முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?
சமூக மாற்றத்திற்கான அறிவியலான மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால் மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்க முடியும்.
மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!
இந்திய அரசின் அனைத்து சட்டத் திருத்தங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அமெர்க்காவில் திட்டமிடப்பட்டவையே. ஆனால் அவையெல்லாம் அன்னியத் தலையீடாக ‘தேசபக்தாள்களுக்குத்’ தெரிவதில்லை
தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!
தமிழ் மொழிப்பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கும் தமிழை மொழிப்பாடமாக தேர்வு செய்ய முடியுமா என்று கேட்டதற்கும் இல்லை என்று பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா.
பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?
இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு கடந்த ஆண்டைவிட 137% அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே ! உண்மையில் இது மக்களின் மருத்துவத்துக்காகத்தான் ஒதுக்கப்பட்டதா ?
பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !
மொத்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் அதன் துணை நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பங்கின் அளவு சென்ற ஆண்டில் இருந்த 5.1% லிருந்து தற்போது 4.3% ஆக குறைந்திருக்கிறது.
யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 67% பேர் ரேசன் கடைகளில் உணவு தானியங்களைப் பெற்றும் நிலையில், இம்மானிய வெட்டு உழைக்கும் மக்களை பசி பட்டினிக்கு பலி கொடுக்கவிருக்கிறது.
டெல்லி போராட்டம் : துவங்கியது சங்கிகளின் வெறியாட்டம் !
தடைச் செய்யப்பட்ட விவசாயிகளின் போராட்ட எல்லைக்குள் எப்படி இந்தக் கும்பல் நுழைய முடிந்தது ? போலீசின் உதவியின்றி இந்தக் கும்பலால் உள்ளே நுழைந்திருக்க முடியாது என்பது உறுதி.
வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !
பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், ஊடக விவாதங்களின் மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் விவசாயிகள் சங்கத்தில் இருக்கும் சிறு சிறு சலசலப்புகளை பூதாகரமாக காட்டி விவசாயிகள் பலமிழந்துவிட்டதாக பேசுகிறது.
கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
எஜமானர்கள் சுட்டிக் காட்டும் நபர்களைப் பாய்ந்து தாக்கும் விசுவாசமான ஏவல் நாயைப் போல, தனக்குப் படியளக்கும் அம்பானி, அதானிக்காக விவசாயிகளின் கழுத்தைக் கவ்வ, மோடி அரசுக்கு இந்த ”வன்முறை” ஒரு பொன்னான வாய்ப்பு.
டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு...
டெல்லிக்குள் டிராக்டர் பேரணிக்காக நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியிருக்கிறது டில்லி போலீசு. விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியிருக்கிறது.
தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?
நிவர், புரெவி புயல்கள், பருவம் தப்பிப் பெய்த ஜனவரி மாத கனமழை ஆகியவை காரணமாக டெல்டா உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கையில், தமிழகம் வெற்றி நடைபோடுவதாகத் தினந்தோறும் விளம்பரங்களை வெளியிட்டு சுயதம்பட்டம் அடித்து வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி.
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
ஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம்.
அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்து நிற்பது அம்பலமான பல்வேறு விவகாரங்களில் இதுவும் ஒன்று!
சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !
புதிய வேளாண் சட்டங்களால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் பயனடையப் போவதில்லை. அபாயகரமான அந்நிய வேளாண் தொழிற்கழகங்களும் பயனடையக் காத்திருக்கின்றன.
கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்
செயல்திறன் முழுமையாக நிரூபிக்கப்படாத கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் படிப்படியாகப் பொதுமக்களுக்கும் செலுத்திப் பரிசோதிக்க அளிக்கப்பட்டிருக்கும் அனுமதி சட்டவிரோதமானது மட்டுமல்ல, மருத்துவ நெறிமுறைகளுக்கும் எதிரானது.