்களை இணைத்துக் கொண்டு மிதிவண்டியில் அடுப்பு பாத்திரங்களை கட்டிக் கொண்டு, கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்தபடி மேற்கே கம்பம், கூடலூர் வரை, வடக்கில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி வரை என பிரச்சாரப் பயணங்கள் மேற்கொண்டார். தெற்கே விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, குமரி வரை ரயிலில் சென்று மக்கள் தரும் அரிசி பருப்பை வாங்கி ஆங்காங்கே பொங்கி உணவு உண்டு மக்களை அரசியல் படுத்தப் பாடுபட்டார் திசை கர்ணன்.

உரக் கடை முதலாளிகள் கள்ளச் சந்தையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தனர். உரம் கிடைக்காமல் தவித்த விவசாயிகளைத் திரட்டிப் போராடி யூரியா பதுக்கல் குடோன்களை திறந்து மக்களுக்கு வினியோகம் செய்தார் திசை கர்ணன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தரும் அரசின் திட்டத்தை உடன் அமல்படுத்தக் கோரியும், நிலம் கையகப்படுத்தி வீடுகளைக் கட்டக் கோரியும் மக்களை திரட்டி சாலை மறியல் செய்து தனக்கு வழக்கும் சிறையும் கிடைத்தாலும் மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழி செய்தார் திசை கர்ணன். ரேஷன் கார்ட் பெற்றுக் கொடுக்க ஓட்டுப் பொறுக்கிகள் வசூல் வேட்டையில் இறங்கியபோது, வெறும் இரண்டு ரூபாய் செலவில் 450-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகளை மக்களுக்கு பெற்றுத் தந்தார்.

பார்ப்பன மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்து மதவெறி ஆட்டம் போட்ட போது, “அனைவரும் இந்து என்றால், கோவில் கருவறையில் அனைவரையும் அனுமதிக்காதது ஏன்?” என்று முழங்கி சிறீரங்கம் கோவில் கருவறைக்குள் நுழைந்து ரங்கநாதனை உலுக்கினார் திசை கர்ணன்.

நாட்டை மீண்டும் காலனியாக்கும் காட் ஒப்பந்ததிற்கு எதிராக ரயில் மறியல் – சிறை !
விளை நிலங்களை பாலையாக்கும் இறால் பண்ணை அழிப்புப் போராட்டம் – சிறை !
திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம் – சிறை !

உள்ளூர் சாதி ஆதிக்க வெறியனுக்கு எதிரான போராட்டத்தின் போக்கில் அந்த சாதிவெறியன் கொலை செய்யப்பட்டான். அந்த கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக திசை கர்ணன் சேர்க்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஆயுள் சிறைத் தண்டனை பெற்றார்.

இப்படி எண்ணற்ற போராட்டங்கள், வழக்குகள், சிறைகள் ! காணும் போதெல்லாம் கபடமற்ற சிரிப்பு. “தோழர்..” என்று வாஞ்சையோடு அழைக்கும் பாங்கு! இளம் தோழர்களுக்கு அரசியலை கற்றுக் கொடுப்பதில் திசை கர்ணனுக்கு இருந்த உறுதி ! என எதை சொல்வது? எதை விடுவது ?

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நக்சல்பாரி புரட்சிகர அரசியலையும், புரட்சிகர அமைப்பையும், அமைப்பு முறைகளையும் உயர்த்திப் பிடித்தவர் தோழர் திசை கர்ணன் !

ஆயுள் தண்டனையில் பதினைந்து ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் விடுதலை ஆன திசை கர்ணன், தன் மரணத்திற்கு முன்பு வரை மக்கள் அதிகாரம் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களின் அதிகாரத்தை உருவாக்கப் போராடினார் திசை கர்ணன்.

துரோகிகள், சதிகாரர்களின் சீர்குலைவு நடவடிக்கைகளைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு மக்கள் விடுதலைக்காக உழைத்தார். கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலின் கேடு கெட்ட நிர்வாகத்தால் உருவான இரண்டாம் அலை கொரோனா வைரஸ், திசை கர்ணனின் வாழ்வைப் பறித்துவிட்டது.

மரணத்திற்கு சிறிது நேரம் முன்பு கூட தன்னை சந்திக்க வந்த தோழர்களிடம் அரசியல் பேசி உற்சாகப்படுத்தினார் திசை கர்ணன். திசை கர்ணன் வீட்டின் சுவற்றில் இன்றும் தொங்கிய படி வழி காட்டிக் கொண்டிருக்கிறது அவர் விட்டுச் சென்ற வாசகம்.

உடல் நோகாமல்
சாகாமல்
வாராது மாற்றம் !
இது
போராட்டக் காலம் !
புரட்சி வெற்றி கொள்ளும் !

தோழர் திசை கர்ணன் காட்டிய திசையில் பயணிப்போம் !
தோழர் திசை கர்ணனாய் வாழ முயற்சிப்போம் !

தன் வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்த தோழர் திசை கர்ணனுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக் குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி

திருவாரூர்

டந்த 2018 மே 22 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடிய மக்களை ஈவிரக்கமின்றி வேதாந்த நிறுவனமும், அரசும் கூட்டு சேர்ந்து சுட்டுக் கொன்றது. இந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகம் முழுவது மிகப்பெரிய போராட்ட அலையை உருவாக்கியது. அதன் பிறகு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் வீரத்தின் விளைவாக தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனா கால ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பயன்படுத்தி புறவாசல் வழியாக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், 2021, மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்களால் அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பல்வேறு முழக்கங்கள் மக்களை அதிகாரம் அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.

000

திருவாரூர் :

மே-22 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக மே 22,2021 இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்டம் குளிக்கரை பகுதியில் தூத்துக்குடி மக்களின் தியாகத்தை எடுத்து சொல்லும் விதமாக

போலீசு, வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு!

என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் மற்றும் பகுதி மக்கள் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்,
திருவாரூர்.
8220716242.

000

தருமபுரி

மே – 22 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் இன்று பென்னாகரம் அண்ணாநகர் பகுதியில் தோழர்.சிவா பகுதி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைப்பெற்றது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். மக்களை சுட்டு கொன்ற போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை திறந்த சதியை அம்பலபடுத்தி முழுக்கம் எழுப்பபட்டது.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
9790138614.
000

கோவை

மே – 22 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கோவை பகுதியில் தோழர் ராஜன் தலைமையில் நடைப்பெற்றது.

தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். மக்களை சுட்டு கொன்ற போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை திறந்த சதியை அம்பலபடுத்தி முழுக்கம் எழுப்பபட்டது.

This slideshow requires JavaScript.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை,
9488902202.

000

சென்னை

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மே 22 இன்று காலையில் சேத்துப்பட்டு பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தபட்டது மற்றும் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தபட்டது.

This slideshow requires JavaScript.

தகவல் :
சேத்துப்பட்டு பகுதி,
மக்கள் அதிகாரம்.

000

புதுச்சேரி

கடலூர் மண்டலம் புதுச்சேரி, மதகடிபட்டு ரவுண்டானா அருகில் ஸ்டெர்லைட் எதிப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும்!
பொது மக்களை கொலை செய்த போலிசு, வருவாய் துறை அதிகரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கமிடப்பட்டது.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

000

விருதாச்சலம்

கடலூர் மண்டலம் விருத்தாசலம், விஜயமாநகரம் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் அசோக் தலைமையில் ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்டெர்லைட்டை அகற்று சிறப்பு சட்டம் இயற்றுஎன்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருதாச்சம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் மூன்றாமாண்டு நினைவஞ்சலி . சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று. பொதுமக்களை கொலை செய்த போலீஸ் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு .

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.

000

உசிலை

மே 22 ஸ்டெர்லைட் போராட்ட தியாகி நாள் உசிலம்பட்டி ஆரியபட்டியில் குருசாமி தலமையில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது கொடியேற்றி மாலை அனிவித்து முழக்கம்போடப்பட்டு முடிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உசிலை.

000

மதுரை 

This slideshow requires JavaScript.

000

உடுமலை

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் மூன்றாமாண்டு நினைவஞ்சலி . சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று. பொதுமக்களை கொலை செய்த போலீஸ் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு .

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்
உடுமலை

000

போடி
மக்கள் அதிகாரம் மதுரை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கும் போடி பகுதியில் தோழர் கணேசன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு நினைவு கூறும் வகையில் “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம்!” என்னும் முழக்கத்தை முன்வைத்து ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

This slideshow requires JavaScript.

தகவல்:
மக்கள் அதிகாரம்
போடி.
000
உளுந்தூர்பேட்டை :
கடலூர் மண்டலம் உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தில்  தோழர் வினாயகம் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற. பொதுமக்களை கொலை செய்த போலீஸ் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தகவல் :

மக்கள் அதிகாரம்
உளுந்தூர்பேட்டை
000
காஞ்சிபுரம்

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

மே 22, 2021 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி


மக்கள் அதிகாரம்

மாதவிடாயும்  சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா

என் சக தோழிகளுக்கும், தாய்மார்களுக்கும் ஒவ்வொரு முறையும் மாதவிடாய் உங்கள் வீட்டின் கதவுகளை தட்டும்போது உங்கள் கையில் இருக்கும் நாப்கின் அவ்வளவு எளிதாக உங்கள் கையில் வந்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். நமது முன்னோர்கள், தங்களது மாதவிடாய் தருணங்களை மிகக் கடினமானதாகவே கடக்க வேண்டியிருந்தது.

மாதவிடாயின் கடினமான தருணங்களைக் கடக்க மரத்தூள்(தவிடு), புல், மணல், சாம்பல், கிழிந்த துணி என பலவற்றையும் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் தான் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, சானிடரி நாப்கினை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

பண்டைய காலத்தில் பெண்களின் மாதவிடாய் பயன்பாட்டிற்கு கந்தலும் கிழசலும் (துணிகள்)  பயன்படுத்தப்பட்டது. மாதவிடாயின் போது கந்தல் துணி பயன்படுத்தப்பட்டதற்கான ஆவணப்படுத்தப்பட்ட முதல் சில சான்றுகளில் ஒன்றாக, கி.பி 4 ஆம் நூற்றாண்டில், பிரபல கிரேக்க சிந்தனையாளர் ஹைபதியா, ஒரு ஆண் அபிமானியை தடுத்து நிறுத்த  ஒரு பயன்படுத்தப்பட்ட, மாதவிடாய் இரத்தம் தோய்ந்த கந்தல் துணியை வீசினார் என்பது வரலாற்றில் பதியப்பட்டுள்ள செய்தி.

பல்லாண்டுகளுக்கு முன்னர்  சீனாவில், மணல் நிரப்பப்பட்ட துணியை சானிட்டரி பேடாகப் பெண்கள் பயன்படுத்தினர். துணி ஈரமாக இருக்கும்போது, அதில் இருக்கும் மணலினை அகற்றிவிட்டு, பின்னர் அந்த துணியை துவைத்து, அடுத்த முறை பயன்பாட்டிற்காக அதே துணியை பயன்படுத்தினார்கள்.

பண்டைய எகிப்தில் தண்ணீரில் ஊறவைத்த ‘பாப்பிரஸ்’ (ஒரு வகை கோரை புல்லால் ஆன தாள்) பயன்படுத்தப்பட்டது. பின்னர் பாசி மாதவிடாக்கான துணிக்குள் பயன்படுத்தப்பட்டது! பாசியை கொண்டுவந்து , அவற்றை ஒரு துணியுள்  மடித்து, பின்னர் தங்கள் உள்ளாடைகளுக்குள் அந்தத் துணியை பெண்கள் வைத்திருப்பர். .

ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும், பெண்கள் புற்களை பேடுகளாகப் பயன்படுத்தினர். ஆனால் அது உதிரக் கசிவை தடுப்பதற்கான பாதுகாப்பான வழிமுறையல்ல. ஏனெனில் வறண்ட பகுதிகளில் கடினமானதாக புல் வளர்வதால்  சருமத்திற்கு எளிதில் காயங்களையும், தீங்கையும் விளைவித்தது.

ரோமானிய பெண்கள் ஆடுகளின் கம்பளியை உருட்டி பயன்படுத்தினார்கள். கம்பளி மிகவும் கனமானதாக இருப்பதோடு நாற்றம் வீசக்கூடியதாக இருக்கும். இது அந்தப் பெண்களுக்கு நிச்சயமாக வேதனைக்குறியதே.

கிரேக்கர்கள் சிறிய மரத் துண்டுகளை பஞ்சு கொண்டு கட்டி பின்னர் அதை தங்கள் உடலில் செருகினர். உண்மையில் மரம் இரத்தத்தை உறிஞ்சவில்லை, ஆனால் பஞ்சு செய்தது. அதில் இருக்கும் மரத் துண்டுகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தின.

குளிர்ந்த காலநிலையில் வாழ்ந்த பெண்கள் அந்த நாட்களில் விலங்குகளின் ரோமங்களை நம்பியிருந்தனர். குளிர்ந்த பகுதிகள் பனியால் சபிக்கப்படுவதால், உயிர்வாழ்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே இருந்தது. ஆகவே, பெண்கள் தங்கள் உதிரப் போக்கை தடுக்க, கொல்லப்பட்ட விலங்குகளின் ரோமங்களைப் பயன்படுத்தினர்.

இவை அனைத்துமே பெண்களுக்கு சுகாதார சிக்கல்களையும், பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துபவையாகவே இருந்தன. அவை உதிரப் போக்கை ஓரளவிற்குத் தடுத்தாலும். கடுமையான அசௌகரியங்களோடு தான் அவர்களது மாதவிடாய் நாட்கள் கடந்தன.

வர்க்க சமூகத்தில் சுரண்டப்படும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் எதையும் பயன்படுத்தவில்லை. உதிரப் போக்கை மறைக்கவும் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு அதற்கான வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர்களுக்கு மிக மோசமான சூழலே  நிலவியது.

1800-களில் பருத்தி மற்றும் கம்பளி பெருமளவில் பெண்கள் பயன்பாட்டிற்கு வந்ததன் விளைவாக, அது குறித்து சிந்திக்க அவர்களைத் தூண்டியது. 1850-களின் முற்பகுதியில் மக்கள் வணிக ரீதியாக பல்வேறு வகையான மாதவிடாய் தயாரிப்புகளை பரிசோதிக்கத் தொடங்கினர். இரத்த கசிவை உறிஞ்ச உள்ளாடைகளுக்கும் வெளிப்புற ஆடைக்கும் இடையில் ஒரு மெல்லிய அடுக்கு ரப்பரை வைக்கும் யோசனை எழுந்தது.

முதலாம் உலகப்போரில் செவிலியர்கள் பாண்டேஜ்களை கண்டுபிடித்து போரினால் ஏற்படும் காயங்களில் உண்டாகும்  ரத்த போக்கை நிறுத்த பாண்டேஜ்களை பயன்படுத்தினர். இது இரத்தத்தை உறிஞ்சுவதால், செவிலியர்கள் தங்கள் மாதவிடாய் காலகட்டத்தின் உதிரப் போக்கை உறிஞ்சுவதற்கு ஏன் இதைப் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தார்கள். இதுவே நாம் இன்று பயன்படுத்தும் சானிடரி நப்கின்கான தொடக்கம்.

நாம் தற்போது பயன்படுத்தும் சானிட்டரி பெல்ட்டுகளுக்கு முன்னோடியாக எலாஸ்டிக் பெல்ட்டில் பஞ்சு அடைத்து இருபக்கமும் இறுக்கி பிடிக்க ஒரு கிளிப்பை அக்காலகட்டங்களில் பயன்படுத்தினர். இந்த வகையான சானிடரி பேடனது 1800-களில் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 1970-ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது . இந்த சானிடரி பெல்டை கண்டுபிடித்தவர் ஒரு பெண் என்பது கூடுதல் சிறப்பு. அவரது பெயர் மேரி பீட்டிரிஸ் டேவிட்சன்.

இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண். சிறுவயது முதல் விளையாட்டாக இவர் கண்டுபிடித்தவை பல. இன்று நாம் எதார்த்தமாக கதவுகளில் சத்தம் வராமல் இருக்க, எண்ணெய் விடும் நடைமுறையும் இவரது கண்டுபிடிப்புகளில் ஒன்று. மேரி பீட்டிரிஸ் பெண்களின் மேம்பாட்டிற்காக  அவர்களின்  பிரச்சனையை கூர்ந்து ஆய்ந்து கண்டுபிடித்த கண்டுபிடிப்பாக சானிடரி பெல்ட் இருந்தது.

சானிடரி பெல்ட் மற்றும்  டிஷ்யூ ஹோல்டருக்கான காப்புரிமையை முதன் முதலில் பெற்றவரும் இவரே. பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட ஈரப்பதம் இல்லாத ஒரு துணி பையை சேர்த்து ஒரு பை போன்ற வடிவத்தில் உருவாக்கினார்.  ஆனால் சானிடரி நாப்கினில் பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு வரலாறு கொடுத்த இடம் மேரி பீட்டிரிஸ்சுக்கு ஏன் கொடுக்கவில்லை?

மேரி முதலில் சானிடரி பெல்ட்க்கு காப்புரிமை பெற்றபோது, ஒரு நிறுவனம் அவருடன் பேச ஒரு பிரதிநிதியை அனுப்பியது. அவர் கருப்பினத்தவர் என்பது தெரிந்ததும், அதை புறக்கணித்தது. ஆனால் மேரி துவளவில்லை. அவரின் கண்டுபிடிப்பு அவருக்கு பொருள் ஈட்டிதரவில்லை என்றாலும், யாரும் காப்புரிமையை எடுத்து நாப்கின்  உற்பத்தியை தொடங்குவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே இதை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர். முதன் முதலில் ஐந்து கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரி தாக்கல் செய்த கறுப்பின பெண்ணும் இவரே.

மேரி பீட்ரைஸ் டேவிட்சன் முதல் தலைமுறை பயன்படுத்தும் இந்த சானிட்டரி பெல்ட்டை  கண்டுபிடித்தது பெண்களின் தேவையில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இந்த பெல்ட்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை உலகளவில் பயன்பாட்டில் இருந்தாலும் அது ஏழை எளியவர்களின் கைக்கு கிடைக்காது போனது.

“சேனிட்டரி பேட்”களை வணிகமயமாக்குவதற்கான முயற்சிகளை 1888-ம் ஆண்டில் சவுதல் பேட்(Southall Pad) என்ற தயாரிப்பு  நிறுவனம் மேற்கொண்டது. இதேபோல், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 1890-களில் லிஸ்டரின் டவல் (Lister’s Towel): லேடிஸ் சானிட்டரி டவல்ஸ் என்ற ஒன்றை உருவாக்கியது. இந்நிறுவனங்கள் மேற்குலக நாடுகளை மட்டுமே கவனம் செலுத்தினர். இந்தியா போன்ற கீழை நாடுகளுக்கு தாமதமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்கால சானிட்டரி பேட்களுக்கு மிக நெருக்கமான முன்மாதிரி 1921-ம் ஆண்டில் காட்-டெக்ஸ் பேடு அமெரிக்க சந்தைகளில் நுழைந்தது.  முதலாம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்குப் பயன்படுத்தப்படும் பருத்தி-அக்ரிலிக் கலவையுடன் உறிஞ்சக்கூடிய கட்டுகள், அவர்களின் மாதவிடாய் ஓட்டத்தை சமாளிக்க உதவும் என்பதை செவிலியர்கள் உணர்ந்தபோது அதே உபகரணம் பின்னர், காட்-டெக்ஸ் (Cotton-Texture) – (COT-TEX) என அறிமுகப்படுத்தப்பட்டது,

நீண்ட காலமாக, பேடுகள் சில்லறை விற்பனை என்றாலும் அது ஒரு  உயர் வர்க்க பெண்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஏனென்றால் மற்றவர்கள் அவற்றை வாங்க முடியாத நிலை. காரணம் அதன் விலை அதிகமாக இருந்தது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் நிலை  இப்படித்தான் இருந்தது.

இந்தியாவிலும் இன்றளவும் இதே நிலைமை தான்.  இந்தியாவில், 12  சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஏ.சி. நீல்சனின் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இன்றும் மணல் மற்றும் இலைகள் போன்ற பாதுகாப்பற்ற பொருட்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை இந்தியாவில் இன்றும்  உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, அமிர்தசரஸில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மணல் நிரப்பப்பட்ட சாக்ஸை பேட்களாகப் பயன்படுத்துகின்றனர் என்பதும் இது பெரும்பாலும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற மருத்துவ பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் தெரியவருகிறது.

படிக்க :
♦ ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !
♦ பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா

இன்றும் இந்திய குடும்பங்களில்  மாதவிடாய்  பேசுபொருளாக இருப்பது இல்லை. அது எதோ தீட்டாக பார்ப்பது அல்லது பெண்களின் பிரச்சினை என்று மட்டுமே அணுகும் போக்கு தான் நிலவுகிறது. நவ நாகரீகப் பெண்ணாக இருந்தாலும் நாம் பயன்படுத்தும்  நாப்கின், கருப்பு பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டுதானே கடைகளில் தரப்படுகிறது ?

அடுத்த முறை கடைக்கு செல்லும் போது கருப்பு பிளாஸ்டிக் கவர் இல்லாமல் வாங்குங்கள். அது மறைக்கும் பொருளும் அல்ல; மறைக்க வேண்டிய தேவையுமில்லை.

சிந்துஜா 

சமூக ஆர்வலர்.

கொரோனா : தடுப்பூசி கொள்கையின் அரசியல் பொருளாதாரம்

டுப்பூசிக் கொள்கையின் சாரம் என்பதுவியாபார ஆபத்துகளை சமூகமயமாக்கு, லாபங்களை தனியார்மயமாக்குஎன்பதுதான். பெரிய மருந்து நிறுவனங்கள் எப்போதும் சொல்வது, “நாங்கள் பல கோடிக்கணக்கான பணத்தை ஆராய்ச்சிகளுக்கு செலவளித்திருக்கிறோம், அதனால் காப்புரிமையை நீக்குவது எதிர்கால ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக அமையும்என்பதுதான்.

பெருந்தொற்று போன்ற பொது சுகாதாரம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்படும் போது, பெரிய மருந்து நிறுவனங்கள் சந்தையில் லாபத்திற்கான வாய்ப்புகள் இருக்குபோது மட்டும்தான் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மருந்து கண்டுபிடிப்பதற்கான செலவீனங்களையும், சந்தையில் ஏற்படும் நஷ்டத்தையும் ஈடுசெய்யும் வகையில் இவர்களுக்கு மக்களின் வரிப்பணம் மானியங்களாக வழக்கப்படும்.

படிக்க :
♦ கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”

ஆனால், அந்த மருந்து விற்பனை மூலம் கிடைக்கும் கொள்ளை லாபங்கள் இந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கும். இதைத்தான், “வியாபார ஆபத்துகளை சமூகமயமாக்குவது, லாபங்களை தனியார்மயமாக்குவதுஎன்று சொல்கிறோம்.

Moderna நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து இரண்டு பில்லியன் டாலர்கள் மானியம் பெற்றிருக்கிறது. BioNtech நிறுவனம் ஜெர்மனி அரசாங்கத்திடமிருந்து அரை பில்லியன் யூரோ பெற்றிருக்கிறது. Oxford நிறுவனம் இங்லாந்து அரசாங்கத்திடமிருந்து உதவி பெற்றிருக்கிறது. தகிர் அமின் 2018ஆம் ஆண்டிலே சுட்டிக்காட்டியது போல், “புறக்கணிக்கப்பட்ட நோய்கள் (Neglected Diseases) பற்றிய உலகளவிலான அடிப்படை ஆராய்ச்சிகளுக்கும், மருந்து கண்டுபிடிப்புக்கும் செலவிடப்பட்டது வெறும் நான்கு பில்லியன் டாலர்கள்தான். இந்தத் தொகையில் 17 சதவீதம். அதாவது வெறும் 650 மில்லியன் மட்டுமே தனியார் மருந்து நிறுவனங்களிடம் இருந்து வந்திருக்கிறது. இது அவர்களின் வருவாய் கடலில் ஒரு துளி மட்டுமே.

உலக வர்த்தகக் கழகம், இந்த மருந்து நிறுவனங்களுக்கு நிறைய தள்ளுபடிகள் கொடுத்திருப்பினும் இவர்கள் மலையளவில் லாபம் பார்ப்பதில் குறியாக இருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி மூலமான வருவாய்க்காக Pfizer நிறுவனம் 15 பில்லியன் டாலர்களும், Moderna நிறுவனம் 18.4 பில்லியன் டாலர்களும் இலக்கு வைத்திருக்கின்றனர். ஆனால், அடிப்படை ஆராய்ச்சி, மருந்து கண்டுபிடிப்பு, அந்த மருந்தை சந்தைக்கு கொண்டு வருவது என அனைத்து வகையிலும் கணிசமான நிதியுதவி வெளிப்படையாக அரசாங்கங்களால் வழங்கப்பட்ட போதிலும் இந்த மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் சேர்ப்பதில் எந்த விதத்திலும் சளைத்துப் போகவில்லை.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவது மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக, தொற்றுக்கு பெரிதும் ஆட்படும் ஆபத்தில் இருக்கக் கூடிய முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்தனர். பிறகு, இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. பின்னர், மூன்றாம் கட்டமாக மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பெருமையடித்துக் கொண்டது மோடி ரசு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட 60 வயது கடந்தோர் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கும் சமயத்தில் இந்த மூன்றாம் கட்ட அறிவிப்பு வெளியானது. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் சரியாக வழங்கப்படாததால், “நாங்கள் எங்கள் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிலையில் இல்லைஎன்று மாநில அரசுகள் தங்கள் இயலாமையை ஒப்புக் கொண்டது. இப்படியொரு நடைமுறை சாத்தியமற்ற அறிவிப்பை மோடி வெளியிட்டதற்கு பின்னால் மேற்குவங்கத் தேர்தல் பிரச்சாரம் மட்டுமே இருந்தது.

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாதது, ஆக்சிஜன் இல்லாதது, போதிய வெண்டிலேட்டர் இல்லாமை, ஆம்புலன்ஸ் வசதி போதிய அளவில் இல்லாதது, பிணத்தை எரிக்க இடுகாட்டில் இடம் இல்லாமல் மக்கள் தங்கள் உறவினர்களின் இறந்த உடல்களுடன் வரிசையில் நிற்கும் இந்த நிலையில் இந்த தெளிவில்லாத தடுப்பூசிக் கொள்கையால் பயனற்ற ஊகங்களும், கள்ளச் சந்தையும், முறைக்கேடுகளும் தான் அதிகரிக்கும். இந்த சூழலை, தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை சம்பாதிக்க பயன்படுத்திக் கொள்வார்கள்.

பெருந்தொற்றால் மக்கள் தினம் தினம் இறந்துக் கொண்டிருக்கும் இந்த நிலைமையில், “தடுப்பூசியின் விலையை, அதன் கொள்முதலை, அதை தகுதியுள்ளவர்களுக்கு செலுத்துவதை வெளிப்படையாகவும் நெகிழ்வுத் தன்மையுடையாகவும் ஆக்கப்படும்என்கிறது இந்திய அரசு. அதாவது, தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்களே அதன் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிறது இந்திய அரசு.

Serum Institute of India-வின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனவாலா சொல்வது போல் மத்திய அரசிடம் விற்கப்படும் 200 ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசி தனியாரிடம் ரூபாய் 1000-த்திற்கு விற்கப்படும். அதாவது, ஒரே தடுப்பூசியை மத்திய அரசிடம் ஒரு விலைக்கு, மாநில அரசுகளிடம் மற்றொரு விலைக்கும், தனியாரிடம் வேறொரு விலைக்கும் விற்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதியளிக்கும் வகையில் அமைந்துள்ளது மோடி அரசின் தடுப்பூசிக் கொள்கை. ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலைகள்!

இதற்கிடையில் தடுப்பூசி திருவிழா என்ற ஒன்றை ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை அறிவித்தார் மோடி. ஆனால், அன்றைய தினங்களில் அதற்கு முந்தைய நாட்களில் செலுத்தப்பட்டதை விட குறைவான தடுப்பூசியே செலுத்தப்பட்டது. உண்மையான மதிப்பீட்டின் படி, இந்தியாவின் தற்போதைய தடுப்பூசி செலுத்தும் வேகத்தை கணக்கில் கொண்டு பார்த்தால், தேவைப்படும் இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதுதான் நிதர்சனம். பெருந்தொற்றை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பிரதமர் தனது இருப்பை காட்டிக் கொள்ள மீண்டும் மீண்டும் சாத்தியமில்லாத வெற்றுத் திட்டங்களை அறிவிப்பது இந்த சூழலில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

கொரோணா இரண்டாம் அலையில், இளைஞர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பத்தின் மற்றவர்கள் அனைவரும் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கொரோணா நோய்க்கானப் பரிசோதனைக்காக, மருத்துவமனையில் படுக்கை கிடைப்பதற்காக, ரெம்டெசிவிர் மருந்துக்காக, ஆக்சிஜன் சிலிண்டருக்காக, இறுதியாக இறந்தவர்கள் உடலை தகணம் செய்வதற்கு என அனைத்திற்கும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், கள்ளச் சந்தையில் வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கை என்பதுகோவில் தரிசனம்போல்தான் இருக்கிறது. ஒருவரால் ரூபாய் 1,000 கொடுக்க முடிந்தால் அவருக்கு தனிச்சிறப்பான வரிசை. ரூபாய் 500 மட்டுமே கொடுக்க முடிந்தால் அவருக்கு வேறொரு வரிசை. காசில்லாதவர்களுக்கு மற்றொரு வரிசை என மக்களின் உயிர்களை காசை வைத்து தரம் பிரிந்து வைக்கும் அவலம் இங்கே நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி நிறுவனங்களின் வருவாய் இந்த காலத்தின் இரண்டு மடங்கிற்கும் மேலே செல்லும் என்று முன்னாள் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் சொல்கிறார்.

மத்திய அரசு ஒரு தடுப்பூசியை, அதை தயாரிக்கும் நிறுவனத்திற்கான லாபத்தையும் சேர்த்து ரூபாய் 150-க்கு மொத்தமாக கொள்முதல் செய்தால், இதற்காக செலவு ரூபாய் 19,500 கோடி மட்டுமே. ஆனால், இந்த சந்தை துண்டு துண்டாக்கப்பட்டு மாநிலங்களை தனித்தனியாக தடுப்பூசி ஒன்றை ரூபாய் 430 வீதம் கொள்முதல் செய்ய சொல்லும் போது அதற்கான செலவு ரூபாய் 42,000 கோடி ஆகிறது. ஒரு தடுப்பூசியின் விலை ரூபாய் 200 இருக்கும்போதே, சர்வதேச அளவிலான கொள்முதலில் அதுவே விலை யர்ந்த கொள்முதலாக இருக்கும். இந்த ரூபாய் 200 விலையிலான தடுப்பூசி மூலமாகவே தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமான லாப ஈட்ட முடியும். மேலே குறிப்பிட்ட ஒரு தடுப்பூசியின் விலை ரூபாய் 430 என்பது மாநிலங்களின் கொள்முதல் விலையை ஊகித்து மட்டுமே. இந்த தடுப்பூசிக் கொள்கையின் படி தனியாருக்கு விற்கப்படும் விலை ரூபாய் 1000 முதல் 1200 வரை இருக்கலாம். மேலும், இந்த தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பு அளவை 60 மில்லியன் டோஸில் இருந்து 100 மில்லியனாக உயர்த்த இந்திய அரசாங்கமும் GAVI அமைப்பும் இணைந்து Serum Institute of India-விற்கு ரூபாய் 4200 கோடி நிதியுதவி அளித்துள்ளது. Bharat Biotech நிறுவனத்தின் தயாரிப்பு அளவை 10 மில்லியனில் இருந்து 700 மில்லியனாக உயர்த்த ரூபாய் 1500 கோடி நிதியுதவி அளித்துள்ளது இந்திய அரசாங்கம். மோடியின் தடுப்பூசிக் கொள்கை தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதாக இருக்கிறது என்பது இங்கே அப்பட்டமாக வெளிப்படுகிறது.

Serum Institute of India தலைமை செயல் அதிகாரி அடர் பூனவாலா, ஒரு பேட்டியில் கூறுகையில், “ ஒரு தடுப்பூசியை ரூபாய் 150க்கு விற்பனை செய்தாலே லாபம் ஈட்ட முடியும். ஆனால், அதீத லாபம் (Super Profit) ஈட்டுவதுதான் எங்கள் லட்சியம். நடப்பில் ஈட்டப்படும்சாதாரணலாபத்தால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் திருப்தி அடைய முடியும். அந்த அதீத லாபத்தை ஒரு சில மாதங்கள் கழித்து பின்நாட்களில் நாங்கள் ஈட்டுவோம்என்றார். ஆனால், அந்த நாட்கள் வரை மோடி அவரை காத்திருக்க வைக்க விரும்பவில்லை போலும். உடனே தடுப்பூசிக் கொள்கையை தனியார் லாபவெறிக்கு ஏற்போல் திறந்து விட்டார்.

சில காலம் சென்ற பின்பு Business Standard-க்கு பேட்டி அளித்த அடர் பூனவாலா, “சிறப்பு விலையில் ஒரு தடுப்பூசி டோஸ் ரூபாய் 200 என்பது அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் முதல் 100 மில்லியன் தடுப்பூசிகளுக்கு மட்டுமே. இப்போது எங்களிடம் 50 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பு இருக்கிறது. அதை சிறப்பு உரிமத்தின் அடிப்படையில் அரசாங்கத்திடம் மட்டுமே கொடுப்போம். அதை சந்தையிலோ அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ மாட்டோம்என்றார். ஆனால், Serum Institute of India ஏற்றுமதி செய்தது என்பதே உண்மை. ஒருகட்டத்தில், உள்நாட்டு விற்பனையை விட ஏற்றுமதி அதிகரித்தது. Serum Institute of India தனது உற்பத்தி திறனை மாதத்திற்கு 110 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கும் விதமாக உயர்த்த ரூபாய் 3000 கோடி தேவைப்படுவதாக கூறியது. ஆனால், அதற்கு ரூபாய் 4200 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

இதேபோல் Bharat Biotech நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கிருஷ்ணா எல்லா கூறுகையில், ”அந்த நிறுவனம் தடுப்பூசியை கண்டுபிடிக்க, மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் வரை ரூபாய் 350 கோடி செலவு செய்திருப்பதாககூறுகிறார். ஆனால், இந்த நிறுவனத்தின் உற்பத்தி திறனை தற்போதைய நிலையான ஆண்டுக்கு 60 மில்லியனில் ருந்து 700 மில்லியன் வரை தடுப்பூசிகள் தயாரிக்கும் வண்ணம் உயர்த்த ரூபாய் 1500 கோடி அரசாங்கம் அளித்துள்ளது.

இந்த கொள்கையின் விளைவாக தனியார் துறை தடுப்பூசி வழங்கும் முக்கிய புள்ளியாக வளர வாய்ப்பிருக்கிறது. மாநில அரசுகளின் பங்கை இது வெகுவாக குறைக்கும். இதனால், பெரும்பான்மையான மக்கள் ரூபாய் 1000-க்கு மேல் செலவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், தடுப்பூசி கண்டுபிடிப்பிற்காக செலவு செய்ததற்கு சம்பந்தமில்லாமல் விலையை நிர்ணய செய்யும் நிலையை உண்டாக்குகிறது. உதாரணமாக, Serum Institute of India தயாரிக்கும் Covishield தடுப்பூசியை Oxford பல்கலைக்கழகம் மற்றும் AstraZeneca என்னும் நிறுவனமும் இணைந்துதான் கண்டுபிடித்தது. இதனால், Serum Institute of India மருந்து மேம்படுத்தும் (Product Development) கட்டத்தில் குறைவாகவே செலவு செய்திருக்கும். ஆனால், இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் விலையை நிர்ணயிக்க இந்த கொள்கை அனுமதிக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்யும் தடுப்பூசிக் கொள்முதல் மக்கள் வரிப் பணத்தின் மூலமாகவே சாத்தியமாகிறது. ஆனால், இந்த தடுப்பூசிக் கொள்கை மத்திய அரசையும் மாநில அரசுகளையும் வெவ்வேறு நிலைகளில் வைத்து அணுகுகிறது. இது தனியார் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்ய மக்களை ஏமாற்றும் வேலையாகும்.

தடுப்பூசியின் பயன்பாட்டை வலியுறுத்தும் அதே நேரத்தில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவை முற்றிலுமாக ஒழித்துவிடும் என்பதை அறிஞர்கள் ஏற்பதில்லை. அனைவருக்கும் பொது மருத்துவம், மலிவான விலையில் மருந்துகள், தட்டுப்பாடுகள் இன்றி மருத்துமனைப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை அனைத்தையும் உறுதி செய்யாமல் கொரோனா தொற்றை வெல்ல முடியாது என்பதே நிதர்சனம். அதனால், தடுப்பூசியின் அளவான பயன்பாட்டை பற்றி பேச வேண்டியிருக்கிறது. தற்போதைய நிலையில் கிடைக்கும் தடுப்பூசிகள் கொரோனா தொற்றாமல் முழுவதுமாக தடுக்காது.

தடுப்பூசியால் தொற்றை குணப்படுத்தவும் முடியாது. கொரோனா தடுப்பூசி என்பது தொற்றின் தீவரத்தை குறைத்து, இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும். தடுப்பூசியின் காப்புத்தன்மை எப்போது செயலாற்றத் தொடங்கும் என்பது தெரியாது. எவ்வளவு நாட்கள் இந்த காப்புத்தன்மை நீடித்திருக்கும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. நடப்பில் இருக்கும் எல்லா கொரோனா தடுப்பூசிகளும் நெருக்கடி நிலையை கணக்கில் கொண்டு அவசர காலத்தில் அனுமதியளிக்கப்பட்டது. அதனால் அவற்றின் செயல்திறன் பற்றிய முக்கிய தகவல்கள் இன்னும் கண்டறிப்படவில்லை.

படிக்க :
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!
♦ நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

ஆனாலும், தடுப்பூசிகள் விலையை தங்கள் ஈட்ட நினைக்கும் அதீத லாபத்திற்கு ஏற்றாப்போல் தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பார்கள். இதற்காக மக்களின் பொது சுகாதாரத்தை பலி கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் இடையூறுகளையும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் கணக்கு எல்லாம்அதீத லாபம் (Super Profit)” மட்டுமே.

இந்த கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும். ஆனால் இந்த நிலைமையிலும் தடுப்பூசி விசயத்தில் தனியார் ஏகபோகத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு கொள்கையை மோடி அரசு அமல்படுத்தி வருகிறது. மக்கள் உயிர்களை பழிகொடுத்து கார்ப்பரேட்களை கொள்ளையடிக்க அனுமதிக்கும் இந்த அவல நிலை மோடி அரசு கார்ப்பரேட் விசுவாசத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.


ராஜேஷ்
மூலக்கட்டுரை : countercurrents 

மோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா || கருத்துப்படம்

கொரோனா இரண்டாம் அலை பற்றிய அறிவியலாளர்களின் எச்சரிக்கையை புறக்கணித்து, தேர்தல் பிரச்சாரங்களையும், கும்பமேளாவையும் நடத்தியது பாஜக கும்பல்.

இதனால் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருக்கிறது. ஆனால், மோடி அரசோ கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் அக்கறையில்லாமல் செயல்படுகிறது. உ.பி பாஜக அரசோ கொரோனா மரணங்களை மிகவும் குறைத்துக்காட்டி வந்தது. இந்த நிலையில் கங்கை நதிக்கரையில் பிணங்கள் மிதந்து மோடி அரசின் பொய் செய்திகளை அம்பலப்படுத்தியுள்ளது.

தற்போது கங்கை நதிக்கரை முழுவதும் மரண ஓலங்கள்.

மோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா


கருத்துப்படம் : மு.துரை

நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

நடப்பதோ தேசிய பேரழிவு !
மனித சமூகத்திற்கு எதிரான குற்றம் ! சாட்சிகளாக நாம் நிற்கிறோம் !!
தீர்ப்பை வரலாறு எழுதும் !!!

2017-ல் உ.பி. மாநில தேர்தலில், குறிப்பிட்டவர்களை ஒருங்கிணைத்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி பொது மேடையிலிருந்து அன்றைய மாநில அரசை – அப்போது அங்கு எதிர்கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது -“முஸ்லீம்களை தாஜா செய்வதற்காக அவர்களின் கல்லறை இடங்களுக்கு, இந்துக்களின் தகனம் செய்யும் இடங்களுக்கு அளிப்பதைவிட அதிகமாக நிதிஒதுக்கீடு செய்வதாக” குற்றம்சாட்டினார்.

வழக்கமான ஆவேச கூச்சல் ஏளனபடுத்துவது ஆகியவற்றோடு அதில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு உணர்ச்சியாக கோபம் மற்றும் கூரிய ஈட்டி முனையாக, பாதி வாக்கியத்தை உச்சஸ்தாயிக்கு கொண்டு போய் நிறுத்தி; குரலை இறக்கும்போது, அச்சுறுத்தும் எதிரொலியோடு, கூட்டத்திலுள்ளவர்களின் மனதில் பீதியோடு கூடிய வெறுப்பு உணர்வுகளை கிளறிவிட்டார்.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

♦ கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

“சம்ஸான்! சம்ஸான்!” மோடியின் பேச்சால் மயங்கி கிடந்த அவரை வழிபடும் கூட்டம் அவர் சொன்னதை எதிரொலித்தது.

அநேகமாக இப்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பார். இந்தியாவின் தகன மையங்களில் பிணங்கள் குவியலாக எரியூட்டப்படுவதிலிருந்து எழும் ஜுவாலைகளின் படங்கள் சர்வதேச செய்திதாள்களில் முதல்பக்க செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து “கப்ரிஸ்தான்கள்” (முஸ்லீம்களுக்கான கல்லறை) “சம்ஸான்கள்” (இந்துக்களின் தகன இடங்கள்) இதில் மக்கள்தொகையின் நேர்விகிதத்தில் அவை எதற்காக இருக்கின்றனவோ மற்றும் அங்கிருப்பவர்களின் பணிசுமையை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கின்றன.

“1.3 பில்லியன் அதாவது 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை தனிமைபடுத்தமுடியுமா?” வாஷிங்டன் போஸ்ட் தனது அண்மை தலையங்கத்தில், ‘இந்தியாவின் வெளிப்படுத்தப்படாத பேரழிவு மற்றும் இந்திய எல்லைக்குள் உருவாகியிருக்கும் புதிய எளிதில் வேகமாக பரவக் கூடிய கோவிட் மாற்றுருக்களை கொண்டிருப்பது குறித்து’ தனக்கேயுரிய பாணியில் கேட்டிருந்தது. “அவ்வளவு எளிதானதல்ல” என பதிலளித்தது. சில மாதங்களுக்கு முன்னதாக ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் தாக்கியபோது சாத்தியமில்லாத இந்த கேள்வி அதே வழியில் முன்வைக்கப்பட்டது. ஆனால் நம்மை பொறுத்தவரை இந்த ஜனவரியில் நடைபெற்ற World Economic Forum கூட்டத்தில் நமது பிரதமர் வெளியிட்ட வார்த்தைகள் நம்மை எல்லோருக்கும் மேலானவர்களாக நிறுத்திக்கொள்ள உரிமை படைத்தவர்களாக்கியது.

உலகத்தொற்று இரண்டாம் அலை பரவலின் உச்சத்தில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மோடி பேசினார். அவரது பேச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த துயரத்தை பற்றியதான ஒரு வார்த்தை கூட இல்லை. அதற்கு பதில் ‘இந்தியாவின் உள்கட்டமைப்பு பற்றி மற்றும் கோவிட்டை எதிர்கொண்டதற்கான முன்தயாரிப்புகள் பற்றி’ பெருமிதமான வார்த்தைகளில் நீளமான உரையாக இருந்தது. நான் அந்த உரையை பதிவிறக்கம் செய்துள்ளேன். மோடியின் ஆதரவாளர்களால் வரலாறு திரும்ப எழுதப்படும்போது – சீக்கிரம் நடக்கும் – என்று எதிர்பார்க்கிறேன். இவையெல்லாம் மறைந்துவிடும் அல்லது கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.

அவரது பேச்சிலிருந்து சில துளிகள்.

“நண்பர்களே இந்த கவலையான பயங்கலந்த காலக்கட்டத்தில் 130 கோடி இந்தியர்களிடமிருந்து நம்பிக்கை, தன்னம்பிக்கை, உறுதி ஆகிய செய்திகளை கொண்டுவந்துள்ளேன். இந்த கொரோனாவால் மோசமாக பாதிக்கப்படக் கூடிய நாடாக இந்தியாதான் இருக்கும் என்று உலகம் முழுதும் எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஒரு சுனாமியாக இந்தியாவை தாக்கும் என்றும் இந்தியாவில் 70 முதல் 80 கோடி வரை பாதிக்கப்படுவார்கள் என்றும் 20 லட்சம் பேர் வரை இறக்கக்கூடும் என்றும் கூறினார்கள்.

நண்பர்களே இந்தியாவின் வெற்றியை மற்ற நாடுகளின் தன்மையோடு ஒப்பிட்டு தீர்ப்பு சொல்வது அறிவார்ந்த செயல் அல்ல. உலக மக்கள்தொகையில் 18 சதவீதத்தை கொண்டிருக்கக்கூடிய எங்கள் நாடு கொரோனாவை வலிமையோடு ஒடுக்கி ஒரு பேரழிவிலிருந்து மனித குலத்தை காப்பாற்றியிருக்கிறது”.

மோடி என்ற மந்திரவாதி கொரோனாவை மிக வலிமையுடன் ஒடுக்கி மனித குலத்தை காப்பாற்றியதற்காக பெருமையை தலைவணங்கி எடுத்துக்கொண்டார். இப்போது அது (கொரோனா இரண்டாவது அலை) திரும்பிவிட்டது. அதை நம்மால் ஒடுக்கமுடியவில்லை. நாம் ஏதோ கதிர்வீச்சுக்குள் இருப்பதை போல உணர்வதைப் பற்றி நம்மால் புகார் அளிக்கமுடியுமா? மற்ற நாடுகள் தங்கள் எல்லையை நமக்கு மூடத்தொடங்கிவிட்டதே மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றனவே? நாம் நம்முடைய தொற்றோடும் மற்றும் நமது பிரதமரோடும் கூடுதலாக எல்லா நோய்களோடும் அறிவியலுக்கு எதிரான அவர் அவரது கட்சி அது பிரதிநிதித்துவபடுத்தும் அரசியல் ஆகியவற்றோடு சேர்த்து மூடி தாளிடப்பட்டுவிட்டோமே?

கோவிட்-19ன் முதல் அலை கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் வந்த போதும் பிறகு அது குறைந்த போதும் மத்திய அரசும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் வெற்றி பெற்றுவிட்டதாக தலையில் கிரீடத்துடன் பெருமிதத்தில் இருந்தனர். “இந்தியாவுக்குள் யாரும் சுற்றுலாவை பெற்றிருக்கவில்லை” என்று தி பிரிண்ட் என்ற இணைய பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சேகர்குப்தா ட்விட் செய்திருந்தார். “ஆனால் நமது சாக்கடைகள் சடலங்களால் அடைத்துக்கொள்ளப்படவில்லை, மருத்தவமனைகள் படுக்கைவசதிகளை இழந்துவிடவில்லை, தகன மையங்கள் மற்றும் கல்லறைத்தோட்டங்கள் மரத்துண்டுகளையோ இடங்களையோ இழந்துவிடவில்லை.

இது உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் அதற்கான தரவுகளை கொடுங்கள். நீங்கள் உங்களை கடவுளாக நினைத்துக் கொண்டிருக்கவில்லையென்றால். “உணர்ச்சிகளற்ற அவமரியாதையான தோற்றங்களை அந்த பக்கம் தூக்கிப்போடுங்கள். இம்மாதிரியான பெரும்பாலான உலக தொற்று அபாயத்திற்கு இரண்டாவது அலை ஒன்றுண்டு என்று சொல்வதற்கு நமக்கு கடவுள் தேவைப்படுகிறாரா?

இது முன்னமே கணிக்கப்பட்டது ஆனாலும் விஞ்ஞானிகளையும் வைராலாஜிஸ்டுகளையும் அதன் தீவிரம் ஆச்சிரியபடவைத்தது. அதனால் பிரதமர் பெருமிதமாக கூறிய கோவிட்-19க்காகவே உருவாக்கப்பட்ட அந்த உள்கட்டமைப்பு எங்கே? மோடி தனது பேச்சில் பெருமிதத்தோடு மிகவும் உயர்த்தி பேசிய அந்த நோய்தொற்றை எதிர்த்த “மக்கள் இயக்கம்” எங்கே?

மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி இல்லை. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மிகவும் சோர்ந்துவிட்டனர். நண்பர்கள் வார்டுகளில் கவனிக்க மருத்துவ உதவியாளர்கள் இல்லாததையும் அங்கே உயிருடன் மருத்துவம் பார்த்துக் கொள்கிறவர்களை விட சடலங்கள் அதிகமாக இருப்பதையும் கதையாக கவலையோடு பேசிக்கொள்கிறார்கள். மருத்துவமனை வளாகங்களில் சாலைகளில் வீடுகளில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் தகன மையங்களில் சடலங்களை எரிக்க விறகில்லை. வனப் பாதுகாப்புதுறை நகர சாலையோர மரங்களை வெட்டுவதற்கு பிரத்யேகமான அனுமதி தர வேண்டியிருக்கிறது.

கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாத மக்கள் என்ன கண்ணில் படுகிறதோ அவற்றை உபயோகப்படுத்துகிறார்கள். பூங்காக்களும் கார் நிறுத்தமிடங்களும் தகன மையங்களாக மாறிவருகின்றன. நம் வானத்தில் கண்ணுக்கு தெரியாத யுஎஃப்ஓ (Unidentified flying object) கண்டுபிடிக்கபடமுடியாத பறக்கும் பொருள் நிறுத்தப்பட்டுள்ளதைப் போலவும் அது நம் நுரையீரலிலிருந்து காற்றை உறிஞ்சி எடுப்பது போல உணர்கிறோம். இம்மாதிரியான ஒரு வான்வழிதாக்குதலை நாம் எப்போதும் அறிந்திருக்கமாட்டோம்.

ஆக்சிஜன் தான் தற்போதைய இந்தியாவின் ‘புதிய மோசமான பங்குசந்தையின் புதிய கரன்சிகள்’. இந்தியாவின் உயரடுக்கு மூத்த அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோர் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காகவும் ட்விட்டர்களில் குறுஞ்செய்தி மூலம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்சிஜனுக்கான கள்ளச்சந்தை உப்பிக்கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் செறிவு எந்திரங்கள் மற்றும் மருந்துகள் வருவது மிக கடினமாக உள்ளது.

மற்றப்பொருள்களுக்கும் கூட சந்தைகள் இருக்கின்றன. ஒரு இலவச சந்தையின் அடிப்பாக முடிவில் சவக்கிடங்கில் துணிகளால் மூடப்பட்டு கிடத்தப்பட்டிருக்கும் உங்களது அன்பானவரை கடைசியாக பார்க்க ஒரு லஞ்சம் தேவைப்படுகிறது. இறுதி பிரார்த்தனைக்கு பாதிரியாருக்கு அவர் ஒத்துக்கொண்டதற்காக அதிகப்படியான பணம் தரவேண்டியிருக்கிறது. ஆன்லைன் மருத்தவ ஆலோசனை மையங்களில் இருக்கும்   இரக்கமற்ற மருத்தவர்கள் நம்பிக்கையிழந்து தவிக்கும் குடும்பங்களிடம் இருப்பதையும் பறித்துக்கொள்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்கை எடுத்து கொள்ளவேண்டி இருந்தால் இருக்கும் நிலம் வீடு அத்தனையும் விற்று கடைசி காசு வரை செலவு செய்யவேண்டியிருக்கும். உங்களை மருத்துவனைக்குள் அனுமதித்து சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்வதற்கு முன்பே வைப்புதொகைக்கு மட்டும் உங்கள் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு பின்னால் போய்விடும். இவை எதுவும் அதிர்ச்சியின் முழு ஆழத்தையும் வரம்பையும் குழப்பத்தையும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இழிவுக்குள்ளாவதையும் வெளிப்படுத்துவதில்லை.

தலைநகர் டெல்லியில் ஒரு குடும்பத்திலிருந்த மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நகரில் அப்போதுதான் நோய்தொற்றின் ஆரம்பகாலகட்டம் என்பதால் அந்த தாயிக்கு மருத்தவமனையில் படுக்கை கிடைத்துவிட்டது. தந்தையார் நோய்தொற்றுடன் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதை கண்டறிந்தனர். அவர் செயல்கள் வன்முறைகளாக மாறின. தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு ஆன்லைனில் சிகிச்சை அளித்தவந்த மனநலமருத்துவரோ தனது நோயாளியின் நிலைக்காக வருந்தி அழுதார். ஏனெனில் அவரது கணவரும் இதே நோய்தொற்றிற்கு பலியாகியிருந்தார். கடைசியில் மருத்துவமனையில் சேர்ப்பதே நல்லது என ஆலோசனை தெரிவித்தார்.

ஆனால் அவர் ஒரு கோவிட் நோயாளி என்பதால் அவரை நேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர். அதனால் அந்த மகனே தந்தையை வீட்டில் வைத்து சிகிச்கை இல்லாமல் மற்ற அத்தனை தேவைகளையும் நிறைவேற்றி பார்த்துக்கொண்டார். கடைசியில் அந்த தந்தை இறந்துவிட்டார். அவர் கொரோனாவால் இறக்கவில்லை. எவ்வித மருத்துவ உதவி இல்லாத காரணத்தால் மனஅழுத்தம் அதிகமாகி இரத்தஅழுத்தம் மிகுந்தநிலையில் இறந்துவிட்டார்.

சடலத்தை என்ன செய்வது? தகனமையங்களில் வரிசையாக சடலங்கள் காத்திருப்பில் இருந்தன. உதவி செய்ய யாரும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அவர்களும் தங்களது முறைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

தனிப்பட்ட சிலர் தங்களது முற்போக்கான கருத்துகளால் அநியாயங்கள் இழைக்கப்படும்போது குறிப்பாக குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் இருந்தவர்கள், ராஜதுரோக சட்டத்திற்கெதிரான மாணவர்கள் போராட்டத்தில் இருந்தவர்கள், அதனால் பல்வேறு வழக்குகள் மோடி அரசால் போடப்பட்டு எதிர்கொண்டிருப்பவரகள் தான் உதவிகள் செய்து தகனம் செய்தனர்.

இது ஒரு குடும்பத்தில் அல்ல. டெல்லியின் பெரும்பாலான குடும்பங்கள் அனுபவிக்கும் கொடுமைகள்! சமூகத்தை சுற்றி வளைத்து எங்கெங்கும் ஆக்ரமித்திருக்கும் மோடி அரசின் ஆக்டோபஸ் நிறுவனங்கள் எதுவும் களத்தில் இல்லை. அமைச்சர்கள் அதிகாரிகள் எதையும் காணவில்லை. இந்தியாவின் பொது சுகாதார அமைச்சகம் உட்பட செயலிழந்து விட்டதாக டைம்ஸ் பத்திரிகை விமர்சனம் செய்திருக்கிறது. மோடியை காணவில்லை என அவுட்லுக் அட்டைப்படத்தில் விளம்பரம் கொடுத்திருக்கிறது.

முற்போக்கான தனிநபர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் களத்தில் தன்னலம் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நோயாளிகளுக்கு மசூதிகள் திறந்துவிடப்படுகின்றன. தகன மையங்கள் ஏற்பாடு செய்து தருகிறார்கள். மோடியின் சங்கிகள் காத்திருக்கிறார்கள் மீண்டும் ஒரு கலவரத்தின் மூலம் முஸ்லீம்களின் சேவையை மறைத்து தேசதுரோகிகளாக காட்ட.

எல்லா பிரச்னைகளும் ஒரு நாளில் தீரும். ஆனால் அதை பார்க்க யார் நம்மில் உயிரோடு இருக்கப்போகிறார்கள் தெரியவில்லை. பணம் படைத்தவர்களால் நிம்மதியாக மூச்சு விட முடிகிறது. ஏழைகளால் முடியாது. இப்போதைக்கு நோயுற்றவர்கள் மற்றும் இறந்தவர்கள் ஆகியோர் மத்தியில் ஜனநாயகத்தின் மிச்சங்கள் உள்ளன. பணக்காரர்களும் வீழ்த்தப்பட்டுள்ளனர். மருத்தவனைகள் ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கின்றன. சிலர் தன்னுடன் கூடவே சொந்த ஆக்சிஜனை கொண்டுவரும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாகுறை பிரச்சினை மாநிலங்களுக்கிடையே தீவிரமான சகிக்கமுடியாத சண்டைகளை ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு தங்களுக்குள் சண்டையில் உள்ளனர்.

டெல்லியின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையான சர்.கங்கா ராம் மருத்துவமனையில் ஏப்ரல் 22 அன்று இரவு அதிக அளவு ஆக்சிஜன் வெளிப்பட்டதால் தீவிர சிகிச்சையிலிருந்த 25 கொரோனா நோயாளிகள் அநியாயமாக இறந்து போனார்கள். அந்த மருத்துவமனை ஆக்சிஜன் வழங்கும் கருவியை மாற்றித்தருமாறு பலமுறை SOS செய்திகளை அனுப்பியுள்ளது. ஒரு நாளைக்கு பிறகு அதன் தலைவர் செய்திகளை தெளிவுபடுத்த விரைந்தார்கள். “அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் இறந்தார்கள் என்று நாம் சொல்லமுடியாது” என்றார்.

ஏப்ரல் 24-ல் டெல்லியின் இன்னொரு பெரிய மருத்துவமனையான ஜெய்ப்பூர் கார்டனில் ஆக்சிஜன் சப்ளை குறைந்ததால் 20 நோயாளிகள் இறந்து போனார்கள்.

அதே நாளில் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் “சிறு குழந்தையை போல அழுது கொண்டிருக்காமல் நம்மாலானதை முயற்சிப்போம். இந்த நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் ஒருவர் விடாமல் ஆக்சிஜன் கிடைப்பதை இதுவரை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்” என்று சிறிது கூட கூச்சமேயில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தார்..

காவி உடை போர்த்தியிருக்கும் யோகி ஆதித்யநாத் என்கிற அஜய் மோகன் பிஷ்த் உ.பியின் முதலமைச்சர் தனது மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாகுறை கிடையவே கிடையாது என பிரகடனபடுத்தியிருக்கிறார். அதை மீறி மருத்தவமனைகளோ தனிநபர்களோ ஆக்சிஜன் இல்லை என்று வதந்திகளை பரப்பினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் சுற்றி விளையாடுவதில்லை. கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் உ.பி சிறையில் மாதக்கணக்காக பெயில் மறுக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த ஒரு தலித் பெண் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை ஒட்டி செய்தி சேகரிக்க சென்றதுதான் அவர் செய்த தவறு. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கூடுதலாக கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

“தனது கணவர் மதுரா மருத்தவமனையில் ஒரு விலங்கைப் போல தனது படுக்கையோடு கைவிலங்கினால் பிணைக்கப்பட்டுள்ளதாக” அவரது மனைவி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். இப்போது உச்சநீதிமன்றம் சித்திக்கை டெல்லியில் இருக்கும் ஒரு மருத்தவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி நமக்கு உணர்த்துவது உபி யில் வாழ்பவராக இருந்தால் எவ்வித புகாரும் சொல்லாமல் செத்துபோங்கள் என்பதுதான்.

புகார் சொல்பவர்களுக்கு மிரட்டல் வருவது உ.பி.யில் தடை செய்யப்படவில்லை. இந்துமதவெறி பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ் – மோடி முதற்கொண்டு அவரது அமைச்சர்கள் சகாக்கள் எல்லோரும் இதன் உறுப்பினர்கள்தான். அதோடு தனக்கென ஆயுதந்தாங்கிய ராணுவ பிரிவும் வைத்துள்ளது – அதன் செய்தி தொடர்பாளர் சமீபத்தில், “நாட்டில் இப்போது நிலவும் கொரோனா பிரச்சினையைத் தூண்டிவிட்டு எதிர்மறை எண்ணங்களையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சிசெய்வார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல ஊடகங்கள் ஒரு நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கி நம்பிக்கையை வளர்க்க உதவவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அரசை விமர்சனம் செய்பவர்களின் கணக்கை முடக்கி ட்விட்டரும் தனது பங்குக்கு உதவியை செய்கிறது.

ஆறுதலுக்கு நாம் எங்கே போக வேண்டும்? அறிவியலுக்கா? எண்களை சேர்த்துக்கொள்ளலாமா? எத்தனை பேர் இறந்தனர்? எத்தனை பேர் குணமடைந்தனர்? எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்? நோய் தொற்றின் உச்சம் எப்போது வரும்? ஏப்ரல் 27-ல் வந்துள்ள தகவல்படி 3,23,144 நோய்தொற்று பதிவுகள் 2,771 பேர் இறந்துள்ளனர். பரவாயில்லை துல்லியமான தகவல்கள் ஓரளவு உறுதியளிக்கிறது.

அதை எப்படி தெரிந்து கொள்வது? டெல்லியில் கூட பரிசோதனைகள் வருவது கடினம்தான். சின்ன நகரங்கள் பெரிய நகரங்கள் ஆகியவற்றின் கல்லறைகளில் புதைக்கப்பட்ட  தகனமையங்களில் எரியூட்டப்பட்டவை ஆகியவற்றை பார்க்கும்போது மொத்த கோவிட் நெறிமுறை எண்ணிக்கை என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட 30 மடங்கு அதிகம் இருக்கும் என தெரிகிறது. மாநகரங்களுக்கு வெளியே பணியிலிருக்கும் மருத்தவர்களை கேட்டால் அவர்கள் சொல்வார்கள் இது எப்படி என்று.

தலைநகர் டெல்லிக்கே இந்த நிலைமை என்றால் நினைத்துப்பாருங்கள் பீகார், உ.பி. மத்தியபிரதேச கிராமங்களில் என்ன நடக்கும் என்பதை. 2020-ல் மோடியால் திடீரென அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு கொடுத்திருந்த அதிர்ச்சிகரமான நினைவுகளால் உந்தப்பட்டு நகரத்திலிருந்து பல பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு ஒரு சேர பறந்து போனார்கள் கூடவே தொற்றுகளை சுமந்துகொண்டு. அது நான்கு மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்த அறிவிக்கப்பட்ட உலகிலேயே மிக கெடுபிடியான ஊரடங்கு.

புலம்பெயர் தொழிலாளர்களை நகரங்களில் வேலை இல்லாமல் கையில் பைசா காசு இல்லாமல் குடியிருக்கும் இடங்களுக்கு வாடகை கொடுக்கமுடியாமல், உணவு இல்லாமல் பட்டினியோடு மற்றும் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் அனாதைகளாக விடப்பட்டனர். சொந்த ஊருக்கு போக கிளம்பியவர்கள் நூற்றுக்கணக்கான மைல்களை நடந்தே கடக்க வேண்டியதாயிற்று. வழியில் பல்வேறு காரணங்களால் நூற்றுக்கணக்கானவர்கள் அநியாயமாக இறந்தே போயினர்.

இந்த முறை தேசிய ஊரடங்கு இல்லையென்றாலும் போக்குவரத்து ரயில் பஸ் ஆகியவை எவ்வித இடையூறுமின்றி செயல்பட்டாலும் தொழிலாளர்கள் நகரத்தை விட்டு கிளம்ப தொடங்கிவிட்டனர். இந்த பெரிய நாட்டின் பொருளாதாரத்தை இழுத்து செல்லும் இயந்திரமாக செயல்பட்டபோதும் ஏதாவது பிரச்னைகள் ஏற்படும்போது நிர்வாகத்தின் கண்களுக்கு அவர்கள் தெரியமாட்டார்கள்.

இந்த ஆண்டு தொழிலாளர்கள் வெளியேறியது மாறுபட்ட வகையான பயத்தினால். தங்களது சொந்த கிராமத்துக்கு செல்வதற்கு முன்பாக தங்கி போக தனிமைபடுத்தும் மையங்கள் இப்போது இல்லை. கிராமபுறங்களை நகர்புற தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சாதாரண முயற்சிகூட இல்லை.

சாதாரணமான வயிற்றுப்போக்கு, காசநோய் ஆகிய நோய்களுக்கே கொத்து கொத்தாக இறந்து போகக் கூடிய மக்களைக் கொண்ட கிராமங்கள் அவை. கொரோனாவுடன் அவர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்? கொரோனாவுக்கான பரிசோதனைகள் அவர்களுக்கு கிடைத்திருக்கிறதா? அங்கே மருத்துவமனைகள் இருக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? இதற்கெல்லாம் மேலாக அன்பு இருக்கிறதா? அன்பை மறந்து விடுங்கள் அவர்களைப் பற்றிய கவலை யாருக்காவது இருக்கிறதா? இல்லை எதுவுமே இல்லை. ஏனெனில் அங்கே இருப்பது இதய வடிவில் ஒரு துளை – இந்தியாவின் பொது இதயம் இருக்க வேண்டிய இடத்தில் முழுதும் நிரம்பிய வெறுப்புணர்ச்சி நிரம்பியுள்ளது.

ஏப்ரல் 28 அதிகாலையில் எங்களது நண்பர் பரபுபாய் இறந்த செய்தி வந்தது. அவர் இறப்பதற்கு முன்பாக அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தன. ஆனால் அவரது மரணம் ‘அதிகாரபுர்வ கொரோனா காரணமாக இறந்தவர்கள்’ பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அவர் வீட்டிலேயே எந்த வித பரிசோதனையோ மருத்துவமோ இல்லாமல் இறந்து போனார்.

படிக்க :
♦ சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்

♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

அவர் நர்மதா சமவெளியில் அணை எதிர்ப்பு இயக்கத்தில் முன்கள போராளியாக இருந்தவர். பல சமயங்களில் கீவடியாவில் அவரது இல்லத்தில் தங்கி இருந்திருக்கிறேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக, அணைகட்டும் வேலையிலிருந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகளுக்காக, அவர்களது சொந்த நிலத்திலிருந்து பிடுங்கியெறியப்பட்ட, முதல் அணி உள்ளூர் பழங்குடிமக்கள் இவர்கள். விரட்டியடிக்கப்பட்ட அவர்கள், இன்றைக்கும் அந்த குடியிருப்புகளுக்கு அருகிலேயே, அன்னியர்களைப்போல, ஏழைகளாக்கப்பட்டு, நிச்சயமற்ற, ஒருகாலத்தில் சொந்தமாக இருந்த நிலத்தில், இன்றைக்கு ஒரு ஆக்ரமிப்பாளானாக குற்றம் சாட்டப்பட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கிவடியாவில் மருத்துவமனைகள் இல்லை. அதற்கு பதில் ‘சமாதானத்தின்’ சிலையாக சர்தார் வல்லப்பாய் படேலின் சிலை மட்டுமே உள்ளது. அணைக்கும் அவர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான சுமார் 182 மீட்டர் மற்றும் 422 மில்லியன் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட 4000 கோடி) செலவில் கட்டப்பட்டது. அதிவேக மின்தூக்கிகள் சிலையின் மார்பு வரை சுற்றுலா பயணிகளை கொண்டு செல்லும். அங்கிருந்து நர்மதா அணையை பார்க்கமுடியுயம் உண்மைதான். அழிந்து போன மூழ்கிபோயிருக்கும் அந்த நதி பள்ளத்தாக்கின் நாகரிகத்தை எவரும் பார்க்க முடியாது. அந்த சிலை மோடியின் கனவு திட்டம். அக்.2018ல் அதை திறந்து வைத்தார்.

பரபுபாய் பற்றிய செய்தியை எனக்கு அனுப்பிய நண்பர் இன்னொன்றையும் அனுப்பினார். “இதை எழுதும்போது எனது கைகள் நடுங்குகின்றன. கெவடியா குடியிருப்பு உள்ளும் அதைச் சுற்றியும் கொரோனா நிலைமை மோசமானதாக இருக்கிறது” என்கிறார்.

நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டும் இந்தியாவின் கோவிட் வரைபடம் 2020 பிப்ரவரியில் மோடியால் ஏற்பாடு செய்யப்பட்ட “நமஸ்தே இந்தியா” நிகழ்ச்சிக்காக டொனால்ட் ட்ரம்ப் வருகை தந்த ‘அவரதுபாதையில் இருக்கும் குடிசைபகுதிகளை அவரது பார்வையிலிருந்து மறைப்பதற்காக கட்டப்பட்ட உயரமான சுவரை’ போன்றது.

அந்த எண்களைப் போலவே மோசமானது. அவை இந்தியா பற்றிய ஒரு வரைபடத்தை கொடுக்கின்றன. ஆனால் நிச்சயமாக அது அந்த இந்தியா அல்ல. இந்த இந்தியாவில் ஓட்டுப்போடும்போது இந்துக்களாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் ‘உபயோகித்தபின் தூக்கியெறியப்படும் பொருட்களாக’ சாகிறார்கள்.

“நாம் அழுகின்ற குழந்தையை போல அல்லாமல் முயற்சிப்போம்”

ஏப்ரல் 2020 ஆண்டிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியக் கூறுகளை கோடிட்டு காட்டிய, திரும்பவும் நவம்பரில் இதே அரசாங்கத்தால் போடப்பட்ட ஒரு குழு உறுதிசெய்த அந்த உண்மைகளுக்கு நாம் கவனம் கொடுக்காதிருக்க முயற்சிக்கலாம். டெல்லியின் பெரிய மருத்துவனைகளில் கூட அவற்றுக்கு சொந்தமாக ஒரு ஆக்சிஜன் உருவாக்கும் கருவிகூட இல்லாதிருப்பதை கண்டும் வியக்காதிருக்க முயற்சிக்கலாம்.

பிரதம மந்திரியின் பொது நிவாரண நிதியை இடமாற்றம் செய்த மற்றும் பொது நிதியை மற்றும் அரசின் உள்கட்டமைப்பை உபயோகபடுத்திக்கொண்டு பொதுமக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இல்லாதயாராலும் ஊடுருவி பார்க்கமுடியாத நிறுவனமாக இருக்கும் பிஎம் கேர்ஸ் நிதி (PM Cares Fund) – திடீரென ஆக்சிஜன் பற்றாகுறை பிரச்னைக்குள் தன்னை இணைத்துகொள்வதற்குள் நாம் வியக்காதிருக்க முயற்சிக்கலாம். நமக்கு கிடைக்கும் மூச்சுகாற்றில் மோடி தனக்கான பங்கினை கொண்டிருப்பாரா?

“நாம் அழுகின்ற குழந்தையை போல அல்லாமல் முயற்சிப்போம்”    

மோடி அரசுக்கு கவனம் தரவேண்டிய மேலும் அதிகமான அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் பிரச்னைகள் ஏராளமாக இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் மிச்சம் மீதி இருப்பதை அழிக்கவேண்டியிருக்கிறது. இந்து அல்லாத சிறுபான்மையினருக்கு தொல்லைகளை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது, இந்து தேசத்திற்கான அடிப்படைகளை அமைப்பதற்கான பணிகளில் கவனத்தை செலுத்துவது ஆகியவைதான் இவர்களது இடைவிடாத அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பணிகள்.

மிகப்பெரிய சிறைக்கொட்டடிகள் உதாரணமாக அஸாமில் பல தலைமுறைகளாக வசித்துக்கொண்டு இருக்கும் 2 மில்லியன்(20 லட்சம்) மக்களை திடீரென அவர்களது குடியுரிமையை பறித்து அடைப்பதற்கு அவசரமாக கட்டப்படவேண்டியிருக்கிறது. (இதில் நமது தன்னாட்சி கொண்ட உச்சநீதிமன்றமும் மிக அழுத்தமாக மத்திய அரசாங்கத்தின் பாதுகாவலனாக நிற்கிறது.)

கடந்த மார்ச் மாதம் வடக்கிழக்கு டெல்லியில் தங்களது இனத்தினருக்கு எதிராக நடந்த படுகொலையில் முதன்மை குற்றம்  சாட்டப்பட்டிருக்கும்  நூற்றுக்கணக்கான முஸ்லீம் மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இளம் முஸ்லீம் குடிமக்கள் விசாரணைக்குட்படுத்தப்ட்டு சிறையிலடைக்கப்படுவார்கள். இந்த நாட்டில் முஸ்லீமாக இருந்தால் படுகொலை செய்யப்படுவது கூட ஒரு குற்றம்தான். உங்கள் மக்கள் அதற்காக பணம் கொடுக்கப்படுவார்கள்.

அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான துவக்க விழா இருக்கிறது. அந்த இடத்தில்தான் ஏற்கனவே மசூதி இருந்தது. அதை இந்துவெறி நாசகாரர்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள் பாஜகவின் மூத்த தலைவர்கள் அங்கே இருந்து நேரில் பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது அந்த இடத்தில்தான் ராமர்கோவில் கட்டப்படுகிறது. (இந்த விசயத்திலும் தன்னாட்சி பெற்றிருப்பதாக சொல்லிக் கொள்ளும் உச்சநீதிமன்றம் மிக அழுத்தமாக அரசின் பக்கம் நின்றது அதாவது நாசகாரர்களுக்கு கருணை காட்டியது).

இப்போது மிக அவசரமான அவசியமான கவனம் கொடுக்க வேண்டிய வேலை பல ஆயிரம் மில்லியன் டாலரில் திட்டமிடப்பட்டிருக்கும் களையிழந்து காணப்படும் ஆடம்பர கட்டிடங்களுக்கு பதிலாக புது டெல்லியின் ஏகாதிபத்திய மையத்திற்கான சொகுசுகட்டிடஙகள் கட்டுமான வேலைகள்தான்.

புதிய இந்து இந்தியாவின் அரசாங்கம் பழைய கட்டிடங்களில் இயங்குவது அவமானகரமானது இல்லையா? உலகத்தொற்று அபாயத்தின் காரணமாக டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்திலும் “சென்ட்ரல் விஸ்டா”-வின் கட்டுமான பணிகள் “அத்தியாவசிய சேவை” எனஅறிவிக்கப்பட்டு தொடர்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து தினமும் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். கட்டுமான பணிகளுக்கான திட்டத்தில் ஒரு தகன மையத்திற்கான கட்டுமானமும் சேர்க்கப்படலாம்.

மிக முக்கியமாக உத்ரகாண்ட் மாநிலத்தின் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் மில்லியன் கணக்கான (பத்து லட்சம்) மக்கள் கங்கை நதியில் குளிப்பதற்காக ஒரு சிறிய ஊரில் ஒன்று கூடவேண்டும். ஒரே நாளில் 35 லட்சம் பேர் எவ்வித சமூக இடைவெளியுமின்றி கங்கையில் குளித்தார்கள். மொத்தம் 70 லட்சம் பேர் அங்கே ஒன்றாக கூடியிருக்கிறார்கள்.

ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமாக்கப்பட்ட அவர்கள் நாட்டின் பல பாகங்களிலிருக்கும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப செல்லும்போது கையோடு நோய் தொற்றுகளை சுமந்து சென்று பரப்புவார்கள். கும்பமேளா நிகழ்ச்சியை பற்றி மோடி ‘இது புனித நீராடலை அடையாளபடுத்துவதாக’ மிக பெருமிதமாக கூறினார். (கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சில நூறு முஸ்லீம்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்).

ஆனால் கும்பமேளா விசயத்தில் அவர்களுக்கு எதிராக இந்திய ஊடகங்கள் கொரோனா ஜிகாதிகள் என்று தாக்கவில்லை அல்லது மனிதகுலத்துக்கே எதிராக போர் தொடுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படவில்லை). உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வந்திருக்கும் சில ஆயிரம் ரோஹிங்யா முஸ்லீம் மக்களை கொலைவெறியோடு காத்திருக்கும் மியான்மரின் பலிபீடங்களுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். (இங்கேயும் தன்னாட்சி பெற்றுள்ளதாக சொல்லும் உச்சநீதிமன்ற, அரசாங்கத்தின் செயலுக்கே துணை நின்றது)

அதனால் நீங்கள் சொல்லமுடியும். இடைவிடாதவேலைகள்… வேலைகள்

நாட்டிலேயே எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் அவற்றை ஓரம்கட்டி வைத்துவிட்டு செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை இதற்கெல்லாம் மேலான மேற்குவங்க தேர்தலை வென்றாக வேண்டும். அதற்காக நாட்டின் உள்துறை அமைச்சர் மோடியின் நம்பிக்கைக்குரிய அமித்ஷா தனது இலாக்கா பணிகளை மூட்டைக்கட்டி வைத்து விட்டு மேற்குவங்கத்தின் தேர்தல் வேலைகளில் பல மாதங்களாக முழு கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது.

தனது கட்சியின் கொலைவெறி கொள்கைகளை பரப்ப வேண்டியிருந்தது. மேற்குவங்கத்தின் மூலை முடுக்குகளிலெங்கும் நகரங்கள் முதல் பழங்குடி கிராமங்கள் வரை மனிதர்களுக்கு எதிராக மனிதர்களை பகையுணர்வோடு பார்க்க தூண்டுகின்ற வகையில் நிற்க வைக்க வேண்டியிருக்கிறது.

இந்த தேர்தலை கடந்த காலங்களை போல ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்க முடியும். ஆனால் பாஜக-வுக்கு இது கைப்பற்ற வேண்டிய புதிய இடம் அதோடு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் மோடியின் ஆட்களை வோட்டிங்கை கண்காணிக்கிற பேரில் தங்களது திட்டங்களை செயல்படுத்த தொகுதி தொகுதியாக மாற்றி கொண்டு செல்ல நேரம் தேவைப்பட்டது.

ஒரு மாதம் முழுதும் எட்டு கட்டங்களாக தேர்தலை தேர்தல்கமிசன் (நம்புங்கள் இதுவும் சுயமாக செயல்படக்கூடியதுதான்) ஏப்ரல் 29 வரை நடத்தியது. மற்ற கட்சிகள் கொரோனா தொற்று அபாயத்தை சுட்டிக்காட்டி தேர்தல் அட்டவணையை பரிசீலித்து மாற்றியமைக்க கேட்டுக்கொண்டன. இதை தேர்தல் கமிசன் ஏற்க மறுத்து பாஜக-வின் திட்டத்திற்கேற்பவே செயல்பட்டுக்கொண்டிருந்தது. பிரச்சார வீடியோக்களை பார்த்திருக்க வேண்டும். பாஜக-வின் நட்சத்திர பிரச்சாரகர் பேச்சாளர் மோடி வெற்றிகளிப்பில் மாஸ்க் போடாமல் மாஸ் காட்டினார்.

அந்த கூட்டத்தில் நெரிசலாக கூடியிருந்த மாஸ்க் போடாத மக்களிடம் தனது வழக்கமான பாணியில் பிரச்சாரம் செய்தார். பெரும் எண்ணிக்கையில் கூடி தன்னை கவுரபடுத்தியதற்காக நன்றி கூறினார். அது ஏப்ரல் 17. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் இரண்டு லட்சத்தை தாண்டி மிக வேகமாக ராக்கெட்டை போல எகிறி கொண்டிருந்தது.

இப்போது மேற்குவங்கத்தின் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மேற்குவங்கம் கொரோனாவின் புதிய குடியிருப்பாக மாறியிருந்தது. புதிய மாற்றுரு மூன்றாவது ஸ்ட்ரெயின் எப்படி அழைக்கப்படுகிறது – என்னவென்று யூகியுங்கள் – ஆமாம் “பெங்கால் ஸ்ட்ரயின்” என்று. வங்காள தலைநகரம் கொல்கொத்தாவில் பரிசோதிக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டாவது நபரும் கோவிட் பாசிட்டிவ் ஆக இருக்கிறார். அதற்கேற்ப பாஜக-வும் தாங்கள் வெற்றி பெற்றால் வங்காளத்தின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. சரி இவர்கள் வெற்றிபெறாவிட்டால்?

“நாம் அழுகின்ற குழந்தையை போல அல்லாமல் முயற்சிப்போம்”

எப்படியோ இருக்கட்டும். தடுப்பூசிகள் பற்றிய செய்திகள் என்ன? அவைதான் நம்மை காப்பாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா தடுப்பூசிகளின் மைய தலைமையகமாக இருந்தது உண்மைதானே? உண்மையில் இந்திய அரசு இரண்டு உற்பத்தியாளர்களை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கிறது. அவை சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா (SII) மற்றும் பாரத் பயோடெக். இந்த இரண்டு நிறுவனங்கள்தான் உலகிலேயே மிகவும் செலவுமிக்க தடுப்பூசிகளை தயாரித்து உலகிலேயே மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் தனியார் மருத்துவமனைகளுக்கு சற்றே உயர்த்தப்பட்ட விலைகளுக்கு விற்கப்படும் என்றும் மாநில அரசுகளுக்கு சற்றே குறைக்கப்பட்ட விலையில் விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. இந்த நிலையிலும் கணக்கீடுகள் வெளிபடுத்துவது அந்த நிறுவனங்கள் மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசிகள் மூலம் அநியாய லாபம் ஈட்டுகின்றன என்பது உண்மை.

மோடியின் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் காலியான டப்பாவாக காட்சியளிக்கிறது. நூற்றுக்கணக்கான மில்லியன் (10 லட்சம்) மக்கள் ஏற்கனவே நிச்சயமற்ற எந்த உத்தரவாதமுமில்லாத வாழ்க்கையை வாழ தள்ளப்பட்டுள்ளனர். இந்த கொரோனா காலத்தில் எந்த வருமானத்திற்கும் வழியில்லாமல் உயிர் வாழ்வதற்கே தவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் தேசிய ஊரக வேலை உத்திரவாத சட்டத்தின்(NREGA) கீழ் கிடைக்கும் அற்ப சம்பளத்தை நம்பியே வாழ்க்கையை நடத்துகின்றனர்.

2005-ல் காங்கிரசு ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது. பசியின் விளிம்பில் வாழ்ந்து வரும் மக்களிடம் மாத வருமானத்தில் பெரும்பகுதியை தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள செலவழிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இங்கிலாந்தில் தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசம் மட்டுமல்ல அடிப்படை உரிமையாகும். தடுப்பூசிகளை முறைகளை மீறி போட்டுக்கொண்டால் வழக்கு பாயும். இந்தியாவில் தடுப்பூசிகள் அவசியம் பற்றிய பிரச்சாரம் கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபத்தை மையமாக கொண்டுள்ளது.

இந்த காவிய பேரழிவு பற்றி நமது மோடி கூட்டணியிலுள்ள இந்திய தொலைக்காட்சி சேனல்களில் எல்லோரும் பயிற்சி பெற்ற ஒரே குரலில் பேசுவதை நீங்கள் கவனிக்கலாம். இந்த “அமைப்பு” செயலிழந்துவிட்டது இதை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். நோய் தொற்று இந்தியாவின் சுகாதார பராமரிப்பு “அமைப்பை” வென்றுவிட்டது.

இந்த அமைப்பு செயலிழந்து விட்டதாக சொல்வது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. இந்த அமைப்பு இருக்கத்தான் செய்கிறது. இருந்த கொஞ்ச நஞ்ச மருத்துவ உட்கட்டமைப்பை இந்த மோடி அரசும் இதற்கு முன்னிருந்த காங்கிரசு அரசும் கொஞ்ச கொஞ்சமாக வேண்டுமென்றே அகற்றிவிட்டது. பொது மருத்துவ சுகாதார அமைப்பு இல்லாமலிருக்கும் நாட்டில் தி்டீரென இம்மாதிரியான உலகதொற்று அபாயம் வந்தால் இப்படித்தான் நடக்கும். இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.25 சதவீதத்தை மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிடுகிறது.

இது உலகின் பெரும்பாலான நாடுகள் மிகவும் பின்தங்கிய ஏழைநாடுகள்கூட செலவிடுவதை விட மிகவும் குறைவு. இதுகூட உயர்த்தப்பட்ட அளவாகத்தான் இருக்கும் ஏனெனில் முக்கியமான விசயங்கள் ஆனால் சுகாதார துறையால் கட்டாயமாக தகுதிபெறாத விசயங்கள் அதில் நழுவப்பட்டுள்ளது. அதனால் உண்மையான புள்ளிவிவரம் 0.34 சதவீதத்தை விட சிறிது அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் துயரம் என்னவென்றால் இத்தகைய பாழ்படுத்தப்பட்ட ஏழை நாட்டில் 2016-ல் Lancet அறிவியல் பத்திரிகை நடத்திய ஆய்வில் நகர்புறத்தில் 78 சதவீதமும் கிராமப்புறங்களில் 71 சதவீதமும் சுகாதார அமைப்பு தனியார் கைகளில் விடப்பட்டுள்ளது. பொதுத்துறைகள் வசமிருந்த உள்கட்டுமானங்கள் முறையாக தனியார்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. ஊழல் நிர்வாகிகளால் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் காப்பீட்டு திட்ட ஏமாற்றுகள் மூலம்.

சுகாதாரம் பேணுதல் ஒரு அடிப்படை உரிமை. எந்த ஒரு தனியார் நிறுவனமும் கட்டணமில்லாமல் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவும் நோயுற்றவர்களுக்கு மருத்துவமும் இறக்கும் தருவாயில் இருப்போருக்கு சுகமளித்தலும் நிச்சயமாக செய்யாது. இப்படிப்பட்ட நிலையில் வறுமையில் வாடும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவில் மருத்துவசேவையை அரசே ஏற்று நடத்தாமல் தனியார் நிறுவனங்களின் லாபம் குவிக்கும் நோக்கத்துக்கு கையளித்த்து ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த அமைப்பு செயலிழக்கவில்லை. அரசாங்கம் மக்களை தங்களின் நலனுக்காக செயல்படும் உணர்ச்சிகளற்ற பொம்மைகளாக கருதுவதால் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகளை விதியே என்று எளிதாக கடந்துவிடுவார்கள் என்ற மிதப்பில் அதிகாரம் நீடித்து நிலைக்கும் என்று செயல்படுகிறார்கள். அரசாங்கம் தோற்றுவிட்டது. தோற்றுவிட்டது என்பது கூட சரியான வார்த்தை இல்லை நாம் இங்கே சாட்சிகளாக பார்த்தக்கொண்டிருப்பது தங்களது கடமையை தெரிந்தே அலட்சியம் செய்யும் குற்றச்செயலை மட்டும் அல்ல! ஆனால் மனித சமூகத்திற்கு எதிரான ஒரு பூரணமான குற்றத்தை!

வைராலாஜிஸ்டுகள் இந்தியாவில் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகு சீக்கிரம் ஒரு நாளைக்கு ஐந்து லட்சத்தை தொட்டுவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள். அநியாயமாக பலியாகும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாத அளவு அதிகமாகும் என்று எச்சரிக்கிறார்கள். நமக்கு காத்திருக்கும் பயங்கரமோ அல்லது இழிவுபடுத்தலோ எதையும் அறியாமல் வாழ்கிறோம். எல்லாவற்றுக்கும்மேலாக மனித கவுரவம் இழிவுபடுத்தப்படுகிறது. மௌனமாக இருக்க வேண்டிய காலமா இது?

“மோடி ராஜினமா செய்ய வேண்டும்” என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவுகிறது. மோடி என்ற தீர்க்கதரிசி சடலங்களின் பேரணியில் உரை நிகழ்த்துகிறார் என்பதாக மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

வரலாறெங்கும் கொடுங்கோலர்களின் வரையறைகளை தீர்மானிக்கப்போவது வேறுயாருமல்ல! அவர்கள் யாரை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் அந்த “அப்பாவி மக்கள்தான்”.

படிக்க :
♦ கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !
♦ இந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்

இந்தியாவில் இருக்கும் நாம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழும் நமது தன்மைக்காக எப்படி பெருமைப்பட்டுக் கொள்கிறோம்? மத்திஸ்துவம் செய்து கொள்வதற்கு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இருப்பதற்கு நமது கோபத்தை அடக்கி கொள்வதற்கு எவ்வளவு அழகாக நமக்கு நாமே பயிற்சி பெற்றிருக்கிறோம்? நம்மால் ஒரு சமத்துவத்தை பெற இயலாத தன்மையை எப்படி நியாயபடுத்திக்கொள்கிறோம்? நமது அவமானங்களை சகித்துக் கொள்ளுமளவு எவ்வளவு பலகீனமாக இருக்கிறோம்?.

அதனால் அவர்களால் ஒன்றிணைக்கப்பட்ட நரகத்தில் இங்கே நாம் இப்போது இருக்கிறோம்.  ஜனநாயகத்தை உயிர்ப்போடு இயங்கவைக்க அவசியமான அத்தனை சுயாட்சி பெற்ற நிறுவனங்களும் சமரசம் செய்துகொண்டு அடங்கி போய்விட்டன. ஒரே ஒரு நோய்தொற்று மட்டும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.


மூலக்கட்டுரை : அருந்ததிராய்
மொழியாக்கம் : மணிவேல்
நன்றி : The Guardian