Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 494

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – கருத்துக் கணிப்பு

0

ரசு போக்குவரத்து தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. நிலுவைத் தொகையை தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்றால் அ.போ.கழகத்தை தனியார்மயமாக்கலாமே என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதை நீதிமன்றம் அரசை சாடியதாக ஊடகங்கள் நீதிபதிகளுக்கு ‘போராளி’ வேடம் கொடுக்கின்றன.

ஊதியம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகலாம் என்பதை செவிலியர் போராட்டம் முதல் மிரட்டி வரும் உயர்நீதிமன்றத்தின் யோசனை அல்லது சாடல் என்பது அரசை விமரிசிப்பது போல தனியார் மயத்தை ஆதரிக்கும் சதித்தனத்தை கொண்டிருக்கிறது. உண்மையில் நிலுவைத் தொகையை கொடுக்க முடியவில்லை என்றால் பதவி விலகலாமே என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழில் ‘வண்க்கம்’ கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆற்றினார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக அமல்படுத்தி வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த மக்கள் நலத்திட்டங்களின் யோக்கியதை என்ன? பல கோடி ரூபாயில் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா! போக்குவரத்து தொழிலாளிகளுக்கு பட்டை நாமம்! அடுத்து மின்வாரியத் தொழிலாளிகளும் போராடப் போவதாக கூறியிருக்கிறார்கள்.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கத்துடன் வெளிநடப்பு செய்தனர். சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்திரவிடக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர். பாஜக -வின் அடிமை அரசாக இருக்கும் எடப்பாடி அரசை பாதுகாக்கும் கவர்னரின் அரசியல் சாசனப்படியான வேலைகளை கடந்த நான்கைந்து மாதங்களாக தமிழகம் பார்த்துத்தான் வருகிறது. இதில் கூடுதல் காமடியாக ஆங்காங்கே குப்பைகளை வரவழைத்து பல பத்து உதவியாளர்களின் உதவியுடன் அகற்றும் மகத்தான ஆய்வுப் பணியையும் பார்த்து வருகிறோம். கருப்புக் கொடி காண்பித்தும் காவிப் படையின் முகவர் ஆய்வுகளை தொடர்கிறார்.

ஆளுநர் பன்வாரிலால், ஜி.எஸ்.டி. வரியை சுமுகமாக அமல்படுத்திய தமிழக அரசை பாராட்டுவதாக தெரிவித்தார். இந்த சுமூகமும் சரி, மத்திய பாஜக அரசின் சமூகமும் சரி தமிழகத்தில் எல்லா இடங்களிலும் சிறு உற்பத்தியாளர்களது வேலை நிறுத்தத்தையும் போராட்டங்களையும் கொண்டு வந்து இலட்சக்கணக்கான தொழிலாளிகளை நிர்க்கதியாக்கியது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் “விஷன் 2023” திட்டத்தை நோக்கி தமிழக அரசு செயல்படுவதாக பாராட்டிய ஆளுநர் பன்வாரிலால், ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் எடப்பாடி அரசு எடுத்த முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்தார். ‘ஏ ஒன்’ குற்றவாளியின் விஷன் ஜாஸ் சினிமாவிலும், மிடாசின் கல்லவாலும் ஒளியூட்டப்பட்டிருந்தாலும், மனு ஸ்மிருதிப்படி பாராட்டித்தானே ஆக வேண்டும்?

ஒக்கிகி புயல் தாக்குதலின்போது கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து தமிழக அரசு மீட்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார் ஆளுநர் பன்வாரிலால். ஒக்கி புயலின் போது இதே ஆளுநர் குளச்சலில் மக்கள் கேட்ட கேள்விகளால் பயந்து போய் கன்னியாகுமரி அம்மன் கோவிலில் வணங்கி விட்டு ஆய்வுப் பணியை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியது வரலாறு. தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பான பங்கை தமிழக அரசு அளித்து வருவதாகவும் கூறினார். பின்னே இவரே ஆய்வுப் பணி செய்வதால் இந்தப் பாராட்டு தனக்குத்தானே பாடப்படும் பாட்டு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கும், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால், மீனவர், வேளாண் திட்டங்களில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

ஒக்கி புயலில் மீனவர்கள் தத்தளித்த போது ஆர்.கே நகரில் குத்தாட்டம் போட்டு நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, ஏ ஒன் குற்றவாளியின் வீட்டை நினைவிடமாக்கினால் இனி தமிழகத்தின் ஊழல் அமைச்சர்களின் இல்லங்கள் அனைத்தும் வாழும் நல்லவர்களின் கோவில்களாக கருதி திருமுழுக்குத்தான் செய்ய வேண்டும்.

இனி இன்றைய கருத்துக் கணிப்பு :

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – உங்கள் கருத்து என்ன?
(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்)

  • மக்கள் விரோத அரசாங்கத்துக்கு ‘மக்கள் ஆளுநரி’ன் பாராட்டு
  • அடிமை எடப்பாடி அரசுக்காக ஆண்டை பாஜக சார்பில் அவரே தயாரித்திருக்கும் ஆசியுரை
  • நல்ல அரசாங்கத்துக்கு நல்ல ஆளுநரின் பாராட்டு
  • அடுத்தடுத்த ஆய்வுப் பணிகளின் மூலம் பாஜக-வின் செல்வாக்கை உயர்த்துவதற்கு ஒரு முன்னோட்டம்
  • பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையில்லை என்பதற்கான அங்கீகாரம்
  • ஆளுநரின் உரையில் குறையொன்றுமில்லை

 

ஜேப்பியார் நிர்வாகத்திற்கு தரகுவேலை செய்யும் நீதிமன்றம் !

1

ஜேப்பியார் பொறியியல் கல்லூரிக்கு உடந்தையாக தொழிலாளர் வேலை உரிமையைப் பறித்த உயர்நீதி மன்றம் !

செம்மஞ்சேரி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் பணி புரிந்த தொழிலாளர்கள் 16 ஆண்டுகால நவீன கொத்தடிமைத் தனத்தை மாற்ற சங்கம் துவக்கினார்கள். தொழிலாளர் நலத் துறையில் தொழிற் தாவாவை எழுப்பி, பேச்சு வார்த்தைக்கு அழைத்த அன்றே ஒட்டுமொத்த தொழிலாளரையும் வேலை நீக்கம் செய்து, பர்வீன் டிராவல்ஸ் மூலம் ஒப்பந்த முறையில் பேருந்துகளை இயக்க முயற்சித்தது நிர்வாகம்.

இதற்கெதிரான, தொழிற்தாவாவில் வந்த நிர்வாகப் பிரதிநிதிகளிடம் தொழிற் தாவா நிலுவையில் உள்ளபோது, அந்தத் தொழிற் தாவாவில் சம்மந்தப்பட்ட தொழிலாளர்களை அவர்களின் சுய விருப்பத்திற்கு மாறாக, வேலைநீக்கம் செய்வது சட்டவிரோதம், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என விசாரணை குறிப்பில் பதிவு செய்து, நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அவர்கள்.

தொழிலாளர் துறை ஆய்வாளர் (காஞ்சிபுரம்) அவர்களிடம் எழுப்பப்பட்ட மனுவிலும் தொழிலாளி விருப்பத்திற்கு மாறாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போட்டு, வேலை நீக்கம் செய்து விட்டதாக நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்து, தொடர்ந்து வேலைக்கு வந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு வழக்கமாக செய்து வந்த, வருகைப் பதிவேடுக்கான பயோ மெட்ரிக் சிஸ்டத்தை நீக்கியதும், மேலும் அவர்களை வேலை நீக்கம் செய்துவிட்டதாகக் கூறுவதும், தொழிற்தாவா நிலுவையில் உள்ளபோது செய்ய இயலாது எனவும், தொழிற் தகராறுகள் சட்டம் இதற்கு அனுமதிப்பதில்லை எனவும் பதிவு செய்ததோடு, தொழிலாளர்களுக்கு வருகைப் பதிவேட்டினைச் செய்ய பயோ மெட்ரிக் சிஸ்டத்தினைப் பொருத்தவும் உத்தரவிட்டு, அதன்படி வைக்கப்பட்டு, தொழிலாளர்கள் தொடர்ந்து பணி செய்து வந்தனர்.

நிரந்தரப் பணியாளரான தங்கள் பணியை, பர்வீன் டிராவல்ஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு செய்ய விடாமல், 15.09.2017 முதல் 25.10.2017 வரை 40 நாள்களுக்கும் மேல் போராடித் தங்கள் பணியைச் செய்து வந்தார்கள் தொழிலாளர்கள்.

25.10.2017 -ல் மாணவர்களுக்குத் தொழிலாளர்களால் பிரச்சினை வராமல் இருக்க, போலீசைத் தலையிடக் கோருவதற்காகவும் நிர்வாகத்தின் பணியைத் தொழிலாளர்கள் தடுக்காமல் இருக்கக் கோரியும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தடையாணை கோரியது நிர்வாகம்.

நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர், நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சில நிர்வாகக் காரணங்களுக்காக தொடர்ந்து வேலை தர இயலாது என்பதால், அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வேலை தர இயலாமையைத் தெரிவித்து விட்டது. அத்துடன் பேருந்து இயக்குவதை பர்வீன் டிராவல்ஸ் மூலம் ஒப்பந்த முறையில் இயக்க, ஒப்பந்தமும் செய்து விட்டது. இதனைத் தொழிலாளர் தரப்பு ஏற்காமல், தொடர்ந்து தடுத்து பணி செய்கின்றனர். இதனால் மாணவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, போலீசை வைத்து, தொழிலாளரை வேலை செய்வதை நிறுத்த அனுமதிக்க வேண்டுமென, 3 நிமிடத்தில் வாதத்தை முடித்து விட்டார்கள்.

தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் அவர்கள், தடை வழங்கக்கூடாது, நிர்வாகம் சட்ட விரோத வேலைநீக்கம் செய்துள்ளது, இது சம்மந்தமான தொழிற் தாவா நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொழிற் தகராறுகள் சட்டம், 1947 அடிப்படையிலும் இப்படிச் செய்ய இயலாது என தொழிலாளர் நல உதவி ஆணையர் அவர்களின் விசாரணைக் குறிப்பிலும் பதிவு செய்து நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளார்கள்.

இதையே வருகைப் பதிவேடை நீக்கியது சம்மந்தமாக, காஞ்சிபுரம் தொழிலாளர் ஆய்வாளர் அவர்கள் ஆய்வு செய்து, வருகைப் பதிவேட்டை வைக்க உத்தரவிட்டுள்ளார்கள். நிரந்தரப் பணியாளர்கள் இருக்க, அவர்களது வருகைப் பதிவைச் செய்யாமல் இருப்பதுடன், அந்த இடத்தில் ஒப்பந்தப் பணியாளர்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று அதை மாற்ற உத்தரவிட்டு, வருகைப் பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் சிஸ்டத்தை வைக்கச் செய்தார்கள். மேலும் கடந்த 16 ஆண்டுகளாக இவர்கள்தான் மாணவர்களை பேருந்துகளில் ஏற்றி வருகிறார்கள். நிர்வாகத்தின் சட்டவிரோத வேலை நீக்கத்தை மறுத்து கடந்த 40 நாள்களாக, இவர்களே மாணவர்களை ஏற்றி வந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களுக்குத் தொழிலாளர்களால் பிரச்சினை வராமல் இருக்க, அதில் போலீசைத் தலையிடக் கோரியும், நிரந்தரப் பணியாளரை வேலைக்கு வராமல் தடுக்க வேண்டும் எனவும் நிர்வாகம் கோருவது தவறு எனத் தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்கள்.

தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் 10 நிமிடத்தில் தனது வாதத்தை முடித்தார். ‘மாண்புமிகு நீதியரசர்’ அவர்கள் வழக்கு உங்களுக்குச் சாதகமாகத்தான் உள்ளது. “நீங்கள் ஏன் தொழிலாளர் நீதி மன்றம் போகக்கூடாது. தொழிலாளர் நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதோடு, தொழிலாளர் வங்கிக் கணக்கில் நிர்வாகம் பணம் செலுத்திவிட்டது. பிறகு ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்? வேண்டுமானால், மேலும் ஒரு நெகோஷேசன் (பேரம்) செய்து, கொஞ்சம் கூட்டி வாங்கிக் கொள்ளுங்கள்” என நிர்வாகத் தரப்பு வக்கீலாக 15 நிமிடங்களுக்கு மேல் தொழிலாளர் தரப்பைச் சம்மதிக்க வைக்க, ‘மாண்புமிகு உயர்நீதிமன்றத்து நீதிபதி’ திருவாளர். எம்.எஸ். ரமேஷ் அவர்கள் வாதாடுகிறார்கள்.

தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் : “தொழிற்சங்கம் துவங்கி, தொழிற்தாவா ஏற்படுத்தியமைக்காக, நிர்வாகம் தொழிற் தாவா நிலுவையில் உள்ளதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், தொழிற் தகராறு சட்டத்தைப் பொருட்படுத்தாமலும், சட்டவிரோத வேலை நீக்கம் செய்துள்ளது. எனவே, நிர்வாகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்” என்ற வாதத்தை வைத்துக்கொண்டிருக்கும் போதே, மாண்புமிகு நீதிபதி அவர்கள் பொறுமையில்லாமல், தான் நிர்வாகம் கோரியபடி, தடை வழங்குவதாகவும், ஒரு வாரத்திற்குப் பிறகு, மீண்டும் இதுபற்றி விசாரிப்பதாகவும், 1.11.2017 -க்கு வழக்கைத் தள்ளி வைப்பதாக தெரிவித்து, தான் முன் தயாரிப்புடன் செய்து வந்த உத்தரவைப் போட்டு, நிரந்தரத் தொழிலாளிகளின் வேலை உரிமையைப் பறித்து, நிர்வாகத்தின் முடிவுப்படி ஒப்பந்த முறையில் வேலை நடத்த, வாய்ப்புக் கொடுத்தார் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள். 1.11.2017 அன்று இவ்வழக்கு விசாரணை பட்டியலுக்கே வரவில்லை.

இதுவரை 3 மாதங்கள் முடிந்துவிட்டது. இந்த வழக்கை அவர்கள், அவர்களாகவே தெரிவித்த படி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இது சம்மந்தமாக, தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் மென்சன் செய்வதன் அடிப்படையில் 8 முறை இந்த வழக்கை வழக்குப் பட்டியலில் இரண்டாவது பட்டியலின் இறுதியில் போட்டு, ஒரு நாளும் வழக்கு விசாரணைக்கு வராதபடி பார்த்துக் கொண்டது மாண்புமிகு உயர்நீதி மன்றம்.

நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை உரிமையை இழந்து, நீதிமன்றத்திடம் அலைந்து அலுத்துப் போய், இப்போது நாங்கள் என்ன செய்தால் இந்தச் சட்டமும் நீதியும் எங்கள் தரப்பு நியாயத்தை ஏற்கும் எனக் கொதிப்படைந்து கேட்கிறார்கள் தொழிலாளர்கள்.

முதலாளிகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட வந்தால், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீங்கள் ஏன் தொழிலாளர் நீதிமன்றம் போகாமல், உயர்நீதிமன்றத்திற்கு வருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி, தொழிலாளர் கோரிக்கையை ஏற்காமல் தள்ளுபடி செய்து வந்துள்ளனர் மாண்புமிகு உயர்நீதிமன்ற நாட்டாமைகள்.

முதலாளிகள் தரப்பு தொழிலாளர்களுக்கு எதிராக எதைக் கேட்டாலும் வாரி வழங்குவதோடு, தொழிலாளர்களின் வேலை உரிமையைப் பறித்து, ஒழித்துக் கட்டுவதற்கு உற்றத் தோழனாகச் செயல்படுகிறார்கள். முதலாளிகள் தரப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் மாண்புமிகு நீதியரசர்கள் தொழிலாளர் தரப்பு வாதத்தைக் கேட்கவே மறுக்கிறார்கள். முதலாளிகள் நடைமுறையில் இருக்கும் தொழிற் தகராறுகள் சட்டப்படி நடக்க மறுப்பதை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து துணிவோடு செயல்படுகிறார்கள் நீதிபதிகள்.

மேலும் தொடர்ந்து தொழிலாளர் தரப்பு வழக்கை மென்சன் செய்வதால், கண் துடைப்புக்கு இரண்டாவது பட்டியலில் கடைசியாகச் சேர்த்து விசாரணைக்கு வராமல் செய்வதன் மூலம் நிர்வாகத்தின் சட்டவிரோத செயல்களைத் தொடர்ந்து வழக்கப்படுத்திக் கொள்ள அனுமதித்து, தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது நீதிமன்றங்கள். இதன் மூலம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கான வேலை உரிமையைப் பறித்து, தொழிலாளர்கள் வாழ்வை அழிக்கிறது. இதையே காரணமாக்கி நீதிமன்ற உத்தரவை மீறி, தொழிலாளர் நலத்துறை செயல்பட முடியாது என நீதிமன்றத்தைக் காரணம் காட்டி, தொழிலாளர் நலத்துறை ஆணையகமும் நாசூக்காக ஒதுங்கிக் கொள்கிறது. பிறகு, தொழிலாளர் வர்க்கம் செய்வதறியாது கோபமும் அவமானமும் பொறுக்க முடியாமல் அடுத்த அடிமை வேலைக்குப் போய் மடிந்து விடுகிறார்கள்.

இந்த நாட்டின் தொழிற் தகராறு சட்டத்தை மதிக்காமல், தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தும் முதலாளிகள் இவர்களிடம் உரிமை கோரினால் இந்தக் கொத்தடிமை வேலையையும் பறிக்கும் முடிவை நீதிபதிகள் உடனே அனுமதிக்கிறார்கள். இதன்மீது எந்தக் கேள்வியும் கேட்காததோடு, தொழிலாளர்களைப் பணிய வைக்க, அறிவுரைக்கு மேல் அறிவுரையாக வழங்குகிறார்கள். கூடுதலாகப் பெற்றுக்கொள்ளும்படி இடைத்தரகரைப் போன்ற பேரம் பேசும் வழிமுறையைக் காட்டுகிறார்கள். இப்படித் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்தச் செயல்கள் எந்த வகை நீதியாகும்? இந்த நீதிமன்றங்கள் யாருக்கானவை? முதலாளிகளின் கருணை இல்லமாக செயல்படும் இந்த நீதிமன்றம், உழைக்கும் மக்களின் விரோதியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து கிளர்ந்து எழுந்து, போராடாமல் இருக்குமானால் உரிமை என்ற வார்த்தை கூட இனி உச்சரிக்கவே முடியாமல் ஒழிக்கப்படும்.

எனவே, நீதிமன்றம், முதலாளித்துவ பயங்கரவாதங்களை முறியடிக்க தொழிலாளர் வர்க்கம் மாற்றுப் போராட்ட வடிவங்களை கையாளவேண்டும். ஒன்றுபட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின்கீழ் இப்படியொரு புதிய அமைப்பைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இதனை சாதிக்க முடியும்.

– இல. பழனி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி


 

தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !

1

தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு, ஜனவரி 2, 2018- அன்று வெளியிட்டிருக்கிறது. இதன் படி இனி தனி நபர்கள், மத நிறுவனங்கள், அரசு சார தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் யாரும் கட்சிகளுக்கு நிதியளித்த விவரங்களை வெளிப்படுத்த தேவையில்லை. தேர்தல் நிதி பத்திரங்களை 2017 பிப்ரவரி மாதம் இந்திய அரசின் வரவு செலவு திட்டத்தை வெளியிட்ட போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்தினார்.

நாட்டின் அரசியல் நிதி அமைப்பு முறையை தூய்மைப்படுத்துவதற்காக தேர்தல் நிதிப்பத்திரங்களின் திட்டத்தை இந்திய அரசு அறிவிக்கிறது என்று அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலக இணையத்தளம் தெரிவித்திருக்கிறது. இது தூய்மைப்படுத்துவதா, கறைகளை மறைக்கும் உத்தியா? அதற்கு முன் நிதிப்பத்திரங்கள் குறித்த அரசின் விளக்கத்தை பார்ப்போம்.

நிதிப்பத்திரங்களுக்கான கட்டுப்பாடுகள்: இது வட்டியில்லாத கடனுறுதி ஆவணங்களாக இருக்கும்; இந்த பத்திரங்கள் ஓராயிரம், பத்தாயிரம், ஒரு இலட்சம் மற்றும் ஒரு கோடி ரூபாய் வடிவில் இருக்கலாம்.

நிதிப்பத்திரங்களை நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் 52 கிளைகளில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களில் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்தல் நிதிப்பத்திரங்கள் 10 நாட்களுக்கு மட்டும் இக்காலங்களில் கிடைக்கும். சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக மட்டுமே இது பயன்படும் இத்தேர்தல் பத்திரங்களின் ஆயுட்காலம் 15 நாட்கள் மட்டுமே. பொதுத் தேர்தல் காலங்களில் கூடுதலாக மேலும் 30 நாட்கள் வழங்கப்படும்.

கடைசிப் பொதுத்தேர்தலில் குறைந்தது 1 விழுக்காடு வாக்குகள் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே இந்த நிதிப்பத்திரங்களை வழங்க முடியும்.

ஆயினும் இந்நெறிமுறைகள் மத்திய அரசு சொல்லிக்கொள்ளும் “வெளிப்படைத்தன்மை”யின் எதிர்நிலையை மேலும் தீவிரமாக அதிகரிக்க செய்யும் என்பது வெள்ளிடைமலை.

தேர்தல் நிதிபத்திரங்கள் பற்றிய மத்திய அரசின் அறிவிப்பு

பத்திரிக்கை தகவல் அறிக்கையில் கூறாத வேறு சில விடயங்களும் உள்ளன. நிறுவனங்கள் சட்டப்படி(Company Act) ஏற்கனவே ஒரு நிறுவனம் தன்னுடைய ஆதாயத்தில் இருந்து  அளிக்கக்கூடிய தேர்தல் நிதியின் உச்சவரம்பு 7.5 விழுக்காடாக இருந்தது தற்போது  நீக்கப்பட்டுள்ளது. இது பத்திரிக்கை தகவல் அலுவலக அறிக்கையில் இல்லை. மேலும் அச்சட்டத்தின் படி நிறுவனங்கள் எந்த கட்சிகளுக்கு எவ்வளவு நிதி வழங்கின என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அதில் தகவல் இல்லை.

அதாவது யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் ஒரு கட்சிக்கு நிதி வழங்க முடியும். அதை பொதுவெளியில் தெரியப்படுத்த தேவையில்லை. தேர்தல் நிதிப்பத்திரங்கள் பற்றிய தகவலானது பத்திரம் வழங்கப்பட்ட வங்கி(Issuing Bank), வழங்கிய பரத ஸ்டேட் வங்கி(SBI) மற்றும் ரிசர்வ் வங்கி என்று பயணம் செய்து கடைசியில் நிதியமைச்சகத்தை அடைந்து விட்ட பிறகு வேறு யாருக்கும் தெரியாது.

நன்கொடை பற்றிய தகவல்கள் வங்கியின் இருப்பு நிலைக்குறிப்பில் (Balancd Sheet) குறிப்பிடப்பட்டிருப்பதையே வெளிப்படைத்தன்மை என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் அதில் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டிருக்கும் என்பது தான் இருக்குமே ஒழிய யார் கொடுத்தார்கள் என்ற தகவல் இருக்காது.

பெருநிறுவனங்கள் கட்சிகளுக்கு தாராளமாக பணம் செலவழிப்பது இனி செல்லுபடியாகாது, அனைத்தும் கணக்கில் வந்து தானே ஆக வேண்டும் என்று பெருமை பொங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளுக்கு மட்டும் தான் இச்செயல்முறை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் அதிகமாக நிதி அளித்துள்ளார்கள் எந்த கட்சிகளுக்கு அளித்தார்கள் தங்களுக்கு யார் அளிக்கவில்லை என்ற விவரம் KYC விதிமுறைகளின் படி ஆளுகின்ற அரசிற்கு அதாவது பா.ஜ.கவிற்கு மட்டுமே வெளிப்படையானது என்று அவர்களுக்கு டோனி ஜோசப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கிறார்.

“எந்தவொரு நபருக்கும் தகுதியுள்ள அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான ஒரே புதிய நாணய வடிவத்தை இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் உருவாக்க அரசாங்கம் முயல்கிறது” என்று காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி நிறுவனத்தில் (Commonwealth Human Rights Initiative) தகவல் பெரும் திட்ட ஒருங்கிணைப்பாளரான வேங்கடேஷ் நாயக் கூறினார். நிறுவனங்கள் சட்டத்தில் சேர்க்கப்படும் சட்டத்திருத்தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த தேவையில்லை என்பதால் கருப்புப்பணத்தை அரசியல் கட்சிகளுக்கு கொண்டு சேர்க்கும் முதன்மையான வழிமுறையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராதரவு பா.ஜ.க-விற்கு இருக்கும் நிலையில் பா.ஜ.க-விற்கு மட்டுமே இது பயனளிக்க கூடியது என்பதை யாரும் விளக்க தேவையில்லை. இதை வைத்து எதிர்கட்சிகளுக்கான நிதியாதாரத்தை எளிதாக பா.ஜ.க-வினால் கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒரு சதவீத வாக்கு பெற இயலாத, அங்கீகாரம் அற்ற கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளை ஒழிப்பது மூலம் நேரடியாக பாஜக, காங் மற்றும் மாநில அளவிலான ஆளும் வர்க்க கட்சிகள் மட்டும் நன்கொடைகளை பெற முடியும். இதன் மூலம் தேர்தல் அரசியலிலேயே கூட சிறு கட்சிகள் இயங்க முடியாத நிலை உருவாக்கப்படும்.

கருப்புப்பணத்தை ஒழிக்கிறோம் என்று தேர்தல் நிதியை 2,000 ரூபாயாக குறைத்தது பா.ஜ.க. அதே சமயத்தில் காசோலை மற்றும் இணைய பரிமாற்றம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை நிதியளிக்க பரிந்துரைத்தது என அனைத்திற்கும் பின்னரும் இந்த நடவடிக்கைகள் தான் இருந்தன.

இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்காக எவ்வளவு நிதி வேண்டுமென்றாலும் பெருநிறுவனங்கள் செலவிடலாம், அதை வெளியே தெரியப்படுத்தத் தேவையில்லை என்றும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை 2010-ம் ஆண்டு வழங்கியது.

அமெரிக்க ஜனநாயகம் முதல் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் வரை கதை இதுதான். இதைதான் வெளிப்படைத்தன்மை என்று அருண் ஜெட்லியும் பா.ஜ.க அடிப்பொடிகளும் கூறுகிறார்கள். இந்நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழித்து விடும் என்று பா.ஜ.க பாதந்தாங்கி ஊடகங்களும் சேர்ந்து கோரஸ் பாடுகின்றன. இதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதை.

மேலும் படிக்க:
Much Ado About Nothing: Electoral Bonds and an Unapologetic Lack of Transparency
The fine print: Groups of individuals, NGOs can buy electoral bonds without public disclosure
The Daily Fix: What transparency?Anonymous electoral bonds will make Indian politics even more hazy

 

கொளுத்திப் போட குருமூர்த்தி – குலம் கெடுக்க தமிழருவி !

2

கொளுத்திப் போட குருமூர்த்தி – குலம் கெடுக்க தமிழருவி!

தச்சிக்கலுக்கு தாமரை
மலச்சிக்கலுக்கு
பாபா முத்திரை
மெல்ல நோட்டம் பார்த்து
தலையைத் தூக்குது
சாரை!
இனிமேல்தான் இருக்கு
இந்தக் காவிப் பாம்புக்கு
ஏழரை!

மிஸ்டு காலில்
ஆள்பிடித்த பா.ஜ.க.
நோட்டோவுக்கு கீழே
இணையத்தில் ஆள்பிடிக்கும்
‘சூப்பர்ஸ்டார்’ இளைப்பாற
காத்திருந்து லோட்டா
இமயத்தின் மேலே!

ஜெயலலிதா இருந்தவரை
வயிறு சரியில்லை
செத்த பிறகு
சிஷ்டம் சரியில்லை
இஷ்ட்டத்துக்கு சுருட்டிக்கொள்ள
அப்பப்போ… தமிழன்
கறிவேப்பிலை!

கிள்ளுக்கீரையாக
தமிழ்நாட்டைப் பார்த்து
ஜொள்ளு விட்ட வாயில்
இப்போது
தமிழருவி.
சூடம் சத்தியமாய்
ஆன்மீக அரசியலை
கொளுத்திப்போட குருமூர்த்தி.
சோ செத்த இடத்தில்
முளைத்திருக்கும்
மணியனின் திருக்காட்சி!

கன்னத்தில் போட்டுக்கொள்ள
தூண்டிவிடும் தொலைக்காட்சி
இன்னும் ஒரு
போயஸ் தோட்டத்தை
தமிழரின் தலையில் கட்டும்
கொலைவெறியுடன்
ஆர்.எஸ்.எஸ். அரசாட்சி!

பக்தியை ஓட்டாக
திருட நினைப்பவர்க்கு
பட்டை நாமம் போடுவது
தமிழ்நாடு

பார்ப்பன
முகம் மாற்றி வந்தாலும்
அதற்கும் காத்திருக்கிறது
தமிழ்ச்சூடு!

தமிழ்நாடு
சாமியும் கும்பிடும்
மனுதர்மத்தையும்
நெம்பிடும்
அட புரியதவனே!
உன் ஆரியக் கவுச்சி
எங்க அய்யனார் சுருட்டில்
பொசிங்கிடும்!

ஒக்கிப் புயலுக்கு
ஒரு வார்த்தையை
காணும்…
மக்கிப்போன
ஆன்மீக அரசியலைத்
தூக்கிக்கொண்டா வருகிறாய்,

ரஜினி ஸ்டைலில்
காவியை நுழைத்தால்
தமிழகம்
பெரியார் ஸ்டைலில்
பிச்சி உதறும்!

– துரை. சண்முகம்


 

டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !

15

டிவிட்டரில் ரஜினியை வறுத்தெடுத்திருக்கிறார்கள், நம் மக்கள்! அவற்றிலிருந்து சில வறுவல்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

________________

புகழ்‏ @mekalapugazh

எங்கப்பா..கரு.பழனியப்பன்..ஆவலாகக் காத்திருக்கிறேன்..ஆன்மீக அரசியல் விளக்கத்துக்கு..சினிமாக்காரர் என்பதால் பம்முகிறாரா..ச்சும்மா உசுப்பேத்துவோம்.
_________________

RajasekarChem®‏ @RajasekarASho7

எந்த ஊரு??? மராட்டியம்ங்க… ஏ…தமிழ் நல்லா பேசுறியே… நாடக கம்பெனியில இருந்துருக்கன்ல… ஓ… அதான் டக்குன்னு (காவி) வேஷத்தை மாத்திட்ட… #ஆன்மீக_அரசியல்  ?
_______________

SubaVeerapandian‏ @Suba_Vee

பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல் வரப்போவதாக எண்ணி மகிழ்கிறார் ஹெச்.ராஜா. இவ்வளவு காலத்திற்குப் பிறகேனும் இது பெரியார் மண் என்பது அவருக்குப் புரிந்ததே என்பதை எண்ணி மகிழ்கிறோம் நாம்!
______________________

Srinivasan Rahul?‏ @Srinivtwtz

#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு ஆன்மீக அரசியல் என்றால் என்னன்னு கேட்டாங்க… வழக்கம்போல சாதி மத பேதமற்ற அரசியல்னு சொல்லிட்டு ராமகிருஷ்ணா மடத்துக்கு போய்ட்டு வந்தன் ??
______________________

T.A.Punithan‏ @punithanadv

சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி தொடங்குவாராம்! இராமகிருஷ்ண மடத்தில் லோகோவை உல்டா செய்து தன் லோகோவை அறிமுகம் செய்வாராம்! சாமியாரிடம் சென்று ஆசிவாங்கி, So called Secularism இல்லை என்று சிரிப்பார்களாம்! ஆன்மீக அரசியல் என்றால் மதச்சார்பற்றது என்று விளக்குவாராம்! யாரை ஏமாற்றுகிறீர் ரஜினி?
_______________________

ஏரியாக்கு வாடா ?‏ @Gopi007twitz

ரஜினி முதல்வர் ஆகிவிட்டால் நடப்பவை
தொண்டன் – தலைவரே நம் மக்களை கொசு கடிக்கிறது அதை மருந்தடித்து கொல்ல ஆனையிடுங்கள்
ரஜினி – தொண்டனே இது ஆன்மீக ஆட்சி இந்த ஆட்சியில் யாரையும் கொல்லவோ துன்புறுத்தவோ கூடாது
ஆன்மீக அரசியல்
__________________

எவனோ ஒருவன்  @EncmFfgtCkjyNHt Replying to @Mark2kali

இதே ஆன்மீக அரசியல் செய்யப்போகிறேன் என்று ஜோசப் விஜய்யோ அல்லது ஏஆர் ரஹ்மானோ அறிவித்திருந்தால் இன்றைய காட்சிகளே வேறு
______________

இடும்பாவனம் கார்த்தி‏ @idumbaikarthi

சென்னை வெள்ளத்திற்கு 10 இலட்சமும், இராகவேந்திரா கோயிலுக்கு 10 கோடியும் அளித்ததிலிருந்தே அவர் செய்யப்போவது மக்கள் நலன் அரசியல் இல்லை. அது வெறும் ஆன்மீக அரசியல்தான் எனப் புரிந்து கொள்ள வேண்டாமா.?
_________________

இடும்பாவனம் கார்த்தி‏ @idumbaikarthi

ஆன்மீக அரசியல் வேறு! மதவாத அரசியல் வேறு என விளக்கவுரை எழுதிய திருமாவளவன், தற்போது ரஜினிகாந்த் ஆட்சி அமைத்தால் அது ஆர்.எஸ்.எஸ். ஆட்சி என்கிறார். இதைத்தான் நாங்கள் முதல் நாளிலில் இருந்து சொல்றோம்.!
________________

வினோ‏ @vinodhkrs

தட்டுல காசு போடலீனா விபூதிய நம்ம கைல வீசுவாங்க
10 ரூவா போட்டா கைல அழுங்காம போடுவாங்க
50 ரூவா போட்டா நம்ம நெத்திலியே பூசி விடுவாங்க
இதுதான் எனக்கு தெரிஞ்ச ஆன்மீக அரசியல்
_____________

mathimaran‏ @mathimaran

‘ஆன்மீக அரசியல்’ 120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விக்கிறது.
_________________

G Suryah‏Verified account @SuryahSG

Started his speech with Bhagawad Gita. Ends with “Jai Hind”. #ஆன்மீகஅரசியல் !
#SuperStarRajinikanth #PoliticianRajini
_____________________

புகழ்‏ @mekalapugazh

“தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் அமைக்கவில்லை..என்கிறாரே ஸ்டாலின்” இவர்களுக்கு இதே வேலைதான்..போராட்டம் ..கோரிக்கை.. இதல்ல நம் அரசியல்..கடவுள் நம்பிக்கை மூலம் நோயில்லாமல் வாழலாம் என்பதே ஆன்மீக அரசியல்.. மீறி நோய்வந்தால் சென்னைக்கு அருகே தானே..சிங்கப்பூரிருக்கு..ஹஹ்ஹா..ஹாஹா.
_______________

ஜானு‏ @Janu_Bhaskar

ரூ100 லஞ்சம் வாங்கினா ரூ 30 உண்டியலுக்கு. பள்ளிச்சீருடை காவி கலர். அதிகமா கோபப்படாத(?) பெண்களுக்கு சாத்வீகி விருது. லேட்டா வந்தா ஸ்ரீராமஜெயம் 100முறை எழுதணும். முதல்வரைப்பார்க்க நோ தர்ம தரிசனம்.ஒன்லி ஸ்பெஷல் தர்ஷன். சந்திராஷ்டமம், சங்கடஹரசதுர்த்திக்கு விடுப்பு உண்டு. #ஆன்மீகஅரசியல்
____________________

ஆல்தோட்டபூபதி‏ @thoatta

மிஸ்டு காலின் ஆன்மீக அரசியல் வெர்ஷன் தான் வெப்சைட்ல பதிவு பண்றது போல
_____________________

Balu Manimaran‏ @paalumani Replying to @HRajaBJP

‘ஆன்மீக அரசியல்’னா என்னன்னு வெளிநாட்டு நண்பர் ஒருவர் கேட்டார். “அது, ரஞ்சிதா போன்ற பிரபலமானவர்கள் பங்கு பெறும் அரசியல்”னு சொல்லி சமாளிச்சுட்டேன். தப்பா சார்?
____________________

சிந்தனைவாதி‏ @PARITHITAMIL

பெரியார் வழியில் மதசார்பற்ற ஆன்மீக அரசியல் என்று யார் எந்த ரூட்டில் வந்தாலும் இங்கே மதவாத அரசியல் காலூன்ற முடியாது # இதுதான்டா தமிழ்நாடு Description: ? ? ?

___________________

கிரியேட்டிவ் ЯΛJ ™‏ @CreativeTwitz

தாமரை பாஜகட்ட சுட்டது, அந்த பாம்பு சந்திரமுகி படத்துல சுட்டது, உண்மை உழைப்பு உயர்வு நம்ம அண்ணாச்சி கிட்ட சுட்டது அந்த ஆன்மீக அரசியல் நம்ம நித்தியானந்தாகிட்ட சுட்டது // ஆன்மீக ஆராய்ச்சி ?

_________________

நித்யா‏ @nithya_shre

பாபாவும் நான்தான்…  ?பாஜகவும் நான்தான்….  ?ரஜினி #ஆன்மீக_அரசியல்

______________

தோழர் Pauli ?‏ @paulitwitz

NEETக்கு எதிரா குரல் குடுத்தயா? இல்லிங்க GAIL நெடுவாசல் திட்டத்துக்கு எதிரா குரல் குடுத்தயா? இல்லிங்க ஹிந்தி திணிப்புக்கு எதிரா பேசுனயா? இல்லிங்க அட்லீஸ்ட் மதவாதம் டீமானிட்டைஷேஷனுக்கு எதிராவாது பேசுனயா? இல்லிங்க அப்பறம் என்ன மயித்துக்குடா அரசியல் அதுவும் ஆன்மீக அரசியல்?! ?

____________________

Ra Sindhan (சிந்தன்)‏ @sindhan

ஆன்மீக அரசியல் என்பதற்கு ராமகிருஷ்ண மடம் தரும் விளக்கம் ‘மதச்சார்பின்மை என்றழைக்கப்படுவது அல்ல’. மற்றும் களிப்போடு ஒரு புன்னகை.

_______________________

VIDUTHALAI EPAPER‏ @viduthalainews

ஆன்மீக அரசியல்

_________________

RamKumar‏ @ramk8059

ஆன்மீக அரசியல் என்றாலே BJP RSSக்கு மறைமுக ஆதரவு என்று இன்னும் சிலருக்கு புரியாமல் கம்பு சுத்திக்கொண்டு இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது?#Rajinikanthpoliticalentry

_____________________

KRS | கரச‏ @kryes

அறிஞர் அண்ணாவின் தொலைநோக்கு கண்வியக்கிறேன்! *வீர சிவாஜியோ *சிவாஜி ராவ் கேக்வாட் – ரஜினிகாந்தோ மிகத் தெளிவான, “பின்னணி பிராமணீயத்தின்” வரலாறு! — ரஜினி “ஆன்மீக அரசியல்” காலத்தில்.. அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல்! http://www.annavinpadaippugal.info/nadagangal/chandramohan_1.htm … சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்!

_______________

Yousuf Riaz‏ @YousufRiaz1

ஆன்மீக அரசியல் என்றால் என்ன பாய்? ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொடுக்க துப்பு இருக்காது ஆனால் சாமி வேடம் போட்ட ஆசாமிகளை கோடிக்கணக்கில் செலவு செய்து ஊடக சமூகம் போற்றும்…. இது ஒரு உதாரணமே,

_____________________

KRS | கரச‏ @kryes

ஸ்ரீமான். ரஜினிகாந்த் அவர்களின் “ஆன்மீக அரசியல்” பித்தலாட்டம், தோலுரிக்கப் போகிறேன்! சினிமா ரசிகர்கள் விலகியே நிற்க! யார் இந்தச் சென்னை, கவுதமானந்தா? அவரை, ரஜினி சந்தித்து, “ஆசி” பெற்றது ஏன்? So Called Secularism உங்களால் ஒழிய வேண்டும்.. எ. அவர்கள், ரஜினியிடம் சிரிப்பது ஏன்?

______________

Surya Born To Win‏ @Surya_BornToWin

ரஜினி தொடங்கி இருப்பது ஆன்மீக அரசியல் ஆப் அல்ல. தமிழக மக்களுக்கு சொருகப் போகும் ஆப்பு!

______________________

Marina?‏ @Mark2kali

ரஜினியின் ஆன்மீக குரு சச்சினாந்த சுவாமி & Co பின்னனி அறிவோம்..  ?#RSS அரசியல்?

________________

உளவாளி‏ @withkaran

யோகி ஆதித்யநாத் பண்றதுதானே ஆன்மீக அரசியல்..
வடக்கே ஒரு வின் டீசல் தெற்கே ஒரு ரஜினி..டெட்லி காம்போ

_______________________

maniangopi‏ @maniangopi

My Fav picks of #Rajinikanthpoliticalentry Speech 1) பகவத் கீதை சொல்லி ஆரம்பித்தது 2) ஆன்மீக அரசியல் 3) இந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் பண்றதுக்குலாம் மத்த கட்சிகள் இருக்கு 4) வாழ்க தமிழ்நாடு, வளர்க தமிழ்மக்கள்,ஜெய் ஹிந்த் #Rajinikanth #RajiniFansMeet #rajninewyearparty

___________________

லாவோ‏ @Vidhushagan

இறுதியில் ‘ஜெய்ஹிந்த் “என்று சொன்னபோதே அது ஆன்மீக அரசியல் என்று புரிந்துகொண்டோம் தலைவா. ஜெய்ஹிந்த் ரஞ்சிதா படம். அப்ப ஆன்மீகம் அரசியலே தான்.

_______________

T.A.Punithan‏ @punithanadv

ஆன்மீக அரசியல் கோமியத்துக்கு மார்கெட்டிங் பசுவுக்கு ஆம்புலன்ஸ் கார்பரேட் சாமியார்களை வளர்ப்பது ரஜினி காலில் விழனும், பாலபிசேகம் செய்யனும், கோயில் கட்டனும் எதுவாயினும் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பணும் தரையில் உட்கார்ந்து பவ்யமாக பேசவேண்டும். யாரும் கேள்வி கேட்கக் கூடாது

____________________

கவி மைந்தன்✍✍?‏ @raadhai_kanna

அங்கே தெளிவாய் தெரிகிறது மதவாதிய அரசியல் என்று (மத்தியில்) இங்கே மறைமுகமாய் பிரதிபலிக்கிறது ஆன்மீக அரசியல் என.. #நாடு_எங்க_சார் போகுது

________________

KRS | கரச‏ @kryes

ஜாதிகள் நல்லதடி பாப்பா! – மனு தர்மம்(?) கொடுங்கோல் மனு.. வகுத்த ஜாதிகளைப் புகழ்ந்து ஆன்மீக அரசியல் எ. பேரில், பிராமணீய அரசியல்! இதோ ‘Swami’ Gautamananda “உண்மை முகம்”! ஆசி கேட்ட ரஜினியே.. ‘தில்’ இருந்தால் சொல்! மனு தர்மம்= தமிழ்நாட்டுக்கு நல்லதென்று சொல், பார்ப்போம்?

____________

KRS | கரச‏ @kryes

So Called Secularism – “Swami” Gautamananda! So Called ஆன்மீக அரசியல், RSS! RSS தலைவன் மோகன் பகவத் & கெளதமானந்தா.. கொஞ்சி மகிழும் திருக்காட்சி; இதுவா, ரஜினிகாந்த்.. உங்கள் ஆன்மீக அரசியல்? அவனிடம் “ஆசி வாங்க ஓடிய” நீங்கள்.. பெரியார்/ அண்ணா/ காமராசர் சமாதிக்கு ஓடுவீர்களா?:(

____________

KRS | கரச‏ @kryes

“ஆன்மீக” நித்தியின் மஹா குரு = கெளதமானந்தா! அவனிடம் தீக்ஷை பெற்ற “ஸ்வாமி” நித்யானந்தா! நித்தியே.. தன் வாயால் சொல்கிறான் பாருங்கள்! இதோ! = https://lifeisauspicious.com/2014/06/16/living-advaitha-vii/ … Thus spake Gautamananda – “So Called Secularism” இதுவா, ரஜினிகாந்த்.. உங்களின் ஆன்மீக அரசியல்? SHAME!:(

____________

செல்வி?‏ @aselviku

ரஜினியின் ஆன்மீக அரசியல், மத அரசியல் கிடையாது: தமிழருவி மணியன் விளக்கம்
//இவர் சொல்றது ஈயம் பூசின மாதிரியும் இருக்கு.. பூசாத மாதிரியும் இருக்கு..??

________________

களக்காடு புலி™‏ @mathanmohang Replying to @JananiP48541338

மதத்தைக் கொண்டு தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்க துடிக்கும் பாஜக-வையும்! பாஜக-வை பின்புலமாக வைத்துக் கொண்டு ஆன்மீக அரசியல் என்ற பெயரில் பாஜகவிற்கு ஆள் சேர்ப்பு கட்சி துவக்கி சினிமா மோகத்தில் மூழ்கி கிடக்கும் ரசிக அடிமைகளையும் துரத்தும் வரை தமிழகத்திற்கு விடிவு ஏற்பட போறதில்லை!

_______________

ஸ்வீட்டி‏ @SumiSumathi

‘ஆன்மீக அரசியல்’ ——————– மோடியின் குஜராத்தும், யோகியின் உத்திரப்பிரதேசமும், இப்போதைய இந்தியாவும் மிகச்சிறந்த உதாரணங்கள்….

_________________

குறிஞ்சி நிலத்தவன்?‏ @arumugamsony

கமல்: நான் நாத்திக அரசியல் பண்ண போரேன். ரஜினி: நான் ஆன்மீக அரசியல் பண்ண போரேன். மக்கள்: ஓரமா போய் விளையாடுங்கப்பா.

______________

Packiarajan.. சே..‏ @packiarajan

மதவாத அரசியலின் 2.0 தான் ஆன்மீக அரசியல்..

_____________

Newton‏ @twittornewton

ஆன்மீக அரசியல் is an oxymoron. ஆன்மீகம் தனி மனிதன் சம்பந்தப்பட்ட விஷயம். அரசியல் சமூகம் சார்ந்தது.

____________________

தமிழ் அமிழ்து‏ @tamilamildhu

இதுக்கு நீ நேராவே ஆன்மீக அரசியல் என்பதனை மத அரசியல் என்று கூறலாம்.!

________

பெருமகன்‏ @PeruMagan

மக்கள்: ஆன்மீக அரசியல் அப்புடினா என்னங்க?
ரஜினி: என் பேரு என்ன? மக்கள்: Super star Rajinikanth
ரஜினி: சுருக்கமாக சொன்னா?
மக்கள்: SSR
ரஜினி: திருப்பிபோட்டா?
மக்கள்: RSS
ரஜினி: இப்போ புரியுதா?

______________

Satheesh Kumar‏ @saysatheesh

தெற்கில் இருந்து ஒரு யோகி ஆதித்யனாத் #ஆன்மீகஅரசியல்

__________________

இராவணன்‏ @ravanaasuran

RSS என்று வந்தான் அடித்து ஓட விட்டோம் இந்து முன்னணி என்று வந்தான் எட்டி உதைத்து விரட்டினோம் இந்து மக்கள் கட்சி என்று வந்தான் இடுப்பை ஒடித்து அனுப்பினோம் இப்போது ஆன்மீக அரசியல் என்று வருகிறான் அல்லையிலே மிதித்து அலறவிடுவோம்

___________________

RATIONAL ?‏ @sarankaran_y

தமிழ்நாடு ஆன்மீக அரசியல் முன்னணி 2019 – அரசியல் மாநாடு

 


 

சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி ! அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் !!

0

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1923-ம் ஆண்டு முதல், பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது சிறியதும்,பெரியதுமாக 911 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் நேரடியாக, மூன்று லட்சம் தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழில்களான அச்சு, ஸ்கோரிங், லேமினேஷன், பேக்கேஜிங் தொழில்கள், அலுமினிய பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், பேரியம் நைட்ரேட் போன்ற ரசாயன தயாரிப்பு, பேப்பர் மில்கள், லாரி போக்குவரத்து போன்ற தொழில்கள் மூலம், வேலை செய்பவர்கள் என மொத்தமாக 8 லட்சம் தொழிலாளிகள் இத்தொழிலில் இருக்கின்றார்கள்.

கடந்த 10 நாட்களாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அனைத்து மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இது பட்டாசு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அல்லாமல் உற்பத்தியும் பெருமளவில் குறைந்துள்ளது.

காரணம், இவ்வழக்கில் தீர்ப்பு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக இருந்தால் பட்டாசு தொழில் அடியோடு முடங்கி விடும். பட்டாசு விற்பனையாளர்கள் வாங்க மாட்டார்கள் என்பது தான் அவர்கள் அச்சம். ஏற்கனவே இந்த வழக்கை காரணம் காட்டி விற்பனையாளர்கள் ஆர்டர் கொடுப்பதும் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றமும் விரைந்து தீர்ப்பு வழங்காமல் இழுத்தடித்து மேலும் உற்பத்தியாளர்களை வதைக்கிறது.

தங்களது வாழ்வாதாரத்தை காக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூற வேண்டும். சுற்றுச்சூழல் சட்டத்தில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு உரிமையாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொழிற்சாலைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் மற்றும் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்படும் தடைகள், சீன பட்டாசு இறக்குமதி போன்றவை காரணமாக இத்தொழில் நலிந்து விட்டது.

கடந்த ஆண்டு டெல்லி மற்றும் பட்டாசு விற்பனையின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் வட இந்தியாவின் 5 மாநிலங்களில், கடந்த தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதாலும் சிவகாசியில் பட்டாசு தொழில் முடங்கியது.

சிவகாசி பட்டாசை பொறுத்த வரையில் வட இந்திய விற்பனையாளர்களின் பங்கு தான் அதிகம். பண்டிகை நெருங்குவதற்கு முன்னரே முன்பணம் கொடுத்து விடுவார்கள். அதனை நம்பித் தான் உற்பத்தியிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த முறை பெரும்பாலான விற்பனையாளர்கள் கொடுக்கவில்லை. இதனால் பட்டாசு உற்பத்தி மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உண்மையில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதும் காற்று மாசின் அளவு குறையவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான தடையை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் நீக்கியது.

டில்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு

அமெரிக்க பெட்கோக் எனப்படும் ஒரு வகை நிலக்கரியை இறக்குமதி செய்வதில் உலகின் முன்னணி சந்தையாக இந்தியா திகழ்வதன் விளை பொருளாகவே உலகின் மாசுபட்ட நகரங்களில் முதன்மையான ஒன்றாக தலைநகர் டெல்லி இருக்கிறது.

பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதும், தனியார் போக்குவரத்தை கட்டுப்படுததுவதும் மூலமாக இந்த மாசுபாட்டில் இருந்து தலைநகரைக் காக்க முடியும். அரசோ அத்தகைய முயற்சிகளை தீவிரமாக எடுக்கவில்லை.

அதேபோல், டெல்லி காற்று மாசுபாட்டுக்கு, அண்டை மாநிலங்களில் நெல் வயல்களில் வைக்கோல் எரிக்கப்படுவதும் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. “ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக 2 டன் வைக்கோல் உற்பத்தியாகிறது. இந்த வைக்கோலை டன்னுக்கு ரூ.5,500 என்ற விலையில் தேசிய அனல்மின் கழகம் (என்டிபிசி) வாங்கிக் கொள்ளும். மின்உற்பத்தி நிலையங்களுக்கு இந்த வைக்கோல் பயன்படுத்தப்படும் என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் எது எப்படி இருந்தாலும் பெட்கோக்கை இறக்குமதி செய்வதன் மூலம் அந்த முயற்சிகள் நீர்த்துப்போயின. ஏனெனில் நிலக்கரி அல்லது டீசலை விட பெட்கோக் சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை விளைவிக்கிறது.

உலகின் பல நாடுகளில் பெட்கோக் அதன் நச்சுத்தன்மைக் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதற்கு கட்டுப்பாடில்லை. இதனை தடை செய்ய வக்கில்லை. ஆனால், காற்று மாசு ஏற்பட பட்டாசு காரணம் இல்லை என தெரிந்தும், உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.

பட்டாசுத் தொழில் பல இலட்சம் குடும்பங்களுக்கு வேலை அளிக்கிறது. அதை தொழிலாளர் நலன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுதேசித் தொழில் பாதுகாப்பு என்று முறைப்படுத்தினால் பிரச்சினையின்றி தொழிலை தொடர முடியும். அதை செய்வதற்கு தயாராக இல்லாத அரசு சிவகாசி பகுதி மக்களை கை கழுவி விட்டது.

இது உள்நாட்டு பட்டாசு உற்பத்திக்கு சாவு மணி அடித்து விட்டு வெளிநாடுகளில் இருந்து பட்டாசு இறக்குமதி செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், காற்று மாசுபாட்டிற்கான உண்மையான காரணமான கார்ப்பரேட் நலன் அடங்கியிருப்பதை மறைக்க வேண்டும் என்பதை தவிர வேறொன்றும் இல்லை!

மேலும் படிக்க:

சிவகாசி பட்டாசு ஆலைகள் காலவரையின்றி அடைப்பு: பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு
டெல்லியில் காற்று மாசு குறைகிறது: லாரிகள், கட்டுமான பணிக்கான தடை நீக்கம்
ரூ.75 கோடி வர்த்தகம் பாதிப்பு : சிவகாசியில் 5வது நாளாக பட்டாசு ஆலை ஸ்டிரைக்
தில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ? அமெரிக்க தார் கரியா ?


 

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆசியளிக்கும் தமிழ் ஃபேஸ்புக் ! மகிழ்ச்சி !

18

ரஜினி எனும் காரியவாதி, சந்தர்ப்பவாதி, பார்ப்பனிய மதவாதி, கோமாளி எல்லாம் அரசியல் பேசுவதும், அதை கறிக்கடையை சுற்றி வரும் கால பைரவர்கள் போல ஊடகங்கள் நாக்கைத் தொங்கப் போட்டு சுற்றி வருவதிலும் இருந்து தெரிகிறது, இந்த ‘சிஸ்டம் சரியில்லை’ என்று! தமிழ் ஃபேஸ்புக்கில் மக்கள் கருத்துக்கள் சில….

Arul Ezhilan

ஜெயலலிதா என்ற நபர் உயிரோடு இருந்தவரை ரஜினி பெட்டிப் பாம்பாக அடங்கி அஞ்சி கிடந்தார்.அருகில் இருந்த கோபாலபுரமும் கருணாநிதியும் இல்லை என்றால் அப்படியே நசுக்கி கஞ்சா கேஸ் போட்டிருப்பார் ஜெயலலிதா..!

____________________

Villavan Ramadoss

மண்டபத்துலயும் சிஸ்டம் சரியில்லை. ஒரிஜினல் ஓனர் லதா பாட்டியோட ஒரு போருக்கு தயாராகுங்க தலைவரே….

//உங்களுக்கெல்லாம் கெடா வெட்டி கறிசோறு போடணும்ணு எனக்கு ஆசைதான் ஆனா இங்க ராகவேந்திரா மண்டபத்துல சைவ உணவுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு – ரஜினிகாந்த்.//

____________________

Aazhi Senthil Nathan

இன்றைக்கு நியூஸ் 18 விவாதத்தில், ரஜினி பேசிய காட்சி முடிந்தவுடன், குணசேகரன் முதலில் என்னிடம் தான் கேட்டு விவாதத்தைத் தொடங்கினார். “சங் பரிவார் என்கிற குடும்பத்தில் மற்றுமொரு அமைப்பாகவே அவரது அமைப்பு இருக்கும்” என்று கூறினேன். இதுதான் என் முதல் கருத்து. மாலனும் ஜி.சி.சேகரும் அடுத்தடுத்து அப்படி இல்லை என்று சொல்வதற்கான வேலையில் இறங்கினார்கள்.

ஐயோ பாவம், அவர்கள். தமிழிசையும் அர்ஜூன் சம்பத்தும் நாராயணனும் உடனடியாக என் உதவிக்கு வந்தார்கள். நான் சொன்னக் கருத்தை உறுதிசெய்தார்கள். ஆர் கே நகர் தோல்விக்குப் பிறகு தங்களுக்கு பலம் தேவைப்படுகிறது, அந்த பலத்தை ரஜினி அளிப்பார் என தமிழிசை நம்புகிறார். இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் ரஜினி பின்னால் செல்லும் என்கிறார் சம்பத்.

ரைட்டு. இனிமேல் ரஜினியை பாஜகவின் மறைமுக ஆதரவைப் பெற்றவர். பாஜகவின் பினாமி என்றெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக ரஜினியின் அமைப்பை இந்துத்துவ அமைப்பு என்று சொல்லி வேலையைச் செய்யவேண்டியதுதான்.

2018 இல் மேலும் ஒரு முனையில் யுத்தம் வெடிக்கிறது. தட்ஸ் ஆல். பாத்துக்கலாம்.

ஆனால் ரஜினியின் இந்த நகர்வு நமக்கெல்லாம் நிறைய வேலையைக் கொடுத்திருக்கிறது. அவருக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறதோ அந்த அளவுக்கு அது மக்களின் தோல்வியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் அத்தனை நியாயஸ்தர்களும் தமிழருவி மணியன்களும் இப்போது ரஜினி பக்கம் வருவார்கள். மாலன்களும் சேகர்களும் என மிகப்பெரிய ரஜினி மீடியா படை இன்றே உருவாகிவிட்டது. மீடியாவுக்கு 2018 முழுமைக்குமான பிரேக்கிங் நியூஸ் கிடைத்துவிட்டது. மீம்ஸ் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி பல மடங்காக இருக்கும்.

நமக்குத்தான் வேலை அதிகம். மீம்ஸோடு முடங்கிவிடக்கூடாது, விவாதமேடைகளோடு நின்றுவிடக்கூடாது. செய்வோம். வச்சு செய்வோம்.

___________________

Deepa Lakshmi

காசு சேரும் வரை கம்யூனிசம்,
கல்யாணமாகும் வரை நாத்திகம் பெண்ணியம்,
அரசியல் கைகூடும் வரை சமூகநீதி,
சினிமாவில் வெற்றிப்படியாய் மட்டுமே இலக்கியப் பணி,
இப்படிப் பல ஆண்டுகளாய்த் தங்களின் ஆளுமையை நிறுவப் பயன்பட்ட கொள்கைகளை அவரவர் தனிப்பட்ட நியாயங்களுக்காகக் காற்றில் பறக்க விடும்போது…
நாடி தளர்ந்த பின் ‘ஆன்மிக அரசியல்’ பண்ண வரும் ரஜினிக்கு மட்டும் வரவேற்பு குறைந்து விடுமா என்ன?

🙂

Personal integrity matters, whatever you choose to blabber.

_____________

வாசுகி பாஸ்கர்

இதில் ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியல் எப்படியானதாக இருக்குமென்கிற புனைவுகளை அவர்தம் ரசிகர்கள் எத்தனை விதமாய் எடுத்துரைத்தாலும், ரஜினியின் பால் தாக்ரே வுடனான தொடர்பு, சிவ சேனா, பாபா, வட நாட்டு சாமியார்கள், பாஜக தொடர்பு என்று இவையெல்லாம் கண்முன் வந்து போவது மிக யதார்த்தமான ஒன்றே.” ரஜினி என்கிற புனித மனிதனை இப்படியாக சந்தேகப்படுவதா?” என்று வாதம் வைக்குமளவு எந்தவிதமான தெளிவான வரலாறும் கடந்த காலத்தில் இல்லை. ரஜினி தான் சார்ந்த ஹிந்து மதத்தின் ஒரு தீவிர பக்தியாளர் என்பதாக தான் அவர் செயற்பாடுகள் நமக்கு சொல்கிறது. ஒருவர் மற்ற மதங்களை பற்றி எதுவும் அவதூறாக சொல்ல வில்லை என்பதற்காகவே அதை எல்லோருக்குமானதாக எடுத்துக்கொள்ள இயலாது.

மதங்களையும், கடவுளர்களையும், எந்த வடிவத்தில் உள்ளே கொண்டு வந்தாலும் அது ஆதிக்கம் செலுத்தும் என்பதால் தான் பெரியார் கடவுளை சமூக சீர்திருத்தத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். உலகம் முழுக்க மக்களாட்சிக்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது மதங்களின் தலையீடு இல்லாதிருப்பதே எல்லோருக்குமான அரசியல் சட்ட வடிவமாக முன் வைக்கப்பட்டது. அதுவே மதச்சார்பற்ற தன்மை என்று அங்கீகரிக்கப்பட்டது.

ஆகையால் ரஜினி; ஹிந்து மதத்தின் பிரதிநிதியாக இருந்துகொண்டு சாதி, மதமில்லாத ஆன்மீக அரசியல் என்று சொன்னாலும், ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் எந்த வகையிலும் நேரடி தொடர்பு இருக்கக்கூடாது என்பது தான் மதசார்பற்ற நிலை. மத ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டி, ஒரு அரசு அலுவலுகத்தில் எல்லா மத விழாக்களையும் கொண்டாடுவதை விட, எதையும் கொண்டாட கூடாது என்று தடை விதிப்பதே, அந்த இடம் எல்லோருக்குமான இடமாக கருதப்படும். நாத்திகர்கள், ஆத்திகர்கள், பன் சமூகத்தவர் என்று வாழும் ஒரு தேசத்தில், ஆன்மீக குறுக்கீடு இல்லாததே எல்லோருக்குமானதாக நிலைப்பாடாக இருக்க முடியும். பக்தி என்பது கட்டில் சமாச்சாரங்களை விட தனியறையில் இருப்பதே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை சேர்ப்பதாக இருக்கும்.

__________________

Arul Ezhilan

ரஜினி 25 -இது ரஜினியோட 25 ஆண்டுகால சினிமா பணியை கொண்டாடும் விதமாக தலைப்பு வைத்து நடத்தப்பட்ட விழா. இதை நடத்தியவர் லதா ரஜினிகாந்த். மொத்தமாக அந்த விழாவை வைத்து ரசிகர்களிடம் இருந்து வசூலித்தது அளவில்லா தொகை. ரஜினி தொப்பு, ரஜினி கீ செயின், ரஜினி படம் என ஒவ்வொன்றிலும் பணம் பார்த்தார் லதா ரஜினிகாந்த்.

__________________________

Raja Rajendran

ஆன்மீக அரசியல் என்றால் என்ன ?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபெற்ற சிலை ஆய்வின்போது, பழைய சோமாஸ்கந்தர் சிலையிலும் தங்கம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

பழைய சிலையிலும்…. என்றால் என்ன அர்த்தம் ?

அதாகப்பட்டது மகா ஜனங்களே, புதிய சிலை செய்யப்போவதாய்ச் சொல்லி சுமார் 100 கிலோ (ஹல்லோவ் 100 கிராம் இல்ல) தங்கத்தை வசூலித்துவிட்டு ( என்று வைத்தால் பக்தாள்களிடம் பெறப்படும் நன்கொடை ஒய் ) புதிய சிலையில் அட்லீஸ்ட் சேர்க்க வேண்டிய 5 . 75 கிலோ தங்கத்தைக் கூடச் சேர்க்காமல் அமுக்கிட்டன்.

நன்னா கவனிக்கோணும். யாராரெல்லாம் இதற்கு உடந்தை என்று சிலை கடத்தல் தடுப்பு போலிசார் 9 பேரை எஃப் ஐ ஆரில் சேர்த்திருந்தும், ஒரே ஒரு கைது நடவடிக்கை கூட இல்லை. ஏனாம் ? அதாம்லே அரசியல், ஆன்மீக அரசியல்.

சரி. டுபாக்கூருங்க புது சிலையிலத்தான் தங்கத்தை அடிச்சிருக்கன், நம் முன்னோர்கள் ஒன்றும் மொடா முழுங்கிகள் கிடையாதே ? போக, பழைய சிலையில் 87 கிலோ தங்கம் நிச்சயம் கலந்திருக்காக்கும் என ஸ்தபதி அரசுக்குச் சொல்லியிருக்க, ச்சுரண்டிப் பாத்தா ஒரு கிராம், யெஸ் மகாஜனங்களே ஒரே ஒரு சொட்டு கிராம் தங்கம் இல்லை.

இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தங்கம் தோராயமா 25 – 26 லட்சம்ன்னு வச்சா, 87 கிலோவுக்கு என்ன வரும் ? நேக்கு அவ்ளவா கணக்கு வராது, நான் குமாரசாமி ஸ்டூடண்ட். நீங்க சொல்லுங்கோ.

2001-ல முகமது அலின்னு ஒரு ஸ்ட்ரிக்ட் போலிஸ் ஆப்பிஸர். அடையாறு மேம்பாலத்து மேல நின்னு தூணச் சுரண்டிப் பாத்துட்டு, சிமெண்ட்ல மண் ஜாஸ்தின்னு கருணாநிதிய நடு ராத்திரி போய்க் கைது பண்ணா.

இங்க என்னடான்னா குவிண்டால் கணக்குல தங்கத்தை அடிச்சும், இன்னும் ஆராய்ஞ்சுண்டு கிடக்கா. ஏன் ?

சிமெண்ட் மண் எனில் அது அரசியல். சாமி சிலை அவருக்குத் தங்கம்ன்னு மனுஷா புடுங்கி அமுக்கிண்டா அது ஆன்மீக அரசியல்

______________________

Thiru Yo

முன்பெல்லாம் கட்சி துவங்க கொள்கை, அடிமட்டத்தில் அணிதிரட்டல், கிளைகள் அமைத்தல், போராட்டங்கள், பிரச்சனைகளில் மக்களோடு நிற்றல் அடிப்படை.

இப்போது ஆன்மீக அரசியல் கட்சிகளுக்கு சந்தை ஆய்வு, நிகழ்ச்சி ஏற்பாடு மேலாண்மை, திறமையான நேரடி ஒளிப்பதிவு நிறுவனங்கள், பறக்கிற படப்பிடிப்புக் கருவிகள், அலைபேசி செயலிகள், நாக்பூர் கும்பலின் திட்டம், மயிலாப்பூர் மாஃபியா கும்பலின் ஆதரவு இவை இருந்தால் போதும். போராட்டங்களை, கொள்கைகளை எதிர்ப்பதையும், நிராகரிப்பதையும் வெளிப்படையாக அறிவித்து முடிந்தால் காக்கா பிக்காவென காக்கா குசுபோல சிரிக்க வேண்டும். ஊடகங்களில் நேரடியாக சென்று மாட்டாமல் ஏற்கனவே எழுதி தரப்பட்ட திரைக்கதைகளை மேடைகளில் ஒப்பித்து தப்பித்து ஓடல், மயிலாப்பூர் மாஃபியாக்கள் எழுதித் தருவதை அறிக்கையாக வெளியிட்டல், கண்ட மடங்களில் சாமியார் கும்பல்களின் காலடியில் விழுதல் இவற்றை தொடர வேண்டும். தயிர்வடை தின்று தூக்கத்தில் ஏப்பம் விடுவதைப் போல அவ்வப்போது உளற வேண்டும் அவை தத்துவமாக்கப்படும். ஊடகங்கள் தானாக ஒளிபரப்ப வந்துவிடும்.

___________________

Arul Ezhilan

ரஜினியை எதிர்க்கிறேன் அவர் கன்னடர் என்பதால் அல்ல…
பெரியாரை நேசிக்கிறேன் கிழவன் பலிஜா நாயுடு என்பதால் அல்ல..
சீனிவாசராவை ஏற்கிறேன் அவர் கன்னடர் என்பதால் அல்ல..
காமராஜரை நேசிப்பது அவர் தமிழர் என்பதாலும் அல்ல..
காரணங்கள்தான் முக்கியமே தவிற இனமோ, மொழியோ எனக்கு முக்கியமான ஒன்றல்ல..

___________________

ஜோதிஜி திருப்பூர்

ஆன்மீக அரசியல் என்றால் என்ன?

தீபம் காட்டும் அய்யருக்கு நூறு ரூபாய் போட்டு விட்டு கோவிலை விட்டு வெளியே வரும் போது அங்கே கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து நாடு முழுக்க சோம்பேறிகள் அதிகமாகிவிட்டார்கள் என்று நாட்டைப் பற்றி கவலைப்படுவது.

___________________

Ravi Kumar

திரு ரஜினி இன்று ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று ஆசி பெற்றபோது அவரை அறிமுகம் செய்து கடைசியில் சுவாமி சொல்வதைக் கவனியுங்கள்: ” அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்னு ஒப்பனா சொல்லிருக்கார். So called secularism இல்ல”

இதுதான் ரஜினி சொல்லும் மதச்சார்பில்லாத ஆன்மீகம்

______________________

Thiru Yo

அறிவித்த சூட்டோடு ராமகிருஷ்ண மடத்தில் சாமியார்களிடம் சரணடைவு. ராமகிருஷ்ண மடம் எதை வளர்க்கிறது என்பதை சொல்ல அவசியமில்லை.

சங்கிகளுக்கு களம் அமைக்கவே பெரியார் நீக்கம், திராவிட இயக்க நீக்கம் ஒரு பிரச்சாரமாக முன்வைக்கப்படுகிறது. அதன் ஒரு பரப்புரை தான் தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பின்தங்கியதாக, ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழ்நாடு கெட்டுப்போனதாக சொல்லப்படுகிற போலி வாதங்கள். அதை செல்பவர்கள் ராஜாஜியின் ஆட்சி பற்றியோ, காங்கிரஸ் காலத்தில் (காமராசர்) தவிர மற்ற ஆட்சிகளில் சில ஆதிக்கச்சாதிகள் தவிர மற்றவர் நிலை பற்றி பேசுவதில்லை.

சங்பரிவாரக் கும்பல் ஏறி வருகிற பெட்டிக்குதிரை ரஜினி. பாஜக கும்பலை சுமந்து வருகிற ரஜினியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய முதுகெலும்பற்ற நடிகர்களை நம்புவது ஆபத்தையும், அழிவையுமே ஏற்படுத்தும்.

_________

_____________

Arumugam Kr

எதுக்காகவும் போராட வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
எதைப்பத்தியும் கருத்துச் சொல்ல வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
யாரையும் விமரிசிக்க வேண்டாம்; அதுக்கெல்லாம் வேற ஆளிருக்கு!
சண்டைக் காட்சிகள்ல வேத்தாளு (டூப்பு) போட்டு நடிச்ச பழக்கம் இன்னும் போகலையோ?
அது சரிங்கிறேன்! எல்லாத்துக்கும் வேற ஆளிருக்குங்கையில, ஆள்றதுக்கு மட்டும் வேற ஆளில்லாமயா போயிரும்?

_____________________

Sukirtha Rani

சாதி அரசியல் கொடுமைகளுக்குச் சற்றும் குறைவில்லாதது ஆன்மீக அரசியல். அது காவி பயங்கரவாதத்திற்கே இட்டுச் செல்லும்.

__________________

Yuva Krishna

மதவெறியை எதிர்ப்பது உங்கள் கொள்கையெனில், இயல்பாகவே ரஜினியை எதிர்த்துதான் ஆகவேண்டும். பார்ப்பனீயம் எடுத்திருக்கும் பரிதாபமான ஆயுதம் அவர்.

_______________

Govi Lenin

திருக்குறளை கங்கையில் கரைத்து விட்டு, பகவத்கீதையை தமிழ்நாட்டில் விதைப்பதற்கு பெயர், ஆன்மிக அரசியல்.

_______________

Arul Ezhilan

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரை சந்திக்கிறார் ரஜினி. ஒரு சாமியார் சொல்கிறார் //அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்ணு சொல்லியிருக்கிறார். இந்த சோ கால்ட் செக்குலரிடம் இல்ல// என்கிறார் . ரஜினி தலையாட்டி அதை ஆமோதிக்கிறார். திராவிட இயக்கத்தின் ஆன்மாவே மதச்சார்பின்மைதான். ரஜினியின் ஆன்மீக அரசியலில் மதச்சார்புதான் இருக்கும் எனும் நிலையில் கருணாநிதியிடம் அந்த அரசியலுக்கு ஆசி வாங்கச் செல்வது எவளவு பெரிய மோசடி?

//புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வேண்டும், அப்படியே உடல் நலம் விசாரிக்கணும் என்றுதான் ரஜினி தரப்பில் இருந்து கலைஞர் மகள் செல்வியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஸ்டாலினும் அங்கு சென்றார். ஆனால் ரஜினி திடீரென அரசியலுக்கு வருகிறேன் ஆசி வேண்டும் என்று சொல்ல அது கலைஞருக்கு புரியவில்லை. அவர் யார் கை கொடுத்தாலும் கொடுப்பார். கை கொடுத்தார் அதை ரஜினி ஆசியாக எடுத்துக் கொண்டு ஊடகங்களிடம் பொய் சொல்ல கடைசியில் வாங்கிக் கட்டும் சூழல் உருவானது.

 

 

முடங்கியது மும்பை – நவீன பேஷ்வாக்களை எதிர்த்து தலித் மக்கள் ! படங்கள்

0

பார்ப்பன பேஷ்வாக்களை வீழ்த்திய பீமா கோரேகான் யுத்தத்தின் 200 -ம் ஆண்டு
நினைவு நாளில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட காவிக் கும்பலை எதிர்த்து மகாராஷ்டிரா மாநிலம் முழுதுமான ஒருநாள் (03.01.2018) கடையடைப்பிற்கு தலித் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

அதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தால் முடங்கிய மும்பை மாநகரின் சில காட்சிகள் :

தலித் சமூகத்தினர் மும்பையில் நடந்த ஒரு எதிர்ப்புப் பேரணியில் முழக்கங்களை எழுப்புகின்றனர்.

மும்பையின் போராட்டங்கள் நடைபெறும் தருணத்தில் நெடுஞ்சாலை ஒன்று தலித் சமூகத்தினரால் மறிக்கப்பட்டதால் மக்கள் அதில் நடந்து செல்கின்றனர்.

மும்பையில் போராட்டம் ஒன்றின் போது சாலை மறியலுடன் தலித் மக்கள் முழக்கங்களை எழுப்புகிறார்கள்.

மும்பையில் போராட்டம் நடக்கும் போது காவல்துறையினர் ரோந்து செல்கின்றனர்.

மும்பை, நெடுஞ்சாலை ஒன்றில் தலித் மக்களின் மறியல், முழக்கம்!

மும்பையின் போக்குவரத்து சந்திப்பு ஒன்றில் பாதுகாப்பிற்கு நிற்கும் காவல்துறையினர்.

“மகாராஷ்டிரா பந்தை” முன்னிட்டு தானே தொடர்வண்டி நிலையத்தில் போராட்டம்.

பீமா கோரேகான் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மும்பையில் புதன்கிழமை அன்று “மஹாராஷ்டிரா பந்திற்கு” தலித் மக்கள் அழைப்பு விடுத்த பின்னர் ஆளரவமற்ற சாலையில் சிறுவர்கள் சைக்கிளில் கொடியை ஏந்தி செல்கின்றனர்.

நன்றி : தி வயர்


 

புது தில்லி ஓபராய் விடுதியில் தரமான காற்று கிடைக்குமாம் !

0

புத்தாண்டு அன்று (2018, ஜனவரி, 1) புது டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு கடுமையான அளவீட்டை எட்டியதுடன் காற்று தர குறியீட்டெண் (AQI) 400 ஆக பதிவானது. மேலும் இதை ‘மிக மோசமானது’ என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வகைப்படுத்தியிருக்கிறது.

நவம்பர் 7 -ம் தேதி காற்றுத் தர குறியீட்டெண் 999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் அதிகமாக கூட இருந்திருக்கலாம். ஆனால் கருவி காட்டக் கூடிய அதிகபட்ச அளவு என்பது அதுதான்.

புது டெல்லியின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில மத்திய அரசுகள் முழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஓபராய் நிறுவனம் புது டெல்லியில் உள்ள தன்னுடைய ஐந்து நட்சத்திர ஓட்டலை 500 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளது. இதற்காக இரண்டாண்டுகள் தற்காலிகமாக இந்த ஓட்டலின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இந்திய வரலாற்றில் நட்சத்திர விடுதியொன்றில் காற்று சுத்திகரிப்பானை பொருத்துவது இதுவே முதன்முறை என்பது தான் இதன் வரலாற்றுச் சிறப்பு.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 30 -க்கும் மேற்பட்ட ஆடம்பர விடுதிகளையும் இரண்டு சுற்றுலா கப்பல்களையும் ஒபேரா குழுமம் நடத்தி வருகிறது. புது டெல்லியில் காற்று மாசுபாடு மக்கள் வாழ முடியாத அளவு எட்டி விட்டதால் நான்கு அடுக்கு காற்று சுத்திகரிப்பான் அமைப்பை பொருத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக தூய்மையான காற்றை வழங்க இருக்கிறது ஓபராய் விடுதி.

விடுதி வளாகத்திற்குள்ளே 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய கொள்ளளவு கொண்ட காற்று சுத்திகரிப்பு கருவிகளை நிர்வாகம் நிறுவியுள்ளது என்று ஓபராய் நிறுவன துணைத் தலைவர் சில்கி சீகால் தெரிவித்தார். இதற்காக மிக அதிக திறன் கொண்ட அதாவது 99.7 விழுக்காடு காற்று மாசுபாட்டை நீக்கக் கூடிய ப்ளூஏர் ப்ரோ எக்ஸ்எல் (BlueAir Pro XL) என்ற காற்று சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி 1,180 சதுர அடி அளவுள்ள அறைக்கு பொறுத்த முடியும்.

பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவே 500 கோடி ரூபாயை கொட்டியுள்ளது ஒபேரா நிர்வாகம்.  இனி புது தில்லி வரும் சுற்றுலாப் பயணிகள், மாசில்லா காற்று உலவும் ஓபராய் விடுதியை தேடிச் செல்வர். ஆனால் இந்த வசதிகள் ஏதுமின்றி புது தில்லி அன்றாடம் இயங்குவதற்காக இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் அதே மாசடைந்த காற்றுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தலைநகரில் பார்ப்பனிய மாசுடன் ஆட்சி புரியும் மோடி மஸ்தான் ஆட்சியில் இனி காற்றும் மாசுதான்.புது தில்லி பணக்காரர்களுக்கு நல்ல காற்று கிடைப்பதற்கு ஓபராய் இருக்கிறது. மக்களுக்கு போராட்ட ஆயுதத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

மேலும் :

In polluted Delhi, a super-luxury hotel will offer the ‘cleanest’ air to the rich & famous


 

ஆளை மாற்றாதே! அதிகாரத்தை மாற்று !! விருதை பொதுக்கூட்டம்

0

விருத்தாச்சலம் வானொலித் திடலில் மக்கள் அதிகாரத்தின் ” அரசியல் அராஜகங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் முடிவு கட்டு” – பொதுக்கூட்டம் 30/12/2017 சனி அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார், தோழர் காளியப்பன் மாநிலப் பொருளாளர், சி.ராஜு மாநில ஒருங்கிணைப்பாளர் சிறப்புரையாற்றினார்கள்.

தலைமை உரையில் தோழர் முருகானந்தம், ”விருத்தாச்சலம் வட்டத்திற்க்கு உட்பட்ட தே.புடையூர் கிராமத்தில் மருத்துவக்கழிவு கிடங்கை அரசு நிறுவ உள்ளது. கிடங்கில் கொட்டப்படும் மருத்துவக் கழிவினால் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர், விவசாயம், காற்று மாசுபடுவதினால் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட நேரிடும் என்று தங்களுடைய கிராமத்துக்கு அந்த மருத்துவக்கிடங்கு வரக்கூடாது என்று போராடுகின்றார்கள் தெ.புடையூர் கிராம மக்கள். அவர்களைக் கைது செய்கிறது காவல்துறை.

ஒக்கி புயலால் கடலில் இறந்த மீனவர்களின் பிணங்களைக்கூட மீட்பதற்கு வக்கற்றுப்போன மத்திய மாநில அரசுகள் தான் திட்டமிட்டு மீத்தேனுக்கும் ஷெல் கேஸ்க்கும் விவசாயிகளை அவர்களுடைய சொந்த நிலத்தை விட்டு துரத்துகிறது.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடல் வளங்களை அள்ளிக்கொடுப்பதற்காக மீனவர்களை மீன்பிடி தொழிலிலிருந்து விரட்டுகிறது. அதற்காகத்தான் மீனவர்களை புயலிலிருந்து பாதுகாக்கத் தவறியது, முன் அறிவிப்பின்றி கொல்கிறது மத்திய மாநில அரசுகள்” என்று கூறி முடித்தார்.

வழக்கறிஞர் புஷ்பதேவன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், ”நீதிமன்றங்கள்தான் ஆளும் காவிக் கும்பலுக்கு ஆதரவாகவும் மக்களுடைய உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் தன்னெழுச்சியாக முன்வருகிறது. இவர்கள் நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை, நீதிமன்றங்களோ நமக்கானதாக ஜனநாயகமானதாக இல்லை. மக்கள் பிரச்சனைக்ளுக்கு தீர்வு  மக்கள் மன்றங்கள் – மக்கள் அதிகாரமாக மாறும்போதுதான் உழைக்கும் மக்களுக்கான வாழ்வு உறுதி செய்யப்படும் “என்று கூறி முடித்தார்

தோழர் காளியப்பன்

சிறப்புரை: தோழர் காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய்க்கு பணப்பட்டுவாட  நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.  தற்போது இந்த தேர்தலிலும்  பணப்பட்டுவாடா நடந்துள்ளது. அதிமுக 100 கோடியென்றால் டிடிவி தினகரன் 200 கோடி என்ற அளவில் நடந்துள்ளது.  ஆனால் தேர்தல் ஆனையம் தேர்தலை ரத்து செய்யவில்லை, இப்போது நடந்த தேர்தல் செல்லும் என்கிறது. அராஜகமும் அக்கிரமும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மறுபுறம் சட்டத்தின் ஆட்சி என்ற பேரில் உச்ச்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரசியல் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கூறுகிறார். சட்டம் அனைவருக்கும் நியாயம், சமத்துவம், சகோதரத்துவம் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது அப்படி எதுவுமே நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை. திருச்சியில் உள்ள காவல்துறை உயர் அதிகாரி ஐஜி  சொல்கிறார், அரசு நிர்வாகத்தை பாதுகாக்கின்ற பொறுப்பில் நாங்கள் இருக்கின்றோம், நீங்கள் அரசுக்கு எதிராக பேசுகிறீர்கள் அதனை நாங்கள் அனுமதிக்க முடியாது என்கிறார். மக்களுடைய உரிமைக்குத்  தடையாக இருப்பதே இந்த அரசு தான்.

அ.தி.மு.க அரசு விவசாயிகளுடைய கரும்பு பாக்கியை கூட கொடுக்க முடியாதென்கிறது. மத்தியில் ஆளும்  மோடி அரசு விவசாயிகளிடம் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வசூலித்த ப்ரீமியத் தொகையை விளைச்சல் இல்லை  வறட்சி நிவாரணம் கொடு காப்பீட்டு நிதி கொடு என்று கேட்டால் தர மறுக்கிறது. அதோடு மட்டுமில்லை மக்கள் சொத்துகளை கொள்ளை அடிப்பது இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கென்றே மத்திய அரசு (FRDI) என்ற திட்டத்தை கொண்டு வருகிறது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒக்கி புயலால் மீனவ கிராமங்கள் பட்ட துயரங்கள் எண்ணி மாளாது. காப்பாற்ற வக்கில்லாத மோடி அரசின் கடலோர கப்பற்படை 25 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் சென்றால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறது. மக்களை பாதுகாக்க வக்கற்றுப்போய் தோற்று நிற்க்கும் கேவலமான அரசியலமைப்பை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற வாரம் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி, ஒரு பெண் டிஎஸ்பி ஒரு தரப்புக்கு ஆதரவாக விளைந்த நெல் விளைச்சலை டிராக்டரை விட்டு ஓட்டி அழிக்கிறார். இன்னொரு அதிகாரி விவசாயத்தின் இணை இயக்குனர், விவசாயிகளின் மனுவைக்கூட வாங்க மறுக்கிறார். திக்குதிசை தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் அதிகாரமாக போராட்டங்களை ஒன்றிணைத்து மக்களை வாழவிடாமல் தடுக்கும் அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று பேசினார் தோழர் காளியப்பன்.

தோழர் சி.ராஜு, மாநிலஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

ஒவ்வொரு தனி மனிதருக்கும் கல்வி ,மருத்துவம்,சுகாதாரமான காற்று, குடிநீர் இவையனைத்தும் தடையின்றி கிடைக்கும் பட்சத்தில்தான் ஒரு மனிதன் வாழ முடியும். ஆனால் காசு இருந்தால்தான் வாழ முடியும் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

தோழர் ராஜூ

இதையும் தாண்டி கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுக்கின்றோம் என்ற பெயரில் நிலத்தடி நீரை நாசமாக்கினால் நாங்கள் எப்படி வாழமுடியும் என்று போராடுகின்றார்கள். போராடுகின்ற மக்களை குழந்தை முதியோர் என்று பாராமல் நாயை அடிப்பது போல் அடிக்கின்றது தமிழக காவல்துறை. புதுக்கோட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனமாகிவிடும் என்று நோட்டீஸ் கொடுத்ததற்க்காக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்.

செவிலியர்கள் போராட்டம் சென்னையையே அதிரவைத்தது. நாங்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு பத்து ஆண்டுக்கு மேலாகியும் எந்தவித ஊதிய உயர்வும் கிடையாது. வெறும் 8 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை வைத்துக் கொண்டு தற்போது நிலவும் சூழ்நிலையில் வாழ முடியவில்லை. பணிநிரந்தரம் செய்து சம்பளத்தை உயர்த்திக்கொடு என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுகிறார்கள். போராட்டத்தை ஒடுக்குவதற்க்காக இயற்கை உபாதையை கழிக்கும் கழிவறைக்கு கூட பூட்டு போடுகிறது தமிழக அரசு. நீதிமனறம் போராட்டத்தை கைவிடவில்லை என்றால் வேலையை இழக்ககூடும் என்று மிரட்டுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக சம்பளத்தில் பிடித்த பணம் எதையும் கொடுக்கவில்லை இந்த அரசு. உடனே பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று போராடுகிறார்கள். மக்கள் போராடக்கூடாது என்றால் மக்களுடைய பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்க வேண்டும்.

கந்துவட்டிக்கு ஜந்து முறை புகார் கொடுத்து கந்துவட்டிக் கொடுமைக்கு ஆதரவாக நடந்துகொண்ட காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்தால் அந்த மனு யார் மீது விசாரிக்க கொடுக்கப்பட்டதோ, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமே அந்த மனு செல்கிறது.  அதன் விளைவு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தான் பெற்ற பிள்ளைக்கு தலையில் கொள்ளி வைக்கிறார், இசக்கிமுத்து. யாரெல்லாம் இந்த அரசு காப்பாற்றும் என்று போரடுகிறார்களோ அவர்கள் அனைவரும் இறந்து போகின்றார்கள்.

ஆர்.கே.  நகர் தொகுதியில் டிடிவி தினகரன் ஓட்டுக்கு பணம் என்ற நிலை மாறி டோக்கனே பணம் என்றாகி வெற்றியும் பெற்றுவிட்டார். இந்த வெற்றி தேர்தல் ஆணையம், ஊழல் அதிகாரிகள் காவல்துறை  இவர்களின் துணையில்லாமால் நடைபெறவில்லை.

கன்னியாகுமரியில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலை பற்றிய முன்னெச்சரிக்கை இருந்திருந்தால் அவர்கள் இறந்திருக்கமாட்டார்கள்.  கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஒரு குடும்பத்தில் தாயும் விதவை, மகளும் விதவை, மருமகளும் விதவை இவர்களுடைய குடும்பத்தில் சந்ததியே அழிந்து விட்டது. இவர்களுடைய நிவாரணம் யாருக்கு பயன்படப்போகிறது. மத்தியில் காவியும், மாநிலத்தில் ஆவியும் ஆட்சி செய்கிறது கிரிமினல் கூட்டம் நம்மை ஆளுகிறது. நூற்றுக்கணக்கான பொது நல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எதற்காகவாவது தீர்வு எட்டப்பட்டு இருக்கிறதா?

புரட்சிகர கலைநிகழ்ச்சி

இல்லை தாது மணல், கிரானைட், மணல் கொள்ளை குற்றவாளிகள் தண்டிக்கபட்டுள்ளனரா? இத்தனை கொள்ளைகளுக்கும் காரணமான, மக்கள் சொத்தை இயற்க்கை வளங்களை கொள்ளையடித்தவனுக்கு துணை நின்ற அனைத்து துறை அதிகாரிகள் தான் முதற் குற்றவாளிகள். குற்றம் நிருபிக்கப்பட்டதா எதுவும் இல்லை குட்கா ஊழல் பற்றி கண்டு பிடித்து விசாரித்த வருமான வரித்துறை அதிகாரி அஷோக்குமார் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

இந்தியாவில் மொத்த உற்பத்தியில் 70% மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் ஆனால் இந்த அரசு விசாயத்துக்கு ஒதுக்கும் நிதி 2.3%.  கடந்த பத்தாண்டுகளில் தமிழக மக்களை சுயமரியாதை அற்றவர்களாக மாற்றி இருக்கிறது அதிமுக கும்பல். விருத்தாசலத்தில் மருத்துவகழிவு கிடங்கை தடைசெய்யகோரி போராடுகிற மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். இதனை கேட்டால் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரி மக்களுக்கு பாதிப்பு வராது என்கிறார். அப்படி சொல்கிற அதிகாரிகளின் ஆதாரை நாம் கைப்பற்றவேண்டும். பிரச்சனை என்றால் விடக்கூடாது பாதிப்பு ஏற்பட்டால் அவர் வேலையில் இல்லை என்றாலும் பதில் சொல் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

வணிக ரீதியாகவும், நிறுவனங்கள் இவைகளின் மூலமாகவும் கோடிக்கணக்கானப் பணம் விருத்தாச்சலம் பகுதியில்  கிடைக்கிறது. நகராட்சியிலோ குப்பையை அள்ளுவதற்க்குகூட பணம் இல்லை. இதனை கேட்டால் பதில் இல்லை எதிரியாக பார்க்கிறது நகராட்சி நிர்வாகம். இந்த அரசுக்கு நாம் ஒன்றும் அடிமை கிடையாது மக்கள் கேள்வி கேட்கக் கூடாது போராடக்கூடாது என்று சட்டம் சொல்கிறதா? மக்களுடைய கருத்துகளை, ஜனநாயகத்தை மறுத்திட தடுத்திட யாருக்கும் அதிகாரம் கிடையது.  இசக்கிமுத்து தான் கொளுத்திக்கொண்டபோது கலெக்டரை கட்டி பிடிக்க எவ்வளவு நேரமாகும், மாணவர்கள் விவசாயிகள் வணிகர்கள் மீனவர்களின் அனைத்து போரட்டங்களும் ஒன்றிணையவேண்டும்.  கோரிக்கையை முடிவுசெய்யும் அதிகாரத்தை நாம் பெறவேண்டும்.

விருத்தாசலத்தில் 31 வார்டிலும் மக்கள் அதிகார கிளை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வார்டுக்கு என்ன செய்ய வேண்டும்  என்று மக்கள் அதிகாரம் அதை தீர்மானிக்கும்.  மக்கள் அதிகாரம் என்பது நாம் உருவாக்கவில்லை. உருவாக்கியது இந்த அரசு கட்டமைப்புதான். மக்கள் அதிகாரம் தான் தீர்வு என்று நாம் சொல்லவில்லை வேறு வழி இல்லை. ஆளை மாற்றுவது தீர்வு அல்ல அதிகாரத்தை மாற்றுவதுதான் தீர்வு என நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
விருத்தாச்சலம்


 

மக்கள் அதிகாரம் : கதறும் மீனவ குடும்பங்கள் ! வஞ்சிக்கும் அரசு !!

0

கதறுகின்றன மீனவக் குடும்பங்கள்!
வஞ்சிக்கிறது அரசு !

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே,

கடற்கரையில் ஒதுங்கும் செத்த மீன்களைப் போல, தமிழக மீனவர்களின் பிணங்கள் சிதைந்து பல நாடுகளில் கரை ஒதுங்குகின்றன. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோரை ஒக்கிப் புயலுக்குக் காவு கொடுத்துவிட்டன, எடப்பாடி, மோடி அரசுகள் என்று ஆத்திரத்தில் நெருப்பாய்த் தகிக்கிறார்கள், மீனவ மக்கள். கிறிஸ்துமசுக்குள் வீடு திரும்பாத மீனவர் குடும்பங்களுக்கு இருபது லட்சம் ரூபாய் நிவாரணம் என்றது, அரசு. தாய்மார்களோ “ஒன்னு வேண்டா, எங்க மக்கள திருப்பித்தா’ என்று கதறுகிறார்கள். ஒரு குடும்பத்தில் கணவனும் இல்லை, சகோதரனும் இல்லை. ஒரு குடும்பத்தில் தந்தை, மகன், மருமகன் இல்லை. இது போன்று அதிகமான சம்பவங்களை தொலைக்காட்சிகள் வெளிக்கொணர்ந்துள்ளன. மீனவ மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியைக் கண்டு இனியும் நாம் அமைதி காக்கலாமா?

“குமரி மாவட்டம் கடந்த நூறாண்டுகளில் இத்தகைய உக்கிரத்தைக் கண்டதில்லை” என தப்பி வந்த மீனவர்கள் அதிர்ச்சியோடு கூறுகிறார்கள். புயல் ஓய்ந்ததும் மீட்பு பணிகளில் இறங்கியிருந்தால்; உரியகாலத்தில் ஆழ்கடலுக்கு சென்று இந்திய கப்பற்படையும், மோடி அரசும் உண்மையாகத் தேடி இருந்தால் நூற்றுக்கணக்கான மீனவர்களை உயிருடன் மீட்டிருக்க முடியும். எடப்பாடி அரசு முன்கூட்டியே எச்சரிக்கவுமில்லை; காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, கூசாமல் புளுகியது. பல்லாயிரம் மீனவர்கள் ரயில், பஸ் மறியல் போராட்டங்கள் நடத்திய பிறகுதான் ஒக்கிப்புயலுக்கு முன்பே தொழிலுக்கு சென்ற ஆயிரம் பேருக்கு மேல் கரை திரும்பவில்லை என்ற உண்மை வெளி உலகுக்கு தெரிய வந்தது. போராடிய பல ஆயிரம் மீனவர்கள் மீது வழக்கும் போட்டுள்ளது, அரசு.

மீனவ மக்களுக்கு ஆதரவு தரச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் ஏழு பேரை வன்முறையை தூண்டியதாகச் சொல்லி கொல்லங்கோடு போலீசு நிலையத்தில் வைத்து, ‘மீனவன் செத்தால் உனக்கென்ன? வெளி மாவட்டத்தில் இருந்து ஏன் இங்கு வந்த?” எனக் கேட்டு, நிர்வாணப்படுத்தி, அடித்து சித்ரவதை செய்து சிறையில் தள்ளியது, குமரி மாவட்ட போலீசு. மீனவ மக்களுக்கு ஆதரவாக ஏன் போராடக்கூடாது?

அரசு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் அடையாறு வெள்ளம் நூற்றுக்கணக்கான தென் சென்னை மக்களைப் பலிகொண்டபோது, தங்கள் படகுகளோடு போய் மக்களை மீட்டது மீனவர்கள்தாம். மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது போலீசு கடலுக்குள்ளும் மீனவக் குப்பங்களுக்கும் விரட்டியபோதும் மாணவர்களுக்கு தஞ்சமளித்ததும் மீனவர்கள்தாம். அதற்காக அவர்களுக்கு எதிராக தமிழகப் போலீசே தீவைப்பு முதலிய குற்றச்செயல்களில் ஈடுபட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாகத் திரளும் மாணவர்களை விரட்டுகிறது. சென்னை மெரினா, கோவை, மதுரை, நாகர்கோவில் போன்ற நகரங்களில் மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகளை ஒன்று சேரவிடாமல் அரசும் போலீசும் தனிமைப்படுத்தி விரட்டுகிறது.

மீனவர்களைப் பலிகொண்டது ஒக்கிப் புயல் அல்ல; மோடி – எடப்பாடி அரசுகள் நடத்திய படுகொலை. நிவாரணம் கொடுப்பது மட்டும் இதற்கு தீர்வு அல்ல. பல நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைக் காக்கத் தவறிய – அவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான, கடலோர காவல் படை, கப்பற்படை, மீன்வளத்துறை அதிகாரிகள், கிரிமினல் அலட்சியத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும். மீனவர்கள் ஆண்டுக்கு அறுபதாயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தருகிறார்கள். ஒரு மீனவன் கடலுக்கு சென்றால் பதினாறு பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது. இவர்களின் பாதுகாப்பிற்கு அரசிடம் எந்த கொள்கையும் இல்லை.

தமிழக கடற்கரை முழுவதும் அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், கப்பல் கட்டும் துறைமுகம், ரசாயன உரத் தொழிற்சாலை, சரக்கு பெட்டக துறைமுகம் என பன்னாட்டு கம்பெனிகளுக்கு முழுமையாக தாரை வார்க்கப்படுகின்றன. அதனால் தான் மீனவர்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் வாய்ப்பாக பியான் – ஒக்கிப் புயல்களையும் சுனாமியையும் கருதுகின்றன, மத்திய மாநில அரசுகள்.

உயிரிழந்தவர்களை காணாமல் போனவர்கள் என வெறும் காகித விபரங்களாக மாற்றி மீனவர்கள் வாழ்க்கையை அழிக்க நினைக்கிறது. கடைசி மீனவனையும் தேடுவோம் என இன்னும் வெறும் சவடால் அடிக்கிறது. மக்களை காக்கும் கடமையில் முழு தோல்வி அடைந்துவிட்டது இந்த அரசுக் கட்டமைப்பு. இந்த அரசுக் கட்டமைப்பை இனியும் நம்பினால் மேலும் மேலும் அழிவுகள்தான் ஏற்படும். ஆள்பவர்களால் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்கள் பிரச்சினைகள் எதையும் தீர்க்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்ட நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மீனவர்கள், மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் மக்கள் விரோத இந்த அரசை பணிய வைக்க முடியும். ஜல்லிக்கட்டு மெரினாவில் மாணவர்களோடு மீனவர்கள், கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டத்தில் விவசாயி களோடு மாணவர்கள். இந்த ஒற்றுமைதான் அரசை அச்சுறுத்தி பின்வாங்க வைத்தது.

புதிய மாற்றத்தை, தீர்வை, மக்கள் போராட்டங்களிலிருந்து உருவாக்குவோம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் அதிகாரம்
சென்னை

 

கொலைகார சவுதி அரசால் குதறப்படும் ஏமன் மக்கள் – படக் கட்டுரை

0

யிரக்கணக்கான அப்பாவி ஏமன் மக்களை மரணத்திலும் இலட்சக்கணக்கான மக்களை பஞ்சத்திலும் தள்ளிய சவூதிக் கூட்டணிப் படையினரின் தாக்குதல் 1000 நாட்களை கடந்து விட்டது. தென் மேற்கு ஏமனில் உள்ள ஒரு சந்தையில் சமீபத்தில் சவுதி நடத்திய வான்வெளித் தாக்குதலால் கிட்டத்தட்ட 20 ஏமன் மக்கள் கொல்லப்பட்டனர்.

தொடரும் இந்த கொடூரத்தின் விளைவால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஏமனின் அடிப்படை கட்டமைப்பில் பணிப்புரியும் 12 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக சம்பளம் கிடையாது.

ஏமனின் உள்கட்டமைப்பும் பொதுமக்களின் குடியிருப்புகளும் நொறுங்கி விட்டன. 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பணம், தண்ணீர், உணவு, மருந்துக்கள் கிடைக்காமல் கடுமையாக அவதியுறுகின்றனர். நார்வே அகதிகள் அமைப்பு எடுத்த இந்த பேரழிவின் காட்சிகள் சில இங்கே. இசுலாமிய சர்வதேசியம் பேசி ஏழை முஸ்லீம்களை மதவாதத்தால் ஏமாற்றும் கொலை கார சவுதி அரேபியவின் ‘சாதனைகள்’ இவை!

சனா(Sanaa), வான்வெளித் தாக்குதலால் நிலைகுலைந்த தனது வீட்டை ஒருவர் காட்டுகிறார். ஏமன் தலைநகர் முழுவதும் வீடுகள், திருமண மாளிகைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மைதானங்கள் ஆகியவை வான் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டு வருகின்றன.

சனாவின் நிலைகுலைந்த குடியிருப்புகளை ஒருவர் கடந்து செல்கிறார்.

அல் தாலேவைச்(al-Dhalea) சேர்ந்த 50 வயதான அலி மோத்தனா அலியின் வீடு தாக்கப்பட்ட போது படுகாயமடைந்தார். “வீட்டைத் தாக்கிய அந்த வான் தாக்குதலில் வீட்டிற்கு வெளியில் நான் சிக்கிக்கொண்டேன். வெடித்துச் சிதறிய குண்டு என்னைத் தாக்கியது. நான் முகக்காயங்களுக்கு ஆட்பட்டேன். சிராய்ப்புகளை என்னுடைய இடுப்பில் இருந்து அகற்ற வேண்டியதாயிற்று. என்னுடைய காலில் ஒருப்பகுதியை உலோக துண்டு ஒன்று வெட்டியது. அண்டை வீட்டுக்காரர்கள் என்னை சிகிச்சைக்காக அருகிலிருக்கும் கிராமத்திற்கு அழைத்து சென்றதால் உயிர் தப்பினேன். காயங்களால் நான் ஊனமாகிவிட்டேன். இனி என் குடும்பத்திற்காக என்னால் உழைக்க முடியாது. குடும்பத்தில் பணம் சம்பாதிப்பவன் நான் மட்டுமே. என்னுடைய மூத்த மகனுக்கு 10 வயது ஆகிறது.” என்று கூறுகிறார்.

சனாவுக்கு வெளியே நடக்கும் தீவிரமான போர் நாடு முழுவதும் 30 இலட்சத்திற்கும் அதிகமான ஏமன் மக்களை சொந்த குடியிருப்புகளில் இருந்து காலி செய்திருக்கிறது. சாடாவைச் (Saada) சேர்ந்த மொலோக் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சுற்றுப்புறம் தாக்கப்பட்டபோது தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட 460 குடும்பங்களுடன் வெளியேற நேர்ந்தது. அதன் பிறகு ஹவுத்தில் (Houth) உள்ள ஒரு தற்காலிகக் குடியேற்றத்தில் வசித்து வருகிறார்.

டையிஸ் (Taiz), ஓமரின் முன்னால் வீட்டின் ஒரே ஒரு புகைப்படமும், கட்டிடத்தின் இடிந்த குவியல் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. “என் குழந்தைகளின் தலைக்கு மேல் ஒரு கூரையை உறுதி செய்ய, இந்த வீட்டை ஒவ்வொரு கல்லாகக் கட்டி முடிக்க, 10 ஆண்டுகள் எனக்குத் தேவைப்பட்டது”. ஆயுதக் குழுக்கள் 2015-ம் ஆண்டின் பிற்பகுதியில் அவரை வெளியேறுமாறு கட்டளையிட்டன; அதன் பிறகு அவரது கிராமம் ஒரு போர்க்களமாகியது. வான் தாக்குதல்களால் அவரது வீடு தரைமட்டம் ஆவதற்கு சில நாட்கள் முன்பு தான் அவரது குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியேறினர்.

ஜபல் அல்-நுக்மின்(Jabal al-Nugm) அருகே நடந்த ஒரு வான் தாக்குதலுக்கு பிறகு மஹ்மூத் ஸீத் மற்றும் அவரது மனைவி சபா இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறிய அந்த நாள் பற்றி கூறினார்கள். முன்பு மஹ்முத் ஒரு தையல்காரராக பணிபுரிந்தார். ஆனால் போரும் முற்றுகையும் தொடங்கியதிலிருந்து அவருக்கு வேலையெதுவும் இல்லை. சிறுநீரக பிரச்சினையால் சபா அவதிப்படுகிறார். ஆறு குழந்தைகள் அவர்களுக்கு. ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் கீழ் நார்வே அகதிகள் அமைப்பு அவர்களுக்கு உணவு வழங்குகிறது. “நாங்கள் உயிர் பிழைக்க வேண்டும். முன்பு கிடைத்தது போல உணவு இல்லை, செலவழிக்க பணமும் இல்லை. எங்களுக்கு ஓரிரண்டு தட்டு உணவே கிடைக்கும் மேலும் அதை வைத்து தான் சமாளிக்க வேண்டும். அதோடு சேர்ந்து எங்களுக்கு சமையல் எரிவாயு கூட இல்லை” என்றார் மஹ்மூத்.

அம்ரானைச்(Amran) சேர்ந்த கைம்பெண்ணான வதேதாவிற்கு(Wedad) நான்கு குழந்தைகள். பசி மற்றும் வறுமையின் கொடுமை காரணமாக சாகவே அவர் விரும்புகிறார். “இந்த பிரச்சினையை சரி செய் அல்லது அமைதியாக சாக விடு – காலையில் மக்கள் எழுந்து பார்க்கும் போது நாங்கள் மடிந்து போயிருக்க வேண்டும் என்று நான் கடவுளை மன்றாடுகிறேன். நாங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையை விட அது ஒன்றும் மோசமில்லை. நாங்கள் பசியை பார்த்துவிட்டோம், கடுங்குளிரையும் பார்த்துவிட்டோம், அனைத்தையும் பார்த்துவிட்டோம்” என்று கூறினார்.

டையிசை சேர்ந்த 12 வயதான அம்மானி தனது தந்தையை இழந்துவிட்டார். அன்றிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். “மோதல்கள் கடுமையானதாக இருந்தன. கிராமத்தில் இருந்து தப்பிய கடைசி குடும்பம் நாங்கள் தான். ஒரு பாதுகாப்பான இடத்திற்கு தப்பி வந்த பிறகு எங்கள் பின்னால் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த எங்கள் தந்தை ஒரு ஷெல் குண்டால் பலியானார். அந்த இடத்திலேயே அவர் இறந்து விட்டார் ஆனால் எங்களுக்கு தெரியவில்லை. அவரது தொலைபேசியை தொடர்ந்து அழைத்தோம் ஆனால் பதில் கிடைக்கவில்லை. பின்னர் அவர் இறந்துவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். உங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவது மிகவும் மோசமானது. இங்கே தண்ணீர் இல்லை, விறகும் இல்லை, எங்களுக்கு என்று எதுவும் இல்லை. வீட்டிற்கு திரும்பினால் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது. நான் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தேன் ஆனால் இப்போது முடியாது. நான் இந்த போரைக் கண்டு அஞ்சுகிறேன். வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகள் வெடிக்க கேட்பது பயங்கரமானது. நாங்கள் அச்சுறுத்தப்பட்டோம். எங்கள் அறையில் மரண பயத்தில் ஒளிந்திருந்தோம்” என்று அவர் கூறினார்.

வடக்கு ஏமன், ஹௌத்திக்கு வெளியே ஒரு தற்காலிக குடியேற்றத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்த 4 வயதான அஹ்லம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். 2015-ம் ஆண்டில் அவளது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தாக்குதல் தொடங்கப்பட்ட பிறகு சாடாவில் இருந்து தப்பி வெளியேறிவிட்டனர்.

ஹௌத்திக்கு வெளியே இந்த குடியேற்றத்தில் 9 வயதான ஒபைட் (இடது) மற்றும் அவனது நண்பன் மோட்ரெக் இருவரும் மறுசுழற்சிக்கான வெற்று நெகிழிப் புட்டிகளை சேகரிக்கிறார்கள். “நாங்கள் ஒரு பெரிய பை முழுதும் சேகரித்தால் எங்களுக்கு 150 ஏமன் ரியால் (38 ரூபாய்) கிடைக்கும் என்று ஒபைட் கூறினான். “நான் பள்ளி சென்றுக்கொண்டிருந்தேன். நான் படிக்க விரும்புகிறேன் ஆனால் இங்கே பள்ளிக்கூடம் இல்லை”. போருக்கு முன் ஏமன் மக்களில் 60 விழுக்காட்டினர் மட்டுமே வாசிக்கவும் எழுதவும் செய்தனர். போர் தொடர்வதால் ஏமனின் பல இலட்சக்கணக்கான குழந்தைகள் படிப்பை இழந்துவிட்டனர்.

ஏமனில் உள்ள நெருக்கடி காரணமாக குழந்தைகளில் பலர் பட்டினி மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் இறக்கின்றனர். 5 மாத குழந்தையான அமானியின் எடை 2 கிலோ மட்டுமே. அவள் சனாவில் உள்ள அல்-சபீன் மருத்துவமனையில் ஊட்டச்சத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளாள். “அமானியை மருத்துவமனையில் சேர்க்க எங்கள் அண்டை வீட்டார் பணம் கொடுத்தனர்” என்று அவளது தாயார் பாத்திமா கூறினார். “நாங்கள் இந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு என் குழந்தைக்கு போதுமான உணவு கிடைக்காது என்று நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

முஹம்மத் குடும்பத்தினர் பல்வேறு சோதனைச்சாவடிகளை கடந்து 15 மணிநேர பயணத்திற்குப் பின்னர் ஊட்டச்சத்து குறைபாடுடைய தங்களது குழந்தையுடன் அல்-சபீன் மருத்துவமனைக்குச் சென்றனர். “எங்களுக்கு வேறு வழியில்லை. இப்போது எங்கள் பகுதியில் எந்த வசதிகளும் இல்லை” என்று அவனது தந்தை வஹீப் கூறினார். இரண்டு வயதான முகமதுவின் எடை 5.9 கி.கி.

ஒரு வயது ஃபாத்திமாவின் எடை 4.2 கிலோ கிராம். அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டபோது அவளது தாயார் அவளை அல்-சபீன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருகிறாள். ஃபாத்திமா, நான்கு குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார். ஆனால் அவருடைய மூத்த உடன்பிறந்தவர்களைப் போல ஊக்கமாக இல்லை. சரியும் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானப் பொருட்கள் கொண்டு வருவதற்கான தடைகளால் இலட்சக்கணக்கான ஏமன் மக்களுக்கு உடனடியான உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

ஏமன் மக்கள், சனாவில் உணவு உறுதிச்சீட்டு பகிர்மான மையத்தில் வரிசையாக நிற்கிறார்கள். கடுமையாக பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உணவு உறுதிச்சீட்டுகள் மற்றும் பிற உதவிகளை நார்வே அகதிகள் அமைப்பு செய்கிறது. 1,000 நாட்களாக நடக்கும் போர் மற்றும் உணவு, எரிபொருள், மருந்து முற்றுகையைத் தொடர்ந்து 84 இலட்சம் ஏமன் மக்கள் இப்பொழுது பட்டினி பாதிப்புக்கு அருகில் உள்ளனர்.

சனாவில் உள்ள அல்-சபீன் மருத்துவமனையில் டாக்டர் ஜிக்ரா அப்துல்லா சைஃப் பணிபுரிகிறார். “கொடுமை என்னவெனில், உணவிற்காக நாங்கள் போராடும் போது எங்களது வேலையை எப்போதும் போல செய்ய முடியாது”. போர்த் தொடர்ந்தால், எங்களுக்கு சம்பளம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், நாங்கள் அனைவரும் கிராமங்களுக்கு தப்பிச்செல்ல தான் வேண்டும். நாங்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும். நகரங்களில் இருந்து வெளியேறி பழங்கால மக்கள் வாழ்ந்தது போல வாழ வேண்டும்” என்று கூறினார்.

நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம் : சுந்தரம்

மேலும் :


 

மாட்டுக் கொட்டகை மனிதர்களும் தேநீர்க் கடையும் !

2

மாட்டுக்கொட்டகை மனிதர்களும் தேநீர் கடையும் !

படம் : ஓவியர் முகிலன்

மார்கழியின் அதிகாலைகள்
அவ்வளவு சுகமானவை…,
குளிர்மட்டும் செவிகளை அடைக்கும்.
மற்றபடி
பசு மாட்டுக்கு புல் அறுக்க
அம்மாவோடு சென்ற
பொழுதுகள் பொக்கிஷம் போன்றவை.

அம்மாவின் ஆட்காட்டி விரல் பிடித்து
வயல் வெளிகளில்
ஒரு படை வீரனைப் போல
பயணித்தது இன்றும்…
பசுமை பரப்பி
மனதில் பதிந்து கிடக்கிறது….

நடுங்கும் குளிரில்
லாவகமாய் அருகம்புல்
அறுத்திடும் அம்மாவை..,
புல்லின் நுனியில் நிற்கும்
பனித்துளியின் ஊடாக..,
குறும்பாய் பார்க்கையில்
‘அழுக்கான’ தேவதையை போல்
அம்மா அவ்வளவு
அழகாய் இருப்பாள்…

என்னதான் அருகம்புல்லும்
கோரைப்புற்களும்
அறுத்து வந்து கொட்டினாலும்…
சிறு நீரைப்போல
சில நேரங்களில்
சாணி கழித்திடும்
பிரியத்திற்குரிய
பசுக்களை என்னதான்
செய்துவிட முடியும்..?

நாற்றம் வீடு முழுக்க
பரவும் முன்
அத்தனையும் சுத்தம் செய்து
மாட்டுக்கொட்டகை முழுவதையும்
மணக்க செய்து விடுவாள்..,
சாம்பிராணி புகையுடன்
வலம் வரும் அம்மா.

அப்படி இருந்தும்
மாட்டுக் கொட்டகை குறித்து
பால் எடுக்க வரும்
பாண்டித்துரை உதிர்க்கும்
வார்த்தைகள் அவ்வளவு
பண்பானதாய் இருப்பதில்லை.
அசுத்தமே எங்களது அடையாளம் என்பது
அவருடைய அசைக்க முடியா
நம்பிக்கை போல!

எங்கள் பசுமாட்டின்
மடுவில் நீர் அடித்து
பால் கறந்தால்..,
இரண்டு லிட்டருக்கு மேல்
சாதாரணமாய்
பாத்திரத்தில் பால் நிரப்பும்.

ஆனாலும்
பால்கார பாண்டித்துரை
பால் கணக்கை
சிகரெட் பெட்டி அட்டையில்
குறைவாகவே குறித்து தருவார்.
தவறென்று சுட்டும் நிமிடத்தில் மட்டும்
முறைத்து கொண்டே
முச்சந்தியில் மறைவார்.

‘எளந்தாரியாய்’
ஆன பிறகு அவரைப் போல
வண்டியில் வலம் வர வேண்டும்,
என்ற ஆசைகள்
மனசுக்குள் பட்டாம்பூச்சியாய்
படபடக்கும்…
ஆனால்..,
மேலத்தெருவை நினைக்கையில்
அடி வயிற்றில் பயம் பரவும்.

எல்லா வேலைகளும்
முடித்துத்தான்,
இரவில் அம்மா
கஞ்சியில் கை வைப்பாள்.

பசுமாடு வாங்க
கந்து வட்டி கொடுத்தவன் குரல்
அப்பொழுதுதான்
அம்மாவின் செவிப்பறை கிழிக்கும்.
அந்த கொடுங்குரலின் முன்
தவளை சத்தங்களும்
தானாகவே அடங்கிவிடும்.

அதற்காகவே
அப்பா… எப்பொழுதும்
விரைவாக
வீட்டுக்கு வரமாட்டார்.

என்னதான்
ரத்தமும் வியர்வையும் சிந்தி
பசு வளர்த்து
பால் எடுத்து மேலத்தெரு
பாண்டித்துரைக்கு
கொடுத்தாலும்..,

அவரின் தேநீர்க் கடையருகே
அப்பாவும் நானும்
போய் நின்றால்..,
தனி டம்ளரில்
தேநீர் கொடுத்து..,
நாயைப்போல தரையில்
உட்காரச் சொல்லும்
அவரின்
ஆதிக்க சாதி வார்த்தைகள்
முரட்டுத் திமிருடன்
முகத்தில் அறையும்.

அந்த நிமிடங்கள் தான்
அழுகையையும்..,
கோபத்தையும்
ஒரே நேரத்தில்
கண்களுக்குள் கடத்தும்.

அப்பொழுது மட்டும்
விழிகளிலிருந்து வரும்
ஒவ்வொரு நீர்த்துளியும்
நெருப்பை விட சூடாக
நிலத்தில் ஒவ்வொன்றாய்
விழத் தொடங்கும்.

-முகிலன்

( மதுரை மாவட்டத்தில் மட்டும் 80 -க்கும் மேற்பட்ட கிராமங்களில்
இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது.)


 

சென்னை திருவெற்றியூர் – குமரி வள்ளவிளை : கண்ணீர்க் கடல் ஆவணப்படம் திரையிடல்

0

சென்னை திருவெற்றியூர் பகுதியில் மீனவ சங்க பிரதிநிதிகள் முயற்சியால் ஒக்கி புயலில் மரணமடைந்த மீனவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலியோடு “கண்ணீர்க் கடல்” ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்பல்வேறு மீனவ சங்கப் பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆவணப்படம் முடிந்த பிறகு பலரும் தாங்கள் உணர்ந்த கருத்துகளைப் பதிவு செய்தனர்.

இதில் மீனவர்கள் – வியாபாரி சங்க கெளரவத் தலைவர் ஒருவர் பேசும் போது “ஒக்கி புயலின் போது பாதிக்கப்பட்ட, மீனவ சொந்தங்களின் பாதிப்புகளை உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருக்கும் இந்த ஆவணப்படம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. அந்தக் கதறலை என்னால் தாங்க முடியவில்லை! இந்த ஆவணப்படத்தை தயாரித்த குழுவிருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆவணப்படத்தின் மூலம் நான் ஒரு விசயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

நாம் பல சங்கங்களாகவும், கட்சிகளாகவும் பிரிந்து இருக்கிறோம். இது தான் நமது உரிமைகளை மீட்டெடுக்க தடையாக உள்ளது. நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு பொது காரியத்துக்காக நம் சமுதாய மக்களுக்காக ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

சீன இஞ்ஜின் படகு இறக்குமதி செய்து நம் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டத்திற்கு நமது சமுதாயத்தை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சரே ஆதரவாக இருப்பது வருத்தமளிக்கிறது. மீன்கள் பெருக்கத்திற்காக அரசானது 2 மாத காலம் மீன் பிடி தடை காலம் என்று அறிவித்ததை ஏற்று அதற்கு நாம் கட்டுப்பட்டு இருக்கின்றோம் ஆனால் வெளிநாட்டு கம்பெனிக்காரன்களுக்கு அந்த இடைப்பட்ட காலத்துல அரசு அனுமதி கொடுக்குது. அவன் ராட்சச மீன்பிடி வலைகளை போட்டு குஞ்சுலருந்து எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயிடுறான். அவனுக்குத் தடை இல்லை.

அடுத்து நம்ம சங்கங்கள ஏற்றுமதிக்கான ஒரு கட்டிடம் கட்டுவதற்கு ஆலோசனை நடத்தினாங்க. ஆனால் இப்போ ஏற்றுமதி செய்யும் பெரிய கம்பெனிகளுக்கு ஆதரவாக அங்கு போய் மீன விக்க சொல்றாங்க. இது ஒரு கல்லுல ரெண்டு மாங்கா மாதிரி, நாம காலம் காலமாக வார்ப்பு இடங்களில் மீனை ஏலம் போட்டு வித்துட்டு வர்றோம். ஆனால் கரையோரம் இருக்கக்கூடிய வார்ப்பு இடமானது அதானி போன்ற பெரிய கம்பெனிகளுக்கு தேவை என்பதால அந்த இடத்துல இருந்து நம்மள காலி பண்ண வைக்கிறது, ரெண்டாவது ஏற்றுமதியாளர்கள் மொத்தமா மீன கொள்முதல் செய்யுறதால நம்ம வியாபாரிகளே அவங்ககிட்ட தான் மீனு வாங்கி விக்கக்கூடிய சூழ்நிலை உருவாகப் போகுது.

நாம எப்படி வாழறதுன்னு தெரியல. நாம் ஏற்கனவே டீசல் மானியம், இத்தொழிலில் மாற்று வேலை வாய்ப்பு, கூடுதல் உதவித்தொகை, மீனவர் குழந்தைகளுக்கான அரசு பள்ளிகூடம் போன்ற உரிமைகளுக்காக போராடனும்னு நினைக்கும் நேரத்தில், ஒக்கி புயலில் அரசின் மெத்தனத்தை பார்க்கும்போது மீனவன் அழிஞ்சா போதும்னு அரசு நினைக்குது என்ற விசயம் இந்த ஆவணப்படத்தின் மூலம் தெரியுது, ஆக நாம் மீனவனாக வாழனும்னாலே, நம்ம மீன்பிடித் தொழிலை தக்க வச்சிக்கனும்னாலே அனைத்து சங்கங்களும் ஒன்றிணைவது தான் நிரந்தர தீர்வு” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து மீனவர் ஒருவர் கூறுகையில் ”அரசானது மீனவர்களுக்காக வயர்லஸ் கருவி வாங்கி சாக்கு மூட்டையில் வச்சிருக்கிறதா சொல்றாங்க. அது நமக்காக வாங்கியிருந்தா கொடுக்க வேண்டியதுதானே ஏன் கொடுக்கலே? நாமளும் அத பத்தின விழிப்புணர்வு இல்லாம இருந்திருக்கிறோம். நாமளும் விவசாயி மாதிரி தான் நம்ம பாட்டன், பூட்டனுங்க கத்து கொடுத்தததான் நடைமுறையில தொழில் பண்றோம், நாம் தனித்துவமாக இருக்கிறோம் நம்மளால தான் அரசுக்கு வருமானம் வருது. அதிலிருந்து தான் அரசும் சில சலுகைகள் அறிவிச்சிருக்கு அந்த சலுகைகள் கூட நமக்கு வந்து சேர தடையாக இருப்பதே இந்த மீன்வளத்துறை தான்.

குமரி மாவட்ட மீனவர்களுக்கு நிகழ்ந்த துயரம் நாளைக்கு நமக்கும் நடக்காம இருக்கனும்னா நாம ஒண்ணு சேரணும். சாவு இயற்கையாக வரலாம், செயற்கையாக வரக்கூடாது. ஒக்கி புயல் மரணங்கள் செயற்கையான மரணங்கள்” என்று கூறி தன் கண்டனத்தை பதிவு செய்தார்.

இவரைத் தொடர்ந்து அப்பகுதி மாணவர் கூறுகையில் “மீனவர்களாகிய நம் மூலம் அரசுக்கு சுமார் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்குது. ஆனால் மாநில அரசாலும் சரி, மத்திய அரசாலும் சரி மீனவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. மாநில அரசில் மீனவராகிய ஜெயக்குமார் சார் இருந்தாலும் பொம்மையாத்தான் இருக்குறாரு. இங்கு ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் ஒவ்வொரு கட்சியில இருக்கீங்க ஏனென்றால் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கவோ, குடும்பத்த காப்பாத்தவோ கட்சியில இருக்கீங்க. ஆனால் இன்று ஒக்கி புயலால நம்ம மீனவர்கள் செத்துகிட்டு இருக்காங்க. மீனவ சமுதாயம் அழிஞ்சிக்கிட்டு இருக்கு, இதே நிலைமை தான் நாளை நமக்கும்.

நீங்க கட்சியில இருக்கிறதாலேயே கட்சிகாரங்க உங்க பிள்ளைகளையோ, மீனவ சமுதாயத்தையோ காப்பாத்தப் போறதில்ல. அப்போ கட்சியெல்லாம் தாண்டி மீனவர்களாக வெளிய வந்து நம்ம சமுதாயத்திற்காக வாழனும். சில பேர் ஆசைக்காக கட்சிய சார்ந்து இருக்காங்க ஆனால் மீனவர் சமுதாயம் யாரையும் சார்ந்து வாழல. சட்டப்படியே நம்ம அரசானது செத்த பிறகு 7 வருடம் கழிச்சு தான் பத்து லட்சம் ரூபாய் பணம் தருது. ஆக மீனவர்களான நாமெல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டம் கூடி நமக்கான உரிமை சட்டத்தை மீட்கனும் உரிமையென்றால் என்ன என்பதை சொல்லித்தரனும்.

ஒரு மீனவனுக்குத் தர வேண்டிய தொலைத்தொடர்பு கருவி அரசாங்கம் தராது, ஏனெனில் அது அதானிக்கு தான் கைக்கூலியா இருக்கு. நம்ம மீனவர் சங்கங்களிலேயே பெரிய பெரிய சங்கங்களெல்லாம் இருக்கு அதெல்லாம் நம்ம சமுதாயத்திற்கு உதவி செய்யுமானு தெரியல, ஆனால் அந்த சங்கங்கள்ல படிச்சவங்களெல்லாம் இருக்காங்க அவங்க என்ன செய்யனும்னா இந்த சட்டம் எப்படி இருக்கு, நமக்கான உரிமைகள தெரிஞ்சுகிட்டு அப்டேட்டா இருந்து மத்தவங்களுக்கும் சொல்லித்தரனும்.

மீனவன் தான் உயிர பணயம் வச்சு கடலுக்கு போறான். அரசோ மீனவ மக்களின் உயிரை ஒரு உசுரா மதிக்கல என்பது இந்த படத்தின் மூலம் தெரியுது. ஒரு எம்.எல்.ஏ. -வோ எம்.பி. -யோ செத்திருந்தா இப்படி சும்மா இருப்பாங்களா! அப்போ மீனவ மக்கள் செத்தா சாகட்டும்னு இருக்குது அரசு. இங்கு பிரச்சன வேற மாதிரி முன்னமாதிரி சாதாரணமா இருக்க முடியாது”. என்று ஆதங்கத்தோடு முடித்தார்.

மேலும் இந்த ஆவணப்படத்தை CD யாக போட்டு மக்களிடம் பரவலாக எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தயாரிப்பில் வினவு உருவாக்கிய இந்தஆவணப்படம் மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

தகவல் :
வினவு செய்தியாளர், சென்னை.

________________

குமரி மாவட்டத்தின் மீனவ கிராமமான வள்ளவிளையில் “கண்ணீர்க்கடல்” ஆவணப்படத்தின் திரையிடல் கடந்த 30.12.2017 சனிக்கிழமை அன்று நடந்தது. 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஊர் மையத்தில் இருக்கும் கால்பந்து திடலில் புரோஜொக்டர் மூலம் படம் காட்டப்பட்டது.

வள்ளவிளையில் இருந்த தொழிலுக்குச் சென்ற 70 பேர் கடலில் காணாமல் போயிருக்கின்றனர். இதில் மூவரின் மரணம் நேரில் பார்த்தவர்களை வைத்து உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றவரின் கதி இன்னமும் தெரியவில்லை. அதில் கடலூர், ஆந்திரா, அஸ்ஸாமைச் சேர்ந்த தொழிலாளிகளும் உண்டு.

தற்போது ஐந்து படகுகளில் மீனவர்கள் தெற்கே டீக்கோகார்சியா தீவு வரையிலும் தேடிப் பார்க்க சென்றிருக்கின்றனர். இப்படகுகள் ஜனவரி 5 அன்று திரும்பும் என்று பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.

“கண்ணீர்க் கடல்” ஆவணப்படத்தை மற்ற கிராமங்களில் திரையிடல் செய்யவும் ஏற்பாடுகளை செய்திருப்பதாக பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.

தகவல்: வினவு செய்தியாளர், குமரி

_____________________________

 

கல் குவாரிக்காக விவசாயிகளை விரட்டும் அரசு ! – PRPC ஆய்வறிக்கை !

0

கல் குவாரிக்காக விவசாயத்தை விரட்டும் மாவட்ட கலெக்டர் !

துரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் , ஜல்லிக்கட்டுப் புகழ் அலங்காநல்லூர் ஒன்றியம் வைகைப் பாசன வசதி பெற்ற வளமான பூமி. சமவெளிப் பகுதியைக் கடந்து வடக்கே சென்றால் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீட்சியாகச் சிறு சிறு மண் மலைகள். அதன் மேடான அடிவாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பழத்தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. அடர் சிவப்பு மண்ணால் போர்த்தப்பட்டுள்ள இந்த மண் மலைகளுக்கு உள்ளே புதைந்திருப்பது விளைந்த கரும் பாறைகள்.

விலை மதிப்புள்ள கனிம வளம் (புளு மெட்டல்).  அந்த மண் மலைகளில் ஒன்று பெருமாள் மலை. 66 மேட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு கிராமங்கள் பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ளன. நெடுங்காலமாக உழைத்து அந்த மண்ணைச் செழிப்பாக்கி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர் அந்த மக்கள். 66 மேட்டுப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 4 கிராமங்களில் ஒன்று 66 M உசிலம்பட்டி .

எம்.உசிலம்பட்டி கிராமத்தில் 700 குடும்பங்கள் உள்ளன. எல்லோரும் சிறு விவசாயிகளாகவும், கூலி வேலைக்குச் செல்பவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது விவசாய நிலங்களில் கொய்யா, மாமரத் தோட்டங்கள் நிறைந்து இருக்கின்றன. அந்தச் செவலை மண்ணில் விளையும் கொய்யாவுக்கு ஒரு தனிச் சுவையும் சந்தையில் அதற்கென தனி மவுசும் விலையும் இருக்கிறது. கொய்யாத் தோட்டங்களோடு சிறு தானியங்களையும் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி தண்ணீரை உறிஞ்சி தொட்டிகளில் தேக்கி சொட்டு நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் செய்து எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.

சேந்தமங்கலம், மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி ,எம்.உசிலம்பட்டி மக்களின் வாழ்க்கையைப் பறிப்பதற்காக, பசுமையான பெருமாள் மலையையும் அதன் அடிவாரத்தையும் குடைந்து கல்குவாரி அமைக்க ஆதி முத்தன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி வருகிறார். பக்கத்து கிராமமான பாலமேட்டில் அவர் ஏற்கனவே நடத்தி வந்த கல் குவாரியில் விபத்துக்கள், உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டதனால் அங்கிருந்து மக்களால் விரட்டப்பட்டார்.

இருந்தாலும் ருசிகண்ட பூனையாக பெருமாள் மலையைக் குறிவைத்து மலை அடிவாரத்தில் விவசாயம் செய்து வந்தவர்களில் சிலரை ஆசைகாட்டி வளைத்து, 4 கிராமத்தினரின் எதிர்ப்பையும் மீறி 30 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார் ஆதி முத்தன். இப்போது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு 50 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வளைத்து வேலி போட்டுள்ளார். குவாரி டெண்டர் அறிவிக்கப்பட்டபோதே எம்.உசிலம்பட்டி மக்கள் பல முறை போராடித் தடுத்துள்ளனர். மக்களின் கடும் எதிர்ப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு மாவட்ட நிர்வாகம் ஆதி முத்தனுக்கு உரிமம் வழங்கி விட்டது.

ஏற்கனவே பாலமேடு பகுதியில் சில குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் சுற்றுச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மரம், செடி, கொடிகள், வீடு வாசல் அனைத்தும் குவாரி தூசியினால் போர்த்தப்பட்டுள்ளன. பலர் நுரைஈரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாகப் பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்துக்குத் தோண்டியதால் அதில் நீர் ஊற்று ஏற்பட்டு நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குப் போயுள்ளது.

கிரசர் இயந்திரங்களின் ஓயாத இரைச்சல், பாறையை உடைக்க வெடி வைப்பது ஒலி, காற்று மாசு ஏற்படுத்துகின்றது. டிப்பர் லாரிப் போக்குவரத்தினால் சாலைகள் பழுதுபட்டுள்ளன. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கிரமங்களுக்கு அரசு பேருந்துகள் வர மறுக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டாண்டு காலமாய் நடைபெற்று வரும் விவசாயம் அழிக்கப்படுகிறது.

இந்த ஆபத்துக்கு எதிராகத் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்த மக்கள் போராடி வருகின்றனர். சாலை மறியல், முற்றுகைப் போராட்டம், செல்-கோபுரத்தில் ஏறிப் போராட்டம் என பல வகையிலும் போராடியதோடு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டத்தையும் எந்த அரசியல் கட்சியின் துணையும் இன்றித் தாமாகவே நடத்தியுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 60-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு இவர்களின் குரலைச் செவி கொடுத்துக் கேட்கவில்லை. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் எடுத்துச் சொன்னபோது, சட்ட விதிகளின்படி இரண்டு குவாரிகளுக்கு இடையே 300 மீட்டர் இடைவெளி இருந்தால் அனுமதி வழங்கலாம். அரசுக்கு வருவாய் வருவதைத் தடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். என்னே,தேசப் பற்று! இவரது (மக்கள் விரோத) சேவையைப் பாராட்டி அண்மையில் இவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 23.07.2017 அன்று இந்தப் பகுதியைப் பார்வையிட்ட வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், பெருமாள் மலையில் கல் குவாரி வராது. மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளார். மலைப் பகுதிக்குப் போவதற்கு பாதை கிடையாது. அரசு நிலத்தில் அனுமதி இல்லாமல் ரோடு போட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மரம் வெட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், சமூகக் காடு வளர்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலமும், இயற்கையாகவும் லட்சக் கணக்கான மரங்கள் பெருமாள் மலையில் உள்ளன. ஆனால் மரங்களே இல்லாத பொட்டல் காடு, அருகில் விளை நிலங்களே இல்லை என்று வருவாய்த் துறை நீதிமன்றத்தில் எழுத்துமூலம் பொய்யான தகவல் தெரிவித்துள்ளது. லட்சக் கணக்கான மரங்கள் இருப்பதற்கான ஆதாரம் இவர்களிடம் உள்ளது.

கிராம மக்கள் பலரையும் சந்தித்துக் கருத்துக்களைக் கேட்டோம். அவர்களின் குரலில் ஏமாற்றமும் வலியும் வெளிப்படுகிறது. அதே வேளையில் எது வந்தாலும் சந்திப்போம். குவாரியைத் தடுத்து நிறுத்துவோம் என்கிற உறுதியையும் காண முடிந்தது.

பலர் தங்கள் குடும்ப வாழ்வின் ஆதாரமாக இருந்து வரும் விவசாய நிலத்தை விட்டுத்தர முடியாது என்று போராடி வருகிறார்கள். அவர்களில் பலர் இளைஞர்கள். விவசாயத்தைத் தொடர்கின்றனர். பொறியாளர் முத்துராஜா, சொந்தமாகத் தொழில் செய்வதோடு விவசாயமும் செய்துவருகிறார் போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் அவர் கூறியது:

“ 10 வருசத்துக்கு முன்னால் பக்கத்துக் கிராமமான மாணிக்கம்பட்டிக்கு கல்குவாரி வந்தபோது அதன் பாதிப்பை நாங்கள் உணரவில்லை. இன்று தான் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. நிலத்தடி நீர்நிலைகள் வற்றிப் போகிறது, மலை மொட்டையாகிறது, விளைநிலங்கள் மலடாகிறது, கிராமம் காலியாகிறது.

பெருமாள் மலையில் கல் குவாரி போட (ஆதி முத்தன்) ஆதிஷ் நிறுவனம் 2 ஆண்டுகளாக முயற்சிக்கிறது. நாங்களும் விடாமல் போராடி ஒவ்வொரு கட்டத்திலும் தடுத்து வருகிறோம். பக்கத்து கிராமத்தினரும் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். ஆனாலும் மதுரை கலெக்டரால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகிறோம். இந்த முறையும் டெண்டர் விடப்பட்டபோது மிகப் பெரிய போராட்டம் நடத்தினோம். ஒவ்வொருமுறையும் கல்குவாரிக்கு அனுமதி தரமாட்டோம் என்று மாவட்ட கலெக்டரால் உறுதி அளிக்கப்படுகிறது. ஆனால் டெண்டர் விடப்பட்டு கல்குவாரி அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆதிஷ் அரசு நிலத்தைக் கைப்பற்றி குவாரிக்காக சாலை போட முயன்ற போது 8 நாட்கள் விடாமல் போராடினோம். தாசில்தார் அந்த சாலை வராது என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டோம். ஆனால் டிசம்பர் 2-ம் தேதி காலை 11 மணி அளவில் ஆதி முத்தன், டிராக்டர்களில் அடியாட்களையும் கற்களையும் கொண்டு வந்து சாலை போடத் தொடங்கினார். நாங்கள் தடுக்க முயற்சி செய்த போது சரமாரியாகக் கற்களை வீசி எங்களைத் தாக்கினார். 7 பேர் காயம் அடைந்தனர். ஒருவருக்குக் கால் முறிந்தது. ஒருவருக்குக் கை முறிந்தது. பொக்லைன் எந்திரத்தின் பக்கெட்டை வைத்து அடித்ததில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. வீட்டின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டால் வீடு எரிந்தது. டிராக்டரையும், இரு சக்கர வாகனத்தையும் அவர்களே எரித்து விட்டு எங்கள் மீது பழிசுமத்தினார்கள். சம்பவம் நடந்து கொண்டிருந்த போது பாலமேடு போலீசுக்கு போன் போட்டேன். போலீசு வரவே இல்லை. புகார் கொடுக்கப் போன எங்களை அடித்து மிதித்து உட்கார வைத்தனர். எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரிடம் எங்கள் தரப்பை எடுத்துக் கூறியபோது அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

சுற்றுப்பட்டு கிராமங்களில் இருந்து சம்பவத்தைக் கேள்விப்பட்டு மக்கள் பாலமேடு காவல் நிலையத்திற்கு வரத்தொடங்கினர். இதனால் உஷாரான, சமய நல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன் குமார், பாலமேடு கடைவீதியில் நிற்கிற மக்கள் அனைவரையும் அடித்து விரட்ட உத்தரவிட்டார். அத்துடன் கைது செய்யப்பட்ட எங்களை வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உடனடியாகக் கொண்டுபோய் விட்டனர். இப்படி மக்களின் போராட்டத்தைக் காயடித்தது போலீசு.

அங்கேதான் தவமணி தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார். கொலை முயற்சி, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்து மாஜிஸ்டிரேட் முன்பு நாங்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது எப்.ஐ.ஆர்.ஐப் படித்துப் பார்த்த நீதிபதி எஸ்.ஐ. வீரசோழியைப் பார்த்து, “தவமணி என்பவர் உங்களை அரிவாளால் வெட்ட வந்ததாகவும் அது தொப்பியில் பட்டதனால் தப்பித்ததாகவும் கொலை முயற்சி வழக்குப்போட்டுள்ளீர்களே. அப்படியானால் அவர் வெட்ட வந்தபோது நீங்கள் கையால் தடுத்து கையில் வெட்டுக்காயம் இருக்க வேண்டுமே. இருக்கா ? ஏனய்யா இப்படி பொய் வழக்குப் போட்டு ஏழை மக்களைக் கொடுமைப்படுத்துகின்றீர்கள்? இந்த வழக்கு நிலைக்காது, தோற்றுப் போகும்” என்று சொன்னார். ஆனால் அவர் எங்களை விடுவிக்கவில்லை. திண்டுக்கல் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்துப் போடவேண்டும் என்ற நிபந்தனையுடன் பதிமூன்று நாட்கள் கழித்து ஜாமீன் கொடுத்தார். 36 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டோம்.

தவமணியைப் பணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரச்சினையில் தொடர்பு இல்லாத, திருமணமாகி கோவையில் வசிக்கும் அவரது மகனும் திண்டுக்கல்லில் கல்லூரியில் படிக்கும் மகனும் வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஆதி முத்தன் அடிஆட்கள் மீது கொடுத்த புகாரை காவல் ஆய்வாளர் கிழித்துப் போட்டுவிட்டு அவர்களாக ஒரு புகாரை எழுதி எங்கள் கிராமத்து இளைஞர்கள் இரண்டு பேரை நள்ளிரவில் தூக்கிப் போய் அடித்து உதைத்து கையெழுத்து வாங்கி அதை வைத்து அவர்கள் 10 பேர் மீது வழக்குப் போட்டுள்ளனர். 7 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூல காரணமாகிய ஆதி முத்தன் கைது செய்யப்படவில்லை.

பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்ல நீரோடை ஒன்றுதான் பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆடுமடுகள் மேய்சலுக்காகப் போகும் 3 அடி பாதையை வருவாய் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் அடாவடியாக விரிவுபடுத்த ஆதிமுத்தன் முயற்சி செய்ததை தடுத்த வட்டாட்சியர் ஒரே வாரத்தில் இடம் மாறுதல் செய்யப்பட்டார்.இது மாவட்ட ஆட்சியருக்குத் தெரியாமல் நடந்திருக்குமா? இப்போது புதிதாக வந்திருக்கும் வட்டாட்சியர் நிலம் எனக்குச் (அரசுக்கு) சொந்தமானது. நீங்கள் யார் கேள்வி கேட்க என்று மக்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்.ஆனால் ஆதி முத்தனைப் பாதை போட அனுமதிக்கிறார். இது யாருக்கான நியாயம்? என்று கேட்கிறார் பொறியாளர் முத்து ராஜா.

”இந்தப் போராட்டத்துக்கு நான்தான் காரணம் என்று கூறி என்னைத் தனிமைப்படுத்திப் பாலமேடு காவல் நிலையத்திலும் ,பின்னர் வாடிப்பட்டி காவல் நிலையத்திலும் வைத்து கொடூரமாகத் தாக்கினர். கைவிரல்களை ஒடித்தனர். காவல் உதவி ஆய்வாளர்கள் வீரசோழி ,மருதமுத்து ஆகியோர் மிகக் கடுமையாகத் தாக்கினர். ’அந்த நிலத்தை நீ வைத்து மயிரா புடுங்கப் போற? அதான் கேட்கிற பணத்த தருறேன்னு சொல்லுறார்ல குடுக்க வேண்டியது தானே? உன்னாலதான மத்தவனுங்களும் நிலத்த குடுக்க மாட்டேன்கிறான்’ என்று சொல்லி அடித்தார்கள்.என்னுடைய மகன்களுடைய எதிர்காலத்தையும் பாழாக்கிவிடுவோம் என்று மிரட்டினார்கள்.என்னை அடித்து சித்திரவதை செய்ததை நீதிபதியிடம் சொல்வேன் என்று சொன்னதற்கு ,சொன்னால் கூடுதல் தண்டனை கிடைக்கும் என்று மிரட்டினார்கள்” என்றார் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திவரும் விவசாயி தவமணி.

இவருடைய நிலத்துக்கு ரூ.ஒரு கோடி வரை பேரம் பேசியுள்ளார் ஆதி முத்தன். நிலத்தை விற்றுவிட்டு தரிசாகிப் போனவர்களை நினைத்துப் பார்த்த தவமணியும் அவரது மனைவியும் உயிரே போனாலும் நிலத்தைக் கொடுக்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

மனைவி மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இவர்களுடைய மூத்த மகன் இந்திய ராணுவத்தில் பணி புரிகிறார்.இப்போது ஆதிமுத்தன் அந்தப் பாதையைப் பயன்படுத்துகிறார். யாரிடமும் புகார் தர முடியாது. வழக்கும் போட முடியாது. ஒரே தீர்வு நிலத்தை விட வேண்டும் அல்லது ஆதிமுத்தனை மக்கள் ஒன்று திரண்டு விரட்டவேண்டும்” என்கிறார் தவமணி மக்களின் பிரதிநிதியாக.

இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் மாபியாக்கள் கிரானைட் பி.ஆர்.பி.ஆகட்டும், ஆற்றுமணல் ஆறுமுகசாமி ஆகட்டும்,தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் ஆகட்டும் அவர்கள் தனியாக இல்லை.அரசு கட்டமைப்பு முழுவதுமே அவர்கள் பக்கம் தான் இருக்கிறது. அவர்கள் எந்த சட்ட திட்டங்களையும் கடைபிடிப்பதில்லை.அவர்களது ஒரே நோக்கம் கொள்ளை லாபம்.அதற்காக லஞ்சம்,ஊழல், முறைகேடு,கொலை கலவரங்களில் ஈடுபடுவது.சுற்றுச் சூழல் பாதிப்பு,லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையவே கிடையாது.விவசாயத்தை அழிக்கும் உலகமயமாக்கத் திட்டத்தில் இவர்கள் கருவியாக செயல்படுகின்றனர்.இன்னும் காவேரி டெல்டா,கதிராமங்கலம், நெடுவாசல்,காடு மலைகள்,ஆறுகள்,கனிம வளங்கள் அனைத்தும் அரசினால் சூறையாடப்படுகிறது. சமூகத்தின் கடைமடைப் பகுதியில் நிற்கும் விவசாயிகள் கேட்பாரின்றி பலியாக்கப்படுகின்றனர்.இதன் காரணமாக இந்த அரசு கட்டமைப்பை நம்பாமல் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அதுதான் எம்.உசிலம்பட்டி கிராமத்திலும் உண்மையாகி இருக்கிறது.

தகவல்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.செல்:9443471003