Wednesday, May 22, 2019
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
150 பதிவுகள் 1 மறுமொழிகள்

தருமபுரி : 8 வழிச்சாலையை எதிர்த்துப் பிரச்சாரம் | மக்கள் அதிகாரம் 8 தோழர்கள் சிறை

சேலம் 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் அதிகாரம் தோழர்களை, வன்முறைக்கு தூண்டியதாகவும், மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் பொய் வழக்கு போட்டு கைது செய்தது போலீசு. பத்திரிகைகள் மூலமாகவும் இந்த அவதூறுகளைப் பரப்புகிறது போலீசு!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : ஜூலை – 1 மணப்பாறையில் இரங்கல் கூட்டம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வரும் ஜூலை 1,2018 அன்று (ஞாயிற்றுக் கிழமை) மணப்பாறையில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : கோவை மக்கள் அதிகாரம் இரங்கல் கூட்டம் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தியாகம் புரிந்த 13 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் இரங்கல் கூட்டம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு விழுப்புரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இரங்கல் கூட்டம் கடந்த 23.06.2018 அன்று நடத்தப்பட்டது. அதன் செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்!

பா.ஜ.க + மதுரை ரயில்வே போலீசால் புனையப்பட்ட பொய்வழக்கு முறியடிப்பு

இரயிலில் பிரச்சாரம் செய்ததற்காக பி.ஜே.பி. கும்பலின் தூண்டுதலின் பேரில் பொய்வழக்கில் கைது செய்த மதுரை ஆர்.பி.எஃப். போலீசின் சதியை முறியடித்திருக்கிறார்கள், மணப்பாறை மக்கள் அதிகாரம் தோழர்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : தியாகிகளுக்கு கடலூரில் இரங்கல் கூட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் களப்பலியான தியாகிகளுக்கு கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் 24.06.2018 ஞாயிறு அன்று கடலூர் டவுன் ஹாலில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதன் செய்தி - புகைப்படங்களின் தொகுப்பு!

தொடரும் மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறைகள் | வழக்கு நிதி தாரீர் !

"போலீசின் துப்பாக்கியும் சிறையும் எம்மை அச்சுறுத்தியதில்லை. ஆனால் நிதி நெருக்கடிதான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் நிதிக்கு எங்கே போவது உங்களைத் தவிர." மக்கள் அதிகாரம் வழக்கு நிதி கோரிக்கை!

ஜெயங்கொண்டம் மக்கள் அதிகாரம் தோழர் கதிரவன் தேசத் துரோக வழக்கில் கைது !

ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக பிரசுரம் கொடுத்தார் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்று, தோழர் கதிரவனை 153(a),124(a) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையிலடைத்துள்ளது, அடிமை எடப்பாடி அரசு.

நள்ளிரவில் ரெய்டு | நெற்றியில் கைத்துப்பாக்கி | இரவில் சித்திரவதை | மக்கள் அதிகாரம் மீது போலீசின் வெறியாட்டம்...

55 வயதான பரமனை கடத்திச் சென்று, கண்ணில் துணியைக்கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப் பார்க்கச்சொல்லி “டேய் அவுசாரி மவனே இந்தத் துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி” என்று ’விசாரித்திருக்கிறது.’, போலீசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : கடலூரில் தடைபல தாண்டி மக்கள் அதிகாரம் கூட்டம் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு கடலூர் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24.06.2018) மாலை 4 மணியளவில் இரங்கற் கூட்டம் நடைபெறவுள்ளது. இடம்: நகர அரங்கம் (டவுன் ஹால்) கடலூர். அனைவரும் வாரீர் !

நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது ! தொடரும் போலீசு ராஜ்ஜியம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக, சட்ட ஆலோசகராக செயல்பட்டு வந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி.

தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! திருச்சியில் இன்று மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை .... தாமிர உருக்காலைக்கு தமிழகத்தில் அனுமதியில்லையென சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று (20.06.2018) புதன்கிழமை மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம்! அனைவரும் வருக !

தருமபுரி : மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரத்துக்கும் அனுமதியில்லை !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், அதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டும் , தருமபுரியில் நடைபெறவிருக்கும் இரங்கற்கூட்டத்திற்கு பிரச்சாரம் செய்த 7 தோழர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது போலீசு.

ராஜீவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய் ! சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் போலீசு !

சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்ய விரட்டும் போலீசு ! இராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற எழுவரை விடுதலை செய்ய மத்திய அரசு மறுப்பு !

கோவில்பட்டி : மக்கள் அதிகாரம் தோழர்கள் குடும்பத்தினரை மிரட்டும் வேதாந்தா எடுபிடி போலீசு !

நீதிமன்ற உத்தரவை மீறி நள்ளிரவில் வீடுபுகுந்து மிரட்டுதல், வீடுகளில் உள்ள பொருட்களை கைப்பற்றுதல் என தொடர்ந்து ஸ்டெர்லைட் முதலாளியின் அடியாள் வேலையை செவ்வனே செய்துவருகிறது போலீசு!