Friday, June 5, 2026
என் மாணவர்கள் கிராமத்திலிருந்து வருபவர்கள். அங்கே காதல் தப்புத்தான். காதல் சரி என்றால் சாதி தப்பு. சாதி சரி என்றால் காதல் தப்பு. இதுதானே ரகசியம். காதலுக்கும் சாதிக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அந்தப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு இப்போதும் ‘காதலிக்கலாமா?’ என்பதே ஐயமாக இருக்கிறது. ‘காதலிக்கலாம்’ என்பதே என் பதில்.
புரட்சிகர, முற்போக்கு அரசியல், பண்பாட்டிற்கான முதல் கலைக்களஞ்சிய இணையதளமாக, பெருவிழா.காம் இருக்கும் என்று கருதுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்விணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.
பல்கலைக்கழகத்தில் சாதிவெறி - நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு | தோழர் மருது https://youtu.be/7PgpN4-2Rks காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
“அடிக்கடி ஏற்பட்ட கனவுகளால் தூக்கமின்மை ஏற்பட்டது. பயத்தால் தூங்க முடியாமல், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஜனவரி 8 அன்று, திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்து மருந்து கொடுத்தோம். ஆனால் ஜனவரி 10-ஆம் தேதியன்று உயிரிழந்துவிட்டாள்”
(தோழர்கள் ராதிகா-ரவி ஆகியோரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், தோழர்கள், கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் முக்கியத்துவம் கருதி சாரமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.) வரவேற்புரை: தோழர் டங்ஸ்டன் பிரகாஷ், மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர். இப்புரட்சிகர மண விழாவின் அழைப்பிதழ், ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் புகைப்படங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. “இப்படி ஓர் அழைப்பிதழை அச்சடிக்க முடியுமா? எங்கள்...
இதை வாசித்த பிறகு நாமும் அதே மனிதராக இருக்க முடியாது. ஏனெனில் இது கண்ணீர் கேட்கவில்லை, கேள்விகள் தான் கேட்கிறது
அழைப்பிதழில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் புகைப்படங்களை பார்த்த பலர் கண்ணீர் வடித்தனர். தாமாக முன்வந்து இம்மணவிழாவில் பங்கேற்றனர். கவினின் புகைப்படத்தைக் கண்டு நெகிழ்ந்த பெண்கள் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வுடன் மணவிழாவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இஸ்லாமியரான முகமது அரமானும் இந்து பெண் காஜல் சைனியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் சகோதரர்கள் இருவரையும் மண்வெட்டியைக் கொண்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
எந்த ஒரு முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் மாணவியை இழிவுபடுத்தி, தவறே இல்லாத ஒரு விசயத்திற்கு மன்னிப்பு கேட்க நிர்ப்பந்தித்து, மாணவியையும் அவரது தாயாரையும் அலைக்கழித்த கல்லூரி நிர்வாகமே முதல் குற்றவாளி!
சிவகாசி மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகமே குற்றவாளி! | தோழர் அறிவு https://youtu.be/90t7sdU-ius சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. போன்ற சங்கப் பரிவாரங்கள், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் இருக்கின்றன. நடைபெறும் ஆணவப் படுகொலைகளுக்கு பெரும்பாலும் இந்தக் கும்பல் காரணமாக இருக்கிறது. இந்த சங்கப்பரிவாரக் கும்பலைத் தடை செய்வது ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் குறிப்பான அம்சமாகும்.
விநாயகர் சதுர்த்தி நாளில், விநாயக் என்ற பெயரில் அஜித் நடிக்க, விநாயகர் ஊர்வலங்களுக்கு பிரபலமான மும்பையில் நடக்கும் மங்காத்தாவின் கதை என்ன? பணம், பணம், பணம். காதல், நட்பு, பாசம், குடும்பம் எல்லாவற்றையும் விட பணம். எந்த வழியிலாவது, என்ன செய்தாவது, எப்படியாவது பணம். ஏன்?
"வேலைக்குப் போனால் தான் வீட்டில் சாப்பாடு சாப்பிட முடியும். நான் சாதி மாறி திருமணம் செய்ததால் தொடர்ந்து பிரச்னை நீடிக்கிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை" என்கிறார் பிரேம்குமார்.

அண்மை பதிவுகள்