Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 468

தூத்துக்குடி | யார் பயங்கரவாதி ? யார் சமூகவிரோதி | எழிலன் | கரன் கார்க்கி | ராஜூ முருகன் | காரல் மார்க்ஸ்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தங்களது உள்ளக்குமுறலை, கண்டனத்தை பகிர்ந்து கொண்டனர்.

பகுதி – 2

மருத்துவர் எழிலன், எழுத்தாளர் கரன் கார்க்கி, திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், காரல் மார்க்ஸ் ஆகியோரின் கண்டனப் பதிவுகள்.

சுற்றுச்சூழல் விதிகளை திரித்து தூத்துக்குடி படுகொலைக்கு வித்திட்ட மோடி அரசு !

தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் தாமிர உருக்காலை விரிவாக்கத்தை நிறுத்தக் கோரியும் அதை நிரந்தரமாக மூடச்சொல்லியும் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை நிகழ்த்திய படுகொலைத்தாக்குதலில் 13 பேர்கள் கொல்லப்பட்டனர் மேலும் பலர் படுகாயமுற்றனர். தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தின் உருக்காலை விரிவாக்கத்திற்கு தற்காலிகத் தடை விதித்தும் மக்கள் கருத்துக்கேட்பிற்குப் பிறகே விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அந்நிறுவனத்திற்கு மே 23 ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால் வேதாந்தா நிறுவனமோ மக்களின் கருத்தைக் கேட்காமலேயே ஆலையின் உற்பத்தியை இரண்டு மடங்காக்க மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருக்கிறோம் என்று சாதிக்கிறது. இத்தனைக்குப் பிறகும் அந்நிறுவனத்தால் எந்த நம்பிக்கையில் இப்படி கூற முடிகிறது?

சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் நீதிமன்றத்தின் பல்வேறு ஆவணங்களின் படி 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதான் வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு பெருநிறுவனங்களுக்கு பாதிக்கப்படும் பகுதியைச் சேர்ந்த மக்களது கருத்தைக் கேட்காமலேயே ஆலை விரிவாக்கம் செய்ய உதவி செய்துள்ளது.

நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் ஆவணங்களைப் ஆய்வு செய்த போது பல்வேறு நிறுவனங்களின் நெருக்குதலுக்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்ட இந்த விதிவிலக்கு தெரிய வந்துள்ளது. இந்த விதிவிலக்கு முன்னால் சுற்றுச்சூழல் அமைச்சரால் “விளக்கம்” என்ற பெயரால் வழங்கப்பட்டது. இத்திருத்தம் தான் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தூத்துக்குடி போன்ற இடங்களில் மக்களது கருத்துக்களை கேட்காமல் பல மாதங்கள் முன்னதாகவே தொழிற்சாலை நிர்மாணத்தைத் தொடங்க வழிவகை செய்தது. திட்டத்தை தொடங்கும் முன் சட்டத்தின் படி மக்களது கருத்தினை கேட்க வேண்டும் என்று முந்தைய காங்கிரசு அரசு 2014 மே மாதம் கூறியிருந்த நிலையில் மோடி அரசின் விளக்கம் என்ற பெயரிலான சட்டத்திரிப்பு வேலை வேதாந்தா உள்ளிட்ட பெருநிறுவனங்களுக்கு நல்வாய்ப்பாய் அமைந்துவிட்டது.

வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமான மோடி அரசின் டிசம்பர் மாத அரசாணை மோசடியானது என்பதை 2016 ம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயம் கண்டறிந்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தியது. ஆனால் சட்டத்திருத்தத்தை திரும்பபப்பெற்றால் பலத்திட்டங்களை அது பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

ஆயினும் முடிவில் மோடி அரசின் 2014 டிசம்பர் திருத்தத்தை பசுமைத் தீர்ப்பாயம் இரத்து செய்தது. சுற்றுச்சூழல் அனுமதியில்லாத தொழில்துறை பூங்காக்களில் புதிய திட்டங்களைத் தொடங்க பொதுமக்களின் கருத்துக் கேட்பை கட்டாயமாக்க தேவையான புதிய ஆணையை சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பிக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. ஆனால் அப்போது தூத்துக்குடியில் தன்னுடைய உற்பத்தியை இரட்டிப்பாக்க சுற்றுச்சூழல் அனுமதிக்கான காலநீட்டிப்பை வேதாந்தா நிறுவனம் பெற்றிருந்தது.

பசுமைத்தீர்ப்பாயத்தின் 2016 ம் ஆண்டு தீர்ப்பு மற்றும் வேறு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களின் கருத்துக் கேட்பிற்கு பிறகே தொழிற்சாலையை விரிவாக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சுற்றுச்சூழல் அனுமதிக்கான வழக்கமான விதிமுறைகள் :

பெரும்பாலும் பெரிய தொழில்துறைத் திட்டங்கள் அனைத்திற்கும் மைய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட வேண்டும். தொழில் தொடங்கப்படும் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முதலில் ஒரு அறிக்கையாக தயாரித்து மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்கு விட வேண்டும். பின்னர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுனர்களால் கருத்துக்கேட்பும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளும் ஆய்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். கருத்துக்கேட்பின் போது அத்திட்டத்தை மக்கள் நிராகரிக்க முடியாது. ஆனால் திட்டம் தொடங்கும் முன்பே மக்களது பிரச்சினைகள் அனைத்தும் அந்நிறுவனத்தாலும் மத்திய அரசினாலும் தீர்க்கப்பட வேண்டும்.

2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் சில விதிவிலக்குகளை உருவாக்கியது. ஒரு தொழிற்பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி இருந்தால் அங்கே தொடங்கப்படும் சிறிய தொழிலுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை மேலும் அதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பும் தேவையில்லை என்பதே அது.

இந்த விதிவிலக்குக் குறித்தக் கேள்விகள் 2014 மே மாதம் முந்தைய காங்கிரசு ஆட்சியில் எழுப்பப்பட்டன. சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் 2006 ம் ஆண்டு உருவாக்கப்படுவதற்கு நீண்ட நாட்கள் முன்பே ஒரு தொழிற்துறை பூங்கா தொடங்கப்பட்டு அதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் கிடைக்காமலிருந்தால் என்ன செய்வது? இது போன்ற தொழிற் பூங்காக்களுக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லையா என்பதே அக்கேள்விகளில் மையமானது.

காங்கிரசு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2014 மே 16 ம் தேதி அதற்கு விளக்கம் கொடுத்தது. தொழிற் பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி இருந்தால் மட்டுமே அங்கே தொடங்கப்படும் புதிய தொழில்களுக்கு பொது மக்களது கருத்துக்கேட்பு தேவையில்லை என்று அது கூறியது. 2006 ம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகளின் படி மதிப்பீடு செய்யப்படாத தொழிற்பூங்காவில் தொடங்கப்படும் புதிய தொழில்களுக்கு பொதுமக்களது கருத்துக்களை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று அது கூறியது.

ஆனால் “வியாபாரத்தை எளிதாக்குவது” என்ற தாரக மந்திரத்தை முழக்கமாக கொண்டு 2014 மே மாதம் 26 ம் நாள் ஆட்சியைப் பிடித்த மோடி அரசு பின்னர் அதை தலைகீழாக மாற்றியது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து அரசுக்கு கடிதங்கள் வந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக புதிய “விளக்கத்தை” 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ம் தேதி ஒரு குறிப்பாணையாக மைய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாத தொழிற்துறை பூங்காவில் புதிதாக தொடங்கவிருக்கும் தொழில்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லை என்பதே அந்த விளக்கத்தின் பின் இருக்கும் திரிபு வேலை.

இப்படி காங்கிரசு அரசினால் சட்டபூர்வமாக செய்யப்பட்டத் திருத்தத்திற்கு வெறும் குறிப்பாணை மூலமாக புதிய “விளக்கம்” மோடி அரசினால் கொடுக்கப்பட்டது வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு நற்பயனாய் வந்து சேர்ந்தது. வியாபாரத்தை எளிதாக்குவதற்காக ஓராண்டிலேயே செய்யப்பட்ட மோடியின் குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாக இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு பெருமை பொங்க இந்த மாற்றத்தைக் குறிப்பிட்டது.

வேதாந்தா பயனடைந்தது எப்படி:

தூத்துக்குடியிலுள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் தான் வேதாந்தாவின் தாமிர உருக்காலை முதலில் தொடங்கப்பட்டது. 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் வருவதற்கு முன்னரே அது தொடங்கப்பட்டது. வேதாந்தா நிறுவனம் தன்னுடைய தாமிர உருக்காலையின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அனுமதியை 2009 ம் ஆண்டில் முதலில் கோரியது. காங்கிரசு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும் சுற்றுச்சூழல் அனுமதியை அந்நிறுவனத்திற்குக் கொடுத்தது.

ஆனால் அந்த சுற்றுச்சூழல் அனுமதி ஐந்தாண்டுகளில் காலாவதியாகிப் போனது . மீண்டும் 2013 ம் ஆண்டு அனுமதியை நீட்டிக்க அன்றைய காங்கிரசு அரசிடம் ஓடியது வேதாந்தா நிறுவனம். ஆனால் காங்கிரசு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கால நீட்டிப்பை இம்முறை 2014 ஆம் ஆண்டு மே மாதம் மறுத்து விட்டது. ஆனால் வேதாந்தா நிறுவனத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை 2018 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க 2015 ம் ஆண்டு மார்ச் மாதம் அனுமதித்தது புதிதாக பதவியேற்ற மோடி அரசு. தொழில்களை தொடங்க பொதுமக்களின் கருத்துக்கேட்பு தேவையைக் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்த வந்த சூழலில் தான் இது நடந்தேறியது. தொடர்ந்து வேதாந்தா நிறுவனமும் விரிவாக்கத்தைத் தொடங்கியது.

இதனையொட்டி தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெடித்து நூறு நாட்களையும் கடந்தது. தொடர்ந்து நடந்தப் போராட்டத்தை தமிழக அரசு 13 பேரை படுகொலை செய்து நசுக்கியது இரத்தகறை படிந்த வரலாறாகிப் போனது.

– வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க:
Thoothukudi protest: How NDA govt decisions helped Vedanta bypass norms

எங்கே போனார் எடப்பாடி ? கேட்கிறார் தூத்துக்குடி போராளி | வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்தப்பி, படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவது என்ற சம்பிரதாயமான நடவடிக்கையைக்கூட மேற்கொள்ள எடப்பாடி அரசு தயாராக இல்லை. மாறாக, 144 தடையுத்தரவு இருப்பதால் தூத்துக்குடி செல்லவில்லை என்று எகத்தாளமாக கோட்டையில் இருந்தபடியே பேட்டியளித்தார் எடப்பாடி.

எல்லாம் முடிந்த பின்னர், எடப்பாடியின் எடுபிடி, அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி நகருக்குள் நுழைந்ததுமே காத்திருந்தது அதிர்ச்சி. சென்ற இடமெல்லாம் கேள்விகளால் துளைத்து துரத்தியடித்தனர் தூத்துக்குடி மக்கள். மருத்துவமனைக்குள் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறும் நாடகத்தையும் அரங்கேற்றிவிடும் திட்டத்தில் நுழைந்தார், கடம்பூர் ராஜூ.

உடம்பில் குண்டுகள் துளைத்தும், சதை கிழிந்தும், எலும்பு முறிந்தும் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வரும் அந்த நிலையிலும் உறுதி குலையாமல், ”கம்பெனிகிட்ட எவ்வளவு காசு வாங்குனீங்க? அதவிட நா மூனு மடங்கு தாரேன். எப்போது ஆலையை மூடுவீங்க? வாயால சொல்லாதீங்க., எழுதி கொடுங்க” என்று அடுத்தடுத்த கேள்விகளால் அமைச்சரை திணறடித்தார், அந்தப் போராளி.

துப்பாக்கிச் சூடு நடந்து ஏழு நாளாகியும் எங்களை எட்டிக்கூடப் பார்க்காத எடப்பாடி எங்கேப் போனார்…? கேள்வியெழுப்புகிறார்கள்., தூத்துக்குடி மக்கள்.

இந்துத்துவ எதிர்ப்பில் ஒரு வீரகாவிய நையாண்டி

0
டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ (நடுவில்)

டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ மே 13 –ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் ஒரு அறிக்கையை வாசித்துள்ளார். அதில் நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை மறைய கத்தோலிக்கர்கள் அனைவரும் மே மாதம் 13–ஆம் தேதியிலிருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு ஜெப விண்ணப்பம் மேற்கொள்ள கேட்டு கொண்டுள்ளார். கூடவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஒரு வேளையாவது நோன்பு இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனில் குட்டோவின் அறிக்கை ஒளிவு மறைவின்றி கிறிஸ்தவர்களின் பிரச்சினைகளையும், அதற்கு ஒரு மத ரீதியான எதிர்வினையையும் பேசுகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகள் ஆட்டம் கண்டுள்ளதாகவும், மதச்சார்பற்ற கொள்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் 2019–இல் புதிய அரசு ஒன்றமைவதற்கு ஜெபவலிமையை கோருகிறது அந்த அறிக்கை. நாடு நலம் பெறவும், நாட்டின் தலைவர்களுக்கு புத்திமதி வேண்டியும் பொதுவாக ஜெபிப்பதை கிறிஸ்தவ பாதிரியார்கள் வழமையாக கொண்டவர்கள்.

ஆனால் டில்லி தலைமை பேராயரின் அறிக்கை சில திட்டவட்டமான விசயங்களை பேசுகிறது. இதற்கு காரணம் இல்லாமலில்லை. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014–ஆம் வருடம் பொறுப்புக்கு வந்த பிறகு சிறுபான்மை மதத்தவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இவை மோடி நேரடியாக தூண்டி நடைபெறுகின்றன என்று நம்ப வேண்டியதில்லை தான். ஆனால் அரசதிகாரத்தில் இருப்பவர்களின் உரைகளிலும், சமிக்கைகளிலும் உள்ள குறிப்புகளை உணர்ந்து ஹிட்லர் யுகத்தின் அட்டூழியங்களை நினைவுபடுத்தும் பாதகங்கள் சங்கபரிவார கும்பலால் அரங்கேற்றப்படுகின்றன. கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகள் 2014–ஆம் வருடம் 133 தாக்குதல்கள், 2015–இல் 155, 2016–இல் 348, 2017–இல் 736 வன்முறை சம்பவங்களாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் சதவீதம் வெறும் 2.3 மட்டுமே. சிறியதும் பெரியதுமான இந்த தாக்குதல்கள் ஒரு தாழ்நிலை போரென்றால் மிகையில்லை.

அடுத்த வருடம் மே 19–ஆம் தேதியுடன் மோடியின் ஐந்தாண்டுகால ஆட்சி நிறைவடைவது தான் மே 13–ஆம் தொடங்கிய ஜெப விண்ணப்பத்துக்கு காரணம் என்றாலும் அந்த நாளை தேர்ந்தெடுத்ததில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. மே 13 –ஆம் தேதி தூய ஃபாத்திமா அன்னையின் விழா நாள். ஃபாத்திமா அன்னை, லூர்து அன்னை எல்லாமுமே இயேசுவின் தாய் கன்னிமரியாவை சுட்டுபவை தான். இந்து புரிதலில் அவற்றை மரியாவின் அவதாரங்கள் எனலாம்.

போர்ச்சுகல் நாட்டில் ஃபாத்திமா என்ற இடத்தில் அமைந்ததொரு ஆலயத்தின் சேகரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளுக்கு 1917–ஆம் வருடம் சில ரகசிய வெளிப்பாடுகள் கிடைத்தன. அச்சிறுமிகளின் பெயர்கள் ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மற்றும் லூசியா சான்றோஸ். 1917–ஆம் வருடம் மே 13–ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13–ஆம் வரையான காலகட்டத்தில் மரியாவின் திருவருகையை கண்டுணர்ந்துள்ளனர்.

முதல் செய்தியாக உலகப் போர் சீக்கிரம் முடிவுக்கு வர ஜெபமாலை துணையுடன் அழுத்தமாக பிரார்த்திக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். அடுத்து ஜூன் மாதத்தில் நடந்த இரண்டாம் திருவருகையின் செய்தி சுவாரஸ்யத்துக்குள் பொதியப்பட்ட மற்றொரு சுவாரஸ்யம் எனலாம். கம்யூனிச கொள்கையிலிருந்து ரஷ்யா விடுபட கத்தோலிக்கர்கள் ஜெபிக்க கேட்டுக்கொண்டது இரண்டாம் ரகசியமாக பகிரப்பட்டுள்ளது. மூன்றாம் ரகசியம் ஆகஸ்ட் 13–ஆம் தேதி உரைக்கப்பட்டது. அது மனந்திரும்பாத பலர் அவதியுறப்போவது பற்றிய எச்சரிக்கை. அந்த வருடம் தமது கூற்றின் உண்மை தன்மைக்கு சான்றாக அக்டோபர் 13–ஆம் தேதி வானில் ஒரு அற்புதம் நிகழும் என்ற சிறுமிகளின் அறிவிப்பை தொடர்ந்து எழுபதாயிரம் மக்கள் ஃபாத்திமாவில் கூடினர். பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படத்தில் வெறும் இருட்டு மட்டும் தான் பதிவாகி உள்ளது. அந்த மூன்று சிறுமிகளில் இருவர் முன்னரே இறந்ததும் ஒருவர் பிழைத்திருந்ததும் கூட முன்னரே வெளிப்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. தூய ஃபாத்திமா அன்னையின் திருவருகையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முடித்த கையோடு தான் அனில் குட்டோவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சரி விசயத்துக்குள் செல்வோம். இந்தியாவில் கிறித்தவ அணிதிரளுதலுக்கான புறநெருக்கடி ஒன்று வலுவாக தோன்றி இருக்கிறது என்றாலும் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் சுருங்குவது அந்த நெருக்கடியின் தீர்வுக்கு பலனளிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ். இது போன்றதொரு எதிர்வினையை தான் எதிர்பார்ப்பது போலுள்ளது. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் அளவில் சுருங்கிக் கொண்டால் அறுவடை எளிது என்று நினைக்கிறது.

குஜராத் மாநிலத் தேர்தலின் போது பந்தக் வாலா என்றொரு முஸ்லிம் பேராசிரியரின் பேட்டி ஸ்கிராலில் வெளிவந்தது. அவரிடம் பட்டேல்கள், பிற்பட்டவர்கள் மற்றும் தலித்களை ஒன்றிணைத்த ஹார்த்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர் மற்றும் ஜிக்னேஷ் மெவானி போன்ற சமூக தலைவர்கள் குஜராத்தில் கணிசமாக வாழும் முஸ்லிம்களிடம் ஏன் உருவாகவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு முஸ்லிம் தலைவர் எங்களிடம் உருவாகி விடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். ஏனெனில் அதனை பி.ஜே.பி. தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பிருந்ததை உணர்ந்திருந்தோம் என்றார்.

அனில் குட்டோவின் அறிவிப்பு டில்லி மறைமாவட்டத்துக்கானது. அது இந்திய அளவில் எடுக்கப்பட்டது தான். என்றாலும் அதனை இந்திய அரசியலில் வாடிகனின் தலையீடாக காட்டுவதில் பா.ஜ.க.வும், அதன் சார்பு ஊடகங்களும் முனைப்பு காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களை ஏய்க்கும் உத்தி கொண்ட இந்த கதையாடலுக்குள் சிக்கிக் கொள்வது விவேகமாக இருக்காது. அது தேசம் முழுவதும் இப்போது சூல் கொண்டு வரும் நரேந்திர மோடி அரசுக்கெதிரான அதிருப்தி உணர்வை குலைத்து குஜராத், உ.பி. தேர்தல் முடிவுகள் போன்று சமூக முனைவாக்கத்துக்கு இட்டு சென்று விடும் அச்சம் தொக்கி நிற்கிறது. தங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய புரிதலோ, எதிர் தாக்குதல் உணர்வோ இருக்கக் கூடாது என்பதல்ல இதன் அர்த்தம். ஆனால் அவை முழுமையின் நோக்கத்துக்கு (மோடியை அப்புறப்படுத்துவது) உதவுகின்ற வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரம், வெளிவிவகார கொள்கைகளில் ஏற்பட்டுள்ள தோல்வி தலித், இசுலாமியருக்கெதிரான தாக்குதல்கள், கருத்து சுதந்திரப் பறிப்பு, பகுத்தறிவாளர்கள் கொலை என்ற ஒருங்கிணைந்த கோணத்தில் இந்துத்துவ எதிர்ப்பை மேற்கொள்வது தான் நல்லது. கன்னிமரியாவின் ஆவியுரு புனைவின் வழியாக இந்துத்துவத்தை வீழ்த்த முற்படுவது வீரகாவிய நையாண்டி வகையினதாக இருக்கிறது.

  • ராஜ்
    (சமூக அரசியல் விமர்சகர்)

சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனின் மனைவி – மகளை சந்தியுங்கள் !

தோழர் ஜெயராமன் மனைவி பாலம்மாள் மகள் நந்தினி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் ஆரியப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிகாரத்தின் தோழர் ஜெயராமன் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு முழக்கமிட்டவாறு மக்களோடு சென்று கொண்டிருந்த தோழர் ஜெயராமனை போலீசு சுட்டது. தலையின் வலது பக்க மூளையில் குண்டு பாய்ந்தது. அதில் படுகாயமடைந்த தோழர் ஜெயராமன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2018, மே – 23-ம் தேதி மரணமடைந்தார்.

தோழர் ஜெயராமன்

தோழர் ஜெயராமன் உசிலை பகுதியில் செயல்பட்டு வந்த விவிசாயிகள் விடுதலை முன்னணியின் அரசியல் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பில் இணைந்தார். பிறகு மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்து செயல்பட துவங்கினார்.

ஆரியப்பட்டி கிராமம் முழுவதும் அமைப்பு கொள்கைகளை மக்களிடம் எடுத்து பேசுவது, ஊரின் இரு பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது என்று முழு மூச்சாக மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அமைப்பின் செயல்பாடுகளுக்கு குடும்பத்துடன் வருவார். கடைசியாக தோழர் ஜெயராமன் தனது குடும்பத்துடன் ஆகஸ்டு 5, 2017-ல், தஞ்சையில் நடந்த “விவசாயிகளை வாழவிடு” மாநாட்டில் கலந்து கொண்டார்.

தோழர் வாழ்ந்த கிராமத்திற்கு சென்றோம். வீட்டின் முன்பு தென்னங்கீற்றால் ஒரு பந்தல் போடப்பட்டு கிராமத்தினர் அனைவரும் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

தோழர் ஜெயராமன் வீட்டின் முன்பு

அனைவருடைய முகத்திலும் கவலை. ஓட்டை உடைசலுடன் ஒரு சிறிய ஓட்டு வீடு. வீட்டில் உருண்டு படுக்க கூட இடமில்லை. தட்டு, முட்டு சாமான்கள் அனைத்தும் சிறிய அறையில் ஓரமாக அடைந்து கிடந்ததன. அந்த அறையிலே சமைத்து சாப்பிட்டு உறங்குவது தான் அந்த எளிய குடும்பத்தின் வாழ்க்கை. கடின உழைப்பாளியான தோழர் ஜெயராமன் கடந்த ஆண்டு பசுமை திட்டத்தின் கீழ் வீட்டை கட்ட முயன்றிருக்கிறார். அதுவும் முடிக்கப்படாத நிலையில் பாதியில் நிற்கிறது. அந்த வீட்டின் உள்ளே நுழைந்ததும் தோழர் பகத்சிங்கின் படம் சுவரில் ஒட்டி இருந்ததை காண முடிந்தது. தோழர் மக்களை எந்த அளவிற்கு நேசித்தார் என்பதை புரிந்துகொள்ள அவருடைய எளிய வாழ்க்கையே நமக்கு உணர்த்துகிறது.

பழைய வீட்டின் ஓரமாக தோழர் ஜெயராமனின் தாய் மற்றும் தந்தை நான்கு நாட்களாக சாப்பிடாமல், தூங்காமல் உடைந்து போயிருந்தனர். அவர்கள் அருகில் கவலையும் கண்ணீருமாக உட்கார்ந்திருந்தார், தோழர் ஜெயராமனின் மனைவி பாலம்மா

தோழர் ஜெயராமன் குடும்பம் (இடமிருந்து வலமாக), தாய் தேனம்மாள்,தந்தை நந்தன், மனைவி பாலம்மாள். மகள் நந்தினி, தங்கை பாண்டியம்மாள்.

கடைசியாக உங்க கணவரை எப்பொழுது பார்த்தீர்கள்?

செவ்வாய் கிழமை காலையில பார்த்தேன் (22.05.2018). நாலு மணிக்கு எழுந்திரிச்சி கிளம்பினார். போயிட்டு வரேன்னு சொன்னார். அவ்ளோதான்.

போராட்டத்துக்கு போனது உங்களுக்கு தெரியுமா?

தெரியும். போராட்டத்துக்கு போறதா முதல்ல அவர் நினைக்கல. ஜோலி நெறையா இருக்குன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் தான் காலையில எழுந்து கிளம்பி போராட்டத்துக்கு போறேன், கதவ சாத்திக்கன்னு சொல்லிட்டு போனார்.

நீங்களும் இதுக்கு முன்னாடி அமைப்பு நடத்துற வேற போராட்டத்துல கலந்துகிட்டிருக்கிங்களா?

ஆமா. நாங்க எல்லா போராட்டத்துக்கும் போவோம். ஊர் மக்களும் வந்திருக்காங்க.

மருத்துவமனையில உங்க கணவரை பார்த்திங்களா?

பார்த்தேன். இரண்டு நாள் கூட இருந்தேன். பிரேத சோதனை இடத்துக்கு கொண்டு போன பிறகுதான் வீட்டுக்கு வந்தேன். காப்பாத்த முடியாதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. நாங்க போயி முதல்ல கேட்டதுக்கு குண்டு சிதறி போச்சி, நாலு பக்கமும். காப்பாத்த முடியாது. எதோ முயற்சி பண்றோம். அது உங்களுக்கு நல்ல நேரம் இருந்தா உண்டு. இப்ப எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

comrade jayaraman wife and daughter
தோழர் ஜெயராமனின் மனைவி பாலம்மாள் மற்றும் மகள் நந்தினி

தோழருகிட்ட ஏதாவது பேசனிங்களா?

பேசினேன். நான் வந்திருக்கேன்னு சொல்லி கூப்பிட்டேன். எந்த முழிப்பும் இல்ல. எந்திரிக்கல. தொட்டு பார்த்தப்ப கொஞ்ச உணர்வு இருந்துச்சி.

தோழர் என்ன வேலை செய்ஞ்சார்?

காட்டு வேலைக்கு போறது, களை வெட்டுறதுல இருந்து எல்லா வேலையும் செய்வார். இப்ப கொஞ்ச நாளா காட்டு வேலை இல்லாததால ஜவுளி வியாபாரம் பண்ணிட்டிருந்தார்.

இனி குடும்பத்தை எப்படி காப்பாத்த போறீங்க?

காட்டு வேலைக்கு தான் போகணும். ஒரு நாளைக்கு நூறு ரூபா தருவாங்க. அதுவும் எப்பவும் வேலை இருக்காது.

தூத்துக்குடி போராட்டம் பத்தி தோழர் என்ன சொன்னார்?

நூறு நாள் மக்க போராட்டம் பண்ணுறாங்க. எல்லாம் நல்லதுக்காகத்தானே பண்றாங்க. அதனால தான் இவரும் போராட்டத்துக்கு போனாரு. போராட்டம் நடக்குதுன்னு தெரிஞ்சி தான் எல்லாரும் போனாங்க.

துப்பாக்கி சூடு தகவல் கேட்டதும்…

அதிர்ச்சியா இருந்துச்சி. முதல்ல அவரு இல்ல வேற ஆளுன்னு சொன்னாங்க. அப்புறம் மறுபடியும் போன் பண்ணிதான் சொன்னாங்க. (மேற்கொண்டு சொல்ல முடியாமல் அழுகிறார்)

அவரு இயற்கையாவே எல்லா போராட்டத்துக்கும் போறவரு. அப்படி போயிட்டு இறந்துட்டாரு. என்ன ஒரு கஷ்டம்னா கொஞ்சம் செய்முறை இல்லாம இருக்கு. பொண்ணு படிக்கணும். வீடு கட்ட வாங்குன கடன் இருக்கு.

தூத்துக்குடி மருத்துவமனையில மக்கள் என்ன சொன்னாங்க?

அந்த ஆலையை கட்டாயம் மூடியே ஆகணும். அந்த ஊர் மக்களுக்கு மட்டுமில்ல. எல்லா ஊர் மக்களுக்கும் அதுதான் நல்லது. அவரு இருந்த பெட்டு முழுக்க பாதிக்கப்பட்டவங்க. என் கண் முன்னாடியே ரெண்டு பேர் இறந்துட்டாங்க.

ஸ்டெர்லைட் ஆலையை அரசாங்கம் மூட மாட்டேன்னு சொல்லுதே?

அதனால தான் இன்னும் போராட்டம் பண்றாங்க. போராட்டம் பண்றது தான் நல்லது. அவன் காசு கொடுத்து மடக்கத்தான் பார்ப்பான். ஆலையை மூடமாட்டன். போராட்டம் பண்ணாத்தான் மூட முடியும்.

இனிமே  நீங்க தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துக்குவிங்களா?

மக்கள் கூப்பிட்டா கலந்துக்குவோம். அதுக்கு மேல நடக்கறது நடக்கட்டும்.

கடைசியா உங்க கணவரோட கலந்துக்கிட்ட போராட்டம் எது?

தஞ்சாவூர்ல நடந்த விவசாயிக மாநாட்டுல நாங்க குடும்பத்தோட கலந்துகிட்டோம்.

போலிசு, அதிகாரிகள் வந்து ஏதாவது விசாரிச்சாங்களா?

வந்தாங்க. இங்க ஊர்ல இருக்கவங்க கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்ப நான் இங்க இல்ல. தூத்துக்குடி ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அங்கேயும் பாடியை வாங்கிக்க சொன்னாங்க. நான் பாடியை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன். எல்லாரும் பாடியை வாங்கும் போது அவரோட பாடியும் வரட்டும். எந்த நோக்கத்துக்காக இறந்தாரோ அந்த நோக்கம் நிறைவேர்ற வரைக்கும் பாடியை வாங்க மாட்டோம்.

தோழர் ஜெயராமன் மகள் நந்தினி, கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் B.A முதலாம் ஆண்டு படிக்கிறார்.

“எங்க அப்பா அமைப்புக்கு போறதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்னு தெரியாது. ஆனா அமைப்புக்கு வந்த பிறகு எங்கள நல்லபடியாத்தான் பாத்துகிட்டார். டி.வியில செய்திய பார்த்து எங்களுக்கு விளக்குவார். நோட்டிசு எல்லாம் கொடுத்து என்ன படிக்க சொல்லுவாரு. மக்கள் படுற கஷ்டத்தை சொல்லுவாரு.

முதல்ல அந்த ஆலையை மூடச்சொல்லுங்கள். அதற்காகத்தான் அப்பா உயிரை விட்டார். அந்த ஆலையை மூட வேண்டும். இது திட்டமிட்டு சுட்டிருக்கிறார்கள். எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் சுட்டதால் தான் இந்த இழப்பு. நாங்க இதுக்கு முன்னாடி போராட்டத்துக்கு போயிருக்கோம். மூணு நாள் அடைச்சி வைப்பாங்க. ஆனா இப்படி சுட்டது கிடையாது.

அகிம்சை வழியில் போராடினதுக்கே இத்தனை உயிர் போயிடுச்சி. அப்ப நாமளும் போராட்டத்தை மாத்தித்தானே ஆகணும்.

கலெக்டர் உட்பட எல்லோரும் திட்டம் போட்டு தான் செய்ஞ்சிருக்காங்க. எங்க பஞ்சாயத்து நடந்தாலும் கலெக்டர் அங்க இருந்து தானே ஆகணும். எதுக்கு அந்த இடத்தை விட்டுட்டு போகணும்? எல்லாமே திட்டமிட்டு செஞ்சிருக்காங்க. இதற்கு காரணமானவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்.

போலீசு நடந்துகிறதை பொருத்துத்தான் நம்ம போராட்டத்தை நடத்தணும். இங்க அகிம்சை வழியில் போராடினதுக்கே இத்தனை உயிர் போயிடுச்சி. அப்ப நாமளும் போராட்டத்தை மாத்தித்தானே ஆகணும்? – என்கிறார் நந்தினி.

குடும்பத்தின் தலைமகன் இறந்து போன நிலையிலும், உற்றார் உறவினர் துக்கம் விசாரிக்க வந்து கொண்டிருந்த நிலையிலும் அவர்கள் நிலை குலையவில்லை. உழைத்தால்தான் வாழ்க்கை எனும் நிலையிலும் அந்தக் குடும்பம் தனது சமூகக் கடமையில் இருந்தும், பொறுப்புணர்விலும் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கவில்லை.

உழைக்கும் மக்களிடம் தான் சோகம், மரணம் எல்லாம் காவியத்துயரமாக கடைபிடிக்கப்படுவதில்லை. போராட்டமே வாழ்க்கை என்பதை அவர்கள் எல்லாத் தருணங்களிலும் உணர்ந்தே இருக்கிறார்கள். வாழ்வில் அனைத்து வசதிகளும் இருந்தும், பொது வாழ்க்கைக்கோ இல்லை அரசியல் போராட்டங்களுக்கோ, இத்தகைய அரசியல் அமைப்புகளில் பணியாற்றுவதற்கோ தயங்கும் நண்பர்கள் இம்மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்!  இதே நிலையை தூத்துக்குடியில் கொல்லப்பட்ட  மக்கள் குடும்பங்களிலும் பார்க்கலாம். அவர்களும் இதே போல ஸ்டெர்லைட்டை மூடுவதைத்தான் முதன்மையாக பேசுகிறார்கள்!

13 அல்லது அதிகம் பேர்களைச் சுட்டுக் கொன்ற அரசு இந்த உணர்வையும், உணர்ச்சியையும் என்ன செய்ய முடியும்? இதை அழிப்பதற்கு போலீசிடமும், இராணுவத்திடமும் எந்த ஆயுதமும் இல்லை.

நேர்காணல் – படங்கள் : வினவு செய்தியாளர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடு | நிர்மலா கொற்றவை | அஜயன் பாலா | செந்தில் | சீனு இராமசாமி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தங்களது உள்ளக்குமுறலை, கண்டனத்தை பகிர்ந்து கொண்டனர்.

பகுதி – 1

எழுத்தாளர் நிர்மலா கொற்றவை, எழுத்தாளர் அஜயன் பாலா,  ஊடகவியலாளர் செந்தில், திரைப்பட இயக்குநர் சீனு இராமசாமி ஆகியோரின் கண்டனப் பதிவுகள்.

ஸ்டெர்லைட்டை மூடு ! இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து இலண்டனில் கடந்த 26 மே 2018 சனிக்கிழமையன்று மாலை 3-5 மணிவரை போராட்டம் நடைபெற்றது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் வேதாந்தாதாவிற்கு எதிரான நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

தூத்துக்குடி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டத்தில் நட்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் காயமடைந்திருக்கின்றனர். இதனைக் கண்டித்து இலண்டன் ,அல்டுவிச்சில்( Aldwych, London) இந்திய தூதரகத்தின்( Indian High Commission) முன்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டமானது ஃபாயில் வேதாந்தா(Foil Vedanta) , இங்கிலாந்திலுள்ள தமிழ் மக்கள், பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம், தெற்காசிய ஒருமைப்பாட்டு குழுமம், பறை:விடுதலைக்கான குரல், மற்றும் வீரத் தமிழர் முன்னணி ஆகியோரால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த ‘பாயில் வேதாந்தா’ அமைப்பைச் சார்ந்த சமரேந்திர தாஸ் கூறுவதாவது: “கடந்த 15 வருடங்களாக இந்தியா மற்றும் சாம்பியாவில் வேதாந்தா செய்துகொண்டிருக்கும் குற்றவியல் செயல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம். சூழலியல் போராட்டத்தில் நடைபெற்ற இந்த கார்ப்பரேட் கொலையானது கடைசியாக இருக்க வேண்டும் . பிரித்தானிய அரசு இதை விசாரித்து, வேதாந்தா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற இலண்டனில் உள்ள தமிழரான கார்த்திக் கமலக்கண்ணன் கூறுவதாவது, “ஒரு பிரித்தானிய கம்பெனியின் இலாபத்திற்காக மக்களின் பாதுகாப்பு
கேள்விக்குறியாவதும், சுத்தமான காற்றுக்கும், நீருக்கும் அவர்கள் அழுவதும் அருவறுக்கத்தக்கது. இந்த குற்ற பின்னணியுள்ள நிறுவனத்தை காக்க ஸ்னைப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தோம். சூழலியல் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளின் தலைவர்கள் குறிவைக்கப்படுவது ஆச்சரியமளிக்கவில்லை, ஏனெனில் வேதந்தாவை எதிப்பவர்களை  அவர்கள் இவ்வாறுதான் எதிர்கொள்கிறார்கள். தூத்துக்குடியில் இணையம் தடை செய்யப்பட்டுள்ளது இது ஜனநாயகத்திற்கு எதிரானது. தமிழ் மக்களுக்கு இது ஒரு சோகமான காலம்” என்றார்.

வேதாந்தாவை இங்கிலாந்து பங்குச் சந்தையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் ஈடுபட்டோர் இங்கிலாந்து அரசுக்கு முன்வைத்தனர்.

தகவல்:
சமரேந்திரதாஸ்
(+44) 07941 475103

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது போலீசு !

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது  போலீசு !
2 நாட்களாகியும் எந்த தகவலும் இல்லை.

உசிலை
1.கோட்டையன்  வ / 40 , த / பெ சின்னன்
கோவில்பட்டி
2.சரவணன் வ , 32 த / பெ பண்டாரம்
ஆலங்குளம்பாப்பாக்குடி காவல் நிலையம்
3.முருகன் வ / 40, த /  பெ செல்லத்துரை
திருநெல்வேலி காவல் நிலையம்
4.கலியலூர் ரஹ்மான் வ / 50, த / பெ கலீல்
5.முகமது அனஸ் வ/ 20 , த / பெ கலியலூர் ரஹ்மான்
6.முகமது இர்ஷத் வ /18 , த / பெ கலியலூர் ரஹ்மான்

இவர்களை 25-ஆம்தேதி நள்ளிரவில் வீடு புகுந்து போலீசு இழுத்துச் சென்றது. கைது செய்யும் போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்பதையோ, என்ன வழக்கிற்காக கைது செய்கிறார்கள் என்பதையோ, எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதையோ குடும்பத்தினருக்கு தெரிவிக்கவோ இல்லை.

உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரித்த போது தமக்கு ஏதும் தெரியாது என்று கை விரிக்கின்றனர். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் கொத்து கொத்தாக மக்களை கொன்று, வன்முறை தீ வைப்பை நடத்திவிட்டு தங்களது குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கு எமது அமைப்புக்கு எதிராக பொய்களையும், புனை சுருட்டுக்களையும் உளவுத்துறை பரப்பி வருகிறது.

கைது செய்யப்பட்டால் முறையாக தகவல் தெரிவிக்க  வேண்டும் என்பதும் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதும் சட்ட நடமுறையாகும். கடந்த 48 மணி நேரமாக இவர்களை காணவில்லை என்பதால் இந்த தோழர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம்.

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிக்கின்ற அனைவரும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கும், எமது தோழர்களுக்கும் எதிராக போலீசு தொடுத்திருக்கும் இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இவர்களை விடுவிக்க கோரியும்  குரல்கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த 6 தோழர்களின் கடத்தலுக்கு எதிராக நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறோம்.

தங்கள்
வழக்கறிஞர்.சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

 

தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா | வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் அரிராகவன் நேர்காணல்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் – ஆகியோரிடம் 25.05.2018 மாலை எடுக்கப்பட்ட பேட்டி.

(பாகம்-1)

தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா?

* தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பிவிட்டதா? அங்கே இருக்கும் உங்கள் வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
* இந்த துப்பாக்கிச் சூடு தமிழக அரசு மற்றும் மாவட்ட போலீசின் நிர்வாகத் தோல்வியா?
* இதை திட்டமிட்ட கொலை என்று சொல்வதற்கு வேறு ஏதேனும் சான்றுள்ளனவா?
* இந்த துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
விரிவாக விவரிக்கின்றனர், போராட்டக் களத்திலிருந்த வழக்குரைஞர்கள்.

 

______

(பாகம்-2)

தூத்துக்குடி படுகொலை : வெளியார் ஊடுருவலின் விளைவா ?

* போராட்டம் வன்முறையில் முடிவதற்கு காரணமே, மக்கள் அதிகாரம் அமைப்புதான் என்று உளவுத்துறை கூறுகிறதே….
* வெளியூர் ஆட்கள் போராட்டத்தில் நுழைந்ததுதான் பிரச்சினைக்கு காரணமா?
* ஸ்டெரிலைட்டை மூடுவதாகச் சொல்கிறார்களே, இதனை வெற்றி என்று கருதலாமா?

 

 

மறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் கலைச்செல்வனிடம் வினவு நடத்திய நேர்காணல்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்பட்டமான படுகொலையை அரங்கேற்றியப் பின்னரும்; தமிழகத்தைத் தாண்டி உலகெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் இது அரச பயங்கரவாதம் என்று கண்டனங்களை தெரிவித்து வரும் இந்தச் சூழலிலும், அதே அதிகாரத்திமிரோடு தமக்கு எதிரானப் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது, எடப்பாடி அரசு.

ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பாக தமிழகமெங்கும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்தது, எடப்பாடி அரசு.

அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தார்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்று வழக்கமாக பிணையில் விடக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டாலும், இவர்களை வெளியே விட்டால் மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவார்கள், தமிழகத்தைக் கலவர பூமியாக்கிவிடுவார்கள் என்று நீதிமன்றத்தில் வாதிட்டு பிணை வழங்க மறுத்து வருகிறது, போலீசு.

வழக்குரைஞர்களின் கடுமையான சட்டப்போராட்டத்தையடுத்து, சென்னையில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த 30 தோழர்களை நிபந்தனை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது.

மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் உட்பட கைது செய்யப்பட்டவர்கள் 30 பேரும் இன்று காலை 8.00 மணியளவில் புழல் சிறையிலிருந்து காட்டுமிராண்டி தமிழக அரசு மற்றும் போலீசைக் கண்டித்து முழக்கமிட்டவாறே வெளியே வந்தனர்.

தகவல்: மக்கள் அதிகாரம், சென்னை.

******
உடுமலை

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டைக் கண்டித்து 24.05.18 அன்று உடுமலை மக்கள் அதிகாரம் சார்பாக அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி ஆர்ப்பாட்டம் தொடங்கியது,

கோவை, மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் உரையாற்றினர். மேலும், வழக்குரைஞர் சாதிக்பாட்ஷா, தோழர் மூர்த்திஐக்கிய கம்யூனிஸ்ட், பால்.நாராயணன், தோழர் மோகன்திராவிடர் விடுதலை கழகம், வழக்கறிஞர் பெரியார்தாசன்அதி தமிழர் பேரவை, ஐயா விவசாய பாரதி உள்ளிட்ட மாற்று அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக சக்திகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

அவர்கள் தங்களது உரையில், ‘’அரசு திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போராடினால் இது தான் நடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் , புற்றுநோயினால் சாவதைவிட போராடி சாகலாம் என அதனால்தான் மறு நாளும் நெஞ்சை நிமிர்த்தி போராடிவருகிறார்கள் , இந்த துப்பாக்கிச்சூடு இதோடு நின்று விட போவதில்லை, நாளை .என்.ஜி.சி., மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, என அனைத்து எதிர்ப்பு போராட்டங்களிலும் தொடரும், அதற்கான ஒத்திகைதான் இது. திட்டமிட்டு இன்று தமிழகம் இராணுவ மயமாகி வருகிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், காஷ்மீர் போல் இங்கும் தொடங்கிவிட்டது. ஆனால் இதை முறியடிக்க தன் உயிரையும் கொடுத்தாவது அடுத்த சந்ததியை வாழ வைப்பது என மக்கள் போராட துவங்கி விட்டார்கள், அவர்களது போராட்டத்தை கட்சி, வேறுபாடின்றி ஆதரித்து அவர்களுக்கு துணை நிற்கவேண்டுமென்று அறைகூவினர்.

தகவல்: மக்கள் அதிகாரம், உடுமலை.

******
குடந்தை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்த பாசிச அரசை கண்டித்து 24-05-2018 அன்று குடந்தை மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டம் நடத்தினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி மக்கள் கண்டு ஆதரவளித்தனர்.

தகவல்: மக்கள் அதிகாரம், குடந்தை.

தூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்

தூத்துக்குடி அடையாளம் காட்டும் நவீன நீரோக்கள்!

நிர்மலா தேவிக்காக துண்டைக் காணோம் துணியைக் காணோமென ஓடி வந்து ஊடக சந்திப்பு நடத்திய ஆர்.எஸ்.எஸ் புரோக்கர் ஆளுநர் புரோகித், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 14 பேர்கள் கொல்லப்பட்ட போது ஊட்டி மலர்க்கண்காட்சிக்கு சென்றார். ஏரியில் படகுச் சவாரி போனார்.

எடப்பாடி, பன்னீர் செல்வம் முதலான அடிமைகளோ காது குத்து, பிறந்த நாள் விழாக்களில் குஷியுடன் கலந்து கொண்டனர். தூத்துக்குடி ‘கலவரத்தையே’ ஊடகங்கள் மூலம்தான் பார்த்தேன், 144 தடை உத்திரவு இருப்பதால் அங்கு எப்படி போக முடியும் என கைப்பிள்ளை டயலாக் பேசினார்.

பிரதமர் மோடியோ விராட் கோலி விடுத்த செல்லமான தண்டால் சாகசத்தை ஏற்றார். விரைவிலேயே பத்து தண்டால்கள் எடுப்பதற்கான பயிற்சியில் பல மணி நேரங்களை செலவிட்டு வருகிறார்.

ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான். தூத்துக்குடியில் மரண ஓலம் கேட்ட போது நவீன நீரோக்கள் ஒருக்களித்து படுத்துக் கொண்டனர்.

#வினவு_செய்தியாளர்

ஸ்டெர்லைட் படுகொலைகளைக் கண்டித்தும்…
இணையதளத்தை முடக்கி கருத்துரிமையை
நசுக்கும் அராஜகத்தை கண்டித்தும்….
எழுத்தாளர் கலைஞர்களின் கண்டன முழக்கப் போர்
25.5.2018 மாலை 5 மணி, பெத்தனியாபுரம்,
குரு தியேட்டர் அருகில், மதுரை.

அனைவரையும் அழைக்கிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

#Sterlite, #BanSterlite, #SterliteProtest, #SterliteProtestMay22nd2018, #Thoothukudi, #SaveThoothukkudi, #PoliceAtrocities, #ThoothukudiMassacre, #StateTerrorism,

__

தூத்துக்குடியில் நடைப்பெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு, போலீசால் கொல்லப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்.ஜெயராமன் அவர்களுக்கு வீரவணக்கம்.

கருப்புச்சட்டை அணிந்த இளைஞர்களை சிறை வைக்க உயர்நீதிமன்றம் போன எடப்பாடி அரசுதான் தூத்துக்குடியில் அமைதிக்காக பாடுபடுகிறதாம்!

தூத்துக்குடியில் மே 22-ம் தேதி துப்பாக்கி சூடு நடந்த பிறகு 65 இளைஞர்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்ற ஒரே ’குற்றத்திற்காக’ போலீசால் கைது செய்து அடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். 23-ம் தேதி தூத்துக்குடி வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்து நீதிபதியை அனுப்பி போலீசு நிலையங்களில் சோதனை நடத்தி சட்டவிரோத காவலை கண்டுபிடித்தனர். நேற்று கண்டுபிடித்த உடனே அவர்கள் மீது பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்து கலவரம் செய்வதாக பொய் வழக்கு போட்டு 65 பேரை சிறைக்கு அனுப்பியது போலீசு. ஆனால் அவர்களுக்கு பிணை வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். உடனே இன்றைக்கு அவர்களுடைய பிணையை ரத்து செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. உயர்நீதிமன்ற நீதிபதி ராம திலகம் அதை நிராகரித்து விட்டார். அமைதி திரும்புவதற்கும் சுமூக நிலையைக் கொண்டு வருவதற்கும் என்கவுண்டர் எடப்பாடி அரசு எடுத்து வரும் முயற்சியின் யோக்கியதை இதுதான்! துப்பாக்கிகள் இன்னும் ஓயவில்லை.

__

இணைய சேவையை கொண்டு வர எடப்பாடி அரசுக்கு நீதிமன்ற அழுத்தம் கொடுத்த வழக்குரைஞர்கள்!

இணைய சேவை முடக்கத்தை எதிர்த்து, பத்திரிகையாளர் கவின்மலரை மனுதாரராக கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்திருந்தனர்.

இன்று உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

“இணைய சேவை முடக்கத்துக்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை. சமூக ஊடகங்களில் போலீசு அராஜகம் குறித்த உண்மை செய்திகள்தான் வருகின்றனவே ஒழிய யாரும் வதந்தி பரப்பவில்லை. பொய்ச் செய்தி பரப்புவதை தடுப்பதற்காகத்தான் இணைய தடை என்று கூறும் இந்த அரசு, பொய்ச் செய்தி பரப்பியதாக யார் மீதும் ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.”

“தொலைக்காட்சி ஊடகங்கள் போலீசு அராஜகம் குறித்த உண்மையை இருட்டடிப்பு செய்கின்ற நிலையில், அவற்றை வெளிக் கொணர்கின்ற சமூக ஊடகங்களை முடக்குவதே போலீசின் நோக்கம். எனவே இணைய முடக்கம் என்பது ஏற்கனவே போலீசு அராஜகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை இன்னொரு முறை தண்டிப்பதாகவே அமையும்” என்று நமது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

தமிழக அரசால் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி ஒரு வாதத்தைக் கூட வைக்க முடியவில்லை. மறு உத்தரவு மாலை 6 மணிக்கு என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். வழக்கு நிற்காது என்று தெரிந்தவுடனே, குறைந்த பட்சம் தூத்துக்குடி மாவட்டத்திலாவது இணைய சேவை தடை தொடர்வதை உத்திரவாதப் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன், அவசரம் அவசரமாக மற்ற இரு மாவட்டங்களில் இணைய சேவையை வழங்குவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இது நல்லெண்ணம் அல்ல, நீதிமன்றத்தை ஏமாற்றும் சூது நடவடிக்கை.

இணைய முடக்கத்தை மூன்று மாவட்டங்களிலும் ரத்து செய்யவேண்டும் என்பதுதான் ம.உ.பாதுகாப்பு மையத்தின் வாதம். என்ன தீர்ப்பு வருகிறது என்று பார்ப்போம்.

இணைய சேவை முடக்கத்தை பொருத்தவரை 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 11 மாநிலங்களில் 70 முறை இணையம் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதற்கு முன் 2012 இல் காங் ஆட்சியில் காஷ்மீரில் மட்டும் ஒரு முறை முடக்கப்பட்டிருக்கிறது.

2016 இல் இணைய முடக்கத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் முடக்கத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது. வேறு மாநிலங்களில் இணைய முடக்கத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து முறியடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இதில் நாம் வெற்றி பெற்றால், மோடி அரசுக்கு எதிராக தமிழகம் நடத்தி வரும் பல முனைப் போராட்டத்தில், இந்தப் போராட்டத்திலும் தமிழகம் ஒரு முன்மாதிரியைப் படைத்ததாக இருக்கும்.

**

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

மிழகம் – தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?, இந்திய அரசே ஆலை அவசியமானதோ – தமிழனின் உயிர் அவசியமானதோ?, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா?” உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

This slideshow requires JavaScript.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தமை தெரிந்ததே. இதனைக் கண்டித்தே யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

நன்றி: arasangam.lk

__

தமிழக கொலைகார போலீசைக் காறித்துப்பும் முன்னாள் இராணுவ அதிகாரி!

__

அடியாளை விட்டு சுடச்சொல்லியிருந்தாலும், அதே அடியாளிடம் ரிப்போர்ட் கேட்பானாம் ஆண்டை! 25.5.2018

தூத்துக்குடி ‘வன்முறைகள்’ குறித்த அறிக்கையை தமிழக அரசு தற்போது மத்திய உள்துறை அமைச்கத்திடம் கொடுத்திருக்கிறதாம்!
– நாயைக் கொல்வதாக இருந்தாலும் ‘விசாரித்து’ விட்டு கொல்வது போல அடியாளை விட்டு சுடச்சொல்லியிருந்தாலும், அதே அடியாளிடம் ரிப்போர்ட் கேட்பானாம் ஆண்டை!
ANI @ANI

***

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மை எரிப்பு! 25.5.2018

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

This slideshow requires JavaScript.

நன்றி : makkal athigaram/fb

**

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் நக்கலைட்ஸ் குழுவினர்!

https://www.youtube.com/watch?v=5Ey1v8L_pEc&feature=youtu.be

**

புதுச்சேரியில் அலங்கோலமான ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ! 25.5.2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் வேடமணிந்தவர்களை புதுச்சேரி போராட்டக்காரர்கள் அலங்கோலப்படுத்தினர்.

This slideshow requires JavaScript.

நன்றி : செய்தி_விகடன்

**

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு!
சென்னையில் திருநங்கைகள் போராட்டம்!
25.5.2018

தூத்துக்குடிக்கு தோள்கொடுப்போம் ! புதுச்சேரியில் வேலை நிறுத்தம்!  25.5.2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம்-புதுச்சேரியில் இன்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. புதுச்சேரியில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

நன்றி : செய்தி_விகடன்

**

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ; வாங்கும் காசுக்கு மேல கூவுறாங்க! டுமிலிசை!
– ஓவியம் முகிலன் 25.5.2018

தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டுபவர்களை திட்டமிட்டு ஒடுக்க வேண்டும் – டுமிலிசை ஸ்டெர்லைட் முதலாளி போடும் பிச்சைக் காசுக்காக விசத்தை கக்கும் எச்சஇலை!

நன்றி : rsyftn/fb

**

ஸ்டெர்லைட்டை மூடி ! ஆட்சியை விட்டு ஓடு!
– சுவரொட்டி.

எடப்பாடியே!
* நீ ஆண்டது போதாதா?
* தூத்துக்குடியில் 14 உயிர்கள்
மாண்டது போதாதா?
ஸ்டெர்லைட்டை மூடி ! ஆட்சியை விட்டு ஓடு!
25.05.2018 காலை 6.00 முதல் மாலை 6.00 வரை ஆட்டோக்கள் ஓடாது!

ஆட்டோ-டாக்சி ஓட்டுநர் சங்கம், தென்சென்னை.

**

போலீஸ் – கலவரங்களுக்கு எங்களை அனுகவும்! – ஓவியம் முகிலன்

குடிசை கொளுத்துவது, கொலை, விபச்சாரம், லஞ்சம் என அனைத்தும் இங்கு சிறப்பாக செயல்படும்!
அனைத்து விதமான கலவரங்களுக்கு எங்களை அனுகவும்!
420, காவல் நிலையம், தமிழ்நாடு.

நன்றி : rsyftn/fb

**

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; மிக்சர் திண்ணும் மோடி!

*நாட்டின் கால்வாசிக் குழந்தைகள் சத்துக் குறைவால் அவதிப்படும்போது, நமது பிரதமர் #FitnessChallenge குறித்து பேசுவது ஏன்?
*அவர் ஏன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசுவதில்லை?
*பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்த கேள்விகளை அவர் தவிர்ப்பது ஏன்?
– இப்படி பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பதில் குழப்புவதை அவர் என்றாவது நிறுத்துவாரா?

 

**

ஜெனரல் டயர் இல்லை; ஜாலியன் வாலாபாக் படுகொலை!

மக்கள் அதிகாரம் சுவரொட்டி முழக்கம்!
ஜெனரல் டயர் இல்லை
இராபர்ட் கிளைவ் இல்லை
ஆனால்,
ஜாலியன் வாலாபாக் படுகொலை!

மக்கள் அதிகாரம், புதுச்சேரி

**

கார்ப்பரேட்டுகளுக்காக பாயும் தோட்டாக்கள்!

ஓவியம் முகிலன்

__

அமெரிக்காவில் சுட்டா.. அழுவாராம் மோடி!
தூத்துக்குடியில சுட்டா.. தூங்குவாராம்!

அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிசூடுகளுக்கு வருந்தும் இந்தியாவின் பிரதமர், அதே வாரத்தில் 13 இந்தியர்கள் தமிழகத்தின் தூத்துக்குடியில் கொல்லப்பட்ட போது அமைதியாக இருக்கிறார். பிரபலங்களோ இல்லை கிரிக்கெட் நட்சித்திரங்களோ அழைக்கும் சாகச அழைப்புகளை ஏற்பவர், எளிய மக்களின் குரலை எற்பது இருக்கட்டும், கேட்பது கூட இல்லை!

Prime minister of india feels sorry for Americans when shootout was happened in USA and In this week 13 Indians Killed in police shooting in Toothukudi-TN, but he remain silent.He reacts on celebrity or cricketer’s challenge but he never heard any common man’s voice.
#Thoothukudi
டிவிட்டரில் @AlpeshThakor_ குஜராத் ரத்தன்பூர் காங்கிரசு எம்.எல்.ஏ

__

சென்னை வடபழனியில்அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்.

This slideshow requires JavaScript.

இன்று 25.5.2018 எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி, சென்னை வடபழனியில்அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்.
__
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஜார்கண்டில் ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்டில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம்.
23.5.2018

__

நக்சல்பாரி எழுச்சியும் இப்படித்தான் துவங்கியது

தூத்துக்குடியைப் பற்றி இன்று நீங்கள் நினைக்கும் போது ஒன்றைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது! 51 வருடங்களுக்கு முன்னர் நக்சல்பாரி எழுச்சியும் இப்படித்தான் துவங்கியது. மேற்கு வங்கத்தில் இருக்கும் நக்சல்பாரி கிராமத்தில் அணிதிரண்ட ஆயுதமற்ற பழங்குடி பெண்கள், குழந்தைகள் கூட போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

–   கவிதா கிருஷ்ணன்

__
சென்னை எழும்பூரில் அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்!

இன்று 25.5.2018 எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி, சென்னை எழும்பூரில் அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்.

__

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
24.5.2018

பதாகை முழக்கங்கள்
“NEED 10 LAKHS PLEASE SHOOT ME!!”
“KILL STERLITE NOT PEOPLE”

___

தூத்துக்குடி : அரசு மருத்துவர்கள் & செவிலியர்களின் மகத்தான சேவை!

நண்பர் ஒருவரிடம் மாலை பேசிக்கொண்டிருந்தேன் . தூத்துக்குடியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் எப்படிப்பட்ட சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது, வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பது போன்ற பல விசயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

2 நாட்களாக குவிந்துள்ள மக்களை சிகிச்சை அளித்து காப்பாற்றும் அரும்பணியில் இரவு பகலாக மருத்துவர்கள் , பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவ ஊழியர்கள் என்று எல்லோரும் கடுமையாக நெருக்கடி மிகுந்த சூழலில் பணி செய்து வருகின்றனர். குறிப்பாக பயிற்சி மருத்துவர்கள் பம்பரமாய் சுழன்று வேலை செய்து வருகின்றனர் யாரும் அறைக்கு செல்லாமல் தொடர் பணியில் கடமை உணர்ச்சியோடு மிகப் பெரிய பேரிடர் சூழலில் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திகொண்டு 48 மணி நேரமாக வேலை செய்து வருகின்றனர்.

கண் முன்னே ரத்தம் தோய்ந்த உடல்கள் தலை சிதைந்து மூளை சிதறிய போராட்டக்காரர்களின் உடல்கள், சிதறிய எலும்புகளோடு சதையோடும் வலியோடு கதறும் மக்கள் எங்கு பார்த்தாலும் கதறல் அலறல் பதட்டம் படபடப்பு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடு 22ஆம் தேதி முதல் போராடி வரும் பயிற்சி மருத்துவர்களின் மன்நிலையை நினைத்துப்பார்க்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னால் (2013 ) பயிற்சி மருத்துவர்கள் பகுதி நேர பணி வேண்டி போராட்டம் நடத்தியது நினைவுக்கு வந்தது அதே பயிற்சி மருத்துவர்கள் இன்று மிகப்பெரிய சிக்கல் மிகு சூழலில் தங்களை மறந்து மக்களுக்காக அரும்பணியாற்றி வருவது நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உள்ளது.

அரசு நெருக்கடி தரும் சூழலில் மக்கள் பக்கம் நிற்கவேண்டும் என்ற நிலைபாடும் அரசு வன்முறையாட்டம் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடும் சூழலில் எதை பற்றியும் கவலைபடாமல் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி பணிசெய்து மருத்து அறம் காத்து நிற்கும் பயிற்சி மருத்துவர்கள் நாளை மக்கள் மருத்துவர்களாக வருவார்கள். நிச்சயம் இந்த தூத்துக்குடி போலீஸ் வெறியாட்டம் எல்லோர் வாழ்வையும் மாற்றியுள்ளது. அந்த பயிற்சி மருத்துவர்களின் வாழ்விலும் நிச்சயம் மிகப்பெரிய தாக்கமும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

மேலும் மக்கள் போராட்டம் நடக்கும் பல்வேறு இடங்களில் அவர்களுக்கு ஆதரவாக நின்று இலவச மருத்துவ சிகிச்சை குழு ஒன்று செயல்படுத்தவும் தோழர் இணை பேராசிரியர் தர்மராஜா கூறியது போன்று இலவச சட்ட உதவிக் குழுவோடு இணைந்து மருத்துவக் குழுவும் இணைந்து செயல்பட வாய்ப்பும் சூழலும் உள்ளது.

அந்நியமாகி இருந்த சூழலில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு மாணவர்களையும் பயிற்சி மருத்துவர்களையும் மக்களின் பக்கம் கொண்டு போய் சேர்த்துள்ளது.

– மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார், முகநூலிருந்து…

__

இன்று 25.5.2018 எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒட்டி, சென்னை எழும்பூரில் நிறுத்தப்பட்ட போலீசு வாகனங்கள்!

This slideshow requires JavaScript.

__
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஒட்டிய சுவரொட்டி.
25.5.2018

அரச பயங்கரவாதத்திற்கு அடிபணிய மாட்டோம்!
கார்ப்பரேட் கைக்கூலி எடப்பாடி அரசே!
* சாவுக்கு அஞ்சமாட்டோம் ஸ்டெர்லைட்டுக்கு சவக்குழி தோண்டும் வரை ஓயமாட்டோம்!
* ஒ.என்.ஜி.சி, நியூட்ரினோ, ரசாயன மண்டலம்… என தமிழகத்தை அழிக்கு அனுமதியோம்!
ஓரணியாய் கிளர்ந்தெழுவோம்!

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
99623 66321.

துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்

0

ஜெனரல் டயரின்
வார்த்தைகளில் சொல்கிறோம்…,
“துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள்”
நாங்கள் நகரச் சொன்னால்
நகர்ந்துவிட வேண்டும்,
இல்லையெனில்…. அவர்களை
சுட்டுக்கொண்டே இருங்கள்…..

நாங்கள் நடந்து செல்ல
இனி சிவப்பு கம்பளம் எல்லாம் வேண்டாம்.
சுடப்பட்ட இந்த நாய்களின் இரத்தம்
இன்னும் சற்று நேரத்தில் உறைந்துவிடும்….
அதன்மீது
இனி எமது பாதங்கள் பயணிக்கும்..,
நொறுங்கிய எலும்புத் துண்டுகள்
ஆங்காங்கே இருக்கக் கூடும்
அதை மட்டும் கவனமாக
பொறுக்கி விடுங்கள்…
ஏனெனில் நாங்கள் நடக்கும்போது
எங்கள் காலணிகளை
அவைகள் காயப்படுத்தக் கூடும்.

“அந்த மாணவிக்கு தூயக் காற்று
வேண்டுமாம் சுவாசிக்க..,”
முதலில் அவள் மூச்சை நிறுத்துங்கள்.
இந்த முழக்கத்தோடு ஊரைக் கூட்டும்
அவள் இதழ்களை
துப்பாக்கி குண்டுகள் கொண்டு
துளைத்திடுங்கள்…
அவள் மரணித்திடும் போது எழுப்பும்
முனகல் சத்தம்….
அடுத்த சந்ததிக்கும்,
இந்த அபாயகரமான தருணங்களை
எடுத்துச் செல்லட்டும்.

ஆலை கழிவுகள்
மண்ணுக்குள் சென்று
நிலம் மலடானால்
எங்களுக்கு யார்
வாழ்வாதாரத்தை வழங்குவது….??
சரியான கேள்விதான்
அந்த வார்த்தைகள்தான்
உலர்ந்து போன மலைமுகடுகளில்
பற்றும் நெருப்பாய்
ஜனங்களிடம் நெருங்குகிறது..,
அதனால்தான்
அந்த வார்த்தைகளை
யார் உதிர்க்கிறார்களோ
அவர்களது மார்புகளின் மீது
புல்லட்டை இறக்குங்கள்…
மார்பின் மத்தியில் இறங்கி
எலும்புகளை உரசிவிட்டு செல்லும்
தோட்டாக்களின் ஓசைதான்…
எங்கள் செவிகளுக்கான
இசையாய் அமைய வேண்டும்…

அங்கே இன்னொருவன்…
நீர் மாசுபடுகிறது
உங்களது ஆலையின்
அடாவடித்தனத்தால்” என்கிறான்
அதை உச்சரிக்கும்போது
அவனின் நரம்புகள் ஒவ்வொன்றும் புடைக்கின்றன…..
சொல்லப்போனால்
அந்த புடைக்கும் நரம்புகள்
எங்களுக்கு கொஞ்சம் பயம் காட்டுகின்றன.
அதனால்.. அவனை
ஒரு தெரு நாயியினை சுடுவது போல
கூட்டத்தில் குறிவைத்து சுடுங்கள்….

“காப்பர் உங்களுக்கு
புற்று நோய் எங்களுக்கா”….? என்று
இன்னும்..இன்னும்..
நிறைய வார்த்தைகள்
நெருப்பாய் எங்கள் மீது விழுகின்றன.

இனி எந்த வார்த்தைகளும் கேட்கக்கூடாது
ஒரு மயான அமைதி நீடிக்கும் வரை
சுட்டுக்கொண்டிருங்கள்….
சுடுவதற்க்கு காரணம் வேண்டுமா?
நீங்களே ஊர்திகளை தீ வைத்துக் கொள்ளுங்கள்
“ஜனநாயக விரும்பிகளுக்கும்
நாம் கொஞ்சம் தீணி போடுவோம்”
“போலீசு சும்மாவா சுடுவாங்க?” என்று
தவளைகள் போல கத்திக்கொண்டிருப்பதும்
நமக்கான பாதுகாப்பு வளையம்தான்.

அதனால் பதட்டமில்லாமல்
நிதானமாக நிறுத்தி…
உயிர் பிரியும் வரை சுடுங்கள்……

பிரேக்கிங் நியூஸ் கூட
நமக்கு பிறந்தவைகள்தான்
நமது விந்தனுக்களே
விளம்பர இடைவேளைகளில் வந்துபோகும்.
“போராட்டக் காரர்களின் வெறியாட்டம்”
“போலீசார் துப்பாக்கி சூடு”
என்று வார்த்தைகளால் விசுவாசம் காட்டுவார்கள் ”
அதனால்….. பதட்டமில்லாமல்
சுடுங்கள் குண்டுகள் தீரும் வரை….

இப்போது உங்கள் பணி செம்மையாக முடிந்ததா?…..
ஒரு பத்து பேராவது பிணங்களாகி
படையலுக்கு தயாரா? …போதும்..
அடுத்து வந்தால் பார்த்துக் கொள்வோம்.
துப்பாக்கிகளில் படிந்திருக்கும்
இரத்தக் கறையை துடைத்துவிட்டு
நிம்மதியாக தூங்குங்கள்
இந்தாண்டுக்கான விருதுகள்
உங்கள் வீடு தேடி வரும்…

நீங்கள் ஆயிரம்…,
லட்சம் பேரோடு வாருங்கள்..,
நீங்கள் வந்து உடனடியாக
எங்கள் தலைகளை கொய்து கொள்ள…
நாங்கள் பழைய பிரெஞ்சு மன்னர்கள் அல்ல.
மூலதனத்தாலும் ஆயுத பலத்தாலும்
பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்க்கும்
நவீன கார்ப்பரேட்டுகள்..

எங்களுக்கு எதிரான சிந்தனை
உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில்
இருந்தால் கூட….அந்த மூளையை
லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம்

இனிமேலும்
விளக்கம் வேண்டுமா..?
ஜனநாயகத்தை காப்பற்ற
உங்கள் பிணங்களை கணக்கெடுக்க..,
ஒரு நபர் கமிஷன் அமைப்பார்கள்…
அவர்களும் அப்படியே …
நாங்கள் வாந்தி எடுத்ததை
துளியும் விரயம் இல்லாமல்
உங்கள் மீது துப்புவார்கள் …
முகத்தில் விழுவதை துடைத்துவிட்டு
நாய்களை போல நகர்ந்து செல்லுங்கள்.

  • முகிலன்

அவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு அடியாள் வேலை பார்த்து மக்களை சுட்டுக் கொன்ற போலீசு, நேற்று நள்ளிரவு வரை மக்கள் அதிகாரத்தின் பல தோழர்களை காட்டுமிராண்டித்தனமாக கடத்தி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை தூத்துக்குடி கொண்டு சென்று பொய் வழக்கு போடவும் உள்ளது.
போலீசு ஆட்சிக்கு எதிராகப் போராடும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதன் மூலம் கார்ப்பரேட் ஆட்சியை காப்பாற்ற நினைக்கிறது போலீசு. கார்ப்பரேட் ஆட்சிக்கு முடிவு கட்டாமல் மக்களுக்கு தீர்வில்லை.

எமது அமைப்பின் மீதான இத்தாக்குதலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். போலீசால் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எமது அமைப்பின்  நிர்வாகிகள் விவரம் பின்வருமாறு

1.கோட்டையன் – உசிலை ஆரியப்பட்டி
2.சிவகங்கை – கண்ணன்
3.சிவகங்கை – சுரேஸ் கண்ணன்
4.சிவகங்கை – அழகர்சாமி
5.காரைக்குடி – கல்யாணகுமார்
6.காரைக்குடி – மாணிக்கம்
7.திருப்புவனம் – மோகன்
8.கோவில்பட்டி – சரவணன்
9. ஆலங்குளம் – முருகன்
10. நெல்லை – கலீல் ரகுமான்
11. நெல்லை – முகமது அனஸ்
12. நெல்லை – முகமது இர்ஷத் (புமாஇமு)
13. காளையார்கோவில் – முருகன்
14. காளையார்கோவில் – உடையார்
15. காளையார்கோவில் – குருசாமி மயில்வாகனன் (தனி)

இவண்
மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
9962366321

டம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்

யார் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியாது
ஏன் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியாது
யார் சுடச்சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது
இறந்தவர்களை எப்படிப் போய் பார்க்க வேண்டுமென எனக்குத் தெரியாது
இருப்பவர்களின் கண்ணீரை எனக்குத் துடைக்கத் தெரியாது
நான் ஒரு டம்மி அரசன்
நான் ஒன்றுமே செய்வதில்லை
இருந்தும் எனக்கு எதற்குமே நேரமில்லை
என்னை ஏன் கேள்விமேல் கேள்வி கேட்கிறீர்கள்
எனக்கு எதுவுமே தெரியாது

நான் இங்குதான் இருக்கிறேன்
நீங்களே பார்க்கிறீர்கள்
நான் தீயதைப் பார்ப்பதில்லை
நான் தீயதைக்கேட்பதில்லை
தீயதை செய்வதில் மட்டுமே எனக்கு விருப்பமுண்டு
நான் ஒரு பிரமாண்டமான தீமையிலிருந்து உருவான
சிறிய தீமை என்றுதான் எல்லோரும் நினைத்தீர்கள்
நானே இப்போது தீமையிலும் பெரிய தீமையாக
வளர்ந்துவிட்டேன்
தயாரிக்கப்பட்ட உரைகளுக்கு அப்பால்
எனக்கு ஒன்றுமே சொல்வதற்கில்லை
மக்கள் சாகிறார்கள்
மக்கள் சாகடிக்கப்படுகிறார்கள்
எல்லாம் அவர்கள் நன்மைக்காகவே
எதிரிகள் என் கழுத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்
எதிரிகள் என் அருகில் உட்கார்ந்திருக்கிறார்கள்
எதிர்கள் என் அறைவாசலில் வழியை மறிக்கிறார்கள்
தூங்கும்போது என் தலையில் கல்லைப்போட
என் சகாக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்
எனக்கு இதையெல்லாம் சமாளிக்கத்தான்
நேரம் சரியாக இருக்கிறது

இது பொறுப்பு மிக்க பதவி என்று
எனக்குத் தெரியும்
இந்தக் கோடையில் மலை வாசஸ்தலங்களிலேயே
பெரும்பாலும் என் அரசியல் பயணத்தை நடத்துகிறேன்
நிறைய திருமணவீடுகளுக்கு போகவேண்டியிருக்கிறது
நிறைய பூப்புனித சடங்குகளுக்கு போகவேண்டியிருக்கிறது
மலர்க் கண்காட்சிகளை திறந்து வைக்க வேண்டியிருக்கிறது
மக்கள் தெருநாய்களைப்போல தினமும் சாகிறார்கள்
சாவு வீடுகளுக்குப்போக சங்கடமாக இருக்கிறது
வருடாவருடம் எங்களால் சாகிறவர்களுக்கு நஷ்ட ஈடாக
ஒரு பெரிய தொகையை தரவேண்டியிருக்கிறது
பட்ஜெட்டில் இதற்காக தனியாக நிதி ஒதுக்குகிறோம்
ஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ
அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும்
இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை
விரைவில் உருவாக்கபோகிறோம்
கொத்துக் கொத்தாக சாக ஆரம்பித்துவிட்டார்கள்
இதற்காக கூடுதலாக கடன் வாங்க வேண்டியிருக்கிறது

பழங்கால அரசனைப்போலத்தான் நானும்
எனக்கு எதுவும் தெரியாது
என் அந்தப்புரத்தில் வெளிச்சம் வராது
மழை பெய்கிறதா வெய்யிலடிக்கிறதா
என்று எனக்குத் தெரியாது
மாதம் மும்மாரி பெய்கிறதா என
அமைச்சரைக் கேட்டுகொள்வேன்
என் அலிபாபா குகையில்
உட்புட்றமாக பூட்டிக்கொண்டு
தங்கபுதையலில்
படுத்து உறங்குகிறேன்

மக்கள் என்னை வெறுக்கிறார்கள்
நானும் மக்களை வெறுக்கிறேன்
இதில் ஒரு சமநிலை இருக்கிறது

கொல்லப்பட்டவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
கொல்லபடுபவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
கொல்லப்பட இருப்பவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்

24.5.2018
பிறபகல் 3.49
நன்றி: மனுஷ்ய புத்திரன்