privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.
ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்.
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?
காடுவெட்டிகுரு முதல் குச்சு கொளுத்தி ராமதாஸ் வரை அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களையும் பதற வைக்கும் ஒரு நெருப்புக் கவிதை!
ராமதாசிடம் திருமா சரணடைவது ஏன்? சாதிய பிழைப்புவாதத்தைப் புனிதப்படுத்திய அடையாள அரசியல்! சாதி சமத்துவம் என்பது சாத்தியமா? சாதியைப் பாதுகாக்கும் அரசு, தீண்டாமையை ஒழிக்குமா?
கருத்த பனையின் உரித்த தோலென, அறுத்த முலையுடன் கிடந்த ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும், இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்
கேட்பவர்கள் பாதிரியார்களாகவும் கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால் கேள்வி நியாயம்தான் ---- கேட்பவர்கள் அறிவாளிகள். கேட்கப்படுவதோ - பாவம் நாட்காட்டி!
இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் - என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது.
ஒருமுறை அங்கு எதுவும் நடக்கவில்லை என்று நன்கு அறிந்தே நான் உள் செல்ல, கதவு மெத்தொலியுடன் சாத்திக் கொண்டது. பாய் விரிப்புகள், இருக்கைகள் மற்றும் கற்கள் மேலும் கொஞ்சம் புத்தகங்கள் கொண்ட மற்றுமொரு தேவாலயம்;
தரும்புரி தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அடிக்கடி பலவிதமான கூட்டங்கள் பலவிதமான இயக்க சேர்க்கைகளுடன் நடக்கின்றன. உண்மையில் இந்தக் கூட்டங்களில் குறிப்பாக வன்னிய சாதிவெறி, பா.ம.க, ராமதாசை மறந்தும் கூட குறிப்பிடுவதில்லை.
மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட.

வடு!

11
தேனி ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த ரத்தினபாண்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.
நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம்.
பிச்சைக்காரப் பாட்டியின் லட்சியம் ஒன்றே ஒன்று தான். ‘சாக வேண்டும்; சீக்கிரமாகச் செத்து விட வேண்டும். தனது சாவுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் வர வேண்டும்; எல்லோரும் அழ வேண்டும். தனது சாவு கவுரவமாய் இருக்க வேண்டும்’
காத்திருந்த காற்றின் சுகம் சொல் ஒன்றால் விளங்கிடுமா? கூட்டுழைப்பின் விளைசுகம்தான்-பிறர் கூறக்கேட்டு உணர்ந்திடுமா! தானே ஒருவன் அனுபவிக்காமல் மனம் புரட்சியைத்தான் துய்த்திடுமா!

அண்மை பதிவுகள்