Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 116

பிக் பாஸும் பவா செல்லத்துரையும்

0
பவா செல்லத்துரை

க்களின் உணர்ச்சியை சுரண்டிப் பணமாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற விஜய் டிவியில் “பிக் பாஸ் சீசன் 7” அக்டோபர் 1-ஆம் தேதியன்று தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி என்று கூறப்படும் பவா செல்லத்துரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதல் தற்போது அவராக வெளியேறியுள்ளது வரை பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது.

ஒரு இலக்கியவாதி, ஒரு எழுத்தாளர் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவறு என்ற கருத்துக்களை சிலர் தெரிவித்து வந்தனர். இன்னும் சிலர் பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்று முற்போக்கு கருத்துக்களை பேசினால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று பேசினர்.

பவா‌ செல்லத்துரை சி.பி.எம் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) முன்னாள் உறுப்பினர் ஆவார். அவரது பிக் பாஸ் நுழைவு குறித்து தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினரான எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனிடம் கேட்கப்பட்ட போது, “அது அவரது தனிப்பட்ட விருப்பம்” என்று கருத்துக் கூறியுள்ளார்.


படிக்க : சிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் ?


“பாவா செல்லத்துரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கதைகளை சொல்லி சில புத்தகங்களை விற்றுவிட்டுப் போகட்டும். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று கூறுவோரும் உண்டு.

ஒரு இலக்கியவாதி பிக் பாஸில் கலந்து கொள்வதை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள ‘இலக்கியவாதிகள்’ குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக குட்டி முதலாளித்துவ இலக்கியவாதிகள் கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளின் மூலம் சமூகத்திற்காக ஏதாவது செய்து கொண்டேயிருப்பதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தாங்கள் செய்யும் அற்ப விஷயங்களை எல்லாம் ஊதிப் பெரிதாக்கி பூதாகரமாக விளம்பரம் செய்து கொள்கின்றனர். தங்களின் படைப்புகளை தனிப்பட்ட திறனின் வெளிப்பாடாகவும் தங்களின் ஆளுமையின் வெளிப்பாடாகவும் கருதுகின்றனர்.

ஆரம்பத்தில், சமூகத்தின் எதார்த்தத்தையும் மக்களின் அவலங்களையும் தங்களது கலைப்படைப்பின் மூலம் வெளிப்படுத்தி எழுத்தாளர்களாக கலைஞர்களாக அறியப்பட்ட இவர்கள், அங்கீகாரம் கிடைத்த பின்பு மண்டை வீங்கிகளாக மாறிவிடுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால் தங்களை சமூகத்திற்கு மேலானவர்களாக மக்களுக்கு மேலான ‘அறிவாளி’களாகக் கருதிக் கொள்கின்றனர்.

பவா செல்லத்துரை

மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பது தான் கலை – இலக்கியம் என்பதை மறுத்து தங்களின் கனமான மண்டையிலிருந்து உதிப்பதுதான் இலக்கியம் என்று கர்வம் கொள்ளத் தொடங்கி விடுகின்றனர்.

இதனால் தான் குட்டி முதலாளித்துவ கலைஞர்கள் இலக்கியவாதிகள் உள்ளிட்ட அறிவுத்துறையினர் திசை மாறிப் போகின்றனர்.

“முழு நேரமாக மக்கள் குறித்தும் சமூகம் குறித்தும் சிந்திக்கத் தேவையில்லை; தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தினாலே போதுமானது” என்ற போதனை ஆளும் வர்க்கத்தால் பல்வேறு வழிகளில் தொடர்ந்து குட்டி முதலாளித்துவ பிரிவினரிடையே ஊட்டப்பட்டு வருகிறது.

நேற்று வரை குட்டி முதலாளியாக இருந்த பவா செல்லத்துரை இன்று கார்ப்பரேட் வசம் ஈர்க்கப்பட்டு பிக் பாஸ்க்குச் சென்று விட்டார். பவாவைப் போல தங்களின் தனித்துவத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் பலரை சமூகத்திற்கானவர்களாக காட்டுவதை தமுஎகச செய்து வருகிறது.


படிக்க : பிக்பாஸ் ஜூலி முதல் செங்கல்பட்டு கலா வரை – விதவிதமாக குற்றச் செய்திகள் !


பவா செல்லத்துரை மட்டுமல்ல தனித்திறன் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் இவ்வாறு ஆளும் வர்க்கத்தோடு கலந்து விடுவதென்பது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. சிலர் திசை மாறிய பின்பும் ஆவேசமாக பேசுகின்றனர். மற்றும் சிலரோ முற்றுமுழுதாகக் கரைந்து போய் விடுகின்றனர். இது தவிர்க்க முடியாதது.

ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பிய தெருக்குரல் அறிவு தற்போது கார்ப்பரேட்டுகளால் உறிஞ்சப்பட்டுள்ளார். சதுரங்க ஆட்டக்காரர் பிரக்ஞானந்தாவின்‌ தனித்திறன் வெளிப்பட்டதும் அவரை அபகரித்துக் கொள்ள ஆளும் வர்க்கம் எல்லாவற்றையும் செய்தது. இப்படிப் பல எடுத்துக்காட்டுகளை கூறிக் கொண்டே போகலாம்.

சரி; அதெல்லாம் இருக்கட்டும். பிக் பாஸில் கலந்து கொண்டு ஒருவர் முற்போக்குக் கருத்துக்களைப் பேசக் கூடாதா என்று சிலர் கேட்கலாம்.

அதற்கான பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பகுப்பாய்வு செய்தால் நமக்குக் கிடைக்கும்.

“பிக் பாஸ்”

1998-ஆம் ஆண்டில் “தி டுரூமன் ஷோ” (The Truman Show) என்ற திரைப்படம் வெளியானது. ஒரு தனிமனிதரின் வாழ்க்கையை குழந்தைப் பருவத்தில் இருந்து காட்டுவது போன்றதான ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தப்படுவதாக அத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இப்படியெல்லாம் வருங்காலத்தில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று சிலர் ஆச்சரியப்பட்டனர். மற்றும் சிலர் இத்திரைப்படம் அதீத கற்பனையாக உள்ளதென விமர்சனம் செய்தனர்.

ஆனால் 2000-ஆம் ஆண்டிலேயே “பிக் பிரதர்” (Big Brother) என்ற தனிநபர் வாழ்க்கையை எட்டிப் பார்க்கும் வகையிலான ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டது. தற்போது வரை 25 சீசன்கள் வெளியாகி இன்னும் முடிவு பெறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. The Real Housewives (2006), Keeping Up with the Kardashians (2007) என அடுத்தடுத்து இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்கள் உலகம் முழுவதும் நடக்கத் தொடங்கின.

பிக் பிரதரின் இந்திய வடிவமாகத் தான் பிக் பாஸ் 2006-ஆம் ஆண்டு இந்தி மொழியில் நடத்தப்பட்டது. பிக் பாஸ் தமிழ் 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பார்வையாளர்களை ஒரு வகையான பார்வை மோகத்திற்கு (Voyeurism) ஆட்படுத்துகிறது. அடுத்தவரின் அந்தரங்க உரிமையை மதிக்காமல் அவரது அறையை எட்டிப் பார்ப்பதைப் போன்றதான ஒரு கேடுகெட்ட கலாச்சாரத்திற்கு பழக்கப்படுத்தி சமூகத்தையே சீரழிக்கிறது.

மேலும், “உடன் இருப்பவர்களை ஒழித்துக்கட்டினால் தான் முன்னேற முடியும்” என்பதை பல்வேறு போட்டிகளின் மூலமாகவும் டாஸ்க்களின் மூலமாகவும் கற்றுக் கொடுக்கிறது. அது கற்றுக் கொடுப்பது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல; பார்வையாளர்களுக்கும் தான். ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர், தானும் அந்த பிக் பாஸ் வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கப்படுகிறார்.

அதனால் தான் இப்படிப்பட்ட கேடுகெட்ட நிகழ்ச்சியை நாம் புறக்கணிக்க வேண்டியுள்ளது. தங்களை முற்போக்காளர்கள் என்று சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அதைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியுள்ளது. அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதென்பது அந்நிகழ்ச்சிக்கு ஒருவகையான முற்போக்கு முகத்தை அளித்து கூடுதல் பிரமோஷனாகத் தான் அமைகிறது.


படிக்க : பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா ?


‘முற்போக்காளர்’ பவா செல்லத்துரை பிக் பாஸில் கல்வி குறித்துக் கூறிய அடிமுட்டாள்தனமான கருத்துகளுக்காகவும், அனைத்து இடங்களிலும் இந்துத்துவத்திற்கு முட்டுக்கொடுக்கும் புளிச்சமாவு ஜெயமோகனின் கதைகளை புரமோட் செய்வதற்காகவும் மட்டும் அவர் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதல்ல‌ நாம் கூற வருவது.

பவா செல்லத்துரையும் அவர்களைப் போன்றவர்களும் தங்களை சமூகத்திற்கும் மேலானவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். தங்களின் சுய விளம்பரத்திற்காக, சமூக சீரழிவை ஏற்படுத்துவதும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக நடத்தப்படுவதுமான பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த சமூகப் பொறுப்பற்ற பிழைப்புவாத நடவடிக்கையைத் தான் நாம் கண்டிக்கின்றோம்.


பொம்மி



பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்போம்! | STAND WITH PALASTINE PEOPLE!

10.09.2023

பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்போம்!

STAND WITH PALASTINE PEOPLE!

மக்கள் அதிகாரம் அறிக்கை

டந்த செப்டம்பர் மாதம் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான அல்-அக்சா மசூதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தவர். 500-க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டனர்.

காசா முனை பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் சார்பில் எதிர்வினையாக சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் அழிக்கும் வேலையில் இஸ்ரேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இறங்கியுள்ளன.

1947-க்கு முன்பு இஸ்ரேல் என்ற ஒரு நாடே கிடையாது. பாலஸ்தீனத்தை படிப்படியாக வந்து ஆக்கிரமித்துக் கொண்டது இஸ்ரேல். அரபுலக நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நாடே இஸ்ரேல். பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த மக்கள் மீது கடந்த 75 ஆண்டுகளாக தொடர் போரை நடத்தியது இஸ்ரேல். அதன் விளைவாக, பாலஸ்தீன மக்களை ஒரு பகுதிக்குள் அடைத்து கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது இஸ்ரேல்.

படிக்க : பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்; போரை உடனே நிறுத்து!

இஸ்ரேலின் தொடர் போர்த் தாக்குதல்களின் காரணமாக இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்போதெல்லாம் வாய் திறக்காத மேற்குலக நாடுகள் இப்பொழுது இஸ்ரேலை காப்பதற்காக வருகின்றன.

அமெரிக்கா தனது போர்க் கப்பலையும் படைகளையும் இஸ்ரேலுக்கு அனுப்புகிறது. இங்கிலாந்து நாடாளுமன்றம் இஸ்ரேல் தேசிய கொடியின் வண்ணத்தில் மிளிர்கிறது. ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக பாலஸ்தீனம் அழிக்கப்படுவதற்காக காத்திருக்கிறது என்பதே உண்மை.

பாசிஸ்டுகளின் அடக்குமுறைகளும் சர்வாதிகார நடவடிக்கைகளும் துப்பாக்கி குண்டுகளும் பாஸ்பரஸ் துகள்களும் ஒருபோதும் அடக்கி விடாது என்பதைத்தான் நீடித்துவரும் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்ற உண்மையாகும்.

இது நாள் வரை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இல்லாமல் இருந்த இந்திய அரசு, தற்பொழுது இஸ்ரேலுக்கு பகிரங்கமாக தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறது. பாசிச மோடி தலைமையிலான ஆட்சி பாசிஸ்ட் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வித ஆச்சரியமும் இல்லை.

பாசிச மோடி இஸ்ரேலை ஆதரிக்கிறார் என்றால், இந்த நாட்டின் மக்களாகிய நாம் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கு குரல் கொடுப்பதும் தோள் கொடுப்பதும் முதல் தேவை. பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எப்போதும் உடன் இருப்போம் என்பதை மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை,
9962366321

அருந்ததியர் மக்களை தாக்கிய போலீசுத்துறை! அடக்குமுறையை கண்டிப்போம்! | வீடியோ

1942-ல் இருந்து இன்று வரை தங்களுக்கு வீட்டுமனை பட்ட வழங்க கோரி போராடி வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோயில் பகுதியின் அருந்ததியர் மக்கள்.

கடந்த அக்டோபர் 2, 2023 அன்று கருப்புக்கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசுத்துறை, போராடிய அருந்ததியர் மக்கள் மீது தாக்குதல் நடத்தி, பொய் வழக்கில் கைது செய்துள்ளது.

 

அருந்ததியர் மக்களின் போராட்டத்தை ஒடுக்கி பொய்வழக்கு போட்ட போலீசுத்துறையின் மீது தனது கண்டனத்தை இக்காணொலியில் பதிவு செய்து, அம்மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகளை அழைக்கிறார், நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் தோழர் கின்சன்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்; போரை உடனே நிறுத்து!

டந்த சனிக்கிழமை (07.10.2023) இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் குழுவினர் 5000 ராக்கெட்டுகளை ஏவினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தரை-கடல்-வான் வழியாக மிருகத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. தெருக்கள் அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளன. காசாவின் முக்கிய வழிப்பாட்டு தளமான அல்-அமீன் முகமது மசூதியை குறிவைத்து தாக்கியுள்ளனர். இதுவரை, 1200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

காசாவில் சுமார் 23 லட்சம் பேர் வாழ்கின்றனர். பாலஸ்தீனியர்களில் 1,23,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், 74 ஆயிரம் பேர் பள்ளிகளில் தங்கியுள்ளனர் என ஐ.நா கூறியுள்ளது. ஜபாலியா என்ற முகாமில் தங்கியிருந்தவர்கள்  மீது இஸ்ரேல் படை தாக்குதல்  நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

படிக்க : ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!

இஸ்ரேல் ஏவுகணை, வெண் பாஸ்பரஸ் விஷப்புகை என பன்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. காசாவுக்கு உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை துண்டித்துள்ளது. காசா எல்லை முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு  “நாம் போரில் இருக்கிறோம், எதிரிகள் இதுவரை கண்டிராத விலையை கொடுப்பார்கள்” என அறிவித்துள்ளார்.

“தங்களது மக்களின் கண்ணியம், சுதந்திரத்தைக் காக்கத் தேவையான அனைத்தையும் செய்ய தயார்” என்று ஹமாஸ் அரசியல் துணை பிரிவு தலைவர் சலே அல்-அரெளரி தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் அழிக்கும் வேலையில் இஸ்ரேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இறங்கியுள்ளன.

1947-இல் ஐ.நா சபை பாலஸ்தீனத்தை அரபு நாடு, யூத நாடு என பிரித்தது. அதன்பின் யூதர்கள் இஸ்ரேல் என்று அறிவித்து கொண்டனர். பாலஸ்தீனத்தை படிப்படியாக ஆக்கிரமித்துக் கொண்டது இஸ்ரேல். அரபுலக நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நாடே இஸ்ரேல்.

75 ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த மக்கள் மீது தொடர் போரை நடத்தி வந்துள்ளது. அமெரிக்கா ஏகாதிபத்தியம் சரிந்துவரும் சுழலில் அரபு நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பாலஸ்தீன மக்கள் மீது போரை நடத்த கைக்கூர்த்துள்ளது.

இதுநாள்வரை இஸ்ரேல் பாசிச நடவடிக்கையை வெடிக்கைப்பார்த்த இந்திய பிரதமர் மோடி “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பேரதிர்ச்சி அளிக்கிறது” என கூறுவதன் மூலம் பாசிஸ்ட் நெதன்யாகுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, செக் குடியரசு, உக்ரைன், பிரான்ஸ், ஸ்பெயின் இஸ்ரேலின் மிருகத்தனமன தாக்குதலுக்கு ஆதரவாளிப்பதாகவும், ஹமாஸ் நடவடிக்கை  “பயங்கரவாத தாக்குதல்” எனவும்  அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் பைடன் பேசும் போது “இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக நிர்வாக உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்”. அமெரிக்கா இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்கள், விமானம், ராணூவ வீரர்கள், போர்கப்பல்களையும் அனுப்பியுள்ளது.

கத்தார், ஈரான், சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகள் பாலஸ்தீன மக்களுடன் நிற்பதாக அறிவித்துள்ளன. இந்நாடுகள் அனைத்தும் இந்த ஹமாஸ் தாக்குதலுக்கு காரணமாக இருப்பது இஸ்ரேலின் அடக்குமுறை நடவடிக்கை தான் என கூறியுள்ளன.

படிக்க : சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான சோதனைகளைக் கண்டிப்போம்! – CDRO அறிக்கை

உழைக்கும் மக்கள் யாரும் போரை விரும்புவதில்லை. இதில் பலியாவது மக்களே. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போதும் அதன் தொடர்ச்சியாகவே தாக்குதலை தொடுத்துள்ளது. எனவே, குற்றவாளி இஸ்ரேல்தான்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போர்வெறி தான் இன்று இத்தனை மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதற்கு காரணம். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரை உடனே நிறுத்த உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். #பாலஸ்தீன் மக்களின் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டியுள்ளது.

♦ இந்திய அரசே இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதலுக்கு துணைநிற்காதே!

♦ அமெரிக்கா ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டும் போட்டியில் பாலஸ்தீன மக்கள் பலியிடுவதை அம்பலப்படுத்துவோம்!

♦ அமெரிக்கா போன்ற இஸ்ரேல் ஆதரவு கொடுக்கும் நாடுகளுக்கு எதிராக அந்தந்த நாட்டு மக்கள் குரலெழுப்ப வேண்டும்!

♦ சர்வதேச உழைக்கும் மக்கள் யாவரும் பாலஸ்தீன மக்களுடைய விடுதலை போராட்டத்திற்கு துணைநிற்பதே கடமை!

♦ இஸ்ரேலின் கொலைவெறி போரை உடனே நிறுத்து என முழங்குவோம்!

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
94889 02202.

ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!

ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடை வெடிவிபத்து

ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில்
24 இளம் தொழிலாளர்கள் பலி!

சூர் அருகே கர்நாடக மாநில எல்லைக்குட்பட்ட அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 இளம் கூலித் தொழிலாளர்கள் தீயில் கருகி பலியாகினர். இன்னும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இந்த துயரம் நெஞ்சை அழுத்திக்கொண்டிருக்கும் சூழலில் அரியலூரில் நடந்த பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 10 பேர் இறந்துள்ளதாக தொலைகாட்சியில் செய்தி வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் பகுதியில் இருந்து மாநில எல்லையான கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை நிரந்தர பட்டாசு கடைகள் மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதிகளில் 600 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

அத்திப்பள்ளி டோல்கேட் அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. சிவகாசியில் இருந்து 3 லாரிகளில் கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கரவாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் தீக்கிரையாகிவிட்டன.

படிக்க : ஆருத்ரா மோடி அண்ணாமலைக்கு செக் ! | தோழர் மருது

விபத்தில் பலியானவர்களில் 8 பேர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள அம்மாபேட்டை என்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் திருவண்ணாமாலை, கள்ளக்குறிச்சி பகுதியைச் சார்ந்தவர்கள். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள். இதில் 16 வயது சிறுவனும் அடக்கம். இன்னொருவர் திருமணமாகி 15 நாட்களே ஆன இளைஞர். மருத்துவமனையில் இந்த இளைஞரின் மனைவியின் கதறல் அங்கு கூடியிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடை வெடிவிபத்து

விபத்து ஏற்பட்ட பட்டாசு கடையில் வெளியேறுவதற்கு முன்பக்க பாதை மட்டும்தான் இருந்துள்ளது. ஆபத்து சமயங்களில் வெளியேறுவதற்கான பாதை கிடையாது. இதுதான் உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது. பட்டாசு கடைகள் என்றாலே அதில் ஆபத்துக்கள் அதிகம்தான். அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா என்பதை அதற்குரிய துறை அதிகாரிகள்தான் ஆய்வு செய்து முறைப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் எங்கேயும் முறையாக விதிமுறைகள் கையாளப்படுவதில்லை. விபத்துகள் ஏற்படும் சமயங்களில் போக்குக்கு ஆய்வு செய்து விட்டு, பிறகு பட்டாசு ஆலை, கடை முதலாளிகளின் இலஞ்சத்திற்கு வேலை செய்வது என்பதுதான் அதிகாரிகளின் வழக்கமாக உள்ளது. கர்நாடக செய்தி ஊடகங்களில் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அதிகாரிகள்தான் இத்தகைய விபத்துக்களில் முதன்மைக் குற்றவாளிகள். யார் இவர்களை தண்டிப்பது?

அரியலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து

இதனால்தான் பட்டாசு விபத்துக்கள் தொடர்ச்சியாக நடப்பதும், தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக மரணமடைவதும் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, அரியலூர் |அத்திப்பள்ளி என பட்டாசு கடை விபத்துகளில் பல தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். அரசாங்கமும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதைத் தாண்டி விபத்துக்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முயற்சி எடுப்பதில்லை.

குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளிகளின் தீவிர சுரண்டலுக்கான தனியார்மயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான செலவீனங்கள் பன்மடங்கு  உயர்ந்துவிட்டன. அதே சமயம் ஏழ்மை நிலை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் கூலித் தொழிலாளர் குடும்பங்களின் வறுமை நிலையும் அதிகரிக்கிறது. இதனால் கல்லூரி படிக்கும்பொழுதே வேலைக்கு செல்வது என்பதும் அதிகரித்து வருகிறது.

வேலை செய்யும் இடங்களிலும் பணிப்பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் என்பதெல்லாம் இன்று கனவாகி விட்டது. அப்படியெல்லாம் கேட்டால் வேலை பறிபோய்விடும் என்ற நிலைமைதான் உள்ளது. கிடைத்த வேலையை செய்வது அதாவது ஆபத்தான வேலைகளையும் வேறு வழியின்றி செய்வது என்ற நிர்ப்பந்தத்தை நோக்கி இந்த வறுமைச்சூழல் நெட்டித் தள்ளுகிறது. முதலாளிகளின் வரைமுறையற்ற சுரண்டலுக்கு இளம் தொழிலாளிகள் இரையாக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இத்தகைய படுகொலைகள் தொடர்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

படிக்க : சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான சோதனைகளைக் கண்டிப்போம்! – CDRO அறிக்கை

உண்மையில் உரிமைகளைப் பறிக்கும் தனியார்மயக் கொள்கைகள்தான் சமூகரீதியாக இப்பிரச்சினைக்கு ஊற்றுக்கண்ணாக உள்ளது. இந்த தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவது, அதற்கேற்ப சட்ட திட்டங்களை மாற்றுவது என்பதைத்தான் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாகவும், கவனமாகவும் செய்து வருகின்றன.

இன்னொரு பக்கம் முதலாளிகளின் இலாபவெறியும், அதிகாரிகள் இலஞ்சப் பேய்களாக இருப்பதும் மற்றும் அவர்களின் திமிர்த்தனமான அலட்சியமும் தொழிலாளர்களின் கொத்துக் கொத்தான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இங்கே தொழிலாளர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

மனு கொடுத்து இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்த அரசுக்கட்டமைப்பிற்கு வெளியேதான் உண்மையான தீர்வு உள்ளது. அதற்கான விழிப்புணர்வும், போராட்டமும் தேவையாக உள்ளது.


சு.பரசுராமன்,
பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 24/KRI
கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் மாவட்டங்கள்.
9788011784

ஆருத்ரா மோசடி: மோடி – அண்ணாமலைக்கு செக்! | தோழர் மருது

ருத்ரா மோடி வழக்கு தொடர்ந்து தமிழகத்தில் பேசுபொருளாக இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு அதன் சொத்துக்களை முடக்கிவிட்டது. தற்போது துபாயில் 500 ரூபாய் சொத்துக்கள் இருப்பதை கண்டுபித்துள்ளார்கள். அடுத்து இந்த வழக்கு எப்படிப்போக்கும்?

இதில் என்ன நடக்கும் என்பதை பற்றி முதலில் பேசுவோம்.. வழக்கம் போல ஒன்றிய அரசின் பாஜக கட்சி கொள்ளைகாரர்களின் கூடாரம் தான். பொய் பேசுபவர்கள் பாசிஸ்ட்டுகளின் கூடாரம் தான். எனவே கண்டிப்பாக அவர்கள் யாரையும் கைதுசெய்ய விடமாட்டார்கள்.

சென்னை பலகலைக்கழகத்தில் இருந்த கௌரி என்ற ஒரு துணைவேந்தர். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். ஆனால் ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார்.

இதேபோல, இங்கே ஊழல் செய்த பல முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு ஆளுநர் ரவியிடம் கையெழுத்து கேட்கிறார்கள். அவர் கையெழுத்திட மறுக்கிறார். இதுதான் தற்போது இருக்கிற சூழல்.

ஆருத்ரா வழக்கில், அண்ணாமலை, ஹரிஷ், அமர்பிரசாத் ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் இவர்களெல்லாம் இணைந்து மக்களிடமிருந்து சுமார் 2500 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான சோதனைகளைக் கண்டிப்போம்! – CDRO அறிக்கை

06/10/2023

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான
சோதனைகளைக் கண்டிப்போம்!

– ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO) வெளியிட்டுள்ள அறிக்கை

னநாயக உரிமைகள், கலாச்சார செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதற்காக உழைப்பவர்கள் ஆகியோர் மீது தேசியப் புலனாய்வு முகமை நடத்தியுள்ள சோதனையைக் கண்டிப்போம்! டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது போலீசார் நடத்திய சோதனைக்குக் கண்டனம் தெரிவிப்போம்!

அக்டோபர் 2-ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான அவரது போராட்டத்தையும் நினைவுகூரும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது, மக்கள் விரோத தேசிய புலனாய்வு முகமையானது (NIA) ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது. 2023 செப்டம்பர் மாதம் உத்தரபிரதேசத்திலும், மே 2023-இல் ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாட்டிலும் நடந்த சோதனையைத் தொடர்ந்து இப்போது இதேபோன்ற சோதனை நடந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஒரு மாவோயிஸ்ட் ஆதரவாளர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 65 முன்னணி ஜனநாயக உரிமை செயற்பாட்டாளர்கள் மீது ஆந்திர போலீசு 2020 நவம்பரில் பொய் வழக்குப் பதிவு செய்தது. அதிலிருந்து ஜனநாயக உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிறர் மீதான அரசால் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.

படிக்க : பூணூல் போட்டா பார்ப்பானா? | ஆளுநரை கிழித்த தோழர் மருது

எவ்வாறாயினும், அதன் பின்னர் தேசிய புலனாய்வு முகமையின் தலைமையிலான விசாரணைகளானது, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எவருக்கும் எதிராக எந்தவிதமான குற்றவியல் ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய ஊபா UAPA சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றமானது, குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும்சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.

இந்தத் தோல்விகளைப் பொருட்படுத்தாமல், விஜயவாடா, குண்டூர், திருப்பதி, நெல்லூர், ராஜமுந்திரி, அனந்தப்பூர், விசாகப்பட்டினம், கடப்பா, சிறீகாகுளம், பிரகாசம், தாடேபள்ளிகுடம், பல்நாடு, ஹைதராபாத் மற்றும் ஆந்திராவில் உள்ள நரசராவ்பேட்டை, தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் உள்ளிட்ட தெலுங்கு மொழி பேசும் இரு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தேசியப் புலனாய்வு முகமையானது சோதனை நடத்தியது.

வீட்டுச் சோதனைகளில், பொன்னுருவில் உள்ள முன்னணி மருத்துவரும், குண்டூர் மாவட்ட சிவில் உரிமைக் கமிட்டியின் தலைவருமான ராஜா ராவ், திருப்பதியில் பிரபல வழக்கறிஞரும் ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் (CDRO)  ஒருங்கிணைப்பாளருமான கிராந்தி சைதன்யா, ஹைதராபாத்தில் உள்ள வழக்கறிஞர் சுரேஷ், மக்களின் மரியாதைக்குரிய இதர அறிவுஜீவிகள் மற்றும் பிற செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் மக்களால் நன்கறியப்பட்டவர்கள்; சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலனுக்காக போராடுபவர்கள்; வாதிடுபவர்கள். மேலும் இவர்கள் வெளிப்படையான, சட்ட வெளிகளில் பணியாற்றுபவர்கள். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் இவர்களை இணைக்க முயற்சிப்பதென்பது உண்மையின் கேலிக்கூத்தாகும். இது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவும் தவறிய அரசாங்கத்தின் தோல்வியை மூடிமறைக்கும் முயற்சியே தவிர வேறில்லை.

அக்டோபர் 3-ஆம் தேதியன்று, நியூஸ்க்ளிக் (Newsclick) மற்றும் பிற ஊடக ஊழியர்களுடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர்ச்சியான சோதனைகள் டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டன. “ஊபா” சட்டத்தின் மிகக் கொடிய பயங்கரவாதப் பிரிவுகளான 13,16,17,18 மற்றும் 22C ஆகியவற்றின் கீழும், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 153-A (வெறுக்கத்தக்க பேச்சு) மற்றும் 120-B (சதி) ஆகியவற்றின் கீழும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் டெல்லி போலீசார் நடத்திய சோதனைகளில் நியூஸ்க்ளிக் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா, என்டிடிவியின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் அவுனிந்த்யோ சக்ரவர்த்தி, மூத்த பத்திரிகையாளர்கள் பரஞ்சோய் குஹா தாகுர்தா, ஊர்மிலேஷ், அபிசார் சர்மா, பாஷா சிங், சுபோத் வர்மா, அனுராதா ராமன், அதிதி நிகம், பிரஞ்சல், சுமேதா பால் மற்றும் முகுந்த் ஜா ஆகியோர் அடங்குவர். மேலும், நையாண்டி மற்றும் நகைச்சுவை நடிகரான சஞ்சய் ரஜௌரா, வரலாற்றாசிரியர் சோஹைல் ஹஷ்மி, எழுத்தாளர் கீதா ஹரிஹரன், டெல்லி அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த ரகுநந்தன் மற்றும் இலவச மென்பொருள் இயக்கத்தைச் சேர்ந்த கிரண் சந்திரா ஆகியோரின் சாதனங்களை போலீசார் சோதனை செய்து கைப்பற்றியுள்ளனர்.

மும்பையில் உள்ள “சப்ராங் இந்தியா” என்ற அறக்கட்டளை நிறுவனத்தைச் சேர்ந்த தீஸ்தா செதல்வாத் மற்றும் ஜாவீத் ஆனந்த் ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அவருடன் தங்கியிருந்த விருந்தினரின் சாதனத்தைக்கூட பறிமுதல் செய்தனர். சமீபத்திய தகவலின்படி, நியூஸ்க்ளிக் நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க : ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள NIA-யின் சோதனைகளைக் கண்டிப்போம்!

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நாட்டின் கூட்டாட்சி மற்றும் ஜனநாயக விருப்பார்வங்களை நிலைநாட்டுவதிலும் மத்திய அரசின் முழுத் தோல்வியும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வருவதால், அரசாங்கம் எந்த எதிர்ப்புக் குரலையும் அடக்கும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO) ஆழ்ந்த அக்கறையுடன் குறிப்பிடுகிறது.

மணிப்பூரில் கலவரத்தைத் தடுக்கவோ, அங்குள்ள கலவரக்காரர்களைக் கைது செய்யவோ மத்திய அரசு தவறியதை ஒரு பக்கம் பார்க்கிறோம். மறுபுறம், அதே அரசாங்கம் தமிழ்நாட்டின் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற அமைப்பின் ஊழியர்களுக்குச் சட்டப்பூர்வ உதவிகளை வழங்கும் வழக்கறிஞர்களுக்கு எதிராக தேசியப் புலனாய்வு முகமையைப் பயன்படுத்துகிறது. அல்லது ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் மாநில அரசுகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தொழில் நிறுவனங்களின் நில அபகரிப்பைத் தடுக்க முயற்சிக்கும், பழங்குடியினரை அவர்களது நிலத்திலிருந்து வெளியேற்றுவதை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தேசியப் புலனாய்வு முகமையைப் பயன்படுத்துகிறது. அல்லது மாணவர் செயற்பாட்டாளர்களும் உ.பி. மாநிலத்தின் பியுசில் (PUCL)  என்ற மனித உரிமைக்கான அமைப்பின் மையத் தலைவரும் பா.ஜ.க. ஆட்சியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதற்காக அவர்களுக்கு எதிராக தேசியப் புலனாய்வு முகமையைப் பயன்படுத்துகிறது. ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் தற்போது நடத்தப்பட்ட சோதனைகளும் டெல்லி மற்றும் பிற இடங்களில் பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மீதான சோதனைகளும் இத்தகைய ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

பாசிச ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களின் ஆதரவு அரசாங்கமானது, “கோடி மீடியா” (godi media – மோடியையும் பா.ஜ.க. ஆட்சியையும் ஆதரிக்கும் ஊதுகுழலாக உள்ள ஊடகங்கள் கோடி மீடியா என்றழைக்கப்படுகின்றன) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுப் பிரிவுகளைப் பயன்படுத்தி ஒரு மாற்று யதார்த்தத்தை உருவாக்குகிறது; அங்கு இந்த அரசாங்கமானது உலகில் எந்த அதிகாரத்தையும் கைப்பற்றக்கூடிய ஒரு அறிவுபூர்வமான, உறுதிப்பாடுமிக்க அரசாங்கமாக முன்னிறுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை, ஏனெனில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் மூலம், அவர்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் மோசமாக தோல்வியடைந்துள்ளதை நன்கறிந்துள்ளார்கள்.

இந்த வரலாற்றுத் தருணத்தில், நியூஸ்க்ளிக் போன்ற சுயேட்சையான ஊடகங்கள் அதன் குறை கூற முடியாத செய்தி அறிக்கைகளால் தனித்து நிற்கின்றன. கடவுளின் அருள் பெற்ற தற்போதைய ஆட்சிக்கு அதனை விழுங்குவதற்கு கடினமாக உள்ளது. நியூஸ்க்ளிக் மற்றும் பிரபீர் புர்கயஸ்தா மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் மையப் புலனாய்வுத்துறையின் வழக்குகள் இருந்தாலும், அதன் ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர்கள் பின்வாங்காமல், தங்கள் தொழில்சார் பொறுப்புகளை அச்சமின்றி நிறைவேற்றி வருகின்றனர்.

அதேபோல், ஜனநாயகவாதிகளும் இதர சமூகச் செயற்பாட்டாளர்களும் இந்த விரும்பத்தகாத உண்மைகளை பொதுமக்கள் முன்னே எழுப்பி வருகின்றனர். எனவே, ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO), இந்த சோதனைகள் மற்றும் விசாரணைகள் மூலம் வெளிப்படையான, ஜனநாயக, மக்கள் சார்பான செயல்பாடுகளை நக்சலைட்டுகள் என்றும், “தீவிரவாதிகள், தேசவிரோதிகள், அரசுக்கு எதிரானவர்கள்” என்றும் முத்திரை குத்துவதாகக் கருதுகிறது. ஊக்கமான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயகப் பாதுகாவலர்களின் குரல்களை நசுக்குவதற்கு மட்டுமின்றி, அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்கமும் தேசியப் புலனாய்வு முகமையும் (NIA) இந்த முத்திரைகளை உருவாக்குகின்றன என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO) உறுதியாக நம்புகிறது.

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ((SVP NPA) 73வது குழுவில் தேர்ச்சிபெற்றவர்களின் வழியனுப்பு விழா அணிவகுப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆற்றிய உரையில் அரசின் இந்த அணுகுமுறை அப்பட்டமாக வெளிப்பட்டது. அவரது உரையில், சிவில் சமூகத்தை “போரின் புதிய எல்லைகள்” அல்லது “நான்காம் தலைமுறை போர்முறை” என்று அவர் குறிப்பிட்டபோது, அரசாங்கம் என்ன செய்ய விரும்புகிறது என்ற நோக்கத்தை தோவல் தெளிவாக விளக்கினார். எனவே, பாசிச ஆட்சியானது, நமது நாட்டையும் இயற்கை மூலவளங்களையும் மக்களையும் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்ளைக்காகத் திறந்துவிடும் நோக்கத்திற்கு எதிரான, இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு எதிரான எந்த விமர்சனத்தையும், எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதைத் தங்களது பேச்சாலும், செயலாலும் தெளிவாகத் உணர்த்தியுள்ளது.

படிக்க : செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!

ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO) இந்தச் சூனிய வேட்டையையும் விசாரணையையும் தடுத்து நிறுத்தக் கோருகிறது. ஜனநாயகத்தை விரும்பும் குடிமக்கள் அனைவரும் முன்வருவதும், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புவதும் அவர்களது பொறுப்புமிக்கக் கடமை என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு CDRO கருதுகிறது, இல்லையெனில், சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சியானது மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும்.

ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பினது (CDRO) கோரிக்கைகள்:

சமூகச் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தேசியப் புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க வேண்டும். பிரபீர் புர்கயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். போலீசுத் துறையும் தேசியப் புலனாய்வு முகமையும், நீதிமன்றத்திலும் நாட்டின் குடிமக்களின் முன்னும் உண்மையை வெளிக்கொணரும் தங்கள் கடமைகளைச் செய்வதிலிருந்து வழக்கறிஞர்களையும் பத்திரிகையாளர்களையும் தடுக்கக் கூடாது. கூட்டாட்சிக்கு எதிரான, மக்களுக்கு விரோதமான தேசியப் புலனாய்வு முகமை உடனடியாக கலைக்கப்பட வேண்டும். அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையிலான செயற்பாடுகளை கிரிமினல்மயமாக்குவதையும், இவற்றை தேசவிரோதக் குற்றச் செயலாக்குவதையும் உள்துறை அமைச்சகம் நிறுத்த வேண்டும்.

ஆசிஷ் குப்தா,
தபஸ் சக்ரவர்த்தி,
கிராந்தி சைதன்யா.
(ஒருங்கிணைப்பாளர்கள்)
 ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO)

ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் (CDRO) இணைந்துள்ள உறுப்பு அமைப்புகள்:

ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம் (AFDR, பஞ்சாப்); ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம் (AFDR, ஹரியானா), ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கம் (APDR, மேற்கு வங்காளம்); அசன்சால் சிவில் உரிமைகள் சங்கம் (மேற்கு வங்காளம்); பந்தி முக்தி கமிட்டி (மேற்கு வங்கம்); சிவில் உரிமைக் கமிட்டி (ஆந்திரப் பிரதேசம்); சிவில் உரிமைக் கமிட்டி (தெலுங்கானா); ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டி (CPDR, மகாராஷ்டிரா); ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டி (CPDR, தமிழ்நாடு); மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு (மணிப்பூர்); மனாப் அதிகார் சங்க்ராம் சமிதி (அஸ்ஸாம்); மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம்; மனித உரிமைகளுக்கான மக்கள் கமிட்டி (ஜம்மு-காஷ்மீர்); மக்கள் ஜனநாயக அரங்கம் (கர்நாடகா); ஜனநாயக உரிமைகளுக்கான ஜார்கண்ட் கவுன்சில் (ஜார்கண்ட்); ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (டெல்லி); சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (ஹரியானா), மணிப்பூர் அமைதிக்கும் ஜனநாயகத்துக்குமான இயக்கம் (டெல்லி), ஜனகீய மனுஷ்யவாகஷா பிரஸ்தானம் (மக்களின் மனித உரிமைக்கான இயக்கம், கேரளா).

ஆங்கில மூலம்: countercurrents

பூணூல் போட்டா பார்ப்பானா? | ஆளுநரை கிழித்த தோழர் மருது

ஆர்.என்.ரவி பூணூல் போடுகிறார் அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். எல்லோரும் பூணூல் போட்டுகொள்ளலாம் என்று சொல்லவறாரா? இல்லை எல்லோரும் எப்போதுவேண்டுமானாலும் பார்ப்பனர்களாக ஆகலாம் என்று சொல்லவருகிறாரா? பூணூல் போட்ட உடனேயே பட்டியலின மக்களை SCயில் இருந்து OC-க்கு மாற்றி விடுவீர்களா?

மோடி அரசின் தோல்விகளை நாம் பேசக்கூடாது என்பதற்காக, விஜயலட்சுமி சீமான் என்று பேசவைத்தார்கள், அது கீழ் இறங்கியது, இன்னொரு பிரச்சினையை கிளப்பிவிடுகிறார்கள். அண்ணாமலையை பற்றி பேசுகிறார்கள், அண்ணாமலை பாதை யாத்திரை போனால் என்ன? பாடை யாத்திரை போனால் தமிழ்நாட்டிற்கு என்ன? தமிழ்நாட்டிற்கு அண்ணாமலையும் கேடு ஆர்.எஸ்.எஸ் – பாஜகவும் கேடு.

காணொலியை பாருங்கள்!! பகிருங்கள்!!

ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள NIA-யின் சோதனைகளைக் கண்டிப்போம்!

06/10/2023

கார்ப்பரேட் கொள்ளைக்கான போரைக் குற்றம்சாட்டும்
ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக
ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள
தேசியப் புலனாய்வு முகமை(NIA)யின் சோதனைகளைக் கண்டிப்போம்!

பத்திரிகை செய்தி

அக்டோபர் 2, 2023 அன்று, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள பல்வேறு ஜனநாயக மற்றும் மக்களைச் சார்ந்த சமூக செயல்பாட்டாளர்களுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency – NIA என்ஐஏ) சோதனை நடத்தியுள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO – சிடிஆர்ஓ), ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டி (APCLC – ஏபிசிஎல்சி), சைதன்ய மகிளா சங்கம் (CMS -சிஎம்எஸ்), பிரகதிசீல கார்மிகா சமக்யா (PKS – பிகேஎஸ்), நாட்டுப்பற்றுமிக்க ஜனநாயக இயக்கம் (PDM – பிடிஎம்), பிரஜா கலா மண்டலி ((PKM – பிகேஎம்), வசந்த மேகம் (Vasantha Meghum), தெலுங்கு மொழியில் “விரசம்” (Virasam) எனப்படும் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம் (RWA – ஆர்டபிள்யூஏ), இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கம் (IAPL – ஐஏபிஎல்), குல நிர்மூலனா போராட்ட சமிதி (ஜாதி ஒழிப்புப் போராட்டக் குழு; KNPS – கேஎன்பிஎஸ்), அமருலா பந்து மித்ருலா சங்கம் (ABMS – ஏபிஎம்எஸ்), அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி (CRPP – சிஆர்பிபி), மனித உரிமைகள் மன்றம் (HRF – ஹெச்ஆர்எஃப்) உள்ளிட்ட அமைப்புகள் இந்தச் சோதனையில் குறிவைக்கப்பட்டன.

படிக்க : செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!

இந்த சோதனையின் போது, பிரகதிசீல கார்மிக சமக்யா-வின் (PKS – பிகேஎஸ்) மாநில செயற்குழு உறுப்பினரான சந்திர நரசிம்முலு கைது செய்யப்பட்டார். 13 லட்சம் ரூபாய் மற்றும் பல தோட்டாக்களுடன் ஒரு கைத்துப்பாக்கியை கைப்பற்றியதாக தேசியப் புலனாய்வு முகமை கூறியுள்ளது. ஆனால், இந்தப் பணமானது நடைபெறவுள்ள அவரது மகளின் திருமணச் செலவுகளுக்கானதாகும் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். 2021-ஆம் ஆண்டிலிருந்து போடப்பட்டுள்ள “மாவோயிஸ்ட் தொடர்பு” வழக்கையொட்டி இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கனிம வளமிக்க மத்திய இந்தியப் பகுதிகளில் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்த அமைப்பு குரல் கொடுத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (சிடிஆர்ஓ – இதில் ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டி – APCLC – ஒரு உறுப்பு அமைப்பாகும்) 2023 ஜனவரி 11 அன்று தெற்கு பஸ்தார் பிராந்தியத்திலுள்ள பழங்குடியின கிராமங்களில் வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான உண்மையறியும் நடவடிக்கையை மேற்கொண்டது. சிறிய ஆளில்லா விமானங்களைப் (ட்ரோன்களைப்) பயன்படுத்தி பல குண்டுகள் வீசப்பட்டதை கிராம மக்கள் உறுதி செய்தனர். இந்த வான்வழிக் குண்டுவீச்சு நடத்தப்பட்ட அதே நேரத்தில் ஹெலிகாப்டர்களும் இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.

“வானம் நெருப்பை உமிழ்ந்த போது” என்ற தலைப்பில் அக்டோபர் 2023-இல் வெளியிடப்பட்ட ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (சிடிஆர்ஓ) அறிக்கையானது, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் போலீசுத் துறையின் மோசடித்தனத்தை வெளிப்படுத்தியது. மேலும், “விரசம்” மற்றும் பிற முற்போக்கு அமைப்புகள் இணைந்து, பஸ்தாரில் தொடரும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைக் கண்டித்து மார்ச் 2023-இல் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தன.

“மாவோயிஸ்ட் தொடர்பு” பற்றிய விசாரணைகள் என்ற பெயரில் தற்போது நாடு முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேசிய புலனாய்வு முகமையின் சோதனைகளில் ஒரு வகைமாதிரி (pattern) இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். நாம் உற்று நோக்கினால், நாட்டின் பழங்குடியின மக்களை அவர்களது மண்ணிலிருந்து வெளியேற்றி வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்தகைய “வளர்ச்சி” முறையை விமர்சிக்கும் ஜனநாயக அமைப்புகள், மக்களைச் சார்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. வெறிபிடித்த சுரங்க வேட்டை முடுக்கிவிடப்பட்டு பழங்குடியின மக்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுவதையும், கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலவளச் சூறையாடலையும், இந்தப் பகற்கொள்ளைக்கான போரில் “மாவோயிஸ்ட் பிரச்சினை” என்ற போர்வையில் நடத்தப்படும் அரசின் கொடூரமான அத்துமீறல்களையும் இந்த அமைப்புகள் எதிர்த்தன.

2018-ஆம் ஆண்டு பீமா கோரேகான் சதி வழக்கில் கார்ப்பரேட் கொள்ளையை விமர்சித்த ஜனநாயக செயல்பாட்டாளர்களைக் கைது செய்ததிலிருந்து இந்த சூனிய வேட்டையின் வகைமாதிரி தொடங்குகிறது. முயற்சிக்கப்பட்டும் சோதித்தறியப்பட்டதுமான இந்த உத்தியானது, பழங்குடியின மக்களை அவர்களது மண்ணிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிரான செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் மீதான சோதனைகளாக தொடர்ந்து இன்னமும் ஏவி விடப்படுகிறது.

படிக்க : “நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்ட், கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஜனநாயக உரிமைச் செயற்பாட்டாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. நியாம்கிரியில் உள்ள மக்களை அவர்களது மண்ணிலிருந்து வெளியேற்றுவதை எதிர்க்கும் செயற்பாட்டாளர்கள் மீது “ஊபா” (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மையில் “நியூஸ்கிளிக்” (NewsClick) என்ற செய்தி இணையதள அலுவலகத்திலும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் (சிபிஎம் CPI-M) செயலாளரான சீதாராம் யெச்சூரியின் இல்லத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் தேசியப் புலனாய்வு முகமையின் சோதனைகள் நடந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு, டெல்லி போலீசுத் துறையின் சிறப்புப் பிரிவானது, நியூஸ்க்ளிக் அலுவலகம் மற்றும் சிபிஎம் தலைவர்களின் இல்லங்களில் சோதனைகளை நடத்தி, “சீனாவின் பயங்கரவாத நிதியளிப்பு” என்ற பொய் வழக்கைச் சோடித்தது. நியூக்ளிக் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா மற்றும் மனிதவள மேலாண்மை அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோரைக் கைது செய்தது.

வளர்ந்து வரும் பார்ப்பன இந்துத்துவ பாசிசத்திற்கும், நமது மக்களின் மூலவளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கும் எதிராகப் பேசும் எந்தவொரு குரலையும் நசுக்கும் முயற்சியாகவே இந்தச் சோதனைகளை நாங்கள் பார்க்கிறோம். மக்கள் மத்தியில், குறிப்பாக மக்களுக்காகப் பேசும் ஜனநாயக சக்திகள் மத்தியில் சூனிய வேட்டை (அரசியல் எதிரிகள் மீது நடத்தப்படும் வேட்டை) மூலம் அச்சுறுத்தல் உணர்வை உருவாக்கி உயிர் பிழைத்திருக்கும் இந்த ஆட்சியில், எந்த எதிர்ப்புக் குரலும் விடுபடாது என்பதும் தெளிவாகிறது. அரசாங்க அமைப்புகளால் பயன்படுத்தப்படும் இந்த ஆயுதமானது, இஸ்லாமிய பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள் அல்லது உள்நாட்டு அரசியலில் சீன ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இத்தகைய ஜனநாயக சக்திகள் மீது வழக்கமாக முத்திரை குத்தப்படலாம்.

இத்தகைய தாக்குதல்கள் ஏன் தீவிரமடைந்துள்ளன என்பதை, ஜி-20 (G20) உச்சி மாநாட்டின் முடிவுகள், வனப் பாதுகாப்புச் சட்டங்களில் மாற்றங்கள் மற்றும் இந்திய ஒன்றியத்திற்கான பொதுத் தேர்தல்கள் நெருங்கி வருவது ஆகியவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களில், வனப் பகுதியிலுள்ள நிலத்தில் மேற்கொள்ளப்படும் “வளர்ச்சி”த் திட்டங்களுக்கு உள்ளூர் கிராம சபைகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்று வனப் பாதுகாப்புச் சட்டங்கள் கோரின.

ஆனால், இப்போது 5 ஹெக்டேர் அளவுக்கு வனப் பகுதியிலுள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கு விதிவிலக்குகளை அளித்து, இந்தப் பாதுகாப்பு விதிமுறைகளை அரசு நீர்த்துப்போகச் செய்துள்ளது. இதன் மூலம் துணை ராணுவப் படைகள் போன்ற சிறப்பு அடிக்கட்டுமானங்களை இத்தகைய அனுமதி எதுவுமின்றி உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, மூலவளங்களைச் சூறையாடுவதற்கு எதிரான இயக்கத்தை நசுக்க உதவுவதாக அமையும்.

மேலும், மூலவளங்களை எளிதாகப் பிரித்தெடுப்பதற்காக, சுரங்கப் பகுதிகளுக்கு மேலாக உள்ள வன நிலம் தொடர்பாகவும் விலக்கு அளிக்கப்படுகிறது. அதிலும், உயிரியல் பூங்காக்கள், வேட்டைக்கான பகுதிகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவற்றின் கட்டுமானங்களுக்காக வன நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு விதிவிலக்குகள் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் உள்ளூர் மக்களை அவர்களது மண்ணிலிருந்து விரட்டியடிப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

தங்கள் பிராந்தியத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலவளங்களைக் கொள்ளையடிப்பதற்கு வசதியாக, பல்வேறு மாநிலங்களும் வனச் சட்டங்களில் குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்துள்ளன. சமூக தாக்க மதிப்பீட்டிலிருந்து பெரும் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை ஒடிசா மாநில சட்டமன்றம் அண்மையில் நிறைவேற்றியுள்ளது.

வனச் சட்டங்களில் செய்யப்படும் இத்தகைய பரவலான மாற்றங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களால் முடுக்கிவிடப்படும் பேரழிவுகளுக்கு எதிரான குறைந்தபட்ச பாதுகாப்புகள் அரிக்கப்படுவதன் காரணமாக, தங்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் பேய்த்தனமாகத் தீவிரமடையும்; “வளர்ச்சி” என்ற பெயரில் சுரண்டல் கொள்ளை நியாயப்படுத்தப்படும்.

படிக்க : அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

இத்தகைய அடக்குமுறைகளின் பின்னணி இதுதான். கார்ப்பரேட் நிறுவனங்களது பேராசையின் ஆழங்காணமுடியாத குழியை நிரப்புவதற்கு அரசு முயற்சிக்கிறது. இதற்காக தேசியப் புலனாய்வு முகமையின் (NIA) மூலம் அரசானது சோதனைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது போரின் மூலம் அரசின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பழங்குடியின மக்கள் அவர்களது மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் குரலெழுப்புவோர் மீது “ஊபா” சட்டத்தை ஏவுகிறது.

மூலவளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகளின் கையுறையாக உள்ள அரசின் வழிகாட்டுதலின் பேரில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஜனநாயக மற்றும் மக்களைச் சார்ந்த அமைப்புகள் மீதான தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சோதனையை கார்ப்பரேட்மயமாக்கலுக்கும் இராணுவமயமாக்கலுக்கும் எதிரான அரங்கமானது, வன்மையாகக் கண்டிக்கிறது, நியூஸ்கிளிக் (NewClick), மார்க்சிஸ்ட் (CPM) கட்சித் தலைவர்கள் மற்றும் பிற ஜனநாயக உரிமைக்கான செயற்பாட்டாளர்கள் மீதான சோதனைகள் மற்றும் கைதுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தற்போது பார்ப்பன இந்துத்துவ பாசிச அரசை நிறுவுவதற்கான சடங்காச்சார நடைமுறையாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பரந்த விரிவான ஒற்றுமையையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் உருவாக்க அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகள் மற்றும் தனிநபர்களை நாங்கள் அழைக்கிறோம். ஒரு தனிநபருக்கு எதிரான தாக்குதல் என்பது நம் அனைவருக்கும் எதிரான தாக்குதலாகும்.

– கார்ப்பரேட்மயமாக்கலுக்கும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான அரங்கம்,
(FORUM AGAINST CORPORATIZATION AND MILITARIZATION – FACAM), டெல்லி.

ஆங்கில மூலம்: countercurrents.org

செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!

லகின் பழமையான திரைத்துறைகளில் ஒன்றான ஹாலிவுட் திரைத்துறைக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்றளவும் ஆண்டுக்கு 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க, உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சந்தையாக ஹாலிவுட் திரைத்துறை திகழ்கிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு “ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா” (Writers Guild of America) என்ற அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தினால் ஹாலிவுட் திரைத்துறை நிலைகுலைந்து போயுள்ளது.

“ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா” என்பது அமெரிக்காவிலுள்ள திரைத்துறை, தொலைக்காட்சி மற்றும் வானொலி எழுத்தாளர்கள் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் சங்கமாகும். கிட்டத்தட்ட 11,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க எழுத்தாளர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த மே மாதம் இச்சங்கத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள், அமெரிக்காவின் கார்ப்பரேட் ஸ்டுடியோக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்புக்கு” (Alliance of Motion Picture and Television Producers – AMPTP) எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டத்தில், ஊதிய உயர்வு, தங்களது எழுத்துக்களை திரையிடப்படும் எண்ணிக்கைக்கேற்ப உத்தரவாதமான தொகை (Better Residuals), ஸ்கிரிப்ட் எழுதுவதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைகளைப் புறக்கணித்துவிட்டு, அமேசான், நெட்ஃபிளிக்ஸ், பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோக்களுக்கு வெளியே “கைகளை உயர்த்துங்கள், பேனாக்களை கீழே போடுங்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு தொழிற்சங்க நகரம்” என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது, 15 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க எழுத்தாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமாகும்; ஹாலிவுட்டில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய போராட்டமாகும்.


படிக்க: அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!


வேலைநிறுத்தம் தொடங்கிய உடனேயே, “தி லேட் ஷோ வித் ஸ்டீபன் கோல்பர்ட்”, “ஜிம்மி கிம்மல் லைவ்” போன்ற பல இரவு நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் நடிகர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து விலகி போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர். ஜூன் மாத இறுதியில் முன்னூறுக்கும் மேற்பட்ட நடிகர்கள் இப்போராட்டத்தில் இணைந்தனர்.

மேலும், ஜூலை மாதத்தில், ஒரு லட்சத்து அறுபதாயிரம் கலைஞர்களை உறுப்பினர்களாக கொண்ட “திரை நடிகர்கள் சங்கம் – அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்களின் கூட்டமைப்பு” (SAG-AFTRA), ஊதிய உயர்வு, திரைவேடங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, எழுத்தாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைந்தது. இதனால், இன்னும் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லண்டனில் நடந்த நடிகர் கிறிஸ்டோபர் நோலனின் “ஓப்பன்ஹெய்மர்” திரைப்படத்தின் முதல் திரையிடலை அத்திரைப்படக் குழுவினர் புறக்கணித்தனர்.

எழுத்தாளர்கள் சங்கத்துடன் கலைஞர்கள் சங்கமும் இணைந்தது ஹாலிவுட் திரைத்துறைக்கு பெரிய அடியாக விழுந்தது. இந்த ஆண்டு வெளியாகியிருக்க வேண்டிய முக்கியமான படங்களான “க்ராவன் தி ஹண்டர் மற்றும் கோஸ்ட்பஸ்டர்ஸ்”, “டூன்: பார்ட் டூ” மற்றும் “சேலஞ்சர்ஸ்” போன்ற படங்களின் வெளியீட்டு தேதிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு தற்போது அப்படங்கள் 2024-ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட “டெட்பூல்-3”, “கிளாடியேட்டர்-2”, “ஸ்பைடர்-மேன்: பியான்ட் தி ஸ்பைடர்-வெர்ஸ்” போன்ற உலக பிரபலமான படங்களின் தயாரிப்பு வேலைகளையே தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தின் வீரியத்தை கண்டு அஞ்சிய டிஸ்னி-யின் தலைமை நிர்வாக அதிகாரியான “பாப் இகர்” சி.என்.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், “வேலைநிறுத்தம் செய்யும் எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் கோரிக்கைகள் எதார்த்தத்திற்கு மாறாக உள்ளது” என்று கூறினார். மேலும், தாங்களே கடுமையான நெருக்கடியில் தான் உள்ளோம் என்றும் அப்பட்டமாகப் புளுகினார்.


படிக்க: ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்


“ஒரு நாளைக்கு 78 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கும் “பாப் இகர்”, ஆடம்பர ஆடைகளை அணிந்து கொண்டு, தனக்கென தனியாக உல்லாசமான படகில் பயணித்துக் கொண்டு, கோடீஸ்வரர்களின் கூட்டத்தில் ஒருவராக இருக்கிறார். ஆனால், எங்களது கோரிக்கைகள் எதார்த்தத்திற்கு மாறானவையாக இருப்பதாகக் கூறுகிறார்” என்று போராட்டக்காரர்கள் பதிலடி கொடுத்தனர்.

ஹாலிவுட் திரைத்துறை ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டினாலும், அதன் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் நிலை அடிப்படை வாழ்க்கை தேவைகளுக்கே  போராடுவதாகவே உள்ளது. ஸ்ட்ரீமிங் சேவை, டிஜிட்டல் தளம் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் ஹாலிவுட் திரைத்துறை மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருந்தாலும் எழுத்தாளர்களின் ஊதியம் முன்பை காட்டிலும் பல மடங்கு குறைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், மூத்த எழுத்தாளர்களின் சராசரி ஊதியம் நான்கு சதவிகிதம் குறைந்துள்ளதாக அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிலும் செயற்கை நுண்ணறிவின் வருகை ஒட்டுமொத்த தொழிலாளர்களின் வேலையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தொடக்கத்தில், பல்வேறு கோரிக்கைகளுடன் எழுத்தாளர்களால் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. வளர்ச்சிப் போக்கில் விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நடிகர்கள், வரை கலைஞர்கள், சிறிய நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் போன்றவர்களும் இந்தப் போராட்டத்தில் இறங்கியதைத் தொடர்ந்து, “திரைத்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கை போராட்டத்தின் முதன்மை கோரிக்கையாக மாறியது.

சொல்லப்போனால், செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல் தான் ஆயிரக்கணக்கான அமெரிக்க எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூ யார்க் போன்ற நகரங்களின் வீதிகளுக்கு வரவழைத்தது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக, பட்டினிக் கிடந்தாலும் பரவாயில்லை என்று தொழிலாளர்கள் மேற்கொண்ட உறுதிமிக்கப் போராட்டத்தின் விளைவாக, ஹாலிவுட் திரைத்துறை மூன்று பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது.

இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது. அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம், பெரிய ஸ்டுடியோக்களுடன் மூன்று வருட ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. ஐந்து மாதப் போராட்டத்தின் விளைவாய், ஒட்டுமொத்த திரைத்துறை உழைக்கும் மக்களின் ஆதரவினால், அமெரிக்க கார்ப்பரேட் ஸ்டுடியோக்களை பணியவைத்து வெற்றியடைந்துள்ளனர், ஹாலிவுட் எழுத்தாளர்கள்.

திரைத்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கலைஞர்கள் சங்கம் போராட்டத்தைத் தொடர்கிறது.

அமெரிக்க எழுத்தாளர்கள், கலைஞர்கள் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டம், செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான முதலாவது மாபெரும் போராட்டமாகும். தற்போது அமெரிக்க எழுத்தாளர்கள், கலைஞர்களுக்குக் கிடைத்துள்ள இவ்வெற்றி தற்காலிகமானது என்ற போதிலும், இனிவரும் காலங்களில் இப்போராட்டங்கள் வளர்வதை ஏகாதிபத்திய கார்ப்பரேட் உலகத்தால் தடுக்க முடியாது.

ஓவியங்களை வரைதல், கட்டுரைகள், கவிதைகள், பாடல்களை எழுதுதல், நடித்தல், தொழில்துறைக்குத் தேவையான கிராஃப் வேலைகள், வரைபட வேலைகளைச் செய்தல், மருத்துவ ஆலோசனைகள், குடும்ப நல ஆலோசனைகள் வழங்குதல் போன்ற சமூகத்தின் பல்வேறு சேவைப் பிரிவினரின் வேலைகளை எல்லாம் இந்த செயற்கை நுண்ணறிவு விழுங்க இருக்கிறது. தொழில் அடிப்படையில் பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், தாங்கள் செயற்கை நுண்ணறிவினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்றுணர்ந்து, வர்க்க உணர்வுடன் ஒன்றுபட்டுப் போராடுவதும் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய உணர்வு பெறுவதும்தான் தீர்வு.

இதற்கு அமெரிக்க எழுத்தாளர்கள், கலைஞர்கள் போராட்டம் நமக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. அந்தப் போராட்ட அனுபவங்களை வரித்துக் கொள்வோம்!


துலிபா

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)



அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

ரலாறு மீண்டும் திரும்புகிறது! உலகெங்கும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் நாள்தோறும் வெடித்தெழுகின்றன. செங்கொடி உயர்கிறது. சர்வதேச தொழிலாளர் தினமான மே 1 அன்று உலகெங்கும் நடந்த போராட்டங்களே அதற்கு சிறந்த சான்றுகளாகும்.

அதன் தொடர்ச்சியாக, உலக இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் வரைமுறையின்றி உறிஞ்சிக் கொழுக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவில், வரலாற்றில் முதன்முறை எனும் அளவிற்கு வெடித்திருக்கிறது, வாகன (Automobile) உற்பத்தி ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம். கார் உற்பத்தி நிறுவனங்களில் மிகப்பெரும் மூன்று பகாசுர நிறுவனங்களான, ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லண்டிஸ் ஆகிய ஆலைகளில் தான் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் மிக்சிகன், மிசோரி மற்றும் ஓகியோ ஆகிய மாநிலங்களில் மூன்று ஆலைகளில் பணிபுரியும், அமெரிக்க வாகனத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 13,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 2023 செப்டம்பர் 14-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், முன்னதாகவே, புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் தொழிலாளர்கள் போராட்டமானது வெறும்  ஊதிய உயர்வுக்கானது மட்டுமல்ல.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தத்தாலும், ஆலைகளில் உற்பத்திக் குறைப்பாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. அதுமட்டுமின்றி, இந்த ஆலைகளில் நிரந்தப் பணியும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, தயாரிக்கப்பட்ட எரிபொருள் வாகனங்களுக்குப் பதிலாக, மின்சார வாகனங்களைத் தயாரிக்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதால், நிரந்தர வேலையின்மை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


படிக்க: லிபியா பேரழிவு: இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் நேட்டோவுமே முதல் குற்றவாளிகள்!


ஜெனரல் மோட்டார் நிறுவனத்தில் 5 முதல் 10 சதவிகிதம், ஸ்டெல்லண்டிஸில் 12 சதவிகிதம் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தில் 3 சதவிகிதம் என ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும், இந்நிறுவனங்களில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையோ மிகவும் கொடூரமானது.  ஒரு நாளைக்கு 12 மணிநேரம் என வாரத்திற்கு 7 நாட்கள் வேலை செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கான பாதுகாப்போ, வேலை உத்தரவாதமோ, போதிய ஊதியமோ இல்லை. அவர்களது எதிர்காலத்திற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. அமெரிக்கத் தொழிலாளர்களின் இந்த உத்தரவாதமற்ற வாழ்க்கைச்சூழல்தான் அவர்களைப் போராட்டக்களத்திற்கு தள்ளியிருக்கிறது.

ஸ்டெல்லண்டிஸ் நிறுவனத்தில் மூன்றாண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரியும் 45 வயதான டெனிஷா ஹோட்ஜஸ், “மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு 15.78 டாலருக்கு வேலைக்கு சேர்ந்த எனக்கு தற்பொழுது ஒரு மணி நேரத்திற்கு 17.53 டாலர்தான்  ஊதியமாகத் தரப்படுகிறது” என்று தனது ஊதிய இழப்பு கொடூரத்தைக் குறிப்பிடுகிறார்.

எனவே, 40 சதவீத ஊதிய உயர்வு, 32 மணி நேர வேலைக்கு 40 மணி நேர வேலை சம்பளம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்களுக்காக போராட்டத்தை அறிவித்திருக்கிறது, அமெரிக்கத் வாகனத் தொழிலாளர்கள் சங்கம்.

88 ஆண்டு கால பாரம்பரியமிக்க இந்தச் சங்கத்தில் அமெரிக்கா முழுவதிலும் உள்ள 1,50,000 நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

அமெரிக்கத் தொழிலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கும், அமெரிக்க வாகன தொழிற்சங்கத் தலைவர் ஷாவ்ன் ஃபெய்னோ, “நாங்கள் பணத்திற்காக அல்ல, தொழிலாளர்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்.

அதனால்தான், மிக்சிகன், மிசோரி மற்றும் ஓகியோ மாநிலங்களில் உள்ள வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் நடந்த போராட்டம், அமெரிக்காவில் உள்ள 20 மாநிலங்களில் 38 தொழில் நிறுவனங்களில்  தீயாய் பரவியிருக்கிறது. கிட்டத்தட்ட 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதிதாக போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றனர்.


படிக்க: ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!


வாகனத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் உணவகம் நடத்திவரும் இதர உழைக்கும் வர்க்கத்தினரும் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஃபோர்டு நிறுவனத்திற்கு அருகில் உணவகம் நடத்திவரும் ஜெனிபர் மற்றும் டேவிட் ரொமிரோ, “எங்களுக்கு அருகிலிருப்பவர்கள் நீலக் கழுத்துப்பட்டை தொழிலாளர்கள்.  அவர்கள் வேலை செய்யாமல் போனாலோ பணம் செலவழிக்காமல் போனாலோ எங்களால் சம்பாதிக்க முடியாது” என்று தொழிலாளர் போராட்டத்தினை ஆதரிக்கின்றனர்.

அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவுடன், தொழிலாளர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மூன்று பகாசுர கார் உற்பத்தி நிறுவனங்களோ 20 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே கொடுக்க முடியும் என்கின்றனர். 40 மணி நேர வேலை நேரத்தைக் குறைக்க முடியாது என்கின்றனர். இக்காரணத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களின் போராட்டம்  தற்போது ஒரு முடிவுக்கு வராது என்ற நிலையே நீடிக்கிறது.

நீண்ட காலத்திற்குப் பிறகு அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தில் குதித்திருப்பது தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒரு முன்னேற்றகரமான நிலைமையாகும். ஐந்து மாதங்களாக நடந்துவந்த அமெரிக்க ஹாலிவுட் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் போராட்டம் வெற்றி அடைந்திருப்பது இத்தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகும்.

படிம எரிபொருள் வாகனங்களை மின்கல வாகனங்களாக மாற்றும் ஏகாதிபத்தியங்களின் திட்டமானது, புதிய சந்தையையும் குறைந்த கூலியையும் மலிவான கச்சாப் பொருட்களையும் வேட்டையாடும் ஏகாதிபத்திய லாபவெறிப் போட்டியின் விளைவாகும்.

ஆகையால், தொழிலாளர்கள் தங்களது உரிமைகளைத் தக்கவைக்க, ஏகாதிபத்தியங்களின் மக்கள் விரோத காலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். அந்தவகையில், அமெரிக்கத் தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்பது இந்திய உழைக்கும் மக்களின் கடமையுமாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)



“நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

டந்த அக்டோபர் 3-ஆம் தேதி “நியூஸ்கிளிக்” (NewsClick) செய்தி நிறுவனத்தின் தலைமை பத்திரிகை ஆசிரியர் பிரபீர் புர்கய்ஸ்தா (Prabir Purkayastha) மற்றும் மனிதவளத் துறைத்தலைவர் அமித் சக்ரவர்த்தி (Amit Chakravarty) ஆகியோர் மீது ஊபா (UAPA) வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அந்நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஜனநாயக சக்திகளும் பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (07-10-2023) நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “நெட்வொர்க் ஆப் விமன் இன் மீடியா – இந்தியா” (Network of Women in Media – India -NWMI) சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றத்திற்கான பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சார்ந்த பத்திரிகையாளர் ஹசீப், பத்திரிகையாளர் கே.ஏ.குணசேகரன், பத்திரிகையாளர் ஏ.எஸ் பன்னீர்செல்வன், பத்திரிகையாளர் கவிதா முரளி, பத்திரிகையாளர் சசிக்குமார் மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது கண்டன குரலைப் பதிவுசெய்தனர்.


படிக்க: நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!


சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் பேசிய பத்திரிகையாளர் பாரதி, “இன்று நியூஸ்கிளிக்-கிற்கு ஆதரவான இந்த ஆர்ப்பாட்டம் முன்னுதாரணமான இருக்கிறது. நாம் கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டு நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் ஊடக சுதந்திரத்தை உறுதியாக நிற்க வைக்கும்” என்றார்.

மேலும், சன் நியூஸ் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரான குணசேகரன், “நியூஸ்கிளிக்-கின் ஆசிரியர் 1975 நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்து பதினைந்து ஆண்டுகள் சிறையில் இருந்தவர். இதற்கெல்லாம் அஞ்சாதவர். இன்று ஊபாவை எதிர்த்து நின்று மீண்டு வருவார். தொடர்ச்சியாக இணைய இதழ்கள், சுதந்திரமாக இயங்கக்கூடிய பத்திரிகைகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைதான் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கெதிராக நமது எதிர்ப்பை காட்ட வேண்டும். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் அதனை எதிர்த்து இளந்தலைமுறை உறுதியுடன் போராடும்” என்று கூறினார்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கத்தைச் சார்ந்த ஹசீப் பேசுகையில், “2016 தொடங்கி 2021 வரை கிட்டத்தட்ட 16 முக்கிய செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அதன் பிறகும் பல்வேறு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியே நியூஸ்கிளிக் மீதான தாக்குதலும். இந்த நடவடிக்கைகள் இன்னும் தொடரும் என்பதற்கான உதாரணங்கள் தான் மேற்கண்டவை” என்றார்.

நியூஸ்கிளிக்-கிற்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


வினவு களச்செய்தியாளர்



நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா

நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா

பாருங்கள்! பகிருங்கள்!!

லியோ + மறுகாலனியாக்க சீரழிவு + அரசு

டிகர் விஜய் நடித்த லியோ படத்தின் ட்ரெய்லர் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்வில் சென்னையில் ரோகிணி தியேட்டரின் இருக்கைகளும், ஸ்கிரீனும் உதிரிக்கும்பலால் நொறுக்கப்பட்டது. இது குறித்து ”திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கு போலீசாரின் தவறான கையாளுதலே காரணம், ரசிகர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முறையாக கையாண்டிருக்க வேண்டும், அனுமதி வழங்குவது மட்டுமல்லாமல் எந்த ஒரு சேதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தக்  கருத்தை சற்றே விரிவுபடுத்தி சிந்தித்துப் பாருங்கள்… குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் பிரச்சினை கிடையாது. குடித்துவிட்டு வரும் குடிகாரன் பிரச்சினை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கிரிமினல் குற்றங்கள் பிரச்சினை கிடையாது. மற்றவர்களைப் பாதிக்காத வகையில் கிரிமினல் குற்றங்கள் நடக்க வேண்டும். அப்படித்தானே நீதிபதி அவர்களே…

சினிமா போதை, டாஸ்மாக்  உள்ளிட்ட சமூகத்தை சீரழிக்கும் போதைக் கலாச்சாரம் தான் கொலை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களுக்கு அடிப்படையாக உள்ளன. இவற்றைத் தடை செய்தால்தான் இத்தகைய கிரிமினல் குற்றங்களைத் தடுக்க முடியும். இதெல்லாம் கணம் நீதிபதிகளுக்குத் தெரியாத ஒன்று அல்ல.

இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் நுகர்வு வெறியையும், சீரழிவுகளையும் தூண்டிவிட்டு கார்ப்பரேட் முதலாளிகளும், சினிமா கழிசடை கும்பலும் கல்லா கட்டுவதுதான் முக்கியம். அதுதான் மறுகாலனியாக்கத்தின் அடிப்படை விதி. இந்த விதியை நடைமுறைப்படுத்துவதுதான் அரசுக்கட்டமைப்பின் வேலை.


படிக்க: சினிமா அரசியல் போதை மிருகம் – விஜய்


மறுகாலனியாக்கப் பொருளாதாரக்  கொள்கைகளால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவது எப்படி வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறதோ, அப்படித்தான் அதே மக்களை நுகர்வுவெறியூட்டி சுரண்டுவதையும், சீரழிப்பதையும் தடை செய்வதைப் பற்றி சிந்திக்காமல், அதெல்லாம் பொழுதுபோக்கு என்று குற்றங்களை முறைப்படுத்துவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் உள்ளிட்ட அரசுக் கட்டமைப்பின் அங்கங்கள் அனைத்தும் இதனை நியாயப்படுத்துகின்றன.

தியேட்டருக்கும், குடியைக்கெடுக்கும் டாஸ்மாக்குக்கும் பாதுகாப்பு கொடுப்பது எங்கள் வேலை அல்ல என்று போலீசு என்ன போராட்டமா நடத்தப் போகிறது? ஒன்றும் இல்லை. ஏனென்றால் டாஸ்மாக்கை பாதுகாப்பதுதான் அவர்களது கடமை. அதுதான் ஆளுகின்ற அரசாங்கங்களின் மாபெரும் கடமை. அதனால்தான் டாஸ்மாக்கை தடை செய் என்று போராடுபவர்களை ஒடுக்குகிறார்கள். இவர்களிடம் சென்று நமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று யாராவது சிந்திக்க முடியுமா?

சமூகத்தைப் பேரழிவுக்குள் இழுத்துச் செல்லும் மறுகாலனியாக்க கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதே நம் முன் உள்ள தீர்வு. அதை மறுகாலனியாக்கத்தைப் பாதுகாக்கும்  இந்த அரசுக்கட்டமைப்புக்குள் செய்ய முடியாது. இந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நமக்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

இந்த அரசுக்கட்டமைப்புக்கு வெளியே மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலமாகத்தான், மக்களுக்காக போராடுவதையே பண்பாடாக மாற்றுவதன் மூலமாகத்தான் இத்தகைய இழிவுகளை ஒழித்துக் கட்டுவதற்கான பாதையை செப்பனிட முடியும்.


இனியன்



உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | என் நினைவுக் குறிப்பு – 3 | கருணாகரன்

து ஒரு அறுவடை காலம்!

எங்கள் ஊரைப் பொறுத்தவரை பெரிய அளவில் நெல் விளைவது கடினம். ஏனெனில், அதற்கான பாசன வசதி என்பது எங்களுக்கு கிடையாது. தமிழ்நாட்டின் வற்றாத நதியான தாமிரபரணியின் நீர் கூட எங்களுக்கு நெல் விளைவிக்க கிடைக்காது. தூத்துக்குடிக்கு தண்ணீர் ஊற்றும் தாமிரபரணி, எங்கள் ஊருக்கு எதுவும் செய்ய வில்லை என்பது கவலைப்பட வேண்டிய ஒன்று.

எங்கள் ஊரில் ஐந்து ஏக்கருக்கு மேலே நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே கிணறு வைத்திருப்பார்கள். அவர்களால் எளிதில்  நெல்லை பயிரிட்டு விளைவிக்க முடியும். ஆனால்,  மற்றவர்கள் அப்படியல்ல. பெரும்பாலான மக்களுக்கு  கிணறு வசதி இல்லாததால் அவர்கள் எல்லோரும் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவற்றை விளைவிப்பார்கள்.  அவர்களின் வழக்கமும் அதுதான். செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாத இறுதியில் பயிர் செய்யும் காலம் முடிவடையும். செப்டம்பரில் தொடங்கும் காலம் என்பது பயிர் விதைப்பு காலம் நவம்பர் இறுதியில் முடியும் காலம் என்பது அறுவடை காலம் என எடுத்துக் கொள்ளலாம்.

எங்கள் வீட்டில் அப்போதும் சரி, எப்போதும் சரி மக்காச்சோளம், கேழ்வரகு, எள், பாசிப்பயறு முதலியவற்றைத்தான் விதைப்பார்கள். அது எங்களின் வழக்கமாகும், ஏனெனில் எங்களுக்கு மற்றவர்களைப் போல பெரிதளவில் நிலவசதி கிடையாது. நான் சொல்லும் எனக்கு என்பது என்னை சார்ந்த மனிதர்களுக்கும் சமூகத்திற்கும் சேர்த்துதான்.

பயிரிடப்பட வேண்டிய விதைகளை பெரும்பாலும் இப்போது டிராக்டர்கள் மூலம்தான் எடுத்து செல்கிறார்கள் என்றாலும், அப்போது சைக்கிளில்தான் எடுத்து செல்வார்கள்.  விதைகளை கொண்டு வருவதற்கும் சரி, உரத்தை கொண்டு போவதற்கும் சரி எங்களுக்கு மிக மிக அவசியமாக தேவைப்பட்டது சைக்கிள்தான்.

அன்று, அப்படித்தான் எனது அம்மாவும் அப்பாவும் எங்களது வயலுக்குச் செல்ல முனைப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது என் அப்பா வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த எங்கள் சைக்கிளை துடைக்க ஆரம்பித்தார். அதில் ஒரு மண்வெட்டி அதனுடன் சேர்ந்து சில பொருட்கள் சேர்த்து கயிறையும் கட்டி எடுத்து வைக்க சொல்ல அவருக்கு அப்போது தான் தெரிந்தது சைக்கிளில்  காற்று இல்லை என்று.

அவர் உடனே எங்கள் வீட்டில் இருந்த பம்ப்-யை எடுத்து சைக்கிளின் முன்பக்க டயரில் காற்று அடித்தார். ஆனால், சைக்கிளில் காற்று ஏறாமல் அசைவற்று இருந்தது. நான் அந்த டயரை சிறிது அமுக்கி பார்க்க அதில் காற்று ஏறவில்லை என்பது எனக்கு புரிந்தது.

அப்போது எனது அப்பா என்னிடம் “ஏலே! நீ போய் சைக்கிளை “ரிப்பேர்” பாத்துட்டு வா, நம்ம திருமுருகன் கடைக்கு போய் பாத்துக்கோ, வேற எங்கேயும் போகக்கூடாது சரியா” அப்படின்னு சொல்லிவிட்டு அவர் வேறு வேலையை பார்க்க ஆரம்பித்தார்.


படிக்க: கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்


நானும் என் சைக்கிளை எடுத்துக் கொண்டு, வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் ஒரு சைக்கிள் பஞ்சர் கடையை நோக்கிச் சென்றேன். அதில், சிறு டயர்கள் சில இரும்பு கம்பிகள் கிடந்தன. நான் அவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டே அந்த கடைக்கு செல்ல அந்த கடை பூட்டப்பட்டு இருந்தது.

அதனைப் பார்த்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்க, அங்கே எனது மச்சான் வந்தான். அவன் என்னிடம் “இன்னொரு கடை இருக்குல மாப்பிள்ளை, வா அங்க போகலாம்” என்று  என்னை அழைக்க அவனை பின் தொடர்ந்து சென்றேன்.

அவனும் எனது தெருவை தாண்டி வேறொரு தெருவிற்கு என்னை அழைத்துச் சென்றான். அந்த தெரு, எங்கள் தெரு போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது.

எங்கள் தெருவில் இருந்த கால் உயரம் மணல் வீடுகள் அங்கே இல்லை. எங்கள் தெருவில் கிடந்த குப்பை கூடங்களோ, ஓலை வீடுகளோ! அங்கே இல்லை. அதனால் எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


படிக்க: கல்வி ஒரு மாயை.. | என் நினைவுக் குறிப்பு | களம் -2 | கருணாகரன்


அதனை எல்லாம் கவனித்துக் கொண்டே உள்ளே செல்ல, அங்கே சற்று தொலைவில் சைக்கிள் சரி பார்ப்பவரின் வீடு இருந்தது, என் மச்சான் என்னை அவரிடத்தில் அழைத்துச் சென்றான் . அங்கே சில சைக்கிள்கள் வீட்டின் வெளியேவும் சில சைக்கிளில் வீட்டின் உள்ளேயும் நிறுத்தப்பட்டிருந்தன.

என் சைக்கிளையும் அவர்களின் சைக்கிள்களில் ஒன்றாக நிறுத்திவிட்டு, பழுதுபார்ப்பவரைத் தேடி உள்ளேச் சென்றேன், அப்போது என் அண்ணன் அங்கே நின்று கொண்டிருந்தான்.

அவன் கையில் சில கேபிள் டிவி வயர்கள் இருந்தன. அதனைப் பார்த்தவுடன் நான் புரிந்து கொண்டேன், அவன் கேபிள் டிவி வயர்களை இணைத்து இங்கே தொலைக்காட்சியில் சேனல்களை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்று. அவன் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்க முயற்சி செய்தான். நான் அவனை கவனித்துக் கொண்டிருந்த சில வினாடிகளில், அவனது கால்கள் வழுக்கி விட பிரித்து வைத்திருந்த ஓட்டின் வழியாக அந்த வீட்டிற்குள் டமால் என்று விழுந்தான். அவன் கால் அருகில் இருந்த நாற்காலியினுள்ளே விட்ட நிலையில் இருந்தது. அதனை பார்த்து எனக்கும் சரி என் மச்சானுக்கும் சரி கதி கலங்கி போனது.

நாங்கள் அவனுக்கு என்ன ஆயிற்று என்ற பதற்றத்துடன் வீட்டின் வாசலை தாண்ட முயற்சிக்க, அங்கே ஒரு குரல், “ஐயோ, என் வீடு இப்படி தீட்டுப்பட்டு போயிருச்சு. சண்டாள உள்ள வந்து கெடுத்துட்டானே, இந்த பள்ளப்பய வந்து இப்படி ஆயிடுச்சுன்னு” கோபத்துடன் கத்த, அதனை கேட்ட என் அண்ணன் கையில் இருந்து கேபிள் டிவி வயர்களை பற்றி கொண்டு சொல்ல முடியாத வலியுடன் அதுவும் நொண்டி நொண்டி வெளியில் வந்தான். வாயிற் படி வழியாக..

அதைப் பார்த்து அந்த அம்மாவிற்கு இன்னும் கோபம் தலைக்கேறி போய் “பள்ள நாயே உன் சித்தப்பா இந்த ஊரு தலைவராக இருக்கப் போய்தான் உன்னை எல்லாம்  இந்த வீட்டுக்குள்ள விட்டு இருக்கேன். ஆனா இங்க பாரு எங்க வீடு வாசப்படியிலிருந்து எங்க வீட்டு தரை வரைக்கும் எல்லாமே தீட்டுப்படுத்திட்ட, நான் உன்னை என்ன செஞ்சேன். என் வீட்டை இப்படி நாசப்படுத்திட்டியே. பரதேசி நாயே, உன்னை நான் என்ன சொன்னேன் மரத்துல ஏறி ஓட்ட பிரிச்சி உள்ள வீசுன்னு தானே சொன்னேன் நீ இப்ப என்ன பண்ணி இருக்க…

உன்னால வீட்டு ஓடும் உடைஞ்சிடுச்சு. உன்னால என் நாற்காலியும் தீட்டுப்பட்டு நாசமாயிருச்சு. என் பரம்பரை நாற்காலிய, இப்படி நீ தீட்டாக்கிட்ட பரதேசி நாயே” என்று சொல்லிக்கொண்டு அப்படியே அந்தம்மா திரும்பி எங்களை பார்த்தார். நாங்கள் இருவரும் வாயில் படியின் அருகில் நின்று கொண்டிருந்தோம் .எங்களுக்கு என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல. என் மச்சான் மட்டும் சற்று கோபத்துடன் ஏதோ தெரியாம தான விழுந்தான். அதை விட்டுட்டு நீங்க மனசாட்சி இல்லாம இப்படி பேசுறீங்கன்னு சொல்ல..

உடனே அவர் “இங்க பாரு, இவன் உன் சொந்தமா? இந்த ரெண்டு பயலுகளும் உன் சொந்தக்கார நாய்களா என்ன கொழுப்பு பாரு இவங்களுக்கு..

உன்னை என்னய்யா சொல்லி இருக்கேன். இவங்களையெல்லாம் வந்த இங்கே விடாதேன்னுதானே சொல்லி இருக்கேன். இப்படி நீ வந்து சைக்கிள் கடை நடத்துற பேர்ல இந்த நாய்களை வாசப்படியில நிக்க வைச்சுத்தொலைஞ்சதாலதான் என் வீடு இப்படி தீட்டுப்பட்டு போயிருச்சு பரதேசி ” என்று அந்த அம்மா அந்த சைக்கிள் கடைக்காரனைத் திட்ட..

அவர் “பையனோட சித்தப்பன்தான் ஊர் தலைவன், அதனாலதான் விட்டேன். இல்லன்னா இந்த நாய்களை நான் ஏன் விட போறேன்” என்று கூறினார்.

உடனே அந்த அம்மா “ஊர் தலைவனா இருந்தா என்ன யாரா இருந்தா என்ன?, இப்ப பாரு உள்ள இருக்கக்கூடிய வீடும் இவங்க கால் பட்டு தீட்டா ஆயிருச்சு. உன் முற்றமும் கால் பட்டு தீட்டாயிருச்சு. இப்ப என்ன பண்ண போற” அப்படின்னு சொல்லி அந்த அம்மா அவரை திட்டியது.

அவர்களிடம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த உரையாடல் எனது நெஞ்சை உலுக்க ஆரம்பித்தது. எனது கவனத்தை அவைகள் சிதைக்க ஆரம்பித்தன. எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.

நான் அவற்றைப் பார்த்துவிட்டு சற்று தலையை தூக்கி மேலே பார்க்க அவர் கோபத்துடன் என்னை பார்த்து முறைத்து ஏதோ சொல்ல முயற்சிக்க..

என் அண்ணன் “இது அப்படியே கிடக்கட்டும், வாங்க வெளியே போகலாம்” என்று எங்களை அங்கிருந்து வெளியில் அழைத்து சென்று, “உங்களுக்கு எதுவும் தேவை என்றால் நீங்க நம்ம வீடுகளுக்குள்ளேயே கேட்டு கொள்ளணும். அதை விட்டுபுட்டு இவன் வீட்டுக்கு போறேன், அங்கபோய் கேட்கிறேன், பக்கத்து தெருவுக்கு போறேன் சொன்னா இந்த நாய்ங்க அப்படித்தான் பண்ணுவாங்க. இவங்க புத்தி மலட்டு புத்தி, மலட்டு புத்தி உள்ளவங்க இப்படித்தான் இருப்பாங்க. நீ என் வீட்டிக்குபோய் சைக்கிள் எடுத்துட்டு போய்க்கோ. இத அங்க கொண்டு போய் நிப்பாட்டி வை”என சொல்லிட்டு அவரும் வேறொரு வேலைக்காக வெளியில் கிளம்பி செல்ல ஆரம்பித்தார்.

நாங்களும் அந்த தெருவின் பகுதிகளில் இருந்து வெளியில் வர அங்கிருந்து சில பாட்டிகள், சில மனிதர்கள் எங்களை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.

நாங்கள் அவர்களை எல்லாம் கடந்து எங்கள் வீட்டிற்கு எப்படியோ வந்து சேர்ந்தாலும் அந்த அனுபவம் அந்தப் பயணம் பதைபதைக்க வைத்தது. ஆறாத வடுவாய் அழிக்க முடியாத உருவமாய் அது என் மனதில் நின்று போய்விட்டது.

இன்று நாட்டில் இருக்கும் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்ல வேண்டும் பலர் நினைத்தாலும், எங்களால் பக்கத்து தெருவிற்குக் கூட செல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை.

கருணாகரன்