Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 466

நூல் அறிமுகம் | பொதுவுடமை என்றால் என்ன ? | The ABC of Communism

பொதுவுடமை என்றால் என்ன ? | The ABC of Communism 

மாமேதை லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட போல்ஷ்விக் கட்சியின் ஆரம்பகாலத் தோழர்களான புகாரின், புரோயோ பிரொஷென்ஸ்கி ஆகியோரால் எழுதப்பட்டு, உலகம் முழுவதும் பொதுவுடமை என்றால் என்ன என்பதைக் கற்றுத் தருவதற்கான துவக்கநிலை பாடப் புத்தகமாக பல்லாண்டுகாலமாக பயன்பட்ட நூல்.

மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு நிகழ்வுகளின் பகுதியாக பாரதி புத்தகாலயம் மீள்பதிப்பு செய்த செவ்வியல் நூல்களின் வரிசையில் The ABC of Communism என்று ஆங்கிலப் பெயரில் வெளிவந்த நூலின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு.

காலம் உருண்டோடி இருந்தாலும் அடிப்படைகள் மாறவில்லை என்பதால் இன்றைக்கும் பொதுவுடைமை குறித்து வாசிக்க முயலும் ஒருவர்க்கு பயன் மிகு துவக்க நூல்.

நமது கட்சித் திட்டம், முதலாளித்துவ சமூக அமைப்பு, முதலாளித்துவ சமூக அமைப்பின் வளர்ச்சி, கம்யூனிசமும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், முதலாளித்துவத்தின் வளர்ச்சி எவ்வாறு கம்யூனிஸ்ட் புரட்சிக்கு இட்டுச் சென்றது (ஏகாதிபத்தியம், யுத்தம் மற்றும் முதலாளித்துவத்துவத்தின் வீழ்ச்சி), இரண்டாவது மற்றும் மூன்றாவது அகிலம், சோவியத் அதிகார அமைப்பு, கம்யூனிசமும் தேசிய இனப்பிரச்சனையும், ராணுவ அமைப்பு தொடர்பான கம்யூனிஸ்டுகளின் செயல்திட்டம், பாட்டாளி வர்க்க நீதிமுறை, கம்யூனிசமும் கல்வியும், கம்யூனிசமும் மதமும் ஆகிய உட்தலைப்புகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு தோழரும் இதனை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன் மூலம் கம்யூனிசத்தின் நோக்கங்கள் மற்றும் எதிர்காலக் கடமைகள் குறித்த ஒரு புரிதலைப் பெற முடியும். (நூலிலிருந்து)

நூல்: பொதுவுடமை என்றால் என்ன?

ஆசிரியர்: நிகோலாய் புக்காரின்,
இவ்ஜெனி புரோயோ பிராஷென்ஸ்கி.
தமிழில்: கி. இலக்குவன்.

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 24332424, 24356935

பக்கங்கள்: 296
விலை: ரூ.260.00

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம்  இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.  பேச  : 99623 90277

  • வினவு செய்திப் பிரிவு

ப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு? சமூக விரோதிங்கதானே !

டிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று வந்த பிறகு, தி இந்து – தினமணி – தினமலர் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள், ரஜினி பற்றிய ஆதரவான செய்திகளை அநேகமாக அனைத்துப் பக்கங்களிலும் வெளியிட்டன. “போராட்டம் கூடாது, போராடும் விஷக்கிருமிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போராடினால் வேலையின்றி தமிழகம் சுடுகாடாகிவிடும்” என்று எழுதிக் குவித்தன. அடுத்த நாளே, ரஜினி மிகச் சரியாக, துணிச்சலாக பேசியிருக்கிறார் என்று தமிழருவி மணியனது பேட்டியை வெளியிட்டது தி இந்து.

இப்படி, தமிழகமே ரஜினியின் கருத்தை ஆதரிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க இவர்கள் முயன்றாலும் உண்மையில், சிறுகடை வியாபாரிகளும், தொழிலாளர்களும், சாதாரண மக்களும் என்ன சொல்கிறார்கள். இங்கே நாம் சந்திப்பது, சென்னை பட்டினம்பாக்கம் மீனவக் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய மக்கள்.

கோபால், கடைகளுக்கு சோடா  போடுபவர், வடபழனி.சினிமாவுக்கும், அரசியலுக்கும் என்ன வித்தியாசம்னே ரஜினிகாந்துக்கு தெரியல… யாரோ எழுதிக்கொடுத்தத பேசுற மாதிரி இருக்கு. எனக்குத் தெரிஞ்சு வெசக்கிருமின்னு போலீசத்தான் சொல்றாருன்னு நெனக்கிறேன்.

கருப்பசாமி, பெட்டிக்கடை வியாபாரி, டுமீல்குப்பம்.காக்கா, குருவிய சுட்ட மாதிரி அப்பாவிங்கள சுட்டுக்கொன்னுருக்கான் போலீசுகாரங்க. இந்த ரஜினிகாந்த் என்னான்னா போராடுனா சுடுகாடாயிடும், விசக்கிருமிகள் உள்ள பூந்துட்டாங்கன்னு படம் காமிக்கிறாரு. இப்படி சுட்டுக்கொன்னுட்டேயிருந்தா கண்டிப்பா சுடுகாடாத்தான் தமிழ்நாடு மாறும்… இவருக்கென்னா, அறிக்கைய வுட்டுட்டு இமயமலைக்கு போயிருவாரு… வேற எதாவது நல்ல கேள்வியா கேளுப்பா?

ஆரோக்கியமேரி மற்றும் டுமீல்குப்பம் பெண்கள்.
ரஜினிகாந்த்து யாருமில்ல.. மோடியோட ஆளுதான்பா. ஒரு சொட்டு தண்ணிகூட தரமாட்டேன்னு சொன்னவரு, தமிழ்நாட்டுக்கு வந்தா தோச சுட்டுத் தருவிங்களான்னு கேக்குறாரு. தோச என்ன தோச, முட்ட தோசையே சுட்டு தர்றோம். வரச்சொல்லு பாக்கலாம்.

போராடக்கூடாதாம். ரஜினி சொல்லியா அந்த கம்பெனிய மூடுனாங்க? ஜல்லிக்கட்டுல மட்டும் இன்னாவாம், சும்மாவா கொடுத்தாரு மோடி? மோடியோட கூட்டணி வெச்சுகினு கண்டபடி பேசிக்கினு இருக்காரே… ஓட்டு கேட்டு வரட்டும், நல்லா கேக்குறோம்…

சுந்தரி, (48 வயது – புகைப்படம் தவிர்த்தார்)
ரஜினி சொல்லுறது 100-க்கு 100 தப்புப்பா… எம் பொண்ணும் ரஜினியோட ரசிகர் தான்… நேத்துகூட இதப்பத்தித்தான் பேசிட்டிருந்தோம். எனக்கும் அவளுக்கும் ஒரே சண்ட.

எனக்குத் தெரிஞ்சு சமூக விரோதி யாருன்னா ரஜினிதான். இந்த மனுசன் காலா படத்துக்காகத்தான் கவர்மெண்டுக்கு ஆதரவா இப்போ பேசிக்கிட்டிருக்காரு.

விஜயகாந்து ஒருத்தரு. எப்பப் பாத்தாலும் குடிச்சிட்டு ஔருவாரு, இந்தாளு குடிக்காமயே ஔருராரு. நீ வேணும்னா பாரு… விஜயகாந்துக்கு நடந்ததுதான் ரஜினிக்கும் நடக்கப் போகுது…

ஆரோக்கியராஜ், ஏ.சி. மெக்கானிக்.
சமூக விரோதிங்கன்னு ஆஸ்பத்திரியில சொல்லியிருந்தா அங்கயே அவரயும் அட்மிட் பண்ணிருப்பாங்க. இவரோட பேச்சு, ஃபுல்லா பி.ஜே.பி. வாய்ஸ்தான் சார். அவருக்கு என்ன… காலா படம் ஓடனும்!

சரண், ஏ.சி. மெக்கானிக்.
சமூக விரோதின்னு ரஜினி யாரயெல்லாம் சொல்றாரு தெரியுமா… போராடுர நம்மளத்தான்… இதெல்லாம் கஷ்டப்பட்டு, அடிபட்டு அனுபவிக்கிறவனுக்குத் தான் வலி தெரியும்… காசுக்கு நடிக்கிற ரஜினிக்கெல்லாம் எங்களோட கஷ்டம் எப்படி புரியும்?

பெருமாள், ஆட்டோ ஓட்டுனர், வேளச்சேரி.
தமிழக மக்களத்தான் சமூக விரோதிங்க, விஷக்கிருமிங்கன்னு சொல்றாரு ரஜினிகாந்த். காந்தி கூடத்தான் போராடுனாரு.. போராட்டம் இல்லாம எதாவது ஒன்னாச்சும் நடந்திருக்கா? இதெல்லாம் சும்மா ஆதாயத்துக்காக பேசுறாருங்க…

சக்திவேல், துப்புரவுத் தொழிலாளி.
போராட்டம் நடத்திக்கினே இருந்தா சுடுகாடா மாறிடும்கிறாரு… செரி போராடலன்னா வல்லரசு ஆயிடுமா?

முகமது அன்வர், மீனவர், பட்டினம்பாக்கம்.
கலகம் பண்ணலன்னா எதுவுமே கெடைக்காது… போராட்டமுன்னு ஒன்னு நடக்கலன்னா, ஜல்லிக்கட்டையே அழிச்சிருப்பாங்க. போராடித்தான்  நம்ம உரிமையை பெற்றிருக்கோம்.

தூத்துக்குடியில என்ன அவரு பொண்டாட்டி, புள்ளங்கள கடத்துறதுக்கா போறோம், சமூக விரோதின்னு சொல்றதுக்கு… கேன்சர உருவாக்குற ஸ்டெர்லைட்டதானே வேணான்றோம்.

சார், நான் சொன்னேன்னு போடுங்க… ரஜினி ஒரு பைத்தியக்காரன்… ஒரு நாள் எங்க கூட வந்து வெயில்ல நின்னு வேல செய்யச் சொல்லுங்க, அப்ப தெரியும் போராடனுமா வேணாமான்னு!

ரஞ்சித், மீனவர்.
தூத்துக்குடி போராட்டத்துல விஷக்கிருமிகள் உள்ள வந்து என்ன பண்ணுனாங்கன்னு சொல்லுவாரா ரஜினி…. ஏ.சி. ரூம்ல ஒக்காந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசக்கூடாது.. எங்க கூட கடலுக்கு வரச்சொல்லுங்க… கஷ்டம்னா என்னன்னு புரியும்…

வளர்ச்சி வேணுமுன்னா போராடாதேன்றாரு, அதுக்கு முதல்ல உசுரோடு இருக்கனுமே?

முத்துராஜ், மோர் வியாபாரி.
நான் தூத்துக்குடிகாரன். என்னோட சொந்தக்காரப் பையனும் அடிபட்டு ஆஸ்பத்திரியிலதான் கெடக்குறான்.

ஏன் போராடுராங்க? கேன்சர் வருது, சுத்தமான தண்ணி, காத்து வேணுமுன்னுதானே? 99 நாளா மக்கள் போராடும்போது இந்த ரஜினி எங்கே போயிருந்தாரு. போனவாரம் 13 பேரை சுட்டுக் கொன்னப்ப போலீசை கண்டிச்சு அறிக்கை விட்டாரு. சுட்ட 9 நாளுக்குப் பெறவு தூத்துக்குடி போயிட்டு வந்து, விஷக்கிருமிகளாலத்தான் போலீசு சுட்டாங்கன்னு சொல்றாரு. யாரு இந்த விஷக்கிருமின்னு சொல்லுவாரா இந்த ரஜினி?

சேகர், கார் டிரைவர்.
போராட வேணாம், கோர்ட்டுக்கு போங்கன்னு சொல்றாரு ரஜினி. அதே கோர்ட்டு தானே 2 மொற ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தாங்க…. மக்கள் என்ன பொழுது போகலன்னா போராடிக்கிட்டு இருக்காங்க…. ஒன்னுமில்லங்க, இவர இயக்குறது பி.ஜே.பி.காரனுங்க. அதனால அவுங்க சொல்றத அப்படியே வாந்தியெடுக்குறாரு அவ்ளோதான்.

ஆசிக் – பழையபொருள் வாங்கி விற்பவர் (வலது), ராஜசேகரன்- ஆசிரியர் (ஓய்வு)

ஆசிக், காயலாங்கடை.
இதே ஸ்டெர்லைட் ஆலைய மஹாராஷ்டிரால வேணாம்னுதானே போராட்டம் பண்ணி வெரட்டி விட்டாங்க… அப்ப மராட்டியர்களும் சமூக விரோதிகளான்னு ரஜினிதான் சொல்லனும்.

ராஜசேகரன், ஆசிரியர் – ஓய்வு.
சிஸ்டம் சரியில்லன்னாரு… எப்படிங்க சரி பண்ணப்போறாரு…. சும்மா ஆக்‌ஷன் கொடுத்துக்கிட்டே இருக்காரு… படம் பிரச்சினையில்லாம ஓடனும்ல.. அதான் கவர்மெண்ட அட்ஜட்ஸ்ட் பண்ணிட்டு போறாராம்…

மருது, பால் வியாபாரம்.
ரஜினி சொல்றதெல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்கக்கூடாது… இங்கிருந்து போறப்ப நடிகனா போறேங்குறாரு…. சிஸ்டம் சரியில்ல போராடனும்கிறாரு, அடுத்த நாள் போராட்டம் நடத்துனா சுடுகாடு ஆயிடும்கிறாரு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா கடவுளாளக் கூட இந்த நாட்ட காப்பாத்த முடியாதுன்னாரு, இப்ப என்னன்னா அந்தம்மா இருந்தா இரும்புக்கரம் கொண்டு அடக்கிருப்பாங்கன்னு சொல்றாரு. மொத்தத்துல லூசுங்க அவரு…

தாத்தா, பாட்டன் வேசத்துல நடிக்க வேண்டியவரு, இன்னமும் காலேஜ் ஸ்டூடன்டாவே நடிச்சி மக்கள முட்டாளாக்கினது போதாதுன்னு, இப்போ அரசியலுக்கு வந்து நாட்டையே குட்டிச்சுவராக்கப் போறாரு.

மஞ்சு,  (புகைப்படம் தவிர்த்தார்)
நாங்க எங்க பிரச்சினைகளுக்காகத்தானே போராடுறோம், இவருக்கு என்னா பிரச்சினயாம் இப்போ. ஜல்லிக்கட்டுக்கு போராடித்தானே வெற்றி கெடச்சுது. இந்த மீடியாக்காரங்க தான் ரஜினிய பெரிய ஆளாக்குனாங்க… இப்ப அவுங்களயே திட்டிட்டாருல்ல… எனக்கு தெரிஞ்சு ரஜினிதாங்க உண்மையிலேயே சமூக விரோதி.

ராபின், பி.காம்.
சமூக விரோதி, விசக்கிருமியெல்லாம் காலா படம் பிரச்சினையில்லாம ஓடனும்னுதான். ஆளுங்கட்சி சப்போர்ட் வேணும்ல… போராடாம எது எதெல்லாம் நமக்குக் கெடச்சிருக்குன்னு ரஜினிய சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். சரி போராடம இருந்தா செடி, கொடியெல்லாம் தானா வளர்ந்துடுமா, இல்ல குடிக்க நல்ல தண்ணிதான் கெடைக்குமா? எல்லாமே போராடுனாதானே கெடைக்குது.

ஷியாம் மற்றும் நண்பர்கள்.
மேட்டர் ஒன்னுதான் ப்ரோ, ரஜினி மோடி சப்போர்ட்டர், அப்போ நாமோ யாரு? சமூக விரோதிங்கதானே!

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

கடை சரக்கான கல்வியும் காவிமயமான கல்வியும் !! பேராசிரியர்கள் உரை

“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில், நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது.

அந்நிகழ்வில் “கல்வியில் காவிமயம்” என்ற தலைப்பின் கீழ் விவேகானந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர். அ. கருணானந்தன், “வியாபாரமான உயர்கல்வியும், நிர்மலா தேவி விவகாரமும்” என்ற தலைப்பின் கீழ் மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ. சீனிவாசன் ஆற்றிய கருத்துரைகளின் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…

***

“கல்வியில் காவிமயம்” என்ற தலைப்பின் கீழ் விவேகானந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர். அ. கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை…

“வியாபாரமான உயர்கல்வியும், நிர்மலா தேவி விவகாரமும்” என்ற தலைப்பின் கீழ் மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ. சீனிவாசன் அவர்கள் ஆற்றிய உரை…

ஸ்டெர்லைட் அரசாணை : இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காகிதக் கப்பல் ! கருத்துப் படம்

0

ஸ்டெர்லைட் அரசாணை: இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காகித கப்பல் !

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.
நன்றி: fb.com/rsyftn

பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் !

பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் (Beti Bachao, Beti Padhao (BBBP) – பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்) என்று 22.01.2015 அன்று ஆர்ப்பரித்தார் மோடி. ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன?

2016-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப்பிரிவுகள் ஆணையம் (NCRB) அளித்துள்ள தகவல்களின் படி இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் (பாலியல் குற்றங்கள் உட்பட) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகின்றன.

2014-ஆம் ஆண்டில் 89,423 குற்றங்களும், 2015-ஆம் ஆண்டில் 94,172 குற்றங்களும், 2016-ஆம் ஆண்டில் 1,06,958 குற்றங்களும் என வருடத்திற்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சதவிகிதங்களின் அடிப்படையில் பார்க்கும் போது 2014-இல் 20.1% , 2015-இல் 21.1% மற்றும் 2016-இல் 24.0% என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பாரத மாதாவின் புனித பூமியில் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் – மாதிரிப்படம்

2012-இல் அறிமுகப்படுத்தப்பட்ட போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மட்டும் இதுவரை 37,022 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 4,954 வழக்குகளுடன் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும், 4,815 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், 4,717 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இதே மூன்று மாநிலங்களும் தான் குழந்தை கடத்தலிலும் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

இந்தியா முழுவதும் பதியப்பட்டுள்ள 54,723 குழந்தை கடத்தல் வழக்குகளில், உத்திரப்பிரதேசத்தில் 9,657 வழக்குகளும், மஹாராஷ்டிராவில் 7,956 வழக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 6,016 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2015-இல் 10,854 ஆக இருந்து 2016-ஆம் ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி 19,765 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

2016-ஆம் ஆண்டில் 42,196 நபர்களுக்கெதிராக பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டது. ஆனால் நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் 3,859 பேர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறியப்பட்டுள்ளனர் மேலும் 9,111 பேர் இவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வல்லுறவு குற்றவழக்குகளில் 24,007 பேர் கைது செய்யப்பட்டு 2,241 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுனர், 5,693 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில்  பெருநகரங்களைப் பொருத்தவரையில் தலைநகர் டெல்லியில் தான் அதிகப்படியான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் எண்ணிக்கை அளவில் ஒப்பிடும்போது, டெல்லியில் நடக்கும் குற்றங்கள் சிறு அளவில் குறைந்துள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பை, பெங்களூரு, புனே, லக்னோ ஆகிய நகரங்கள் பெண் குழந்தைகளுக்கெதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.  இந்த நகரங்களில் குற்றங்களின் விகிதாச்சார  எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்திருப்பது வாழ்வதற்கான சூழல் மிகவும் மோசமாகி வருவதை வெளிப்படுத்துகிறது.

பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில், மிக மோசமான மாநிலங்களாக உத்திரப்பிரதேசமும் அதைத் தொடர்ந்து மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழிப்பதில் மிக மோசமான இடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது. 2016-ஆம் ஆண்டில் மட்டும் மத்தியப்பிரதேசத்தில் 2,479 பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி சீரழிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக மராட்டியம்(2,333), உத்திரப்பிரதேசம்(2,115), ஒடிசா(1,258), மேற்கு வங்கம்(719) என இந்த எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.

இப்போது பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் திட்டத்திற்கு வருவோம். சுமார் 100 கோடி முதலீட்டில் பெண் குழந்தைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் உட்பட எல்லா மாநிலங்களிலும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது கிணற்றில் போடப்பட்ட கல்லாகத்தான் இருக்கிறது.

இந்தத் திட்டத்தை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக 28.06.2015 அன்று ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்க, உடனேயே #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உருவாக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய டிரெண்டிங் ஆனது என்பது வரலாறு. அவ்வளவே தான் மோடி நினைத்ததும் நடந்ததும்.

மேற்கண்ட புள்ளிவிவரங்கள் குறித்து மோடி அண்ட்-கோ-விற்கு தெரியாதா என்ன? ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்ற கதையாக இவையெல்லாம் செல்பிக்காக, பிரபலத்துக்காக ஏங்கும் உயர்தர நடுத்தட்டு வர்க்கங்களுக்காகவென்றே பிரத்தியேகமாகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் சில நிகழ்வுகள் அவ்வளவே…

இதையன்றி இதே சமயத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கலாம், நாட்டு வளங்களைத் தனியார், தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கலாம், கோமாதாவின் பெயரால் அப்பாவி முசுலீம்கள் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் இவ்வளவு ஏன் அன்றைய தினம் எத்தனையோ இளம்பிஞ்சுக் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.

இவ்வளவு ஏன்? பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் என்று ஆர்ப்பரித்த மோடி, சமீபத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு மிகவும் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆசிபா குறித்தோ, அல்லது உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ-வால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி குறித்தோ வாய் திறக்கவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பா.ஜ.க.-வும் அதன் அமைப்புக்களும் நேரடித் தொடர்பு கொண்டிருந்தது கண்கூடாக நிரூபிக்கப்பட்ட போதிலும் மோடியின் இதயம் கணக்கவில்லை.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது போன்ற திட்டங்கள் எல்லாம் நம்மை எளிதில் தன்வயப்படுத்திக் கொள்ளும்; ஆனால் இதனால் சமூக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆணாதிக்கமும், சாதி-மத ஆதிக்கமும் கொண்ட பிற்போக்குத்தனமான நாம் வாழும் இந்த சமூகம் பெண்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவிவரும் நிலையில், தனியார்மயமும் தாராளமயமும் பெண்களை நுகர்வுப்பொருளாக மாற்றியிருப்பதால், நாடு முழுவதும் பாலியல் வக்கிரங்கள் தீவிரமாகி வருகின்றன.

பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால், இதுவரை கண்டிராத கொடூரமான பாலியல் தாக்குதல்களுக்கு சிறுமிகள் அடுத்தடுத்து ஆளாகின்றனர்.

இச்சீரழிவுகளை முறியடிக்க குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். குற்றங்களைச் செய்வோரே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் போது மக்கள் சட்ட ரீதியான போராட்டங்களோடு பா.ஜ.க அரசை தனிமைப்படுத்துவதும் முக்கியம்.

– வினவு செய்திப் பிரிவு

மேலும் :

ஸ்டெர்லைட் மூடப்பட்டதில் மகிழ்ச்சியே என்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளிகள் !

”ஒரு கை இல்லாமல் வாழ்வதை விட இறப்பது எவ்வளவோ மேலானது” என்கிறார் தூத்துக்குடி புறநகர் பகுதியில் வசிக்கும் 34 வயது கார்த்தீபன். கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளியான கார்த்தீபனின் கை, கன்வேயர் பெல்டில் சிக்கி நசுங்கியது.

கார்த்தீபன் : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது (படம் : சுற்றுச் சூழல் தன்னார்வலர் நித்யானந்த் ஜெயராம்)

உடனடியாக அருகில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கார்த்தீபன். கார்த்தீபனின் பாதிக்கப்பட்ட கையை வெட்டி எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எவ்வளவு கொடுத்தாலும் ஈடு செய்யமுடியாத இழப்பை சந்தித்த கார்த்தீபனுக்கு, சட்டப்படி கொடுக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையைக் கூட கொடுக்காமல் பிறகு வா, நாளை வா எனக் கூறி இழுத்தடித்துள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம். இன்றுவரையில் இழப்பீட்டுத் தொகையை தரவில்லை.

ஸ்டெர்லைட்டைப் பொறுத்தவரையில் கார்த்தீபன் மட்டும் ஒரு விதிவிலக்கான உதாரணம் அல்ல. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், பாதுகாப்பற்ற பணிச்சூழலாலும் காயமடைந்து, உறுப்பிழந்து ஆலையால் கைவிடப்பட்ட பல தொழிலாளர்களுள் அவரும் ஒருவர்.

அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அதிசயகுமார், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக சட்ட உதவி செய்து வருகிறார். தகவலறியும் உரிமைச்சட்டத்தின்படி, கடந்த 2006 – 2010-ம் ஆண்டுகளுக்கிடையே ஸ்டெர்லைட் ஆலையில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் கேட்டு விண்ணப்பித்தார். அதில் கிடைத்த தகவல் அவருக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

அந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஆலையில் ஏற்பட்ட மரணங்களுக்காக சிப்காட் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இருபது. ஒவ்வொரு வழக்கிலும் ’நடவடிக்கை கைவிடப்பட்டது’ என்ற குறிப்போடு வழக்கு இழுத்து மூடப்பட்டிருந்தது. ”ஒவ்வொரு வழக்கும், சட்ட நடைமுறைக்கு வெளியே பணம் கொடுத்து ’பஞ்சாயத்து’ செய்து முடிக்கப்பட்டுள்ளன” என்கிறார் அதிசயக்குமார்.

அதிசயகுமாரின் இந்த வாதத்தை உறுதிப்படுத்துகிறார், அப்பகுதியில் பணிபுரிந்த முன்னாள் ஆலை கண்காணிப்பாளரான பாக்கியராஜ். ’ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் வந்து உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுடன் பேரம் பேசி பணத்தைக் குறைத்து இறுதியில் ஒரு தொகையை அவர்கள் கையில் கொடுத்து கணக்கை முடித்துவிடுவார்கள்” என்கிறார் பாக்கியராஜ்.

அவர் மேலும் கூறுகையில், ”ஸ்டெர்லைட் தமது பாதுகாப்பற்ற பணிச் சூழலில் வேலை செய்ய வட இந்தியத் தொழிலாளர்களைப் பெருமளவில் உபயோகித்திருக்கிறது. அவர்கள்தான் மோசமான பணிச்சூழலில் ஏற்படும் விபத்துகளால் பணிக்கு உபயோகமற்றவர்களாகும் போது எளிதில் தூக்கியெறிவதற்கு வசதியாக இருக்கின்றனர். அவர்களால் தமக்குப் பிரச்சினை குறைவு எனக் கருதுகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்” என்கிறார்

பீகாரைச் சேர்ந்த 25 வயதேயான மாதவ் ஸ்டெர்லைட்டில் பணிபுரிந்து வந்தார். ஆலை விபத்தில் அவரது கையை இழந்தார். ஆனால் அவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை நிர்வாகம் தராமல் இழுத்தடித்தது. அதன் காரணமாக வெறுத்துப் போய் தனது சொந்த ஊருக்கே திரும்பினார். “இங்கு வந்த பின் எனது வாழ்க்கையே வீழ்ந்து விட்டது. பணமின்றி எனது ஊருக்குச் செல்கிறேன். இந்த வீடியோ சேர வேண்டிய மக்களுக்குச் சேரும் என நம்புகிறேன்” என ஊருக்குச் செல்லும் முன் மனம் நொந்து ஒரு வீடியோ பதிவிட்டுச் சென்றுள்ளார்.

ஜாம்பியாவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வேதாந்தாவின் சுரங்கத்தைக் கண்டித்து இங்கிலாந்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தாவின் இத்தகைய மனிதத்தன்மையற்ற செயல்களுக்காக, இந்நிறுவனத்திற்கு பல அமைப்புகள் பல்வேறு வகைகளில் தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன.

கடந்த 2007-ம் ஆண்டே, நார்வே நாட்டின் மக்களின் ஓய்வூதியப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான அரசு அமைப்பான ”நார்வே தொழில் அறத்திற்கான கவுன்சில்”, வேதாந்தா நிறுவனத்தை தனது கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. ”நார்வே அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு” வேதாந்தா நிறுவனத்திலிருந்து தமது பங்குகளை விலக்கிக் கொள்ளுமாறும், இனி வேறெந்த பங்குகளையும் வேதாந்தா நிறுவனத்தில் வாங்கக் கூடாது என்றும் பரிந்துரைத்தது.

மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பு முதலானவற்றை செயல்முறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வேதாந்தா நிறுவனம் மீறியதற்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக தெரிவித்தது.

நார்வேயின் இம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த 2015-ம் மற்றும் 2016-ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனம் கோரியது. அதற்கு பதிலளித்த நார்வே தொழில் அறத்திற்கான கவுன்சில், 2016-ம் ஆண்டில் வேதாந்தாவின் நடவடிக்கைகளை ஆய்வு செய்ததில், தடையை விலக்குவதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தடை தொடரும் என்றும் தெரிவித்தது.

நியமகிரியைக் கொள்ளையடிக்கும் வேதாந்தாவை கண்டித்து சமூக ஆர்வலர்களின் போராட்டம்

தற்போது தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கின்ற நிலையில், சுமார் 3,500 பேர் நேரடியாக பணியிழக்க நேரிடும். இந்த ஆலையைச் சார்ந்து இயங்கும் பிற நிறுவனங்களும் அதன் பணியாளர்களும் இதனால் பாதிப்படையலாம்.

கார்த்தீபனின் மனைவியும் ஸ்டெர்லைட் ஆலையில் பணி புரிந்து வந்தார். தற்போதைய சூழலில் அவரும் பணியிழந்துள்ளார். இவரைப் போன்றே தங்களது வேலையை இழந்த மற்றும் வேலையிலிருந்து வெளியேறிய தொழிலாளர்களும் இருக்கின்றனர்.

பண்டாரம்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி அவ்வாறு வேலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர். ”நானும் எனது வேலையை இழந்துவிட்டேன். அதனால் என்ன? இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்திற்காக பலரும் தமது வாழ்க்கையை இழந்துள்ளனர். அதை ஒப்பிடும்போது, எனக்கு இதெல்லாம் பெரிய விசயமில்லை” என்கிறார் முத்துப்பாண்டி.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், அதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியருக்குக் கடிதம் கொடுக்க தொழிலாளர்களிடம் கையெழுத்து கேட்டது நிர்வாகம். கையெழுத்திட மறுத்துள்ளார் முத்துப்பாண்டி.

”இந்த ஆலை பணிபுரியும் எங்களுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். எனது மனசாட்சிப்படி பார்த்தால் நான் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தும் அதே நிறுவனத்தில்தான் நான் வேலை பார்க்கிறேன். எனது வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியம் கிடைக்குமெனில் இந்த நிறுவனத்தை மூடுவது எனக்கு பிரச்சினையே இல்லை” என்று கூறுகிறார் முத்துப்பாண்டி.

ஸ்டெர்லைட்டில் பணிபுரிந்து வந்த மாலதி ஸ்டெர்லைட் ஆலை குறித்துக் கூறுகையில், ” எப்படியும் வேலை மீண்டும் கிடைத்துவிடும். இப்படி சீல் வைப்பதும், கதவடைப்பதும் தற்காலிகமானதுதான்” என்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அமைதியடைந்து உடலை வாங்கிச் செல்வதற்காகவே தற்போது தற்காலிகமாக ஆலையை மூடியிருக்கிறது மாநில அரசாங்கம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறார் மாலதி.   .

ஸ்டெர்லைட்டில் பணிபுரிந்த மற்றொரு தொழிலாளியான மேரி, ”ஆலை அடுத்தடுத்து மூடப்பட்டும் திறக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்றே புரியவில்லை? இந்த அரசாங்கத்தை நாங்கள் நம்பவில்லை. போலீசையும் நாங்கள் நம்பமாட்டோம். அனில் அகர்வாலால் எங்கள் வலியைப் போக்க முடியாது. நாங்கள் எங்கே போவோம்?” என்கிறார்.

நன்றி: தி வயர், திவ்யா கார்த்திகேயன்.
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு
மூலக்கட்டுரை:Sterlite Workers: ‘Anil Agarwal Can’t Undo Our Pain. Where Do We Go From Here?’

ஊழியர்களை கசக்கிப் பிழிந்தால் இலாபம் ! பட்டியலிடுகிறார் ஒரு டி.சி.எஸ் ஊழியர்

ரு நிறுவனம் தான் தயாரிக்கும் பொருளின் விற்பனையை அதிகரித்து, வாடிக்கையாளர்களை அதிகரித்து, லாபத்தை அதிகரிக்கலாம். அதன் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

ஆனால், விற்பனை மந்தமாக இருக்கும் போது சம்பள உயர்வை குறைப்பது, ஊழியர்களுக்கான வசதிகளை வெட்டுவது, அடிப்படை சலுகைகளை ஒழித்துக் கட்டுவது, பிற செலவினங்களை கட்டுப்படுத்துவது என தொழிலாளர்களை இறுக்கி பிழிந்து, லாபத்தை உயர்த்தி காட்டுவது இன்னொரு உத்தி.

தற்போது $100 பில்லியன் கிளப்பில் நுழைந்துள்ள டிசி.எஸ் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் செலவு குறைப்பு நடவடிக்கைகள் பற்றிய ஒரு ஊழியரின் பார்வை.

நஷ்டம் எப்படி லாபமாக மாறியது?

டி.சி.எஸ் நிறுவனத்துடன், சி.எம்.சி போன்ற 15 துணை நிறுவனங்களையும் இணைத்து டி.சி.எஸ் குழுமம் என்று அழைக்கப்படுகிறது. போன வருடம் வரை லாபம் காட்டிய டி.சி.எஸ் குழுமத்தில் இருக்கும் டி.சி.எஸ் அல்லாத இதர நிறுவனங்கள், இந்த இந்த ஆண்டு இழப்பு காட்டி உள்ளனர். ஆனால், டி.சி.எஸ் மட்டும் லாபம் காட்டுகிறது. இது எப்படி என்று பார்ப்போம்.

டி.சி.எஸ்-ன் சி.ஈ.ஓ ராஜேஷ் கோபிநாதன்

இப்போது டி.சி.எஸ்-ன் சி.ஈ.ஓ ராஜேஷ் கோபிநாதன். இவர், இதற்கு முன் நிதி பிரிவு தலைமைப் பொறுப்பில் (CFO) இருந்தவர்; அதாவது, அவர் நிதித்துறையில் நிபுணர். அந்த பார்வையிலேயே நிறுவனத்தில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். ஒரு சி.ஈ.ஓ போல நீண்ட கால நோக்கில் இல்லாமல் குறுகிய கால நோக்கில் செலவைக் குறைக்கும் முடிவுகளை அமல்படுத்துகிறார்.

டி.சி.எஸ்-லிருந்து சி.எம்.சிக்கு

அனுபவம் வாய்ந்த மூத்த ஊழியர்களை டி.சி.எஸ்-ல் இருந்து சி.எம்.சி-க்கு மாற்றுகிறார்கள். இதன் மூலம் டி.சி.எஸ்-ன் செலவு குறைகிறது. ரூ 12 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்கும் பத்து பேரை CMC-க்கு அனுப்பும் போது, சி.எம்.சி-ன் கணக்கில் செலவு அதிகரிக்கிறது. டி.சி.எஸ்-க்கு ஆண்டுக்கு 1.2 கோடி செலவு குறைகிறது. டி.சி.எஸ்-ன் லாபம் கூடுதலாக காட்டப்படுகிறது.

கூடுதல் நேரம் வேலை செய்தாலும் வாகன வசதி கிடையாது

ஐ.டி நிறுவனத்தின் மூலப் பொருளே ஊழியர்கள் ஆகிய நாம் தான். நாம் 9 மணி நேரம், 10 மணி நேரம், 14 மணி நேரம் என்று கால நேரம் பார்க்காமல் வேலை செய்கின்றோம். இப்படி வேலை செய்கின்ற நமக்குக் கொடுக்க வேண்டிய ஒரு அடிப்படை சேவை போக்குவரத்து வசதி. 8 மணிக்கு, 9 மணிக்கு, 10 மணிக்கு வேலையை முடித்து விட்டு ஊழியர் வீட்டுக்குக் கிளம்பும் போது அவருக்கு வாகனம் (cab) ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

ஆனால், இப்படி வாகன ஏற்பாடு செய்வதற்கு ஒரு புராசஸ் வைத்திருக்கிறார்கள். முன்கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்தால்தான் வாகனம் கொடுக்க வேண்டும். திடீரென்று வாகனம் (cab) தேவைப்படுகின்றது எனில் கிடைக்காது. அப்படி கேட்பதை திட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில்தான் (adhoc) எடுத்துக் கொள்வார்கள். திட்டத்தின்படி அனைத்து தேவைகளும் முடிந்த பிறகு கடைசியாகத் தான் வாகனம் கிடைக்கும்.

அவசரமாக டெலிவரி வேலை இருக்கின்றது, அலுவலகத்தில் தங்கி நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி வருகிறது. வேலையை முடித்து விட்டு வீட்டுக்குப் போக cab கேட்டால் கிடைக்காது; குறைந்தது ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். இப்படி திட்டமிட்டுத் தான் வாகன வசதி பெற வேண்டும் என்று சொல்லி பெரும்பாலான ஊழியர்களின் தேவைக்கு வாகன வசதியையே தடை செய்து விட்டார்கள்.

எனவே வெளியில் கிடைக்கும் cab அல்லது சொந்த வாகனத்தை பயன்படுத்தி போய் விடுகிறோம். இதன் மூலம் cab பயன்பட்டாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. டி.சி.எஸ்-க்கு லாபம் அதிகரிக்கிறது.

பில்லிங் ரேட் உயர்வு

அடுத்தது Billing Rate. ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு மணி நேர வேலைக்கு இவ்வளவு என்ற கணக்கில் வாடிக்கையாளருக்கு பில்லிங் போடப்படும். கடந்த 2 ஆண்டுகளில் பில்லிங் எங்கு எல்லாம் Revise செய்ய வில்லையோ, அங்கு எல்லாம் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் Revise செய்து உள்ளனர். இதனால் $20 பில்லிங் போட்ட ஒரு ஊழியரின் வேலைக்கு இப்போது $25 பில்லிங் போடுகிறது டி.சி.எஸ். ஊழியர்கள் செய்யும் வேலைக்கு வாடிக்கையாளர் கொடுக்கும் அதிக விலை நிறுவனத்தின் லாபத்தில் போய்ச் சேருகிறது.

Fixed Pricing Model

மேலே சொன்ன ஒரு மணி நேரத்துக்கு இன்ன கட்டணம் என்று பில்லிங் போடுவது இதுவரை பரவலாக இருக்கும் முறை. இது Service based வழிமுறை, time and material அடிப்படையிலானது.

இந்த Fixed pricing proposal-ல் வாடிக்கையாளரிடம் உங்களுக்கு இந்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து கொடுக்கிறேன். அதற்கு தகுந்தார் போல், குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேரம் பேசுவது. அதன் பிறகு புராஜக்ட்-ல் எவ்வளவு குறைவான ஊழியர்களை வைத்து வேலை செய்கிறோம் என்பது நிர்வாகத்தின் திறமை. இந்த வகையில் அனைத்து account -யும் Fixed pricing -யில் கொண்டு போக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள். மேலும் பயிற்சி ஊழியர்களை வைத்து வேலையை முடிக்க கட்டாயப்படுத்துகின்றனர்.

பயிற்சி ஊழியர்கள் மூலம் செலவு குறைப்பு

டி.சி.எஸ் அனுபவம் உள்ள நபர்களை வேலைக்கு எடுப்பதை குறைத்திருக்கிறது. கடந்த 6 – 8 மாதங்களாக அனுபவம் வாய்ந்தவர்களை எடுக்கவில்லை.

குறைந்த சம்பளத்தில் பயிற்சி ஊழியர்களை (Trainee) எடுத்து உள்ளனர். ஒரு Account-ல் 20% முதல் 30% trainee இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பயிற்சி ஊழியர் என்பவர் கடந்த 1 ஆண்டுக்குள் சேர்ந்தவர். ஒரு project-ல் 30% பயிற்சி ஊழியர்களை சேர்க்கவில்லை என்றால் ஏன் என்று Business case கொடுத்து Delivery manager-டம் ஏன் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் தேவை என்று ஏற்க வைக்க வேண்டும்.

பயிற்சி ஊழியர் ஒரு ஆண்டுக்குப் பிறகு அந்தத் ‘தகுதி’யை இழந்து விடுவார். எனவே, திரும்பவும் Trainee எடுக்க வேண்டி வருகின்றது.

குறைந்த சம்பளம் பெறும் Trainee-க்கும் முக்கியமான பொறுப்புள்ள வேலை கொடுக்கப்படும். எனவே, வாடிக்கையாளரிடம் அந்த அளவுக்கு பில்லிங் போடப்படும். ஆனால் போதிய அனுபவமும், பயிற்சியும் பெறுவது வரை அவர்களால் வேலையை முழுமையாக செய்ய முடியாது. புதிய ஊழியருக்கு பயிற்சி கொடுப்பது, அவர்கள் பெயரில் செய்ததாக கணக்கு காட்டப்படும் வேலையை செய்து முடிப்பது என்று பிற ஊழியர்கள் மீது வேலைப் பளு அதிகமாகிறது. இந்த வகையிலும் டி.சி.எஸ் லாபத்தை பிழிந்து எடுக்கிறது.

இதனால் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு வாய்ப்புகள் குறைகின்றன. Senior தகுதி உள்ள ஊழியர்கள் புராஜக்ட்-ல் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். RMG-க்கு அனுப்பப் படுகிறார்.

RMG – திருவிளையாடல்கள்

முன்பு எல்லாம் 20 வருட அனுபவம் உள்ள Developerஆக இருந்த ஒருவரது project முடிந்த பிறகு RMG-ல் (Resource Management Group) அவருக்கு Development related project தான் கொடுப்பார்கள். ஆனால் இப்போது, அந்த நிலை இல்லை.

RMG-ல் skill set தகுந்த மாதிரி project கொடுக்க மறுக்கிறார்கள். Skill Set இருக்கோ இல்லையோ, அவர்கள் கொடுக்கும் project யை ஏற்று கொள்ள வேண்டும். அனுபவம் உள்ள ஒருவரை Development project-ல் போடாமல், Testing project-ல் போடுவார்கள் காரணம் கேட்டால் Development-ல் project இல்லை, எனவே Testing கொடுக்கிறோம் என்று கூறுவார்கள்.

கொடுக்கும் project-ஐ எடுக்க வேண்டும் இல்லையெனில், நீங்கள் இந்த project-ஐ எடுக்க வில்லை எனில் மேல் நிலைக்கு புகார் அனுப்புவோம், என்று மிரட்டுவார்கள்.

அவர் Testing project-ல் அதிக சவாலை எதிர் கொள்ள வேண்டி இருக்கும், performance சரியான அளவில் இருக்காது. அவரை PIP-க்கு அனுப்புவது, ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுவது என்று அலைக்கழிக்கிறார்கள்..

நிர்வாகத்திற்கு Billing தான் முக்கியமாக இருக்கின்றதே, தவிர இந்த associate அந்த வேலைக்கு தகுந்தவரா? என்று பார்ப்பதில்லை. ஊழியர்கள் புதிய திறன்களை கற்றுக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளும் வசதிகளிலும் கை வைத்திருக்கிறார்கள்.

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆப்பு

பொதுவாக லே ஆஃப் செய்வதற்கு அவர்கள் சொல்லும் காரணம் திறமையின்மை, skill set-ஐ மேம்படுத்திக் கொள்வது (update) இல்லை ஆகியவை. இப்போது திறன் மேம்பாட்டுக்கான பயிற்சியிலும் கை வைத்திருக்கிறார்கள்.

CMM Standard படி learning portal, certification portal பராமரிக்கப்படுகிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் certification (சான்றிதழ்) பெறுவதற்கான செலவை நிறுவனம் reimbursement செய்ய வேண்டும், இது காலம் காலமாக நடத்து கொண்டு இருக்கின்ற ஒன்று. ஒரு வருடத்திற்கு முன் வரை TCS portal-ல் list ஆகும் எந்த பயிற்சியையும் மேற்கொண்டு அந்த Certificate காட்டி Reimbursement வாங்கி கொள்ளலாம். ஆனால் இப்போது பாதிக்கும் மேற்பட்ட பயிற்சிகளுக்கு reimbursement வாங்க முடியாது.

இதற்கு முன் 1 மாதம் அல்லது 2 மாதம் முன்பு தகவல் தெரிவித்து விட்டு certification தேர்வு எழுதலாம், இப்போது 3 மாதம் முன்பே தகவல் கொடுக்க வேண்டும். project lead, project manager, Delivery Lead ஆகியோரின் approval வாங்க வேண்டும். approval கேட்டும் போது அவர்கள், இது வாடிக்கையாளர் பரிந்துரைத்ததா, இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதாவது இந்த சான்றிதழ் பயிற்சி project-க்கு தேவைப்படுகிறதா? இல்லையா? என்பதுதான் கேள்வி. project-க்கு தேவையாக இருந்தால் மட்டும்தான் ஒப்புதல் கொடுப்பார்கள். அது மட்டும் இன்றி இது ஏன் தேவை என்ற business case-ம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் Delivery manager approve கிடைக்கும்.

இவ்வாறு இந்த வழிமுறையை சிக்கல் ஆக்கி விட்டார்கள். எனவே பலர் certification செய்வதை நிறுத்தி விட்டனர். புதிய திறனை வளர்த்து இதுவரை செய்யாத பணிக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வது சாத்தியமில்லாமல் போகிறது. இதன் மூலமாகவும் டி.சி.எஸ், செலவை மிச்சப்படுத்துகிறது.

ஐ.டி நிறுவனங்கள் எல்லாம் வந்து நமக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள் என்றுதான் நானும் பல காலம் நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் ஆள் கணக்கு காட்டி சம்பாதிக்க நிறைய ஊழியர்கள் தேவைப்பட்டார்கள், அதற்கு ஏற்ற வகையில் வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.

இப்போது அந்த கட்டம் முடிந்து, குறைந்த எண்ணிக்கை ஊழியர்கள், குறைந்த செலவு என்று கணக்கு போட்டு லாபம் ஈட்ட வேண்டியிருக்கிறது. ஊழியர்களை, அதிக வேலை, குறைந்த சம்பளம் என்று பிழிந்து லாபம் ஈட்டுகிறது டி.சி.எஸ்.

– மருது

நன்றி : new-democrats

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பேரா. அ.மார்க்ஸ் – உண்மை அறியும் குழு அறிக்கை | நேரலை LIVE !

3

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினரின் கண்டுபிடிப்புகள் குறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் விளக்குகிறார்.

இடம்:
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல்

நேரலை:

தூத்துக்குடி படுகொலை : சென்னை அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் ரத்து ! போலீசு அனுமதி மறுப்பு !

பத்திரிகை செய்தி                                                                     நாள் : 02.06.2018

அன்புடையீர் வணக்கம்,

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு சட்டமியற்ற வலியுறுத்தியும்  தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் நாளை (03.06.2018 ) மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு நேற்று அனுமதி மறுத்துள்ளது. இதனால் மேற்கொண்டு நீதிமன்றத்திற்கும்  உடனே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேதாந்தாவுக்காக மக்கள் மீது என்கவுண்ட்டர் செய்த போலீசு இப்போது தன்மீதான பழியை மறைக்க அரசிலமைப்பு சட்டத்தில் இருக்கும் கருத்துரிமையை என்கவுண்ட்டர் செய்துள்ளது. ஆகவே நாளை 03.06.2018 மாலை நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்கள்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

போலீஸ் துன்புறுத்தலுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு – மக்கள் அதிகாரம் அறிவிப்பு

போலீசு துன்புறுத்தலுக்கு ஆளாகும் தூத்துக்குடி மக்கள்,
விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்தால் தொடர்பு கொள்ளுங்கள் !

தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போலீசின் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதையொட்டி, தமிழக அரசுக்கும் காவல்துறை டி.ஜி.பி மற்றும் தென்மாவட்ட ஐ.ஜி ஆகியோருக்கும் எதிராக, எமது அமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் தங்கபாண்டியன் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியிருக்கும் தீர்ப்பினை கீழே கொடுத்திருக்கிறோம்.

“The respondents are hereby directed to ensure that the enquiry and investigation conducted by the police, in the cases registered relating to the sterlite copper unit as per the procedures contemplated under the guidelines issued by the hon’ ble supreme court in the case of D.K.Basu. In case if any violation is found, the authorities concerned should initiate legal action against the erred officers.”

“The respondents are further directed to ensure that the residents of Tuticorin and tirunelveli are not subjected to harassment under the guise of enquiry and investigation. Further the inmates and family members of the named accused in any of the cases registered in this regard shall not be disturbed or harassed by the police under the investigation.”

இதன் தமிழாக்கம் கீழ்வருமாறு :

“ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை செய்யும் போலீசார், டி.கே பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றத் தவறினால், அவ்வாறு தவறுகின்ற அதிகாரி மீது அவரது உயர் அதிகாரிகள் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

“மேலும், விசாரணை என்ற பெயரில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த குடிமக்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களையோ, அந்த வீட்டைச் சேர்ந்தவர்களையோ போலீசார் எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதோ, துன்புறுத்துவதோ கூடாது எனவும் உத்தரவிடப்படுகிறது.”

எனவே போலீசின் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் மக்கள், உங்களைத் துன்புறுத்திய போலீசு அதிகாரியின் பெயர், துன்புறுத்திய நாள், நேரம், இடம் போன்ற தகவல்கள், என்ன விதமாகத் தொல்லை கொடுத்தார்கள் என்ற விவரம் ஆகியவற்றை எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி ஆகியோருக்குப் புகார் அனுப்பவும்.

இதன் பிறகும் அத்தகைய தொல்லைகள் தொடர்ந்தால், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட போலீசு அதிகாரியின் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

இது தொடர்பாக சட்ட உதவி தேவைப்படுவோர் வழக்கறிஞர் மருது, 99623 66321 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

நூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிற மொக்க பீசு ! ஓடும் ரயிலில் ரஜினிக்கு செருப்படி !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதிமூன்று பேரை படுகொலை செய்தது அ.தி.மு.க. எடப்பாடி போலீசு. அதன் ரத்தக்கறை காயும் முன்னே ஆர்.எஸ்.எஸ். சங்கி ரஜினி மறைகழண்ட மங்கி போல அப்போராட்டத்தை கொச்சைப் படுத்தினார். சமூக விரோதிகள் – விஷக்கிருமிகள்தான் இதற்கு காரணம் என்றார். போராட்டத்தின் போது  போலீசு மீது கல்  எறிந்தவர்களின்  படங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். எல்லாவற்றுக்கும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும் என்று சாபம் கொடுத்தார். ரஜினியின் சாபம் பலிக்குமா என்று சென்னை செங்கல்பட்டு மின்சார ரயிலில் மக்களிடம் கேட்டோம்! மக்கள் நெருப்பாய் சீறினர்.

சங்கர், திண்டிவனம் கோவிந்தசாமி  அரசு கலைக்கல்லூரி.
மக்கள் அவனை ஏத்தி விட்டது தான் எல்லாரையும் கேவலமா பேசுறான். மக்களுக்கு இப்பதான் அவன் சுயரூபம் தெரியுது. அது நல்லது தான். மீடியாக்காரனுங்க அவனை பெருசு பண்ணி விட்டுட்டானுங்க. என்ன பேசுறோம்னு தெரிஞ்சி தான் பேசுறான். அரசியலுக்கு வரதா சீன் காட்டி சினிமாவை ஓட்டுறான். எவ்ளோ திமிரு.

கிருஷ்ணமூர்த்தி.
நம்மகிட்ட பிராப்ளம் இருக்கு சார். நம்ம பேமிலிக்காக நாம ஓடிக்கினு இருக்கோம். இதனால் ரிட்டையர்டு ஆனவன் எல்லாம் தலைவன் ஆகிடலாம்னு பாக்கிறானுங்க. நாம திருந்தனும்.

பாலாஜி, ஐ.டி. ஊழியர்.
அவருடைய கருத்து, பி.ஜே.பி. கருத்து எல்லாம் ஒன்னு. யாரு சமூக விரோதின்னு பேர் சொல்லுறானுங்களா? வேல்முருகனா, தி.மு.க.வா? தமிழக மக்களா? யார் சொல்லு? சினிமாவா இது பன்ச் டயலாக் பேசுறதுக்கு. அந்தாளு போலீசு எழுதி கொடுக்கிறதை வரி விடாம படிக்கிறான்.

சுரேஷ்.
நடிச்சி சம்பாரிச்சி முடிச்சிட்டானுங்க. இப்போ மக்கள் மீது அக்கறை இருக்க மாதிரி நடிக்க பாக்குறானுங்க. மக்கள் மீது உண்மையிலே அக்கறை இருந்தா இந்த மாதிரி பேசுவானுங்களா? இது சென்ட்ரல் கவர்ன்மெண்டும், போலீசும் எழுதி கொடுத்தது. அதை அப்படியே சினிமா மாதிரி நெனச்சிக்கினு பேசிட்டார்.

பிரேம்நாத்,  இன்ஜினியர், தனியார் துறை.
டீட்டெயிலா  சொல்லனும்னா அந்த ஆளுக்கு ஒன்னும் தெரியாது. சினிமா சூட்டிங், ஏ.சி. ரூம் இது தவிர வேற எதுவும் தெரியாது. துப்பாக்கி வச்சிருந்தா போலீசு ஜனங்களை சுடலாம்னு இருக்குதா? அதைக் கேட்டானா அந்த ஆளு. மக்களை கெடுத்து சினிமா பைத்தியங்களா மாறினா சரியாமாம். ஆனால் போராடினா தப்பாம். அந்த அளவுக்கு மக்களை மடையனா நினைக்கிறார். எல்லாத்தையும் காலா  பட புரமோஷன் போல பாக்கிறார் போல.

ராஜி, தகவல் தொழில்நுட்பம்.  (புகைப்படம் தவிர்த்தார்)
எந்த ஆதாரமும் கொடுக்காம எப்படி சமூக விரோதிகள் காரணம்னு சொல்றாரு தெரியல. எந்த விசாரணையும் இல்ல. எந்த பொறுப்பும் இல்ல. அவரு பேசறதை ஒரு பேச்சாக்கூட எடுக்க முடியாது.

லோகு, கொத்தனார்.
தமிழ்நாட்டுல வந்து ஆட்டுவாராமாம் அவரு. எந்த ஊரு அவரு. அவரு நூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாக்கு விப்பாறு சம்பாதிப்பாரு. இப்ப  யாரை ஏமாத்தலாம்னு பாக்கற. மொக்கை பீசு.

கார்த்திகேயன், தனியார் நிறுவனம்.
எல்லோரும் பாலிடிக்ஸ் பண்றங்க. மீடியாகாரங்க அதுக்கு மேல பன்றாங்க . சமூக விரோதிங்க கலந்துக்கிட்டாங்கன்னு அவரு சொல்றார். போராடுன ஜனங்க அப்படி இல்லனு சொன்னா, அவங்க அப்பாவியா இருக்காங்கன்னு அர்த்தம். அவங்களுக்கு அது தெரியலன்னு நாம எடுத்துக்க கூடாதா, அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி தான் ஓ.பி.எஸ்.ஐயும் இ.பி.எஸ்.ஐயும் முதல் மந்திரியா தேர்ந்தெடுத்தாங்களா? அதுமாதிரி தான் இது.

ஜெயரன்.
ஜல்லிக்கட்டுல ஆட்டோவுக்கு தீ வச்சது யாரு. இரண்டு வருஷம் ஆச்சி. அதுக்கே இன்னும் நியாயம் வரல. இப்ப சுட்டுக்கொன்னுட்டு சமூக விரோதின்னு சொல்றாங்க போலீசு. அதைத்தான் இவரும் சொல்றார்.  இவருக்கு  தெரியும்னா யாரு சொல்லு. இது இன்னா படமா, டீசர் ஓட்றதுக்கு. நூறு நாள் போராட்டம் நடக்கும்போது நீ ஏன் அங்க போகல. ஆடிட்டர் குருமூர்த்தி அப்ப போ’ன்னு சொல்லலையா?

வினோத்குமார்.
பேசுறதுக்கே தகுதி இல்லாத ஆளுங்க. பால்குடம் தயிர்க்குடம்னு தன் கட்டவுட்டுக்கு ஊத்த சொல்லி ரசிச்சவன் அவன். போராட்டம் பத்தி பேசுறதுக்கு அவனுக்கு என்ன யோக்கிதை இருக்கு. காலா டிக்கெட் எப்படி ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு விக்கிறதுன்னு பாக்க சொல்லுங்க. அந்த வேலைக்கு தான் அவர் லாயிக்கு.  கோழைங்க அந்த ஆளு. பி.ஜே.பி. சப்போர்ட்ல பேசுறாரு. இல்லாட்டி காலா படம் ஓடாதுன்னு  பயம். இ.பி.எஸ்.  ஒ.பி.ஸ்க்கே பயப்படுறாங்க. பச்சை துரோகி.

வளையாபதி.
தமிழ்நாட்டு மக்களுக்கு இவரு என்ன சினிமா காமிக்கிறாரா? மக்கள் எப்படி போராடணும்னு இவரு சொல்வாராம் நாம அதை கேட்டுக்கணுமாம். எல்லாம் தலையெழுத்து. நாற்பது வருசமா சினிமா சூட்டிங்கில் இருந்தவரு இப்பதான் வெளியே வந்து  நிஜ சூட்டிங்கை பார்த்து பயந்து போயிருக்கார்.

கோவிந்தன், துறைமுக ஊழியர்.
எச்ச ராஜா மாதிரியே பேசுறார். ஜனங்களுக்கு இல்ல. தன எஜமானன் பி.ஜே.பி.யை குளிர வைக்க பேசுறார். எச்ச ராஜா மாதிரியே உக்கார்ந்து இடத்துலயே விளம்பரம் தேடுறார். இதான் அவர் தனிவழியா? இவர்கிட்ட யாருகேட்டாங்க  காமெடி பீசு கருத்து சொல்லுறதுக்கு ஒரு தகுதி வேணாம்.

கோபி, சரண், சக்திவேல், டூரிசம் அண்டு  கேட்டரிங் மாணவர்கள்.
நம்மளை செருப்பு மாதிரி நினைக்கிறார் அவரு. நம்மள சொல்லணும். நம்ம சினிமா பாக்கிறவங்க தானே எல்லாம் சின்ன பசங்கன்னு நினைக்கிறார். போராடுவது நாம, கருத்து சொல்ல மட்டும் அவரா, இந்த அதிகாரம் அவருக்கு யாரு கொடுத்தது. மக்கள் போராடும்போது போயி ஒளிஞ்சிக்கினு இப்ப வீர வசனம் பேசுறார்.

சஞ்சய், துணை நடிகர்.
“யார் நீ” சின்னப்பையன் கேட்டதுல பயந்து போனாருங்க அவரு. நம்மளையே இப்படி கேக்குறானுங்களே. பி.ஜே.பி.க்கு இங்க யாரும் பயப்படல, சுட்ட பிறகு திருந்த மாட்டேங்குறாங்க. அந்த வெறி. சமூகவிரோதிங்க விஷக்கிருமிங்கன்னு உளருறாரு. “நான் தான் ரஜினின்னு” சொல்ல வச்சிட்டார் ஒரு சின்ன பையன். போலீசு தான் இனிமே அவருக்கு பாதுகாப்பு. போலீசுக்கு பின்னால பதுங்குறார். அதான் போலீசு ஸ்கிரிப்டை வரி விடாம படிக்கிறார்.

கணேசன், டிரைவர்.
நம்மள வெறுப்பேத்துறான் அந்த ஆளு. நூறு நாளு அவுங்க அங்க போராடி சாவாங்கலாம், இவரு அங்க கைய ஆட்டினு போயிட்டு கருத்து சொல்வாராம். வீட்டுக்குள்ள இருக்கும்போது போலீசை திட்டுவாரு. வெளில வந்தா போலீசை பாராட்டுவார். வடிவேல்தான் இவரு.

கதிர், கோடம்பாக்கம் சினிமாதுறை, ஊழியர்.
போட்டோபிளட் மின் விளக்கு பராமரிப்பவர். திருட்டு நாய் அவனை பத்தி பேசாதீங்க, தமிழ்நாட்டு மக்களை வச்சி வளந்துட்டான். போராட்டம் நடத்தும்போது எட்டிப்பாக்கல. இப்ப போலீசு சொல்றத வாந்தி எடுக்கிறான். மனசு ஆறலை அறிவுகெட்டவன்.

  • வினவு புகைப்பட செய்தியாளர்கள்.

கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்

3

“நாமிருவரும் ஒரே அலைவரிசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று உத்திரவாதமளிக்கிறார் ஆதிமூலம். மறைவான கோணத்திலிருந்து அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிரில் அமர்ந்திருப்பவரிடம் ஆதிமூலம் தொடர்ந்து பேசுகிறார்.

தங்கள் குடும்பத்திற்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையேயான பாரம்பரிய உறவு குறித்துச் சொல்கிறார். பிரதமர் மோடி தமிழகம் வந்தால் தங்கள் குடும்பத்தை சந்திக்காமல் செல்லமாட்டார் என பெருமைப்பட்டுக் கொள்கிறார். தனது தந்தை மாதம் ஒருமுறையாவது தில்லி செல்வாரென்றும் பிரதமரைச் சந்திப்பார் என்றும் குறிப்பிடுகிறார்.

அந்தக் காணொலியில் பங்கேற்ற நபர்கள் சாதாரணமானவர்களாக இருந்திருந்தால் இரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடலுக்கும் பெரிய மதிப்பு இருந்திருக்காது; நாலாந்தர அரசியல் புரோக்கர்களின் வழமையான அலட்டலாக கடந்து போயிருபோம்.

ஆனால், ஆதிமூலம் சாதாரணமானவரல்ல; அவர் ஜனநாயகத்தின் ‘நான்காம் தூணில்’ உள்ள செங்கற்களில் ஒருவர், ‘உண்மையின் உரைகல்லுக்குச்’ சொந்தக்காரர்களில் ஒருவர் – தினமலர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தினமலரை நிறுவிய ராமசுப்பையரின் பேரன், தற்போது அந்தப் பத்திரிகையின் வர்த்தகப் பிரிவின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். எனவே மேற்படிக் காணொளியும் அதில் வரும் உரையாடலும் நமது கவனத்திற்கு உரியதாகிறது.

*****

மேற்படி உரையாடல் கோப்ராபோஸ்ட் இணையதளம் நடத்திய மறைபுலனாய்வு நடவடிக்கையில் (Sting operation) ஒரு பகுதியாக வருகிறது. புஷ்ப ஷர்மா என்கிற பத்திரிகையாளர் ‘ஆச்சார்யா அடல்’ எனும் புனைப் பெயரோடு பல்வேறு பத்திரிகை முதலாளிகளையும் நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

தன்னை நாக்பூரில் இருந்து வருபவராகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் நம்ப வைக்கிறார். இந்துத்துவ அமைப்புகளின் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பிரச்சார திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.

தங்களுடைய பிரச்சார திட்டம் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளில் அரசியல் கலப்பற்ற பொதுவான செய்திகளாகவோ ஆன்மீக துணுக்குகளாகவோ விளம்பரமாகவோ வெளியிட வேண்டும் என்கிறார்.

ஆறு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்ட இப்பிரச்சாரத்திற்கு பெரும் தொகை ஒன்றையும் கொடுப்பதற்கு முன்வரும் புஷ்ப ஷர்மா (ஆச்சார்ய அடல்), இது ஒரு நல்ல ‘வியாபார வாய்ப்பு’ எனச் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.

பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட பத்திரிகை கிருஷ்ணர் மற்றும் பகவத் கீதை குறித்த விளம்பரங்களை வெளியிட வேண்டும். தங்களது கட்சி கடந்த முப்பது வருடங்களாக ராமர் மற்றும் அயோத்தியை வைத்து போதுமான வரைக்கும் அரசியல் ஆதாயம் அடைந்து விட்டதால் புதிய குறியீடுகள் தேவைப்படுகிறது என்கிறார்.

பகவத் கீதை மற்றும் கிருஷ்ணரைக் குறித்த துணுக்குகள், செய்திகள் மற்றும் கட்டுரைகளின் மூலம் சமூகத்தில் ஒரு பொதுவான ஆன்மீகச் சூழலை உண்டாக்குவது திட்டம் என்றும், தாங்கள் ‘இந்துத்துவ’ சக்தியாக அறியப்படுவதால் இந்தச் சூழலே தேர்தலின் போது தங்களுக்கான ஓட்டுகளாக மாறி விடும் என்றும் சொல்கிறார்.

இரண்டாவது கட்டமாக, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மாயாவதி போன்ற எதிர்கட்சித் தலைவர்களைக் குறித்து பகடியாக எழுத வேண்டும்; ராகுல் காந்தியை பப்பு என்றும், அகிலேசுக்கு புவா (Bua) என்றும், மாயாவதியை பபுவா (Babua) என்றும் அடைமொழியிட்டு கிண்டல் செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களின் பொது புத்தியில் இந்தத் தலைவர்கள் ஆளுமையற்றவர்கள், கேலி கிண்டலுக்கே தகுதி படைத்தவர்கள் என்பதை மறைமுகமாக பதிவு செய்வது திட்டம் என்கிறார்.

முதலிரண்டு கட்டங்களால் உருவான ஒரு பொதுக்கருத்தை தங்களுக்கான ஆதரவாக மாற்றுவது இறுதிக் கட்டம் என்கிறார். இந்தப் பிரச்சாரத்திற்காக வழங்கப்படும் கட்டுரைகள் அல்லது விளம்பரங்கள் எந்த வகையிலும் சட்டத்திற்கு விரோதமாகவோ, சமூகத்தைப் பிளவு படுத்தும் விதமாகவோ இருக்காது என்று உத்திரவாதமளிக்கிறார் ‘ஆச்சார்ய அடல்’.

ஆனால், சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் இந்தப் பிரச்சாரத்தின் அங்கமாக (கூலி பெற்றுக் கொண்டு) வெளியிடும் கட்டுரைகள் அல்லது விளம்பரங்களின் உண்மையான சூத்திரதாரிகள் யார் (ஆர்.எஸ்.எஸ். தான்) என்பது இரகசியமாக பராமரிக்கபப்ட வேண்டும். முடிந்த வரை ‘பொதுவானதாகவும்’ ‘நடுநிலையானதாகவும்’ தோற்றமளிப்பதே இருவருக்கும் நல்லது எனக் குறிப்பிடுகிறார் ஆச்சார்ய அடல்.

ஆபரேஷன் 136 எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த மறைபுலனாய்வின் காணொளி விவரங்களை கோப்ரா போஸ்ட் இணையதளம் இரண்டு கட்டங்களாக வெளியிட்டது. முதல் கட்டம் மார்ச் மாதமும், இரண்டாம் கட்ட விவரங்களை மே மாதமும் வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் மற்றும், ஜீ நியூஸ், நெட்வொர்க் 18, போன்ற செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும், பாரத் சமாச்சார், சுவர்னா, டைனிக் பாஸ்கர் போன்ற வட இந்திய பத்திரிகைகள் இந்த மறைபுலனாய்வில் கையும் களவுமாக பிடிபட்டனர். மொத்தம் சுமார் 24 பத்திரிகை நிறுவனங்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை தினமலர் மற்றும் சன் டிவி நிர்வாகம் ‘தாங்கள் காசுக்கு சோரம் போகத் தயார்’ என ஆச்சார்ய அடலின் முன் வாலாட்டி நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகள் தவிர இணையவழி பணப்பரிமாற்ற சேவை வழங்கும் பேடிஎம் (paytm) நிறுவனமும் இப்புலனாய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

*****

ணத்திற்காக மட்டும் சோரம் போய்விட்டதாக தினமலரைச் சொல்வது சரியாக இருக்காது. ஏனெனில், அதன் நாடி நரம்புகளிலும், இரத்த நாளங்களிலும், எலும்பு மஜ்ஜை வரை வேசைத்தனத்தில் ஊறித் திளைக்கிறது.

தினமலரை பத்திரிகை என்று வகைப்படுத்துவது கூட அதன் தகுதிக்கு அதிகமானது; தினமலரைப் பத்திரிகை என்றால் பேருந்து நிலைய கழிவறைச் சுவர்களை புனித வேதங்கள் என்று அழைக்க வேண்டியிருக்கும்.

தமிழர்களை ‘டமிலர்கள்’ என விளித்துக் கிண்டல் செய்வதில் துவங்கி, மக்களின் உயிராதார போராட்டங்களைத் தீவிரவாதச் செயல்களாக சித்தரிப்பது வரை தினமலரில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தைகளிலும், வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளியிலும் பொங்கி வழிவதன் பெயர் பார்ப்பனத் திமிர்.

பெரியார் இயக்கங்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் மீது மட்டுமில்லாமல் மொத்தமாக தமிழர்களின் மீதே ஆழ்ந்த வன்மம் தினமலருக்கு உண்டு. அந்த வன்மம் பார்ப்பனியம் தமிழகத்தின் பொது அரங்கில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டதில் இருந்து முளைவிடுகிறது. இது தான் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவ கும்பலோடு தினமலர் கைகோர்க்கும் புள்ளி.

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் மோடி ஆதரவு அலை அடிப்பதாக துணிந்து புளுகி வந்தது தினமலர். அந்தப் பச்சைப் பொய்களுக்குப் பின்னணி என்னவென்பதை ஆதிமூலம் தனது சொந்த வாயால் இரகசிய கேமரா முன் விவரிக்கிறார்.

‘ஆச்சார்ய அடல்’ முன்வைத்ததைப் போன்ற பிரச்சாரப் பணிகளை தமது பத்திரிகை முந்தைய காலங்களில் செய்திருப்பதாக குறிப்பிடுகிறார் ஆதிமூலம். சென்ற தேர்தலுக்கு முன் மோடியைச் சந்திக்க தெரிவு செய்யப்பட்ட வெகுசில பத்திரிகையாளர்களில் தாங்களும் இருந்ததாக பெருமையோடு குறிப்பிடுகிறார்.

தமிழகத்தின் இரண்டு கட்சிகளையும் பகைத்துக் கொண்டதால் பல ஆண்டுகளாக விளம்பர வருவாய் கிடைக்காமல் இருந்ததாகவும், இவ்வாறு தமிழகத்தின் இருபெரும் கட்சிகளைப் பகைத்துக் கொண்டதாலேயே தேசிய கட்சியின் அன்பு தமக்கு கிடைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

தினமலருக்கும் இந்துத்துவ கும்பலுக்குமான ‘ஒரே அலைவரிசை’ கொள்கை ரீதியிலானது மட்டுமல்ல என்பதை ராமசுப்பையரின் வாரிசான அந்துமணி ரமேசின் மைனர்தனங்களே பறைசாற்றுகின்றன. எனவே தினமலர் அம்பலமானதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை ; ஆனால், தனது சொந்த விருப்பத்தில் செய்யும் காரியங்களுக்கும் கூலி வாங்கத் தயாராக இருந்தது தான் ஆச்சர்யம். விலைமாதிடம் ‘சேவை’ பெற்றுக் கொண்டு அவளிடம் இருந்து மாமூலையும் வசூலிக்கும் ஏட்டையா தான் தினமலர்.

*****

கோப்ராபோஸ்டின் மறைபுலனாய்வில் ’திராவிட’ நிழலில் வளர்ந்த சன் டி.வி.யும் பிடிபட்டிருப்பதைக் குறிப்பிட்டு பெரியாரிய வாடை கொண்ட சில உடன் பிறப்புக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்; கண்டிக்கின்றனர்.

வெளியாகியுள்ள காணொளியில் ஆச்சார்யா அடல் வெளியிட விரும்பும் விளம்பரங்களின் நோக்கம் என்னவென்று சன் டிவி-யின் வணிகப் பிரிவுத் தலைவர் அலெக்ஸ் ஜார்ஜ் கேட்கிறார். அதற்கு மற்ற பத்திரிகை முதலாளிகளிடம் கூறிய அதே காரணங்களை விளக்குகிறார் ஆச்சார்யா. அனைத்துக்கும் தலையாட்டும் ஜார்ஜ், தங்களது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய ஆகும் கட்டணத்தைக் குறித்துப் பேசுகிறார்.

மற்றொரு காணொளியில் சன் குழுமத்துக்குச் சொந்தமான அச்சு ஊடகங்களின் விற்பனைப் பிரிவுத் தலைவர் ராஜேஷ் கண்ணாவைச் சந்திக்கிறார் ஆச்சார்யா. தனக்கு மோடியைப் பிடிக்கும் என்றும், பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகள் நல்ல திட்டங்களென்றும் குறிப்பிடுகிறார் ராஜேஷ்.

சன் டிவி பணத்தையும், லாபவெறியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்ட அப்பட்டமான கார்ப்பரேட் நிறுவனம். அதாவது தி.மு.க.வின் தொழில் முகம். கொள்கை கோட்பாடுகள் உள்ளிட்ட ‘வெங்காயங்களை’ விட டி.ஆர்.பி. ரேட்டிங் எனும் சந்தை மதிப்பு தான் சன் டிவி-க்கு முக்கியம்.

சன் குழும ஊடகங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளும், செய்திகளும் இந்த அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றன. ஆனால், பச்சையான கார்ப்பரேட் நலன் தனது வளர்ச்சிப் போக்கில் பாசிச அரசியலோடு கைகோர்க்க வேண்டும் என்பதே தர்க்க ரீதியான முடிவாகும்.

தினமலர் வகையறாக்கள் தமது சொந்த சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்துத்துவத்திற்கு காவடி தூக்குகிறார்கள் என்றால், சன் டி.வி போன்ற ‘திராவிட’ கார்ப்பரேட்டுகள் கூலிக்கு காவடி தூக்குகின்றனர். இரண்டின் விளைவும் ஒன்று தான்.

“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது” என்பது பாசிசத்துக்கு பெனிட்டோ முசோலினி அளித்த விளக்கம்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பெரியார் பற்றாளர்களுக்கு முதலாளித்துவம் இந்துத்துவத்தின் பங்காளி என்பதை பொட்டிலடித்தாற் போல் உணர்த்தியுள்ளார் கலாநிதி மாறன்.

– தொடரும்.

  • சாக்கியன்

தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !

குர்குரே, லேய்ஸ் என குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் தின்பண்டங்களுக்கு மத்தியில். குற்றுயிராக போட்டியிடும் தேன் மிட்டாயையும், கடலை மிட்டாய்களையும் உற்பத்தி செய்யும் குடிசைத் தொழில்களைக் கழுத்தறுக்கிறது மோடியின் ஜி.எஸ்.டி.

இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் தின்பண்டங்கள் தயாரிப்பில் ஈடுபடும் குறு – தொழிலகங்களையும், அதில் வேலை செய்யும் தொழிலாளிகளையும் பற்றியது இந்த புகைப்படப் பதிவு.

***

ழைய வண்ணாரப் பேட்டை தெலுங்கு செட்டித் தெரு, குழந்தைகள் விரும்பும் நொறுக்குத்தீனிகள், தின்பண்டங்களின் கிடங்கு.

இங்கு சிகடை (சீடை), தேன்மிட்டாய், பால்பன், பர்பி, கடலை உருண்டை, அல்வா, மைசூர் பாகு, பல்லி மிட்டாய் என்று முப்பதுக்கும் மேற்பட்ட தின்பண்டங்களை வீட்டுக்கு வீடு தயாரிக்கிறார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் ஐந்து முதல் ஐம்பது தொழிலாளர்கள் என, 600-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழிலகங்கள் இங்கு உள்ளன.

பெண்களும், ஆண்களுமாக காலை 7:00 மணிக்கு வரும் தொழிலாளர்கள்  இரவு 7:00 மணி வரை வேலை செய்கிறார்கள். ஒருமணி நேர உணவு இடைவேளை தவிர மற்ற எல்லா நேரமும் குனிந்த தலை நிமிராமல் உருண்டை பிடிப்பதும், அடுப்படியில் நிற்பதுமாக உழைக்கிறார்கள்.

இவ்வாறு கடினமாக உழைக்கும் இவர்களுக்கு தினக்கூலியாக; பெண்களுக்கு ரூ.300-ம் ஆண்களுக்கு ரூ.500-ம் கிடைப்பதே அரிது.

கொதிக்கும் வெல்லப்பாகில் கிளறி, இறக்கப்பட்ட கடலைமிட்டாய் கலவையை அதே சூட்டில் உருண்டையாக பிடிக்கும் தமிழ்செல்வி, பத்மாவதி மற்றும் மகேஸ்வரி.

கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் கொப்பரை அருகில் அவர் செய்யும் வேலை,  நமக்கு அவர்களின் வாழ்நிலையை உணர்த்துகிறது.

எப்படி உங்களால் இந்த சூட்டில் வேலை செய்ய முடிகிறது என்று கேட்டதற்கு, “வயிறு ஒன்னு இருக்குதுல.. இல்லனா, நீங்க ஒக்கார வச்சி சோறு போடுறீங்களா” என்றார் இந்த இளம் தொழிலாளி.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குறு முதலாளிகள் விவசாயிகள் மாதிரியே தங்கள் பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் உழைப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ஐந்து ரூபாய் மதிப்பிலான அறுபது உருண்டைகள் அடங்கிய ஜாரை வெறும் 180 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். வாங்கி செல்பவர்கள் நூற்று இருபது லாபம் வைத்து ரூ.300-க்கு விற்கிறார்கள்.

“இந்த வியாபாரமும் பள்ளி விடுமுறை நாட்கள் வந்தால் இருக்காது. திரும்பவும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தால் தான் எங்களுக்கு வியாபாரம்” என்றனர்.

இம்மாதிரி 300-க்கும் மேற்பட்ட சிறு உற்பத்தியாளர்கள் இங்கு வசிக்கிறார்கள். இதில் தங்கக்கிளி, உதயம், ஆனந்தா, உமா என்று விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள்தான் இத்தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போட்டியாக நின்று சவால் விடுகிறார்கள்.

அவர்களும் மோடி ஆட்சியில் சிறுதொழிலில் ஏற்பட்ட நலிவுகளை எரிச்சலுடன் பேசுகிறார்கள். “எங்களுக்கு இவர்கள் ( மைய, மாநில அரசுகள்) உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக் கொள்வோம்” என்றனர்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்

ஸ்டெர்லைட் – துப்பாக்கிச் சூடு : சென்னையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் !

0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுத்து சட்டமியற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாள் : 03.06.2018, ஞாயிறு.
நேரம் : மாலை 3:30 மணி.
இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை.

 

தலைமை :

வழக்கறிஞர் தோழர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

கண்டன உரையாற்றுவோர் :

திரு ஆர்.எஸ். பாரதி, MP
அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.

தோழர் தொல். திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் அ.சவுந்தர்ராஜன்
மத்தியக் குழு உறுப்பினர், சி.பி.எம்.

தோழர் S. ஏழுமலை
தென்சென்னை மாவட்ட செயலாளர், சி.பி.ஐ.

தோழர் கவிஞர். கலி பூங்குன்றன்
மாநில துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

தோழர் மருதையன்
மாநில செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

தோழர் தியாகு
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் ஆழி.செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சி தமிழகம்.

மூத்த வழக்கறிஞர் தோழர் சங்கரசுப்பு
சென்னை உயர்நீதிமன்றம்.

வழக்கறிஞர் தோழர் கு.பாரதி
மாநில செயலாளர், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்.

பேராசிரியர் ப.சிவக்குமார்
முன்னாள் முதல்வர் குடியாத்தம் அரசுக் கல்லூரி.

தோழர் கவின்மலர்
எழுத்தாளர்.

நன்றியுரை :

தோழர் வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு – 9176801656.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் ! வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் சார்பில் 30.05.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் தங்கள் தரப்பு வாதமாக “ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் ஒரு மருத்துவர் உடன் இருக்க வேண்டும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் மீது கொலைவழக்கு பதிய வேண்டும். இறந்தவர்களுக்கு தூத்துக்குடி பகுதியில் நினைவிடம் அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்.” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு பிரேத பரிசோதனை நடத்தலாம் எனக் கூறியிருந்தனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து அவர்கள் சொல்லும் மருத்துவர்களை அனுமதிக்க முடியாது என தெரிவிதனர். மாறாக வேறு சில அரசு மருத்துவர்கள் முன்நிலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் எனக் கூறி இருந்தனர்.

இது மக்களை படுகொலை செய்த அரசுக்கெதிரான ஆதாரங்களை அழிக்கும் வகையில் அமையும் என்பதால் உறவினர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர். அதனடிப்படையில் தாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிவித்தனர். அதற்கு ஒருவார காலம் அவகாசம் கோரப்பட்டு, அதுவரை உடல்களை பதப்படுத்திவைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

நிவாரணம் என்ற பசப்புகளுக்கும், அரசின் மிரட்டல்களுக்கும் மசியாமல் தங்களுக்கான நியாயத்திற்காக போராடும் இவர்களின் உறுதியை பாருங்கள். இவர்களைத் தான் சமூக விரோதி என்கிறார் ரஜினி. அதற்கும் அவர்கள் தக்க பதிலளித்துள்ளனர். இந்த வீடியோவை பாருங்கள்… பகிருங்கள்…